Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Posts posted by கிருபன்

  1. தமிழ் டயஸ்போராக்களுக்காக மஹிந்தவின் மாளிகை பறிப்பு;

    புரளியைக் கிளப்புகிறார் சரத் வீரசேகர!

    103374540.jpeg


     
    பிரிவினைவாதத் தமிழ் டயஸ்போராக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார் .

    மஹிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
    அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
    மஹிந்த ராஜபக்சவை அரச மாளிகையில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் பிரிவினைவாதத் தமிழ் டயஸ்போராக்களே திருப்தியடைவார்கள். அவர்களுக்கே இன்றைய நாள் மகிழ்ச்சியைத் தரும் நாளாகும். அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்ச என்பவர் சாதாரண நபர் கிடையாது. முழு உலகமுமே தோற்கடிக்க முடியாது எனக் கூறிய புலிகள் அமைப்பைத் தோற்கடித்து 30 வருடகாலப் போரை முடிவுக்கு கொண்டுவந்தவர். மக்களுக்கு வாழும் உரிமையை வழங்கிய தலைவர் அவர் .நாட்டில் அபிவிருத்திகளை ஏற்படுத்தினார். இப்படிப்பட்ட தலைவருக்கு இவ்வாறா நன்றிக்கடன் செலுத்துவது- என்றார்.

    https://newuthayan.com/article/தமிழ்_டயஸ்போராக்களுக்காக_மஹிந்தவின்_மாளிகை_பறிப்பு;

  2. தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 15 | நெறிகளை மீறிய ‘மூர்க்கம்’ என்று சாடப்பட்ட ஒரு காவிய ஆக்கம்

    தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 15 | நெறிகளை மீறிய ‘மூர்க்கம்’ என்று சாடப்பட்ட ஒரு காவிய ஆக்கம் - Wuthering Heights வுதரிங் ஹெய்ட்ஸ் - https://bookday.in/

    அ. குமரேசன்

    நான்கு திரைப்படங்களாக, நான்கு தொலைக்காட்சித் தொடர்களாக, பல முறை மேடை நாடகங்களாக, ஒரு நாட்டிய நாடகமாக வந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல் அது. கதையைத் தழுவி இந்தி உள்பட பல மொழிகளில் திரைப்படங்கள் வந்திருக்கின்றன (கதையைப் படிக்கிறபோது அதே சாயலில் தமிழில் வந்த படங்களும் உங்கள் நினைவுக்கு வரும்). ஆனால், நாவல் வெளியானபோது கடுமையான மூன்று வகை எதிர்ப்புகளைச் சந்தித்தது. ஒன்று –அதுவரை வழக்கத்தில் இருந்த நேர்கோட்டு முறையிலிருந்து வெகுவாக விலகிய தனித்துவமான புதிய கதை சொல்லல் நடை படிப்பதற்குக் கடினமாக இருக்கிறது. இரண்டு –வன்முறையையும் பழிவாங்கல் உணர்வையும் நியாயப்படுத்துகிறது. மூன்று –திருச்சபையால் அறிவுறுத்தப்பட்டு வந்துள்ள சமூக நெறிகளை மீறுகிறது.

    இந்த எதிர்மறை விமர்சனங்களைக் கடந்து, இங்கிலாந்து நாட்டு இலக்கியத்தில் சிறந்ததொரு காவியப் படைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அந்த நாவல் ‘வுதரிங் ஹெய்ட்ஸ்’ (மூர்க்கச் சிகரங்கள்). 1847இல் வெளியான இந்த நூலை எழுதியவர் எமிலி பிரான்ட்டே. அவர் எழுதிய முதல் நாவல் மட்டுமல்ல, இதுவே அவருடைய கடைசி நாவலும் கூட. ஆம், ‘எல்லிஸ் பெல்’ என்ற புனைப் பெயரில் எழுதி வந்த அவரது ஒரே நாவல் இதுதான். மற்றபடி அதே புனைப் பெயரில் கவிதைகளும், உலகத்தைப் பற்றிய கருத்துக் குறிப்புகளும் எழுதியிருக்கிறார். 1818இல் பிறந்த எமிலி பிரான்ட்டே ஏன் அடுத்த நாவலை எழுதவில்லை என்றால், அவருடைய இலக்கிய மேதைமையைக் காட்டிய இந்த நாவல் வெளியான அடுத்த ஆண்டிலேயே, 30 வயதில், காசநோய்க்கு பலியாகிவிட்டார்.

    Wuthering Heights (Barnes & Noble Leatherbound Classic Collection) eBook : Brontë, Emily: Amazon.in: Kindle Store

    நாவலின் மூர்க்கக் காட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக எழுத்தாளர் தொடர்பான இன்னொரு சுவையான தகவலைத் தெரிந்துகொள்வோம். சகோதரிகளான எமிலி பிரான்ட்டே, சார்லோட் பிரான்ட்டே, ஆன் பிரான்டே மூவருமே எழுத்தாளர்கள். தமிழகக் கல்லூரிகளுக்கும் வந்த ‘ஜேன் அயர்’ நாவலை எழுதியவர் சார்லோட். ‘தி டெனன்ட் ஆஃப் ஒயில்டுஃபெல் ஹால்’ நாவலை வழங்கியவர் ஆன். மற்றுமொரு தகவல் – மூவருமே காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

    நாவலின் சுருக்கம்

    ‘வுதரிங் ஹெய்ட்ஸ்’ இங்கிலாந்தின் யோர்க்‌ஷைர் மூர்ஸ் எனப்படும் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த எர்ன்ஷா, லின்டன் என்ற இரண்டு குடும்பங்களின் உறவுகள் பற்றிய கதை. வன்முறைகள் நிறைந்த ஆனால் உணர்வுப்பூர்வமான உறவுகளை அது சித்தரிக்கிறது.

    Wuthering Heights | Faber

    லாக்வுட் என்ற ஒரு பண்ணைக் குத்தகைதாரரின் அனுபவங்களிலிருந்து தொடங்குகிறது கதை. அவர் த்ரஷ்க்ராஸ் க்ரேன்ஜ் என்ற பண்ணையைக் குத்தகைக்கு எடுக்கிறார். அந்தப் பண்ணையின் உரிமையாளரான ஹீத்கிளிஃப் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள வுதரிங் ஹெய்ட்ஸ் பண்ணை வீட்டில் வசிக்கிறார். சூறாவளி போல் எப்போது வேண்டுமானாலும் கடுமையான காற்று வீசுகிற, எளிதில் நடமாட இயலாத உயரமான மேடுகள் நிறைந்த ஒரு மூர்க்கத்தனமான சூழலில் அந்தப் பண்ணையும் வீடும் இருக்கின்றன. அங்கே செல்கிற லாக்வுட் அந்த விசித்திரமான சூழலால் ஈர்க்கப்படுகிறார். ஆனால் அந்த வீட்டில் உள்ள கேத்தி, படிப்பறிவில்லாத பணியாளர் போல நடந்துகொள்ளும் ஹெர்ட்டன் பணியாளர் ஜோசப் ஆகியோர் லாக்வுட்டுடன் இணக்கமின்றி நடந்துகொள்கிறார்கள்.

    வெளியே கடும் பனிப்பொழிவு காரணமாக அந்த வீட்டிலேயே இரவு தங்குகிற லாக்வுட், தனக்குத் தரப்பட்ட அறையில் இருந்த ஒரு நாட்குறிப்பேட்டைப் படிக்கிறார். அது, அந்த அறையில் முன்பு இருந்தவளும், பண்ணைவீட்டின் முன்னாள் உரிமையாளர் எர்ன்ஷா மகளுமான கேத்தரின் எழுதி வைத்தது. இரவில் கேத்தரின் சன்னலுக்கு வெளியே ஆவியாக வந்து, கதவைத் திறந்துவிடுமாறு கெஞ்சுகிறாள். அலறியடித்து உறக்கத்திலிருந்து எழுகிறார் லாக்வுட். அவருடைய அலறலால் தனது அறையில் இருக்கும் ஹீத்கிளிஃப் உளைச்சலடைகிறார்.

    Wuthering Heights' withers on the heath

    காலையில் கடும் பனியிலேயே தனது பண்ணைக்குத் திரும்பும் லாக்வுட்டின் உடல்நலம் குன்றிப் படுக்கையில் விழுகிறார். வீட்டைப் பராமரிக்கும் பெண்ணான நெல்லி டீன் அவருக்கு, வுதரிங் ஹெய்ட்ஸ் வீட்டின் கடந்த காலக் கதையைக் கூறுகிறார்.

    அந்தக் கதை முப்பது ஆண்டுகள் பின்னாலிருந்து தொடங்குகிறது. எர்ன்ஷாவின் மகன் ஹிண்ட்லி, மகள் கேத்தரின். ஒருநாள் எர்ன்ஷா நகரத்திலிருந்து ஆதரவற்ற ஒரு சிறுவனைத் தனது பண்ணை வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவன்தான் ஹீத்கிளிஃப். அவனுடைய பிறப்பு மூலம் தெரியவில்லை, அநேகமாக ஒரு நாடோடி சமூகத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம். மனைவி இறந்துவிட்டதால் பிள்ளைகளைக் கவனிக்கத் தவறும் எர்ன்ஷா அவனிடம் அன்பு காட்டுகிறார். அது ஹிண்ட்லிக்கு அவன் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் கேத்தரினுக்கு அவனைப் பிடித்துப் போகிறது. இருவரும் நெருங்கிய நண்பர்களாகக் காட்டிலும் காற்றிலும் சுற்றித் திரிகிறார்கள்.

    ஹிண்ட்லி படிப்புக்காக வெளியூர் செல்கிறான். மூன்று ஆண்டுகளில் எர்ன்ஷா இறந்துவிட, அவன் மாளிகையின் உரிமையாளராகிறான். திருமணத்திற்குப் பிறகு ஹிண்ட்லி, அவனுடைய மனைவி பிரான்சஸ் இருவரும் ஹீத்கிளிஃபை மேலும் அவமதிக்கிறார்கள். வேலைக்காரர்களில் ஒருவனாக நடத்துவதுடன் தினமும் மோசமான சொற்களால் வசவுகளை வீசுகிறார்கள்.

    த்ரஷ்கிராஸ் கிரேஞ்ச் பண்ணை வீட்டில் எட்கர் லிண்டன், அவனுடைய தங்கை இசபெல்லா வாழ்கிறார்கள். கேத்தரினும் ஹீத்கிளிஃபும் அவர்களை சிறுவயதுக் குறுகுறுப்புடன் வேவு பார்க்கிறார்கள். கேத்தரினை நாய் கடித்துவிட, வெளியே வரும் எட்கர் அவளை மட்டும் வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறான். வுதரிங் ஹெய்ட்ஸ் வீட்டுக்கு எட்கரும் இசபெல்லாவும் வருகிறார்கள். அங்கே எட்கரும் ஹிண்ட்லியும் சேர்ந்து ஹீத்கிளிஃபை இழிவாகப் பேசிச் சிரிக்கிறார்கள். ஒரு மோதல் ஏற்படுவதைத் தொடர்ந்து, அழுக்கு நிறைந்த, சூடுபடுத்திக்கொள்ளும் வசதி இல்லாத மாடியறையில் தங்கவைக்கப்படுகிறான். அப்போதே அவனுக்குள் இவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் முளைவிடுகிறது.

