Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32991
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. வடக்கு கிழக்கு தற்காலிக இணைப்பை பிரிச்சவைக்கு... வடக்கை கைக்குள் போடுவது அவ்வளவு கடினமல்ல. ஏனெனில்.. வடக்கில் சிங்கள பெளத்த பேரினவாத விசுவாசித் தமிழர்கள் இப்ப அதிகம் பெருகிவிட்டார்கள். ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்திலும் அதற்கு முன்னரும் இந்த நிலை இருந்தமை.. தெரிந்ததே. அப்பவும் சிங்களம் தமிழர்களைக் கொன்று கொண்டு தான் இருந்தது. ஆனாலும் சிங்கள பெளத்த பேரினவாத விசுவாசிகளை வடக்கு பிரசவிக்கத் தவறவில்லை.
  2. ஏலவே இந்த ஆயுதம் உக்ரெனில் அமெரிக்கப் படைகளின் நேரடி தொழில்நுட்ப உதவியுடன் பாவிக்கப்பட்டே வருகிறது. ரஷ்சியாவுக்கு எதிராகவும் பாவிக்கப்பட்டு.. ரஷ்சியா சுட்டு வீழ்த்தியும் உள்ளது. இது பைடன் கிளம்பும் முன் கிளப்பி விடும் புதுப்புரளி மட்டுமன்றி.. வேறு தொலைதூர ஏவுகணைகளை கொண்டு தாக்குவதற்கான ரகசித்திட்டத்தினை இது கொண்டிருக்கலாம். அதனால் தான் ரஷ்சியா கடந்த சில தினங்களாக உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குதல்களை நடாத்தி வருவதோடு உக்ரைனிடம் இருந்த அமெரிக்க வான் காப்பு ஏவுகணைகளையும் பெருமளவு அழித்துள்ள்ளது.
  3. எல்லையற்ற அதிகாரம் சொறீலங்காவுக்குள்ள தான். அதுசரி... சனாதிபதிப் பதவி... அதிகூடிய அமைச்சர்களின் அதிகாரம் எல்லாம் நீக்கப் போறம் என்டவை.. இப்ப என்ன கவனமாப் பாவியுங்கோ என்றினம். அப்ப சந்திரிக்கா அம்மையார்... மகிந்த அக்கிள்.. ரணில் தாத்தா போல... இவையும் பிரபுத்துவ ஆட்சி தான் செய்யப் போகினம் போல. என்ன அவை நகரத்தில் இருந்து வந்த பிரபுக்கள். இவை கிராமத்தில் இருந்து வந்த புத்துப்பிரபுக்களா இருப்பினமாக்கும்.
  4. தன்னறம் ஆற்றையுங்கோ. முதுகு சொறிய நல்ல கூடாரம். அதுசரி எல்லாத்துக்கும் பகிடிப் படம் கீறும் அண்ணர்,. இதுக்கேன் கீறவில்லை..! பிரான்சில் கூட்டாளிகள் போல.
  5. ஆச்சரியமில்லையே. 1987 இல் மைசூர் பருப்பையும்.. பம்பாய் வெங்காயத்தையும் வெறுத்தவர்கள் ஆட்சிப் பீடம் ஏறி இருக்கும் நிலையில்... கிந்தியா எனி வாய் தான் பார்க்க முடியும். எனி ரகன் இன்னும் பூந்து விளையாடும். 2009 மே யின் விளைவுகளை விரைவில் கிந்தியா தீவிரமாக உணர்ந்து கொள்ளும். ஜே வி பி மறக்காது... சிறிமாவோ அம்மையார் கிந்தியப் படை உதவியோடு ஜே வி பியினரை கொன்று குவித்ததை.. 1970 களில். இது 1987 - 90 பிரேமதாச, உடுகம்பொல.. டக்கிளஸ் செய்த கூட்டு ஜே வி பி படுகொலையை விட மோசமானது.
