Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. தமிழ்நாட்டில் பயிற்சி முகாம் ஒன்றில் தமிழ்நாட்டுத் தமிழர்களுடன் லெப். கேணல் பொன்னம்மான் 1985<
  2. படிமங்களுக்குமேல் தயவு கூர்ந்து எழுதாதீர்கள். இவை உங்களுக்கு சொந்தமான படிமங்கள் இல்லை. இவை தமிழருக்குச் சொந்தமானவை. இவ்வாறு வணிகம் செய்வது பிணத்தை விற்று பொண்டாட்டி பிள்ளைகளை வளர்ப்பதற்குச் சமனானது.
  3. "கடற்புறா" வள்ளத்தில் பன்னிரு வேங்கைகள் (பிடிபட முன்னரான காலத்தில்) இடமிருந்து இரண்டாவது கப்டன் கரன், மூன்றாவது லெப். கேணல் குமரன் எ குமரப்பா, நான்காவது திரு. குண்டப்பா அலன், ரவியப்பா, ??? , லெப். கேணல் குமரன் எ குமரப்பா, மேஜர் அப்துல்லா (RPG அப்துல்லா), பாலன்
  4. லெப். கேணல் புலேந்தி அம்மான் போராளிகளுடன் 1987< 'வோக்கியில் கதைப்பவர் புலேந்திரன் அவர்கள் ஆவார்'
  5. ஈழத்தீவில் முதன் முதலாக உந்துகணை செலுத்தியை பயன்படுத்தியவர்கள் புலிகளே! 1987<
  6. வீரவேங்கை றோஸ்மனின் வித்துடல் கிறிஸ்தவ சமய சின்னங்களுடன் படைய மரியாதையுடன் இடுகாடு நோக்கி எடுத்துச்செல்லப்படுகிறது 17-1-1986 இந்தியப்படைக்கு முன்னரான காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் முறையாக மிகக் குறைந்த வயதில் (17இல்) வீரச்சாவடைந்த மாவீரர் இவர்தான். மன்னார் நாயாற்றுவெளியில் சிறிலங்கா படையினருடனான நேரடிச் சமரில் வீரச்சாவடைந்தார்.
  7. 1986< "பூவும் புயலாகிப் பாயும் புலியாகி போரில் குதித்துள்ள நாடு - தமிழ் ஈழம் உருவாகும் வேளை இதுவாகும் என்று களம் நோக்கி ஓடு!"
  8. http://irruppu.com/2021/05/30/வடமராட்சி-ஒப்பரேசன்-லிபர/ 1987ம் ஆண்டு, மே மாதம் 10 ஆம் தேதி. பொலிகண்டி கொற்றாவத்தை பகுதியில் அமைந்திருந்த புலிகள் பயிற்சி முகாமில் செல்வராசா மாஸ்டர் தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட 40 போராளிகளுக்கு சிறப்பு கொமாண்டோ பயிற்சி கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. புலிகள் ஒரு வலிந்த தாக்குதல் நடத்துவதற்காக தான் இந்த பயிற்சி நடத்தப்பட்டு கொண்டிருந்தது. மே 20ஆம் தேதி அன்று இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. இந்த பயிற்சி நிறுத்தப்பட்டதற்கான காரணம், சிங்கள ராணுவத்தால் ஒரு பெரிய தாக்குதல் யாழ்குடா நாட்டில் நடத்தப்பட்ட போகிறது என்ற தகவல் கிடைத்ததால் இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. மே 25 இரவு தேசிய தலைவர் நவிண்டில் பயிற்சி முகாமில் வடமராட்சியில் உள்ள போராளிகளுக்கு கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டம் நடு இரவு 1. 30 மணி வரை நீடித்தது அந்தக் கூட்டத்தில் யாழ்குடா நாட்டில் எதிரிகளின் தாக்குதல் திட்டம் பற்றியும் அதை எதிர்கொள்வது பற்றியும் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் தேசிய தலைவர் வழங்கினார். இந்த கூட்டத்தில் தான் முதன்முறையாக தலைவர் அவர்கள் போராளிகளுக்கு பதவிநிலைக்கான பெயர்களை வழங்கினார். வழக்கமாக அதுவரை வீரச்சாவிற்கு பின்பே போராளிகளுக்கு பதவியின் பெயர்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. மே 26 காலை கூட்டம் முடிந்து போராளிகள் முகாமுக்கு திரும்பினர். அன்று காலை 4. 30 பலாலியில் இருந்து 5க்கும் மேற்பட்ட உலங்குவானூர்திகள் வல்லை வெளியூடாக தாழப்பறந்து, முள்ளி, முள்ளியான், மண்டான் பகுதிகளில் தரையிறக்கப்பட்டு ராணுவ நிலைகளை பலப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக வான் பரப்பு பகுதிகளில் உலங்குவானூர்திகள் பல மாறி மாறி வந்த வண்ணம் இருந்தன. மே 26 மணல் காட்டு கடல் பகுதியூடாக சிங்கள கடற்படையினர், வல்லிபுர கோவில் பகுதியில் பெருமளவு ராணுவத்தினரை தரை இறங்கினர். மே 26 காலை 5.30 உடுப்பிட்டி யூனியனுக்கு முன் அமைந்த புலிகளின் அந்த பிரதான மெயின் முகாமில் போராளிகள் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளுடன்(50 Caliber ) தயாராகிக் கொண்டிருந்த வேளை, குண்டுவீச்சு விமானம் புலிகளின் அந்த பிரதான மெயின் முகாமை தாக்கியது. இதில் வீமன், ரம்போ/சிவா, செட்டி, நாகேந்திரன் உட்பட சில போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். வடமராட்சி தொண்டமனாறு இராணுவ முகாம், பலாலி ராணுவ முகாமுடன் நேரடி தொடர்பில் இருந்தது. வல்வெட்டித்துறை இராணுவ முகாம், மற்றும் பருத்தித்துறை இராணுவ முகாமிலிருந்து மணல்காடு, முள்ளி, முள்ளியான், மண்டானில் இறக்கப்பட்ட ராணுவம் மூலமாக வடமராட்சி பகுதி ராணுவத்தால் முற்றிலும் சுற்றி வளைக்கப்பட்டது. மே 26 அதிகாலை 6.30 மணி தொண்டமனாறு மெயின் முகாம் பொறுப்பாளர் கப்டன் அலன், மற்றும் நரேஷ். இருவரும் அதிகாலையில் வல்லை வெளியில் ராணுவம் தரை இறங்கி உள்ளதா என கண்டறிய துவிச்சக்கரவண்டியில் சென்று பார்க்கின்றனர். பார்த்துவிட்டு இரண்டாவது பொறுப்பாளரிடம் வாக்கியில் இங்கு ஆமி இல்லை என்பதை தெரிவிக்கின்றனர். மறுமுனையில் உள்ள இரண்டாவது பொறுப்பாளர் ராணுவம் கிரேசர், காட்டு வைரவர் பகுதியில் பதுங்கியிருப்பதாக அவர்களிடம் தகவல் சொல்கிறார். இருவரும் துவிச்சக்கரவண்டியில் மீண்டும் தொண்டமனாறு பகுதிக்கு திரும்பும் வேளையில் அப்பகுதியில் ராணுவத்தினர் பதுங்கி இருப்பதை அவர்கள் இருவரும் அறியவில்லை. துவிச்சக்கரவண்டியில் தொண்டமனாறு பகுதிக்கு வரும் அவர்களை ராணுவத்தினர் மறைந்திருந்து தாக்குகின்றனர். இந்த இராணுவத்தினருடனான நேரடி சமரில் கப்டன் அலன் மற்றும் நரேஷ் இருவரும் வீரச்சாவை தழுவிக் கொள்கின்றனர். இந்த தாக்குதல் மூலமாக ஒப்பரேஷன் லிபரேஷன் முதல் சண்டை ஆரம்பிக்கின்றது. இந்த சமநேரத்தில் ராணுவம், கடற்படை, விமானப் படையினர் தொண்டமனாறு, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, முகாமிலிருந்து புலிகளின் காவலரணை நோக்கி பாரிய தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த பாரிய தாக்குதலில் இரு பகுதியினரும் கடும் சண்டையில் ஈடுபட்டனர். இந்த ராணுவத் தாக்குதலின் உக்கிரத்தால் புலிகள் தொண்டமனாறு, மயிலியதனை வல்வெட்டிதுறை நிலைகளில் இருந்து பின்வாங்கி உடுப்பிட்டி பகுதிக்கு செல்கின்றனர். இவ்வேளையில் உலங்கு வானூர்தி மூலம் மக்களுக்கு ராணுவம் துண்டு பிரசுரங்களை வீசுகிறது. தாக்குதல் தொடங்குவதை அந்த பிரசுரங்கள் மூலம் அறிவித்த ராணுவம், மக்களை கோயில்கள், பள்ளிக் கூடங்களில் தஞ்சமடையும் படி அறிவுறுத்துகிறது. மே 26 மாலை 6 மணி வரை சண்டை நடைபெறுகிறது. பருத்தித்துறை முகாம் ராணுவத்தால் அதற்கு மேல் முன்னேற முடியவில்லை. மே 26 மாலை 6 மணியுடன் சண்டை ஓய்கிறது. ஆனாலும் இரவு முழுவதும் கடல் விமானம் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகள் எல்லாம் தாக்கப்படுகின்றன. வல்வெட்டித்துறை முகாம் உடன் தொண்டமனாறு முகாமுக்கு தரை மூலமாக முன்னேறிய போது வல்வெட்டித்துறை ராணுவத்தினரின் எறிகணை வீச்சில், வேம்படியில் லெப்டினன் யூசி வீரச்சாவை தழுவிக் கொண்டார். மே 27 அதிகாலை 6 மணி இரண்டாம் நாள் சண்டை ஆரம்பமாகியது. வடமராட்சி சுற்றியுள்ள ராணுவ முகாம்களில் இருந்து ராணுவம் ஊர் பகுதிக்குள் முன்னேறுவதற்காக கடும் தாக்குதலில் ஈடுபட்டது. ராணுவம் கம்பர்மலை, விறாச்சிக்குளம் ஊடாக வேதக்கார சுடலை ஊடாக பாரிய தாக்குதலை மேற்கொண்டு உடுப்பிட்டி வல்வெட்டித்துறை பிரதான சாலையை ஊடறுத்து சண்டையை மேற்கொண்டது. இதில் நம்மாள் தலைமையில் ராணுவத்தினருடன் பாரிய சமர் நடைபெற்றது. இதில் போராளிகள் ஜேபி, குண்டு பாலன், கடாபி, பரமு, குட்டி ஆகியோர் சிறுசிறு அணிகளாக முறியடிப்புச் சமரில் ஈடுபட்டிருந்த வேளையில், உடுப்பிட்டி பத்தர் ஒழுங்கையில் நிலை கொண்டிருந்த மோட்டார் அணியின் தாக்குதலில் ராணுவம் பாரிய இழப்பை இரண்டாம் நாளில் சந்தித்தது. இரண்டாம் நாளில் நடைபெற்ற இந்த சமரில் தக்சன், கஜன் என இரு போராளிகள் வீரச்சாவைத் தழுவினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். பின்னர் அணி பின்னோக்கி நகர்ந்து உடுப்பிட்டி யூனியன், இலந்தை காடு, வெள்ளரோட்டு பகுதியில் நிலைகளை அமைத்தனர். சமகாலத்தில் வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதிகளை ராணுவம் கைப்பற்றினர். இத்துடன் இரண்டாம் நாள் சண்டை நிறுத்தப்படுகிறது. ஆனாலும் இரவு முழுவதும் ராணுவம் மக்கள் மத்தியில் Y12 விமானம் மூலம் நேபாம் குண்டு வீச்சு தாக்குதலிலும், பீப்பாய் மலக்கழிவு தாக்குதலிலும், எறிகணைத் தாக்குதலிலும் ஈடுபடுகிறது. மே 28 காலை மீண்டும் சண்டை ஆரம்பிக்கிறது. புறாபொறுக்கி வெள்ளை ரோட்டில், இலந்தைக்காட்டில் பாரிய சண்டை நடைபெறுகிறது. இச்சண்டையில் புலிகள் பின்வாங்கி இரும்பு மதகடியில் நிலைகளை அமைத்து பலப்படுத்தும் வேலையில் ஈடுபடுகின்றனர். இத்தருணத்தில் பெண்புலிகள் கவிதா, மாலதி தலைமையில் ஆட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சண்டையில் இணைக்கப்படுகின்றனர். மே 29 நெல்லியடிக்கு அருகாமையில் உள்ள இரும்பு மதகடியில் காலை மீண்டும் தாக்குதல் ஆரம்பிக்கிறது. இதனுடன் உலங்குவானூர்தி குண்டுவீச்சு விமானங்கள் சகிதம் முன்னேறி வரும் ராணுவத்தினருடன் புலிகளின் பாரிய மோதல் நடைபெறுகிறது. இத்தாக்குதல் முனையில் மட்டும் 2500 இராணுவத்தினர் சண்டையில் ஈடுபட்டனர். அவர்களுடன் மொத்தமே ஐம்பது போராளிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாலி தயாரிப்பான சியாமா செட்டி விமானங்கள் மக்கள் குடியிருப்புகள் மேல் பலத்த தாக்குதலில் ஈடுபட்டது. இச்சண்டையில் புலிகளும் இராணுவத்தினரும் மிக அருகாமையில் இருந்து பலமாக மோதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலே பெண்புலிகள் நேரடி மோதலில் ஈடுபட்ட முதல் தாக்குதல். உலகிலேயே பெண்கள் மரபுவழி மோதலில் ஈடுபட்டதும் இந்த தாக்குதலே என்ற வீரமிகு பெருமை கொண்டது ஆகும். சண்டை அன்று இரவு வரை நீடித்தது. இத்தாக்குதலின் போது நெல்லியடி மத்திய பகுதியில் நிலைகொண்டிருந்த சுக்லா, நிரூபன் அணியினர் வழங்கள் பணிகளிலும், காயப்பட்ட போராளிகளை நகர்த்துதல் பணிகளிலும் ஈடுபட்டனர். மே 30 காலை மீண்டும் சிங்களப் படையின் தாக்குதல் தொடங்கியது. விமான, உலங்குவானூர்தி தாக்குதல், மோட்டார் தாக்குதலுடன், நெல்லியடி மாலுசந்தி, மந்திகை ஆகிய இடங்களில் பாரிய தாக்குதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று வடமராட்சி ராணுவத்தினரின் கைகளில் முற்றுமுழுதாக வந்தது. இதனுடன் புலிகள் ஆனைவிழுந்தான் கண்டல் பகுதியூடாக தென் மராட்சி கொடிகாமம் மிருசுவில் பகுதிகளுக்கு பின்வாங்கி நிலை எடுத்துக் கொண்டனர். ‘வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்’ 1987 மே மாதம் 26ஆம் திகதி தொடக்கம் 5 நாட்களாக தொடர்ந்து இடம்பெற்றது. இந்தப் போரில் 817 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 15000க்கும் மேற்பட்டமக்கள் தமது இருப்பிடங்களை விட்டுவெளியேறி அகதிகள் ஆக்கப்பட்டனர். பிரித்தானியர் ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை அடைந்த பின்னர் இலங்கை இராணுவம் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட முதல் மரபுச்சமராக இந்த இராணுவ நடவடிக்கை அமைந்திருந்தது. இந்தப் பாரிய இராணுவ நடவடிக்கைக்கு பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ, கேணல் விஜய விமலரத்ன ஆகியோரின் தலைமையில் பல்வேறு படையணிகளில் (பற்றாலியன்கள்) இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 8000 படையினரைக்கொண்ட இலங்கை இராணுவத்தை வழிநடத்தியதோடு அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா, பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி ஆகியோர் இதற்கான அரசியல் தலைமைத்துவத்தையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். சிறிலங்கா அரசின் கூட்டுப்படை நடவடிக்கைகளில் முதற்கட்டமாக எந்தவிதமான அரச எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்காத அப்பாவித் தமிழ் மக்களை சொந்தவீடுகளில் இருந்து விரட்டி அடித்து அவர்களது நிலங்களைக் கைப்பற்றும் ஒரு இனவாத நடவடிக்கையாக இது அமைந்தது. இந்த இராணுவநடவடிக்கை மூலம் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் இருந்து வெளிவந்த இராணுவம் வசாவிளான், குரும்பசிட்டி போன்ற பகுதிகளில் முன்னேறினர். இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பெருந்தொகை மக்கள் இடம் பெயர்ந்தனர். இதில் பெரும்பாலான தமிழர்களின் வீடுகள் எவ்வித காரணமும் இன்றி புல்டோசர்கள் மூலம் இடித்து அழிக்கப்பட்டன. தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சொந்த ஊரான வல்வெட்டித்துறை நகரத்தையும் அதனைச் சுற்றியுள்ள உடுப்பிட்டி, பொலிகண்டி ஆகிய கிராமங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதே அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் இலக்காகவும் இருந்தது. இந்தப்படை நடவடிக்கையில்முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த மேஜர் கோத்தபய ராஜபக்ச,மேஜர் சரத்பொன்சேகா, பிரிகேடியர் ஜி.எச்.டி.சில்வா, லெப்டினன்ட் நார்த் விக்கிரமரத்ன போன்ற முக்கியமான இராணுவ உயர் அதிகாரிகள் இத்தாக்குதல் நடவடிக்கையில் பங்கேற்றிருந்தனர். விமானம், தரைவழி, மற்றும் கடல்வழித் தாக்குதல்கள் என மும்முனைகளிலும் படையினர் முன்னேறிச்சென்றனர். படையினர் வெறிகொண்டவர்களாக முன்னேறிச் சென்றவழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களையும் கைது செய்து கப்பலில்ஏற்றி புதிதாக இதற்காக திறக்கப்பட்டபூசா தடுப்பு முகாமுக்குஏற்றிச் சென்றனர். அங்கே கொண்டு செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இதுவரையில் திரும்பவேயில்லை. அதேவேளை போகும் வழியெங்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடுகள் இன்றி சுட்டும் எரித்தும் படுகொலைகள் செய்துகொண்டே சென்றனர். இடம்பெயர்ந்து சென்றவர்கள் வதிரி, புற்றளை, அல்வாய் போன்ற கிராமங்களில் சில வீடுகளிலும், ஆலயங்களிலும், பாடசாலைகளிலும் அகதிகளாக தங்கி இருந்தனர். இவ்வாறுஆலயங்களில் தங்கியிருந்தவர்களை அடையாளம் கண்டநிலையில் அல்வாய் முத்துமாரி அம்மன் கோவிலை நோக்கி பலாலி இராணுவ முகாமில் இருந்து அடுத்தடுத்து ஏவப்பட்ட எறிகணைகள் விழுந்துவெடித்ததால் ஆலயத்தில் தஞ்சம்அடைந்திருந்த சுமார் 200 பேர் வரையான தமிழர்கள் உடல் சிதறிப் பலியாகினர். வடமராட்சிஎங்கும் மேற்கொள்ளப்பட்ட ‘ ஒப்பரேசன் லிபரேசன்’ தாக்குதலில் 850பேர் வரை தமிழர்கள் கொல்லப்பட்டதோடு 40,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டு தமது குடியிருப்புக்களை இழந்து அகதிகளாக்கப்பட்டனர். வடமராட்சி லிபரேசன் நடவடிக்கை தாக்குதலின் இலக்காக இருந்த வடமராட்சியில் முழுப்பிரதேசமும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிறிலங்கா அரச படையினர் வடமராட்சியின் தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி, நெல்லியடி பருத்தித்துறை, மந்திகை ஆகியவற்றை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒவ்வொரு இடங்களிலும் சிறு சிறுமுகாம்களை அமைத்தனர். வடமராட்சியின் முக்கிய தளமாக நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் 1500இராணுவத்தினரைக் கொண்ட பாரிய முகாம் அமைக்கப்பட்டு வெற்றிவிழா கொண்டாடினார்கள். அதேவேளை இந்த இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து தெருக்களில் மனிதர்ளின் உடல்களோடு நூற்றுக்கணக்கான ஆடுகள், மாடுகள், நாய்கள் என்பனவும் இறந்து காணப்பட்டன. பல நாட்கள்வரை தெருவெங்கும் பிணவாடைகள் வீசிக்கொண்டிருந்தன. “தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்” எழுத்துருவாக்கம்: அ.சேரா உதவி ஒருங்கிணைப்பு: ஆதவன், இரவியப்பா
  9. கரும்புலி மேஜர் மறைச்செல்வன் செல்வராஜா ரஜினிகாந்தன் தமிழீழம் (வவுனியா மாவட்டம்) தாய் மடியில் :03-05-1981 தாயக மடியில்:10.05-2000 அது 1999ஆம் ஆண்டின் மழைக்காலம். சினந்து அழும் சின்னப்பிள்ளையாய் விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. மழைநேரம் காட்டின் தரையமைப்பு எப்படி மாறிப்போயிருக்குமோ அந்த மாற்றம் அனைத்தும் நிறைந்த காட்டிற்குள்ளால் பெய்து கொண்டிருக்கும் மழையில் நனைந்தபடி காட்டு மரங்கள் சிந்தும் நீர்த்துளிகளால் விறைத்த படி ஒரு அணி காட்டை ஊடறுத்து வேகமாக நடந்து கொண்டிருந்தது. அவர்களின் வலுவிற்கு அதிகமான சுமைகள். அவற்றோடும் மணலாற்றில் இருந்து காடுகளிற்குள்ளால் கனகராயன்குளம் நோக்கி சளைக்காமல் நடந்து கொண்டிருந்தார்கள். அந்த அணி வீரர்களிலே மிக உயர்ந்தவனும் அகன்ற நெஞ்சுடனும் ஓர் உருவம். நீண்ட கால்கள், பெருத்த கைகள், குழம்பிப்போன தலைமயிர், அடுக்கான பல்வரிசையில் சற்று மிதந்து நிற்கும் ஒரு பல், பொதுநிறம், கண்குழிக்குள் அலையும் கண்கள் எங்கோ, எதையோ தேடிக்கொண்டிருந்தன. இப்படி அடையாளங்களோடு ஒருவன், அவன்தான் அந்த அணியை வழிநடத்திச் செல்லும் அணித்தலைவன் மறைச்செல்வன். அவனது நெஞ்சிற்குள் எத்தனையோ ஏக்கங்கள். அதை முகத்தில் சிறிதும் வெளிக்காட்டிவிடாது தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு அணிகள் எட்டவேண்டிய இலக்கு நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தான். இடையில் எதிர்ப்பட்ட தடைகளைத் தாண்டிச்செல்ல அதிக நேரம் தாமதமாக வேண்டியிருந்தது. தொலைத்தொடர்புக் கருவி அவனை அழைத்தது. ஏதோ கதைத்தான். “இன்னும் இலக்குகளை ஏன் அடையவில்லை. தாக்குதல் தொடங்கி விட்டது” என்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் ஏராளம். அதைத் தெரிந்தும் “நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் குறித்த இடத்தில் நின்று தொடர்பு எடுக்கின்றோம்” என்று கூறிவிட்டு உடனேயே தொடர்பைத் துண்டித்தான். போய்ச் சேரவேண்டிய இடத்திற்கும் அவர்கள் நிற்கும் இடத்திற்கும் இடையே நீண்ட அந்தக் காட்டுப் பகுதியைக் கடக்க அவர்களிற்கு அந்த நேரம் போதாது. அதுவும் படை முகாம்களைக் கடந்து போக வேண்டியிருந்தது. வேகமாக எல்லோரும் நடந்தார்கள். அந்தக் காட்டுப்பகுதி அவனுக்குப் பழக்கமானது. மரங்கள் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்திருந்தான். ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையில் அவன் பங்கெடுத்திருந்த போது அதே இடங்களில் பலநாட்கள் கண்விழித்து நின்றிருக்கின்றான். அந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் அவன் தன் தோழர்களைப் பிரிந்து தேம்பி இருக்கின்றான். அப்போதெல்லாம் “உந்த ஆட்லறியை உடைக்கவேணும்” என்று மனதினுள் குமுறிக்கொள்வான். அது அவனிற்கும் அந்த மரங்களிற்கும்தான் தெரியும். தொடர் சண்டைக் காலத்தில், காவலரணில் கடந்த நாட்களில் ஆட்லறி ஏறிகணைகள் சினமும் வெறுப்பும் ஊட்டுபவையாகவே இருந்தன. ஒன்றாய் பதுங்கு குழியில் இருந்து விட்டு தண்ணீர் எடுத்து வரவென வெளியில் சென்ற அவனிலும் அகவை குறைந்த தோழன் திரும்பி வரமாட்டான்... அவன் எறிகணை வீச்சில் வீரச்சாவு அடைந்தோ, அல்லது விழுப்புண் பட்டோ இருப்பான். காணாத தோழனைத் தேடிச்சென்று இரத்த வெள்ளத்தில் காணும் வேளைகளையெல்லாம் சந்தித்தவன். இதற்கு காரணம் அந்த ஆட்லறிகள். அதை உடைக்க வேணும் என்று மனதிற்குள் அப்போதே முடிவெடுத்துக் கொண்டான். அதற்காகவே தலைவருக்குக் கடிதம் எழுதி அனுமதி பெற்றுத் தன்னையே வருத்திப் பயிற்சி எடுத்து இப்போது கரும்புலியாய் இலக்குத்தேடிப் போகின்றான். அவன் முதலில் நடந்த இடங்களை மீண்டும் காணுகின்ற போது மயிர் சிலிர்த்தது. நடையை விரைவுபடுத்தி வேகமானார்கள். பொழுது கருகின்ற நேரம் தான் அந்த இராணுவ முகாமிற்கு அண்மையாக வந்திருந்தார்கள். இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக முடியவேண்டும். தேசம் வேண்டி நிற்பது அதுவே. வன்னியில் பெரும் நிலங்கள் பகை வல்வளைப்பால் குறுகிக்கொண்டிருந்த காலம். நகரங்களையும் தெருக்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் நாடு இழந்துகொண்டிருந்தது. இந்த அச்ச சூழலில்தான் “வோட்டசெற்” 01, 02 என்று அம்பகாமம் பகுதியில் முன்னேறி சில காவலரண்களையும், எம்மவர்களின் சில வித்துடல்களையும், எதிரிப்படை கைப்பற்றியிருந்தது. வன்னியில் மக்கள் திகைத்து நிற்கின்ற சூழலில், நெருக்கடி நிறைந்ததாய் உணர்ந்த அந்த நாட்களில் தலைவரோ உலகிற்குப் புலிகள் பலத்தை உணர்த்தும் நடவடிக்கைக்கான தாக்குதலில் இவர்களுக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்திருந்தார். தேசத்திற்கும் போராட்டத்திற்கும் இடையூறும் நெருக்கடிகளும் வரும் போது தான் இவர்களது பணி தேசத்திற்குத் தேவைப்படுகின்றது. அவர்களும் அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற துடிப்போடுதானே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * கண்டி வீதியைக் கடக்கவேண்டும். கண்டி வீதியைக் கடக்கின்ற போது அந்த அகன்ற தார்ச்சாலை மலைப்பாம்பென நீண்டு வளைந்து கிடந்தது. அதைக் குறுக்கறுத்து எதிரியின் கண்ணில் சிக்காது கடந்தார்கள். ஒரு புறம் அவர்கள் தேடி வந்த இலக்கு கனகராயன்குள படைமுகாம், மறுபுறம் வவுனியா. இரண்டையுமே மறைச்செல்வன் திரும்பத் திரும்ப பார்த்தான். வவுனியாவைப் பார்க்கின்ற போது வேறுபல பழைய நினைவுகள் அவனை சூழ்ந்தன. வவுனியா, அதுதான் அவன் பிறந்து வளர்ந்த இடம். அதற்கும் மன்னாருக்குமான நீளுகின்ற அந்தத் தெருக்கள்... நினைவுகள் மீள் ஒளிபரப்புச் செய்தன. மன்னார் வவுனியா நெடுஞ்சாலையிலே அன்றொரு நாள் நாற்பத்தினான்கு அப்பாவித் தமிழ் மக்கள் சுட்டும் வெட்டியும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அவர்களது உயிரிழந்த சடலங்கள் ஆங்காங்கே வீதிகளிலே எரிந்தும் எரியாமலும் கிடந்தன. இந்தச் சேதி உள்ளுர் செய்தி ஏடுகளில் பரவலாக வந்தபோது முகம் காணாத சொந்தங்களிற்காக இரங்கி சில கண்ணீர்த் துளிகள் சிந்தப்பட்டன. அப்பாவி மக்கள் படுகொலை என்று கண்ணை உறுத்தும் வகையில் பெரிய எழுத்தில் வெளிவந்த அந்தச் துயரம் மறுநாளே செய்தி ஏடுகள் போல மறைந்துபோனது. அது இன்னொரு துயரச் செய்தியை அவனுக்குக் காவி வந்தது. அது அவர்களது குடும்பத்தில் பெரிய இடியாக விழுந்தது. எல்லோரையும் போல அவர்களால் அந்தத் துயரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னென்றுதான் தாங்குவது. ஊர்திகளை ஓட்டி குடும்பத்தைத் தாங்கிய அப்பாவை இழந்து இனி எப்படி அவர்களது வாழ்க்கை! சின்ன வயசில் அது அவனுக்குப் பெரிய இழப்பு. அப்பாவை நினைத்து நினைத்து விம்முவான். அழுவான். யார்தான் என்ன செய்யமுடியும். சிறிய குடும்பம். அவனும், அக்காவும், அம்மாவும்தான். ஒவ்வொருவரது முகத்திலும் பெரிதாய் துயரம் குந்திக்கொண்டிருந்தது. யாராலும் ஆற்றிவிட முடியாத அந்தச் துயரத்தோடு அவர்களது குடும்பம் நாளும் நாளும் அல்லற் பட்டுக்கொண்டேயிருந்தது. அம்மாவும் இவர்களுக்குத் துணையாக நின்று, மாடுகள் வளர்த்து ஒருவாறு குடும்பத்தை நடத்திச் சென்றாள். இவன் சின்ன வயதில் குழப்படிக்காரனாகவே இருந்தான். காலையில் எழுந்து மாட்டுப்பட்டிக்குச் சென்று பால் கறந்துவிட்டு மாட்டுச்சாணம் அள்ளிப் போட்டுவிட்டே அவசர அவசரமாய் பள்ளிக்கு ஓடுவான். வந்து புத்தகங்களை வைத்துவிட்டு மாடு மேய்க்கப் போய்விடுவான். மாடு மேய்ப்பதும் வரம்புகளிலும் வயல் வெளிகளிலும் ஓடி விளையாடுவதிலும் இவனது பொழுதுகள் கழியும். அதுவே இவனுக்குச் மகிழ்ச்சி. அந்த வயல்கள் இவனோடு கொண்ட சொந்தத்தின் அடையாளமாக சின்னச் சின்ன சிராய்ப்புக் காயங்களும் இப்போதும் மாறாத அடையாளங்களாய் இருக்கிறன. ஊருக்குள் வரும் போராளிகளைப் பார்த்து ஆசைப்பட்டிருக்கின்றான். ஆனால் அவர்களோடு சேர்ந்து கொள்ளச் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவனது இலட்சிய ஆசைகள் நெருப்பாய் எரிய அதை மறைத்து அம்மாவோடு செல்லம் கொஞ்சுவான். வளரவளர அந்த வேட்கை அவனைவிட வளர்ந்தது. இராணுவக் கட்டுப்பாட்டில் அவனது கிராமத்தில் போராளிகள் அலைகின்ற அலைச்சல் அவர்கள் சுமக்கும் வேதனையான நாட்கள் எல்லாம் அவனைப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்ற தீரத்தை ஏற்படுத்தின. பள்ளிப்பருவத்திலே அவன் போராட்டத்தில் இணைந்துகொண்டான். வயதுக்கு மீறிய வளர்ச்சி உடல் மட்டுமல்ல, அவனது எண்ணங்களும் செயற்பாடுகளும் அப்படியானதே. உயர்ந்த எண்ணங்களும் தூர நோக்கும் கொண்ட அவன் எதிலும் துடிதுடிப்பும் முன்னிற்கும் தன்மையும் கொண்டவன். தாக்குதல் களங்கள் அவனை இன்னும் இன்னும் பட்டை தீட்டின. கண்டி வீதியைக் கடந்து நடந்தான். அன்று 81 மில்லிமீற்றர் மோட்டரையும் தூக்கிக்கொண்டு நடக்கிறபோது அவனுக்கு மட்டும் தெரியக்கூடிய வெப்ப மூச்சோடு, அவனுக்கு மட்டும் கேட்டக்கூடிய சத்தத்தில் ஆட்லறியை உடைக்கவேணும் என்று மனம் சுருதி தப்பாது துடித்தது. நினைவுகள் கனத்தன. ஓயாத அலைகள் மூன்று ஆரம்பமாகி அடிக்கின்ற வேகத்திற்கு கனகராயன்குளம் மீது கரும்புலி அணிகள் ஆட்லறிப் பிரிவினருடன் இணைந்து தாக்க தொடங்கினர். சிறிதும் எதிர்பாராத இத் தாக்குதலில் எதிரி திகைத்து திக்குமுக்காடினான். அவனது ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியது. கட்டளைத் தளபதியாகவிருந்த சிங்களத் தளபதிகளுக்கு கரும்புலிகளின் வெடியதிர்வு சாவாய்க் கதவில் தட்டியது. அந்தப் பெரிய சமர் அங்கே ஒரு நொடியில் மாறியது. தளபதிகள் மூட்டை முடிச்சுக்கட்ட எதிரிப்படை பின்வாங்கியது. எமது இடங்கள் எங்கும் அகல அகலப் பரப்பி நின்ற எதிரிப்படை உடைந்தகுளம் வற்றுவதைப்போல மிக வேகமாக ஓடியது. அந்தச் சாதனையை எதுவித இழப்புக்களும் இல்லாது நடத்தி விட்டு மறைச்செல்வன் தலைமையிலான கரும்புலி அணி வெற்றிகரமாகத் தளம் திரும்பியது. வட போர்முனையில் ஓயாத அலைகள் அடித்தபோது தென்மராட்சியில் பல இடங்களிலும் இவனது செயற்பாடுகள் இருந்தன. எப்போதும் தாயகத்தைப் பற்றியே நினைத்துக்கொண்ட அந்த வீரன் நாகர்கோவிற் பகுதியில் இலக்கொன்றிற்காய் விரைந்து கொண்டிருந்தபோது, இலக்கை நெருங்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டுக்கொண்டிருக்கவும் எதிரிப்படை தாக்குதலை தொடங்கவும் சரியாக இருந்தது. இழப்புக்கள் எதுவும் இல்லாது பல தாக்குதல்களையும் நிகழ்த்தி தாய்நாட்டிற்காக வெற்றியைக் கொடுத்தவன் 10.05.2000 அன்று நாகர்கோவில் மண்ணிலே வீரகாவியமானான். ஆட்லறியை உடைக்கவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த அந்த தேசப்புயல் துடிப்பிழக்கின்ற போது தன் சாவிலே ஒரு சேதியை இந்தத் நாட்டிற்குச் சொல்லிவிட்டுப்போனது. அழுதுகொண்டிருந்தால் அடிமைகளாவோம், துணிவாய் எழுந்து நின்றுவிட்டால் வாழ்வோம். அல்லது வீரராய்ச் சாவோம் என்று. " புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் " தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள். தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.
