-
Posts
12149 -
Joined
-
Days Won
12
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by கந்தப்பு
-
பதில் எழுதாத இக்கேள்விகளுக்கு மட்டும் பதில் அளியுங்கள்
-
20 வது கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று பதில் அளியுங்கள் 27 வது கேள்விக்கு யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சி ஒன்றின் பெயரை குறிப்பிடுங்கள். 27 -34 கேள்விகளுக்கு அக்கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் என்று பதில் எழுதுங்கள். 37 வதுக்கு யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் பெயரை சொல்லுங்கள்.
-
வெற்றி பெற வழ்த்துக்கள். நீங்கள் 20 , 27 வது கேள்விகளுக்கு விடையளிக்கவில்லை. இக்கேள்விகளுக்கு விடை என்ன? 27 - 34 கேள்விகளுக்கு நீங்கள் தெரிவு செய்த கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் என்பதற்கான விடைகளையும் எழுதுங்கள் 37 வது கேள்விக்கு நீங்கள் அனுரா என்று பதில் அளித்திருக்கிறீர்கள். அனுரா என்ற பெயரில் யாழ் தேர்தல் தொகுதியில் ஒரு வேட்பாளரும் போட்டியிடவில்லை. ஆனால் அனுராவின் தேசிய மக்கள் சக்தியினை குறிப்பிடுவது போல உங்களின் பதில் தெரிகிறது. அக்கட்சி சார்பாக யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் அதிக வாக்குகளை பெற்றுவார் என நீங்கள் நினைக்கும் வேட்பாளரின் பெயரை இங்கு எழுதுங்கள்
-
இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி
-
வெற்றி பெற வாழ்த்துகள்
-
10, 13 வது கேள்விகள் இந்தக்கட்சியை பற்றித்தான் கேட்டிருந்தேன். அவர்கள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு 14 இல் போட்டியிடுகிறார்கள். தவராஜா போல கடைசி நிமிடத்தில் உமாகரன் ராசையா, ஆனந்தி எழிழன், கஜதீபன் , லோஜன் ( கொழும்பு) போன்றவர்களை சேர்க்க நினைத்து இருந்தும் தவறுதலாக மறந்துவிட்டேன்
-
உங்களின் பதில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது வெற்றி பெற வாழ்த்துகள்
-
வெற்றிபெற வாழ்த்துகள்
-
பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி) 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) 28) வன்னி 29) மட்டக்களப்பு) 30)திருமலை 31)அம்பாறை 32)நுவரெலியா 33)அம்பாந்தோட்டை 34)கொழும்பு 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் 39) உடுப்பிட்டி 40) ஊர்காவற்றுறை 41) கிளிநொச்சி 42) மன்னர் 43) முல்லைத்தீவு 44) வவுனியா 45) மட்டக்களப்பு 46) பட்டிருப்பு 47) திருகோணமலை 48) அம்பாறை 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 54)தமிழரசு கட்சி 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்
- 138 replies
-
- 17
-
ஒவ்வொருவருடமும் மாநில மொழியான தமிழில் வந்த சிறந்த படத்துக்கு விருதுகள் வழங்குவது வழக்கம். இம்முறை பொன்னியின் செல்வன் 1 க்கு கிடைத்திருக்கிறது. முன்பு மகாநதி சேது விசாரணை முதல் மரியாதை , பெரியார் , பாரதி, தங்கமீன்கள், அசுரன் , கடைசி விவசாயி போன்ற படங்களுக்கு கிடைத்தபோது அப்பட்டங்களின் தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள் விருதினை பெற்றார்கள். இம்முறை பொன்னியின் செல்வன் 1 க்கான விருதினை சுபாஸ்கரன், மணிரத்தினம் அவர்கள் வாங்கினார்கள்.
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
கந்தப்பு replied to ஈழப்பிரியன்'s topic in அரசியல் அலசல்
நீங்கள் கேட்டதினால் போட்டியை நடாத்துகிறேன். தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் , கட்சிகள் விபரங்கள் வந்ததும் போட்டியை நடாத்துகிறேன். -
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
கந்தப்பு replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அனுராவின் காலில் விழ தவமிருக்கிறார் -
வாழை விமர்சனம்: மாரி செல்வராஜின் உன்னத படைப்பு தரும் தாக்கம் என்ன?
