-
Posts
2554 -
Joined
-
Last visited
-
Days Won
33
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by சண்டமாருதன்
-
ஏற்கனவே மது விலக்குப் போராட்டத்தில் கவல்துறை இவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளது. சாதாரணமாக பஸ் ரயில்களில் தொங்கிக்கொண்டு போகின்றவர்களை கத்தி கொண்டு போகும் நிலைக்கு நகர்த்தியது என்னவென்பதை ஆராய்வதே சிறந்தது. தயவு தாட்சன்யமில்லாமல் ஒடுக்க முற்பட்டால் இது என்னும் வேற லெவலுக்கு போகும் தவிர இதை தணிக்க முடியாது. காவல்துறையும் பொறுக்கித்தனம் செய்கின்றது அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பொறுக்கித்தனம் செய்கின்றது. இவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு உருவாகும் எதிர்வினைகள். உணர்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக அணுகவேண்டியவை. எக்காலத்திலும் இளைஞர்களின் துடிப்பை சரியான வழிக்கு திசை திருப்பவேண்டுமே தவிர அதை ஒடுக்கி முடக்குவது அவர்கள் வாழ்வை அழிப்பதற்கு சமம்.
-
https://www.youtube.com/watch?v=UVNXzzj_0fc https://www.youtube.com/watch?v=R5-x-rCFxmg இளம் கன்று பயமறியாது என்பது போல் இது எல்லா நாட்டிலும் வளமை. சூழ்நிலைக்கு ஏற்ப அட்டகாசம் வேறுபடும். காரில் ரேஸ் ஓடுவார்கள். வம்புக்கு இழுப்பார்கள். கண்ணாடி பஸ்தரிப்பிடங்களை உடைப்பார்கள். கஞ்சா அடிப்பார்கள். வயதும் ஆர்வமும் கேர்மோன்களும் என தன்னை ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசமானவானா சமூகத்திற்கு காட்டவும் பிறரின் கவனத்தை தன்பக்கம் இழுக்கவும் செய்வார்கள். பெண்களின் கவர்ச்சி உடைகளும் மேக்கப்புகளும் இவ்வாறானது தான். இந்த உந்து சக்தியை சிலர் விளையாட்டின் பக்கம் திருப்புவார்கள் ஏதோ ஒரு கண்டுபிடிப்பு சார்ந்து திருப்புவார்கள். சரியான வழிநடத்தல் தான் காரணம். இருந்தும் இந்த மாணவர்கள் தமது சக்தியை அவ்வப்போது சமூக நீதிக்கான போராட்டங்களின் பக்கம் திருப்புகின்றார்கள். அந்தவகையில் இவர்கள் அட்டகாசங்களை பெரிதுபடுத்த முடியாது...
-
பிரிந்து செல்ல முடியுமா..?
சண்டமாருதன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
இலங்கையில் தனிநாடு உருவானால் தமிழ்நாட்டுக்கும் தனிநாட்டுச் சிந்தனைன வந்துவிடும் என்றே ஈழத்தமிழர்கள் அழிவுக்கு இந்தியா மத்திய அதிகாரவர்க்கம் துணைபோனது. அவ்வாறு துணைபோனதன் எதிர்விளைவுதான் இன்று தமழித்தேசீயவாதம் தமிழ்நாட்டில் சற்று மேலோங்கியிருக்கின்றது. தமிழகமோ அல்லது பிற மாநிலங்களோ பிரிவது என்பது மத்திய அரசு மாநிலவாரியாக செய்யும் அடக்குமுறை பாரபட்சம் மொழித்திணிப்பு வளங்களை சுரண்டுதல் போன்ற பல விசயங்களோடு சம்மந்தப்பட்டது. பிரிவினை என்பதற்கு ஒன்றுபட்ட மக்கள் எழுச்சியும் புரட்சியும் அடிப்படையாகும் ஆனால் இந்த அடிப்படையை சாதியம் வகுப்புவாதம் தீண்டாமை போன்ற பல அலகுகளால் தகர்த்தே இந்தியா என்ற தேசம் கட்டமைக்கப்பட்டுள்ளது. சாதியம் வகுப்புவாதம் தீண்டாமை ஒழிந்து தமிழன் மலையாளி கன்னடன் தெலுங்கன் என்ற நிலை வரும்போது இந்தியா என்ற கட்டமைப்பும் உடையும். ஆனால் பிரிவினையை தீர்மானிப்பதில் பிரிந்து போக விரும்புபவர்களை விட அதிக வலிமை பிரிவதால் யாருக்கு என்ன லாப நட்டம் என்பதிலேயே அதிகம் உண்டு. இந்தியா உடைவதால் அமரிக்கா சீனா ரசியா ஐரோப்பாவுக்கு என்ன லாபம். உடையாமல் இருப்பதால் என்ன லாபம். இவையே பிரதானமானது. தற்போது பிரியாமல் இருப்பதே ஏகாதிபத்தியத்துக்கு அதிக லாபம். இந்தியா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. அடுத்து வரும் காலங்களிலும் இந்தியாவின் உணவு உற்பத்தி வீழ்ச்சியும் ஏகாதிபத்திய நாடுகளின் உணவு உற்பத்தி வளரச்சியும் இந்தியா உடையாமல் இருப்பதுக்கு ஏதுவாக உள்ளது. உலகமயமாக்கல் இந்தியமயமாக்கல் இவைகளை கடந்து இனத்தேசீயமானது சாதி மத வகுப்புவாங்களை கழைந்து மேலோங்கவேண்டும். அவ்வாறு மேலோங்கும்போதும் கூட தற்சார்பு பொருளாதாரமும் வளரவேண்டும். தற்சார்புப் பொருளாதரத்துக்கு ஏகாதிபத்தியநாடுகள் ஈடமளிக்காது. அவ்வாறு இடமளிக்காத போது பிரிந்தும் அடிமைவாழ்வுபோலாகிவிடும். உதராணமாக ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றும் இந்தியா ஆங்கிலேயர்களுக்கு அடிமையாகவே இருக்கின்றது. அணுகுண்டு வைத்திருந்தால்போல் இந்தியா விடுதலைபெற்று சர்வ சுதந்திரம் பெற்ற நாடு என்று பொருள் இல்லை. இந்தியாவின் தேயிலை சக்கரை அரிசி விலையை தீர்மானிப்பது மேற்குநாடுகளே அன்றி இந்தியா அல்ல. உலகமயமாக்கல் என்பதன் பின்பு பிரிவினை என்பது மிகச் சிக்கலான விசயம். யூரியுப் எல்லாம் ஆழப்போறான் தமிழன் பாடல்தான் நுறு விதமாக வெளியிடுகின்றார்கள். கேட்க நல்லாத்தான் இருக்கு ஆனால் நடமுறைச் சாத்தியம் என்பது ஏகப்பட்ட விசயங்கள் அதிகாரங்கள் பணம் ஏகாதிபத்தியம் சம்மந்தப்பட்டது. -
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
-
நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளின் தியாகங்களையும் வீர வரலாறுகளையும் ஒரு உந்து சக்தியாக எமது இனம் தனது விடுதலைப்பயணத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. பேரினவாத அரசின் போர்க்குற்றங்களையும் போராட்டத்தின் தொடர்ச்சிக்குப் பயன்படுத்த முடியவில்லை. இவை இரண்டையும் அலட்சியப்படுத்திய ஈழத்தமிழர்களின் அரசியல் நகர்வுகள் சூனியமானது. அற்ப பலனையும் எக்காலத்திலும் பெற வக்கற்றது.
