Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. தலைவருக்கும் கே பி இற்கும் இடையே 2008 இன் கடைசி நாட்களில் நடந்த ரகசிய தொலைபேசிச் சம்பாஷணையினை நாம் ஒட்டுக் கேட்டோம் - கோடாபய ராஜபக்ஷ இணையம் : கொழும்பு டெலிகிராப் காலம் : பங்குனி 10, 2016 2006 முதல் 2009 வரையான காலத்தில் இலங்கை ராணுவம் பல உயர் தொழிநுட்ப கருவிகளைப் பாவித்தும், நவீன ராணுவத் தளபாடங்களை பயன்படுத்தியும் புலிகளை ராணுவ ரீதியாக முற்றாக அழித்தது. இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு மேலதிகமாக ஆளில்லா வேவு விமானங்களின் உதவியும் போரில் வெற்றிக்குக் காரணமாக அமைந்திருந்தன. இவ்வகையானவேவு விமானம் ஒன்றினைப் பயன்படுத்தி வெளிநாட்டிலிருந்த கே பி இற்கும், வன்னியில் இருந்த பிரபாகரன் அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்றினை தாம் இடைமறித்து ஒட்டுக்கேட்டதுபற்றிய தகவல்களை அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோடாபய வெளிப்படுத்தியிருக்கிறார். புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பொறுத்தவரை தனக்கு எவ்வளவுதான் நெருங்கியவராக ஒருவர் இருந்தாலும்கூட, அவருடன் தொலைபேசியில் நேரடியாக தான் உரையாடுவதை தவிர்த்தே வந்திருக்கிறார்.இது பொதுவாக இலங்கை ராணுவத்தால் அறியப்பட்ட ஒரு விடயம். 2008 இன் இறுதி நாட்களில் அவ்வாறான நெருங்கிய புலம்பெயர்ந்த ஒருவருடன் பிரபாகரன் தொடர்புகொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. பிரபாகரனின் நெருங்கிய, நம்பிக்கைக்குப் பாத்திரமான மெய்ப்பாதுகாவப் பிரிவின் போராளியான வேலு என்பவர் தலைவர் அருகிலிருந்து கே பி உடன் தொலைபேசியில் தொடர்புகொண்டிருக்கிறார். அப்போது கே பி ற்கும் தலைவர் சார்பாக வேலுவுக்கும் இடையே நடந்த சம்பாஷணை மிகவும் முக்கியமானது. கிளிநொச்சி அரச ராணுவத்தின் கைகளுக்குள் வீழும் தறுவாயில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சம்பாஷணைபற்றித் தெரியவருவதாவது. கே பி அரசுடன் சேர்ந்து நாடகமாடி கொழும்பில் உல்லாசவாழ்வினை ஆரம்பித்த காலப்பகுதியில் செய்தியாளரான டேவிட் ஜெயராஜிடம் பேசும்போது, தனக்கும் தலைவருக்கும் இடையே நடத்தப்பட்டதாக கூறிய சம்பாஷணையின் விடயங்களைக் காட்டிலும் அதிகமான தகவல்களை கோடாபய வெளியிட்டார் என்று தெரியவருகிறது. பிரபாகரனைக் காப்பாற்றுதல் எனும் நடவடிக்கையின்போது கே பி இற்கும் தலைவருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலில், பிரபாகரன் கே பி யிடம் உதவியொன்றினைக் கேட்டதாகத் தெரிகிறது. பிரபாகரனையும், இன்னும் சில மூத்த தளபதிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து இந்தத் தொலைபேசி உரையாடல் நடந்திருக்கிறது. பிரபாகரனுடன் கடுமையான தொனியில் பேசிய கே பி, பிரபாகரன் கேட்கும் உதவியான தன்னையும் இன்னும் சில தளபதிகளையும் சர்வதேச அமைப்பொன்றின் மூலம் வெளிநாடொன்றிற்கு அழைத்துச் செல்லுதல் எனும் ஏற்பாட்டினைச் செய்வதென்றால், தான் முன்வைக்கும் இரு நிபந்தனைகளை பிரபாகரன் உடனடியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாகத் தெரிகிறது. தலைவரிடம் கே பி முன்வைத்த இரு நிபந்தனைகள், 1. 2002 இல் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பாளராக பிரபாகரனால் நியமிக்கப்பட்ட காஸ்ட்ரோவை உடனடியாகப்பதிவியிறக்கி, தன்னை மீண்டும் அப்பதவியில் அமர்த்துவது. 2. சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பாக தன்னை நியமிக்கும் அறிவிப்பினை தலைவரின் கையோப்பத்தோடு தனக்கு அனுப்பி வைப்பது. இத்தொலைபேசி உரையாடலினை இடைமறித்துக் கேட்ட ராணுவப் புலநாய்வுத்துறையினரின் தகவல்ப்படி, கே பி இனால் முன்வைக்கப்பட்ட இவ்விரு நிபந்தனைகளுக்கும் தலைவர் ஒப்புதல் அளித்ததாகத் தெரிகிறது. கே பி கேட்டுக்கொண்டதன்படி, கிளிநொச்சியில் பணியாற்றிய அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அதிகாரியூடாக இந்த பத்திரம் கே பி இற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. பிரபாகரனின் அருகில் இருந்த வேலுவிடம் பேசிய கே பி, "என்னால் உங்களைக் காப்பாற்ற முடியும், நான் கேட்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு செயற்படுங்கள்" என்று கூறியிருக்கிறார். ஆனால், இந்த தொலைபேசிச் சம்பாஷணையின் இடையே வேலுவிடமிருந்து தொலைபேசியைப் பிடுங்கிய பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்டனி கே பி இடம், "இல்லையில்லை, அதெல்லாம் வேண்டாம், எங்களுக்கு சில ஏவுகணைகளை அனுப்புங்கள், இந்த முற்றுகையினை உடைத்துக்கொண்டு, நாம் போராட்டத்தினைத் தொடர்வோம்" என்று கூறியிருக்கிறார். சில நிமிடங்களுக்குப் பின்னர், சம்பாஷணையின் தீவிரம் தணிந்த பின்னர் வேலுவிடம் பேசிய கே பி , "அவரின் முட்டாள் மகன்..." என்று சார்ள்ஸ் அன்டனிபற்றிக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். குறிப்பு : இந்தச் செய்தி கொழும்பு டெலிகிராப் பத்திரிக்கையில் இலங்கை ராணுவத்தின் சார்பாக கட்டுரைகளை வரையும் மைக்கேல் ரொபேர்ட்ஸ் எழுதியது. இவர் இங்கே கூறும் தலைவர் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டார் என்பது, தலைவர் அவ்வாறு தான் காப்பற்றப்படுவதை முற்றாகவே மறுத்துவிட்டார் எனும் தகவலுக்கு நேர் முரணானது. சிலவேளை கே பி யோ அல்லது கோத்தாவோ தலைவரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இச்செய்தியினைக் கசியவிட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. https://www.colombotelegraph.com/index.php/gotabaya-rajapaksa-clarifies-listening-in-on-kps-chats-with-prabhakarans-man-friday/
  2. கே பி தன்னை ஒரு விடுதலைப் போராளியாகவே அடையாளப்படுத்துகிறார்."மகிந்த ராஜபக்ஷ கூறுவதுபோல புலிகள் ரத்தவெறி பிடித்த பயங்கரவாதிகள் அல்ல". அவர் கூறுகிறார். "இப்போது என்ன பிரச்சினை? எனக்குப் புரியவில்லை. மே மாதம்வரைக்கும் அவர் எங்களைப் பயங்கரவாதிகள் என்றே அழைத்துவந்தார். எங்களைப்போலவே நெல்சன் மண்டேலாவும் யாசீர் அரபாத்தும் தேடப்பட்ட பயங்கரவாதிகளாக இருந்தனர். ஆனால், அவர்களை இந்த உலகம் விடுதலைப் போராளிகளாகப் பார்க்கவில்லையா? ஆனால், இலங்கை அரசாங்கம் தனக்குத் தெரிந்த அனைத்து வழிகளிலும் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, எமது விடுதலைப் போராட்டத்தை முற்றாக அழித்துவிடப் பார்க்கிறது". "எனது மக்களுக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுங்கள். அவர்களை அமைதியாக வாழ விடுங்கள். தினமும் குண்டுச் சத்தங்களாலும், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களாலும் அல்லற்படும் அவர்களின் வாழ்க்கை இனிமேலாவது அமைதியாக இருக்கவேண்டும் என்பதே எனது ஒரே கனவு". புலிகளின் ராணுவக் கட்டமைப்பை கட்டிவளர்த்த கே பி தற்போது அவ்வியக்கத்திற்குப் பொறுப்பாக இருக்கிறார். ராணுவ ரீதியில் முற்றாக அழிக்கப்பட்ட ஒரு அமைப்பிற்கு தலைமை தாங்கும் பொறுப்பு புலிகளின் தலைமைத்துவத்தில் இன்று வேறு எவரும் இல்லாததால் இவருக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், அவரால் ஆயுத ரீதியில் தொடர்ந்து போராட முடியாது, அவர் வேறு மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிரபாகரனின் நெருங்கிய வட்டத்தில் இன்று உயிருடன் இருக்கும் ஒரே நபர் என்கிற அடிப்படையில் அவருக்கு இந்த தலைமை தாங்கும் பொறுப்புக் கிடைத்திருக்கிறது. "அவர் எனது நெருங்கிய நண்பன், அவரது இழப்பிலிருந்து நான் எப்படி மீளப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லையே. நானும் அவரும் ஈழம் எனும் ஒரே கனவினைச் சுமந்தே போராடினோம்" என்று பிரபாகரனின் மரணம் குறித்துப் பேசும்போது கே பி கூறினார். முற்றும்
  3. கே பி யின் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கையின் உயர்ஸ்த்தானிகராலயம் விடுத்த பதில் செல்வராசா பத்மனாதன் தெரிவிக்கும் கூறச்சாட்டுக்களில் பின்வரும் மூன்று விடயங்கள் தெளிவுபடுத்த வேண்டும். முதலாவதாக, தன்னைத்தானே புலிகளின் தலைவராக அவர் அறிவித்திருக்கிறார். இரண்டாவதாக, காடுகளுக்குள் இன்று ஒளிந்திருக்கும் போராளிகள் அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிவார்கள் என்று அவர் நம்புகிறார். மூன்றாவது, நாம் மக்களை பாரமரித்துவரும் முகாம்களை அவர் தடுப்புச் சித்திரவதை முகாம்கள் என்று அழைப்பதோடு, மக்கள் அங்கே கொல்லப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். அவரது இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான எமது பதில் இதுதான், நாம் செல்வராசா பத்மனாதனை புலிகளின் புதிய தலைவராக அங்கீகரிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை. புலிகள் என்று எந்த அமைப்பும் தற்போது இலங்கையில் இல்லை. அவ்வாறு இயங்காத ஒரு அமைப்பிற்கு செல்வராசா பத்மனாதன் என்பவர் தலைமை தாங்குவதாகக் கூறுவது வேடிக்கை. எமது அரசால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மக்கள் மீட்பு நடவடிக்கையின் மூலம் பயங்கரவாத இயக்கமும் அதன் மொத்தத் தலைமைப்பீடமும் அவர்களின் ஆயுத வளங்களும் முற்றாக எம்மால் அழிக்கப்பட்டுவிட்டது. இலங்கையின் ராணுவம் இலங்கை நாட்டின் மொத்தக் கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பதுடன், கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நிலங்கள் அனைத்தையும் அங்குலம் அங்குலமாக கைப்பற்றி பூரண ஆதிக்கத்தினைக் கொண்டிருக்கிறது. ஆகவே, செல்வராசா பத்மனாதன் கூறுவதுபோல இலங்கையில் எந்தக் காட்டுப்பகுதியிலும் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நடமாடுவது என்கிற பேச்சிற்கே இடமில்லை. இன்டர்போல் அமைப்பினால் செல்வராசா பத்மனாதன் தேடப்பட்டு வருகிறார் என்பதும், இந்தியாகூட அவரைத் தேடிவருவதும் எங்களுக்குத் தெரியும். ஆகவே அவர் மிக விரைவாகக் கைதுசெய்யப்படுவார் என்பதையும், பயங்கரவாதிகளுக்கான ஆயுதக் கொள்வனவு உட்பட்ட இதர பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காக அவர் மிக விரைவில் தண்டிக்கப்படவிருக்கிறார். அடுத்ததாக, இலங்கை அரசாங்கம் சமாதானமான முறையில் பிரச்சினைக்குத் தீர்வு காண மறுத்துவருவதாக அவர் கூறும் குற்றச்சாட்டினை நாம் முற்றாக மறுக்கிறோம். 1985 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசாங்கம் சமாதான முயற்சிகளில் நம்பிக்கைகொண்டே செயற்பட்டு வருவதுடன், இன்றுவரை சமாதானத் தீர்வுக்கான கதவுகளை அகலத் திறந்தே இருக்கிறது. இப்போதுகூட, மிதவாதத் தமிழ்த் தலைவரும் இலங்கையின் மிகப்பெரிய தமிழ் அரசியல்க் கட்சியின் தலைவருமான ஆனந்தசங்கரி போன்றோருடன் தொடர்ச்சியான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அரசு இதயச் சுத்தியுடன் ஈடுபட்டே வருகிறது. வவுனியா தடை முகாம்களில் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று அவர் கூறுவது மிகவும் தவறான தகவலாகும். சர்வதேச சமூகத்தில் இலங்கைக்கு ஏற்பட்டுவரும் நற்பெயரினைக் களங்கப்படுத்தும் நோக்கத்திலேயே பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த திட்டமிட்ட பொய்ப்பரப்புரையினைச் செய்துவருகிறார்கள். செல்வராசா பத்மனாதன் என்பவரின் குற்றச்சாட்டுக்களுக்கு நாம் பதிலளிப்பதன் ஒரே நோக்கம், நம்பகத்தன்மைகொண்ட ஊடகமான சனல் 4 இல் அவர் இதுகுறித்துப் பேசியகாரானத்தினால்த்தான். இல்லாவிடில், ஒரு பயங்கரவாதியின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதன் மூலம் எமது நேரத்தை நாம் விரயமாக்கவேண்டிய தேவையில்லை.
  4. "பெற்றோரிடமிருந்து பிள்ளைகளைப் பிரித்துத் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். கணவனிடமிருந்து மனைவியைப் பிரித்து வைத்திருக்கிறார்கள். எமது மக்களை இந்த தடை முகாம்களுக்குள் அடைத்துவைத்து அடிமைகளைப்போல் நடத்துகிறார்கள்". "இது நிச்சயமாக தமிழ்மக்கள் மீதான மகிந்தவின் பழிவாங்கல்தான் என்பது எமக்குப் புரிகிறது. எனக்குப் புரியவில்லை, அவர் உண்மையாகவே முழு நாட்டு மக்களுக்குமான தலைவர் என்றால், எமது மக்களை உடனடியாக விடுவித்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்திருக்க வேண்டும். அரசும், ராணுவமும் எமது மக்களைத் தொடர்ந்தும் இந்த முறையில் நடத்தினால் அவர்கள் தமிழர்களிடமிருந்து இன்னொரு ஆயுதப் போராட்டத்தை எதிர்கொள்வார்கள் என்பது திண்ணம்". முகாமினுள் நிலைமைகள் வவுனியாவில் தமிழ் மக்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் உள்ள பெண்கள் மீது இலங்கை ராணுவத்தினரால் நடத்தப்பட்டுவரும் கூட்டுப் பாலியல் வன்புணர்வுகளையும், அதன்பின்னரான படுகொலைகள், காணாமற்போதல்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தமைக்காக சனல் 4 இன் ஆசியாவுக்கான நிருபர் நிக் பட்டன் வேல்ஷ் அரசால் எச்சரிக்கப்படடு வெளியேற்றப்பட்டார். இம்மக்களுக்கும் புலிகளுக்குமிடையிலான தொடர்புகள் முற்றாக அறியப்படும்வரை இம்மக்களை தாம் முகாம்களை விட்டு விடுவிக்கப்போவதில்லை என்று அரசு அறிவித்திருக்கிறது. இந்தப் பேட்டி எடுக்கப்படும் போது முகாம்களுக்குள் நிலைமை சற்று சீரடைந்தாலும், பெருமளவு மக்கள் பட்டினியினாலும், தொற்று நோய்களாலும் நாளாந்தம் இறந்துவருவதாகக் கூறுகிறார்கள் இப்பகுதியில் செயலாற்றும் நிவாரணப் பணியாளர்கள். நிவாரணப் பணியாளர்களின் அதிகாரியொருவர் இம்முகாம் நிலைமைகள் பற்றிக் கூறுகையில், "இராணுவத்தால் நாளாந்தம் கொல்லப்படும் நூற்றுக்கணக்கான தமிழர்களின் உடல்களை வெளியே தெரியாமல் அகற்றுவதென்பது சாத்தியமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் உள்ளே என்னதான் நடக்கிறதென்பதை அறிந்துகொள்வது இப்போதைக்கு முடியாது. ஆகவே, கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை என்னவென்பதும் எமக்குத் தெரியாது. இம்மக்களுக்கான உண்மையான நிவாரனத் தேவைகள் என்னவென்பதை சுயாதீனமாக அறிந்துகொள்வதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்தே வருகிறது. இது இம்மக்கள் மீது அரசு கொடுத்துவரும் நெருக்கடி தொடர்பான அச்சமும், உள்ளே நடைபெற்றுவரும் மனிதவுரிமை மீறல்களை அரசு முற்றாக் மறைத்து வருகிறதோ எனும் சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது" என்றும் கூறினார். இந்த முட்கம்பி வேலித் தடுப்பு முகாம்கள் புலம்பெயர் தமிழரை பெரிதும் பாதித்திருக்கிறது. ஆகவே, இம்முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமது உறவுகள் குறித்து அவர்கள் கடும் கவலை கொண்டிருப்பதுடன், இந்த கரிசணை அவர்களை ஓரணியாக ஒன்றிணைத்து வருகிறது. புலம்பெயர் தமிழரிடமிருந்து பெறப்பட்ட பணத்தின் மூலம் குரைந்தது 5 பில்லியன் டாலர்களை கே பி சேர்த்துவைத்திருப்பதாகவும், இவற்றினைக் கொண்டு ஆயுதங்கள் மற்றும் சொத்துக்களை அவர் வாங்கி வைத்திருப்பதாகவும், இன்னும் பெருமளவு பணம் அவரிடம் ஆயுதப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதற்கு பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருக்கிறது. இனப்போரில் குறைந்தது 80,000 மக்கள் கொல்லப்பட்டதற்கு தானும் பொறுப்பெடுக்க கே பி முற்றாக மறுத்துவிட்டார். "அவர்களே இதனைத் தொடங்கினார்கள், அவர்களே எமது மக்களைக் கொன்றார்கள். ஆகவே, இது எம்மால் திணிக்கப்பட்ட போராட்டம் இல்லை" என்று கூறிய கே பி, சிறுவர்களைப் புலிகள் இயக்கத்தில் சேர்த்திருக்கத் தேவையில்லை என்பதை ஒத்துக்கொண்டார். "நாம் சிறுவர்களைப் போரில் ஈடுபடுத்துவதை ஏற்கவில்லை. சில சமயங்களில் இயக்கத்தினுள் இருந்தவர்கள் சிறுவர்களைப் படையணியில் சேர்த்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. இது தவறுதான், இதற்காகப் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.
