பாகன் மற்றும் உங்களுக்கிடையிலான கருத்தாடலைவைத்து எனது பொதுவான கருத்தை எழுதியிருந்தேன். பிரதேசவாதம் எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தேசம் என்ற பொதுத்தன்மையை சிதைக்கின்றது என்பது உண்மை. அதனடிப்படையில் எனது கருத்து உள்ளது. மற்றபடி ஒருவருடைய பெயர் அவரது தனிப்பட்ட உரிமை மேலும் உங்கள் எழுத்துக்களை அறிந்தவரையில் உங்கள் மீது பிரதேசவாத முத்திரை குத்த முடியாது ஆனால் இந்த பெயரில் இருக்கும் ஊர் உங்கள் எழுத்துக்களுக்கே பிரதேசவாத முத்திரை குத்தி தேசத்தில் இருந்து பிரித்து ஊருக்குள் முடக்கிவிடும் என்ற கவலை இருக்கின்றது.