Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 26/9/1997 பக்கம்: 1,8 சென்றல் முகாமிலிருந்து வெளியேறிய தமிழ்மக்கள் திரும்பிச் செல்ல அச்சம்! தாக்குதல் குறித்து முழு விசாரணை நடத்தப்படுமாம் மட்டக்களப்பு, செப். 26 தாக்குதல் சம்பவத்தை அடுத்து அம்பாறை சென்றல் முகாம் பகுதியில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரும்பிச் செல்வதற்கு அச்சம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சென்றல் முகாம் தாக்குதல் சம்பவம் குறித்து அம்பாறை பொலீஸ் அத்தியட்சகர் ஏ. எஸ். பி. பெரேரா விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். சென்றல் முகாம் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட அங்கு பணியாற்றிய சகல பொலீஸாரின் சாட்சியங்களையும் அவர் பதிவு செய்து வருகிறார். அத்துடன் அவர்களின் ஆயுதங்களை பரிசீலனை செய்து வருவதுடன் அவற்றை இரசாயனப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார்- அந்தப்பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அவர்களின் ஆயுதங்கள் சம்பவம் நடந்த நேரத்தில் பாவிக்கப்பட்டவை எனக்கண்டறியப்பட்டால் அவர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படுவர் என்று அவர் தெரிவித்துள்ளார். கல்முனை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஒரு தமிழர், சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காட்ட முடியும் எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 என முன்னர் செய்திகள் வெளிவந்த போதும் - காணாமற் போயிருந்த 25 பேர் நேற்று திரும்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கொடூரச் சம்பவத்தில் மூன்று குழுக்கள் ஈடுபட்டிருந்தனர் என்றும் - அவர்கள் கறுப்பு ரீசேர்ட் அணிந்து இருந்தனர் என்றும் - சிலர் பொலீஸ் சீருடையில் இருந்தனர் என்றும்- தற்போது தகவல்கள் வெளியாயாகியுள்ளன. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து 565 குடும்பங்களைச் சேர்ந்த 1800 பேர் இடம் பெயர்ந்து சேனைக்குடியிருப்பு ம.வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர். இவர்களே தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல அஞ்சுகின்றனர். மட்டக்களப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பி. செல்வராசா கிழக்குப்பிராந்திய பொலீஸ் மா அதிபர் ஆகியோர் நேற்று சம்பவ இடத்துக்குசென்று நிலைமைகளைப் பார்வையிட்டனர். இந்த கிராமத்தில் இதே போன்ற தாக்குதல் ஏழாவது தடைவையாக தற்போது நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. (இ- 21- 3) பக்கம்: 8 சென்றல் முகாம் சம்பவத்துக்கு பொலீஸ் பொறுப்பதிகாரி காரணம் கொழும்பு, செப். 26 "அம்பாறை சென்றல் முகாம் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தண்டனை யுடன் இடமாற்றம் பெற்றே அங்கு பணியாற்றுகிறார். அவரே சென்றல் முகாம் தமிழ்க் கிராமம் மீதான தாக்குதலை முன்னின்று நடத்தினார். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் எம். சிவ சிதம்பரம் மேற்கண்டவாறு தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அவர் தமது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:- 3 ஆவது தொடர் தாக்குதலாக நடந்த இத்தாக்குதலில் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர்; 45 தமிழர் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் சடலங்களை சம்பவ இடத்தில் இருந்து எடுத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியவர்கள் இப்படி நடப்பது நியாயமா? சிரேஷ்ட பொலீஸ் அதிகாரி தலைமையில் பூரண விசாரணை நடத்தவேண் டும். குற்றவாளிகள் நீதிமன்றம் முன் நிறுத்தப்படவேண்டும். இடம் பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்ப தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். பொலீஸ் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய பொலீஸார் உடன் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். இப்படி அவர் தமது கடிதத்தில் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார். (இ-21-3) *****