    வயது வளர வளர கேத்தரின் மீது அவன் கொண்ட நட்பு ஆழ்ந்த காதலாக வளர்கிறது.

    ஹிண்ட்லி, பிரான்சஸ் இணையருக்கு ஒரு மகன் – ஹேர்டன் – பிறக்கிறான். நீண்ட காலமாக காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரான்சஸ் குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்துவிடுகிறாள்.

    கேத்தரின் சமூகப் பெருமைக்காகவும் வசதியான வாழ்க்கைக்காகவும் எட்கரை மணக்க முடிவு செய்கிறாள். ஆனாலும் அவள் மனம் ஹீத்கிளிஃபையே நேசிக்கிறது. இதை அவள் நெல்லியிடம் பகிர்ந்துகொள்கிறாள். அவனுக்கு உதவ விரும்புவதாகக் கூறும் அவள், ஆனால் அவனுடைய தாழ்ந்த சமூக நிலை காரணமாக அவனைத் திருமணம் செய்துகொள்ள முடியாதவளாக இருப்பதையும் தெரிவிக்கிறாள். அவனைப் போன்றவனுடன் பழக வேண்டாம் என்கிறாள் நெல்லி. அறைக்கு வெளியே இருந்து அரைகுறையாக இந்த உரையாடலைக் கேட்கும் ஹீத்கிளிஃப் ஏக்கமும் ஆத்திரமுமாக அந்த ஊரிலிருந்தே வெளியேறுகிறான். கேத்தரின்–எட்கர் இருவருக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. அவள் பெயர் கேத்தி.

    மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஹீத்கிளிஃப் திரும்பி வருகிறான். இப்போது அவன் ஒரு பெரும் பணக்காரன். எப்படிப் பணக்காரனானான்? அவனுடைய பிறப்பு மூலத்தைப் போலவே சொத்து மூலத்தையும் புதிராகவே விட்டிருக்கிறார் நாவலாசிரியர். அவன் வெளிநாட்டுக்குப் போய் சம்பாதித்திருக்கலாம் அல்லது ராணுவத்தில் சேர்ந்திருக்கலாம் என்று நெல்லி தன் ஊகங்களைக் கூறுகிறாள். ஆனால், தாழ்வான சமூகத்தைச் சேர்ந்தவனாகக் கருதும் மேட்டுக்குடியினர் அவன் தவறான முறையிலேயே பொருளீட்டியிருப்பான் என்று கருதுகிறது. பிற்பகுதியில் அவன் இரக்கமற்ற பழிவாங்கலில் இறங்குவதன் பின்னணியில் தவறான வழியில் பணம் ஈட்டியதும் இருக்கக்கூடும் என்ற ஊகத்திற்கும் இடமளிக்கிறார் எமிலி பிரான்டே.

    தன்னை அவமானப்படுத்தியவர்களையும், தனது காதலைப் பிரித்தவர்களையும் பழிவாங்கத் தொடங்குகிறான் ஹீத் கிளிஃப். இசபெல்லாவுக்குத் தன் மீது இருக்கும் மோகத்தைப் பயன்படுத்திக்கொள்கிறான். அடிக்கடி அவன் வீட்டுக்கு வருவதைக் கண்டு அவனை விரட்டியிடிக்கிறான் எட்கர். அதை ஏற்காத கேத்தரின் அறைக்கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே உணவின்றி இருக்கிறாள். அவளுடைய உடல் நலம் சரிவடைகிறது.

    ஹிண்ட்லியின் சூதாட்ட மோகத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் ஹீத்கிளிஃப் பெருந்தொகையைக் காட்டி, ஆட்டத்துக்கு இழுத்துத் தோற்கடிக்கிறான். அதற்காகக் கொடுக்க ஒப்புக்கொண்ட பெருந்தொகைக்குப் பதிலாக பண்ணை வீட்டை ஒப்படைக்க வற்புறுத்தி வசப்படுத்திக்கொள்கிறான். எட்கரைப் பழி வாங்குவதற்காக, இசபெல்லாவைத் தன்னோடு ஓடிவர வைத்து, பின்னர் அவளை மணந்துகொண்டு உளவியலாகவும் உடலளவிலும் பல வகைகளில் துன்புறுத்துகிறான்.

    கேத்தரின் நலிந்துகொண்டிருப்பதை அறியும் ஹீத்க்ளிஃப் அவளை ரகசியமாகச் சந்திக்கிறான். அவனைப் பார்த்தபின், பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் கேத்தரின் மரணமடைகிறாள். கொந்தளிக்கும் ஹீத்கிளிஃப், அவள் ஆவியாக வந்து தன்னைக் கடைசிவரை ஆட்டுவிக்க வேண்டும் என்று வேண்டுகிறான். செத்துப்போனவள் மீது அவன் காட்டும் விசுவாசத்தைப் பார்த்துக் கசப்படையும் இசபெல்லா வேறு ஊருக்குப் போய்விடுகிறாள். அங்கே அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது, தன் அண்ணன–கணவன் இருவர் பெயரையும் இணைத்து லிண்டன் ஹீத்கிளிஃப் என்று பெயர் வைக்கிறாள். ஒரு நோயாளியாக அவன் வளர்கிறான்.

    ஹிண்ட்லி மதுப்பழக்கத்தால் மரணமடைகிறான். அவனுடைய மகன் ஹேர்டன் படிப்பறிவற்றவனாகச் சுற்றிவருகிறான். ஹீத்கிளிஃப் வெறிபிடித்தவனாக அடுத்த தலைமுறையினரையும் தனது பழிவாங்கும் படலத்திற்கு இலக்காக்குகிறான். கேத்தி, லிண்டன் இருவரும் நேசத்துடன் பழகுகிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொண்டால் த்ரஷ்கிராஸ் கிரேஞ்ச் பண்ணையையும் வளைத்துப் போடலாம் என்று ஹீத்கிளிஃப் திட்டமிடுகிறான்.

    இதனிடையே லிண்டன் ஹீத்கிளிஃப் அவனுடைய மாமன் எட்கர் வீட்டில் வளர அனுப்பி வைக்கப்படுகிறான். தன்னுடைய மகன் தன்னுடன்தான் இருக்க வேண்டுமென்று தகராறு செய்கிறான் ஹீத்கிளிஃப். சில மாதங்களில் எட்கர் இறந்துவிட, கேத்தியையும் லிண்டனையும் கட்டாயப்படுத்தித் தன்னோடு இருக்கச் செய்கிறான். உடல்நிலை மோசமடையும் லிண்டன் திடீரென இறந்துவிட, கேத்தி வேறு வழியின்றி ஹீத்கிளிஃபுடன் வுதரிங் ஹெய்ட்ஸ் வீட்டில் இருக்க வேண்டியதாகிறது. நாளுக்கு நாள் அவனுடைய வெறித்தனம் முற்றுகிறது. கேத்தரின் இறந்தபோது, அவளுக்கான கல்லறையை வெட்டியது தானேதான் எனத் தெரிவிக்கும் அவன், அதன் பிறகு தினமும் அவளுடைய ஆவி தன்னைப் பின்தொடர்வதாகவும் கூறுகிறான்.

    காலப்போக்கில் கேத்திக்கும் ஹேர்டனுக்கும் காதல் மலர்கிறது. அவனுக்கு அவள் படிப்புச் சொல்லிக்கொடுக்கிறாள். அவர்களுடைய காதல் பழைய தலைமுறையின் காழ்ப்புணர்வு வன்மமும், மேலாதிக்கப் புத்தியும், பாகுபாட்டு வக்கிரமும், பழிவாங்கல் வேட்கையுமான மூர்க்கச் சுழற்சியை முறியடிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஹீத்க்ளிஃப் தன் பழிவாங்கல் செயல்களாலும், கேத்தரினின் ஆவி பற்றிய எண்ணங்களாலும் மன அமைதி குலைந்தவனாகத் திரிந்து மடிகிறான். அவனுடைய மரணத்திற்குப் பின்னரும் சில நாட்களுக்குப் புதிரான, அமானுட நிகழ்வுகள் தொடர்கின்றன. பகை வளர்த்த பழைய தலைமுறையின் கதை முடிந்து, குடும்ப ரகசியங்களால் துரத்தப்பட்ட புதிய தலைமுறையின் அமைதியான வாழ்க்கை தொடங்குகிறது.

    மூர்க்கம்

    கேத்தரின், ஹீத்கிளிஃப் இடையேயான காதல் அன்றைய சமூக விதிகளை மீறிய, ஆழமான, உடைக்க முடியாத, கிட்டத்தட்ட மூர்க்கத்தனமான ஒரு பிணைப்பு. காதல் நிறைவேறாமல் போனதால், ஹீத்கிளிஃபுக்கு ஏற்படும் பழியுணர்வும் மூர்க்கத்தனமானது. அந்த இரண்டுமாகச் சேர்ந்து அடுத்த தலைமுறைகளையும் அலைக்கழிக்கின்றன. உச்சத்தைத் தொடும் அந்த இரண்டு மூர்க்கங்கள்தான் நாவலின் மைய விசைகள்.

    வுத்தரிங் ஹெய்ட்ஸ் வட்டாரத்தின் இயற்கைச் சூழல் சார்ந்த மூர்க்கம், அந்த இரண்டு பண்ணை வீடுகளின் கதாபாத்திரங்கள் சார்ந்த மூர்க்கத்திற்கு ஒப்புவமையாகிறது. நாவல் சமூகக் கட்டுப்பாடும், வர்க்க வேறுபாடும் சார்ந்த மூர்க்கங்களையும் தொடுகிறது. விக்டோரிய காலச் சமூகப் படிநிலைகள் தனிமனித உணர்வுகளைச் சூறையாடுவதைச் சித்தரித்ததன் மூலம் அன்றைய மதிப்புகளைச் சாடுகிறது. அந்த நிலைமைகள் எப்படி மனித மனங்களில் வஞ்சத்தை வளர்க்கின்றன என்று யோசிக்க வைக்கிறது.

