Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

RishiK

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by RishiK

  1. கிளிநொச்சியில் அடையாளம் தெரியாத நபர்களினால் 26 வயதான இளம் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (16-12-2024) மாலை 6 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள கனகாம்பிகை குளம் முன்பாக இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். புன்னாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அழகுக் கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் நிலையில் கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்துள்ளார். இந்த நிலையில் குறித்த இளம் பெண் வழமை போன்று தான் தங்கும் இடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த சமயம், வான் ஒன்றில் சென்ற குழுவினர் கட்டாயப்படுத்தி பெண்ணை ஏற்றி சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேவேளை, குறித்த பெண்ணின் கைப்பை மற்றும் தொலைபேசி ஆகியன கண்டெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரம தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவம் திட்டமிட்டு இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில், பூர்வாங்க விசாரணைகள் குற்றத்தடுப்பு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சியில் இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட யாழ்ப்பாண இளம் பெண்! - ஜே.வி.பி நியூஸ்
  2. அப்படி ஒரு பெஞ்ச் மார்க்கை அமைக்க முயலுகிறார்கள்.
  3. இலங்கையில் மருத்துவம் பார்க்க வருகிறர்களா அல்லது இந்தியாவை சுடேற்றவா?
  4. ரணிலின் லக்குக்கு கதிரையில் இருந்தாலும் இருந்து விடுவார்.
  5. அது முதல் வருடப் படிப்பு, மூன்று வருடம் முடித்தால் , பிறகு உள்வாரிக்கும் வெளிவாரிக்கும் வித்தியாசம் இல்லை.
  6. எல்லோரும் வடக்கில் தமிழிலும் தெற்கில் சிங்களத்திலும் கதைத்தாலே இனப்பிரச்சனை இல்லாது போயிருக்கும். ஹிந்தி மொழியைப் போல் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் கலந்த ஒரு புதிய மொழியை உருவாக்க முடியாதா?
  7. சத்தியமூர்த்தி ஐயா மேலுள்ள முறைப்பாடுகளையும் விரைவாகப் பொலிசில் வழக்கு பதிந்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
  8. பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் புதிய சபாநாயகர்.. நாளை வெளியாகும் தீர்மானம் புதிய சபாநாயகராக, தேசிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் ஜெகத் விக்ரமரத்னவை(Jagath Wickramaratne) நியமிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆளும் கட்சி தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. புதிய சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் விக்ரமரத்ன, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பொலன்னறுவை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானவராவார். இந்தநிலையில், புதிய சபாநாயகராக அவரை நியமிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் புதிய சபாநாயகர்.. நாளை வெளியாகும் தீர்மானம் - தமிழ்வின்
  9. யாழ். போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரீ. சத்தியமூர்த்தியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டமை தொடர்பாக, பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றில் முன்னிலை இது தொடர்பாக இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையாகியிருந்தார். இதன்போது அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு - தமிழ்வின்
  10. பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வார்த்தைப் பிரயோகம் காரணமாக இராஜதந்திர ரீதியில் இலங்கை பெரும் நெருக்கடியொன்றை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தெரிய வருகையில், இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத்துணி விநியோகத்துக்குத் தேவையான துணிகளை சீன அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அதனை இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது. சீனத் தூதுவர் இந்நிலையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் அதனை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கையளித்திருந்தார். இதன்போது சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீன மக்கள் குடியரசு (People’s Republic of China (PRC) என்பதற்குப் பதிலாக சீனக்குடியரசு ( ‘Republic of China’ ROC) என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார். சீனக்குடியரசு என்பது தாய்வானைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவதுடன், தாய்வானுடன் வரலாற்று ரீதியாக சீனா பெரும் பகைமை பாராட்டி வருகிறது. இந்நிலையில் மக்கள் சீனக்குடியரசின் அன்பளிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பயன்படுத்திய வார்த்தைகள் காரணமாக சீன அரசாங்கம் சற்று அதிருப்தி கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக ராஜதந்திர நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் அறிவிப்பால் ராஜதந்திர ரீதியில் இலங்கைக்கு நெருக்கடி - தமிழ்வின்
  11. சபாநாயகர் பதவிக்காக எதிர்க்கட்சியில் இருந்து ஒருவரின் பெயர் முன்மொழியப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் அந்நபரின் பெயர் முன்மொழியப்படும் எனவும் நளின் பண்டார கூறியுள்ளார். சபாநாயகர் பதவிக்கு எதிர்கட்சி முன்மொழியவுள்ள நபர் - தமிழ்வின் சபாநாயகர் நடுநிலைமையாக இருக்கவேண்டி இருப்பதால் சுயேச்சை உறுப்பினர் அர்ஜுனவே பொருத்தமானவர்.
  12. கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். இரண்டாம் மொழி இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எமது திறன் மற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து! - ஐபிசி தமிழ்
  13. யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் கடலில் நீரில் மூழ்கிய இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினால் காப்பாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றையதினம் (14-12-2024) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கசூரினா கடற்கரைக்கு வருகை தந்த யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து செயற்பட்ட பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும், கடற்படையினரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட யுவதிக்கு பாதிப்புகள் இல்லாத நிலையில் அவர் வீடு சென்றுள்ளார். இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகுந்த நேரத்தில் விரைந்து செயற்பட்டு 2 உயிர்களையும் காப்பாற்றிய, உயிர்காக்கும் பொலிஸ் பிரிவினருக்கும், கடற்படையினருக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். யாழில் கடலில் மூழ்கிய இளைஞன், யுவதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! - ஜே.வி.பி நியூஸ்
  14. நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஸ்வி சாலிஹ்இ தலைமைத்துவத்தில் நம்பிக்கை மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திஇ தனது தொழில்முறை தகுதிகள் பற்றிய விபரங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் அவர்இ சான்றிதழ்கள் மூலம்இ தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவக் கல்லூரியில் 1986இல் பெற்ற ஆடீடீளு பட்டம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் லாரிங்கோ ஓட்டோரினோலஜி டிப்ளோமா (னுடுழு) உட்பட தனது தகுதிகளை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். https://tamilwin.com/article/deputy-speaker-of-parliament-s-qualifications-1734102374
  15. பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் அவரது கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்திருந்ததுடன், பலர் அவரது கல்வித் தகைமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் உறுப்பினரான தலதா அத்துக்கோரள உள்ளிட்டோர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இது தொடர்பான கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இந்தநிலையில், இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல்ல அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, எமது அரசாங்கத்தின் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) இன்றையதினம் தெரிவித்திருந்தார். மேலும், மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி உறுதியளித்திருந்த நிலையில், சபாநாயகரின் தற்போதைய பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட ரன்வல, தான் பொய்யான கூற்றுக்கள் எதனையும் முன்வைக்கவில்லையென்றாலும், சில ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தற்போது தனது கல்விப் பதிவேடுகளை உறுதிப்படுத்த முடியவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். “நான் முனைவர் பட்டம் பெற்ற ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்புகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில், தான் பதவி விலகுவதாக தெரிவித்த சபாநாயகர், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர் - தமிழ்வின்
  16. யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் தரம் 9இற்குக் கீழான வகுப்புக்களை பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிறுத்துமாறு கல்வி நிறுவன நிர்வாகிகளிடம் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கோரியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலர் தலைமையில் நேற்று (12.12.2024) புதன்கிழமை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலரினால் பின்வரும் விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அறிவுறுத்தல்கள் உரிய தரப்புகளுக்கு வழங்கப்பட்டன. அறிவுறுத்தல்கள் 1. பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி மாலை வேளையில் பயணிக்கும் யாழ்ப்பாணம் - உசன் வரையான இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவையை கெற்பேலி வரையில் நீடிப்பு செய்யுமாறு இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கு யாழ். மாவட்ட செயலர் அறிவுறுத்தினார். 2. மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மாவட்ட செயலர் அறிவுறுத்தல் வழங்கினார். 3. முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தனியார் கல்வி நிறுவனங்கள் தரம் 9 இற்குக் கீழ்ப்பட்ட வகுப்புகளை வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்திலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாகவும் மாணவர்களின் இணை பாடவிதானச் செயற்பாடுகளுக்காகக் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதை நிறுத்த தனியார் கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட செயலர் கேட்டுக்கொண்டதுடன், இது தொடர்பில் பிரதேச செயலாளர்களை உரிய கல்வி நிறுவனங்களுக்கு தெளிவுபடுத்துமாறும் கேட்டுக்கொண்டார். உரிய நடவடிக்கை மேலும், போதைப்பொருள் பாவனை மற்றும் மாவட்ட ரீதியாக கிடைக்கப் பெற்ற 21 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் தொடர்பாகவும் அதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில், உதவி மாவட்ட செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். யாழ். மாவட்டத்தில் தனியார் வகுப்புக்கள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் - தமிழ்வின்
  17. யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கேள்வி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை (Ramanathan Arjuna) வெளியேற்றுமாறு அரச அதிகாரிகள் கோரியதால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி துமளி ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலையிட்ட நிலையில் நிலைமை சுமூகமானதாக எமது செய்தியானர் தெரிவித்துள்ளார். அர்ச்சுனா எம்.பியால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி துமளி - ஐபிசி தமிழ்
  18. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க வருவாரெனின், வாசலிலேயே வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று யாழ். போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு வருகைத் தந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், தன்னை “சேர்” என்று அழைக்குமாறும் கூறி எம்மோடு முரண்பட்டார். அவரை சேர் என்று அழைக்க முடியாது என்று பதிலளித்ததற்கு, என்னை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து அகற்றுவேன் எனவும், நாடாளுமன்றத்திற்கு அழைத்து கேள்வி கேட்பேன் என்றும் கூறினார். அத்தோடு, யாழ். போதனா வைத்தியசாலைக்குள் உள்நுழைந்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பம் விளைவிப்பதற்கு இடமளிக்க முடியாது. மீண்டும் ஒருமுறை அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க முற்படுவராயின் அவர் வாசலிலேயே வைத்து தடுத்து நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு உத்தியோகத்தரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/parliamentarian-archuna-may-be-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.