Everything posted by நன்னிச் சோழன்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சிங்கள அதிபர்களான சந்திரிக்கா மாமி மற்றும் மகிந்த மாமாவுடன் பீலஸ்தீன தலைவர் யாசிர் அராஃவத் 1997 https://www.bbc.com/sinhala/news/story/2004/11/041111_arafat_srilanka (கரப்பான் மாட்டிக்கொண்டது🤣🤣) https://www.facebook.com/photo.php?fbid=2747705088898652&set=p.2747705088898652&type=3
-
Palestinian leader Yasir Arafat with Sri Lankan president Chandrika Kumaratunga and Mahinda Rajapaksa, 1997 (3).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
Palestinian leader Yasir Arafat with Sri Lankan president Chandrika Kumaratunga and Mahinda Rajapaksa, 1997 (2).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
Palestinian leader Yasir Arafat with Sri Lankan president Chandrika Kumaratunga and Mahinda Rajapaksa, 1997 (1).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் நினைவாலயம் 27-11-2007
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 19 02.12.1990 கரிகாலனின் லாண்ட்குறோசர் கொக்கட்டிச்சோலையை சென்றடைந்தது. அங்குள்ள தேவாலயத்தின் முன்றலிலே தான் கூட்டம் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் இக் கூட்டத்திற்காக வருகை தந்திருந்தனர். திரு தம்பிராசா அவர்கள் தலை மையில் கூட்டம் ஆரம்பமாகியது. உரை நிகழ்த்தியவர்களில் அனேகர் குமரப்பாவையே ஞாபகப்படுத்தினர். ஏனெனில் அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் குமரப்பாவைத் தெரியும். திரு. கரிகாலன் அவர்கள் உரையாற்றும்போது “இன்றையநாள் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய நாள். இந்திய ஒப்பந்தத்தின் பெயரால் இந்திய வல்லாதிக்க பூதம் எம்மை படுகொலை செய்த நாள்” என்று குறிப் பிட்டு இந்திய அரசின் தந்தி ரங்களுக்கு பலியாகாமல் எவ்வாறு போராட்டத்தை புலிகள் முன்னெடுத்துச் சென்றனர் என்பதை விளக்கினார். தொடர்ந்து தற்போதைய நிலைபற்றி அவர் பேசுகையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஒரே நேரத்தில் 11 பொலிஸ்நிலையங்களையும் 7 இராணுவ முகாம் களையும் தாக்கி வெற்றி பெறும் அளவுக்கு போராட் டத்தில் வளர்ச்சியடைந்துள்ளோம். போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஒத்துழைப்பே இச்சாதனைகளுக்கு மூலகாரணம். எனவே சிறிலங்கா அரசு பெருமளவில் இராணுவத்தை குவித்துமக்களைப்படுகொலை செய்து அகதிகளாக அலையச் செய்வதன்மூலம் மக்களை எம்மிடமிருந்து அன்னியப்படுத்தி போராட்டத்தை முறியடிக்கலாம் எனக்கனவு காண்கிறது. ஆதலால் நாம் எந்தச்சூழ்நிலையிலும் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இந்திய இராணுவத்துடன் நாம் நடத்திய போரில் 2000 சிப்பாய் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதைய போரில் 1500 சிறிலங்கா இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இரண்டாயிரம் பேர் கால்களை இழந்துள்ளனர். இந்நிகழ்வுகளெல்லாம் போராட்டத்தின் வளர்ச்சியைக் காட்டுகின்றது. தமிழீழத்தை மீட்டெடுக்கும் படிக்கற்கள்இச்சாதனைகள்' என்று பேசினார். அடுத்து திரு. நியூட்டன்பேசினார். மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள சிரேஷ்ட போராளிகளில் ஒருவர் இவர். 