    விக்டோரியன் சகாப்தம்: எமிலி ப்ரோன்டே

    அமானுடம், ஆவி நாவல் ஒரு கட்டத்தில் கேத்தரின் ஆவியாக ஹீத்கிளிஃபை நெருங்க முயல்வதாகவும், மானுடத்திற்கு அப்பாற்பட்ட சக்திகள் ஆட்டுவிப்பதாகவும் சித்தரிக்கிறது. இது அமானுடம், ஆவி ஆகிய பகுத்தறிவுக்குப் புறம்பான நம்பிக்கையை ஆதரிப்பதாக இருக்கிறது என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது. ஆனால், அந்தச் சித்தரிப்புகள் சூழ்நிலைகளாலும் நிகழ்ச்சிப் போக்குகளாலும் சிதைந்துபோன மனநிலைகள் பற்றிய உளவியல் வெளிப்பாடுகளே என்று இலக்கியத் திறனாய்வாளர்கள் வாதிட்டனர். இப்போதும் அந்த இரு வாதங்களும் தொடர்கின்றன. ஆயினும், அந்த அமானுடங்கள் உளவியல் சித்தரிப்புகள்தான் என்ற கருத்திற்கே பெரும்பான்மை ஆதரவு கிடைத்திருக்கிறது.

    இவ்வாறு உணர்ச்சிப் பெருக்கான, மானுடத்திற்கு அப்பாற்பட்ட விளைவுகளையும், புதிரான முறையில், வியக்க வைக்கும் வகையில் சித்தரிக்கும் இலக்கிய வகைப்பாட்டிற்கு “கோதிக் புனைவு” என்று பெயர். கோதிக் என்பது மையக் காலத்திய கட்டடக் கலை. கோட்டைகளும் தேவாலாயங்களும் அந்தக் கலையின் அடிப்படையில் கட்டப்பட்டன. ஒரு வியத்தகு அமைப்புடன் இருந்த அந்தக் கட்டங்கள் சிதைந்தபோது ஒரு புதிரான தோற்றத்தைப் பெற்றன. அவற்றால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளில் அந்தப் புதிரையும், வியப்பையும், சிதைவையும் கொண்டுவர முயன்றனர். அந்த முயற்சிக்கு “கோதிக் புனைவு” என்ற இலக்கிய அடையாளம் கிடைத்தது.

    நாவல் வெளியான புதிதில், சமூக விதிகளை மீறி, பாலியல், வன்முறை மற்றும் தீவிரமான உணர்வுகளை வெளிப்படையாகப் பேசியதால், “காட்டுமிராண்டித்தனமானது” என்றும் “ஒழுக்கமற்றது” என்றும் கூறி அதைப் புறக்கணிக்கும் முயற்சிகள் நடந்தன. மதம் அறிவுறுத்தும் சமூக ஏற்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்தியதால், நாவலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மதவாதிகள் பேசினார்கள். ஆயினும், கடுமையான வாக்குவாதங்களுக்குத்தான் நாவல் உள்ளாக்கப்பட்டதேயன்றி தடை விதிக்கப்படும் அளவுக்குப் போகவில்லை.

    மாறாக, எழுத்தாளரின் மறைவுக்குப் பிறகு, தனித்துவமான கதைசொல்லல், ஆழமான உளவியல் பார்வை, கதாபாத்திரங்களின் நுட்பமான சித்தரிப்பு ஆகியவற்றிற்காக ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாகப் பாராட்டுப் பெற்றது. காதலின் ஆக்க சக்தி–அழிவு சக்தி, மனித உறவுகளின் சிக்கல்கள், மனதின் இருண்ட பகுதிகள் ஆகியவற்றை எமிலி பிரான்ட்டே ஆராய்ந்திருக்கிறார். அந்த வகையில் ஒரு புதுமையான, துணிச்சலான படைப்புகளுக்கான ஓர் எடுத்துக்காட்டு என்று இன்றைக்கும் கொண்டாடப்படுகிறது இந்த நாவல்.

    https://bookday.in/books-beyond-obstacles-15-wuthering-heights-based-article-written-by-a-kumaresan/

  3. பா.ம.க.வில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்!; ராமதாஸ் அறிவிப்பு!

    537952-pmk-leaders-780x470.webp

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸும், செயற்பாட்டுத் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் இடையேயான கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது.

    கடந்த மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அதற்கான விளக்கத்திற்காக 31ஆம் திகதிக்குள் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.

    இதையடுத்து மீண்டும் 10ஆம் திகதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தாலும், அதற்கும் பதில் கிடைக்கவில்லை. இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

    அவர் கட்சி ஒழுங்குக்கு கட்டுப்படாதவராகவும், அரசியல்வாதி என்ற தகுதி அற்றவராகவும் நடந்துகொண்டார். எனவே, பா.ம.க. செயல்தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அன்புமணி நீக்கப்படுகிறார்” என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    https://akkinikkunchu.com/?p=340417

    பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்- ராமதாஸ் அதிரடி அறிவிப்பு! தனிக் கட்சி தொடங்க அறிவுரை!

    11 Sep 2025, 10:25 AM

    Ramadoss Anbumani (3)

    பாமகவில் இருந்து தமது மகனும் அக்கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் (PMK Anbumani Ramadoss) நீக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று (செப்டம்பர் 11) அதிரடியாக அறிவித்துள்ளார்.

    திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், பாமகவில் அன்புமணி தனி அணியாக செயல்பட்டார்; அவரிடம் 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. இரு முறை விளக்கம் கேட்டோம். ஆனால் இந்த நோட்டீஸுக்கு அன்புமணி பதில் அளிக்கவில்லை. இதனால் அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என ஏற்றுக் கொள்கிறோம்.

    பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்

    இதனையடுத்து பாமகவின் செயல் தலைவர், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுகிறார். அன்புமணியுடன் 10 அல்லது 15 பேர்தான் உள்ளனர். அன்புமணியுடன் தொடர்பு வைத்திருந்தால் அவர்களும் பாமகவில் இருந்து நீக்கப்படுவர். அன்புமணியுடன் உள்ளவர்கள் திருந்த வாய்ப்பு கொடுப்போம்; அவர்கள் திருந்தினால் அவர்களை சேர்த்து கொள்ளவும் தயார். நான் இல்லாமல் அன்புமணியோ அவருடன் இருப்பவர்களோ இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. என்றார்,

    என் பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது

    மேலும், பாமக தொடங்கியது முதல் இதுவரை யாருமே செய்யாத அளவுக்கு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் அன்புமணி. அரசியலுக்கே தகுதி இல்லாதவர் அன்புமணி. இன்று முதல் எனது பெயரின் முதல் எழுத்தான ‘இரா’ என்பதை மட்டுமே அன்புமணி பயன்படுத்த வேண்டும்; இராமதாஸ் என்ற என் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

    அன்புமணி தனிக் கட்சி தொடங்கலாம்

    அதேபோல, அன்புமணி தனியாக ஒரு கட்சியை தொடங்கி நடத்தலாம். இதை ஏற்கனவே 3 முறை அன்புமணியிடம் கூறியிருக்கிறேன். இப்போதும் அன்புமணி தனிக்கட்சி ஆரம்பிக்கலாம் என்கிறேன்.

    என் கட்சி பாமக- உரிமை கோர முடியாது

    பாமக என்பது ராமதாஸ் என்ற தனிநபர் தொடங்கிய கட்சி. பாமக என்ற என் கட்சிக்கு உரிமை கொண்டாட என் மகன் உட்பட யாருக்குமே உரிமை கிடையாது. பாமகவில் இருந்து களை நீக்கப்பட்டுவிட்டது.

    அன்புமணி தனி கட்சி தொடங்கினாலும் வளராது

    அன்புமணியை நீக்கிவிட்டதால் பாமகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. அன்புமணி தனிக்கட்சியை தொடங்கினாலும் அது வளராது. என்னுடன் 40 முறை பேசியதாக அன்புமணி கூறி வருவது எல்லாம் பொய். அன்புமணியின் பொய் என்பது அண்டப் புளுகு; ஆகாசப் புளுகு. என் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி வைத்தது குறித்து விசாரணை நடைபெறுகிறது. அன்புமணியின் செயலால் இரும்பு போன்ற என் இதயம் நொறுங்கிவிட்டது என்றும் ராமதாஸ் கூறினார்.

    பின்னணி என்ன?

    பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் நீடித்து வருகிறது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்தார் ராமதாஸ். மேலும் அன்புமணியை செயல் தலைவர் எனவும் அறிவித்தார் ராமதாஸ். ஆனால் அன்புமணி இதனை ஏற்க மறுத்தார்.

    பாமகவின் தலைவராகவே தாம் தொடருகிறேன்; இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி தாமே பாமக தலைவர் என்றார் அன்புமணி.

    இதனையடுத்து அன்புமணியின் ஆதரவாளர்கள் பலரையும் ராமதாஸ் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார். அன்புமணியோ அவர்களே கட்சிப் பதவிகளில் நீடிப்பர் எனவும் அறிவித்தார். பாமகவின் பொதுக்குழுவை அன்புமணியும் ராமதாஸும் தனித்தனியே கூட்டி இருந்தனர். இதன் பின்னர் அன்புமணிக்கு எதிராக பாமக விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கையை ராமதாஸ் மேற்கொண்டார். இதற்கு அன்புமணி பதில் அளிக்கவில்லை. இதனால் இன்று பாமகவில் இருந்தே அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

    அன்புமணியை நீக்கி டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை

    https://minnambalam.com/wp-content/uploads/2025/09/Ayya-Arivippu-11.9.25.pdf

    https://minnambalam.com/anbumani-expelled-from-pmk-dr-ramadoss/

  4. பிரான்சில் மக்கள் போராட்டம் : 250 பேர் கைது, 80 ஆயிரம் பொலிஸார் குவிப்பு

    11 Sep, 2025 | 10:19 AM

    image

    பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

    புதன்கிழமை (10), பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர்.

    பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல், ஓய்வூதியத் தொகையை உயர்த்தாமை மற்றும் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கான நிதியைக் குறைப்பது போன்ற கடுமையான விடயங்கள் அடங்கிய வரவு - செலவுத்திட்டத்தை பிரான்ஸ் அரசு நிறைவேற்ற முயற்சிப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    மெக்ரோன் அரசின் 'ரினைசன்ஸ்' கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், கடந்த ஒன்பது மாதங்களில் நான்கு பிரதமர்கள் மாறியுள்ளனர். அண்மையில், வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற முடியாததால், பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு பதவி விலகினார்.

    இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், செபஸ்டியன் லெகோர்னு புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இதுவும் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், மக்கள் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

    வன்முறையைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 80 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 18 ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பிரான்சில் மேலும் போராட்டங்கள் தீவிரமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    541972946_1542160723863410_4829917892319

    546843924_1321512489315953_3327159823400

    547315015_1074527644458937_3074777169177


    https://www.virakesari.lk/article/224787

  5. நேபாளத்திற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

    11 Sep, 2025 | 10:38 AM

    image

    நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவினால், காத்மண்டு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் இன்று (11) விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

    அதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து காத்மண்டுக்கு யூ.எல்-181 என்ற விமானம் புறப்பட்டதன் மூலம் நேபாளத்திற்கு மீண்டும் சேவைகளை ஆரம்பித்துள்ளது.