-
http://izismile.com/2013/12/21/2013s_most_viewed_images_according_to_google_trends_77_pics.html இந்த இணையத்தில் இருந்து மேற்கண்ட இணைப்பு எடுக்கப்பட்டது. http://nanavanthan.blogspot.com/2014/03/77.html
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
. இஸ்லாமியர்கள் இந்தக் களம் பக்கம் எட்டியும் பர்ப்பதில்லை. இந்தக் களத்தில் எந்த ஒரு இஸ்லாமியர்களும் வந்து எந்த வாக்குவாதமும் செய்யவில்லை இருந்தும் நீங்கள் தொடர்ந்து இஸ்லாத்தை தாக்கி சீண்டி வருகின்றீர்கள். இந்து மதப்பற்றுள்ள ஒருவரின் குணம் எப்படிப்பட்டது என்பதற்கு உங்கள் கருத்துக்களை விட வேறு சான்று என்ன வேணும்? உங்கள் கருத்துக்கள் மற்ற மதங்களை தாக்குவதில் குறியாய் உள்ளது. எப்படியாவது தமிழர்கள் சாதி மத பேதங்களை கடந்து இனமாக ஒன்றுபட்டுவிடுவார்களோ என்ற பயம் மதப்பிளவுகளை விரிவாக்கும் உங்கள் கருத்துக்களில் தாராளமாக உள்ளது. இந்த நிலையில் அமரிக்காபோல் ஆட்சியும் அமைக்கப்போவதாகச் சொல்கின்றீர்கள். நல்லது. -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
உங்களுக்கு என்னதான் பிரச்சனை என்று புரியவில்லை. இந்துமதமோ சைவமோ அவ்மததில் உள்ளவர்கள் அம்மதத்தல் எவருக்கும் சமமானதில்லை. இதே மதங்கள் தான் இன்ன சாதிதான் கோயிலுக்குள் வரலாம் பூசை செய்யலாம் இன்மொழியில் தான் பூசை செய்யலாம் அதற்கும் மேலாக தீண்டத்தகாத கடவுள்கள் என்று கோயிலுக்கு வெளியே மனிதர்களை மட்டுமல்ல கடவுள்களையும் வைத்துள்ளது. இந் நிலையில் யாருக்காக மதம் மற்றுவது சரி அல்லது பிழை என்று கருத்துச் சொல்லவேண்டும்? இந்து என்றாலே அதன் கீழ் யாரும் சமமாக இருக்கமுடியாது இந்நிலையில் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டுபோய் மதம் மாற்றுவது சரி பிழை என்று சொல்வது? சுத்த கூறுகெட்ட தனமா இருக்கு உங்கள் கேள்விகள். நீங்களும் நானும் ஒரு மொழிபேசுவதால் தமிழர் எனலாம் இல்லை ஒரு பிரதேசத்தில் வாழ்வதால் ஒரு இடத்துக்குரியவர் எனலாம் ஆனால் நீங்களும் நானும் அல்லது எவரும் நாங்கள் இந்த அல்லது சைவம் என்ற பொதுப்படைக்கு கீழே வரமுடியாது அதை புரிந்துகொள்ளுங்கள். அங்கே சாதிகள் எற்றதாழ்வுகள் வந்து தடுத்துக்கொள்ளும். இந்நிலையில் மதம் மாற்றுவது பிழை என்று யாருக்காக சொல்லவேண்டும் உங்களுக்காகவா இல்லை வேறு யாருக்காகவுமா? மானுட நேயத்தை சமத்துவத்தை விரும்பும் எவனும் இந்துமதத்தில் இருந்து என்னுமாரு மதத்துக்கு ஒருவன் செல்வதை தடுக்கமாட்டான். இந்து மதமே எம்மை அழித்து சிதைத்து சின்னாபின்னமாக்கும் நிலையில் அடுத்தவனைப்போய் நீ செய்வது பிழை என்பதற்கு என்ன அடிப்படை யோக்கியம் இருக்கு? மதம் மாற்றுபவராகட்டும் இல்லை மாறுபவராகட்டும் அது அவர்கள் பிரச்சனை. அதில் கருத்துச்சொல்லும் அடிப்படைத்தகுதி எனக்கிலல்லை ஏனெனில் நான் பிறப்பால் சைவசமயம் சார்ந்தவன். தூரதிஸ்டவசமாக மானுட விரோத மததில் பிறந்துவிட்டதால் எந்தவிதத்திலும் என்னுமொருவர் மீது குற்றம் காணும் தகுதி எனக்கில்லை. நீங்கள் வேண்டுமானால் மதம் மாற்றுவது பிழை என்று ஆரம்பித்த சண்டையை இழுத்து இரண்டு தரப்பும் அங்கு அடிபட்டு சாக இங்க இருந்து புலிக்கு முதல் விசில் அடித்தது போல் விசிலடியுங்கள். -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
இந்துத்துவத்துக்கு இன்னுமொரு பெயர் பார்ப்பனப் பயங்கரவாதம். ஈழத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்தப் பயங்கரவாதத்தை உணர்பவர்கள் இல்லை. அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம் பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு கோயிலுக்குப் போன்றார்கள் தமது ஆத்ம சாந்திக்கு வழிபடுகின்றார்கள். இது ஆன்மீகம் அல்லது இறை நம்பிக்கை. அதில் நம்பிக்கை உடையவராக நீங்கள் இருக்கலாம். இந்துத்துவம் என்பது மதம் மற்றும் அதுசார்ந்த அரசியல். அங்கே ஆன்மீகத்துக்கு இடமில்லை. இந்துத்துவம் மனு தர்மத்தைப் போதிக்கின்றது. வருணாசிரமதர்மத்தைப் போதிக்கினறது. சதீயத்தை வரையறை செய்கின்றது. ஏற்றதாழ்வை சட்டமாக்குகின்றது. இதனடிப்படையில் இந்தியாவில் இன்னும் 17 இல் இருந்து 20 மில்லியன் மக்கள் தீண்டத்தகாத மக்களாக தலித்துக்களாக அவர்களது வாழ்வு நரகமாக்கப்பட்டுள்ளது. இந்துத்துவத்தின் பிரதான இயங்குசக்தியானது இனங்கள் உருவாவதை தடுத்தல் சமூகம் சமநிலைப்படுவதை தடுத்தல். ஏற்றதாழ்வு சமநிலைப்படுவதை தடுத்தல். இனத்துக்கான தேசீயம் உருவாவதை தடுத்தல். - இது எவ்வாறு நிகழ்கின்றது என்றால் சாதி இருக்கும் சமுதாயம் ஒன்றுபட முடியாது. சமூக உறவுக்குள் நெருக்கம் வராது. நீயும் நானும் தமிழன் ஆனால் நான் உன்னைத் தொடமாட்டேன் நீ திண்டத்தகாதவன் குறைந்த சாதி உன்னிடம் சம்மந்தம் வைத்துக்கொள்ள மாட்டேன என்னும் நிலையில் இந்த தமிழன் என்பதை எவன் ஏற்கப்போகின்றான்? அதற்கு என்ன அவசியம் இருக்கின்றது? இததான் இந்தியாவில் நடக்கின்றது. எந்த இனமும் விடுதலை பெறமுடியாது. ஒவ்வொரு வரும் பல தட்டுகளாக சாதிவாரியாக பிரிந்து இனத்தை இரண்டாம் நிலையில் வைத்துள்ளனர். இதுவே பிரித்தாளும் அரசியில். இந்தியாவை இந்துதுவம் ஆழ்கின்றது. யாரொருவன் இந்துவாக இருக்க முடியுமோ அவன் இனத்தை துறந்தாகவேண்டும். இனத்தேசீயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமோ அவன் இந்துத்துவத்தை துறந்தாகவேண்டும். இது வெளிப்படையான யதார்த்தம். இந்தியாவில் குறிப்பாக பார்ப்பனர்கள் இந்திய அதிகார வர்க்கம் ஈழம் அமைவதை ஒரு தேசீய இனம் உருவாவதை என்றைக்கும் விரும்பியது இல்லை. இனிமேலும் அது விரும்பாது. பிரித்தாளும் தனது பாரம்பரிய குணத்திற்கேற்ப ஈழத்தமிழ் இயக்கங்களை பிரித்து சூழ்ச்சிகளுக்கு உட்படுத்தி ஈழத்தை சுடுகாடாக்கியது. பிரித்தாழ்வதும் மனித குலத்தை சர்வ நாசம் செய்வதும் இந்துதுவத்தின் அடிப்படைக் குணம். இந்துத்துவம் தமிழ்மொழியை நீச பாசை என்கின்றது. அதாவது தீண்டத்தகாத பாசை என்கின்றது. கடவுளுக்கு கேட்கும் மொழி சமஸ்கிருதம் என்கின்றது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பிரசங்கம் செய்த மேடைகளை கழுவி தீட்டுக்களித்த சம்பவங்கள் எல்லாம் வரலாற்றில் பதிவாகியுள்ளது. ஈழத்தில் இந்த நிலை இந்தியா அளவுக்கு மோசமாக இருந்ததில்லை. சைவம் அதிகாரத்துடன் இருந்தது.