-
Posts
8740 -
Joined
-
Last visited
-
Days Won
103
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by ரஞ்சித்
-
தாரகி (தர்மரட்ணம் சிவராம்) படுகொலை - கருணாவே அருகிலிருந்து சுட்டுக் கொன்றான் "சிவராமின் படுகொலையென்பது ஒரு தனிப்பட்ட ஊடகவியலாளரின் படுகொலை என்பதையும் கடந்து, இனிநடக்கவிருக்கும் பல படுகொலைகளுக்கான தொடக்கப்புள்ளியாக மாறியிருக்கின்றது என்பது மிகவும் ஆபத்தானது. ஜனாதிபதி சந்திரிக்காவின் அமைச்சரவையில் இருக்கும் பலம்வாய்ந்த சில அமைச்சர்கள் மற்றும் தமிழ்த் துணைராணுவக் குழுவொன்றின் தலைவன் ஆகியவர்களின் கூட்டினால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விசேட கொலைப்படையே இப்படுகொலையின் பின்னால் இருந்திருக்கிறது என்பது மிகுந்த அச்சத்தினைத் தோற்றுவித்திருக்கிறது. அரச மயப்படுத்தப்பட்ட பயங்கரவாதமாக உருப்பெற்று வரும் இந்தக் கொலைக்குழுக்களின் நடவடிக்கைகள் உடனடியாகக் கண்டிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்படவேண்டும். சர்வதேச நாடுகளின் தலையீடு ஒன்றின்மூலமே இந்த அரச மயப்படுத்தப்பட்ட படுகொலைகள் இனிமேல் இடம்பெறாவண்ணம் தடுக்கமுடியும்" - டி பி எஸ் ஜெயராஜ் முடிவுறாத படுகொலைகளை, இனரீதியிலான வன்முறைகளை எதிர்கொண்டு நிற்கும் அநாதைகளாக்கப்பட்ட தமிழினத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் துணிச்சலானதும், மிகவும் கொடூரமானதுமான தனிநபர் படுகொலையே மும்மொழி வித்தகரும், பிரபல ஊடகவியலாளரும், தமிழ்த்தேசியவாதியுமான தாரகி எனப்படும் தர்மரட்ணம் சிவராமின் கடத்தலும் படுகொலையும் என்றால் அது மிகையில்லை. வாழ்வதற்கான உரிமையென்பதே அனைத்து உரிமைகளுக்கும் அடிப்படையானது. இந்த வாழ்தலுக்கான உரிமையுட்பட அடிப்படையுரிமைகள் தமிழர்களுக்குத் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டே வருகிறது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளும், வன்முறைளும் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவதோடு, தமிழ்த்தாயின் பிள்ளைகள் வீதிகளிலே பிணங்களாக தூக்கியெறியப்பட்டு வருகிறார்கள். நண்பர்கள் வட்டத்தில் சிவா என்றும், சிவராம் என்றும் அன்பாக அழைக்கப்பட்டுவந்த சிவராம், தான் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட இரவில் தனது மூன்று நண்பர்களுடன் பம்பலப்பிட்டியவில் உள்ள மதுபான விடுதியொன்றிற்குச் சென்றிருந்தார். அவர் கொல்லப்பட்ட சித்திரை 28 அன்று இரவு அவருடன் ஊடகவியலாளர் குசால் பெரேரா, தொழிற்சங்க ஊழியர் ரவி குமுதேஷ், அரச சார்பற்ற அமைப்பொன்றின் ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன ரட்னாயக்க ஆகியோர் அவருடன் அந்த விடுதியில் இருந்திருக்கின்றனர். இரவு சுமார் 10:25 மணிக்கும், தமது ஒன்றுகூடலினை முடித்துக்கொண்டு அவர்கள் நால்வரும் விடுதியிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். கடத்தல் ரவியும், பிரசன்னவும் தாம் பொரள்ளவுக்குச் செல்லவிருப்பதால், மூன்றுசக்கர வாகனம் ஒன்றை அமர்த்துவதற்காக கொள்ளுப்பிட்டி பக்கமாகச் செல்வதாகக் கூறிவிட்டு சிவராமிடமிருந்து விடைபெற்றுச் சென்றிருக்கின்றனர். மீதமிருந்த குசாலும், சிவராமும் பேசிக்கொண்டே வெள்ளவத்தைப் பக்கமாக நடக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தமது சம்பாஷசணை முடிந்தவுடன் இருவரும் பேரூந்தில் ஏறித் தத்தமது இடங்களுக்குச் செல்வதென்று முடிவாகியிருந்தது. பெரேராவும், சிவராமும் டி வொஸ் அவெனியூவினை அடைந்தபோது, சிவராமின் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்திருக்கிறது. தமிழில் வந்த தொலைபேசியழைப்பினை ஏற்றுக்கொண்டு பேசத் தொடங்கிய சிவராம் சற்று முன்னால் நடக்க, குசால் பெரேராவோ, எதிர்த்திசையிலிருந்து வரும் பேரூந்திற்காகப் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறார். பெட்டாவிலிருந்து பாணதுறை நோக்கிச் செல்லும் பேரூந்தைக் கண்டதும் தனது நண்பனை சுதாரிக்கச் செய்ய சிவராமின் பக்கம் திருமிபியிருக்கிறார் குசால். அப்போது குசால் கண்ட காட்சி அவரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிவராமுக்கு மிக அருகில் ஒரு வெள்ளிநிரத்திலான ஜீப் ரக வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. டொயோடா ரகத்தைச் சேர்ந்த அந்த வாகனத்தின் இலக்கத்தகடு WPG 11 என்று எழுதப்பட்டிருந்தது. அவசரத்திலும், அதிர்ச்சியிலும் மீதி இலக்கங்களை குசாலினால் பதிவுசெய்துகொள்ளமுடியவில்லை. இரு நபர்கள் சிவராமை அந்த வாகனத்திற்குள் தள்ளுவதற்கு முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். மூன்றாமவன் திறந்திருந்த வாகனத்தின் கதவிற்கு அருகில் நின்றிருந்தான். வாகனத்தின் இயந்திரம் ஒட்டிக்கொண்டிருக்க, சாரதி புறப்பட்டுச் செல்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தான். சிவராமை பின்னாலிருந்து உந்தித் தள்ளி வாகனத்தில் ஏற்ற அவர்கள் முயலும் வேளை, அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க சிவராம் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தார். அவரைக் கடத்த முயன்று கொண்டிருந்தவர்கள் சாதாரண உடையில் வந்திருந்தாலும்கூட, அவர்கள் செயற்பட்ட விதத்தினைப் பார்க்கும்பொழுது நிச்சயம் ராணுவம் சார்ந்த அமைப்பொன்றுடன் தொடர்புபட்டவர்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது.
