Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 10/08/1992 பக்கம்: 1 கிழக்கில் 21 தமிழர் நேற்றுப் படுகொலை! புதுடில்லி. ஆக. 10 கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் தமிழ்க் கிராமவாசிகள் 21 பேர் படுகொலையுண்டனர். மேலும் 10 தமிழர்கள் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து மேல் விவரங்கள் கிடைக்கவில்லை என்று ஏஜென்ஸிச் செய்தி ஒன்று தெரிவித்ததாக இந்திய வானொலி நேற்றிரவு அறிவித்தது. (உ- எ) *****
  2. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 27/07/1992 பக்கம்: 1 மட்டக்களப்பில் ஊர்காவலர் தமிழர் மீது வன்முறைகள்: வீதியில் நடமாட முடியாதவாறு நிலைமை மோசம் கொழும்பு. ஜுலை 23 யாழ்ப்பாணம். ஜூலை 27 மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தமிழ் மக்கள் மீதான வன்முறைகளை முஸ்லிம் ஊர்காவல் படையினர் கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிக்கின்றன. தமிழ் மக்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலையில் உள்ளனர். ஏறாவூரில் பஸ் ஒன்றில் பயணம் செய்த 3 தமிழர்கள் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் கண்டபடி வெட்டப்பட்டு காயப்படுத்தப்பட்டனர் என்றும் - ஓட்டமாவடியில் 4 தமிழரும் காத்தான்குடிப் பகுதியில் ஒரு தமிழரும் ஊர்காவலர்களால் கத்தியால் வெட்டப்பட்டுக் காயப்படுத்தப்பட்டனர் என்றும் - அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் மட்டக்களப்பு, வாழைச்சேனை அகதி முகாமில் உள்ள தமிழ் மக்களை முஸ்லிம் ஊர்காவல் படையினர் தாக்கியுள்ளனர். அகதி முகாமில் உள்ளவர்கள் அச்சுறுத்தப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. *****
  3. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 23/07/1992 பக்கம்: 1 வாழைச் சேனையில் தமிழர் மீது தாக்குதல் கொழும்பு. ஜுலை 23 நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டியில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து நேற்று வாழைச்சேனையில் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் கலவரத்தில் இறங்கினார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழ் சாரதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கலவரத்தை அடக்க பொலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது இரண்டு முஸ்லிம்கன் கொல்லப்பட்டனர் என்று ஏஜென்சி செய்தி ஒன்று தெரிவித்தது. வாழைச்சேனயில் முஸ்லிம்கள் வீதியால் சென்ற தமிழர்களின் வாகனங்களை நோக்கி கற்களை வீசினார்கள் என்றும் அப்போதே தமிழ் சாரதி ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கல்வீச்சுக்கு உள்ளான இந்த வாகனத்தின் சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த இயலாது முன்னால் சென்று கொண்டிருந்த பொலீஸ் ஜீப்புடன் மோதினார் என்றும் இந்தச் சம்பவத்தில் ஜீப்பில் இருந்த பொலிஸ்காரர் ஒருவரும் கொல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் சித்தாண்டியில் அனைத்து ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40க்கு அதிகம் என்றும் அவர்களில் பலர் முஸ்லிம்கள் என்றும் தமிழ் கட்சிகளில் ஒன்று தெரிவித்துள்ளது. [இ-எ- 10] பக்கம்: 1 மேலும் 2 தமிழர்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு வாழைச்சேனைப் பகுதியில் மேலும் இரண்டு தமிழர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரையம்பதியைச் சேர்ந்த அருணாசலம், களுவன்கேணியைச் சேர்ந்த தங்கராசா புஸ்பராசா ஆகியோரது சடலங்களே அவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. வாழைச்சேனைப் பகுதியில் அண்மையில் இதே போன்று நான்கு தமிழர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. வாழைச்சேனையில் உள்ள தமிழ் அகதி முகாமில் இருந்த எட்டுப்பேர் முஸ்லிம் வன்முறைக் கும்பல் ஒன்றினால் சமீபத்தில் கடத்திச் செல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. (இ- 5) *****