1985 ஆம் ஆண்டு மட்டக்களப்புக்குச் சென்ற இவர் தொடர்ச்சியாக அப்பகுதியிலேயே விடுதலைக்காக தீவிரமாக உழைத்துவருபவர். “குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் மரணம் இயக்கத்தின் தன்மானத்திற்கு எடுத்துக்காட்டு. அவர்கள்பிடிபடும் போது ஆயுதம் இருந்தது. சயனைட் இருந்தது. அவர்கள் அப்போதே சண்டை பிடித்திருக்கலாம். சயனைட் அருந்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் தம்மை இந்திய அரசு காப்பாற்றுமென நம்பினர். கடைசியில் இந்தியாவின் நம்பிக்கைத் துரோகத்தினாலேயே அவர்கள் சயனைட் அருந்த நேரிட்டது. பிற்பகல் 5 மணிக்கு சாகப்போகிறோம் என்பது நண்பகல் 12 மணிக்கே அவர்களுக்குத் தெரியும். எமதுபிராந்தியத் தளபதிகள் எதிரியின் முன்னால் கைகட்டி நின்று மறுமொழி சொல்லக் கூடாது என்பதற்காகவே சயனைட் அருந்தினார்கள் அந்த குமரப்பா வளர்த்த போராளிகளே இன்று மட்டக்களப்பில் பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். இன்று கோட்டையில் புலிக்கொடி பறக்கிறது, யாழ்ப்பாணம் மாதிரி இங்கு ஏன் கொண்டுவர முடியாது? என சிலர் கருதலாம். அங்குள்ள புவியியல் நிலைமை வேறு இங்குள்ள நிலைமை வேறு. மட்டக்களப்பு போராளிகள் போராடத் தெரியாதவர்கள் அல்ல. உண்மையில் தமிழீழப் போராட்டத்தில் மட்டக்களப்பிலேயே கூடுதலான ஆயுதங்கள் எதிரிகளிடமிருந்து கைப் பற்றப்பட்டன. இன்று கோட்டையில் புலிக்கொடி பறக்கின்றதென்றால் மட்டக்களப்புப் போராளிகளும் தான் அதில் பங்காளிகள். அவர்களும் அங்கு போராடியிருக்கிறார்கள். கோட்டையை மீட்டெடுக்க உதவிய ஆயுதங்களில் கணிசமானவை மட்டக்களப்பில் பெறப்பட்டவைதான். வெள்ளம் வராமல் ஒரு அணைக்கட்டை கட்டுகிறோம் அந்த அணைக்கட்டில் ஒரு இடத்தில் வெடிப்பு ஏற்பட்டால் பிறகு ஒன்றும் செய்ய முடியாமல் போய்விடும். அதே போன்ற நிலைமைதான் மட்டக்களப்பிலும் ஏற்பட்டது. நாளை, வியட்னாம் நிலைமை போல இங்கும் உரு வாகலாம். நாளாந்த வேலை களைக்கவனித்துக் கொண்டு இருப்பார்கள் மக்கள்: இராணுவம் வந்தவுடன் சண்டை செய்வார்கள். பின்னர் தங்கள் வேலைகளைக் கவனிப்பார்கள். அந்த நிலைக்கு மக்கள் தயாராக வேண்டும் என்று பேசினார். கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. இவ்வளவு இராணுவ அட்டூழியங்களுக்குப் பின்னரும் எதற்கும் அஞ்சாமல் இவ்வளவு பேர் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்களே என்று. போரா ளிகளுடன் மிகவும் அன்னியோன்னியமாக நடந்து கொண்டார்கள் மக்கள். அங்கிருந்து புறப்பட்டோம். மகிழடித்தீவுச் சந்தியை அடைந்தோம். ஏற்கெனவே எனக்குப் பழக்கமான பலர் அங்கே காணப்பட்டனர். அவர்களில் கணிசமானோர் எழுவான்கரைக் கிராமமான ஆரைப்பற்றை என்ற கிராமத்தைச் சேர்த்தவர்கள். சூரியன் உதிக்கும் திசையில் உள்ள கிராமங்கள் எழுவான்கரை என அழைக்கப்படும். கடலுக்கும் வாவிக்கும் இடையில் உள்ள கிராமங்கள் இவை. சூரியன் மறையும் திசையில் உள்ள கிராமங்கள் படுவான் கரை என அழைக்கப்படும். வாவிக்கு மேற்குப் பக்கமாக உள்ள கிராமங்கள் இவை. ஆரைப்பற்றை கிராமத்தில் இராணுவமுகாம் இருப்பதால் பெரும்பாலான ஆண்கள் ஆற்றைக் கடந்து படுவான் கரைக்கு வந்துள்ளனர். ஆற்றுக்கு அப்பால் மனைவி, குழந்தைகள். இவர்கள் ஆற் றங்கரையை அண்டிய மகிழடிச்தீவுச் சந்தியில், அனைவரும் ஆற்றங்கரையையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தனர். குடும்பங்கள் சிதறிய நிலையில் அவர்கள். நாங்களும் ஆற்றங்கரைக்குச் சென்றோம். சாதாரணமாக எப்போதும் ஐந்து தோணிகளாவது ஆற்றில் தென்படும். சிலர் மீன் பிடித்துக்கொண்டிருப்பர். எழுவான்கரைக்கும் படுவான்கரைக்குமிடையில் போக்கு வரத்து நடந்துகொண்டிருக்கும். ஆனால் இப்போதோ எவருமே காணப்படவில்லை. ஆற்றைப்பார்த்தேன். ஓடிக் கொண்டிருந்தது தண்ணீராகத் தெரியவில்லை. பிரிந்திருக்கும் குடும்பத்தினரின் கண்ணீராகவே எனக்குத் தெரிந்தது. (தொடரும்)
