Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. பாகம் - 16 21.11.1990 கேள்வி பதில் வடிவில் எமது உரையாடல் தொடர்ந்தது. ஐயா இந்த இடத்துக்கு நீங்கள் வந்து எவ்வளவு காலம் ? மூன்று மாதகாலமாகிறது. கும்புறுமூலை அடியோட வெட்டைக்கிறங்கினது தான், மறுகா ஊர் போகயில்லை இந்த இடத்தில் இருக்கிறீர்களே சாப்பாடு வசதிகள் எப்பிடி? கஷ்டம்தான், என்ன செய்யிற? இந்த இடத்துக்கு யாராவது வந்து உதவி செய்தார்களா? ஒருத்தரும் வரயில்ல மகன். இவ்வளவு மக்கள் இருக்கிறார் களே நோய் வந்தால் மருந்துக்கு என்ன செய்வீர்கள்? ஒரு மருந்தும் இல்லை. என்ட மகள் புள்ளைப் பெத்து அஞ்சு நாள் இண்டை வரை ஒரு குளிசையோ ஊசியோ இல்லை. இந்தப் பாலத்தடியில தான் கிடக்கிறாள். (இதைக் கூறும் போது கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது) நீங்கள் உங்கள் இடத்துக்குத் திரும்பிப் போக முடியாதா? எப்படி மகன் போறது. கிணத்தில் ஆக்களை வெட்டிப் போட்டிருக்கிறாங்கள். அதைப் பாத்தவங்க வந்து சொல்லுகிற போது என்னெண்டு மகன் போக மனம் வரும். இந்தப் பகுதியில் எவ்வளவு குடும்பங்கள் உள்ளன? இந்த இடமெல்லாம் ஆக்கள் தான். ஐநூறு குடும்பம் வரும். உங்கள் சொத்த இடம் எது? சித்தாண்டி, ஒவ்வொரு கேள்விக்கும் கடகடவெனப் பதில் வந்தது. அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு அந்தப் பகுதியைச் சுற்றிப் பார்த்தேன் . இது ஆற்றுப் பகுதியாதலால் சனக்கூட்டம் இலையான் மாதிரி மொய்த்துக் காணப்பட்டது. முழங்காலளவு தண்ணீர் உள்ள இந்த ஆற்றையே குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பாவிக்கின்றனர். இந்தத் தண்ணீருக்கு சொந்தம்கொண்டாடியபடி இருநூறு மாடுகள் ஆற்றில் இறங்கின. மாடுகளும் மனிதர்களும் சமத்துவமாக இருந்த இந்த ஆற் றைக் கடந்து செல்கையில் துர்நாற்றம் மூக்கைத் துளைத்தது. அருகில் உள்ள சிறு காட்டில் உள்ளப் பற்றைகளையே அனைவரும் மல சலம் கழிக்கப் பயன்படுத்தும்வதால் அப்பகுதியில் செல்லும் போது மூக்கு மிகவும் சிரமப்பட்டது. அங்குள்ள மக்கள் பலர் புல்லினால் வேய்ந்த சிறு குடிசைகளில் இருந்தனர். அது ஒரு கோழிக் கூட்டைத்தான் ஞபாகப்படுத்தும். எனவே கரி காலனிடம் “இந்தப் புல்லின் பெயர் என்ன?" என்று கேட்டேன். “இலுக்கு என்பார் இலக்கணப்படி இணுக்கு என்பதே சரியான பெயர்” என்கிறார்கள். இப்புல்லை வெட்டி ஏழுநாள் வெயிலில் காயவைத்தபின் வேய்ந்தால் ஏழு வருடங்கள் பாவிக்கலாம் என்று கூறுவார்கள்” என்றார். சின்னச் சின்ன முள்ளுச்செடி களால் வேயப்பட்டுக்கொண் டிருந்த குடிசைகளையும் கண் டோம். வழியில் இன்னொருவரைக் கண்டோம். நகரிலிருந்து வெளியேறி வந்தவர். அவரும் வயதுவந்த பெண்பிள்ளைகள் இருவரும் இருந்தனர். அவரை விசாரித்தேன். ஐயா ஏன் இந்தப் பகுதிக்கு வந்தீர்கள்? கொக்கட்டிச்சோலைப் பகுதி உங்களுக்குக் கிட்டத்தானே? இங்கே எனது சகோதரி வீட்டிற்கு வந்தேன். கலவரம் தொடங்கியபடியால் இங்கேயே