  4. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 20/07/1992 பக்கம்: 1 வாழைச்சேனை - பேய்த்தாளை அகதி முகாம் தமிழரை அச்சுறுத்தும் முஸ்லிம் குழு! யாழ்ப்பாணம், ஜூலை 20 மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை, பேய்த்தாளை அகதி முகாமில் தங்கியிருக்கும் அப்பாவித் தமிழர்களைக் கடந்த நான்கு நாட்களாக முஸ்லிம் குழுவினர் அச்சுறுத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அகதி முகாமில் இருந்து இரு தமிழர்களை அந்தக் குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த வாரமும் முஸ்லிம் குழுவினரால் 8 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை- மஞ்சத்தொடுவாய் அகதிமுகாமில் தங்கியுள்ளோரும் கடந்த இரு தினங்களாக அச்சுறுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. [ஒ- 3] *****
  5. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 13/07/1992 பக்கம்: 1 சந்திவெளிப் பகுதியில் இரு தமிழரின் சடலங்கள்! யாழ்ப்பாணம். ஜூலை 13 முஸ்லிம்களினால் கோரமாகக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இரு தமிழர்களின் சடலங்கள் கடந்த வியாழனன்று வாழைச்சேனை, சந்திவெளிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே பகுதியில் அண்மையிலும் கூட தமிழர்கள் மூவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. அண்மையில் வாழைச்சேனை பேய்த்தாளை அகதி முகாமிலிருந்து எட்டுத் தமிழர்கள் முஸ்லிம்களால் கடத்திச்செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் படையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கும் மட்டக்களப்பு பழுகாமம் பகுதியில் தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. *****
  6. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 10/07/1992 பக்கம்: 1 3 தமிழர் சுட்டுக் கொலை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊர்காவல் ப்ஃடையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வந்தாறுமூலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரு தமிழர்களும்- கரடியனாறுப் பகுதியில் கடந்த புதன்கிழமை ஒரு தமிழரும் - ஊர்காவல்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கரடியனாறுப்பகுதியில் ஊர்காவல்படையினரின், சூட்டுக்கு சிறுமி ஒருத்தியும் காயம் அடைந்தார். [இ- 3] *****
  7. .
  8. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 08/07/1992 பக்கம்: 1 அம்பாறையில் 18 தமிழர் சுட்டுக் கொலை! யாழ்ப்பாணம், ஜூலை 8 அம்பாறை மாவட்டம் - காட்டுப் பகுதி எல்லையில் நேற்று முன்தினம் 18 தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். காட்டுப்பகுதி எல்லையில் உள்ள குடியிருப்புக்களில் வாழ்ந்த அப்பாவித் தமிழர்களே கோரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினதும், முஸ்லிம்களினதும் அச்சுறுத்தல்களால் கிராமங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள் வசித்து வந்த காட்டுப் பகுதி ஒன்றைத் திடீரென சுற்றிவளைத்த படையினர், கண்டபடி சுட்டதில் 18 பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. [உ- 5] பக்கம்: 1,6 முஸ்லிம்களுக்கு ஆயுதம் வழங்கிய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் அதுவே கிழக்கு வன்செயல்களுக்கு காரணம் என்கிறது மன்னிப்புச்சபை லண்டன். ஜூலை 8 கிழக்கு மாகாணத்தில் வன்முறைகள் அதிகரித்தமைக்கு அங்குள்ள முஸ்லிம் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கிய ஸ்ரீலங்கா அரசின் நடவடிக்கையே காரணமாகும். இவ்வாறு ஸ்ரீலங்கா அரசைக் கண்டித்திருக்கிறது சர்வதேச மன்னிப்புச் சபை. ஸ்ரீலங்கா நிலைமை குறித்து மன்னிப்புச் சபை விடுத்த ஆகப் பிந்திய அறிக்கையிலேயே இப்படிக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. பத்துப் பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் கடந்த ஏப்ரல் மாதம் பொலன்னறுவை மாவட்டத்தில் முத்துக்கல், கரப்பொல மற்றும் அழிஞ்சிப்பொத்தானைக் கிராமங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிழக்கு முஸ்லிம் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கும் அரசின் நடவடிக்கை குறித்து சர்வதேச மன்னிப்பு சபை கடந்த ஆண்டே கவலை தெரிவித்திருந்தது. மன்னிப்புச்சபையின் அந்த அறிவிப்பை ஊர்ஜிதப்படுத்துவது போல பொலன்னறுவைப் படுகொலைகள் இடம்பெற்றிருப்பதாக இப்போது சுட்டிகாட்டப்படுகிறது. இந்தப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்த விசாரணைக்குழு ஒன்றை