Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. பெண் கடற்கரும்புலிகள் இருவர் கடலை பார்த்தபடி நிற்கின்றனர்
  2. கடற்கரும்புலி மேஜர் திசையரசி
  3. போராளிகள்
  4. கடற்கரும்புலி அண்ணா ஒருவர் நீரில்
  5. ரட்ணம் மாஸ்டர் (மாவீரர்- 2009/05/17) (இடது முதலாவது)
  6. அன்று மே 17ம் திகதி அதிகாலை மூன்றுமணியிருக்கும். ஊடறுப்பு அணிகளுடன் நந்திக்கடல் நடுவே கழுத்துமட்டத்தண்ணீருக்குள் சில நூறு தலைகளில் நானுமொருவன் நின்றுகொண்டிருந்தேன். அங்கு சிறியரக படகில் இயந்திரம் இல்லாமல் கேப்பாப்கேப்பாப்பிலவுலவு இராணுவ முன்னரங்கம் நோக்கி தடை உடைக்க அனுப்பப்பட்ட எமது அணிகளின் தொடர்பிற்காய் காத்திருந்தோம். ஆனால் எதிர்பார்த்ததிற்கு நேரெதிர்மாறாக அதிகாலையில் நான்கு பக்கத்திலும் முப்படைகளின் உதவியுடன் அணல்பறக்கும் உக்கிரமான சண்டை தொடங்கியது. ஊடறுத்து முன்நகரமுடியாதவாறு உடைப்பு நடவடிக்கை அசாத்தியமானது. இறுதி யுத்தத்தின் எமது கடைசி ஊடறுப்பு நடவடிக்கையும் முறியடிக்கப்பட்டுவிட்டதால் எமது ஆயுதப்போராட்டத்தின் அடுத்தகட்ட நிலை என்ன? என்ற வலிசுமந்த ஏக்கத்தோடு மீண்டும் முள்ளிவாய்க்கால் நோக்கி நகரவேண்டிய நிலை ஏற்பட்டது. நேரம் நான்குமணியை தாண்டி மெல்ல நகர்ந்துகொண்டே சென்றது. இராணுவத்தின் பரா வெளிச்சத்தின் நடுவே தலைகள் குறிபார்க்கப்படுகின்றன . துப்பாக்கி ரவைகள் சரமாரியாக செவிப்பறைகளை கிழிக்கின்றன. நீருக்குள் தலையை அமுழ்த்தி எவ்வளவுநேரம் இருக்கமுடியும் அப்படியிருந்தால் நீரில் மூச்சுத்திணறி இறக்க நேரிடும். தலையைத்தூக்கினால் துப்பாக்கி ரவைகளாள் மரணம் நிகழும். இதற்கிடையில் இரண்டுக்கும் நடுவே இரண்டுநிமிட நித்திரைக்காக தண்ணீரில் கண்மூடித்தூங்கிய அந்த நிமிடங்கள் நந்திக்கடலில் மரணத்தை கடந்த நிமிடங்களாகவே நெஞ்சில் பதிந்திருக்கின்றன. நிமிர்ந்து படுத்தபடி மூக்கும் வாயும் வெளியே தெரிய அயர்ந்து தூங்கிய அந்த நிமிடம் மரணத்தைப்பார்த்து மரணத்தோடு விளையாடிய நினைவுகள் நந்திக்கடலில் மரணத்தை கடந்த நிமிடங்களாகவே பதிவுசெய்யப்படுகின்றது. மரணபயம் மாணிடத்தின் பிறப்பு. ஆனால் முற்றும் இழந்தநிலையில் அதாவது இனி இழப்பதற்கு எதுவுமே இல்லையென்ற நிலையில் துறவறத்தை துறந்து மரணத்தைத்தேடி மரணத்தோடு விளையாடிய அந்த நிமிடங்களும் இரண்டுநிமிட உறக்கத்தைத்தேடிய தருணங்களும் நந்திக்கடலில் மரணத்தை கடந்த நிமிடங்களாகவே நெஞ்சில் நினைவிருக்கும். ஆம் நாம் விரும்பியோ விரும்பாவிட்டாலோ முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றோம். நேரம் காலை ஐந்து மணியை நெருங்குகின்றது. இறந்தவர்களையும் ,கையில் சிக்கிய காயப்பட்டவர்களையும், இறுகப்பற்றியவாறு போகுமிடம் தெரியாமல் மீண்டும் மேற்கு முள்ளிவாய்க்கால் நந்திக்கடற்கரையை வந்தடைந்தோம். ஒரு சிறிய வெளிச்சத்தில் பெரும்பாலானோர் ஒன்றுசேர்ந்தோம். ஒருவரையொருவர் இனம் கண்டுகொள்வதே மிகக்கடினம். இருந்தும் தெரிந்த முகங்களுடன் பேச வார்த்தைகள் வர மறுத்தன. அர்த்தங்கள் நிறைந்த மௌனமொழியால் வார்த்தைகள் தடுமாற