தங்கிவிட்டேன். மட்டக்களப்பு நகரில் சிலர் வீடுகளில் தங்கியிருக்கி றார்கள்தானே? நீங்கள் ஏன் போக முயற்சிக்கவில்லை? பெண் பிள்ளைகள் உள்ள நாங்கள் அங்கே போகமுடியாது. இராணுவமும் முஸ்லிம் ஊர்காவல் படையும் வாழ்க்கையில் தாங்கள் பெண்களையே காணாதவர்கள் மாதிரி வெறித்தனத்துடன் நடந்து கொள்கின்றார்கள். கற்பழிக்கப்படும் பெண்களை கொன்று விடுகிறார்கள். இப்படி பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் ஏதாவது அறிந்தீர்களா? என்று கேட்டதும் பெருமூச்செறிந்தார். இராணுவம் நகருக்குள்வந்து சில நாள் செல்ல வீட்டில் இருக்கும் சாப்பாட்டுச் சாமான்களை எடுப்பதற்கு நான் மட்டும் தனியே நகருகுள் போனேன். அன்று ஒரு சம்பவம் நடந்தது. மட்டக்களப்பு நகரிலிருந்து கல்லடிப் பாலம் வழியாக சைக்கிளில் ஒரு தந்தையும் மகளும் செல்ல முயன்றனர். பெரும்பாலும் மஞ்சத் தொடுவாய்ப் பக்கமாகத்தான் போகப்புறப்பட்டிருப்பார்கள். ஏனென்றால் காத்தான்குடியைத் தாண்டிப் போக முடியாது. தந்தைக்கு 50 வயதிருக்கும். மகளுக்கு 20 வயதிருக்கும். கல்லடிப்பாலத்தை நெருங்கியதும் இராணுவத்தினர் இவர்களைத் தடுத்து நிறுத்தினர். கொண்டுபோன பொருள்களை சோதித்ததும் மகளைக் கொண்டுபோய்ச் சோதிக்க வேண்டும் என்றனர்: தகப்பனோ மகளை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினார். கதறினார். அவரது கெஞ்சலையோ. கதறலையோ அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை. கல்லடிப்பாலத்தடியில் தாங்கள் தங்கியிருந்த இடத்துக்குக் கொண்டுபோனார்கள். தகப்பனோ கதறிக்கொண்டேயிருந்தார். இவர் கதறும்போது இடையிடையே இவருக்கு அடியும் விழுந்தது. இவரோ தொடர்ந்து கதறிக்கொண்டிருந்தார். கடைசியில், ஒரு மணித்தியாலம் செல்ல மகளைக் காட்டுகிறோம் என்று கூட்டிக் கொண்டு போனார்கள். மகளின் நிலையைக் கண்டார் தந்தை. “என்ட மகளே” என்று கதறியபடியே கையை உயர்த்திக் கொண்டு திரும்பி வேகமாக ஓடி வந்தார். கல்லடிப்பாலத்தில் இராணுவத்தினர் மறித்தனர். அவர்களை விலக்கிவிட்டு ஆற்றில் குதித்தார். இதைத்தான் நாங்கள் கண்டோம். அடுத்த நாள் தற்கொலை செய்து கொண்ட இவரது உடலும், கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட, அலங்கோலமான நிலையிலிருந்த அவரது மகளின் சடலமும் ஆற்றங்கரையில் கரை ஒதுங்கினது என்றார். கல்லடிப் பாலத்தடியில் நின்று வாவியில் உள்ள மீன்களின் இனிமையான இசையைப் பலரும் செவிமடுப்பதுண்டு நிச்சயக்கமாக அன்றைய தினம் அந்த மீன்கள் ஆனந்த கீதம் இசைத்திருக்க மாட்டா. (தொடரும்)
  2. நவம்பர் 26, 2005 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்கிலுள்ள சாக்கோட்டையில் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 51வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது.... 'தலைவர் புகழுரை ஆற்றும் தேசப்பற்றுள்ள ஐயா' ''மாவீரர் நினைவாலயத்தினுள் இருந்த திருவுருவப் படங்களுக்கு மலர்வணக்கம் செய்யும் பொதுமகன்'' 'ஒரு பெண்ணுக்கு ஆதரவாளர் ஒருவர் குதப்பித் துண்டு வழங்குகிறார்.' 'மாவீரர் நினைவாலயத்தினுள் இருந்த திருவுருவப் படங்களுக்கு மலர்வணக்கம் செய்யும் பொதுமக்கள்'