  6. உக்ரைன் கோமாளி அண்மையில் ரஷ்சியாவை சிதைப்பது குறித்த ரீ சேட் அணிந்திருந்தார். உக்ரைன் யூதக் கோமாளி... ஐரோப்பாவின் அமெரிக்காவின் நெத்தானியாகு. உக்ரைன் அழிவது பற்றி அதுக்கு அக்கறை இல்லை. நேட்டோவுக்காக அமெரிக்காவின் மேற்குலகின் தேவைக்காக ரஷ்சியாவை சிதைப்பதே நோக்கம். அந்த வகையில் புட்டின் உக்ரைன் மீது எடுத்த விசேட நடவடிக்கை சரி என்பதாகவே பைடன் லூசின் செயற்பாடு அமைகிறது. பதவியின் கடைசிக் காலத்தில்.. மொத்த உலகிற்கும் கேடிழைக்கக் கூடிய தீர்மானத்தை பைடன் என்ற பைத்தியம் எடுக்கிறது. அதற்கு சில ஐரோப்பிய ரஷ்சிய எதிர்ப்பு பைத்தியங்கள் ஆமாப் போடுதுகள். பிரிட்டன்.. பிரான்ஸ்.. போலந்து போன்றவை.. உட்பட.
  7. இது ஜே ஆர் சாவகச்சேரியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு 1981 இல் சொன்னது தான். இப்ப இவர். அதன் பின்னர் நடத்தவை நாடறியும். தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை.. சுயநிர்ணய உரிமையை.. பிரிவினைவாதம் என்ற வகைக்குள் வைத்து சில பத்தாயிரம் வாக்குகளால் மதிப்பிடக் கூடாது. ஏனெனில்.. இதே சனாதிபதியை வடக்குக் கிழக்கு மக்கள் நிராகரித்து வாக்களித்ததையும் கவனத்தில் கொள்வது சிறப்பு. இப்படி வாக்குச் சீட்டு அரசியல் பேசுவதாக இருந்தால். அடிப்படையில் அனுர ஒரு சிங்கள பெளத்த பேரினவாத சனாதிபதி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். எனி ஜே வி பி சார்ப்பில் நின்று தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை வாங்கிய தமிழர்கள் தான் இவருக்கு கள நிலவரத்தைச் சொல்லிக் கொடுக்கனும். இன்றேல்.. கடந்த காலத்தில் சிங்கள பெளத்த பெருந்தேசிய பேரினவாதக் கட்சிகளுக்கு அளித்த பதிலையே தமிழ் மக்கள் இவைக்கும் அளிப்பார்கள். எதுக்கும் சொறீலங்கா சனாதிபதி சந்திரசேகரத்திடம் ஆலோசனை பெறுவது நல்லது.
  8. மாவைக்கு இன்னும் பதவி ஆசை போகவில்லையோ அல்லது மகனுக்காக உழைக்கிறாரோ..?! சுமந்திரனுக்கு தன் திறமையில் நம்பிக்கை இல்லை அதனால் தான் தமிழ் தேசியக் கட்சிகளை சார்ந்து கிடக்கிறார். இல்லை எனில் சுயாட்சையாக நிற்கலாமே மதிப்பில்லாத இடத்தில் எதுக்கு டாரா போட்டுக்கிட்டிருக்கனும், அதே தான் மாவைக்கும்.
  9. முதலில் உங்கள் கட்சிக்கு யார் தலைவர்... செயலாளர் என்று சொல்லுங்கள். ஒரு திடமான முடிவை எடுக்கத்தக்க கட்சியாக உங்களை முதலில் வகுத்துக் கொள்ளுங்கள். எல்லாத்துக்கும் சிங்கள நீதித்துறையை வாய் பாய்க்கும் நிலையில் கட்சியை வைச்சுக் கொண்டு... அடுத்தவனை எப்படி ஒன்றிணைய அழைக்க முடியும்..???!
  10. என்ன அமைச்சரவை நீளுது. இவையும் சக்கடத்தார் ஏறின குதிரையிலதான் சவாரி போல.
  11. பிரபாகரன் இல்லை என்றால் நான் ஒட்டுக்குழு ஆயுத அரசியலில் இருக்கமாட்டன் என்றார். அப்புறம் தமிழ் மக்கள் என்னை நிராகரித்தால் ஒட்டுக்குழு ஆயுத அரசியலில் இருக்கமாட்டன் என்றார். இறுதியாக இந்த தேர்தலோடு ஒட்டுக்குழு ஆயுத அரசியலில் இருந்து ஓய்வு என்றார். இப்படி காலத்துக்கு காலம் இவரும் பேசிக்கிட்டுதான் இருக்கார். பேசிறது என்னவோ சன நாயம் செய்யுறது பாசிச அரசியல். தானே தான் இத்தனை ஆண்டுகளும் செயலாளர் நாயகம். அடுத்தவைக்கு அதை கொடுக்க மனசில்லை. காரணம் வருமானம்.. வசதி வாய்ப்பு... அந்தஸ்து.