உடையில் ஊறிய நீர்வடிய நின்ற அதேநேரம், நாம் நகர மாற்றுவழியின்றி வழிதேடிய வினாடிகள் நந்திக்கடலின் மரணத்தை கடந்த நிமிடங்களாகவே காட்சியளித்தன. வெடியோசையின் வெளிச்சத்தில் அருகில் வந்த தளபதி ஜெயம் அவர்கள் கூறியது! ஏற்கணவே தீர்மானிக்கப்பட்டதன்படி நானும் அவரும் வவுனியாவில் ஒரு ஆழ்கூற்றில் சந்திப்பதாக ரட்ணம் மாஸ்ரர் சொல்லியிருந்தார். அதனை முள்ளிவாய்க்காலில் மீண்டும்..... என்ற வார்த்தையுடன் அவர் கூறிய இறுதிவரிகள் நந்திக்கடலில் மரணத்தை கடந்த நிமிடங்களாகவே கலைந்துபோனது. அதேபோல் அரசியல்த்துறை பொறுப்பாளர் திரு நடேசன் தளபதி பிரபா ஆகியோர்  கேட்ட கேள்விகளும், எதிர்பார்ப்பும், மாற்றத்திற்கான மாற்றுவழியின்மையையே எடுத்துக்காட்டியதோடு மரணத்தின் விளிம்பில் புலம்பிய வினாடிகள் நந்திக்கடலின் மரணத்தை கடந்த நிமிடங்களாகவே என்னால் பார்க்கமுடிகின்றது. அதற்கும் மேலாக ரட்ணம் மாஸ்ரரிடம் நான் கேட்ட கேள்விகளும், அவர் சொன்ன பதில்களும் உயிர் உள்ள எனது இதயநாடிகள் உணர்விளந்து உயிரற்றசடலமாய் செத்து வீழ்ந்து செய்வதறியாது திணறிய அந்த இறுதிக்கணங்கள் நந்திக்கடலின் மரணத்தை வென்ற நிமிடங்களாகவே பதியப்படுகின்றன. நெஞ்சில் உரமிக்க விடுதலைத்தீயினை சுமந்து மக்களோடு இணைந்து பயனித்த மாபெரும் வரலாற்று நாயகனின் வழிநடந்த எம் விடுதலைப்போராட்ட அக்கினிப்பிரவேசம் அடுத்தகட்ட நகர்வின்றி நந்திக்கடலில் அணைந்து போகுதே...! என்ற மரணத்தின் விநாடிகளே நந்திக்கடலின் மரணத்தை கடந்த நிமிடங்களாக வரலாற்றுப்பதிவாகின்றன . ஆம் 2009 மே 17ம் நாள் மாலைப்பொழுது நெருங்கிவருகின்றது, பக்கத்தில் சுற்றத்தில் ஓரிரு தலைகள் மட்டுமே என் கண்களில் தெரிகின்றன. வெடியோசை ஒரு நொடி அமைதியாய் இருந்தது. பிணம்தின்னிக்களுகுகள் மக்களோடு ஒன்றறக்கலந்ததும் எம் துப்பாக்கிகள் குறிபார்ப்பதை நிறுத்தின. இதயநாடிகள் ஒடுங்குகின்றன உயிர்நாடி ஒருநொடிநின்று மீண்டும் துடிக்க ஆரம்பிக்கின்றது. உயிரற்ற சடலமாய் என் பாதங்கள் நகரத்தொடங்கின. நந்திக்கடலிலே மூழ்கிப்போனதா? தமிழரின் விடுதலைத் தீ வீறுகொண்டெழுந்து, கடாரம் வென்ற சோழனையும் , பண்டாரவன்னியனின் வாளெடுத்து போர்செய்த மாபெரும் தலைவன் எங்கே? என்று தேடிய விழிகளில் இருண்டன கண்கள். குறுட்டு வெளிச்சத்தில் நடக்கின்றோம் இன்றுவரை நந்திக்கடலின் மரணத்தை கடந்த நிமிடங்களின் நினைவுகளுடன். இது ஒரு போராளியின் பதிவிலிருந்து..... த .கதிரவன் https://www.thaaiman.com/2021/05/blog-post_8.html
  7. தரைக்கரும்புலிகள் "முலை தந்த உடல் இங்கு எரிகின்றதே - உமைக் காண விழியிரண்டும் விரிகின்றதே"
  8. தரைக்கரும்புலி 1998>
