Everything posted by nedukkalapoovan
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கு நன்றி உறவுகளே..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பல்வேறு வகையிலும் வாழ்த்துச் சொன்ன உறவுகளுக்கு உளம் கனித்த நன்றிகள். நான் பிறந்த தினத்தை விசேடமாகக் கருதுவதும் இல்லை.. கொண்டாடுவதும் இல்லை. இன்றும் என்றும் போல் சாதாரண நாளே. இருந்தாலும் உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறி அண்ணா.. நுணா.. இராவணன்.. கிருபா என்று பிறந்த நாளை கொண்டாடும்.. கொண்டாடிய உறவுகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேலும் சமீபத்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய கொண்டாடப் போகும் உறவுகளுக்கும் பிந்திய.. முந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
கேணல் ரூபன் ,லெப் .கேணல் சிரித்திரன் நினைவுநாள்
வீரர்கள் வீழ்ந்தாலும் அவர் நினைவுகள் வீழ்வதில்லை. காலம் மாறும்.. பூகோள நலன் எம் கை ஓர் நாள் சேரும்.. அப்போ நீங்கள் இன்னும் உயர்ந்து நிற்பீர்கள்..! ஒற்றுமையாய் உம் நினைவினை வழிகாட்டலாய் கொண்டு பயணிப்போம்.. நாம் தமிழராய்..! வீரவணக்கம்..!
-
கருத்து படங்கள்
thanks fb
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
காவாலிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சொப்பன சுந்தரி சொப்னாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். (இப்ப சொப்னா.. யாழில்.. மாயம்) நெல்லைக்கும் மற்றும் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜவன்னியன் அண்ணாவுக்கும் மற்றும் உறவுகளுக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
I.V சசி உட்பட இவ்வாண்டில் இதுவரை பிறந்த நாள் கொண்டாடிய யாழ் உறவுகள் அனைவருக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று மற்றும் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடும்.. கொண்டாடிய.. கொண்டாடப் போகும் உறவுகளுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். நிழலிக்கும் வாழ்த்துக்கள்.
-
பாலா அண்ணாவின் நினைவுப் பாடல்
வீர வணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நண்பர் நிதர்சனுக்கு (கனடா) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நிதர்சன் களத்துக்கும் நேரம் கிடைச்சா வாங்க..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றும் அண்மையிலும் பிறந்த நாள் கொண்டாடும் கொண்டாடிய உறவுகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இம்மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கம். மண்ணுக்காய் வீழ்ந்துவிட்ட மக்களையும் நினைவு கூறுகின்றோம்.
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
இந்தப் படங்களுக்கான மூலம்: http://www.tnrf.co.uk/
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
எக்ஸலுக்கு வர சிரமம் உள்ளவர்கள் முருகதாஸன் திடலுக்குப் போனார்கள். அதேபோல் மற்ற இடங்களுக்கும் போனார்கள். நல்லூரிலும்.. செல்வச்சந்தியிலும் சூரன் போர் நடந்தால்.. எல்லாரும் நல்லூருக்குத்தான் போக வேண்டும் என்பதும்.. நல்லூருக்குப் போகாதவர்கள் கடவுள் பக்தி அற்றவர்கள் என்பதும் சரியான கருத்தல்ல. இன்றைய நிலையில் மக்கள் ஒற்றுமையான மாவீரர் தின அனுஷ்டிப்பை எதிர்பார்த்தாலும்.. சூழ்நிலைக்கு ஏற்ப எது முடிகிறதோ அதற்கு ஏற்ப மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செய்ய முற்படுகிறார்களே தவிர.. இவர் பெரிசு.. அவர் நல்லம் என்று எல்லாம் மக்கள் பார்ப்பது குறைவு..! மாவீரர்களையே மக்கள் மனங்களில் அதிகம் நிறுத்தி உள்ளனர். ஏற்பாட்டாளர்களை அல்ல..! இதனையே நான் இந்த நிகழ்வுகளில் பங்கு கொண்ட மக்களிடம் அவதானித்தேன்..! பங்கு பற்றாதவர்கள் தங்கள் குறையை நிவர்த்திக்க ஆயிரம் குறை சொல்வார்கள்..!
-
இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
இலட்சிய உறுதி கொண்டு தடம்புரளாது கொள்கைக்காய் மக்களுக்காய் மண்ணுக்காய் உயிர் தந்த புனித மாவீரச் செல்வங்களுக்கு எங்கள் வீர வணக்கம்.
-
துன்கிந்த கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகளின் நினைவு
வீர வணக்கம்.
-
முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 25ம் ஆண்டு நினைவு நாள்!
வீர வணக்கம். http://youtu.be/0F7rMtZze94
-
பெயர் மாற்றங்கள்.
நல்ல முடிவு சகாரா அக்கா.
-
பெயர் மாற்றங்கள்.
நன்றி அக்கா. :) எந்த முடிவாக இருந்தாலும் உங்கள் சுய ஆராய்தலின் கீழ் அது எடுத்துச் சொல்லும் நியாயத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுங்கள்..! அடுத்தவர்களுக்காக.. சமூகத்தில் உள்ள குழறுபடிகளின் குரலுக்கு எழுத்துக்கு பணிந்து சென்று முடிவுகளை எடுக்காதீர்கள்..!
-
பெயர் மாற்றங்கள்.
