Everything posted by ரஞ்சித்
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
புலிகளை அழிக்க கருணாவை முன்னிறுத்தும் கொழும்பு அரசாங்கம் : அமெரிக்க ஆய்வுக்குழு தகவல் காலம் : ஆடி 14, 2004 மூலம் : தமிழ்நெட் மற்றும் தமிழ்னேஷன் புலிகளின் முன்னாள் கிழக்குப் பிராந்தியத் தளபதியாகவிருந்த கருணாவின் பிரிந்து செல்லுதலை அரசாங்கத்தின் அதியுயர் மட்டத்திலிருப்பவர்கள் ஆதரித்துவருவதாகவும், இதற்கு அமெரிக்க அரசின் தந்திரோபாய ஆசியும் இருப்பதாகவும் அமெரிக்காவின் பூலோக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். "புலிகளை நிலைகுலைய வைத்து, கட்டாயப் போர் ஒன்றிற்குள் அவர்களை இழுத்து, இறுதியில் பலவீனப்பட்டுப்போன புலிகளின் ராணுவப் பலத்தை பாரிய ராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் முற்றாக அழிப்பதே இலங்கை அரசின் திட்டமாகும்" என்று Strategic Forecasting (Stratfor) எனும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். கருணா தொடர்ச்சியாக புலிககளின் தலைமையை கடுமையாக விமர்சித்தும், அதற்கெதிராகச் செயற்பட்டு வருவாராகவிருந்தால் புலிகளுக்கும் அவரது குழுவிற்குமிடையிலான மோதல்கள் மீள தொடங்கும் அபாயம் இருக்கின்றது. இது கொழும்பிலிருக்கும் அரசால் மிக விருப்பத்தோடு எதிர்ப்பார்க்கப்படுவது மட்டுமல்லாமல், அவ்வாறானதொரு நிலையினை ஏற்படுத்த அது தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதும் திண்ணம்" என்றும் இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். "உள்வீட்டு மோதல்களால் புலிகள் இயக்கம் கடுமையாகப் பலவீனமடைவதை எதிர்பார்த்து நிற்கும் இலங்கையரசு, அதன்பின்னர் புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் ஏதுநிலைகளையும் அவதானிக்க விரும்புகிறது" என்றும் இவ்வமைப்பினர் கருதுகின்றனர். இதனாலேயே கருணாவுக்கான தந்திரோபாய உதவிகளை இலங்கை ராணுவம் அவரது பிரிவின்போது வழங்கியது என்று கூறும் இந்த ஆய்வாளர்கள், அவரது பிரிவு உயிர்ப்புடன் இருப்பதனை உறுதிப்படுத்த தொடர்ச்சியான உதவிகளை இலங்கை அரசு அவருக்கு வழங்கிவருவதாகவும் இவர்கள் கூறுகின்றனர். உள்வீட்டு பிளவுகளால் புலிகள் இயக்கத்திற்குள் மீண்டும் உருவாகாகக்கூடிய கரந்தடிப்படைப் போர் ஒன்றிற்குள் இயக்கம் இழுக்கப்பட்டு, பலவீனமடையும் என்று எதிர்பார்க்கும் அரசு இறுதியில் அவர்களை முற்றாக அழித்துவிடலாம் என்று கருதுவதாக இந்த ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். அரசிடமிருந்து தனக்கு உதவிகள் கிடைப்பதை கருணா தொடர்ச்சியாக மறுத்துவருகின்ற போதிலும்கூட, இலங்கை அரசாங்கத்தின் பல பிரிவுகள் கருணாவுக்கு உதவிவருவதனை வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டிருக்கின்றன. தனது 6 வார கிளர்ச்சி புலிகளால் மிக இலகுவாக முறியடிக்கப்பட்டதையடுத்து சுமார் 3 மாதங்கள் தலைமறைவாகியிருந்த கருணா மீண்டும் கொழும்பில் தோன்றி இலங்கை அரச வானொலிக்கும், பி பி ஸி தமிழ்ச் சேவைக்கும் சில செவ்விகளை வழங்கியிருக்கிறார். "புலிகளால் தான் மிகவும் மோசமான முறையில் தோற்கடிக்கப்பட்டதையடுத்து மீண்டும் வெளியே வந்திருக்கும் கருணா, புலிகளை அழிக்கும் தனது நோக்கத்திற்கு இன்னும் வலுச் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும்" என்று இந்த ஆய்வாளர்கள் மேலும் கூறுகின்றனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கருணாவுக்கான ஆதரவு மட்டக்களப்பில் இன்னும் இருப்பதாகவே தெரிகிறது என்றும் கூறுகின்றனர். பி பி ஸி தமிழ்ச்சேவையுடனான செவ்வியின்போது, தான் அரசியலில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாகக் கருணா தெரிவித்திருந்தார். இதுபற்றி இந்த ஆய்வாளர்கள் கூறுகையில், "அரசியலில் ஈடுபடும் தனது விருப்பத்தினைக் கருணா வெளிப்படையாகத் தெரிவித்திருப்பதன் மூலம், புலிகளினால் இலக்குவைக்கப்படக்கூடிய ஒரு நபராக தன்னை அவர் அடையாளப்படுத்தியிருக்கிறார்" என்று தெரிவிக்கின்றனர். "இவ்வாறு புலிகளின் இலக்காக மாறி, புலிகளுக்கும் தனக்குமான தொடர்ச்சியான பகையினை வளர்த்தெடுப்பதன் மூலம் புலிகளை பலவீனப்படுத்தலாம் என்று அவரும், இலங்கை அரசும் நம்புவதாகத் தெரிகிறது" என்றும் இவ்வறிக்கை கூறுகிறது. "ஆனால், புலிகள் இலங்கை அரசுக்கெதிராக பல்லாண்டுகளாகப் போரிட்டு வருகின்றனர். ஆகவே, இருபக்கத்திலும் பாரிய இழப்புக்கள் இல்லாமல் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்று வருவதற்கான சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது" என்று அமெரிக்காவினைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு கூறுகிறது. இந்த ஆய்வாளர்களின் கணிப்பின்படி, போர் ஒன்று மீளத் தொடங்குமாக இருந்தால், புலிகள் மிகவும் பலவீனப்படுத்தப்படுவார்கள் என்றும், அவர்கள் இதுவரை எதிர்பார்த்துப் போராடிவரும் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைக்கும் பலத்தினை இதனால் இழப்பார்கள் என்றும் எதிர்வுகூறுகிறது. "அதேவேளை, காயப்பட்ட புலியை பொறிக்குள் சிக்கவைப்பதென்பதும் ஒரு அபாயகரமான விளையாட்டே" என்றும் இவ்வமைப்பு கூறுகிறது. "பேச்சுவார்த்தைகள் ஒரு தேக்க நிலையினை அடைந்திருக்கின்றன. புலிகள் தமது கோரிக்கைகளை விட்டுக்கொடுத்தாலோ அல்லது அரசு பலவீனப்பட்டாலோ அன்றி, இப்பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும் என்று கூறமுடியாது" என்றும் இவ்வமைப்பினர் கூறுகின்றனர்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
தமிழீழத்திற்கான போராட்டமும் இந்தியாவும் இந்திய றோவின் உப தலைவரின் இலங்கை வருகையினையடுத்து திகைப்படைந்துள்ள அரசியல் மற்றும் ராணுவத் தலமைப்பீடங்கள் - இனவாத பத்திரிக்கையில் வெளியான கட்டுரை காலம் : 21, ஐப்பசி 2008 இனவாதிகளின் கட்டுரையினைப் படிக்குமுன், ஒரு சிறிய முன்னோட்டத்துடன் இதனை ஆரம்பிக்கலாம். "ஒரு விடயம் பற்றி என்னதான் சொல்லப்பட்டாலும், அதை எவர்தான் சொல்லியிருந்தாலும், அதனை சீர்தூக்கிப் பார்த்து உண்மைதனை அறிதலே சரியான அறிவுடமையாகும்" என்கிறது திருக்குறள். ஒரு முழுப் பொய்யைவிட, அரை உண்மைகளை உறுதிப்படுத்துவது கடிணமானது. இலங்கைக்கு வருகை தந்திருக்கும் றோவின் உபதலைவர் தொடர்பாக இனவாதிகளின் ஊதுகுழல் பயப்படுவது அவருக்கும் புலிகளுக்கும் முன்னர் இருந்த தொடர்புகளுக்காக அல்லாமல், இன்று சீனா மற்றும் பாக்கிஸ்த்தான் அச்சு நோக்கி நகர்ந்துவரும் மகிந்த ராஜபக்ஷவுக்கு அவர் கொடுக்கவிருப்பதாகக் கருதப்படும் அழுத்தம் பற்றியே என்றால் அது மிகையில்லை. ஆகவேதான், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையினை விமர்சிப்பதனை விடுத்து, அதனைக் காவிவந்து தமக்கு நினைவூட்டக்கூடும் என்று சிங்களம் கருதும் சந்திரசேகரன் எனும் அந்த றோ அதிகாரிமீது ஐலண்ட் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. ஆனால், இதில் உள்ள உண்மையென்னவென்றால் சந்திரசேகரனும் இன்னும் ஒரு றோ அதிகாரியும் பூட்டான் , திம்புவில் 1985 இல் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட்டு வந்தவர்கள் என்பதும், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையினை பிசகின்றி முன்னெடுத்துச் செல்வதில் தீவிர உறுதிப்பாடு கொண்டவர்கள் என்பதும் சிங்கள இனவாதிகள் அறியாததல்ல. சரி, இதன் பின்னணியில் தி ஐலண்ட் எழுதியிருக்கும் கட்டுரையினைப் படிக்கலாம். "புலிகளின் அனுதாபியென்று கருதப்பட்டும் முன்னாள் றோ உயர் அதிகாரி, சந்திரன் எனப்படும் சந்திரசேகரனின் கொழும்பு விஜயம் கொழும்பில் அரசியல் வட்டாரங்களிலும், ராணுவ வட்டாரங்களிலும் புருவங்களை உயர்த்தியிருக்கிறது. பாராளுமன்ற மேலதிகச் செயலாளரான சந்திரன் 1980 களில் இலங்கைத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கான பயிற்சிமுகாம்களை நிறுவுவதில் முன்னின்று செயற்பட்டவர். பின்னர், புலிகளுடன் நெருங்கிச் செயற்பட்ட அவர் யாழ்தேவி புகையிரதம் மீதான தாக்குதல், 1985 ஆம் ஆண்டு அநுராதபுரம் மீதான தாக்குதல்களுக்கு புலிகளுக்கு உதவியவர். இவ்வாறான தாக்குதல்களின்பொழுது புலிகள் இவருடன் தொடர்ச்சியான தொடர்பிலிருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது. அதேவேளை ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தின் பத்மநாபாவுடனும் நெருங்கிச் செயற்பட்ட சந்திரன், பத்மநாபாவின் சென்னை விஜயம் குறித்து புலிகளுக்குத் தகவல் வழங்கி 1990 இல் அவர் கொல்லப்பட உதவிபுரிந்தவர் என்றும் கூறப்படுகிறது. பத்மநாபாவின் நெருங்கிய தோழர்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியாமல் அவரது சென்னை விஜயம் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. பத்மநாபாவின் தோழர்களின் கூற்றுப்படி சந்திரனைத் தவிர பத்மநாபாவின் வருகையினை வேறு எவரும் அறிந்திருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சந்திரனுக்கும் புலிகளுக்கும் இடையில் இருந்ததாகக் கருதப்படும் தொடர்பினையடுத்து, 1991 ஆம் ஆண்டின் ராஜீவ் கொலைக்கும் அவருக்கும் தொடர்பிருக்கலாம் என்று றோவே அஞ்சும் அளவிற்கு அவரது செயற்பாடுகள் இருந்திருக்கின்றன. இதனால், சந்திரன் றோவிலிருந்து விலகி மேற்படிப்பிற்காக அமெரிக்கா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டார். ஐலண்டிற்குக் கிடைத்த தகவல்களின்படி, சந்திரன் புலிகளுக்கு பயிற்சிகள், திட்டமிடல், பிரச்சார உத்திகள் தொடர்பாக பல உதவிகளைப் புரிந்திருக்கிறார் என்று தெரியவருகிறது. சென்னையில் அரசு சாரா நிறுவனம் ஒன்றை நடத்திவரும் சந்திரன் அதன்மூலம் புலிகளுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை தமிழ்நாட்டில் நடத்திவருகிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. சந்திரன் இலங்கைக்கு முன்னரும் பலதடைவைகள் விஜயம் செய்திருந்தபோதும், தற்போதைய விஜயமானது சுற்றிவளைக்கப்பட்டு அழியவிருக்கும் புலிகளை மீட்பதற்காகவே என்று தெரியவருகிறது. இதுவரை அவர் பல தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்திருக்கிறார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா மற்றும் ஈ பி டி பி யின் தலைவர் டக்கிளஸ் ஆகியோரைச் சந்தித்திருக்கும் சந்திரன் இவ்விடயம் தொடர்பாகப் பேசியதாகத் தெரிகிறது. குறிப்பாக கருணாவுடனான அவரது கலந்துரையாடல்களின்போது, புலிகளின் செயற்பாடுகளுக்கு கருணா குழு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாதென்று கேட்டுக்கொண்டதாக ஐலண்ட் பத்திரிக்கைக்கு வரும் தகவல்கள் கூறுகின்றன. கருணா இந்தியாவில் பயிற்சியெடுத்த காலத்தில் சந்திரனே அவருக்குப் பொறுப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சந்திரனின் கோரிக்கையினை முற்றாக மறுத்துவிட்ட கருணா, புலிகளுடன் சமரசம் என்கிற பேச்சிற்கே இடமில்லையென்றும், புலிகள் முற்றாக அழிக்கப்படவேண்டும் என்றும், அதன் பின்னரே தீர்வு தொடர்பான பேச்சுக்கள பற்றி சிந்திக்க முடியும் என்று கூறியதாகவும் தெரியவந்திருக்கிறது. 1989 இல் வடக்குக் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் ராணுவமான தமிழ்த் தேசிய ராணுவத்திற்கான ஆயுதங்களை வழங்குவதில் சந்திரனே முன்னின்று செயற்பட்டிருந்தார். புலிகளுக்குக் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்தில் இந்திய ராணுவம் வெளியேறிக்கொண்டிருந்த நேரத்தில்க் கூட தமிழ்த் தேசிய ராணுவத்திற்கென்று கார்ல் குஸ்டவ் பின்னுதைப்பற்ற உந்துகணை செலுத்திகளை வரவழைத்துக் கொடுத்திருந்தார். எதிர்பார்க்கப்பட்டதுபோலவே தமிழ்த்தேசிய ராணுவத்தை எளிதில் வீழ்த்திய புலிகள் தமக்கான புத்தம் புதிய பின்னுதைப்பற்ற உந்துகணை செலுத்திகளையும் சந்திரன் விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொண்டனர். பின்னர் அதே உந்துகணைகள் இலங்கை ராணுவத்தின்மேல் புலிகளால் பாவிக்கப்பட்டன. புலிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் ஆய்வாளர்கள், புலிகள் தென்னிலங்கையில் நாசகாரத் தாக்குதல்களை நடத்தலாம் என்கிற சூழல் நிலவும் இந்தத் தருணத்தில், புலிகளின் அனுதாபியான றோ அதிகாரியொருவரை இலங்கைக்கு வர அனுமதிப்பதும், சுதந்திரமாக உலாவுவதை அனுமதிப்பதும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
சரணடைந்த ஞானதீபன் மற்றும் புகழ்தேவனின் கருத்துப்படி, கருணா குழுவினரின் முகாம்கள் தீவுச்சேனையிலும் திருகோணமடுவிலும் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. புகழ்தேவன் மேலும் கூறுகையில் தானும் இன்னும் 22 உறுப்பினர்களும், தீவுச்சேனையிலிருந்து ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான அம்பாறை, மாந்தோட்டம் பகுதிக்கு ராணுவப் பாதுகாப்பு நிலையம் ஒன்றிற்கு மாற்றப்பட்டதாகவும், அங்கிருந்தே முஸ்லீம் மக்களுக்கெதிரான நடவடிக்கைகளை தமிழ்மக்கள் எனும் போர்வையில் நடத்தும்படி பணிக்கப்பட்டதாகவும் கூறினார். ஆரம்பத்தில் தமது இருப்பினை எதிர்த்த அப்பகுதிச் சிங்களக் குடியேற்றவாசிகள், ஒரு பெளத்த பிக்குவும் ராணுவ அதிகாரியொருவரும் தலையிட்டதையடுத்து, இன்னொரு பாதுகாப்பான வீடொன்றிற்குள் தாம் முகாம் அமைத்துக்கொள்ள இணங்கியதாக புகழ்தேவன் மேலும் கூறினார். மேலும் அமைச்சர் அதாவுள்ளாவின் நெருங்கிய தோழரான பெளஸர் என்பவர் இனியபாரதியுடன் தொடர்ச்சியாக செயற்பட்டுவந்ததாகவும், அவர்மூலமாகவே அக்கரைப்பற்று பச்சிலைப்பள்ளிப் பகுதியில் தமக்கான ரகசிய முகாமொன்று அமைக்கப்பட்டதாகவும், தாம் தொடர்ச்சியாக அமைச்சர் அதாவுள்ளவுடனும் இனியபாரதியுடனும் தொடர்பிலிருக்க பெளஸரே தொலைபேசி பரிவர்த்தனையினை ஒழுங்குசெய்து கொடுத்திருந்ததாகவும் அவர் கூறுகிறார். "முஸ்லீம்களுக்கும் புலிகளுக்கும் இடையே பாரிய பிளவினையும், அதன்மூலம் எதிர்ப்பினையும் உருவாக்குவதிலேயே கருணா குழுவின் இருப்புத் தங்கியிருக்கின்றது" என்று இனியபாரதி தொடர்ச்சியாகத் தம்மிடம் கூறிவந்ததாகவும், அதன் அடிப்படியிலேயே தாம் இயக்கப்பட்டதாகவும் ஞானதீபன் கூறினார். டக்கிளஸ் தேவானந்தாவுடன் மிக நெருங்கிச் செயற்பட்டுவந்த இனியபாரதி, அவரிடமிருந்து மடிக் கணிணி ஒன்றையும் பரிசாகப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார். சரணடைந்த கருணா குழு உறுப்பினர்கள் மேலும் கூறுகையில் மட்டக்களப்புப் பத்திரிக்கையாளர் நடேசனை இனியபாரதியே சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்தனர். அண்மையில் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் தீவுச்சேனையில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், கருணா குழுவின் மங்களன் மாஸ்ட்டருக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும், மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தீவுச்சேனைப் பகுதியிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலும் கருணா குழு செயற்படுவதென்று இதன்போது முடிவெடுக்கப்பட்டதாகவும் மேலும் கூறினர். கருணா குழுவில் இணைந்து செயற்பட்டு வந்த இவ்விருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும், சிறிது காலத்தின்பின்னர் தமது செய்கைகள் குறித்து மனம் வருந்தி, கருணா குழுவினரை விட்டு வெளியேறுவதற்குச் சந்தர்ப்பம் பார்த்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. "நாம் தப்பியோடுவதென்று முடிவெடுத்திருந்தோம், அதற்கான தக்க தருணத்திற்காகப் பார்த்திருந்த வேளை, கடந்த திங்கட்கிழமை எம்மையும் இன்னும் சிலரையும் இனியபாரதி யுத்த சூனியப் பிரதேசம் ஒன்றிற்கு நடவடிக்கை ஒன்றிற்காக அனுப்பிவைத்தவேளை, எம்முடன் வந்திருந்தவர்களைக் கொன்றுவிட்டு நாம் தப்பி வந்தோம்" என்று கூறினர். அவர்கள் தொடர்ந்தும் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், கடந்த ஐப்பசி மாதம் 11 ஆம் திகதி வவுணதீவுப்பகுதியில் புலிகள் மீது தாக்குதல நடத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு பற்பொடி ராணுவ முகாமிற்கு பவள் கவச வாகனங்களில் கொண்டுவரப்பட்டதாகவும், பின்னர் புலிகளின் எல்லைப் பகுதிகளுக்கு அண்மையாக இறக்கிவிடப்பட்டதாகவும் கூறினர். தமது இயற்பெயர்கள் துரைசிங்கம் சந்திரகுமார் (புகழ்தேவன்) மற்றும் சாமித்தம்பி அருண்குமார் (ஞானதீபன்) என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர். புலிகளிடம் சரணடைந்தமைக்கான தண்டனையாக சந்திரகுமாரின் இரு சகோதரிகளை கருணா குழு கடந்த புதன்கிழமையன்று சுட்டுக் கொன்றது குறிப்பிடத் தக்கது. கொல்லப்பட்ட இந்த இரு சகோதரிகளுக்கும் "தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள்" எனும் கெளரவம் புலிகளால் வழங்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