  9. வடகிழக்கு படகு தொழிற்சாலையை ஆழிப்பேரலை உயிர்ப்பிக்கிறது 10/04/2005 (தகவல் எடுக்கப்பட்டது: தமிழ்நெற்றிலிருந்து) கிளிநொச்சிக்கு வடக்கே 15 கிலோமீற்றர் தொலைவில் முருகண்டி கோவிலுக்கு வடக்கே ஏ9 இல் உள்ள இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் நாளாந்தம் இரண்டு முதல் நான்கு படகுகள் விளைவிக்கக்கூடிய நவீன படகு கட்டுமான தொழில்துறை வளாகம் விரைவில் அமைக்கப்படும். 1960 களில் யாழ்ப்பாணத்திலிருந்த சேய்-நூர் நிறுவனத்தின் திறனான நீண்ட கால பட்டறிவுடையவர்களால் முதல் 18' 2" ஆடியிழைப் படகு (Fiberglass Boat) வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டது. இது ஆழிப்பேரலையால் மீன்பிடி முட்டுகளும் (gears) படகுகளும் அழியுண்டுபோன ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு அசுப்பாக (rapid) குறைதீர்ப்பு வழங்குவதற்கான 'வடகிழக்கு திட்டமிடுபவர்களின்' தீவிர விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. 2009 இற்குப் பிறகு சிறிலங்கா அரசின் நிழலில் வெளியிடப்பட்ட ஒரு ஆவணமான "Dossier on LTTE" என்பதில் கீழ்வரும் படிமங்கள் விடுதலைப் புலிகளின் படகு கட்டுமான தொழிற்சாலை என்று தவறுத்தகவலாக பதிவிடப்பட்டு அந்த ஆவணமானது பரப்புரைக்கு பாவிக்கப்படுகிறது! எதிர் காலத் தலைமுறைகள் இந்த ஆவணத்தை பாவிக்கும் போது சரி கவனமாக கையாளுதல் வேண்டும். ' "முல்லைத்தீவிலிருந்து வடமராட்சி கிழக்கு வரையிலான முழுப் பரப்பிலும் எதுவும் நிற்கவில்லை. பேரழிவு கடற்கரையையும் அதன் உள்பகுதியில் 800 மீட்டர் முதல் 1.2 கிலோமீட்டர் வரை கரையிலுமிருந்தும் மொத்தமாக ஆட்கொண்டது. கடலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் படகுகளும், மீன்பிடி முட்டுகளும் இல்லாமல் போய்விட்டன” என்று 26ஆம் திகதி ஆழிப்பேரலைக்குப் பிறகு விடுதலைப் புலிகளின் சமாதான செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். படகு கட்டுமான தொழிலை தடுதாளியாக புத்துயிர் பெறச்செய்ய வடகிழக்கிற்குளுள்ள மறைந்திருக்கும் திறன்களைப் பாவிப்பது பொருளுடையதாகும்.' 'ராஜதுரை கெங்கராயன் 1959 முதல் 1982 வரை காரைநகரில் உள்ள தோப்புக்காடு படகுத் தளத்தில் பணிபுரிந்தார். 1982க்குப் பிறகு அவர் சொந்தமாக படகுத் தொழிலை நடத்தினார். பொருண்மியம் அவரை நயந்ததோடு (wooed) புதிய படகுத் தளத்தை வெற்றிகரமான மானுறுத்தும் (manufacturing) நிலையமாக மாற்றும் அறைகூவலுக்கும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும், பெரிய மீன்பிடி வள்ளங்கள் மற்றும் உல்லாசப் படகுகள் கட்டுவதும் வரைதல் பலகையில் (drawing boards) உள்ளன.' 'முதலில், அறியப்பட்ட வடிவமைப்பிலிருந்து தொடங்கவும். அடுத்து, புதிய வடிவத்தையும் வடிவத்திற்கு ஏற்ப கட்டமைப்பையும் மாற்றவும். அளவை நீட்டித்தல் மற்றும் விரிவுபடுத்துதல் மற்றும் ஒப்பனை மாற்றங்களைச் சேர்ப்பது "மூல" படகில் செய்யப்படுகிறது.' 'விளைவிப்பிற்கான அச்சுகளை உருவாக்க மூலப் படகு பாவிக்கப்படுகிறது. அதே ஆடியிழைப் பாய்கள் ( fiberglass mats) மற்றும் பாலியஸ்டர் பிசின், வினையூக்கிகள் என்பன அச்சுக் கட்டலிற்கான ஆடியிழைப் பாய்களின் பல படலங்களை கட்டப் பாவிக்கப்படுகின்றன. பொதுவாக எட்டுப் படலங்கள் பாவிக்கப்படுகின்றன.' 'நிறமிக் கூழ் (Pigment paste) (கறுப்பு) மற்றும் ஜெல் பூச்சு ஆகியவை மூலப் படகின் உடலில் இருந்து அச்சுகளை பிரிக்க அனுமதிக்கின்றன. மூத்த கைவினைஞரின் கூற்றுப்படி, அச்சைக் கவனமாகப் பாவித்தால், இரண்டு பெரிய துண்டுகளாக, பல படகுகளை உற்பத்தி செய்யப் பாவிக்கலாம். 