-
கருணாவின் தோல்வியினால் அதிருப்தியுற்றிருக்கும் சிங்கள இனவாதிகள் கல்க்குடாத் தொகுதியில் கருணாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாடத்தினையடுத்து, அவரை ஆதரித்து எழுதுகின்ற சிங்கள இனவாதிகள் கவலையடைந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. கிழக்கில் கருணா விடிவெள்ளியாக, பிரபாகரனை எதிர்த்து மேலெழும்புவார் என்று கனாக் கண்டுகொண்டிருந்த திசராணி மற்றும் மகிந்தபால போன்ற இனவாதிகளின் கனவில் இடிவிழுதிருக்கிறது. இலத்திரணியல் ஊடகங்களில் புனைவுகளை அவிழ்த்துவிடும் சிங்கள இனவாதிகளின் பத்திகள் பெரும்பாலும் அடக்கமுடியாத சிரிப்பைத்தான் எனக்குத் தருகின்றன. திசராணி குணசேகரவின் புனைவு ஒன்று கீழே..... "கிழக்கில் புலிகளை விட கருணா குழுவே பலம்வாய்ந்ததாகத் தெரிகிறது. கருணாவின் இந்த செல்வாக்கு தேர்தலில் எவ்வாறான தாக்கத்தினைச் செலுத்தும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். ஆனால், இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு பெருமளவிலான வாக்குகளை கருணா சேகரித்துத் தருவார் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம். இது அவரது அரசியல் முயற்சியைப் பலப்படுத்தும். கருணா, கிழக்கில் தனது ராணுவ மேலாண்மையினை, அரசியல் அரங்கிலும் உருவாக்குவது அவசியம். தேர்தலில் மகிந்தவுக்கான வாக்குகளை அள்ளி வழங்கி, தனக்கும், புலிகளுக்கெதிரான இலட்சிய அரசியலுக்கும் பலமான அடித்தளம் ஒன்றினை இட்டு, தனது பேரம்பேசும் பலத்தினை அவர் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கான ஆலோசனைகளை பழுத்த புலியெதிர்ப்பு அரசியல்வாதியான ஆனந்தசங்கரியிடமிருந்து கருணா பெற்றுக்கொள்ள முடியும். கருணா மற்றும், அனைத்து புலியெதிர்ப்பு அரசியல்வாதிகளுக்கும் கிடைத்திருக்கும் இந்த அரியசந்தர்ப்பத்தினைப் பாவித்து ஆனந்தசங்கரி தலைமையில் பாரிய புலியெதிர்ப்பு அரசியல் சக்தியொன்றினை உருவாக்கிடுதல் இன்று அவசியமானது" என்று கருணாவின் ஊதுகுழலான கேடி ராஜசிங்கத்தின் மஞ்சள்ப் பத்திரிக்கையில் அவர் எழுதுகிறார். இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால், சிங்கள இனவாதிகள் கிழக்கு மாகாணத் தமிழர்களையும் கருணாவைப் போன்ற ஏமாளிகளாக பார்த்துவருவதுதான். இத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமிழினத்திற்கெதிரான எதிர்ப்புக்களையோ அல்லது விமர்சங்களையோ எழுதுவதைக் கற்பனையில்க் கூட நினைத்துப் பார்க்காதவர்கள். ஆனால், அவர்களுக்கு தமது வாழ்க்கைக்கும், பாதுகாப்பிற்கும் எது அவசியம் என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கிறது. அதனால்த்தான் 2004 இலிருந்து பிரபாகரனுக்கும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் எதிராக கருணா முன்வைத்துவரும் நச்சுத்தனமான விமர்சனங்களையெல்லாம் மீறி இத்தேர்தலில் தமது தெரிவைக் காட்டியிருக்கிறார்கள். தேசியத்தை நேசிக்கும் எவருமேயற்ற வெற்று மண்டபத்தில் தனது மாவீரர் உரையினை வழங்கிய கருணா, "2002 இல் நோர்வே தலைமையில் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம்பற்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீள்பரிசீலினை செய்ய வேண்டும்..............." என்று கேட்டிருந்தார். ஆனால், தந்திரசாலியான மகிந்த கருணாவின் இந்த வேண்டுகோளினை உதாசீனம் செய்தார். கருணாவின் இந்த வேண்டுகோள் பற்றி மகிந்த ஏன் எதுவுமே செய்யவில்லையென்று விளங்கிக் கொள்வது கடிணமானது அல்ல. முதலாவது, கருணா தான் ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கில் செய்யப்போவதாக உத்தரவாதம் அளித்த எதனையும் செய்யவில்லை. இரண்டாவது அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்ட அரசியல்வாதியான மகிந்தவுக்கு தமிழர்களிடையே உண்மையான பூவிற்கும் "காகிதப் பூவிற்கும்" இடையிலான வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பது அப்படியொன்றும் கடிணமாக இருக்கவில்லை.
