Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8740
  • Joined

  • Last visited

  • Days Won

    103

Everything posted by ரஞ்சித்

  1. பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய முன்னாள் புலிகளின் தளபதி கருணா அம்மான். ஆக்கம் : வோல்ட்டர் ஜயவர்தின காலம் : கருணா மகிந்தவின் தயவில் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய காலம் புலிப்பயங்கரவாதிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாகவிருந்து, பின்னர் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளின்மேல் விசனமடைந்து ராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்டுவரும் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பாராளுமன்ற ஜனநாயகத்தை முழுதாக ஏற்றுக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார். அவரின் பதவியேற்கும் நிகழ்வினை ஐக்கிய தேசியக் கட்சி, புலிப்பயங்கரவாதிகளின் பிணாமிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாக்சிஸ்ட் அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுன ஆகிய கட்சிகள் கருணா பாராளுமன்ற உறுப்பினர் ஆவதை விமர்சித்து, புறக்கணிப்புச் செய்திருந்தன. தனது பதவியேற்கும் நிகழ்வில் பேசிய கருணா, " புலிப் பயங்கரவாதிகளின் இறுதி ராணுவத் தோல்வி கிளிநொச்சியில் அவர்களுக்கு வெகு விரைவில் வழங்கப்பட்டுவிடும். பல சாவால்களுக்கும் மத்தியில் என்னை சிறிலங்கா சுதந்திரக் கட்சி மூலம் பாராளுமன்ற உறுப்பினராக ஆக்கியமைக்கான கெளரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதமாக எனது இப்பாராளுமன்றப் பதவியினை நான் பார்க்கிறேன்" என்று கூறினார். இலங்கையின் அரசியலமைப்பினை முழுமையாக ஏற்றுக்கொண்டு, சத்தியப்பிரமானம் செய்து தனது பாராளுமன்றப் பதவியினை ஏற்றுக்கொண்ட கருணா அம்மானின் இந்த நிகழ்வினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணா முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றூம் மட்டக்களப்பு நகர மேயர் சிவசங்கீதா பிரபாகரன் உட்பட அக்கட்சியில் பல பிரமுகர்கள் பொதுமக்கள் கலரியில் இருந்து கண்டுகளித்தனர். கருணாவின் பதவியேற்பு நிகழ்வினை எதிர்த்தரப்பு வரிசையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் விமல் வீரவன்ச கண்டுகளித்ததுடன், கருணா அம்மானுக்கு தனது பாராட்டுதல்களையும் வழங்கினார். கருணா தொடர்ந்தும் பேசுகையில், " நாம் மிக நீண்டகாலமாக மிகவும் தவறான பாதையில் சிந்தித்து, பயங்கரவாதப் புலிகளுடன் சேர்ந்து செயற்பட்டு வந்தோம். ஆனால், பயங்கரவாதிகளின் தவறான பாதையினை உணர்ந்துகொண்டபின்னர், ஜனநாயகத்தை முற்றாகத் தழுவி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினை உருவாக்கி இலங்கை நாட்டின் ஜனநாயக அரசியலில் இறங்கியிருக்கிறோம்". "கிழக்கு மாகாணம் புலிப்பயங்கரவாதிகளிடமிருந்து முற்றாக மீட்கப்பட்டு விட்டது. தற்போது அங்கே பாரிய அபிவிருத்திச் செயற்பாடுகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மாகாணசபை அரசு முன்னெடுத்து வருகிறது. இவை எல்லாவற்றிற்கும் மூல காரணமான எமது கெளரவ ஜனாதிபதி அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்". "புலிப்பயங்கரவாதிகள், அவர்களது சரித்திரத்தில் தமது ராணுவ ஆற்றலின் மிகவும் பலவீனமான நிலையினை இப்போது அடைந்துவிட்டார்கள். அரச ராணுவத்தினரின் ராணுவ நடவடிக்கைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக அவர்கள் இப்போது பாவிக்கிறார்கள். பயங்கரவாதிகளின் இறுதி ராணுவத் தோல்வி கிளிநொச்சியில் வைத்து அவர்களுக்கு வழங்கப்படும் சந்தர்ப்பம் நெருங்கிவிட்டது. அதன்பின்னர் கிழக்கு மாகாணத்தைப் போலவே வடக்கும் அபிவிருத்தி செய்யப்படும்" என்றும் கூறினார். தனது பதவியேற்பின் பின்னர் பிரதமர் அலுவலகம் அமைந்திருக்கும் அலரி மாளிகைக்கு விஜயம் செய்து மகிந்த ராஜபக்ஷ அவர்களையும் அவர் சந்தித்து பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டார். http://www.lankaweb.com/news/items08/081008-3.html
  2. புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட புலநாய்வுப் பொறுப்பாளர்கலைக் கொன்றது கருணா குழுவே - ராணுவம் தெரிவிப்பு காலம் : கருணா மட்டக்களப்பிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்னர் ராணுவ முகாம்களில் இருந்து செயற்பட்டு வந்த காலம் மூலம் : சிங்கள இனவாதி வோல்ட்டர் ஜயவர்தின பிரபாகரனின் புலிகள் பிரிவுக்கும் கருணாவின் பிரிவுக்கும் இடையே கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோதல்களில் அண்மையில் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட புலநாய்வுப் பொறுப்பாளரும் அவரது நெருங்கிய சகாவும் கருணாவினால் கொல்லப்பட்டுள்லதாக ராணுவத்தினர் கூறியிருக்கின்றனர். ராணுவத்தினர் மேலும் தகவல் தருகையில் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட புலநாய்வுப் பொறுப்பாளர் பகலவன் என்றழைக்கப்படும் சிவானந்தன் முரளி மற்றும் அவரின் நெருங்கிய சகாவான வதனன் ஆகிய போராளிகள் கடந்த மே மாதம் 6 ஆம் திகதி பிற்பகல் மட்டக்களப்பின் வடமேற்கே அமைந்திருக்கும் தன்னாமுனைப் பகுதியில் கருணா குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது. ராணுவத்தினரின் தகவல்களின்படி பகலவன் பொட்டு அம்மானுடன் நேரடித் தொடர்பில் இருந்து வந்தவர் என்றும், வதனன் அவரின் நடவடிக்கைகளில் உதவிவந்தவர் என்றும் தெரியவருகிறது. மட்டக்களப்புப் பொலீஸாரின் கூற்றுப்படி இவர்களைச் சுட்டுக் கொன்ற ஆயுததாரிகள் தலைமறைவாகிவிட்டதாகவும், அவர்கள்பற்றிய தகவல்கள் தமக்குக் கிடைக்கவில்லையென்றும் கூறியிருக்கின்றனர். புலிகளின் இரு புலநாய்வுப் போராளிகளும் தமது மரணத்தினை மட்டக்களப்பு - வாழைச்சேனை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும்போதே தழுவிக்கொண்டதாக ராணுவத்தினர் கூறுகின்றனர். ஏறாவூர் பொலீஸ் நிலையப் பொறுப்பாளர் தர்மசேன ரத்நாயக்கவின் கூற்றுப்படி கைத்துப்பாக்கியினால் சுடப்பட்ட இரு போராளிகளும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகத் தெரியவருகிறது. ஆனால், புலிகளின் ஆங்கிலமூல இணையச் செய்திச் சேவை தமிழ்நெட்டோ கொல்லப்பட்ட இருபோராளிகளும் அரசியல்த் துறையினைச் சேர்ந்தவர்கள் என்றே கூறுகிறது. தமிழ்நெட்டின் செய்தியின்படி இந்த அரசியல்த்துறைப் போராளிகள் இருவரும் ராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணைராணுவக் குழுவின் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. இக்கொலைகளை தமது ஆதரவாளரான 49 வயது செல்லையா குமாரசூரியர் என்பவர் புலிகளால் கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கலாகவே கருணா மேற்கொண்டதாக ராணுவத்தினை நம்புகின்றனர். கருணா குட்ழு ஆதரவாளர் குமாரசூரியர் கொல்லப்பட்ட நாளன்று, அவரின் வீட்டிற்குச் சென்ற புலிகளின் பிஸ்ட்டல் குழுவினர் அவரது பெயரைச் சொல்லி அழைத்ததாகவும், அழைத்து 15 நிமிடங்களின் பின்னர் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாகவும், வெளியே சென்று பார்த்தபோது குமாரசூரியர் கொல்லப்பட்டுக் கிடந்ததாகவும் அவரது மனைவி கூறியிருக்கிறார். தமது போராளிகள் இருவர் கொல்லப்பட்டதுபற்றி செய்திவெளியிட்ட தமிழ்நெட், அண்மையில் ஆயித்தியமலைப் பகுதியில் கருணா குழுவினராலும் ராணுவத்தாலும் கொல்லப்பட்ட தமது 7 அரசியல்த்துறைப் போராளிகள்பற்றியும், பெண்டுகல்ச்சேனைப் பகுதியில் கொல்லப்பட்ட இன்னொரு அரசியல்த்துறைப் போராளிபற்றியும் செய்திவெளியிட்டிருந்தது. புலிகள் மீதான படுகொலைகலை ராணுவத்தினரும் கருணாவும் இணைந்தே நடத்துவதாகப் புலிகள் தெரிவித்திருக்கும் நிலையில், ராணூவமோ கருணா குழு மட்டுமே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது. http://www.lankaweb.com/news/items04/080504-2.html
  3. "பிரபாகரனின் சுயரூபம் தமிழர்களால் நன்கு விளங்கிக்கொள்ளப்பட்டுள்ளது. அவரால் இந்த சமாதான காலத்தைப் பயன்படுத்தி வடக்கில் இருந்து தேவையானளவு போராளிகளை இயக்கத்தில் சேர்க்கமுடியாமற்போய்விட்டது. அதனாலேயே தனது ஆளணி வளத்துக்காக கிழக்கில் தங்கியிருக்கவேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டது. வன்னியில் அவரது கட்டுப்பாட்டிற்குள் அகப்பட்டுப்போன மக்களைக் கட்டாயமாக இழுத்துவந்து தனது படையில் அவர் இணைத்தார்". "இங்கே இயங்கிவரும் சில "ஜனநாயக" தமிழ்க் கட்சிகளின் அரசியலுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியலுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. உதாரணத்திற்கு வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் ஒருபோதுமே இணைக்கப்படக் கூடாதெனும் முடிவில் நாம் ஆணித்தரமாக இருக்கிறோம், ஆனால் சில தமிழ்க் கட்சிகள் இம்மாகாணங்கள் இணைக்கப்படுவதை விரும்புகின்றன. ஆனால், அது அவர்களது அரசியல் விருப்பம். வேண்டுமானால் கலாசார ரீதியில் வட மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இடையே சில தொடர்புகள் இருப்பதை நான் அனுமதிப்பேன், ஆனால் அரசியல் ரீதியில் நிச்சயமாக நாம் தனித்தே இயங்குவோம். நான் ஜனநாயக வழியைப் பின்பற்றி இன்று மக்களுக்குச் சேவை செய்வதுபோல பிரபாகரனும் தனது பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கைவிட்டு, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு இந்தப் பேட்டியின்மூலம் அவரைக் கேட்டுக்கொள்கிறேன்". "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியல்ல, மாறாகப் பயங்கரவாதப் புலிகளைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு பிணாமிக் கட்சி. கூட்டமைப்பினை உருவாக்குவதில் நானும் கடுமையாக உழைத்திருந்தேன். பிரபாகரனின் அனுமதியில்லாமல் கூட்டமைப்பின் எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் வாயே திறக்கமுடியாதிருந்தது. கூட்டமைப்பிற்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்ததுகூட பிரபாகரன் தான். புலிப்பயங்கரவாதிகளின் அச்சுருத்தல்களுக்கும், கட்டளைகளுக்கும் அமைவாகவே உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். இவ்வாறு பிரபாகரனால் தெரிவுசெய்யப்பட்ட பொம்மை உறுப்பினர்களுக்கு வக்களிக்குமாறு தமிழர்கள் பிரபாரனால் ஆயுதமுனையில் அச்சுருத்தப்பட்டனர்". "வருகிற பொதுத் தேர்தல்களில் எமது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 8 இடங்களைப் பெறும் என்பது உறுதியானது. கூட்டமைப்பு ஒரு ஆசனத்தைத்தன்னும் பெறாது மண் கவ்வும் என்று நம்புகிறேன்". " இதுவரை காணாத அளவில் கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை நாம் ஆரம்பித்திருக்கிறோம். கடந்த 22 வருடங்களில் எமது மக்கள் கண்டிராத பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் இப்போது இப்பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன". "புலிப்பயங்கரவாதிகளை முற்றாக அழித்து இப்போரில் எமது படையினர் வெற்றி ஈட்டுவார்கள் என்பது உருதிப்படுத்தப்பட்டு விட்டது. மிகவும் திறமையாக எமது பாதுகாப்புச் செயலாளரால் திட்டமிடப்பட்டு, அத்திட்டம் எமது ராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவால் நடைமுறைப்படுத்தப்பட்டு, இப்போது இலங்கை நாடு புலிப் பயங்கரவாதிகளை முற்றாக அழித்து வெற்றியீட்டும் தருணத்தில் நிற்கிறது". "பிரபாகரன் தனது இறுதி மூச்சினை விட்டுக்கொண்டிருக்க, நாம் அவரின் கண்மூடித்தனாமன அக்கிரமங்களுக்கான தண்டனையினை வழங்கக் காத்திருக்கிறோம்". முற்றும் ! http://www.lankaweb.com/news/items08/151208-3.html
  4. "நான் புலிகள் இயக்கத்தை விட்டு விலகி வரும்போது அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவுமே இருக்கவில்லை. கெளரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் என்னை அரசியலில் இணைந்துகொள்ளுமாறு அழைத்ததன் பின்னரே அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு வந்தது. புலிகளின் பயங்கரவாதத்தைத் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு முன்னர் துணிவுடன் எதிர்த்து நின்றவர்கள் எவருமே இருந்ததில்லை. அவரே 1983 இல் ஜனாதிபதியாகி இருந்தால் இந்தப் பிரச்சினையினை அன்றே இல்லாதொழித்திருப்பார். எனது 22 வருட கால போராட்ட அனுபவத்தில் மகிந்த ராஜபஷவைப் போன்றதொரு நேர்மையான, தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை. அவர் இந்தப் போரில் வென்று, வடக்குக் கிழக்குப் பிரச்சினையினை நிச்சயமாகத் தீர்த்துவைப்பார் என்று நான் 100 வீதம் நம்புகிறேன்". "புலிகள் இயக்கம் ஒரு முழுமையான பயங்கரவாத இயக்கமாக எனக்குத் தெரிந்தது. எல்லோரும் நம்பிக்கொண்டிருந்ததைப் போல தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டமாக அது எப்போதுமே இருந்ததில்லை, அதனாலேயே எனது வீரர்கள் 6000 பேரையும் கூட்டிக்கொண்டு அந்த இயக்கத்திலிருந்து விலகினேன். அப்பாவி சிங்கள மக்களைக் கொன்று, அனைத்து மதங்களினதும் மத வழிபாட்டுத்தலங்களைத் தாக்கியழித்து, யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றி, அவர்களை சொத்துக்களைச் சூறையாடிய ஒரு அமைப்பு எவ்வாறு மக்களுக்கான விடுதலையினைப் பெற்றுத்தர முடியும்?". "என்னைப்போலவே, நேர்மையான ஏனைய தளபதிகளையும் நான் இயக்கத்தினை விட்டு வெளியேறிவரவேண்டும் என்று நான் கேட்டேன். திருகோணமலைத் தளபதி பதுமனுடன் இதுபற்றிப் பேசியிருந்தேன், ஆனால் அவர் வன்னியில் அகப்பட்டதனால் அவரால் தப்பி வரமுடியவில்லை". "முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புலிப் பயங்கரவாதிகள் மிகவும் பலவீனமான கட்டத்தில் இருந்தபோது அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டார். 9/11 தாக்குதல்களுக்குப் பின்னர் புலிகளின் வெளியுலக நகர்வுகள் முழுவதுமாக முடக்கப்பட்டிருந்த தருணத்தில், சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் அவர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சுற்றிவரக்கூடிய சுதந்திரம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அத்துடன் இலங்கை முழுவதும் சுதந்திரமாக, தடைகள் இன்றி பயணிக்க அவர்களால் முடிந்தது. இந்தத் தருணத்தினைப் பாவித்து தெற்கின் பல பகுதிகளுக்கும் அவர்கள் ஆயுதங்களையும், ஆயிரக்கணக்கான கிலோகிராம்கள் வெடிமருந்துகளையும் கொண்டு வந்து சேர்த்தனர்.". "ஒருபக்கம் தமிழர்களின் கலாசாரத்தை திட்டமிட்டே அழித்துக்கொண்டிருந்த பிரபாகரன், வாழ்க்கையின் அனைத்து உல்லாசங்களையும் அனுபவித்துக்கொண்டே வந்தார். ஆரம்பத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் திருமணம் முடிக்கக் கூடாது எனும் சட்டத்தை வைத்திருந்தார்கள், ஆனால் தனக்கு திருமண ஆசை வந்தவுடன் தானே கொண்டுவந்த சட்டத்தைத் தூக்கியெறிந்துவிட்டு திருமணம் முடித்துக்கொண்டார்" "பிரபாகரன் சிங்களவர்களை மட்டுமல்ல, பல்லாயிரக்கனக்கான தமிழர்களையும் படுகொலை செய்தார். உலகில் இருந்த மிகவும் கொடூரமான பயங்கரவாதிகளில் பிரபாகரன் முதன்மையானவர்".
