Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் (மாவீரர்) அவர்கள் சிறுவயதில் வாழ்ந்த வீடும் மனையும் முகவரி: குச்சம் ஒழுங்கை, ஆலடி, ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறை வடமேற்கு, வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை), யாழ்ப்பாணம், தமிழீழம் மரபுவழி ஆள்கூற்று: 9°49'25.6"N 80°09'50.1"E பதின்ம ஆள்கூற்று: 9.823772, 80.163903 வாய்வழி சாலை வரைபடம்: கிழக்கு தெற்காக: ஏபி 21 பருத்தித்துறை-பொன்னாலை வீதியால் வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து தொண்டைமானாறு நோக்கிச்செல்லும் போது இடது பக்கத்தில் உள்ள சிறி முத்துமாரியம்மன் ஆலயத்தை (இதற்குப் பின்னால்தான் 'திருமேனியார்' வெங்கடாசலம்பிள்ளை அவர்களால் கட்டப்பட்ட வைத்தீஸ்வரன் கோவில் உண்டு. இதன் கோபுரத்தில்தான் மகாத்மா காந்தியின் சிலை வைக்கப்பட்டுள்ளது, 2009இற்குப் பிறகு) தாண்டினால் வரும் எம்ஜிஆர் சதுக்கத்தை கடக்க வலது பக்கத்தில் குச்சம் ஒழுங்கை வரும். அதன் நுழைவுவாயிலில் கட்டுகொண்ட ஒரு மரம் உண்டு. அந்த மரத்தின் அடியில் எம்ஜிஆரின் படம் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குச்சம் ஒழுங்கைக்குள் சென்றால் இடதுபக்கம் இரண்டாவதாக உள்ள பற்றையடர்ந்த வெறுங்காணியே தலைவர் மாமாவின் வாழ்ந்த வீடிருந்த மனையாகும். தெற்கு கிழக்காக: ஏபி 21 பொன்னாலை-பருத்தித்துறை வீதியால் தொண்டைமானாற்றிலிருந்து பருத்தித்துறை நோக்கிச்செல்லும் போது யா/சிதம்பரக் கல்லூரியைத் தாண்ட வலது பக்கத்தில் வரும் இரண்டாவது ஒழுங்கையே எமக்கான குச்சம் ஒழுங்கை ஆகும். அதன் நுழைவுவாயிலில் கட்டுக்கொண்ட ஒரு மரம் உண்டு. அந்த மரத்தின் அடியில் எம்ஜிஆரின் படம் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குச்சம் ஒழுங்கைக்குள் சென்றால் இடதுபக்கம் இரண்டாவதாக உள்ள பற்றையடர்ந்த வெறுங்காணியே தலைவர் மாமாவின் வீடிருந்த மனையாகும். இவ்வீட்டின் பெயர் "ஈஸ்வரி வாசா" என்பதாகும். பார்வதியம்மாவின் மூத்த மகளான ஜெகதீஸ்வரியின் நினைவாய் இவ்வீட்டிற்கு பெயர்சூட்டப்பட்டது. இஃது அவருக்கே சொந்தமான சொத்தாகும். மற்றது, தலைவர் மாமாவிற்கென்று இவ்வுலகில் சொத்தெதுவுமில்லை! வெறுங்கையுடன்தான் வீரச்சாவடைந்தார். இது மேற்கு வாசலைக் கொண்ட வீடாகும். இவ்வீட்டின் முன் புறத்தில் கிளிச்சொண்டன் மாமரம் இருந்தது. அது நன்றாக சடைத்து வளர்ந்து வீட்டின் முன்புறத்திற்கு நல்ல நிழல் தந்தது. இதைத் தவிர, வீட்டைச் சுற்றி இரு வேப்ப மரங்களும் ஒரு முல்லை மரமும் நின்றிருந்தன. வீட்டின் முன்வாசலின் மேலே காற்றோட்டத்திற்கென்று அமைக்கப்பட்டிருந்த சிறுசிறு துளைகளின் நடுவில், வாசலிற்கு மேலே, கண்ணன் பசுக்களோடு நின்று புல்லாங்குழல் வாசிக்கும் படியான சிலை ஒன்று இருந்தது. அதைத் தாண்டி உட்சென்றால் கூடத்திற்குள் இலக்குமியின் சிலை ஒன்று அதே போன்ற காற்றோட்டத்திற்கென்று அமைக்கப்பட்ட சிறுசிறு துளைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருந்தது. இவ்வீட்டினுள் ஒக்கமாக ஆறு அறைகள் இருந்தன. 2004: 2005: 2010: 2010 வைகாசியில் தகர்க்கப்பட்ட பின்னர்: எஞ்சியிருப்பது மதிலின் ஒரு சிறு பகுதி மட்டுமே: 2023 நிலைமையின் படி