-
கருணாவும் கல்க்குடாவும் கருணாவை அவரது தொகுதி மக்களே எவ்வாறு தோலுரித்து விரட்டினார்கள என்பதையும், ஜெயராஜின் அரை அவியல்கள் எவ்வளவு புனையப்பட்டவை என்பதையும் விளக்க விரும்புகிறேன். முதலில் 2004 பொதுத் தேர்தலில் கல்க்குடாத் தொகுதி மக்கள் எவ்வாறு வாக்களித்தார்கள் என்பதிலிருந்து தொடங்கலாம். தெளிவான புரிதலுக்காக, ஜெயராஜ் செய்திருக்க வேண்டியது 2004 பொதுத்தேர்தலில் இத்திகுதி மக்கள் வாக்களித்த முறையினை இன்றைய தேர்தலுடன் ஒப்பிடுவதேயன்றி, 1999 ஆம் ஆண்டுத் தேர்தலுடன் ஒப்பிடுவதல்ல. 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் கருணா புலிகளிடமிருந்து வெளியேற்றப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர், குடும்பிமலையில் தனது முகாமில் பதுங்கியிருநெதவேளையில். கல்குடாத் தொகுதியில் இனவிகிதாசாரம் பின்வருமாறு காணப்படுகிறது. இலங்கைத் தமிழர் 64 வீதம், இந்தியத் தமிழர்கள் 3 வீதம், முஸ்லீம்கள் 28 வீதம், சிங்களவர்கள் 4 வீதம், வேறு இனமக்கள் 1 வீதம். 2004 சித்திரை மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் 86,626. அளிக்கப்பட்ட வாக்குகள் 74,645. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் 43,503 (61.5 வீதம்), சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 22,244 (31.4 வீதம்), ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2,706 (3.8 வீதம்), ஐக்கிய தேசியக் கட்சி 1,364 (1.93 வீதம்), டக்கிளஸ் கட்சி 568 (0.8 வீதம்). கார்த்திகை 17 ஜனாதிபதித் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்கள் ரணிலும் மகிந்த ராஜபக்ஷவும். கருணா கல்க்குடாவிலோ அல்லது கிழக்கு ஈழத்தின் எப்பகுதியிலுமோ இருக்கவில்லை. அவரது அப்போதைய மறைவிடம்பற்றி எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. கல்க்குடாத் தொகுதியின் 91,410 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கான வேண்டுகோளினை கருணா இணையத்தளம் ஊடாகவே முன்வைத்திருந்தார். இப்பகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 40,369 (44.71 வீதம்). கருணாவின் வேண்டுகோளான தேர்தலினைப் பலிஷ்கரிக்கவேண்டாம் என்பதையும் மீறி 41 வீத வீழ்ச்சியை இப்பகுதி வாக்களிப்பு கண்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி 28,484 வாக்குகளைப் பெற்றுக்கொண்டது, இவற்றுள் பெரும்பாலானவை 22,244 முஸ்லீம் வாக்காளர்களால் இடப்பட்டவை என்பது இரகசியமல்ல. ஏனென்றால், இதேயளவான வாக்குகளை கடந்த பொதுத் தேர்தல்களில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியினை ஆதரித்துநின்ற முஸ்லீம் காங்கிரஸ் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. கருணாவால் ஆதரிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ வெறும் 11, 105 வாக்குகளையே பெற்றிருந்தார். கணிப்புகளின்படி 2004 பொதுத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளான 43,505 வாக்குகளில் குறைந்தது 30,800 வாக்குகள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்படவில்லையென்பது, 86 வீதமான பொதுத் தேர்தல் வாக்களிப்பிலிருந்து 45 வீதமான ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பாகக் குறைந்திருப்பதன்மூலம் தெளிவாகிறது.. கல்க்குடாவில் வசிக்கும் 12,700 தமிழர்களில் 7,800 வாக்காளர்கள் மகிந்தவுக்கும், 4,870 வாக்காளர்கள் ரணிலுக்கும் வாக்காளித்திருக்கிறார்கள். மொத்தத்தில் மகிந்த 11,105 வாக்குகளை கல்க்குடாத் தொகுதியிலிருந்து பெற்றிருக்கிறார். இதில் கடந்த பொதுத் தேர்தலில் அவருக்கு வாக்களித்த 2700 வாக்குகள், டக்கிளஸ் தேவானந்தாவின் கட்சிக்குக் கிடைத்த 568 வாக்குகள் மற்றும் மீதமான 7800 வாக்குகள் என்பன அடங்கும். இதன்மூலம் தெரியவருவது யாதெனில், கருணாவின் சொந்தப் பிரதேசத்தில் அவருக்கு ஆதரவாண வாக்காளர்கள் மிஞ்சி மிஞ்சிப் போனால் 7800 என்பதுதான். தனது சொந்தப் பிரதேசத்திலேயே தனக்குக் கிடைத்திருக்கும் ஆதரவுபற்றி கருணா கவலையடைந்திருக்கலாம். தனது மாவீரர் உரையில் பிரபாகரனையும், தமிழர்களையும் தனது சொல்லைக் கேட்கவில்லையென்று அவர் சாடியிருந்தார். "தமிழ்மக்கள் மீது சர்வாதிகாரத்தனமான அதிகாரத்தை பிரபாகரன் செலுத்துகிறார். தனது சர்வாதிகாரத்தனத்தை தமிழ் ஈழம் எனும் மாயைக்குள் அவர் மறைத்துவருகிறார். அவரது வன்முறைத்தனமான சர்வாதிகாரத்திற்கு ஒரு உதாரணம் தான் வடக்குக் கிழக்கில் மக்களை ஆயுதமுனையில் வாக்களிக்க விட முடியாமல் தடுத்து வைத்திருந்தது. வடக்குக் கிழக்கில் நடக்கும் அனைத்து விடயங்களுலும் தானே முழு அதிகாரத்தினையும் கொண்டிருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். தமிழ் மக்களுக்கான சுதந்திர குரலை அவர் அடக்கி வைத்திருக்கிறார். அவர் தனக்கு விரும்பிய நேரத்தில் மக்களை வாக்களிக்கவும், மற்றைய நேரத்தில் வக்களிப்பதை தடுத்தும் வருகிறார்..................." என்று தனது ஊதுகுழலான கேடி ராஜசிங்கத்தின் ஏசியன் ட்ரிப்யூனில் அழுதிருந்தார். கருணாவின் ஊதுகுழல்கள் இந்தநேரத்தில் போலியாகவேனும் தைரியத்தைக் காட்டவேண்டியது அவசியம் என்பதை ஒருவர் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், கருணாவின் கல்க்குடாத் தொகுதியில் எப்போது, எவரால், எவ்வாறு வாக்காளர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளமுடியாமல் பிரபாகரனால் தடுக்கப்பட்டார்கள் என்பதை அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வமாக நான் இருக்கிறேன். என்னால் கல்க்குடாத் தொகுதி மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளமுடியாமல் தடுக்கப்பட்டார்கள் என்று கூறும் ஒரு பத்திரிக்கைச் செய்தியைத் தன்னும் இதுவரை பார்க்கமுடியவில்லை. இத்தேர்தலில் கல்குடாத் தொகுதி மக்கள் சொல்லிய செய்தி மிகவும் தெளிவானது, அது கருணாவால் இலகுவில் ஜீரணிக்கமுடியாதது. கல்க்குடாத் தொகுதித் தமிழர்கள் கருணாவைப் போல் ஏமாளிகளோ அல்லது ஏமாற்றப்படுபவர்களோ இல்லை. தமிழருக்கு எதிரான சதிகளிலும், நாசவேளைகளும் ஈடுபட்டுவரும் தமது சொந்த ஊர்க்காரனான கருணாவை அவர்கள் முற்றாக ஒதுக்கிவிட்டார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.