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 19 30-11-1990 விசுவுடன்போய்க் கொண்டிருக்கையில் திரும்பிப்பார்த்தேன்: ஒரேவெளி முன்னாலும் வெளி. கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் ஒரே வெளிக்குள்ளாலேயே சென்று கொண்டிருந்தோம். அப்போது நான் புதுவையண்ணா யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு வல்லை வெளியைப் பார்த்துவிட்டு “வல்லை வெளி தாண்டிப் போகுமோ’?" என்றுபாடினார். இந்த வெளியைப் பார்த்தால் தான் உண்மையான வெளி எதுஎன்பது தெரியும் என்றேன். அப்போது யோகன் "அது வல்லை வெளி. இது வானவெளி'' என்றார். யாழ்ப் பாணத்திலிருந்து மட்டக்களப்புக்குச் சென்று கொஞ்சக் காலம் போராடி விட்டுத் திரும்பிய ஒரு போராளியிடம் மட்டக்களப்பைப் பற்றிக் கூறச்சொன்னபோது “மட்டக்களப்பில் ஓடினால் வெளி, விழுந்தால் வெடி” என்று கூறியது ஞாபகத்துக்குவந்தது. 1987 ஆம் ஆண்டுவரை சயனைட் மூலம் வீரமரணமடைந்த போராளிகளின் தொகை மட்டக்களப்பில் தான் கூடுதலாக இருந்தது. ஏனெனில் அங்குள்ள இயற்கையமைப்பு பெரும் பாலும் வெளிகள் உள்ள பிரதேசமாக இருப்பதால் போராளிகளுக்குச்சாதகமாக அமையவில்லை. யாழ்ப்பாணத்தில் நாலுமதில் தாண்டினால் ஒரு போராளியைப்பிடிக்க முடியாது. அங்குள்ள நிலைமை அப்படியல்ல; இதனாலேயே சயனைட் அருந்த வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டன. இலுக்குவட்டை, தீலிவட்டை என்னும் இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்தோம். இங்குள்ள அகதிகள் பெரும்பாலும் கிழான் சந்திவெளிப் பக்கம் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள், சட்டக்கண்டன் முன்மாரி என்னும் இடத்தில் பொம்மர் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இறந்தும் இருவர் படுகாயமடைந்துமிருந்தனர். பெரியதம்பி சண்முகம் என்பது குடும்பத் தலைவரின் பெயர். இலுப்பையடி முன்மாரி என்னுமிடத்தை பார்த்தோம் அங்கும் இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கியி ருந்தனர். முறக்கொட்டாஞ்சேனை முகாமுக்கு முன்னால் கைது செய்யப்பட்ட 35 வயதான ஒரு குழந்தைக்குத் தகப்பனான தம்பிப்பிள்ளை கந்தசாமியின் மனைவி, சித்தாண்டிக்கோயில் முகாமில் கைது செய்யப்பட்ட துரைசிங்கம் என்பவரின் தாய் என்பவர்களைச் சந்தித் தோம். “முறக்கொட்டாஞ் சேனை முகாமில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டவர்கள்?” என்று கேட்டேன். “முதல் தரம் 6, அடுத்ததரம் 15, அடுத்த தரம் 36, அந்த முப்பத்தாறு பேரில் தான் தனது மகனும் ஒருவர் என்று சொன்னார் தாய். "தலையாட்டி மூலமாகவா கைது செய்யப் பட்டனர்?” என்று கேட்டேன். "இல்லை ஒரு சைசான ஆளைப் பார்த்து ஏற்றினார்கள்" என்று சொன்னார்கள். நற்குணம் உதயகுமார் ஆகிய இருபிள்ளைகளை சித்தாண்டிக்கோயில் அகதி முகாமில் பறி கொடுத்த தாயையும் சந்தித்தோம். புஷ்பராணி என்பது அவரது பெயர். “இவர்கள் கைது செய்யப்பட்ட போது முகாமுக்கு யார் பொறுப்பாக இருந்தார்கள்?” என்று கேட்டேன். “செஞ்சிலுவைச்சங்கம் தான்” என்றார்கள். இப்போது அவர்கள் உங்கள் பிள்ளைகளின் விடுதலை சம்பந்தமாக என்ன சொல்கிறார்கள்? என்று கேட்டேன். எழுதித்தருவதுமட்டும்தான் உங்களது வேலை. விடுதலை சம்பந்தமான விஷயம் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறினார்கள் என்றார். எவ்வளவு