'மூலப் படகின் உடலில் இருந்து ஒரு பாதி அச்சு பிரிகிறது.' 'ஆடியிழைப் படலங்கள் 12 மணி நேரம் வரை உலர அனுமதிக்கப்பட்ட பிறகு முக்கிய அச்சுகளை உண்ணோட்டமிடும் (inspect) பணியாளர்கள்.' 'புதிய படகுகளை மானுறுத்த முதன்மை உடலின் இரு பகுதிகளுக்குமான அச்சுகள் பாவிக்கப்பட ஆயத்தமாக உள்ளன. உடலின் இரண்டு பகுதிகளை உருவாக்கி, இறுதியாக அவற்றை ஒட்டியிணைத்தால், அச்சு தன்னை இணைத்து - புதிய படகு ஒற்றை உருப்படியாக உருவாக்கப்படுவது போல் - வலிமையான படகு கிடைக்கும் என்று ரங்கராயன் உறுதியளிக்கிறார்.' 'முதல் புதிய படகுக்கான படலம் தொடங்குகிறது. அச்சில் உள்ள அடர்த்தியான நீல நிறமானது ஒரு பிரிப்பானாகவும், புதிய படகிற்கு நிறத்தையும் வழங்குகிறது. ஆடியிழை பாயின் நான்கு படலங்கள் மற்றும் பிசின்/வினையூக்கி பூச்சு ஆகியவை புதிய படகின் முக்கிய அங்கமாகும்.' 'முதன்மை உடலின் இரண்டாவது பாதியில் நான்கு படலங்கள் கைமுறையாக கட்டப்பட்டுள்ளன.' 'அச்சுகளின் மேற்பரப்புடன் நெருங்கிய தொடர்பை உருவாக்க படலங்கள் கைமுறையாக அழுத்தப்படுகின்றன.' 'இரண்டு பகுதிகளும் ஒன்றாக இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளதோடு இரண்டு பகுதிகளையும் இணைக்க சீமெந்து உட்பட கடினப்படுத்தல் கலவை பல படலங்களாக பாவிக்கப்படுகின்றன. புதிய படகின் கடல்-நீல வெளிப்புற பூச்சுகளை புதிய உடலுடன் சிதையாமல் அப்படியே விட்டுவிட்டு அச்சு பிரிக்கப்படுகிறது.' 'புதிய படகின் ஆடியிழை அமைப்பில் இருக்கைகளுக்கான கூடுதல் மர பொருத்தல்கள், வெளியிணைப்பு மின்னோடியை (OBM) இணைக்கும் அணியங்கள் (accessories) மற்றும் உட்பகுதிக்கான வலுவூட்டல் பொருத்துதல்கள் தேவைப்படுகிறது. இரு ஆட்களின் ஒரு நாள் எத்தனம் இன்னுமுள்ளது.' 'கூடுதல் உள் வேலைக்காக புதிய படகு ஒரு தனி இடத்திற்கு மாற்றப்படுகிறது.' 'அச்சுகளின் மூல மேல் பகுதியில் படகின் அணியத்தில் வழுக்காத மேற்பரப்பை வழங்குவதற்கான பொருத்துதல்கள் உள்ளன.' 'படகுத் தளத்தில் எந்த ஆண் பணியாளரும் எதிர்பார்க்கும் உடல் உழைப்பை தன்னால் எளிதாகக் கையாள முடியும் என்று பணிவலுவின் ஒரு பகுதியான அருள்மொழி (பெண் பணியாளர்) கூறுகிறார்.' 'ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட புலம்பெயர்ந்தோர் அமைப்பு ஒன்றின் நிதியுதவியுடன் படகுத் தள எத்தனத்தை மேற்கொண்டுள்ள பொருண்மியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிவலிங்கம் சுகுணன், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அளிப்பதாகக் கூறுகிறார். வடகிழக்கில் போராலும் ஆழிப்பேரலையாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி பலனைக் கொண்டு வரக்கூடிய இதேபோன்ற பொருண்மிய முயற்சிகளில் முதலீடு செய்ய புலம்பெயர்ந்த குமுகாயத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பவியலாளர்களை அவர் ஊக்குவிக்கிறார்.'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.