ஆனாலும் சைவத்தை வைத்து பிழைப்புவாதம் நடத்தியவர்கள் தம்மையும் இந்துவாக தாமாக அந்தச் சகதிக்குள் தலையை கொடுத்தனர். சமஸ்கிருதத்தில் தான் மந்திரம் சொல்லவேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றனர் (இத்திரியில் ஒரு புத்தகத்தின் இணைப்புள்ளது அதைப் படித்தால் அதுசார்ந்து நிறைய விசயங்களை அறிந்துகொள்ளலாம்)அதாவது தமது தாய்மொழியை தாமே தீண்டத்தகாகத மொழி என்று ஏற்றுக்கொண்டனர்.இந்தியாவின் இந்துத்துவம் கட்டமைத்த சாதீகளை யாழ்பாணத்தில் சைவம் என்ற போர்வையில் ஏற்படுத்தினார்கள். இந்தியாவில் இந்துத்துவத்துக்கு பார்ப்பான் தலமையாக இருப்பதுபோல் யாழ்ப்பாணத்தில் வெள்ளார் தலமையாக இருக்க முற்பட்டனர். ஏழை எளிய மக்கள் சாதியில் தாழ்ந்த மக்கள் கல்வி கற்பதை தடுத்தனர். அரச உத்தியோகத்தில் இணைவதை தடுத்தனர். இதுதான் நாவலர் காலம். இதன் வரலாறு மிக நீளமானது. ஒரு இனம் உருவாவதை தடுக்கும் மிகப்பெரிய சக்தியாக இந்துமதம் அதன் இயங்கு சக்தி உள்ளது. சமூகங்கள் சிதைந்து சீரளிந்து பேவதற்கு இந்துமதம் பிரதான சக்தியாக உள்ளது. அதை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு இன விடுதலை என்பத எவ்வளவு வேடிக்கையானது? நீங்கள் பற்றுக்கொண்டுள்ளது இறைநம்பிக்கையிலா இல்லை அது சார்ந்த ஆன்மீகத்திலா இல்லை சைவத்திலா இல்லை இந்துத்துவத்திலா? இந்துத்துவத்தில் என்றால் இனத்தை மறந்தவிடுவது உங்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட விதி. சிங்கள இனம் பௌத்தத்தை அடிப்படையாக வைத்து இனத்தின் பலத்தை கட்டியெழுப்புகின்றது. தமிழினத்தில் இந்துத்துவம் என்பது சதீய வர்கக் ஏற்றதாழ்வுகைள ஆழமாக்கி பிளவுகளை ஏற்படுத்தி இனத்தை சிதைக்கின்றது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் நேரெதிரானது. சிங்கள இனம் அதன் இன உருவாக்கம் குறித்து மதத்தை எப்படிக் கையாழ்கின்றது என்பது வெளிப்படையானது. அதே போல் இஸ்லாம் மதத்தின் பெயரால ஒன்றுபடுகின்றது. சமூக உறவுகள் நெருக்கமாகின்றது. எதிர்காலத்தில் அதன் பலம் அதிகரிக்கும். இந்துத்துவம் இதற்கு நேர் எதிர்த்திசையில் பயணிப்பது. அதன் விழைவில் இயக்க மோதல்கள் உட்பட இஸ்லாமியப் பிழவுகள் பிரதேசவாதப்பிழவுகள் அதற்கான உளவியல் அனைத்தும் இணைந்திருக்கின்றது. நீங்கள் விரும்பினால் இந்துவாக இருங்கள் இல்லையேல் சைவனாக இருந்து அதை திருத்திக்கொள்ளுங்கள் இல்லை சாதராண இறை நம்பிக்கையுள்ளவர்களாக இருங்கள் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை. ஒரு தேசீயவாதியாக இன அடயாளத்தை முன்நிறுத்தும் போத கருத்துக்கள் முரண்படுகின்றது அவ்வளவுதான். -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
மதமே மொழியின் ஊற்று என்றால் சமணத்தையும் பௌத்தததையும் தான் ஆதரிக்கவேண்டுமே தவிர தமிழை நீச பாசை என்று தீட்டு நீக்கும் முறை கொண்ட இந்துத்துவத்தை எப்படி ஆதரிப்பது? மதமே எமது கலாச்சாரம் என்பதால் அதற்குள் சாதீயமும் ஏற்றதாழ்வுகளும் தக்கவைக்கப்படுகின்றது. அது இருக்கும் வரை ஒருவனை ஒருவன் ஏற்றும் ஜனநாயகப் பண்பு வராவே வராது. இவை சாத்தியப்படாத போத இன ஒற்றுமை என்பத எக்காலத்திலும் சாத்தியம் இல்லை. என்று ஒருவனுக்கு தான் வாழ்ந்த நிலத்தை விட மதம் தேசீய அடயாளமாகின்றதோ அதன் பிறகு அவனுக்கு நாடு அவசியம் இல்லை. மதத்தை காவிக்கொண்டு உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் வாழமுடியும். புலம்பெயர் தமிழர்களின் கோயில்களும் தேசீயமும் இதே வழிகாட்டலில் தான் நாடக்கின்றது. அவனுக்கு தேசம் நாலம் பட்சம். ஆன்மீகம் வேறு மதம் வேறு. நீங்கள் ஆன்மீகத்தை தொலைக்கும் மதவாதிகளா உருவெடுத்துள்ளீர்கள். அதற்கு விலையாக தேசம் தேசீயம் நாடு என்பதை கொடுகின்றீர்கள். -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
இந்திய ஒரு தேசமாக மாற்றம் பெற்றது குறித்த அறிவில் குழறுபடி வருவதற்கு எதுவும் இல்லை. அதே இந்தியா பார்ப்பன இந்துத்துவா அதிகாரவர்க்கத்திடம் கைமறியதும் அது ஈழத்தமிழர்களை என்னும் பதம் பார்த்துக்கொண்டிருப்பதும் தான் உங்களுக்குப் புரியவில்லை. இந்துத்தவ அடிப்படையயே சூழ்ச்சிகள் ஊடாக கட்டமைப்புகள் இனங்கள் சமூகங்களை சிதைத்து தமது அதிகாரத்தை தக்கவைப்பது. இது ஒன்றும் புதிதில்லை. சமண பௌத்தங்களை அழித்ததில் தொடங்கி சோழ சேர பாண்டிய அரசுகளை அழித்தது ஈடாக பின்னர் ஈழத்தை பொறுத்தவரை இயக்க மோதல்களை பின்னணியில் நின்று தூண்டிவிட்டு சுடுகாடாக்கியதுவரை சாதீய சமூகங்கள் தீண்டாமை வருணாசிரமதர்மம் என இந்திய இனங்களை சிதைத்து தனது புத்திசாலித்தனத்தால் இன்றும் அதிகாரவரக்கமாக இருப்பதின் நீட்சியே இந்துத்தவம். இந்துத்தவம் ஒரு விசம். மேல