கருணா துணைராணுவக் குழுவின் நடவடிக்கைகளில் சேர்ந்து ஈடுபடும் அரச அமைச்சர்கள் மூலம் : தமிழ்நெட் காலம் : மார்கழி, 12, 2005 அண்மையில் அம்பாறைப் பகுதியில் புலிகளிடம் சரணடைந்த இரு கருணா துணைராணுவக் குழு உறுப்பினர்களின் கூற்றுப்படி கருணா இந்தியாவிலிருந்தே இயங்கிவருவதாகவும், கிழக்கில் அக்குழுவின் நடவடிக்கைகளை பிள்ளையானே நெறிப்படுத்திவருவதாகவும் கூறியிருக்கின்றனர். கடந்த திங்கட்கிழமை கரடியனாற்றீல் அமைந்திருக்கும் புலிகளின் தளமான தேனகத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த இக்கருணா குழு உறுப்பினர்கள் மேலும் கூறுகையில் கிழக்கில் செயற்பட்டுவரும் கருணா குழுவினருக்கு அரச அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, டக்கிளஸ் தேவானந்தா மற்றும் அதாவுள்ளா ஆகியோர் தொடர்ந்து உதவிவருவதாகக் கூறியிருக்கின்றனர். தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையே வன்முறைகளைத் தூண்டி, பாரிய பிளவினை உருவாக்கும் நோக்குடன் தமது குழு அரசால் ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் இவர்கள் மேலும் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறுகையில், கிழக்கில் பிள்ளையானே கருணா குழுவை வழிநடத்துவதாகவும், அம்பாறை மாவட்டத்தின் தளபதியாக இனியபாரதி செயற்பட்டுவருவதாகவும் தெரிவித்தனர். பிள்ளையான், மங்களன் மாஸ்ட்டர், இனியபாரதி ஆகியோர் தம்முடன் பேசும்போது, கருணா இந்தியாவிலிருந்தே தமக்கான கட்டளைகளை வழங்கிவருவதாக அடிக்கடி கூறியதாகத் தெரியவருகிறது. "பிள்ளையானின் கீழ் சுமார் 40 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பிள்ளையானோடும், ஏனைய தலைவர்களோடும் கருணா எப்போதும் தொடர்பில் இருப்பார். நான் கருணா குழுவிலிருந்து தப்பியோடுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கருணா எனூடன் தொலைபேசியில் பேசினார்" என்று இனியபாரதிக்கு அடுத்த நிலையிலிருந்த உறுப்பினரான ஞானதீபன் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார். அவர்கள் தொடர்ந்தும் கூறுகையில் இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையின் அதிகாரிகளான கப்டன் சுரேஷ்குமார மற்றும் கப்டன் அபேரத்ன ஆகியோர் பிள்ளையானோடும் இனியபாரதியோடும் நேரடியாகத் தொடர்பில் இருந்ததாகவும், இந்த அதிகாரிகள் மூலமாகவே தமது குழுவினருக்கான போக்குவரத்து வசதிகள், ஆயுதங்கள், மற்றும் தேவையான வளங்கள் ஒழுங்குசெய்யப்பட்டு வந்ததாகவும் கூறுகின்றனர். தமக்குத் தேவையான நிதியினை உருத்திரா எனும் முகவர் மூலம் தமக்கு மூன்றாவது தரப்பொன்று தொடர்ச்சியாக வழங்கிவந்ததாகக் கூறிய ஞானதீபன் தனக்கும் இன்னும் சில மூத்த உறுப்பினர்களுக்கு மாதாந்தச் சம்பளமாக 30,000 ரூபாய்களும், கீழ்நிலை உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய்களும் இந்த மூன்றாவது தரப்பினரால் வழங்கப்பட்டு வந்ததாகக் கூறினார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
சுசில் பிரேமஜயந்த என்பவர் மகிந்தவின் அரசில் வெறும் கல்வியமைச்சர் மட்டுமே. தமிழினத்திற்கெதிராக ஆனந்தசங்கரியின் செயற்பாடுகளுக்குப் பிரதியுபகாரமாகவே மகிந்தவின் பணிப்புரையின் பேரில் சுசில் பிரேமஜயந்த ஆனந்தசங்கரியை இப்பரிசிற்காக பரிந்துரை செய்தார் என்பது ரகசியமல்ல. தனது சந்தர்ப்பவாத, பச்சோந்தி அரசியலுக்கு வழங்கப்பட்ட இந்த பரிசினைப் பெற்றுக்கொண்ட ஆனந்தசங்கரி அதற்காக அரசிற்கும், ஜனாதிபதிக்கும் நன்றிசெலுத்திப் பேசியது ஒரு இனத்தினைக் காட்டிக்கொடுத்து, அவ்வினத்தின் எதிரிகளுடன் ஒத்துழைத்துச் செயற்படும் ஒருவனின் வஞ்சகத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது குறிப்பிடத் தக்கது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
நயவஞ்சகத்திற்கான அரசியல்ப் பரிசுக்காக ஆனந்தசங்கரியை பிரேரித்த சிங்கள இனவாதம் தமிழினத்திற்கெதிராக எதிரியுடன் ஒத்துழைப்பவர்களையும், காட்டிக்கொடுப்பவர்களையும் தமிழினத்தின் மீட்பர்களாக சிங்களப் பேரினவாதத்தின் ஊதுகுழல்கள் எப்படி முன்னிலைப்படுத்திவருகின்றன என்பது தொடர்பாக ஒருவர் சிறந்த கற்கைநெறியை ஆரம்பித்தல் அவசியம் என்று கருதுகிறேன். கடந்த மாதம் பரீஸ் நகரில் யுனெஸ்கோ அமைப்பின் 2006 ஆம் ஆண்டிற்கான மடன்ஜீட் சின் பரிசு மூத்த அரசியல்வாதி ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனது வாழ்நாளில் ஈழத்தமிழ் இனத்திற்காக எந்தவொரு நலனையும் செய்தறியாத, சமூக அக்கறை மற்றும் விழிப்புணர்வு சார்ந்து தனது சொந்த மொழியில்க் கூட ஒரு நூலை எழுதத் தோன்றாத ஒரு முழுப் பச்சோந்தி அரசியல்வாதியான ஆனந்தசங்கரிக்கு மனிதாபிமானத்திற்கான உலகப் பரிசொன்று வழங்கப்பட்டுள்ளதென்பது மொத்த ஈழத் தமிழினத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. பழுத்த, பச்சோந்தி அரசியல்வாதியான சங்கரியை இந்த மனிதாபிமான உலகப் பரிசுக்காகப் பரிந்துரை செய்திருப்பவர் தொடர்பான விபரங்களைத் தேடும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. இனங்களுக்கிடையேயான சகிப்புத்தன்மை, வன்முறைக்கெதிரான செயற்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்டுவருகின்ற இப்பரிசினை பிரேரித்தவரின் கல்வித்தகமைகள், அரசியல் பின்புலம், அவரதும், அவர் சார்ந்த அமைப்பினதும் தகமை மற்றும் கெளரவம் பற்றி அறியும் நோக்குடன் யுனெஸ்கோ அமைப்பின் மடன்ஜீட் சின் பரிசு க்குப் பொறுப்பான அலுவலகரை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டேன். எனது மின்னஞ்சலுக்குப் பதில் அனுப்பிய திரு செர்கேய் லஸரேவ் அவர்களின் விளக்கம் எனக்கு வியப்பினை அளிக்கவில்லை. அக்கடிதத்திலிருந்து..... "திருவாளர் அவர்களுக்கு", "திரு ஆனந்தசங்கரி அவர்கள், அவரின் நாட்டு அதிகாரிகளால், இலங்கை தேசிய யுனெஸ்கோ கமிஷனினால் இப்பரிசிற்காக பிரேரிக்கப்பட்டிருக்கிறார். இப்பரிசிற்காக பிரேரிக்கப்பட்ட ஏனையவர்கள் தொடர்பான தகவல்களை என்னால் வெளியிட முடியாது". இப்போது இது தெளிவாகப் புரிகிறது. குறிப்பாகச் சொல்லாதபோதும்கூட, "அவரின் நாட்டு அதிகாரிகள்" என்று கூறுவதன்மூலம் இலங்கையின் அரசியல் தலைமையே இதன்பின்னால் நின்றிருக்கிறது என்பது புலனாகிவிடுகிறது. ஆனந்தசங்கரியை இப்பரிசிற்காக பரிந்துரைத்த "யுனெஸ்கோ தேசியக் கமிஷன்" எனும் அமைப்பு இலங்கை கல்வியமைச்சின் கீழ் செயற்படும் ஒரு அமைப்பென்பதும் அவ்வமைச்சின் தற்போதைய தலைவர் பற்றிய விடயங்களும் வெளிச்சமாகியிருக்கிறது. தலைவர் : சுசில் பிரேமஜயந்த உதவித் தலைவர் : ஆரியரத்ண ஹேவகே பொதுச் செயலாளர் : ஆர் பி பெரேரா உதவிப் பொதுச் செயலாளர் : பிரசன்ன சண்டித்
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
தமிழினத்தினுள் இருக்கின்ற துரோகிகளின் குணாதிசயங்கள் பற்றிய மிக ஆழமான சமூகவியல் ஆராய்ச்சியொன்று செய்யப்படுவது மிகவும் அவசியமானது. எனக்குத் தெரிந்த விடயங்களின் அடிப்படையில் தமிழினத்தில் இருக்கின்ற இனத்தைக் காட்டிக்கொடுப்பவர்களின், எதிரியுடன் ஒத்துழைப்பவர்களின் செயற்பாடுகளைக்கொண்டு அவர்களை வகைப்படுத்த முயல்கிறேன். வகைகள் 1. ஈழத் தமிழ்த் தேசியத்துடன் பல்லாண்டுகள் தொடர்ச்சியாகப் ஒபயணித்து இறுதியில் வறட்டு கெளரவத்திற்காகவும், தமது சுய ஒழுக்கமின்மையாலும் இனத்திற்கெதிராக எதிரியுடன் ஒத்துழைத்துக் காட்டிக்கொடுப்பவர்கள் . உதாரணம் : விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) மற்றும் சி ராஜதுரை. 2. தமது சொந்த அரசியல் லாபங்களுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் நிறம் மாறும் அரசியல்ப் பச்சோந்திகளாகச் செயற்பட்டு, தமிழர்களுக்கான மாற்றுத்தலைமையாக தம்மை அரச ஊடகங்களில் பிரச்சாரப்படுத்திவருபவர்கள். உதாரணம் : டக்கிளஸ் தேவாந்தா மற்றும் ஆனந்தசங்கரி. 3. வேறு துறைகளில் இருந்து, தமது அந்திமக் காலத்தில் சுதந்திரக் கட்சிபோன்ற இனவாதிகளின் பிச்சைப் பதவிகளுக்கு ஆசைப்பட்டு எதிரியுடன் ஒத்துழைத்து, இனத்தைக் காட்டிக்கொடுத்தவர்கள். உதாரணம் : லக்ஷ்மண் கதிர்காமர் மற்றும் குமாரசூரியர். 4. மக்களிடமிருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொண்ட கர்வம் பிடித்த தனிநபர்கள். இவர்களின் ஒரே கனவும் இலட்சியமும் சிங்கள இனவாதிகளின் ஏதாவதொரு கட்சியில் தம்மையும் அடையாளப்படுத்டிக்கொள்வது மாடுமே. உதாரணம் : துரையப்பா மற்றும் தேவநாயகம். 5. மிகச் சாதுரியமான அரசியல் மற்றும் சமூகத் தரகர்கள். அறிவில்ச் சிறந்தவர்கள் என்று தம்மை தொடர்ச்சியாக அடையாளப்படுத்திக்கொள்பவர்கள். உதாரணம் : நீலன் திருச்செல்வம் மற்றும் ராஜன் கூழ்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
எதிரியுடன் ஒத்துழைப்பவர்களும், இனத்தைக் காட்டிக்கொடுப்பவர்களும் ஆக்கம் : சச்சி சிறிகாந்தா காலம் : 6, மார்கழி 2006 எதிரியுடன் ஒத்துழைப்பவர்கள் என்பதும் இனத்தைக் காட்டிக்கொடுப்பவர்கள் என்பதும் தமிழில் உள்ள மிகவும் அருவருக்கத்தக்க இரு சொற்தொடர்கள். இந்த துரோகச் செயல்களைச் செய்பவர்களின் செயற்பாடுகளைக்கொண்டு இச்சொற்றொடர்கள் இவை ஒருமித்தும், தனித்தனியாகவும் அம்மக்கள் கூட்டத்தால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. என்னைப்பொறுத்தவரையில் இச்சொற்றொடர்கள் இரண்டிற்குமிடையே சிறு வேறுபாடு இருப்பதாக உணர்கிறேன். எதிரியுடன் ஒத்துழைப்பவர்கள் குறிப்பிடத்தக்களவு வெளிப்படையாக இயங்குபவர்கள். அரசியல் வெளியில் தமது அரசியல் ஆதாயத்திற்காகவும், தம்மைப் பிரபலப்படுத்தவும் இனத்தின் எதிரிகளோடு ஒத்துழைப்பவர்கள். பிரபலமாவதற்காகவும் இதனைச் செய்பவர்கள். ஆனால், இனத்தைக் காட்டிக்கொடுப்பவர்கள் மிகவும் ரகசியமாக , ராணுவ மற்றும் உளவு வெளிகளில் செயற்பட்டு இனத்திற்கெதிராக எதிரிக்குத் தகவல்கள் வழங்குபவர்கள் அல்லது இனத்தின் காவலர்களைக் காட்டிக்கொடுப்பவர்கள். ஆனாலும், இந்த இரு பகுதியினருக்குமிடையில் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது. துணை ராணுவக் குழுக்களின் தலைவர்களாகவும், அதேவேளை அரசுக்கு ஆதரவான அரசியலைச் செய்பவர்களாகவும் இதுவரை செயற்படும் டக்கிளஸ் தேவானந்தா, தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் போன்றவர்களை நாம் நோக்கினால் இவர்கள் அனைவருக்கும் இந்த அருவருப்பான சொற்றொடர்கள் அச்சொட்டாகப் பொருந்திப் போகின்றன. புலிகள் இயக்கத்திலிருந்து விரட்டப்பட்ட கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் முன்னர் அரச ராணுவத்திற்கான உளவாளியாகவும் பின்னர் அதே அரசின் அணுசரணையோடு அரசியலில் பிரவேசிக்கும் கைங்கரியத்திலும் ஈடுபட்டிருக்கிறார். தனது முகத்தினை வெளிப்படையாகக் காட்டமறுக்கும் கருணா ஏதோ மறைவிடம் ஒன்றில் இருந்தபடியே தனது "ஒத்துழைப்பு அரசியலை" செய்துவருகிறார். புலிகளையும், அவர்களின் ஆதவாளர்களையும் காட்டிக்கொடுக்க இந்திய ராணுவத்தினருடன் சேர்ந்து செயற்படும் ஒரு தமிழர் - யாழ்ப்பாணம் 1987 அமெரிக்க விடுதலைப் போராகட்டும், பிரெஞ்சுப் புரட்சியாகட்டும், சீனக் கம்மியூனிசப் புரட்சியாகட்டும், கியூப விடுதலைப் போராகட்டும், வியட்னாமிய விடுதலைப் போராகட்டும், இவை அனைத்துமே அந்த இனங்களைக் காட்டிக்கொடுத்த, எதிரியுடன் சேர்ந்து இனத்திற்கெதிராகச் செயற்பட்ட பலரைக் கண்டுதான் வந்திருக்கின்றன. நியாயப்படுத்தமுடியாத காரணங்களுக்காக தமது இனத்தினை வஞ்சித்து எதிரியுடன் ஒத்துழைத்து, காட்டிக்கொடுத்த இந்தக் கயவர்களின் அஸ்த்தமனம் என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை சரித்திரம் தொடர்ச்சியாக எமக்கு நினைவூட்டியே வருகிறது. ஆனால், சரித்திரம் சொல்லிவரும் அனைத்துப் பாடங்களுக்கு மத்தியிலும் தமிழினத்திலிருந்து தொடர்ச்சியாக இனத்தைக் காட்டிக்கொடுப்பவர்களும், எதிரியுடன் ஒத்துழைப்பவர்களும் எழுந்துவந்துகொண்டுதான் இருக்கிறார்கள். உலக சரித்திரத்தில் கண்டவர்போல எமதினமும் காலத்திற்குக் காலம் பல துரோகிகளை இனக்கண்டு அவர்களுக்கான சரியான இடத்தைக் கொடுத்துத்தான் வந்திருக்கிறது. 1970 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரையான காலப்பகுதியில் ஒவ்வொரு தசாப்த்தத்திலும் பல இனத்துரோகிகளை, காட்டிக்கொடுப்பவர்களை, எதிரியுடன் ஒத்துழைப்பவர்களை நாம் கண்டுதான் வந்திருக்கிறோம். 1970 களின் குமாரசூரியர்களும் துரையப்பாக்களும், 1980 களின் ராஜதுரைகளும் வரதராஜப் பெருமாள்களும், 1990 களினதும் 2000 களினதும் டக்கிளஸ் தேவாநந்தாக்களும், கதிர்காமர்களும், 2000 இற்குப் பின்னரான கருணாக்களும் ஆனந்தசங்கரிகளும் என்று இனத்தைக் காட்டிக்கொடுத்து எதிரியுடன் ஒத்துழைத்த மிகப்பிரபலமான தமிழர்கள் எம்மிடையே வலம்வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் .