  3. பாகம் - 15 18.11.1990 திரு. கருணா அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியற் பொறுப்பாளர் திரு கரிகாலன் அவர்கள் வந்து சேர்ந்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் திரு. மாத்தயாவுடன் மட்டக்களப்பு நிலைமைகள் பற்றிக் கலந்துரையாடினர். பல்வேறு முக்கியஸ்தர்களும் வந்து மாத்தயாவைச் சந்தித்தனர் அகதிகள் பற்றிய விடயங்களைக் கேள்வியுற்ற திரு. மாத்தயா இந்த விடயங்களை திரு. கிட்டு அவர்களுக்கு தெரியப்படுத்தி, அவர் மூலமாக இந்த விடயங்களை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டார். அத்துடன் அகதிகளின் நிலைமையை வீடியோவினாலும், புகைப்படக் கமராவினாலும் படமெடுத்து அவர்களின் அவலத்தை ஏனைய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று கூறினார். மாத்தயாவின் வேண்டுகோளின்படி 2-10-90 அன்று பிற்பகல் 4 மணியளவில் அகதிகளின் நிலையைப் படமாக்கவும், அவர்களைப் பேட்டி கண்டு நிலைமைகளை அறியவும் ஒரு குழு புறப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசியற் பொறுப்பாளர் திரு. கரிகாலன் அவர்கள் இக்குழு வுக்குத் தலைமை தாங்கினார். லான்ட் குறோசரில் புறப்பட்ட இக்குழுவுடன் நானும் தொற்றிக் கொண்டேன். முதலில் வந்தாறு மூலையிலிருந்து ஐந்து மைல் தொலைவிலுள்ள பொத்தானை வடிச்சல் என்னும் பகுதியை அடைந்தோம். பொத்தானை என்னும் பகுதியில் உயரமான பகுதி பொத்தானைத்திடல் என்றும் அங்கிருந்து மழைநீர் வடிந்து ஆற்றுடன் சேரும் இந்தப் பகுதி பொத்தானை வடிச்சல் என்றும் அழைக்கப்படும் என அறிந்துகொண்டோம், அங்கே புதிதாகக் குடிசைகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பலர் காட்டை வெட்டி துப்பரவு செய்து கொண்டிருந்தனர். அகதிகளாக வருவோர் தண்ணீர் வசதியைக் கருத்திற்கொண்டு ஆற்றங்கரைகளை அண்டிய பகுதிகளாக தமது குடியிருப்புக்களை அமைத்துக்கொள் கிறார்கள் என்பதை உணர முடிந்தது. ஒரு வெட்டவெளியில் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. முடி நரைத்து மூகம் காய்ந்த, ஒரு வயோதிபர் அங்கே காணப்பட்டார். மரநிழலில் ஒரு குழந்தை நிர்வாண நிலையில் படுத்திருந்தது. குழந்தை படுத்திருந்த சூழலை அவதானித்தேன். சாப்பாட்டில் ஈக்கள் மொய்த்துக் காணப்பட்டன. வயோதிபரிடம் "நீங்கள் எந்த ஊர் என்று கேட்டேன்." குடிசை அமைக்கும் வேலையைத் தொடர்ந்தவாறே 'வந்தாறு மூலை” என்றார். அவர்களின் நிலையைப் பார்த்த நான் அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அங்கிருந்த ஒரு இளைஞரிடம் இங்கு எத்தனை குடும்பங்கள் உண்டு? என்றேன். "பதினைத்து என்றார். காடும் பற்றைகளும், ஆறும் சேர்ந்த இந்த இடம் நுளம்புகளின் உற்பத்தி