  2. தலைவரின் பெற்றோரிற்கு குருநாகல் வீதியில் இருந்த ஏலாலசோண என்னும் இடத்திலேயே கொடுக்கப்பட்டிருந்த தங்கும் விடுதி. இவ்விடுதி அன்றைய குருநாகல் – புத்தளம் முதன்மை வீதிகளை இணைக்கும் சிறு வீதி ஒன்றில் குருநாகல் அநுராதபுர வீதிக்கு அண்மையில் அமைந்தது. இங்கேயே எமது தலைமகன் கருவுற்றார்
  3. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் கருவாகிய விடுதியைக் காட்டும் வரைபடம் ஏலார சோணா, அநுராதபுரம், சிறிலங்கா "குருநாகல் வீதியில் தெற்கு நோக்கிச் செல்லும் போது கால் மைல் தூரத்திற்குள் சிற்றம்பலம் தியேட்டரை அடுத்து காணப்பட்ட இடமே Elala sona எனப்படும் பிரதேசமாகும். இவ்வீதியின் வலது புறமாக அமைந்திருந்ததே Elala Tomb என்றழைக்கப்படும் ஈழாளனின் நினைவுத் தூபியாகும். இத்தூபியின் வடக்குப்புறமாக ஆரம்பமாகும் தக்குணதகோபா வீதி என இன்றழைக்கப்படும் வீதியொன்று A12 வீதியான புத்தளம் வீதியுடன் சென்று இணைகின்றது. இவ்வீதியில் குருநாகல் அனுரதபுர வீதிக்கு அண்மையில் அமைந்திருந்த அரசாங்க ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிற்கான விடுதிகளிலொன்றிலேயே வேலுப்பிள்ளை அப்பாவிற்கான விடுதியும் அமைந்திருந்தது." --> வருண குலத்தான்
  4. அமரர் பிரபாகரன் மதிவதனி அவர்கள் சிறுவயதில் வாழ்ந்த வீடும் மனையும் முகவரி: பெருங்காடு வடக்கு, 1ம் வட்டாரம், புங்குடுதீவு, தீவகம், யாழ்ப்பாணம், தமிழீழம் வீட்டின் பெயர்: அருணோதயம் படிமப்புரவு: திரு. இசார எஸ். கொடிகாரா | படிம மூலம்: சன்டே ரைம்ஸ், 27/02/2005 வீட்டு வாசலின் படம்: படிம ஆண்டு: 2020
  5. திரு திருமதி வேலுப்பிள்ளை இணையர் அவர்களோடு பழ. நெடுமாறான் ஐயா மற்றும் இன்ன பிறர்
  6. அமரர் வேலுப்பிள்ளை பார்வதி (அன்னார் தமிழ்நாட்டிற்கு மருத்துவத்திற்காக வந்தபோது நோயாளர் காவுவண்டியிற்குள்ளேயே வைத்திருக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார், அப்போதைய திமுக-காங்கிரஸ் கூட்டாணி அரசால். ஏனென்றால் இந்த 60 வயதைத் தாண்டிய கிழவியால் இந்தியாவிற்கு ஊறாம்!) கருணாநிதிக்கு பார்வதியம்மா எழுதிய கடிதம்:
  7. தலைவர் மாமாவின் தாயார் அமரர். வேலுப்பிள்ளை பார்வதி (கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த போது) 'DMO மருத்துவர் அ.மயிலப்பெருமாள் அவர்களுடன்'
  8. தலைவர் மாமாவின் தாயார் அமரர். வேலுப்பிள்ளை பார்வதி (குயில்) சொந்த ஊர்: கொத்தியால் ஒழுங்கை, வல்வெட்டித்துறை தந்தை: வல்லிபுரம் தாய்: சின்னம்மா பிறந்த திகதி : 07/08/1931 இறந்த திகதி: 20/02/2011 அப்பப்பா: 'முதலியார்' தெய்வர் நாகலிங்கம் எ சம்பானோட்டிக்கரையார் எ ‘மெத்தைவீட்டு’ நாகலிங்கம் | மறைவு: 26/11/1909 அக்கா: தலைப்பிள்ளையாக குழந்தையொன்று பிறந்து இறந்துபோனது தம்பி: வேலுப்பிள்ளை (1936) ஆதாரம்: தேசியத்தலைவரின் பரம்பரை வரலாறு
  9. தலைவர் மாமாவின் தந்தையார் அமரராகிய போது அவரது இறுதி ஊர்வலத்தில் 10/01/2010 'தலைவர் மாமாவின் தாயார் தனது கணவனின் பூதவுடலிற்கு மலரஞ்சலி செலுத்துகிறார்'
  10. தலைவர் மாமாவின் தந்தையார் அமரர். திருவேங்கடம் வேலுப்பிள்ளை 10/01/1924 - 06/01/2010 உடன்பிறப்புகள்: இல்லை இவர் அக்கிரகாரத்துத்தம்பி எனவும் அழைக்கப்பட்டார். 'பந்தியில் அமர்ந்து உணவு உண்ணும் காட்சி'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.