Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. வடகிழக்கு படகு தொழிற்சாலையை ஆழிப்பேரலை உயிர்ப்பிக்கிறது 10/04/2005 (தகவல் எடுக்கப்பட்டது: தமிழ்நெற்றிலிருந்து) கிளிநொச்சிக்கு வடக்கே 15 கிலோமீற்றர் தொலைவில் முருகண்டி கோவிலுக்கு வடக்கே ஏ9 இல் உள்ள இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் நாளாந்தம் இரண்டு முதல் நான்கு படகுகள் விளைவிக்கக்கூடிய நவீன படகு கட்டுமான தொழில்துறை வளாகம் விரைவில் அமைக்கப்படும். 1960 களில் யாழ்ப்பாணத்திலிருந்த சேய்-நூர் நிறுவனத்தின் திறனான நீண்ட கால பட்டறிவுடையவர்களால் முதல் 18' 2" ஆடியிழைப் படகு (Fiberglass Boat) வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டது. இது ஆழிப்பேரலையால் மீன்பிடி முட்டுகளும் (gears) படகுகளும் அழியுண்டுபோன ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு அசுப்பாக (rapid) குறைதீர்ப்பு வழங்குவதற்கான 'வடகிழக்கு திட்டமிடுபவர்களின்' தீவிர விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. 2009 இற்குப் பிறகு சிறிலங்கா அரசின் நிழலில் வெளியிடப்பட்ட ஒரு ஆவணமான "Dossier on LTTE" என்பதில் கீழ்வரும் படிமங்கள் விடுதலைப் புலிகளின் படகு கட்டுமான தொழிற்சாலை என்று தவறுத்தகவலாக பதிவிடப்பட்டு அந்த ஆவணமானது பரப்புரைக்கு பாவிக்கப்படுகிறது! எதிர் காலத் தலைமுறைகள் இந்த ஆவணத்தை பாவிக்கும் போது சரி கவனமாக கையாளுதல் வேண்டும். ' "முல்லைத்தீவிலிருந்து வடமராட்சி கிழக்கு வரையிலான முழுப் பரப்பிலும் எதுவும் நிற்கவில்லை. பேரழிவு கடற்கரையையும் அதன் உள்பகுதியில் 800 மீட்டர் முதல் 1.2 கிலோமீட்டர் வரை கரையிலுமிருந்தும் மொத்தமாக ஆட்கொண்டது. கடலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் படகுகளும், மீன்பிடி முட்டுகளும் இல்லாமல் போய்விட்டன” என்று 26ஆம் திகதி ஆழிப்பேரலைக்குப் பிறகு விடுதலைப் புலிகளின் சமாதான செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். படகு கட்டுமான தொழிலை தடுதாளியாக புத்துயிர் பெறச்செய்ய வடகிழக்கிற்குளுள்ள மறைந்திருக்கும் திறன்களைப் பாவிப்பது பொருளுடையதாகும்.' 'ராஜதுரை கெங்கராயன் 1959 முதல் 1982 வரை காரைநகரில் உள்ள தோப்புக்காடு படகுத் தளத்தில் பணிபுரிந்தார். 1982க்குப் பிறகு அவர் சொந்தமாக படகுத் தொழிலை நடத்தினார். பொருண்மியம் அவரை நயந்ததோடு (wooed) புதிய படகுத் தளத்தை வெற்றிகரமான மானுறுத்தும் (manufacturing) நிலையமாக மாற்றும் அறைகூவலுக்கும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும், பெரிய மீன்பிடி வள்ளங்கள் மற்றும் உல்லாசப் படகுகள் கட்டுவதும் வரைதல் பலகையில் (drawing boards) உள்ளன.' 'முதலில், அறியப்பட்ட வடிவமைப்பிலிருந்து தொடங்கவும். அடுத்து, புதிய வடிவத்தையும் வடிவத்திற்கு ஏற்ப கட்டமைப்பையும் மாற்றவும். அளவை நீட்டித்தல் மற்றும் விரிவுபடுத்துதல் மற்றும் ஒப்பனை மாற்றங்களைச் சேர்ப்பது "மூல" படகில் செய்யப்படுகிறது.' 'விளைவிப்பிற்கான அச்சுகளை உருவாக்க மூலப் படகு பாவிக்கப்படுகிறது. அதே ஆடியிழைப் பாய்கள் ( fiberglass mats) மற்றும் பாலியஸ்டர் பிசின், வினையூக்கிகள் என்பன அச்சுக் கட்டலிற்கான ஆடியிழைப் பாய்களின் பல படலங்களை கட்டப் பாவிக்கப்படுகின்றன. பொதுவாக எட்டுப் படலங்கள் பாவிக்கப்படுகின்றன.' 'நிறமிக் கூழ் (Pigment paste) (கறுப்பு) மற்றும் ஜெல் பூச்சு ஆகியவை மூலப் படகின் உடலில் இருந்து அச்சுகளை பிரிக்க அனுமதிக்கின்றன. மூத்த கைவினைஞரின் கூற்றுப்படி, அச்சைக் கவனமாகப் பாவித்தால், இரண்டு பெரிய துண்டுகளாக, பல படகுகளை உற்பத்தி செய்யப் பாவிக்கலாம். 'மூலப் படகின் உடலில் இருந்து ஒரு பாதி அச்சு பிரிகிறது.' 