  5. “நாம் இப்போதும் ஒரு போரிடும் அமைப்பாகவே இருக்கிறோம், ஆயுதப்போராட்டத்தினை எம்மால் தொடர்ந்தும் முன்னெடுக்கும் வலிமை இருக்கிறது" என்று அவர் கூறினார். "எமது போராளிகளும், நண்பர்களும் இன்னமும் காடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். நாம் எமது ஆயுதங்களை மட்டுமே மெளனித்திருக்கிறோம். அவர்கள் எனது தலைமையினை ஏற்றுக்கொண்டு ஆயுதங்களை கீழே வைத்திருக்கிறார்கள்" என்று அவர் மேலும் கூறினார். "எனது சொல்லிற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். எம்மால் தொடர்ந்தும் பல வருடங்களுக்குப் போராடும் ஆற்றலும், பலமும் இருக்கிறது. எம்மைப்பொறுத்தவரை அது ஒன்றும் கடிணமான விடயம் அல்ல" என்றும் அவர் கூறினார். "எனது தலைமையின் கீழ் இன்னமும் 2000 போராளிகள் ஆயுதங்களுடன் காடுகளில் மறைந்திருக்கிறார்கள். ஆனால், நான் அவர்களை தற்போதைக்கு ஆயுதப் போராட்டத்தினைக் கைவிடுமாறு கேட்டிருக்கிறேன்". "எமது மக்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றுக்கு முன்வருமாறு சர்வதேச சமூகம் எம்மை வற்புறுத்துகிறது. ஆனால் இலங்கை அரசாங்கமோ போர் மூலமான முடிவிலேயே ஆர்வமாக இருக்கிறது. அவர்கள் அரசியல் ரீதியிலான தீர்வொன்றிற்கு முன்வர மறுத்துவருகிறார்கள்". அவர் எந்தவொரு தருணத்திலும் ஆயுதப்போராட்டத்தினைப் புலிகள் முழுவதுமாகக் கைவிட்டு விட்டார்கள் என்பதனை சொல்லவில்லை. குறைந்தது மூன்று லட்சம் தமிழர்கள் முட்கம்பி வேலிகளுக்குள் திறந்தவெளிச் சிறைச்சாலை போன்ற முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், சிங்களத் தேசியவாத ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழர்களை இம்முகாம்களில் இருந்து விடுவித்து, அவர்களுக்கான சம உரிமைகளைத் தரமறுத்தால் நிச்சயம் புலிகளின் ஆயுதப் போராட்டம் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் அவர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். "இம்முகாம்கள் உண்மையாக ஹிட்லரின் முகாம்களை ஒத்த சித்திரவதை முகாம்கள். இம்மக்கள் இம்முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு 50 நாட்கள் கடந்த பின்னரும் இன்றுவரை சுயாதீன பத்திரிக்கையாளர்கள் இம்மக்களைப் பார்வையிடுவதை மகிந்த அரசு தடுத்தே வருகிறது. மக்கள் இம்முகாம்களில் நாள்தோறும் இறந்துவருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவையோ, மருத்துவ வசிதகளையோ இநத அரசு தொடர்ந்தும் மறுத்தே வருகிறது".
  6. மூலம் : சனல் 4 பிரத்தியேக செவ்வி : தமிழ்ப் புலிகளின் புதிய தலைவருடனான செவ்வி புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு , இறுதி யுத்தத்தின்மூலம் இனப்போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்து இரு மாதங்களுக்குப் பின்னர் புலிகளியக்கத்தின் புதிய தலைவர் கே பி எனப்படும் குமரன் பத்க்மனாதன் இதுவரை காலமும் இல்லாதவகையில் வழங்கிய நேருக்கு நேர் செவ்வியின் விபரங்களை சனல் 4 வெளியிட்டிருக்கிறது இன்டர் போலின் அறிக்கைப்படி பயங்கரவாதக் குற்றச் செயல்களுக்காகவும், வாழ்க்கைக்கும், உடல்நலத்திற்கும் எதிரான நடவடிக்கைகளுக்கும் என்று 54 வயதுடைய கே பி மீது தேடப்படும் நபர் எனும் பிடிவிராந்தினைப் பிறப்பித்திருக்கிறது. சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்றும், செல்வராசா பத்மனதான் என்றும், குமரன் பத்மனாதன் என்றும் அல்லது பொதுவாக கே பி என்றும் அழைக்கப்படும் இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சுமார் 25 வருடங்களாக, உலகைச் சுற்றி வலம்வந்த இந்த கே பி 23 வேறுபட்ட கடவுச் சீட்டுக்களை வைத்திருப்பதுடன் , ஆயுதக் கடத்தல், சட்டத்திற்குப் புறம்பான கொடுக்கல் வாங்கல்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தவர். தமிழ் போராளிக் குழுவிற்கு தற்கொலைத் தாக்குதல்கள் உட்பட பல தீவிரவாதத் தாக்குதல்களுக்கான வெடிபொருட்களை சர்வதேசச் சந்தையிலிருந்து கொள்வனவு செய்து அனுப்பிவைத்தவர். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தபின்னர் 2009 ஜூலை மாதத்திலிருந்து புலிகளின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டவர். "புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டார்கள் என்கிற சிங்களப் பேரினவாதத்தின் பொய்ப்பரப்புரைகளையும் மீறி எமது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவது எமது சரித்திரக் கடமையாகும், எமது உரிமைகளை வென்றெடுக்கும்வரை அயராது போராடுவோம்" என்று அறிக்கையினை வெளியிட்டவர். "உலகின் அனைத்துப் போராட்டங்களையும் போலவே, நாமும் எமது போராட்டத்தின் வழியினையும், திட்டங்களையும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்து எமது விடுதலையினை வென்றெடுக்கத் தொடர்ந்து போராடுவோம்" என்றும் அவர் கூறுகிறார். சனல் 4 உடனான பிரத்தியேக செவ்வி வெளிவந்து ஓரிரு வாரங்களுக்குள் அவர் மலேசியாவில் ஆவணி 5 அன்று சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளின்கீழ் கைதாகிறார். பல நாடுகளுக்கூடாக இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்ட சனல் 4 இன் பத்திரிக்கையாளர்கள் கடந்த 25 வருடங்களாக இலங்கை அரசாங்கத்தினாலும், சர்வதேச பொலீஸ் சேவையினாலும் தொடர்ச்சியாகத் தேடப்பட்டு வந்த இந்த ரகசிய மனிதரை இலங்கைக்கு வெளியே ஒரு தென்னாசிய நாட்டில் நேருக்கு நேராக செவ்வி காணும் சந்தர்ப்பத்தினைப் பெற்றனர். இலங்கையின் பெரும்பான்மையினமான சிங்களவரின் கைகளில் அடக்குமுறைகளுக்கு உட்பட்ட சிறுபான்மைத் தமிழினம் இவ்வடக்குமுறைகளிலிருந்து தம்மை விடுவித்து சுதந்திரமாக வாழ்வதற்கு ஈழம் எனும் தாயகக் கனவினை நோக்கிப் போராடி வந்தனர். கடந்த மே மாதம் 2009 இல் புலிகள் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டனர். இறுதி யுத்த கணங்களில் புலிகள் இயக்கத்தின் ஸ்த்தாபகரும், தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரரன் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. அவரது வழிகாட்டலின் கீழ் பல தமிழ் அரசியல்வாதிகளும், மிதவாதத் தமிழ்த் தலைவர்களும் புலிகளால் கொல்லப்பட்டார்கள் என்று அறியப்படுகிறது. ஆகவே, பிரபாகரனினால் தனக்குப் பின்னர் இயக்கத்திற்குத் தலைமை தாங்க கே பி நியமிக்கப்படுகிறார். எமது மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர் - கே பி இறுதின்யுத்தத்தின் இறுதி நாட்களில் தாம் ஆயுதங்களை மெளனிப்பதாகப் புலிகள் ஒருதலைப்பட்சமாக அறிவிக்கின்றனர். செய்தியாளர் அலெக்ஸ் தொம்சனுக்கு கே பி தொலைபேசியூடாக அந்நாட்களில் வழங்கிய செவ்வியில், " நாம் இந்தப் போரை உடனடியாக நிறுத்த ஒத்துக்கொள்கிறோம், ஏனென்றால் எமது மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர்" என்று கூறுகிறார். "நாம் எமது மக்களைக் கட்டாயப்படுத்தி எம்முடன் அழைத்துச் செல்லவில்லை. எம்முடன் சேர்ந்து பயணிக்கும் சிவிலியன்கள் அனைவருமே ஒன்றில் எமது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள். நாம் எவரையும் மனிதக் கேடயங்களாகப் பாவிக்கவில்லை. எம்மக்கள் இலங்கை ராணுவம் தமக்குப் பாதுகாப்பினைத் தரும் என்று சிறிதும் நம்பவில்லை. ஆகவேதான் அவர்கள் எம்முடன் இருக்க விரும்புகின்றனர்". "நாம் ஒருபோதுமே எம்மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்தவில்லை. புலிகளுக்கும் ராணூவத்தினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் சிலவேளை சிலர் அகப்பட்டிருக்கலாம். எமது மக்களை நாமே கொல்லவேண்டிய தேவை என்ன?" என்று அவர் மேலும் கூறுகிறார். செவ்வி தொடரும்.........
  7. கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் கபில ஹெந்தவிதாரன ஆகியோருடன் சேர்ந்து நாடகமாடி, இறுதியுத்தத்தில் புலிகளுக்கு ஆயுதப்பற்றாக்குறையினை செயற்கையாக ஏற்படுத்தி முற்றாக அழிக்கப்படுவதற்கும், போராட்டம் தோற்கடிக்கப்படுவதற்கும் காரணமாகவிருந்த கே பி, தி ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் ஆரம்பமுதலே தலைவரை விமர்சித்தும், அவரை திறமையற்ற மூடன் என்று பொருள்படவும் பேசி, போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதே தேவையற்ற வேலை என்று தர்கித்திருந்தது நினைவிலிருக்கலாம். ஆனால், இதே துரோகி, தனது திட்டத்தின்படி நாடகமாடிக் கைதுசெய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்தின் சனல் 4 இற்குக் கொடுத்த பேட்டியினை இங்கே இணைக்கிறேன். இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் பாருங்கள்.
  8. கேள்வி : நீங்கள் 2002 இற்குப் பின் புலிகளிடமிருந்து விலகியிருந்த காலத்தில் அவர்கள் நக்ஸலைட் பயங்கரவாதிகளுக்கு உதவியிருக்கலாம் என்று கூறுகிறீர்களா? கே : அதன் பிறகு எனக்கும் புலிகளுக்கும் எந்தவித தொடர்பு இருக்கவில்லை. 2009 இல் தாங்களாகவே வந்து எனது உதவியினைக் கோரும்வரை நான் விலகியே இருந்தேன். ஆனால் நான் விலகியிருந்த 2002 முதல் 2009 வரையான காலப்பகுதியில் பெருமளவு தவறுகளைப் புலிகள் புரிந்திருந்தார்கள். அக்காலத்தில்த்தான் மாவோயிஸ்ட்டுக்களுக்கும் புலிகளுக்கும் இடையே ஆயுத ரீதியிலான தொடர்புகள் ஏற்பட்டதாக எனது நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டேன். புலிகளின் போராட்டம் தோற்றுப்போனதற்கு மாவோயிஸ்ட்டுக்களின் தொடர்பும் காரணம் என்றால் அது மிகையில்லை. கேள்வி : நீங்கள் கூறுவது உண்மைதானா? ஏனென்றால், மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய ராணூவத்தினரின் மீது நடத்தும் கண்ணிவெடித் தாக்குதல்களுக்கான பயிற்சியையும், பொருட்களையும் புலிகளே வழங்கினார்கள் என்று இந்திய புலநாய்வுத்துறை அதிகாரிகள் கூறியிருந்தார்கள் ? கே பி : நானும் அதனைக் கேள்விப்பட்டேன். இது உண்மையாகக் கூட இருக்கலாம், உறுதிப்படுத்த முடியவில்லை. இந்திய அதிகாரிகளிடம் இருந்தும், புலிகள் இயக்கத்தில் இன்னமும் இருந்த எனது முன்னாள் நண்பர்கள் மூலமும் இதனை நான் அறிந்துகொண்டேன். கேள்வி : வன்முறையினைப் பாவித்துப் போராடிய பயங்கரவாதிகளிடமிருந்து விலகி இன்று உங்களுக்கென்று ஒரு ஜனநாயகப் பாதையினைத் தெரிவுசெய்திருக்கிறீர்கள். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் கூட, நீங்கள் இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களுக்கும் உதவப்போவதாகக் கூறிவருகிறீர்கள். வன்முறை நடவடிக்கைகளிலிருந்து விலகி, சமாதானத்துடன், சமரசமாக வாழ முயற்சிப்பதாகக் கூறுகிறீர்கள். எந்த வகையில் நீங்கள் இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களுக்கு உதவுவதாக எண்ணியிருக்கிறீர்கள்? கே பி : மே மாதம் 2009 ற்குப் பின்னர் நான் வீட்டுக் காவலில் இருந்தாலும் கூட, தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது. நான் தை 2009 இலிருந்தே போரினைத் தடுத்து நிறுத்தி பெருமளவு மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க முனைந்தேன். என்னால் முடிந்தவரை இதற்கான முயற்சிகளை முன்னெடுத்தேன். ஆனால் துரதிஷ்ட்டவசமாக புலிகள் பிடிவாதமாக மறுத்து மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமானார்கள். ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் எமது மக்கள் படும் அவலங்களைக் கேட்டிருக்கிறேன். அதனாலேயே, அவர்களுக்கு சமாதானமான முறையில் வாழ்க்கையினை மீளமைக்க நான் விரும்புகிறேன். புலிப் பயங்கரவாதிகளில் ஒருவனாக இருந்து, அம்மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து அவலங்களுக்கும் நானும் ஒரு காரணம் எனும் வேதனையும், கழிவிரக்கமும் எனக்கு இன்றுவரை இருக்கிறது. ஆனால், போர் முடிந்துவிட்டது, நாம் அனைவரும் புதிய சகாப்த்தம் ஒன்றிற்குள் வந்திருக்கிறோம். இன்னொரு 100 வருடங்களுக்கு நாம் "ஈழம்" என்கிற கனவுபற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம், பயங்கரவாதச் சிந்தனைகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் எதுவுமே நடக்கப்போவதில்லை. காலிஸ்த்தான் விடுதலைப் போராட்டம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்றுவரை ஒரு சிலர் இதுபற்றிப் பேசுவதில்லையா? அதுபோலத்தான் புலிகளின் "ஈழம்" எனும் வெற்றுக் கனவும். அவர்களோடு சேர்த்து அக்கனவும் அழிக்கப்பட்டபின்னரும் இன்னமும் சிலர் அதுபற்றிப் பேசிவருகிறார்கள். புலம்பெயர் நாடுகளின் தெருக்களில் காப்பியை அருந்திக்கொண்டு போராட்டம் , வன்முறை பற்றிப் பேசும் பிரிவினைவாதிகள் இன்னமும் இருக்கிறார்கள். அழிக்கப்பட்டுப்போன பயங்கரவாதத்திற்கு மீண்டும் உயிர்கொடுக்கும் பேச்சுக்களை சில புலம்பெயர் தமிழர்கள் பேசிவருகிறார்கள். இந்த சிறிய பிரிவினைவாதக் குழு ஆதரவாளர்களுக்கு வேறு எதுவுமே செய்யமுடியாது, இப்படிப் பேசிப்பேசியே தமது காலத்தைக் கடத்திவிடுவார்கள். இவர்களுக்கு போராட்டமும், அவலமும் பணம்பார்க்கு வழி, ஆகவே அவர்கள் தொடர்ந்து இதுபற்றிப் பேசுவார்கள். நான் வைக்கோவிடமும் நெடுமாறனிடமும் புலிப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகப்பேசுவதை நிறுத்துமாறு பலமுறை கேட்டுவிட்டேன், அவர்களோ கேட்பதாக இல்லை. அழிக்கப்பட்டவர்கள் பற்றிப் பேசினால்த்தானே அவர்களுக்கு புலம்பெயர் பிரிவினைவாதிகளின் மாதச் சம்பளம் கிடைக்கும்? இதுதான் அவர்களின் பிரச்சினை. கேள்வி : தமிழ் மக்களின் அவலங்கள் பணம் பார்க்கும் ஒரு தொழில் என்று கூறுகிறீர்களா? கே பி : ஆம். அதனைபலமுறை நான் பார்த்திருக்கிறேன். 2005 அல்லது 2006 ஆம் ஆண்டுகளில் இயக்கத்திற்கு பணம் சேர்த்தவர்களின் ஆண்டு வருமானம் 300,000 டாலர்கள்வரை இருந்ததாகக் கூறப்பட்டது. கேள்வி : இதற்கான பணம் எங்கிருந்து வந்தது ? கே பி : வேறு எங்கிருந்து? எல்லாம் புலம்பெயர் தமிழர் கொடுக்கும் பணத்தில் இருந்துதான். ஆகவே, நான் இதனை நிறுத்துங்கள் என்று சொன்னால், அவர்கள் வருமானத்திற்கு எங்கே போவார்கள்? நேற்றுக்கூட லண்டனில் ஒரு வீட்டிற்குச் சென்ற புலம்பெயர் பயங்கரவாதிகள் தாம் வன்னி தலைமைக் காரியாலயத்தில் இருந்து வந்ததாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள். ஆனால், புலிகளின் வன்னித் தலைமைக் காரியாலயம் இரண்டு வருடத்திற்கு முன்னரே அழித்து இல்லாமலாக்கப்பட்டு விட்டது. இன்றும் வன்னித் தலைமைக் காரியாலயத்தில் இருந்து வருவதாகக் கூறி புலம்பெயர் தமிழரிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள். ஆனால், மக்களுக்கு இது சிறிது சிறிதாகப் புரிந்துவிட்டது. அதனால் இவர்களின் வருமானமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கேள்வி : நீங்கள் உங்கள் கடந்தகால செயற்பாடுகளுக்குப் பிராயச்சித்தமாக சமாதான வழியில் சமரசம் செய்ய நினைக்கிறீர்கள். உங்களின் எதிர்காலக் கனவு என்ன? கே பி : நான் கடந்த 35 வருடங்களாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவன். கடந்த இரு வருடங்களாக வீட்டுக் காவலில் இருப்பவன். சிலவேளை இன்னும் 10 வருடங்கள் வரை வீட்டுக் காவலில் நான் இருக்கலாம். எனது வாழ்க்கையில் இன்னும் அதிக வருடங்கள் வாழ எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்குமோ என்று எனக்குத் தெரியவில்லை. எனது மீதி வாழ்க்கையினையுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவிச் சிறுவர்களுடன் கழிப்பதையே நான் விரும்புகிறேன். இவர்களுக்குப் பெற்றோரோ, அன்போ, கல்வி வசதியோ, அல்லது எதிர்காலமோ எதுவுமே இல்லை. ஆகவேதான் இச்சிறார்களுடன் எனது இறுதிவாழ்க்கையினைக் கழிக்க விரும்புகிறேன். வன்னியில் இருக்கும் இச்சிறுவர்களோடு எனது எதிர்காலத்தை கழிக்க அனுமதி தருமாறு பாதுகாப்பு அமைச்சினைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அத்துடன், போரில் தமது பிள்ளைகளை இழந்து, ஆதரிப்பார் எவருமின்றி இருக்கும் வயதானோரையும் பராமரிக்க விரும்புகிறேன். அதேபோல, அங்கவீனமுற்றிருக்கும் பெண்பிள்ளைகளையும் பராமரிக்கும் நோக்கமும் இருக்கிறது.அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியினைப் பார்ப்பதே எனது கனவாகும்.