டாஸ் என்பவரின் கருத்தில் இஸ்லாமியர்களை வெளியேற்றுவோம் என்ற மதவெறி இருக்கின்றது. இதை விட தமிழன் ஒரு இனமாக முடியாது என்பதற்கு என்ன சான்று வேணும்? இந்த மதவாத சமுதாயப் பின்னணிதான் இஸ்லாமியத் தமிழருக்கும் எமக்குமான பிரச்சனை. இந்தப்பிரச்சனையோடு உலக அரங்கில் இது இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாம் என ஆரம்பிக்கப்பட்ட அணுகுமுறை முள்ளிவாய்க்காலில் வந்து முடிந்தது. இந்துத்துவா பின்னணி எமது போராட்டத்திலேயே தராளாமாக தனது விசத்தை கக்கியுள்ளது என்பதற்கு வெளிப்படையான சான்று இது. இன்று ஆரம்பிக்கப்படும் இந்துத்துவா என்பதும் சிவசேனா என்பதும் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான விரிசலின் ஆரம்பம். தமிழினம் என்பதில் இருந்து இஸ்லாமியர்களை பிரித்தாயிற்று இனி கிறிஸ்தவர்களை ஆரம்ப்பின்கின்றனர். இறுதியில் மிஞ்சப்போவது நல்லூரை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் நாலுபேர்தான். அவர்களுக்கு ஒரு தமிழீழத்தை இந்த உலகின் எந்த மடயன் அங்கீகரிப்பான்? தமிழீழம் என்ற தேசீய இனம் உருவாவதற்கு பிரதான தடைக்கல் இந்துத்துவம் என்பதற்கு எத்தனையோ அழிவுகள் காரணங்கள் சான்றாக உள்ளது.அதை ஆதரிப்பவன் எப்படி ஒரு தேசீயவாதியாக இருக்கமுடியும்? நாளுக்கு நாள் ஈழத்தமிழர்களின் இன ஒற்றுமை என்பது கற்பனைக்கு எட்டாத தூரத்துக்கு தள்ளப்படுகின்றது. மதவாதமாக பிரதேசவாதமா அது என்னும் விரைவுபடுத்தப்படுகின்றது. பிரதேசவாதத்தை தூக்கிப்பிடித்த கருணா துரோகி என்றால் மதவாதத்தை தூக்கிப்பிடிப்பவன் தியாகியா? ஏற்கனவே இந்தக் களத்தில் பதிவு செய்துள்ளேன் கருணாவை விட மோசமான துரோகிகிள் இருக்கின்றார்கள் என்று. ஏனெனில் எனக்கு மையவாதத்தின் குணம் நன்கு தெரியும். மையவாதம் சாதீய மதவெறியுடன் சம்மந்மப்பட்டது அது இனத்தை பிழந்துதள்ளும். அதையே தான் இங்கு பலர் செய்கின்றனர். இங்கே பல கருத்துக்களின் முன்னால் கருணாவின் துரோகம் கூட சிறுத்துக்கொண்டு போகின்றது காரணம் பிரதேசவாதப் பிழவுகள் முனைந்தால் சரிசெய்யக் கூடியது ஆனால் மதவாதப்பிழவுகளை சரிசெய்வதென்பது அவ்வளவு எளிதல்ல. (அவரவர் கற்பனையில் என்னை கிறிஸ்தவன் முஸ்லீம் அல்லது எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் எனக்கு அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை. நான் யார் என்று எனக்குத் தெரியும். எனது நோக்கம் அதிக எண்ண ஓட்டங்கள் கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது அவ்வளவுதான்) -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
ஈழத்தில் இந்துத்துவம் என்பது யாழ்பாண மேட்டுக்குடிகள் வலிந்திழுத்த சாக்கடை. இரண்டே தெரிவுகள் தான்; ஒன்று இந்துவாய் இருத்தல் இல்லையேல் தமிழனாய் இருத்தல். இந்துவாயும் தமிழனாயும் கடசிவரை இருக்கமுடியாது. இந்துதுவ வாதியாய் இருந்துகொண்டு தமிழனாய் இருப்பதென்பது சுத்த கோமாளித்தனம். இந்துத்துவ வததியாய் இருந்த தமிழ்த்தேசீயம் பற்றி கற்பனையும் பண்ண முடியாத. தமிழ்த்தேசீயத்திற்கு முதல் விரோதியே இந்துத்துவம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இங்கே பலரது தேசீய முகங்கள் கிழிந்து தொங்குகின்றது. இந்துத்துவத்தின் அடிப்படையே தேசீய இனங்களை சாதீயம் ஏற்றதாழ்வுகள் ஊடாக சிதைப்பதே ஆகும். இந்தியாவில் அதுவே காலாகாலமாக நடந்துவருகின்றது. இந்துத்துவம் இருக்கும் வரை ஒன்றுபட்ட சமூகம் ஒன்றுபட்ட தேசீய இனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்துமதத்துக்குள் ஒரு தேசீய இனம் உருவாவதை இந்துத்துவம் எக்காலத்திலும் அனுமதிக்காது அதற்கான அடிப்படையும் இல்லை. ஈழத்தில் ஒரு தேசீய இனம் உருவாவது என்பதுக்கு இந்திய இந்துத்துவம் தலைகீழாய் நின்றாலும் அனுமதிக்காது. சிங்களம் ஒரு தேசீய இனம் என்பது அது பௌத்தம் சர்ந்து இருப்பதால். நாளை இஸ்லாமியத் தமிழர்கள் ஒரு தேசீய அலகாக மாறக்கூடும் அதற்கும் அவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பது காரணமாகும். ஆனால் இந்துக்கள் என்பவர்கள் கடசவரை ஒரு தேசீய இனமாக முடியவே முடியாது. ஏனெனில் தேசீய இனக் கட்டமைப்புகளை சிதைக்க ஏற்பாடு செய்யப்பட்டதே இந்துத்துவம். பேரருசுகள் அழிந்தது. எழுச்சிகள் அத்தனையும் தோல்விகண்டது. வரலாறு முழுக்க தமிழன் வாழ்வு அடிமைத் தடத்திலேயே உள்ளது. இதற்கு இந்துத்துவமே அடிப்படைக் காரணம். இந்துத்துவம் விரும்கின்றவன் தமிழீழம் என்ற கனவுக்கும் தகுதியற்றவன். இந்துத்துவம் என்பது தேசீய இனங்கள் தற்கொலை செய்வதற்கான தூக்குக் கயிறு அதற்குள் தலையை கொடுப்பதும் விடுவதும் அவனவன் அறிவைப் பொறுத்தது. -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