  5. தான் புலிகள் இயக்கத்தில் இணைந்த காலம்பற்றிக் குறிப்பிடுகையில் கருணா, "எனது குடும்பத்தில் இருந்த அனைவரையும் போல நான் நன்றாகப் படித்து வந்தேன். உயர்தரத்தில் உயிரியல் கற்கை நெறியில் இணைந்து மருத்துவராகி எனது பிரதேச மக்களுக்கு சேவை செய்திட வேண்டும் என்பதே எனது அவாவாக இருந்தது. அந்தக் காலத்தில்தான் புலிகள் 1983 ஆம் ஆண்டு 13 ராணுவத்தினரைக் கொன்று, ஜூலை இனக்கலவரத்திற்குத் தூபமிட்டனர். விளைவாக பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல தமிழர்கள் கொல்லப்பட்டமையானது இளைஞர்களை புலிகள் போன்ற இயக்கங்களுடன் இணையத் தூண்டியது. கொழும்பிலிருந்து கலவரத்தால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பிற்கு வந்திறங்கிய ஏராளமான தமிழர்களுக்கு உதவுவதற்காக நானும் சென்றிருந்தேன். புலிகளுடன் சேர்ந்த சிறுது காலத்திலேயெ இந்தியாவுக்கு ராணுவப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டேன்" என்றும் அவர் கூறினார். "நான் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக புலிகளியக்கத்தினை விட்டு வெளியேறி வரவில்லை. ஆனால், ராஜீவ் காந்தி படுகொலை போன்ற முற்றான பயங்கரவாத நடவடிக்கைகளைப் பார்த்தபின், தொடர்ந்தும் அங்கேயிருப்பது பிடிக்கமலேயே விலகி வந்தேன். . நான் ஒஸ்லோவிற்கு அனுப்பப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவில் இணைக்கப்பட்டபோது பிரபாகரன் என்னிடம் ஒரு விடயத்தைக் கண்டிப்பாகக் கூறினார், "நீ எந்தத் தீர்வுக்கும் சம்மதிக்கக் கூடாது, சமாதானத்தில் நாம் நாட்டம் கொண்டவர்கள் போலக் காட்டிக்கொண்டு இந்தப் பேச்சுவார்த்தைகளை இன்னும் 5 வருடங்களுக்கு இழுத்தடி, அதற்குள் நான் பனத்தினைச் சேர்த்து ஆட்களையும், ஆயுத தளபாடங்களையும் வாங்கிவிடுவேன், அதன் பின்னர் நாம் யுத்தத்தைத் தொடங்கலாம்" என்று என்னிடம் கூறினார். இப்பேச்சுவார்த்தைகளை உண்மையான முறையில் நடத்தியிருந்தால், வடக்குக் கிழக்கு அபிவிருத்திக்கென்று பெருமளவு வெளிநாட்டு நிதி எமக்குக் கிடைத்திருக்கும், ஆனால் பிரபாகரனுக்கு அதில் நாட்டமிருக்கவில்லை" என்றும் அவர் கூறினார்.
  6. பிரபாகரன் தனது இறுதிமூச்சினை விட்டுக்கொண்டிருக்கிறார் அவரது கண்மூடித்தனமான அக்கிரமங்களுக்கான தண்டனையினை நாம் வழங்கும் காலம் நெருங்கிவிட்டது -கருணா அம்மான் ஆக்கம் : வோல்ட்டர் ஜயவர்தின (இலங்கை ராணுவ அரச வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிவரும் , அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் சிங்களவர், அமெரிக்க -இலங்கை கூட்டுறவின் கலிபோர்னியா மாநில ஒருங்கிணைப்பாளர், பிரசித்திபெற்ற வழக்கறிஞரான இவர் ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகிறார். இலங்கையில் தமிழருக்கென்று உரிமைகள் வழங்கப்பட்டுவிடக் கூடாதென்று இந்திய ஆக்கிரமிப்பிற்கு முன்பிருந்தே கடுமையாகப் போராடிவந்த இனவாதி, 2020 மே 3 ஆம் திகதி இறந்தார்) காலம் : இனவழிப்புப் போரின் இறுதிக்காலம் போராட்டத்தில் ஈடுப்பட்டவரும், இன்று அவருக்கெதிரான ராணுவ நடவடிக்கையில் கணிசமான பங்களிப்பைச் செலுத்தியவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் அண்மையில் பத்திரிக்கையாளர் ஒருவருடன் பேசும்போது, " பிரபாகரன் தனது இறுதி மூச்சினை விட்டுக்கொண்டிருக்கிறார், அவர் செய்த மிலேச்சத்தனமான, கண்மூடித்தனமான அக்கிரமங்களுக்கான தண்டனையினை நாம் வழங்கும் காலம் நெருங்கி விட்டது" என்று கூறினார். இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் சிங்களச் செய்தியாளரின் பேட்டிக்கு, தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் கருணா பதிலளித்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கருணா அம்மான் தொடர்ந்தும் பேசுகையில், " எனது கருத்துக்களுக்கும், அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்திற்கும் கருத்துக்களுக்கும் பிரபாகரன் செவிசாய்க்கவில்லை. நான் அவருடன் வெளிப்படையாகவே முரண்பட்டுக்கொள்வேன். ஆனால், இயக்கத்தில் இருந்த பல மூத்த தளபதிகளுக்கு அந்தத் தைரியம் கிடையாது. பிரபாகரன் கூறும் அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்துவிட்டு, அவரின் பின்னால் தமது அதிருப்தியைத் தெரிவிப்பார்கள்" என்று கூறினார். அவர் மேலும் பேசுகையில், " முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாகவும், கண்டி தலதா மாளிகை மீதான குண்டுத்தாக்குதல்தொடர்பாகவும் நான் பிரபாகரனிடம் கேள்வி கேட்டேன். இந்தத் தாக்குதல்கள் புலிகள் மீதான நற்பெயரை உலகளவில் பாதித்துவிட்டதை நீங்கள் உணரவில்லையா என்று கேட்டதற்கு பிரபாகரன் தனக்குத் தெரியாமலேயே இது நடத்தப்பட்டுவிட்டது என்று என்னிடம் கூறினார். ஆனால், பிரபாகரனுக்குத் தெரியாமல் அங்கே எதுவும் நடப்பதில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும், அவர் கூறுவது ஒரு முழுப்பொய் என்று நான் தெரிந்திருந்தேன்". தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா மேலும் கூறும்போது, "பிரபாகரனுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தமொன்றில் ரணில் விக்கிரமசிங்க கைச்சாத்திட்டது ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறாகும். புலிகளின் ஆட்பலமும், ஆயுத வளமும் மிகக் கடுமையான வீழ்ச்சியினைக் கண்டிருந்த சமயத்திலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலிகள் பாரிய நிதிச் சேர்ப்பையும், அதன்மூலம் பெருமளவு ஆயுதங்கலையும், கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் தமது ராணுவத்தையும் வலப்படுத்திக்கொண்டனர்". "புலிகளின் தலைவர்கள் என்று சூசை, நடேசன், தயா மாஸ்ட்டர் போன்றவர்களை பலர் புகழ்ந்து பேசுகிறார்கள். இவர்கள் அங்கே தலைவர்களே கிடையாது. இவர்களின் கருத்துக்களைப் பிரபாகரன் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. கடற்புலிகளின் தளபதி என்று கூறிக்கொள்ளும் சூசைக்கு தரையில் சண்டையிடுவது எப்படியென்று எதுவுமே தெரியாது. அவரை எவருமே தலைவராக மதிக்கவேண்டிய அவசியம் இல்லை". "புலிகளின் அரசியல் அலோசகர் அன்டன் பாலசிங்கம் புலிகளின் தலைவர் பிரபாகரனின் முகத்திற்கு நேரே, நானும் கருணா கூறுவதையும் நீ கேட்கப்போவதில்லை, ஒரு பாசிஸ வெறிபிடித்த சர்வாதிகாரியாக நீ செயற்படுகிறாய் என்று கூறினார். இதற்கு முன்னர் பிரபாகரனின் தாந்தோன்றித்தனமான முடிவுகளைக் கேள்விகேட்ட மாத்தயாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் நடந்த அநியாயப் படுகொலைகளை நீங்களும் அறிந்திருப்பீர்காள்".
  7. இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய செய்திகளை தமிழ்த் தேசிய ஊடகங்களிலிருந்தும், சிங்களத் தேசிய ஊடகங்களிலிருந்தும் இணைத்துவருகிறேன். இதில், சிங்களப் பேரினவாத ஊடகங்களிலிருந்து நான் பதிவுகளை இணைப்பதன் நோக்கம், கருணாவின் துரோகம் சிங்களவர்களுக்கு எந்தவகையில் உதவியது, எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டத்தான். ஆனால், இதற்கான தேடல்களின்போது கருணாவுக்கு சிங்களவர்களால் வழங்கப்பட்ட முக்கியத்துவம் மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, எப்படியாவது கருணாவின் துணைகொண்டு அழித்துவிடவேண்டும் எனும் அவாவும், தமீழீழத் தேசியத் தலைமையினை முடிந்தளவிற்குத் தரம் தாழ்த்தி, கொச்சைப்படுத்தி, எமது போராட்டத்தை வெறும் கொலைகளுக்கான போராட்டம் என்று நிறுவும் கைங்கரியமும் தெரிந்தது. கருணா செய்த துரோகம் உண்மையானது. இதனை எவரும் மறுக்க முடியாது. இன்று அவரின் அரசியலினை ஆதரிப்பவர்களும், "பழையவற்றை ஏன் பேசுகிறீர்கள்" என்கிற கேள்வியோடு கடந்துபோக எத்தனிக்கிறார்களே ஒழிய, அவர் செய்த துரோகத்தினை மறுக்கவில்லை. ஆகவே, கருணாவின் துரோகத்தில் நான் புதிதாக நிரூபிக்கவென்று ஏதாவது இன்னமும் இருக்கிறதா என்ற கேள்விக்கு நான் வந்திருக்கிறேன். இதற்கு உங்களின் கருத்துக்கலைப் பகிர்ந்தால், தொடர்ந்து எழுதுவதா அல்லது இத்துடன் இதனை முடித்துக்கொள்வதா என்கிற முடிவிற்கு நான் வரமுடியும். இதனை எவரும் பெரிதாகப் படிப்பதில்லையென்றால், முடித்துவிடுவதே சரியானதாக இருக்கும். இதனால் தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஏற்படும் மனவழுத்தமும் இதற்கு ஒரு காரணம். ஆனால், இது முக்கியமானதுதான் என்றால், தொடர்ந்து எழுதுவதில் எனக்கு பிரச்சினையில்லை. நன்றி உங்கள் அனைவருக்கும்.