  2. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 25/9/1997 பக்கம்: 1,8 அம்பாறை சென்றல் முகாம் பகுதியில் 30 தமிழர் கொலை, 40 வீடுகள் எரிப்பு: துப்பாக்கி, வாள்கள் சகிதம் தமிழ்க்கிராமம் மீது தாக்குதல் கொழும்பு, செப். 25 அம்பாறை மாவட்டத்தில் உள்ள சென்றல் முகாம் பகுதியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 30 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 40 வீடுகள் வரை எரிக்கப்பட்டன. சுமார் 500 தமிழ்க் குடும்பங்கள் அருகாமையில் உள்ள பாடசாலை ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளன. 50 அல்லது 60 பேர் அடங்கிய குழு ஒன்று துப்பாக்கிகள் மற்றும் வாள்களுடன் வந்து இத்தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் சீருடை அணிந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. இச்சம்பவத்தை அடுத்து அங்கு விரைந்த அதிரடிப் படையினர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். வீட்டை விட்டு வெளியேறியோரும், வீடு தீக்கிரையாக்கப்பட்டவர்களும் அகதிகளாக அங்குள்ள பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என பி. பி. ஸி. கொழும்புச் செய்தியாளர் புளோரா பொஸ்வோட் கூறினார். நேற்று முன்தினம் ஒரு பொலீஸ் கான்ஸ்டபிள், புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதற்கு பழிவாங்கும் நோக்குடன் பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இது எனவும் - கொழும்பில் தமிழ் வட்டாரங்கள் தெரி விப்பதாக பி. பி.ஸி. மேலும் தெரிவித்தது. அதே சமயம் சென்றல் முகாமில் உள்ள நிலையம் மீது பொலீஸ் செவ்வாய் 10-30 மணியளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலைப் பொலீஸார் மோட்டார் தாக்குதலை நடத்தி முறியடித்து விட்டதாகவும் - பொலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்ததாகவும் - பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. (இ-6-3) *****
  3. செய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் திகதி: 24/09/1997 கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7327 தமிழாக்கம்: நன்னிச் சோழன் கிழக்கு தமிழ் கிராமத்தில் படுகொலை: 8 பேர் பலி ஒரு தமிழ் கிராமத்தில் முஸ்லீம் காவல்துறையினரும் ஊர்காவல் படையினரும் கட்டுக்கடங்காமல் செயற்பட்டு குறைந்தது 8 பொதுமக்களைக் கொன்றனர். அம்பாறை மாவட்டம், "4ஆம் கொலனி" ஊரில் எஞ்சியிருந்த மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். இரண்டு முஸ்லீம் ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. படுகொலை நடந்த பகுதியைக் கட்டுப்படுத்தும் காவல்துறை அதிரடிப்படையான சிறப்பு பணிக்கடப் படையின் உறுப்பினர்களால் 4வது காலனி முத்திரையிடப்பட்டு மூடப்பட்டுள்ளது. முஸ்லீம் ஊர்க்காவல் படையின் பாரிய சேர்படையினர் 4வது கொலனி கிராமத்தில் புயலெனப் புகுந்து, வீடுகளுக்கு தீவைத்து, தமிழ் குடியிருப்பாளர்களைத் தாக்கினர். குறைந்தது 8 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது, மேலும் சில அறிக்கைகள் குறைந்தது 15 பேர் இறந்ததாகவும் கூறுகின்றன. செவ்வாய்க்கிழமை தமிழ்ப் புலிகளால் ஒரு காவலர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், உள்ளூர்வாசிகள் இதை மறுத்து, சிறப்பு அதிரடிப்படை மற்றும் முஸ்லீம் துணைப்படையினர் மற்றும் காவல்துறையினருக்கு இடையேயான வன்முறை படுகொலைக்கு முன்னதாக நடந்ததாகக் கூறுகின்றனர். குடியிருப்பாளர்களின் கூற்றுப்படி, மத்திய முகாம் (சென்ரல் காம்ப்) நகரில் வீதியொன்றில் நடந்து சென்ற தமிழ் இளைஞன் ஒருவரை முஸ்லிம் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். முஸ்லீம் காவல்துறையினருக்கும் சிறப்பு அதிரடிப்படையின் உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் வாக்குவாதத்தை அருகிலிருந்த சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் ஆராய்ந்தனர். பின்னர் சிறுவன் விடுவிக்கப்பட்டான். சிறிது நேரம் கழித்து, சிறப்பு அதிரடிப்படையினர் அப்பகுதியில் உள்ள முஸ்லிம் ஊர்காவலர்கள் மீது சுடுகலச் சூடு நடத்தினர். அதில் இரண்டு ஊர்காவலர் கொல்லப்பட்டனர். ஊர்க்காவல் படையினர் தமிழ்ப் புலிப் போராளிகளால் கொல்லப்பட்டதாகக் கருதி, காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், குண்டர்கள் என கடுஞ்சினத்துடன் செறிவான முஸ்லீம்கள் அப்பகுதியில் தமிழர்கள் செறிந்து வாழும் முக்கிய பரப்பான 4வது கொலனி மீது தாக்குதல் நடத்தினர். பல வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அதில் இருந்தவர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஊரில் எஞ்சியிருந்தவர்கள் அருகிலுள்ள சேனைக்குடியிருப்பு என்ற ஊரிற்கு ஓடிவிட்டனர், அங்கு அவர்கள் ஒரு பாடசாலையில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சேனைக்குடியிருப்பில் வசிப்பவர்களும் முக்கியமாக தமிழர்களாவர். 