  9. கேள்வி : தி மு க பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன ? கே பி : வைக்கோ முன்னர் தி மு க வின் முக்கிய பொறுப்பில் இருந்தார். தி மு க வின் சில பாராளுமன்ற உறுப்பினர்களும், எம் எல் ஏக்களும் எம்முடன் நெருக்கமாக இருந்தனர். உங்களுக்குக் கருனாநிதிபற்றித் தெரியாதது இல்லை, அவர்கூட புலிகள் எனும் துரும்புச் சீட்டை அவ்வப்போது தனது அரசியல் ஆதாயத்திற்காகப் பாவித்துக்கொண்டார். பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தன்னைக் காட்டிக்கொள்வதன் மூலம் வாக்குகளை அள்ளலாம் என்று வைக்கோ நம்பினார். தமிழ்நாட்டு அரசியல்த் தலைவர்களில் பெரும்பாலானோ இந்த "புலிகள்" துரும்புச்சீட்டை தமது அரசியல் ஆதாயத்திற்காகப் பாவித்தார்கள். கேள்வி : அப்படியானால் ஜெயலலிதா ஏன்ன செய்தார்? கே பி : அவர் ஒரு மிகவும் சாதுரியமான அரசியல்வாதி. நன்றாகப் படித்தவர். இவ்வாறான விடயங்களை எப்படிக் கையாள்வது என்பதுபற்றி அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார். அவர் இப்போது முதலமைச்சராக வந்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர் என்கிற வகையில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். கேள்வி : புலிகளின் கொலைப்பட்டியலில் ஜெயலலிதாவும் இருந்தாரா? கே பி : அவர் அப்படித்தான் எப்போதுமே நம்பிவந்தார். புலிகளுக்கு எதிராக அவர் தொடர்ந்தும் பேசிவந்ததால், அவரையும் கொல்லவே புலிகள் திட்டமிட்டிருந்தார்கள் என்று நான் நம்புகிறேன். புலிகளின் உண்மையான முகத்தையும், அவர்களின் பயங்கரவாத வழிமுறைகளையும் அறிந்தவர்களுக்கு ஜெயலலிதாவைக்கொல்ல புலிகள் தருணம் பார்த்திருந்தார்கள் என்பதை நம்புவது கடிணமாக இருக்காது என்று எண்ணுகிறேன். தமக்கெதிராக ஜெயலலிதா தொடர்ச்சியாகப் பேசியும், செயற்பட்டும் வந்ததினால் அவரைக் கொல்ல பலமுறை புலிகள் முயன்றார்கள், ஆனால், இறுதிவரை அவர்களால் அவரைக் கொல்ல முடியவில்லை. கேள்வி : நீங்கள் இன்று வீட்டுக் காவலில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் கூட நீங்கள் தொடர்ச்சியாக செயற்பட்டுத்தான் வருகிறீர்கள். புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியிலும் மாறுபட்ட சிந்தனைகளை வளர்க்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். இலங்கையில் வாழும் தமிழர்கள் சிங்களவர்களுடன் சமரசமாக, ஜனநாயக அரசியலில் ஈடுபட வேண்டும், அவர்களுடன் இணையவேண்டும், எதிர்காலத்தினை ஒற்றுமையாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறுகிறீர்கள். அப்படியிருக்க, ஐ நா அறிக்கையில் இலங்கையின் அரசியல், ராணுவத் தலைவர்கள் போர்க்குற்ரங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளதுபற்றி ஜெயலலிதா அண்மையில் வெளியிட்டிருக்கும் கடுமையான கருத்துக்கள் பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன ? கே பி : அவர் ஒரு சாதுரியமான அரசியல்த் தலைவர் என்று முன்னரே கூறியிருந்தேன். அவருக்கு நிறைந்த அனுபவம் இருக்கிறது. அவர் பந்தினை இப்போது மத்தியை நோக்கி அடித்திருக்கிறார். சிலருக்கு அவர் என்ன செய்யர் விழைகிறார் என்பதுபற்றி நன்றாகத் தெரியும். ஆனால், எப்போதுமே உணர்ச்சிவயப்படும் அப்பாவித் தமிழ்நாட்டு மக்கள் "எமது அம்மா ஏதோ செய்யப்போகிறார்" என்று நம்புகிறார்கள். தமது "அம்மா", மகிந்த ராஜபக்ஷவையும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றுக்கு இழுத்துச் செல்லப்போகிறார் என்றும் நம்புகிறார்கள். ஆனால், ஜெயலலிதா இதனை ஏன் கூறுகிறார் என்பது தெரியவேண்டியவர்களுக்கு நன்கு தெரிந்தே இருக்கிறது. இதனால் இலங்கை அரசுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பது அவருக்குத் தெரியும். இந்திய மத்திய அரசு இலங்கையின் அரச, ராணுவ தலைமைக்கு மிகவும் நெருக்கமானது என்பது உலகறிந்த விடயம், இது ஒன்றும் ரகசியமல்ல. அரசியல், ராணுவ, ராஜதந்திர ரீதியில் இரு நாடுகளும் தற்போது மிக நெருக்கமாகச் செயற்பட்டு வருகின்றன. இவ்விரு நாடுகளும் 1000 வருடங்களுக்கும் மேலான மத, கலாசாரத் தொடர்பினைக் கொண்டிருக்கின்றன. இந்த நெருங்கிய பிணைப்பினை எவராலும் உடைப்பதென்பது சாத்தியமா? காங்கிரஸ் கட்சியினால்க் கூட இந்த நெருங்கிய பிணைப்பை உடைப்பது சாத்தியமாகவில்லையே? கேள்வி : தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதா எவ்வாறான பாத்திரத்தினை வகிக்கலாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? கே பி : அவர் தமிழகத்தின் முதலமைச்சர். திறமையானவர், புத்திசாலி, நிறைந்த அனுபவம் உள்ளவர். தமிழர்கள் தொடர்பாக சாதகமான முடிவுகளை அவரால் எடுக்க முடியும். எமது மக்கள் இன்று அல்லற்பட்டுக்கொன்டிருக்கிறார்கள், உணவு, உறையுள், கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு என்று சகல வழிகளிலும் அவர்களுக்கு உதவி தேவைப்படுகிரது. ஜெயலலிதா இதுதொடர்பாக நிச்சயமாக ஏதாவது செய்யமுடியும், தமிழர்களுக்கு உதவப்போவதாக அவர் கூறியிருக்கும் நிலையில், இது சாத்தியமானது என்றே எனக்குப் படுகிறது. நான் சொல்ல விரும்புவது இதைத்தான். கஷ்ட்டப்படும் எமது மக்களுக்கு உதவவேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. அவருக்கு உதவும் நோக்கமிருந்தால், அவர் இங்கு வந்து அதனைத் தாராளமாகச் செய்ய முடியும். அல்லது வேறு வழிகளில்க் கூட அதனைச் செய்யமுடியும். முதலுதவி, மருத்துவ வசதிகள் என்பவற்றிலிருந்து இதனை அவர் ஆரம்பிக்கலாம். சாகும் நிலையில் இருப்பவனுக்கு முதலுதவி கொடுப்பீர்களா அல்லது அவனுக்கு அரசியல் தீர்வு குறித்து பாடம் எடுக்கப்போகிறீர்களா என்பதுபற்றி நீங்கள் இப்போது முடிவுசெய்ய வேண்டும். எமது மக்களுக்கு இப்போது தேவையானது உணவும், மருத்துவ வசதிகளும், வேலை வாய்ப்பும் மாத்திரமே. அரசியல்த் தீர்வுகுறித்தோ அல்லது உரிமைகள் குறித்தோ எமது மக்கள் எதனையும் கேட்கவில்லையே ? எமது மக்களுக்குச் சார்பாகக் கதைப்பதாகப் பாசாங்கு செய்யும் புலம்பெயர் தமிழர்களோ அல்லது தமிழக அரசியல்வாதிகளோ, முதலில் எம்மக்களுக்கான உணவையும், மருத்துவ வசதிகளையும், வேலை வாய்ப்பையும் கொடுக்கட்டும். அரசியல் உரிமைகள் பற்றியோ அல்லது தீர்வுபற்றியோ இப்போது பேசத்தேவையில்லை. கேள்வி : தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து இலங்கையில் மனிதாபிமான திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று நீங்கள் கூறுகிறீர்களா? கே பி : நிச்சயமாக. வன்னியில் பல தொழிற்சாலைகளை அவர் நிறுவ முடியும். தமிழகத்தில் இருக்கும் தொழிலதிபர்களை இலங்கை அரசாங்கத்துடன் பேச அனுப்புவதன் மூலம், இங்கு அபிவிருத்திகளை அவர் ஆரம்பிக்க முடியும். இங்கே தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பினை அவரால் உருவாக்கித் தரமுடியும். கேள்வி : நீங்கள் புலிகளியக்கத்தின் பிரதான ஆயுதக் கொள்வனவாளராக பல காலம் கடமையாற்றியவர். இந்தியாவின் மாவோயிஸ்ட்டு கெரில்லாக்களான நக்ஸலைட் போராளிகளுக்குப் புலிகள் பயிற்சியளித்ததாக பல செய்திகள் வெளிவந்தனவே? இதுபற்றி சற்று விளக்கமாகக் கூறமுடியுமா? கே பி : 2002 வரைக்கும் எந்தவொரு வெளிநாட்டுக் கிளர்ச்சியமைப்புடனும் அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கவில்லை என்று என்னால் கூறமுடியும். அரசியல் ரீதியிலான தொடர்புகள் இருந்தாலும்கூட, ஆயுத ரீதியில் தொடர்புகளிருக்கவில்லை. 2002 வரை நான் பொறுப்பில் இருந்த காலத்தில் இவ்வாறான எந்த ஆயுதத் தொடர்பும் இருக்காதவாறு நான் பார்த்துக்கொண்டேன். ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நான் முற்றாக நிராகரித்தே வந்தேன். ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு கிளர்ச்சியமைப்பும் தனித்துவமானவை, ஆகவே இவற்றில் தலையிட நாம் விரும்பியிருக்கவில்லை. ஆகவே, மாவோயிஸ்ட்டுக்களுடன் நாம் எதுவித தொடர்பையும் பேணவில்லை. 1984 முதல் 2002 வரையான காலப்பகுதியில் நான் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தபொழுது , போராட்டம் இலட்சியம் நோக்கிச் செல்வதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு நாம் இயங்கினோம்.
  10. கேள்வி : தமிழ்நாட்டு அரசியல்த் தலைவர்கள் பழையனவற்றை மறக்கவேண்டும் என்று கூறுகிறீர்கள். அப்படிப் பழையனவற்றை மறப்பதென்றால், பழையனபற்றிய உண்மைகளும் வெளிக்கொணரப்படுதல் அவசியம் இல்லையா? நீங்கள் புலிகளியக்கத்தில் மூத்த உறுப்பினராக இருந்தவர். உங்களுக்கு அனைத்துமே தெரிந்திருக்கும். பல தமிழ்நாட்டு அரசியல்த் தலைவர்கள் தமிழ்ப் பயங்கரவாதத்தினை ஊக்குவித்து தமிழர்களை வன்முறை நோக்கித் தள்ளினார்கள் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அவர்களின் பெயர்களை கூறுங்கள் ? கே பி : போராட்டம் நடைபெற்ற காலத்தில் நாம் சில சமயம் தமிழ்நாட்டில் தங்கியிருக்கவேண்டிய நிலைமை இருந்தது. நாம் போராட ஆரம்பிக்கும்போது எமது இலட்சியம் குறிந்த்த மிகுந்த தெளிவுடனும் பற்றுறுதியுடனும்தான் ஆரம்பித்தோம். இந்திய அரசியல்வாதிகளுடன் தொடர்புகள் இல்லாமல் தனித்தே இயங்க விரும்பினோம். இந்தியாவுக்குச் சென்று எமக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு மீண்டும் தாயகம் திரும்புவதுடன் இந்தியாவுடனான எமது தொடர்புகளை மட்டுப்படுத்திக்கொண்டோம். ஆரம்பத்தில் இப்படித்தான் எமது போராட்டம் இருந்தது. ஆனால் பிரச்சினை என்னவென்றால், நாம் தமிழ்நாட்டில் எமது அலுவல்களை பார்க்கும்போது தவிர்க்கமுடியாமல் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளினது உதவியினை நாடவேண்டிய தேவையேற்பட்டது. உதாரணத்திற்கு பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையிலான சண்டை முற்றி சென்னைத் தெருக்களில் அவர்கள் சுடுபட்டுக்கொண்டு பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டபோது நாம் சில உள்ளூர் அரசியல்வாதிகளின் உதவியுடன் அவர்களை பிணையில் எடுக்கவேண்டியதாகியது. இப்படியான சந்தர்ப்பங்கள் புலிகள் இயக்கத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் செல்வாக்குச் செலுத்தும் நிலையினை உருவாக்கிவிட்டன. ஆனால், எமக்கு உண்மையான பிரச்சினை என்னவென்று நன்கு தெரியும். ராமசாமிப் பெரியார் திராவிட நாடு வேண்டுமென்று கேட்டார். வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டையும், ஆந்திராவையும், கேரளத்தையும் தனியே பிரித்து தனிநாடாக ஆக்க அவர் விரும்பினார். இந்தப் பிரிவினைவாதத் திராவிட வழியில் தோன்றியவர்கள்தான் அண்ணாத்துரையும் கருனாநிதியும். இந்தப் பிரிவினைவாத அரசியல் தமிழ்நாட்டிலேயே படுதோல்வியடைந்தது. ஆனால், இந்த திராவிட நாட்டுப் பிரிவினைவாதிகள் அரசியலில் தொடர்ச்சியாக வலம்வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இப்படியான அடிப்படைவாத பிரிவினைவாதக் கொள்கைகளைக் கொண்ட பலர் இன்னும் அங்கே அரசியலில் இருக்கிறார்கள். தம்மைச் சுற்றி உலகம் மாறிவருவதை அவர்கள் ஒருபோதும் அறியப்போவதில்லை. சிலவேளைகளில் நாம் கனவுகள் காண்பதுண்டு. ஆனால், காணூம் கனவெல்லாம் உண்மையில் நடக்குமா என்று நாம் சிந்திப்பதில்லை, அவை நடப்பதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்று சிந்திப்பதில்லை. நாம் திராவிடக் கொள்கைபற்றிய காலத்தை கணிப்பிட்டால், அது 100 வருடம் பழமை வாய்ந்த சாத்தியமற்ற தோற்றுப்போன கொள்கை. பெரியார் இறந்தபோது அவரது திராவிட நாட்டுக் கனவும் சேர்ந்தே செத்து விட்டது. ஆனால், பெரியாரின் வழிவந்த இன்றைய அரசியல்வாதிகள் இன்றும் இந்த செத்துப்போன கனவு பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களே பிரபாகரனுக்கும் இந்த பிரிவினைவாதத் தனிநாட்டுக் கோரிக்கை எனும் கனவினை ஊட்டியவர்கள். பிராமண எதிர்ப்புக் கொள்கையினையும், திராவிடச் சிந்தனைகளையும் பிரபாகரனுக்கு ஊட்டியவர்கள் இந்த திராவிடம் பேசும் அரசியல்வாதிகள்தான். இலங்கைத் தமிழர்களது போராட்டம் திராவிட சிந்தனையின் அடிப்படையில் பிராமணர்களுக்கு எதிரான போராட்டம் என்று பிரபாகரனை அவர்கள் நம்பவைத்தார்கள். இந்தத் தமிழ்நாட்டு அரைஇயல்வாதிகளே பிரபாகரனை மாபெரும் வெற்றிவீரனாக விம்பப்படுத்தினார்கள். பிரபாகரனை புராதன தமிழ் மன்னர்களுடன் ஒப்பிட்டுப் பேசிவந்தார்கள். போராட்டத்தின் உண்மையான இலட்சியத்திலிருந்து பிரபாகரனை பிழையாக வழிநடத்திச் சென்றவர்களும் இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்தான். பிரபாகரன் விட்ட அனைத்துத் தவறுகளுக்கும் இவர்களே காரணமாக இருந்தார்கள். இவர்களின் வழிகாட்டுதல்களின் பேரிலேயே பிரபாகரன் ராஜீவ் காந்தியைக் கொன்றார். பிரபாகரனைத் தவறாக வழிநடத்திக் கொன்றுவிட்டு, இன்று பிரபாகரனின் பெயரை வைத்து தமது அரசியலை நடத்துகிறார்கள். கேள்வி : ராஜீவ் காந்தியைக் கொல்லும் திட்டத்தினை தி மு க வின் வழிநடத்துதலின்பேரிலேயே பிரபாகரன் செய்தார் என்று நீங்கள் கூறுகிறீர்களா? கே பி : இதற்கு என்னால் "ஆம் " என்று வெளிப்படையாகப் பதிலளிக்க முடியாது. ஆனால், பிராமணர்களுக்கெதிரான சிந்தனையினையும், காழ்ப்புணர்வையும் பிரபாகரனுக்கு ஊட்டி வளர்த்தவர்கள் தி மு க வினர்தான் என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல. பிராமணரான ராஜீவைக் கொல்ல பிரபாகரன் திட்டம் தீட்டியதற்கு தி மு க வினரின் தாக்கமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ராஜீவ் ஒரு பிராமணர் என்பதற்காகவே பிரபாகரன் அவரை கடுமையாக வெறுத்தார். ராஜீவ் ஒரு செயல் வீரர். தமிழருக்கான தீர்வினை உடனடியாக எடுக்க அவர் விரும்பினார், ஆனால் பிராமண எதிர்ப்பால் உந்தப்பட்ட பிரபாகரன் அவரைக் கொன்றார். கேள்வி : பிரபாகரனும் வைக்கோவும் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் பரவலாக வெளிவந்திருந்தன. வன்னிக்கு வைக்கோவினால் எப்படி வரமுடிந்தது? கே பி : வைக்கோ அப்போது பாராளுமன்ற உறுப்பினராகவும், தி மு க வில் முக்கிய பொறுப்பிலும் இருந்தார். அவருக்கு கட்சிக்குள் சில பிரச்சினைகள் அப்போது தோன்றியிருந்தன. கருனாநிதிக்குப் பின்னர் தானே தி மு க வின் தலைமைப் பொறுப்பை எடுக்க அவர் விரும்பினார். ஆனால், கட்சிக்குள் இருந்த சில பலம்பொறுந்தியவர்களுக்கு வைக்கோ தலைவராக வருவதில் விருப்பம் இருக்கவில்லை. அவர்கள் கருனாநிதியின் மகன் ஸ்டலின் அடுத்த தலைவராக வருவதையே விரும்பினார்கள். இதனைத் தடுக்க தன்னைப் பிரபலமாக்கவேண்டிய தேவை வைக்கோவுக்கு ஏற்பட்டது. தன்னைப் பிரபலமாக்குவதற்கான ஒரே வழி புலிகளுக்குச் சார்பானவராகத் தன்னை காட்டிக்கொள்வதுதான் என்று அவர் எண்ணினார். தமிழ்நாட்டுத் தமிழர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்கள் புலிகளுக்குத் தார்மீக ஆதரவினை வழங்கிவந்தார்கள். அதனாலேயே அந்த உணர்வினைத் தனது அரசியல் ஆதாயத்திற்காக வைக்கோ பயன்படுத்த நினைத்தார். மக்களின் வாக்குகளைக்கவரவேண்டும் என்றால், அவர்களின் உணர்வுகளுடன் விளையாடவேண்டும் என்று அவர் விரும்பினார், அதனாலேயே பிரபாகரனைச் சந்திக்க வன்னிக்குச் சென்றார். வைக்கோ பிரபாகரனைச் சந்திக்கும் தருணம் வரைக்கும் அவர் தனியாகவே, கருனாநிதிக்குத் தெரியாமல் வந்திருக்கிறார் என்பதை பிரபாகரன் அறிந்திருக்கவில்லை. கருனாநிதியின் அனுமதியில்லாமல் வன்னிக்குக் வைக்கோவினால் எப்படி வரமுடிந்தது என்று பிரபாகரனே ஆச்சரியப்பட்டார். இதில் நாம் பார்க்கவேண்டிய ஒரே விடயம் என்னவெனில், வைக்கோவின் வன்னி விஜயம் அவரின் சொந்த அரசியல் லாபத்திற்காக மட்டுமே நடத்தப்பட்டது. புலிகளுக்காகவோ தமிழரின் நலன்களுக்காகவோ அல்லவென்று எனக்கு அன்றே தெரிந்திருந்தது.