  8. எமது தாய்நாட்டின் போற்றுதற்குரிய, எமது நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் பெருஞ்சக்தியான பெளத்த மகா சங்கத்தினர் மற்றும் ஆளும் சுந்தந்திர ஐக்கிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னாணி, சிஹல உறுமய மற்றும் பொதுவான சிங்கள மக்களின் வேண்டுகோளாக இருந்துவரும் இந்த நாட்டினைப் புலிப் பயங்கரவாதிகளுக்குப் பிரித்துக் கொடுக்கும் நோக்கில் செய்துகொள்ளப்பட்ட நோர்வேஜியர்களின் தலைமையிலான பேச்சுவார்த்தையினை உடனடியாக நிறுத்தவேண்டும் எனும் அதே கோரிக்கையினை கருணா அம்மானும், அவரின் பின்னால் திரளும் மக்களும் முன்வைத்துவருகிறார்கள் என்பது மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படவேண்டும். இதுவரை காலமும் இலங்கையில் சமாதானத்தைக் கொண்டுவருகிறோம் என்கிற போர்வையில் நோர்வேஜியர்கள் ஆடிவரும் நாடகத்தின் மூலம் இதுவரையில் பயங்கரவாதப் புலிகளின் நாசகாரத் தாக்குதல்களையோ, அரசியல்ப் படுகொலைகளையோ தடுக்க முடியாமல்ப் போயுள்ளதுடன், அந்தப் பயங்கரவாதிகளை ஜனநாயக நீரோட்டத்தினுள் கொண்டுவந்து அனைத்துக் கட்சி அரசியலில் பங்குபற்றும் நிலையினையோ இதுவரை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. அதுமட்டுமல்லாமல் புலிப் பயங்கரவாதிகளுக்குப் பக்கபலமாக நின்று, அவர்களை ஆதரிப்பதைத்தான் இந்த நோர்வேஜியர்களின் சமதானப் பேச்சுவார்த்தை நாடகம் இன்றுவரை செய்துவருகிறது. கருணா அம்மான் அண்மையில் இப்பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ளும் அனைத்துத்தரப்பினருக்கும் எழுதிய பகிரங்கக் கடிதத்தில் நோர்வேஜியர்களால் புலிப் பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்ட 250,000 பிரித்தானியப் பவுண்ட்ஸ், கனரக ஆயுதங்கள், நவீன இலத்திரனியல் சாதனங்கள், தொலைத் தொடர்புக் கருவிகள் என்பனவற்றை புலிகள் தமது அரசியல் பகையாளிகளைக் கொல்லவே பாவித்து வருகின்றனர் என்று நோர்வேஜியர்களின் உண்மையான பின்னணியைப் போட்டுடைத்திருக்கிறார். கருணா அம்மானின் தகவல்களை நோக்கும்போது, நோர்வேஜியர்கள் தொடர்ச்சியாகவே புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்து வருவதோடு, சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் சமாதானத்தையும், தமிழர்களுக்கான விடுதலையினையும் எடுத்துத் தருவதற்குப் பதிலாக, புலிப்பயங்கரவாதிகளைத் தொடர்ச்சியாகப் பலப்படுத்தி, தமிழர்களை இன்னும் இன்னும் அவர்களின் சர்வாதிகாரப் பிடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. கருணாவின் இந்த மக்கள் நலன் சார்ந்த சிந்தனையே அவரது அரசியல் முதிர்ச்சியினைக் காட்டுகிறது. ஆகவே அவரது தலைமையின்கீழ் இலங்கையில் சமாதானத்தை விரும்பும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, சுதந்திரமான, சுபீட்சமான வாழ்வினை முன்னெடுப்பதன் மூலம், இதுவரையில் தமிழர்களுக்கு அழிவினையும், இழப்பினையும் மட்டுமே தந்துகொண்டிருக்கும் கொலைகாரப் பயங்கரவாதியான பிரபாகரனையும், புலிகளையும் முற்றாகப் புறக்கணித்து நாட்டின் பெரும்பான்மையினத்துடன் ஒருமித்துப் பயணிக்க முன்வரவேண்டும். உலகின் புற்றுநோயாக மாறிவரும் பயங்கரவாதத்தினையும், தீவிரவாதத்தினையும் முற்றாக அழித்து, உலகினை காக்கும் நோக்கத்தோடு புதிய உலக ஒழுங்கு செயற்பட்டுவரும் இன்றைய நிலையில், இலங்கையில் நோர்வேஜியர்கள் செய்துவருவது இந்தப் புதிய உலக ஒழுங்கிற்கு முற்றிலும் முரணான ஒரு நாசகார நடவடிக்கையென்றால் அது மிகையில்லை. அதுமட்டுமல்லாமல் நோர்வேஜியர்களைத் தமது கவசமாகப் பாவித்துவரும் புலிகள் , அவர்கள் முன்னிலையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மீறி, இன்றுவரை மிலேச்சத்தனமான படுகொலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருகிறேன் என்கிற பெயரில் அவர்களைத் தொடர்ச்சியாக அழித்துவரும் பிரபாகரனுடன் ஒப்பிடும்போது, வடக்குக் கிழக்கில் வாழும் சமாதானத்தினை விரும்பும் தமிழ் மக்களுக்காகன உரிமைகளுக்காகவும், அமைதியான வாழ்வுக்காகவும் குரல்கொடுக்கும், மென்போக்கான, ஜனநாயக அரசியலை நேசிக்கின்ற, இலங்கைத் திருநாட்டின் நலனில் உண்மையான அக்கறைகொண்ட கருணாவின் இன்றைய வேண்டுகோளினை நாம் அனைவரும் செவிமடுக்க வேண்டும். அத்துடன், பிரபாகரனையும் அவரது பயங்கரவாத இயக்கத்தையும் முற்றாக அழிப்பேன் என்று திடசங்கற்பம் பூண்டிருக்கும் கருணா, அதேவேளை தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிற்குமே அமைதியையும், சமாதானத்தினையும், ஒற்றுமையினையும் கொண்டுவருவேன் என்று சபதம் எடுத்திருக்கிறார். கருணாவின் இந்த நிலைப்பாடு நாட்டின் பெரும்பான்மையின மக்களின் ஏகோபித்த ஆதரவினையும், வரவேற்பினையும் கொண்டிருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. முற்றும் http://www.lankaweb.com/news/editorial/251004-1.html
  9. தமிழர்களின் ஏக தலைவனாக கருணாவை முன்னிறுத்தும் சிங்களப் பேரினவாதம் மூலம் : சிங்கள இனவாத கல்வியாளர்கள் தளமான லங்கா வெப்பின் ஆசிரியர் தலையங்கம் காலம்: கருணா சிங்களப்பேரினவாதத்தின் கட்டளையின்படி சமாதான பேச்சுவார்த்தைகளைத் தடம்புரளச் செய்யும் நாசகார வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த காலம். இலங்கையில் தமிழர்களுக்கான விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு மொத்த நாட்டையுமே புரட்டிப்போட்டு வந்த பயங்கரவாதிகளின் தலைவனான பிரபாகரனின் அந்திம காலம் நெருங்குவது, தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் முழு இலங்கைக்குமே பெரும் உவகையினை கொண்டுவரப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. அதேவேளை பிரபாகரனின் அழிவை உறுதிப்படுத்தியபடியே தமிழர்களுக்கென்று புதியதாக ஒரு தலைமைத்துவம் உருவாகி வருகிறது என்பதும் நாம் நம்பிக்கையுடன் பார்க்கவேண்டிய இன்னொரு விடயமாகும். கருணா அம்மான் தலைமையில் உருவாகிவரும் இந்த புதிய ஏக தமிழ் தலைமைத்துவம், தமிழ் மக்களுக்கான நண்மைகளை சிங்கள பெளத்த பெரும்பான்மையினத்தினை சாந்தப்படுத்தி, இலங்கை ஒரு முழு சிங்கள பெளத்த நாடு என்பதனை ஏற்றுக்கொண்டு, முழு நாட்டின் மீதான சிங்களவர்களின் அதிகாரத்தினை ஏற்றுக்கொண்டு, அவர்களின் இன, மத அதிகாரத்தினை பாதிக்காத வகையில், ஒன்றுபட்ட நாட்டினுள், அதன் பூகோள இஸ்த்திரத்தனைமையினையும் அதன் இறையாண்மையினையும் பாதிக்காதவாறு, அரசியல் யாப்பிற்கு சகலவிதத்திலும் உட்பட்டு பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அது உறுதிப்படுத்தியிருக்கிறது. பிரபாகரன் எனும் யுத்த வெறிபிடித்த கொலைகாரப் பயங்கரவாதியின் ஈழம் எனும் மாயைக்குள் பலவந்தமாக திணிக்கப்பட்டு, அந்த மாயையினை எதிர்ப்போரெல்லாம் அழிக்கப்பட்டு, சுதந்திரம் அற்று இருந்த தமிழ் மக்களுக்கு, ஒரு மென்போக்கான, அரசியலை நன்கு உணர்ந்துகொண்ட, சிங்களவர்களை அனுசரித்து, அவர்களின் இந்த நாட்டின்மீதான கேள்வியற்ற அதிகாரத்தினை முழுமையாக ஏற்றுக்கொண்டு, மகிழ்வாக சேர்ந்து பயணிக்கக்கூடிய ஒரு தலைமைத்துவம் கருணாவின் மூலம் கிடைத்திருக்கிறது. அன்டன் பாலசிங்கம் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய தந்திரசாலிகளின் பசப்பல்களுக்குப் பின்னால் தமது கொலைவெறியாட்டத்தைத் தொடர்ந்தும் நடத்திவரும் வன்னிப் புலிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் அவர்களின் அரசியல் பிணாமிகளை ஒருபுறம் முன்னிறுத்தி, தாம் சமாதானத்தில் நாட்டம் கொண்டவர்களாகக் காட்டிவரும் அபத்தத்தினையும், அவர்களின் பேச்சுவார்த்தை நாடகத்தினையும் நிச்சயம் நாம் முறியடிக்கவேண்டும் என்று கருணா அம்மான் கேட்டிருக்கிறார். பயங்கரவாதப் புலிகளுக்கும் கருணா அமைப்பிற்கும் இடையிலுள்ள வேறுபாட்டினை இப்போது மொத்தத் தமிழர்களும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழர்களை அடிமைப்படுத்தி, யுத்த அழிவுகளுக்குள் தொடர்ச்சியாக வைத்திருக்கும் வன்னிப் புலிகளுடன் ஒப்பிடும்பொழுது, மென்போக்கான, மக்கள் அவலங்கலைப் புரிந்துகொண்ட, மக்களின் நலனில் அக்கறைகொண்ட, மக்களுக்கு நம்பிக்கையான வாழ்வினை ஏற்படுத்த சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் மக்களுடன் நெருங்கிப் பழகும் கருணா அம்மானை அவர்களை தமது தலைமையாகக் காண விரும்புகிறார்கள். கருணா அம்மானை தமது ஏக தலைமையாக அங்கீகரிக்கும் இலங்கையின் தமிழர்களின் இந்த ஒருமித்த முடிவு புலம்பெயர் நாடுகளிலிருந்துகொண்டு இன்றுவரை புலிப் பயங்கரவாதிகாளுக்கு பெருமளவு பாணத்தினை வாரி வழங்கி நாட்டில் அழிவுகளை மட்டுமே ஏற்படுத்திவரும் தமிழர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும் என்று நம்பலாம். புலம்பெயர் தமிழர்கள் செய்யவேண்டியது யாதெனில், இலங்கைத் தமிழர்களுடன் சேர்ந்து, கருணாவின் தலைமைத்துவத்தின்கீழ் அணிதிரண்டு, தமது வளங்களை அவருக்கு அர்ப்பணித்து, கொலைகாரப் பிரபாகரனையும் பயங்கரவாதப் புலிகள் இயக்கத்தையும் இந்த நாட்டிலிருந்து முற்றாகத் துடைத்திட உதவ வேண்டும்.