அரசு நியமித்திருப்பதை வரவேற்றுள்ள மன்னிப்புச்சபை., அந்த விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டிருக்கிறது. அறிக்கை இப்போது பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த வருடத்தின் மிக மோசமான இனப்படுகொலை என்று கருதப்படும் இந்த வன் செயல்களுக்குவர்கள் காரணமான தண்டிக்கப்பட வேண்டும் என்றும் - நாட்டின் கிழக்குப் பகுதியில் தமிழ், முஸ்லிம் கிராம மக்கள் வேண்டுமெறே கொல்லப்படுவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மன்னிப்புச் சபை கேட்டிருக்கிறது. இன அடிப்படையில் கொலைகளில் ஈடுபடுவதை விடுதலைப் புலிகள் நிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்கப்பட்டிருக்கிறது. வலைத்தளம்: www.amnestyusa.org கொழுவி: https://web.archive.org/web/20110222090212/http://www.amnestyusa.org/document.php?lang=e&id=CBABB2C2398D0E9B802569A6006028CF "............. மதுரங்கலையில் உயிரிழந்த 6 பேரில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 1. பி.பக்கியராஜா 2. சுந்தரலிங்கம் 3. பீரிஸ் விஜயசிங்க 29 ஏப்ரல் 1992, முத்துகல் ஊரில் நடந்ததாகக் கூறப்படும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளில் பாதிக்கப்பட்ட 51 பேரின் பெயர்களும் அறிக்கப்படுத்தப்பட்ட வயதுகளும். எஸ் பேபி, 1 எஸ் மங்கையற்கரசி, 2 எஸ் சுதர்சன், 3 டி ரீகன், 3 எஸ் தங்கேஸ்வரன், 3 எஸ் செல்வசசி, 3 எஸ் ரதீஸ், 4 டி விஜயேந்திரன், 4 கே கனகநாதன், 4 டி சுகந்தி, 4 எஸ் ரூபி, 5 என் விஸ்வலிங்கம், 7 டி இன்பவதி, 8 என் மனோகந்தன், 10 டி பஞ்சிலகாமி, 12 பி லோகேஸ்வரன், 12 டி ரவிச்சந்திரன், 12 எஸ் லட்சுமி, 12 டி வசந்தகுமாரி, 13 பி திருலோகநாதன், 14 டி பாபு, 14 டி கீதா, 14 டி விஜயகுமாரி, 15 பி சுலோச்சாதேவி, 18 கே தங்கராணி, 21 டி உதயகுமாரி, 22 எஸ் பாலையா, 27 சுந்தரலிங்கம், 28 பி மகேஸ்வரி, 29 டி நவமணி, 30 பி சுலோச்சன்தேவி, 30 வி நித்தியகல்யாணி, 30 எஸ் (அல்லது ஏ) சிவபதி, 32 கே குபேந்திரராஜா, 33 கே சதாசிவம், 34 வி தெய்வநாயகம், 35 பி குலேந்திரராணி, 35 கே கோபிகிருஷ்ணன், 35 பாக்கியராஜா, 37 டி (அல்லது கே) கண்ணகை, 40 எஸ் சிவநேசராஜா, 40 கே.கோபாலப்பிள்ளை, 40 எஸ் யோகசங்கரி, 40 பி வில்லியம் சிங்கோ, 44 வி தர்மலிங்கம், 49 எஸ் யோகம்மே, 65 எஸ் தெய்வானைப்பிள்ளை, 70 கந்தையா, 78 எஸ் மடந்தை, 80 வி நீதாப்பிள்ளை, 80 29 ஏப்ரல் 1992, கரபொலவில் நடந்ததாகக் கூறப்படும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளில் பாதிக்கப்பட்ட 38 பேரில் 31 பேரின் பெயர்களும் அறிக்கைப்படுத்தப்பட்ட வயதுகளும். சுபாகர், 7 சுதர்சன், 7 ஜானகி, 8 சாரதாதேவி, 18 சிவமணி, 18 அன்னலட்சுமி, 18 சிவரூபி, 28 குஞ்சன், 30 கந்தசாமி, 35 சிவஞானம், 40 தங்கராஜா, 45 ராசையா, 60 சின்னமுத்து, 68 அன்னம்மா, வயது தெரியவில்லை ஐயாத்துரை கண்ணம்மா கந்தசாமி லீலாவதி மாரிமுத்து முத்துப்பிள்ளை முத்தன் நிரஞ்சன் பாலன் பூமணி ரத்தினம் சரஸ்வதி மற்றும் குழந்தை சின்னத்தங்கம் சசிகரன் தங்கம்மா தங்கராஜா எம் தோமஸ் " *****
  9. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 16/06/1992 பக்கம்: 1 பஸ் பயணிகளை வழிமறித்து கிரான்குளத்தில் 15 தமிழரை ஆயுதபாணிகள் கடத்தினர்! முஸ்லிம் குண்டர்கள் அட்டகாசம் கொழும்பு, ஜூன் 16 மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தில் நேற்று முன்தினம் இ. போ. ச. பஸ் ஒன்றில் பயணம் செய்த பதினைந்து அப்பாவித் தமிழர்கள் ஆயுதம் தாங்கிய முஸ்லிம் குண்டர் குழு ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டனர். கடத்தப்பட்டோர் என்னவானார்கள் என்பது குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை. திருக்கோயிலில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸை கிரான்குளத்தில் வழி மறிக்கப்பட்டது. ரி௫6 ரகத் துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் மூவர்குழு ஒன்று 15 பயணிகளை பஸ்ஸை விட்டு இறக்கிக் கடத்திச் சென்றதாகவும் - எஞ்சிய பயணிகளோடு பஸ்ஸைத் தொடர்ந்து செல்ல அவர்கள் அனுமதித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. *****