  11. கேள்வி : உங்களிடம் ஒரு கேள்வி, முதலும் இறுதியுமாக, ரஜீவ் காந்தியைக் கொல்வதற்கு பிரபாகரன் திட்டம் தீட்டினாரா? கே பி : எல்லாருக்கும் அந்த உண்மை தெரியும். இந்தப் படுகொலையில் யார் யாரெல்லாம் பங்குகொண்டிருந்தார்கள் என்பதுகூட எல்லோருக்கும் தெரியும். உதாரணத்திற்கு, தேவராஜன் என்பவன் புலிகளின் புலநாய்வுத்துறைச் செயற்பாட்டாளர் என்பதும், அவர் அவர்க்களின் புலநாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானின் கட்டளைப்படியே செயற்பட்டார் என்பது தெரிந்த விடயம்தானே? படுகொலை நடந்த நாட்களில் கைதுசெய்யப்பட்டவர்களின் வாக்குமூலத்திலிருந்தே இப்படுகொலையினை யார் திட்டமிட்டு நடத்தினார்கள் என்பது தெரிய வந்ததே? இந்தப் படுகொலை பிரபாகரனினாலும் பொட்டு அம்மானினாலும் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை, இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை, இதில் சந்தேகம் வேண்டாம். நான் இந்திய மக்களுக்கு, குறிப்பாக ராஜிவின் குடும்பத்தாருக்கு ஒரு செய்தியைக் கூற விரும்புகிறேன். நான் பிரபாகரனின் படுபாதகச் செயலுக்காக அவர்களின் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். உங்களை இரைஞ்சிக் கேட்கிறோம், மக்கள் இங்கே அல்லற்படுகிறார்கள். எங்கள் மக்களும் மற்றைய மக்கள்போல வாழ உதவி செய்யுங்கள். நடந்த அனைத்திற்காகவும் நாங்கள் மிகவும் வருந்துகிறோம். ராஜீவின் மகனினதும், மகளினதும் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறோம். ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இருக்கும் பாசமும், அன்பும் எமக்குத் தெரியாததல்ல. கேள்வி : இலங்கையில் தலையீடு செய்து, தமிழர்கள் சார்பாக ஒரு தீர்வைத்தர இந்தியா உதவவேண்டும் என்று கேட்கிறீர்கள். இதன்மூலம் தமிழர்கள் தமது வாழ்க்கயினைக் கட்டியமைத்து பழையனவற்றை மறந்து வாழமுடியும் என்று கருதுகிறீர்களா? கே பி : நிச்சயமாக, கடந்த 50 வருடங்களுக்கு முன்னரான எம் நாட்டின் சரித்திரத்தைப் பார்த்தால் எமது மக்கள் கல்வியறிவிலும், பொருளாதார ரீதியிலும் மிகவும் முன்னேறிக் காணப்பட்டார்கள். இப்போது பார்த்தீர்களென்றால், நாம் 50 வருடங்கள் பின்னோக்கிச் சென்றிருக்கிறோம். எமது மக்களுக்கு புதிய தொழிநுட்பங்களை அனுபவிக்கும் வசதிகள் வேண்டும். உங்கள் நாட்டில் இணையம், கணினி என்பவை சர்வ சாதாரணமாகக் கிடைக்கின்றன. ஆனால், முழங்காவிலுக்கோ அல்லது முல்லைத்தீவுக்கோ சென்றால் அப்படியொன்றினை அம்மக்கள் அறிந்திருக்கவே வாய்ப்பில்லை என்பது தெரியும். இப்பகுதிகளில் எவையுமே இல்லை, மிகவும் பின் தங்கிக் காணப்படுகின்றன. எமது மக்களும் ஏனையவர்கள் போன்று வாழவேண்டும், அவர்கள் இதுவரை காலமும் அனைத்தையும் இழந்துதான் வாழ்ந்திருக்கிறார்கள். கேள்வி : தமிழ்நாட்டு அரசியல்வாதிகளீடமிருந்து ஆதரவினை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? கே பி : தமிழ்நாட்டு மக்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமானவர்கள். நாம் ஒரே மொழியினையும், ஒரே மதத்தினையும் கொண்டவர்கள். எமக்கிடையே ஒரு பிணைப்பு இருக்கிறது. இந்த உணர்வினை நாம் நன்முயற்சிகளுக்காகவே பயன்படுத்த வேண்டும், தீமைகளை ஊக்குவிக்க அல்ல. தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது செல்வத்தில் சிலதை எமக்கு வழங்கினாலேயே போதும், ஓரிரு வாரங்களில் எமது மக்களின் பிரச்சினைகளை எம்மால் தீர்த்துவைக்க முடியும். கேள்வி : தமிழ்நாட்டுத் தமிழர் மனம் வைத்தால் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையினை ஒரு வராத்தில் தீர்த்துவிட முடியும் என்று கூறுகிறீர்களா? கே பி : ஆம். அண்மையில்க் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 முதலீட்டாளர்கள் இப்பகுதியில் காளான் பயிர்ச்செய்கை முயற்சி ஒன்றிற்காக வந்திருந்தார்கள். இன்னும் சிலர் உணவுத் தயாரிப்புப் பற்றிய பட்டறைகளை நடத்த இங்கே வந்திருந்தார்கள். இந்திய வம்சாவளி மலேசியர்கள் கூட சில திட்டங்களுடன் இங்கே வந்திருந்தார்கள். நான் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளான வைக்கோ, நெடுமாறன், சீமான், கருனாநிதி ஆகியோருக்கு ஒரு செய்தியினைக் கூற விரும்புகிறேன். இங்கே யுத்தம் முடிந்துவிட்டது, எமது அரசாங்கமும் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களைப் பேச விடுங்கள். எமது பிரச்சினைக்கான தீர்வொன்றினை அவர்கள் காண விடுங்கள். அவர்களுக்கு அதற்கான கால அவகாசத்தினைக் கொடுங்கள். எமது மக்கள் போதுமானளவிற்கு துன்பங்களையும், வலிகளையும், இழப்புக்களையும் சந்தித்துவிட்டார்கள். உங்களுக்கு உண்மையாகவே எமது மக்களுக்கு உதவும் எண்ணம் இருந்தால், தமிழக மக்களின் உதவிகளை வரவிடுங்கள், அவர்களுக்குக் குறுக்கே நிற்கவேண்டாம். இந்தியவரசாங்கம் இலங்கைத் தமிழர் விடயத்தில் ஏதாவது செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுவதனை உடனே நிறுத்துங்கள். இலங்கை அரசு தமிழருக்கு வரும் உதவிகளைத் தடுத்து வருகிறது என்று நீங்கள் செய்யும் பொய்யான பிரச்சாரத்தினை நிறுத்துங்கள். எம்மக்களுக்கான உதவிகளை நெறிப்படுத்துவதற்காக அரசு சார நிறுவனமான நேர்ட் இன் மூலம் பணியாற்றி வருகிறோம். இங்கு எவரும் வந்து பணிபுரியலாம். பாதுகாப்பு அமைச்சினூடாக உங்களுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும், சலுகைகளையும் என்னால் பெற்றுத்தர முடியும். உண்மையான மனிதாபிமான , நிவாரண நடவடிக்கைகளை இங்கு யாருமே தடுக்கப்போவதில்லை. நான் ஒரு அரசியலிலும் ஈடுபடப்போவதில்லை. நாம் அரசியலில் ஈடுபடும் மனிதர்கள் அல்ல, மனிதாபிமானப் பணிகளில் மட்டுமே நாம் அக்கறை காட்டிவருகிறோம். ஆகவே நான் உங்களுக்குக் கூறிக்கொள்வது என்னவென்றால், உங்களின் தீவிரவாத நோக்கங்களை இங்கே ஊக்குவிக்க வேண்டாம். எமது இளைஞர்களைத் தவறாக வழிநடத்தி மீண்டும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு அடிமையாக்க வேண்டாம். நீங்கள் இதுவரை செய்தது போதும், இனிமேல் வேண்டாம், இத்துடன் நிறுத்துங்கள்.
  12. கேள்வி : புலிகள் பல தூதுக்குழுக்களை 2002 இற்குப் பின்னரான காலப்பகுதியில் பல ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பினார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காகவே செல்கிறோம் என்று சொல்லப்பட்டது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோற்றுப்போனதற்கான காரணம் என்ன? சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னால் திரைமறைவில் ஏதேனும் நடந்ததா? கே பி : நான் உங்களுக்கு முன்னரே கூறியதுபோல, தமிழீழத்தை எதற்காகவும் விட்டுக்கொடுப்பதில்லை என்று பிரபாகரன் விடாப்பிடியாக இருந்தார். அதுதான் காரணம். கேள்வி : ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்த புலிகளின் தலைவர்கள் உண்மையிலேயே என்னதான் செய்தார்கள்? கே பி : அது சமாதானப் பேச்சுவார்த்தையின் ஒரு அங்கம்தான். தம்மை இன்னொரு போருக்குத் தயார் செய்வதற்காகவே புலிகள் இப்பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார்கள். இப்பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்காக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புலம்பெயர் தமிழர்களை அவர்கள் சந்தித்துக்கொண்டார்கள். அங்கு பலமுறை புலம்பெயர் தமிழர்களுடன் பாரிய கூட்டங்களை புலிகளின் தலைவர்கள் நடத்தினார்கள் என்பது நாம் அறிந்ததுதானே? பேச்சுவார்த்தை மேசையில் ஒருவிடயத்தையும், புலம்பெயர் தமிழர் முன்னால் வேறொரு விடயத்தையும் அவர்கள் கூறினார்கள். புலிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை மேசையில் பேசிய விடயங்களையும் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் முன்னால் பேசிய விடயங்களையும் இந்த நாடுகளில் இருந்த இலங்கை தூதரகங்களின் புலநாய்வுத்துறையினர் பதிவுசெய்துகொண்டார்கள். ஆகவே, புலிகள் சமாதானப் பேச்சுக்களில் உண்மையாகவே நாட்டம் கொண்டிருக்கவில்லை என்பதை இலங்கை அரசாங்கம் உணர்ந்துகொண்டது. இது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் தெரிந்த விடயம் தானே? கேள்வி : அப்படியானால், அக்காலத்திலேயே புலிகள் இன்னொரு போருக்கான தயாரிப்புக்களில் இறங்கிவிட்டிருந்தார்கள் என்று கூறுகிறீர்களா? கே பி: ஆம், அவர்கள் தம்மை ஆயுத ரீதியிலும், தொழிநுட்ப ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் இக்காலப்பகுதியைப் பயன்படுத்தி பலப்படுத்திக்கொண்டார்கள். கேள்வி : புலிகளுக்காக நீங்கள் இதுவரை காலமும் பணியாற்றியது குறித்து வருந்துகிறீர்களா? நீங்கள் பல வருடங்களாக புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவராக இருந்ததுடன் அவர்களின் சர்வதேச ஆயுதக் கொள்வனவாளராகவும் இருந்திருக்கிறீர்கள், இன்று அந்த செயல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? கே பி : 1970 களில் இலங்கையின் தமிழ் இளைஞர்கள் உணர்வுபூர்வமாக விடுதலைப் போராட்டத்தினை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள். அவ்வாறு ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். நாங்கள் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை இந்த ஆயுதப் போராட்டத்தில் இழந்துவிட்டோம். பெருமளவு பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த 35 வருடங்களைப் பின்னோக்கிப் பார்த்தால், நாங்கள் ஆயுதப் போராட்டத்தை இழந்தது மட்டுமல்லாமல், 1950 இலிருந்து சிறிது சிறிதாக அனைத்தையுமே இழந்துதான் வந்திருக்கிறோம். சுதந்திரத்திற்கு முன்னர் ஜி ஜி பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் தமிழருக்கும் சிங்களவருக்கு 50 இற்கு 50 பிரதிநிதித்துவம் கேட்டார். ஆனால், சிங்களவர்கள் 55 இற்கு 45 என்று கொடுக்க முன்வந்தார்கள். ஆனால், தமிழர்கள் விடாப்பிடியாக சமபங்கு கேட்டு அதனைக் குழப்பியடித்தார்கள். ஆனால் இன்றோ நாம் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். சிங்களவர்கள் முதலாவதாகவும், முஸ்லீம்கள் இரண்டாம் நிலையிலும் இருக்க நாம் கீழே இரங்கியிருக்கிறோம். 50 இற்கு 50 ஆசனங்கள் என்கிற நிலையிலிருந்து 15 இலிருந்து 20 ஆசனங்கள் என்கிற நிலைக்குக் கீழிறங்கியிருக்கிறோம். இப்படித்தான் 1950 களிலிருந்து நாம் படிப்படியாக எல்லாவற்றையும் இழந்துவருகிறோம். எமது பிரச்சினை என்னவென்றால், நாமாகவே எமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டு வருகிறோம் என்பதுதான். நான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளியொன்றினை வைக்க விரும்புகிறேன். தொடர்ந்து சந்தர்ப்பங்களைத் தவறவிட்டு, இழப்புக்களை அடைவதை விட, சந்தர்ப்பங்களைப் பாவித்து மீண்டும் எமது வாழ்க்கையினை ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், பயங்கரவாத எண்ணங்கொண்ட புலம்பெயர் தமிழர்கள் இங்கு வாழும் தமிழ் இளைஞர்களுக்கு நஞ்சூட்டி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுவது தெரிகிறது. நான் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். கேள்வி : தமிழரின் போராட்ட சரித்திரத்தில் இந்தியாவின் பங்கு எப்படியிருந்ததென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கே பி : இந்திரா காந்தி அம்மையாரின் காலத்தில்த்தான் பனிப்போர் முடிவிற்கு வரும் அறிகுறிகள் தோன்றியிருந்தன, ஆனாலும் முற்றாக முடிவிற்கு வந்திருக்கவில்லை. இலங்கை அமெரிக்காவின் நெருங்கிய நாடாக இருந்துவந்தது. இந்தியாவோ ரஷ்ஷியாவிற்கு நெருக்கமாக இருந்தது. ஆகவே, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்துவந்தன. ஆகவேதான் இந்திரா காந்தி தமிழரின் அவலங்களின்மீது கைகளை வைக்கத் தொடங்கினார். கேள்வி : இந்திரா காந்தி கைகளை வைத்தாரா? இதன் அர்த்தம் என்ன ? கே பி : அப்போது நரசிம்மராவ் வெளியுறவுச் செயலாளராக இருந்தார் என்று நினைக்கிறேன். புலம்பெயர் தமிழர்களை அழைத்து நரசிம்மராவ் பேசியிருந்தார். இந்திய அரசாங்கத்துடனும் அவர்கள் பேசினார்கள். இதுதான் முதலாவது நடவடிக்கை. இவை திம்பு பேச்சுவார்த்தை என்று அழைக்கப்பட்டது. இப்பேச்சுக்களுக்கு இந்திய அரசு இலங்கை அரசையும், அனைத்துத் தமிழ்ப் போராளி அமைப்புக்களையும் அழைத்திருந்தது. ஆனால், பேச்சுக்கள் தோல்வியடைந்தன. இந்தியா தமிழ்ப்போராளிகளுக்கு ராணுவப் பயிற்சியினை வழங்கத் தொடங்கியது. புலிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சிமுகாம்கள் அமைக்கப்பட்டன. தமிழ்ப் போராளி அமைப்புக்களில் நான்கு மிகப் பலம் பொறுந்திய அமைப்புக்களுக்கு இந்தியா பயிற்சியளித்தது. பனிப்போர் காலத்தைப் பாவித்து இந்தியா இதனைச் செய்தது. இக்காலத்தில்த்தான் புலிகளின் ராணுவ ஆற்றலினை அதிகப்படுத்தி, இலங்கை அரசாங்கத்தைப் போரில் பணியவைத்து, சமரசம் மூலம் தமிழர்களுக்கான தீர்வொன்றினை பெற்றுத்தர இந்திரா அம்மையார் முயன்றார். ஆனால், அவரும் சிறு நாட்களில் கொல்லப்பட்டு விட்டார். அதன்பிறகு ராஜீவ் காந்தி வந்தார். அவர் மிகத் துரிதமாக செயலாற்றும் வல்லமையினைக் கொண்டவர். தமிழர் போராட்டம் தொடர்பாக அவர் புதிய வழிமுறையினைக் கைக்கொள்ளத் தொடங்கினார். அப்போது, தமிழ்ப் போராளிக்குழுக்களின் பயிற்சி மற்றும் உதவிகளில் இந்தியாவின் ரோ அமைப்பு பாரிய செல்வாகினைச் செலுத்திக்கொண்டிருந்தது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆதரவாளரும் தந்தை செல்வாவின் மகனுமான சந்திரஹாசன் ரோ அமைப்புடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டு வந்தார். இதனால் ரோவுக்கும் பிரபாகரனுக்கும் இடையே பகையுணர்வு வளரத் தொடங்கியிருந்தது. அதன்பின்னர் பிரதமர் றஜிவ் காந்தியும் ஜனாதிபதிஜே ஆர் ஜெயவர்த்தனாவும் தமிழர் பிரச்சினையினைத் தீர்க்க முயன்றனர். ஆனால், புலிகள் இந்த ஒப்பந்தத்தினை முற்றாக நிராகரித்தனர். ஆனால், ராஜீவ் காந்தியின் கடுமையான வற்புருத்தலின் பிரகாரம் பிரபாகரன் வேண்டாவெறுப்பாக ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பதாக ஒத்துக்கொண்டார். ஆனால், நடைமுறையில் புலிகள் இவ் ஒப்பந்தத்தினை முற்றாகவே நிராகரித்திருந்தனர். கேள்வி : அதன்பின்னர் இந்திய அமைதிப்படை இங்கு வந்தது, அப்படித்தானே? கே பி : இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்திறங்கிய காலத்தில், புலிகள் இந்தியாவுடன் சுமூகமான உறவைப் பேணி வந்தனர். ஆனால், சில தவறான புரிதல்களால் இந்திய ராணுவத்துடன் மோதும் முடிவினை புலிகள் எடுத்தனர்.