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
"இல்லை, கருணா இதற்குப் பின்னர் மட்டக்களப்பில், முக்கியமாகக் கிரானில் தென்படவில்லை. வாழைச்சேனை, கல்க்குடா, கிரான் ஆகிய பகுதிகளில் புலிகளில் பலம் அதிகரித்துக் காணப்படுகிறது. அதிலும் கிரான் என்பது புலிகளின் பலமான பகுதியென்று நம்பப்படுகிறது. கருணா புலிகளின் தளபதியாகவிருந்த காலத்தில் கிரானின் மைந்தன் என்பதனால் அவர் இப்பகுதியில் பலராலும் மதிக்கப்பட்டிருந்தார். புலிகளினது இலட்சியத்திற்கும், தமிழர்களின் விடுதலைக்கு புலிகளின் சேவைக்காகவும் கிடைத்த ஆதரவே கருணாவையும் அவர்கள் ஆதரிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றிருந்தது. தனிமனிதனாக, புலிகளின் தொடர்பில்லாத கருணாவுக்கு மக்கள் ஆதரவென்பது ஒருபோதுமே இருக்கப்போவதில்லை. புலிகளுக்கும் தமிழினத்திற்கும் துரோகமிழைத்து அவர் வெளியேறியபின் கிரானில்க் கூட அவருக்கு ஆதரவென்பது இருக்கப்போவதில்லையென்பது திண்ணம்". "மட்டக்களப்பு நகரப்பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் முற்றாக வந்ததையடுத்து, புலிகளுக்கெதிரான துணை ராணுவக்குழுக்களான புளொட், ஈ பி ஆர் எல் எப், ராஸீக் குழு மற்றும் ஈ என் டி எல் எப் ஆகிய குழுக்கள் மட்டக்களப்பு நகரின் புளியந்தீவுப் பகுதியில் தமது முகாம்களை நிறுவியுள்ளன. நீரால் சூழப்பட்ட தீவுப்பகுதியான மட்டக்களப்பு நகரை பெருநிலத்துடன் இணைக்கும் மூன்று முக்கிய பாலங்களில் ராணுவம் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது. அத்துடன் இத்துணைராணுவக் குழுக்களின் குடும்ம்பங்களையும் நகரினுள் அழைத்துவந்திருக்கும் ராணுவம் அவர்களுக்கான பாதுகாப்பினையும் வழங்கிவருகிறது. புலிகளுக்கான வெளிப்படையான ஆதரவினை இதுவரை வழங்கிவந்த பொதுமக்கள் இக்குழுக்களின் பிரசன்னத்தினையடுத்து தற்போது மெளனமாகிவிட்டதுபோலத் தெரிகிறது. இத்துணைராணுவக் குழுக்களின் பிரசன்னம் மட்டக்களப்பு நகருக்கு வெளியே காணக்கிடைப்பதில்லையென்று மக்கள் கூறுகிறார்கள்". "ஆகவே, வெளியிலிருந்து நகருக்குள் வரும் ஒருவருக்கு இத்துணை ராணுவக் குழுக்களின் அதிகரித்த பிரசன்னம் ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். மேலும், புலிகளுக்கெதிரான குழுக்களின் தலைவனாக கருணாவே பார்க்கப்படுவதால், நகருக்கு வரும் ஒருவர் கருணாவே நகரினைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதாக எண்ணுவதற்குச் சாத்தியம் இருக்கிறது. இவ்வாறு வெளியிலிருந்து வருவோர், நகரில் இருக்கும் நிலையே மட்டக்களப்பின் ஏனைய பகுதிகளிலும், அம்பாறையிலும் இருக்கலாம் என்று தவறாகக் கணிக்கிறார்கள். மட்டக்களப்பு நகரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இவர்கள் வெளியிடும் புனைவுகள் மிகவும் தவறான செய்தியினையே வெளிக்காவிச் செல்கின்றன". "நான் அங்கு தங்கியிருந்த இரு மாத காலத்தில் மட்டக்களப்பின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து பல பொதுமக்களையும், நண்பர்களையும் சந்தித்து உரையாடினேன். அரச உத்தியோகத்தர்கள், பண்ணையாளர்கள், விறகு வியாபாரம் மசெய்வோர் என்று பலதரப்பட்டவர்களுடனும் உரையாடியபோது எனக்குக் கிடைத்த செய்தி ஒன்றுதான், அதாவது இவர்களுள் எவருமே கருணாவின் செயலினை சரியென்று ஏற்றுக்கொள்ளவுமில்லை, அவரை ஆதரிக்கவுமில்லை". "மேலும், கிழக்கு மக்களின் நலனுக்காகவே புலிகளை விட்டுப் பிரிந்து செல்கிறேன் என்று கருணா கூறிச் சென்றபின்னர் இந்த மக்களுக்காக கருணா இதுவரையில் செய்தது என்ன? தமிழர்களுக்குத் துரோகமிழைத்து, தமிழர்களை 2002 வரை வேட்டையாடிய கொடிய ராணுவத்துடனும், விசேட அதிரடிப்படையுடனும் கருணா இன்று கொஞ்சிக் குலாவுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். புலிகளின் முன்னாள் தளபதியாகவிருந்த கருணா இனிமேல் கிழக்கிலோ அல்லது எந்தவொரு நிலத்திலோ மக்கள் முன் வெளிப்படையாக வரும் யோக்கியதையினை இழந்துவிட்டதாகவே அவர்கள் நினைக்கிறார்கள். ஆக, ஜெயராஜ் மற்றும் பீ ராமன் போன்ற கற்பனை உலகில் வாழும் புனைகதையாளர்களின் காதல் நாவல்களில் உலாவருவதுடன் கருணாவின் பிரசன்னம் முடிந்துவிடுகிறது". "மட்டக்களப்பில், லேக் வீதியில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் அலுவலகமும், அதன் மிக அருகே ராஸீக் குழுவின் முகாமும் அமைக்கப்பட்டிருக்கிறது. கண்காணிப்புக் குழுவினரின் அலுவலக வாயிலின் ஒரு பக்கத்தில் ராஸீக் குழுவினரின் காவலரண் கட்டப்பட்டிருக்கிறது. பதின்ம வயதுச் சிறுவர்கள் கைகளில் தானியங்கித்துப்பாக்கிகளை ஏந்தியபடி மரக்குற்றிகளுக்குப் பின்னால் அமர்ந்திருக்க அவர்களைக் கடந்து கண்காணிப்புக் குழுவினர் சென்று வருகின்றனர். முன்னாள் ஈ பி ஆர் எல் எப் பாராளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவுக்குச் சொந்தமான காணியிலேயே ராஸீக் குழு முகாமிட்டிருப்பதாகத் தெரிகிறது". "ஒருநாள் காலை கருணாவின் மாமனார் குமரகுருவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. முன்னர் அவர் வாழைச்சேனை காகித ஆலையில் பாரம் நிறுக்கும் பகுதியில் வேலைபார்த்து வந்திருந்தார். 1980 களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான ஜாதிக சேவக சங்கமய எனும் அமைப்பின் தலைவராக அவர் இருந்தார். நான் அவரை காலை 6 மணிக்குச் சந்தித்தேன். அடிடாஸ் உடற்பயிற்சி ஆடையுடன் அவர் காலை நடைப்பயிற்சிக்காகச் சென்றுகொண்டிருந்தார். மிகக் கவனமாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பாவித்து அவரதும், அவர் குடும்பத்தினதும் சுகம் பற்றி விசாரித்துக்கொண்டேன். கருணா பற்றி அவரிடம் எதையுமே கேட்கும் தேவை எனக்கு இருக்கவில்லை". "முடிவாக, என்னைப்பொறுத்தவரை கருணா என்பவர் முகமற்ற நிழலாகவே மட்டக்களப்பில் இருக்கிறார், பன்றிகள் பறக்கும் புனைவுகளில் கதாநாயகனாக வலம் வருவதைத்தவிர அவரை அங்கே நான் காணவில்லை".
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
"2004 ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் வந்த செய்திகளின்படி கருணாவின் மனைவி பெருமளவு பணத்தோடு மலேசியாவுக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. கருணாவின் மனைவி பெருமளவு பணத்துடன் மலேசியாவுக்குச் சென்றதை பல சிங்களப் பத்திரிக்கைகள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தன". "ஆனால், பின்னாட்களில் வந்த தகவல்களின்படி கருணாவும் அவரது குடும்பமும் இந்தியாவுக்கே சென்றிருப்பதாகத் தெரியவருகிறது. மலேசியாவுக்குச் செல்வதாகப் போக்குக் காட்டிவிட்டு, அங்கிருந்து இந்தியாவுக்கு அவர்களை இந்திய றோ அழைத்துச் சென்று தமது பாதுகாப்பில் வைத்திருப்பதாகவும், வரதராஜப்பெருமாளுடன் முன்னர் நெருங்கிச் செயற்பட்டுவந்த றோ அதிகாரிகளே கருணாவைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவந்ததாகவும் தெரியவருகிறது. மலேசியாவில் பாதுகாப்பு ஏதுமின்றி கருணாவோ அவருக்கு நெருக்கமானவர்களோ இருப்பது எங்கணம் என்று எவராவது சிந்தித்தால் , அவர் அங்கே இருக்கமுடியாது என்பது தெளிவாகும். அதுமட்டுமல்லாமல், மலேசியாவில் கருணா தங்கிவிடுமிடத்து, அவரைத் தமது நோக்கங்களுக்காகக்ப் பாவிப்பதென்பது றோவைப் பொறுத்தவரையில் கடிணமானதாக இருக்கும் என்பதும் தெரியாததல்ல. 1990 களில் வரதராஜப்பெருமாளைக் கட்டிக் காத்ததுபோல கருணாவையும் இன்று றோ காத்துவருகிறது. தமிழகத்திற்கு வெளியே வட மாநிலம் ஒன்றில் கருணா பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருக்கிறார் என்று மேலும் அறியமுடிகிறது".
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
சரி, இனி எனது செய்தியாளர் சிவகுமார் அவர்கள் மட்டக்களப்பிலிருந்து வழங்கிய செய்தியைப் பார்க்கலாம். நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் கடந்த ஆனி மாதத்திலிருந்து ஆடி வரை அங்கே தங்கியிருந்து செய்திகளைச் சேகரித்திருந்தார். இலங்கைக்கு வெளியேயும் செயற்படும் சிவகுமாரின் மட்டக்களப்பில் கருணாவின் இன்றைய நிலமைபற்றிய கட்டுரை கீழே, "நான் ஜெயாராஜின் பன்றிகள் பறப்பது தொடர்பான புனைவுகளை இதுவரை படிக்கவில்லை. அதுபற்றி இனிமேலும் படிப்பதில் பயனேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. கடந்த வருடம் கருணாவின் இரண்டாம் வருகையுடன் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை அவர் 2005 சித்திரை வருடப்பிறப்பிற்கு முன்னதாக புலிகளிடமிருந்து மீட்டெடுப்பார் என்று எதிர்வுகூறியிருந்தார். நீங்கள் அவரது பன்றிகள் பறக்கும் புனைவுகளை தவறென்று நிறுவியிருப்பது தெரிகிறது. சித்திரை வந்தும் போய்விட்டது, ஆனால் அவரது புனைவுகளில் கூறப்பட்டதற்கு மாறாக, கருணா இன்றுவரை முகமற்ற வெற்று நிழலாகவே இருக்கிறார்". "கருணாவின் பிரச்சினையினைப் பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஓர் அணியிலேயே நிற்பதாகத் தெரிகிறது. கருணாவைக் கொழும்பிற்குக் கூட்டிவருவதில் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஏறாவூர்த் தொகுதி உறுப்பினர் அலிசாகீர் மெள்லானா ஆடிய பங்கும், அவரது பங்கு வெளியே தெரிந்தவுடன், அவர் திடீரென்று காணாமல்ப் போனதையும் மறந்திருக்க மாட்டீர்கள். ரணிலையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் பொறுத்தவரை கருணாவின் பிரச்சினையிலிருந்து தம்மை தற்போதைக்காவது விலத்திக்கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள்". "இப்போது சந்திரிக்காவும் அவரது ராணுவமுமே கருணாவுக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் வழங்கி தமது நடவடிக்கைகளுக்காகப் பாவித்து வருவதாகத் தெரிகிறது. ரணிலாக இருந்தாலென்ன, சந்திரிக்காவாக இருந்தாலென்ன, ராணுவத்தைப்பொறுத்தவரையில் மாற்றம் ஏதுமே இருப்பதாகத் தெரியவில்லை". "மேலும், இந்த கைப்பாவை விளையாட்டுக்கள் இந்தியாவினாலும், சிங்களவர்கள் தரப்பில் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றாலும் தமிழர் தரப்பில் கருணா, ஆனந்தசங்கரி மற்றும் தமிழ் துணைராணுவக் குழுக்களாலும் நடத்தப்பட்டு வருகிறது என்பது தெளிவு. இலங்கையர்களைப் பொறுத்தவரை இது எல்லாராலும் அறியப்பட்ட ஒரு ரகசியம். ஆக, இன்று தமிழர் தாயகத்தில் நடக்கும் பலப் பரீட்சை நேரடியாகவே தமிழர்கள் சார்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழர்களுக்கு எதிராக இந்தியாவின் கொடூர கொடுக்குகளுக்கும் இடையே நடப்பதாகவே தெரிகிறது. தென்னிலங்கையில் நடந்துவரும் முன்னெடுப்புகளைப் பார்க்கும்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் எங்கிலும் இந்திய றோ தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், அரச ராணுவ வளங்களைப் பாவிக்கவும், தேவையேற்படின் தனக்கான தளங்களை நிறுவவும் இலங்கை அரசு இடம் கொடுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது". "கருணா இலங்கையில் இருக்கவேண்டிய தேவையோ, கட்டாயமோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவரது முகமற்ற நிழலை இந்தியாவும், அவர்களின் எடுபிடிகளான இலங்கை அரச ராணுவமும் தமிழர் தாயகத்தில் தமிழரின் ஒற்றுமையினைச் சிதைக்கப் பாவித்துவருவது தெளிவாகத் தெரிகிறது".