-
கருணாவும் கல்க்குடாவும் சந்திரிக்காவின் பாவசங்கீர்த்தனங்கள் பற்றிய சில தெளிவுபடுத்தல்களை நான் முன்வைக்க விரும்புகிறேன். முதலாவதாக, கருணா மட்டக்களப்பிலிருந்து வெளியேறும் முன்னர் சந்திரிக்காவுடன் தனது பாதுகாப்பிற்கு ராணுவத்தினரின் உதவிவேண்டிப் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டார் என்பது. இரண்டாவது, சந்திரிக்கா கருணாவோடு நேரடியாகப் பேச விரும்பவில்லையென்பது, இன்னொருவர் மூலமாக கருணாவிடமிருந்து தகவல்களைப் பெற ஒத்துக்கொண்டார் என்பதும். மூன்றாவதாக, சந்திரிக்காவின் ஒப்புதலோடு, அவரது முகவர் ஒருவர் கருணாவோடு எப்போதும் தொடர்பிலிருந்து தகவல்களைப் பரிமாறிக்கொள்வதென்பது. நான்காவது, கருணா தானது வீரப்பிரதாபங்களை சர்வதேச செய்திச் சேவைகளிலும், உள்ளூர்ச் செய்திச்சேவைககளிலும் மார்தட்டி, பின்னர் புலிகளிடம் மரண அடிவாங்கி ஓடியிருக்காவிட்டால் ,சந்திரிக்கா சிலவேளை அவருடன் நேரடியாகப் பேசியிருக்கலாம் என்பது. ஆனால், கருணாவின் மார்தட்டல்கள் புஸ்வானமாகிப் போக, சந்திரிக்காவும் தனக்கும் கருணாவுக்கும் இடையிலான தொடர்பினை மிக இலகுவாக மறுத்துவிட முடிந்தது. ஐந்தாவது, சந்திரிக்கா தனது சுய சரித்திரத்தை எழுதும்வரை நாம் காத்திருந்தாலே, கருணா அவருக்கு அனுப்பிய முக்கியமான "அந்த" செய்திகள் பற்றி அறிந்துகொள்ளமுடியும், ஆனால் அதை அவர் எப்போது எழுதுவார் என்பது எவருக்கும் தெரியாது. அதுவரையில், சந்திரிக்கா கருணாவை வெளிப்படையாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் என்றே நாம் கருதவேண்டும். அதேவேளை கருணாவும், அவரின் பின்னால் நின்று இயக்கிவருபவர்களும் இதுபற்றி எதுவுமே பேசமுடியாத நிலையில் மெளனமாகவே இருக்கவேண்டும். அனால், சந்திரிக்காவின் கருணா தொடர்பான வெளிப்படுத்தல்கள் பற்றி அவரது ஊதுகுழலான கேடி ராஜசிங்கம் நடத்தும் மஞ்சள்ப்பத்திரிக்கையான ஏசியன் ட்ரிபியூனில் ஒரு சொல் கூட பதியப்படவில்லை !! கருணாவுக்கெதிராக கல்க்குடா வாக்காளர்கள் வெளிப்படுத்திய அதிருப்தி கடந்த ஜனாதிபதித் தேர்தல் நாளான கார்த்திகை 17 ஆம் திகதிக்கு ஓறிரு நாட்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான மகிந்த ராஜபக்ஷவை தான் ஆதரிப்பதாக கருணா வெளிப்படையாக அறிவித்திருந்தார். இதனை அவருடைய ஊதுகுழலான ஏசியன் ட்ரிபியூன் பத்திரிக்கையே காவிவந்திருந்தது. "விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இந்த ஜனாதிபதிதேர்தலை தமிழ் வாக்காளர்கள் பகிஷ்கரிக்கக் கூடாதென்று கேட்டுக்கொள்கிறது..........மகிந்த ராஜபக்ஷ அவர்கள் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பல மாற்றங்களைச் செய்யப்போவதாக உறுதியளித்திருக்கிறார். எம்மைப்பொறுத்தவரைக்கும் இது ஒரு முக்கியமான விடயமாகும். அத்துடன், இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக புலிகள் மட்டுமல்லாமல் அனைத்துக் கட்சிகளுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகக் கூறியிருக்கிறார். எம்மைப் பொறுத்தவரையில் இது மிக மிக முக்கியமானது ….இந்தக் காரணங்களுக்காக மகிந்த ராஜபக்ஷவை இத்தேர்தலில் ஆதரிப்பதென்று முடிவெடுத்திருப்பதாக கருணா அம்மான் தெரிவித்திருக்கிறார்" என்று கேடி ராஜசிங்கம் தனது மஞ்சள்ப்பத்திரிக்கையில் எழுதியிருந்தார். கருணாவின் சொந்த இடமான கிரான் அமைந்திருக்கும் கல்க்குடாத் தொகுதி வாக்காளர்கள் கருணாவின் இந்த அரசியல் வேண்டுகோளினைக் கேட்டிருப்பார்களா? இத்தொகுதியின் தேர்தல் முடிவுகள் கருணாவின் வேண்டுகோளுக்கு முற்றிலும் எதிராகவல்லவா அமைந்திருந்தன? இதில் வேடிக்கையென்னவென்றால், கருணாவோ அல்லது அவரது ஊதுகுழல்களோ கல்க்குடாத் தொகுதி மக்கள் வற்புறுத்தலின்பேரிலேயே வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லையென்று எழுதக் கூடத் திராணியற்றுப் படுத்துவிட்டனர். இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால், கருணாவின் அரசியல் திருகுதாலங்களை அவரது பிரதேச மக்களே ஊதித்தள்ளிவிட்டார்கள் என்பதுதான். புலிகளுக்கெதிரான பத்தியெழுத்தாளரான டி பி எஸ் ஜெயராஜ், கல்க்குடாத் தொகுதியில் கருணாவுக்கும், அவர் வரிந்துகொண்ட மகிந்த விசுவாசத்திற்கும் கிடைத்த மரண அடியை ஜீரணிக்கமுடியாமல், தேர்தல் முடிபுகளை திரிபுபடுத்தி, புனைகதையொன்றை பின்வருமாறு அரை அவியலில் இறக்கிவிட்டிருந்தார். “ரணிலுக்குக் கிடைத்த வாக்குகள் முஸ்லீம்களின் வாக்குகள் என்று புலிகள் நிறுவ முயல்கிறார்கள். இது தவறானது, பட்டிருப்புத் தொகுதி 99 வீதம் தமிழர்களைக் கொண்டது. கல்க்குடாத் தொகுதி 65 வீதம் தமிழர்களைக் கொண்டது. மட்டக்களப்பு 75 வீதம் தமிழர்களைக் கொண்டது. இத்தேர்தலில் கிடைத்த வாக்குகள் 1999 ஆம் தேர்தலைக் காட்டிலும் அதிகமானவை. மட்டக்களப்பில் கருணாவின் தாக்கமும் வாக்களிப்பில் அதிக பங்கினைச் செலுத்தியிருந்தது. மகிந்த ராஜபக்ஷவுக்கு வக்களியுங்கள் என்று கருணா கேட்டிருந்தாலும்கூட, மக்கள் வேறு வாக்களர்களுக்கு வாக்களிப்பதையும் ஊக்குவித்திருந்தார். இந்த "கலந்த சமிக்ஞைகளே" வாக்களர்களை பெருமளவில் வந்து வாக்களிக்க வைத்திருந்தது ......."