  12. செல்லாக் காசாக் கிடந்த ரில்வின் எல்லாம் இப்ப தமிழருக்கு வகுப்பெடுக்க... அவருக்கு விளக்கம் கொடுக்கும் நிலையில் தமிழர்கள். ஏன் இதெல்லாம் ரில்வினுக்கு தெரியாதோ..?! தெரியும் அவரிடம் உறைந்துள்ள பேரினவாதச் சிந்தனை எல்லாத்தையும் இனவாதமாகப் பார்க்கத் தூண்டுகிறது அவ்வளவும் தான். சிங்களவர்களைப் பொறுத்தவரை சொறீலங்கா தங்கள் நாடு. தமிழர்கள்.. வந்தேறிகள். இந்த அடிப்படை சிந்தனையில் மாற்றம் வராமல்.. தமிழர்களுக்கு சிங்களவர்களால்... உரிமை வழங்கப்படப் போவதில்லை. அந்த வகையில் தான் தமிழர்கள் உரிமையை போராடிப் பெற முனைந்தார்கள். அதனை பயங்கரவாதமாக்கிய மேற்குலகும்.. கிந்தியாவும் தான் எனி இதற்குப் பதில் சொல்லனும்.
  13. எங்கட மண்ணில எங்கட அடிப்படை உரிமயை கூட சிங்களவன் அனுமதித்தால் தான் அனுபவிக்கலாமாம். இது தான் எந்த சிங்களவன் ஆட்சிக்கு வந்தாலும் நிலை. அதுசரி.. யாழ்ப்பாணம் தெரிவு செய்த அனுர விசுவாசத் தமிழர்களின் நிலை நிலைப்பாடு என்னவோ..?! தேர்தலில் வென்றதும் கதையக் காணம். வாக்குப் போட்டவைக்கு உறைச்சால் சரி.
  14. அம்மையார் சந்திரிக்கா 1994 இல் பதவிக்கு வந்த போது வடக்குக் கிழக்கில் பொங்கல் பொங்கினவை.. சமாதான தேவதையாகக் காட்டிக் கொண்டிச்சினம். புலிகளும் மறைமுகமாக ஆதரவளிச்சவை. கடையிசில்.. அதே சந்திரிக்கா தான் போர்ப் பிசாசானது. கடைசியில் குண்டு வைச்சு காலி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளியது. எந்த சிங்களத் தலைமையும் தமிழர்களுக்கு அவசியமானதை கண்டறிந்து தாமாக தரப் போவதில்லை. நாமாகப் போராடிப் பெற்றால் அன்றி. அதுவும் சிங்களத்தோடு சமரசம் செய்து... தாஜா பண்ணி பெறலாம் என்பது.. வெறும் பகற்கனவே ஆகும். அனுர ஆட்சி... தமிழர்களுக்கு அரசியல் உரிமை ரீதியில் பெரிய மாற்றத்தை கொண்டு வராது.. நாம் தருவார்கள் என்று காத்திருப்பின். சர்வதேச நேச சக்திகளோடு.. அனுர ஆட்சிக்கு எதிரான சக்திகளோடும் இணைந்து கொடுக்கக் கூடிய அழுத்தங்ளின் தாக்கம் ஒன்றே ஏதாவது நன்மையை தமிழர்களுக்கு தேடித்தரும். அதற்காக... இன அழிப்பு போர்க்குற்ற விசாரணைகயை கைவிடுவதோ... சொறீலங்காவை நீதிக்கு முன் நிறுத்துவதையோ வடக்குகிழக்கு இணைந்த தமிழர் தாயக நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவதையோ.. இன அழிப்புக்குள்ளான இனம் என்ற ரீதியில் சர்வதேச பாதுகாப்பை வேண்டிய நிலையில் சுதந்திர தமிழீழத்துக்கான ஐநா மத்தியஸ்த சர்வசன வாக்கெடுப்பை வடக்குக் கிழக்கில் நிகழ்த்துவதையோ.. கிழக்கு திமோர்... தென் சூடான்.. கொசாவோ... போன்று,,,, தடுக்கவோ... கைவிடவே முனையக் கூடாது,
  15. கட்சிகளை ஒற்றுமைப்படுத்துவது மட்டும் போதாது, தமிழ் தேசிய உணர்வூட்டத்தக்க நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.. எல்லாரும் ஒற்றுமையாக. பொங்கு தமிழ் போன்று, அதன் மூலம் மக்களுக்கு ஏதாவது நன்மைகளுடம் கிடைக்க வேண்டும்.