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
"இது இவ்வாறிருக்க, ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ராணுவ புலநாய்வுத்துறையின் இயக்குனர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவை குறுகிய கால நடவடிக்கை ஒன்றிற்காக வெளிநாடொன்றிற்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. ராணுவ புலநாய்வுத்துறை அதிகாரி லெப்ட். கேணல் துவான் நிஸாம் முத்தலிப்பைக் கொல்வதற்கு முன்னர், கபில ஹெந்தவிதாரணவையே புலிகள் இலக்குவைத்திருந்தார்கள் என்று ராணுவத்திற்குத் தகவல் வந்ததாலேயே அவரை வெளிநாடொன்றிற்கு அவசர அவசரமாக அனுப்பிவைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கபில ஹெந்தவிதாரணவைத் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து வந்த புலிகளின் புலநாய்வுத்துறை அவர் ஞாயிற்றுக்கிழமைகளில் அடிக்கடி வரும் சந்தைப்பகுதியொன்றில் வைத்துத் தாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாக ராணுவம் அறிந்துகொண்டது. சுதாரித்துக்கொண்ட அரசாங்கம், அவரைக் கொல்ல புலிகள் தருணம் பார்த்திருந்த வாரமே வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்திருப்பதாகத் தெரிகிறது. முன்னாள் ராணுவ புலநாய்வுத்துறை இயக்குநனரான கபில ஹெந்தவிதாரண கூட்டுப்படைத் தலைமையகத்திலேயே பணியாற்றிவந்தார். அவரது புதிய பதவியான ராணுவப் புலநாய்வுத்துறையின் நிர்வாக செயலாளர் எனும் பதவி அவர் மீண்டும் இலங்கை திரும்பும்வரை செயலற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை இப்பதவிக்கான தற்காலிக அதிகாரியாக உள்நாட்டு புலநாய்வுத்துறை இயக்குநர் சூல செனிவிரட்ன நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் தெரியவருகிறது. அதேவேளை, ஹெந்தவிதாரணவை ராணுவ தலைமைக் காரியாலயத்திற்கு மாற்றும் உத்தரவைப் பிறப்பித்த சந்திரிக்கா, அவரை பணியிறக்கம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக, கிழக்கில் செயற்பட்டுவரும் சாதாரண ராணுவப் புலநாய்வுத்துறையினர் மட்டுமல்லாமல், அதிகாரிகளையும் புலிகளின் புலநாய்வுத்துறை பிந்தொடரத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது". அத்தாஸ் மேலும் கூறுகையில், அரச ராணுவ புலநாய்வுத்துறையினருக்கெதிரான புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் அரச புலநாய்வுத்துறை பின்னடைவுகளைக் கண்டுவருவதாகத் தெரிகிறது. "திருகோணமலை மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ராணுவத்தின் 22 ஆவது டிவிசனில் இயங்கிவரும் ராணுவப் புல்நாய்வுத்துறை அதிகாரியை உடனடியாக கொழும்பு திரும்பும்படி கட்டளையிடப்பட்டிருக்கிறது. இவ்வாரம் ராணுவத்தின் 22 ஆவது டிவிஷன் தளபதியான மேஜர் ஜெனரல் சுமித் பாலசூரியவைச் சந்தித்த சந்திரிக்கா திருகோணமலைப் பகுதியின் பாதுகாப்பு நிலைமைகள் பற்றி கேட்டு அறிந்துகொண்டார். முப்படைகளின் தளபதி எனும் அதிகாரத்தினைப் பாவித்து சந்திரிக்கா எடுத்துவரும் பல நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது". "சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்குக் கிடைத்த நம்பகமான செய்திகளின்படி, திருகோண்மலையில் கடற்புலித் தளபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் யாரென்பதுபற்றிய விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சந்திரிக்கா கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இக்கொலையின் பின்னால் மறைகரம் ஒன்று இருக்கலாம் என்றும், சமாதானப் பேச்சுவார்த்தைகளைக் குழப்பும் வகையில் கிழக்கில் இடம்பெற்றுவரும் புலிகளின் அரசியல்ப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் மீதான கிர்ணேட் தாக்குதல்களுக்கும் இக்குழுவே காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது". "பல உயர் ராணுவ அதிகாரிகள் தமக்குக் கீழான அதிகாரிகள் மற்றும் வீரர்களின் செயற்பாடுகள் குறித்து தாம் எதுவும் அறிந்திருக்கவில்லை என்று தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. தெற்கில் வெளிவரும் சில சிங்களப் பத்திரிக்கைகள் ராணுவத்தில் இருக்கும் முன்னாள் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்களே கிழக்கில் சமாதானத்தைச் சீர்குலைக்கும் காரியங்களில் ஈடுபடுவதாக எழுதுகின்றன". முடிவாக, மட்டக்களப்பில் பன்றிகள் பறப்பதாகாச் சத்தியம் செய்யும் ஜெயராஜின் புனைவுகளை இக்பால் அத்தாஸ் தவறென்று நிரூபித்திருக்கிறார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
திருகோணமலையில் கடற்புலிகளின் தளபதி திக்கத்தை மறைந்திருந்து கொன்றது கருணாவே - ராணுவம் ஒளித்துப் பிடித்து விளையாடுவதில் கெயராஜ் ஒரு அதி திறமைசாலி. அவர் தனது பத்திரிகா தர்மத்தை சென்னையின் உருமறைப்புச் செய்து செய்திகாவும் "ஹிந்து" நாளிதழ் குழுமத்தினரிடமிருந்து கற்றதனால் தான் எழுதும் விடயங்கள் தொடர்பான ஆதாரங்களையோ அல்லது தகவல் தரும் நபர்களையோ ஒருபோது கூறுவதேயில்லை. அவரைப்பொறுத்தவரை தனக்குத் தகவல்களை ரகசியமாக வழங்கும் ஒருவர் இருவரையல்ல, பலரைக் காக்கவேண்டிய தேவையிருக்கிறது. மேலே அவர் எழுதிய பந்தியின் இறுதிப் பகுதியினை மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள், புரியும். "கருணாவுக்கு குறைந்தது ஒரு நாட்டின் வெளியகப் புலநாய்வுத்துறையாவது உதவிசெய்துவருகிறது........." இதை ஏதோ பெரிய விடயம்போல ஜெயராஜ் எழுதுவது தெரிகிறது. ஆனால், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை என்று எங்கு சென்று தமிழ்ச் சிறுவர்களைக் கேட்டால்க் கூட கருணாவின் பின்னால் இருப்பது இந்தியாவின் வெளிய புலநாய்வுத்துறையான றோ என்று தயங்காமல் கூறிவிடுவார்கள். கருணா இலங்கைக்கும் தென்கிழக்காசிய நாடொன்றிற்கும் இடையே தனது குடும்பத்தைப் பார்ப்பதற்காக அடிக்கடி போய்வருகிறார் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். மட்டக்களப்பிலிருக்கும் எனது நண்பர் ஒருவர் கூறியதன்படி அவர் கடந்த ஆனி, ஆடி ஆகிய மாதங்களில் மட்டக்களப்பில் தங்கியிருந்ததாகத் தெரியவருகிறது. கிழக்கில் நடந்துவரும் நிகழ்வுகள் குறித்த எனது நண்பரின் சில தகவல்களை இங்கே இணைக்கிறேன். பாதுகாப்புத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸின் கருத்து முதலில், கொழும்பிலிருந்து எழுதும் இக்பால் அத்தாஸின் ஆய்விலிருந்து ஆரம்பிக்கலாம். றோவின் தகவல்களைக்கொண்டு கட்டுரைகள் புனையும் ஜெயராஜின் பந்திகளிலிருந்து இது சற்று வித்தியாசமானது. அண்மையில் கொல்லப்பட்ட கடற்புலிகளின் தளபதி திக்கம் மற்றும் அவரது சகாக்கள் தொடர்பான செய்தியிலிருந்து ஆரம்பிக்கலாம். இக்பால் அத்தாஸின் கருத்துப்படி, "தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ராணுவத்தின் முக்கிய அதிகாரியொருவர் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்குத் தகவல் தருகையில் திருகோணமலை செல்வனாயகபுரம் பகுதியில் கடற்புலிகள் தளபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தமது ராணுவமோ அல்லது புலநாய்வுத்துறையோ ஈடுபட்டிருக்கவில்லை என்பதை உறுதியாகக் கூறமுடியும் என்று கூறினார். அதேவேளை இத்தாக்குதல் கருணா குழுவினராலேயே நடத்தப்பட்டிருக்கலாம் என்பதை தாம் சந்தேகிப்பதாகக் கூறிய அவர் , கருணாவின் பல தோழர்கள் விலகிவிட்ட நிலையிலும், ஆயுதப் பற்றாகுறைக்கு மத்தியிலும் அவர் இத்தாக்குதலை நடத்தியிருப்பது சாத்தியமே என்றும் கூறினார். ஆனால், தமது தளபதியொருவர் மீதான கருணாவின் தாக்குதலை புலிகளும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிய அவர், அது கருணாவுக்கான விளம்பரத்தைத் தேடிக் கொடுத்துவிடும் என்றும் கூறுகிறார்". மேலும், ஜெயராஜின் பன்றிகள் பறக்கும் கதையுடன் மாறுபடும் இக்பால் அத்தாஸ், தமது தளபதி திக்கத்தின் இழப்பினை புலிகள் எவ்வாறு சரிசெய்தார்கள் என்பது தொடர்பான ராணுவத்தின் பார்வையினை எழுதுகிறார். இது நான் முன்னர் எழுதிய பிரபாகரன் எனும் நிகழ்வு எனும் கட்டுரையின்படி, புலிகளின் தலைவர் தனது தளபதி ஒருவரின் மறைவுக்குப் பின்னர் எடுத்த நடவடிக்கை பற்றி அத்தாஸின் கருத்தோடு ஒத்துப்போகிறது. "கிழக்கில் இயங்கிவரும் அனைத்து ராணுவப் புலநாய்வுச் செயற்பாட்டாளர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு பிரபாகரன் கட்டளையிட்டிருக்கிறார். இதனால், கிழக்கில் செயற்பட்டுவரும் ராணுவப் புலநாய்வுத்துறையினரின் பல முக்கிய செயற்பாட்டாளர்களின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தி, முகாம்களுக்குள் இருக்குமாறு அரசு பணித்திருக்கிறது. அத்துடன், தமக்குத் தகவல் வழங்கும் கருணா குழு உறுப்பினர்கள் அல்லது பணத்திற்காக தகவல் வழங்குவோரைச் சந்திக்க வெளியே செல்வதென்றால், புலநாய்வுத்தளபதிகளிடமிருந்து விசேட அனுமதி பெற்றபின்னரே அவர்கள் வெளியில் செல்லமுடியும் என்றும் அறிவுருத்தப்பட்டிருக்கிறார்கள்".
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
மட்டக்களப்பில் பன்றிகள் கூடப் பறக்குமாம் - ஜெயராஜின் தொடர் புனைவுகள் இணையம் : தமிழ்நேஷன் ஆங்கில மூலம் : சச்சி சிறிகாந்தா காலம் : 28, ஆடி2005 இல்லவே இல்லை, பன்றிகள் பறக்கமுடியா உயிரினங்கள் எனும் இயற்கை நியதிக்கு அப்பாற்பட்ட கண்டுபிடிப்பொன்றை நான் இங்கு மேற்கொள்ளவில்லை. சண்டே லீடரில் ஊடக வியாபாரத்திற்கான புரட்டுக்களைப் புனையும் டி பி எஸ் ஜெயராஜின் ஆடி, 24 2005 இன் இன்னொரு புனவுதொடர்பான எனது கருத்தையே அவ்வாறு எழுதினேன். ஜெயராஜின் புனைவுகளின் பிரகாரம் மட்டக்களப்பில் பன்றிகள் பறக்கின்றன என்றுதான் ஒருவருக்கு எண்ணத் தோன்றும். அவர் அப்பன்றிகளை தான் வசிக்கும் கனடா தேசத்திலிருந்து மிகத் தெளிவாகப் பார்க்கிறார். அவர் அண்மையில் புனைந்துதள்ளிய புரட்டுக்களுக்குப் பின்வருமாறு தலைப்பிட்டுத் தொடர்கிறார், "புலிகளுக்கு அவர்களின் பாணியிலியே கசப்பான பாடம் படிப்பிக்கப்பட்டு வருகிறது". ஜெயராஜின் புனைவுகளை இதுவரை படிக்காதவர்களின் வசதிக்காக அவரது புனைவின் முதல் 214 வார்த்தைகளை நான் இங்கே பதிவிடுகிறேன். "பல வருடங்களில் முதல்த் தடவையாக புலிகள் மிரட்டப்பட்டு, பயந்து ஒடுங்கி முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.இவ்வளவுகாலமும் தமிழ் இனத்தைத் தனது பயங்கரவாத நடவடிக்கைகளால் அச்சுருத்திக் கட்டுப்படுத்தி வைத்திருந்த புலிகள் இயக்கத்திற்கு அவர்களின் பாணியிலேயே தண்டனை வழங்கப்பட்டு வருகிறது". "வழமைக்கு மாறாக, புலிகளால் அடக்கப்பட்டு தடுக்கப்பட்டிருந்த ஏனைய தமிழ் ராணுவ அமைப்புக்களை ஒன்றுதிரட்டியுள்ள அரசும் ராணுவப் புலநாய்வுத்துறையும் அவர்களைக் கொண்டே புலிகளுக்கு சரியான தண்டனையினை வழங்கத் தொடங்கியிருக்கிறது. வழமைபோல புலிகளால் இதனை ஜீரணிக்க முடியவில்லை". "புலிகளாலும், தமது சொந்த நலன்களுக்காக புலிகளை ஆதரிப்பவர்களாலும் கருணாவின் பிரசன்னம் வேண்டுமென்றே தட்டிக் கழிக்கப்பட்டாலும் கூட, அவர் கிழக்கில் விஸ்வரூபமெடுத்து வருகிறார் என்பதே உண்மை. கருணா தனது குடும்பத்தை சந்திக்கும் நிமித்தம் இலங்கைக்கும் தென்கிழக்காசிய நாடொன்றுக்கும் இடையில் அடிக்கடி பயணித்து வருகிறார். அவர் கடந்த வைகாசி 6 ஆம் திகதி நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார், ஆனால் கிழக்கிலிருந்து வரும் தகவல்களின்படி அவர் மீண்டும் திரும்பிவந்து தனது நடவடிக்கைகளைத் தொடர்கிறார் என்று தெரியவருகிறது". "நான் மேலே குறிப்பிட்டதுபோல, கருணா எனும் நாமம் மிகவும் பிரசித்தமாகிவிட்டது. அவருக்கு ஆதரவான பெருமளவு போராளிகள் கிழக்கு மாகாணத்திலும், பொலொன்னறுவை மாவட்டத்திலும் நிலை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெவ்வேறான ராணுவ கட்டமைப்புக்களில், பல்வேறு இடங்களில் நிலைவைக்கப்பட்டிருக்கிறார்கள். சுயாதீனமாக இயங்கிவரும் கருணா ஆதரவாளர்களுக்கு வளங்கல்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை அரச ராணுவம் வழங்கிவருகிறது". "சிறிலங்கா ராணுவ புலநாய்வுத்துறை கருணா அமைப்பிற்கான நெறிப்படுத்தல்களை வழங்குவதுடன், வழிகாட்டியாகவும் செயற்படுகிறது. ஒரு குழுவாக இயங்கும் கருணா அமைப்பினருக்கு குறைந்தது ஒரு பலம் மிக்க நாட்டின் வெளியுறவுப் புலநாய்வுத்துறை தேவையானளவு நிதியினை வழங்கி வருகிறது".
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
பரபரப்பு பத்திரிக்கையில் ரிஷியினால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்று. யாழ்ப்பாணத்தில் றோவின் உளவாளிகளின் வருகை பற்றி இக்கட்டுரை பேசுகிறது. கருணாவைப் பிரிப்பதிலும், புலிகளைப் பலவீனப்படுத்தி இறுதியில் அழிப்பதிலும் முன்னின்று செயலாற்றிய இந்தியர்களின் செயற்பாடுகளைப்பற்றி நான் ஆக்கங்களை இணைத்துவருவதால், இதனையும் இங்கு இணைக்கிறேன். "தமிழகத்தில் இருந்து மூட்டைகட்டி வீடு வீடாக துணிகள் விற்பவர்கள் இங்கு களமிறங்கி யுள்ளனர். இவர்கள் தமிழகத்திலிருந்து விமானம் வழியாக கொழும்புக்கும் அங்கிருந்து விமானம் வழியாக யாழ் பாணத்துக்கும் வருகின்றனர். இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் இவர்களில் எந்தவொரு வியாபாரியும் கொழும்பிலிருந்து தரை மார்க்கமாக யாழ் பாணம் வருவதில்லை. மூட்டைகளை காவியபடி யாழ் பாணத்தின் சகல குச்சொழுங்கைகளுக்கும் சென்று வியாபாரம் செய்கின்றனர். கடைகளைவிட மலிவாகக் கொடுக்கின்றனர். கடனுக்கு கொடுக்கின்றனர். மக்களின் குடும்ப நன்பர்களாக தம்மை வளர்த்துக் கொள்கின்றனர். கடன் வழங்கி மீளமீள வீடுகளுக்கு வருகின்றனர். பேச்சுவாக்கில் தகவல்களை திரட்டுகின்றனர். இவர்கள் குறைந்து பட்சம் பிஏ வரை படித்துள்ள பட்டதாரிகள். ஆஜானுபாகுவானவர்கள். தமிழகத்தின் பரம்பரைத் துணி வணிகர்கள் அல்ல இவர்கள். இவர்களுடன் பேச்சுக் கொடுத்து பார்த்தால் ஒரு ஆச்சர்யம் இவர்களில் பலருக்கு துணிவகைகளின் பெயர்களே சரியாகத் தெரிந்திரு பதில்லை! இவர்கள் யாழ்நகரில் தங்குவது மக்கள் தொடர்பு உள்ள இடங்களில் அல்ல. யாழ் நாகவிகாரை முன்பாக விகாரையின் கட்டு பாட்டில் படையினரின் பாதுகா பில் உள்ள விடுதிகளில்தான் இவர்கள் தங்குகிறார்கள். பெருமளவில் சாமிமார்கள். ஜோதிடர்கள் சித்த மருத்துவர்கள் இங்கு விமான மூலம் வருகின்ற னர். உதயன் (யாழ் பாணத்திலிருந்து வெளியாகும்) பத்திரிகையில் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று விளம்பரம் போட படுகின்றது. இதை பார்த்து மக்கள் அவர்களிடம் செல்கின்றனர். அவர்கள் தமது போக்குவரவுச்செலவை ஈடுசெய்யும் வகையில் கட்டணங்களை அறவிடுவதில்லை. அவர்கள் மக்களை பல தடவைகள் தம்மிடம் மீண்டும் மீண்டும் வரச் செய்கின்றனர். மேலதிக சிகிச்சை பரிகாரம் எனக்கூறி அவர்களை தமிழகத்துக்கு வருமாறு அழைக்கின்றனர். அப்படி இந்தியாவரை போன யாழ் பாணத்தவர்களும் இருக்கின்றனர். இது யாழ் பாணத்தில் வசிக்கும் தமிழ்மக்களை தமது ஏஜன்ட்களாக தயார் செய்யும் வழி என்று ஊகிக்க படுகிறது. இதைவிட, யாழ் போதனா மருத்துவ மனைக்கு முன்பாக குறி சொல்லும் பெ களின் அம்மா வாங்க, அய்யா வாங்க என்ற குரல்கள் அதிகமாக உள்ளது. இவர்களும் விமானத்தில் வருபவர்களே. தமிழகத்தின் பொருளாதார வசதியை அறிந்தவர்களுக்கு ஒரு விபரம் தெரிந்திருக்கும். குறி சொல்பவர்கள் பஸ்ஸில் போய் வருவதே அவர்களுக்குக் கட்டு படியாகாத சமாச்சாரம். இங்கே அவர்கள் சர்வசாதாரணமாக விமானங்களில் போய்வருகிறார்கள்! தமிழகம்-கொழும்பு விமானக்கட்டணம் 16 ஆயிரம் ரூபா கொழும்பு - யாழ் விமானக் கட்டணம் 9 ஆயிரம் ரூபா. யாழ் பாணத்தில் தங்கும் செலவுவேறு இருக்கிறது. குறிசொல்ல பெறுவது 5ரூபா 10ரூபா. கணக்கை போட்டு பாருங்கள். இது கட்டு படியாகுமா என்று! யாழ் பல்கலைக்கழகத்துக்கு ஊடக பயிற்சி நெறிக்கு 180 மில்லியன் ரூபாவை டென்மார்க் அரசு ஒதுக்கியது. இதனை நடைமுறை படுத்தும் பொறுப்பை புதுடில்லி னெஸ்கோ கேட்டு பெற்றுக்கொண்டது. ஊடகக் கல்வியை செயற்படுத்தும் பொறுப்பு அருட்செல்வம் என்ற தமிழகம் மனோன்மணியம் சுந்தரர் பல்கலைக்கழக விரிவுரையாளரிடம் ஒப்படைக்க பட்டது. யார் இந்த அருட்செல்வம்? விடுதலை புலி எதிர்ப்புக் கருத்தை கொண்டவர். அதே கருத்தை கொண்ட றோவின் ஆளான பேராசிரியர் சூரியநாராயணன் விடுதலை புலிகளுக்கு எதிராக புத்தகங்களை வெளியிடுவதை தொழிலாகச் செய்பவர் என்று சொல்ல படுவதுண்டு. இந்த அருட்செல்வம் யாழ் பல்கலைக் கழகத்தில் 6 மாத contractல் நுழைந்தார். 6 மாதங்கள் முடிந்த பின்னரும் இவர் இந்தியா செல்லவில்லை! இவரது யாழ் பாண contractஐ நீடிக்கும்படி டில்லியில் பார்த்துக் கொண்டார்கள். இப்போது 2 ஆண்டுகளாக யாழ் பாணத்தில் தொடர்கின்றார். இவர் யாழ்ப்பாண ஊடகவியாலாளர்களுடன் கற்பித்தல் என்ற காரணத்தால் நெருங்கி பழகச் சந்தர்ப்பம் அதிகம். யாழ் பாண பத்திரிகைகளில் ழைந்து, அவற்றின் லே-அவுட் சரியில்லை, சரியான விதத்தில் லே-அவுட் செய்து கொடுக்கிறேன் என்று தானாகவே உதவ முன்வந்தார் என்று சொல்ல படுகிறது. இவரை யாழ் தினக்குரல் மட்டும் உள்ளே நுழைய அனுமதித்தது. அதனுள் நுழைந்து இந்திய ஆதரவு பத்திரிகையாக அதனைச் செலுத்தத் தொடங்க ஆபத்தினை உணர்ந்த நிர்வாகம் அவரிடம் இருந்து விலகியது என்று சொல்கிறார்கள். இவர் மூலமாகத்தான் மீடியாவுடன் சம்பந்த பட்ட யாழ் நகர்வாசிகளை றோ கவர் பண்ண இருப்பதாக ஒரு கதை உளவுவட்டாரங்களில் மிக பிரசித்தம். இந்தியக் கடற்பிரதேசத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களில் சிலர் அவ்வ போது வழிதவறி இலங்கைக் கடல் எல்லைகளுக்குள் ளைவது அவ்வப்போது நடக்கும் காரியம்தான். அவர்களை சிலசமயங்களில் இலங்கைக் கடற்படையினர் கைது செய்வார்கள். விசாரணைக்காக வடபகுதிக்கு கொண்டும் செல்வார்கள். ஆனால் விசாரணை முடிவடைந்த பின்னர் இவர்கள் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க படுவார்கள் அல்லது, இந்தியக் கடலெல்லைக்குள் கொண்டுபோய் விடப்படுவார்கள். யாழ் பாணத்தில் நடமாட அனுமதிக்க பட மாட்டார்கள். இதுதான் வழமை சமீப காலமாக. வழிதவறி வந்துவிட்ட இந்திய மீனவர்கள் என்ற பெயரில் சிலர் நகருக்குள் நடமாடுவது அவதானிக்க பட்டிருக்கிறது. இவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து நாட்டுக்குள் கொண்டு வந்தார்களா? அப்படிக் கைது செய்திருந்தால் எப்படி நகருக்குள் நடமாட அனுமதித்தார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை! எப்படியிருந்தாலும் ஒரு மிகவும் unusual situation. இது. immigration formalities எதுவும் முடிக்க படாமல் யாழ் பாணத்துக்குள் நடமாடும் வெளிநாட்டவர்கள்! இவர்கள் எப்படி உள்ளே வந்தார்கள்? எப்படி வெளியே போவார்கள் அல்லது எப்போது போவார்கள்? உளவு வட்டாரங்களில் இது சம்பந்தமாக கூற படும் முக்கிய தகவல். இலங்கை-இந்திய கடல் எல்லைகள் வரை இந்தியக் கடற்படையின் கப்பல்களில் வரும் சிலர், இலங்கைக் கடற்பகுதி தொடங்கும் இடத்தில் வைத்து மீனவர் படகுகளில் ஏற்றப்படுகின்றனர். அந்த மீனவர் படகுகள்தான் வடபகுதிக் கடற்கரைகளை நோக்கிச் செல்கின்றன! அப்படியானால் அவங்க யாருங்க சார்?