  13. கேள்வி : உங்களைக் காப்பாற்றுவதற்கும் இந்த மேற்குநாட்டு அதிகாரிகள் முயற்சி செய்தார்களா? கே பி : ஆம், முயன்றார்கள்தான். ஆனால், அப்போது அந்தச் சந்தர்ப்பத்தை இழந்துவிட்டோம் என்று எனக்குப் புரிந்தது. மாசி 2009 இலிருந்து நாம் எல்லா முடிவுகளையும் காலம் தாழ்த்தியே எடுத்தோம். நான் ஒரு விடயத்திற்கு ஒத்துவரும்போது, அக்காரியத்திற்கான சந்தர்ப்பம் கைநழுவிப்போயிருந்தது. கேள்வி : 2002 இன் சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்திலிருந்து இறுதிவரை புலிகள் இயக்கம் அனைத்துச் சந்தர்ப்பங்களையும் தவறவிட்டு விட்டது என்று ஏன் நினைக்கிறீர்கள்? கே பி : 2002 இலிருந்து மட்டுமல்ல, அதற்கு பல காலத்திற்கு முன்பிருந்தே அவர்கள் சகல சந்தர்ப்பங்களையும் தவறவிட்டே வந்திருந்தார்கள். முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனாவும் இணங்கிக்கொண்டதன்படி ஒரு தீர்வினை நாம் எட்டும் சாத்தியம் கிடைத்தது. அதனைப் பிரபாகரன் நிராகரித்திருந்தார். அதேபோல, 1987 இல் ராஜீவ் காந்தி , ஜெயவர்த்தனாவுடன் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து எமக்குக் கிடைக்கவிருந்த 13 ஆம் சட்டமூலத்தினை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்கான சந்தர்ப்பத்தினை வேண்டுமென்றே பிரபாகரன் தவறவிட்டதிலிருந்து இந்த தவறுகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. பிரபாகரனுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்று மட்டும்தான், அதுதான் தனிநாடான தமிழ் ஈழம். இதில் எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் அவர் தயாராக இருக்கவில்லை. இறுதியில் அவரோடு அவரது கனவும் அழிக்கப்பட்டுவிட்டது, அவ்வளவுதான். கேள்வி : 2002 இல் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்வந்ததன் உண்மையான காரணம் தம்மை ஆயத்தப்படுத்தவும், இன்னொரு போருக்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளவும் தான் என்று நினைக்கிறீர்களா? கே பி : ஆம், நிச்சயமாக. ஒருபக்கம் சில போர்வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் கூட, அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் பலவீனப்பட்டிருந்தார்கள். அவர்களின் நிதிவளமும் மிகவும் பலவீனமாகக் காணப்பட்டது. உணவுக்கும் ஏனைய பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவியது. அதுமட்டுமல்லாமல், வெளியுலகமும் மாறத் தொடங்கிவிட்டிருந்தது. முன்னர் இருந்ததைப் போலல்லாமல் அனைத்துமே மாறிவிட்டிருந்தன. இரட்டைக் கோபுரத் தாக்குதல் புலிகளைப் பொறுத்தவரை பாரிய நெருக்கடிகளைக் கொடுத்திருந்தது. அன்றைய அமெரிக்க ஜனாதிபதி அரசு சாரா பிரிவினைவாதிகளுக்கெதிராகவும், அவர்களின் நிதி வழங்கல்களுக்கெதிராகவும் கடுமையான அழுத்தங்களைப் பிரியோகிக்கத் தொடங்கியிருந்தார். புலிகள் உட்பட பல கிளர்ச்சியமைப்புக்கள் அமெரிக்காவினாலும் ஏனைய நேச நாடுகளாலும் பயங்கரவாதிகளாக அறிவித்துவிட்டிருந்தன. இந்த நிகழ்வுகள் புலிகள் இயக்கத்தை மிகப்பெரிய அளவில் பாதித்திருந்தன. இதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பதுபற்றி புலிகள் பெரிதும் கலங்கியிருந்தனர். அவர்கள்மேல் மிகக்கடுமையான அழுத்தங்கள் பிரியோகிக்கப்பட்டு வந்தன.
  14. கேள்வி : இந்த தீவிரவாத எண்ணம் கொண்ட புலம்பெயர் தமிழர்களை உங்களால் இனங்காண முடியுமா? கே பி : ஆம். அவர்களின் பெயர்களைக் கூறுகிறேன். நெடியவன், விநாயகம், பாதிரியார் இம்மானுவேல், தமிழ்நெட்டினை நடத்தும் ஜெயச்சந்திரன், பி டி எப், ஜி டி எப் என்று சிலரை என்னால் அடையாளம் காண முடியும். இந்தத் தனி நபர்களும், அமைப்புக்களும் ஐரோப்பாவில் மிகுந்த பண பணபலத்தோடு செல்வாக்காக வாழ்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளும் மிகவும் நன்றாக வாழ்கிறார்கள். இவர்கள் தமது எதிர்காலச் சந்ததியினரின் மனங்களில் இனவாதம் என்னும் நச்சினை ஊட்டி வளர்க்கிறார்கள். ஆனால், அவர்களின் இந்த விளையாட்டினை நான் இங்கு ஆட விடமாட்டேன் ! இனவாதத்தினை இங்கே அவர்கள் ஊற்றிவளர்க்க நினைத்தால், முதலில் அவர்கள் என்னைக் கொல்லவேண்டும். அதன்பின்னரே அவர்கள் உள்ளே செல்ல முடியும். தாயக மக்கள் 30 வருடங்களுக்கு மேலாக துன்பங்களை அனுபவித்து விட்டார்கள். இம்மக்கள் அமைதியாகவும், சந்தோசமாகவும் வாழ்வதை நான் விரும்புகிறேன். இன்று எமது மக்களின் முகங்களில் கவலையும், வறுமையுமே தேங்கி நிற்கிறது. நாம் அதனை மாற்ற முன்வர வேண்டும். தாயக மக்கள் தாம் பிறந்ததிலிருந்து சந்தோஷத்தினைக் காணவில்லை. ஆனால், புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகள் எப்போதுமே சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள். மிகவும் உல்லாசமான வாழ்க்கையினை வாழ்கிறார்கள். ஆனால், வன்னியிலோ நிலைமை வேறு. எமது பிள்ளைகள் சந்தோசமாக இல்லை. பாடசாலைக்குப் போவதற்கான கூட அவர்களுக்குக் கிடையாது. காலையில் நீங்கள் வீதியில் நடந்துசென்றால் பாடசாலை செல்லும் சிறார்கள் 3 அல்லது 4 கிலோமீட்டர்கள் கால்நடையாகவே சென்றுவருவதைக் காணலாம். அவர்கள் தமது எதிர்காலம்குறித்து கவலையுடன் வாழ்கிறார்கள். இச்சிறுவர்களை மீண்டும் பயங்கரவாதத்தினுள் தள்ளும் முயற்சியினை எவர் மேற்கொண்டாலும் நான் முன்னின்று தடுப்பேன். அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. கேள்வி : நீங்கள் உயிருடன் இருக்கும்வரை ஐரோப்பாவில் இயங்கும் தமிழ்ப் பயங்கரவாதிகள் இன்னொரு ஆயுதப்போராட்டத்தினை இங்கே முன்னெடுப்பொஅது சாத்தியமில்லை என்கிறீர்களா? கே பி : நிச்சயமாக. அவர்கள் இங்கே ஆட்களைத் திரட்டி, மக்களுக்குப் பிரச்சினைகளை உருவாக்க முயன்றால், நான் அவர்களைத் தடுத்து நிறுத்துவேன். என்னைக் கொன்றபின்னர்தான் அவர்கள் வேறு எதனையும் செய்ய முடியும். கேள்வி : இறுதியுத்தத்தில் புலிகளின் தலைமைப் பீடத்தினைக் காப்பாற்ற ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் சில முயற்சிகள் நடைபெற்றதாக கூறப்படுவது உண்மையா? கே பி : 2009 தை மாதத்திலிருந்து நான் சண்டையினை நிறுத்த முயன்று வந்தேன். இரவு பகலாக நான் இதற்காக பாடுபட்டு உழைத்தேன். ஆனால், புலிகள் இறுதித் தருணம் வரை என்னால் எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் எதற்குமே ஒத்துழைக்க முன்வரவில்லை. எனக்கு இருந்த அனைத்து நம்பிக்கையும் அத்துடன் போய்விட்டது. மே 15 அன்று மேற்கு நாடுகள் சிலவற்றின் அதிகாரிகள் என்னுடன் தொடர்புகொண்டு, புலிகளின் தலைமையினைப் பாதுகாப்பாக வெளியேற்ற விரும்புகிறோம், இதற்கு அவர்களின் பதிலென்ன என்பதைக் கேட்டுச் சொல்வீர்களா என்று என்னைக் கேட்டார்கள். இவ்வாறு வெளியேற விரும்பும் தலைவர்களின் பெயர் விபரங்களைத் தருமாறு கேட்டுக்கொண்ட இந்த அதிகாரிகள், புலிகளின் தலைவர்களை பாதுகாப்பாக கப்பல் முலம் இன்னொரு நாட்டிற்குத் தாம் அனுப்பிவைக்கப்போவதாகவும் என்னிடம் கூறினார்கள். கேள்வி : இவ்வாறு உங்களை அணுகிய நாடுகள் எவையென்று கூறமுடியுமா? கே பி : உண்மையாகவே அது ஐ நா இன்னும் சில மேற்குநாடுகளின் துணையோடு இம்முயற்சியில் ஈடுபட்டது. தனிப்பட்ட நாடுகளினதும், நபர்களினதும் பெயர்களை நான் வெளியிட விரும்பவில்லை. ஆனால், அவர்கள் எல்லோருமே மேற்குநாட்டவர்கள்தான் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.
  15. கேள்வி : புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? கே பி : முதலாவது, அவர்கள் இங்கிருக்கும் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு அவர்கள் "எமக்குப் பால் வேண்டும் " என்று அழுதால் நாம், "சற்றுப்பொறுங்கள், ஐ நா வரும், தீர்வு வரும், அதன் பின்னர் நாம் பால் தருகிறோம்" என்று கூறமுடியாது. நாம் அப்படி பார்த்திருந்தால் அவர்கள் இறந்துவிடுவார்கள். அவர்கள் தமக்கு இப்போது உணவுவேண்டும் என்றுதான் அழுகிறார்கள். ஆகவே புலம்பெயர் தமிழர்கள் இம்மக்களுக்கான பசியினைப் போக்க உழைக்க வேண்டும். தாயக மக்கள் சாதாரண வாழ்க்கைக்கு மீண்டபின்னர் அவர்களுக்கு என்ன தேவையென்று பின்னர் நாம் கேட்கலாம். அதை விடுத்து நீங்கள் வன்னிக்குப் போய் அவர்களிடம் 13 ஆம் திருத்தச்சட்டம் உங்களுக்கு வேண்டுமா என்று கேட்டால், அவர்கள் உங்களை விசனத்துடன் தான் பார்ப்பார்கள். அவர்களுக்குத் தேவையானதெல்லாம் அரிசியும் பாணும் மட்டும் இருந்தால் போதும். புலம்பெயர் தமிழர்களுக்குக் கள யாதார்த்தம் புரியவில்லை. தாயக மக்கள் தமது சொந்தக் காலில் முதலில் நிற்கட்டும், பிறகு மற்றையவை பற்றி யோசிக்கலாம். கேள்வி : ஆக, உங்களைப்பொறுத்தவரை பல புலம்பெயர்ந்த நாடுகளில் குடியுரிமை கொண்டவர்களாக, செல்வச் செழிப்போடும், உயர் பதவிகளிலும் இருந்துகொண்டு, இலங்கைக்கு ஒருபோதுமே வர விரும்பாமல், ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட மட்டுமே தமது பணத்தினை வாரியிறைத்த இத் தமிழர்கள், தற்போதாவது தாயக மக்களின் விடயங்களில் தலையிடுவதைலிருந்து விலகி, தாயக மக்களின் மீட்சிக்காக உழைக்க வேண்டும் என்பதுதானே? ? கே பி : சரியாகச் சொன்னீர்கள். நான் சொல்ல வருவது என்னவென்றால், யுத்தம் முடிந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. எமக்கு முன்னாலிருப்பது ஒற்றை வழிதான். இருப்பதும் ஒரு சந்தர்ப்பம் தான். அதுவே சமாதானத்திற்கான வழியும், சந்தர்ப்பமும். சிங்களவர்களோடு ஒற்றுமையாக இணங்கிச் செல்லும் சமாதானமான வழியே அது. பல நம்பிக்கயீனங்கள் இருபக்கமும் நிகழ்ந்துள்ளன, எமக்கிடையே நூற்றாண்டுகளாக கசப்புணர்வுகள் இருக்கலாம். அரச நிர்வாகம் என்பது பொதுவாகவே குறைந்த வேகத்துடன் தீர்வுகளைத் தருவது. எமக்கான சில தீர்வுகள் கிடைக்க காலம் எடுக்கலாம். ஆனால், எமக்கு வேறு வழியில்லை. அமைதியாகவும் பொறுமையாகவும் நாம் பயணிக்கும்போதுதான் எமக்கான தீர்வுகளை நாம் பெறமுடியும். உங்களுக்கு முன்னாள் அமைச்சர் தொண்டைமானைத் தெரிந்திருக்கும். அவர் அமைதியாகவும், பொறுமையாகவும் பல்லாண்டுகள் காத்திருந்துதான் தனது மக்களில் ஒரு லட்சம் பேருக்கு வாக்குறிமையினைப் பெற்றுக்கொடுத்தார். அதுபோல நாமும் பொறுமையுடனும், அமைதியாகவும் காத்திருக்க வேண்டும். தொண்டைமானுடன் பேசுவத்ற்கு எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் என்னிடம் கூறும்போது, "உங்கள் மக்கள் எல்லோருமே நன்றாகப் படித்தவர்கள். ஆனால், உங்களிடம் நல்ல தலைவர்கள் இல்லை. உங்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லக்கூடிய தலைவர்களில்லை" என்று கூறினார். எமக்கு விட்டுக்கொடுத்துச் செல்லக்கூடிய, நெகிழ்ச்சியான தன்மையுடைய, சமரசம் செய்யக்கூடிய தலைவர்கள் வேண்டும். ஆனால், அப்படியான தலைவர்கள் இல்லாமலிருப்பதே எமக்குப் பெரும் பிரச்சினையாக தொடர்ந்து வருகிறது.. எதிர்மறையான உணர்வுகள் ஒருபோதுமே எமக்கு நண்மை பயக்கப்போவதில்லை. ஆம், எமக்கு ஒரு போர் நடந்ததுதான், மக்கள் கொல்லப்பட்டார்கள்தான். ஆனால் அது ஒரு 100 வருடகாலப் பிரச்சினை. ஆகவே அதனைத் தீர்ப்பதற்கு எமக்கு நியாயமான காலம் தேவை. நான் புலம்பெயர் தமிழர்களின் விடயத்திற்கு மீண்டும் வருகிறேன். நான் அவர்களுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வருகிறேன். 90 வீதமான புலம்பெயர் தமிழர்கள் மிகவும் நல்லவர்கள். பலர் இங்கே பிறந்தவர்கள், சிலர் புலம்பெயர் நாடுகளில் பிறந்திருக்கலாம். ஆனால், இங்கிருக்கும் தமது உறவுகள் குறித்து அவர்கள் அதீத கரிசணை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த மக்களுக்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள். எனக்கு முன்னாலிருக்கும் பிரச்சினை என்னவென்றால், இன்னமும் தீவிரவாத எண்ணம் கொண்டு அலையும் அந்த 10 வீதத் தமிழர்கள் தான். அவர்களே தாயகத் தமிழர்களுக்கு பாரிய நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறார்கள்.
  16. கேள்வி : ஐ நா வினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை பற்றிய உங்கள் பார்வை என்ன? போர்க்குற்றம் தொடர்பாகக் கடுமையான வாதப் பிரதிவாதங்களை அது ஏற்படுத்தியிருக்கிறதே? கே பி : நாம் ஒரு புதிய தசாப்த்தத்தினுள் வந்திருக்கிறோம். பழயவை பற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் இனிப் பயனில்லை. அறிக்கையின்படி இரு பக்கத்தினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறது. இந்த அறிக்கை மூலம் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. இந்த அறிக்கையே மிகவும் குழப்பகரமானது, பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. நல்லிணக்க முயற்சிகளை முற்றாக தடம்புரள வைக்கக் கூடியது. எம்மைப் பொறுத்தவரை இந்த அறிக்கையினால் எவருக்குமே நண்மையேதும் கிடைக்கப்போவதில்லை. இது வெறுமனே தகவல் அறியும் முயற்சி என்றுதான் பார்க்கப்படல் வேண்டும். நீங்கள் வன்னிக்குச் சென்று இந்த அறிக்கை மூலம் யாராவது ஒரு குடும்பமாவது நண்மை அடைந்ததா என்று கேட்டுப் பாருங்கள், அப்போது தெரியும் உண்மை. இவ்வறிக்கையினால் எவருக்குமே நண்மை கிடைக்கப்போவதில்லை. தமிழர்கள் உட்பட முழு நாடுமே இந்த ஐ நா அறிக்கையினை முழுமனதோடு எதிர்க்கிறார்கள். நீங்கள் கள யதார்த்தத்தினை உணர்ந்துகொள்ள வேண்டும். பழையவற்றை நாம் கிளறுவதால் இன்னும் அழிவுகளே மிஞ்சும். போர் என்று வரும்போது யார் முதலில் கொல்லப்படுகிறார்கள் என்பதே முக்கியமானது. போரில் உண்மையும் கொல்லப்பட்டுவிடும். மக்கள் கொல்லப்படாமல் யுத்தம் செய்ய முடியாது. போர் என்றால் மக்கள் இறப்பது இயல்பானது. போரில் நல்லபோர், கெட்ட போர் என்று வேறுபாடில்லை, போர் என்றால் போர், அவ்வளவுதான். இதில் ஒருவரையொருவர் குறைகூறுவதில் அர்த்தமில்லை. இரு தரப்பினரும் தமது எதிரியை அழிக்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள். ஆகவே ஒருவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இப்படியே ஒவ்வொரு யுத்தத்திற்கும் ஐ நா அறிக்கை விட்டு நடவடிக்கை எடுப்பதென்றால், இது எப்போது முடியப்போகின்றது? என்னைப்பொறுத்தவரை யுத்தம் முடிந்துவிட்டது, மக்கள் இரண்டுவருடங்களைக் கடந்து வந்துவிட்டார்கள், அவ்வளவுதான். இந்த அறிக்கைகளில் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. ஒருவேளை, தாம் அறிக்கையில் செய்யப்போவதாகச் சொல்லும் விடயங்களை உண்மையாகவே செய்தார்கள் என்றால், பின்னர் பார்க்கலாம். இந்தப்போரில், அரசாங்கம் முழுமையான வெற்றியை அடைந்துவிட்டது, புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், தோற்றுப்போன புலிகளின் சிலர் இன்னமும் இருக்கிறார்கள். நான் நேரடியாக சிங்கள மக்களுக்கெதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென்றாலும் கூட புலிகளுக்கான ஆயுத முகவராகத் தொழிற்பட்டதனால், நானும் முன்னர் இயக்கத்தில் இருந்தவன் தான். ஆகவே, எமது நலன்பற்றி இந்த அறிக்கை ஏதாவது கூறுகிறதா? இல்லையே? மக்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் இருந்தால்ப் போதும். அவர்களைப்பொறுத்தவரை போர்க்குற்றம் என்பதோ , ஐ நா அறிக்கை என்பதோ தேவையற்றது. அவர்கள் இவ்வறிக்கையிலிருந்து நண்மை எதனையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. வெறும் தகவல் அறியும் பணிக்காக வெளிவந்திருக்கும் இந்த அறிக்கை பற்றி நாம் அலட்டிக்கொள்ளவேண்டிய தேவையென்ன? இந்த அறிக்கை, போரில் இப்படியான குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறதே, அதுபற்றி உங்களின் கருத்தென்ன என்று இராஜதந்திர ரீதியில் அரசாங்கத்தைக் கேட்டிருக்கிறார்கள், அவ்வளவுதான், இதைத்தவிர இந்த அறிக்கைபற்றிப் பேச ஒன்றுமில்லை. கேள்வி : ஆகவே உங்களைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு இன்று தேவையானது கல்வி, அபிவிருத்தி, மருத்துவ வசதிகள் என்பன மட்டும் தான் என்று தெரிகிறது, அப்படித்தானே? கே பி : நிச்சயமாக. போர் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. மக்கள் இன்னும் அல்லற்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். முன்னர் பல கசப்பான அனுபவங்கள் எமக்குக் கிடைத்திருக்கலாம். பல பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், பழைய விடயங்கள் பற்றி பேசிக்கொண்டிருப்பதால் எமக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை. வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களைப் போன்றே, இனிமையான அனுபவங்களும் எமக்குக் கிடைக்கும். நாம் இந்த அனுபவங்களையெல்லாம் பாவித்து ஒற்றுமையாக ஒரு தீர்வினைக் காண சேர்ந்து இயங்கவேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று கேட்பது உணவும், உடையும், இருக்க வீடு, வேலைவாய்ப்பும் மட்டுமே. அவர்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. இதனை புலம்பெயர்ந்த தமிழர்கள் நிச்சயம் வழங்க முடியும்.