4வது கொலனிக்கு சிறப்பு அதிரடிப்படை முத்திரையிட்டு மூடி வைத்துள்ளது. மத்திய முகாம், 4வது கொலனி, சேனைக்குடியிருப்பு மற்றும் பல ஊர்களை உள்ளடக்கிய முழுக் கோட்டமும் சிறப்பு அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்பகுதியில் முஸ்லீம் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சில கொலனிகள் பெரும்பான்மையில் முஸ்லீம்களாகவும் மற்றவை பெரும்பான்மையில் சிங்களவர்களாகவும் உள்ளன. சிலது தமிழர்களினதாகும். தமிழ் ஊர்க்காவல் படையினர் இல்லாததோடு மேலும் அப்பரப்பில் வசிக்கும் தமிழர்கள் சிங்கள மற்றும் முஸ்லிம் துணைப்படையினரின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுகிறது. இம்முறை தமிழர்கள் சார்பாக சிறப்பு அதிரடிப்படை தலையிட்டதாகவும், இப்போது பாதுகாப்பு வழங்குவதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. இந்த அறிக்கைகளை உறுதிப்படுத்த முடியாது. எவ்வாறாயினும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு தமிழர்களுக்கு எதிரான பரவலான அட்டூழியங்களுக்கு சிறப்பு அதிரடிப்படை பொறுப்பேற்றுள்ளது. குறைந்தபட்சம் 5000 தமிழ் பொதுமக்கள் சிறப்பு அதிரடிப்படை படையினரால் கொல்லப்பட்டுள்ளனர், அவர்கள் நூற்றுக்கணக்கான சித்திரவதை, தாக்குதல் மற்றும் வன்புணர்ச்சி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். *****
  4. .
  5. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 27/6/1995 பக்கம்: 1, 6 "ஜிகாத் " இயக்கம் மீண்டும் தமிழர் விரோத நடவடிக்கை கொழும்பு, ஜூன் 27 மட்டக்களப்பில் "ஜிகாத் இயக்கம்" புத்துயிர் பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னர் ஐ. தே . கட்சி அமைத்த ஊர்காவல் படைகளில் பணிபுரிந்து இப்போது தொழில் இல்லாமல் இருக்கும் முஸ்லிம் இளைஞர் சிலர் சேர்ந்து "ஜிகாத் இயக்கம்" என்ற அமைப்புக்குப் புத்துயிர் கொடுத்துள்ளதாக அறிவிகப்படுகிறது. இவர்கள் தமிழர்களின் வீடுகளுக்கும், கடைகள் மற்றும் உடைமைகளுகும் தீவைத்து நாச வேலைகளில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் மட்டக்களப்பின் இயல்பு வாழ்க்கையைக் குழப்பி தமிழ் முஸ்லிம் மக்களிடையே பதற்றத்தை உண்டாக்குவதாக காத்தான்குடி பல் நோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் எம். ஐ. எம். உசனார் ''சண்டே லீடருக்கு''த் தெரிவித்திருக்கிறார். கிழக்கில் இதற்கு முன்னரும் ''ஜிகாத் இயக்கம்" என்ற பெயரில் முஸ்லிம் தீவிரவாத அமைப்பு ஒன்று இயங்கி வந்தது. 'ஜிகாத் '' என்ற அரபுச் சொல்லுக்கு புனிதப்போர் என்பது பொருளாகும். (அ) *****
  6. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 11/5/1994 பக்கம்: 1 தமிழர்களை தாக்கும் முஸ்லிம் பொலிஸார் யாழ்ப்பாணம், மே 11 அம்பாறையில் அகற்றப்பட்ட பொலீஸ் அதிரடிப்படை முகாம்களில் புதிதாக முகாம் அமைத்துள்ள பொலீஸார் தமிழ் மக்கள் மீது கெடு பிடிகளை பிரயேகித்து வருகின்றனர். இவர்களின் கெடுபிடிகள் அதிரடிப் படையினரை விட மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ தே. கட்சியில் ஆதரவுடன் அமைச்சர் மன்சூரினால் நியமிக்கப்பட்ட முஸ்லிம் பொலீஸாரே அம்பாறையின் தற்போது அதிகளவில் பணிபுரிகின்றனர். மன்றாட தேவைகளுக்காகவும், தொழிலின் நிமித்தமும் கல்முனை, மருதானை போன்ற இடங்களுக்குச் செல்லும் தமிழர்கள் வயது வேறுபாடின்றி முஸ்லிம் பொலீஸாரால் தாக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. *****
  7. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 20/4/1994 பக்கம்: 1 ஏறாவூரில் இரு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் கைது கொழும்பு.ஏப்.20 ஏறாவூர்ப் பிரதேச சபையில் தலைவரைச் சுட்டுக் கொலை செய்வதற்கு முயற்சித்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரு நபர்களை ஆயுதங்களுடன் ஏறாவூர்ப் பொலீஸார் கைது செய்தனர் என்று அறிவிக்கப்படுகிறது. அந்த இரு நபர்களும் முஸ்லிம் அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. [ஒ-எ- 6] *****