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
2. டி பி எஸ் ஜெயராஜ் - சண்டே லீடர் ஆவணி 21, 2005 "புலிகளுக்கு முன்னால் உள்ள ஒரே தெரிவு தமது அகம்பாவத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு கருணாவுக்கான இடத்தைக் கொடுப்பதுதான். கருணாவை தனியான ஒரு தரப்பாக கொழும்பும் கிளிநொச்சியும் கட்டாயம் நடத்த வேண்டும். நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளில் கருணாவும் அவரது ஆதரவாளர்களும் மூன்றாம் தரப்பாக அமரவைக்கப்படுதல் அவசியமாகும். இதன்மூலம் கருணா முன்னணி அரசியல் - ராணுவச் சக்தியாக ஆக்கப்படுவதோடு, அரசியல் ஜனநாயக நீரோட்டத்திலும் கலக்கப்படுதல் அவசியமாகும். கருணாவை போரின் வேட்டை நாயாகப் பார்க்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்". "ஆயுதங்கள களையப்பட்ட பின்னர் ஏனைய ஆயுதக் குழுக்களுக்கு புலிகளால் வழங்கப்பட்ட தண்டனைகளைப் பார்க்கும்போது, கருணாவிடம் இருந்து ஆயுதங்களைக் களையுங்கள் என்று கேட்பது நகைப்பிற்குரியது. பிரபாகரன் ஆயுதங்களைக் கீழ் வைத்தால் ஒழிய கருணா ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டிய தேவை இல்லை. ஆனால் இடைக்கால தீர்வாக மோதல் தவிர்ப்பு சூழ்நிலையினை பிரபாகரன் தரப்பும் கருணா தரப்பும் ஏற்படுத்திக் கொள்வது சாத்தியமானது. புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டோ அல்லது கருணாவுடன் சுமூகமாக மோதல் தவிர்ப்பு நிலைக்கு வந்தால் மட்டுமே கிழக்கில் நடக்கும் சகோதரப் படுகொலைகளை நிறுத்த முடியும். பிரபாகரனோ அல்லது கருணாவோ இம்மோதல்களில் தோற்றால்க் கூட, நேரடியாகப் பாதிக்கப்படப்போவது கிழ்க்குத் தமிழினம் அடங்கலான ஒட்டுமொத்தத் தமிழினமும் தான்". 3. ரோகினி ஹென்ஸ்மன் - தி ஹிந்து , சென்னை, ஆவணி 22, 2005 "புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தம், பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம், பிரபாகரன் தரப்பு, கருணா தரப்பு ஆகியவற்றை சம அந்தஸ்த்துள்ள தரப்புக்களாக அமர்த்துவது அவசியமானது. முக்கியமாக, கருணா தரப்பினருக்கும், பிரபாகரன் தரப்பினருக்கும் இடையிலேயே பெரும்பாலான மோதல்கள் நடந்துவருவதால், அவர்களுக்கிடையிலேயே யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்யப்படுவதும் அவசியமானது. ஆக மொத்தத்தில் அரசு, பிரபாகரன் தரப்பு கருணா தரப்பு ஆகிய முத்தரப்புக்களுக்கும் பொதுவான யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்று மிக அவசியமானது. சிலவேளைகளில் பிரபாகரன் தரப்பு யுத்த நிறுத்தத்தில் இருந்து விலகிக் கொண்டாலும் கூட கருணா தரப்பிற்கும் அரசுக்குமிடையிலான யுத்த நிறுத்தம் ஒன்று செய்யப்படுதல் மிக அவசியமானது. கிழக்கில் இடம்பெற்று வரும் மனிதவுரிமை மீறல்கள் மற்றும் யுத்த முனைப்புக்களை குறைக்க இது அவசியமானது. ஆகவே, கருணா தரப்பை சம அந்தஸ்த்துள்ள தரப்பாக மதிப்பதன்மூலம், கிழக்கில் அமைதியினை உருவாக்க முடியும்".
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
இந்திய றோவின் திருகுதாலங்களும் கருணாவும் ஆக்கம் : சச்சி சிறிகாந்தா இணையம் : தமிழ் நேஷன் காலம் : 22 ஆவணி 2005 சங்கீத விற்பன்னர்களான சுப்புலக்ஷ்மியாக இருக்கட்டும், மதுரை மணி ஐய்யராக இருக்கட்டும் அல்லது சீர்காழி கோவிந்தராஜனாக இருக்கட்டும், இவர்களின் குரலைக் கேட்ட ஒரு சில நொடிகளிலேயே பாடுவது இன்னார்தான் என்பதனை தமிழ் மக்கள் துல்லியமாக இனங்கண்டுகொள்வார்கள். இந்த ஒவ்வொரு பாடகர்களுக்கும் உரித்தான தனித்தன்மையான குரலும், நுணுக்க அசைவுகளும் தமிழரின் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதால் அவர்களின் குரலினை அடையாளம் காண்பது அவர்களுக்கு இலகுவானது. அவ்வாறே தமது அன்றாட வாழ்க்கையில் கடந்த 15 - 20 வருடங்களாக இந்தியாவின் மிகக் கேவலமான உளவுப்பிரிவு, றோ செய்துவரும் கைங்கரியங்களை இனங்கண்டுகொள்வதும் தமிழர்களுக்குக் கடிணமானது அல்ல. றோவின் நாசகாரக் கைகள் தமது கற்பனைக்கும் அப்பாற்பட்ட நிகழ்வொன்று நடைபெறும்போது அதனைப்பற்றி அளவுக்கதிகமாக தனது ஊடக அடிவருடிகள் மூலம் எழுதிக்கொள்கிறது. ஆனால், எந்தச் சுரமும் அற்று வெற்றுக் கீதங்களாக றோவினால் புனையப்பட்டு மீட்டப்படும் இந்த சுதிகெட்ட பாடல்களை தமிழ்மக்கள் திரும்பியும் பார்ப்பதில்லையென்பது வேறுவிடயம். சர்வதேச புலநாய்வு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்து வரும் அமைப்பொன்றின் தகவல்களின்படி சுமார் 8000 இலிருந்து 10,000 உளவாளிகள் றோவுக்காக இயங்குவதாகவும், இவர்களுக்கான வருடாந்தச் செல்வாக இந்திய ரூபாயில் குறைந்தது 1,500 கோடிகள் றோவினால் வாரியிறைக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. இந்தப் பணத்தில் ஒருபகுதி இலங்கையில் ஈழத்தமிழருக்கெதிரான அதன் சதிகளுக்காகப் பாவிக்கப்படுகிறது என்பதும் ரகசியமல்ல். இவ்வமைப்பின் கருத்துப்படி சுமார் 20 - 25 கோடி இந்திய ரூபாய்கள்வரை இலங்கையில் றோ தமிழருக்கெதிரான தனது சதிகளுக்கு பாவித்துவருவதாகத் தெரிகிறது. பின்வரும் இரு சம்பவங்கள் இந்திய றோவையும் அதன் அடிவருடிப் பத்தியாளர்களையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியிருப்பதாகத் தெரிகிறது. 1. வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை 2. இலங்கையரசாங்கம் 2002 சமாதான உடன்படிக்கை தொடர்பாக புலிகளுடன் பேசப்போவது வெறும் 2 நாள் இடைவெளியில் றோவின் ஊதுகுழல்களில் மூவர் எழுதியிருக்கின்றனர். இவர்களின் எழுத்துக்களின் சாராம்சம் யாதெனில், மீண்டும் கருணாவை முன்னுக்குக் கொண்டுவாருங்கள் என்பதுதான். சண்டே லீடர் பத்திரிக்கையில் புலிகள் பற்றிப் புரணிபாடும் அதே டி பி எஸ் ஜெயராஜ் தற்போது உச்சஸ்த்தானியில், "கருணாவுக்கான அங்கீகாரத்தை கொழும்பும் கிளிநொச்சியும் கட்டாயம் வழங்கியே தீரவேண்டும்" என்று கூக்குரலிட்டிருக்கிறார். அவரைப்பொறுத்தவரை கருணாவும் அவரது ஆதரவாளர்களும் ஒஸ்லோவில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் மூன்றாம் தரப்பினராக அங்கீகரிக்கப்படவேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் கருணாவும் அவரது ஆதரவாளர்களும் முன்னணி அரசியல் நீரோட்டத்தில் இணைந்து அரசியல் - ராணுவ தலைமையாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்று அவர் கோருகிறார். மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளை அவ்வப்போது எடுத்துவிடும் ஜெயராஜ் தனது கற்பனை பலூன்களில் றோவின் காற்றினை அடைத்து பறக்கவிட்டிருக்கிறார் என்பதே இங்கு நோக்கப்படவேண்டியது. அவரைப்போன்றே , மனிதவுரிமை வாதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ரோகினி ஹென்ஸ்மனும், புதிய போர் நிறுத்த உடன்படிக்கை முத்தரப்பினரான அரசாங்கம், பிரபாகரன் பிரிவு, கருணா பிரிவு ஆகியவற்றை உள்ளடக்க வேண்டும் என்று கூவியிருக்கிறார். இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவெனில் பெரும்பாலான மோதல்கள் புலிகளுக்கும் கருணா குழுவுக்கும் இடையிலேயே அண்மைக்காலமாக நடந்துவருகிறது என்பது. ஆகவே, யுத்த நிறுத்தம் என்பது முத்தரப்புக்களிடையேயும் செய்யப்படுதல் அவசியமாகிறது. ஆனால், ஜெயராஜினதும் ரோகினியினதும் கோரிக்கைகளில் பாரிய ஓட்டைகள் உள்ளன. கிழக்கில் இரு தரப்புக்கள் மட்டுமே தமக்கான கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைக் கொண்டிருக்கின்றன. ஒன்று அரசாங்கம், மற்றைய தரப்பு புலிகள். 2004 சித்திரையில் உயிரைக் கைய்யில் பிடித்துக்கொண்டு, கல்களிடையே வாலைச் சுருட்டிக்கொண்டு கருணா கொழும்பிற்குத் தப்பியோடியபின்னர் அவரின் கட்டுப்பாட்டின்கீழ் ஒரு சிறு நிலப்பகுதிகூட இப்போது இல்லையென்பது இவர்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. கடந்த 20 வருடங்களில் றோவின் அடிவருடி பத்தியெழுத்தாளர்கள் ஒரு சகதிக்குள் சிக்குண்டிருப்பதாகவே படுகிறது. இலங்கையின் பாராளுமன்ற நிகழ்வுகள்பற்றி இவர்களுக்குச் சற்றேனும் அறிவு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 1980 களின் நடுப்பகுதியிலிருந்து 1994 வரை காமினி திஸாநாயக்காவே இவர்களுக்கான தகவல்களை வழங்கிவந்தார். 1989 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரின் இறுதி நிகழ்வுகளின்பொழுது றோ சார்பான இரங்கல் உரையினையே காமினி திஸாநாயக்கா படித்திருந்தார். காமினி திஸாநாயக்காவின் மரணத்தின்பின்னர் றோவிற்கான தகவல் வழங்குனராக லக்ஷ்மன் கதிர்காமர் திறம்படச் செயலாற்றியிருந்தார். ஆனால், லக்ஷ்மன் கதிர்காமரும் திடீரென்று அகற்றப்பட்ட பின்னர் றோவுக்கான தகவல்கள் சடுதியாகத் தடைப்பட்டுப் போனது. ஐக்கிய தேசியக் கட்சியில் காமினி அரசியலில் செயற்திறன் மிக்கவராகத் திகழ்ந்தார். அநுர பண்டாரநாயக்காவை தனது அருகில் வைத்துக்கொள்ளுமுன்னர், லக்ஷ்மன் கதிர்காமர் ஒரு செயல்வீரனாக சந்திரிக்காவுக்குத் தெரிந்தார். ஆகவே, றோவுக்கான ஏஜெண்டுக்களை கொழும்பு அரசாங்கத்தில் மிகச் சுலபமாக அதனால் நிலைநிறுத்த முடிந்திருந்தது. ஆனால், இப்போது முன்னாள் ஆயுதக் குழுத் தலைவரும், துணைராணுவக் குழு - அரசியல்க் கட்சி பிமுகருமான டக்கிளஸ் தேவாநந்தாவையே சந்திரிக்கா அரசின் செய்திகளைத் தமக்குக் காவிவரும் ஏவலாளியாக றோ வைத்திருக்கிறது. ஆனால், இந்த தேவாநந்தாவினால் சந்திரிக்காவின் உள்வட்டத்தை நெருங்குவதைக் கனவில்க் கூட நினைத்துப் பார்க்கமுடியாது. சந்திரிக்காவைப் பொறுத்தவரை டக்கிளஸ் எனும் ஆயுததாரி ஒரு ராணுவ வீரனுக்கான தகைமையையோ, கூலிகளுக்குக் கொல்லும் துணைப்படையினனுக்கான தகைமையையோ கொண்டிருப்பதாக அவர் சிறிதும் நம்பவில்லைபோலத் தெரிகிறது. ஆகவேதான் கருணாவை சந்திரிக்காவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ராணுவ நிபுணனாக, கொலைக்குழுத் தலைவனா நிறுத்த றோவும் அதன் பத்தியெழுத்தாளர்களும் அரும்பாடுபட்டு வருவது தெரிகிறது. றோவின் ஊதுகுழல்களாகச் செயற்பட்டுவரும் ஹிந்துஸ்த்தான் டைம்ஸின் பாலச்சந்திரன், சண்டே லீடரின் ஜெயராஜ், ஹிந்துப் பத்திரிக்கையின் ரோகினி ஆகிய மூவரின் அபத்தப் புனைவுகள் உங்களுக்காகக் கீழே தரப்படுகின்றன. 1. பி கெ பாலச்சந்திரன் - ஹிந்துஸ்த்தான் டைம்ஸ், ஆவணி 20, 2005 "புலிகளைப்பொறுத்தவரை கிழக்கில் அவர்களின் இருப்பென்பது மிகவும் பலவீனமானதாகவே படுகிறது. அங்கே அவர்களின் கட்டுப்பாட்டின் அஸ்த்தமக் காலம் தெரிவதோடு, அங்குள்ள பல்லின சமூகமும் அவர்களின் இருப்பிற்கு உதவப்போவதில்லை. வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரியாத போதிலும், கருணாவின் இருப்பென்பது, அவர்களை ஏனைய போராளிக் குழுக்களை விழிப்பதுபோல "துணைராணுவக் குழுக்கள்" என்று புலிகள் விழித்தாலும் கூட, புலிகளின் ஆயுதம் தரிக்காத அரசியல் போராளிகளின் பாதுகாப்பிற்கு மிகக் கடுமையான அச்சுருத்தலை கருணாவினால் கொடுக்க முடியும்". "கருணாவை சட்டைசேயத்தேவையில்லை என்று புலிகள் உதறித் தள்ளினாலும் கூட, அவரது பெயர் புலிகளுப் பெரும் அச்சுருத்தலாகவே இப்போது உச்சரிக்கப்பட்டு வருகிறது. தம்முடன் சில மாதங்களுக்கு முன்னர் வரை இருந்த கருணாவின் ஆதரவாளர்களே தமக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வல்லமையினைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை புலிகள் மறுக்கமுடியாது". "கருணாவின் பிரச்சினை அரசைப் பொறுத்தவரை பெருத்த சவாலாகவே மறியிருக்கிறது. கருணாவுக்கெதிராகச் செயற்படுவதோ அல்லது அவருக்கு தாம் வழங்கிவரும் ஆதரவினை நிறுத்துவதென்பதோ அரசுக்கு இலகுவான முடிவாக இருக்கப்போவதில்லை. ராணுவத்தின் சில படைப்பிரிவுகள் கருணாவை வெளிப்படையாகவே ஆதரித்துவருவதாகப் பேசப்படும் நிலையில், அவரைத் திடீரென்று கைவிடுவது தமது அரசியல் நிலையினைப் பலவீனமாக்கும் என்று அரசு நன்கு அறிந்தே வைத்திருக்கிறது. இதற்கான மிக முக்கிய காரணம், புலிகளைப் பலவீனப்படுத்தி பிளவுபடுத்திய கருணா தெற்கின் சிங்களவரைப் பொறுத்தவரை ஒரு வெற்றி நாயகன். கருணாவைக் கொண்டு புலிகளைப் பலவீனப்படுத்தி, பிரபாகரனின் பலத்தை முற்றாகவோ பகுதியாகவோ அழிப்பதன் மூலம் பேச்சுவார்த்தை மேசையில் அரசின் பேரம்பேசும் பலத்தினை அதிகரிக்க தெற்கின் சாதாரண சிங்கள் மக்கள் விரும்புவது தெரிகிறது". "கருணாவுக்கெதிரான ராணுவ நடவடிக்கை ஒன்றினை அரசு நடத்த எத்தனிக்குமாக இருந்தால், அதுவே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை மீறும் செயலாகிவிடும் . அதுமட்டுமல்லாமல், கருணாவுக்கெதிரான ராணுவ நடவடிக்கை என்பது புலிகளுக்கெதிரான அரசின் ராணுவ நடவடிக்கையாகப் பார்க்கப்படும் அபாயமும் இருப்பதாக அரசின் சமாதானப் பணியகத்தில் தலைவர் ஜயந்த தனபாலவின் கூற்றும் இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒன்று".