  17. "உலக வரலாற்றைப் பார்த்தீர்கள் என்றால், கெரில்லா பாணியிலான போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தவர் சேகுவேராதான் என்பது உங்களுக்குப் புரியும். உலகமெங்கும் இந்த முறையிலான போராட்டம் பரப்பப்பட்டாலும்கூட, கியூபாவில் மட்டுமே இது சாத்தியமாகியது, கியூபாவில் மட்டுமே இது வெற்றியளித்தது. ஆனால், பல நாடுகளில் கெரில்லாப்போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தம்மை அழித்துக்கொண்டதுதான் மிச்சம், இலங்கையிலும் இதுதான் நடந்தது. பனிப்போர் இறுதிக்கட்டத்தினை அடைந்த காலத்திலேயே இந்த நாட்டில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதிலும், இந்த ஆயுதபோராட்டம் இறுதியான காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. பனிப்போரினை முடித்துக்கொண்டு உலகம் ஒன்றாக இயங்க ஆரம்பித்தவேளையிலேயே நாம் போராட்டத்தினை ஆரம்பித்தோம். இரண்டாம் உலக யுத்தத்திலிருந்து பனிப்போர் முடிவுற்ற காலப்பகுதிவரை உலகம் முதலாளித்துவத்தையும், கம்மியூனிசத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிரிந்து நின்றது. இக்காலத்தில்த்தான் புதிய நாடுகள் பல பிறந்தன. நாடுகள் பிரிக்கப்படுவதென்பது பனிப்போர் காலத்து நடைமுறையாகவிருந்தது. ஆனால், பனிப்போரின் பின்னரான புதிய உலக ஒழுங்கு முற்றிலுமாக வேறுபட்டது. போராட்டம் தோற்றதற்கு இதுவே முக்கிய காரணம்". "நீங்கள் எமது பிரச்சினையினைப் பார்த்தால், இந்தியா என்பது மிக முக்கிய நாடாக, எமது பெரியண்ணராக இருப்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே, இந்தியாவின் ஆதரவு இல்லாமல் நாம் எதனையும் அடைந்துவிட முடியாது என்பது தெளிவு. இப்பிராந்தியத்தில் இந்தியாவே மிகவும் பலமான நாடு. ஆகவே இந்தியாவைப் பகைத்துக்கொண்டு புலிகள் போராடியது இன்னொரு தவறு. இதுவும் அவர்கள் தோற்றதற்கு இன்னொரு காரணம். போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கம் என்கிற வகையில், அவர்கள் தாயகத்தில் இருந்த மக்களின் ஆதரவினை இழந்துவிட்டார்கள். 35 வருடகால நீண்ட போராட்டம் மக்களுக்கு சலிப்பினையும், அழிவினையும் மட்டுமே பெற்றுக்கொடுத்தது. புலிகளின் போராட்டத்திற்கு மக்களே பாரிய விலையினைச் செலுத்தினார்கள். அம்மக்கள் புலிகளியக்கத்திலிருந்து தம்மை அப்புறப்படுத்தியமையும் போராட்டம் தோற்றதற்கு இன்னொரு காரணம். நான் மீண்டும் கூறுவது என்னவென்றால், புதிய உலக ஒழுங்கு பிரிவினைவாதக் கிளர்ச்சிகளுக்கு முற்றிலும் எதிரானது. 2006 இல் தமது போராட்டத்தினை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும் என்று பிரபாகரன் வேண்டிக்கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால், ஒரு நாடு கூட அவரின் வேண்டுகோளினை சட்டைசெய்து உதவிக்கு வரவில்லை. இதனாலேயே, சர்வதேசம் பிரிவினைவாதத்திற்கு எதிரானது என்னும் எனது வாதத்தினை முன்வைக்கிறேன். 2001 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர், சர்வதேசம் சமரசத்திற்கான வாய்ப்பொன்றினை எமக்குக் கொடுத்தது. பாலஸ்த்தீனத்தின் ஹமாஸ் அமைப்பிற்குக் கூட இவ்வகையான சந்தர்ப்பத்தினை சர்வதேசம் வழங்கியிருக்கவில்லை. ஆக, எந்த பிரிவினைவாத இயக்கத்திற்கும் கொடுக்காத சந்தர்ப்பத்தினை, சூழ்நிலையினை புலிகளுக்குக் கொடுத்து சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான அனுமதியினை சர்வதேசம் ஏற்படுத்திக் கொடுத்தது. ஜேர்மனி, நோர்வே, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் உட்பட பல நாடுகள் இலங்கையில் சமாதானம் ஏற்படக் கடுமையாகப் பாடுபட்டன என்பது நீங்கள் அறியாதது அல்ல. ஆனால், புலிகள் இயக்கம் எந்த விட்டுக்கொடுப்பிற்கும், நெகிழ்ச்சித்தன்மைக்கும் தயாராக இல்லாமல், பிடிவாதமாக இருந்துவிட்டது. அவர்கள் கண்மூடித்தனமாக தமது பிரிவினைவாதப் போராட்டத்திலேயே ஆர்வம் கொண்டிருந்தனர். இறுதி யுத்தம் ஆரம்பித்த 2008 இல் , அமெரிக்க ஜனாதிபதி ஐநாவிலோ அல்லது ஐரோப்பிய யூனியனிலோ முன்வைத்த அறிக்கையில், புலிகளுக்கு நிதி செல்லும் அனைத்து வழிகளையும் முற்றாகத் தடுப்போம் என்று கூறியிருந்தார். சர்வதேசத்தினை மீறி எம்மால் தனியே நின்று வெல்ல முடியாதென்பது அப்போதாவது புரிந்திருக்க வேண்டும்".
  18. காலம் மே, 24, 2011 சண்முகம் குமரன் தர்மலிங்கம் அல்லது செல்வராசா பத்மனாதன் அல்லது கே பீ என்றழைக்கப்பட்ட இவர் புலிகளின் சர்வதேச செயலகத்தின் தலைவராகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச ஆயுத முகவராகவும் செயற்பட்டவர். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் தன்னை புலிகளின் புதிய தலைவராக அறிவித்துக்கொண்டவர். இருவருடங்களுக்கு முன்னால் மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட கொழும்பிற்கு கூட்டிவரப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கபட்ட கே பி மீடியாகுரோவ் செய்திச்சேவையின் வி கெ சசிகுமாருக்கு வழங்கிய தொலைக்காட்சிச் செவ்வியின் எழுத்துவடிவம் இங்கே தரப்படுகிறது.
  19. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தில் , கருணாவுக்கு நிகரான துரோகத்தை நிகழ்த்திய இன்னொருவனான கே பி யின் கைங்கரியங்கள் நாம் அறியாதவையல்ல. சிங்கள ராணுவ புலநாய்வுத்த்துறையினருடன் சேர்ந்து இவன் ஆடிய நாடகங்களும், தமிழருக்கெதிரான இனவழிப்புப் போரில் இவன் ஆற்றிய பங்கும் மறக்கப்பட முடியாதவை. சிங்கள அரசின் விருந்தாளியாக, செல்வச் செழிப்பில் வாழும் இவன், புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் வியர்வையும் குருதியும் சிந்தி உழைத்த பணத்தை நாட்டின் விடுதலைக்கென்று வழங்கியபோது, அவற்றை இனக்கொலையாளிகளின் கைகளில் கொடுத்து தனது விடுதலை வாங்கிக்கொண்ட துரோகி இவன். இவனாலும் சிங்கள ராணூவப் புல்நயாவுத்துறையினராலும் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட இவனது கைது நாடகத்தின்பின்னர் இலங்கை திரும்பி சிங்களத்தின் செல்லப்பிள்ளையாக இவன் வலம்வந்த 2011 காலப்பகுதியில் தமிழர் விரோத பார்ப்பண நாளேடான தி ஹிந்துவிற்கு இவன் வழங்கிய செவ்வியின் தமிழ் வடிவம் கீழே.
  20. புலிகளுக்கு அனுப்பப்பட்ட ஆயுதக் கப்பல்களை தானே காட்டிக்கொடுத்த கே பி மூலம் " லங்கா கார்டியன் காலம் : ஆடி 2, 2010 அண்மையில் புலம்பெயர் நாடுகளில் இயங்கிவந்த புலிகளுக்குச் சார்பான தமிழர்கள் சிலர் இலங்கைக்கு விஜயம் செய்து அரசு தரப்பினருடனும், கே பி யுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டது பலரதும் கவனத்தை ஈர்ந்திருந்தது. மலேசியாவில் கே பி கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் நாடகத்தினை கோத்தாபயவும், கேபியும் இணைந்தே திட்டமிட்டு ஆடியதாகவும், மலேசிய அரசாங்கம் இந்த நாடகத்திற்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவரும் நிலையில், இந்த புலம்பெயர் புலிகள் அணியினரின் கோத்தாவுடனான சந்திப்பும் இடம்பெற்றிருக்கிறது. இந்த சர்ச்சைக்குரிய கோத்தாவுக்கு ஆதரவான "புலம்பெயர் புலிகள்" அணியில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான கலாநிதி அருணகுமார் தனது விஜயம் பற்றியும், அங்கு நடந்த சந்திப்புக்கள் பற்றியும் வெளியில் பேசியிருக்கிறார். அவரால் வெளியிடப்பட்டிருக்கும் பகிரங்க அறிக்கையில் தமது குழு இலங்கையில் நடத்திய சந்திப்புக்கள், சந்தித்த மகிந்த - கோத்தா அரசின் தலைவர்கள் பற்றிய விபரங்களை அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அவரது அறிக்கையின் ஒருபகுதியில் குறிப்பிடப்பட்ட விபரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது புலிகளை முற்றாக அழித்துமுடிக்கும் காரியத்தில் ஒருவருக்கு ஒருவர் உற்ற நண்பர்களாக இருந்து செய்துமுடித்தது யாரென்பது ஓரளவிற்குப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. உள்நாட்டு வெளிநாட்டு செய்தி ஊடகங்களைப் பொறுத்தவரை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாவுக்கும், ராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவுக்கும் இடையில் நிலவிய நெருங்கிய ஒத்துழைப்பே புலிகளை அழிக்க உதவியதாகக் கூறப்படுகிறது. இது ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும்கூட, புலிகளை முற்றாக அழித்த இன்னொரு நட்பு இருப்பதாகவே தெரிகிறது. கலாநிதி அருணகுமாரின் அறிக்கையின்படி இந்த ரகசிய நட்பு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கலாநிதி அருணகுமார் தனது அறிக்கையில் கூறும்போது, தானும் தனது அரச ஆதரவு - புலம்பெயர் புலிகள் அணியும் புலிகளின் சர்வதேச ஆயுத முகவரும், அரசாங்கத்தின் விருந்தாளியுமான கே பி எனப்படும் குமரன் பத்மனாதனுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கும்பொழுது, எதிர்பாராத விதமாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அக்கலந்துரையாடல் நடைபெற்ற அறையினுள் நுழைந்திருக்கிறார். கோத்தாவைக் கண்டதும் மிகுந்த மகிழ்வுடன் எழுந்த கே பி அவரை மிகுந்த மரியாதையுடனும் தோழமையுடனும் ஆரத்தழுவி அழைத்தார் என்று எழுதியிருக்கிறார். அவர்கள் இருவரும் நட்பாகப் பழகிய விதத்தினைப் பார்க்கும்போது அவர்களுக்கிடையில் நீண்டகாலமாகவே நட்பு இருப்பது அங்கிருந்த அனைவராலும் இலகுவாக உணர்ந்துகொள்ளமுடிந்தது என்று அவர் கூறுகிறார். இதில் ஆச்சரியப்படத்தக்க இன்னொரு விடயம் யாதெனில், தம்முடன் பேசிய கோத்தபாய கே பி இற்கும் தனக்கும் இடையிலான நட்புப் பற்றிக் கூறும்போது, "1996 இல் நாம் ஒருவரையொருவர் நேரடியாகச் சந்தித்தோம், அன்றிலிருந்து தொடர்பில் இருக்கிறோம் " என்று கூறியமைதான் என்று அருணகுமார் மேலும் தெரிவிக்கிறார். கோத்தா கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் புலிகளின் மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும், தலைவர் பிரபாகரனின் நெருங்கிய தோழனாகக் கருதப்பட்டவருமான கே பி யின் உண்மையான நோக்கமும், அவரது செயற்பாடுகளும் நிச்சயம் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டியவையே. கலாநிதி அருணகுமாரின் அறிக்கையிலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடியவை என்னவென்றால், 1. மலேசியாவில் நடந்த கே பி யின் கைது, கே பி யினாலும், கோத்தாவினாலும் திட்டமிடப்பட்டு, மலேசிய அரசின் அனுசரனையுடன் நடத்தப்பட்ட ஒரு நாடகம் என்பது. 2. இந்த திட்டத்தின்படியே கே பி இற்கு கொழும்பின் பிரபல வாசஸ்த்தல இடமான கொழும்பு 7 இல் உல்லாச மாளிகையொன்று அரசால் வழம்க்கப்பட்டமை. 3. நாடு கடந்த அரசாங்கம் என்று ஒன்றினை உருவாக்கியதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் இயங்கிய புலிகளின் அமைப்புக்களைக் கூறுபோட்டு செயலிழக்கப் பண்ணியமை. 4. தானே புலிகளுக்கு அனுப்பிவைத்த ஆயுதக் கப்பல்கள் பற்றிய விபரங்களை தனது நண்பரான ராணுவப் புலநாய்வுத்துறைத் தளபதி கபில ஹெந்தவிதாரணவூடாக அரசுக்கு வழங்கி, அக்கப்பல்களை நடுக்கடலில் வைத்து அழித்து, புலிகள் ஆயுதப் பற்றாக்குறையால் அல்லற்பட்டு ஈற்றில் அழிக்கப்படுவதை உறுதிப்படுத்தியமை. http://www.srilankaguardian.org/2010/07/did-kp-help-sri-lanka-to-sink-ltte-arms.html
  21. குமரன் பத்மனாதன் எனப்படும் கே பி இன் கைது நாடகம் பற்றி அந்த நாடகம் நடந்த சில மாதங்களின் பின்னர் மெலேசியாவிலிருந்து லங்கா கார்டியன் பத்திரிக்கைக்கு அங்கிருந்து முகம்மத் எனும் செய்தியாளர் எழுதிய கட்டுரை காலம் : ஆவணி, 2021 துரோகங்களுக்கிடையிலான போட்டி புலிகளின் சர்வதேச ஆயுத கொள்வனவுகளுக்குப் பொறுப்பாகவிருந்த கே பி எனப்படும் குமரன் பத்மனாதன் இலங்கை அரசாங்கத்தினதும், அதன் ராணுவ உயர் மட்டங்களினதும் செல்லப்பிள்ளையாக வலம் வரத் தொடங்கியிருப்பதுடன் இலங்கை அரசாங்கத்தினால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் மிக உல்லாசமான வாழ்க்கையினையும் அனுபவித்து வருவது தெளிவாகத் தெரிகிறது. அவன் அண்மையில் வெளியிட்டிருக்கும் சில கருத்துக்களால, இலங்கை அரசுக்கு எதிரான தமிழர்களும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் கடுமையான சீற்றம் அடைந்திருப்பதும் தெரிகிறது. தனக்கும் இலங்கையரசுக்கும் இடையில் இருக்கும் அந்நியோன்னியத்தை வெளிப்படையாகக் காட்டிவருவதன் மூலம் கே பீ தமிழர்களில் பல எதிரிகளைச் சம்பாதித்து வருகிறார் என்பது தெளிவு. அவர் அண்மைக்காலங்களில் வழங்கிவரும் பல செவ்விகளில் தான் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டுதபற்றி மேலெழுந்தவாரியாகச் சொல்லிவரும் அதேவேளை, தான் கொழும்பிற்கு இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையினரின் ரகசிய ராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் அழைத்துவரப்பட்டதுபற்றி வாய்திறக்கத் தொடர்ச்சியாக மறுத்தே வருகிறார். இந்தியாவின் சர்வதேச புலநாய்வுத்துறை அதிகாரிகளின் கருத்துப்படி கே பீ யின் கைது என்பது கே பீ இற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே மிகவும் ரகசியமான முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட நாடகம் ஒன்றின்மூலமே அரங்கேற்றப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. புலிகளின் தலைமையினால் சிறிதுகாலம் சர்வதேச ஆயுதக் கொள்வனவுக்கான பொறுப்பிலிருந்து இறக்கப்பட்டு பின்னர் மீளவும் இறுதி யுத்த காலத்தில் புலிகளின் தலைமையினால் முகவராக அழைக்கப்பட்ட கே பீ, அப்போதிருந்தே இலங்கை ராணுவத்தின் உளவாளியாகவும், புலிகளின் ஆயுதக் கொள்வனவாளராகவும் இயங்கி வந்திருக்கிறார் என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள். 2001 இல் செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தக் காலத்தில் புலிகளின் சர்வதேச ஆயுதமுகவராகவும், சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவராகவும் இருந்த தன்னை புலிகளின் தலைமைப்பீடம் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றிற்காக பதவியிறக்கம் செய்தமையினால் அவர் கடும் சீற்றம் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. புலிகளைப் பழிவாங்க ஏதாவது செய்தாகவேண்டும் என்கிற கோபத்தில் இருந்த கே பீ இற்கு எவரை அணுகுவது என்பது அப்போது பெரும் பிரச்சினையாகவே மாறியிருந்தது. 