-
கருணாவும் கல்க்குடாவும் இலங்கை தமிழ்ச் சங்கம் இணையத்தில் சிறி காந்தா எழுதிய ஆக்கம் காலம் : மகிந்த அரியணை ஏறிய காலப்பகுதி கடந்த சில வாரங்களாக கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் மீது முன்வைக்கப்பட்டு வரும் கடுமையான விமர்சனங்கள், அதிருப்திகள் பற்றி எவராவது எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா? இவை யாரிடமிருந்து வருகின்றன? முதலாவதாக, கொழும்பு அதிகார வர்க்கத்தின் அதியுச்சத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதியான சாட்சாத் சந்திரிக்கா பண்டாராநாயக்கவிடமிருந்து. இரண்டாவதாக கருணாவின் பிறப்பிடமான கிரான் அமைந்திருக்கும் கல்குடா தொகுதி வாக்களர்களிடமிருந்து கடந்த கார்த்திகை 17 ஆம் நாள் இருந்து வந்த அதிருப்தி. கருணா தன் செயற்பாடுகள் மீதான இந்த விமர்சனங்கள், அதிருப்திகள் கண்டு அதிர்ச்சியடைந்திருப்பதாகவே எனக்குப் படுகிறது. ஊருடன் பகைத்தால் வேருடன் சாயும் எனும் பழமொழி கருணா விடயத்தில் பலித்திருப்பதாகவே படுகிறது. மூன்றாவதாக, தற்போது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து. கொழும்பில் வெளியான கருணாவின் செயற்பாடுகள் ஒருகாலத்தில் கொழும்பிலும், இந்தியாவிலும் இருந்த அரசியல், ஊடக பெருச்சாளிகள் சந்திரிக்காவை "கவர்ச்சியான" தலைவராக பிரகணம் செய்துவந்தன, ஆனால் நான் ஒருபோதும் அதனை நம்பவில்லை. ஆனால், பேயாக இருந்தாலும், அதற்கான இடம் வழங்கப்படத்தானே வேண்டும்? சந்திரிக்காவிடம் ஒருவிடயத்தைச் செய்விக்கும் திறமை இருந்திருக்கலாம், ஆனால் இதுவே கவர்ச்சியாகிவிடாது. அவரின் பெற்றோர்களுடன் நெருங்கிப் பழகிய பலரும் கூறும் ஒருவிடயம், அவரது தந்தையாரான சொலொமொன் பண்டாரநாயக்கா வினைத்திறனும் கவர்ச்சியும் கொண்டிருந்த தலைவர் என்று கூறுகின்றனர். ஆனால், அவரது தாயாரான சிறிமாவோ கண்டிய மேற்தட்டு வர்க்கத்திற்கேயுரிய ஆணவமும், அதிகாரத்தனமும், அதேவேளை வெளிப்படைத்தன்மையில்லாத, ரகசியமான ஒரு தலைவராகவே இருந்தார். இந்தியாவின் ஹிந்துப் பத்திரிக்கையுடனான சந்திரிக்கா எனும் "நட்சத்திரத்தின்" அஸ்த்தமக் காலத்தின் வெள்ளையடிக்கும் நாடகச் செவ்வியில் கருணாவைப் பற்றியும், அவரின் பின்னாலிருந்து இயக்குவிக்கின்ற, அவரின் பெயரில் அரசியல் நிலைப்பாடுகளை வெளியிடுகின்றவர்கள் பற்றி பல விடயங்களை பொதுவெளியில் சல்லிகளாகப் போட்டுடைத்துவிட்டார். கருணாவின் கைங்கரியங்கள் பற்றிய சந்திரிக்காவின் வெளிப்படுத்தல்கள் அவராகவே விரும்பி வெளியிடப்பட்டவையா அல்லது சந்தர்ப்பவசத்தால் அவரை அறியாமலேயே வாயால் வந்து கொட்டப்பட்டவையா என்பது அவருக்கே வெளிச்சம். புலிகளுடனான சந்ர்திரிக்காவின் தொடர்பாடல்கள் குறித்து ஹிந்துவின் செவ்வியாளர் வி எஸ் சம்பந்தன் அவர்கள் கேட்ட மூன்று கேள்விகளும், இவற்றிற்கான சந்திரிக்காவின் பதிகளும் கீழே விரிகின்றன, கேள்வி 1 : கடந்த 11 வருடங்களாக புலிகளுடன் நீங்கள் நடத்திவந்த சமாதான முயற்சிகளில் மிக அதியுயர் புள்ளியாக எதனைக் கருதுகிறீர்கள்? சந்திரிக்கா : புலிகளின் கிழக்கு மாவட்ட தளபதியாகவிருந்த கருணாவுக்கு வெளிநாடுகளுக்கு செல்லக் கிடைத்த அடுதடுத்த சந்தர்ப்பங்கள் மூலமாக அவர் புலிகளிடமிருந்து பிரிந்து செல்லும் வாய்ப்புகள் நான் பதவியிலிருந்த காலத்தில் , வடக்குத் தமிழர்களுக்கும் கிழக்குத் தமிழர்களுக்கும் இடையே என்னதான் பிணக்குகள் இருந்ததாக கூறப்பட்டாலும்கூட ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதை நிச்சயமாக என்னால் உறுதிபடக் கூறமுடியும். நான் இதனை கற்பனையாகக் கூறவில்லை, எனது சரித்திரத்தை நான் ஒருநாள் எழுதும்போது, கருணா எனக்குத் தனிப்பட்ட ரீதியில் அனுப்பிய, இன்றும் மிக ரகசியாமாக இருக்கும் பல விடயங்கள் பற்றி எழுதுவதென்பது என்னைப்பொறுத்தவரையில் நிச்சயமாக சங்கடமாகவே இருக்கும். அவர் என்னுடன் நேரடியாகப் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், நான் ஒருபோதுமே அவருடன் பேசவில்லை, இன்னும் சொல்லப்போனால் ஒரு பயங்கரவாதியுடன் நேராகப் பேசுவதில்லை எனும் வைராக்கியத்துடன் நான் இருந்துவருகிறேன். ஆனால், அவர் அனுப்பிய செய்தி மிகவும் தெளிவானது....... கேள்வி 2 : இது எப்போது நடந்தது? சந்திரிக்கா : அவர் புலிகளிடமிருந்து பிரிந்துசென்ற போது, மட்டக்களப்பை விட்டு வெளியேறுமுன்னர். கேள்வி 3 : நீங்கள் அவருடன் பேசவேயில்லையா? சந்திரிக்கா : நான் ஒருபோதும் அவருடன் பேசியதில்லை, இனிமேலும் பேசப்போவதில்லை. ஆனால், அவருக்கு பாதுகாப்புத் தேவைப்படுமிடத்து என்னால் அதற்கான உதவிகளைச் செய்யமுடியும் என்று நான் செய்தியனுப்பியிருந்தேன், பிரபாகரன் என்னிடம் பாதுகாப்புக் கேட்டிருந்தாலும் இதனையே செய்திருப்பேன். அவரும் இலங்கையின் குடிமகனே. ஆனால், கருணாவுடன் எதுவித தொடர்புகளையும் பேணவில்லை.