    நேபாளத்தில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, விமான சேவைகளை நேற்று (10) நிறுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு மேலாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

    காத்மண்டுக்கு பயணிக்க எதிர்பார்த்து நேற்று வந்த 35ற்கும் அதிகமான பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் ஹோட்டல் வசதிகளை விமான நிறுவனம் வழங்கியதாக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட விமான சேவை இன்று காலை 8.15 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11.41 மணிக்கு காத்மண்டுவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    காத்மண்டுவிலிருந்து திரும்பும் விமானம் மாலை 4.40 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொழும்புக்கும் காத்மண்டுவுக்கும் இடையில் விமானங்களை இயக்கும் ஒரே விமான நிறுவனம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானசேவை வாரத்தில் நான்கு நாட்களுக்கு இயங்கும்.

    அதன்படி,  ஞாயிறு, திங்கள், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் குறித்த விமானசேவை இடம்பெறும் என  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு மேலாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

    https://www.virakesari.lk/article/224785#google_vignette

  6. நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள் உட்பட 106 நீதித்துறை உத்தியோகத்தர்கள் இடமாற்றம் !

    11 Sep, 2025 | 10:55 AM

    image

    நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள் உட்பட 106 நீதித்துறை உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

    செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தொடர்புடைய இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

    குறித்த இடமாற்றங்கள் நீதவான்கள், மேலதிக நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள், மேலதிக மாவட்ட நீதிபதிகள் மற்றும் பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த இடமாற்றங்களின் கீழ், மாளிகாகந்த நீதவான் லோச்சன அபேவிக்ரம வீரசிங்க மஹர நீதவான் நீதிமன்றத்திற்கும், மஹர நீதவான் எச்.ஜி.ஜே.ஆர்.பெரேரா, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

    அதேநேரம், காலி நீதவான், ஐ.என்.என். குமார கமகே கோட்டை நீதவானாகவும், குருநாகல் நீதவான் என்.டி. குணரத்ன கம்பஹா மேலதிக மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

    கொழும்பு மேலதிக நீதவான் பி.எஸ். பத்திரண பலபிட்டிய நீதவானாகவும், பலபிட்டிய நீதவான் ஆர்.டி. ஜனக கொழும்பு மேலதிக நீதவானாகவும் இடமாற்றப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

    மேலும், நீதித்துறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 17 பேர் குறித்த இடமாற்றங்களின் கீழ் நீதவான்களாகவும் மேலதிக மாவட்ட நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

    https://www.virakesari.lk/article/224789

  7. செப்டம்பர் 11 தாக்குதல்களின் 24வது ஆண்டு நிறைவு

    11 September 2025

    1757566327_7797468_hirunews.jpg

    அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

    செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2001 அன்று, தற்கொலை குண்டுதாரிகள் அமெரிக்க பயணிகள் ஜெட் விமானங்களைக் கடத்திச் சென்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 

    அமெரிக்கா மீது பறந்து கொண்டிருந்த நான்கு விமானங்கள் ஒரே நேரத்தில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டன. 

    பின்னர் இரண்டு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது மோதியது, முதல் தாக்குதல் நடந்த 17 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டாவது தாக்குதல் நடந்தது. 

    கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன, மக்கள் மேல் தளங்களில் சிக்கிக் கொண்டனர், நகரம் புகையால் மூடப்பட்டிருந்தது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

    இரண்டு மணி நேரத்திற்குள், 110 மாடி கோபுரங்கள் இரண்டும் பெரிய தூசி மேகங்களுடன் இடிந்து விழுந்தன. 

    மூன்றாவது விமானம் வாஷிங்டன் டி.சி.க்கு வெளியே அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பென்டகனின் மேற்கு முகப்பை அழித்தது. 

    பயணிகள் எதிர்த்துப் போராடிய பிறகு, நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் விபத்துக்குள்ளானது. 

    கடத்தல்காரர்கள் வாஷிங்டனில் உள்ள கட்டிடத்தைத் தாக்கத் திட்டமிட்டதாக நம்பப்படுகிறது. 

    மொத்தத்தில், 2,977 பேர் உயிரிழந்தனர், அவர்களில் பெரும்பாலோர் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்கள். 

    நான்கு விமானங்களில் இருந்த 246 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இறந்தனர். 

    மேலும் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல்களின் போது ஏற்பட்ட காயங்களால் 2,606 பேர் அந்த நேரத்தில் அல்லது அதற்குப் பிறகு இறந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

    மேலதிகமாக பென்டகனில் 125 பேர் உயிரிழந்திருந்தனர். 

    முதல் விமானம் மோதியபோது, இரண்டு கோபுரங்களிலும் 17,400 பேர் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    https://hirunews.lk/tm/419538/24th-anniversary-of-the-september-11-attacks

  8. டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சுட்டுக்கொலை!

    image?url=https%3A%2F%2Fada-derana-tamil

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். 

    31 வயதான சார்லி கிர்க், காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி கிர்க் உயிரிழந்தார். 

    சமீபகாலமாகவே அமெரிக்காவில் தொடர்ந்து வன்முறை அதிகரித்து வரும் நிலையில், ‘டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ’ என்ற இளைஞர் அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmfep0fxd00cuo29npaxdayu9

  9. அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!

    1778256177.jpg

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அரசமாளிகையில் இருந்து இன்று வெளியேறவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

    அரசமாளிகையில் இருந்து தங்காலையிலுள்ள தனது கால்டன் இல்லத்தில்-மஹிந்த குடியேறவுள்ளார் எனவும், இதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது. 

    முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகள் அனைத்தும் நீக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருந்தது. 

    இதற்கமைய அரச மாளிகையில் இருந்து வெளியேறுமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு ஊடக சந்திப்புகள் மூலம் வலியுறுத்தப்பட்டது. 

    எனினும், தனக்கு சட்டப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே அது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். 

    இதனால் இந்த மாளிகை தொடர்பான விவகாரம் அரசியல் ரீதியில் பெரியளவு பேசுபொருளானது.

    இவ்வாறான பின்னணியில், ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை நீக்கு தற்குரிய சட்டமூலம் நேற்று நிறைவேற் றப்பட்டுள்ளது. 

    இதனை சபாநாயகர் சான்றுரைப்படுத்தியுள்ளதால் சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

    இதனையடுத்தே அரச மாளிகையில் இருந்து இன்று வெளியேறுவதற்கு மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.

    அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலையே ராஜபக்சக்களின் பூர்வீகம். 

    அரசியல் கோட்டை,அங்கிருந்தே மஹிந்தவின் அரசியல் பயணம் கூட ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.[ஒ]

    https://newuthayan.com/article/அரசமாளிகையில்_இருந்து_வெளியேறுகிறார்_மஹிந்த!

  10. On 9/9/2025 at 07:47, புலவர் said:

    இது திராவிடநெறியா? தமிழ்நெறியா?இதிலிருந்தே திராவிடக் கட்டுரையாளரின் உருட்டுக்கள் தெரிய வருகிறது.

    குறட்பா:

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். 

    விளக்கம்: 

    • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்:

      எல்லா உயிர்களுக்கும் பிறப்பு என்பது சமமானது அல்லது ஒன்றே.

    • சிறப்பொவ்வா:

      சிறப்புத்தன்மையில் வேறுபாடு இருக்கும்.

    • செய்தொழில் வேற்றுமை யான்:

      செய்யும் தொழில்களில் உள்ள வேறுபாடுகளால் மட்டுமே இது அமையும்.

    சுருக்கமாக, நாம் பிறந்ததில் அனைவரும் சமம் என்ற கருத்தை இந்த குறள் வலியுறுத்துகிறது. ஆனால், நாம் செய்யும் செயல்கள், நமது திறமைகள், நாம் செய்யும் தொழில் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளால் தான் சமூகத்தில் ஒருவரின் சிறப்புத்தன்மையும், மதிப்பும் அமைகின்றன. 

    இது, சமூக வேறுபாடுகள் பிறப்பால் அல்லாமல் செயல்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. 

  11. நடிகை விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மேல்முறையீட்டு மனு மீது செப்.12-ல் உச்சநீதிமன்றம் விசாரணை

    10 Sep 2025, 10:46 AM

    Seeman Viji

    நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் (செப்டம்பர் 12) விசாரணை நடைபெற உள்ளது.

    தம்மை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்தார் சீமான் என்பது 2011-ல் போலீசில் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார். இதனடிப்படையில் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கை பிப்ரவரி 21-ந் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.

    ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீமான், மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சீமான் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. அப்போது நடிகை விஜயலட்சுமியுடன் சமாதானமாக போவதாக சீமான் தரப்பில் கூறப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

    இதனிடையே சீமானுடன் சமாதானமாக போக தயாராக இல்லை என உச்சநீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 12-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

    https://minnambalam.com/actress-vijayalakshmi-case-supreme-court-to-hear-seemans-appeal-on-sept-12/

  12. வடக்கு மாகாணத்தை நாட்டின் ஏனைய மாகாணங்களிலிருந்து வித்தியாசப்படுத்தி நோக்க வேண்டும். - ஆளுநர் நா.வேதநாயகன்

    புதன், 10 செப்டம்பர் 2025 05:52 AM

    வடக்கு மாகாணத்தை நாட்டின் ஏனைய மாகாணங்களிலிருந்து வித்தியாசப்படுத்தி நோக்க வேண்டும்.

    வடக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளினதும் அடிப்படை உரிமைகளையும் அவர்களது தேவைகளையும் வசதிகளையும் உறுதிப்படுத்தவேண்டியது எங்கள் அனைவரினதும் பொறுப்பாகும். அதேநேரம் அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு பலர் தன்னார்வமாக தயாராக உள்ளபோதும் அது ஒருங்கிணைந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பின் ஊடாக கிடைக்கப்பெறுவதற்குரிய ஏற்பாடுகளை நாம் துரிதமாகச் செய்யவேண்டியிருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

    இந்தியத் துணைத்தூதரகமும், போலோ ஆய்வகமும் இணைந்து 'போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு – ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்கான இணைப்பு' என்னும் தலைப்பில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இந்தியாவிலிருந்து வருகை தந்த கல்வி உளவியாளரும் சிறுவர் உரிமைக்கான நிபுணருமான கலாநிதி சரண்யா ஜெய்குமார் தலைமையில் நடைபெற்றது. 

    அந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆளுநர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

    வடக்கு மாகாணத்தை நாட்டின் ஏனைய மாகாணங்களிலிருந்து வித்தியாசப்படுத்தி நோக்க வேண்டும். மிக நீண்ட நெடிய போரால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற நோக்கு நிலையிலேயே அணுகவேண்டும். இந்த மாகாணத்தின் குழந்தைகள் போரால் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்கின்றார்கள். பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தின் வருமானமீட்டுபவர்களை பறிகொடுத்திருக்கின்றார்கள். இந்தப் பின்னணிகளையும் கருதிலெடுத்தே எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நாம் வடிவமைக்கவேண்டியிருக்கின்றது. 

    கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது. அதற்காகத்தான் அரசாங்கம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றது. ஆனால் பிள்ளைகள் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு குடும்பச் சூழல் செல்வாக்குச் செலுத்துகின்றது. மீள்குடியமர்ந்த குடும்பங்கள் இன்னமும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாகத் திரும்பவில்லை. அதேபோல பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்ட எதிர்கொண்டு இருக்கின்ற குடும்பங்களின் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லுமா என்பது கேள்விக்குறியே? 

    அதேநேரம் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட பல கிராமங்கள் இருக்கின்றன. அங்கு பிள்ளைகளும் குறைவு. அதனால் அங்குள்ள பாடசாலைகள் - ஆரம்பப் பாடசாலைகள் மூடப்படுகின்றன. அந்தப் பிள்ளைகளுக்கு பல கிலோ மீற்றர் தூரம் பயணித்து கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமையும் குறைவு. அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது அந்தப் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. இதை மாற்றியமைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். 

    போர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் எங்கள் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்கின்றார்கள். அவர்கள் பேரன் அல்லது பேர்த்தியின் அரவணைப்பில்தான் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்புக் குறித்தும் நாம் கவனம் செலுத்தவேண்டியவர்களாக இருக்கின்றோம். 

    எனவேதான் வடக்கு மாகாணத்தை ஏனைய மாகாணங்களிலிருந்து தனித்துவமான கோணத்தில் நோக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். எமது மாகாணத்தின் இந்தச் சவால்களைத் தீர்ப்பதற்கும் நாம் வித்தியாசமான அணுகுமுறையையே பின்பற்றவேண்டியிருக்கும். எனவே அதற்கு இந்தக் கருத்தரங்கு உதவியாக இருக்கும் என நம்புகின்றேன், என ஆளுநர்மேலும் தெரிவித்தார். 

    நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் ஆகியோரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தேசியக் கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

    WhatsApp-Image-2025-09-09-at-11-08-14_f3

    WhatsApp-Image-2025-09-09-at-11-08-12_f4

    WhatsApp-Image-2025-09-09-at-11-08-11_44

    WhatsApp-Image-2025-09-09-at-11-08-09_44

    WhatsApp-Image-2025-09-09-at-11-08-07_da

    WhatsApp-Image-2025-09-09-at-11-08-07_7f

    https://jaffnazone.com/news/50492

  13. எல்ல பேருந்து விபத்து – காரணம் வெளியானது

    September 10, 2025 11:16 am

    எல்ல பேருந்து விபத்து – காரணம் வெளியானது

    எல்ல – வெல்லவாய பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு, பேருந்தின் பிரேக் முறையாக பராமரிக்கப்படாமையே காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

    கடந்த வாரம் இடம்பெற்ற இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

    சுமார் ஆயிரம் அடி பள்ளத்தில் வீழந்து பேருந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

    இந்நிலையில், விபத்து தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களித்தின் ஆணையரின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

    பேருந்தின் பிரேக் முறையாக பராமரிக்கப்படாமையே காரணம் என குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    உயரமான பகுதியில் இருந்து கீழ் நோக்கி பயணிக்கும் போது பயன்படுத்த வேண்டிய கியருக்கு பதிலாக, நான்காவது கியரில் பேருந்து பயணித்துள்ளமை விசாரணைகள் தெரியவந்துள்ளது.

    மேலும், விபத்து நடந்த நேரத்தில் பேருந்தின் பின்புற வலது சக்கர அமைப்பில் பிரேக்குகள் முழுமையாக செயற்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

    https://oruvan.com/ella-bus-accident-cause-revealed/

  14. UNHRC-யில் இலங்கைக்கு 43 நாடுகள் ஒற்றுமையை வெளிப்படுத்தின

    image_0b9a854488.jpg

    ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வில் நடைபெற்ற ஊடாடும் உரையாடல் நிகழ்வில் பேசிய சுமார் 43 நாடுகள் இலங்கையுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, கோட் டி ஐவோயர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், லாவோஸ், தாய்லாந்து, , கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, எரித்திரியா, ஈரான், நேபாளம், இந்தியா, ஜிம்பாப்வே, வியட்நாம், சீனா, அஜர்பைஜான், இந்தோனேசியா, துருக்கி, பெலாரஸ், எகிப்து, வெனிசுலா, மாலத்தீவுகள், கியூபா, தெற்கு சூடான், சூடான், ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் புருண்டி ஆகிய நாடுகள் இலங்கையுடன் ஒற்றுமையை வெளிப்படுத்திய நாடுகளில் அடங்கும் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மனித உரிமைகள் பேரவையுடனான இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டையும், உயர் ஸ்தானிகரின் வருகையையும், நாட்டின் மேம்பட்ட ஒத்துழைப்பின் அடையாளமாக வரவேற்றதாகவும், நாட்டில் நடந்து வரும் சட்டமன்ற சீர்திருத்தங்கள் உட்பட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் மற்றும் உறுதியான முன்னேற்றத்தை அங்கீகரித்ததாகவும், HRC மற்றும் சர்வதேச சமூகம் இலங்கையை அதன் தேசிய உரிமைச் செயல்முறைகளில் ஆதரிக்க ஊக்குவித்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    வளக் கட்டுப்பாடுகள் காரணமாக கவுன்சிலில் உள்ள முக்கிய ஆணைகள் நிறைவேற்றப்படாமல் போகும் அபாயத்தில் இருக்கும்போது, இலங்கைக்கு வெளிப்புற பொறிமுறைக்கு வளங்களை ஒதுக்குவதை அந்த நாடுகள் கேள்வி எழுப்பின, மேலும் வெளிப்புறமாக விதிக்கப்பட்ட இணையான செயல்முறைகள் துருவமுனைப்புக்கு ஆபத்தை விளைவிக்கின்றன என்பதை வலியுறுத்தின.

    இலக்கு வைக்கப்பட்ட நாடுகளில் நாடு சார்ந்த வழிமுறைகளைத் திணிப்பது மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய தன்மை, பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மை ஆகிய ஸ்தாபகக் கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும், நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட மனித உரிமைகளை இரட்டைத் தரநிலைகள், அரசியல்மயமாக்குதல் மற்றும் கருவியாக்குதல் குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர்.

    மனித உரிமைகளை மேம்படுத்துவதில் உற்பத்தி முடிவுகளை அடைய கவுன்சிலுக்குள் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர் என்று அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    https://akkinikkunchu.com/?p=340288

  15. இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் !

    09 Sep, 2025 | 10:53 PM

    image

    இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தோல்வியடைந்தார்.

    இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்த்து 781 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். தேர்தலில் 767 வாக்குகள் பதிவாகின. இதில் 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. செல்லுபடியான வாக்குகள் 752.  சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 452.  சுதர்சன் ரெட்டி பெற்ற வாக்குகள் 300. 152 வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார்.

    துணை ஜனாதிபதியாக இருந்த ஜெக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, செப்டம்பர் 9ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர்.

    தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மையான ஆதரவு இருந்ததால் சி.பி. ராதாகிருஷ்ணனின் வெற்றி முன்னரே எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் தேர்தல் வெற்றி மூலம் அவர் இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாக விரைவில் பதவியேற்க உள்ளார்.

    சி.பி.ராதாகிருஷ்ணன் யார்? 

    சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன், 1957 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி திருப்பூரில் பிறந்தார். வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றார். கல்லூரி காலத்தில், டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், கைப்பந்து, ஓட்டப்பந்தயம் என சகல விளையாட்டுகளிலும் சிறந்தவராக விளங்கினார்.

    16 வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்த இவர் 1974 ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1996 ஆம் ஆண்டு தமிழக பா.ஜ.க. மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அதன் பிறகு, 2004, 2014 மற்றும் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் அதே தொகுதியில் தோல்வியை தழுவினார்.

    எம்.பி.யாக இருந்த காலத்தில், புடவைத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார். பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு (பி.எஸ்.யு.) மற்றும் நிதிக்கான ஆலோசனைக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். பங்குச் சந்தை ஊழலை விசாரிக்கும் நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

    2004-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபைக்கான நாடாளுமன்ற குழுவிலும், தாய்வானுக்கான முதல் நாடாளுமன்றக் குழுவிலும் அவர் இடம் பெற்றார். அதே ஆண்டு தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு அவர் நாடு முழுவதும் நதிகளை இணைப்பது, பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது, தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ரத யாத்திரை நடத்தினார். 2007-ம் ஆண்டு வரை 19 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு 93 நாட்கள் அவர் ரத யாத்திரை சென்றுள்ளார்.

    2016-ம் ஆண்டு சி.பி.ராதாகிருஷ்ணன் கொச்சியில் உள்ள கயிறு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் அவர் 4 ஆண்டுகள் இருந்தார். அப்போது, இந்தியாவில் இருந்து கயிறு ஏற்றுமதி இந்திய ரூபா மதிப்பில்.2,532 கோடி என்ற அளவுக்கு உயர்ந்தது.

    2020-2022-ம் ஆண்டு காலத்தில் கேரளாவின் பா.ஜ.க. அகில இந்திய பொறுப்பாளராக பதவி வகித்தார். 2024-ம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி மராட்டிய மாநில ஆளுநராக  நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு ஜார்கண்ட் மாநில ஆளுநராக 1½ ஆண்டுகள் பதவி வகித்தார். ஜார்கண்டில் அவர் பணியாற்றிய காலத்தில், தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஆகிய கூடுதல் பொறுப்புகளையும் கவனித்தார்.

    புதிய துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், நோர்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து, பெல்ஜியம், போலந்து, துருக்கி, சீனா, தாய்வான், தாய்லாந்து, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பங்களாதேஷ், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நெருங்கிய நண்பரான சி.பி.ராதாகிருஷ்ணன், சிறுவயதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர்.

    இவரது தாய் ஜானகி, சி.பி.ராதாகிருஷ்ணன் பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து தெரிவிக்கும்போது, "எனது மகன் பிறந்தபோது, முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் இருக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்து பெயரிட்டேன். அந்த தருணம் நனவாகியுள்ளது" என்றார்.

    https://www.virakesari.lk/article/224684

  16. பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமனம்

    10 Sep, 2025 | 09:52 AM

    image

    பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், பிரதமர் பிரான்சுவா பய்ரூ அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த 24 மணி நேரத்துக்குள், தனது நெருங்கிய கூட்டாளி செபாஸ்டியன் லெகோர்னுவை (39) புதிய பிரதமராக நியமித்துள்ளார்.

    மூன்று ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையை கவனித்த லெகோர்னு, மக்ரோனின் ஏழாவது பிரதமர் ஆவார். அவருக்கு அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து அடுத்த வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பய்ரூ முன்வைத்த 44 பில்லியன் யூரோ செலவு குறைப்புத் திட்டம் நம்பிக்கை வாக்கெடுப்பில் 364–194 வாக்குகள் வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் இராஜினாமா செய்தார்.