  10. தொப்பிகல (குடும்பிமலை) புலிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்த 10 நாள் அவகாசம் கேட்ட கருணா , தொப்பிகல பிரதேசத்தை கருணாவின் உதவியில்லாமலேயே நாம் கைப்பற்றினோம் - இலங்கை ராணுவம் மூலம் : வோல்ட்டர் ஜயவர்டின இணையம் : லங்கா வெப் மற்றும் ஏசியன் ட்ரிபியூன் காலம் : கருணா பிள்ளையான் துணைராணுவக் குழுக்களுக்கிடையே பிளவுகள் தோன்றியிருந்த காலம் தொப்பிகல காட்டுப்பகுதியில் இன்னமும் எஞ்சியிருக்கும் புலிகளின் அணிகளை அப்புறப்படுத்தும் ராணுவ நடவடிக்கையின் முன்னோடி கொமாண்டோ நடவடிக்கைக்காக கருணாவை இன்னும் எதிர்பார்ப்பது பயனற்றது எனும் முடிவிற்கு இலங்கை ராணூவமும் விசேட அதிரடிப்படையும் வந்திருப்பதாகத் தெரியவருகிறது. ஏசியன் ட்ரிபியூன் செய்திகளின்படி கருணா தனது படைகளை ராணுவ அணிக்கு முன்னோடியாக தொப்பிகல பகுதிக்குள் அனுப்பி புலிகள் மீதான கொமாண்டோ பாணியிலான தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் மே மாதம் 4 ஆம் திகதி பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் இடையே ஏற்பட்ட பிளவினையடுத்து அத்திட்டம் பிற்போடப்பட்டிருக்கலாம் என்றும் அறியவருகிறது. கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே ஏற்பட்ட மோதலினையடுத்து சுமார் 850 கருணா விசுவாசிகள் பிள்ளையானுடன் போய்ச் சேர்ந்து திருகோணமலையில் நிலைகொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது. தற்போது கருணாவிடம் வெறும் 300 போராளிகளே இருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் அண்மைய நாட்களில் கருணாவால் வலுக்கட்டாயமாக துணைராணுவக்குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்ட சிறுவர்கள் ஆகும் என்றும் ஏசியன் ட்ரிபியூன் கூறுகிறது. கருணாவின் நெருங்கிய சகாக்களான ஜீவேந்திரம் மற்றும் திலீபன் ஆகியோரே இந்தச் சிறுவர்களை அண்மையில் கடத்திவந்து கருணாவின் படையில் இணைத்ததாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவிக்கிறது. தனது குழந்தைகள் படையணியைக் கொண்டு தான் வாக்களித்த தொப்பிகல முன்னோடி தாக்குதல் நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாது என்பதை உணர்ந்துள்ள கருணா, தான் மீளவும் ஆட்களைச் சேர்த்துக்கொண்டு தாக்குதலை ஆரம்பிக்க மேலும் 10 நாள் அவகாசத்தினை ராணுவத்தினரிடம் கேட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. கருணா உண்மையிலேயே ராணுவத்திற்கு உதவியாக தனது படையணியை காட்டிற்குள் அனுப்பி புலிகள் மேல் அதிரடித் தாக்குதலை நடத்தி அவர்களை நிலைகுலைய வைத்தபின்னர் ஏனைய ராணுவ அணிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் விருப்பத்துடன் இருந்தபோதும், அவருடைய இன்றைய நிலை துரதிஷ்ட்டவசமானது என்று ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனாலும், கருணா தொப்பிகல மீதான தாக்குதலுக்கு தன்னை ஈடுபடுத்துமாறும், இதற்கு 10 நாள் அவகாசம் தரும்படியும் ராணுவத்தை வேண்டிவருவதாகத் தெரிகிறது. சில தினங்களுக்கு முன்னர் கருணா தனது தளபதிகளான மகிலன், ஜீவேந்திரன், மங்களன் மற்றும் சின்னத்தம்பி ஆகியோரை விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து இதுதொடர்பாக கலந்துரையாடுவதற்கு அக்கரைப்பற்றிற்கு அனுப்பியிருந்தார். இச்சந்திப்பின்போது சலிப்படைந்து காணப்பட்ட அதிரடிப்படைத் தளபதிகள், தொப்பிகல காட்டுப்பகுதியிலிருந்து மீதமிருக்கும் புலிகளை விரட்டும் நடவடிக்கை கருணாவினால் தேவையில்லாமல் தள்ளிப் போடப்படுகிறது என்பதை அவரிடம் கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டதாக தெரியவருகிறது. மேலும், கருணாவின் தளபதிகளிடம் வேறு ஒருவிடயத்தினையும் விசேட அதிரடிப்படைத் தளபதிகள் கூறியுள்ளனர். அதாவது, தொப்பிகல மீதான திட்டமிட்ட ராணுவ நடவடிக்கை திட்டமிட்டதன்படி நடைபெறும் என்றும், கருணா இல்லாவிட்டால் திருகோணமலை அணியினரைப் பாவித்து தாம் தாக்குதலை அங்கிருந்தே ஆரம்பிப்போம் என்றும் கூறியிருக்கின்றனர். திருகோணமலை அணியென்று விசேட அதிரடிப்படை குறிப்பிட்டது பிள்ளையான் அணியினரைத்தான் என்பது குறிப்பிடத் தக்கது. தாம் எதிர்பார்த்தபடி விசேட அதிரடிப்படை தளபதிகளை தமது 10 நாள் அவகாசத்திற்குச் சம்மதிக்க வைக்கமுடியாத நிலையில் கருணாவின் தளபதிகள் கருணாவுடன் அங்கிருந்தே நேரடியாகத் தொடர்புகொண்டுள்ளனர். கருணா அவர்களிடம் மீண்டும் 10 நாள் அவகாசத்தினைக் கெஞ்சிக் கேட்டுப் பாருங்கள் என்ரு கூறியபோதும், விசேட அதிரடிப்படைத் தளபதிகள் கருணாவின் வேண்டுகோளினை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தெரியவருகிறது. இது இவ்வாறிருக்க, அண்மையில் தொப்பிகல காட்டுப்பகுதியில் நடைபெற்ற சில ராணுவ நடவடிக்கைளைப் பார்க்கும்போது கிழக்கிலிருந்து புலிகளை முற்றாகவே அப்புறப்படுத்தும் ஏதுநிலை உருவாகியிருப்பதாகவே தோன்றுவதாக ராணுவத்தின் கொமாண்டோ படையணியும், காலாட்படைகளும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன. இத்தாக்குதல்களில் புலிகளின் நான்கு முகாம்கள் கைப்பற்றப்பட்டதாகவும், சுமார் 30 புலிகள் வரை கொல்லப்பட்டதாகவும் இன்னும் மூன்று புலிகள் ராணுவத்தினரின் முன்னிலையிலேயே சயனைட் அருந்தி இறந்ததாகவும் ராணுவப் பேச்சாளர் பாதுகாப்பு விடயங்களை அறிவிக்கும் பத்திரிக்கையாளர் மாநாட்டில் தெரிவித்தார். மேலும் ராணுவத்தினர் பங்குடாவெளி வடக்கு, நாரக்கமுல்லை தெற்கு ஆகிய தொப்பிகலைக் காட்டுப்பகுதியில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கையொன்றினை ஜூன் மாதம் 9 ஆம் திகதி மேற்கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். காலாற்படை, விசேட கொமாண்டோ பிரிவு, ஆட்டிலெறிச் சூட்டாதரவு ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த வெற்றிகரமான ராணுவ நடவடிக்கையில் இப்பன்வில, வேப்பன்வெளி, அக்கரைத்தீவு மற்றும் மாவடியோடை ஆகிய பகுதிகளில் இருந்த புலிகளின் முகாம்களே கைப்பற்றப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காட்டுப்பகுதியில் நடந்த கடுமையான சண்டைகளில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதாகவும் இன்னும் 17 பேர் காயமடைந்ததாகவும் ராணூவப் பேச்சாளர் மேலும் கூறினார். இச்சண்டைகளில் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் 8 உடல்களை பொலீஸார் மூலம் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் தாம் கையளித்திருப்பதாகவும் ராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். புலிகளின் தொலைத்தொடர்புகளை வழிமறித்துக் கேட்ட ராணுவத்தினர், வன்னியிலிருந்து உடனடியாக ஆயுத, ஆள்ப்பல உதவிகளை வழங்குமாறு தொப்பிகலக் காட்டிலிருந்து புலிகள் வேண்டிக்கொண்டபோதும்கூட வன்னியிலிருந்து உதவிகளோ அல்லது பதில்த் தகவல்களோ எதுவும் வரவில்லையென்றும் ராணுவத்தினர் கூறுகின்றனர். இத்தாக்குதலில் புலிகளிடமிருந்து பெருமளவு ஆயுத தளபாடங்களைத் தாம் கைப்பற்றியதாக நீண்ட பட்டியல் ஒன்றினையும் ராணுவம் வெளியிட்டிருந்தது. http://www.lankaweb.com/news/items07/120607-6.html
  11. கருணா மேலும் ஷிமாலியிடம் பேசும்போது பிரபாகரனின் புலநாய்வுப் பொறுப்பாளர் தனக்குத் தெரியாமல் கிழக்கில் பல அரசியல்ப் படுகொலைகளை அரங்கேற்றி வந்ததாகவும், இதனால் இக்கொலைகள் தொடர்பாக சர்வதேசத்தில் இருந்து வந்த கேள்விகளுக்கும், நோர்வேஜியர்களின் தலைமையில் இயங்கிவந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் கேள்விகளுக்கும் தானே பதில்சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார். ஐக்கிய தேசிய முன்னணியின் மட்டக்களப்பு வேட்பாளரை மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைத்துப் புலிகள் கொன்றதையும், ஈ பி டி பி கட்சியின் உறுப்பினர் ஒருவரை வாழைச்சேனையில் வைத்து புலிகள் கொன்றதையும் இதற்கு உதாரணமாக கருணா குறிப்பிட்டிருந்தார். மேலும் கருணா ஷிமாலியிடம் பேசும்போது, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின்மூலம் பொருளாதார உதவிகள் என்று வழங்கப்பட்ட எவையுமே கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்படவில்லையென்று குற்றஞ்சாட்டினார். வெளிநாட்டுப் பணத்திலிருந்து அதி சொகுசு வாகனங்களை இறக்குமதிசெய்த புலிகளின் தலைவர்கள் வன்னியில் அவற்றில் பவனிவருவதாகவும், கிளிநொச்சியைச் சுற்றி பாரிய நகர அபிவிருத்தித் திட்டங்களை அவர்கள் மேற்கொண்டுவரும் அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தை முற்றாக அவர்கள் கைகழுவி விட்டார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். நோர்வேயிடமிருந்தும் சுவீடனிடமிருந்தும் புலிகளுக்கு வழங்கப்பட்ட பெருமளவு நிதி ஒருபோதுமே மட்டக்களப்பை நோக்கி வரவில்லையென்றும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக பிரபாகரனுக்குத் தான் அனுப்பிய பல கடிதங்களுக்கு அவர் பதில் அனுப்பவில்லையென்றும் அவர் கூறினார். புலிகளின் தலைமைக்காக பல கடுமையான போர்க்களங்களைத் தான் வென்று கொடுத்திருப்பதாகவும், அதனால் பிரபாகரனிடம் இருந்து வரும் எந்தச் சவாலையும் தன்னால் முறியடிக்க முடியும் என்றும் கருணா பெருமிதத்துடன் கூறினார். அதேவேளை தனக்கோ அல்லது தனது வீரர்களுக்கோ பிரபாகரனினால் ஆபத்து ஏற்படுமிடத்து அதற்கான பொறுப்பினை சர்வதேசமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், ஆனால் இதற்குப் பதிலடியாக புலிகள் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை தான் முன்னெடுக்கப்போவதாகவும் அவர் எச்சரித்தார். இது இவ்வாறிருக்க கொழும்பில் உள்ள சர்வதேச மற்றும் உள்ளூர் அரசியல் மற்றும் ராணுவ அவதானிகளின் கருத்துப்படி கருணாவின் பிளவின் பின்னால் இந்தியாவே இருப்பதாக தெரிகிறது. தமிழ்ப் பிரிவினைவாதிகளுடன் நெடுங்காலமாகத் தொடர்புகளைப் பேணிவந்த இந்தியா தற்போதைய புலிகளின் தலைமையுடனான தனது பகைமையினையடுத்தே இந்தப் பிளவில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. கருணாவிற்குப் பின்னால் இந்தியா நிற்பதும், புலிகளின் தலைமைப் பீடத்தின் ரகசியங்கள் பலவற்றை அவர் அறிந்தவர் என்கிற வகையிலும் பிரபாகரனுக்கும் கருணாவுக்கும் இடையிலான இந்தப் போர் மிக நீண்டதாகவும், பாரிய அழிவினைக் கொண்டுவருவதாகவும் இருக்கப்போகிறது என்றும் அந்த அவதானிகள் தெரிவிக்கின்றனர். முற்றும். http://www.lankaweb.com/news/items04/060304-1.html