  8. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 21/1/1994 பக்கம்: 1 முஸ்லிம் ஒருவரின் வீட்டிலிருந்து வாழைச்சேனையில் ஆயுதங்கள் மீட்பு வாழைச்சேனை பகுதியில் முஸ்லிம் ஒருவரின் வீட்டிலிருந்து ஏராளமான ஆயுதங்களை பொலீஸார் கைப்பற்றினர். துப்பாக்கி றவைகள், குண்டுகள், வோக்கிடோக்கிகள், பராகுண்டுகள் என்பனவற்றுடன், பொலீஸாரின் சின்னங்களும் கைப்பற்றப்பட்டன என்றும்- வீட்டைச்சுற்றி இவை புதைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் தெரிவிக்கப்படுகிறது. (இ- 9) *****
  9. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 17/12/1993 பக்கம்: 1 முஸ்லிம் ஊர்காவலர் தமிழர் மீது கெடுபிடி யாழ்ப்பாணம், டிச. 17 மூதூர் பகுதியில் தமிழ் மக்கள் மீது முஸ்லிம் ஊர்காவல் படையினர் கெடுபிடிகளை பிரயோகித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் ஊர்காவல் படையினரால் தாக்கப்படுவதுடன், அவர்கள் உடைமைகளும் பறிக்கப்படுகின்றன. (இ- 3) *****
  10. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 16/06/1993 பக்கம்: 1 அம்பாறையில் 2 தமிழர் கொலை யாழ்ப்பாணம், ஜூன் 16 அம்பாறை மாவட்டம் தாண்டியடிப் பகுதியில் இரு தமிழர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. சடலங்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. உமிரி என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர்களை முஸ்லிம்களே கொலை செய்தனர் என அங்குள்ள மக்கள் சந்தேகம் தெரிவித்ததாக அறிவிக்கப்பட்டது. (த) *****
  11. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 21/02/1993 பக்கம்: 1 தமிழர் விரட்டியடிப்பு: மட்டு. பொறுப்பாளர் தகவல் அம்பாறை மாவட்டத்தில் இராணுவ நடவடிக்கைகளின் போது தமிழ்க் கிராமங்களில் இருந்து சுமார் 14 ஆயிரம் தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா படையினரின் ஒத்துழைப்போடு சிங்களவரும் முஸ்லிம்களுமே தமிழ் மக்களை விரட்டியடித்துள்ளனர். மட்டு. - அம்பாறை மாவட்ட அரசியல் நிர்வாகப் பொறுப்பாளர் திரு கரிகாலன் புலிகளின்குரலுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளளார். அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது திருக்கோவில், தம்பிலுவில் ஆகிய இரு கிராமங்களில் மட்டுமே தமிழர்கள் வசித்து வருகின்றனர். ஏனைய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தமது உடைமைகளை இழந்து வேறு இடங்களுக்குச் சென்று அகதிகளாக தங்கியுள்ளனர். மட்டக்களப்பிலும் எல்லைக் கிராமங்கள் பல சிறிலங்காப் படையினரால் அழிக்கப்பட்டுவிட்டன. அங்குள்ள மக்களும் உடைமைகளை இழந்து பரிதவிக்கின்றனர் - என்றும் திரு கரிகாலன் தமது பேட்டியில் தெரிவித்துள்ளார். (ஓ) *****
  12. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 14/11/1992 பக்கம்: 1 "ஜிகாத்"தை தொடங்க முஸ்லிம்கள் ஆதரவாம்: மாத இதழ் கருத்துக் கணிப்பு கொழும்பு, நவ 14 "ஜிகாத்" எனப்படும் புனிதப் போரைத் தொடங்க வேண்டும் என்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைடீர் கஷ்ரப்பின் கருத்தை முஷ்லிம்களில் பெருபொலானோர் ஆதரிப்பதாக "அல் இஸ்லாம்" என்ற பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. தான் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக "ஜிகாத்" நடத்த வேண்டும் என்பதனை பெரும் எண்ணிகையான முஸ்லிகள் ஆதரித்திருப்பதாக இந்தப் பத்திரிகை அறிவித்திருக்கிறது. தனியான முஸ்லிம் பிரிவு ஆரம்பிக்கப்படுவதையும் கணிசமான முஸ்லிம் மக்கள் ஆதரிக்கின்றனர் எனவும் "அல் இஸ்லாம்" மாத இதழ் தெரிவித்துள்ளது. இத்த மாத இதழ் முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைவர் அஷ்ரப்பையும் கடுமையாக விமர்சித்து வரும் சஞ்சிகை என்றும் ஆனால் "ஜிகாதி" யோசனையை இது ஆதரித்துள்ளதாகவும் அவதானிகள் சிலர் தெரிவித்தனர். விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஏனைய கொழும்புத் தமிழ்க் குழுக்களை இராணுத்துடன் சேர்த்துப் போராடும் அரசின் நடவடிக்கையையும் இந்த மாத இதழ் கண்டித்திருக்கிறது. *****