அலட்சியமான பதில். தமது பொறுப்பில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் தான் இவர்கள் உள்ளனர். இப்படிக் கைது செய்யப்பட்டவர்களை யாராவது போய்ப் பார்க்க முடியுமா? என்று கேட் டேன் இதுவரை கைது செய்யப்பட்ட எவரையுமே பார்க்க முடியவில்லை என்றார். அப்படியே பெருமாவெளிக் கட்டு என்னும் இடத்தை அடைந்தோம். அங்கே நான்கு சின்னத்தடி நட்டு இரண்டு பனைவடலி ஓலையால் வேயப் பட்டிருந்த ஒரு குடிசையைக் கண்டேன். விளையாட்டுக்காக சிறுபிள்ளை கள் அமைக்கும் கொட்டில்தான் அது. அதற்குள் ஒருதாய் இரு குழந்தைகளை அணைத்தபடி இருந்தாள். இப்படியான நிலைமையில் இருக்கிறார்களே என்று எண்ணிய நான் அந்தத் தாயை அணுகி இதுதான் உங்கட வீடா' என்று கேட்டேன். இல்லை. நாங்கள் அந்த மரத்தடியிலதான் கிடக்கிறம். இது வேற ஆக்கள் இருக்கிறது. நாங்கள் வெயிலுக்காக வந்திருக்கிறம் என்றார் அவர். நான் நினைப்பதைவிட மோசமான நிலை. அங்கிருந்த இன்னொருவரைச் சந்தித்தேன். அவருடன் உரையாடினேன். உங்க பெயர் என்ன? காளிக்குட்டி ஆறுமுகம். எந்த இடம்? வீரமுனை. வீரமுனையைவிட்டு ஏன் இங்கு வந்தீர்கள்? வீரமுனையில் 300பேரை இராணுவமும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் கைது செய்து கொண்டு போனார்கள். வெட்டிக்கொல்கிறார்கள், அதனால் தான் இங்கு வந்திருக்கிறோம். வீரமுனையில் எங்கு வைத்து கைது செய்யப்பட்டார்கள்? அங்குள்ள சிந்தாத்துரைப் பிள்ளையார் கோயிலில். இதில் உங்களது உறவினர்களும் இருக்கிறார்களா? எனது தம்பிமார் மூவர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அவர்களது பெயர், வயது? உலக நாதன் 30வயது. யோகராசா 28வயது, நவரட்ணம் 26வயது. இவர்கள் திருமணமானவர்களா? உலகநாதன் மட்டும் திருமணமானவர். இவருக்கு ஒரு பெண்குழந்தையும் இரண்டு ஆண்குழந்தைகளும் உண்டு. நீங்கள் மட்டக்களப் புக்கு வந்து எவ்வளவு காலம்? 3மாதம். இவ்வளவு நாட்களும் எங்கேயிருந்தீர்கள்? சித்தாண்டிக் கோயிலில் அகதி முகாமில். அங்கே சாப்பாடு, வசதிகள் எப்படி? 3 மாத காலத்துக்கு 13கிலோ மாவும், 6கிலோ அரிசியும் எமது குடும் பத்துக்கு தந்துள்ளார்கள். வேறெதுவும் கிடைக்கவில்லை. கொண்டு வந்த பொருள்களையெல்லாம் விற்று உடுத்த உடுப்புடன் இருக்கிறோம். தற்போது வீரமுனை நிலைமை என்ன மாதிரி? கிராமத்தில் ஒருவருமே இல்லை: அங்கு முஸ்லிம் அதிகாரம்தான் இருக்கிறது. அதனால் இராணுவம் தமிழர்கள் மீது வெறியாட்டம் ஆடுகிறது. அந்தப் பகுதியில் எத்தனை பேர் உயிரிழந்திருப்பார்கள்? முந்நூறு பேருக்குமேல் பெண்கள் குழந்தைகளைக் கூடவெட்டிக் கிணற்றில் போட்டிருக்கிறார்கள். உடற்கட்டுள்ள ஆண்கள், கல்வியறிவு மிக்கவர்கள். எல்லோரையும் தெரிந்தெடுத்துக் கொல்கிறார்கள். இங்கே நிலைமை என்ன மாதிரி? சாப் பாடு இல்லை. மருந்து இல்லை நோயினால் குழந்தைகள் அவஸ் தைப்படுகிறார்கள். இப்போது வீரமுனை நிலைமை பற்றி அறிந்தீர்களா? கட்டடத்தை உடைத்து ஜன்னல், கதவு போன்றவற்றை முஸ்லிம் ஊர் காவல்படையினர் கொண்டு போகிறார்கள் என்றார் அவர். அவரிடம் விடை பெற்றுக்கொண்டு திரும்பினோம். கரிகாலனின் அலுவலகம் சென் றோம். அங்கு ஒரு தகப்பன் தமது மகளுடன் வந்திருந்தார். "தம்பி! இது என்ட மகள். இவள் நல்லாப்படிப்பாள். எவ்வளவோ கஷ்டப்பட்டு இவளைப் படிப்பிச்சன், ஆனா இப்பபோராட ஆக்கள் வேணும். அதால இவளை உங்களிட்ட ஒப்படைக்கிறேன் போராட்டம் முடியிறபோது இவள் உயிரோட இருந்தால் இவளைப் படிப்பிச்சுப் போடோணும்" என்றார். பொதுவாகளே தகப்பன்மார் பெண்பிள்ளைகளில் தான் கூடிய பாசம் வைத்திருப்பார்கள். பெண்பிள்ளையையே இப்படி ஒப்படைக்க ஒரு தகப்பன்முன் வருகிறார் என்றால்... இது தான் மட்டக்களப்புமண்ணின் மகிமை. படிப்பைக் காரணம் காட்டி பிள்ளைகளைப் பிரித்தெடுக்கும் எமதுசமூக அமைப்புடன் ஒப்பிடுவதே தவறு. (தொடரும்)