  12. எனக்கோ அல்லது எனது போராளிகளுக்கோ பிரபாகரன் கேடு விளைவிக்க நினைத்தால் நாம் நிச்சயமாகத் திருப்பித் தாக்குவோம், நாம் எதற்கும் அஞ்சப்போவதில்லை - கருணா அம்மான், கருணாவின் பின்னால் நிற்கும் இந்தியா - அரசியல் அவதானிகள் ! ஆக்கம் : வோல்ட்டர் ஜயவர்டென காலம் : கருணா புலிகளால் விலக்கப்பட்டு ராணுவத்துடன் சேர்ந்து இயங்கிக்கொண்டிருந்த காலம் இலங்கையின் பயங்கரவாத இயக்கமான புலிகளுக்குள் ஏற்பட்ட மிகப்பெரிய பிளவினை முதன் முதலில் வெளியுலகிற்குக் கொண்டுவந்த செய்தியாளர் சிமாலீ சேனநாயக்க கிழக்கு மாகாணத்தின் புலிகள் பிரிவின் தலைவர் கேணல் கருணாவை அண்மையில் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போதே தன் மீதோ அல்லது தனது வீரர்கள் மீதோ பிரபாகரன் தாக்குதல் நடத்த முயற்சித்தால் தாம் நிச்சயம் திருப்பித் தாக்குவோம், நாம் அவருக்கு அஞ்சவில்லை என்று கருணா கூறினார். அண்மையில் லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் வானொலிச் சேவை ஒன்றிற்கு பேட்டியளித்த ஷிமாலீ புலிகள் மீது திருப்பித் தாக்கும் முடிவுடன் கருணா இருப்பதாக தெரிவித்தார். பிரபாகரனின் நடவடிக்கைகளுக்கு நிச்சயம் எதிர் நடவடிக்கைகளை எடுப்பேன் என்று கருணா கூறுவதுவது, இலங்கையின் தமிழ்ப் பயங்கரவாதிகளின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த நாட்களில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களையும், பாரிய படுகொலைகளையும் எமக்கு நினைவுபடுத்துகிறது. குறிப்பாக புலிகள் இயக்கத்திற்கும், டெலோ இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல்களின்போது அவ்வியக்கத்தின் தலைவர் சிறி சபாரட்ணம் உட்பட பல தலைவர்கள் புலிகளிடம் சரணடைந்தபின்னர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். கருணாவின் இந்த எச்சரிக்கையும் மிகவும் சிக்கலான நேரத்தில்த்தான் வந்திருக்கிறது. புலிகள் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை மறைத்து, ஜனநாயக அரசியலில் நாட்டம் கொண்டவர்களாக தம்மைக் காட்டுவதற்காக தமது பினாமிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் களமிறக்கி, தமிழ் மக்களுக்கான ஏக பிரதிநிதிகள் தாமே என்று காட்டுவதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கும் நிலையில் கருணாவின் இந்த எச்சரிக்கை வந்திருக்கிறது. பல தசாப்த்தங்களாக புலிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கும் வகையில் தற்போதைய பிளவு அமைந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். புலிகளின் தலைமைக்கு எதிராகத் துரோகமிழைத்தார் என்கிற குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மரண தண்டனை வழங்கப்பட்ட புலிகளின் முன்னாள் பிரதித் தலைவர் மாத்தையாவின் பிளவினைக் காட்டிலும் மிகப் பாரியளவு தாக்கத்தினையும், அழிவையும் கருணாவின் விலகல் ஏற்படுத்தியிருக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். மாத்தையாவின் துரோகத்தின்போது அவர் வன்னியில் இருந்ததனால் அவரை புலிகளால் இலகுவில் தண்டிக்க முடிந்ததென்றும், ஆனால் கருணாவோ வன்னிக்கு வெளியில், தனது வீரர்களின் அதியுச்ச பாதுகாப்பில் இருப்பதால் பிரபாகரனினால் அவரை நெருங்கக் கூட முடியவில்லை என்றும் அவதானிகள் தெரிவிக்கின்றனர். கருணாவை கிழக்கு மாகாணத்திற்குச் சென்று சந்தித்த முதல்ப் பத்திரிக்கையாளரான சிமாலீ சேனநாயக்கவை பி பி ஸி யின் சிங்களச் சேவை சந்தேஷய பேட்டி கண்டது. அப்பேட்டியில் ஷிமாலி பேசும்போது பிரபாகரன் தனது சொந்தத் தேவைக்காக கிழக்கு மாகாணப் போராளிகளைப் பலிகொடுத்து வருகிறார் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். கருணா மேலும் கூறும்போது கிழக்கிலிருந்து ஆயிரம் போராளிகளை வன்னிக்கு அனுப்பிவைக்குமாறு பிரபாகரன் தன்னிடம் கேட்டபோது தான் உடனேயே மறுத்துவிட்டதாகவும், வடமாகாணத்தில் நீங்கள் சகல சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு பாதுகாப்பாக வாழ்வதற்கு கிழக்கு மாகாணப் போராளிகளைப் பலிகொடுக்க முடியாது என்று தான் கூறியதாகவும் கூறியிருக்கிறார். கருணா மேலும் பேசும்போது பிரபாகரனின் உயிரைக் காப்பதற்காக இதுவரையில் 2300 போராளிகள் பலியிடப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
  13. கருணாவின் கட்டுப்பாட்டில் றமெஷ் இருக்க, அவரை வைத்து போலியான பத்திரிக்கையாளர் மாநாட்டினை நடத்திய புலிகள் ஆங்கில மூலம் : வோல்ட்டர் ஜெயவர்தின காலம் : கொழும்பில் கருணாவினால் கைவிடப்பட்ட நிலையில் கருணாவின் பெண்போராளிகள் சிலர் மீண்டும் புலிகளுடன் வந்து இணைந்துகொண்ட காலப்பகுதி தம்மால் விலத்தப்பட்ட கருணாவுக்கு இலங்கை ராணுவம் அடைக்கலம் கொடுத்துவருவதாகவும், கருணாவைக்கொண்டு தம்மீது நாசகாரத் தாக்குதல்களை இலங்கை ராணுவம் தொடுத்துவருவதாகவும் புலிகள் மீண்டும் இலங்கை அரசாங்கத்தினை கடுமையாகச் சாடியிருக்கின்றனர். புலிகளால் நடத்தப்படும் இணையத்தளமான தமிழ்நெட்டில் வந்துள்ள செய்தியின்படி தேனகம் கொக்கட்டிச்சோலையில் நடந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் அம்பாறை - மட்டக்களப்புச் சிறபுத்தளபதி கேணல் ரமேஷ் கருணா குழுவினரை தமக்கெதிரான நாசகாரத் தாக்குதல் நடவடிக்களுக்கு ராணுவம் பாவித்துவருவதாகக் குற்றஞ்சாட்டியதோடு இந்த நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் புலிகள் அதற்கான தக்க பதிலடியினை வழங்கவேண்டி வரும் என்று எச்சரித்துள்ளதாக செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால், புலிகளின் இந்தச் செய்திக்கு மாறாக , கிழக்கிலிருந்து வரும் நம்பகரமான தகவல்களின்படி இந்தச் செய்தியானது தமிழ் மக்களைக் குழப்பும் நோக்கத்துடன் புலிகளால் வேண்டுமென்றே விடப்பட்ட செய்தியென்றும், கருணாவின் படைகளால் ரமேஷ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருப்பதாகவும், அவரால் பத்திரிக்கையாளர் மாநாடு ஒன்றினை நடத்துவதற்கான சந்தர்ப்பமே இல்லையென்றும் தெரியவருகிறது. வழமையாக நடக்கும் நிகழ்வுகளின் ஒளிப்படத்தை தனது செய்திக்குறிப்புடன் வெளியிடும் தமிழ்நெட் இணையத்தளம் ரமேஷ் தொடர்பான இந்தப் பத்திரிக்கையாளர் மாநாட்டுச் செய்திக்குறிப்புடன் ரமேஷின் கடந்த கால ஒளிப்படம் ஒன்றினை மட்டுமே இணைத்திருந்தது. இது இவ்வாறிருக்க, கருணாவுக்கும் தமக்கும் இடையே எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்று மறுத்திருக்கும் இலங்கை ராணுவம், கருணாவுக்கும் வன்னிப் புலிகளுக்கும் இடையே நடப்பது அவர்களது உள்வீட்டு விவகாரம் என்று தனது பாராளுமன்றப் பேச்சாளர் மங்கள சமரவீரவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது. இதேவேளை, பொதுவான எதிரணியில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் புலிகளின் பினாமியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து செயற்பட்டு வரும் ஜாதிக ஹெல உறுமயக் கட்சி கருணாவுக்கு ஆதரவாக அரசாங்கம் இதுவரை செயற்படாதது குறித்து கடுமையான கண்டனங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. புலிகளால் போலியாக நடத்தப்பட்டதாகக்கூறப்படும் இந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் கருணாவுக்கு ராணுவம் பாதுகாப்பினையும், ஆயுதங்களையும் வழங்கிவருவதற்கான உறுதியான ன சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறினார். புலிகளின் இணையத்தளமான தமிழ்நெட்டின் செய்தியின்படி கருணாவினால் கொழும்பில் கைவிடப்பட்ட நான்கு பெண்போராளிகளின் தகவல்களின்படியே தமக்கு இந்த ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறியிருந்தாலும்கூட அவை எவையென்பதை ரமேஷ் கூறியிருக்கவில்லை. தம்மிடம் சரணடைந்தவர்கள் என்று புலிகளால் கூறப்பட்ட நான்கு பெண்போராளிகளின் பெயர் விபரங்களைக் கூற புலிகள் மறுத்துவிட்ட நிலையில், இவர்கள் உன்மையிலேயே கருணாவின் தோழிகளா அல்லது சாதாரண பெண்களா என்று பத்திரிக்கையாளர்களால் இதுவரையில் உறுதிசெய்யப்படமுடியாது போய்விட்டது. தமிழ்நெட்டின்படி, தமக்கும் கருணாவுக்குமிடையிலான முறுகல் நிலைபற்றி சில சர்வதேச செய்திச்சேவைகள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருவதாக ரமேஷ் கூறியதாக இந்தப் போலியான மாநாட்டுச் செய்தியை தமிழ்நெட் வெளியிட்டிருக்கிறது. மேலும், இந்த மாநாட்டில் பேசிய ரமேஷ் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகளின் அரசியல்த்துறைப் போராளிகள் மேல் நடத்தப்பட்டுவரும் படுகொலைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தமது இயக்கம் ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுவே முதல்தடவையாக புலிகள் தமது போராளிகள் கருணாவிணால் கொல்லப்படுவதாக கூறும் சம்பவம் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், ஆயுதம் தரித்த புலிகளின் போராளிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடமாட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தமது போராளிகள் மீதான தாக்குதல்களை புலிகள் எவ்வாறு தடுத்து நிறுத்தமுடியும் என்பது கேள்விக்குறிதான். மேலும், தமிழ்னெட்டின் இன்னொரு செய்திக்குறிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஜி எல் பீரிஸை மேர்கோள் காட்டி "புலிகள் அரசு மேற்கொண்டுவரும் தந்திரோபாய செயற்பாடுகளால், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையினை இழந்துவருவதாகவும்" குறிப்பிட்டிருக்கிறது. முற்றும் http://www.lankaweb.com/news/items04/200604-7.html
  14. இங்கிலாந்துச் சிறையிலிருந்து குடிவரவு தடுப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்ட கருணா - அவரால் கொண்டுவரப்பட்ட பெருமளவு பணம் ஜெயதேவன் மூலம் லண்டனில் முதலீடு செய்யப்பட்டது ஆங்கிலமூலம் : ரங்கஜீவ ராஜகருண இணையம் : லங்கா வெப் காலம் : போலியான கடவுச் சீட்டு மூலம் கோத்தாபயவினால் லண்டனுக்கு அனுப்பப்பட்ட கருணா அங்கு பிடிபட்டு 9 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த காலப்பகுதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவரும், கருணா அம்மான் என்றழைக்கப்பட்டவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் லண்டன் சிறையிலிருந்து கடந்த மே மாதம் 8 ஆம் திகதி விடுவிக்கப்பட்டு குடிவரவு தடுப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார். பிரிட்டிஷ் அதிகாரிகக்ளின் கூற்றுப்படி அவர் குடிவரவுச் சட்டங்களை மீறியபடியினால் அதிகாரங்களுக்கு அமைவாக தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. மேலும், லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்புகொண்டுள்ள பிரிட்டிஷ் குடிவரவு அதிகாரிகள் கருணா மீளவும் இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயணப் பத்திரங்களைத் தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரியவருகிறது. இப்பத்திரம் வழமையான கடவுச் சீட்டினைப் போலல்லாது ஒரு பக்கக் கடதாசியில் பயணிப்பவரின் புகைப்படத்தையும், இவரை பயணிக்க அனுமதியுங்கள் என்கிற குறிப்போடும் இருக்கும் என்று தெரியவந்திருக்கிறது. ஆனால், லண்டனில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளைத் தொடர்புகொண்டபோது கருணாவுக்கான பயணப்பத்திரங்களைத் தயாரிக்குமாறு இதுவரையில் தம்முடன் பிரிட்டிஷ் அதிகாரிகள் தொடர்புகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்று கூறுகின்றனர். ஏற்கனவே லண்டனில் வசித்துவரும் அவரது மனைவி வித்தியாவதி மற்றும் அவரது மூன்று பிள்ளைகளுடனும் இணைந்துகொள்வதற்காக கருணா போலியான கடவுச் சீட்டினைப் பாவித்து லண்டனிற்கு தப்பியோடி வந்ததற்காக 2007 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 2 ஆம் திகதி குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட கருணா , பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே தன்னைப் போலிக் கடவுச் சீட்டுடன் அனுப்பியதாகவும் கூறியதுடன் இக்குற்றத்திற்காக 9 