  16. ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை என்ற கணக்கு.. வடக்கு தமிழ் மக்கள் சரியாத்தான் வாக்களிச்சிருக்கினம். 1. தமிழ் தேசிய ஒற்றுமையை சிதைப்பவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவது. 2. மக்களின் உண்மையான கஸ்டத்தை உணர்ந்து குரல்கொடுப்பவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பது. 3. எனியும் ஊழல்வாதிகளை அண்டிப்பிழைக்கும் ஒட்டுக்குழுக்களை.. ஒட்டுண்ணிகளை நம்பி வேலையில்லை. அவர்கள் தம் சொந்த சுயலாபத்தையே நோக்காகக் கொண்டிருக்கின்றனர். மக்கள் அனுர கட்சியின் அலையோடு போயின் அனுரவுக்கு வாக்களித்திருப்பர். ஆனால் வடக்கு கிழக்கு அனுரவுக்கு குறைந்த அளவே வாக்களிச்சிருக்குது.
  17. தமிழ் தேசிய உணர்வை அழித்து.. தமிழ் மக்களின் சுயநிர்ணய.. தாயக் கோட்பாட்டை சிதைத்து.. தமிழ் மக்களை சிங்கள பெளத்த பெருந்தேசியத்துக்குள் சிங்கள பெளத்த பேரினவாதம் மூலம் விழுங்குவதன் ஊடாக... தமிழ் மக்களை எல்லா வழியிலும் பலவீனப்படுத்தி.. அதில் தமக்கான சுயலாபத்தையும்.. பிராந்திய சர்வதேச சக்திகளுக்கு தேவையான வசதிகளையும் செய்து அவர்களின் அனுசரனையை தக்க வைத்து தாம் மட்டும் வாழ நினைத்த அமிர்தலிங்கம்.. சம்பந்தன் வகையாறாக்களின் வந்த சுமந்திரன்... இந்தத் தோல்வியோடு... தான் முன்னர் சொன்னது போல் அரசியலை விட்டு விலகி அப்புக்காத்து வேலையை மட்டும் பார்ப்பதே சிறப்பு. தமிழ் மக்களுக்காக சிங்களப் பெருந்தேசிய பேரினவாத அரசின் கட்டமைப்பில் சுமந்திரானால்... தமிழ் மக்களுக்கான தீர்வை பெறத்தக்க எந்த சட்ட யாப்பு இயற்றலும் செய்ய முடியாது. அதற்கு அவர் தகுதி வாய்ந்தவரும் அல்ல. நம்பிக்ககைக்குரியவரும் அல்ல. அப்படி ஒரு சட்டவாக்க நிலை வந்தால்... உள்நாட்டு வெளிநாட்டு தமிழக தமிழ் மக்கள் சட்டப்புலமை பெற்றோரின் தமிழ் தேசிய உணர்வை மதிப்போரின் கருத்துக்களே முன் வைக்கப்பட வேண்டும். சிங்களப் பேரினவாத்தின் விருப்புக்கு தமிழ் மக்களின் விருப்பை அடகு வைப்பவர்களை அதில் அனுமதிக்கக் கூடாது. அது இலங்கை தீவில் தூய தமிழின சுத்திகரிப்பில் போய் முடியும்.