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் நினைவாலயம் 27-11-2007
-
img_2_1766157291474.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
karuna-group-member-thenral-as-sri-lankan-lrrp-soldier-v0-gzlaiityj68g1.jpg
-
karuna-group-member-thenral-as-sri-lankan-lrrp-soldier-v0-w3fx7ltyj68g1.jpg
- Old form of the Paathai type boat in waters of the Batticaloa , 1865 | This image also shows more than 5 Pilavu type boats and at least one mast boat inside the lagoon
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
கிளிநொச்சி A9 வீதியின் ஓராமாக அமைந்திருந்த வேறொரு விதமான மாவீரர் நினைவாலயம். 27-11-2007 | இது பாண்டியன் சுவையூற்று என்று நினைக்கிறன்... சரியாக ஞாபகமில்லை!
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் நினைவாலயம் 27-11-2007 'புலிக்கொடிக்கு அருகில் பறப்பது மாலதி படையணிக் கொடியாகும்'
-
WHATS THE NAME OF THIS STATUE (3).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
WHATS THE NAME OF THIS STATUE (2).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
WHATS THE NAME OF THIS STATUE (1).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 18 26.11.1990 கரிகாலனுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் யோகன் வந்தார். மட்டக்களப்புப் பிராந்தியத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். ‘பொதுமக்களின் இரண்டு ட்றக்ரர்களுக்கு இராணுவம் சுட்டுவிட்டது என்றார். என்ன நடந்தது? என்று கேட்டேன், 'தமது பொருள்களை எடுத்து வர ஊருக்குள் போனபோது இராணுவம் சுட்டு விட்டது' என்றார். ‘எந்த இடத்தில்' என்று கேட்டேன் 'வந்தாறுமூலை அம்பலத்தடியில்' என்றார். 'பொதுமக்களுக்கு ஏதாவது...’ என்று கேட்டேன் ‘அதைப்பற்றி தெரியவில்லை’ என்றார். மீண்டும் அடுத்த நாள் (03-10-90) அகதிகளைப்பார்க்கப் புறப்பட்டோம். அன்று செல்லும் குழுவுக்கு மட்டக் களப்பு அரசியல் பொறுப்பாளர் விசு தலைமை தாங்கினார். புறப்படும்போது பொம்மர்கள் வந்தன. எனவே ஒரு இடத்தில் தங்கிவிட்டோம். பொம்மர்களின் குழப்படி முடிந்தவுடன் மீண்டும் புறப்பட்டோம். வழியில் சந்தித்தவர்களிடம் எங்கே பொம்மர் தாக்கியது என்று விசாரித்தோம். இலுப்பையடிச்சேனை, களங்காட்டுமுனை ஆகிய பகுதிகளில் தான் தாக்குதல் நடந்ததாகவும் நாலு மாடுகள் இறந்ததாகவும் தெரிவித்தனர். சிவத்தப்பாலம் என்னும் இடத்தை அடைந்தோம். இந்த இடத்திற்குப் பக்கத்தில் ‘மீசைக்காரர்’ என்று அழைக்கப்படும் ஒருவர் எனக்குப் பரிச்சயமானவர். வயதானாலும் திட காத்திரமானவர். நான் அடிக்கடி அவரிடம் செல்வதுண்டு. எனவே ‘மீசைக்காரரிடம் போய்வருவோம்’ என்றேன். ‘அவர் இப்போது உயிரோடு இல்லை. இந்திய இராணுவத்தின் காலத்தில் அவரைக கொன்றுவிட்டார்கள்’ என்றார் யோகன். என்ன நடந்தது?' என்றுகேட்டேன். ‘இந்திய இராணுவம் பிரதான பாதையை அண்டிய கிராமங்களில் தேடுதல் நடவடிக்கையை தொடங்கிய சமயம் பயத்தினால் ஓடிய மக்கள் இவரது வாடியில் தமது ரீ.