  10. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 07/06/1992 பக்கம்: 1, 2 சிங்களவரும், முஸ்லிம்களும் செட்டிகுளத்தில் குடியேற்றம் வவுனியா செட்டிகுளம் பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்பது தமிழ்க் கிராமகளில் சிங்கள, முஸ்லிம் குடும்பங்களைக் குடியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகத் தெரியவருகிறது. பெரிய புளியங்குளம், நெடுங்கரைச்சேனை, பெரிய நொச்சிமுனை, கிட்டன்குளம், தீரியான்குளம், முதலியான்குளம், கரம்பைமடு, முகத்தான்குளம், பாவற்குளம் ஆகிய தமிழ்க் கிராமங்களே குடியேற்றத்துக்கு உட்படுத்தப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. பாவற்குளம் கிராமத்தில் ஏற்கனவே முஸ்லிம்களும் சிங்களவர்களும் குடியமர்த்தப்பட்டு விட்டனர். செட்டிகுளம் பகுதியில் மேற்படி கிராமங்களில் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்கள் மடு போன்ற அகதி முகாம்களில் தங்கியுள்ளனர். செட்டிகுளம் பகுதியில் குடியமர்த்தப்படும் சிங்கள, மற்றும் முஸ்லிம் மக்களுக்குத் தேவைக்கு அதிகமான உதவிகளும் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் தெரியவருகிறது. குடியமர்த்தப்பட்ட முஸ்லிம்களின் பாதுகாப்பை முன்னிட்டு அங்கு ஓர் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் முஸ்லிம் உதவி அரச அதிபர் பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (ஒ-5) *****
  11. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 2/05/1992 பக்கம்: 1 முஸ்லிம் கிராமத்தில் 6 தமிழர் வெட்டிக் கொலை மட்டக்களப்பு, கள்ளமடு முஸ்லிம் கிராமத்தில் ஆறு தமிழர்களை இனந்தெரியாதவர்கள் வெட்டிக்கொன்றனர். இராணுவப் பேச்சாளர் கேணல் சரத் முனசிங்க நேற்று நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் மாநாட்டில் இத்தகவலைத் தெரிவித்தார். இதேசமயம், காட்டுக்குள் விறகு வெட்டச்சென்ற கஹவத்தமுனை கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரின் சடலத்தை இராணுவத்தினர் கண்டெடுத்துள்ளனர் என்றும் கேணல் முனசிங்க கூறினார். (ஒ-த) *****
  12. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 14/05/1992 பக்கம்: 1, 6 *வாழைச்சேனையில் கடத்தப்பட்ட 12 தமிழரும் கொலை செய்யப்பட்டனர்? மட்டக்களப்பு, மே 14 வாழைச்சேனை காகித ஆலை சுற்றாடலில் கடந்த மாதம் 29 ஆம் திகதியன்று கடத்திச் செல்லப்பட்ட 12 தமிழரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தற்போது நம்பப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. விறகு பொறுக்கச் சென்ற 13 தமிழர் கடத்தப்பட்டதும் - அவர்களில் ஒரு சிறுவன் தப்பி வந்து கடத்தல் சம்பவம் பற்றி உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததும் தெரிந்தவையே. முஸ்லிம் ஊர்காவல் படையினரே இவர்களை கடத்திச் சென்று கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் 12 பேரில் அறுவர் மாணவிகள் என்பதும் இவர்கள் வாழைச் சேனை இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று வந்தவர்கள் என்பதும், இவர்களின் பெற்றோர் வாழைச்சேனை காகித ஆலை ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கவை. [ஒ- 3] பக்கம்: 6 புலிகளுடன் பேசுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயார் கொழும்பு.மே.14 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவருடனும் பேசத் தயாராக உள்ளது. விடுதலைப் புலிகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாப் எம்.ஏச். எம் அஷ்ரப் பி.பி.ஸி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இதுவரை புலிகள் அமைப்பிலிருந்து எவரும் தன்னைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க அணுகவில்லை என்றும் அவர் கூறினார். (இ-10) பக்கம்: 6 கட்டாயமாக குடியமர்த்த முயற்சி யாழ்ப்பாணம் மே 14 அண்மைபில் படுகொலைகள் இடம்பெற்ற மட்டக்களப்பு முத்துக்கல கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழ் குடும்பங்களை வாழைச்சேனைப் பகுதியில் குடியமர்த்த அரச அதிகாரிகள் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாழைச்சேனைப் பகுதி, தமிழர்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாக இருப்பதால் அங்கு சென்று வாழ அவர்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [இ- 5] *****
  13. .