ஸ்தாபனம் ஆக விளங்கும். இங்கு எப்படித் தான் இருக்கிறார்களோ? என்று நினைத்தபடியே புறப்பட்டேன். அப்போது எனக்குத் தெரிய வில்லை இது சாதாரண காட்சி. இனிக் காணப் போகும் காட்சிகள் இதைவிட அவலமான காட்சிகள் என்று' சாரதியின் ஆசனத்தில் இருந்த கரிகாலனிடம் சென்றேன். இந்த இடத்தில் இப்படி இருக்கின்றார்களே இங்கு மலேரியா போன்ற நோய்கள் தொற்ற வாய்ப்பு உண்டல்லவா? என்று கேட்டேன். “இந்த நிலையைப் பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இனிவரும் காலம் மழைக்காலமாகும் அந்தக் காலத்தில் இந்த மக்கள் இன்னும் துயரத்தைச் சந்திக்கப் போகிறார்கள்” என்று வேதனையுடன் கூறியவாறே லாண்ட்குறோசரை செலுத் தொடங்கினார். மைலவட்டவான் என்ற பகுதியை அடைந்தோம். தூரத்தில் இருந்து பார்த்த போது திருவிழாக் கூட்டம் போல் தெரிந்தது. எனக்கு புதினமாக இருந்தது. ஏனென்றால் நான் ஏற்கனவே இந்த வீதிகளால் பயணம் செய்தவன். வயல்வேலைகள் நடைபெறும் காலம் தவிர ஏனைய காலங்களில் இந்த வீதியில் சனநடமாட்டத்தைக் காணமுடியாது. எப்போதாவது ஓரிரு சைக்கிள்கள் வரும். அப்படியான இந்தப் பகுதி சனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதுதான் மைலவட்டவான் வேல்ட் மாக்கற் (உலகச்சந்தை) என்றார் கரிகாலன். பிரபலமான ஆலயத் திருவிழாவின்போது கடைகள் எவ்வாறு காணப்படுமோ அப்படியிருந்தது. வீதியின் இருமருங்கும் எண்ணற்ற கடைகள் முளைத்திருந்தன. சைக்கிள் கடைகள், ரொட்டிக் கடைகள், சலூன், மீன்- கருவாட்டுக் கடைகள், மரக்கறிக்கடைகள், பலசரக்குக்கடைகள் என பல கடைகளும் காணப்பட்டன. இந்தப் புதிய சந்தையை அண்டிய ஒரு குடிசையை நோக்கிப் போனோம். ஒருமாமரத்தின் கீழ் சிலர் இருந்தார்கள். அவர்களை நெருங்கினோம். கையில் கைக் குழந்தையுடன் இளம் ஒரு பெண் இருந்தார். வெறித்த பார்வை. 'அக்கா உங்கள் கணவர் எங்கே?'' என்றேன். நிமிர்ந்து பார்த்தார். கண்ணீர் பொலபொலவெனக் கொட் டியது. 'கொள்ளையிலபோவானுகள் கொண்டு போயிட்டானுகளே" என்று அருகில் இருந்த ஒரு கிழவி ஓலமிட் டாள். இவர்கள் ஏதோ விதத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை உடன் புரிந்து கொண்டேன். அந்தக் கைக்குழந்தையை கவனித்தேன். அதிர்ச் சியாக இருந்தது எனக்கு. பல சர்வதேச சஞ்சிகைகளில் பார்த்த அவலத்துக்கு எடுத்துக்காட்டான குழந்தைகளை ஒத்த அந்தக் குழந்தையின் தோற்றம். மெலிந்து, கறுத்து பார்க்கப்பயங்கரமான, தலைக்கேற்ற உடல் அமையாத... அதை வார்த்தையில் வர்ணிப்பது கஷ்டம். எதியோப்பியா அல்லது பயாவ் றாவில் தான் நிற்கிறோமோ என்று கூட எண்ணினேன். கிழக்கின் முழு அவலத்துக்கும் இந்தக் குழந்தையின் உருவம் ஒன்றே போதும் நானும் ஒரு குழந்தையின் தந்தை என்பதால்தானோ என்னவோ இந்தக்காட்சி என்னை மிகவும் பாதித்தது. அன்றிரவு முழுக்க அந்தக் குழந்தையின் தோற்றம் நெஞ்சைப் பிசைந்தது. (தொடரும்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.