கந்தப்பு replied to பிழம்பு's topic in வண்ணத் திரை
நானும் பார்த்தேன் . சிவனணைந்தான் , அவரது அக்கா, அம்மா, நண்பன் , பூங்கொடி டீச்சர் நினைவுகளில்… -
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
கந்தப்பு replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
வைகோவின் மதிமுக தோன்றிய வரலாறு 2011 இல் யாழில் வந்தது. -
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
கந்தப்பு replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ஆழ்ந்த இரங்கல்கள் -
2016 இத்தொகுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக 63.237 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. 35.69% வாக்குவீதம் பெற்றது. அதிமுக 56,865 வாக்குகளை பெற்றது ( 31.82%). மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்ட பாட்டளி மக்கள் கட்சி 41,428(23.19%) வாக்குகளை பெற்றது. 4 இடத்தினை மாக்ஸிஸ கம்னியூஸ்ட் கட்சி (5.59%) பெற்றது. 5 ஆம் இடம் மக்கள் நோட்டாவுக்கு வாக்களித்தார்கள் (0.78%) . 6 இடம் பிஜேபி( 0.72%) . நாம் தமிழர் கட்சி இதை விட குறைவான வாக்குகளே இங்கு பெற்றிருக்கிறது. முக்கிமாக ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடித்த இந்த தேர்தலில் , இத்தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, பிஜேபி இடம் பிடித்தது . மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி திமுக கூட்டணிக்கு சென்றது. திமுக 93,730 வாக்குகள் பெற்று (48.69%) வெற்றி பெற்றது. அதிமுக 84,157(43.72%) வாக்குகளை பெற்றது. நாம் தமிழர்கட்சி 8,216(4.27%) வாக்குகளை பெற்றது. இப்பொழுது நடைபெற்ற தேர்தலில் திமுக 1,24,053(63.22%) , பாட்டளி மக்கள் கட்சி 56,296(28.69%) , நாம் தமிழர் கட்சி 10,602(5.40%) வாக்குகளை பெற்றது. இம்முறை அதிமுக போட்டியிடவில்லை . அதிமுக ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள்? இத்தேர்தலில் பாட்டளி மக்கள் கட்சிக்கு ஆதரவாக பிஜேபியின் அண்ணாமலை அதிமுக, ஏடப்பாடியையும் விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு பெரிய தண்டனை வழங்கியிருக்கிறார்கள். பல தொகுதியில் கட்டு பணத்தினை இழந்திருக்கிறார்கள் . உண்மையில் நாங்கள்தான் எதிர்கட்சி. திமுகவுக்கு எதிரான வாக்குகளை எங்கள் கூட்டணிக்கு வழங்குங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் . இதனால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்க விரும்பிய அதிமுக ஆதரவாளர்கள் பலர்கோபத்தினால் திமுகாவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என சில இணையத்தளங்களில் எழுதியிருக்கிறார்கள்
-
ஆழ்ந்த அனுதாபங்கள்
-
விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
கந்தப்பு replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
கந்தப்பு replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
உரிய விளக்கம் கோரல்... நியூ உதயன் பப்ளிக்கேசன் பிறைவேட் லிமிடெட், ஈஸ்வரபாதம் சரவணபவன், பணிப்பாளர், நியூ உதயன் பப்ளிக்கேசன் பிறைவேட் லிமிடெட் யசோதை சரவணபவன், பணிப்பாளர், நியூ உதயன் பப்ளிக்கேசன் பிறைவேட் லிமிடெட், லக்ஷ்மி சரவணபவன், பணிப்பாளர், நியூ உதயன் பப்ளிக்கேசன் பிறைவேட் லிமிடெட் நால்வரும் 361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம் கேள்விக் கடிதம் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி அம்மன் ஆலய முகாமைத்துவ சபையின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களின் அறிவுறுத்தலில் எழுதும் கேள்விக் கடிதமாவது, 04.07.2024 அன்று தங்களது நிறுவனத்தினால் பிரசுரிக்கப்படும் உதயன் நாளிதழின் முன்பக்கத்தில் “மாணவிகள் குளிக்கும் வீடியோக்கள் பதிவு! ஆறு.திருமுருகனால் நடத்தப்படும் சிறுவர் இல்லம் இழுத்துமூடல் எனும் தலைப்பில் செய்தியொன்று தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. குறித்த செய்தி பிரசுரிக்கப்பட்ட 04.07.2024 இற்கு முன்பதாக அவ்வாறான எந்தவொரு உத்தரவும் வடமாகாண கெளரவ ஆளுனரினால் வழங்கப்பட்டிருக்கவில்லை. மேலும் மாணவிகள் குளிக்கும் வீடியோக்கள் பதிவு எனும் முற்றிலும் பொய்யான விடயம் குறித்த செய்தியில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேற்படி முகவரியில் தங்கள் நிறுவனம் அமைந்துள்ள ஆதனமானது எனது கட்சிக்காரர் தலைவராக கடமையாற்றும் சிவபூமி அறக்கட்டளைக்கு நன்கொடையளிக்கப்பட்டு விட்டது என்பதாலும் குறித்த ஆதனத்திலிருந்து தங்களை வெளியேற்ற எனது கட்சிக்காரர் நடவடிக்கை எடுத்து வருகின்றார் என்பதனாலும் அவர் மீதுள்ள குரோதத்தின் காரணமாக குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதென எனது கட்சிக்காரர் கருதுகின்றார். எனது கட்சிக்காரர் கடந்த இரு தசாப்த காலத்தில் தனது நாவன்மையின் மூலம் சேகரித்த நிதியைக் கொண்டு பல்வேறு சமய சமூகப் பணிகளை செய்து வருவதோடு ஈழ சைவ சமயிகளினுடைய குறிப்பிடத்தக்க தலைவராகவும் இருந்து வருகின்றார். தங்களது பத்திரிகையில் வெளியிடப்பட்ட முற்றிலும் பொய்யான செய்தியானது பொதுப்பணிகளில் ஈடுபட்டு வரும் எனது கட்சிக்காரரை இழிவுபடுத்தும் தன்மையானது என்பதோடு அவரது நற்பெயருக்கு இழுக்கேற்படுத்தும் தீய நோக்கம் கொண்டதுமாகும். எனவே இக் கடிதம் கிடைத்து 48 மணத்தியாலங்களிற்குள் தங்ளால் பிரசுரிக்கப்படும் உதயன் நாளிதழில் 04.07.2024ம் திகதி வெளி வந்த செய்திக்கு நிகரான வடிவத்தில் எனது கட்சிக்காரரிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்பதுடன், இக் கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் ரூபா 300 மில்லியன் நட்ட ஈடாக வழங்க வேண்டும் என எனது கட்சிக்காரர் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன். மேற்குறித்த விடையங்களை உரிய காலத்துள் செய்ய தவறுமிடத்து தங்களுக்கு எதிராக பொருத்தமான நீதிம்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை இத்தால் தங்களிற்கு அறியத்தருகின்றேன். கலாநிதி குமாரவடிவேல் குருபரன் LL.B (Hons) (Colombo) B.C.L (Oxford) Ph.D (London) Attomey-at-Law (Sri Lanka) Notary Public and Commissioner for Oaths.