2001 இன் பின்னர் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கும் ஆயுதக் கொள்வனவுக்கும் பொறுப்பாக காஸ்ட்ரோ எனப்படும் வீரகுலசிங்கம் மணிவண்ணன் பிரபாகரனால் நியமிக்கப்பட்டதால் கடும் சினமுற்றிருந்த கே பீ தனது நெருங்கிய சகாக்களிடம் தனக்கு இயக்கம் மீதான நம்பிக்கை முற்றாக போய்விட்டதென்றும், தலைவர் சரியான காரணங்களைத் தனக்குக் கூறாமல் தன்னை பதவியிலிருந்து அகற்றியதை தன்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதென்றும், பிரபாகரன் தன்னை அவமானப்படுத்திவிட்டார் என்று கறுவியிருக்கிறார். புலிகள் மீதான கோபமும், வெறுப்பும் கே பீயை இலங்கையின் ராணுவப் புலநாய்வுத்துறையின் தளபதி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரனவோடு தொடர்புகளை ஏற்படுத்துமளவிற்குச் சென்றிருக்கிறது. இதன் அடிப்படையில் கபில ஹெந்தவிதாரணவும் கே பீ யும் பலதடவைகள் பங்கொக்கில் சந்தித்துப் பேசியிருப்பதாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதே காலப்பகுதியில் புலிகளின் முன்னாள்த் தளபதியாகவிருந்து பின்னர் ராணுவத்துடன் சேர்ந்து இயங்கியவரும், ஆரம்பகாலப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் சார்பாக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருந்தவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடனும் கே பி ரகசியப் பேச்சுக்களில் ஈடுபடத் தொடங்கியிருந்ததாகவும் பாங்கொக்கின் காட்டுப்பகுதியொன்றில் இந்தப் பேச்சுக்கள் நடைபெற்றதாகவும், அப்போதிருந்தே புலிகளுக்கெதிரான தனது செயற்பாடுகள் குறித்து கே பீ கருணாவுடன் பேசிவந்ததாகவும் அவ்வதிகாரிகள் கூறுகின்றனர். ராணுவப் புலநாய்வுத்துறையின் அதிகாரியொருவரான "சாம்" என்று புனைபெயருடன் அழைக்கப்பட்ட ஒரு முஸ்லீம் அதிகாரியும், அவரது சகாவுமே கே பீ இற்கும் கபில ஹெந்தவிதாரனவிற்குமிடையையிலான தொடர்பினை தாய்லாந்தில் வெற்றிகரமாகக் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. காஸ்ட்ட்ரோ தலைமையில் புலிகளின் சர்வதேச வலையமைப்பு ஆயுதக் கொள்வனவில் இறங்கி அடைந்த பல தோல்விகள், செயற்பாட்டாளர்களின் கைதுகளுக்குப் பின்னர் கே பி யை பிரபாகரன் மீண்டும் தனது சர்வதேச ஆயுத முகவராகவும், சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமாக பதவியில் அமர்த்திய காலத்தில் கே பி இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையினருடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி விட்டிருந்தார் என்றும், அரச , ராணுவ தலைமைப்பீடங்களுக்கு கே பி மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வந்தாரென்றும் இந்திய புலநாய்வுத்துறை கூறுகிறது. தனது பழிவாங்கலுக்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கே பீ இற்கு பிரபாகரன் மீண்டும் தன்னை பதவியில் அமர்த்தியது பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகிப் போனது. பிரபாகரன் கேட்டுக்கொண்டபடியே புலிகளுக்கான சில ஆயுதங்களை கொள்வனவு செய்து கப்பல்களில் ஏற்றியனுப்பிய கே பீ, தவறாமல் ராணுவப் புலநாய்வுத்துறைக்கும் இக்கப்பல்களின் அமைவிடம், பாதைகள் தொடர்பான தகவல்களை வழங்கிவரத் தொடங்கினார். கே பீ யிடம் இருந்து தமக்குக் கிடைத்த வரப்பிரசாதமான புலிகளின் கப்பல்கள் தொடர்பான துல்லியமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை விமானப்படையும் கடற்படையும் புலிகளின் ஆயுதக் கப்பல்களை நடுக்கடலில் தாக்கியழித்துக்கொண்டிருந்தன. இறுதியுத்த காலத்தில் கடுமையான ஆயுதத் தட்டுப்பாட்டினை எதிர்கொண்டிருந்த புலிகளுக்கு கே பி யின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டு தாயகத்திற்கு கொண்டுவரப்படும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்த பல ஆயுதக் கப்பல்கள் அதே கே பி யினால் அரசிற்குக் காட்டிக்கொடுக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக கடலில் தாக்கியழிக்கப்பட்டமை கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கும். கே பியின் ஊடாக தமக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்பான தகவல்களையடுத்து மிகுந்த உற்சாகத்துடன் செயல்ப்பட்ட கபில ஹெந்தவிதாரனவும் அவரது இலங்கை பாதுகாப்புத்துறையும் தமது திட்டத்தின்படி புலிகளுக்கான ஆயுத வழங்கல்கள் முற்றாக வரண்டுபோவதுகண்டு மகிழ்வுடன் காணப்பட்டதாக இந்திய உளவுத்துறை மேலும் கூறுகிறது. புலிகளுக்கான ஆயுத வழங்கல்களைத் தடுத்து நிறுத்தி, இறுதிப்போரில் முற்றாக அவர்களை அழிப்பதற்கான கே பியின் உதவிக்குப் பிரதியுபகாரமாக இலங்கைக்கு அவர் மீளவும் வந்து அரசியலில் பங்களிப்புச் செலுத்தும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக அரசாங்கம் அவருக்கு உறுதியளித்திருந்தது. கே பியினை இலங்கைக்கு கொன்டுவரும் தமது திட்டத்தினை செயற்படுத்தவே மலேசியாவில் இடம்பெற்ற கடத்தல் நாடகம் கே பி யினாலும், இலங்கை அரசாலும் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கே பி யின் கைதில் மலேசிய அரசாங்கம் தலையீடு செய்யவில்லை என்றும் தெரியவருகிறது. மலேசியாவில் கூலிக்கு வேலைசெய்யும் சில ஆயுததாரிகளின் உதவியுடன் கே பி கைதுசெய்யப்பட்டதாக நடத்தப்பட்ட நாடகத்தில் , மலேசிய அரசும் இலங்கை அரசும் சேர்ந்தே இந்தக் கைதில் ஈடுபட்டதாக செய்தி கசியவிடப்பட்டதன் மூலம் மலேசிய அரசும் தமிழருக்கெதிரான தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதாக உள்ளூரில் காட்டிக்கொள்ள ஒரு சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே கே பி இற்கும், கபில ஹெந்தவிதாரனவிற்கும் இடையில் செய்துகொள்லப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் இக்கைது நாடகத்தில் கே பி எதிர்ப்பின்றி கைதாவது போன்று பாசாங்கு செய்ய, இலங்கை அரசு இக்கைதினை தனது புலநாய்வுத்துறையின் வெற்றியாகப் பறைசாற்றிக்கொண்டது. தனிப்பட்ட விமானத்தில் கொழும்பிற்குக் கொண்டுவரப்பட்ட கே பி, ஊடகங்களின் பார்வையிலிருந்து விலக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பாக அரசாங்கத்தின் ரகசிய இடமொன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். புலிகளை வீழ்த்தி முற்றாக அழிப்பதற்கு கருணா இலங்கையரசிற்குச் செய்த பங்களிப்பைக் காட்டிலும் கே பி செய்த துரோகம் அதிகமானது என்று நம்பப்படுகிறது. கே பி இற்கு வழங்கப்பட்டிருக்கும் ஆடம்பரச் சலுகைகளும், வசதிகளும் புலிகளை வீழ்த்த முன்னின்று போராடிய ராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்குக்கூட எக்கட்டத்திலும் வழங்கப்பட்டிருக்கவில்லையென்பதும், இன்று அரசுக்கெதிராகச் செயற்பட்டார் என்கிற காரணத்திற்காக சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இலங்கை அதிகாரிகளின் கூற்றுப்படி புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்பாக மிகவும் சரியான தருணத்தில் தமக்கு வழங்கப்பட்ட துல்லியமான தகவல்களே அக்கப்பல்களை அழித்து, புலிகளின் ஆயுத வழங்கல்களைத் தடுத்து, அவர்களின் முதுகெலும்பினை உடைக்க உதவின என்று உறுதியாக நம்புகிறார்கள். இதற்குப் பிரதியுபகாரமாகவே கே பி கேட்கும் அனைத்து சலுகைகளையும் அரசு அவருக்குச் செய்துகொடுத்து வருவதாகவும், அரசியலில் அவர் செயற்படுவதற்கான வெளியினை அரசே ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்திருப்பதாகவும் தெரிகிறது. இலங்கையின் நல்லிணக்க இணக்கப்பட்டு கவுன்சிலின் அமர்வுகளுக்கு கே பீ யும், சரத் பொன்சேக்காவும் நிச்சயம் சாட்சிகளாக இருக்கக் கூடியவர்கள், ஆனால், அவர்கள் இருவரையும் ஏதோ ஒருவகையில் இந்த அமர்வுகளிலிருந்து அகற்றிவருகிறது இலங்கையரசு. ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடாத புலிகளின் அரசியல்த்துறைத் தலைவர்களான பாலகுமார், யோகி ஆகியோர் ராணுவத்தினரிடம் சரணடைந்த வேளையில் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், புலிகளின் போராட்டக் காலத்திலிருந்து இறுதிவரை அவர்களின் சர்வதேச ஆயுத முகவராகச் செயற்பட்டு வந்த கே பீற்கு அரசின் செல்லபிள்ளை எனும் அந்தஸ்த்துக் கொடுக்கப்பட்டு வருவதுபற்றி பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். அரசுக்குச் சார்பான நடவடிக்கைகளில் இறங்கியுள்ள கே பி, தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் புலிகளின் செயற்பாட்டாளர்களாக இருந்து வரும் சிலரைத் தொடர்புகொண்டு, மீதமிருக்கும் புலிகளின் சர்வதேச வலையமைப்பினை முற்றாகச் சிதைக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. http://www.srilankaguardian.org/2010/08/kp-and-sl-government-must-tell-truth.html
  22. இறுதியாக, தான் கட்டி வந்த வீரப்பிரதாபங்களும், ராணுவப் பிரமிப்பும் இடிந்து நொறுங்கிப்போய், கருணா தப்பியோடும் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருந்த வேளை அவருடன் கூடவிருந்துகொண்டு புலிகளுக்கும் அவ்வப்போது தகவல் வழங்கிக்கொண்டிருந்த அவரின் சகா ஒருவர் கருணாவை அலிசாஹீர் மெளலானா வாழைச்சேனை பொலொன்னறுவை நெடுஞ்சாலையில், வாகரைக்கு அன்மையில் அமைந்திருக்கும் நாலாம் முச்சந்தி எனும் இடத்தில் சந்திக்கவிருப்பதாகக் கூறியிருந்தார். இந்த தகவல் உண்மையென்பதை இறுதிவரை கருணாவின் பின்னால் திரிந்து இறுதியில் இப்பகுதியில் கருணாவால் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அவரின் நெருங்கிய போராளிகளில் ஒருவரும் உறுதிப்படுத்தியிருந்தார். மறுநாள் மெளலானாவைத் தொடர்புகொண்ட புலிகள், "கருணா உங்களோடுதான் இருக்கிறார் என்பது எமக்குத் தெரியும்" என்று கூறியபோது, அதனை அவர் முற்றாக மறுத்தார். அக தொடர்ந்து இடம்பெற்றது கருணாவுக்கும் ஐ தே க வுக்கும் இடையிலான அவமானகரமான தொடர்புதான். இங்கு கருணா விட்ட இன்னொரு தவறு பற்றியும் நாம் பார்க்க வேண்டும். இனத்தின் விடுதலையில் ஒருவருக்கு இருக்கும் அசைக்கமுடியாத உறுதிப்பாடே இயக்கம் மீதான விசுவாசத்தையும், தொடர்ந்து போராடுவதற்கான உத்வேகத்தையும் அளிக்கிறதென்பது புலிகளியக்கத்தில் முக்கிய தளபதியாகவிருந்த கருணா அறியாதது அல்ல. பிரபாகரன் தனது பேச்சுக்களின்போது, "நான் எப்போது எனது இலட்சியத்தைக் கைவிடுகிறேனோ, அன்றே என்னைக் கொன்றுவிடுங்கள்" என்று தனது தோழர்களிடம் அடிக்கடி கூறியிருக்கிறார். புலிகளின் தலைமையினால் தான் புறக்கணிக்கப்பட்டதாக அவர் கூறியதை தனது ஆதரவாளர்கள் நம்பியிருக்கும்வரைதான் கருணாவுக்கு அவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கருணாவிடமிருந்து பிரிந்து மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்து சேர்ந்த நிலாவினி மற்றும் இன்னும் சில பெண்போராளிகளின் கூற்றுப்படி கருணாவை ராணுவத்தின் புலநாய்வுத்துறையே இயக்குவதை அறிந்துகொண்ட ரொபேர்ட், ஜிம் கெலி தாத்தா, துரை, விசு ஆகியோர் அதற்குப் பின்னர் கருணாவுடன் தொடர்ந்து பயணிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியவருகிறது. அதுமட்டுமல்லாமல், கருணாவின் கிளர்ச்சியின்போது அவரின் பேச்சாளராகவும், மதியுரைஞராகவும் செயற்பட்டு வந்த வரதனும் கருணா ராணுவப் புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படுவது கிழக்கு மக்களின் நீண்டகால அரசியல் இருப்பைக் கடுமையாகப் பாதிக்கப்போகிறது என்று கூறி வெளியேறிச் சென்றார். இந்த வாதன் தற்போது வெளிநாட்டில் வசித்து வருவதுடன் புலிகளுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் (2004). ஈ பி டி பி துணைராணுவக் குழுவினாலும், வெளிநாட்டுப் புலியெதிர்ப்பு அமைப்பினாலும் நடத்தப்பட்டுவரும் கருணாவுக்குச் சார்பான இணையத்தளமான நெருப்பு டொட் கொம்மில் ஜூம் மாதம் 4 ஆம் திகதி கருணா வெளியிட்ட கரும்புலிகள் நாள் செய்தியில் அவர் வெகுவாகக் குழம்பிப் போயிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. கருணாவின் புதிய பேச்சாளரான மாறன் கூறும்போது, "கடலில் கரும்புலிகள் புரிந்த மகத்தான தியாகத்தினாலன்றி, எமது தலைவர் கருணா அம்மாண் இன்று உயிருடன் இருப்பது சாத்தியமில்லை. அவர் இன்று இந்த கரும்புலி மாவீரர்களுக்கு தனது மரியாதையினைச் செலுத்துகிறார்" என்று கூறியிருந்தார். கருணாவின் கிளர்ச்சியின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை கருணா நடக்கும் சம்பவங்களால் இழுபட்டுச் சென்றாரே ஒழிய, அவருக்கென்று தீர்க்கமான, தெளிவான அரசியல் நோக்கோ அல்லது மக்களுக்கான அக்கறையோ இருந்தது கிடையாது. கருணாவைப் பாவித்து கிழக்கில் புலிகளை பலவீனப்படுத்தி, இறுதியில் முற்றாக அழிக்க ராணுவத்தால் முடியுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முற்றும் https://tamilnation.org/forum/sivaram/040707.htm
  23. கருணாவின் சர்வதேச பாடசாலை குறித்த தலைவரின் அக்கறையுடனான அறிவுறை எப்படியாக இருந்தபோதிலும், இவ்விடயத்தில் தனது செயலினால் கருணா அவமானப்பட்டிருந்தார் என்பதே உண்மை. கருணாவுக்கும், மெளலானாவுக்கும், அவரூடாக ஐ தே கட்சிக்கும் கருணாவுக்கும் இடையே ஏற்பட்டுவந்த நெருங்கிய உறவு 2004 பொதுத் தேர்தல்கள் பற்றிய அறிவிப்பு வெளிவந்ததையடுத்து வெளிப்பட்டுப் போனது. என்னையும் (தாரகி சிவராம்) இன்னும் மூன்று கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களையும் (பின்னர் கருணாவால் படுகொலைசெய்யப்பட்ட பத்திரிக்கையாளர் நடேசனும் ஒருவர்) கருணா சந்தித்தார். மாசி மாதம் 10 ஆம் திகதி யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினருடனான தனது சந்திப்பை முடித்துக்கொண்டபின்னரே எங்கள் நால்வரையும் அவர் அழைத்துப் பேசினார். எம்மை பொதுத் தேர்தல்கள் தொடர்பாக பேசுவதற்கே அவர் அழைத்திருந்தார்ஃ. "மட்டக்களப்பு மாவட்ட புலிகளின் விருப்பத்தின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முஸ்லீம் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதாக நாம் முடிவெடுத்திருக்கிறோம். எமது தலைமையும் தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லீம் வேட்பாளர்களை தேசியக் கூட்டமைப்புப் பட்டியல் மூலம் நிறுத்தவே விரும்பியிருந்தது" என்று கூறிவிட்டு எம்மிடம் "உங்களுக்குத் தெரிந்த முஸ்லீம் வேட்பாளர்கள் சிலரைக் கூறமுடியுமா?" என்று கேட்டார். நாமும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பிரசித்திபெற்ற, வேட்பாளராகும் தகுதியைக்கொண்ட பல முஸ்லீம் நபர்களின் பெயர்களைப் பரிந்துரை செய்தோம். இறுதியாக கருணா எங்களைப் பார்த்து, "அலிசாஹீர் மெளலானா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். நாம் பரிந்துரைத்த பல பெயர்களை நிராகரித்துவிட்டு மெளலானா பற்றி எம்மிடம் அவர் கேட்டது அவர் இதுகுறித்து ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார் என்பதை எமக்கு உணர்த்தியது. ஆனால், தற்போது பாராளுமன்ற உறுப்பினராகவிருக்கும் ஜெயநந்தமூர்த்தி இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, மெளலான ஒரு தீவிர ஐ தே க ஆதரவாளர் என்றும், கிழக்கில் தமிழ் வாக்குகளைப் பிரித்து, தமிழ்த் தேசியத்தைப் பலவீனப்படுத்தி , முஸ்லீம்களின் செல்வாக்கை உயர்த்தியவர்களில் மெளலானா முக்கியமானவர் என்று தனது கருத்தைத் தெரிவித்தார். பின்னர் கருணாவின் ஆலோசகரான வரதன் எம்மிடம் தெரிவிக்கும்போது கருணாவுக்கும் மெளலானாவுக்கும் இடையே ஒரு இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதன்படி மெளலானா மட்டக்களப்பில் ஐ தே க பட்டியலில் போட்டியிடுவார் என்றும், தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் அவரைச் சேர்த்துக்கொள்ளவேண்டிய தேவையில்லையென்றும் கூறினார். இது முற்று முழுதாக , "மட்டக்களப்பில் ஒரு சிங்களக் கட்சியையேனும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க மாட்டேன்" எனும் கருணாவின் நீண்டகால இலட்சியத்திற்கு நேர் எதிரானது என்பதை உணர்ந்துகொண்டோம். ஆனால் தற்போது கருணாவின் ஆசீர்வாதத்தோடு மட்டக்களப்பில் சிங்களத் தேசியக் கட்சியான ஐ தே க கருணாவின் விருப்பத்துடன் களமிறங்கிறது. கருணாவின் இந்த முடிவினால் புலிகள் கடும் சீற்றம் அடைந்திருந்ததாகத் தெரியவருகிறது. ஆனால், கருணா இதுபற்றி அதிக அக்கறைப்பட்டவராகத் தெரியவில்லை. மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக ராஜன் சத்தியமூர்த்தியை கருணா தெரிவுசெய்ததும் புலிகளுக்கு கோபத்தினை ஏற்படுத்தியிருந்தது. சத்தியமூர்த்தியைப் புலிகள் எதிர்ப்பதன் காரணம் தனக்குத் தெரியும் என்று கூறிய கருணா, புலிகளின் புலநாய்வுத்துறையினரின் தகவல்களின்படி ராஜன் சத்தியமூர்த்தி ஐ தே க தலைமையின் நெருங்கிய நண்பர் என்றும், ராணுவப் புலநாய்வுத்துறையினருடன் நெருக்கமானவர் என்றும் புலிகளின் தலைமைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது என்று தனது நெருங்கிய சகா ஒருவருக்கு இத்தருணத்தில் கூறியிருந்தார். ஆனால், கருணா தொடர்ச்சியாக தலைமையை வற்புறுத்தியதின்பேரில் ராஜன் சத்தியமூர்த்தியின் நியமனத்திற்கெதிராக புலிகளின் தலைமை செயற்படவில்லை. ஐ தே க ஆதரவாளார் ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலூடாக மட்டக்களப்பில் கருணா போட்டியிட வைத்தபோது அதன் பின்னால் இருக்கும் சதிபற்றி புலிகள் அதிகம் அறிந்திருக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. தமது புலநாய்வுத்துறைக்குத் தலையிடியினைக் கொடுக்கவே கருணா ராஜன் ஆசீர்வாதத்தைத் தெரிவுசெய்தார் என்பதைப் புலிகள் அறிந்தே இருந்தனர். கருணாவின் கிளர்ச்சியின் பின்னைய நாட்களில் கருணாவிடம் தனித்து இயங்குவதற்கான அரசியல் தெளிவோ அல்லது நீண்டகால அரசியல் செயல்த்திட்டமோ இருக்கவில்லையென்பதை நாங்கள் தெளிவாக உணர்ந்துகொண்டோம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோடு கருணாவுக்கு ஏற்பட்ட திடீர் நெருக்கத்தினையடுத்து, ஐ தே க வினருடனான தனது தொடர்பினை முற்றாக அறுத்தெறிந்தார் கருணா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களிடம் மட்டக்களப்பில் பேசிய ராஜன் சத்தியமூர்த்தி ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் கருணாவுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தினையடுத்து, கருணா குழுவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு பதவியினை வழங்க சந்திரிக்கா இணங்கியிருப்பதாகக் கூறினார். இதற்கமைவாக, தேர்தல் பெறுபேறுகள் அறிவிக்கப்பட்ட மறுநாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியில் கருணா குழு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தனது முழு ஆதரவினையும் வழங்குவதாகத் தெரிவித்திருப்பதாகக் கூறியது.