  13. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 04/11/1992 பக்கம்: 1 ஆயுதப் போருக்கு அரபு நாடுகளிடம் உதவி கோருகிறது முஸ்லிம் அமைப்பு ஆயுதம் ஏந்திப் போராடு வதற்காக கிழக்கிலங்கை முஸ்லிம் இயக்கம் ஒன்று பலஸ்தீன கெரில்லா இயக்கம் ஒன்றிடம் உதவி கோரியிருக்கிறது. நம்பத்தகுந்த வட்டாரங்களை ஆதாரமாகக்காட்டி "லங்காதீப" வார இதழ் இவ்வாறு செய்தி வெளியிட்டிருக்கிறது. யாசீர் அரபாத் தலைமையில் இயங்கும் பலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு எதிராகச் செயற்படும் கெரில்லா இயக்கம் ஒன்றிடமே இந்த உதவி கோரப்பட்டுள்ளதாகவும் - இது தொடர்பாக பல கடிதங்கள் கடந்த சில வாரங்களில் பரிமாறப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "முஸ்லிம் மக்கள் விடுதலை இயக்கம்" என்ற பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த இயக்கம், இப்போராட்டத்துடன் முஸ்லிம் மக்களுக்கென புதிய அரசியல் கட்சி ஒன்றையும் பதிவு செய்ய முடிவு செய்திருப்பதாக தெரியவருவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல அரபு நாடுகளிடம் உதவி கேட்டு இந்த இயக்கம் எழுதியுள்ள கடிதங்களில் வடக்கு - கிழக்கு யுத்தத்தில் இதுவரையில் சுமார் 2 ஆயிரத்து 500 முஸ்லிம்கள் உயிரிழந்திருப்பதாகவும், ஆயிரத்து 500 முஸ்லிம்கள் அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாகியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (உ- 10) *****
  14. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 02/11/1992 பக்கம்: 1 ஏறாவூரில் தமிழர்கள் மீது முஸ்லிம் குண்டர்கள் தாக்கு: ஒருவர் பலி; நால்வர் காயம் கொழும்பு, அக். 2 ஏறாவூரில் முஸ்லிம் குண்டர் கோஷ்டி ஒன்று கத்திகள், பொல்லுகள் கொண்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 4 பேர் காயமடைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பக்கத்துக் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும்- பொலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்ததாகவும்- அதனால் ஆத்திரமுற்ற முஸ்லிம்கள் இத்தாக்குதலை நடத்தியதாகவும் பி.பி.ஸி. தெரிவித்தது. (உ- 10) *****
  15. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 11/08/1992 பக்கம்: 1 வெலிகந்தைச் சம்பவம்: 24 தமிழர் படுகொலை பொலன்னறுவை - மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லையில் உள்ள வெலிகந்தைப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவத்தில் படுகொலையுண்ட தமிழர்களின் எண்ணிக்கை 24 என அறிவிக்கப்படுகிறது. மேலும் 8 தமிழர் படுகாயமடைந்தனர். முஸ்லிம் குண்டர்களினால் இவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. (உ- எ- 3) *****
  16. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 10/08/1992 பக்கம்: 1 கிழக்கில் 21 தமிழர் நேற்றுப் படுகொலை! புதுடில்லி. ஆக. 10 கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் தமிழ்க் கிராமவாசிகள் 21 பேர் படுகொலையுண்டனர். மேலும் 10 தமிழர்கள் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து மேல் விவரங்கள் கிடைக்கவில்லை என்று ஏஜென்ஸிச் செய்தி ஒன்று தெரிவித்ததாக இந்திய வானொலி நேற்றிரவு அறிவித்தது. (உ- எ) *****
  17. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 27/07/1992 பக்கம்: 1 மட்டக்களப்பில் ஊர்காவலர் தமிழர் மீது வன்முறைகள்: வீதியில் நடமாட முடியாதவாறு நிலைமை மோசம் கொழும்பு. ஜுலை 23 யாழ்ப்பாணம். ஜூலை 27 மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தமிழ் மக்கள் மீதான வன்முறைகளை முஸ்லிம் ஊர்காவல் படையினர் கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிக்கின்றன. தமிழ் மக்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலையில் உள்ளனர். ஏறாவூரில் பஸ் ஒன்றில் பயணம் செய்த 3 தமிழர்கள் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் கண்டபடி வெட்டப்பட்டு காயப்படுத்தப்பட்டனர் என்றும் - ஓட்டமாவடியில் 4 தமிழரும் காத்தான்குடிப் பகுதியில் ஒரு தமிழரும் ஊர்காவலர்களால் கத்தியால் வெட்டப்பட்டுக் காயப்படுத்தப்பட்டனர் என்றும் - அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் மட்டக்களப்பு, வாழைச்சேனை அகதி முகாமில் உள்ள தமிழ் மக்களை முஸ்லிம் ஊர்காவல் படையினர் தாக்கியுள்ளனர். அகதி முகாமில் உள்ளவர்கள் அச்சுறுத்தப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. *****