'ஆடியிழைப் படலங்கள் 12 மணி நேரம் வரை உலர அனுமதிக்கப்பட்ட பிறகு முக்கிய அச்சுகளை உண்ணோட்டமிடும் (inspect) பணியாளர்கள்.' 'புதிய படகுகளை மானுறுத்த முதன்மை உடலின் இரு பகுதிகளுக்குமான அச்சுகள் பாவிக்கப்பட ஆயத்தமாக உள்ளன. உடலின் இரண்டு பகுதிகளை உருவாக்கி, இறுதியாக அவற்றை ஒட்டியிணைத்தால், அச்சு தன்னை இணைத்து - புதிய படகு ஒற்றை உருப்படியாக உருவாக்கப்படுவது போல் - வலிமையான படகு கிடைக்கும் என்று ரங்கராயன் உறுதியளிக்கிறார்.' 'முதல் புதிய படகுக்கான படலம் தொடங்குகிறது. அச்சில் உள்ள அடர்த்தியான நீல நிறமானது ஒரு பிரிப்பானாகவும், புதிய படகிற்கு நிறத்தையும் வழங்குகிறது. ஆடியிழை பாயின் நான்கு படலங்கள் மற்றும் பிசின்/வினையூக்கி பூச்சு ஆகியவை புதிய படகின் முக்கிய அங்கமாகும்.' 'முதன்மை உடலின் இரண்டாவது பாதியில் நான்கு படலங்கள் கைமுறையாக கட்டப்பட்டுள்ளன.' 'அச்சுகளின் மேற்பரப்புடன் நெருங்கிய தொடர்பை உருவாக்க படலங்கள் கைமுறையாக அழுத்தப்படுகின்றன.' 'இரண்டு பகுதிகளும் ஒன்றாக இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளதோடு இரண்டு பகுதிகளையும் இணைக்க சீமெந்து உட்பட கடினப்படுத்தல் கலவை பல படலங்களாக பாவிக்கப்படுகின்றன. புதிய படகின் கடல்-நீல வெளிப்புற பூச்சுகளை புதிய உடலுடன் சிதையாமல் அப்படியே விட்டுவிட்டு அச்சு பிரிக்கப்படுகிறது.' 'புதிய படகின் ஆடியிழை அமைப்பில் இருக்கைகளுக்கான கூடுதல் மர பொருத்தல்கள், வெளியிணைப்பு மின்னோடியை (OBM) இணைக்கும் அணியங்கள் (accessories) மற்றும் உட்பகுதிக்கான வலுவூட்டல் பொருத்துதல்கள் தேவைப்படுகிறது. இரு ஆட்களின் ஒரு நாள் எத்தனம் இன்னுமுள்ளது.' 'கூடுதல் உள் வேலைக்காக புதிய படகு ஒரு தனி இடத்திற்கு மாற்றப்படுகிறது.' 'அச்சுகளின் மூல மேல் பகுதியில் படகின் அணியத்தில் வழுக்காத மேற்பரப்பை வழங்குவதற்கான பொருத்துதல்கள் உள்ளன.' 'படகுத் தளத்தில் எந்த ஆண் பணியாளரும் எதிர்பார்க்கும் உடல் உழைப்பை தன்னால் எளிதாகக் கையாள முடியும் என்று பணிவலுவின் ஒரு பகுதியான அருள்மொழி (பெண் பணியாளர்) கூறுகிறார்.' 'ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட புலம்பெயர்ந்தோர் அமைப்பு ஒன்றின் நிதியுதவியுடன் படகுத் தள எத்தனத்தை மேற்கொண்டுள்ள பொருண்மியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிவலிங்கம் சுகுணன், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அளிப்பதாகக் கூறுகிறார். வடகிழக்கில் போராலும் ஆழிப்பேரலையாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி பலனைக் கொண்டு வரக்கூடிய இதேபோன்ற பொருண்மிய முயற்சிகளில் முதலீடு செய்ய புலம்பெயர்ந்த குமுகாயத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பவியலாளர்களை அவர் ஊக்குவிக்கிறார்.'
  2. சிங்களவரால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ ஊடகவியலாளர் இசைப்பிரியா " உயிர் இழந்த போதும் உணர்வுகளோடு மடிந்த வேங்கைகளே! காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பெயர் சொல்லும்! இனி காலம் யாவும் நீளும் போது உங்கள் பெயர் வெல்லும்! " சிங்களக் காடையர்களின் கொடூர பிடியில் சிக்கியிருக்கும் போது 'அருகில் இருப்பவர் சிங்களவரால் படுகொலை செய்யப்பட்ட உசாலினி ஆவார். இருவரின் மேலாடையும் கழற்றப்பட்டு பகரமாக துணியொன்று சுற்றிப் போர்ப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இசைப்பிரியா அக்காவின் இடது கை தோள்மூட்டில் இருக்கும் துணி அரத்தம் தோய்ந்த நிலையில் உள்ளது.'
  3. சிங்களவரால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ ஊடகவியலாளர் இசைப்பிரியா இவர் லெப். கேணல் தரநிலை உடையவர் ஆவார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.