  18. 1970 ஜே வி பி கிளர்ச்சியின் போது அதன் தலைவர் ரோகண திருமலையில் தமிழர் பகுதியில் பதுங்கி இருந்து தப்பிக்க வைக்கப்பட்டார். தமிழர்களின் முழு ஒத்துழைப்போடு. ஆனால் 1980 களின் பிற்பகுதியில் அவர் சிங்களவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அது இருக்க.. சொறீலங்கா தேசிய கட்சியில் போட்டி இட்டு வெற்றி பெற்ற தமிழர்கள் தமிழ் தேசிய அல்லது தமிழர்களின் தாயக் கோட்பாட்டுக்கு எதிரானாவர்களாக காட்டிக்கொள்ளாத பட்சத்தில் சிங்கள பெளத்த பெருந்தேசிய பேரினவாத அடிவருடிகளின் (டக்கிளஸ்,, அங்கஜனின் வாக்களர்களும்... முஸ்லிம் வாக்காளர்களும்) சிங்களப் பெருந்தேசிய பேரினவாதக் கட்சிகள் சார்பில் போட்டியிடுபவர்களுக்கு வாக்களிப்பது வழமை. அதுவும் வடமாகாணத்தில் இந்தப் போக்கு அதிகம். தமிழ் வாக்காளர்கள் தமிழ் கட்சிகளின் ஒற்றுமையற்ற போக்கிற்கு பாடம் புகட்ட இந்த தேர்தலில் வாக்களிக்க.. முடிவு செய்தமை.. வடக்கில் வெற்றி பெற்றவர்களை கருத்தில் கொள்ளின் விளங்கும். 2009 க்குப் பின் தமிழ் தேசிய போர்வை போர்த்திய ஒட்டுக்குழு ஆட்கள் இந்த தேர்தலில்.. தனித்துப் போட்டியிட்டோ.. தமிழ் தேசிய சாயம் இல்லாத தோறணையில் போட்டியிட்டு சிங்களப் பெருந்தேசிய பேரினவாத அரசிடம் சலுகை பெற முற்பட்ட வேளையில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். அது எதிர்பார்த்ததே. மேலும் வைத்தியர் அர்சுனாவின் வெற்றி அவர் பேசிய தமிழ் தேசியத்திற்காக அல்ல. அவர் வைத்தியத்துறையில் இருந்த மக்களுக்கு பாதகமனா நடைமுறைகளை இணங்காட்டி மக்களுக்காக தந்த குரலுக்கானது. தேசிய தலைவர் மீது காட்டிய விசுவாசத்திற்கானது. அவரிடம் மக்கள் வைத்தியத்துறையில் சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்து வக்களித்துள்ளனரே தவிர.. அவர் பேசிய தமிழ் தேசியம் சார்ந்தல்ல. அது அவர் தன்னை தக்க வைக்க போர்த்திய போர்வை என்பது மக்கள் அறிவர். கடந்த காலங்களில்.. தமிழீழ விடுதலைப் போர் உச்சம் பெற்றிருந்த தருணங்களில் கூட வடக்குக் கிழக்கில் சிங்களப் பெருந்தேசிய பேரினவாதக் கட்சிகளில் போட்டியிட்டு... தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகளுக்கு எதிராக செயற்படாதவர்கள் புலிகளால் கூட ஆதரிக்கப்பட்டுள்ளனர். 1. கிழக்கு எம்பியாக இருந்த தேவநாயகம் 2. வ்மண்ணெய் மகேஸ்வரன் 3.மகேஸ்வரனின் மனைவி. வடக்குக் கிழக்கிற்கு வெளியில்.. தொண்டமான்கள் மனோ கணேசன் சந்திரசேகரன் குமார் பொன்னம்பலம் குருமூர்த்தி இப்படிப்பலர். வடக்கில் ஜே வி பி தமிழ் வேட்பாளர்களை நிறுத்துவது இது முதல் அல்ல. 2009 க்குப் பின் சென்ற தேர்தலிலும் நின்றார்கள்.. தோற்றார்கள். ஏன் இந்த சிங்கள சனாதிபதி தேர்தலிலும் வடக்குக் கிழக்கு குறைந்த அளவே வாக்களித்திருக்கிறது. முக்கிய தமிழ் தேசியத்தின் குரல்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். 1. கஜேந்திரகுமார் 2.சிறீதரன் 3.