வி. போன்ற பொருட்களை வைத்துவிட்டு காட்டுக்குள் ஓடினர். இந்திய இராணுவத்தினர் இவரது வாடிக்கு வந்த சமயம் எல். ரி, ரியின் ரீவியா’ என்று கேட்டனர். இவர் ‘இல்லை’ யென்றார். இவரை அடிக்க முயன்றனர். ‘நீ அடித்தால் நானும் அடிட்பேன்’ என்றார். ஒருவன் அடித்தான், அடித்த இராணுவத்தை இடுப்பில் பிடித்து தலை கீழாக குத்தினார் மீசைக்காரர். அவரை அடித்தே கொன்று விட்டனர் இந்திய இராணு வத்தினர்’ என்றார். இதைப்போல எத்தனை விடயங்கள் தான் வெளியுல்கிற்குத் தெரியாமல் இருக்கின்றன. மீசைக்காரரின் வாடியைப் பார்த்தேன். சூழ்நிலை அமைதியாக இருந்தது. அந்து கம்பீரமான குரலை இனிக் கேட்க முடியாது என்ற கசப்பான உண்மையை ஜீரணித்துக்கொள்ளவேண்டி இருந்து. அவரது அன்புக்கு பாத்திரமான மாடுகள் நிமிர்ந்து பார்த்தன. பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்தபடி புறப்பட்டேன். போகும்போது விசுவிடம் “மட்டக்களப்பு அகதிகளின் உணவு நிலைமை என்ன மாதிரி?” என்று கேட்டேன். “கொஞ்ச நாட்களுக்கு சமாளிப்பார்கள். அதன் பிறகு தான் பெரும் உணவுப் பஞ்சம் வரவிருக்கிறது” என்றார். “அந்த கொஞ்ச நாட்களும் எப்படிச் சமாளிப்பார்கள்” என்று கேட்டேன். அறுவடை செய்த வயல்களில் கதிர் பொறுக்குகிறார்கள். அறுவடை செய்யப்பயந்து வெட்டப்படாமலிருக்கும் வயல்களில் யானைகள் மிதித்து சேதம் பண்ணியிருக்கின்றன. அந்த வயல்களிலும் போய் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டு வருகிறார்கள். அதன் பிறகுதான் சிரமம். பெரும் உணவுப் பஞ்சத்தை எதிர் நோக்க வேண்டியிருக்கும்” என்றார். நிவாரண உதவிகள் என்னமாதிரி? என்று கேட்டேன். “தற்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள் அதிலும்கூட முஸ்லிம்களின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது” என்றார். ஏன் அரசாங்க அதிபர் தமிழர் தானே? ஏன் அவரால் இயன்றளவு செய்யமுடியாதா?” என்று கேட்டேன். அரச அதிபர் தமிழர்தான். ஆனால் அவர் ஒரு பொம்மை மாதிரி இருக்கவேண்டியது தான். நடைமுறையில் அதிகாரம் அவரிடம் இல்லை. ஒரு முஸ்லிம் உதவி அரசாங்க அதிபரிடம் தான் என்றார். அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கேட்டேன். நிவாரணத்துக்கென வாங்கும் அரிசியை காத்தான்குடியிலுள்ள தனது மைத்துனனின் அரிசி ஆலையில் மட்டுமே கொள்வனவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது அவரது மில்லில் ஒரு மூட்டைக்கு மூட்டைக்கு ஆறு கிலோ அரிசி குறைவு இதை யார் எதிர்த்துக் கேட்கமுடியும். நிறுத்து தரும்படி கேட்க கூட்டுறவாளர்களுக்கு பயம், மூட்டைக்கு ஆறு கிலோ என்றால் அதை எப்படி; எந்தக் கணக்கில் பகிர்ந்தளிப்பது என்று கூட்டுறவுச் சங்கங்களும் கிராம சேவையாளர்களும் திணறுகின்றனர். இதே நிலைமை கூட சில நாட்களாகத்தான். அதற்கு முதல் எந்த உதவிகளும் இல்லை என்றார். உலகத்தை ஏமாற்ற நிவாரணம் கொடுக்கிறோம் என்று அரசு ஏமாற்ற முயற்சிக்கிறது. அந்த நிவாரணத்தில் கூட மூட்டைக்கு ஆறுகிலோ முஸ்லிம்களின் அதிகாரத்துக்குப் போகவேண்டிய நிலை நிலவுகிறது. “முஸ்லிம்களின் நிவாரணங்கள் என்னமாதிரி” என்று கேட்டேன். அவர்களுக்கு ஏதும் சிக்கல் இருப்பதாக தெரியவில்லை. அரசு இவர்கள் விடயத்தில் விசேட அக்கறை எடுக்கிறது. சண்டை தொடங்கியதும் நகரத்தில் இருந்த முஸ்லிம் வீடுகளுக்கு இராணுவம் சென்று உங்களை நாங்கள் பத்திரமாக அனுப்பி வைக்கிறோம் என்று கூறி வெபர் அரங்குக்கும் அருகிலுள்ள பள்ளிவாசல்களுக்கும் கொண்டு வரப்பட்டனர். பின்னர் அவர்களை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அனுப்பி முஸ்லிம்கள் அகதிகளாகின்றனர் என்று உலகிற்கு பிரச்சாரப்படுத்தி தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றப் பார்க்கிறது என்றார். “அரசியல் நோக்கங்களென்றால்.... என்றேன். 'இங்சேமுஸ்லிம்கள் அகதிளாகின்றனர் என்று முஸ்லிம் நாடுகளுக்கு பிரச்சாரப்படுத்திதான் உதவிகள் பெற முனைகிறது ஸ்ரீலங்கா அரசு” என்றார். தொடர்ந்து முஸ்லிம்களோ இராணுவமோ இப்படித்தான் செய்வார்கள் என்று தெரியும், ஆனால் ரெலோவினர் செய்வதை நீங்கள் கேட்டால்" என்றார் "சொல்லுங்கள்'' என்றேன். (தொடரும்)