-
மட்டக்களப்பில் கருணாவைப் உளவியல் யுத்தத்திற்காகப் பாவிக்கும் ராணுவம் கருணாவுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே இருக்கும் மிக நெருங்கிய ஒத்துழைப்பினை அடிப்படையாகக் கொண்டு, மட்டக்களப்பிலிருந்து கருணாவை வெளியேற்றும் நடவடிக்கையினை புலிகள் மேற்கொண்டபோது ராணுவம் நடந்துகொண்ட விதத்தினைப் பார்த்தல் அவசியம். புலிகளுக்கும் கருணாவுக்குமிடையிலான பிணக்கில் தாம் நடுநிலைமை வகிப்பதாக வெளியே பாசாங்குக் காட்டிக்கொண்டிருந்த ராணுவம், உண்மையில் கருணாவுக்கு ஆதரவாக செயற்பட்டிருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. சந்திரிக்கா நடத்திக்கொண்டிருந்த தேர்தலில், சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவினை வேண்டி நின்றதனால், கருணாவை வெளிப்படையாகவே ஆதரிப்பதென்பது ராணுவத்திற்கும், அரசாங்கத்திற்கும் தர்மசங்கடமான நிலையினை ஏற்படுத்தியிருக்கும்., அதுமட்டுமல்லாமல், புலிகள் வெறும் 3 நாட்களிலேயே கருணாவை அடித்துவிரட்டுவார்கள் என்பதை ராணுவம் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதும் இந்த நடுநிலைமை நாடகத்தின்மூலம் வெளிச்சமாகிறது. கருணாவை வெளியேற்றும் முடிவினைப் புலிகள் தாமதப்படுத்தியிருந்தாலோ அல்லது, இத்தாக்குதல் முயற்சி நீண்டு சென்றிருந்தாலோ, ராணுவம் தனது உண்மையான முகத்தினைக் காட்டியிருக்கும் என்றே கருதமுடிகிறது. போர் என்பது தடுக்கமுடியாததாகவே இருந்திருக்கலாம், ஆனால் கருணா மீதான புலிகளின் இலகுவான வெற்றியென்பது ராணுவம் கருணாவின் பெயரில் புலிகள் மீதான வெளிப்படையான போர் ஒன்றிற்குள் இறங்கும் கனவினைத் தவிடுபொடியாக்கிவிட்டது. தனது அரசியல் ரீதியான செல்வாக்கிற்கும், அரசியல் இருப்பைப் பலப்படுத்திக்கொள்ளவும், கருணாவின் மூலம் புலிகள் மீதான ராணுவ வெற்றியொன்று பெருமளவில் உதவியிருக்கும் என்று சந்திரிக்கா நினைத்திருக்கலாம். ஆனால், அது நடைபெறாமல்ப் போயுள்ளதோடு, சமாதானப் பேச்சுவார்த்தையும் பல சங்கடங்கள் ஊடாக இன்னும் பயணித்துக்கொண்டே செல்கிறது. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையிலான பிரச்சினையை போரின்மூலம் தீர்க்கமுடியாதென்பதே உண்மை. உண்மையான சமாதானப் பேச்சுவார்த்தைகளினாலன்றி, கபடத்தனமான ராணுவ அழுத்தங்களின்மூலம் சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியாதென்பதை சந்திரிக்கா உணரவேண்டும். 1995 இல் அவர் இதனை ஏற்கனவே பரீசிலித்துப் பார்த்து அதில் தோல்வியும் கண்டிருக்கிறார். தமிழர்களுக்கெதிரான சமூகமயப்படுத்தப்பட்ட காழ்ப்புணர்வை சிங்களவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், தமிழர்களுக்கெதிரான வெளிப்படையான சமூகமயப்படுத்தப்பட்ட தாக்குதல்களைச் செய்ய அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், தமிழர்களை சகல வழிகளிலும் அடக்கியொடுக்கி, தோல்வியடைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் சந்திரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, தமிழர்கள் சிங்களவர்களின் தாக்குதல்களிலிருந்து விடுபட்டு, அமைதியாகவும், சுயகெளரவத்துடனும் வாழும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுதல் அவசியமாகிறது. இருதுருவங்களக பிரிந்துநிற்கும் தமிழ் மற்றும் சிங்களச் சமூகங்களைப் பார்க்கும்போது இரு இனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமாதானத் தீர்வொன்றிற்கான சாத்தியம் இல்லையென்றே தெரிகிறது. ஆகவே, நாம் நிச்சயமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்ட, வெற்றிகரமான பொறிமுறை ஒன்றிற்கே வரவேண்டியிருக்கிறது. உள்ளக சுயநிர்ணய உரிமையுடனான பரீட்சார்த்த முயற்சிகள் உலகின் பலநாடுகளில் வெற்றியளித்திருக்கின்றன. புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் 2 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு, பல சிக்கல்களை எதிர்கொண்டு, தற்பொழுது புலிகள் தமது சார்பாக திட்டம் ஒன்றினை முன்வைத்திருக்கிறார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகளில் உண்மையாகவே புதிய அரசாங்கம் அக்கறைகொண்டிருந்தால், உறுதியளிக்கப்பட்ட வெளிநாட்டு உதவிகளை மனதிற்கொண்டு தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் உண்மையாக ஈடுபடுதல் அவசியம். புலிகளின் உத்தேச தீர்வினை ஏற்றுக்கொண்டு, அரசு பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து, சர்வதேச உதவியுடன் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவதோடு, நீண்டகால அரசியத் தீர்வுதொடர்பாகவும் தொடர்ந்து செயற்படுதல் அவசியமானது.