    லெகோர்னுவின் நியமனத்தை மத்தியவரிசைக் கட்சிகள் வரவேற்றுள்ளன. ஆனால் இடதுசாரி மற்றும் வலதுசாரிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஜான்-லூக் மெலன்சன் (இடதுசாரி) மாற்றமே இல்லை என விமர்சித்தார். மரீன் லெ பென் (வலதுசாரி) “மக்ரோனின் இறுதி முயற்சி” எனக் கூறினார்.

    பிரான்ஸ் தற்போது மூன்று முக்கிய அரசியல் பிளாக்குகளால் (இடது, வலது, மையம்) பிளவுபட்டுள்ளது. புதிய பிரதமரின் முதன்மைப் பணி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 114% ஆக உயர்ந்துள்ள 3.3 டிரில்லியன் யூரோ கடனை கட்டுப்படுத்துவதாகும்.

    இதற்கிடையில், “பிளோக்கோன் டூட்” (எல்லாவற்றையும் முடக்கு) என்ற பொதுமக்கள் இயக்கம் புதன்கிழமை பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக 80,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

    மேலும், வெள்ளிக்கிழமை ஃபிட்ச் நிறுவனம் பிரான்ஸ் கடன் மதிப்பீட்டை மறுபரிசீலனை செய்ய உள்ளது. அது குறைக்கப்பட்டால் நாட்டின் கடன் செலவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

    https://www.virakesari.lk/article/224690

  17. யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

    10 Sep, 2025 | 09:58 AM

    image

    யாழ்ப்பாணம், நல்லுர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூக நல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானம் வழங்கப்படும் என நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது.

    நாய்களினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் தொற்று நோய்களைக் கருத்திற் கொண்டு நாய்களின் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பெண்நாய்களுக்கான கருத்தடை செயற்றிட்டத்தினை நல்லூர் பிரதேச சபை முன்னெடுக்கின்றது.

    எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 14 நாம் திகதி வரை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் பெண் நாய்களுக் கான இலவச கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.

    பெண் நாய்களுக்கான குறித்த இலவச கருத்தடை சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் அனைவரும் தங்களால் வளர்க்கப்படும் பெண் நாய்களுக்குரிய கருத்தடை சிகிச்சையினை பெற்றுக்கொள்ளுமாறும் பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது.

    அத்துடன் வீதிகளில் காணப்படும் கட்டாக்காலி பெண்நாய்களினை சமூகநலன் நோக்கில் பிடித்து நல்லூர் பிரதேச சபையின் கருத்தடை சிகிச்சை முகாமில் ஒப்படைப்பவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 வீதம் சன்மானமாக வழங்கப்படும் எனவும் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

    நல்லுர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்யை முகாம் நடைபெறும் இடங்கள்

    10.09.2025 புதன்கிழமை

    காலை 8.30 முதல் 1.30 மணிவரை திருநெல்வேலி கம்பன் சனசமூக நிலையம்

    மாலை 1.30 முதல் 4.15 வரை திருநெல்வேலி பாரதி சனசமூக நிலையம்

    11.09.2025 வியாழன்

    காலை 8.30 முதல் 1.00 மணி வரை கலைச்சுடர் சனசமூக நிலையம், திருநெல்வேலி மேற்கு

    மாலை 1.30 முதல் 4.15 வரை கொக்குவில் பழைய உப அலுவலகம்

    12.09.2025 வெள்ளிக்கிழமை

    காலை 8.30 முதல் 1.00 மணி வரை கலைமகள் சனசமூக நிலையம், நல்லூர் வடக்கு

    மாலை 1.30 முதல் 4.15 வரை பொதுநோக்கு மண்டபம், கல்வியன்காடு

    11.09.2025 சனி

    காலை 8.30 முதல் 1.00 மணிவரை உதயஒளி சனசமூக நிலையம், அரியாலை கிழக்கு

    https://www.virakesari.lk/article/224693

  18. சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினர் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் மற்றும் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

    10 Sep, 2025 | 11:16 AM

    image

    1990 காலப்பகுதிகளில் மட்டக்களப்பு சந்துருக்கொண்டான் பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களை சிறுவர்கள் பெண்கள் பாரபட்சமின்றி விசாரணை என்ற பெயரில் அழைத்து சித்திரவதைக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், குறித்த பிரதேசத்தில் அக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவமுகாம் அமைந்த பகுதி அகழ்வு செய்யப்பட்டு இச்சம்பவம் தொடர்பான உறுதிப்படுத்தலை மேற்கொண்டு உரியவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரி சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினரால் செவ்வாய்க்கிழமை (09) கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் மற்றும் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

    நேற்றைய தினம் சந்துருக்கொண்டான் படுகொலை இடம்பெற்று 35 வருடங்கள் கடந்த நிலையில் இது தொடர்பிலான நீதியான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், யாழ். செம்மணி போன்று வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல்வேறு படுகொலைகள் இடம்பெற்றுள்ளமையும் அது தொடர்பான எச்சங்கள் மீட்கப்படுகின்ற விடயங்களையும் கருத்திற் கொண்டு குறித்த முறைப்பாடு இக்குழுவினரால் முன்னெடுக்கப்படுகின்றது.

    கோரி சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல்,மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களான தயாள கௌரி,ரகுநாதன் மற்றும் சிவில் செயற்பாட்டாளர் லவகுகராசா ஆகியோர் சட்டத்தரணிகளான கமல்ராஜ்,தவராஜா ஆகியோருடன் இன்றைய தினம் காலை கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் குறித்த முறைப்பாட்டினை மேற்கொண்டார்.

    இதற்கு முன்பாக மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலையத்திற்கு சென்று இது தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கு நடவடிக்கையெடுத்தபோது தலைமையக பொலிஸாரினால் சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபரை சந்திக்குமாறு அறிவுறுத்தல்க்ள வழங்கப்பட்டுள்ளது.

    கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரை சந்திததன் பின்னர் குழுவினரால் படுகொலை நடைபெற்ற பிரதேசத்திற்குரிய பொலிஸ் நிலையமாகவுள்ள கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

    1990 ஆம் ஆண்டு செட்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி  கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள், 25 வயோதிபர்கள் உட்பட 186 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

    இராணுவத்தினராலும், ஊர்காவல் படையினராலும், ஒட்டுக்குழுவினராலும் இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டிருந்தது. இந்தப் படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்.

    DSC05592.JPG

    தமக்கான நீதி இந்த நாட்டில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லையெனவும் தமக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையின் கீழ் இதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதி வழங்கவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

    எவ்வாறாயினும் இராணுவமுகாம் இருந்த பகுதி அகழ்வு செய்யப்படவேண்டும் என்பதற்காக இந்த முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

    இன்று பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான், பனிச்சையடி மற்றும் கொக்குவில் ஆகிய கிராமங்களில் இலங்கை இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் படுகொலை செய்யப்பட்டு 35 வது ஆண்டு நிறைவு.

    இன்று நாங்கள் இந்த படுகொலைக்கான நீதியை மீண்டும் எதிர்பார்த்துக் கொண்டு இன்று சத்துருக்கொண்டான் ராணுவ முகாம் அமைந்த இடத்தை அகழ்வு பணி மேற்கொள்ள வேண்டும் என்று இன்று நாங்கள் மட்டக்களப்பு கொக்குவில் போலீஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாட்டை செய்துள்ளோம். இந்த முறைப்பாட்டை கொக்குவில் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்.

    எனவே இதற்கான நீதி அரசாங்கத்தின் உள்ளக விசாரணையில் நிதிவித நம்பிக்கையும் இல்லை எனவே இந்த விசாரணை ஒரு சர்வதேச பொறிமுறைக்கு சென்று விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதனை எதிர்பார்க்கின்றோம். இருப்பினும் இன்று இந்த நீதிக்காக நாங்கள் முறைப்பாட்டை செய்திருக்கின்றோம். இதற்கான நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

    DSC05588.JPG

    WhatsApp_Image_2025-09-09_at_17.13.04.jp


    https://www.virakesari.lk/article/224700

  19. வேலணையில் வாள்வெட்டு ; 10 நாள்களின் பின் பிரதான சந்தேக நபர் கைது!

    10 Sep, 2025 | 11:03 AM

    image

    அண்மையில் வேலணை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தேடப்பட்டு வந்த நிலையில்,  பிரதான சந்தேக நபரை  10 நாள்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (09) கைது செய்துள்ளதாக  ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

    கடந்த மாதம் 31 ஆம் திகதியன்று வேலணை அராலி சந்திக்கு அண்மையில் காரில் சென்ற ஒருவரை பட்டா ரக வாகனத்தில் சென்ற குழு ஒன்று வழிமறித்து வாளால் வெட்டி கடுங்காயங்களுக்கு உள்ளாக்கிவிட்டுச் தப்பிச் சென்றிருந்தது.

    கடும் காயமுற்ற நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குறித்த வாள் வெட்டுடன் தொடருடைய குழுவை பொலிஸார் தேடி  தீவிர விசாரணை நடவடிக்கை ஆரம்பித்தனர். 

    இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரி  தலைமையிலான அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதேநேரம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களும் விரைவில் கைதுசெய்யப்படுவர் என தெரிவித்த ஊர்காவற்றுறை பொலிஸார் கைதான பிரதான  சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார் என்றும் தெரிவித்தனர்.

    https://www.virakesari.lk/article/224701

  20. ·

    Edited by கிருபன்

    வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட இன்னும் எடுக்கப்படவில்லை

    செய்திகள்

    image?url=https%3A%2F%2Fada-derana-tamil

    வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த 08 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் வெளியிட்ட அறிக்கைக்கு இலங்கை தமிழரசு கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர். 

    அந்த அறிக்கையில் தெரிவித்ததாவது, 

    பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பல முக்கிய கரிசனைகளுக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதில் எமது ஆழ்ந்த ஏமாற்றத்தை இங்கு பதிவு செய்கிறோம். இந்த அரசாங்கம் பதவியேற்றபோது பல வாக்குறுதிகளை வழங்கியது. எனினும், ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று ஒரு முழு ஆண்டு ஆன பின்னும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட இன்னும் எடுக்கப்படவில்லை. 

    அமைச்சர் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தல் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியம் எனக் கூறினாலும், எளிதில் செய்யக்கூடியவை கூட முயற்சிகள்கூட இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. பல உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இன்னும் நீக்கப்படவில்லை. 

    PTAக்கு மாற்றாக எந்த புதிய சட்டமும் கொண்டு வரமாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்திருந்த போதிலும், தற்போது அமைச்சர் புதிய பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார் என்பது வருத்தத்திற்குரியது. 

    PTA சட்ட நீக்கம் செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டில் தற்காலிகமான தடை (moratorium) வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், உறுதிமொழிகளும் இருந்தும், அது தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று, நிகழ்நிலைக் காப்புச் சட்டம் (Online Safety Act) சட்ட நீக்கம் செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. 