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
இணையத்தில் தன்னை ராணுவ விடயங்களின் வல்லுனர் என்று மார்தட்டி எழுதிவரும் மேத்தா ஈழத்தில் புலிகளால் பந்தாடப்பட்ட தனது ராணுவத்தின் தோல்விகரமான வரலாற்றினை திருத்தியெழுதும் கைங்கரியத்தில் ஈடுபட்டுவருகிறார். புலிகளுடனான போரில் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக அரசியல்வாதிகளையு, அதிகாரிகளையும், உளவுத்துறையினரையும் குற்றஞ்சொல்லும் மேத்தா, தான் போன்ற ராணுவ அதிகாரிகளின் கையாலாகாத்தனத்தை வேண்டுமென்றே மறைத்து வருகிறார். அவர் பங்குனி 24 இல் எழுதிய ஒரு பந்தியில் கிழக்கில் தனது ராணுவ நடவடிக்கை ஒன்றுபற்றி பின்வருமாறு எழுதுகிறார், "கருணாவைக் கொல்வதற்கு உங்களுக்கு என்ன வேண்டும் என்று எனது தளபதி என்னிடம் கேட்டார். மட்டக்களப்பு - அம்பாறை தளபதியாகவிருந்த நான் என்னிடம் இன்னும் இரு பிரிகேட்டுக்களைத் தாருங்கள், கருணாவை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறினேன். அன்று வெறும் 20 வயது இளைஞனாக இருந்த கருணா இன்று புலிகளின் கிழக்குப் பிராந்திய தளபதியாக இருக்கிறார். இந்திய அமைதிப்படையின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இருந்து லாவகமாகத் தப்பித்துவரும் அவரைப் பிடிப்பது இயலாத காரியமாக இருந்தது. என்னிடம் ஐந்து கோடி பணமிருந்தால் அவரைப் பிடித்திருக்கலாம்" என்று கூறும் மேத்தா பணப்பற்றாகுறையினாலேயே கருணாவை அன்று பிடிக்கமுடியாமற்போனதாகக் கூறுகிறார். புலிகளின் பெரும் தலைவரான பிரபாகரன் கூட இதே கேள்வியை தனது புலநாய்வுத்துறைப் பொறுப்பாளரான பொட்டு அம்மாணிடம் கருணா பிரிந்துசென்றதிலிருந்து கேட்டிருக்கலாம். அவருக்கு பணத்தட்டுபாடோ, ஆளணிப்பற்றாக்குறையோ, வளங்களின் தட்டுப்பாடோ நிச்சயம் இருக்காது. ஆனால், இன்னொரு மாத்தையா உருவாவதை அவர் நிச்சயம் விரும்பமாட்டார். அஷோக் மேத்தாவின் இந்த 5 கோடி பணம் என்பது என்னை சிந்திக்க வைக்கிறது. போர்க்களத்தில் தனது எதிரியை போரில் சிறைப்பிடிப்பதை விடுத்து, பணத்தாசை காட்டி அன்று பிடித்திருக்காலாம் என்று அவர் கூற வருகிறாரா? அதாவது கருணா விலைபோகக் கூடியவர் என்பதை இந்திய அதிகாரிகள் அறிந்திருந்தார்களா? அப்படியானால் வெறும் ஐந்து கோடிகளைக் கொடுத்து அவர்களால் அன்று அதனை ஏன் செய்யமுடியாமல்ப் போனது? இன்று கருணா அன்றிருந்ததைக் காட்டிலும் பல மடங்கு பலமானவராக மாறியிருக்கலாம். ஆகவே அன்று தேவைப்பட்ட ஐந்து கோடிகளின் பல மடங்குகளை இன்று கொடுத்திருக்கலாம் என்று அவர் கூறுவதன் நோக்கம் கடந்த இரண்டு வருடங்களில் கருணாவை இந்திய உளவுத்துறை பெருந்தொகைப் பணத்தினைக் கொடுத்தே புலிகளிடமிருந்து பிரித்து துரோகத்தினைச் செய்யத் தூண்டியதாக இவர் சொல்லாமல் சொல்கிறாரா? றோவும், அதன் நீண்ட கரங்களும் : எனது தனிப்பட்ட கருத்து றோவின் பணவளங்கள் குறித்துச் சிந்திப்பது அவசியமானது என்று நினைக்கிறேன். அமெரிக்க நிறுவனமொன்றின் இணையத்தளமொன்று பின்வருமாறு கூறுகிறது, "இந்தியாவின் மிகப்பலம் வாய்ந்த உளவுத்துறையானது இந்தியாவின் தேசியப் பலத்தினை பாதுகாப்பதிலும், இந்தியாவின் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளை வகுப்பதிலும் பாரிய தாக்கத்தினைச் செலுத்தி வருகிறது. பாக்கிஸ்த்தான் உட்பட பல அயல்நாடுகளில் தவறான செய்திகளையும், கொள்கைகளையும் பரப்புதல், நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகிய கைங்கரியங்களில் அது வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஆட்சியில் ஏறும் அரசுகள் றோவின் இந்த நடவடிக்கைகளுக்கு முற்றான ஆதரவினை வழங்கிவருகின்றன. இந்தியப் பிரதமரின் கீழ் செயற்படும் றோ அதிகாரிகளின் விபரங்கள், அவர்களின் சம்பளம், தரம் ஆகியன பாராளுமன்றத்தில் கூட பேசப்படாமல் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது" "றோ அமைப்பும் , இந்திய வெளியுறவுத்துறையும் வருடந்தோறும் 25 கோடி ரூபாய்களை அயல்நாடுகளில் தமது செயற்பாடுகளுக்காக ஒதுக்கி வருகின்றன". ஆகவே, இதன்மூலம் அறியமுடிவது யாதெனில் வருடம் தோறும் 25 கோடிகளை வெளிநாடுகளில் தமது நாசகார நடவடிக்கைகளுக்கு ஒதுக்கிவரும் இந்திய உளவுத்துறை அதில் ஒரு பகுதியினை புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதியாகவிருந்த கருணா, இயக்கத்திற்குத் துரோகமிழைத்து வெளியேறிச் செல்ல இந்தியா சன்மானமாகக் கொடுத்திருக்கலாம் என்பதுதான். இவற்றிற்கிடையில், தமிழரில் ஒரு சில செய்திகாவும் பிரிவினர் இந்திய புலநாய்வுத்துறையின் நாசகாரச் செயற்பாடுகள் பற்றிப்பேசுவதையோ, கேட்பதையோ, எழுதுவதையோ பாரிய குற்றம் என்று கருதி வாளாவிருக்கின்றனர். ஆனால் இந்திய புலநாய்வுத்துறையின் நாசகார சதித்திட்டங்கள் தற்போது பரவலாக வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன. "ஒரு நூற்றாண்டின் உளவாளிகள் : 20 ஆம் நூற்றாண்டி உளவுத்துறைகள்" எனும் புகழ்பெற்ற புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதியினை இங்கே தருகிறேன், "இந்தியா விஞ்ஞான ரீதியிலும், தொழிநுட்ப ரீதியிலும் மிகத் தீவிரமான புலநாய்வு ஆராய்ச்சிகளை அமெரிக்கா உட்பட பல நாடுகளில் மேற்கொண்டு வருகிறது. கணிணி தொழிநுட்பத்தின் மூலம் மூன்றாம் உலக சந்தையினைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரமுடியும் என்று அது எதிர்பார்க்கிறது. அமெரிக்காவில் தொடர்ச்சியாக 5 மாதங்கள் தங்கியிருந்து தனது உளவாளிகளை வழிநடத்திவிட்டு, மீண்டும் இந்தியாவுக்குச் செல்ல எத்தனித்த றோவின் உதவி இயக்குநரை இறுதிநேரத்தில் தடுத்துவைத்த அமெரிக்காவின் எப் பி ஐ பிரிவு, அமெரிக்காவில் றோவின் செயற்பாடுகள் குறித்துத் தனது கடுமையான கண்டனங்களை 1993 இல் தெரிவித்திருந்தது". "அமெரிக்கா உளவுத்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தனது உளவாளிகளை 5 மாதங்களாக அமெரிக்காவில் சந்தித்து சதிவேலைகளை முடிக்கிவிட றோவின் உதவி இயக்குநர் முயன்றார் என்றால், இலங்கையில், குறிப்பாக ஈழத்தில் எந்தவகையான நாசகாரச் செயற்பாடுகளை றோ முன்னெடுத்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்வது கடிணமானதாக இருக்கப்போவதில்லை". இது, ஜனவரி மாதம் 13 ஆம் திகதி சிலோன் டெயிலி மிரர் பத்திரிக்கையில் வந்த புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவியிருக்கும் றோ உளவாளிகள் எனும் செய்தியை மீளவும் எனக்கு ஞாபகப் படுத்துகிறது. புலிகளை கீழ்த்தரமாக விமர்சிப்பதையே தொழிலாகச் செய்துவரும் ஜெயராஜ் போன்றவர்கள் , புலிகளின் உளவுத்துறையினை எவ்வளவுதான் மோசமாக விமர்சித்தாலும் பொட்டு அம்மாணும் அவரது உளவாளிகளும் இந்தியாவின் றோ உளவாளிகள் தொடர்பாகச் செய்துவரும் விசாரணைகளும் கண்டுபிடிப்புகளும் உண்மையிலேயே அபாரமானவை. புலிகளின் ஒப்பற்ற தியாகத்தால் ஈட்டப்பெற்ற வெற்றிகளைத் தக்கவைக்க அவரும், அவரது உளவாளிகளும் செய்துவரும் சேவை போற்றுதற்குரியது. ஒரு மாதத்திற்கு முன்னால், கொழும்பிலிருந்து செயற்பட்டு வரும் இந்திய பத்திரிக்கையாளர் ஒருவருக்கு நான் எழுதிய மின்னஞ்சலில் மிகவும் காட்டமான கருத்தொன்றினை முன்வைத்திருந்தேன். "நீங்கள் உங்கள் தூதுவராலயங்களில் செயற்பட்டு வரும் அதிகாரிகள் பற்றி மிகைப்படுத்தப்பட்ட விம்பங்களை உருவாக்குகிறீர்கள். கொழும்பில் இருக்கும் இந்திய பாக்கிஸ்த்தானிய தூதரகங்கள் எப்படி இயங்குகின்றன என்பதுபற்றி எமக்குத் தெரியாது என்று நீங்கள் இன்னமும் நினைக்கிறீர்களா? இந்திய றோவினதும், பாக்கிஸ்த்தானிய ஐ எஸ் ஐ உளவுப்பிரிவினதும் உளவாளிகள் கொழும்பிலிருக்கும் தூதரகங்களில் "அதிகாரிகள்" எனும் போர்வையில் மறைந்திருப்பது ஏன்? உண்மைகள்" என்று கூறப்படும் திரிபுகளை சமைத்துக் கொடுப்பவர்கள் கூட இவர்கள் தானே?" எனது கருத்தினை எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ அந்த "உளவாளிச் செய்தியாளர்" எனக்குப் பதில் எழுதவில்லை என்பது நான் சொல்லத் தேவையில்லை. ஆனாலும், எனது முந்தைய இரு மின்னஞ்சல்களுக்கு அவர் பதில் அனுப்பியிருந்தார். நான் இதை இங்கு எதற்காக முன்வைக்கிறேன் என்றால், கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதரகத்தில் செய்தியாளர்களாகத் தொழிற்படும் பலர் ஒரே சமயத்தில் செய்தியாளர்களாகவும், றோ உளவுப்பிரிவினரின் செய்திகளைக் காவிவந்து உள்ளூரில் தமது செயற்பாட்டாளர்களுக்கு கொடுக்கும் தூதர்களாகவும் செயற்படுகிறார்கள் என்பதைக் கூறவும், இவர்கள் தொடர்பாக நாம் அவதானமாக இருக்கவேண்டும் என்பதை நினைபடுத்தவும்தான்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
கருணாவின் துரோகத்தின் இந்திய உளவுத்துறை றோவின் பங்கு மூலம் தமிழ்நேசன், ஆக்கம் சச்சி சிறீகாந்தா காலம் சித்திரை 2004 இந்தியாவின் அமைச்சரவை அதிகாரம்பெற்ற புலநாய்வு அமைப்பான றோ மிகப்பலம்வாய்ந்த ஒரு அரச வெளியுறவுத்துறை நிறுவனமாகும். இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு, பலம் மற்றும் அதன் அண்டை நாடுகளுடனான வெளியுறவுக்கொள்கைகள் என்பவற்றின் மீதான அதனது தாக்கம் மிகப் பெரியது. பாகிஸ்த்தானுட்பட பல அயல்நாடுகளில் பல நாசகார, ராஜதந்திரத்திற்கு முரணான செயற்பாடுகளை அது தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. தனது செயற்பாடுகளுக்கான தங்குதடையற்ற ஆதரவினை தொடர்ந்துவரும் இந்திய அரசுகளிடமிருந்து அது பெற்றுவருகிறது. இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் றோ அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளும் இந்தியப் பாராளுமன்றத் திற்கு தெரிவிக்கப்படாமேலேயே செயற்படுத்தப்பட்டு வருகின்றன. புலிகளிடமிருந்து தான் பிரிந்து இயங்கப்போவதாக கருணா கூறிச்சென்று ஏறக்குறைய ஒரு மாதகாலமாகிறது. இந்தியாவின் நாசகார உளவுத்துறை கருணாவின் பின்னால் உண்மையாகவே இருந்திருக்கிறதா? இனிவரும் காலங்களில் எமக்குக் கிடைக்கவிருக்கும் சாட்சிகள் இதனை உண்மையென்றோ அல்லது தவறென்றூ நிரூபிக்கப் போகின்றன என்கிறபோதும், இதுதொடர்பாக உள்ளூர் , சர்வதேச செய்திச் சேவைகளில் வெளிவந்த செய்திகளினூடு எனது பார்வையினை இங்கே பதிகிறேன். முதலாவதாக ஜனவரி மாதம் சிலோன் டெயிலி மிரர் பத்திரிக்கையில் வெளியான "புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் றோ உளவாளிகள்" எனும் தலைப்பில் சிறிநாத் பிரசன்ன ஜயசூரிய எழுதிய ஆக்கத்தினைப் பார்க்கலாம். தை 13 ஆம் திகதி அவர் அக்கட்டுரையினை எழுதிய சில மாதங்களின் பிறகு, பங்குனி 3 ஆம் நாள் கருணா தனது துரோகத்தை வெளிப்படுத்தினார். "வடக்குக் கிழக்கில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிகளுக்குள் இந்திய உளவுத்துறையான றோ உளவாளிகள் நுழைந்திருப்பதாக புலிகளின் புலநாய்வுத்துறை தெரிந்துகொண்டது". "வடக்கிலிருக்கு ராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி எழுதும் அவர், இந்திய உளவாளிகளைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளைப் புலிகள் ஆரம்பித்திருப்பதாக அவர் எழுதுகிறார். அண்மையில் தமிழ்நாட்டு வர்த்தகர் ஒருவரையும், புலிகளின் மேஜர் தரப் போராளி ஒருவரையும் மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் கைதுசெய்திருக்கும் புலிகள் இந்திய உளவுத்துறையினருடனான இவர்களின் தொடர்புபற்றி விசாரித்துவருவதாகத் தெரியவருகிறது. புலிகளின் மேஜர் தரத்தில் இருந்த போராளியொருவர் இந்தியாவின் உளவுப்பிரிவின் உளவாளியாகச் செயற்பட்டு வந்திருக்கிறார் என்பது அறியப்படுகிறது". "இது நடைபெற்று மிகக் குறுகிய காலத்தில் இலங்கை இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றில் அவசர அவசரமாகக் கையெழுத்திடும்பொழுது, வன்னியின் காடுகளுக்குள் இந்திய உளவாளிகளைத் தேடும் புலிகளின் நடவடிக்கை தொடர்கிறது. றோ உளவாளி என்று சந்தேகிக்கப்பட்டு மன்னாரில் புலிகளால் கைதுசெய்யப்பட்டிருக்கும் இந்திய வர்த்தகர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் செல்வந்தர் என்பதும், அவரிடம் பல மீன்பிடி ட்ரோலர்கள் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இலங்கைக்கு வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக வந்திருப்பதாக இவரும் இன்னும் பலரும் உல்லாசப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் எனும் போர்வையில் தமிழர் தாயகப் பகுதிகளில் இறக்கிவிடப்பட்டிருப்பதாக புலிகளின் உளவுத்துறை தலைமைக்கு அறிவித்திருக்கிறது". கருணாவின் துரோகம் எவருமே எதிர்பார்க்காத அதிர்ச்சியாக இருக்குமாக இருந்திருந்தால், ஜயசூரியவினால் இதுதொடர்பான கட்டுரையொன்றினௌஇ 50 நாட்களுக்கு முன்னர் எப்படி அனுமானித்து எழுதமுடிந்தது? 1. ஹிந்து - புரொன்ட்லைன் பத்திரிக்கைகள் பங்குனி 27 ஆம் திகதி வெளிவந்த புரொன்ட்லைன் பத்திரிக்கையில் எட்டுப் பக்க தலைப்புச் செய்தியை அக்குழுமத்தின் வழமையான விற்பன்னர்களான வி எஸ் சம்பந்தனும், டி பி எஸ் ஜெயராஜும் எழுதியிருந்தார்கள். இவ்விருவரும் தமக்குள் போட்டி போட்டு எழுதுதிக் குவித்த ஆயிரக்கணக்கான வார்த்தை ஜாலங்களின் சாரம்சம் இதுதான், அ) பிரச்சினைக்குள் அகப்பட்டுப்போயுள்ள புலிகள் - சம்பந்தன் ஆ) விரும்பப்பட்டவரும், வெறுக்கப்பட்டவரும் - சம்பந்தன் இ) ஒரு தேர்தல் முற்றுகை - சம்பந்தன் ஈ) கிழக்கின் ஆயுததாரி - ஜெயராஜ் உ) கேர்ணல் கருணாவுடன் ஒரு நேர்காணல் - சம்பந்தன் ஊ) புலிகளின் உள்வீட்டுப் பிரச்சினை - ஜெயராஜ் எ) தமிழ்ச்செலவ்னுடன் ஒரு நேர்காணல் - சம்பந்தன் ஏ) புலிகள் எதிர் புலிகள் - ஜெயராஜ் ஆனால், இவை எவற்றிலுமே இந்திய உளவுத்துறை றோ பற்றி இவர்கள் இருவரும் மூச்சுக் கூட விடவில்லை. ஆகவே றோவின் கைங்கரியம் பற்றி நாம் அறிவதற்கு இந்துப் பத்திரிக்கை குழுமத்தின் முழுப்பூசணிக்காயினை சோற்றில் மறைக்கும் இச்செயலை நாம் தண்டிச் செல்வது அவசியமாகிறது. 2. டெக்கான் ஹெரல்ட் பங்குனி 16 இல் டெக்கால் ஹெரல்ட் பத்திரிக்கையில் சுதா ராமச்சந்திரன் சில விடயங்களை மறைவின்றிப் பேசுகிறார். இலங்கையில் தற்போது நடைபெறும் விடயங்கள் தொடர்பான சாதாரண மக்களின் கருத்தினை அது பிரதிபலிக்கிறது. "கருணாவின் துரோகத்தின் பின்னால் வெளிச்சக்திகளான இந்தியாவின் உளவுத்துறை றோவோ அல்லது அமெரிக்கர்களோ இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். சிலவேளை கருணாவை அவமானப்படுத்த இவ்வகையான செய்திகள் பரப்பப்படலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதேவேளை, மிகப் பலம்பொறுந்திய பிரபாகரனை பகிரங்கமாக எதிர்ப்பதற்குக் கருணாவுக்கு நிச்சயமாக இப்படியான வெளிச் சக்திகளின் ஆதரவு இருந்திருக்க வேண்டும். புலிகளைடமிருந்து பிரிந்துசென்று எதிராகச் செயற்பட்ட பலரை பிரபாகரன் அழித்திருக்கிறார். கருணாவுக்கு என்ன நடக்கும் என்பதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்" என்று எழுதுகிறார். 