மாதங்கள் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். அரசியல் அவதானிகளின் கருத்துப்படி புலிப்பயங்கரவாதிகளின் கிழக்கு மாகாண தளபதியாகவிருந்த கருணா தனது போராளிகளுடன் விலகி ராணுவத்தினரின் பக்கம் சென்றதானது அப்பயங்கரவாதிகளின் அஸ்த்தமனக் காலம் நெருங்கி வருகிறதைத்தான் காட்டுகிறது என்று கூருகிறார்கள். கருணாவின் பிரிவின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பாரிய நிலப்பரப்பினை புலிப் பயங்கரவாதிகள் மிகக் குறுகிய காலத்தில் இலங்கை ராணுவத்திடம் பறிகொடுத்தனர். கருணாவின் பிரிவின் மூலம் புலிப்பயங்கரவாதிகள் தொடர்பான பல புலநாய்வுத்தகவல்களை கருணா ராணுவத்திற்கு வழங்கியதன் மூலம் கிழக்கு மாகாணத்திலிருந்து பயங்கரவாதிகளை மிக இலகுவாக துரத்துவதற்கு ஏதுவாக அமைந்ததாக ராணுவப் புலநாய்வுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. பயங்கரவாதிகளுடன் இருந்த காலத்தில் பிரபாகரனின் கொடூரமான கட்டளைகள் பலவற்றை அருணா மறுபேச்சின்று செயற்படுத்தியதாகத் தெரியவருகிறது. பிரபாகரனுக்காக பெருமளவு சிறுவர்களை கருணா புலிகள் அமைப்பில் சேர்த்துக்கொண்டதுடன், 1990 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் சரணடைந்த 600 சிங்கள முஸ்லீம் பொலீஸாரை கருணாவின் கட்டளையின்பேரிலேயே பயங்கரவாதிகள் திருக்கோயில் காட்டிற்குள் ஜேர்மனிய நாஜிகளின் பாணியில் அருகிலிருந்து சுட்டுக்கொன்றதாகத் தெரியவருகிறது.. இது இவ்வாறிருக்க, கருணா தான் லண்டனுக்குத் தப்பி வந்த பொழுது தன்னுடன் கொண்டுவந்த பெருமளவு பணத்தினை இந்திய உளவுத்துறை ரோவின் நெருங்கிய நண்பரும், லண்டன் நகரில் சில இந்துக் கோயில்களை நடத்திவருபவருமான ஜெயதேவனிடம் கொடுத்து லண்டனில் பல வியாபாரங்கலில் முதலீடு செய்துள்ளதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முற்றும் http://www.lankaweb.com/news/items08/090508-1.html
  15. கருணா தனது ராணுவ அமைப்பில் சேர்ப்பதற்காக தமிழ்ச் சிறுவர்களை ராணுவத்தினரின் துணையுடன் கடத்துவதாக ஆலன் ரொக் கூறுவது மிகப்பெரிய பொய் - கருணாவுக்கு நற்சான்றுப் பத்திரம் கொடுக்கும் சிங்கள இனவாதிகள் நற்சான்றிதழை புனையும் சிங்கள இனவாதி : சார்ள்ஸ் பெரேரா காலம் : கருணா சிறுவர்களை ராணுவத்தின் துணையுடன் கடத்தத் தொடங்கிய காலம் இலங்கை ராணுவத்தினரின் துணையுடனோ, இல்லாமலோ கருணா நிச்சயமாகத் தமிழ்ச் சிறுவர்களைக் கடத்தியிருக்க முடியாது. புலிப் பயங்கரவாதிகளைக் காப்பாற்றவும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினை தவறாக வழிநடத்தவும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான ஆணையாளர் ஆலன் ரொக் இம்மாதிரியான புனைவுகளை வெளியிட்டு வருகிறார். ஒருவேளை கருணா புலிப் பயங்கரவாதிகளுடன் இருந்த காலத்தில் அவர் சிறுவர்களைப் பயங்கரவாதிகளுக்காகக் கடத்தியிருக்கலாம், ஆனால் நிச்சயமாக அவர் ராணுவத்துடன் சேர்ந்து இயங்கத் தொடங்கிய பின்னர் அல்ல. நடக்கும் விடயங்களை அவதானிக்கும்போது கருணா தனது அமைப்பிற்காக தமிழ்ச் சிறுவர்களைக் கடத்தவில்லை என்பது தெளிவாகிறது. ஆலன் ரொக்கினால் முன்வைக்கப்பட்ட பொய் மூட்டைகளை ஒவ்வொன்றாக களையலாம், முதலாவதாக தமது பிள்ளைகளைக் கடத்திச் சென்றவர்கள் புலிப்பயங்கரவாதிகளா, கருணா அமைப்பினரா அல்லது இலங்கை ராணுவமா என்று கிழக்குத் தமிழர்கள் எவ்வாறு உறுதிப்படுத்துகிறார்கள்? தமது பிள்ளைகளைக் கடத்தியவர்கள் குறிப்பிட்ட வகை சீருடைகளை அணிந்திருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், பயங்கரவாதிகளிடமிருந்து வாகரைப்பகுதியினை படையினர் மீட்டபோது பயங்கரவாதிகளின் தையல் நிலையம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்துதான் பயங்கரவாதிகளின் சீருடைகள் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. அதேவேளை, படையினர் இன்னொரு விடயத்தையும் அங்கே அவதானித்தனர். அதாவது படையினர் அணியும் சீருடையினை ஒத்த சீருடைகளையும், கருணா அமைப்பினர் அணியும் சீருடைகளையும் பயங்கரவாதிகள் தயாரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே படையினரின் சீருடையிலும், கருணா அமைப்பின் சீருடையிலும் தமிழ்ச் சிறுவர்களைப் புலிப்பயங்கரவாதிகளே கடத்திச் செல்வது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டு விடுவதுடன், படையினர் மீதும் கருணா மீதும் அவதூறுகளைப் பரப்பவே இதனைப் பயங்கரவாதிகள் செய்துவருகிரார்கள் என்பதும் தெளிவாகிறது. கருணாவிடம் மரபுரீதியிலான ராணூவ கட்டமைப்பென்று ஒன்றில்லை. ஏனென்றால், அவர் புலிப்பயங்கரவாதிகளுடன் நேருக்கு நேராக மரபுவழிச் சண்டையில் ஈடுபடுவதில்லை. அவர் புலிப்பயங்கரவாதிகள் மீது மறைந்திருந்து தாக்கும் உத்திகளையோ அல்லது சிறுகுழுக்களைப் பாவித்து பயங்கரவாதிகளின் இலக்குகளைத் தாக்கும் உத்திகளையோதான் பாவித்து வருகிறார். இப்படியான தந்திரோபாய நடவடிக்கைகளுக்குக் கருணா கடுமையான பயிற்சிபெற்ற, யுத்த கள அனுபவம் உள்ள சிறப்பான வீரர்களையே பயன்படுத்தி வருகிறார். இவ்வாறான வீரர்களே நீண்டநாட்கள் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவிக் காத்திருந்து, பயங்கரவாதிகளின் தலைவர்களை இலக்குவைத்துக் கொன்றுவிட்டு தந்திரமாக தப்பி வந்துவிடுவர். ஆகவே இப்படியான கடிணமான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு கட்டாயப்படுத்தப்பட்டு பயிற்சியில் இணைக்கப்பட்ட சிறுவர்களை நிச்சயம் பயன்படுத்த முடியாது, அவர்களும் தப்பியோடுவதற்கான சந்தர்ப்பங்களே அதிகமாக இருக்கும். மேலும், இவ்வாறான தந்திரோபாய படை நகர்வுகளுக்குக் கருணாவுக்கு மிகவும் சிறிய எண்ணிக்கையிலான வீரர்களே போதுமானது. கியூபாவின் காஸ்ட்ரோ படிஸ்ட்டா ராணுவத்திற்கெதிராக சிறிய அளவிலான கொமாண்டோக்களை அனுப்பிச் சண்டையிட்டதுபோல, கருணாவும் சிறிய எண்ணிக்கையிலான வீரர்களையே பயன்படுத்தி வருகிறார். கிழக்கில் கருணா நிலையாக இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் தற்போது இல்லை. அவர் நேரத்திற்கு நேரம் தனது இடங்களை மாற்றிக்கொண்டே வருகிறார். இந்த நிலையில் பாரிய ராணுவக் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கி, அதில் சிறுவர்களை கட்டாயமாகச் சேர்த்துக்கொண்டு தனது தலைமறைவு வாழ்க்கையினை அவரால் நடத்த முடியாது. ஆலன் ரொக்கினால் வெளிப்படுத்தப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள் உண்மையிலேயே புலிப்பயங்கரவாதிகளால் உலகிற்குக் காட்ட விடுவிக்கப்பட்ட சிறுவர்களாகும். இன்னும் பல சிறுவர்கள் புலிப்பயங்கரவாதிகலிடமிருந்து தப்பி வந்து ராணுவத்திடமும் கருணா அமைப்பினரிடமும் அடைக்கலமாகியபோது அவர்களை அவர்களின் பெற்றோர்களுடன் ராணுவமும் கருணாவும் கையளித்ததுதான் நடந்திருக்கிறது. ஆனால், கருணா அமைப்பினரிடமிருந்து இதுவரையில் எந்தவொரு சிறுவனோ தான் தப்பி வந்ததாக பொலீஸிடமோ, ராணுவத்தினரிடமோ அல்லது யுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடமோ தெரிவிக்கவில்லையென்பது, கருணாவினால் தமிழ்ச் சிறுவர்கள் எவருமே கடத்தப்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. ஆகவே, இதன்மூலம் உறுதிப்படுத்தப்படுவது என்னவென்றால், கருணா ஒருபோதுமே தமிழ்ச் சிறுவர்களைக் கடத்தவில்லையென்பதும், ராணுவம் அவருக்காக சிறுவர்களைக் கடத்தவில்கையென்பதும் மட்டுமன்றி புலிப்பயங்கரவாதிகளைக் காக்கவே ஆலன் ரொக் பொய்களை அவிழ்த்துவிடுகிறார் என்பதும் தான். முற்றும். http://www.lankaweb.com/news/items07/030207-2.html
  16. பிரபாகரன் தற்போது கால்முறிந்த வாத்தாக மாறிவிட்டார், அவரால் ஒரு போதுமே இன்னுமொரு போரினை ஆரம்பிக்க முடியாது - கருணா ஆங்கிலமூலம் : வோல்ட்டர் ஜயவர்டின இணையம் : லங்கா வெப் காலம் : கருணா ராணுவத்திற்காக இயங்கத் தொடஙியிருந்த காலம். பிரபல சிங்கள நாளிதழான திவயினவுக்கு, வன்னிப் புலிகளுக்கு சிம சொப்பனமாகத் திகழும் கருணா அம்மான் அண்மையில் வழங்கிய செவ்வியில் , கிழக்கு மாகாணத்தின் பெருமளவான புலிகள் இயக்கப் போராளிகள் தனது கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளதனால் வன்னிப் புலிகளின் தலைவரான பிரபாகரன் தற்போது எழுந்து நடக்கமுடியாத நொண்டி வாத்தாக மாறிவிட்டார் என்று கூறினார். "அவரால் இனிமேல் ஒருபோரை ஆரம்பிப்பது குறித்து நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. கிழக்கில் அவரது கட்டளைகளும் விருப்பங்களும் இனிமேல் எக்கட்டத்திலும் நிறைவேறப்போவதில்லை" என்று அவர் கூறினார். "பிரபாகரனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கிழக்கில் செல்லுபடியாகாது. ஆகவே கிழக்கிற்கென்று தனியான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை நாம் தயாரிக்க வேண்டும்" என்றும் அவர் மேலும் கூறினார். உலகின் அதிக அளவிலான தற்கொலைத் தாக்குதலாளிகளைக் கொண்டிருக்கும் புலிகள் இயக்கத்தின் பெரும்பாலான தற்கொலைக்குண்டுதாரிகள் இன்னமும் பிரபாகரனின் அணியில் இருப்பதாகவும், புலநாய்வுத்துறையின் பெருமளவு போராளிகள் இன்னமும் பொட்டு அம்மானின் கட்டளையின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் கூறிய கருணா, கிழக்கின் புலிகளின் ராணுவப் பிரிவு தனது கட்டுப்பாடின்கீழேயே இருப்பதாகக் கூறினார். ஆகவே, தனது ராணுவக் கட்டமைப்பு புலிகளைக் காட்டிலும் பலம் வாய்ந்தது என்று புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற "ஜெனரல்" கருணா கூறினார். "பொட்டு அம்மானின் கீழ்த்தரமான செயற்பாடுகளினால்த்தான் நாம் பிரிந்துசெல்ல நேரிட்டது. கிழக்கு மாகாணப் போராளிகளின் பலம்பற்றி பிரபாகரனும் பொட்டு அம்மானும் நன்கு தெரிந்தே வைத்திருக்கிறார்கள், அதனாலேயே எம்மீது தாக்குதல்களை நடத்த அவர்கள் அஞ்சுகிறார்கள். எங்கள் மீது தாக்குதல் நடத்துவதென்பது அவர்களால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு விடயம். பல்லாயிரக்கணக்கான கிழக்குத் தமிழர்கள் புலிகள் இயக்கத்துக்காக தமது உயிரை அர்ப்பணித்திருக்கிறார்கள். ஆனால், புலிகளின் தலைமை அவர்களுக்கான நீதியினை ஒருபோதும் வழங்கியதேயில்லை. இன்றுமட்டும் கிழக்கு மாகாணத் தமிழர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கப்போவதாக புலிகளின் தலைமை பசப்புவது கேலிக்கூத்தான ஒரு விடயமாகும்" என்றும் கருணா அம்மான் கூறினார். "நான் இனிமேல் மொத்த இலங்கைத் திருநாட்டின் அமைதிக்காக எனது வாழ்க்கையினை அர்ப்பணிக்கப்போகிறேன். இதுவரை காலமும் வன்னிப் புலிகளுக்காக தமது வார்க்கையினை அர்ப்பணித்த கிழக்கு மக்களுக்காகவும், கிழக்கின் அபிவிருத்திக்காகவும் எனது வாழ்க்கையினை அர்ப்பணிக்கப்போகிறேன்" என்றும் அவர் கூறினார். "கிழக்கு மாகாணத் தமிழர்கள் புலிகளின் தலைமையினால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் பெரும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதன் பின்னணியிலேயே வடபகுதித் தமிழருக்கெதிரான கிழக்குத் தமிழரின் வீரியமான எழுச்சி பார்க்கப்படுதல் அவசியமாகிறது" என்றும் அவர் கூறினார். "நான் அரசாங்கத்திடம் பாதுகாப்புக் கோரியதாக வந்த வதந்திகள் உண்மைக்குப் புறம்பானவை, நான் அவற்றை முற்றாக மறுதலிக்கிறேன். இந்த அரசாங்கம் எம்முடன் தனியான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கட்டாயம் செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்யத் தவறும் பட்சத்தில் எமது பலத்தினை அவர்கள் மிக விரைவில் புரிந்துகொள்வார்கள். இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தைகளை நாம் கிழக்கின் தலைவர்களிடம் ஆரம்பித்திருக்கிறோம். கிழக்கிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு நோர்வே மத்தியஸ்த்தம் செய்ய விரும்பினால், நான் மறுக்கப்போவதில்லை. எனது அனைத்து நடவடிக்கைகளுக்கும் மொத்த கிழக்கு மாகாண மக்களின் ஒருமித்த ஆதரவு கிடைத்துவருகிறது" என்றும் அவர் மேலும் தெரித்தார். "கிழக்கு மாகாண முஸ்லீம் மக்களின் கவலைகள் தொடர்பாக நான் நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன். அவர்களிடமிருந்து புலிகளால் பறிக்கப்பட்ட காணிகளை நான் மீளவும் அவர்களுக்கு வழங்குவேன். கிழக்கில் அனைவரும் சுதந்திரமாகவும் சமாதானத்துடனும் வாழ நான் நடவடிக்கை எடுப்பேன்" என்று அவர் கூறினார். "இறுதியாக, நான் இருக்கும் இடம்பற்றி நீங்கள் உங்கள் பத்திரிக்கையில் எத்தகவலையும் வெளியிட வேண்டாம், அது எமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்" என்று தனது செவ்வியினை முடித்துக் கொண்டார் கருணா அம்மான். http://www.lankaweb.com/news/items04/090304-1.html