  18. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 23/07/1992 பக்கம்: 1 வாழைச் சேனையில் தமிழர் மீது தாக்குதல் கொழும்பு. ஜுலை 23 நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டியில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து நேற்று வாழைச்சேனையில் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் கலவரத்தில் இறங்கினார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழ் சாரதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கலவரத்தை அடக்க பொலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது இரண்டு முஸ்லிம்கன் கொல்லப்பட்டனர் என்று ஏஜென்சி செய்தி ஒன்று தெரிவித்தது. வாழைச்சேனயில் முஸ்லிம்கள் வீதியால் சென்ற தமிழர்களின் வாகனங்களை நோக்கி கற்களை வீசினார்கள் என்றும் அப்போதே தமிழ் சாரதி ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கல்வீச்சுக்கு உள்ளான இந்த வாகனத்தின் சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த இயலாது முன்னால் சென்று கொண்டிருந்த பொலீஸ் ஜீப்புடன் மோதினார் என்றும் இந்தச் சம்பவத்தில் ஜீப்பில் இருந்த பொலிஸ்காரர் ஒருவரும் கொல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் சித்தாண்டியில் அனைத்து ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40க்கு அதிகம் என்றும் அவர்களில் பலர் முஸ்லிம்கள் என்றும் தமிழ் கட்சிகளில் ஒன்று தெரிவித்துள்ளது. [இ-எ- 10] பக்கம்: 1 மேலும் 2 தமிழர்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு வாழைச்சேனைப் பகுதியில் மேலும் இரண்டு தமிழர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரையம்பதியைச் சேர்ந்த அருணாசலம், களுவன்கேணியைச் சேர்ந்த தங்கராசா புஸ்பராசா ஆகியோரது சடலங்களே அவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. வாழைச்சேனைப் பகுதியில் அண்மையில் இதே போன்று நான்கு தமிழர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. வாழைச்சேனையில் உள்ள தமிழ் அகதி முகாமில் இருந்த எட்டுப்பேர் முஸ்லிம் வன்முறைக் கும்பல் ஒன்றினால் சமீபத்தில் கடத்திச் செல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. (இ- 5) *****
  19. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 20/07/1992 பக்கம்: 1 வாழைச்சேனை - பேய்த்தாளை அகதி முகாம் தமிழரை அச்சுறுத்தும் முஸ்லிம் குழு! யாழ்ப்பாணம், ஜூலை 20 மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை, பேய்த்தாளை அகதி முகாமில் தங்கியிருக்கும் அப்பாவித் தமிழர்களைக் கடந்த நான்கு நாட்களாக முஸ்லிம் குழுவினர் அச்சுறுத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அகதி முகாமில் இருந்து இரு தமிழர்களை அந்தக் குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த வாரமும் முஸ்லிம் குழுவினரால் 8 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை- மஞ்சத்தொடுவாய் அகதிமுகாமில் தங்கியுள்ளோரும் கடந்த இரு தினங்களாக அச்சுறுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. [ஒ- 3] *****
  20. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 13/07/1992 பக்கம்: 1 சந்திவெளிப் பகுதியில் இரு தமிழரின் சடலங்கள்! யாழ்ப்பாணம். ஜூலை 13 முஸ்லிம்களினால் கோரமாகக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இரு தமிழர்களின் சடலங்கள் கடந்த வியாழனன்று வாழைச்சேனை, சந்திவெளிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே பகுதியில் அண்மையிலும் கூட தமிழர்கள் மூவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. அண்மையில் வாழைச்சேனை பேய்த்தாளை அகதி முகாமிலிருந்து எட்டுத் தமிழர்கள் முஸ்லிம்களால் கடத்திச்செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் படையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கும் மட்டக்களப்பு பழுகாமம் பகுதியில் தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. *****
  21. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 10/07/1992 பக்கம்: 1 3 தமிழர் சுட்டுக் கொலை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊர்காவல் ப்ஃடையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வந்தாறுமூலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரு தமிழர்களும்- கரடியனாறுப் பகுதியில் கடந்த புதன்கிழமை ஒரு தமிழரும் - ஊர்காவல்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கரடியனாறுப்பகுதியில் ஊர்காவல்படையினரின், சூட்டுக்கு சிறுமி ஒருத்தியும் காயம் அடைந்தார். [இ- 3] *****
  22. .