  10. அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. கப்டன் மயூரன் பாலசபாபதி தியாகராஜா தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாய் மடியில் :01.11.1970 தாயக மடியில்:11.11.1993 எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் – கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான். வயிற்றில் அல்சர் இருப்பதால்தான் வைத்தியம் செய்வதற்காக ஒன்றரை மாத லீவில் வந்திருப்பதாகச் சொன்னான். வைத்தியசாலைக்குச் சென்று ஏதோ மருந்துகள் எடுத்து வருவான். ஆனால் சாப்பாட்டில் எந்த விதக் கட்டுப்பாட்டையும் கடைப் பிடிக்க மாட்டான். அவன் வந்திருக்கிறான் என்று அவனது பாடசாலைத் தோழர்களும் போராளித் தோழர்களும் மாறி மாறி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விரும்பிய உணவுகளைக் கேட்டுச் சமைப்பித்துச் சாப்பிடுவது, ஐஸ்கிறீம் பாருக்குச் சென்று ஐஸ்கிறீம் சாப்பிடுவது, சிற்றுண்டி வகைகளைக் கொறிப்பது….. தங்கையைச் சீண்டி விளையாடுவது என்று ஒன்றரை மாதமும் ஒரே கும்மாளமும் கலகலப்பும்தான் வீட்டில். என் பிள்ளை நீண்ட பொழுதுகளின் பின் என்னிடம் வந்திருக்கிறான். அவன் மனம் எந்த வகையிலும் நோகக்கூடாது. போனால் எப்போ வருவானோ தெரியாது. அவர்களது முகாமிற்குள் போய் விட்டால் எல்லாம் கட்டுப்பாடு தானே! என்று நினைத்து நான் என்னால் இயன்றவரை அவனது ஆசைகள் விருப்பங்கள் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்தேன். அப்போதுதான் பிரபா(அவனது சின்னக்கா) திருமணமாகி ஏழு வருடங்களின் பின் கற்பமாகி இருந்தாள். அதையிட்டு அவன் மிகுந்த சந்தோசத்துடன் இருந்தான். மருமகனா..! மருமகளா..! என்று சதா ஆசையுடன் கேட்டுக் கொண்டே இருந்தான். இப்படியே ஆட்டமும் பாட்டமும் களிப்பும் கும்மாளமும் என்று ஒன்றரை மாதம் போன வேகமே தெரியவில்லை. என் பிள்ளை மீண்டும் என்னை விட்டுப் போகும் நாளும் வந்து விட்டது. அன்று 17.6.1993 – காலையே போக வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். பாமா அவனது உடுப்புக்கள் எல்லாவற்றையும் அயர்ண் பண்ணி அடுக்கிக் கொடுத்தாள். அவனது பள்ளி நண்பர்களில் மூவர் எந்நேரமும் அவனுடன்தான் நின்றார்கள். படுக்கைக்கு மட்டுந்தான் தமது வீடுகளுக்குப் போய் வந்தார்கள். என் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை. படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌன நிலை. ஆனாலும் அவன் வருந்தக் கூடாது என்ற நினைப்பில் சோகம் கப்பிய சிரிப்புக்கள். வேலைகள். ஆனால் அன்று வாகனம் வரவில்லை. அவன் அன்று போக வில்லை என்றதும் எல்லோரிடமும் ஒரு தற்காலிகமான சந்தோசம். அடுத்த நாள் 18.6.1993 காலை அவனது அத்தான் கணேஸ் சோகத்துடன் – அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வேலைக்குச் சென்றார். திரும்பி வரும் போது அவன் நிற்க மாட்டான் என்பது அவருக்குத் தெரியும். பிரபா(அவனது சின்னக்கா) வேலைக்குப் போகும் போது “நான் மத்தியானம் வாற பொழுது நிற்பியோ? அல்லது போயிடுவியோ?” என்று கவலையோடு கேட்டாள். சோகம் கலந்த சிரிப்பொன்றுதான் அவனிடமிருந்து பதிலாகக் கிடைத்தது. நான் அம்மா அல்லவா! என் சோகம் எல்லாவற்றையும் மறைத்து செய்ய வேண்டியவைகளை ஓடி ஓடிச் செய்து அவனுக்கும் நண்பர்களுக்கும் பன்னிரண்டு மணிக்குச் சாப்பாடு பரிமாறினேன். அதன் பின் வேறு இடத்தில் வாகனம் வருவதாக அவனுக்குச் செய்தி வர அவன் விடை பெற்றுச் சென்றான். அவனது நண்பர்கள் அவனை கூட்டிச் சென்று வாகனத்தில் ஏற்றி விட்டு தமது வீடுகளுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார்கள். இம்முறை என் பிள்ளையின் முகத்தில் வழமை போல இல்லாமல் ஏதோ ஒரு சோகம் அப்பி இருப்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அது ஏன் என்று புரியாமல் குழம்பினேன். ஆனாலும் எனக்குள்ளே இருந்த துயரத்தையோ நெருடல்களையோ நான் அவனுக்குக் காட்டவில்லை. அவன் நின்ற ஒன்றரை மாதமும் இராப்பகல் பாராது ஓடியோடி எல்லாம் செய்த நான் – அவன் போனதும் – அதற்கு மேல் எதுவும் செய்யத் தோன்றாது அப்படியே கதிரையில் அமர்ந்து விட்டேன். எல்லாம் ஒரே மலைப்பாக இருந்தது. என் பிள்ளை போய் விட்டானா..? எல்லாம் பிரமையாக இருந்தது. அப்படியே நான் பிரமை பிடித்தவள் போல அந்தக் கதிரையில் ஒரு மணித்தியாலம் வரை இருந்திருப்பேன். என் பிள்ளை திரும்பி வருகிறான். ஏன்..? எனக்குச் சந்தோசமாயிருந்தது. “என்னப்பு..! என்ன விசயம்?” என்று கேட்டேன். “வாகனம் இன்னும் சொன்ன இடத்துக்கு வரேல்லை அம்மா. அதுக்கிடையிலை உங்களை ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான். உடனை போகோணும்.” என்றான். எனக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்வது போலிருந்தது. அதற்குள் அவனது சின்னக்காவும் வேலை முடிந்து நாலைந்து கறுத்தக் கொழும்பு மாம்பழங்களுடன் அரக்கப் பரக்க ஓடி வந்தாள். “உனக்கு மாம்பழம் எண்டால் எவ்வளவு ஆசை எண்டு எனக்குத் தெரியும். அதுதான் வேண்டிக் கொண்டு ஓடி வந்தனானடா.” என்று சொன்னாள். நான் மாம்பழத்தின் தோலைச் சீவி அவசரமாய் வெட்டிக் கொடுக்க என் பிள்ளை மிகவும் ஆசையாக ரசித்துச் சாப்பிட்டான். அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கவே வாகனம் எங்கள் வீட்டுக் கேற்றடிக்கு வந்து விட்டது. உடனே “பிரபாக்கா சுகத்தோடை பிள்ளையைப் பெத்தெடுங்கோ. மாமா வருவன் மருமகளைப் பார்க்க..” என்று சொல்லிக் கொண்டே அவசரமாய் விடை பெற்றுச் சென்றான். வாகனத்தில் ஏறி கை காட்டும் பொழுது அவன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என் கண்கள் குளமாகி விட்டது. என் கண்களில் நீர் வழிவதை அவன் கண்டால் கலங்குவானே என்பதால் என் கண்களைத் துடைக்காமலே திரையிட்ட கண்ணீரோடு கை காட்டினேன். எனக்கு அப்போது தெரியாது அன்று அப்போதுதான் என் பிள்ளையைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்பது. பிரபாவின் குழந்தையைப் பார்க்க மிகவும் ஆசைப் பட்டான். கடற்புலி கேணல் தளபதி பாமா வந்து குழந்தையைப் பார்த்த போது சொன்னாள். “மயூரன் மணலாறு இதயபூமிச் சண்டைக்குப் போய் வெற்றியோடு திரும்பியிருக்கிறார். மருமகளைப் பார்க்கக் கட்டாயம் வருவார்.” என்று. வருவான் வருவான் என்றுதான் காத்திருந்தோம். அவன் வரவே இல்லை. பூநகரித் தவளைப் பாய்ச்சலுக்குச் சென்று விட்டான். 11.11.1993 அன்று பூநகரித் தவளைப் பாய்ச்சலில் அவன் விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருது நின்ற படையினருள் புயலாகிப் போனான் என்ற செய்தி 15.11.993 அன்றுதான் எனக்குக் கிடைத்தது. விழுப்புண் பெற்ற அவன் வித்துடலைக் கூடக் காண வழியின்றிக் கலங்கி நின்றேன். அதன் பின் தான் உணர்ந்தேன் அப் பெரிய சமர்களுக்குப் போவதற்காகவே அவன் நீண்ட லீவில் என்னிடம் வந்து நின்றான் என்பதை. நீங்காத நினைவுகளை மட்டும் என் நெஞ்சோடு விட்டு விட்டு அவன் சென்று விட்டான். கப்டன் மயூரன் நினைவலைகள்… கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலி போல் ஆகிவிட்டீர். அரச பயங்கரவாதத்தில் மக்கள் அடிபட்டுக் கொண்டிருக்க குட்டுப்பட்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா, என்றெண்ணி கொட்டமடிக்கும் கூலிப்படைகளை வெட்டிச் சாய்க்க, திண்ணம் கொண்டான் மயூரன். பருத்தித்துறை ஆத்தியடியில், பாலசபாபதியாக அன்னை மடியில் முத்தாகச் சிரித்தவன், வாழும் வயதிலேயே மண்ணுக்கு வித்தாவான் என்று யாருமே நினைத்திருக்கவில்லை. 15 வயதான பின்னும் கூட தன் கட்டிலை விட்டு வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருப்பான். அக்காமார் என்ன கேட்டாலும் முகம் கோணாமல் அத்தனையும் ஓடி ஓடிச் செய்து கொடுப்பான். அக்காமாருக்கு மட்டுமா? ஆத்தியடியில் வயதான கிழவிகளுக்கெல்லாம் இவன் மகன் போல. உதவி செய்வதென்பது இவனோடு பிறந்த குணம். அண்ணன் மொறிஸ் களத்தில் நிற்கும் போதே, காட்லியின் கல்வியைக் கை விட்டு, 1987 இல் ஈழப்போர் இரண்டு என்னும் சகாப்தம் வெடிக்கையிலே வேங்கையாய் புறப்பட்டான் நாட்டைக் காக்க என்று. இந்திய ஆக்கிரமிப்பு எகத்தாளமாய் நடக்க, ஈழத்து உயிர் மூச்சை இதயத்தில் சுமந்து கொண்டு தலைவர் பிரபாகரனின் அன்புக்குப் பாத்திரமானவனாய் காட்டிலே உயிர் வாழ்ந்தான். மன்னார், மண்கிண்டி என வீரக்கதை படித்து யாழ்தேவி நடவடிக்கையில் போராளிக் குழுவோடு நின்று பொருத்தமாய் போர் தொடுத்தான். இதய பூமி-1 இல் இறுக்கமாய் கால் பதித்து வெற்றியோடு திரும்பினான். திரும்பும் வழியில் வற்றாப்பளையில் வாழும் அண்ணன் தீட்சண்யனை (பிறேமராஜன்) காண ஆசை கொண்டு ஒருக்கால் சென்றான். அந்தக் கணங்களை ஒரு காலை இழந்த அவன் அண்ணன் தீட்சண்யன் இப்படிச் சொல்கிறார். கடைசிக் கணத்தில் உன் களத்துப் புலிகளுடன் ஓருக்கால் வந்தாய் நாம் கண்மூடி விழிக்க முன் கனவாய் சென்றாய் தடியோடு நான் நடந்து கதவோரம் வந்து நிற்க கையில் பெடியோடு உனது அண்ணி கண் கலங்கப் பார்த்திருக்க பார்த்தாயா…யா? புரியவில்லை நினைவில் தெரியவில்லை. தெருவோடு நீ ஓடி துள்ளி அந்த வாகனத்தின் கூரையிலே பாய்ந்தேறி குழுவோடு அமர்ந்ததைத்தான் நாம் பார்த்தோம் கனவாக மறைந்து போனாய் சும்மா பார்த்து விட்டுப் போக வந்தேன் என்றாய் எம் கண்ணிலெல்லாம் காயாத நீர் கோர்த்து விட்டுத் தானய்யா சென்றாய். இப்படி அண்ணனின் கண்ணில் நீர் கோர்த்து விட்டுச் சென்றவன் நேரே பூநகரிக் களத்தை நோக்கித்தான் சென்றான். போகும் வழியில் பாசம் அவனை பாடு படுத்தியதோ…? நண்பன் சிட்டுவை(மாவீரன்) அழைத்து ஆத்தியடிக்கு அம்மாவிடம் போய், அக்கா அவர்களிடம் இருந்து கடிதங்கள் வந்திருக்கும். வாங்கி வா என்று அனுப்பினான். பின்னர் களத்தில் நின்று கொண்டும் அவன் சிட்டுவை மீண்டும் பலமுறை அனுப்பினான். கடைசி முறையாக சிட்டு மயூரனின் அம்மாவிடம் சென்ற போது, மயூரனின் தங்கை மகிழ்வோடு கடிதத்தைக் கொடுத்து விட்டாள். ஆனால் சிட்டு கடிதத்துடன் மயூரனிடம் சென்றபோது மயூரன் என்ற தீபம் அணைந்து விட்டது. மயூரன் மண்ணுக்கு வித்தாகி விட்டான். மயூரன் 11.11.1993 அன்று சைபர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று பூநகரிக் களத்தின் காற்றிலே கலந்து விட்ட செய்தியை தாங்கி வந்த சிட்டு அதை எப்படி அம்மாவிடம் சொல்வதென்று தெரியாமல் தயங்கித் தவித்து கலங்கிச் கொன்ன போது ஆத்தியடியே ஒரு முறை உயிர்வலிக்க அழுதது. மயூரனை இழந்து தவித்த அண்ணன் தீட்சண்யன் நினைவில்… விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த கதைகள் பல இங்கு காதில் அடிபடுது ஆனாலும் மயூரா உன் உடலைக் காணவில்லையடா விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு விதி எமக்கு இல்லையடா-அதனால்தான் உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா பொன்னுடல் மின்னிடுடும் படம் வந்த ஊர்தியில் கண்ணிலே ஒற்றி நாம் மாலை போட்டோம் நிறை குடத்தோடு நின்று நாம் நினைவை மீட்டோம் மொறிஸ் சோடு நீ சென்ற பாதையின் வழியில் நாம் உடலோடு உதிரமாய் ஒன்றி வாழ்வோம் உயிரையே உருக்கி நாம் வேள்வி காண்போம் - தீட்சண்யன்.. மயூரனின் நண்பர்களின் நினைவில்… களத்திலே புலியாகப் பாய்ந்திட்ட வேளையில் கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலிபோல் ஆகிவிட்டீர் களத்தினிலே பாய்ந்த போது கண்டபின் நாம் காணவில்லை வளமான நெல்வயல் சூழ் நைய்தல் நில எல்லையிலே எதிரியின் வேட்டுக்களை ஏந்தி விட்டாய் மார்பினிலே என்றுன்னை நினைக்க மாட்டோம் எரியாகி எரிந்து விட்டாய் எரிமலையாகி வெடித்து விட்டாய் நண்பனே! வள்ளலாகி விட்டாய் மயூரா! உன் பாதம் அடிச்சுவடு உன்னாடை பாதுகை உன் துப்பாக்கி இனி எங்கள் கையிலே உன் நினைவுகள் துணையாகும் எம் பாதையிலே……… ..நண்பர்கள்... மயூரனின் தங்கையின் நினைவில் (பாமா) அன்று சிட்டு அண்ணா வந்த போது, நான் முதல் நாள் சின்னண்ணாவுக்குக் (மயூரன்) கொடுத்து விட்ட கடிதத்துக்குப் பதில் கடிதம் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டேன். ஆனால் சிட்டு அண்ணா நான் எழுதிக் கொடுத்து விட்ட அந்தக் கடிதத்தை எனக்கு முன்னாலேயே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். எனக்குச் சரியான கோபமும் அழுகையும் வந்தது. சிட்டு அண்ணாவைத் திட்டினேன். அவர் ஒன்றும் பேசாமல் கூட வந்த நண்பருடன் திரும்பிப் போய் விட்டார். அடுத்த நாள் நடுச்சாமம் 12 மணிக்கு மீண்டும் அவர் எமது வீட்டுக்கு வந்த போது நான் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கோபமாய் இருந்தேன். அப்போதுதான் துயரம் தோய்ந்த அந்த செய்தியை, என் அன்பு அண்ணா, களத்தில் காவியமாகி விட்டான் என்ற செய்தியை சிட்டு அண்ணா அழுதழுது சொன்னார். 1.11.1970 இல் பிறந்து 11.11.1993 அன்று நடை பெற்ற பூநகரிப் பெருந்தளச் சமரில்-தவளைப் பாய்ச்சலில்-வெற்றி பெற்றுத் தந்து விட்டு உறங்கிப் போய் விட்டான் மயூரன். https://maaveerarkal.blogspot.com/2003/11/blog-post_11.html
  11. எமது தேசத்தின் ஆன்மாவில் மாவீரர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு. -தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்- தமிழர்களிற்கும் தமிழ் மாணவர்களிற்கும் எதிரான சிங்களத்தின் அடக்குமுறை வடிவங்கள் எப்போதும் மிகக் கொடூரமாகவே இருந்து வந்துள்ளது. அதனால் தான்; பாடசாலை மாணவப்பருவத்திலேயே சிங்களத்தின் அடக்குமுறைகளிற்கெதிரான கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் சிங்களத்திற்கு எதிரான பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மாணவப்பருவத்திலேயே சிங்களத்திற்கெதிராக பொங்கியெழுந்த தன்மானத்தமிழன் லெப்.பரமதேவா வீரச்சாவடைந்து 25 ஆண்டுகள் கழிந்து விட்டன.முன்னர் கோட்டமுனை மகாவித்தியாலயம் எனவும் தற்போது மட்டு இந்துக்கல்லூரி எனவும் அழைக்கப்படுகின்ற பாடசாலையிலேயே பரமதேவா கல்வி கற்றுக்கொண்டிருந்தார். 1975ம் ஆண்டு வைகாசி மாதம் 22 ம் திகதி சிறிலங்கா குடியரசு தினத்தை பகிஸ்கரித்து மாணவர்களை அணிதிரட்டி போராடியதற்காக சிங்கள அரசாலும் அந்நாளில் சிங்களத்தின் அடிவருடியாக செயற்பட்ட இராஜன் செல்வநாயகம் போன்றவர்களின் முயற்சியாலும் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பரமதேவா பின்னர் வடக்கு கிழக்கெங்கும் பரமதேவாவின் இடைநிறுத்தத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட மாணவர் எழுச்சிப் போராட்டத்தினைத் தொடர்ந்து மீண்டும் பாடசாலையில் இணைக்கப்பட்டார். இயல்பாகவே திறமையான மாணவனான பரமதேவா தனது கல்வி தனது எதிர்காலம் என்று மட்டும் சிந்தித்து இருந்தால் ஒரு வைத்தியராகவோ பொறியியலாளராகவோ போயிருப்பார். அந்த சிறுவயதிலேயே தமிழர்களை தமிழை நேசித்தமையால் கல்வி கற்கின்ற காலத்திலேயே பல இன்னல்களை அடையவேண்டி ஏற்பட்டது. மட்டக்களப்பில் சிங்களத்திற்கெதிரான பல அகிம்சைப் போராட்டங்களைத் தமிழர்கள் பலர் முன்னெடுத்தனர். இவ் அகிம்சைப்போராட்டங்கள் எவ்வித பயனையும் தராதென உணர்ந்த பரமதேவாவும் அவரைப்போல தீவிர எண்ணங்கொண்ட தமிழ் உணர்வான இளைஞர்களும் சிங்களத்திற்கெதிராக தம்மாலான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். இதனால் 1977ம் ஆண்டிலிருந்தே பரமதேவா தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டி இருந்தது. அக்கால கட்டத்திலே தமிழர் தாயகப்பகுதியெங்கும் சிங்களத்திற்கெதிரான எதிர்ப்பு பல வழிகளிலும் வெளிப்பட்டுக் கொண்டு இருந்தது. மட்டக்களப்பில் சிங்களத்திற்கெதிரான நடவடிக்கைகளிற்கு தேவையான பணத்தைப் பெறுவதற்காக 1978ல் செங்கலடி மக்கள் வங்கிப்பணத்தைப் பிறித்தெடுப்பதில் ஈடுபட்ட பரமதேவா அச்சம்பவத்தில் பொலிசாருடன் ஏற்பட்ட மோதலில் கையில் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார். காலங்காலமாகவே தமிழர்க்கு எதிராக செயற்படும் சிங்களத்தின் நீதித்துறை தமிழினத்தின் விடுதலையை நேசித்த குற்றத்திற்காக 1981ல் பரமதேவாவிற்கு 8 வருட கடுங்காவல்த் தண்டணையை வழங்கியது. எதுவித பதற்றமோ குழப்பமோ இல்லாது புன்னகை சிந்திய முகத்துடன் இத்தண்டணையை ஏற்ற பரமதேவா தாய் மண்ணிற்கான போராட்டத்தில் நீண்டகால சிறைவாசத்தை அனுபவித்தார். போஹம்பர, வெலிக்கடை, நியூமகசீன், மகர ஆகிய சிறைகளில் எல்லாம் சிறைவாசம் அனுபவித்த பரமதேவா 1983 யூலையில் தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள அரச காடையர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டார். மட்டக்களப்பு சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறையை உடைத்துக்கொண்டு தப்பி ஓடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதற்காக மட்டக்களப்பை சேர்ந்தவராகப் பரமதேவா இருந்ததனால் அவரிடமே அதிக உதவிகளை எல்லோரும் எதிர்பார்த்தனர். 1983 புரட்டாதி 22ம் திகதி பரமதேவாவின் பெரும் பங்களிப்புடன் மட்டு சிறையை உடைத்து தமிழ்க்கைதிகள் தப்பி ஓடினர். தனது தண்டனைக்காலம் முடிவடைய குறுகிய காலமே இருந்த போதும் அனைத்துத்தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்பதற்காக சிறையுடைப்பில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்தி தானும் தப்பிப்போனார் பரமதேவா. சிறையிலிருந்து மீண்ட பரமதேவா தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் மீதும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தின் மீதும் அந்த ஆயுத போராட்டத்தின் மூலமே தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறமுடியும் என்று மிகத்திடமாக நம்பியதால் தலைவர் பிரபாகரனின் தலைமையை ஏற்று ஒரு விடுதலைப்போராளியாக தனது வாழ்வைத் தமிழ் மண்ணில் தொடங்கினார். இந்தியாவிலே முதலாவது அணியில் பயிற்சியை முடித்த பரமதேவா ஒரு கொரில்லா வீரனாகத் தமிழீழம் திரும்பினார். தாயகம் திரும்பிய பரமதேவா ஒட்டிசுட்டான் பொலிஸ்நிலையம் மீதான விடுதலைப்புலிகளின் தாக்குதல், கொக்கிளாயில் இராணுவத்தின் மீதான கொரில்லா தாக்குதல் போன்றவற்றில் முன்னின்று பணியாற்றினார். இதைத்தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு தாக்குதல்ப்பிரிவு தளபதியாக மட்டக்களப்பு சென்ற பரமதேவா விசேட சிங்கள பொலிஸ் கொமோண்டோக்களைக் கொண்ட களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையம் மீதான தாக்குதலிற்கு தலைமை தாங்கி உறுதியுடன் முன்னணியில் நின்று போரிட்டு அக்களத்திலேயே அவ்வீரன் வீரச்சாவை அணைத்துக்கொள்கிறார். அவருடன் சேர்ந்து இத்தாக்குதலில் முன்னின்று போராடிய மகிழடித்தீவைச் சேர்ந்த ரவி எனப்படும் தம்பிப்பிள்ளை வாமதேவன் என்ற இளம் கொரில்லா போராளியும் வீரச்சாவடைந்தார். 1983 புரட்டாதி 23ல் தாம் கற்பனையில் மேற்கொண்ட சிறை உடைப்பிற்காக சிலர் அதன் ஓராண்டு நிகழ்வுகளை ஆரவாரப்படுத்திக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் சிறையுடைப்பில் பெரும் பங்காற்றிய பரமதேவா ஒரே வருடத்திற்குள் தன்னை ஒரு முழுமையான போராளியாக மாற்றி தாய் மண்ணிற்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்கிறார். ஒரு மனிதன் பிறந்து சாதாரணமாக வாழ்ந்து இறந்து போகின்றான் அவனின் வாழ்வு அத்துடன் முடிவடைகிறது. ஆனால் ஒரு மனிதன் போராளியாக வாழ்ந்து இறந்து போனால் அவர்கள் என்றுமே வாழ்ந்து கொண்டிருப்பார்கள், யாராவது அந்த போராளிகளைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள் என்று பரமதேவா கூறுவாராம். மனிதவாழ்வு பற்றிய புரிதல் பரமதேவாவிற்கு எவ்வளவு ஆழமாக இருந்தது என்பதுபற்றி இதன் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். பொலிஸ் நிலையத் தாக்குதலில் பொலிசாரின் குண்டுபட்டு காயப்பட்ட பரமதேவாவைத் தூக்குவதற்காக சென்ற போராளியிடம் எனது அம்மாவிடம் சொல்லுங்கள் உங்கள் மகன் பொலிஸ் நிலையத் தாக்குதலின் போது வீரச்சாவடைந்து விட்டார் என்று சொல்லி இருந்தாராம். இறக்கும் தறுவாயிலும் அந்த வீரனுக்கு இருந்த உறுதியும் வீரமும் எப்போதும் மெய் சிலிர்க்க வைக்கும். சிங்களத்தின் தமிழர்கள் மீதான அடக்கு முறையும் இன சுத்திகரிப்பும் கிழக்கில் தமிழ்மக்களை எப்போதும் மிக மோசமாக பாதித்தே வந்துள்ளது. குறிப்பாக மட்டு அம்பாறை மாவட்டத்தில் சிங்களத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடூர வன்தாக்குதல்கள் அம்மக்களிற்கு சுதந்திரத்தின் பெறுமதியையும் விடுதலையின் மீதான வேட்கையையும் எப்போதும் உணர்த்தியே வந்துள்ளது. அதுவே பல உன்னதமான விடுதலைப்போராளிகளை தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு மட்டு மண் வழங்கக் காரணமாக இருந்துள்ளது. 1984 புரட்டாதி 22ம் திகதி மட்டு மண்ணின் முதல் விதையாக மண்ணில் விழுந்த பரமதேவாவின் விடுதலைக்கனவை சுமந்தபடி விடுதலை போராட்டம் இன்று மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. மட்டு மக்களால் வளர்க்கப்பட்ட விடுதலைப்பயிரில் சில விசச்செடிகளும் மறைந்து வளர்ந்து இன்று தமது விசக்குணத்தை மக்களிற்கு காட்டுகின்றது. மட்டுமண்ணின் பல்லாயிரம் போராளிகளின் தியாகத்தாலும் குருதியாலும் வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட தமிழரின் உரிமைப்போர் பணத்திற்கு விலைபோன கயவர்களால் இன்று காட்டிக்கொடுக்கப்பட்டு மக்கள் சொல்லெர்னாத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இம்மக்களின் துன்பங்கள் நீங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழீழமே தமிழர்க்கான தீர்வு என்பதை அனைத்துலகமே ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் மிக விரைவில் வரும். காட்டிக்கொடுக்கும் கயவர்களை அழித்து எதிரிப்படைகளை ஓடவிரட்டி எமது மாவீரர்களின் கனவை நிறைவேற்ற தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் தலைமையை ஏற்று இன்னும் ஆயிரம் ஆயிரம் பரமதேவாக்கள் மட்டக்களப்பில் உருவாகுவார்கள்.