3. பயணியர் இந்திய அமைதிப்படையின் மேஜர் ஜெனரலாக 1988 முதல் 1990 வரை பணியாற்றிய அஷோக் மேத்தா என்பவர் பயணியர் பத்திரிக்கையில் எழுதிய 1280 வார்த்தைகள் அடங்கிய குறிப்பில், இந்திய உளவுத்துறையினை மறைமுகமாகச் சாடுவதுடன், இலங்கை உள்வுத்துறையின் கைங்கரியமே இதுவென்று சொல்ல விழைகிறார். "இந்திய உளவுத்துறையும் இலங்கை புலநாய்வுத்துறையும் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ கருணாவை ஊக்குவித்து புலிகளிடமிருந்து பிரித்து வெளியே எடுத்திருக்கலாம் என்கிற பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. எனக்குத் தெரிந்த மட்டில் புலிகளுடனான தொடர்பினை இந்திய உளவுத்துறையான றோ இந்திய அமைதிப்படை 1990 இல் வெளியேறியதன் பின்னர் முற்றாகத் துண்டித்துக்கொண்டுவிட்டது. ஆனால், புலிகளைப் பலவீனப்படுத்தி, பிளந்திருக்கும் இந்தச் செயற்பாட்டினை எமது புலநாய்வு அமைப்பே செய்திருந்தால் நிச்சயாம் அதனை நாம் பாராட்டியே தீரவேண்டும், ஆனால் அவ்வாறானதொரு தீரச்செயலினை எமது உளவுத்துறை அண்மைக்காலத்தில் செய்திருக்கிறதா என்பதைப் பார்த்தால் அதற்கான சாத்தியங்கள் குறைவென்றே எண்ணுகிறேன். சிலவேளைகளில் இலங்கை அரசாங்கமே இந்தப் பிளவினை திட்டமிட்டு உருவாக்கியிருக்கலாம்" என்று கூறுகிறார். 1990 ஆம் ஆண்டு இந்திய ராணுவம் வெளியேறியதன் பின்னர் புலிகளுடனான தொடர்புகளை றோ முற்றாக அறுத்துவிட்டதெனும் மேத்தாவின் கருத்து ஓரளவிற்கு உண்மையாக இருக்கலாம். ஆனால், இங்கே திட்டமிட்டு மறைக்கப்பட்ட மற்றொரு விடயம் தான் புலிகளுக்கெதிரான அமைப்புக்களோடடு றோ மிக நெருக்கமான தொடர்புகளை இன்றுவரை பேணிவருவதென்பது. இந்த அமைப்புக்களும், சக்திகளும் தமிழரகாவோ, சிங்களவராகவோ அல்லது முஸ்லீம்களாகவோ இருந்தால்க் கூட, புலிகளை அழிக்கும் தனது இலட்சியத்திற்கான கருவிகளாக அவர்களைப் பாவித்து மிக நெருக்கமான தொடர்புகளை அது உருவாக்கிப் பேணியே வருகிறது. இதற்கான காரணம் என்ன? 1987 இல் இருந்து ராணுவ ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பிரபாகரனைப் பிந்தொடர்ந்து, தனது நாசகார நடவடிக்கைகள் மூலம் புலிகளைப் பலவீனமாக்கிப், பிரித்து இறுதியில் முற்றாக அழிப்பதை இன்றுவரை தனது தலையாய இலக்காகக் கொண்டிருப்பதே அதன் காரணம்!
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
இந்தியாவும் தமிழீழ விடுதலைக்கான போராட்டமும் துணைப்படைகளுக்கான ஆட்சேர்ப்பினை இந்தியாவில் மேற்கொண்டுவரும் இந்திய புலநாய்வுத்துறை றோ காலம் : ஆனி 2006 மூலம் : தமிழ்நேசன் மற்றும் தமிழ்நெட் "நாடுகளுக்கிடையேயான உறவுகள் தார்மீக அடிப்படையில் உருவாவதில்லை, மாறாக, தார்மீகத்தினை எதிர்த்தே உருவாக்கப்பட்டு தொடரப்பட்டு வருகின்றன" - ஜோதிந்திரா நாத் டிக்ஸீத், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் 1985 - 1989, வெளியுறவுச் செயலாளர் 1991 - 1994, இந்தியப் பிரதமருக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 2004 - 2005. இந்தியாவின் முன்னணிச் செய்திச் சேவைகளில் ஒன்று இன்று வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பொன்றில் இலங்கை ராணுவத்தின் துணைப்படையாக இயங்கும் கருணா குழு தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் தமிழர்களிடையே தமக்கான புதிய உறுப்பினர்களைத் தேடிவருவதாகத் தெரிவித்திருக்கிறது. பெருந்தொகைப் பணத்தினை மாதாந்தக் கொடுப்பனவாக வழங்குவதாகக் கூறியே இந்த ஆட்சேர்ப்பில் கருணா குழு ஈடுபட்டு வருகிறது. இலங்கையில் ராணுவத் துணைப்படையான கருணா குழுவின் கீழ் இயங்கிவரும் ஈழ ஜனநாயகத் தேசிய விடுதலை முன்னணி எனப்படும் அமைப்பே கருணா குழு சார்பாக தமிழகத்தில் ஈழத்தமிழர் அகதிமுகாம்களில் இருந்தும் அநாதை விடுதிகளில் இருந்தும் கருணா குழுவுக்கான உறுப்பினர்களைச் சேர்க்க முயன்றுவருவதாக உள்ளூர் செய்தியாளர்களை மேற்கோள் காட்டி இந்த செய்திச்சேவை செய்திவெளியிட்டிருக்கிறது. இலங்கை ராணுவத் துணைக்குழுவினருக்கான இந்த ஆட்சேர்ப்பு இந்திய வெளியக புலநாய்வுத்துறையான றோவின் அனுசரணையுடனும், ஆசீர்வாதத்துடனுமே நடைபெற்றுவருவதாக இந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது. ஈ என் டி எல் எப் அமைப்பின் தலைவரான பரந்த ராஜனை பயன்படுத்தி தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்திருக்கும் தமிழர்களிலிருந்து கருணா குழுவுக்கான ஆட்சேர்ப்பினை றோ மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. கருணா குழுவில் இணைபவர்களுக்கு உடனடிக் கொடுப்பனவாக 10,000 ரூபாய்களும், அவர்கள் இலங்கையை வந்தடைந்த பின்னர் மேலதிகக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் செல்லப்பிள்ளையாக இருக்கும் பரந்தன் ராஜன் எனும் துணை ராணுவக் குழுவின் தலைவர் தனது கண்காணிப்பின் கீழ் பெங்களூர் பகுதியில் அநாதை விடுதிகளை நடத்திவருவருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனது அநாதை விடுதியிலிருந்து சிறுவர்களை இலங்கையில் போர் நடவடிக்கைகளில் பாவித்தார் என்கிற பலமான குற்றச்சாட்டு அவருக்கெதிராகச் சுமத்தப்பட்டிருக்கிறதென்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. புலிகளுக்கெதிரான பல துணைராணுவக் குழுக்களுடன் நெருங்கிச் செயற்படும் பரந்தன் ராஜன், புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டே வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆரம்பத்தில் உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பில் செயற்பட்டு வந்த பரந்தன் ராஜன், இந்திய அமைதிப்படை தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நின்றகாலப்பகுதியில்,புளொட்டிலிருந்து வெளியேறி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய துணைராணுவக் குழுக்களின் உதிரிகளை இணைத்துக்கொண்டு "த்ரீ ஸ்டார்" எனும் துணைராணுவப் படையினை உருவாக்கிச் செயற்பட்டு வந்தார். 1987 ஆம் ஆண்டு, இந்தியப்படை தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நின்ற காலப்பகுதியில் இந்திய உளவுத்துறையுடன் நெருங்கிச் செயற்பட்ட பரந்தன் ராஜன், அவர்களின் உதவியுடனேயே தனது துணைராணுவப்படையான ஈ என் டி எல் எப் அமைப்பினை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. 1990 இல் இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறிய போது, ராஜனும் அவரது பல துணைராணுவக் குழு உறுப்பினர்களும் இந்தியாவுக்குத் தமது தளத்தினை மாற்றிக்கொண்டார்கள். பின்னாட்களில் பரந்தன் ராஜன் சென்னையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் இந்திய. இலங்கை அரச புலநாய்வுத்துறைகளின் சார்பாகச் செயற்பட்டு வந்தார். பரந்தன் ராஜன் கருணாவுடன் சேர்ந்து தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி எனும் துணைராணுவக் குழுவினை அமைத்துக்கொண்டபோது, இந்திய உளவுத்துறையின் பெரிதும் விரும்பப்பட்ட ஈழத்தமிழராக மாறினார். கருணா குழுவின் ஆதரவாளர்களின் கருத்துப்படி, கருணாவையும் பரந்த ராஜனையும் ஒன்றாக இயங்கும்படி பணித்தது இந்திய உளவுப்பிரிவான றோ அமைப்பே என்று கூறியிருக்கிறார்கள். பரந்தன் ராஜன் துணை ராணுவக் குழுவொன்றை வழிநடத்தியவாறே இந்தியாவில் நெடுநாள் தங்கியிருப்பதும், தங்குதடையின்றி இந்தியாவின் எப்பகுதிக்கும் சென்றுவருவதும், புலிகளுக்கெதிராகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதும் கூறும் ஒருவிடயம் அவர் இந்திய உளவுத்துறையினரால் இயக்கப்படும் ஒரு ஆயுததாரி என்பதுதான் என்று அச்செய்தி மேலும் கூறுகிறது. 2004 இல் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை ஜெயலலிதா தேடித் தேடி வேட்டையாடியபோது பரந்தன் ராஜனும் தவறுதலாக கைதுசெய்யப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், கைதுசெய்யப்பட்ட சில மணிநேரத்திற்குள்ளேயே றோ வின் தலையீட்டினால் பரந்தன் ராஜன் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்று அச்செய்தி மேலும் குறிப்பிடுகிறது. 2005 இல் இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட பரந்தன் ராஜன் மீளவும் இந்தியாவில் செயற்படுவதற்கும், அலுவலகங்களை அமைத்து இயங்குவதற்கும், ஆட்களைச் சேர்ப்பதற்கும் அவருக்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்வரை பெங்களூரிலிருந்து செயற்பட்ட ராஜன், 2006 இல் தி மு க அவின் ஆட்சியின் பின்னர் தமிழக அரசின் ஆதரவுடனும்,இந்திய புலநாய்வுத்துறையின் ஆசீருடனும் மீண்டும் சென்னையிலிருந்து செயற்பட ஆரம்பித்திருக்கிறார். தமிழகத்தில் பரந்தன் ராஜனின் இருப்பிடம் பற்றித் தமக்கு எதுவுமே தெரியாது என்று கையை விரிக்கும் தமிழகக் காவல்த்துறை "அவர் ஒரிஸாவில் எங்காவது இருக்கலாம்" என்று மழுப்பலாகப் பதிலளிப்பதாக இச்செய்தி கூறுகிறது. ஆனால், தன்னை அடையாளம் காட்டவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட தமிழக காவல்த்துறை அதிகாரியொருவர், "ராஜன் தற்போது கருணாவுடன் மட்டக்களப்பில் தங்கியிருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று கூறியிருக்கிறார். மட்டக்களப்பு தீவுச்சேனைப்பகுதியில் அமைந்திருந்த கருணா - ஈ என் டி எல் எப் அமைப்பின் முகாம் மீதான புலிகளின் தாக்குதலின்போது ஈ என் டி எல் எப் அமைப்பினை புலிகளுக்கெதிரான சக்திகளை ஒன்றிணைக்கும் ஒரு கருவியாக றோ பாவிப்பதாக இச்செய்தி கூறுகிறது. ராஜனின் செயற்பாடுகளை வழிநடத்திவரும் றோ, அவரையும் கருணாவையும் இணைப்பதன் மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தி, தமிழகத்தில் புலிகளுக்கும் பிரபாகரனுக்கு இருக்கும் ஆதரவினைக் குறைத்துவிட முயல்வதாக இச்செய்தி மேலும் கூறுகிறது. சித்திரை 2004 இல், கருணாவின் ராணுவப் பலம் புலிகளால் முற்றாகச் சிதைக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலிருந்து பெருமளவு தமிழ் துணை ராணுவக் குழு உறுப்பினர்களை இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கை ராணுவம் வரவழைத்திருக்கிறது. புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தில் ஈடுபடுத்தவென தமிழகத்தில் தங்கியிருக்கும் ஈ என் டி எல் எப் கூலிகளை ஒருவருட நுழைவு அனுமதியுடன் சுழற்சி முறையில் அழைத்துவரும் இலங்கை அரசு, புலிகளுக்கும் தமிழருக்கும் எதிரான நாசகார நடவடிக்கைகளில் வடக்குக் கிழக்கில் ஈடுபடுத்தி வருகிறது. இலங்கை ராணுவத்திற்கும் புலிகளுக்குமிடையே ஆரம்பித்திருக்கும் சிறியளவிலான இப்போர் நடவடிக்கைகளால் குறைந்தது 3000 தமிழர்கள் தமிழகத்தில் தற்போது தஞ்சமடைந்திருப்பதாகவும் இச்செய்து கூறுகிறது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
"தெரிந்த ரகசியம்" சிவராமை கருணாவே கொன்றான் என்பது புலிகளுக்குத் தெரிந்தே இருந்தது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் அரச புலநாய்வுத்துறையும், தமிழ் துணைராணுவக் குழுவும் இப்படுகொலையின் பின்னால் இருப்பதாக வெளிப்படுத்தியிருந்தார்கள். சிவராமைக் கொன்றவர்களைக் கைதுசெய்வதில் பொலீஸாருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் விசாரணைகள் இங்கிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமற்றதாகவே படுகிறது. அரசின் பலம்வாய்ந்த ஒரு பிரிவு மக்களைக் கடத்திச் சென்று படுகொலை செய்யும்போது, பலமற்ற இன்னொரு பிரிவு அப்படுகொலைகளை விசாரிப்பதென்பது இயலாத காரியம். ஆகவே, சிவராமின் படுகொலையும் விசாரிக்கப்படமுடியாத படுகொலைகளின் நீண்டுசெல்லும் பட்டியலில் சேர்க்கப்படப்போகிறதென்பது திண்ணம். தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிவராமை கருணாவே கொன்றான் என்பது ஓரளவிற்குத் தெரிந்த "ரகசியம்" என்றே எண்ணத் தோன்றுகிறது. கருணாவே சிவராமைக் கொன்றான் என்பதை புலிகள் வெளிப்படையாகக்ச் சொல்லாமைக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது, தமக்குச் சார்பான பத்திரிக்கையாளர் ஒருவரைக் கருணாவோடு இணைந்து ராணுவப் புலநாய்வுத்துறை கொல்வதென்பது, மீதமிருக்கும் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான பத்திரிக்கையாளர்களை முடக்கிப் போட்டு விடும் என்பது மட்டுமல்லாமல், கருணாவுக்கு தேவையற்ற விளம்பரத்தை வழங்குவதையும் அவர்கள் விரும்பியிருக்கவில்லையென்றும் சொல்லப்படுகிறது. அதேவேளை, தனது பழிவாங்கலினை நேர்த்தியாகச் செய்துமுடித்த கருணாவினால்க் கூட சிவராமைக் கொன்று பழிதீர்த்த தனது வீரப் பிரதாபத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமற் போய்விட்டது. தனது பிரதேசவாத மாயைக்குள் சில அடிவருடிகளை இழுத்துவைத்திருக்கும் கருணா, தனது சொந்தப் பழிவாங்களுக்காகவே மட்டக்களப்பைச் சேர்ந்த சிவராமைக் கொன்றான் என்பது வெளிவரும் பட்சத்தில் அவர்களுக்குள் தான் பற்றிய சந்தேகங்கள் எழலாம் என்று அவன் கருதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்படுகொலையில் இருக்கும் மிக முக்கியமான அபாயம் யாதெனில், இனிவரும் கொடூரமான பலபடுகொலைகளுக்கு இது முன்னோடியாக இருக்கப்போவதுதான். சந்திரிக்காவின் அரசாங்கத்திலிருக்கும் மிகப் பலம் வாய்ந்த அமைச்சரும், ராணுவப் புலநாய்வுத்துறையினருடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டுவருபவருமான ஒருவரின் ஆசீர்வாதம் இப்படுகொலையின் பின்னால் இருந்திருக்கிறதென்பது மிகவும் ஆபத்தானது. அரச ஆதரவுடன் இனிமேல் நடக்கவிருக்கும் இம்மாதிரியான பல படுகொலைகளைத் தடுப்பதற்கு காட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். சர்வதேசத்திலிருந்து வரக்கூடிய அழுத்தங்களினால் மட்டுமே இவ்வாறான அரச மயப்படுத்தப்பட்ட படுகொலைகளை தற்காலிகமாத் தன்னும் நிறுத்திவைக்க முடியும். ஆங்கில மூலம் : டி பி எஸ் ஜெயராஜ் தமிழில் : ரஞ்சித் உங்கள் போன்றவர்களின் ஆதரவே என்னை தொடர்ந்தும் இத்துரோகிகள் பற்றித் தேடித் தேடி எழுதத் தூண்டுகிறது. மிக்க நன்றி சிறி !