முரண்பாட்டை வளர்ப்பது நீங்கள். நான் ஆடுத்த மதத்தில் குறை கண்டுபிடிக்கவோ மூக்கை நுழைக்கவோ எந்தக் கருத்திலும் செய்யவில்லை. என் சார்ந்த மதத்தில் என்ன பிழையோ அதிலேயே எனது விமர்சனம் நிற்கின்றது. வேறு மதங்களில் உள்ள பிரச்சனை பற்றி கதைக்கவேண்டியது அவர்கள் தவிர நானில்லை. அவ்வாறு நான் கதைத்தால்தான் அது மதப்பிரச்சனை. மத முரண்பாட்டை வளர்பதில் கங்கணம் கட்டி நிற்பது நீங்கள். எங்காவது நான் கிருத்துவத்தில் அந்தப் பிழை இருக்கின்றது இஸ்லாத்தில் இந்தப் பிழை இருக்கின்றது என்று சொல்லியுள்னோ? சொன்னால் அது மதப்பிரச்சனை. அதை நீங்கள் எப்படித்தான் தூண்டினாலும் நான் செய்யப்போவதில்லை. ஏனெனில் நான் மத முரண்பாட்டிற்று எதிரானவன். சைவம் இந்துத்துவம் தனது சாதீய மத வெறியால் தமிழர்கள் வாழ்வை சுடுகாடாக்குவதில் பெரும் பங்கு வகித்தது. இன்னும் வகித்துக்கொண்டிருக்கின்றது. அது சார்ந்த விமர்சனத்தை நான் எப்போதும் செய்வேன். பிழை இருக்கும் வரை அதை திருத்த மறுக்கும் உங்கள் போன்றோர் இருக்கும் வரை விமர்சனம் என்பது இருக்கும் தவிர மத வேற்றுமைகளை வளர்க்கும் உங்கள் எண்ணம் எனது கருத்தில் இருக்கப்போவதில்லை. அதனால் ஏற்பட்ட அழிவுகள் வெளிப்படையானது. எனது எல்லை இந்து சைவம் போன்றவற்றுக்குள்ளானது என்பதில் நான் தெளிவாய் இருக்கின்றேன். இங்கு சிலர் என்னை கிருத்துவத்தில் கொண்டுபேய் செருகினாலும் சரி இஸ்லாத்தில் கொண்டுபோய் செருகினாலும் சரி இல்லை பௌத்தத்தில் கொண்டுபோய் செருகினாலும் சரி நான் யார் என்பதில் எனக்குத் போதிய தெளிவுண்டு. எக்காலத்திலும் சொந்த மதத்தில் உள்ள குறைகளை கழைய மறுக்கும் உங்களுக்கு அடுத்த மதத்திலும் அப்படித்தான் அங்கேயும் இப்படித்தான் இங்கேயும் இப்படித்தான் என்ற சாக்குப் போக்கும் விரோதமும் அவசியம் தவிர எனக்கில்லை. -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
ஆடறுக்க முதல்.. யாழ்பாணத்தில் இருந்து ஒரே நாளில் அகதியாக்கியதுபோல சுருக்கமாக இஸ்லாமியத் தமிழர்களை நாட்டைவிடடேவெளியேற்றுவோம் என்கின்றீர்கள். அல்லது அவர்களை அடிமைகளாக வைத்திருப்போம் என்கின்றீர்கள். இதை புலம்பெயர்ந்த நாட்டில் இருந்த வீரவேல் வெற்றிவேல் ரேஞ்சுக்கு அறிவித்துள்ளீர்கள். ஏற்கனவே இஸ்லாமியத்தமிழர்களை பிளவுபடுத்தி இது இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாதம் என்று மாற்றினோம் என்பதை உங்கள் தேசீயத் திருவாயால் மலந்தருளியுள்ளீர்கள். இவற்றை வெளிக்கொண்டுவருவதற்காகவே இங்கெ மினைக்கெடுகின்றறேன். நன்றி உங்கள் தூரநோக்கு விழைவு என்ன? தமிழீழம் கிடத்தால் இஸ்லாமியத்தமிழர்கள் வாழ்வு அழிக்கப்படும் என்பதை இப்போதே பிரகடனப்படுத்தி தமிழீழம் அமைவதை மதவாரியக தடைசெய்கின்றீர்கள். இலங்கையில் சிங்களவருக்கு அடுத்தபடி பெரும்பான்மை நிலையை எட்டிக்கொண்டிருப்பவர்களும் பெருளாதராத்தில் ஸ்திரத்தன்மையுடனும் இருப்பவர்களுமான இஸ்லாமியத்தமிழர்களை அச்சுறுத்தப்பார்கின்றீர்கள். இதனால் எதர்காலத்தில் உங்களுக்கு எந்த ஒரு பாதகமும் இல்லை ஏனெனில் நீங்கள் பிள்ளை குட்டிகளுடன் வெளிநாட்டில் பாதுகாப்பாக பதுங்கிவிட்டீர்கள். இவ்வாறன கருத்து விதைப்பிற்கு அறுவடையாவது மீளவும் தாயகத்தில் வறுமைப்பட்ட மக்களே ! இந்த முட்டாள்த்தனத்தையும் அறிவிலிநிலையையும் தான் மையவாதத் தளம் என்கின்றோம். இத்தளத்திலேயே போராட்டம் அழிந்து சிதைந்து போனது. புலிகள் கூட இறுதிக்காலத்தில் இஸ்லாமியர் வெளியேற்றம் குறித்து வருத்தம் தெரிவித்தார்கள். இவ்வாறு நாடுகடத்தும் நிலையை அவர்கள் இறுதியில் கொண்டிருக்கவில்லை. இரணைமடு பிரச்சனையில் எனது கருத்து http://www.yarl.com/forum3/index.php?showtopic=131010&page=2 -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
இந்திய இந்துத்துவத்துடன் போய் ஐக்கியமாவது நிங்கள் தானே? யுவன் ஒரு இந்தியநாட்டுப் பிரஜை அவர் மதம் மாறுவதில் ஏன் மூக்கை நுழைக்கின்றீர்கள்? நாவலர் போய் தமிழ்நாட்டில் வள்ளலாருடன் வம்பு வளக்கிழுத்து சண்டையிட்டது எந்த அடிப்படையில்? யார் கொண்டுபோய் மூக்கை நுழைப்பது? இந்துத்துவம் என்பது இந்தியாக்குடையது சைவம் ஈழத்துக்குடையது என்றால் யப்னா கிண்டு என்ற போர்டை கழட்டி சைவம் என்று மாற்றுங்கள். ஈழத்து சைவம் புறம்புபட்டதென்றால் அதை தெளிவாக்கி அதற்கு நிர்வாகத்தை நிறுவனத்தை ஏற்படுத்துகங்கள். எனது கருத்தில் நித்தி சங்கராச்சாரியை மட்டும் குறிப்பிட வில்லை சாதீய பிள்ளைமார்களையும் குறிப்பிட்டுள்ளேன். உங்களது தனித்துவமான சைவ நிறுவனத்தக்கு யார் தலமை வளக்கம் போல பிள்ளைமார்களா இல்லை ஜனநாயக அடிப்படையில் தேர்தல் மூலமா? எதற்காக சாதீயத்தை எதிர்காலத்தில் கழையவேண்டும். நிகழ்காலத்தில் கழைவதில் என்ன பிரச்சனை? யார் எதிர்காலத்தில் கழைவார்கள்? எந்த மதத்தில் என்ன பிழை இருக்கு என்பதில் மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. ஏனெனில் நான் அந்த மதங்களை சார்ந்தவன் இல்லை.சைவத்தில் சாதி இருக்கு ஆயிரத்தெட்டு சாக்கடை இருக்கு என்றால் அதைக் கழுவ வேண்டும் என்றால் கிருத்துவத்திலும் இருக்கு இஸ்லாத்திலும் இருக்கு எண்டு எதற்காக சாக்குப்போக்கு சொல்ல வேண்டும்? உங்கட சமயத்தில் என்ன பிரச்சனையோ அதை தீர்க்க வழியைப் பார்பதை விட்டு அடுத்தவன் முதுகை ஏன் சொறிய வேண்டும்? மதம் சட்டை போன்றது மதம் அபின் போன்றது என்பது அறிஞர்களின் ஆய்வு முடிவு தவிர எனது முடிவில்லை. அந்த முடிவை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். உங்களால் ஏற்க முடியாவிட்டால் அது உங்கள் பிரச்சனை அல்லத உங்கள் சுதந்திரம். எவனெவனுக்கு எந்த மதத்தில் இருப்பது என்பது அவனவன் விருப்பம். அதில் நாம் தலையிட முடியாது. மதம் ஒன்றும் உறுதி எழுதிய பட்டா நிலம் கிடையாது. அது நம்பிக்கை சார்ந்தது. தனி மனிதர்களது நம்பிக்கை முடிவுகள் சூழ்நிலைகள் சார்ந்து அவரவர்கள் விரும்பியதை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது. இந்த மதத்தில் சேர் என்று ஒருவன் சொல்கின்றான் அதற்கான காரணங்கள் இதர சலுகைகளை நன்மைகளை காட்டுகின்றான் என்றால் தனிமனிதர்கள் அதை நாடிச் செல்லலாம் இல்லையே விடலம். அது அவர்கள் விரும்பம். வேணுமானால் நீங்களும் அதைச் செய்யுங்கள் இல்லையேல் விடுங்கள். உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் நீங்கள் அந்தச் சட்டையை போடத்தேவையில்லை. உங்களுக்குப் பிடித்த சைவச் சட்டையை போட்டுக்கொண்டிருங்கள். அடுத்தவன் முடிவில் ஏன் மூக்கை நுழைப்பான்? -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