-
மட்டக்களப்பில் கருணாவைப் உளவியல் யுத்தத்திற்காகப் பாவிக்கும் ராணுவம் தமது எதிர்கால நடவடிக்கைகளுக்காக மட்டுமன்றி கருணவைப் பாதுகாத்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு இன்னும் பல காரணங்கள் இலங்கை ராணுவத்திற்கு இருக்கிறது. தமிழினத்திற்கெதிராகவும், சிங்களவர்களுக்குச் சார்பாகவும் கருணா செய்த காரியம் நிச்சயமாக இலங்கை அரசையும் ராணுவத்தையும் வெகுவாகக் கவர்ந்திருந்தது. புலிகளுக்கெதிரான நாசகார நடவடிக்கைகளுக்காக பல ராணுவத் தளபதிகளோடும் கருணா மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்திருந்தார் என்பது தெளிவாகிறது. சிங்கள பெளத்த இனவாதிகளிடமிருந்து கருணாவுக்குக் கிடைத்துவரும் ஆதரவினையும், பாராட்டுதல்களையும் பார்க்கும்போது சிங்கள தேசத்தின் எதிர்கால நலன்களுக்கு கருணா தேவைப்படுவார் என்பதைக் காட்டிலும் வேறு இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன என்பதே உண்மை. சாதாரண மக்களுக்குத் தெரிந்திருக்கும் கருணாவின் சிங்களவர்களுக்கான சேவைகள் என்பதைக் காட்டிலும், கருணா பாரிய வெற்றியொன்றினைச் சிங்களவர்களுக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை இந்த சிங்கள புத்திஜீவிகளும், இனவாதிகளும் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றனர். இந்தப் புத்திஜீவிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே இருக்கும் நெருக்கத்தின்மூலம், தமிழர்களுக்குக் கருணா இழைத்த துரோகம் சிங்களவர்களைப் பொறுத்தவரை எத்துணை பெறுமதிவாய்ந்தது என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கிறது. பி பி ஸி தமிழ்ச்சேவைக்கு செவ்வியளித்த இன்னொரு ஆயுததாரியான டக்கிளஸ் தேவானந்தா பேசுகையில், கருணாவை பிற்காலத்தில் தமிழர்களுக்கெதிரான துரோகச் செயல்களுக்காக அரசு பாவிக்க முயலலாம் என்று தொனிப்படக் கூறியிருந்தார். இப்போதைக்கு, கருணா ராணுவத்தினரின் கடுமையான பாதுகாப்பின்கீழ் கடந்த 3 மாதங்களாக வாழ்ந்துவருகிறார் என்பது மட்டும் உறுதியாகிறது. ஆகவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் காடுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும், வெளியேயும் தமிழர்களும், போராளிகளும் கொல்லப்படுதலின் பின்னால் கருணாவின் பெயரைப் பாவித்து ராணுவமே ஈடுபட்டு வருகிறது என்பதை நாம் ஊகிக்கலாம். மட்டக்களப்பில் புலிகளின் அரசியல்த்துறைப் போராளிகள் மீது அடுத்தடுத்து நடத்தப்படும் படுகொலைகளின்பொழுது, கொலையாளிகள் வெள்ளைவான்களில், ராணுவ முகாம்களுக்குள் அடைக்கலமாகியதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். இவ்வாறான செய்திகளை இலகுவாகப் புறந்தள்ளிவிட முடியாது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருக்கும் ராணுவ முகாம்களிலிருந்து புறப்பட்டுச் செல்லும் ஆயுததாரிகளே இக்கொலைகளில் ஈடுபட்டுவருவதால், நிச்சயமாக அவர்கள் ராணுவத்தினராகவோ அல்லது அவர்களுக்கு மிக நெருக்கமானவர்களாகவோதான் இருக்கவேண்டும். இத்தாக்குதல்களை ராணுவமோ அல்லது ராணுவத்தின் தூண்டுதலால் வேறு சிலரோ செய்வதென்பது புரிந்துணர்வு உடன்பாட்டினை வேண்டுமென்றே மீறும் ஒரு செயலாகப் பார்க்கப்படவேண்டும். கருணா இன்னமும் கொழும்பில் தங்கியிருக்கும் நிலையில், மட்டக்களப்பில் புலிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் ராணுவமே ஈடுபடுவதான பாரிய சந்தேகம் நிலவுகிறது. புலிகள் மீதான ராணுவத்தினரின் தாக்குதல்கள் விபரீதத்தில் முடியவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. புலிகளுக்கெதிரான ராணுவத்தின் இந்த உளவியல்ரீதியிலான தாக்குதல்களை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. வெற்று அறிக்கைகளுடன் மட்டுமே இவர்கள் நின்றுவிடாது, இந்த சினமூட்டும் தாக்குதல் நிறுத்தப்படுவதையும் உறுதிப்படுத்துவது அவசியமானது. யுனிசெப் அமைப்பினைப் போன்று தமிழரின் விடுதலைப் போராட்டத்தினைகொச்சைப்படுத்த அரசால் பாவிக்கப்படாமல் சுயாதீனமாக இயங்கி தமிழரின் அவலங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
மட்டக்களப்பில் கருணாவைப் உளவியல் யுத்தத்திற்காகப் பாவிக்கும் ராணுவம் புலிகளிடமிருந்து துரோகி கருணா பிரிந்துசென்ற நாட்களில் ர. ஷான் என்பவரால் இலங்கைத் தமிழ்ச் சங்கம் எனும் இணையத்தளத்தில் வந்த கட்டுரை கடந்தச் ஞாயிற்றுக்கிழமை , 20/06/2004 அன்று பி பி ஸி தமிழ்ச் சேவைக்கு அவர் வழங்கிய நேர்காணலில் அவர் பின்வருமாறு கூறினார், " ஆரம்பத்தில் நாங்கள் அனைவரும் இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பிலேயே கொழும்பில் தங்கியிருந்தோம். பின்னர் கருணா வேறொரு இடத்திற்குப் போய்விட்டார்". நிலாவினியும் இன்னும் வேறு நான்கு பெண்போராளிகளும் கடந்த 18/06/2004 அன்று கொழும்பில், கருணா மற்றும் இலங்கை ராணுவத்தின் பிடியிலிருந்து தப்பி, புலிகளுடன் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். சோலையகத்தில் இடம்பெற்ற இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிலாவினியுடன் மேலும் மூன்று பெண் போராளிகளும் பிரசன்னமாகியிருந்தனர். கருணாவின் பின்னால் நின்று