    வெளிநாட்டு நடவடிக்கைகள் தேசிய செயல்முறைகளில் பிளவுகளையும் அபாயத்தையும் ஏற்படுத்தும் என அமைச்சர் கூறியுள்ளதும், இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்துக்கு (Sri Lanka Accountability Project) எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் மிகவும் கண்டனத்துக்குரியது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகள் ஆன போதும் , எந்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை. 

    இந்த சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறுவழியில்லை. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் 240 எலும்புக்கூடுகள் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள. இவை சட்டத்துக்கு புறம்பான கொலைகளாக இருப்பினும் இங்கு கிடைக்கப்பட்ட சான்றுகள் தொடர்பாக அமைச்சர் எதுவும் குறிப்பிடவில்லை. 

    இந்த உயிரிழப்புகளை அடையாளம் காண உள்ளூர் நிபுணத்துவம் இல்லாதது நிதர்சனமான உண்மை. இருந்தும், அரசாங்கம் சர்வதேச உதவியை இன்னமும் கோரவில்லை, மனிதப் புதைகுழிகள், வலிந்து காணாமலாக்கப்படுதல் போன்ற பல விடயங்களிலும் இதே நிலை தொடர்கிறது. 

    அதிகாரப் பகிர்வு குறித்து மீண்டும் வலியுறுத்தியதற்கும், தமிழ் சமூகத்தின் அவாவான சமத்துவம், நீதி, மாண்பு, சமாதானம் ஆகியவற்றுக்காக ஆதரவு வழங்கியதற்கும் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

    இந்தியா, மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றும், அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் அழைத்துள்ளது. 

    மாறாக, இலங்கை அரசாங்கம் தன் எழுத்திலான பதிலில், எல்லை நிர்ணயிப்பு செயல்முறை முடிந்த பிறகு மட்டுமே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற நிலை எடுத்துள்ளது. இது பல ஆண்டுகள் தேர்தலை தள்ளிவைக்கும் எண்ணப்பாட்டை காட்டுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மீறி, அவர்களின் வாக்குரிமையை தொடர்ந்து உதாசீனப்படுதலை காட்டி நிற்கிறது. 

    எமது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் முன்வைத்த தனி நபர் சட்டமூலத்தினை அரசாங்கம் உடனடியாக ஒப்புதல் வழங்கி, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    https://adaderanatamil.lk/news/cmfditfvp00c8o29nu5z6jjya

  21. அஷ்ரபின் மரணம் தூசு தட்டப்படுமா?

    மொஹமட் பாதுஷா

    ‘அஷ்ரபின் படுகொலை மரணம், 43 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க சி.ஐ.ஏயினால் கொலை செய்யப்பட்ட சிலியின் மக்கள் தலைவன் சில்வர்டோர் அலேண்டேயின் அரசியல் படுகொலையுடன் ஒப்பிடக் கூடியது.

    அஷ்ரபின் மரணம் வெறுமனே ஒரு உள்ளூர் திட்டமிடல் அல்ல. இதன் பின்னால் சர்வதேச அரசியலின் ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்திருக்கின்றது என நான் உறுதியாக நம்புகின்றேன். அதற்கு ஏவப்பட்ட ஒரு கருவியே விடுதலைப் புலிகள். இதன் பின்னால் நோர்வே மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் இருந்துள்ளனர்

    சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய ‘எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணம்’ நூலுக்கு அஷ்ரபோடு நீண்டகாலம் மிக நெருக்கமாக இருந்தவரும் அரசியல், சமூக ஆய்வாளருமான எம்.பௌஸர் எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிட்டுள்ள வரிகளே இவையாகும்.  இந்த மரணத்தின் பின்னால் இருந்த பாரதூரத்தைச் சொல்வதற்கு இவை மட்டுமே போதுமானவையாகும்.

    முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரான எம்;.எச்.எம். மரணித்து எதிர்வரும் 16ஆம் திகதியுடன் 25 வருடங்கள் நிறைவடைகின்றன. இன்று எத்தனையோ பழைய கோப்புக்கள் தூசுதட்டப்பட்டு விசாரணைகள் எடுக்கப்படுகின்ற போதிலும், அவரது மர்ம மரணம் பற்றிய கோப்பு மட்டும் தூசுதட்டப்பட்ட, உண்மை இன்னும் வெளிக் கொணரப்படவில்லை.

    ஒரு பெரும் முஸ்லிம் தலைவரின் இந்த மரணம் படுகொலையாக இருக்கலாம் என்ற பலமான சந்தேகங்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருக்கின்ற போதிலும், முஸ்லிம்கள் ஒரு சமூகமாக தமது மறைந்த தலைவரின் மரணத்திற்காக நீதி வேண்டிப் போராடவில்லை.

    அஷ்ரபை வைத்து இன்று வரை பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்ற றவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்களும் அரசியல்வாதிகளும் கூட இந்த விசாரணைகளுக்காகத் தாம் அதிகாரத்தில் இருந்த போது, முன்னிற்கவும் இல்லை. அதிகாரமில்லாத காலத்தில் அழுத்தம் கொடுக்கவும் இல்லை.

    அஷ்ரபிடமிருந்து இமாலய அனுகூலங்களைப் பெற்றுக் கொண்ட சந்திரிகா குமாரதுங்க ஒரு விசாரணைக் குழவை நியமித்தார். அது தனது அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. ஆனால், உண்மையை அவர் வெளியில் கொண்டு வரத் தவறிவிட்டார். குறைந்தபட்சம் இந்த விசாரணை அறிக்கையின் முழுமையான பிரதிகூட சுவடிகள் திணைக்களத்திற்கு இன்னும் வழங்கப்படவில்லை எனச் சொல்லப்படுகின்றது.

    முஸ்லிம்களுக்காகத் தனித்துவ அடையாள அரசியலை வடிவமைத்து, மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே ஒரு தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸையும் தன்னையும் உருவாக்கியிருந்த ஒரு மிகப் பெரும் தலைவர்தான் அஷ்ரப்.அவரது மரணத்தின் பின்னால் உள்ள உண்மைகள் இவ்வாறு மறைக்கப்படுகின்றது என்றால், விசாரணை அறிக்கைகளின் பக்கங்கள் காணாமல் போகின்றன என்றால், அரசியல் தரப்பினர் மௌனம் காக்கின்றனர் என்றால் இதற்குப் பின்னால் ‘ஏதோ ஒரு சதித்திட்டம்’  இருக்கின்றது என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு எழத்தானே செய்யும்?

    குறிப்பாக, முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கத்திற்கு முன்னரான முஸ்லிம் அரசியல் என்பது வேறு விதமாக அமைந்திருந்தது. அஷ்ரப் காலத்து அரசியல் முற்று முழுதாக வேறுபட்டிருந்தது. அரசாங்கத்தோடும் தமிழ் அரசியல்வாதிகளோடும் உறவுகளைப் பேணி வந்தார் அவர்.

    ஆனால், சமகாலத்தில், சிங்கள இனவாத அரசியல்வாதிகளும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அடக்குமுறையைப் பிரயோகித்த போது, அவற்றைப் பகிரங்கமாகவே நெஞ்சை நிமிர்த்திப் பேசக் கூடிய தைரியம் அவருக்கு மட்டுமே இருந்தது.

    அவர் மீதும் ஒருசில விமர்சனங்களை முன்வைப்போர் உள்ளனர்.
     ஆயினும், முஸ்லிம்களின் அபிலாஷை, காணிப் பிரச்சினைகள், முஸ்லிம் தனியலகு, கரையோர மாவட்டம், இனப் பிரச்சினை தீர்வில் உரிய பங்கு என தனது சமூகத்தோடு சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களிலும் தெளிவான நிலைப்பாட்டை வலியுறுத்தி வந்த தலைவர் அஷ்ரப் மட்டும்தான்.

    எனவே, அஷ்ரப் பலருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். இன்னும் பலருக்கு ஒருவித தலையிடியாக இருந்தார் என்பதை அன்றைய அரசியல் உள்ளரங்கம் தெரிந்தோர் அறிவார்கள். 

    பெரும்பான்மைக் கட்சிகளின் ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய வல்லமையை மு.கா. பெற்றிருந்தது இது அக்காலத்தில் தேசிய அரசியலில் இரண்டாம், மூன்றாம் நிலைகளில் இருந்த சிங்களக் கட்சிகளுக்கு நல்லதாகப் படவில்லை.
     
    கொழும்பை மையமாகக் கொண்டு முஸ்லிம்களுக்கான அரசியலை காலகாலமாகச் செய்து வந்த சில முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட, முஸ்லிம் அரசியல் கிழக்கை நோக்கி நகர்வதை அறவே விரும்பவில்லை என்றும், எப்போதும் அஷ்ரபை பற்றி நெஞ்சுக்குள் குமுறிக் கொண்டே இருந்தார்கள் என்றும் சொல்வார்கள். 

    முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களையும் நோக்கிப் போகாமல் விடுவதற்கு மு.கா.லின் அரசியல்மயமாக்கமும் ஒரு காரணமாக அமைந்தது எனலாம். இந்தப் பின்னணியில், விடுதலைப் புலிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதிய தமிழ் அரசியல்வாதிகளும் அஷ்ரபின் பலத்தையும் நெஞ்சுரத்தையும் தமக்கு சாதகமானதாகப் பார்க்கவில்லை.

    மிக முக்கியமாக, முஸ்லிம்களுக்கு எதிரான மறைமுக நிகழ்ச்சித் திட்டங்களுடன் இலங்கைக்குள் நுழையும் வெளிநாடுகள், வெளிநாட்டுச் சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பதில் அஷ்ரப்பும் அவரது அக்காலத்து அரசியல் தோழர்களும் உறுதியாக இருந்தனர்.

    இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை சேகு இஸ்ஸதீன், அஷ்ரப் உள்ளிட்டோர் எதிர்த்தது ஒருபுறமிருக்க, பிற்காலத்தில் நோர்வே போன்ற வெளிநாட்டுச் சக்திகளின் உள் வருகையை அஷ்ரப், ஜனாதிபதி சந்திரிகா ஊடாக தடுத்தார் என்று நம்பகரமாகச் சொல்லப்படுகின்றது.

    இலங்கையில் சமாதான பேச்சுவார்த்தை என்ற ஒரு விடயம் வந்தபோது, அது குறித்து அஷ்ரபிடம் ஆலோசனை கேட்டார் சந்திரிகா அம்மையார்,
    ‘இந்த திட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கிற்கோ எனது சமூகத்திற்கோ எந்த நன்மையும் இல்லை. எனவே, இதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சந்திரிகாவிடம் அஷ்ரப் சொன்னதாக அஷ்ரபை அதற்கு முதல் நாள் இரவும் கூட, சந்தித்திருந்த  முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுவ்லா கூறுகின்றார்.  