  17. குணப்படுத்த முடியாத, சீழ்பிடித்த, சிறுகச் சிறுக இறந்துவருகின்ற புலிகள் எனும் பயங்கரவாத அபுற்றுநோய்க்குத் தலைவலியாகவிருக்கும் கருணாவின் அமைப்பினரை இலங்கையரசு கட்டுப்படுத்தவேண்டும் என்று நோர்வேஜியர்களும், யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவும் தொடர்ச்சியாக கேட்டுவருவது இயற்கையானது. வன்னிப் புலிகளுக்கெதிரான கருணாவின் நடவடிக்கைகள் தொடருமிடத்து புலிகள் மிக விரைவில் அழிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதும், இலங்கை ராணுவத்தை தமது தாயகத்திலிருந்து துரத்திவிடுவோம் என்று புலிகள் கட்டிவந்த கற்பனைக் கோட்டைகள தகர்க்கப்படும்போது சாதாரண தமிழ்மக்களும் சிங்களவர்களை அனுசரித்து, அவர்கள் தரும் தீர்வினை ஏற்றுக்கொள்ள முன்வருவார்கள் என்பது நோர்வேஜியர்களுக்கும் கண்காணிப்புக் குழுவினருக்கும் நன்கு தெரிந்தே இருக்கிறது. ஆகவேதான், அப்படியானதொரு நிலைமை ஏற்படுமுன்னர் கருணாவை நாம் கட்டுப்படுத்தவேண்டும் என்று கோரிக்கைவிடுத்து வருகிறார்கள். புலிகளின் வெற்று எச்சரிக்கைகளை உதாசீனம் செய்து, "கருணாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் முழு அளவிலான போரைத் தொடங்குவோம்" என்ற புலிகளின் புஸ்வானங்களை நிராகரித்து, கருணாவுக்குத் தேவையான ஆயுதங்கள், பயிற்சிகள், வளங்கல்கள் மற்றும் தார்மீக ஆதரவினை இலங்கையரசு வழங்கி, தமக்காக பயங்கரவாதி பிரபாகரனை அழிக்க மகிழ்வுடன் முன்னிற்கும் அவரை முழு மனதோடு ஆதரிக்கவேண்டிய காலம் கனிந்திருக்கிறது. கருணா அமைப்பென்பது இலங்கையில் சட்டரீதியாக பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியென்பதும், இலங்கை நாட்டின் நலனில் அக்கறை கொண்ட ஒரு அமைப்பென்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாம் காலம் தாழ்த்தாது உடனடியாக கருணாவைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிடவேண்டும். இன்று இலங்கையரசு கருணாவுக்கு ஆதரவு வழங்குவதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தாலும்கூட, கருணாவின் வீரர்கள், புலிப்பயங்கரவாதிகளின் போர் இயந்திரத்தில் தொடர்ச்சியாக ஏற்படுத்திவரும் சேதங்களால், அப்பயங்கரவாத இயக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு அதன் இயங்கு சக்தியும் வெகுவாகச் சேதமடைந்திருக்கிறது. ஆகவே, சிங்களவர்களுக்கான யுத்தத்தைத் தன்னந்தனியனாக நின்று இன்று செய்துவரும் கருணாவையும் அவரது வீரர்கலையும் கொலைகார மூர்க்கனான பிரபாகரனின் கொலைப்படைகளிடமிருந்து பாதுகாத்து, அவர்களைப் பலப்படுத்த வேண்டியது எமது தலையாய கடமையாகும். கருணாவும் அவரது தோழர்களும் நிலையான சமாதானத்தை வேண்டி நிற்கும் அதேவேளை கொலைகார வன்னிப் புலிகள் தொடர்ச்சியான யுத்தத்தையும், அழிவினையும், கோரங்களையுமே தமிழ் மக்களுக்குத் தீர்வாக முன்வைத்துவருகிறார்கள். பிரபாகரனின் வெறித்தனத்தால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதோடு, ஏனைய இனத்தவர்களும் பாதிக்கப்படப்போகிறார்கள். இறுதியாக கெளரவ கருணா அம்மானின் மூலம் இந்தப் பயங்கரவாதப் பிரச்சினையினை கெளரவமான முறையில் தீர்க்கக் கூடிய சந்தர்ப்பம் ஒன்று சிங்களவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த இக்கட்டான, ஆனால் மிகத் தீர்க்கமான தருணத்தில் கருணா அம்மான் எமது உதவியினை வேண்டி நிற்கின்றார், அவரைப் பலப்படுத்தி அவரின் பின்னால் அணிதிரள்வது ஒவ்வொரு சிங்களவரினதும் கடமையாகும். முற்றும் ! http://www.lankaweb.com/news/items06/020506-1.html
  18. கருணாவின் அமைப்பிற்கும் கொலைகாரப் புலிகளுக்குமிடையே யாரை தெரிவுசெய்யவேண்டுமென்பதில் இலங்கையரசு நிதானமாகச் செயற்பட வேண்டும் லங்கா வெப் இணையத்துக்காக நிசங்க காலம் : கருணா இலங்கை ராணுவத்துடன் செயற்பட ஆரம்பித்த காலப்பகுதி கருணா தன் ஆயுதங்களைக் களைந்து, இலங்கையின் ஜனநாயக அரசியலினூடாக இயங்குவதற்கு தனது விருப்பத்தினைத் தெரிவித்திருப்பதுடன், தமிழர்களின் பிரச்சினைகள் என்று அவர் கருதுபவை ஜனநாயக ரீதியில் தீர்த்துவைக்கப்படலாம் என்றும் நம்புகிறார்.அது மடும்மல்லாமல், தான் பயங்கரவாதப் புலிகளிடமிருந்து விலகியபின்னர் தனது அமைப்பினர் இலங்கை ராணுவத்தின்மீது எதுவிதமான ராணுவத் தாக்குதல்களையோ, குறைந்தபட்சம் கல்லைக் கவனில் வைத்து எறிவதையோ நடத்தவில்லையென்றும் கூறியிருக்கிறார். அத்துடன், இலங்கைத் தமிழர்களுக்கு இன்றிருக்கும் ஆபத்து இலங்கை ராணுவத்தால் அன்றி, இவ்வுலகில் பேயின் மறுபிறப்பாகப் பிறந்துள்ள பிரபாகரன் எனும் படு பாதகப் பயங்கரவாதியிடமிருந்தே வருகிறது என்றும் அவர் வெளிப்படையாக கூறிவருகிறார். கருணாவின் இந்த கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக கொலைவெறிபிடித்த பிரபாகரனின் கொலைப்படையான "வன்னிப் புலிகள்" இதுவரை கட்டவிழ்த்துள்ள படுகொலை வெறியாட்டத்தில் குறைந்தது 250 எமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இன்னும் 150 பேர்வரையில் காயப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இந்த பயங்கரமான சூழ்நிலையில் யாரை ஆதரிப்பது என்பதில் இலங்கையரசு மிகவும் நிதானமாகச் சிந்தித்து செயற்படவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இலங்கையரசு இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் உண்மையான தீர்வொன்றைக் காண விரும்பினால், அது கருணாவின் அமைப்பையே ஆதரிக்கவேண்டும் என்பது அவசியமானது. நான் இங்கே "பிரச்சினைகளுக்கான தீர்வு" என்பது வன்னிப் புலிப்பயங்கரவாதிகள் கோரும் "தீர்வு" என்பது நிச்சயமாகக் கிடையாது. கொலைகாரப் புலிகள் கேட்பது எமது நாட்டைக் கூறுபோட்டு, பாஸிச கொடுங்கோலாட்சி நடத்தும் ஒரு தனிநாட்டையே. சாதாரணத் தமிழ் ஆணோ அல்லது பெண்ணோ தமக்கான தீர்வாக இதனை ஒருபோதும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கம்போடியாவின் முன்னாள் சர்வாதிகாரியான பொல்பொட்டின் கொடுங்கோலாட்சிக்கு நிகரான ஒரு ஆட்சியையே பிரபாகரன் தனது தனிநாடான ஈழத்தில் நிறுவுவதற்குப் பாடுபடுகிறான். ஆனாலும், இன்றுவரை வன்னிப் புலிகள் சமஷ்ட்டி முறையிலான தீர்வென்று பேசிவருவது வெலியுலகினை ஏமாற்றவேயன்றி, உண்மையாகவே அவர்களுக்கு சமஷ்ட்டித் தீர்வில் நம்பிக்கை கிடையாது என்பது கருணா மூலம் எமக்குத் தெரியவருகிறது. ஆனால், இதற்கு மாறாக கருணா பேசும் அரசியல் நியாயமானது. கடந்த 25 வருடங்களாக வெல்லமுடியாத ஒரு யுத்தத்தில் தமிழ் இளைஞர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டு வருவது நிறுத்தப்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார். பலவீனமான இலங்கையரசுகள் ஒரு கட்டத்தில் பிரபாகரனின் அழுத்தத்திற்குப் பயந்து அவர் கேட்கும் ஈழத்தைக் கொடுக்க முன்வந்தாலும்கூட, இந்தியா அதனை ஒருபோதும் அனுமதிக்காது என்பதைக் கருணா மிகத் தெளிவாகவே அறிந்துவைத்திருக்கிறார். அத்துடன் 1970 களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த மாயையான தமிழ் ஈழக் கனவு இன்று மாறிவரும் புதிய உலக ஒழுங்கில் நிச்சயமாக சாத்தியமற்றது என்பதை சிங்களவர்கள் நம்புவதுபோலவே கருணாவும் நம்புகிறார். கருணாவின் இந்தப் புதிய உலக ஒழுங்கு பற்றிய அரசியல் தெளிவினை நாம் நிச்சயம் போற்றவேண்டும் என்பதோடு கிணற்றுத் தவளையாக தனது குறுகிய வட்டத்தினுள் உழன்றுகொண்டிருக்கும் கொலைகாரப் பிரபாகரனின் மடைமையினை கருணாவின் விவேகத்துடன் இலங்கையரசு ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும். கருணாவின் ஜனநாயக ரீதியான, சமூக நலன் சார்ந்த சிந்தனைகளே அரசு அவரைத்தான் ஆதரிக்க வேண்டும் என்கிற அவசியத்தைத் தோற்றுவித்துத் தந்திருக்கிறது.
  19. மேதகு வெளிவந்தபின்னர் தமிழ்த் தேசிய ஆதரவாளர்களிடையே சிண்டுமுடியும் வேலைகளும், சில்லறைத்தனமான அரசியலு ம்முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.அத்துடன், தமிழ்த் தேசிய ஆதரவாளர்களிடையே பிளவுகளை அதிகரிக்கும் கைங்கரியங்களை திராவிட ஆதரவாளர்கள் இப்படத்தினைப் பாவித்து முன்னெடுத்து வருவதாகவும் தெரிகிறது. முதன்முதலாக, ஈழத்தமிழனின் அவலத்தையும், ஆயுதப் போராட்டத்திற்கான தேவையினையும் உண்மைக்கு அருகில் கொண்டுசென்று வெளிவந்திருக்கும் இந்த முயற்சியை நினைத்து ஆனந்தப்படுவதா அலது இதன்பின்னால் நடைபெற்று வரும் சில்லறைத்தனமான கட்சிபேத அரசியலை எண்ணி வருந்துவதா என்று தெரியவில்லை. இத்திரைப்படம் வெளியாகும் முன்னர் வெளிவந்ததாக நம்பப்படும் சீமானின் இப்படத்திற்கான எதிர்ப்பும், அவ்வெதிர்ப்பினை படம் வெளியாகிய பின்னர் சிலர் வெளிப்படுத்தியமையும், அதனால் சீமானின் ஆதரவாளர்கள் அவரின் பேச்சை நியாயப்படுத்திவருவதும், படக்குழுவை திராவிடக் கட்சிகளுடனும், சீமானினால் வெளியேற்றப்பட்டவர்களுடனுன் சேர்த்து விமர்சிப்பதும் நடக்கிறது. இவை எதுவுமே தேவையற்றவை. தமிழ்த் தேசியத்திற்கான சக்திகள் ஒன்றுபடாவிட்டாலும் பரவாயில்லை, இப்படி ஆளாளுக்கு அடித்துக்கொன்டு, இருப்பதையும் போட்டுக் குளப்பாமல் இருந்தாலே போதுமானது. தமிழ்த் தேசியம் என்பது ஒரு கட்சிக்குச் சொந்தமானது எனும் மாயையினை விட்டு தேசிய ஆதரவாளர்கள் வெளியேறாதவரை இவர்களின் கட்சிப் போராட்டங்கள் தேசியத்தைப் பலவீனபடுத்தவே உதவப்போகிறது, பலப்படுத்தவல்ல. உணர்வார்களா? பார்க்கலாம்.
  20. மேதகு திரைப்படத்திற்காக ஐ எம் டி பி இணையத்தளம் பார்வையாளர்களின் கணிப்பினை வைத்து 9.8/10, அதாவது 98 வீதம் தரமான படம் என்று மதிப்பிட்டிருக்கிறது. https://www.imdb.com/title/tt14923112/ https://twitter.com/search?q=%23methagu&lang=en
  21. ஓ, அதுவேறையா?? பரவாயில்லையே.
  22. உங்களுக்கும் கூடைப்பந்தில் ஆர்வம் இருக்கிறதோ??? உங்களை இயற்கை அழகைத் தரிசுக்கும் ஒரு ரசிகை என்றல்லவா மனதில் வரைந்து வைத்திருக்கிறேன். பல்கலை வித்தகரோ??? அசத்துகிறீர்கள்.