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் நினைவாலயம்
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 17 23.11.1990 அந்தப் பெரியவரிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றோம். வழியில் ஒரு மரத்தடியில் சிலர் படுத்திருந்தார்கள். சில மூட்டை முடிச்சுக்களும் காணப்பட்டன. அவர்களை அணுகினோம். அங்கிருந்த பெண்மணியிடம் “ஏனம்மா ஏதாவது பள்ளிக்கூடத்திலோ, அல்லது யாரிடமாவது உதவிபெற்று கொட்டிலோ குடிசையோ அமைத்து இருக்கலாம் தானே? இந்த மாதிரி ஏன் மரத்துக்குக் கீழ் படுத் திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன் “பள்ளிக்கூடங்கள் எல்லாம் நிறைந்து விட்டன. எங்களுக்கு இனிமேல் தான் வாடியடிக்கவேண்டும். அதுக்கு வசதியில்லை. எங்களுடைய வீடு வாசலெல்லாம் இழந்து இப்படி அலைய வேண்டியிருக்கிறது” என்றார் அவர். ஏனம்மா உங்கள் வீடு எங்கே இருக்கிறது? என்று விசாரித்தேன். ‘செங்கலடி' என்றார். தொடர்ந்து "இப்போது அது வீடாக இருக்குமோ என்பது சந்தேகமே" என்றார். “வீட் டுக்கு என்ன நடந்தது?" என்றேன். அப்போது அங்கே இருந்த ஒரு பெரியவர் இடையே குறுக்கிட்டார். “இராணுவம் நகருக்குள் புகும்போது கூடவே வெற்று லொறிகளும் வரும்” என்றார். “வெற்று லொறிகளா, எதற்கு?” என்றேன், ஸ்டிக்கரோடு வரும் இராணுவத்துக்கு சாமான் ஏற்றத்தான்” என்றார். “கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள்” என்றேன். “இராணுவம் வரும் போது கூட்டங் கூட்டமாகத்தான் வீடுகளுக்குள் வரும். ஒவ்வொரு இராணுவத்தினரும் தமது பெயரைக் கொண்ட ஸ்டிக்கர்களைக் கொண்டு வருவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பொருள்களில் தனக்குத் தேவை யான பொருள்களின் மீது தமது ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டியதுதான். அப்டி ஓட்டப்படும் பொருள்கள் மீது மற்றவர் உரிமை கொண்டாட முடியாது. ஸ்டிக்கர் ஒட்டி முடிந்ததும் லொறியை அழைப்பார்கள். லொறியில் வருபவர்கள் பொருள்களை ஏற்றிக் கொண்டு போவார்கள் என்றார். “இது இராணுவத்தினரின் சொந்தத் தேவைக்குத்தான் போகிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?” என்றேன். அதற்கு அவர் “எனது நண்பர் ஒருவர் உயர் பதவியில் உள்ளார். அவருக்குச் சிங்களம் நன்றாகத் தெரியும். இவரது வீட்டிற்கு வந்த இராணுவத்தினரில் ஒருவன் இவரிடம் 'உமக்கு சிங்களம் பேசத் தெரியுமா?” என்று ஆங்கிலத்தில் கேட்டான். இவர் ‘தெரியாது’ என்றார் அதைக் கேட்டதும் அவன் முகம் பிரகாசமடைந்தது. அவரது வீட்டிலிருந்த தொலைபேசியை எடுத்து எவருடனோ தொடர்புகொள்ள முயற்சித்தான் - நீண்ட நேர பிரயத்தனத்தின் பின் அவனுக்குத் தொடர்பு கிடைத்தது. பேசினான்: ‘அப்பா நான் மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்தேன் - வீட்டுக்குத் தேவையான பொருள்கள் எல்லாம் சேகரித்து விட்டேன் - தங்கச்சியிடம் சொல்லுங்கள் அவள் கேட்ட தங்கநகைகள்தான் இன்னும் சேகரிக்க முடியவில்லை. வெகு விரைவில் அவற்றையும் சேகரித்துவிடுவேன் என்றான். முந்தித்தான் சிங்களவன் மொக்கன் என்று சொன்னோம். ஆனால் அவன் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு நேர்த்தியாகச் செய்து முடிக்கிறான்” என்றார். “எதைக் கொண்டு இப்படிச் சொல்கிறீர்கள்?” என்றேன். 