  23. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 08/07/1992 பக்கம்: 1 அம்பாறையில் 18 தமிழர் சுட்டுக் கொலை! யாழ்ப்பாணம், ஜூலை 8 அம்பாறை மாவட்டம் - காட்டுப் பகுதி எல்லையில் நேற்று முன்தினம் 18 தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். காட்டுப்பகுதி எல்லையில் உள்ள குடியிருப்புக்களில் வாழ்ந்த அப்பாவித் தமிழர்களே கோரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினதும், முஸ்லிம்களினதும் அச்சுறுத்தல்களால் கிராமங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள் வசித்து வந்த காட்டுப் பகுதி ஒன்றைத் திடீரென சுற்றிவளைத்த படையினர், கண்டபடி சுட்டதில் 18 பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. [உ- 5] பக்கம்: 1,6 முஸ்லிம்களுக்கு ஆயுதம் வழங்கிய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் அதுவே கிழக்கு வன்செயல்களுக்கு காரணம் என்கிறது மன்னிப்புச்சபை லண்டன். ஜூலை 8 கிழக்கு மாகாணத்தில் வன்முறைகள் அதிகரித்தமைக்கு அங்குள்ள முஸ்லிம் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கிய ஸ்ரீலங்கா அரசின் நடவடிக்கையே காரணமாகும். இவ்வாறு ஸ்ரீலங்கா அரசைக் கண்டித்திருக்கிறது சர்வதேச மன்னிப்புச் சபை. ஸ்ரீலங்கா நிலைமை குறித்து மன்னிப்புச் சபை விடுத்த ஆகப் பிந்திய அறிக்கையிலேயே இப்படிக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. பத்துப் பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் கடந்த ஏப்ரல் மாதம் பொலன்னறுவை மாவட்டத்தில் முத்துக்கல், கரப்பொல மற்றும் அழிஞ்சிப்பொத்தானைக் கிராமங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிழக்கு முஸ்லிம் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கும் அரசின் நடவடிக்கை குறித்து சர்வதேச மன்னிப்பு சபை கடந்த ஆண்டே கவலை தெரிவித்திருந்தது. மன்னிப்புச்சபையின் அந்த அறிவிப்பை ஊர்ஜிதப்படுத்துவது போல பொலன்னறுவைப் படுகொலைகள் இடம்பெற்றிருப்பதாக இப்போது சுட்டிகாட்டப்படுகிறது. இந்தப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்த விசாரணைக்குழு ஒன்றை அரசு நியமித்திருப்பதை வரவேற்றுள்ள மன்னிப்புச்சபை., அந்த விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டிருக்கிறது. அறிக்கை இப்போது பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த வருடத்தின் மிக மோசமான இனப்படுகொலை என்று கருதப்படும் இந்த வன் செயல்களுக்குவர்கள் காரணமான தண்டிக்கப்பட வேண்டும் என்றும் - நாட்டின் கிழக்குப் பகுதியில் தமிழ், முஸ்லிம் கிராம மக்கள் வேண்டுமெறே கொல்லப்படுவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மன்னிப்புச் சபை கேட்டிருக்கிறது. இன அடிப்படையில் கொலைகளில் ஈடுபடுவதை விடுதலைப் புலிகள் நிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்கப்பட்டிருக்கிறது. வலைத்தளம்: www.amnestyusa.org கொழுவி: https://web.archive.org/web/20110222090212/http://www.amnestyusa.org/document.php?lang=e&id=CBABB2C2398D0E9B802569A6006028CF "............. மதுரங்கலையில் உயிரிழந்த 6 பேரில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 1. பி.பக்கியராஜா 2. சுந்தரலிங்கம் 3. பீரிஸ் விஜயசிங்க 29 ஏப்ரல் 1992, முத்துகல் ஊரில் நடந்ததாகக் கூறப்படும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளில் பாதிக்கப்பட்ட 51 பேரின் பெயர்களும் அறிக்கப்படுத்தப்பட்ட வயதுகளும். எஸ் பேபி, 1 எஸ் மங்கையற்கரசி, 2 எஸ் சுதர்சன், 3 டி ரீகன், 3 எஸ் தங்கேஸ்வரன், 3 எஸ் செல்வசசி, 3 எஸ் ரதீஸ், 4 டி விஜயேந்திரன், 4 கே கனகநாதன், 4 டி சுகந்தி, 4 எஸ் ரூபி, 5 என் விஸ்வலிங்கம், 7 டி இன்பவதி, 8 என் மனோகந்தன், 10 டி பஞ்சிலகாமி, 12 பி லோகேஸ்வரன், 12 டி ரவிச்சந்திரன், 12 எஸ் லட்சுமி, 12 டி வசந்தகுமாரி, 13 பி திருலோகநாதன், 14 டி பாபு, 14 டி கீதா, 14 டி விஜயகுமாரி, 15 பி சுலோச்சாதேவி, 18 கே தங்கராணி, 21 டி உதயகுமாரி, 22 எஸ் பாலையா, 27 சுந்தரலிங்கம், 28 பி மகேஸ்வரி, 29 டி நவமணி, 30 பி சுலோச்சன்தேவி, 30 வி நித்தியகல்யாணி, 30 எஸ் (அல்லது ஏ) சிவபதி, 32 கே குபேந்திரராஜா, 33 கே சதாசிவம், 34 வி தெய்வநாயகம், 35 பி குலேந்திரராணி, 35 கே கோபிகிருஷ்ணன், 35 பாக்கியராஜா, 37 டி (அல்லது கே) கண்ணகை, 40 எஸ் சிவநேசராஜா, 40 கே.