  14. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 8/05/1992 பக்கம்: 1 முஸ்லிம் ஊர்காவல் படையினருக்கு ஆயுதம் வழங்குவதை அரசு நிறுத்துமா? கொழும்பு, மே.8 முஸ்லிம் ஊர்காவல் படையினருக்கு ஆயுதம் வழங்குவதை அரசு நிறுத்துமா? என்பது குறித்து விசாரணைக் குழுவின் அறிக்கையின் பின்னரேயே ஆராயப்படும். பொலனறுவை மாவட்டம் அழிஞ்சிப்பொத்தனை படுகொலைகள் தொடர்பாக பி. பி.ஸி செய்தியாளர் லரிஜோன் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில் ஜனாதிபதியின் ஆலோசகர் பிரட்மன் வீரகோன் மேற்கண்டவாறு பதில் அளித்தார். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்ன செய்கிறது? என்ற மற்றொரு கேள்விக்கு திரு. பிரட்மன் வீரக்கோன் பதில் அளிக்கையில் அரசியல் தீர்வு ஏற்பட முயற்சி நடக்கிறது. தற்போது நம்பிக்கை அளிக்கும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன" என்றார். (இ- 10) பக்கம்: 5 மட்டக்களப்பு, அம்பாறை கிராமங்கள் தோறும் புரிந்துணர்வுக் குழுக்கள் சமாதான மாநாட்டில் தீர்மானம் மட்டக்களப்பு, மே 8 மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள முஸ்லிம், தமிழ் இனமோதலைத் தடுக்க கிராமங்கள் தோறும் புரிந்துணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மட்டக்களப்பில் நடந்த சமாதான மாநாட்டில் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டது தமிழ் - முஸ்லிம் மக்களிடையே மீண்டும் இனமோதல்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வழிவகைகளைக் காண ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சமாதான மாநாடு கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு செயலகத்தில் நடைபெற்றது. அரச அதிபர் திரு. எஸ். மோனகுருசாமி மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். அமைச்சர் ஏ.ஆர். மன்சூர், ராஜாங்க அமைச்சர் பி பி. தேவராஜ் மற்றும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எம். பிக்கள் மாநாட்டில் கலந்துகொண்டன. தமி்ழ் - முஸ்லிம்களுக்கு இடையேயான பிரச்சினை தொடருமானால் கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தை மூடிவிட - வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் மன்சூர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். இதே சமயம் - தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொண்டுள்ளேன் என்று மட் டக்களப்பில் நடந்த விபுலாநந்தர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் மன்சூர் பேசுகையில் தெரிவித்தார். (ஒ- 3) *****
  15. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 6/05/1992 பக்கம்: 1 மட்டு. அம்பாறை தமிழருக்கு கொலைப் பயமுறுத்தல் அங்கு பெரும் பதற்ற நிலை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களுக்கு பயமுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதால், அங்கு பெரும் பதற்றநிலை நிலவுவதாகத் தெரியவருகிறது. முஸ்லிம்களும், ஊர்காவல் படையினருமே தமிழ் மக்களுக்கு கொலைப் பயமுறுத்தலை விடுக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதேசமயம் திருகோணமலை அகதி முகாம்களில் உள்ள தமிழ் மக்களும் கொலை செய்யபடுவர் என்று மிரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையில் கடந்த 28 ஆம் திகதி முதல் 30 திகதி வரை மட்டக்களப்பு -பொலன்னறுவ எல்லைப்புற கிராமங்களில் 78 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதையடுத்து அங்குள்ள மக்கள் பெருமளவில் இடம் பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது (ஒ- 3) பக்கம்: 5 உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 78 பொலன்னறுவ மாவட்டத்தில் முத்துக்கல் மற்றும் சரப்பொலை ஆகிய தமிழ்க் கிராமங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்த தமிழரின் எண்ணிக்க 78 என அறிவிக்கப்படுகிறது. முன்னர் அலஞ்சிப்பொத்தானை என்னும் இடத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 58 முஸ்லிம்கள் உயிரிழந்தனர் என்பது தெரிந்ததே. (ஒ-எ) *****