உங்கள் ஆதங்கம் புரிகின்றது. உங்கள் விருப்பபடி சைவம் தன்னை தக்கவைக்கவேண்டுமானால் அது தன்னை மீழ் சீரமைப்பதால் மட்டுமே முடியும். முதலில் சைவமா இந்துவா என்ற குழப்பநிலைக்கு முடிவு அவசியம். இந்திய இந்துத்துவம் என்ற பெரும் சகதியில் குதிக்க முற்படுகின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் மத மாற்றத்தை தடுப்பது சாத்தியமற்றது. பல வருடங்களாக மடுமாதாவை அண்டி பல்லாயிரம் அகதிகள் இருந்தார்கள். அவர்களுக்கு நிறுவனமயப்பட்ட ஒரு மதம் பாதுகாப்பையும் உதவிகளையும் வழங்கியது. அதில் சிலர் மதம் மாறினால் அதில் தவறு எதுவும் இல்லை.இதே காரியத்தை சைவம் செய்திருந்தால் மக்கள் அதிலிருந்திருப்பார்கள். உங்கள் மதத்திற்கு என்று ஒரு தலமை இருக்கவேண்டும் அதில் ஜனநாயகம் இருக்கவேண்டும். கொள்கை இருக்கவேண்டும் அதில் சாதிகள் இல்லை எல்லோரும் சமம் என்ற கட்டுப்பாடு இருக்கவேண்டும். இது எதுவுமே இல்லையே ! உங்கள் மதத்துக்கு யார் தலைவர் கொலைகாரச் சங்கராச்சாரியா இல்லை மன்மதன் நித்தியானந்தாவா இல்லை யார்? இல்லை சாய்பாபாவா? என்ன கட்டமைப்பு உள்ளது? யார் நெறிப்படுத்துவது? சைவ வெள்ளாளர் என்கின்றார்கள் சைவப் பிள்ளைமார் என்கின்றார்கள் இது இரண்டும் சைவத்தோட தனது சாதியை முனன்வைக்கின்றது. அங்கேயே நீபெரிது நான் பெரிது என்ற நிலை தோன்றுகின்றது. ஒரு காலத்தில் பொருளாதர அடிப்படையில் பிள்ளைமார்களையும் பணக்காரனையும் மக்கள் சார்ந்திருக்கும் வரை அவர்கள் சொன்ன சொல்லுக்கு கட்டுப்படலாம் இப்போது தானே தனது பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சூழலில் தனது மதத்தையும் அவனவனே தீர்மானித்துக்கொள்வான். மதம் என்பது சட்டை போன்றது என்பார்கள். அவனவனுக்கு விரும்பிய சட்டையை அவனவன் அணிந்தகொள்வான். உங்களிடம் சுத்தமான அழகான சட்டை இருந்தால் அதிகமானவர்கள் வாங்கி விரும்பி அணிந்துகொள்வார்கள். அந்தச் சட்டையை போடாதே என்பதற்கும் என்னிடம் நல்ல சட்டை இருக்கின்றது என்பதற்கும் வித்தியாகசம் இருக்கின்றது. எந்த வழி சிறந்தது என்பத நீங்களே தான் தெரிவு செய்யவேணும். -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
ஆக இப்ப இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை அந்தக் காலத்திலே கழுதைப்பால் குடித்து ஞானம் பெற்ற சம்மந்தர் ஞானத்தால் உணர்ந்து பௌத்தர்களை கொன்றார்? சம்மந்தர் கொன்றது தமிழ்ச் சமணர்களையும் பௌத்தர்களையும். சம்மந்தர் மாணிக்கவாசகர் சுந்தரர் மூவரும் பார்ப்பனர்கள். இன்று இந்திய இந்துத்துவம் எப்படி சிண்டு முடிந்து சாதிவாரியாக பிரித்து இந்தியாவை தமது வசமாக்கி ஆழக்ன்றதோ அப்படியே அன்றும் சமணம் பௌத்தம் சைவங்களுக்கள் சிண்டு முடிந்த தேசத்தைக் கொலைக்களமாக்கினார்கள். தமிழ் மன்னர்களுக்குள் மோதல்களுக்கு அடிப்படைச் சூத்திரதாரியானார்கள். நீங்கள் கேட்கின்றீர்கள் சம்மந்தர் கழுவேற்றியதில் என்ன தவறு என்று. இதையே சிங்களம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? உங்கள் கருத்துப்படி இது சிங்களவரின் முறையல்லவா? இது ஒன்றும் தொடர்பில்லாதது இல்லை. பார்ப்பனர்கள் அந்தக் காலத்திலேயே இலங்கையில் இருந்து வந்த பௌத்த துறவிகளை சோழன் செக்கில் அரைத்துக்கொன்றான் என்றொரு பிட்டை போட்டுவைத்துவிட்டார்கள். அது முள்ளிவாய்க்கால் வரைக்கும் நன்கு வேலை செய்தது. அதுக்குத்தான் நீங்கள் இப்போத எண்ணை ஊற்றுகின்றீர்கள். இந்தக் கருத்தையே மறைமலை அடிகள் மறுத்து உண்மையை தமது ஆராய்ச்சிமூலம் வெளிக்கொண்டுவந்தார். சோழன் அப்டிச் செய்யவில்லை மாறாக அவர்களுக்கு சைவத்தின் தொன்மையை புரியவைத்த அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்தான் என்ற வரலாற்றை அவர் பதிவு செய்தார். (பர்க்க சிவஞ்ஞான பேத ஆராய்சி மற்றும மாணிக்கவரசகர் காலம் - மறைமலை அடிகள்) மேலும் இலங்கை பௌத்தர்களின் வாதமான இலங்கையில் பௌத்தமே தொன்மையானது என்ற வாதத்திற்கு கோணேஸ்வரம் திருக்கேதீஸ்வரம் அதன் பழமை பாடல் பெற்ற காலம் போன்றவற்றை ஆராய்ந்து முன்வைத்த இலங்கையில் தமிழர்களின் தொன்மையை பதிவு செய்கின்றார். இவ்வாறான ஏதாவது ஒன்றை அக்கபூர்வமாக உங்கட ஓவலர் கூட்டம் செய்ததுண்டா? நீங்கள் சாதீயை மையப்படுத்திய மதத்தை மையப்படுத்திய மிகக் குறுகிய நிலையைத்தாண்டி எந்தக்காலத்திலும் இனத்துவ நிலைக்குச் சென்றதில்லை. அவனவன் விரோதத்தை கழைய என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் நீங்களோ சம்மந்தன் கழுவேற்றியதில் என்ன தவறு என்கின்றீர்கள். சம்மந்தன் முதல் செய்தானா இல்லை மகிந்தன் முதல் செய்தானா? யார் தொடங்கிவைத்தது உங்கள் கருத்துப்படி? சம்மந்தன் போன்ற பார்ப்பன சூழ்ச்சியில் செத்து மடிந்தது அத்தனைபேரும் தமிழர்களே அவர்களையும் கொண்டுபோய் சிங்களவனுடன் ஒப்பிடும் கேவலமான நிலையை என்ன வென்று சொல்வது? -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
140000 தமிழரை எங்கே பௌத்தர்கள் கொலை செய்தார்கள்? அவர்கள் என்ன சிங்கள மொழியை பேசிய பௌத்தர்களா? -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