செல்வம் அடைக்கலநாதன் உள்ளடங்க. தமிழ் தேசிய குரல்களுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் தமிழ் தேசியத்தை தேசிக்காய்.. கற்பனை என்றவர்களின் தோல்வியோடு வைத்து நோக்கின் மக்கள் எந்த வகைக்கு வாக்களித்துள்ளனர் என்பது புரியும். மக்கள் ஒரு கலப்பு முடிவோடு வாக்களித்துள்ளரே தவிர தமிழ் தேசிய உணர்விழந்து வாக்களிக்கவில்லை. ஆனால் தமிழ் தேசிய உணர்வை சிதைக்க முனையும் உள் நாட்டு வெளிநாட்டு (குறிப்பாக கிந்தியா) சக்திகளின் தேவைக்கு சேவை ஆற்றிய சுமந்திரன் வகையறாக்களும் டக்கிளஸ் போன்ற ஒட்டுக்குழு ஆட்களும் தோற்கடிக்கப்பட்டமை.. தமிழ் தேசிய உணர்வழிப்பு என்பது அவ்வளவு இலகு அல்ல என்பதை உணர்ந்தி இருக்கும். தென் தமிழீழம்.. தன் நிலை உணர்ந்து பிரதேச வாதப் பித்தர்களை கடாசி வீசி.. தமிழ் தேசிய உணர்வோடு வாக்களிக்க.. வட தமிழீழம்... தமிழ் தேசிய உணர்வை சிதைக்க முனைந்தால்.. தகுந்த பாடம் புகட்டப்படும் என்று வாக்களிக்க.. சிங்களப் பெருந்தேசிய பேரினவாத ஒட்டுண்ணிகளை நம்பி கெட்ட தமிழர்கள்.. தங்களுக்கான மாற்றை தமிழ் தேசியத்திற்கு வெளியில் தேடியுள்ளனர். இந்த தமிழர்களை தமிழ் தேசியம் தனக்குள் உள்வாங்க முடியாமைக்கு ஒற்றுமை இன்மையும்.. தமிழ் தேசிய உணர்வூட்டல் பலவீனமடைந்து செல்வதுமே முக்கிய காரணம். இதில் அனைவரும் எதிர்கால தமிழ் மக்களின் நலன் கருதி கவனத்தில் எடுத்துச் செயற்படுவது அவசியம்.
  19. ஆழ்ந்த இரங்கல்கள் நுணா மற்றும் குடும்பத்தாருக்கு.
  20. தமிழ் கட்சிகள் ஆதரவு வழங்கினால் என்ன விட்டால் என்ன.. ஆனால் தமிழ் கட்சிகள் என்பன.. ஜே வி பியிடம் இருந்தும் அனுரவிடம் இருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தமது இயக்க தலைவரை கொன்று இயக்கத்தை தடை செய்து.. பயங்கரவாதிகளாக.. காட்டி நின்றவர்கள் முன்.. இன்று மக்கள் சனாதிபதியாக வரும் வரை கடந்து வந்த துரோகங்கள்.. காட்டிக்கொடுப்புகள்.. எல்லாம் தாண்டி... ஒரு சிறிய ஒற்றுமைக்குள் வளர்ந்த விதம் என்பது.. தமிழர்களுக்கு ஒரு பாடம். அப்பர் பிரேமதாச பயங்கரவாதிகள் என்று கொன்று குவித்தவர்களுக்கு.. இன்று மகன்... அதே பயங்கரவாதிகலுக்கு.. ஆதரவு. காலம் எப்படி மாறிக்கிடக்குது. தமிழர்கள் பாடம் படிக்க வேண்டிய பகுதி. புலிகள் மீதான தடை நீக்கத்தின் பயன் என்ன என்று கேட்கும் முட்டாள் தமிழர்களுக்கும் சேர்த்தே.
  21. காசிக்கு போய் வந்த கன்னட இராமசாமி.. பெரியார் ஆகி.. தமிழை காட்டுமிராண்டி மொழி என்று வந்தித்ததையும் கவனத்தில் கொள்வது சிறப்பு. இராமசாமி ஒரு வேடதாரி அவ்வளவு தான். இவரின் ஒரு தெளிவான கொள்கை நிலையாக இருந்ததாகத் தெரியவில்லை.
  22. தமிழகள் என்பவர்கள் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வைக்கப்பட வேண்டியவர்கள் என்பது தானே மேற்குலகினதும் நிலைப்பாடு. இதில சிங்களவனை நொந்து என்ன பயன்..!!!
  23. இரண்டுமே இப்ப சோடியாத்தானே ஓடுது. சீனக் குதிரை தான் தனியா ஓடுது.
  24. நடந்தால் தான் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மைக்கு ஏதாவது சந்தர்ப்பம் அமைய வாய்ப்பிருக்கும். இன்றேல்.. கஸ்டம்.
  25. இருந்தாலும் மேற்குலக ஊடகங்கள்.. இவரை.. இடது சாரி ஆள் என்பதை அழுத்தம் திருத்தமாக தவறாமல் உச்சரிப்பதை காண முடிகிறது. அவைட ஊழல்.. சுரண்டல்.. சன நாய் அகத்துக்கு ஆபத்து வந்திடுமோ என்று பயப்பிடுகினம் போல. சீன பக்கம் அதிகம் சாய்ஞ்சிடுவினமே என்ற அச்சம் அவைக்கு.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.