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
சிவராமின் கொலையாளி இன்றும் தான் கிழக்கு மாகாண மக்களின் விடிவெள்ளியென்று தன்னைக் கூறிக்கொண்டு திரிகிறான். அவன் பின்னாலும் ஒரு கூட்டம் திரிகிறது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
மயக்கமுற்று வீழ்ந்திருந்த சிவராமை அருகிலிருந்து சுட்டுக்கொன்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்ட கருணா ! தமிழினத்திற்கெதிராக ஒரு மட்டக்களப்புத் தமிழனால் இழைக்கப்பட்ட துரோகம் என்று கருணாவின் செயலை சிவராம் கடுமையாக விமர்சித்து வந்தார். கருணாவுடன் நட்பாக இருந்தகாலத்தில், புலிகளின் கட்டமைப்பிற்குள்ளேயே மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான தனியதிகாரங்களை புலிகளின் தலைமையுடன் பேசிப் பெற்றுக்கொள்ளுமாறு சிவராம் ஆலோசனை வழங்கியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. புலிகளிடமிருந்து கருணா பிரிந்துசென்று தனியாக இயங்குவதைக் கடுமையாக எதிர்த்துவந்த சிவராம், புலிகளின் பிளவானது தமிழ்த்தேசியத்தினைப் பலவீனப்படுத்தும் என்று அஞ்சினார். சிவராம், புலிகள் ஒரு அமைப்பாக இருப்பதையே விரும்பியிருந்தார். அதனாலேயே கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று இயங்குவதாகக் தெரிவித்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தார். அதானாலேயே, கருணாவுக்கு எதிராகவும், புலிகளின் தலைமையினை ஆதரித்தும் தன்னை வெளிப்படுத்திவந்தார் சிவராம். கருணாவை எதிர்த்து நின்ற சிவராம் கருணாவின் பிரிவின்போது பெரும்பாலான கிழக்குவாசிகள் அவரை நியாயப்படுத்தியபோது, சிவராம் தனியாளாக கருணாவின் செயற்பாடுகளை விமர்சித்து வந்தார். தனது பிரிவிற்குக் காரணமாக பிரதேசவாதத்தினைக் கருணா கையிலெடுத்தபோது, கிழக்கின் மகனான சிவராம் கருணாவின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன், பிரதேசவாதம் என்பது கருணா தனது துரோகத்தினை நியாயப்படுத்த எடுத்துக்கொண்ட ஆயுதம் என்று நிறுவியதுடன், அதனைப் பொய்யென்றும் நிரூபித்தார். அத்துடன், புலிகளிடமிருந்து பிரிந்து தனித்துச் செயற்படுவதாகக் கருணா அறிவித்து 5 நாட்களில் கருணா தனது மனைவியின் பெயரிலும், மாமனாரின் பெயரிலும் சுமார் 25 மில்லியன்களை முதலீடாக வைத்து வியாபாரம் ஒன்றினை பங்குனி 8 ஆம் திகதி ஆரம்பித்ததை சிவராம் முதன்முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். மக்களிடமிருந்து போராட்டத்திற்காகச் சேர்க்கப்பட்ட பணத்தினை கருணா தனது சொந்த நலனுக்காக கையாடியதை சிவராம் வெளிப்படுத்தியபோது கருணாவினால் அதனை சகித்துக்கொள்ளமுடியவில்லை. புலிகளின் நடவடிக்கையினையடுத்து, தனது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள கருணா கொழும்பிற்குத் தப்பியோடியபோது, "போர்க்களத்தை விட்டோடிய ராவணன்" என்று சிவராம் கருணாவைக் கடுமையாக விமர்சித்தார். அத்துடன், "வாழைச்சேனையிலிருந்து துறைநீலாவணைக்கு என்னால் சுதந்திரமாகச் சென்றுவரமுடியும், எனக்கொரு பயமும் இல்லை " என்று கருணாவின் ஆதிக்கத்தை அவர் பொருட்படுத்தாமல் கருத்து வெளியிட்டு வந்தார். கருணாவினால் உங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று வந்த எச்சரிக்கைகளை உதாசீனம் செய்துவந்த சிவராம், "நான் கிழக்கைச் சார்ந்தவன், என்னை எவரும் இங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது, நான் இங்கேதான் இருப்பேன், கருணாவால் முடிந்தால் வந்து பார்க்கட்டும்" என்று ஒருமுறை பகிரங்கமாகவே கூறியிருந்தார். மேலும், கொட்டாவைப் பகுதியில் ராணுவப் புலநாய்வுத்துறையின் பாதுகாப்பு இடமொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த கருணா கொலைக்குழு உறுப்பினர்கள் எண்மரைப் புலிகளின் உளவாளிகள் கொன்றுவிட்டுத் தலைமறைவாகியதை பொலீஸார் அறிந்துகொள்ளுமுன்னமே சிவராம் புலிகளை மேற்கோள்காட்டி செய்திவெளியிட்டது கருணாவை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. கிழக்கில் கருணாவுக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்களின் கருத்துப்படி, சிவராமை கருணா தனது ஜென்ம விரோதியாகவே பார்க்கத் தொடங்கியிருந்தான். சிவராமை தானே தனது கைகளால் கொல்வேன் என்றும் அவன் சபதமெடுத்திருந்ததாகத் தெரியவருகிறது. கிழக்கில் தனது கொலைப்படை உறுப்பினர்களுக்கு அவன் விடுத்த கட்டளையின்படி, "அவனை கிழக்கில் வைத்து எதையும் செய்யவேண்டாம், அவன் என் கையால சாக வேணும்" என்று கூறப்பட்டிருக்கிறது. தனது குடும்பத்தை வெளிநாடொன்றில் பாதுகாப்பாக தங்கவைத்துவிட்டு, கருணா நாடு திரும்பியிருந்தான். தெற்கில் அரசாங்கத்தின் முற்றான பாதுகாப்பில் இருந்துகொண்டே கிழக்கில் தனது கொலைக்குழுவின் மூலம் நாசகார செயற்பாடுகளை அவன் தொடர்ந்துவந்தான். கருணாவுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று அரசு தொடர்ச்சியாக அறிவித்து வந்தபோதும், கருணாவின் நலன்களைக் கவனிக்கவென்று ராணுவ புலநாய்வுத்துறையிற்குள் சிறப்புப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டது. சிவராமைக் கொழும்பில் கொல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு தனது எஜமானர்களான ராணுவப் புலநாய்வுத்துறையினரை கருணா தொடர்ச்சியாக நச்சரித்து வந்தபோதும், அவர்கள் அதற்கு உடனடியாகச் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கொழும்பில் சுதந்திரமாக, பாதுகாப்பு எதுவும் இல்லாமல் சிவராம் நடமாடியபொழுது, அவரைக் கொல்வதற்கான பல சந்தர்ப்பங்களை கருணா இதனால் இழக்கவேண்டி வந்தது. ஆனால், கருணாவால் தான் கொல்லப்படலாம் என்பதை சிவராம் அறிந்தே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சிவராமைக் கொல்வதற்குக் கருணா காத்திருந்த சந்தர்ப்பம் பொலீஸ் புலநாய்வுத்துறை அதிகாரி ஜெயரட்ணத்தின் கடத்தலோடு வந்து சேர்ந்தது. புலிகளின் புலநாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் ஜெயரட்ணம் மற்றும் இன்னும் சில அரச புலநாய்வாளர்களின் இழப்பு அரசாங்கத்திற்குப் பாரிய நெருக்கடியை உள்ளுக்குள் ஏற்படுத்தியது. குறிப்பாக ஜே வி பி யின் விமல் வீரவன்ச மற்றும் இனவாதப் பிக்குகள் இதுதொடர்பாக அரசுக்கெதிரான போராட்டங்களையும் நடத்தத் தொடங்கியிருந்தனர். ஆகவே, தமது புலநாய்வு உத்தியோகத்தர்கள் கடத்தப்படுவதற்குப் பதிலடியாக, பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் சிங்கள இனவாதிகளால் புலியென்று முத்திரை குத்தப்பட்ட, புலிகளுக்குச் சார்பானபத்திரிக்கையாளரான சிவராமைக் கடத்திக் கொல்வதென்று அரச ராணுவப் புலநாய்வுத்துறை முடிவெடுத்தது. இப்படுகொலையில் தமது உறுப்பினர்களை நேரடியாக ஈடுபடுத்துவதை விரும்பாத ராணுவப் புலநாய்வுத்துறை, கருணாவை இக்கொலைக்குப் பொறுப்பாக நியமித்ததுடன், இக்கொலைக்குத் தேவையான ஏனைய ஏற்பாடுகளை அரச ராணுவப் புலநாய்வுத்துறையூடாக வழங்குவதென்று உறுதிவழங்கியது. இத்தருணத்திற்காகக் காத்திருந்த கருணா, அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தான். அதாவது, சிவராம் உயிருடன் தனக்குக் கிடைக்கவேண்டும் , தனது கையாலேயே அவர் கொல்லப்படவேண்டும் என்பதே அது. அதனை ஏற்றுக்கொண்ட புலநாய்வுத்துறை, இனியபாரதி, பெளசர் அடங்கலாக இன்னும் இரு சிங்கள உத்தியோகத்தர்களைக் கடத்தல் நடவடிக்கைக்குப் பாவித்தது. அதன்படி, தமிழில் பேசிக்கொண்டு பம்பலப்பிட்டியில் நடமாடிய ஆயுததாரிகள் இனியபாரதியும், பெளசரும் என்பது நிரூபணமாகிறது. இரு ராணுவப் புலநாய்வுத்துறை உறுப்பினர்களின் உதவியுடன் சிவராமை அன்றிரவு கடத்திச் சென்ற இனியபாரதியும், பெளசரும் அவரை கருணா கொழும்பில் ஒளிந்திருந்த இடத்திற்கு இழுத்துச்செல்ல, அங்கே கருணா சிவராமை அருகில் நின்று சுட்டுக்கொன்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டான்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
சுட்டுக்கொன்றபின் சிவராமை வீதியில் எறிந்துவிட்டுச் சென்ற கொலைகாரர்கள் அவரை வேறு எங்காவது இழுத்துச் சென்று கொன்றிருக்கலாம். வேறு எங்காவது அவரது உடலை வீசியெறிந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மிகச்சிறிய அளவிலான இரத்தமே கணப்பட்டிருகிறது. ஆகவே, அவர் வேறு எங்கோ சுடப்பட்டு, இறக்கும் தறுவாயில் இங்கே கொண்டுவந்து வீசப்பட்டிருக்கிறார் என்பது தெளிவு. அவரது உயிர் தியவன்னா வாவியில் பிரிந்திருந்தாலும்கூட, அவரது உயிரைப் பறித்த துப்பாக்கிச் சூடுகள் வேறு எங்கோதான் நடத்தப்பட்டிருக்கின்றன. அருகில் கிடந்த வெற்றுக் கூடுகள் அவரை அங்கே கொன்றதாகக் காட்டுவதற்காக கொலையாளிகளால் வேண்டுமென்றே போடப்பட்டவை என்பது உறுதியாகிறது. இலங்கை காவல்த்துறையிடம் கொலை தொடர்பான விசாரணைகளை திறம்படச் செய்வதற்கான கருவிகள் இல்லையென்பது படுகொலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியாமல்ப் போகக் காரணமாயிருக்கிறது....... அப்படியானால், சிவராம் எங்கே வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்? இதற்கான மிக இலகுவான பதில், கொலைகாரன் எங்கே அவருக்காகக் காத்திருந்தானோ, அங்கேதான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அப்படியானால் அவரைக் கொன்றது யார்? இதற்கான ஒரே பதில் சிவராமைக் கொல்வதற்கு தனது பதுங்குமிடத்தைவிட்டு வெளியே வந்தால் அடையாளம் காணப்பட்டுவிடுவோம் என்று அஞ்சி, சிவராமைத் தனது காலடியில் கடத்திவந்து வீழ்த்தும்படி கடத்தல்க்காரர்களை ஏவிய ஒருவன். கிழக்கில் கருணாவுக்கு நெருங்கிய வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகளின்படி சிவராமை தனது கைத்துப்பாகியால் சுட்டுக் கொன்றது கருணாவே என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான காரணமாக அவர்களால் பின்வரும் சம்பவங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
விடையளிக்கப்படாத கேள்விகள் சிவராம் கடத்தப்பட்ட இரவில், அவர் மது அருந்திய விடுதிப் பணியாளர்கள் மட்டுமல்லாமல், அவருடன் அன்றிரவு மது அருந்திய ஏனைய மூவரும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவேண்டும். கடத்தல்க்காரர்கள் சிவராம் விடுதியில் இருப்பதை நன்கு அறிந்தே வைத்திருந்ததுடன், அவருக்காக சுமார் 2 மணித்தியாலங்கள் வரை அப்பகுதியில் காத்திருந்திருக்கிறார்கள். இது அவர்களுக்கு எப்படித் தெரியும், எவ்வாறு தெரியும்? சிவராம் விடுதியிலிருந்து முன்னதாகவே கிளபியிருந்தால், அவர்கள் 2 மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டியிருக்காது. சிவராமும், சகாக்களும் இரவு 9 மணிக்கே தமது மதுபானங்களுக்கான பணத்தைச் செலுத்துவிட்டுக் கிளம்பத் தயாராகியிருக்கிறார்கள். ஆனால், மீதி மூவரில் ஒருவர் இன்னும் கொஞ்சம் அருந்தலாம் என்று தொடர்ந்து மதுபானங்களை வரவழைத்திருக்கிறார். முதலில் எண்ணியவாறே 9 மணிக்கு அவர்கள் வெளியேறியிருந்தால், இக்கடத்தல் பிற்போடப்பட்டிருக்கலாம். அப்படியானால், சிவராமும் நண்பர்களும் 9 மணிக்குக் கிளம்பபப்போவதை கடத்தல்க்காரர்கள் அறிந்திருந்தார்களா? அப்படியானால் அதை அவர்களுக்குத் தெரியப்படுத்தியது யார்? அடுத்ததாக, சிவராமை பம்பலப்பீட்டி பொலீஸ் நிலையத்திற்கு முன்னால், பொலீஸ் காவலரண் வீதியைப் பார்த்திருக்க அமைக்கப்பட்டிருக்கும்போது, அங்குசென்று தனது முறைப்பாட்டினைப் பதிவுசெய்யாமல் சிவராமின் நண்பர் குசால் வெறுமனே வீடு சென்றது ஏன்? இப்படுகொலையில் மிகவும் பாரதூரமான விடயம் யாதெனில், இதன்மூலம் கொலையாளர்கள் சொல்லும் செய்தி. தமிழ் ஊடககங்கள் இருபிரதான விடயங்கள் பற்றிப்பேசுகின்றன. முதலாவது விஅடயம், சிவராம் கடத்தப்பட்ட விடுதியும், அமைவிடமும் பம்பலப்பிட்டி பொலீஸார் அதிகம் நடமாடும், காவலுக்கு நிற்கும் ஒரு பகுதியென்பதும், அவரைக் கடத்திச் சென்றவர்கள் பொலீஸ் நிலையத்தின்முன்பாக குறைந்தது 2 மணித்தியாலங்கள் வரையாவது எதுவித பிரச்சினைகளும் இல்லாமல், சுதந்திரமாக நடமாடித் திரிந்திருக்கிறார்கள் என்பது. இரண்டாவது, நாட்டின் அதியுச்ச பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கும் பாராளுமன்றத்தின் பின்புறத்தில், அரச காவல்த்துறையினதோ ராணுவத்தினதோ கண்களில் படாமல் சிவராம் படுகொலைசெய்யப்பட்டு அவரது உடல் வீதியின் அருகில் வீசப்பட்டிருப்பது. ஆக, இவற்றிலிருந்து தெரியவருவது யாதெனில், இப்படுகொலையுடன் அரசும், பாதுகாப்புத்துறையும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதுதான். வேண்டுமென்றே கொலைகாரர்களால் விடப்பட்ட சாட்சியங்கள் இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் யாதெனில், இவை எதுவுமே தவறுதலாக கொலைகாரர்களால் விடப்பட்ட சாட்சியங்கள் அல்ல. மாறாக வேண்டுமென்றே, ஒரு செய்தியை சொல்லும் நோக்கத்துடன் விடப்பட்டவை. அதில் முக்கியமான செய்தி, புலிகளை ஆதரிக்கும் தமிழ் மக்களுக்கும், தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க எச்சரிக்கை. சிவராமின் கடத்தலும் படுகொலையும் சொல்லும் இன்னொரு விடயம் இவற்றிற்கு அரச பாதுகாப்புப் பிரிவே பொறுப்பாக இருக்கிறதென்பது. தமிழ்மக்களை குறியாக வைத்து நடத்தப்பட்டிருக்கும் இப்படுகொலைமூலம், புலிகளுக்கு ஆதரவாக இருந்தால், அரசே உங்களைக்கொல்லும் என்னும் மிகத் தெளிவான எச்சரிக்கை ஒன்றினை அரசு விடுத்திருப்பதாகவே படுகிறது. அத்துடன், படுகொலை செய்யப்பட்ட சிவராம் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அருகில் வீசப்பட்டதன் காரணம், "சிங்கள பெளத்த " அரசின் அதிகாரமே இப்படுகொலையினைச் செய்கிறதென்பதைக் காட்டவே என்று கருதப்படுகிறது. இப்படுகொலையில் புரியாத விடயம் என்னவென்றால், சிவராம் கடத்தப்பட்டு இரு மணிநேரத்திற்குள்ளேயே கொல்லப்பட்டுவிட்டார் என்பது. அவரைக் கொல்வதுதான் கடத்தல்க்காரர்களின் நோக்கம் என்றால், அவரை பம்பலப்பிட்டியில் வைத்தே சுட்டுக் கொன்றிருக்கலாம். கடத்திச்சென்று அல்லற்படவேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது. ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை !