Everything posted by RishiK
-
யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் விபத்து - ஐவர் படுகாயம்!
சொகுசு பேருந்துகளில் Black box இற்கு ஒத்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு கண்காணிக்கப் படவேண்டும்.
-
ஜனாதிபதி மாளிகையை இடமாற்றும் திட்டம் ஒத்திவைப்பு
பாராளமன்றத்திற்கு அருகில் மாற்றம் செய்தால் பாதுகாப்பு செலவீனங்களை மிச்சப்படுத்தலாம்.
-
Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம்
வெளிநாட்டு கம்பனிகளுக்கு software developer ஆக தொழில் புரியும் இளைஞர்கள் அதியுச்ச tax bracket இல் வர இடமுண்டு.
-
நாடு திரும்பினார் ஜனாதிபதி!
இந்தியா, சீனா உதவிகள் கடன்கள் இல்லாமல் இருக்க வேண்டும், அது வரை மாமா மச்சானை அனுசரித்து தான் போக வேண்டும்.
-
இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி!
இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைத்து தான் சிறீ வாத்தியார் கனடா சுற்றுலா சென்றாரோ?
-
மாணவர்களுக்கு 6,000 ரூபா கொடுப்பனவு
சரியான முறையில் போய் சேர்ந்தால் சந்தோசம்.
-
யோஷித்த ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு
அத்துடன் மகிந்தாவின் மூன்றாவது மகனின் சற்றலைட்டுக்கு என்ன நடந்தது என்றும் விசாரிக்கவும்.
-
இலங்கையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜை விடுதலை.
நல்ல விடயம், இப்பொழுது அவரது பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதா ?
-
யாழ். சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம் - நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம்
தீர விசாரித்துப் பாருங்கள், அந்த உறுதி மொழி யாராவது முன்னாள் அரசியல்வாதியினால் கொடுக்கப்பட்டிருக்கும்.
-
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் வடக்கு ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு
அவர்களும் விரும்பி வரவேண்டும்.
-
யோஷித்த ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்சவை விசாரணையொன்றுக்காக முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. மகிந்த ராஜபக்வின் இரண்டாம் புதல்வரும், கடற்படை அதிகாரியுமான யோஷித்த , மகிந்தவின் மெய்ப்பாதுகாவலரான ஓய்வுபெற்ற இராணுவ கேணல் நெவில் வன்னியாரச்சி ஆகியோருக்கு எதிராக பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் , குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையில் நேற்றைய தினம் (16.12.2024) வாக்குமூலம் பெறுவதற்காக யோஷித்த மற்றும் நெவில் வன்னியாரச்சி ஆகியோருக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது. https://tamilwin.com/article/cid-summons-yoshitha-rajapaksa-1734426959#google_vignette
-
சாணக்கியன், சுமந்திரன் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்..!
தோல்வியின் தாக்கம் ஒரு துளி கூட இல்லை, very positive person.
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
அதை அனுரா ஐயாதான் வெளிப்படுத்த வேண்டும்.
-
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவினங்கள் வெளியீடு!
அடக் கடவுளே இவ்வளவு செலவா?
-
மக்களின் பணத்தை கொள்ளையடித்தோரின் தகவல் வெளியானது – 300 இலட்சம் பெற்று முதலிடத்தில் முன்னாள் பிரதமர்
எல்லாம் சட்டப்படி நடந்துள்ளது ஆனால்?
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
ஊரவர்கள் யாராவது சாவகச்சேரி நீதிமன்றத்தை அணுகி வேலை தடை உத்தரவு பெற்று வேலையை உடனடியாக இடைநிறுத்தவும்.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
றோட்டு வேலை தொடர்ந்து நடக்கின்றதா?
-
அர்ச்சுனாவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு! கேள்விக்குட்படுத்தப்படும் எம்.பி பதவி
அருச்சுனாவிற்கும் இந்த issues பற்றி தெரிந்து இருக்கும், இலங்கை தேர்தல் சட்டத்தில் தெளிவாக உள்ளது.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு! கேள்விக்குட்படுத்தப்படும் எம்.பி பதவி
அருச்சுனாவின் இனிங்ஸ் முடிபுக்கு வருமா?