ஏன் சகாரா அக்கா.. ஈழம் என்பது இலங்கை என்பதைத் தானே குறிக்கும்..! அதுவும் பூகோளவாதம்.. என்று சொல்ல ஆக்கள் வருவினம்.. அதையும் கேட்பீங்களோ..???! சுகன் போன்றவர்களின் எழுத்து நடைகள் தான் பிரதேசவாதத்தின் அடிப்படைகளாக நிற்கின்றனவே தவிர.. பூமி பற்றி பேசுவது கோள்வாதம்.. பால்வீதி பற்றி பேசுவது.. அகிலவாதம்.. பிரபஞ்சம் பற்றி பேசுவது பிரபஞ்சவாதம் என்று எல்லாம் சொல்ல முடியாது. மக்களின் எண்ணங்களில் தேச ஒற்றுமையை..இன ஒற்றுமையை.. சமூக வாழ்வை.. இனத்துவ அடையாளத்தை சிதைக்க வல்ல வாதங்கள் தான் பிரதேசவாதங்களாகவும்.. குறுந்தேசியங்களாகவும்.. இன்னும் இன்னும் என்னென்ன வாதங்களாக கருத்துரைக்கப்படுகிறதோ அந்த வகையில் நோக்கப்பட முடியும். தமிழர்கள் தம்மை தமிழர்கள் என்பதைக் கூட குறுந்தேசியவாதம் என்று வரையறுப்பவர்களின் கதையை எல்லாம் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லைத் தானே..! தமிழர்களுக்கு என்றான தனித்துவ இன அடையாளம் உண்டு. ஏன் மரபணு வேறுபாடு கூட இருக்கலாம். அதை எல்லாம் மாற்றி அமைக்க முடியாது. சொந்த தாயின் பெயரை தந்தை பெயரை எம்முடைய பெயரில் இணைத்துக் கொண்டதற்காக மற்றைய மனிதர்களை தாய் தகப்பனை அந்த அடையாளங்களோடு நாம் பார்ப்பதில்லை என்று அர்த்தப்படாது. அதுபோல.. உங்கட சொந்த ஊரின் பெயரை காவுவது பிரதேசவாதம் ஆகாது. அது தேசப்பற்றின் ஒரு அடையாளமாகவே நோக்க வேண்டும். கருணா போன்றவர்கள்.. மக்களைக் கூறுபோட்டு.. இன ஒற்றுமையை குலைத்து தேசத்தைக் கூறுபோட்டு தங்கள் சுய இலாபத்திற்காக ஒரு வாதத்தை மக்களிடம் திணித்தார்களே அதுதான் பிரதேசவாதம்...! வடக்கு தமிழீழம்.. தெற்கு தமிழீழம் என்பது கூட நாளை திசைவாதமாக குறிப்பிடப்படலாம். ஆனால் அவை பிரதேசக் குறியீடுகளே தவிர மக்களை அவர்களின் ஒற்றுமையை சிதைக்கும் பதங்கள் அல்ல. நான் நினைக்கிறேன்.. சகாரா அக்கா சமீப காலமாக சில எழுத்துக்களால் குழப்பிப் போய் இருக்கிறாவுன்னு..! இந்த குறுகியவாதங்கள்.. பிரதேசவாதங்கள் தொடர்பில் ஒரு தெளிவு பெற்றிருந்தால்.. இவர்களின் சில்லறைத்தனமான எழுத்துக்களுக்காக நாம் தேசப்பற்றை இழக்க வேண்டி வராது. இன்று ஊர் பெயர்கள் எல்லாம் சிங்கள மயமாகும் இந்த வேளையில்.. ஊர் பெயரைச் சொல்வது கூட.. பிரதேசவாதம்.. தேசியவாதம் என்பதும் குற்றங்கள் போன்றவை என்று இனங்காட்டுவதும் கூட எதிரியின் திட்டமிட்ட இன அழிப்போடு பொருந்திச் செல்லும் செயலுக்கு ஒப்பானதே..! அடுத்தவர் எழுத்தை நடைமுறைக்கு கொண்டு வர முன்.. தயவுசெய்து தீர்மாக ஆலோசியுங்கள்.. சிந்தியுங்கள். உணர்ச்சி வேகத்தில் முடிவை எடுக்காதீர்கள்..! முடிவுவெடுத்தல் உங்கள் சுய உரிமை என்கின்ற போதும் அவை தவறான அனுமானங்களோடு எடுக்கப்படாதிருக்க இவற்றை சுட்டிக்காட்டுகின்றோம். மற்றும்படி உங்கள் தனிமுடிவுக்கு நீங்களே சொந்தக்காரி..!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முகக்குறியில அமுக்கினால் முகக்குறிகள் அடங்கிய தெரிவுப் பெட்டி.. வருகுதில்லையே..??! திண்ணைப் பகுதியில் மட்டும் இந்தப் பிரச்சனை..! எல்லாத்தையும் சரிபார்த்திருக்கிறீங்க.. இதனையும் திருத்தினால் நல்லா இருக்கும்..!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சுட்டிக்காட்டப்பட்ட திண்ணைப் பிரச்சனை.. alignment பிரச்சனைகள் ஏறக்குறைய சரிசெய்யப்பட்டுள்ளன போல் தெரிகிறது. நன்றி யாழ். இணையம் நிர்வாகத்தினரே..!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்ன நடக்குது.. யாழில alignments பிழைச்சுப் போய் இருக்குது..!