  23. படத்தின் தாக்கத்திலிருந்து விடுபட சில கணங்கள் ஆகிற்று. எனக்கு இதனை ஒரு படம் என்று சாதாரணமாகப் பார்த்துவிட்டுக் கடந்துசெல்ல முடியவில்லை. எங்கள் வாழ்க்கையில் நாம் பார்த்த மிக முக்கியமான ஒரே மனிதனின் ஆரம்பகாலப் பருவம் சொல்லப்படுகிறது. "ஏன் அப்பா நாங்கள் திரும்பி அடிக்கையில்லை?" என்கிற கேள்வியுடன் எமது மனதில் அமர்ந்துவிடும் மேதகு இந்தக் காவியம் முழுதும் எங்கள் தலைவனை நினைவுபடுத்துவதால் அவரே எங்கள் முன்னால் வந்துநின்றதான பிரமை. தலைவரின் கொள்கை மீதான உறுதி, சமரசமில்லாத இலட்சியம் நோக்கிய பார்வை, எவர் இல்லாவிட்டாலும் நான் போராடுவேன் என்கிற தன்னம்பிக்கை என்று படம் முழுதும் அவரது குணாதிசயங்களைப் பரப்பிவிட்டுக்கொண்டே போகும் கிட்டு. தலைவரின் ஆயுதம் மீதான பற்றும், அதனை அவர் முதல்முறை வருடிப்பார்க்கும்போது வரும் மகிழ்வும் வெறுமனே அவரை ஆயுதத்தில் மோகம் கொண்டவன் என்று காட்டாமல் அவ்வாயுதத்தை தன் மக்களின் அடிமை விலங்குடைக்க கிடைத்த திறவுகோலாகக் காட்டுவதும், அதனை அவர் இலாவகமாக கையாளும் முறையும் நாம் சிறுவயதுமுதல் தலைவரைப் பற்றிக் கேள்விப்பட்டவற்றை மீண்டும் நினைக்கத் தூண்டியது. தலைவரை நான் சிறுவயதில் பார்த்ததில்லை. ஆனால் பதின்மவயதுத் தலைவராக வந்த அந்த இளைஞனின் நடிப்பு எனக்கு அவரைத் தலைவர் என்றே எண்ணத் தோன்றுகிறது. தலைவரின் முகச்சாயல் (அதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்), உடல் மொழி, பேசும் வசீகரம், பேசும் சொற்களுக்கும் முக பாவனைக்கும் இடையிலான தொடர்பு, மென்மையான ஆனால் உறுதியான பேச்சு....இப்படிப் பலவிடங்களில் தலைவரே முன்னால் நிற்பதுபோன்ற உணர்வு. தலைவராகக் காட்டப்பட்ட பாத்திரம் கன கச்சிதமாகப் பொறுந்திப்போக சுற்றியிருக்கும் கதாப்பாத்திரங்கள் அதற்கு மெருகூட்ட எமது சரித்திரம் திரையில் காவியமாக்கப்படுவது கண்டு ஆனந்தமும் அதேவேளை ஒப்பற்ற எமது தலைவரை இன்று காணமுடியவில்லையே என்கிற ஆதங்கமும், அவர் வளர்த்த நம்பிக்கையும் எமது விடுதலைப் போராட்டமும் இன்று முற்றாக அழிக்கப்பட்டிருப்பது கண்டு வேதனையும் படத்துடன் சேர்ந்து பயணிக்க வழிந்தோடும் கண்ணீரை துடைக்க மனமின்றி பார்த்து முடித்தேன். தலைவருக்கு அடுத்ததாக வரும் கதாப் பாத்திரங்களில் அவரது தாய் தந்தையரின் பாத்திரங்களும் அழகுசொட்டும் எமது தமிழ் நடையும் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. படம் முழுக்க வரும் "தம்பி" எனும் அந்த மந்திர வார்த்தை எம்மையறியாமலேயே படத்தினுள் எம்மை ஆழ்த்திவைக்க நாம் அறிந்த வரலாற்று நாயகர்களூடு கூறப்பட படத்துடன் மனது ஒன்றித்துப் பயணிக்கிறது. தமிழுக்கு அமுதென்று பெயர் - இந்தப்பாடலை இந்தப் படத்தில் மட்டும் அல்ல எங்கு கேட்டாலும் எனக்குக் கண்கள் கலங்கும், மனம் வெம்பும். இங்கும் அப்படித்தான். அப்பாடல் இங்கு படமாக்கப்பட்ட விதம் மனதில் இனம்புரியாத பெருமையும், நம்பிக்கையும் ஏற்பட்டுவிடுகிறது. இப்படத்தில் தொழிநுட்ப ரீதியில் சில திருத்தங்கள் இருக்கலாம், ஆனால் அதுபற்றி பேசவேண்டிய தேவை எனக்கில்லை. என்னைப்பொறுத்தவரை எம் வாழ்வின் ஒப்பற்ற ஒரு மனிதனை இப்படம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவிட்டுச் சென்றிருக்கிறது. அம்மனிதனைப்போலவே இப்படமும் போற்றப்படவேண்டிய ஒரு சொத்து. முதன்முறையாக எமது தலைவரை தமிழக சினிமாத்தனம் இல்லாது, எமது கண்களினூடாக இயல்பாக தரிசிக்க வைத்த படம். இப்படத்தை உருவாக்கியவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இறுதியாக, கிட்டு எனும் அந்த மனிதன். அவரது பெயரே அவரின் பால் எனக்கு கவனத்தை இதுவரை இழுத்துவைத்திருக்க, மேதகுவின் மூலம் எனக்கு அவர் மீதான நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள். எமது தலைவரை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய காட்சிகளில் ஒன்று. அதே மென்மையான, மெதுவான ஆனால் இலட்சிய வெறிகொண்ட பேச்சு. தலைவரைப்போலவே நிறுத்தி நிறுத்திப் பேசும் பாங்கு. அச்சொட்டு !!! இந்த மொழிக்காக உயிரைக் கொடுக்கலாம், தவறேயில்லை !!!
  24. ராஜீவ் காந்தியைக் கொன்றதிலிருந்தே பிரபாகரனின் அழிவுகாலம் தொடங்கியது. அவர் ஒரு சுயநலம் மிக்க கோழை - பி பி ஸி 4 சேவையில் பேட்டியளித்த கருணா காலம் : வைகாசி 18, 2009 மூலம் : வோல்ட்டர் ஜெயவர்டென பயங்கரவாத புலிகள் இயக்கித்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக ஒருகாலத்தில் இருந்தவரும், தற்போது அரசின் பிரதியமைச்சராக இருப்பவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் பி பி ஸி யின் 4 ஆம் சேவைக்கு வழங்கிய செவ்வியில் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தலைவரான பிரபாகரனின் அழிவுகாலம் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை தற்கொலைக் குண்டுதாரியொருவரின் மூலம் கொன்றதையடுத்தே ஆரம்பமானது என்று கூறினார். காந்தியின் கொலைபற்றிக் கூறும்போது, "அது ஒரு மிகப்பெரிய தவறு. இதன்பின்னர் குறைந்தது 20 நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தன. அதற்கு முன்னர் இந்த நாடுகள் எல்லாம் திரைமறைவில் புலிகளுக்கு ஆதரவளித்து வந்தன". என்று கூறினார். ஆனால், எந்தெந்த நாடுகள் புலிகள் இயக்கத்திற்குத் திரைமறைவில் உதவின என்பதை கருணா குறிப்பிடவில்லை. தமிழ்நாட்டின் சிறிபெரும்புதூரில் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணமானவர்கள் என்று கருதப்படும் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், அவ்வியக்கத்தின் புலநாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மானும் சில தினங்களுக்கு முன்னர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். புலிகளின் முன்னாள் தத்துவ ஆசிரியர் அன்டன் பாலசிங்கம் கூட ராஜீவின் மரணத்தை பாரிய தவறு என்று ஒப்புக்கொண்டிருந்தபோதும் பின்னர் புலிகள் அந்தக் கூற்றிலிருந்து விலகிவிட்டனர். இன்றைய நிகழ்ச்சியில் பி பி ஸியின் தொகுப்பாளர் அன்ட்ரே ஹொக்ஸன் பின்வருமாறு கூறினார், " கருணாவைப் பொறுத்தவரை பிரபாகரனின் மிகப்பெரிய தவறு மே மாதம் 1991 ஆம் ஆண்டு ராஜீவின் கொலையுடன் ஏற்படுத்தப்பட்டது. அன்று கிழக்கு மாகாணத்திற்கான புலிகளின் தளபதியாகவிருந்த கருணா இந்த கொலைமுயற்சி தொடர்பாக தான் எதனையும் அறிந்திருக்கவில்லையென்றும், ஆனால் ராஜீவ் கொல்லப்பட்டவுடனேயே அக்கொலை பிரபாகரனினாலும், பொட்டம்மானினாலும் தான் நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்பதை அறிந்துகொண்டதாகவும் கூறினார். புலிகள் வழமையாகப் பாவிக்கும் தாக்குதல் உத்தியான தற்கொலைத் தாக்குதல் மூலமே ராஜீவ் கொல்லப்பட்டதனால், இதனை அவர்கள் இருவருமே செய்திருக்கவேண்டும் என்று தான் சந்தேகித்ததாகக் கூறினார்". "நான் பிரபாகரனிடம் நீங்கள் மிகப்பெரிய தவறொன்றைச் செய்துவிட்டீர்கள் என்று கூறினேன். அவரோ அதனை மறுத்தார், ஆனால் அதனைச் செய்தது அவர்தான் என்பது எனக்குத் தெரியும்". "அது ஒரு மிகப்பெரிய தவறு. அக்கொலையின் பின்னர் 20 நாடுகள் எம்மை பயங்கரவாத அமைப்பென்று தடை செய்தன. இதற்கு முன்னர் பல அரசாங்கங்கள் எமக்கு ஆதரவாகத் திரைமறைவில் செயற்பட்டன". இலங்கையின் தமிழர் பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்காகப் பழிவாங்கவே ராஜீவைப் பிரபாகரன் கொன்றார் என்று நம்பப்படுகிறது. ஆனால் நீண்டகால நோக்கில் இந்தப்படுகொலை புலிகளின் இலட்சியத்தை மிகக் கடுமையாகப் பாதித்திருந்தது. கருணா தொடர்ந்தும் பேசுகையில் "பிரபாகரன் ஒருபோதுமே எதிரியுடன் நேருக்கு நேர் நின்று போர் செய்யவில்லை. அதே போன்றதொரு நிகழ்வே பிரபாகரனின் இறுதிக் கணத்திலும் நடந்ததது. எதிரியுடன் இறுதிவரை சண்டை பிடிக்கவோ அல்லது தனது சகாக்களுக்குக் கூறுவதுபோல சயனைட் உட்கொண்டு மரணிக்கவோ எத்தனிக்காது குண்டுதுளைக்கமுடியாத வாகனமொன்றில் ஏறித் தன்னைக் காப்பற்றிக்கொள்ளவே அவர் இறுதிவரை முயன்றார். ஆனால் அவர் தப்பிச் சென்ற வாகனம் ராணுவத்தின் ரொக்கெட் தாக்குதலில் சிதைந்துவிட்டது" என்று அவர் கூறினார். அன்ட்ரே ஹொக்ஸனிடம் பேசிய கருணா தொடர்ந்தும் கூறும்போது, "பிரபாகரனுடனான எனது 22 வருட அனுபவத்தில் அவர் தொடர்பாக ஆரம்பத்தில் நான் வைத்திருந்த மரியாதையினை இழந்துவிட்டிருந்தேன். என்னைப்பொறுத்தவரை அவர் அவமதிப்பிற்குரியவராகவே தெரிந்தார். அவர் ஒருபோதுமே போர்க்களத்திற்கு வந்ததில்லை. எமது அணிகளுக்குப் பின்னல் மிகப் பாதுகாப்பான இடம் ஒன்றில் அவர் நின்றுவிடுவார். எல்லோரும் பிரபாகரனை இரும்பு மனிதர் என்றும் பிறப்பால் வந்த தலைவன் என்றும், பெரிய மனிதன் என்றும் கூறுகிறார்கள். ஆனால் என்னைப்பொறுத்தவரை அவர் ஒரு கோழை" என்று அவர் மேலும் கூறினார். கருணா இப்பேட்டியில் இன்னொரு விடயத்தையும் கூறினார், " தனது குற்றங்களை பிரபாகரன் நன்கு தெரிந்தே வைத்திருந்ததனால், ராணுவத்திடம் பிடிபட்டால் தனக்கு என்ன நிகழும் என்பதை நன்கு உணர்ந்தேயிருந்தார். ஆனால், அவர் தன்னைத்தானே கொன்றாலோ அல்லது ராணுவத்தினரால் கொல்லப்பட்டாலோ, அவை இரண்டுமே இலங்கை மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயங்களே " என்றும் அவர் கூறினார். http://www.lankaweb.com/news/items/2009/05/18/in-a-bbc-radio-4-programme-karuna-amman-says-prabhakaran’s-downfall-started-after-he-got-rajiv-gandhi-assassinated/
  25. பிரபாகரன் உயிருடன் பிடிபட்டதாக நான் கூறவில்லை - தனது முன்னைய கூற்றினை மறுதலிக்கும் கருணா காலம் : ஆடி 24, 2015 மூலம் : அத தெரன முன்னாள் பிரதியமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் பிடிபட்டார் என்றும், அவரை ராணுவத்தினர் கடுமையான சித்திரவதைகளின்பின்னர் படுகொலை செய்ததாகவும் தான் ஒருபோதும் கூறவில்லை என்று மறுத்திருக்கிறார். சில இணையத்தளங்களும், முகப்புத்தகத்தில் சிலரும் கருணா அம்மானை மேற்கோள் காட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டார் என்றும் பின்னர் அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டு கடுமையான சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்டதாகவும் செய்திவெளியிட்டிருந்தன. ஆனால், தற்போது இதனை மறுத்திருக்கும் கருணா தனது நற்பெயரைக் களங்கப்படுத்தவும், அரசியல் ஆதாயத்திற்குமாகவே சிலர் இதனைச் செய்வதாகக் கூறியிருக்கிறார். "இன்றைய நாட்களில் என்னைப்பற்றி பல வதந்திகள் முகப்புத்தகத்திலும், இனம் தெரியாத இணையத்தளங்களிலும் மிகவும் தவறான செய்திகள் வெளிவருகின்றன. பிரபாகரனை ராணுவத்தினர் உயிருடன் பிடித்ததாகவும், பின்னர் கெளரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் அவர் கையளிக்கப்பட்டதாகவும், அவரின்மேல் கடுமையான சித்திரவதைகள் புரியப்பட்டு இறுதியில் கொல்லப்பட்டதாகவும் நான் கூறியதாக இச்செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், இவை எல்லாவற்றையும் நான் அடியோடு மறுக்கிறேன்" என்று அவர் கூறினார். "நான் எந்தவொரு இணையத் தளத்திற்கோ, ஊடகத்திற்கோ இவ்வாறு கூறவில்லை. எனது நற்பெயரைக் களங்கப்படுத்தி தமது அரசியல் லாபத்திற்காகச் சிலர் இதனைச் செய்கிறார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.