  16. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 5/05/1992 பக்கம்: 1 *வாழைச்சேனையில் 6 மாணவிகள் உட்பட 13 தமிழர் கடத்தப்பட்டனர் கொழும்பு,மே 5 வாழைச்சேனை காகித நகரில் கடந்த புதனன்று 13 தமிழர்கள் முஸ்லிம் குண்டர்களினாலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் கடத்தப்பட்டனர். காகித ஆலை பதிமருந்துத் தோட்டத்தினுள் விறகு பொறுக்கச் சென்ற 6 இளம் பெண்கள், ஒரு வயோதிப மாது, நான்கு சிறுவர்கள், இரு சிறுமியர் ஆகியோரே கடத்திச் செல்லப்பட்டனர். கடத்தப்பட்ட சிறுவர்களில் ஒருவன் வெட்டுக் காயங்களுடன் தப்பி ஓடி வந்ததை அடுத்து கடத்தல் சம்பவம் பற்றிய முழு விவரமும் வெளியானது. கடத்தப்பட்டவர்கள் காவத்தைமுனைக் கிரமத்துகுக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அச்சிறுவன் தகவல் வெளியிட்டான். இதனையடுத்து காவத்தைமுனையிலும், அதைச் சுற்றி உள்ள காடுகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தேடுதல் முயற்சி பலனளிக்கவில்லை. கடத்தப்பட்ட ஆறு இளம் பெண்களும் வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகள் என்றும், அவர்களின் பெற்றோர்கள் காகித ஆலை ஊழியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. *****
  17. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 4/05/1992 பக்கம்: 1 கடத்தப்பட்ட 12 தமிழரை மீட்க பேச்சு நடக்கிறதாம் கொழும்பு. மே 4 பொலன்னறுவ மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்செயல்களைத் தொடர்ந்து கடத்திச் செல்லப்பட்ட பன்னிரண்டு தமிழ்ப் பொதுமக்களையும் விடுவிப்பது குறித்து பேச்சுகள் நடைபெற்றுவருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. தியன்வட்டவானில் உள்ள மியன்கரச்சி கிராமத்தில் இருக்கும் காட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட இவர்களில் 8 பேர் ஆண்கள் என்றும் நான்கு பேர் பெண்கள் என்றும் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'சண்டே ரைம்ஸ்' செய்தி வெளியிட்டிருக்கிறது. தமிழர்களை விடுவிக் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் நாம் பேசினோம். ஆனால் அம்முஸ்லிம் பிரதிநிதிகளனால் கடத்தப்பட்டவர்களுடன் தொடர்புகொள்ள முடியாதிருந்தது. தமிழரைக் கடத்தியவர்கள் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் என்று நம்பப்படுகின்றது" இப்படி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். [ஒ-எ] *****
  18. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 2/05/1992 பக்கம்: 1 முஸ்லிம் கிராமத்திலிருந்து 57 இராணுவத்தினரை காணவில்லையாம்! கொழும்பு,மே 3 பொலனறுவ மாவட்டத்தில் தாக்குதல்கள் இடம்பெற்ற கிராமங்களில் மேலும் பலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. தாக்குதல் இடம்பெற்ற முஸ்லிம் கிராமமான அலும்புப் பொத்தான என்னும் இடத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த 57 'பரா' இராணுவத்தினரைக் காணவில்லை என்றும் - தாக்குதல் நடந்த சமயம் அவர்கள் பயந்து காடுகளுக்குள் ஓடி ஒளிந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது. இதேவேளை - முஸ்லிம்களினால் கொல்லப்பட்ட தமிழரின் எண்ணிக்கை குறைந்தது 61 ஆக இருக்கும் என்று உறுதி செய்யப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்கள் மீண்டும் தம் மீது இன்னொரு தாக்குதலை நடத்தலாம் என்று அஞ்சி காடுகளுக்குத் தப்பிச்சென்ற தமிழ் மக்கள் இன்னும் காடுகளுக்குள்ளேயே ஒளிந்திருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. [ஒ-எ] ***** தொகுப்பாளர் குறிப்பு: 30/04/1992 அன்று வெளியான உதயன் நாளேட்டின் படி, இனந்தெரியாத நபர்கள் சிலரால் அழிஞ்சிப்பொத்தானை என்ற முஸ்லிம் ஊர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே நேரம் இக்கிராமத்தின் சுற்றுவட்டாரத்திலிருந்த சிறுமுகாமொன்றின் மீதான புலிகளின் அதிரடித்தாக்குதலில் முகாம் அழிக்கப்பட்டதோடு 10இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். மேற்கொண்டு ஏராளமான படைக்கலன்களைக் கைப்பற்றியுமிருந்தனர். இத்தாக்குதல் வெறும் ஏழு நிமிடங்கள் மட்டுமே நீடித்திருந்தது. இச்சிறுமுகாமினுள் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் நிலைகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அழிஞ்சிப்பொத்தானை மீது தாக்குதல் நடத்தியவர்கள் தவிபுவினர் என்றும் அத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இத்தாக்குதல் குறித்து பாரிஸிலிருந்து பி.பி.ஸிக்கு லோரன்ஸ் திலகர் அவர்கள் வழங்கிய செவ்வியின் போது "அண்மையில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற படுகொலைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அரசினால் திட்டமிடுமேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே அது.'' என்று தெரிவித்து மறுப்புச்செவ்வி வழங்கியிருந்தார். இச்செவ்வி 5/5/1992 அன்று உதயன் நாளேட்டில் வெளியாகியுள்ளது.