தமிழை வளர்த்ததில் சமண பௌத்த மதங்களின் பங்கை விலத்திப் பாரக்க முடியாது. திருவள்ளுவரையும் இளங்கோ அடிகளினதும் முக்கியத்தவம் வெளிப்படையானது. சம்மந்தமே இல்லாமல் உளறுவது மட்டுமில்லாமல் சம்மந்தன் என்ற கிரிமினல் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமணர்களை கழுவேற்றியதில் என்ன தவறு என்று கேட்கும் உங்களுடன் என்ன கருத்தாடலை செய்ய முடியும்? கழுவேற்றப்பட்ட அனைத்து மக்களும் தமிழ்மொழியை பேசிய தமிழர்களே ! அன்றைக்கு சமணர் பௌத்தர் என்று கழுவேற்றியதும் தமிழர்களே அதன்பிறகு சேரன் சோழன் பாண்டியன் என்று மாறிமாறிக்கொன்று குவித்ததும் தமிழர்களே கடந்த காலத்தில் ஈழத்தில் தோன்றிய 32 இயக்கமும் கோவணத்தை இறுக்கி கட்டிக்கொண்ட மாறி மாறி போட்டுத்தள்ளியதும் தமிழர்களையே.. இனி இஸ்லாம் கிருத்தவம் இந்து என்று போட்டுத் தள்ள முனைவதும் தமிழர்களுக்குள்ளாகவே ! உலகம் முழுக்க உருண்டு பிரண்டாலும் இந்தக் காட்டுமிராண்டிக்கூட்டம் திருந்தவே திருந்தாது.. எந்த ஒரு இனத்திடம் இருந்தும் எந்த நாகரீகத்தையும் கற்றுக்கொள்ளாது.. எந்த ஒரு அழிவிலிருந்தும் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளாது.. சைக்கோ கூட்டம். -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
http://tamizl.com/?p=61871 இராவணன் தமிழ் மன்னன் என்கின்றார்கள். நீங்களோ இராவணனை சிங்களவர்களுடன் சம்மந்தப்படுத்தி இந்துத்தவா ராமனுடன் ஐக்கியமாகின்றீர்கள். இது ஏன்? இராவணன் எமது பரம்பரை சிவனை வழிபடுகின்றவன் என்று சொல்லவேண்டியதுதானே? அதில் ஏதேனும் கௌரவப்பிரச்சனை உண்டோ? கம்பன் கழக ஜெயராசு ஏதாவது சொன்னாரோ? அப்படியானால் இதுவரை காலமும் இந்திய சிங்கள பேரினவாதத்திற்கு உதவியதும் தமிழர்களை அழித்ததும் அழிக்க உற்றதுணையாய் நின்றதும் ராஜீவ் சோனியா செய்த தவறு மற்றபடி ஈழத்து இந்தூக்கள் மீது இந்திய இந்தூக்கள் அளவு கடந்த பாசத்துடன் இருக்கின்றார்கள்? . வடநாட்டவன் எவனோ அவனுக்கு தெரிந்த மொழியில் பூசையை செய்யட்டும் தமிழன் ஏன் தனக்குத் தெரியாத பாசையில் ஏன் பூசை செய்யவேணும்? இதைத்தானே நூறு வருடங்களுக்கு மேலா கேக்கிறாங்கள். என்ர தாய்மொழியில் பாடுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்க அவன் யார்? உங்கட மதத்தில உள்ள சாதீயத்தை களைவதைப்பற்றி கதைக்கேக்க ஏன் அதைவிட்ட பௌத்தத்திலும் இஸ்லாத்திலும் சாதி இருக்கு என்று வேறு எங்கோ இழுத்துக்கொண்டு போகின்றீர்கள்? ஆக உங்கட மத்தில உள்ள கோளாறுகளை திருத்த முன்வர மாட்டீர்கள் அங்கயும் இருக்கு இங்கயும் இருக்க என்று சாக்குப் போக்கு சொல்வீர்கள் இதைத்தான் சுருக்கமாக சொல்லியாச்சு. நீங்கள் நாவலர் பிள்ளைமாரின் மிச்ச சொச்சம். உங்ளை திருத்த அந்த சிவனாலும் முடியாது. கடசியா நாலு தமிழன் மிச்சமிருந்து சிங்களவன் அவர்களைக் கொல்ல வரும்போதும் நான் அந்தச் சாதி நீ அந்தச் சாதி என்று கத்திக்கொண்டே சாவீர்கள். -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
http://www.youtube.com/watch?v=DxwqAYSsKjY -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள். தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை. ஒரு இந்தியப் பார்ப்பனனுக்கு இஸ்லாத்தின் மீதிருக்கும் வெறுப்பை விட ஈழத்தவர் மீதான வெறுப்பு அதிகம் என்பது இவர்கள் மண்டையில் என்றும் ஏறப்போவதில்லை. இலங்கைத் தமிழன் இராவண வம்சம் என்ற வெறுப்பில் பார்க்கும் வடநாட்டவர்களே அதிகம். இந்திய அதிகாரவர்க்கம் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட சூழ்ச்சிகளி்ல் இந்த உள்ளீடும் தாராளமாக இருக்கின்றது. இன்றுவரை இலங்கைப்படைகள் தமிழக மீனவர்களை கொன்றுதள்ளுகின்றது. இந்திய அதிகாரவர்க்கம் எந்த வகையிலும் இந்த விசயத்தில் இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கியது கிடையாது. இந்திய இந்துத்துவத்தை பொறுத்தமட்டில் தமிழ மீனவனை விட இலங்கைப் பவுத்தர்களின் நட்பே மேலானது. இந்திய இந்துத்துவம் பற்றிய புரிதல் யாழ்பாணத்தில் தம்மை இந்து என்று பிதற்றுபவர்களிடம் சற்றும் கிடையாது. இந்திய இந்துத்துவம் என்பது இந்தியாவை சாதிவாரியாக கூறுபோட்டு மதவாரியாக பிளவுகளை ஏற்படுத்தி மக்களை சிதைத்து சூட்சும அரசியலூடாக வெறும் இரண்டு மூன்று வீத பார்ப்பான் இந்திய மைய அரசியலை ஆழ்வதற்கான உத்திதான் இந்துத்துவம். இந்துத்துவம் என்பது சூட்சும அரசியல் தவிர ஆன்மீகம் கிடையாது. ஈழத்தவர்கள் தமது சைவத்தை அதன் குறைகளை கழைந்து தனித்துவத்துடன் நல்லதொரு ஆன்மீகமாக வளர்த்தெடுத்திருக்கலாம். ஆனால் தமது தலைகளை கொண்டுபோய் இந்துத்துவாக்களிடம் ஓட்டுவதில் குறியாய் உள்ளனர். இதற்கும் ஒரு காரணம் உண்டு அது இந்தியாவில் பார்ப்பான் சாதியில் மேலோங்கியிருப்பதைபோல் ஈழத்தில் இவர்கள் இந்துத்துவத்தை வைத்து சாதியின் மேன்மையில் உயர்வை காட்ட முற்படுவதே அதன் பிரதான காரணம். சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்யவேண்டும் கங்கணம் கட்டுபவர்கள் இவர்கள். தமிழ்நாட்டுப் பிள்ளை மார்களும் ஆதீனங்களும் பபார்ப்பனனுக்க செம்பு தூக்கி சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். இவர்களுக்கு பக்கபலமாய் கடிதங்களும் ஆலோசனை ஆதரவுகளும் வழங்குவதில் காலகாலமாக யாழ்ப்பாண பிள்ளைமார்கள் பின்நிற்பதில்லை. பின்னர் வெட்கமே இல்லாமல் தமிழும் சைவமும் இரு கண்கள் என்பார்கள். இந்த கூறுகெட்ட தனத்தை என்னவென்று சொல்வது!! http://eswaramoorthy.webs.com/naadumnaveenarum.html இந்தப் புத்தகத்தில் சைவருக்கும் நவீன சைவருக்கும் இடையிலான வாக்குவாதம் உள்ளது. நவீன சைவம் என்பது சோமசுந்தர