  12. கப்டன் தாரகன் தாரகையாய் ஒளிர்கிறான்....! கப்டன் தாரகன் வீரனாய் :- 03.04.1974 வித்தாய் :- 01.02.2000 சொந்த இடம் - முள்ளியவளை. வன்னியின் வளங்களையெல்லாம் தன்னகத்தேயும் கொண்டமைந்ததே முள்ளிவளைக் கிராமம். அடங்காப்பற்றின் வீரமும் வரலாறும் முள்ளியவளை நிலமெங்கும் பரவியிருப்பதை வன்னியர்களின் வரலாறு சொல்கிறது. வீரமிகு வரலாற்றையும் வீரத்தையும் கொண்ட முள்ளியவளைக் கிராமம் தமிழீழ மீட்பிற்காக தனத புதல்வர்களையும் புதல்விகளையும் ஈந்த பெருமைக்குரிய கிராமங்களில் ஒன்றாகும். 03.04.1974 தம்பு தம்பதிகளின் பிள்ளையாகப் பிறந்தான் பார்த்தீபன். அக்கா , அண்ணா , தங்கையின் அன்பிற்கு அவன் ஆதாரம். சிறுவயதுக்கேயுரிய இயல்புகள் அவனையும் ஆட்கொண்டிருந்தது. வயல்களும் வரப்புகளும் இயற்கையின் பசுமையை ஏந்தி வைத்திருக்கும் முல்லைமண்ணின் ரம்மியங்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டிருந்த பார்த்தீபனின் மழலைக்காலம் மகிழ்ச்சியானது. யுத்தத்தின் சத்தங்கள் முல்லைமண்ணையும் அள்ளிக் கொண்டிருந்த காலங்களில் வெடியோசைகளும் உயிரிழப்புகளும் பார்த்தீபனின் நெஞ்சிலும் நெருப்பை விதைத்த நாட்களவை. முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியின் மாணவனாக கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தான் பார்த்தீபன். க.பொ.த.சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்தரத்தில் கணிதத்தை தேர்வு செய்து கல்வியைத் தொடர்ந்து உயர்தரம் பரீட்சையை எழுதிவிட்டு பெறுபேறு வரும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருந்தவனின் வாழ்வை மாற்றியது ஈழவிடுதலைப் போராட்டம். 1994ம் ஆண்டு வீட்டைவிட்டுக் காணாமற்போனான் பார்த்தீபன். அமைதியும் இனிமையும் நிறைந்த வீட்டையும் சுற்றத்தையும் நண்பர்களையும் பிரிந்து காடுகள் நோக்கிப் போயிருந்தான். ஆம் அவன் விடுதலைப்புலியாக மாறினான். மணலாற்றில் 24வது பயிற்சி முகாமில் ஆரம்பப்பயிற்சியைத் தொடங்கிய பார்த்தீபன் தாரகன் எனப்பெயர் சூட்டப்பட்டு பயிற்சியில் இணைந்தான். அடிப்படைப் பயிற்சி முடிந்த போது இம்ரான் பாண்டியன் படையணிக்கு தளபதி சொர்ணம் அவர்களால் தெரிவு செய்யப்பட்டான். தலைவரின் வெளிப்பாதுகாப்புப் பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் தாரகனும் தெரிவு செய்யப்பட்டு வெளிப்பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டான். தனக்கு வழங்கப்பட்ட பணிகளில் என்றுமே நேர்மையும் நிதானமும் கூடிய கவனத்தையுடைய போராளி. ஒரு காரியத்தை எடுத்தால் அதை முடிக்கும் வரை ஓய்வு உறக்கம் பசி களைப்பு எதையும் பார்க்காமல் ஓயாது இயங்கி காரியம் முடித்த பின்னரேயே ஓயும் களப்பணியாளன். 1996இல் விசேட இராணுவப்பயிற்சிக்குச் சென்று திறமையோடு விசேட பயிற்சியை முடித்துத் திரும்பிய தாரகன் கப்டன் கௌதமன் அடிப்படை இராணுவப் பயிற்சி முகாமின் பயிற்சி ஆசிரியராக நியமனம் பெற்று புதிய போராளிகளை வளர்த்தெடுப்பதில் கவனமாகினான். களமாடச் செல்லும் கனவோடு காத்திருந்த தாரகனுக்கு முதல் கள அனுபவம் 09.01.1997 ஆனையிறவு ஊடறுப்புச்சமரில் தான் ஆரம்பமாகியது. 1996 நடுப்பகுதியில் முல்லைத்தீவு முகாம் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட போது இலங்கையரச படைகளுக்கு பெருத்த இழப்பையும் கொடுத்ததோடு இலங்கை இராணுவத்தின் உளவுரணும் புலிகளால் சிதைக்கப்பட்டிருந்த காலமது. முல்லைத்தீவை இழந்த படையினர் சத்ஜெய 1 எனும் பெயரில் பரந்தனையும் , சத்ஜெய 2,3 நடவடிக்கையை மேற்கொண்டு கிளிநொச்சியையும் கைப்பற்றியிருந்தனர். எனினும் புலிகள் ஓய்ந்து விடாமல் தொடர்ந்த அடுத்த நடவடிக்கைக்குத் தயாராகினர். வன்னிக்கு அச்சுறுத்தலாக அமைந்த ஆனையிறவுப் படைத்தளமும் சத்ஜெய மூலம் கைப்பற்றப்பட்ட பரந்தன், கிளிநொச்சி வெற்றியும் அரசபடைகளுக்கு வெற்றிகளாக அமைந்தது. ஓயாத அலைகள் ஒன்று தொடக்கம் தொடர் சமர்களில் புலிகளின் அணிகள் சண்டையிட்டுக் கொணண்டிருந்த சம நேரத்தில் அடுத்ததொரு ஊடறுப்புச் சமருக்கான ஏற்பாடுகள் , பயிற்சிகளிலும் போராளிகளை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனையிறவு தொடக்கம் கிளிநொச்சி வரையும் சிறீலங்காப்படைகளின் ஆதிக்கம் நிலையாகியிருந்த சமயம் அது. கிளிநொச்சி முகாம் மீது எவ்வித தாக்குதலையும் நிகழ்த்தாமல் பரந்தன் , ஆனையிறவு ஊடறுப்பினை மேற்கொள்ளும் நடவடிக்கையில் தயாராகிக் கொண்டிருந்தனர். இத்தாக்குதல் வெற்றி பெறுகிற போது கிளிநொச்சித் தளம் தனிமைப்படுத்தப்பட்டு இலகுவாக கிளிநொச்சியை மீட்கலாம் என்பது முடிவாகியது. ஆனையிறவு பரந்தன் பகுதிகளை ஊடறுத்துச் செல்ல 1996வருட இறுதிப்பகுதியின் காலநிலை இடமளிக்காமல் போனது. நீரேரிகளையும் சதுப்பு நிலங்களையும் தாண்டிச் செல்ல வேண்டிய இப்பகுதிகளின் நீரின் மட்டம் அதிகரித்திருந்ததோடு சமருக்கான அகபுற காரணிகளும் தடையாகியது. இதனால் அணிகள் நகர முடியாது போனது. கிளிநொச்சி வெற்றியோடு படைகள் சற்று அதிக எதிர்பார்ப்பைக் கொண்டு அடுத்த நகர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஆனையிறவு பிரதான மையத்தைத் தகர்த்துக் கைப்பற்றுவதோடு பரந்தன் சந்தி உள்ளடங்கலாக பரந்தன் இரசாயனக்கூட்டுத்தாபனம் உட்பட படையினர் வசமிருந்த படைத்தளத்தையும் கைப்பற்றி கிளிநொச்சிக்கான தொடர்பை துண்டிக்கும் திட்டத்தில் அணிகளை தயார் செய்தார்கள். தாக்குதல் வெற்றியளிக்காது விட்டால் தாக்குதலை நிறுத்திக் கொள்வதெனவும் திட்டமிடப்பட்டது. எதிரியா புலிகளா என்ற சவாலில் புலிகள் குறித்தபடி தாக்குதலிற்கு அணிகளை நகர்த்தி 09.01.1997 அன்று பரந்தன் ,ஆனையிறவு ஊடறுப்புச் சமருக்குத் தயாராகினார். 08.01.1997 அன்று இருள் கவ்விய பொழுதில் நீரேரிகள் , சதுப்புகள் , வெட்டைகள் தாண்டி நீண்டதூரம் நகர்ந்து அணிகள் நிலைகளைச் சென்றடைந்து தயாராகியது. ஆனையிறவு மையத்தினுள் நுளைந்து ஆட்லறிகளை அழிக்கும் நடவடிக்கைக்குத் தயாராகி திட்டமிட்டபடி 09ம் திகதி தாக்குதல் ஆரம்பித்தது. எதிரியின் முன்னேற்றத்துக்கு அவகாசம் கொடுக்காமல் விரைவான தாக்குதலை புலிகள் மேற்கொண்டனர். சாள்ஸ் அன்ரனி படையணி ஆட்லறித்தளத்தினுள் புகுந்து ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றியதோடு ஒன்பது ஆட்லறிகளையும் கைப்பற்றியது. எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆட்லறிகளாலேயே எதிரி மீது தாக்குதல் நிகழ்த்தினர் போராளிகள். இதர பகுதிகளில் திட்டமிடப்பட்டது போல தாக்குதல் வெற்றியைத் தராது போனது. பரந்தன் கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் எதிர்பார்க்கப்பட்டது போல அமையவில்லை. கைப்பற்றிய ஆட்லறித்தளத்தை முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதானால் பரந்தன் படைத்தளம் போராளிகளிடம் விழ வேண்டும். ஆனால் நிலமை எதிரிக்கே சாதகமாகியது. எதிரியும் புலிகளிடம் ஆட்லறித்தளத்தையோ பரந்தன் தளத்தையோ விடுவதில்லையென்ற முடிவில் சகல வளங்களையும் பயன்படுத்தி எதிர்த் தாக்குதலில் மூர்க்கமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அதேபோல விடிவதற்கிடையில் வெற்றியை அடைய வேண்டுமென்ற வேகத்தோடு புலிகளும் சமரிட்டுக் கொண்டிருந்தனர். விடிந்தால் எதிரிக்கு ஆதரவாக விமானப்படை வந்துவிடும். அப்போது மிகவும் அச்சுறுத்தலாகவும் இடைஞ்சலாகவும் இருந்தது MI-24 உலங்குவானூர்தியின் தாக்குதல் ஆகும். அதேநேரம் வெட்டை வெளிகளில் சமரிடும் புலிகளின் அணிகளை MI-24 உலங்குவானூர்த்தியின் தாக்குதல் முன்னேற்றத்தை தடுத்துவிடும். அத்தோடு ஆட்லறிகளைக் கைப்பற்றி வைத்திருக்கும் புலிகளின் அணிகள் கடும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும். ஆகவே பரந்தனை வென்றால் மட்டுமே அடுத்த வெற்றியென்பது நிச்சயமாகியது. புலிகளின் வரலாற்று வெற்றிகளைத் தந்த சமர்களில் பெரும்பாலும் ஒரு வழி சாதகமாகாது போனால் மாற்று வழியின் மூலம் வெல்லும் வழிகளைத் தயாராகக் கொண்டிருப்பர். இம்முறை ஓரிரவிலேயே வெற்றியை பெற்றால் மட்டுமே இழப்புகளையும் தவிர்க்கிற நேரம் எதிரியைத் தோற்கடிக்கவும் முடியும் என்பது முடிவானது. பரந்தன் முகாம் மீதான தாக்குதல் எதிர்பார்த்தபடி வெல்ல முடியாது என்பது உறுதியானது. இனி இறுதி முடிவு கைப்பற்றிய ஆட்லறிகளை அழித்துவிட்டு அணிகள் பத்திரமாக பின்வாங்குவதே முடிவானது. தாக்குதல் தளபதிகளின் கட்டளைப்படி ஆட்லறிகளும் பெரும் ஆயுதக் களஞ்சியமும் அழிக்கப்பட்டு அணிகள் பின்வாங்கியது. எதிரிக்கு பெரும் இழப்பையும் கொடுத்து எதிரியின் உளவுரணைத் தகர்த்த அச்சமரில் தான் தாரகனும் தனது முதல் கள அனுபவத்தைப் பெற்று சிறந்த சண்டைக்காரன் என்பதனையும் அடையாளப்படுத்தினான். வித்தியானந்தா கல்லூரியின் ஒருகாலத்தின் சிறந்த விளையாட்டு வீரனான விளங்கியவன் தாரகன். கப்டன் கௌதமன் (ஊரான்) உதைபந்தாட்ட அணியில் சிறந்த விரனாக மிளிர்ந்தது மட்டுமன்றி பத்திரிகைகளில் வரும் கணிதப் போட்டிகளில் கூட தனது கணிதத்திறமையை வெளிப்படுத்திய வீரன். சண்டையனுபவத்தைத் தொடர்ந்து கப்டன் கௌதமன் (ஊரான்) பயிற்சி பயிற்சிப்பாசறை ஒன்று முதல் மூன்று வரையான பாசறையின் பயிற்சியாசிரியனாகி சண்டைக்கள வீரர்களை வளர்த்தனுப்பினான். பின்னர் வெளிப்பாதுகாப்பணியின் பாதுகாப்பு பணியில் தனது பணிகளைத் தொடர்ந்த போது ஓயாத அலைகள் 3 நடவடிக்கை ஆரம்பமாகியது. சண்டைக்களங்களில் சாதிக்க வேண்டும். இழந்து போன மண்ணை மீட்க வேண்டுமென்ற கனவோடு தானாகவே சண்டைக்குப் போக விரும்பி ஓயாத அலைகள் மூன்றில் இம்ராம் பாண்டியன் படையணியின் தாக்குதல் அணியோடு சென்றான். தனங்கிழப்பில் நிலையமைத்திருந்த அணியில் தாரகனும் ஒருவனாகினான். 01.02.2000அன்று அதிகாலை 4.30மணி. எதிரி இவர்களது பகுதியை உடைத்து முன்னேற முயன்று கொண்டிருந்தான். போராளிகளின் பகுதியைக் கைப்பற்றிவிடும் மூர்க்கத்தில் எதிரி தனது தாக்குதலை மேற்கொண்டிருந்தான். எதிரியின் மூர்க்கத்தை எதிர்கொண்டு போராளிகள் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். தாரகன் சண்டையில் எதிரியை எதிர்த்து வீரத்துடனும் ஓர்மத்துடனும் சமரிட்டுக் கொண்டிருந்தான். ஒருகட்டத்தில் பதுங்குகுளியை விட்டு வெளியில் நின்று எதிரியுடன் நேரடிச்சமரில் ஈடுபட்டான். தொடைப்பகுதியில் காயமுற்ற போதும் தனது காயத்திற்கான மருத்துவத்தை பெறாமல் பீல்ட் கொம்பிறேசரைக் கட்டிவிட்டு தொடர்ந்து எதிரியுடன் மோதிக்கொண்டிருந்தான். எதிரியின் எறிகணைகள் எங்கும் வெடித்துக் கொண்டிருந்தது. அந்த எறிகணைகள் தாரகனின் பகுதியிலும் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தது. அங்கே தான் தாரகன் தலையில் காயமடைந்தான். ஏற்கனவே காயமடைந்த தொடைப்பகுதியால் அதிக குருதி இழக்கப்பட்டிருந்தான். அடுத்த காயத்தை தலையில் ஏற்றுக் கொண்டவன் தனது இறுதிக் கணத்தை அடைந்து கொண்டிருந்தான். தனங்கிழப்பு மண்ணில் கப்டன் தாரகன் தனது கடைசிக்கனவை விதைத்து விட்டு வீரச்சாவடைந்தான். தனது இறுதிக்கணத்தில் கூட எவ்வித சலனத்துக்கோ இடறலுக்கோ உட்படாமல் இறுதி வரையும் வீரத்தோடு போராடினான். மரணத்தின் கடைசி நொடியிலும் என்றும் போல புன்னகை நிறைந்த அவன் முகத்தில் எந்தச் சோர்வுமின்றி வீழ்ந்தான் வித்தாக....! தாரகன் ஒளிரும் நட்சத்திரப் பொட்டுகளில் மின்னும் தாரகையாக தமிழீழக்கனவில் தனது வரலாற்றுத் தடங்களையும் பதித்துக் கொண்டு அமைதியாய் உறங்கினான். தாரகன் படித்த வித்தியானந்தா கல்லூரியும் அவனை நேசித்த அவனது ஊரும் மாணவர்களும் அவன் தோழோடு தோழ் நின்று களமாடிய தோழர்கள் அனைவரின் மனங்களும் துயரத்தில் தோய்ந்தது. அவன் நேசித்த அவனது பிறந்த ஊரான முள்ளியவளை மண்ணில் உறங்கிய மாவீரர்களோடு அவனும் முள்ளியவளை துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டான் மாவீரனாக....! எல்லோர் மனங்களிலும் நிறைந்து போனான் கப்டன் தாரகனாக...! நினைவுப்பகிர்வு :- - சாந்தி நேசக்கரம் - 01.02.2014 Email :- rameshsanthi@gmail.com https://mullaimann.blogspot.com/2014/02/blog-post.html
  13. சிறப்பு மருத்துவப் போராளியாகவும் நோயாளிகளின் அன்பிற்குரியவனாக‌வும் மட்டுமன்றி பின்நாளில் இளம் பல் வைத்தியனாக தமிழீழத்தின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்டவனாகி எம் மக்கள் எல்லோருக்கும் வேண்டியவனுமானான். உடுப்பிட்டி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு திருமதி கந்தசாமி தம்பதிகளின் தவப்புதல்வனாய். 1975 ஆண்டு “றூபன்” என்ற இயற்பெயருடன் அந்த குடும்பத்தின் வரவாகியவன். குடும்ப பாசத்தை நெஞ்சினில் சுமந்து ஈழமண் காக்க, விடுதலைப் போரிற்கு தன் தோள் கொடுக்கப் புறப்பட்டான். காலம் அவனை மருத்துவத்துறைக்கு அனுப்பியது. .மருத்துவப் போராளியாக இருந்த போதே பல் மருத்துவத்தைக் கற்று அதில் சிறப்பு பெற்று வளர்ந்தான். போராளிகளின் பயிற்சி முகாம் தொடங்கி விசேட பாசறைகள்‌ வரை சுதர்சனின் நடமாடும் பல் வைத்திய சேவை விரிந்தது. அது மட்டுமின்றி நடமாடும் மருத்துவ சேவையுடாக ஊர் ஊராய் சென்று மக்களின் பல் நலன்காத்த உத்தம புத்திரன். 2002 ஆம் ஆண்டின் பின்னர் முற்று முழுதாக மக்களிற்காக மருத்துவ தேவையைப் பார்த்து கொண்டிருந்த தமிழீழ நிழலரசின் அங்கமான தமிழீழ சுகாதார சேவையில் சுதர்சனின் கால்கள் பதித்த நாட்கள் முதன்மையானவை. போராட்ட வாழ்வில் அவன் மக்களிற்கு மருத்துவ சேவை செய்யக் கிடைத்த சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தினான். வடக்கு மட்டுமன்றி, கிழக்கு மாகாணம் வரை அவன் கால்கள் பதிந்தன. தமிழீழ சுகாதார சேவையின் ஓயாத புயலானான். தியாகதீபம் தீலிபன் மருத்துவமனைகளிலும் சிறப்புப் பல் வைத்தியனாக வலம் வந்தான். பாடசாலை மணவர்களும் சுதர்சனை‌ மறந்து விடமாட்டார்கள் .பற்சுகாதர அணியுடன் ஒவ்வொரு பாடசாலைகளாய் ஏறியிறங்கி வர, முன் காப்பதற்காய் பற்சுகாதாரம் பற்றி தெளிவூட்டல் கருத்தரங்குகளை மாணவர்கள் மட்டுமின்றி சாதாரண‌ மக்களும் புரியும்படி செயற்படுத்துவதில் அவனுக்கு நிகர் அவனே. எப்பொழுதும் சோர்ந்து போகாத மனவுறுதி கொண்டவன். தன்னுடன் சேர்ந்து பணிபுரிவோர்களையும் உற்சாகமாகவே வைத்திருக்கும் நகைச்சுவை திறன் கொண்டவன். எப்போதும் மற்றவர்களின் திறமைகளை பார்த்து வாழ்த்துவதில் பின் நிற்கமாட்டான். ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்றால் வாகனவசதி கிடைக்காவிட்டாலும் ஏதோவொரு வழியில் சென்று கடமை முடிப்பான். தூக்கம், பசி எல்லாமே அவன் கடமை கண்டு அஞ்சிப்போகும். ஒரு பொழுது அக்கராயன் மருத்துவ மனையில் வேலை முடித்து இரவு இரண்டு மணியளவில் கிளிநொச்சியில் உள்ள எமது கிளி மருத்துவ மனைக்கு வரும் வழியில் நித்திரை’, பசி களைப்பால் வந்த அசதியால் கோணாவில் அக்கரையான் வீதியில் நிறுத்தி‌ வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரப்பெட்டியுடன் மோதி மூக்கில் காயத்துடன் இரத்தம் சிந்த வந்து சேர்ந்தான்‌. நண்பர்கள் எல்லோரும் “நின்ற பெட்டியை உடைத்த பெருமைக்குரியவ ன்” அதை சொல்லி சொல்லி சிரித்தால் தானும் சேர்ந்து சிரித்து சமாளித்து விடுவான். மூக்கில் தையல்கள் போடப்பட்டன அன்று, அடுத்த நாள் நாகர்கோவில் பகுதியில் மக்களிற்கான சிறப்பு மருத்துவ முகாம்‌ ஒழுங்கும் ஒன்று இருந்தது. “சுதர்சன் நீங்கள் வர வேண்டாம் தையல் போட்டிருக்கு, பற் சிகிச்சையை நிறுத்திவிட்டு மற்றவைகளைப் பார்ப்போம். நீங்கள் ஓய்வு எடுங்கள்” என்று பொறுப்பு வைத்தியர் கூற இல்லை என்று அடம்பிடித்து முதல் ஆளாய் பற்சிகிற்சைப் பொருட்களுடன் வாகனத்தில் ஏறிக்கொண்டது, இன்றும் அவன் பணிபற்றியதை நினைத்துப் பெருமைப்பட வைக்கின்றது. சில நாட்கள் முன் கிளிநொச்சி மாவட்ட வேராவில் கிராமத்தை சேர்ந்த வயதான தாயொருவருடன் கதைத்தேன் எந்தத் தடுமாற்றமும் இன்றித் தெளிவாகப் பெயர் சொல்லி “சுதர்சன் டொக்டர்‌ இப்போ எங்கே” என‌க் கேட்டபோது பதில் சொல்ல‌ முடியாமல் தவித்து நின்ற எனக்கு அந்தப் பிள்ளை என்ர பல்லை எப்படி நோகாமல் கொள்ளாமல் வடிவா கதைச்சு கதைச்சுப் பிடுங்கிவிட்டவர். வெற்றிலை போடக்கூடாது ,புகையிலையும் போட வேண்டாம் என்று ஒவ்வொரு முறையும் கிளினிக்( clinic ) வரும் போது சொல்லிச் சொல்லி நிறுத்த வைத்திட்டார். தங்கமான பிள்ளை அது தான் என்ர வருத்தம் எல்லாம் குறைஞ்சு உயிருடன் இருக்கிறன். இந்த வயது வரை அதை நான் மறக்கவில்லை என்றார்‌” இவரைப் போல் இன்னும் எத்தனை அம்மாக்கள் உன்னைத் தேடிக்கொண்டிருப்பார்கள் சுதர்சன். இவன் நாட்டிற்கும் எம் மக்களிற்கும் செய்த சேவைகளை மறந்து போகமாட்டார்கள். ஊர் உறங்கிப் போனாலும் உன் நினனவுகள் .