கோபாலப்பிள்ளை, 40 எஸ் யோகசங்கரி, 40 பி வில்லியம் சிங்கோ, 44 வி தர்மலிங்கம், 49 எஸ் யோகம்மே, 65 எஸ் தெய்வானைப்பிள்ளை, 70 கந்தையா, 78 எஸ் மடந்தை, 80 வி நீதாப்பிள்ளை, 80 29 ஏப்ரல் 1992, கரபொலவில் நடந்ததாகக் கூறப்படும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளில் பாதிக்கப்பட்ட 38 பேரில் 31 பேரின் பெயர்களும் அறிக்கைப்படுத்தப்பட்ட வயதுகளும். சுபாகர், 7 சுதர்சன், 7 ஜானகி, 8 சாரதாதேவி, 18 சிவமணி, 18 அன்னலட்சுமி, 18 சிவரூபி, 28 குஞ்சன், 30 கந்தசாமி, 35 சிவஞானம், 40 தங்கராஜா, 45 ராசையா, 60 சின்னமுத்து, 68 அன்னம்மா, வயது தெரியவில்லை ஐயாத்துரை கண்ணம்மா கந்தசாமி லீலாவதி மாரிமுத்து முத்துப்பிள்ளை முத்தன் நிரஞ்சன் பாலன் பூமணி ரத்தினம் சரஸ்வதி மற்றும் குழந்தை சின்னத்தங்கம் சசிகரன் தங்கம்மா தங்கராஜா எம் தோமஸ் " *****
  24. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 16/06/1992 பக்கம்: 1 பஸ் பயணிகளை வழிமறித்து கிரான்குளத்தில் 15 தமிழரை ஆயுதபாணிகள் கடத்தினர்! முஸ்லிம் குண்டர்கள் அட்டகாசம் கொழும்பு, ஜூன் 16 மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தில் நேற்று முன்தினம் இ. போ. ச. பஸ் ஒன்றில் பயணம் செய்த பதினைந்து அப்பாவித் தமிழர்கள் ஆயுதம் தாங்கிய முஸ்லிம் குண்டர் குழு ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டனர். கடத்தப்பட்டோர் என்னவானார்கள் என்பது குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை. திருக்கோயிலில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸை கிரான்குளத்தில் வழி மறிக்கப்பட்டது. ரி௫6 ரகத் துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் மூவர்குழு ஒன்று 15 பயணிகளை பஸ்ஸை விட்டு இறக்கிக் கடத்திச் சென்றதாகவும் - எஞ்சிய பயணிகளோடு பஸ்ஸைத் தொடர்ந்து செல்ல அவர்கள் அனுமதித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. *****
  25. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 07/06/1992 பக்கம்: 1, 2 சிங்களவரும், முஸ்லிம்களும் செட்டிகுளத்தில் குடியேற்றம் வவுனியா செட்டிகுளம் பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்பது தமிழ்க் கிராமகளில் சிங்கள, முஸ்லிம் குடும்பங்களைக் குடியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகத் தெரியவருகிறது. பெரிய புளியங்குளம், நெடுங்கரைச்சேனை, பெரிய நொச்சிமுனை, கிட்டன்குளம், தீரியான்குளம், முதலியான்குளம், கரம்பைமடு, முகத்தான்குளம், பாவற்குளம் ஆகிய தமிழ்க் கிராமங்களே குடியேற்றத்துக்கு உட்படுத்தப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. பாவற்குளம் கிராமத்தில் ஏற்கனவே முஸ்லிம்களும் சிங்களவர்களும் குடியமர்த்தப்பட்டு விட்டனர். செட்டிகுளம் பகுதியில் மேற்படி கிராமங்களில் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்கள் மடு போன்ற அகதி முகாம்களில் தங்கியுள்ளனர். செட்டிகுளம் பகுதியில் குடியமர்த்தப்படும் சிங்கள, மற்றும் முஸ்லிம் மக்களுக்குத் தேவைக்கு அதிகமான உதவிகளும் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் தெரியவருகிறது. குடியமர்த்தப்பட்ட முஸ்லிம்களின் பாதுகாப்பை முன்னிட்டு அங்கு ஓர் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் முஸ்லிம் உதவி அரச அதிபர் பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (ஒ-5) *****

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.