-
ஞானசாரர் கைவசம் இருக்கும் முக்கிய தகவல்கள்! அநுரவிடம் வாய்ப்பு கோருகிறார்
நாட்டில் அதிகரித்து வரும் இனவெறி மற்றும் மத வெறி குறித்து தாம் சேகரித்துள்ள முக்கியமான தகவல்களைப் பெற்று விவாதிக்க ஒரு முறையான நிறுவனத்தை நிறுவுமாறு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்(Galagoda Aththe Gnanasara Thero), ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய ஞானசார தேரர், குற்றப் புலனாய்வுத் துறையிடம் இல்லாத தகவல்கள்கூட தன்னிடம் இருப்பதாகக் கூறியுள்ளார். அநுரவின் மதிப்புமிக்க கருத்துக்கள் எனினும், இந்தத் தகவல்களை தாம் வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. தாம் இந்த அரசாங்கத்தை நம்புவதால், அவற்றை அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு உண்மையான நிறுவனத்திடம் ஒப்படைக்க விரும்புவதாக தேரர் குறிப்பிட்டுள்ளார். மகா சங்கத்தினராக, பண்டைய காலங்களிலிருந்து நாட்டையும் தேசத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு தங்களுக்கு உள்ளது. கடந்த காலங்களிலும் தாங்கள் அந்த கடமைகளை செய்தபோதும், துரதிஸ்டவசமாக, எவரும் தங்களின் பேச்சைக் கேட்கவில்லை. அதற்கு பதிலாக, நாட்டில் இனவெறியை உருவாக்கியவர்கள் போல தாம் நடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை இனவெறி மற்றும் மத சகிப்பின்மை இல்லாத சூழலை உருவாக்க இப்போது நாடு ஒரு நல்ல வாய்ப்பைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ள ஞானசாரர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்குச் செல்வதற்கு முன்னர் சில மதிப்புமிக்க கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார். தனது உரையில், எந்தவொரு இனவெறி நடவடிக்கைகளையும் அனுமதிக்கப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். எனவே இந்த வாக்குறுதியை தாம் மரியாதையுடனும் ஒப்புதலுடனும் முழுமையாக ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பல வருட இனவெறி மற்றும் பிரிவினைவாதத்தால் இலங்கை தேசம் சோர்வடைந்துள்ளது என்றும் தேரர் இதன்போது சுட்டிக்காட்டினார். ஞானசாரர் கைவசம் இருக்கும் முக்கிய தகவல்கள்! அநுரவிடம் வாய்ப்பு கோருகிறார் - தமிழ்வின்
-
இடைநிறுத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு!
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பொலிஸாரின் பாதுகாப்பு தவிர்ந்த அனைத்து ஆயுதப்படைகளின் பாதுகாப்பும் எதிர்வரும் வாரத்தில் இருந்து நீக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda Wijepala) இன்று (17.12.2024) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மதிப்பீட்டின் பின்னர் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 1200 மில்லியன் ரூபா மேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கென ஏனைய கடமைகளில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகளும் நீக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசாங்கம் இதுவரை செலவிட்ட பணத்தில் சுமார் 1200 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இடைநிறுத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு! - தமிழ்வின்
-
யாழ். சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம் - நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம்
யாழ்.சாவகச்சேரி நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் நடத்திய போராட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த போராட்டமானது இன்று (17) சாவகச்சேரி நகரசபை முன்னால் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் கட்டப்பட்ட புதிய கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக பகிரங்கமாக கேள்வி கோரப்பட்டுள்ளது. பிரதான நுழைவாயிலை பூட்டி கடைகளை கட்ட ஆரம்பிக்கும்போது 2000 ஆம் ஆண்டு யுத்தத்தில் கடைகள் அழிவடைந்த வர்த்தகர்களுக்கு புதிய கடைத் தொகுதியில் முன்னுரிமை வழங்கப்படும் என கடைகள் வழங்கப்படும் என நகர சபையால் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த வாக்குறுதியை மீறி கேள்வி கோரப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விண்ணப்பதாரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்க வேண்டும் என்ற நிபந்தினையை உள்ளடக்க வேண்டும் எனக்கோரியுமே இந்தப் போராட்டம் இடம்பெற்றது. இதன்போது போராட்டக்காரர்கள் நகரசபையின் பிரதான நுழைவாயிலை பூட்டி போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த சாவகச்சேரி காவல்துறையினர் பூட்டை உடைத்து அகற்றியதோடு போராட்டகாரர்களை கலைக்க முற்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மோத முயற்சி இதனால் நுழைவாயிலில் அமர்ந்தவாறு அவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். இத்தருணத்தில் நகரசபை வாகனங்களுக்கு பொறுப்பான அதிகாரி கழிவகற்றும் உழவியந்திரத்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மோத முயற்சித்ததோடு அதை வீடியோ எடுத்த ஊடகவியலாளரையும் கடுமையாக அச்சுறுத்தினார். இதனால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதேவேளை, குறித்த கேள்வி கோரலை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். யாழ். சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம் - நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம் - ஐபிசி தமிழ்
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
எதிர்கால சபாநாயகருக்கான அடிப்படைத் தகுதி மும்மொழி புலமை வாயந்தவராக இருக்க வேண்டும்.
-
சாணக்கியன், சுமந்திரன் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்..!
கட்சி சார்ந்த அரசியல் சந்திப்பா அல்லது சிநேகிதபூர்மானதா?
-
சமஷ்டி தீர்வே தமிழரின் இலக்கு : ஸ்ரீநேசன்
மாகாண சபையை வலுவாக நடாத்திக் காட்டியுள்ளோம்.