நாயக்கர் தொட்டு வள்ளலார் மறைமலலையடிகள் என தொடர்ந்து சைவத்தை சீரமைக்கவும் தமிழ் மொழியை முதன்மையாக்கி தமிழ்த்தேசீயத்துக்கு அடிகோலவும் வழிவகுத்த ஒரு தரப்பு. எங்கே சாதி ஒழிந்துவிடுமோ என்று இது அத்தனைக்கும் முரணாக இருந்தது அடுத்த தரப்பு. சீர்திருத்தத்திற்கு முற்றுமுழுதாக எதிர்ப்பாளர்களாக இருந்ததில் நாவலரின் தலையாய பங்கில் இருந்து ஏராளமான யாழ்ப்பாண பிள்ளைமார்களின் பங்களிப்பு இருந்தது. தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இங்கே சிலர் இருக்கின்றர்கள் தடாலென தந்தை பெரியாரை தாக்குவதில் குறியாய் இருப்பவர்கள். இந்த நவீன சைவத்தின் அடுத்த கட்ட வடிவம் தான் பெரியாரின் எழுச்சி என்பது இவர்களுக்குப் புரியாது. இந்த சைவப் பிள்ளைமார்களை திருத்தவே முடியாத என்ற நூற்றாண்டுக்குமேற்பட்ட முயற்சியின் தோல்வியே கடவுளே இல்லை என்ற முடிவு நோக்கித் தள்ளியது. எனவே, சைவத்தையே அதன் சாதீய வர்க்க அடிப்படைகளில் இருந்து சீர்திருத்த முடியாதபோது அதுவே இப்போது இந்துத்துவவா என்று பலிபீடத்தில் கொண்டுபோய் தலையை வைக்கும் போது அதையா திருத்த முடியும்? திருத்த முடியாத இந்தக் குப்பையை தலைமுழுகுவதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்பது எப்போதோ எடுக்கப்பட்ட முடிவு. ஆன்மீகத்துக்கு மதம் தேவையில்லை. நானும் நீயும் இந்து ஆனால் நான் உன்னைத் தொடமாட்டேன் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும் என்ற இந்துமத நிலை உலகின் எந்த மூலையிலும் கிடையாது. எவன் எந்த மதத்துக்கு போனால் என்ன விட்டால் என்ன. மனிதாபிமானத்தை மனிதநேயத்தை விரும்புகின்றவன் இந்த மதத்தில் இருந்துகொண்டே அதை கருவறுக்க வேண்டும். -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
சாதி என்னும் சாத்தானை இந்து மதம் ஆணிவேராகக் கொண்டிருப்பதால்தான் அது சாத்தான் ஆகின்றது. இலங்கையில் பேரினவாதம் தமிழர்களின் கோவணத்தை அவிட்டு அம்மணமாக விட்டிருக்கும் நிலையில் சிவசேனை ஒரு கேடா? மூஞ்சசூறு தான் போக வழியைக் காணாதபோது விழக்குமாத்தை காவிக்கொண்ட போக நினைப்பதுபோல் தமிழர்கள் சிங்கள அடிமைத்தனத்தில் இருந்த விடுபட முடியாத நிலையில் மத எழுச்சி ஒரு கேடா? சிங்களம் அடுத்த கட்ட இனவழிப்புக்கும் சுத்திகரிப்பிற்கும் பிரிவினைவாதத்திற்கும் வழிகோலுகின்றது. மதவெறியை தூண்டிவிட்டு இஸ்லாமியர் கிறிஸ்த்தவர் இருந்து என்று மோதலை ஏற்படுத்தி எஞ்சியுள்ள தமிழர்களை காவுவாங்க நினைப்பதற்கு இந்து மத வெறியர்களும் காரணமாகின்றனர். புலிக்கு விசிலடித்ததுபோல் இந்து மத எழுச்சிக்கு புலம்பெயர் நாட்டில் இருந்த விசிலடிக்கட்டும். வறுமைப்பட்ட மக்கள் கழுத்தறுபட்ட சாகநேரிடும். என்னுமொரு முள்ளிவாய்க்கால் மத அடிப்படையில் உருவானால் அது ஆச்சரியமான விசயம் கிடையாது. ஒருவேளை மதவெறியின் பிரகாரம் இலங்கையில் இந்துக்கள் அழிக்கப்பட்டால் இந்திய இந்துத்தவம் ஒருபோதும் காப்பாற்ற வராது. கடந்த காலத்தில் சிங்களப்பேரினவாதத்தை ஊக்குவித்ததுபோல் தமிழர்களின் அழிவுக்கு அது என்னும் வழிகோலும். எந்த ஒருவன் இந்துதுவா என்று ஈழத்தில் ஆரம்பிக்கின்றானோ அவன் தமிழர்களை அழிக்கக் கங்கணம் கட்டுகின்றான் என்று பொருள். உனது மதம் சதி பேதங்களற்று நன்னெறியுடனும் மனிதாபிமானத்துடனும் இருந்தால் ஏன் அடுத்த மதத்திற்கு போகப்போகின்றார்க்கள்? நீங்களே சமண பௌத்த மதங்களில் இருந்து சைவத்துக்கும் சைவத்தில் இருந்த இந்துவுக்கு மதம் மாறியவர்கள்தான். உங்களுக்கே நீங்கள் யார் என்ற அடிப்படைக்கு அர்த்தம் தெரியாதநிலையில் மத மாற்றத்திற்கு குய்யோ முறையோ என்று கூச்சலிடுகின்றீர்கள். திருவள்ளுவர் சமண மதத்தவர். அவர் ஒருபோதும் மதத்தை தமது எழுத்தில் முன்வைத்ததில்லை. இளங்கோ அடிகள் பௌத்தத்தை சார்ந்தவர்.அவர் படைத்த இலக்கியங்கள் அது சார்ந்தது. தீண்டத்தகாத சமூகத்தைச் சேர்ந்த திருவள்ளுவருக்கு புனூலைப்போட்டு இந்துவாக்கிவிட்டீர்கள். அதற்கு நியாயப்படுத்தல்கள் வேறு ! அயிரக்கணக்கான பௌத்த சமணர்களை கழுவேற்றிய கிரிமினல்கள் பின்னர் நாயன்மார்களாகிவிட்டனர். சைவ இந்து மத வரலாற்றில் எந்த உண்மையோ நியாயமோ அறமோ மனிதாபிமானமோ கிடையாது. அதை கிண்டக் கிண்ட நாறும். இரத்தம் மணக்கும். அதற்கு வக்காலத்து வாங்க முடியாது. -
நாடு கடந்த அரசோ அது சார்ந்தவர்களோ இல்லை புலத்து தேசீயக் கோஸ்டிகளோ தமிழ்த்தேசீயத்தை வழிநடத்தக் கூடிய நிலையில் இல்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அது சார்ந்தவர்களும் அப்படியே. இதற்கெல்லாம் பிரதான காரணம் இவர்கள் அனைவரும் மையவாதச் சகதிக்குள் புதைந்து கிடப்பவர்கள். எக்காலத்திலும் தமிழர்களுக்கு துரும்பளவு நன்மையும் இவர்களால் ஏற்படாது. கவிஞர் ஜெயபாலன் போன்றவர்கள் இஸ்லாமியத்தமிழர்களின் ஐக்கியப்பாட்டை வலியுறுத்துகின்ற அதே வேளை இந்தியாவின் நல்லுறவை வளர்ப்பதிலும் கவனமாக இருப்பவர். இஸ்லாமியத் தமிழர்களின் ஐக்கியப்பாடும் இந்திய ஆதரவும் இன்றி தமிழர்களுக்கு விமோசனம் என்ற கற்பனைக்கே இடமில்லை. (மையவாதிகள் நல்லூரை சுற்றி 10 ஏக்கர் நிலத்தை தமிழீழமாக தந்தால் போதும் என்பர்கள். அவர்களுக்கு இவை புரியாது) அந்தவகையில் கவிஞர் ஜெயபாலன் போன்றவர்களே தற்போதைய சூழலில் தமிழ்த்தேசியத்தை வழிநடத்த முன்னெடுக்க சரியான நபர்கள். சரியான முறையில் சிந்திக்க வல்லவர்கள். அவர்கள் பணி தொடரவேண்டும். பேரினவாதிகளிடம் இருந்தும் மையவாதிகளிடம் இருந்தும் தமிழர்களின் விடுதலைநோக்கிய பயணம் தொடர்வது காலத்தின் கட்டாயம்.