1977ஆம் ஆண்டுக் கலவரத்தில் ஆட்களைக் கொல்வதிலும், வீடு வாசல் பொருள்களை எரிப்ப திலுமாக தாறுமாறாக நடந்து கொண்டான். இந்த முறை தமிழரைக் கொல்லும் பொறுப்பை முஸ்லிம்கள் கையில் ஒப்படைத்து, அவர்கள் தான் உங்களைக் கொல்கிறார்கள் என்ற தோற்றத்தை எமக்கு ஏற்படுத்துகிறான், அதே வேளை வீடுகளிலுள்ள பொருள்களைப் பத்திரமாகத் தமது வீடுகளுக்கு ஏற்றி அனுப்புகிறான்” இந்தப் பொருட்களை ஒரு இராணுவச் சிப்பாயால் சேகரிக்க, எத்தனை வருடம் பிடிக்கும்? தமிழரிடம் இருந்து எடுப்பதெல்லாம் உங்களுக்குத்தாள் என்று சொன்னால் தமது வாழ்க்கைத்தரம் விரைவில் உயர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் இராணுவத்தில் சேர முயற்சிப்பார்கள். சி ஏற்கனவே வீணாகக் சாகிறோம் என்ற மனநிலையில் இருக்கும் இராணுவத்தினரை சமாளிக்கவும் இந்த நடவடிக்கை உதவுகிறது” என்றார். ‘சரி முஸ்லிம்கள் தொடர்பாக நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்றேன். ‘இளனி குடிப்பவன் குடிக்க கோம்பை சூப்புபவனின் நிலைதான் இவர்களது நிலை ரி.வி., டெக், றேடியோ போல விலை உயர்ந்த பொருள்களை இராணுவத்தினர் எடுத்துக் கொண்டு போக எஞ்சியிருக்கும் பொருள்களையும் நிலை, ஜன்னல், கதவு போன்றவற்றை எடுப்பதிலும்தான் இவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள் என்றார். சரி தமிழரைக் கொல்வதையும், பெண்களைக் கற்பழிப்பதையும் பற்றி என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்டேன். சிங்களவன் இவர்களைச் சரியாக ஏமாற்றிவிட்டான். யாருடைய ஏவுதலாலோ இவர்கள் தாறுமாறாக நடந்து கொள்கின்றனர். தமிழர்களைத்தானே கொல்கிறார்கள், தமிழ் பெண்களைத்தானே கற்பழிக்கிறார்கள் என்று முஸ்லிம் சமூகம் தற்போது அசட்டையாக இருக்கலாம். நாளை இது இவர்களையே சூழும்' என்றார். 'அப்படியென்றால்? என்றேன். தமிழர்களைக் கொலை செய்துவிட்டு தமிழ்ப் பெண்களைக் கற்பழித்து விட்டு கொட்டியாவைத்தான் கொன்றோம் என்றபோது மனிதாபிமானம், தர்மம் என்பவற்றை ஒதுக்கிவிட்டு இராணுவத்தினரின் தீரச்செயலைப் புகழ்ந்தார்கள் சிங்களவர்கள். கொலைசெய்தும், கற்பழித்தும் பழக்கப்பட்ட இராணுவம் பின்னர் ஜே. வி, பி. பிரச்சினையில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர் களைக் கொன்றபோது, ரயர் போட்டுக் கொளுத்தியபோது தான் தமது தவறை உணர்ந்து கொண்டார்கள். அதேபோலத்தான் இன்று அல்லாவைத் தொழாத தமிழர்களைக் கொல்வது பாவமில்லை என முஸ்லிம் மக்கள் நினைக்கலாம். ஆனால் தமிழ் மக்களை கொலைசெய்து பழக்கப்பட்ட, கற்பழித்துப் பழக்கப்பட்ட முஸ்லிம் காடையர் நாளை தமது இனத்தில் இவ்வாறானசெயல்களில் ஈடுபடும்போதுதான் தமது தவறை உணர்வார்கள். அப்போது அவர்களைக் காப்பாற்ற யாருமே இருக்க மாட்டார்கள் என்றார். (தொடரும்)
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் நினைவாலயம்
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் நினைவாலயம்
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாலதி படையணியால் நிர்வகிக்கப்பட்ட ஓர் மாவீரர் நினைவாலயம் 2007>
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் நினைவாலயம் 2002<
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் நினைவாலயம் ஒன்றின் உட்புறம் 2006<