ஊற்றெடுத்துக் கொண்டேயிருக்கும் எம் மண்ணிலிருந்து……………….. இவனது சேவையின் சாட்சியாய் இவரைப் போல் இன்னும் பலரும் உயிருடன் உள்ளனர். நீ மட்டும் இன்றில்லை மருத்துவ பொருட்களிற்கு தடை போட்ட நாட்களில் கிடைத்த தொழில் நுட்பத்தில் Diagnostic Radiology (X _ray) பரிசோதனைகள் செய்வதில் அன்று நீ எங்கள் போராளி நோயாளிகளின் கதாநாயகன். “சுதர்சன் அண்ணா எப்ப எக்ஸ்ரே எடுக்கிறது” என்று மருத்துவமனையில் உள்ள என்பு முறிவு நோயாளர்கள் உன்னையே சுற்றுவார்கள். அதற்கான மருத்துவப் பொருட்கள் வரும்வரை அவர்களை சமாளிக்க‌ நீ படும்பாடு. ஏன் எம்மைக் கேட்டாலும் நாம் தப்பிவிட உன்னைத் தானே காட்டுவோம். உனக்கு உதவியாக எந்த போராளி வந்தாலும் உனக்கு தெரிந்தவற்றை அவர்களிற்கு சொல்லிக்கொடுத்து அவர்களை அத்துறையில் வளர்ப்பதில் உனக்கு நிகரில்லை. மருத்துவப் பிரிவில் மட்டுமின்றி படையணி போராளிகள், பொறுப்பாளர்கள் ,தளபதிகள் என்று‌‌ நட்பு பாராட்டிய தோழன் “எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்த நீ, இன்று எல்லோரையும் தேடலில் தவிக்க விட்டுச் சென்றாயே. யாருக்கு என்ன உதவி தேவையென்றாலும் முதலாவது ஆளாக வந்து நிற்பாயே ”! அன்றொரு நாள் உடனே இரத்தம் ஏற்ற வேண்டியிருந்தபோது முதலாவது ஆளாக நீதானே தந்தாய். சுதர்சன்.உன் நினைவுகள் என்றென்றும் எம்முடன் வாழும்”. இவ்வாறு அண்மையில் பெண் போராளி இவன்‌ நினைவைப் பகிர்ந்து கொண்டாள். இவன்‌ தன் தேசத்தை மட்டும் நேசிக்கவில்லை. நண்பர்களையும் அதிகமாக நேசித்தான். ‌அவர்கள்‌‌ எதைக்கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் செய்து முடிப்பது இவனுக்குத் தனிச்சிறப்பு . சில வேளைகளில் நண்பர்களிற்காக நீயே தண்டனையையும் பெற்றிருக்கின்றாய். அவ்வளவு பரந்த மனம். மற்றவர்களின் மகிழ்வில் இவன் முகம் மலரும்‌. , இவனுக்கு நண்பர்கள் பல செல்லப்பெயர்களை வைத்து அழைத்த போதும் நீ கடிந்து கொண்டதாய் நான் அறியவில்லை. சுதர்சன்‌‌ உந்துருளியில் பயணிக்கும் போது வீதியால் எந்தத் தாய் நடந்து வந்தாலும் அவர்களை ஏற்றி உன் பயண முடிவுவரை அழைத்துப் போவாய், ‌ இன்று அமரத்துவம் அடைந்து விட்ட மாவீரனின் தாயும் நாட்டுப்பற்றாளரும், மருந்தாளருமாக இருந்த கந்தசாமி அம்மாவை நான் பார்த்த போது கட்டிப்பிடித்து கதறிவிட்டு சுதர்சன் எங்கே இருக்கிறான் என்று கேட்டா நான் நொருங்கிய இதமாய் தவித்து உன் செய்தியை ஆறுதலாகவே சொன்னேன் உன் இழப்பிலிருந்து மீளமுடியாது தவித்தா, “என்ர பிள்ளை எங்க கண்டாலும் என்ன ஏத்தி கொண்டுபோய் விடும்” தன் மனத்திற்கு எது சரியோ அதை செய்துவிடுவான்.புகைப்படம் எடுப்பதில் அலாதிப் பிரியம் அவனுக்கு இப்படியான குறும்பு தனங்களிற்கு தண்டனை வாங்குவதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை அவன். நான் பிரான்ஸ் சென்ற போது உன் நண்பர் ஒருவர் புகைப்படங்களை வைத்து உன் நினைவில் உருகிப்போய் இருப்பதை பார்த்தேன், உனக்கு எப்போதும் பிடித்த இந்த பெட்டி சேட் புகைப்படங்கள் அவரிடம் பெற்றதே உன் காதுகளிற்கு கேட்காத இந்த நினைவுகளை நாம் எமக்குள் சொல்லிக் கொள்கின்றோம், உன் அன்பிற்கும் மதிப்புற்குமான மூத்த வைத்தியர்கள் உன் பற்றிய நினைவுகளை பேசும் போதெல்லாம் உடைந்து போகின்றார்கள். உன் உறவுகள் நீ இல்லாத செய்தியால் கண்ணீரில் கரைகின்றனர்…. உனக்கு கேட்காத அந்த செய்திகளை நாம் அவ்வப்போது பகிர்ந்து கொள்கின்றோம்… இறுதி நாளில் நீ எங்கே போனாய் என்று இன்றுவரை அறியாதவர்களாய்த் தேடுகின்றோம் எப்படி மறப்பது நடமாடும் வைத்திய சேவையின் தமிழீழச் சிறப்பு பல் மருத்துவர் சுதர்சன் ஒன்றாக இருந்த நாட்களை‌ இறுதியாக வட்டுவாகலில் மே 17,ம் திகதி வைத்து விசாரணைக்காக‌ இலங்கை இராணுவ புலானாய்வு துறையினர் கூட்டி சென்று இருத்தி வைத்திருந்ததை பார்த்ததாக உன் நண்பன் வண்ணன் கூறினான். இன்று வரை எங்கே என்று தேடுகின்றோம்‌. சுதர்ஷன் பற்றிய நினைவுகள் நெஞ்சக்கூட்டை பலமாய் அழுத்துகின்றது. நிஜமாக அவனுடன் பேசமுடியவில்லை எம் நிழலாக விட்டுச்சென்ற கனதிகளுடன் பேசுகின்றோம். மிதயா கானவி.
  14. பல மாவீரர்களை தாயக விடுதலைக்காக தந்த பருத்தித்துறை மண்ணில் இருந்து 1991 இல் தாயகப் போருக்காக தன்னையும் இயக்கத்தில் இணைத்துக் கொண்டான் ஜெயரூபன்.மூன்று அண்ணன்களுக்கு தம்பியாகவும் தங்கைக்கு அண்ணாவாகவும் ஜெயராசா தம்பதிகளுக்கு மகனாக10.08.1975 அன்று பிறந்தான் ஜெயரூபன். போராளியாக இணைந்தவனை படையணியின் சரத்பாபு 02 பயிற்சி முகாம் உரமூட்டி வளர்த்தது. ஜெயரூபன் அற்புதனாகி வெளிவந்தான். பயிற்சியை முடித்து வெளி வந்தவனின் முதல் களம் ஆகாய.கடல் .வெளி சமர் வரவேற்றது. ஆவன் வீரத்தை வெளிப்படுத்த அக்களமே வழிவகுத்தது . மீண்டும் தளம் திரும்பியவனை படையணி தளபதியாக இருந்த பிரிகேடியர் சொர்ணம் அவர்களால் விமான எதிர்ப்பு அணிக்குத் தெரிவு செய்யப்பட்டான். சிறப்பாகத் தனது பயிற்சியைச் செய்து கொண்டிருந்தவனை மீண்டும் களம் அழைத்தது. காட்டைக்காடு மினி முகாம் தகர்ப்பு. இம்ரான் பாண்டியன் படையணி பெயர் சூட்டப்பட்ட தாக்குதல் பலவேய 02 சமர்களில் பங்கு கொண்டு தனது வீரத்தை வெளிக்காட்டினான். மீண்டும் விமான எதிர்ப்பு அணியில் பணியாற்றினான். இவனின் கடமை உணர்வை அறிந்த தளபதி சொர்ணம் அவர்கள் தலைவருக்கான வெளி பாதுகாப்புப் பணிக்குத் தெரிவு செய்தார். அங்கு தனது திறமையையும் கடமை உணர்வையும் சிறப்பாகவே வெளிக்கட்டினான். இதனால் வெளி பாதுகாப்பு அணியில் சில பகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். வெளிப்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பொழுது மக்களின் மதிப்பையும் பெற்ற சிறந்த போராளியாக விளங்கினான். 1995 ஆம் ஆண்டு இறுதியில் விசேட இராணுவப் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்பட்டான். கடுமையான பயிற்சிகளையெல்லாம் மிகவும் இலகுவாகச் செய்து முடிப்பான். இதனால் ஆசிரியர்களால் முன்னுதாரணமாக எப்போதுமே காட்டப்பட்டு பாராட்டுக்களையும் பெற்றவன். இவன் இருக்குமிடம் என்றும் கலகலப்புக்கு குறைவே இருக்காது. அற்புதன் தனது தலை முடியில் மிகவும் கவனம் கூடியவன். பெண்கள் தோற்றுப் போகும் அளவுக்கு நீண்ட நேரம் கண்ணாடி முன் நின்று தலையை இழுப்பான். அவனது அழகின் பெருமையே அவனது தலைமுடிதான். எப்போதும் தலைமுடியை அழகாகவே வைத்திருப்பான். யாழ் இடப்பெயர்வுக்குப் பின் வன்னி மண்ணில் சில காலம் பணியாற்றியவன். சண்டைக்கு போகப்போகிறேன் என அடம்பிடித்து ஆனையிறவு , பரந்தன் ஊடறுப்புச் சமரில் 7பேர் கொண்ட அணிக்கு பொறுப்பாளராக சென்றான். உப்பளப் முகாம் மீட்புக்கான சமரில் சமராடிய அற்புதன் 09.01.1997 அன்று உப்பளக் காற்றுடன் சங்கமமாகி மாவீரனாகினான். எங்களின் தோழன் கப்டன் அற்புதனை நாங்கள் இழந்து போனோம் உப்பளத்தில். கரும்புலியாகப் போக விரும்பி தலைவருக்குக் கடிதம் அனுப்பியிருந்ததான். ஆனால் அவன் விரும்பிய கரும்புலிக்கான பதில் வர முன் அவன் மாவீரன் ஆகிவிட்டான். எங்கள் தோழன் அற்புதன். எங்கள் தோழன் எங்களைப் பிரிந்து பல ஆண்டுகள் இன்றோடு நிறைகிறது. அவன் விட்டுச் சென்ற கனவுகள் தொடர்ந்து கொண்டேயிருக்க அவன் நினைவுகளை நாங்கள் சுமந்து கொண்டு செல்கிறோம். தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி வீழ்ந்த கப்டன் அற்புதன் அண்ணாவிற்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம். || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் || - நினைவுப்பகிர்வு – எழிலகன் (09.01.2014)
  15. 2008 ல் மன்னார் களமுனையில் சாதனை புரிந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது கேணல் பானு “எமது பலத்தை நிரூபிக்கும்போது சர்வதேசம் வலிந்து உதவும்” என தெரிவித்திருந்தார். இந்நிகழ்வில் மன்னார் கட்டளைத் தளபதி கேணல் பானு ஆற்றிய மதிப்பளிப்பு உரை: ஒரு படையணியின் செயற்பாடு என்பது அதன் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது. தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க பிரிகேடியர் தமிழ்ச்செல்வனால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணி திறம்படச் செயற்பட்டு வருகின்றது. மன்னார் களமுனையில் பூநகரிப் படையணி சிறப்பாக செயற்பட்டிருக்கின்றது. எதிரியின் முன்னேற்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதில் பூநகரிப் படையணியின் செயற்பாடு பாராட்டுக்குரியது. எதிரியின் பல நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எமது போராளிகளால் முறியடிக்கப்பட்டிருக்கின்றது. பெருமளவில் எதிரிகளை நாம் களமுனையில் இருந்து அகற்றியிருக்கின்றோம். எமது போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர். போர்க்களங்களில் இழப்புக்களில் இருந்தே பட்டறிவையும் வெற்றிகளையும் அடைகின்றோம். தமிழர்களைப் பொறுத்த வரை போரியல் வெற்றிகள் மூலமே பல மாற்றங்களை உருவாக்க முடியும். அதனை நாம் உறுதிப்படுத்தி வருகின்றோம் என்றார் அவர். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் போர் மூலோபாயங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கு நாம் ஒன்றுதிரண்டு உழைக்க வேண்டும். நாம் எமது நிலங்களை எதிரியின் வல்வளைப்பு வலிந்த தாக்குதல் போரில் இழந்திருக்கின்றோம். ஆனால் நாம் எமது பலத்தை இழக்கவில்லை. நாம் போரில் வெற்றி பெறுவது உறுதி. 2009 ம் ஆண்டை தனது “படையினரின் ஆண்டு” எனப் பிரகடனப்படுத்தியுள்ளார் மகிந்த ராஜபக்ச. அவரது படையினருக்கான ஆண்டை நாம் அவர்களது “அழிவு ஆண்டு” என மாற்றுவோம். எமது மக்கள் சிறிலங்கா படைத் தாக்குதல் மற்றும் வல்வளைப்புக்களால் இடம்பெயர்ந்து பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். மிக மோசமான அவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இறுதி வெற்றி யாருக்கு என்பதை நாம் பார்க்கலாம். சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. நாம் எமது மக்களின் பலத்தில் நிற்கின்றோம். நாம் பலத்தை நிரூபிக்கின்ற போது வெளிநாடுகள் தாமாகவே என்ன உதவி வேண்டும் என்று கேட்கும் நிலை வரும். நாம் எமது மக்களுக்கு எதிரி தரும் அவலங்களை திருப்பிக்கொடுக்க வேண்டும். இன்று சிறிலங்கா பெரும் நெருக்கடிக்குள் இருக்கின்றது. அது பெரும் பொருண்மிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இன்னும் பெரும் பொருண்மிய உடைவு அவர்களுக்கு ஏற்படவுள்ளது. உறுதியாக நாம் வெல்லுவோம் எனவும் கேணல் பானு தெரிவித்துள்ளார். https://eelavarkural.wordpress.com/2012/05/16/brigadier-banu/
  16. கைமாறிய கனவுகளோடு களங்காணும் 2ம் லெப் மாலதி படையணி. வல்வெட்டித்துறை – தீருவில் வெளியில் பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும், எரியக்காத்திருக்கும் சிதையின் மேல் அடுக்கப்பட்டன. ” இந்தியா எமது மக்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் கீழே வைத்த ஆயுதங்களை இப்போது மறுபடி மேலே உயர்த்துகிறோம் ” என்று ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. சுடுகலன்கள் மேலே உயர்த்தப்பட்டன. வானத்தைக் கிழித்தபடி மரியாதை வேட்டுக்கள் செந்நிறமாகப் பயணித்தன. இந்திய – ஈழப்போர் தொடங்கிவிட்டது. நாவற்குழிப் படைத்தளத்திலிருக்கும் இந்திய இராணுவம் முன்னேறினால் மோதவென கோப்பாயில ; பதினைநது பேர் கொண்ட பெண்களணி தயாரானது. கைகளில் இரண்டொரு நாட்களின் முன் அவசர அவசரமாக வழங்கப்பட்ட AK 47, ஒரேயொரு ரவைக்கூட்டுடன் அதுகூட எல்லோரிடமுமில்லை. ஏனையவர்கள் ரவைகளைத் துணி முடிச்சில் கட்டியபடி, குண்டுகளுடன். 2ஆம் லெப் மாலதி, 2ஆம் லெப் கஸ்தூரி, வீரவேங்கைகள் விஜி, ஜெனா, தயா, ரஞ்சி தம்மிடம் உள்ளவற்றுடன் தயார் நிலையில். முன்னேறிவந்த இந்தியப் படைகளுக்கும், இவர்களுக்கும் சண்டை ஆரம்பித்தது. கடும் சண்டை. ரவை முடிய முடிய நிரப்பி நிரப்பிச் சண்டை. பெரும் பலத்துடன் பெருந்தொகையில் வந்து நின்ற உலகின் அன்றைய நான்காம் வல்லரசுப் படைகளோடு நின்று சண்டையிட முடியாத களநிலைமை எம்மவர்களைக் கோப்பாய் சந்திநோக்கி, சண்டையிட்டவாறு பின்னநகர்த்தத் தொடங்கியது. மாலதிக்குத் தொண்டையில் பெருங்காயம். நடக்க முடியவில்லை. இராணுவமோ நெருங்கிக்கொண்டிருந்தது. மாலதியை இழுத்துச் செல்ல விஜி முயற்சித்துக்கொண்டிருந்தார். முடியவில்லை. வல்லரசுப் படைகளுடனான போரில் தன்னால் இழப்பு வரக்கூடாது என்று முடிவெடுத்த மாலதி சயனைட்டை அருந்தினார். ” என்னை விட்டிட்டு ஆயுதத்தைக் கொண்டுபோய் அண்ணையிட்டைக் குடு ” என்றபடி தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பெண் மாவீரரானார். 2ம் லெப் மாலதியின் வீர வரலாற்று நினைவுகள். கருவி கைமாறியது கனவுகள் கைமாறின. மாலதி, தாய் நிலம் விடியும் எனும் கனவோடு மண்ணிலே நீ விழுந்தாய். உன் பெயர் சொல்லி எம் படையணி தன்னை அண்ணன் வளர்த்தெடுத்தான். (நன்றி – கவிதை அம்புலி) சூரியக் கதிர் – 01 எதிர் நடவடிக்கையின் முடிவில், விடுதலைப்புலிகள் மகளிர் படையணி, தன்னை 2ஆம் லெப்.மாலதி படையணியாக உருமாற்றியிருந்தது. சூரியக் கதிர் – 02 நடவடிக்கைக்கு சிங்களப் படைத்தலைமை தயாரானது. 2ஆம் லெப்.மாலதி படையணி வடமராட்சியின் வாதரவத்தை, கப்புதூ, மண்டான், வல்வை வெளி, தொண்டமனாற்றுச்சந்திப் பகுதிகளில் நிலைகொண்டது. சிங்களப் படையினரின் நடவடிக்கையில் தெரிந்த வேறுபாடு, அவர்களின் வரவு வாதரவத்தைப் பக்கமாக இருக்கலாம் என்ற ஊகத்தை ஏற்படுத்தியது. எமது வேவு நடவடிக்கை தொடங்கியது. வாதரவத்தையின் வெளிப்புறக் காப்பரண்களைக் கடந்து எம்மவர்கள் உள்நுழைய, இரவைப் பகலாக்கும் மின் விளக்குகள் ஒப்பவில்லை. கப்டன் கோபியின் அணி மறுபடி மறுபடி முயன்றது. காப்பரண்களுக்கு முன்னால் நாட்டப்பட்டுள்ள கம்பங்களில் சில மின்விளக்குகள் எமது புறமாகவும், சில படையினரைப் பார்த்தபடியும் கட்டப்பட்டிருந்தன. எமக்கு எதிர்த்திசையில் கட்டப்பட்ட மின் விளக்கு ஒளிரும்போது எம் திசையிலிருக்கும் கம்பம் சிறுகோடாக நிழலை விழுத்தும். அந்த நிழலைப் பயன்படுத்திக்கூட பகையரணை நெருங்க பலமுறை முயன்றும் …… படையினர் நடவடிக்கையைத் தொடங்கப்போகின்றனர் என்று உள்ளுணர்வு சொன்னது. இன்று நான்காவது நாள் எப்படியாவது போயாக வேண்டும். இப்போது முன்னிலவு. பின்னிருட்டு நள்ளிரவில் மின் பிறப்பாக்கி ஓய்வெடுக்கும் 10 – 15 நிமிட இடைவெளியைப் பயன்படுத்தி உள்நுழைந்து, நிலைமையை அவதானித்து திரும்பிவரும் முடிவை கோபி எடுத்தார். இது சரிவருமா, இல்லையா என்று யோசித்துக்கொண்டிருக்க நேரமுமில்லை. இதை விட்டால் படைத் தளத்தினுட்புக வேறு வழியுமில்லை. 1996 ஏப்பிரல் 02 கோபியின் அணி நகர்ந்தது. முன்னணி அவதானிப்பு நிலையை அடைந்தது. சற்று நிதானித்து, மேலும் முன்னகர்ந்து தடைக் கம்பியை நெருங்க முன்பே வழியில் இராணுவம் எதிர்ப்பட்டது. முயற்சியைக் கைவிடமுடியாது. போகத்தான் வேண்டும். மெல்லப் பக்கவாட்டாக விலகி, மீண்டும் முன்னேற, மறுபடியும் இராணுவம் எதிர்ப்பட்டது. மீண்டும் பக்கவாட்டாக விலகி, முன்னோக்கி நகர முயல, மின்பிறப்பாக்கி ஓய்ந்தது. இனித் தாமதிக்க முடியாது. பத்து நிமிடங்களுள் உள்நுழைந்து வெளித்திரும்ப வேண்டும் ஓட்டத்தில் போய் முதலாவது தடைக் கம்பியை உள்நுழைவதற்காக உயர்த்திப் பிடிக்க, ஒருவர் உள்நுழைய முயல, தடைக் கம்பியிலிருந்து ஐந்து மீற்றர் முன்னே இராணுவம் நிற்பதைக் கண்ட கோபி, சைகை காட்டி, நகர்வை நிறுத்தினார். அதற்குள் மின் விளக்குகள் உயிர் பெற்றன. இனி ஒரு கணம் அங்கே நிற்பதும் தற்கொலைக்கு ஒப்பானது. இவர்கள் விலகத்தொடங்க சிறிலங்கா இராணுவம் சுடத்தொடங்க, இவர்களும் கைக்குண்டுகளை வீசியபடி சுட்டுச் சுட்டுப் பின்னகர, அந்த வெட்டை வெளிச்சண்டையில் கப்டன் கோபி 2ம் லெப்.மாலதி படையணியின் முதல் மாவீரராகி, இப்போது பத்தாண்டுகள். 2ம் லெப்.மாலதியின் பெயரைச் சுமக்கும் படையணி, முதல் மாவீரர் கப்டன் கோபியைப் போலவே முடியாதென்று எதையும் விடாது, எங்கும் எப்போதும் முயன்றபடி. 2ம் லெப் மாலதி படையணி உண்மை வெற்றி – 01 எதிர் நடவடிக்கையின் ஆரம்ப நாட்களிலேயே கொம்பனிக்குரிய வேவு அணியில் ஒருவராக லெப்.தமிழ்பிரியா பயிற்றுவிக்கப்பட்டார். நிதானமும் அமைதியுமான இயல்பைக்கொண்ட அவருக்கு வேவு மிகவும் பொருத்தமான பணிதான். தாக்குதலணிகளின் காப்பரண்களைக் கடந்து முன்புறம் போய் இரவெல்லாம் சிங்களப் படைக்கு மிக அருகேயும், பகலில் சற்றுப் பின்னே வந்து உயரமான மரங்களில் ஏறி நின்று படையினரைக் கண்காணிப்பதுமான கடின வேவுப்பணியில் தமிழ்பிரியா ஈடுபட்டார். உருத்திரபுரம் புனித பற்றிமா கல்லூரியில் நிலைகொண்டிருந்த சிங்களப் படையினரை 1996.09.26 அன்று நாம் உட்புகுந்து தாக்கியழித்த நடவடிக்கையில் காயமடைந்த போராளிகளுக்கு வழிகாட்டிப் பின்னே நகர்த்திவிட்டு, மறுபடி முன்னேவந்து காயக்காரர்களைப் பின்னே கூட்டிப்போய் என்று, நடவடிக்கை முடியும் வரை இடைவிடாத நடைதான். மாபெரும் படை நகர்வொன்று சிங்களப் படைகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. எப்படி, எப்போது எங்கே என்பது தெரியவில்லை. 2ம் லெப்.மாலதி படையணியின் கொம்பனி ஒன்று உடங்காவில் நிலைகொண்டிருந்தது. பரந்துபட்ட நிலப்பரப்பைக் கண்காணிப்பில் வைத்திருக்கப் போதிய ஆளணியில்லாததால் 2ஆம் லெப் மாலதி படையணியின் வேவு அணிகள் சம்பளங்குளம், ஒதியமலை, உடங்கா, தண்ணீர் முறிப்புப் பகுதிகளில் உலாவிக்கொண்டிருந்தன. உடங்காப் பகுதியில் இரு தடவைகள் சிறிலங்காப் படையினரின் வேவு அணிகளைச் சந்தித்து, எமது அணிகள் தாக்கியிருந்தன. இந்தா, அந்தா என்றிருந்தது சண்டை தொடங்கும் நாள். 1997.05.13 அன்று தொடங்கியது ” வெற்றி நிச்சயம் ” என்று பெயர் சூட்டப்பட்ட, சிங்களத்தின் தோல்வி நடவடிக்கை. உடங்கா வெட்டையில் நின்ற 2ஆம் லெப்.மாலதி படையணியின் வேவு அணியையே வெற்றி நிச்சயம் நடவடிக்கைப் படைகள் முதலில் சந்தித்தன. வெற்றி நிச்சயம் எதிர் நடவடிக்கையின் முதல் மாவீரராக லெப்.தமிழ்பிரியா வரலாற்றில் பொறிக்கப்பட்டார். ” புளியங்குளச் சந்திப் பகுதியை வேறு படையணிகள் பாதுகாக்கும். சந்திக்கருகே இராணுவம் வந்து நிலைகொண்டு சண்டை பிடிக்குமானால், தளத்தைத் தக்கவைப்பது கடினம். நீண்டகாலம் புளியங்குளச் சந்தியை எமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால் நீங்கள் அவர்களுக்கு வெளிப்புறமாகத் தடுப்பரண்களை அமைத்து நின்று, சண்டையிட்டு எதிரிக்குச் சேதத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். அதை நீங்கள் போய் செய்யுங்கள் ” என்றார் தமிழீழத் தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள். வீரர்களின் வாழ்வில் முடியாது என்று ஒன்று இருக்கின்றதா? புறப்பட்டது 2ஆம் லெப்.மாலதி படையணி. நெடுங்கேணியிலிருந்து புளியங்குளத்துக்குக் கால் நடையாகவே வந்து சேர்ந்தது. தலைவர் சொன்னபடி தளத்துக்கு வெளிப்புறமாகத் தடுப்பரண்களை அமைத்தது. வவுனியா – கிளிநொச்சி நெடுஞ்சாலையின் இருபுறமும் சிறகுகள் வடிவில் விரிந்து நின்று, புளியங்குளத் தளத்துக்குக் காப்பு வழங்கியது. தனக்கு முன்னே படையணியின் வேவு அணியினரை உலாவவிட்டது. 1997.06.23 அன்று அதிகாலை பெருமெடுப்பில் ராங்கிகள் இரைய, குண்டுவீச்சு விமானங்கள் கூவ, எறிகணைகளை மழையாக வீசியபடி முன்னேறி வந்த படையினரோடு முதலில் மோதியது மேஜர் அரசியின் தலைமையிலான ஐந்து வேவுப் போராளிகளே. பழைய காயங்கள், நோய் காரணமாக களமுனை மருத்துவ வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்களை முன்னரங்குக்கு நகர்த்தி, முன்னரங்கில் நின்றவர்கள் தம்மைத் தயார்ப்படுத்தும் வரை வேவு அணி சண்டையிட, எல்லோரும் தயாரானதும் அவர்கள் பின்னகர, முன்னரங்கப் போராகளிகள் சண்டையிட்டனர். எறிகணைகளால் தூக்கி விசிறப்பட்டு மண்குவியல்களான காப்பரண்களைக் கைகளால் விறாண்டி விட்டுப் படுத்திருந்து அடித்தவர்களும், இயங்கு நிலைத்தடையேற்பட்ட கனரக ஆயுதங்களை சீர் செய்து, சீர் செய்து அடித்தவர்களும், காயங்களைக் கட்டிவிட்டுத் தொடர்ந்து நின்று சண்டையிட்டவர்களும் வெற்றியை எமக்கே உரித்தாக்கியிருந்தனர். காலை 5.00 மணியளவிலிருந்து மாலை 5.00 மணியளவு வரை தொடர்ந்த அந்தப் பெருஞ்சண்டையில் படையணி 2ம் லெப்.மாலதியின் பெயரையும் கப்டன் கோபியின் பெயரையும் நிலைநிறுத்தியிருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலுப்பிய இரு பெரும் சமர்களான இந்திய இராணுவப் போரையும், வெற்றி நிச்சயம் நடவடிக்கையையும் எதிர்கொண்டு, முதல் மாவீரர்களை ஈகம் செய்த நிமிர்வில், இனிவரும் சமர்களையும் வெற்றிகொள்ளும் துணிவில், களமெங்கும் காத்திருக்கின்றது படையணி. “ஆயிரத்து நூற்று இருபத்தைந்து மாவீரர்களை மண்ணுக்கு ஈர்ந்து பெருமையோடு நிமிர்ந்துகொள்கின்றது படையணி” - மலைமகள். தமிழீழ விடுதலைப்புலிகள் இதழ் (மாசி – பங்குனி 2006)
  17. நீண்ட வரலாற்றையும், காலத்திற்குக்காலம் எழுச்சிகொண்டு அரசாட்சி உரிமையையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழினம், தமிழீழத்தில் எழுச்சிகொண்டபோது தாய்மண்ணின் விடுதலைக்காக எழுந்த மாபெரும் விடுதலைப்போரில் விடுதலைப் புலிகள் இயக்கம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உறுதியான வழிநடத்தலில் இலக்குத்தவறாத இலட்சியப் பாதையில் முள்ளிவாய்க்கால் வரை பயணித்தது. தமிழ்மக்களின் விடுதலைக்காகப் போராளியாகப் பிறந்தவர் எமது தேசியத் தலைவர். அவரினால் உருவாக்கப்பட்ட போராளிகளில் இணைந்த காலம்முதல் இறுதிவரை பயணித்த தளபதிகளில் பிரிகேடியர்.பானு அவர்களும் ஒருவராகவிருந்தார். உலகில் அடக்கப்பட்டு,அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போர் பற்றிய வரலாறு என்பது காலம் குறித்து எழுதி முடிக்கப்படக்கூடிய ஒன்றல்ல,விரிவாக ஒவ்வொரு காலகட்டத்தையும் வைத்து எழுதப்பட வேண்டிய ஒன்றாகும்.தளபதி பானு அவர்களைப் பற்றி எழுதுகின்றபோது, முழு வரலாறும் எழுத வேண்டிய நிலை இருந்தும் இத் தொடரில் அதனை எழுத முடியாது என்பதனால் அவருடைய விடுதலை சார்ந்த சில நிகழ்வுகளை இங்கு பதிவாக வைப்பதற்கு விரும்புகின்றோம்.இணைந்த காலம் முதல் இறுதிவரை பயணித்த தளபதிகளில் ஒருவரான பானு அவர்களைப் பற்றி குறிப்பிடுகின்றபொழுது மாபெரும் விடுதலை இயக்கத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளிலும் அவருடைய பங்களிப்பு இருந்திருக்கின்றது. தமிழீழத்தின் யாழ் மண்ணின் பெருமைக்குரிய தளபதிகளில் ஒருவரான பானு அரியாலை என்னும் ஊரைப் பிறப்பிடமாகக்கொண்டவர்.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தபோது 1983 ம் ஆண்டு யூலை மாதத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் கோரத்தைக்கண்டு சினந்தெழுந்த இளைஞர்களில் ஒருவராக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் அரியாலை என்கின்ற ஊர் போராட்ட வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்து அழியாத பதிவைக் கொண்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆரம்ப மறைவிடங்களில் ஒன்றாகவும் பதியப்பட்டுள்ளது. மூத்த மாவீரர்களான லெப்.சீலன், லெப் .கேணல் புலேந்திரன் போன்ற முன்னணிப் போராளிகள் விடுதலைக்கான செயல்பாடுகளுக்காக இங்கு தங்கியிருந்து செயல்பட்டனர். யாழ்ப்பணத்தில் ஏனைய பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியபோதும், போராளிகளின் மறைந்த வாழ்விடம் அரியாலையிலும் அமைந்திருந்தது. இந்தவகையில் போராட்ட வரலாற்றில் முக்கிய இடத்தையும் அரியாலை பெற்றுள்ளது.தமிழ்மக்களின் விடுதலைக்காக முழு மூச்சாக எழுந்த மூத்த போராளிகளான லெப்.கேணல் சந்தோசம், தளபதி பொட்டம்மான் போன்றவர்கள் அரியாலை மண்ணில்தான் பிறந்தார்கள் என்பதில் இந்தமண்ணுக்கு மேலும் சிறப்பான ஓர் இடம் வரலாற்றில் கிடைத்திருக்கின்றது. இந்தியாவில் விடுதலைப் புலிகளின் இரண்டாவது பாசறையில் படைத்துறைப் பயிற்சியைப் பெற்றுக்கொண்ட தளபதி பானு மன்னார் மாவட்டத்தளபதி லெப்.கேணல் விக்டர் அவர்களின் குழுவில் இணைக்கப்பட்டார். லெப்கேணல்.விக்டர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணியை மேற்கொண்டிருந்தவேளையில் தேசியத் தலைவர் அவர்களின் ஆணையின்படி மன்னார் மாவட்டத் தளபதியாக விக்டர் நியமனம் பெற்றார். அந்த வேளையில் தளபதி பானு லெப்கேணல் விக்டர் அவர்களுடன் மன்னார் மாவட்டத்திற்குச் சென்று விடுதலைக்கான பணியை மேற் கொண்டிருந்த வேளையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான பொருளாதார மேம்பாட்டைக்கருத்தில்கொண்டு விவசாயப் பண்ணைகள்,நெற்செய்கை ,வியாபாரம் சிறு கைத்தொழில் போன்றவைகளை தனது இளம் வயதில் மிகுந்த திட்டமிடலில் மேற்கொண்டு ஏனைய மாவட்டப் போராளிகளுக்கு முன்மாதிரியாகவிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழீழத்தில் யாழ்ப்பாணம், வன்னி, மன்னார்,திருகோணமலை,மட்டக்களப்பு-அம்பாறை ஆகிய ஐந்து பெரும்பிரிவுகளுக்கும் பொறுப்பாக தளபதிகள் பணிநியமனம் செய்தபோது மன்னார் மாவட்டத்திற்குத் தளபதியாக லெப் கேணல் விக்டர் பொறுப்பேற்றுக்கொண்டார். தேசியத்தலைவர் அவர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் லெப் கேணல் விக்டர் அவர்களும் ஒருவர் என்பதில் மன்னார் மண் பெருமிதம் கொள்ளுகின்றது. இக் காலத்தில் மன்னார் மாவட்ட விடுதலைப்புலிகள் என்றால் அவர்களுக்கு ஒரு அதிரடி அடையாளத்தை பெற்றுக்கொடுத்ததற்கு தளபதி விக்டர் அவர்களின் விடுதலையிலிருந்த பற்றும்,தீவிர தாக்குதல் நடவடிக்கைகளும்,தேசியத் தலைவர் மீது வைத்திருந்த மதிப்பும் காரணமாக அமைந்திருந்தன.விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் லெப் கேணல் என்ற நிலையிலும் தளபதி விக்டர் போராட்ட வரலாற்றில் முக்கிய பதிவாகவும் இடம்பெற்றார். தளபதி விக்டர் உடன் களமாடிய பானு அன்று ஒவ்வொரு தாக்குதல்களிலும் விக்டருக்கு பாதுகாப்பு அரணாகவே பங்கெடுப்பார். தளபதி விக்டர் அவர்களைப் பாதுகாப்பதற்காக முன்னேறிய நிலையிலே தனது தாக்குதலை மேற்கொள்ளுவார் என்பதை அக் காலத்தில் போர்ப் பணியிலிருந்த போராளிகள் மூலமாக அறிந்துகொள்ளமுடிகின்றது. தமிழீழத்தில் தாய்த் தமிழகத்துக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ள மன்னார் தமிழர்களுடைய வரலாற்றில் எல்லோராலும் அறியப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் விளங்குகின்றது. தாய்த் தமிழகத்திற்கும், தமிழீழத்திற்குமான போக்கு வரவு த்துத்துறைமுகமாக இருக்கவேண்டிய நிலையிலுள்ள மன்னார் பல உலக நாடுகளின் எதிர் பார்ப்பில் எண்ணை வளமுள்ள இடமாகவும் மன்னார் வளைகுடா இருப்பதும்,இதற்கு ஒரு காரணமாக அமைகின்றது. லெப்கேணல் விக்டர் அவர்களின் வீரச்சாவினைத் தொடர்ந்து லெப் கேணல் ராதா மன்னார் மாவட்டத் தளபதியாக பணிநியமனம் பெற்றார். இக் காலத்தில் பானு தளபதி ராதா அவர்களின் தலைமையில் நடந்த பல தாக்குதல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நேர்த்தியான திட்டமிடலிலும், நிருவாகத்திறமையிலும் சிறந்து விளங்கிய தளபதி ராதா தேசியத் தலைவரினால் இனங்காணப்பட்ட மற்றுமொரு சிறந்த தளபதியாகும், விடுதலைப் புலிகளின் ஐந்தாவது பாசறையில் பயிற்றுனராக பணியாற்றிய தளபதி ராதா தேசியத் தலைவரினால் மிகவும் விரும்பப்பட்டவர்களில் ஒருவராகவிருந்தார்.மன்னார் மாவட்டத்தில் தளபதி ராதா அவர்களின் தாக்குதல் பணிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மேலும் ஒரு பலமான நிலையை உருவாக்கிக்கொடுத்தன. அமைதியும்,ஆற்றலும் நிறைந்த தளபதி ராதா அவர்களிடமிருந்து பல விடயங்களைக் கற்றுக்கொண்ட தளபதி பானு அவர்கள்,தளபதி ராதா அவர்கள் யாழ்மாவட்ட தளபதியாக தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்ட வேளையில் அவருடன் தான் பிறந்த மண்ணுக்கு பயணமானார்.அங்கும் தளபதி ராதா அவர்களின் தலைமையில் சிங்கள இராணுவத்தினருக்கெதிரான தாக்குதல்களில் பங்குகொண்டார். முகாமுக்குள் முடக்கி வைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவத்தினரின் முன்னேற்ற நடவடிக்கைகளை தளபதி ராதா அவர்களின் தலைமையில் முன்னின்று தடுத்து ராதா அவர்களின் தாக்குதல் போராளிகளில் முதன்மைப் போராளியாக மாறியிருந்தார். யாழ்ப்பாணம் கட்டுவன் என்ற ஊரில் முன்னேறிய சிங்களப் படையினரை தடுத்து தாக்கும் பணியில் நடந்த சண்டையில் போராளிகளை தளத்திற்கு அனுப்பிவிட்டு திரும்பும் வேளையில் தளபதி ராதா தாக்குதலில் வீரச்சாவடைந்தார். வரலாற்றுக் கடமையைச் செய்வதற்காக,வரலாறு உருவாக்கிய தளபதிகள்,தங்கள் வீரச்சாவு வரை விழி மூடாது விடுதலைக்காக உழைத்தனர்.தங்கள் பாதம் பதிந்த தாய் மண்ணில் இறுதிவரை பயணித்தனர். 1987 ம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினருடனான போர் மூண்டது. தேசியத் தலைவர் அவர்கள் மணலாறு சென்றார். தேசியத் தலைவரின் அழைப்பின் பேரில் மணலாறு சென்ற தளபதி பானு தலைவர் அவர்களின் பாதுகாப்புப் படைப்பிரிவில் பணியாற்றினார்.மணலாற்றில் நடந்த பல தாக்குதல்களில் ஈடுபட்டு தலைவர் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட தளபதிகளில் ஒருவரானார். மன்னார் மாவட்டத் தளபதியாக பானு தலைவரின் கட்டளைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இக் காலத்தில் மன்னார் மாவட்ட போராளிகள் குழம்பிப் போயிருந்தனர்.வழிநடத்தல் ஒழுங்கின்றி சிதறிப் போயிருந்தனர்.தளபதி பானு அவர்களின் மன்னார் வருகையைத் தொடர்ந்து மன்னாரில் போர் எழுச்சி மீண்டும் புத்துயிர் பெற்றது.போராளிகளை ஒன்றுபடுத்தினார்.புதிய போராளிகளை இணைத்து பயிற்சிப் பாசறையை ஆரம்பித்தார். நூற்றுக்கு மேற்பட்டவர்களை போராளிகளாக உருவாக்கி தலைவரின் பாதுகாப்புப் படைப்பிரிவுக்கும் அனுப்பி வைத்தார்.பானு அவர்கள் முதலில் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டதும் விடுதலைக்காக முதல் களமாடிய மன்னார் மாவட்டத்தில் தான் என்பதை நினைவு கூர்வது பொருத்தமானது.ஏனெனில் மன்னார் போராளிகளையும்,மக்களையும் மிகவும் நெஞ்சார நேசித்தார்.அக்காலத்தில் தான் பிறந்த யாழ் மண்ணை விட மன்னார் மண் தளபதி பானுவுக்கு மிகவும் பரீட்சியமானது. களத்தில் அனைத்தும் தெரிந்த தளபதியாக பானு காணப்பட்டார்.இயக்கத்தின் பாசறைகளில் தேவையான அனைத்து உபகரண அமைப்புக்களையும்,மின்சார இணைப்புக்களையும் முன்னின்று செய்து தளபதிக்குரிய முன்மாதிரியை வெளிப்படுத்தினர். தளத்தில் , களத்தில் தளபதி பானு தலைசிறந்த போராளியாக தென்பட்டார்.ஆரம்ப காலத்தில் நீண்ட காலம் மன்னாரில் பணியாற்றி மன்னார் மக்களின் பாசத்திற்குரியவரானார். மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறமாக அமைந்துள்ள வயலும்,காடும், கடலும் ஒன்றாக பிணைந்து இருக்கின்ற வட்டமாக முள்ளிக்குளம் இருக்கின்றது. மன்னார் மாவட்டத் தளபதியாக பானு பணியிலிருந்த வேளையில் இந்தியப் படையினரின் ஆதரவோடு இயங்கிய தமிழ்த் தேசத்துரோகக்கும்பல் ( PLOT ) முள்ளிக்குளத்தில் தங்கியிருந்தனர்.இங்கு 25 .11 .1984 அன்று யாழ்ப்பாணம் சுழிபுரம் என்னுமிடத்தில் சுவரொட்டிகளை ஓட்டுவதற்காக சென்றிருந்த விடுதலைப் புலிகளான புவி , தேவன் ,ஈஸ்வரன் ,சின்னச்சிவா,சிவா ,சிவம், சீலன் ஆகியோரை படுகொலைசெய்த சங்கிலி தலைமையிலான குழுவினர் தங்கி மேலும் கொலைகள், காசு பறிப்பு கொள்ளை ,என்பவற்றில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை தாக்கியழிப்பதற்காக 1990 .01 .01 அன்று கடல் வழியாக தரையிறங்கிய விடுதலைப் புலிகள் போராளிகளுக்கு தளபதி பானு தலைமை தாங்கியிருந்தார்.இத் தாக்குதலில் தேசத்துரோகக் கும்பல் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் மேஜர் அகத்தியர் உட்பட்ட 10 போராளிகள் வீரச்சாவடைந்தனர். தளபதி பானு விழுப்புண் அடைந்த நிலையில் தேசியத் தலைவர் அவர்களின் ஆணையின்படி தாய்த் தமிழகத்துக்கு மருத்துவ சிகிச்சைக்காகச் சென்று குணமடைந்து திரும்பியிருந்தார். சுபன் மன்னார் மாவட்ட தளபதியாக பொறுப்பேற்றவுடன் தளபதி பானு அவர்கள் யாழ் மணியம் தோட்டத்தில் தங்கியிருந்த விடுதலைக்கான எதிர்ப்பாளர் குழுவினரை விரட்டியடிக்கும் நோக்கோடு தான் பிறந்த மண்ணில் மீண்டும் கால்பதித்து குறிப்பிட்ட பணியை நிறைவு செய்து 1990 ம் ஆண்டு தான் பிறந்த மண்ணின் தளபதியாக தேசியத் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார். பலம் பொருந்திய அமைப்பாகவும், படைத்துறை விரிவாக்கம் பெற்ற நிலையிலும்,நிருவாக்கக் கட்டுமானங்கள் உருவாக்கம் பெற்ற காலத்திலும் மக்கள் போராட்டமாக தேசிய விடுதலைப் போராட்டம் மாற்றியமைக்கப்பட்ட காலத்திலும் தளபதி பானு யாழ் மாவட்டத்தில் தளபதியாக பணியிலிருந்ததனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ் மாவட்ட செயலகத்தை திறம்பட,சிறப்பாக,தேசியத் தலைவர் பாராட்டுமளவுக்கு செய்து காட்டினார். யாழ் மண்ணின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ்ப் படையின் தேசியசீருடையில் பவனிவந்த பானு மக்கள், போராளிகள் எல்லோரிடமும் அன்பாகப் பழகி எல்லோருடைய அபிமானத்தையும் பெற்றிருந்தார்.படைத்துறையில் நிருவாகச் செயல்பாட்டில் சிறந்து விளங்கியவர், போராளிகள் தங்குகின்ற முகாம்கள்,பயிற்சி பெறுகின்ற பாசறைகள்,எதிரியை தடுத்து நிறுத்தும் தடை முகாம் அமைப்புக்கள் என்பவற்றில் தனித்திறமையை வெளிக்காட்டி தலைவரின் பலமான தளபதிகளில் ஒருவரானார். மூத்த போராளிகளை மதிக்கும் திறன் அவர்களுக்குரிய பணியை பகிர்ந்தளித்து சிறப்பான பயன்பாட்டை பெற்றுக்கொள்ளும் முறை என்பவற்றில் தளபதி பானு அவர்களின் நிருவாகத்திறன் வெளிப்படுத்தப்பட்டதை போராளிகளின் கருத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. யாழ் மாவட்டம்,தமிழீழத்தில் மக்கள் தொகை கூடிய மாவட்டமாகும் தமிழர்களின் தனிச் சிறப்புக்கு அடையாளமாகவும்,மண்வாசனையோடு தமிழரின் பண்பாடு மேலோங்கிய இடமாகும் இருக்கின்றது ஆனால் இம் மண்ணில் எம்மை ஆண்டாண்டு காலமாக அடிமைநிலையில் வைத்திருந்த அன்னிய ஆதிக்கத்தின் அடையாளமான யாழ் கோட்டை தீவுகளோடு இணைந்ததாக யாழ் தீபகற்பத்தில் அழிக்க முடியாதவாறு அமைக்கப்பட்டிருந்தன. இக் கோட்டை தமிழர்களின் தனித்துவத்தைப் பொறுத்தமட்டில் அவமானச்சின்னமாகும்.எம்மை அடக்கி ஒடுக்கியவர்கள் வாழ்ந்த இடமாகவும் இருப்பதனால் தமிழரின் அடிமை வரலாற்றிலிருந்து இது அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் விடுதலை வீரர்களின் நினைவாகவுமிருந்தது. ஆக்கிரமிப்பு முகமூடியை அகிம்சைப் போர்மூலம் கிழித்தெறிந்த தற்கொடைப் போராளி லெப்கேணல் திலீபன் 1987 ம் ஆண்டு அகிம்சைப் போர் மேடையில் கூறிய கருத்துக்களின்போது இக் கோட்டையைப் பற்றி பின்வருமாறு கூறினார் . அன்னியர்கள் மாறி மாறி நிலைகொண்டிருந்த யாழ் கோட்டையில் தமிழரின் தேசியக் கொடியான புலிக்கொடி பறக்கின்ற நாள்,தமிழ் மக்களின் விடுதலையின் ஆரம்ப நாள் என்று குறிப்பிட்டார். தீர்க்கதரிசனமாக திலீபன் கூறியவைகள் அமைந்ததுபோல் 1990 ம் ஆண்டு யூனி மாதம் யாழ்கோட்டை மீதான தாக்குதல் போர் தொடுக்கப்பட்டது. தேசியத் தலைவர் அவர்களின் திட்டமிடலில்,தளபதி பானு அவர்களின் வழிநடத்தலில்,மட்-அம்பாறைத் தளபதி லெப்கேணல் யோய் அவர்கள் ஆர் .பி. ஜி . உந்துகணைத் தாக்குதலைத் தொடுத்து யாழ் கோட்டை அழிப்பிற்கான விடுதலைப்போர் ஆரம்பிக்கப்பட்டது .உத்வேகத்துடன் போராளிகள் எழுச்சியுடன் தாக்குதலில் ஈடுபட்டனர் தமிழ் மக்களின் குரல்கள் போர்ப்பறையாகமாறி போராளிகளுக்கு புதுத்தென்பைக் கொடுத்தன. 107 நாள்கள் நடந்த கோட்டை அழிப்பிற்கான வரலாற்றுச்சமரைத்தொடந்து அடிமைச்சின்னமான யாழ்கோட்டை 1990 ம் ஆண்டு 09 ம் மாதம் 26 ம் நாள் தமிழர் படையிடம் வீழ்ந்தது,தமிழரின் வீரம் தரணியில் எழுந்தது. விடுதலை ஒளி எங்கும் பரவியது. தேசியத்தலைவரின் ஆணையில் தளபதி பானு தமிழீழத்தேசியக்கொடியை யாழ் கோட்டையில் ஏற்றி, வரலாற்றுத் தளபதிகளில் ஒருவராக யாழ் மண்ணில் உயர்ந்து நின்றார். அதற்குப் பிறகு யாழ் கோட்டையை அழித்து அகற்றும்பணியை தமிழ் மக்கள் ஆரம்பித்தனர். 1985 ம் ஆண்டு காலப்பகுதியில் கோட்டையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படை தமிழர் ஊருக்குள் முன்னேறுவதை முதன்முதலில் தடுத்து நிறுத்தி கோட்டைக்குள் முடக்கி வைத்தவர் தளபதி கேணல் கிட்டு, இதே கோட்டையை விடுதலைப் புலிகள் வீழ்த்திக்கைப்பற்றியபோது கோட்டையில் புலிக்கொடியை ஏற்றிப்பறக்கவிட்டவர் தளபதி பானு என்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் அழிக்கமுடியாத வரலாற்றுப் பதிவாகும். தேசியத் தலைவர் அவர்களின் ஆணையின்படி,1991 ம் ஆண்டு காலப்பகுதியில் தேசியத் தலைவர் அவர்களின் பாதுகாப்புப் படைப்பிரிவில் பணியிலிருந்த லெப் கேணல் ஜோய், மேஜர் வினோத், லெப் கேணல் விஜயகாந்த் போன்றவர்கள் மட்-அம்பாறை மாவட்டத்திற்கு அனுப்பப்பட்ட வேளையில் இவர்களுடைய படைத்துறை ஆலோசகராக தளபதி பானு அவர்களும் உடன் சென்றார். இவர்களுடைய வருகையைத் தொடர்ந்து மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் சிங்கள இராணுவத்தினருக் கெதிரான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப் பட்டன.ஒரு நாள் ஒரு சிங்கள இராணுவத்தினன் என்றரீதியில் தொடராக சிங்களப் படையினர் அழிக்கப்படுமளவுக்கு தாக்குதல்கள் உக்கிமடைந்தன.தளபதி பானு மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 மாவடி முன்மாரிக்கோட்டத்தில் (படுவான்கரை பிரதேசம் ) என்றழைக்கப்பட்ட தனது விடுதலைப் பணியை தொடந்தார். எப்போதும் எங்கும் சிறந்த ஒரு போராளியாக தன்னை நிலைநிறுத்தும் பானு வயலும்,வயல் சார்ந்த காடும் அமைந்துள்ள ஊர்களை உள்ளடக்கிய இக் கோட்டத்தில் மக்களோடு மக்களாக,போராளிகள் வேறுபட்டவர்கள் இல்லை,அவர்கள் மக்களிலிருந்து உருவானவர்கள் என்பதற்கமைய வேலைத்திட்டங்களை திட்டமிட்டு மேற்கொண்டார். எங்கு சென்றாலும் மக்களுடன் அன்பாகப் பழகி ஆதரவோடு செயல்படும் தளபதி பானுவுக்கு மக்களின் அபிமானம் விரைவில் கிடைத்துவிடும்.மன்னார், யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு அம்பாறை என கால்பதித்த இடங்கள் எல்லாம் தமிழ் மக்கள் தங்கள் தோள் கொடுத்து விடுதலைக்கு பலம் கொடுத்தனர் .ஒரு போராளியின் புனிதத் தன்மையே மக்கள் பானு அவர்களிடம் கண்டுகொண்டதனால் மக்களினால் மறக்க முடியாத தளபதிகளில் பானு அவர்களும் ஒருவரானார். மட்டக்களப்பின் வடபுலத்தில் 46 என அழைக்கப்பட்ட ஆண்டான்குளம் ( வாகரை ) கோட்டத்திற்கு பானு அவர்களின் அடுத்த பயணம் அமைந்திருந்தது.இயற்கை எழில் கொஞ்சும், மகாவலி கங்கை ஊடறுத்து ஓடுகின்ற,தேனும், பாலும் பழமும் மலிந்து கிடக்கின்ற, ஆறும் கடலும் தொட்டு நிற்கின்ற அழகிய ஊர்கள் அடுத்து ,அடுத்ததாக நீண்ட நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ளடங்கியிருக்கின்ற இக்கோட்டம் தமிழரின் பாரம்பரிய தாயகத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகும். பானு அவர்கள் ஆண்டான்குளம் கோட்டத்தில் விடுதலைக்கான பணியிலிருந்த போது அவ்வூர்களில் வாழ்ந்த மக்களுடன் மிகுந்த பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டார்.மிகக் குறுகிய காலத்தில் அம்மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட தளபதிகளில் உள்ளடங்கப்பட்டிருந்தார். தமிழரின் பூர்வீகக் குடிகளான இம்மக்கள் தாங்கள் வாழ்ந்த பாரம்பரியத் தாயகப் பூமியை ஆழமாக நேசித்தனர்.இதனால் என்றும் இம் மண்ணை விட்டு வெளியேறி வாழ்வதற்கு விருப்பமில்லாமல் இருந்தனர்.இம் மக்களின் இவ்வாறான பற்று தளபதி பானு அவர்களை மிகவும் கவர்ந்திருந்தது.இதனால் மக்களோடு மக்களாக இக் கோட்டத்தில் தனது விடுதலைக்கான பணியை மிகவும் மகிழ்ச்சிகரமாக மேற்கொண்டார்.தமிழீழத்தில் வளர்ச்சியடைந்த ஊர்கள் பொருண்மிய மேம்பாடடைந்த மக்கள் இருந்த போதும் வாகரையண்டிய ஊர்களில் வாழ்ந்த மக்கள் இயற்கையோடு ஒன்றித்து தமிழர் பண்பாட்டோடு வாழ்ந்தது,தளபதி பானு அவர்களின் மனதில் உயர்ந்த இடத்தில் இம் மக்களை வைத்து பார்க்கமுடிந்தது. தனது இறுதிக்காலம் வரையும் இவ்வுறவுகளை எண்ணி தனது போராளி நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதை குறிப்பிட்ட போராளிகள் மூலமாக அறியமுடிந்தது. போராளி என்பவன் எதற்காக தான் போராளியானான் என்பதைப் பொறுத்து வாழ்க்கை அமைந்து விடுகின்றது. உண்மையான போராளி தான்சார்ந்த இனத்தின் விடுதலையை கையில் எடுத்தபின் இனத்தின் மீது கொண்ட பற்றுக்காரணமாக உறவுகளோடு பிரிக்கமுடியாத உறவினை உணர்த்தும் உன்னதமான போராளியாக தன்னை மாற்றிக்கொள்ளுகின்றான். இறுதிவரை இனப்பற்றோடு வாழ்ந்து தனது இறுதிக்காலத்தை நிறைவு செய்கின்றான்.இவ்வாறானவர்களில் ஒருவராகத்தான் தளபதி பானு அவர்களை வரலாற்றில் பதிவு செய்கின்றோம். 1992 ம் ஆண்டு காலப்பகுதில் சிங்கள இராணுவத்தினருக்கான முக்கிய இரண்டு தாக்குதல்களை வாகரை கோட்டத்தில் தங்கியிருந்த தளபதி பானு மிகவும் திட்டமிட்டு,உணர்வுமிக்க போராளிகளுடன் இணைந்து வெற்றிகரமாக மேற்கொண்டார். தமிழீழத்தின் தலைநகர்,தமிழரின் பாரம்பரியத்தை,நிலைநிறுத்தி கொண்டிருக்கின்ற,இயற்கைத் துறைமுகத்தோடு இணைந்ததாக தமிழீழத்தின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் கோட்டத்தில் கல்லாறு என்ற ஊரின் அருகாமையில் சிங்கள இராணுவத்தினரை வழிமறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இத் தாக்குதலில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டும், போர்க்கருவிகளும் கைப்பற்றப்பட்டன.போராளிகளும் வீரச்சாவடைந்தனர். அடுத்த தாக்குதல் நாவலடி வெருகல் நெடுஞ்சாலையில் பால்சேனை என்ற கடற்கரை ஊரில் குறுகியகால இடைவெளியில் போராளிகள் ஒருங்கிணைக்கப்பட்டு,பானு அவர்களின் கட்டளையில் வீரத்துடன் எழுந்த விடுதலைப் புலிப்போராளிகள் ஏழு மைல்களுக்கு அப்பால் அமைந்திருந்த வாகரை சிங்களப் படைமுகாம் வரை படையினரை விரட்டியடித்தனர். தமிழர் படை சீற்றத்தால் சிங்களப் படை சிதறி ஓடிய வரலாற்று நிகழ்வை எமது தாய் மண்ணில் அன்று நாம் பார்த்தோம். வன்னியிலிருந்து கடல் வழியாக வந்த விடுதலைப் புலிப் போராளிகள் அதிகாலை வேளை தரையிறங்கி பால்சேனைக் கடற்கரையில் இருந்தபோது வாகரை ஊரில் நிலை கொண்டிருந்த சிங்கள இராணுவத்தினர் நடு இரவு நேரத்திலிருந்து முன்னேறி குறிப்பிட்ட கடற்கரையில் போராளிகள் மீது தாக்குதல் நடத்திய வேளையில் தளபதி பானு அவர்கள் கதிரவெளி ஊரையண்டிய காட்டுப்பகுதியில் போராளிகளின் தளத்தில் தங்கியிருந்தார்.செய்தி யறிந்து படையணியுடன் குறித்த இடம் விரைந்து சிங்கள இராணுவத்தினர் மீது ஓட ஓட விரட்டியடித்து வாகரை வரை தாக்குதல் நடத்தினர்.இத் தாக்குதலில் 20 க்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டு,போர்க் கருவிகளும் கைப்பற்றப்பட்டன.லெப்கேணல் பாலேந்திரா உட்பட்ட முன்னணி இளந் தளபதிகள், தளபதி பானு அவர்களுக்கு துணையாக நின்று களமாடினர். மடடக்களப்பு மண்ணில், மண்ணின் வாசனையோடு,மக்களோடு ஒன்றித்து, ,உறவாடி விடுதலைக்காய் களமாடிய தளபதி பானு தேசியத் தலைவரின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு – அம்பாறை படையணி வட தமிழீழம் சென்ற போது அவர்களோடு இணைந்ததாக மீண்டும் யாழ் மண்ணில் கால் ஊன்றினார். மட்டக்களப்பு மக்களையும் போராளிகளையும் அன்பாக நேசித்தவர் அந்தப் போராளிகளோடு இணைந்திருந்து யாழ் மண்ணில் போர் நடவடிக்கையில் ஈடுபட விரும்பி தேசியத் தலைவர் அவர்களுக்கு விரிவான கடிதமொன்றை அனுப்பி இருந்தார். மக்களையும்,அவர்களுடைய இனப்பற்று,விடுதலைப்பற்று,மண்பற்று போராளிகளின் தன்னலமற்ற தமிழீழத் தாய் நாட்டுப்பற்று என்பவற்றையும்,வயலோடு சார்ந்த ஊர்களில் வாழ்கின்றமக்களின் வாழ்க்கைத் தரம் பற்றியும் தனது மடலில் குறிப்பிட்டியிருந்தார். ஒரு சிறந்த போராளியின் எண்ணங்களில் நிறைந்திருக்க வேண்டிய மக்களின் விடுதலை சார்ந்த அனைத்தும் தளபதி பானு அவர்களிடம் இருந்ததை தலைவர் அவர்கள் உள்வாங்கி மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட படையணியோடு செயலாற்ற அனுமதித்தார்.போராளிகளோடு,போராளியாக இருந்து அவர்களுக்கான வசதிகளை மேம் படுத்தி மிகவும் தீவிரமாக படையணி மாற்றமடைவதற்கும்,எதிர் காலத்தில் சாதிப்பதற்கும் பானு அவர்கள் காரணமாக விருந்தார் என்பதை மாவட்ட போராளிகள் கூறக்கேட்டிருக்கின்றோம் எந்தவொரு நாட்டிலும்,எந்தவொரு இனத்திலும் விடுதலைப் போராட்ட காலத்தில் நடத்தப்படாத சமர்கள் தமிழீழத்தில் நடந்தேறியுள்ளன.இந்த வகையில் தமிழீழத்தில் முதல் யாழ்கோட்டைத்தளம் புலிகளிடம் வீழ்ச்சியடைந்த வரலாற்றுச் சமரைத் தொடர்ந்து 1991 .11 .12 அன்று ஆகாயம்,கடல் வெளிச்சமர் ஆணையிறவில் எமது தேசியவிடுதலை இயக்கத்தினால் மேற்கொள்ளபட்டது. அடுத்தசமர் வட தமிழீழத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எமது வரலாற்றை நிலை நிறுத்துகின்ற பூநகரி சிங்களப்படைத்தளம் மீது மேற் கொள்ளப்பட்டது. இந்த வரலாற்றுச்சமருக்கு “தவளைப் பாய்ச்சல்“ எனத் தேசியத் தலைவரால் பெயர் சூட்டப்பட்டது.இச் சமரில் தமிழீழத்தில் எல்லாப் பகுதிகளிலிருந்தும் படையணிகள் வரவழைக்கப்பட்டிருந்தன.மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட பெரியதோர் படையணி,மன்னார் படையணி,மணலாறு படையணி, யாழ்ப் படையணி, வன்னிப்படையணி,மகளிர் படையணி,இதனோடு இணைந்ததாக கடல் புலிகள் மற்றும் பின்தள வேலைகளுக்காக அரசியல் போராளிகள் நிதித்துறைப் போராளிகள் என அனைவரும் அணிதிரண்டு தேசியத் தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் தளபதி பொட்டம்மான் அவர்களின் ஒருங்கிணைப்பில்,கடல் புலிகளை தளபதி சூசை வழிநடத்த, தரைப்புலிகளை தளபதி சொர்ணம் வழி நடத்த, முன்னணித் தளபதிகள் இணைப்புடன் இச்சமர் வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டது. மடக்களப்பு – அம்பாறை பெரியதோர் படையணியின் நிருவாக ஒழுங்கமைப்பை மேற் கொண்டவாறு தளபதி பானு தாக்குதல் நடவடிக்கைகளில் முழு வீச்சாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இச் சமரின் மூலம் மரபுவழிப் போர்முறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு படி மேலுயுயர்ந்து தமிழரின் போர் ஆற்றலுக்கு ஒரு முகவரியை உலகத்தில் பதிவுசெய்தனர். இச் சமரில் பங்கெடுத்த ஒவ்வொரு தளபதியும் தலைவரினால் போரியலில் வார்த்தெடுக்கப்பட்ட வல்லமையுள்ளவர்களாக இருந்தனர்.இச் சமரில் களமாடிய மணலாற்று மாவட்டத் தளபதி லெப்கேணல் அன்பு, லெப்கேணல் குணா உட்பட பல போராளிகள் வீரச்சாவடைந்தனர். பெறுமதி மிக்க போர் உபகரணங்கள் உட்பட போர்க்கருவிகள் தமிழர் மண்ணில் ஆக்கிரமிப்புப் படையாக நிலைகொண்டிருந்த சிங்களப் படையினரிடமிருந்து கைப்பற்றப் பட்டன. இச்சமரினைத் தொடர்ந்து தளபதி பானு தேசியத் தலைவர் அவர்களினால் படைத்துறை அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது படைத்துறை அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி தேசியத் தலைவரால்,ஆரம்பிக்கப்பட்டபோது அதன் பொறுப்பாளராக லெப் கேணல் ராஜன் நியமிக்கப்பட்டார். தேசியத் தலைவரின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும்,இயக்கத்தின் மீதும் விடுதலையின் மீதும் அளவற்ற பற்று வைத்திருந்த லெப் கேணல் ராஜன் படைத்துறை அதிகாரிகளாக போராளிகளை பயிற்றுவிப்பதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டது பொருத்தமான ஒன்றாக அன்று கருதப்பட்டது. நிருவாகத்திலும்,திட்டமிடலிலும் அதிக ஆற்றலை தேசியத்தலைவரினால் பெற்றுக்கொண்ட தளபதி பானு சிறந்த முறையில் அப்பணியை நிறைவு செய்து ஆற்றல் மிக்க இளந்தளபதிகளை போர்க் களத்திற்குப் பெற்றுக்கொடுத்தார். யாழ் தீபகற்பத்துடன் இணைக்கப்பட்டதாக தீவுகள் பல அமைந்ததுதான் யாழ் மாவட்டம்.பாக்கு நீரிணைக்குள் அமைந்துள்ள இத்தீவுகள் பார்பதற்கு மிக அழகாக காட்சியளித்து தமிழீழத்தின் இயற்கை வனப்புக்கு மேலும் சிறப்பைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றது.சிங்களத்தின் கோரப்பிடிக்குள் அகப்பட்டுக்கிடக்கும் இத் தீவுகளில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்ந்ததாக இன்றைய வரலாறு சொல்லவில்லை.தமிழீழத்தின் பிறபகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டபோதும் இத் தீவுகள் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்குள் இருந்துவந்தன. யாழ் கோட்டையை தொட்டதான நிலையில் அமைத்திருக்கின்ற மண்டைதீவில் தமிழர் வாழ்விடத்தில் சிங்களத்தின் படைத்தளமொன்று சிங்களக் கடல்படையின் உதவியோடு அமைக்கப்பட்டு இத் தீவு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.யாழ் கோட்டையைக் கைப்பற்றிய விடுதலைப்புலிகளின் அடுத்த இலக்கில் மண்டைதீவு சிங்களப் படைத்தளம் வீழ்த்தப்படுவதன்மூலம் தீவுகளை படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்று விடுதலைப் புலிகளின் எதிர்கால எண்ணமாகவிருந்தது. படைத்துறை அதிகாரிகள் பயிற்சிக் கல்லுரி தளபதியாக பானு பணியிலிருந்த வேளையில் தேசியத்தலைவரின் நெறிப்படுத்தலில் தளபதி சொர்ணம்,தளபதி சூசை ஆகியோரின் இணைப்புடன் தளபதி பானு அவர்களின் கட்டளையில் 1995 .06 . 28 அன்று அதிகாலை வேளையில் மண்டைதீவு படைத்தளம் கடற்புலிகளின் உதவியோடு தாக்கியளிக்கப்பட்டது.இத் தாக்குதலில் கடல் புலிகளின் அதிரடிப் பிரிவு ஒன்றுக்கு லெப்கேணல் சூட்டி தலைமையேற்றிருந்தார்.கடல் புலிகளின் தளபதி சூசை அவர்கள் இந்த அதிரடித் தாக்குதலுக்குரிய ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.படைக்கருவிகள் பல அள்ளப்பட்ட இத் தாக்குதல் வெற்றிகரமாக அமைந்தபோதும் இத் தாக்குதலில் லெப் கேணல் சூட்டி உட்பட எட்டு போராளிகள் வீரச் சாவடைந்தனர். ஒவ்வொரு தாக்குதலிலும்,தனிமுகவரி ஒன்றைப் பதிவு செய்த தளபதி பானு தேசியத் தலைவர் அவர்களுக்குப் பக்கபலமாகவும், தமிழரின் படைத்துறை விரிவாக்கத்துக்கு வலுச்சேர்த்தவராகவும் தனது விடுதலைப் பயணத்தைத் தொடந்தார். வரலாற்றில் இடம்பெற வேண்டுமென்றால் வரலாறு படைக்கவேண்டும்.இவ்வாறு வரலாறு படைத்தவர்கள்தான் எமது வீரமிகு தளபதிகள் என்பதுவும் அழிக்க முடியாத வரலாற்றுப் பதிவாகும். வன்னிப்பெருநிலத்தை நோக்கிய சிங்களப்படையின் ஜெயசிக்குரு தாக்குதலின் எதிர் சமரின்போது தலைவரின் ஒழுங்கமைப்புக்கு ஏற்றவாறு கிட்டு பிரங்கி படையணி உருவாக்கப்பட்டு அதற்கு பொறுப்பான தளபதியாக பானு அவர்கள் களத்தில் பணியாற்றினார்.ஒவ்வொரு பணியிலும்,உயர்ந்த நிலையில் சிறப்பாக செயலாற்றிய தளபதி பானு தமிழீழமெங்கும் களமாடிய காவிய நாயகர்களில் ஒருவராக தமிழர் வரலாற்றின் சிறப்பு மிக்க போர்க் காவிய படைப்புகளில் பதிவாகியுள்ளார். எமது தேசியத் தலைவர் சமர்களுக்கும்,தொடர் போர்களுக்கும் பெயர் சூட்டும் போது அதற்குள் பொதிந்துள்ள அர்த்தம் ஆயிரம் பலத்தை போராளிகளுக்குப் பெற்றுக்கொடுக்கும்.தமிழனின் பெருமையை தமிழோடு பறைசாற்றும், இந்தவகையில் ஆகாயம் கடல் வெளிச்சமர்,புலிப் பாய்ச்சல், தவளைப் பாய்ச்சல்,இதய பூமி, ஓயாத அலைகள் 1 ,2 ,3 போன்றவைகளை குறிப்பாகச் சொல்ல முடியும் ஓயாத அலைகள் 3 ன் ஒரு கட்டத்தின் போது கட்டளைத் தளபதியாக தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டதளபதி பானு தேசியத்தலைவரின் நெறிப்படுத்தலில், 40 ஆண்டுகளைக் கடந்தும் சிங்கள ஆக்கிரமிப்புக்குள் இருந்த ஆனையிறவு மண்ணை போராளிகளுடன் இணைந்து களமாடி, மீட்டெடுத்து சாதனை படைத்தார்.பல போராளிகள் சிந்திய செங்குருதியினால் நனைந்து சிவந்து கிடந்த மண்ணை மீட்டெடுத்த தளபதி பானு ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளிலும் ஒவ்வொரு வரலாற்றைப் பதிவு செய்தார். தமிழீழத்தின் கழுத்தை இறுக்கிப்பிடித்துக்கொண்டிருந்த ஆனையிறவு ஆக்கிரமிப்புத்தளம் எமது நிலத்தொடர்பை மறித்து வைத்திருந்தது. இத்தளம் கைப்பற்றப்பட்டதிலிருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரிய வரலாற்று வெற்றியை எமது தேசிய விடுதலை இயக்கம் பெற்றிருந்தது. 2000 .04 .02 ம் நாள் அன்று ஓயாத அலைகள் மூன்றின் வெற்றிநாளாக அமைந்தது.ஆனையிறவு மீட்கப்பட்டு எமது தேசியக் கொடியை தளபதி பானு ஏற்றிவைத்தார். எண்ணற்ற எமது போராளிகளின் அர்பணிப்புக்களுக்கு மத்தியில் 19 ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழரின் இழந்த தாயாகமீட்பில் இன்னோர் அத்தியாயத்தை எமது தேசிய விடுதலை இயக்கம் உருவாக்கியது. யாழ் கோட்டையைக் கைப்பற்றி புலிக்கொடியை ஏற்றியவன்.ஆனையிறவுச் சமரில் பல ஆண்டு காலம் சிங்களவன் காலில் மிதிபட்டுக்கிடந்த தமிழீழ மண்ணை மீட்டெடுத்து புலிக்கொடியை ஏற்றினான்.இவன் சாதனை வீரன், எமது முப்பாட்டன் சோழனின் தளபதிகள் போல் காலம் எமக்குத் தந்த தலைவன் கரிகாலன் தளபதிகளில் ஒருவன் தளபதி பானு எமது வரலாற்றை எம்மால் நினைத்துப் பார்க்க வைத்தவர்களில் ஒருவர் என்பது எமது விடுதலை வரலாற்றில் பதிவான ஒன்றாகும். 2001 ம் ஆண்டு நான்காம் மாதம் 25 ம் , 26 ம் , 27 ம் நாட்கள் தீச்சுவாலை முறியடிப்புச் சமரை முன்னின்று எதிர்கொண்ட தளபதிகளில் பானு அவர்களும் களமிறங்கினார்.போராளிகளின் முன்னேறிய பாய்ச்சல் எதிரியை புறமுதுகிட்டு ஓட வைத்தன.மீட்கப்படும் தமிழர் நிலங்களில் புலிக்கொடியை ஏற்றி,பறக்கவிடும் தளபதியாக பானு அவர்களை வரலாறு எமக்கு ஏற்படுத்தித்தந்தது. என்றும் பழைய நினைவுகளோடு தான் நேசித்த இடங்களையும்,மக்களையும் நினைவு கூருவது இறுதிவரை பானுவிடம் காணப்பட்ட,பற்றோடு அமைந்த குணங்களில் ஒன்றாகவிருந்தது. 2004 ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் சிறப்பு தளபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் ஆழிப் பேரலையின் அனத்தத்தினால் மட்டக்களப்பு கடற்கரை ஊர்கள் மிகவும் பாதிப்புக்கு உட்பட்டிருந்தது.தளபதி பானு தனது பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாது போராளிகளுடன் இணைந்து மக்களுக்கான சேவைகளை தன்னால் இயன்ற வரை செய்து அந்த மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கையிலும்,சிதைந்து போன பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முன்னின்று பணியாற்றினார். மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் வாகரை கோட்டத்தில் பானு அவர்கள் பணியிலிருந்த வேளையில் மக்களோடு பழகிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும்போது கண்கள் பனிக்க கதை சொல்வதை போராளிகள் எம்மிடம் கூறக்கேட்டிருக்கின்றோம்.அங்கு இருந்த போது தான் பாவித்த சவர்காரப் பெட்டியை உடைந்த போதும் காலம் கடந்தும் நினைவுக்காக பாதுகாத்து வைத்திருந்ததை போராளி ஒருவர் எம்மிடம் கூறிய போது அந்த மண்ணையும்,மக்களையும் இறுதிவரை அவரால் மறக்க முடியவில்லை என்பதற்கு அடையாளம்தான் இந்தபெட்டி என்றார்.உண்மையான ஒரு போராளிக்கு உணர்வான உறுதியான மக்களை என்றும் மறக்கமுடியாது என்பதற்கு தளபதி பானு அவர்கள் ஒரு உதரணமாகும். இதே போல் இன்றும் அம்மக்கள் தளபதி பானு அவர்களை நினைவு கூர்ந்து கதைப்பதை எண்ணி எமது மனம் நிறைவாக இருக்கின்றது.உண்மையான போராளிகளை மக்கள் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள். தமிழீழத்தின் இதய பூமியில் தனியரசு அமைத்து தமிழர்கள் தங்களை ஆட்சிசெய்து வாழ்ந்த வேளையில் உலகத்தின் சில நாடுகளின் உதவியோடு தமிழீழ மண்ணை முழுமையாக ஆக்கிரமிக்க சிங்கள அரசு தொடுத்த போரை மன்னார் பகுதியில் தடுத்து களமாடிய பானு இரண்டு வருடங்களாக நடந்த வரலாற்றுப் போரில் களமாடி எதிரியை அழித்தொழிப்பதில் முன்னணி தளபதிகளுடன்,தலைவரின் வழிநடத்தலில் முள்ளிவாய்க்கால் வரைத் தொடந்தார். சிங்கள அரசின் தகவலின்படி 40 ஆயிரத்திக்கு மேற்பட்ட சிங்கள இராணுவத்தினரை இழந்து தமிழர் தாயகத்தை முழுமையாக ஆக்கிரமித்த சிங்கள அரசின் உண்மையான தமிழின அழிப்பு நடவடிக்கையை உலகத்திற்கு வெளிப்படுத்துவண்ணமாக இப்போர் அமைந்திருந்தது. சில நாட்டின் ஆதரவோடும்,படைக்கல விநியோகத்தோடும் தமிழீழ மண் இறங்கிய சிங்கள ஆக்கிரமிப்புப் படையை எந்த நாட்டின் ஆதரவு மில்லாமல்,நீண்ட காலம் எதிர்த்துக் களமாடிய முதல் விடுதலை இயக்கம் என்ற வரலாற்றுப் பெருமையையும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்று தமிழரின் வரலாற்றில் உயர்ந்து நிற்கின்றார்கள். தளபதி பானு இறுதிக்களமாடிய முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற பழந்தமிழ் வரலாற்று ஊர். இக்காலத்தில் எழுச்சி கொண்ட தமிழினம் தாய்நாட்டை மீட்டெடுக்கும் புனிதப்போரில் இறுதிப்போர் கண்ட வரலாற்றுமண்,இந்தமண்ணில் சிங்கள எதிரியின் படைகள் சிதறடிக்கப்பட்டு, முற்றாக அழிக்கப்பட்ட சிறப்பான வரலாற்றுச் சமரைச் சந்தித்த எமது மூதாதையர்கள் குடிகொண்டிருந்த முல்லை மண்ணின் கடற்கரை ஊர். சோழன் கொண்டகப்பல்படை தேசியத் தலைவர் பிரபாகரன் கண்ட கடல்புலிகள் ஆண்ட எங்கள் கடலின் ஓரத்தில் அமைந்துள்ள சிவந்த மண். எமது தளபதிகள் நிமிர்ந்து நின்று,நேருக்குநேர்,எதிரியுடன் களமாடி நிமிர்ந்து விழ்ந்து தமிழரின் புறநானுற்று வீரத்தை மீண்டும் நினைவுபடுத்திய தமிழரின் பாரம்பரியமண்.தமிழ் உறவுகள் அழிக்கப்பட்டு,சிந்திய செங்குருதியால் நனைந்தமண். இந்த மண்ணில் எமது வீரத்தளபதி பிரிகேடியர் பானு அவர்களும் களமாடி விழ்ந்தார். நிமிர்ந்து நெஞ்சினை உயர்த்தி தாய்மண்ணின் வீரத்தை சிங்களத்திற்கும்,உலகத்திற்கும் தெரியப்படுத்தினார்.தமிழர்கள் கோழைகள் அல்ல,வீரம் செறிந்தவர்கள்,என்பதை ஒவ்வொரு தமிழனையும் உணரவைத்தனர் . தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு செயல்பாட்டு வடிவம் கொடுத்த தளபதிகளில் பானு அவர்களும் ஒருவராகவுள்ளார்.தேசியத் தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் தளபதி பானு கண்ட களங்கள்,வீரமிகு தாக்குதல்கள்,சாதனை மிகுந்த செயல்பாடுகள் என அடுக்கிக்கொண்டே போகமுடியும்.ஏனெனில் முள்ளிவாய்க்கால்வரை தனது விடுதலைக்கான பயணத்தைத் தொடர்ந்த தளபதி பானு தமிழர்களின் வரலாற்றில் வீரமிகு தளபதிகளில் ஒருவராக என்றும் தமிழர்களின் வாழ்க்கை வட்டத்தில் வலம்வந்துகொண்டிருப்பார். தளபதி பானு அவர்களை பெற்றதிலிருந்து பெற்றோர்கள் பெருமை கொள்ளுகின்றனர். இவரை பெற்றதிலிருந்து யாழ் அரியாலைமண் போராட்டவரலாற்றில் மேலும் சிறப்பான இடத்தில் உயர்ந்து நிற்கின்றது. தமிழீழத்தில் விடுதலைப் பற்றோடு வாழ்கின்ற மக்களின் நெஞ்சங்களில் இவருடைய நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும். உலகத்திற்கு வீரத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள் . “வீரம் என்றால் பிரபாகரன் என்று அர்த்தம் இது உலகத்தில் பதியப்பட்ட புதுத்தமிழ் அகராதி“ அடுத்த மாவீரர் தொடரில் …….. என்றும் எழுகதிர். ******** https://eelavarkural.wordpress.com/2012/05/16/brigadier-banu/
  18. குறிக்கோள் பொருண்மியத் தடை காரணமாக எமது மக்கள் தாங்கொணாச் சுமைகளைத் தாங்கி நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். எனினும், இந்தப் பெரும் பளுவின் விளைவாக, எமது மக்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்வும் ஏற்படத் தவறவில்லை. தடைகளால் விளைந்த பாதிப்பும், அதனால் எழுந்த பற்றாக்குறையும் அந்தப் பற்றாக்குறையால் பிறந்த தேவைகளும், ஒட்டு மொத்தத்தில் சுயசார்புப் பொருளாதாரத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எமது மக்களுக்கு நன்கு உணர்த்தின. தன்னிறைவான – தன்னில் தானே தங்கி நிற்கும் – பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது தேசம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம். மேதகு வே.பிரபாகரன், தேசியத்தலைவர் தமிழர்களுக்கான ஒரு வங்கி அமைப்பைத் தொடங்க வேண்டுமென்ற, எங்களுடைய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஒரு முன் முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்ற, தமிழர்களுக்கென்ற – ஒரு சிறப்பான முறையிலே தமிழ் மக்களுடைய பொருண்மியத்தை மேம்படுத்தக் கூடியதாக – அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடக் கூடியதாக ஒரு வைப்பகத்தை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணப்பாட்டை எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நீண்ட நாட்களாகக் கொண்டிருந்தார்கள். அதன் செயல் வடிவமே தமிழீழ வைப்பகத்தின் தோற்றம் ஆகும். திரு. செ.வ.தமிழேந்தி, நிதிப்பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப்புலிகள். தமிழீழ வைப்பகம். தமிழரின் சொத்து எனப் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கும் தமிழீழ வைப்பகம் இன்று தனது பத்தாவது ஆண்டில் கால் பதித்து நிற்கின்றது. தமிழ் மக்களின் பொருண்மிய வல்லமையை வலுப்படுத்த வேண்டும். அதற்காக வைப்பக அமைப்பொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற கருத்தை எமது தேசியத் தலைவர் அவர்கள் நீண்டகாலமாகக் கொண்டிருந்தார். இக்கருத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 23 ஆம் நாளில் தமிழீழ வைப்பகம் உதயமானது. தமிழ் மக்களின் அழிவுக்குள்ளான பொருளாதார இருப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதனூடாக தமிழ் மக்களின் காப்பகமாக இருக்க வேண்டும், என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் இது ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய உலக ஒழுங்கில் பொருள் வல்லமை எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதைக் காண்கின்றோம். உலக அரசியலைத் தீர்மானிக்கின்ற வலுவை பன்னாட்டு வைப்பகங்கள் கொண்டுள்ளன. தமிழ்த் தேசியத்தை உருவாக்கும் மூலவிசைகளில் ஒன்றாகத் தமிழர்களிற்கென வைப்பகம் ஒன்றை உருவாக்கும் எண்ணக்கரு தோற்றம் பெற்றது. இதன் விளைவே தமிழீழ வைப்பகம் ஆகும். எந்தவொரு தேசத்தைப் பொறுத்த வரையிலும் அங்குள்ள வங்கிகளில் உள்ள வாடிக்கையாளரின் வைப்புக்களிற்கு அந்நாட்டு அரசுகளே உத்தரவாதமளிக்கின்றன. அது போலவே தமிழீழ வைப்பகத்தின் வழமைதாரர்களது வைப்புக்களிற்குத் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் முழுமையான உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது. 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழீழ வைப்பகம் இன்று தனது பத்தாவது (10 ஆவது) ஆண்டில் தனது செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்கின்றது. இப்பத்தாண்டு காலத்தில் பல்வேறுபட்ட வைப்பகப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் எமது தேசத்தின் மேம்பாட்டிற்குத் தமிழீழ வைப்பகம் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது. தொடர்ந்தும் இப்பணியைச் சிறப்பாகச் செய்வதற்கு உறுதி பூண்டுள்ளோம். தமிழர்களின் சொத்தான தமிழீழ வைப்பகம் உறுதியான வளர்ச்சி காணுவதன் மூலம் தமிழ்த் தேசியத்தின் பொருண்மிய வல்லமையை தேசம் பெற அனைத்து மக்களும் எம்முடன் இணைந்து நடப்பார்கள் என நம்புகின்றோம். இதனையே “தமிழீழ வைப்பகம் தமிழரின் காப்பகம்” என்னும் தொலை நோக்குச் சிந்தனையூடாக வெளிப்படுத்துகின்றோம். திரு. ம.வீரத்தேவன், மேலாண்மைப் பணிப்பாளர், தமிழீழ வைப்பகத்தின் கிளைகள் கிளைகள் ஆரம்ப நாள் யாழ்ப்பாணம் 23-05-1994 கிளிநொச்சி 05-06-1995 நெல்லியடி 14-09-1995 முல்லைத்தீவு 14-05-1996 ஊரகக் கிளைகள் ஆரம்ப நாள் மாங்குளம் 07-07-1997 விசுவமடு 01-06-2001 புளியங்குளம் 24-07-2002 பளை 14-03-2003 முழங்காவில் 14-01-2004 பணிகள் நிலையான வைப்புகள் Fixed Deposits தேட்ட வைப்புகள் Savings Deposits நடைமுறைக் கணக்குகள் Current Accounts தேட்டச் சான்றிதழ்கள் Savings Certificates ஏழு நாள் அழைப்பு வைப்புகள் Seven Days call Deposits வெளிநாட்டு நாணய மாற்று Foreign Currency Exchange கடன்கள் Loans மேலதிக வரைவுகள் Overdrafts நகையடைவு Pawn Broking காசோலைக் கொள்வனவு Cheque Purchase Facilities வாடகைக் கொள்வனவு Hire Purchase நிலையான கட்டளைகள் Standing Orders பொதி பாதுகாப்புப் பணி Packet Custody Service நிலையான வைப்புத்திட்டங்கள் Fixed Deposit Schemes நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம் 24 மாத நிலையான வைப்பு 08.50 % 12 மாத நிலையான வைப்பு 08.00 % 06 மாத நிலையான வைப்பு 07.00 % 03 மாத நிலையான வைப்பு 06.00 % 24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 08.00 % 12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 % வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள் Foreign Fixed Deposit Schemes நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம் 24 மாத நிலையான வைப்பு 07.50 % 12 மாத நிலையான வைப்பு 07.00 % 24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 % 12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 % தாயகஒளி வதியாதோர் வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள் THAYAKAOLI Non-Resident Foreign Fixed Deposit Schemes நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம் 24 மாத நிலையான வைப்பு 07.50 % 12 மாத நிலையான வைப்பு 07.00 % 24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 % 12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 % தேட்ட வைப்புத்திட்டங்கள் Savings Deposit Schemes தேட்ட வைப்புத் திட்டங்கள் வட்டி வீதம் வளர்ந்தோர் தேட்ட வைப்புத்திட்டம் 06.00% சிறுவர் தேட்ட வைப்புத்திட்டம் 06.50% நல்லைத் தேட்டம் 06.00% நல்லைச் சிறுவர் தேட்டம் 06.50% சிறார் உண்டியல் திட்டம் 06.50% ஊற்றுக்கண் பெண்கள் தேட்ட வைப்புத்திட்டம் 06.00% அமுதம் சிறார் தேட்டம் 06.50% பணியாளர் காப்பு நயநிதித் திட்டம் 06.50% கடன் திட்டங்கள் Loan Schemes கடன் திட்டங்கள் வட்டி வீதம் நகையடைவுக் கடன் திட்டம் 18.00% வாணிபக் கடன் திட்டம் 16.00% மேம்பாட்டுக் கடன் திட்டம் வேளாண்மைக் கடன் திட்டம் 15.00% கடற்றொழில் கடன் திட்டம் 15.00% கைத்தொழில் கடன் திட்டம் 15.00% சுழற்சி முறையிலான வாணிபக் கடன் திட்டம் 23.00% சுயதொழில் முயற்சிக் கடன் திட்டம் 14.00% கதிரொளி மின்னாக்கித் தொகுதிக்கடன் திட்டம் 17.00% (Based on the data retrieved on Jan 08 2008 from http://www.bankoftamileelam.net) https://eelavarkural.wordpress.com/2019/11/23/bank-of-tamil-eelam-2/
  19. மே 18 என்பது தமிழர் வாழ்வியலில் மறக்கப்பட முடியாத ஒரு துயர நாள் தான், அதேநாளில் அதற்கு முன்னர் நிகழ்ந்தேறிய வரலாற்றுப்பதிவுகளை பிரட்டிப்பார்ப்பது பொருத்தமானதாக அமையும். அதன் ஒரு அங்கமான வன்னி ஊடகவரலாற்றில் தனி இடம் பெற்றிருந்த புலிகளின்குரல் தோற்றம் அது எதிர்கொண்ட சவால்கள் அதன் இறுதிப்பயணம் தொடர்பிலான மேலோட்டமான பார்வை, 21ஆம்நாள் நவம்பர் மாதம் 1990 ஆண்டு அன்;று புலிகளின் குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தொடங்கிவைக்கப்படுகின்றது.யாழ்குடாநாட்டினை முதன்மையாக கொண்டு அன்றைய காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன, யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிந்துவாழும் நிலையில் யாழ்ப்பாண கோட்டைக்கு அருகில் வைத்து பண்பலையில் 98 அதிர்வெண்யில் புலிகளின் குரல் வானொலி இயங்கிக்கொண்டிருக்கின்றது தமிழீழ விடுதலையினை சீர்குலைக்கும் நோக்கில் சில தீயசக்திகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும்,நாசகார வேலைகளுக்கு மத்தியிலும் புலிகளின் குரல் தனதுசெயற்பாட்டினை மக்கள் மத்தியில் முன்னெடுத்துசெல்கின்றது,அதாவது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைக்குரலாகவும், எதிரியின் பொய்மைக்கு எதிரான, உண்மைக்குரலாகவும், ஓங்கி ஒலிக்கவேண்டும் என்ற தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் விருப்பத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஊடாகமாக அன்று புலிகளின் குரல் காணப்படுகின்றது,தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை ஓடுக்க சிங்களஅரசு எத்தனையோ முயற்சிகள்மேற்கொண்டு தோல்வியையே கண்டுள்ளது., தமிழ்மக்களின் விடுதலையினை மக்களுக்கு தெழிவுபடுத்தும் நோக்கில் புலிகளின் குரல்வானொலியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஊடாக மக்களுக்கான கருத்துக்கள் முன்னெடுக்கப்படுகின்றுது,அந்தவகையில்தான் தமிழ்மக்களின் கலை கலாச்சாரத்தையும் தொன்மையினையும் வரலாறுகளையும் பன்னாடுகளின் வரலாறுகளையும் எடுத்துக்கூறும் பல்வேறு நிகழ்சிகள் வானொலியில் இடம்பெற்றது, இவ்வாறு யாழ்ப்பாணத்தை 1994 ஆம்ஆண்டு சூரியக்கதில் படைநடவடிக்கை மூலம் வல்வளைப்பு செய்த ஸ்ரீலங்காப் படையினர் அங்கிருந்த ஜந்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை ஒர்இரவில் வெளியேற்றினார்கள், இந்தவேளையில் மக்களிற்கான ஒர்ஊடகமாக புலிகளின் குரல் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது,ஒலிபரப்பு நிலையத்தினை இடம்பெயர்திக்கொண்டு ஓர்நாள்கூட இடைநிறுத்தாது பனைமரங்களிலும் பாரிய உயரமரங்களிலும் தனது கோபுர செயற்பாடுகளை மேற்கொண்டு இடம்பெயர்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கான உடகமா செயற்பட்டுக்கொண்டிருந்தவேளையில் யாழ்பாணத்தில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துசெயற்பாடுகளும் வன்னிக்கு மாற்றப்படுகின்றது இன்னிலையில் கிளிநொச்சிப்பகுதிக்கு புலிகளின் குரலின் நிறுவன செயற்பாடுகள் மாற்றப்படுகின்றன கிளிநொச்சிப்பகுதியில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த புலிகளின் குரல், ஸ்ரீலங்காப் படையினரின் வல்வளைப்புகாரணமாக மக்களும் வானொலியும் இடம்பெயர்ந்து மாங்குளம் பகுதியில் சிறிதுகாலம் இயங்குகின்றது, இவ்வாறு பல பொருட்கள் இழப்புக்கள் ஊடகத்திற்கான இலத்திரனியல் பொருட்கள் இழப்புக்களுக்கு மத்தியில் தான் புலிகளின் குரல் வானொலி மக்களுக்கான கருத்து ஊடகாமாக இடைவிடாது செயற்பட்டுக்கொண்டிருந்தது, இவ்வாறு பல்வேறு பட்டஇடர்களுக்கு மத்தியில் பலதடவைகள் வானொலியின் ஒலிபரப்பு சேவையின் தளத்தினை மாற்றிஅமைக்கப்படுகின்றது,இன்னிலையில் தான் ஒட்டிசுட்டான் கூழாமுறிப்பில் உள்ள உயரமான இடத்தில் தனது ஒலிபரப்பு நிலையத்தினை அமைத்து இயங்கிக்கொண்டிருந்தது,இருந்தும் இழப்புக்களை எதிர்கொண்டு இடைவிடாது மக்களுக்கு கருத்துசொல்லும் செயற்பாடுகளில் புலிகளின் குரல் வானொலிசெயற்பட்டுக்கொண்டிருக்கின்றது, சமாதானம் வரையான காலப்பகுதிகளில் பல்வேறு தாக்குதல்கள் புலிகளின்குரல் வானொலியினை நோக்கி நடத்தப்படுகின்றன. பத்திற்கும் மேற்பட்ட வான் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் அதன் பணி இடையறாது தொடர்ந்து நடைபெறுகிறது.சமாதான காலத்தில் புலிகளின்குரலின் வளர்ச்சியில் அடுத்த படிநிலையினை எட்டுகின்றது.இதில் பல்வேறு பட்ட வளர்சிகளை கொண்டு தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புலிகளின் குரல் வானொலி பண்பலையில் ஒலிபரப்பாகப்படுகின்றது, திருகோணமலையில் வெருகல் கல்லடி என்ற இடத்தில் மீள்ஒலிபரப்பு நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து கிழக்கிற்கான வானொலி செயற்பட்டுக்கொண்டிருக்கையில் ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாத செயல்கள் காரணமாக பணியினை இடைநிறுத்தி வன்னியில் இருந்துகொண்டு விரிவுபடுத்தப்பட்ட ஒலிபரப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது. 2005ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து புலிகளின் குரல் புலம்பெயர் தமிழ்மக்களும் கேட்க வேண்டும் அத்துடன் வளர்ந்து செல்லும் தொழில்நுட்ப வளர்சிக்கு ஏற்றால்போல் புலிகளின் குரல் வானொலியும் தன்னை வளர்த்துகொண்டு இணையத்தளத்தில் ஏறி உலகம் முழுக்க ஒலித்ததுடன் நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் உடனுக்குடன்பதிவேற்றம் செய்து கொண்டிருந்தது இந்நிலையில் விடுதலைப்புலிகளின் உத்தியோக பூர்வ வானொலியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அறிவிப்புக்கள் உள்ளிட்ட களமுனையில் எதிரிமீதான தாக்குதல்கள்,போராளிகளின் வீரச்சாவு என்பனவற்றை உறுதிப்பட மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கையில் வன்னியில் இருந்து தனது சேவையினை விரிவு படுத்தும்நோக்கில் கொக்காவில் பகுதியில் வானொலி ஒலிபரப்பு தளத்தினை அமைத்து செயற்பட்டுக்கொண்டிருக்கையில் 2006ஆம்ஆண்டு09 மாதம் 18 ஆம் திகதி புலிகளின் குரலின் கொக்காவில் ஒலிபரப்பு கோபுரம் உள்ளிட்ட ஒலிபரப்பு நிலையம் தகர்த்து அளிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதல் சம்பவம் புலிகளின் குரல் நிறுவனம் மீது நடத்தப்பட்ட பதினோராவது நேரடியான தாக்குதலாகும்.2007ஆம்ஆண்டு 11 ஆம்மாதம், 27 ஆம் நாள் மாவீரர்நாள் ஒலிபரப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. மாலை இடம்பெறும் தலைவர்கள் அவர்களின் மாவீரர்நாள் உரையினை தடுக்கும் நோக்கில் கிளிநொச்சி 115ஆம் கட்டைப் பகுதியில் அமைந்திருந்த வானொலியின் நடுவப்பணியகம் மீது தாக்குதல் கிபிர் விமானங்கள் மிக மோசமான தாக்குதலை நடத்துகின்றன. இந்த வான்தாக்குதலில் அறிவிப்பாளர் இசைவிழிசெம்பியன் பொறியியல்பகுதியினை சேர்ந்த சுரேஸ்லிம்பியோ, ஓட்டுநர் தர்மலிங்கம் புலிகளின் குரல் வானொலியின் பணியாளர்கள் நாட்டுப்பற்றாளர்களாக உயிரிழந்தார்கள். (இசைவிழி செம்பியனின் பிள்ளைகள் மூவரும் தந்தையாரோடு மே 18 இல் இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் இன்றுவரை அவர்கள் பற்றிய எந்தத் தகவலும் வெளித்தெரியாது) கிபிர் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் அதன் ஒலிபரப்பில் தடங்கல் ஏற்படவில்லை. குறித்த நேரத்தில் மாவீரர் நாள் உரை ஒலிபரப்பாகியது. இதன்பின்னான காலத்தில் எதிரியின் வல்வளைப்புகளுக்கு மத்தியில் கொக்காவில் பகுதியில் உள்ள ஒலிபரப்பு கோபுரத்தினை கழற்றி அங்கிருந்து வேறு பகுதிக்கு கொண்டு செல்வதற்கான பணியில் ஏனைய போராளிகளுடன்; ஈடுபட்டுக்கொண்டிருக்கையில், 12.09.2008 அன்று புலிகளின்குரல் போராளி லெப்.இசையரசன், நாட்டுப்பற்றாளர் விக்கினேஸ்வரன், ஆகியோர் உயிர் துறக்கின்றனர். பல்வேறு நெருக்கடிகளுக்கும் உயிரிழப்புக்களுக்கும் மத்தியியில் கிளிநொச்சியின் பலஇடங்களில் நகர்த்தப்பட்டு ஒலிபரப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு இடங்களிலும் பரந்தன் பகுதியில் இரண்டு இடங்களிலும் புலிகளின் குரலின் ஒலிபரப்புக்கள் ஸ்ரீலங்காப்படையின் அச்சுறுத்தல்கள் மாற்றப்பட்ட போதிலும் அதன் ஒலிபரப்பில் தடைகள் ஏற்படவில்லை. ஸ்ரீலங்காஅரசின் அச்சுறுத்தல்கள் காரணமாக மீண்டும் விசுவமடு தொட்டியடிப்பகுதிக்கு மாற்றப்பட்ட புலிகளின் குரல் அங்கிருந்துகொண்டு 2008ஆம்ஆண்டு மாவீரர் நாள் ஒலிபரப்பினை மேற்கொண்டு இருந்தது.. இன்நிலையில் 2008 ஆம் ஆண்டும் மாவீரர்நாள் உரை மக்களைச் சென்றடைய விடாது பரந்தனில் இருந்த புலிகளின் குரலின் ஒலிபரப்பு நிலையம் மீதும் ஸ்ரீலங்கா வான்படையால் தாக்குதல் நடத்தப்படுகின்றது. இவ்வாறு எதிரியின் பல்வேறு தாக்குதல்களுக்கு புலிகளின் குரல் வானொலியின் பொறுப்பாளரின் திட்டமிடலின் அடிப்படையில் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொள்கின்றது, வன்னிமீதான போர்நடவடிக்கை காரணமாக ஸ்ரீலங்காப்படையினர் தொடரான வல்வளைப்பினை மேற்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் மக்களுக்கு ஆறுதலாக புலிகளின்குரல் மட்டுமே செயற்பட்டது. விசுவமடுவில் இருந்து இடம்பெயர்ந்த வானொலி உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம், இரணைப்பாலை என்று நகர்ந்து இடைவிடாது இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு உறவுப்பாலமாக செயற்பட்டுக்கொண்டிருந்தது, மரங்களில் அன்ரனாக்கள் கட்டப்படும், அறிவிப்பு நடைபெறும் இடமும், செய்தி தொகுக்கும் இடமும் ஒரே இடமாகவே மாறிய நிலையையும் புலிகளின்குரல் எதிர்கொண்டது. ஒலிரப்பில் பாடல்கள் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்போது செய்தித் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படும், அறிவிப்பு இடம்பெறும் போது அந்த இடத்தில் அமைதி பேணப்பட முயற்சி செய்யப்பட்டாலும் போரின் ஒலி அந்த இடத்தினை வந்து சேருவதை தவிர்க்க முடியாது. இதனைவிடவும் புலிகளின் குரலின் ஒலிபரப்புக் கலையகமாக சிறிய வாகனங்களைப் பயன்படுத்திய நிகழ்வும் நிகழ்ந்தேறியது. வாகனத்தின் இருக்கைகள் சில அகற்றப்பட்டு ஒலிப்பதிவுக் கணிணிகள், ஒலிவாங்கிகள் என்பவற்றுடன் சிறிய ஒலிபரப்பு மற்றம் ஒலிப்பதிவுக் கலையகமாகவும் புலிகளின்குரல் வாகனங்கள் சிலவற்றைப் பயன்படுத்தியிருந்தது.இந்நிலையில் இறுதியில் இடைவிடதாது மக்களுக்கான கருத்துக்களையும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களையும் ஸ்ரீலங்காப்டையினரின் தாக்குதல்களின் உயிரிழந்த உறவுகளின் விபரங்களையும் மக்களுக்கும் பன்னாடுகளுக்கும் உடனக்குடன் தெரிவத்துக்கொண்டிருந்த புலிகளின் குரல் வானொலி இறுதியில் வலைஞர்மடப்பகுதியிலும், பின்பு முள்ளிவாய்கலில் மூன்றிற்கு மேற்பட்ட இடத்திலும் இடம்பெயர்ந்துகொண்டு தனது சேவையினை வழங்கியது. முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் புலிகளின்குரல் செயற்பட்டுக்கொண்டிருந்த போது நடைபெற்ற எறிகணைத் தாக்குதலின் போதே அதற்கு அருகாக நின்றிருந்த விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரயன், அரசியல் துறையைச் சேர்ந்த தியாகராஜா ஆகியோரும் வானொலி அறிவிப்பாளரான அந்தணனும் காயமடைகின்றனர். 2009ஆம்ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் தொடர்ந்தும் ஒலிபரப்பினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது. ஒலிவாங்கியின் ஊடாக இராணுவத் துப்பாக்கி வேட்டொலிச் சத்தங்கள் வானொலிகளில் கேட்கின்றன. துப்பாக்கிச் சன்னங்கள் ஒலிபரப்பு சாதனங்களைத் துளையிடுகின்றன. தொடர்ந்தும் பணிசெய்யமுடியாத நெருக்கடியில் வானொலிச் சாதனங்கள் ஆவணங்கள் அனைத்தும் தீ மூட்டி அழிக்கப்பட்டதுடன் புலிகளின்குரல் என்றொரு சாம்ராஜ்ஜம் முற்றுப்பெறுகிறது. புலிகளின்குரலை வழிநடத்தியவர் நா.தமிழன்பன் எண்பதுகளின் பிற்பகுதியில் தன்னை போராட்டத்துடன் இணைத்துக் கொண்டவர் அவர் ஜவான் என்ற பெயராலேயே நன்கு அறியப்பட்டவர். ஊடகத்துறையில் பல்துறை ஆற்றல் கொண்டவர் அவர் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்களின் புடம்போடலிலேயே வளர்ந்தவர். அதனால் கமெராக்களைக் கையாள்தல், பத்திரிகைத்துறையின் சகல நுணுக்கங்கள், வானொலியின் ஒலிபரப்பு தொழில்நுட்பம் முதல் கவிதையின் சந்தம் வரையில் அவர் கைதேர்ந்தவராகவே விளங்கினார். போரில் ஒரு காலை இழந்த அவரின் வேகமான செயற்பாட்டிற்கு ஈடுகொடுப்பதென்பது மிக கடினமானவிடயம், ஆனாலும் அவரால் உருவாக்கப்பட்ட அவரால் புடம்போடப்பட்ட பல ஊடககர்கள் இன்னமும் வௌ;வேறு பகுதிகளில் இருக்கிறார்கள். அனலொக் தொழில் நுட்பத்தில் இடம்பெற்ற புலிகளின்குரல் வானொலியை டிஜிற்றல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி இணையத்தளம் செய்மதியில் வெளிவரச் செய்தமை அவரது தனிப்பட்ட உழைப்பின் வெளிப்பாடே என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை வானொலியின் இறுதிக்கணம் வரையில் அதற்காக உழைத்த அவரும் புலிகளின்குரலுக்காக இறுதிவரை பணியாற்றிய தி.தவபாலனனும் (இறைவன்) இறுதி நாட்களில் காணாமல் போனார்கள்.. அவர்கள் பற்றிய தேடல் இன்னமும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றன.. https://eelavarkural.wordpress.com/2012/05/17/voice-of-tigers/
  20. ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே….இசைநெஞ்சே” …… இதுவொரு சினிமாப்பாடல். இந்தப்பாடல் போல பலரது நினைவுகளை பல பாடல்களும் அவர்கள் விரும்பிக் கேட்ட அல்லது விரும்பிப் பாடியவையும் நினைவுகளாய் தந்த ஞாபகங்கள் எல்லோருக்குமே இருக்கும். அந்த நினைவுகள் பலரது இழப்புகளை அவர்களது தியாகங்களை வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற கதைகள் ஆயிரம். அத்தகையதொரு நினைவைத் தந்து சென்ற ஒரு மாவீரனை நினைவு தருகிற பாடல் :- “வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் வயல் வெளிகள் மீது கேட்குமா-இது வல்லை வெளி தாண்டிப் போகுமா வயல் வெளிகள் மீது கேட்குமா” இந்தப்பாடல் எனக்கு அறிமுகமான காலம் இந்திய இராணுவகாலம். ஈழத்தில் இந்தியப்படைகள் ஆக்கிரமித்திருந்த காலங்களில் விடுதலைப்புலிப் போராளிகள் ஊர்களில் ஒவ்வொரு வீடுகளின் பிள்ளைகளாகவும் பிரியமானவர்களாகவும் அவர்களைக் காப்பாற்றிய கோவில்களாகவும் பல ஊர்கள் இருந்திருக்கிறது. அத்தகையதொரு காப்பிடமாக எனது ஊரும் இருந்திருக்கிறது. பனைமரக் கூடல்களிலும் தோட்டங்களில் பசுமைவிரித்த மறைவுகளிலும் போராளிகள் உறங்கிய காலங்களில் எங்கள் ஊருக்குள் வந்து எங்கள் ஊரின் பிள்ளையாக வாழ்ந்த கப்டன் றோய் என்ற மாவீரனை எங்களுக்கு ஞாபகமாய்த் தந்த பாடல் இது.இப்பாடல் தேனிசை செல்லப்பாவின் குரலில் பாடப்பட்டிருந்தது.ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தப்பாடல் எனக்குள் நினைவில் நிறுத்தியிருப்பது றோயண்ணாவின் குரலையே. அது 1989 – 1990 காலப்பகுதி. இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளே ஊர்களை ஆண்டவேளை. சயிக்கிள்களில் சாரம் கட்டிய புலிகள் உலாவிய காலமது. பெரும்பாலும் இரண்டு பேராகவே சயிக்கிளில் வருகிறவர்களின் கைகளில் இன்னொரு சாரத்தால் அல்லது உரப்பையால் மூடிமறைத்தபடியிருக்கும் துப்பாக்கி. உறக்கம் மறந்த விழிகளில் தெரிகிற பசிக்களைப்பும் நித்திரைக்களைப்பும் போக நம்பிக்கையான வீடுகளில் சிலமணிகள் உறங்கிவிடுகிற அந்த உறங்காத கண்களைக் காவல் காக்கிற வீடுகளில் அவர்கள் அப்போதைய கடவுளர்கள். ஒரு இரவு திடீரென நாய்கள் குரைக்க எங்கள் சமாதி கோவிலடி வீடுகளில் மெல்லிய அழுகைச் சத்தங்களும் ஆரவாரமுமாக இருந்தது. அம்மம்மாவோடு ஒட்டியிருந்த என்னை விட்டுவிட்டு அம்மம்மா கதவைத் திறந்து அடுத்தவளவில் இருந்த சின்னம்மா வீட்டை எட்டிப்பார்த்தா. அதற்கடுத்த அன்ரி வீட்டிலிருந்து அன்ரியின் பிள்ளைகள் அழுவது கேட்டது. அன்ரியும் பிள்ளைகளும் சின்ன அம்மம்மாவும் பாய்களோடு சின்னம்மா வீட்டுக்குள் வந்தார்கள். அன்று புதிதாக வந்திருந்த போராளிகளில் 20 பேர்வரையில் எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்து அன்றைய இரவு அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதி கேட்டார்கள். எப்போதுமே இறஞ்சி எதனையும் எங்கள் இனத்திடம் பெறமுடியாத நிலமை. அன்றும் அந்தப் போராளிகளின் கெஞ்சல் எதுவும் எடுபடாது போக கட்டாயமாக ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் குறித்த சில போராளிகள் புகுந்தார்கள்.திடீர் திடீரென வருகிற இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுவோமென்ற பயத்தில் அவர்களை ஏற்க மறுத்தவர்களின் கதைகளை உள்வாங்காமல் வெற்று நிலத்தில் படுக்கையை விரித்தார்கள். பின்வீட்டிலிருந்து அத்தை ஓடிவந்தா. காரணம் எங்கள் வீட்டுக்குள்ளும் 3 போராளிகள். 2 பேர் மலேரியாக் காச்சலோடு. அன்று பயத்தில் எல்லா வீடுகளும் சிவராத்திரி நித்திரை முளிப்பாகவே இருந்தது. காலமை போயிடுவார்கள் என்ற நினைப்பும் போய் அத்தையின் வீட்டில் மலேரியாவோடு இருந்த போராளிகளுக்கு அன்று பகல் 11 மணிவரையும் சுடுதண்ணீரும் குடுக்காமல் அத்தை விரதமிருந்தா. அன்று காலையில் குப்பிளான் சந்திக்கு தெற்காக இந்தியப்படைகள் சுற்றிவழைத்து தேடுதலில் ஈடுபட்டார்கள். வடக்குப்பக்கம் வந்தார்களானால் எல்லா வீடுகளும் சுற்றிவழைக்கப்பட்டாலென்ற பயம் எல்லாருக்கும். தம்பியவை எப்ப போவியள் ? இதுதான் அத்தையின் தொடர் கேள்வி. அப்போதான் உயர்ந்த மெல்லிய உருவமாக முதுகில் துப்பாக்கியைக் கொழுவியபடி வந்தார் றோயண்ணை. மலேரியாவில் இருந்த இருவருக்கும் குளிசை கொடுத்தார். அதற்கு மேல் அத்தை கல்லாயிருக்காமல் தேனீர் ஊற்றிக் கொடுத்து பாணும் வாங்கி வந்து குடுத்தா. இனி அவர்கள் எங்கள் பிள்ளைகள் என்ற நிலமைக்கு ஒவ்வொரு வீடும் தங்களை நம்பி இரவு அடாத்தாக புகுந்த போராளிகளை மறுநாள் உறவாக ஏற்றுக் கொண்டார்கள். அத்தோடு றவியண்ணாவும் (மாதகல் புலனாய்வுப்பிரிவு) வந்திருந்தார். றவியண்ணா 1990இல் விபத்தில் சாவடைந்தார். அன்று எங்கள் வீட்டில் காலடி வைத்த றோயல் என்ற போராளி எங்களுக்கு றோயண்ணாவாகினார். பாடக்கொப்பிகளில் தனது அழகான கையெழுத்தால் பெயர் எழுதிவிடுவார். தியாகி திலீபன் அவர்கள் சொல்லிச் சென்ற ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ போன்ற வசனங்கள் உட்பட பல போராளிகளின் நினைவுகள் தாங்கிய வசனங்களை ஓவியம் போல கொப்பிகளில் வரைந்து விடுவார். அயலில் உள்ள வீடுகளிற்கெல்லாம் போய்வருகிற நேரங்களில் எல்லாம் அந்தந்த வீட்டுப் பிள்ளைகளின் கொப்பிகளின் கடைசி அல்லது கடைசிக்கு முதல் பக்கத்தில் றோயண்ணாவின் கையெழுத்தில் ஏதாவதொரு வசனமாவது இருக்கும். அந்த வசனங்கள் எல்லாமே போராளியொருவனின் நினைவாக அல்லது அவனது நினைவுக்கல்லாக றோயண்ணா கீறிய ஓவியமாகவுமே அமைந்திருக்கும். றோயண்ணாவின் கையெழுத்தை எனது கொப்பிகளில் பார்த்துப் பார்த்து நானாகவே அந்த அழகான கையெழுத்தின் சாயலில் எனது எழுத்தை மாற்றி எழுதப்பழகினேன். ஓரளவு றோயண்ணாவின் எழுத்தா என மற்றவர்கள் கேட்கும்படி எனது கையெழுத்தினை மாற்றிக் கொண்டேன். கவிதைகள் மீது ஈடுபாடு கொண்ட றோயண்ணா தனது கவிதைகளையும் கிடைக்கிற கொப்பிகளில் எல்லாம் எழுதிவிடுவார். எனது சமூகக்கல்வி , தமிழ் கொப்பிகள் றோயண்ணாவின் கவிதைகளையும் தாங்கியிருக்கிறது. முதல் முதலில் இயக்கப்பாட்டு கேட்டது கூட றோயண்ணா கொண்டு வந்த களத்தில் கேட்கும் கானங்கள் ஒலிநாடாவில் தான். சுற்றிவர நின்ற இந்திய இராணுவத்தின் காதுகளுக்குக் கேட்காமல் களத்தில் கேட்கும் கானங்கள் பாடல்கள் எங்கள் மனங்களில் பதியமானதும் றோயண்ணாவினால்தான். இப்படி எங்கள் ஊரில் வாழ்ந்த எல்லாருக்குள்ளும் றோயண்ணாவின் ஞாபகம் எங்கோவொரு மூலையில் நிச்சயம் ஒட்டியிருக்கும். இந்திய இராணுவத்தின் கண்களுக்கால் தப்பித்து றோயண்ணாவும் அவருடன் வாழ்ந்த போராளிகள் பலருக்கும் அந்த நெருக்கடியான காலத்தில் கிடைத்த அனுபவங்கள் நிறைய. அத்தகைய ஒரு அனுபவத்தை றோயண்ணா ஒருமுறை சொல்லியிருந்தார்:- குப்பிளான் சந்தியிலிருந்து ஏழாலை செல்லும் வீதியில் முதலாவதாக பெரியசங்கக்கடையின் அருகால் வடக்காகப் போகிற சொக்கர் வளவுப்பிள்ளையார் கோவிலடிக்குக் கிட்டவான வீடொன்றில் நித்தியகல்யாணி மரங்கள் அதிகமாக இருந்தது. கோட்டார் மனைக்கால் சொக்கர்வளவுப் பிள்ளையார் பின் வீதியை அடைந்த றோயண்ணாவிற்கு அங்கே இந்திய இராணுவம் படுத்திருந்தது தெரியாது. திடீரென நிலமையை உணர்ந்த றோயண்ணாவிற்கு தப்பிக்க காப்பிடமாய் அமைந்தது அந்த வீடொன்றில் இருந்த நித்திய கல்யாணி மரமொன்றே. கையில் இருந்த தனது ஆயுதத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை. ஏதிரி கண்டுவிட்டால் தன்னை அழித்துக் கொள்ள சயனைட்டையும் தயாராக வைத்துக் கொண்டு இருந்தார். எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்த இந்திய இராணுவம் திடீரென மறைந்த றோயண்ணாவையே தேடிக் கொண்டிருக்க பகைவரே நினைக்காத வகையில் தனது காப்பிடத்தை ஒரு நித்தியகல்யாணிக் கூடலுக்குள் படுத்திருந்து அவதானித்துக் கொண்டிருந்தார்.இராணுவம் முழுமையாக ஊரைவிட்டு புன்னாலைக்கட்டுவன் முகாமுக்குப் போய்விட்டதாக உறுதியாகி வீதியில் ஆட்கள் நகரும் வரை 6 மணித்தியாலங்களுக்கு மேலாக நித்தியகல்யாணி மரத்தின் கீழ் படுத்திருந்து வெளியில் வந்த போதுதான் அந்த வீட்டு அன்ரி றோயண்ணாவைக் கண்டார். குடும்பத்தோடை செத்திருப்பம் தப்பீட்டம் என சொக்கர்வளவுப் பிள்ளையாரை வேண்டிய அந்த வீட்டு அன்ரி றோயண்ணாவுக்கு தேனிரும் உணவும் கொடுத்து அனுப்பி வைத்தார். எத்தனையோ இடர்களையும் சிரமங்களையும் தாங்கிய இந்திய இராணுவ காலம் முடிவுற்ற 1990. அப்போது விடுதலைப் புலிகளின் மகளீர் அணிக்கான போராளிகள் சேர்ப்பு றோயண்ணா மூலமே முதலில் எங்கள் ஊரில் தொடங்கியது. றோயண்ணாவும் அவரது தோழர்களும் இருக்கின்ற புளியடியில் வருகிற வாகனங்களில் ஏறிச்சென்ற ஏழாலை, மல்லாகம், சுன்னாகம் இருந்தெல்லாம் இயக்கத்தில் சேர வந்த பிள்ளைகளை போராளிகளாக்கியது றோயண்ணாவின் ஆழுமையும் முயற்சியுமே. அப்போது யாழ்நகர் பகுதி, கோண்டாவில், திருநெல்வேலி, நல்லூர் என விடுதலைப்புலிகளின் அலுவலகங்கள் உருவாகியிருந்தது. திடீரென ஒருநாள் எங்கள் ஊரிலிருந்த போராளிகள் காட்டுக்குப் போகப் போவதாகவும் புதிய போராளிகள் வரப்போவதாகவும் செய்தி வந்தது. செய்தி வந்த மறுநாள் மதியம் றோயண்ணா உட்பட அங்கிருந்த அனைவரும் எங்களைவிட்டு போய்விடப்போவதாக தயாராகினார்கள். ஒவ்வொரு வீடாக போய் நன்றி சொல்லி விடைபெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ‘அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி நெஞ்சை அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் உங்கள் அன்புக்கு புலிகள் நன்றி.’ அன்ரி வீட்டின் கிணற்றடியில் குளித்துக் கொண்டு பாடியது கேட்டது. அந்தக் குரல் வேறு யாருமல்ல எங்கள் நெஞ்சங்களில் நிறைந்த றோயண்ணாவே. எங்களைவிட்டுப் போகிற அவர்களின் பிரிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் அவர்கள் போய்விடப் போகிற நேரத்தை தள்ளிப்போட முடியாது நேரம் மாலையாகியது. அன்று எதையும் கதைக்க முடியாத மனநிலை எல்லோருக்கும். ஏதாவது எழுதித்தாங்கோ எனக் கொடுத்த கொப்பியின் பின் தாளில் இப்படித்தான் ஓவியம் போல சிவப்பு , நீல நிறங்களால் எழுதியிருந்தார். நான் சரியும் மண்ணில் நாளை பூ மலர்ந்து ஆடக் கூடும் தேனெடுக்கும் ஈக்கள் கூட்டம் தேடி வந்து பாடக் கூடும் எந்த நிலை வந்து சேருமோ-அதை இந்த விழி பார்க்க் கூடுமோ? நாளை தமிழ் ஈழ மண்ணில் நாங்கள் அரங்கேறக் கூடும் மாலை கொடியோடு எங்கள் மன்னன் சபை ஏறக் கூடும் இந்த நிலை வந்து சேருமோ-அதை எந்தன் விழி காணக் கூடுமோ….. எந்த நிலை வந்து சேருமோ-அதை இந்த விழி பார்க்க கூடுமோ? அடியில் அன்புடன் றோயண்ணா என தனது கையெழுத்தால் எழுதித்தந்தார். ஏற்கனவே என்னிடமிருந்த அந்தப் பாடலின் ஒலிநாடாவைத் திருப்பிக் கேட்க மறந்தாரோ தெரியாது நானும் சொல்லவில்லை. றோயண்ணாவின் ஞாபகமாய் கொடுக்காமல் வைத்துவிட்டேன். அவர்களை ஏற்றிப்போக வாகனம் வந்தது. றோயண்ணா போகும் போதும் எப்போதும் பாடுகிற „’வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் „’ பாடலைப் பாடிக்கொண்டே வெளிக்கிட்டார். எங்களோடிருந்த உறவுகளை இழந்தது போல றோயண்ணாவும் அவரோடு கூடப்போனவர்களும் ஊரைவிட்டுப்போன பின்னர் புதியவர்கள் வந்தார்கள். ஆனால் பிரிந்து போன பழையவர்களின் ஞாபகங்களைத் தருகிறவர்களாக அதே உறவு சொல்லிய அழைப்புகளோடு….! அவர்கள் தான் றோயண்ணா இப்போது நல்லூரடியில் ஒரு முகாமில் இருப்பதாகச் சொன்னார்கள். இந்த இடைவெளியில் சிலதடவைகள் றோயண்ணா எங்கள் ஊருக்கு வந்து போனார். பிறகு வரவேயில்லை. அதற்குள் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. 1990 யூன் 16 எனது பிறந்தநாளில் நாங்கள் மீண்டும்; இடம்பெயரத் தொடங்கினோம். எங்களோடு சிலகாலம் வரை வாழ்ந்து எங்கள் வீடுகளில் சகோதரர்களாக பிள்ளைகளாக வாழ்ந்தவர்களே எங்கள் ஊரையும் காக்கும் புனிதப்போரில் காவலரண் அமைத்து கடமையில் இருந்தார்கள். மீண்டும் றோயண்ணா வசாவிளான், கட்டுவன், குரும்பசிட்டி பகுதிகளில் கடமைக்கு வந்திருந்தார். பலாலியிலிருந்து முன்னேறிவரும் இராணுவத்தை எதிர்த்து சண்டையிடும் களவீரனாக மாறியிருந்தார். களங்களில் நிற்கின்றவர்களின் வாழ்வும் உத்தரவாதமில்லாதது. அவர்களுக்காக சாமிகளிடம் நேத்தி வைத்து அவர்கள் வாழ செய்த பிரார்த்தனைகளை அந்தச் சாமிகள் மட்டுமே அறியும். இப்போது றோயண்ணா சண்டைக்காரனாக…. 1990 தீபாவளி நாளில் இராணுவம் பலாலியிலிருந்து பெருமெடுப்பில் முன்னேறத் தொடங்கியது. றோயண்ணாவும் அவர்போன்ற பலநூறு போராளிகளும் இரவுபகல் பாராமல் அமைத்த தொடர் பதுங்கு குளிகளுக்கு பின்புறமாக இராணுவத்தினரின் துப்பாக்கிகள் இயங்கியது. சென்றியிருந்த போராளிகளைத் தாண்டி சில நூறுமீற்றர்கள் முன்னுக்கு வந்து உள்ளிருந்தவர்களை வளைத்ததில் பலர் காயமடைந்தார்கள் வீரச்சாவணைத்தார்கள். அத்தகைய பலருள் றோயண்ணாவும் கடும் காயமுற்று மானிப்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். றோய்க்கு காயமாம்…. செய்தி காற்றாய் றோயண்ணாவை நேசித்த எல்லோரையும் சென்றடைந்தது. மானிப்பாய் மருத்துவமனையில் சென்று பார்த்த போது றோயண்ணா பேச்சு மூச்சின்றிக் கிடந்தார். எங்கள் முன் உலாவிய அழகன் றோயண்ணாவின் அழகிய முகம் வெளுறியிருந்தது. உயர்ந்த அந்த உருவம் என்றும் கண்ணுக்குள் நிறைகிற சிரிப்பு எல்லாம் ஒடுங்கி ஒற்றைக்கட்டிலில் விழுந்து கிடந்தது. நாட்கள் செல்லச் செல்ல றோயண்ணா உயிர்தப்பும் நம்பிக்கையும் குறைந்து கொண்டு போனது. றோயண்ணா யாழ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது யாழ் மருத்துவமனைக்கு போராளிகளைப் பார்வையிட எல்லோரையும் புலிகள் அனுமதிப்பதில்லை. அவர்களது பாதுகாப்பு காரணங்களுக்காக வைத்தியசாலைக்கு எதிர் வீதியில் சற்றுத் தூரத்தில் அமைந்திருந்த அலுவலகத்தில் பதிவு செய்தே போக முடியும். பதிவுப் பிரச்சனையால் அடிக்கடி போக முடியாது. அம்மம்மாவையும் கூட்டிக்கொண்டு 4தடவை றோயண்ணாவை பார்த்திருக்கிறேன். 4வது முறை போனபோது றோயண்ணாவுக்கு படுக்கைப்புண் வந்துள்ளதாகச் சொன்னார்கள். அந்த முறை றோயண்ணாவின் ஒரு அண்ணன் றோயண்ணாவை பராமரித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் றோயண்ணா தங்கள் வீட்டின் கடைக்குட்டியென்றதையும் அவர்மீதான தங்கள் குடும்பத்தின் நம்பிக்கையையும் அந்த அண்ணா சொன்னார். வசதியான குடும்ப வாழ்வு உயர்தரம் வரையான படிப்பு மேற்கொண்ட படிப்பைத் தொடர்ந்திருந்தால் நிச்சயம் பல்கலைக்கழகம் போயிருக்க வேண்டிய றோயண்ணா தாயகக்கனவோடு போராளியாகி எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கேயோ பிறந்த எங்களோடு உறவாகி அன்று பேச்சின்றி மூச்சின்றி நினைவுகள் தவறிக் கிடந்ததைப் பார்க்க அழுகைதான் வந்தது. அம்மம்மா அந்த அண்ணாவிடம் றோயண்ணா பற்றி கதைத்துக் கொண்டிருந்தா. றோயண்ணாவின் தலைமாட்டில் நின்றபடி றோயண்ணா றோயண்ணா என அழைத்தேன். சின்ன அசைவு தெரிந்தது. ஆனால் கண்திறக்கவேயில்லை. கத்தியழ வேண்டும் போலிருந்தது. எனினும் உயிர் தப்புவாரென்றே உள் மனம் நம்பியது. பார்வையாளர்கள் நேரம் முடிந்து எல்லோரையும் வெளியேறும்படி அறிவித்தார்கள். அந்த இடத்தைவிட்டு அசையவே முடியாதிருந்தது. அம்மம்மா வரும் வழியெங்கும் றோயண்ணா பற்றியே சொல்லிக் கொண்டு வந்தா. றோயண்ணா அதிகம் பகலில் இருப்பது எங்கள் பிள்ளையார் தேரடிதான். அந்தப் பிள்ளையார் றோயண்ணா காப்பாற்றுவாரென அம்மம்மா நம்பினா. 5வது முறையாக றோயண்ணாவை பார்க்க தோழி மேனகாவோடு ஏழாலை களவாவோடை அம்மனிற்குச் செய்த அரிச்சனை விபூதியுடன் போய் அனுமதிக்கு பதிவு செய்யக் காத்திருந்த போது அங்கே பதிவு செய்யும் போராளி சொன்னான் றோயண்ணா மேலதிக மருத்துவத்திற்காக இந்தியா கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக. இந்தியாவிலிருந்து றோயண்ணா சுகமாகி வருவரென்ற நம்பிக்கையில் காத்திருந்தோம். 31.12.1990 இரவு புலிகளின் குரல் இரவுச்செய்தியில் கப்டன்.றோய் வீரமரணம் என்ற செய்தியை வாசித்தார்கள். மீண்டும் வருவாரென்ற நம்பிக்கை பொய்யாகி றோயண்ணா மாவீரனாகி….. இதேபோலொரு 31ம் திகதி பல நூறு போராளிகள் உலாவிய எங்கள் ஊருக்குள் மறக்கப்படாமல் நினைவுகளில் இருக்கிற குறிப்பிட்ட சில மறக்க முடியாதவர்களுள் றோயண்ணாவும் ஒருவராய்…. ஒவ்வொரு வருட முடிவிலும் றோயண்ணாவின் நினைவோடு முடிகிற வருடங்கள் இன்றோடு றோயண்ணாவின் நினைவுகள் சுமந்து 27வருடங்களைக் காலம் கெளரவப்படுத்தியிருக்கிறது. எல்லாமுமாய் எங்களின் வசந்தம் நீ (கவிதை)…… றோயைத் தெரியுமா ? உங்கடை ஊரில இருந்த பொடியன் ? அண்மையில் நண்பர் ஒருவர் கேட்டார். ஓம் ஏன் ? அந்த றோயை விரும்பின பிள்ளை இன்னும் கலியாணம் கட்டேல்ல இங்கைதான் இருக்கு போனமாதம் சந்திச்சனான் என்றார். அழகன் முருகனென்பார்கள் ஆனால் றோயண்ணாவின் அழகை முருகன் கூட பொறாமைப்படுவான். அத்தகைய அழகும் உயரமும் சுருள் முடியும் எல்லாரையும் கவர்கிற கதையும் ஓர் அழகனாய் எங்கள் ஊரில் உலவியவர். அந்த அழகன் பலரது நெஞ்சுக்குள் சின்னக் காதலாக அரும்பியிருந்ததை ஊரில் கேட்டிருக்கிறேன். இன்று றோயண்ணா இல்லாது போய் 27 ஆண்டுகள் நிறைவாகிறது. ஆனால் றோயண்ணாவின் காதலை இன்றுவரை கௌரவப்படுத்தித் தனது வாழ்வை தனிமையாகக் கழிக்கிற அந்த அக்கா மீதான மதிப்பு மேலுயர்கிறது. கப்டன் றோய் அவர்கள் உறங்கும் கல்லறை தமிழகத்தில் கொளத்தூர் அருகில் புலியூர் காட்டுப்பகுதியில் (மேட்டூர் பகுதி)………….. எங்களோடு எங்கள் ஊரோடு நினைவாகிப் போன றோயண்ணா 27வது வருட நினைவு நாளில் மீண்டும் உங்களை நினைக்கிறேன்…. வணங்குகிறேன்…. காலம் தோறும் பலர் வருவார்கள் சிலர் மட்டும் காலங்கள் பல கடந்தாலும் நினைவுகளோடும் உறவுகளோடும் வாழ்வார்கள்… றோயண்ணா இன்றும் எங்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்றும் உங்கள் முகமும் சிரிப்பும் நீங்கள் பாடுகிற வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் பாடலும் உங்கள் ஞாபகங்களைத் தந்தபடி… உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள்…. உங்கள் கனவுகள் நனவாகும் கனவோடு உங்கள் நினைவுநாளில்….. உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள் றோயண்ணா. நினைவுப்பகிர்வு:- சாந்தி ரமேஷ் வவுனியன் https://www.uyirpu.com/?p=8288

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.