  19. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 1/05/1992 பக்கம்: 1 முஸ்லிம் பொலீஸாரே தமிழரைக் கொலைசெய்தனர்; படை அதிகாரிகள் ஆராய்கின்றனர் கொழும்பு,மே 1 பொலன்னறுவ மாவட்டத்தில் இரு கிராமங்களில் தமிழர்களை படுகொலை செய்தவர்கள் உள்ளூர் முஸ்லிம் பொலிஸாரும், ஊர்காவல் படையினரும் என்று தற்பொழுது தெரியவந்துள்ளதாக பி.பி.ஸி நேற்று அறிவித்தது. இவ்விடயம் குறித்து உயர் படை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர் என்றும் - இந்த மாவட்டத்தில் இடம் பெற்ற உயிர்க்கொலைகள் தொடர்பாக நீதி விசாரணை நடத்த அமைச்சர்கள் சிலரும் இராணுவ உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்துள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டது. (ஒ- 10) பக்கம்: 3 உயிரிழந்த தமிழர்கள் எண்ணிக்கை 56ஆக உயர்வு பொலன்னறுவ மாவட்டத்தில் முஸ்லிம்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழ்ந்த தமி ழர்களின் எண்ணிக்கை குறைத்தது 56 ஆக அதிகரித்துள்ளது என்றும் - இந்த எண்ணிக்கை 70 அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் லெரித்தாஸ் வானொலி அறிவித்துள்ளது. இன்னொரு தமிழ் கிராமத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 13 தமிழர்களின் கதி தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. (இ-எ) *****
  20. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 30/04/1992 பக்கம்: 1,6 பொலன்னறுவ பகுதியில் தமிழர்கள் மீது தாக்குதல்; 30 பேர் பலி! பலர் படுகாயம்!! கொழும்பு.ஏப்.30 பொலன்னறுவ மாவட்டம், வெலிக்கந்தவுக்கு அருகேயுள்ள கரபோல என்னும் இடத்தில் முஸ்லிம்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்று ஏஜென்ஸிச் செய்திகள் தெரிவித்தன. இத் தாக்குதலில் தமிழர்கள் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர் என்றும், மேலும் பல தமிழர்கள் படுகாயமடைந்தனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டது. கொழும்பில் பாதுகாப்பு வட்டாரங்கள் இதனை ஊர்ஜிதம் செய்ததாக இந்திய வானொலி நேற்றிரவு அறிவித்தது. *****
  21. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 29/04/1992 பக்கம்: 1,3 ஊர்காவலர் முகாம் அருகே 2 தமிழரின் சடலங்கள் மீட்பு மீராவோடையில் சம்பவம் மட்டக்களப்பு, ஏப். 29 வாழைச்சேனை தமிழ்க கிராம சேவகர் பிரிவில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட இரு தமிழ் இளைஞர்கள், பின்னர் மீராவோடை ஊர்காவல்படை முகாம் அருகில் இருந்து சடலங்களாக தோண்டி எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீராவோடை தமிழ் அரச அதிபர் பிரிவைச் சேர்ந்த திகம்பரராஜா சிவகுமார் [ 23 வயது ), இராசலிங்கம் மகேஸ்வரன் [25 வயது] ஆகிய இரு இளைஞர்களும் கடந்த 19 ஆம் திகதி சாரமணிந்த இனந்தெரியாத நபர்களினால் கூட்டிச் செல்லப்பட்டனர் என்றும் - அந்த இருவரும் திரும்பி வராததை அடுத்து அவர்களது பெற்றோர் கடந்த 22 ஆம் திகதி இது குறித்து பொலீஸில் முறையீடு செய்தனர் என்றும் அதை அடுத்து பொலீஸார் நடத்திய தேடுதலில் சம்பந்தப்பட்ட இருவரது சடலங்களும் மீராவோடை ஊர் காவல்படை முகாமுக்கு அருகில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது என்றும் - தெரிவிக்கப்பட்டது. வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட இருவரின் சடலங்களை பரிசோதனை செய்த வைத்திய அதிகாரி, ஒருவர் அடித்து கொல்லப்பட்டிருப்பதாகவும் மற்றவர் உயிருடன் புதைக்கப்பட்டு இறந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். *****