    ஆகவே, தலைவர் அஷ்ரப் உண்மையிலேயே திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றால், சம்பந்தப்பட்டோர் எதிர்பார்த்த மாறுதல்கள், பலன்கள் அவர்களுக்குக் கிடைத்ததாகவே சொல்ல முடியும். இந்தப் பின்னணியில் அஷ்ரப் மரணம் என்ற விடயமும் மூடிமறைக்கப்பட்டது எனலாம்.
     இதனை பௌஸர், மேற்படி நூலில் இவ்வாறு கூறுகின்றார்.

    “2002இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த அரசியல் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய காய்நகர்த்தலே அஷ்ரப் மீது நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதலாகும்.

    ஒரு நாட்டில் ஒரு விடயத்தைச் செய்வதற்கு முன் தமது நிகழ்ச்சி நிரலை தங்குதடையின்றி நிகழ்த்த வாய்ப்பான சூழலை சர்வதேச ஆதிக்க அரசுகள் எப்படித் திட்டமிடும், அதற்கு என்ன என்ன செய்யும் என்பதை சமகால சர்வதேச அரசியல் தொடர்பில் அறிவுள்ளவர்கள் ஓரளவேனும் புரிந்து கொள்ளலாம்’ என்கின்றார்.

    விபத்துக்குள்ளான ஹெலியில் தலைவர் அஷ்ரபுடன் கதிர்காமத்தம்பி என்ற ஒருவரும் சென்றிருந்தார். அவருக்கு விடுதலைப் புலிகள் பின்னர்  மாவீரர் பட்டம் வழங்கியதாகவும் அவர் கொண்டு சென்ற பையிலேயே குண்டு இருந்திருக்கலாம் என்றும் அக்காலத்தில் பேசப்பட்டது. ஆனால், அன்றைய தினம் அஷ்ரபுடன்  பெரியதம்பி என்று ஒருவரும் பயணித்துள்ளார் என்ற புதிய தகவலும் ஆச்சரியமளிக்கின்றது.

    ஆகவே, நன்றாகக் கவனியுங்கள்,.... அஷ்ரபின் மரணத்திற்கு முன்னரான நிலை.... அதன் பிறகு தற்போது வரையான முஸ்லிம் அரசியலின் போக்கு எல்லாவற்றையும் பார்த்தால் வலுவான ஆனால் நியாயமான சந்தேகம் ஒன்று உருவாகின்றது.
    அஷ்ரப் எல்லாவற்றையும் இழுத்துப் பிடிக்கின்றார். பிறகு அவாது மரணம் நிகழ்கின்றது...... பேரியலும் ஹக்கீமும் இணைத் தலைவர்களாகின்றனர். பிறகு ஹக்கீம் தனித் தலைவராகின்றார்.

    அதன் பிறகு எந்த தங்கு தடையுமின்றி, அஷ்ரப் தடுத்த நோர்வே உள்ளே வருகின்றது, எல்லாம் ‘அவர்கள்’ திட்டமிட்டபடி நடக்கின்றது. ஹக்கீம் எதிர்க்கலில்லை. முஸ்லிம்களுக்கு உரிய  இடம் இல்லை என்பதை அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

    அதன்பிறகு, இன்று வரையான காலத்தில் முஸ்லிம் அரசியல் கெட்டுக் குட்டிச் சுவராகி இருக்கின்றது. கிட்டத்தட்ட முஸ்லிம் கட்சிகளும் சரி முஸ்லிம் மக்களும் சரி 1970களில் இருந்த நிலைமைக்கு, மீண்டும் பெருந்தேசியக் கட்சிகளை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளனர்.

    சமூகத்திற்கான அரசியல் உண்மையில் தெருவில் நிற்கின்றது.
    ஆகவே, வெளிநாட்டுச் சக்தி, உள்நாட்டில் ஒரு தரப்பினர், புலிகள் எனப் பல தரப்பினர் ஒரு கூட்டுச் சதித்திட்டத்தைத் தீட்டி, தமது இலக்குகளுக்குத் தடையாக இருந்த அஷ்ரப் என்ற பெருவிருட்சம் வேரறுத்துள்ளதுடன்?

    அதன் மூலம் நீண்டகால அடிப்படையில் முஸ்லிம்களின் அரசியல் அடையாளத்தின் அசல் தன்மையைச் சீரழித்துள்ளனரா? என்பதுதான் கவலையும் ஆபத்தும் உறைந்த கேள்வியாகும்;.

    இந்தக் கேள்விக்கு விடை காணப்படாவிட்டால், இதே உத்தியை இனியும் ‘அவர்கள்’ பிரயோகிக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

    https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அஷ்ரபின்-மரணம்-தூசு-தட்டப்படுமா/91-364291

  22. மட்டு.சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆண்டு நினைவேந்தல்.

    மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35, வது ஆண்டு  நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாற்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் செவ்வாய்க்கிழமை (9) அன்று மாலை சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

    கடந்த 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் திகதி சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி,பனிச்சையடி போன்ற பிரதேசங்கள் இராணுவத்தினர் மற்றும் ஊர்காவல்படையினர் சுற்றிவளைத்து அங்கிருந்த  குழந்தைகள் பெண்கள் உட்பட 186 பேரை  போயிஸ் ரவுண் இராணுவ முகாம் பகுதிக்கு அழைத்து சென்று அவர்களை வெட்டியும் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்து யர்கள் போட்டு எரித்தனர்.

    இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நினைவு தூபியில் இடம்பெற்றது இதில் மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,முன்னாள் மாநகர சபை முதல்வர் ரி.சரவணபவன், மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து 4 கிராமங்களை சேர்ந்த 4 பேர் ஒன்றிணைந்து பொது சுடர் ஏற்றிய இதையடுத்து அங்கிருந்த அனைவரும் சுடர் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வர்களின் ஆத்மசாந்தி வேண்டி மலர்தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் படுகொலை செய்யப்பட்ட இராணுவ முகாம் அமைந்திருந்து பகுதியை அகழ்வு பணி முன்னெடுக்குமாறு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என ஊடகங்கள் ஊடாக  கோரிக்கை விடுத்தனர்.

    image_1b536474d2.jpgimage_8a5bd215e0.jpgimage_b2267a5825.jpgimage_347bad687b.jpg

    https://www.tamilmirror.lk/செய்திகள்/மட்டு-சத்துருக்கொண்டான்-இனப்படுகொலையின்-35-ஆண்டு-நினைவேந்தல்/175-364326

  23. முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை இன்று நீக்கம்!

    431662760.jpeg

    முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்புரிமைகள் தொடர்பான சட்டவரைவின் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் இன்று இடம்பெறவுள்ள நிலையில், அந்தச் சிறப்புரிமைகள் இன்றுடன் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப் புரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டவரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், இந்த நகர்வு அரசமைப்புக்கு முரணானது அல்ல என்று உயர்நீதிமன்றம் சட்ட விளக்கம் வழங்கியுள்ளது. அதனால் நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் இந்தச் சட்டவரைவை நிறைவேற்ற முடியும் எனவும் நீதிமன்றம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை நீக்கும் சட்டவரைவு மீது இன்று காலை நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று. இன்று மாலை அந்தச் சட்டவரைவு நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் இன்றுடன் நீக்கப்படுவதற்குச் சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சிறப்புரிமை நீக்கச் சட்டவரைவு நிறைவேற்றப்படும் பட்சத்தில், முன்னாள் ஜனாதிபதிகளின் ஊதியங்கள் குறைக்கப்படும். பாதுகாப்புக் குறைக்கப்படும். அத்துடன் மிகப்பெரும் மாளிகைகளுக்கான உரிமைகளும் இல்லாமல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    https://newuthayan.com/article/முன்னாள்_ஜனாதிபதிகளின்_சிறப்புரிமை_இன்று_நீக்கம்!

  24. நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்!

    422555504.jpeg

    நேபாளத்தில் எதிர்கொள்ளப்படும் அரசியல் கலரவ சூழ்நிலையின் பின்னணியில் அங்கு வாழும் இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

    நேபாளத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் தங்குமிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்று வெளிவிவகார அமைச்சின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

    அத்துடன் நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளை 10977- 9851048653 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்ணீர் மற்றும் உலர் உணவுப் பொருட்களை எப்போதும் தங்களிடம் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள் அவற்றை எப்போதும் தங்களிடம் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேபாளத்தில் 99 இலங்கையர்கள் உள்ளனர், அதில் தூதரக ஊழியர்கள் உட்பட 22 மாணவர்கள் உள்ளனர்.

     அதே நேரம் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் போராட்டத்தினால் இலங்கையர்கள் யாரும் காயமடைந்ததாக இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

    https://newuthayan.com/article/நேபாளத்தில்_உள்ள_இலங்கையர்களுக்கு_விசேட_அறிவித்தல்!

  25. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி தனிநபர் பாதுகாப்பை உறுதிசெய்க!

    உறுப்பு நாடுகள் ஐ.நா.வில் வலியுறுத்து

    807273820.jpeg



    இலங்கையில் தனிநபர்களை இலக்குவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்று பிரிட்டன், நியூஸிலாந்து, சுவிட்ஸர்லாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பமானது. இதில் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அறிக்கைமீதான விவாதம் நடைபெற்றது.

    இதன்போது, தேசிய நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்கான உள்ளகக் கட்டமைப்புகளின் இயலுமையையும் கட்டியெழுப்புவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டைப் பெரிதும் வரவேற்கின்றோம்.

    வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திச் செயற்றிட்டங்களையும் பாராட்டுகின்றோம். இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு அவசியமான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு நாம் தயார் என்று ஜப்பான் தெரிவித்தது.

    நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டைப் பாராட்டுகின்றோம். மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களை இலக்குவைத்து ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன.

    பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், இன்னமும் அந்தச் சட்டம் நீக்கப்படாமை அதிருப்தி தருகின்றது என்று பிரிட்டன் தெரிவித்தது. மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும். நிலை மாறுகால நீதியை உறுதி செய்வதற்கும் இலங்கையால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத்தயார். நபர்களைத் தன்னிச்சையாகக் கைது செய்வதற்கும், தடுத்துவைப்பதற்கும் பயன்படுத்தப்படும் பயங்கர வாதத்தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்.

    நிகழ்நிலைக்காப்புச்சட்டம் திருத்தியமைக்கப்படவேண்டும் என்று அவுஸ்திரேலியா தெரிவித்தது. நியூஸிலாந்து, சுவிட்ஸர்லாந்து மற்றும் மொன்டெனேக்ரோ ஆகிய நாடுகள் இலங்கையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனவும். சட்டத்தின் ஆட்சிநிலை நாட்டப்படவேண்டும் எனவும் வலியுறுத்தின.

    https://newuthayan.com/article/பயங்கரவாதத்_தடைச்சட்டத்தை_நீக்கி_தனிநபர்_பாதுகாப்பை_உறுதிசெய்க!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.