  24. கருணாவுக்குப் புலிகளால் அனுப்பப்பட்ட பொதுமன்னிப்புப் பற்றிய தகவல்களை கருணாவிடம் கொண்டுவந்து சேர்த்தவர்களில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதியான அலிசாஹீர் மெளலானாவும் ஒருவர். இந்தவிடத்தில் கருணாவின் பிரிவின் பின்னாலிருந்த அலிசாஹீர் மெளலானா - ஐக்கிய தேசியக் கட்சியின் சதிபற்றியும் நான் புரிந்துகொள்ளுதல் அவசியம். கருணாவும், அலிசாஹீர் மெளலானாவும் பள்ளிப்பருவத்திலிருந்தே தோழர்கள் என்கிற தவறான கட்டுக்கதைகள் பரப்பட்டு வந்தன. ஆனால், இவர்கள் இருவருக்கும் இடையிலான சிநேகம் 2002 யுத்த நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே ஆரம்பமானது என்பதே உண்மை. மெளலானா நெடுங்காலமாக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிலே படித்தவர். கருணாவுக்கு பல வருடங்கள் வயதில் மூத்தவர். கருணாவோ கிரானில் ஆரம்பக் கல்வியையும், பின்னர் உயர்தரத்திற்காக மட்டக்களப்பு மத்திய கல்லூரிக்கும் சென்றவர். ஆகவே இவர்கள் இருவரும் பள்ளித்தோழர்கள் என்பது தவறான தகவல். 2001 இல் கருணா கிழக்கு மாகாணத்தின் சிறப்புத் தளபதியாகப் பதவியேற்று கிழக்கில் செயற்பட ஆரம்பித்திருந்த வேளை, புலிகளின் புலநாய்வுத்துறை தமது அன்றாட தகவல் அறியும் செயற்பாடுகளில் கருணாவுக்கும் இயக்கத்திற்கு வெளியில் இருக்கும் சக்திகளுக்கும் இடையிலான சில தொடர்புகள் பற்றி அறிந்துகொண்டது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு சில மாதங்களுக்கிடையில் கிழக்கிலிருக்கும் ஒரு பலம்வாய்ந்த ஐ தே க அரசியல்வாதியூடாக அரசாங்கம் கருணாவுடன் நேரடியாகத் தொடர்பொன்றினை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்ததும், இத்தொடர்பிற்கு தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியினை அரசு கோறியிருந்ததும் புலிகளுக்குத் தெரியவந்தது. அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதி என்று கட்டிக் கொண்டாலும், ஐ தே க அரசின் உயர் மட்ட தலைவர்களுடன் நெருக்கமான நட்பினையும் கொண்டிருந்தவர். ஆனால், தன் மூலம் கருணாவுக்கும் அரசுக்கும் இடையே உருவாகவிருக்கும் நேரடித் தொடர்பின் தாக்கத்தினை உணர்ந்துகொண்ட அந்த பாராளுமன்ற உறுப்பினர் இறுதிநேரத்தில் ஐ தே க அரசினால் தனக்கு விடுக்கப்பட்ட "கருணாவுடன் நேரடித் தொடர்பு" எனும் வேண்டுகோளினை ஏற்க மறுத்துவிட்டார். அதேநேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ தே க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும், கொழும்பிலேயே தொடர்ச்சியாக வாழ்ந்துவந்தவரும், ஐ தே க வின் உயர்மட்டத்தில் மிகுந்த செல்வாக்குள்ளவருமான ஒரு அரசியல்வாதி கொக்கட்டிச்சோலைக்கு சில கிலோமீட்டர்கள் மேற்கே அமைந்திருக்கும் மறைவிடம் ஒன்றில் கருணாவுடன் ரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்புத் தொடர்பாக நன்கு அறிந்துவைத்திருந்த புலிகள், சில மாதங்களுக்குப் பின்னர் ஐ தே க வினர் உங்களோடு தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிக்கலாம், ஆகவே அவதானமாக இருங்கள் என்று கருணாவை எச்சரித்திருந்தனர், ஆனால் இதற்கான காரணத்தை அவர்கள் அப்போது கருணாவிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், புலிகளின் புலநாய்வுத்துறையின் இந்த "ஐ தே க தொடர்பு" எச்சரிக்கையினை கருணா சட்டை செய்யவில்லை. அவரைப்பொறுத்தவரை தலைவர் தன்னை முழுவதுமாக நம்புவதால், தன்பற்றிய புலநாய்வுத்துறையினரின் தகவல்களை தலைவர் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்றே அவர் நம்பினார். "கருணா அம்மாண் எதைச் செய்தாலும் புலிகளின் நண்மைக்காகவே செய்வார் என்பதை தலைவர் நன்கு அறிவார். அம்மான் பற்றி புலநாய்வுத்துறை காவிச் செல்லும் செய்திகளை தலைவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று கருணாவுக்கு நெருக்கமான கிழக்கு மாகாண போராளி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, கருணாவுக்கும், ஐ தே க வின் தலைவர் ரணிலின் ஆலோசகரான மெளலானாவுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்களாகப் பழகத் தொடங்கினர். கருணாவின் மனைவி நிராவும் அவரது இரு பிள்ளைகளும் மெளலானாவின் மனைவியான தனுஜாவைச் சந்திக்க அடிக்கடி கொழும்பிற்குச் சென்றுவரத் தொடங்கினர். இவர்களுக்கிடையிலான நெருக்கம் நாளடைவில் மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்ட சர்வதேச பாடசாலை ஒன்றினைத் திறந்துவைக்கும் நிகழ்விற்கு திருமதி மெளலானாவைக் கருணா குடும்பம் அழைத்துவந்ததுவரை நீண்டு சென்றது. இந்தச் சர்வதேசப் பாடசாலையின் மிக பிரபலமான மாணவர்களாக கருணாவின் பிள்ளைகளும், அவரின் சகாக்களான துரை மற்றும் ராபேர்ட் ஆகியோரின் பிள்ளைகளும் இருந்தனர் என்பதும், இவ்விரு சகாக்களும் தற்போதுவரை (2004) அங்கேயே இருப்பதும் குறிப்பிடத் தக்கது. கருணாவின் பிள்ளைகளும், ஏனைய தலைவர்களின் பிள்ளைகளும் சொகுசு வாகனங்களில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான மட்டக்களப்பின் மேற்குப்புற காட்டுப்பகுதியிலிருந்து இந்தப் பாடசாலைக்கு வந்துசெல்லத் தொடங்கினர். இந்த நிகழ்வு கருணாவினாலும், அவரது சகாக்களாலும் பலவந்தமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரைக் கடுமையாகப் பாதித்திருந்தது. பல பெற்றோர்கள் இதுதொடர்பான முறைப்பாடுகளை புலிகளின் தலைமைப் பீடங்கள் அமைந்திருந்த கிளிநொச்சிக்கும், புதுக்குடியிருப்பிற்கும் தொடர்ச்சியாக அனுப்பி வந்தனர். கிளிநொச்சியிலும் புலிகளால் ஒரு ஆங்கில மூலப் பாடசாலை ஒன்று நடத்தப்பட்டு வந்தது. இயக்கத்தின் தளபதிகளினதோ அல்லது மூத்த உறுப்பினர்களினதோ பிள்ளைகளை இப்பாடசாலையில் அனுமதிப்பதில்லையென்கிற கடுமையான கட்டுப்பாடும் அங்கு நிலவிவந்தது. சமர்களில் கொல்லப்பட்ட போராளிகளின் குடும்பங்களிலிருந்து திறமையுள்ள பிள்ளைகள் தெரிவுசெய்யப்பட்டு இந்தப்பாடசாலைக்குச் சேர்க்கப்பட்டு வந்தனர். ஆகவே, மட்டக்களப்புச் சர்வதேச பாடசாலையில் தனது பிள்ளைகளைக் கருணா இணைத்துக் கற்பித்துவருவது பற்றி கருணாவிடம் பேசிய தலைவர், இது இயக்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு முரணானது என்பது மட்டுமல்லாமல், கருணாவின் பிள்ளைகள் மற்றும் அவர்களைக் கொண்டு வரும் புலிகளின் போராளின் பாதுகாப்பிற்கும் அச்சுருத்தலான விடயமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். புலிகளின் மூத்த தளபதியொருவரின் பிள்ளைகள் பூரண அரச கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்குச் சென்றுவருவதும், அரச புலநாய்வுத்துறையினால் அவர்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவதும் பாரதூரமான விடயம் என்பதையும் தலைவர் கருணாவிற்குச் சுட்டிக் காட்டியிருந்தார். ஆனால், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தரமான பாடசாலைகள் இல்லாமயினாலேயே தான் தனது பிள்ளைகளை சர்வதேசப் பாடசாலைக்கு அனுப்பிவருவதாகக் கருணா கூறியபோது, "உனது பிள்ளைகளையும் மனைவியையும் வெளிநாடொன்றிற்கு அனுப்பி அங்கு படிக்கவை, நாட்டில் நிலமை சுமூகமாகி, பிள்ளைகளின் படிப்பிற்குச் சரியான ஒழுங்குகள் செய்யப்பட்ட பின்னர் அவர்களை மீண்டும் இங்கு அழைத்து வா" என்று தலைவர் கருணாவிடம் கூறியிருக்கிறார். கருணாவுக்காக இயக்கத்தின் விதிகளை அவ்வப்போது தளர்த்திய தலைவர், தொடர்ச்சியாக கருணாவின் மனம் கோணாதபடி பார்த்துவந்தார் என்று அவருடன் நெருங்கியவர்கள் கூறுகிறார்கள். தலைவரால் வெளிநாடொன்றிற்கு பிள்ளைகளையும் மனவியையும் அனுப்புமாறு கோரப்பட்டதன் பின்னரே கருணா தனது குடும்பத்தினை மலேசியாவுக்கு அனுப்பிவைத்தார் என்றும், ஆனால் இது தவறுதலாக கருணா இயக்கத்திற்குத் தெரியாமல் குடும்பத்தை அங்கு அனுப்பியதாகவும், செல்லையா ராசதுரை இதற்கு உதவியதாகவும் சில செய்திச் சேவைகள் செய்திவெளியிட்டு வந்திருந்தன.
  25. கருணாவுக்குக் கொடுக்கப்படும் 4 இலிருந்து 6 மாத கால தண்டனைக்குப் பின்னர் அவர் மீண்டும் கிழக்கின் அதியுச்ச தளபதியாக தலைவரால் நியமிக்கப்படுவார் எனும் மூத்த தளபதிகள் பலரின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக புலிகளின் மேற்குப் பிராந்தியத் தளபதியும், மாத்தையாவின் நெருங்கிய சகாவும், பிரபாகரன் கொல்லப்படவேண்டும் எனும் சதியில் பங்கு கொண்டவருமான கேர்ணல் ஜெயம் இன்றுவரை புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவராக தலைவரால் நியமிக்கப்பட்டு செயற்பட்டுவருவதையும் சுட்டிக் காட்டுதல் அவசியம். கருணாவின் துரோகத்தைக் காட்டிலும் படுபாதகத்தனமான துரோகத்திற்குத் துணைபோன கேர்ணல் ஜெயத்திற்கே தலைவர் மன்னிப்பளித்து பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார் என்றால், தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான கருணாவுக்கு நிச்சயம் தலைவர் மன்னிப்பளிப்பார் என்றே பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. மாத்தையாவுடனான துரோக நாடகத்தில் கைதுசெய்யப்பட்ட ஜெயம், சிறையில் அடைக்கப்பட்டு, கடும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு, புலிகளின் உறுப்பினர் எனும் பதவியும் மீளப் பெறப்பட்டு சாதாரண மனிதராக விலக்கப்பட்டார். ஆனால், இயக்கத்தை விட்டு விலகிச் செல்வதை நினைத்துக்கூடப் பார்க்க விரும்பாத ஜெயம், மீண்டு சாதாரண போராளியாக இயக்கத்தில் இணைந்து , தனது முயற்சியின் மூலம் இயக்கத்தில் முன்னேறி கேர்ணல் எனும் தரத்திற்கு உயர்ந்துவந்தார். ஜெயத்தைக் கேர்ணலாகப் பதவியுயர்த்த வேண்டும் என்கிற வேண்டுகோளினை பிரபாகரனே புலிகளின் மூத்த தளபதிகள் கவுன்சிலிடம் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ஜெயத்தின் குற்றத்தோடு ஒப்பிடும்போது, தலைமையின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமை என்பதோ அல்லது இயக்கத்திற்குச் சொந்தமான 50 - 60 மில்லியன் ரூபாய்களை களவாடியதோ பெரும் குற்றங்களாகப் பார்க்கப்படமுடியாவிட்டாலும் கூட, கருணாவின் கேர்ணல் தரம் பறிக்கப்படும் என்றும், அவருக்கு ஒழுக்காற்று தண்டனையாக சில மாதங்கலாவது பணிநீக்கம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவே கருணாவுக்குப் பிரச்சினையாக இருந்தது. மட்டக்களப்பில் தனக்குக் கீழே இருக்கும் போராளிகளின் முன்னாலும், மொத்த கிழக்கு மாகாணத் தமிழர்களின் முன்னாலும் தனக்கிருப்பதாக கருணா நினைத்திருந்த புலிகளின் ஒப்பற்ற தளபதி எனும் பெயரும் புகழும் தனது குற்றங்களுக்கான தண்டைகள் மூலமும், தனது பதவியிறக்கம் மூலமும் சரிக்கப்படுவதை கருணா ஏற்றுக்கொள்ள மறுத்தார். கருணாவின் கிளர்ச்சி தொடர்பாக தளபதி ரமேஷிடம் பேசிய தலைவர், "இந்தப் பிரச்சினையினை எப்படிக் கையாள்வது என்றே சிந்திக்கிறேன். முன்னைய காலத்தில் இயக்கத்திற்கெதிராக துரோகங்களை நான் சந்தித்திருக்கிறேன், அவற்றை சுலபமாகக் கைய்யாண்டும் இருக்கிறேன். ஆனால் இவனுக்கு வந்திருக்கிற பிரச்சினை என்னவென்றால், அவனுக்கு விசர் பிடிச்சிருக்குதெண்டு நினைக்கிறன்" என்று கூறியிருக்கிறார். ஆக, கருணாவின் கிளர்ச்சியை தலைவர் கருணா மதியீனமாக நடப்பதால் உருவானதென்றே நினைத்திருப்பதாகத் தெரிகிறது. மட்டக்களப்பிற்குச் சென்று கருணாவுடன் சமரசத்தில் ஈடுபட்டு, அவரை மீண்டும் வன்னிக்கு அழைத்துவர தமிழ்ச் செல்வன் முயன்று கொண்டிருக்க, கருணா வெளிப்படையாக தான் இயக்கத்திலிருந்து பிரிந்து செயற்படப்போவதாக அறிவித்தார். இதனால், தமிழ்ச்செல்வனின் முயற்சியும் கைவிடப்பட்டது. கருணாவின் தனித்து இயங்குவதான பகிரங்க அறிவிப்பினைம் அடுத்து, அவரை உடனடியாக இயக்கத்திலிருந்து புலிகள் விலக்கினர். ஆனால், அவரது செயல துரோகமாகப் பார்க்க மறுத்த தலைமைப் பீடம், ஜெயசிக்குரு எதிர்ச்சமரில் கருணா ஆற்றிய பங்கிற்காக அவரை பிணக்கின்றி வெளியேறிச்செல்லும் சந்தர்ப்பத்தைத் தருவதாகவும் செய்தியனுப்பினர். அசோசியேட்டட் நியூஸ் எனும் செய்திச் சேவைக்கு கருணா பகிரங்கமாக தான் தனித்து இயங்குவதாக அறிவித்து 5 அல்லது 6 நாட்களுக்குப் பின்னரும் புலிகள் பல தூதுவர்கள் வழியாக கருணாவுக்கான பிணக்கின்றி வெளியேறும் திட்டம்பற்றித் தொடர்ச்சியாகத் தூதுகளை அனுப்பிக்கொண்டே வந்தனர். புலிகள் கருணாவுக்கு வழங்க விரும்பிய சன்மானத்தின்படி, கருணா இயக்கத்திலிருந்து விலகி, தனது குடும்பத்தினரையும் கூட்டிக்கொண்டு பிறிதொரு நாட்டிற்குச் சென்று வாழ முடியும். அத்துடன், கருணா தன்வசம் வைத்திருக்கும் இயக்கத்திற்குச் சொந்தமான பணத்தினையும் அவரே வைத்திருக்கலாம் என்றும் புலிகள் கூறியிருந்தனர். மேலும், மட்டக்களப்பில் புலிகளுக்கும் கருணாவுக்கும் இடையிலான தூதராகச் செயற்பட்ட ஒருவர் ஒரு படி மேலே சென்று, "நீங்கள் புலிகளை நம்பவில்லையென்றால், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரூடாக நீங்களும், உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக வெளிநாடு செல்வதை புலிகள் ஏற்றுக்கொள்கிறார்கள்" என்றும் கருணாவிடம் கூறியிருந்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.