  22. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 7/04/1992 பக்கம்: 1,4 அம்பாறையில் தமிழர் மீது தொடரும் ராணுவ வன்முறை; புலிகள் பிரமுகர் தமிழன்பன் தகவல் யாழ்ப்பாணம். ஏப். 7 * 1990 ஜூன் மாதத்தில் போர் தொடங்கிய பின்னர் பொத்துவில் பகுதியிலிருந்து மட்டும், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள். * இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் பல பழந்தமிழ்க் கிராமங்கள் சிங்களக் குடியேற்றங்களினால் அபகரிக்கப்பட்டுள்ளன. *அம்பாறை - மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ்க் கிராமங்களைப் படையினர் சுற்றிவளைத்துத் தொடர்ந்து அழித்து வருகிறார்கள். அங்கு இராணுவ வன்முறைகளும் தொடர்கின்றன. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு -அம்பாறைப் பிராத்திய மக்களுறவுக் கொள்கை முன்னெடுப்புப் பிரிவின் பொறுப்பாளர் தமிழன்பன். "விழிப்பு'' பத்திரிகைக்கு வழங்கிய ஒரு பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களின் நிலை குறித்து விவரிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- இந்த இரு மாவட்டங்களிலும் பெண்கள், சிறார்கள், மாணவர்கள், முதியோர்கள் ஆகிய அனைத்து மக்களும் படையினரின் வன்முறைகளுக்கும், படுகொலைகளுக்கும் ஆளாகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் கரடியன்குளம், கணையான்குழி, மதுரையடிவெட்டை, பொன்னன்வெளி. சாளம்பையடி, சாயன்கேணி போன்ற தமிழ்க் கிராமங்கள் சிங்களக் குடியேற்றங்களினால் அபகரிக்கப்பட்டுள்ளன. பொத்துவில் பிரதேச தமிழ்க் கிராமங்களை முஸ்லிம் ஊர்காவல் படையும், அரசாங்கப் படைகளும் சேர்ந்து அழித்தன. இந்த மக்கள் அனைவரும் இன்று கோமாரிக் கிராமத்தில் குடிசை அமைத்து வாழ்கிறார்கள். அவர்களும் அதிரடிப் படையினரின் இராணுவ நடவடிக்கைகளினால் இன்னற் படுகின்றனர். இவர்கள் 'நாய்'கள் வளர்ப்பது கூடப் படையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. கோமாரியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு உதவிகளோ நிவாரணமோ ஒழுங்காகக் கிடைப்பதில்லை. அம்பாறை மாவட்டத்தில் விசேட அதிரடிப்படை முகாம்கள், இராணுவ முகாம்கள் விமானப்படை முகாம், பொலிஸ் நிலையம், முஸ்லிம் ஊர்காவல் படைநிலையங்கள் என்று மொத்தம் 76 முகாம்கள் உள்ளன. - என்றார். (அ) *****
  23. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 19/03/1992 பக்கம்: 1 முஸ்லிம் ஊர்காவலர் அட்டகாசம்; தமிழ்ப் பயணிகள் மீது கிரனேட் வீச்சு! 4 பேர் பலி!! காத்தான்குடியில் சம்பவம் மட்டக்களப்பு காத்தான் குடிப்பகுதியில் நேற்று தமிழர்கள் பயணம் செய்த பஸ் ஒன்றை முஸ்லிம் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் என்று கருதப்படும் இளைஞர் ஒருவர் வழி மறித்து அதன் மீது கிரனேட் வீசினர். பஸ்ஸுக்குள் கிரனேட் வெடித்ததில் பஸ்ஸில் பயணம் செய்த நால்வர் உயிரிழந்தனர். 18 பேர் காயமுற்றனர். பஸ்ஸில் பயணம் செய்த இரு பெண்கள் கடத்திச்செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. [உ-த-10] *****

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.