அவரை இயக்குவிப்பது அரசுதான் என்பதற்கான பலமான சான்றுகளைப் புலிகள் இப்போது வைத்திருக்கிறார்கள் என்பதை அரசு இப்போதாவது உணர்ந்துகொள்ளவேண்டும். நிலாவினி தொடர்ந்தும் பேசுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மெளலானாவே தனது சொந்த வாகனத்தில் கருணாவையும், அவரோடு இருந்தவர்களையும் ஏற்றிக்கொண்டுவந்து கொழும்பில் நட்சத்திர விடுதியான ஹில்ட்டன் விடுதியில் 3 நாட்கள் தங்கவைத்ததாகக் கூறினார். அதன் பின்னர் கருணா, அவரது ஆலோசகர் வரதன் உட்பட தாம் அனைவரும் இலங்கை ராணுவத்தின் பாதுகாப்புமிக்க வீடொன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறிய அவர், கருணாவைச் சந்திக்க ராணுவ புலநாய்வுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் தாம் அங்கு தங்கியிருந்த 7 அல்லது 8 நாட்களில் பலமுறை வந்துசென்றதாகவும் கூறினார். பின்னர் அவர்கள் இலங்கை ராணுவத்தின் முகாம்கள் அமைந்திருந்த நாரஹேன்பிட பகுதியில் , அப்பொல்லோ மருத்துவமனைக்கு அருகில் அமைந்திருந்த ராணுவப் பாதுகாப்பு வீடொன்றில் தங்கவைப்பட்டதாகத் தெரிகிறது. ஆனி 13 ஆம் திகதி, மட்டக்களப்பிலிருந்து கருணாவும் அவரது தோழர்களும் தப்பியோடி ஏறத்தாள 3 மாதங்களுக்குப் பிறகு தம்மைச் சந்திக்க வந்த கருணா, தானும் தனது குடும்பமும் வெளிநாடொன்றிற்குப் போகப் போவதாகக் கூறிவிட்டு ராணுவ வாகனம் ஒன்றில் ஏறிச்சென்றதைத் தாம் கண்ணுற்றதாக அவர் மேலும் கூறினார். கருணா அங்கிருந்து சென்றதையடுத்து, மட்டக்களப்பிலிருந்த தனது உறவினர் ஒருவருடன் தொடர்புகொண்ட நிலாவினியும் வேறு 4 பெண்போராளிகளும், அவரின் உதவியோடு அங்கிருந்து தப்பிவந்ததாக கூறப்பட்டது. நிலாவினியும் கூற்றுப்படி, கருணா தமது வீட்டிலிருந்து சென்றபின்னர், அவ்வீட்டிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பினை ராணுவம் வெகுவாகத் தளர்த்தி விட்டிருந்ததாகவும், இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து தாம் தப்பிவந்துவிட்டதாகவும் அவரால் கூறப்பட்டது. நிலாவினியின் இந்தப் பகிரங்கமான கூற்று இலங்கை ராணுவமே கருணாவை வழிநடத்துகிறதென்பது உறுதிப்படுத்தப்படுவதோடு, செய்தியாளர்களிடம் கூறிய விடயங்களைக் காட்டிலும் நிலாவினி புலிகளிடம் இன்னும் பல விடயங்களைப் போட்டு உடைத்திருப்பர் என்பதை நாம் ஊகிக்கமுடியும். மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட விசேட தளபதியான ரமேஷ் இச்செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, கருணாவைப் பாவித்து புலிகளை அழிக்க ராணுவம் முயல்வது தெளிவாகத் தெரிகிறது என்று கூறினார். கருணா கொழும்பிற்குத் தப்பிச் செல்வதற்கு அலிசாகீர் மெளலான செய்த உதவியென்பது வெறுமனே தனிப்பட்ட ரீதியில் செய்யப்பட்ட உதவியென்று கடந்து சென்றுவிடமுடியாது. இவ்வாறான மிகவும் ஆபத்தான உதவியொன்றைச் செய்வதென்பது அரசியல் ரீதியிலும், அவரின் சொந்தப் பாதுகாப்பு ரீதியிலும் மிகக் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியது. கருணாவுடனான சிநேகம் மட்டுமே அலிசாகீர் மெளலானாவுக்கு இந்தச் செயலைச் செய்யும் தைரியத்தை நிச்சயம் கொடுத்திருக்காது. இலங்கை ராணுவத்தின் வேண்டுகோளின் அடிப்படையிலும், மெளலானாவின் பாதுகாப்பிற்கான அரசின் உத்தரவாதமும் இல்லாமல் நிச்சயமாக அவர் இந்த முயற்சியில் இறங்கியிருக்கமாட்டார் என்பது திண்ணம். இலங்கை ராணுவத்தினருடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் அலிசாகீர், பாதுகாப்புச் செயலாளராகவிருந்த லயனல் பலகல்லவின் நெருங்கிய நண்பர் என்பதும், அவர்மூலமாக ஜனாதிபதி சந்திரிக்காவின் நட்பைப் பெற்றிருந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இலங்கை ராணுவம் கருணாவைப் பாதுகாப்பாக கொழும்பிற்குக் கொண்டுவந்ததுடன் தனது பணியை நிறுத்திக்கொள்ளவில்லை, மாறாக அவரைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, இயக்கியும் வருகிறது.
-
இவர் கருணாவின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் . பிரிவின் முன்னர் இருந்தவரா என்று தெரியவில்லை. கருணாவை விட்டு வெளியேறி புலிகளுடன் மீண்டும் இணைந்துகொண்ட நான்கு பெண் போராளித் தலைவர்களின் வாக்குமூலத்தின்படி கருணா கொழும்பில் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து இயங்குவது வெளிப்படையாகியிருக்கிறது. இதுவரை காலமும் கருணாவுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், அவருக்குக் கீழிருந்த போராளிகளே அவரதும் ராணுவத்தினதும் சிநேகம்பற்றிக் கூறியிருப்பது, அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் சமாதானம் இல்லையென்பது தெளிவாவதாக கொழும்பில் அரசியல் அவதானிகள் தெரிவித்திருக்கின்றனர். மட்டக்களப்பு பெண்கள் பிரிவின் தளபதி நிலவினி, மட்டக்களப்பு பெண்போராளிகளின் அரசியல்த்துறைப்பொறுப்பாளர் ப்ரேமினி, ஆட்டிலெறிப் படையணியின் மூத்த தளபதி லாவண்யா மற்றும் தீந்தமிழ் ஆகியோர் கருணாவுக்கெதிரான புலிகளின் நடவடிக்கையின்போது அவருடன் கொழும்பிற்குத் தப்பிச் சென்று, பின்னர் அவரைவிட்டு விலகி புலிகளுடன் இணைந்திருக்கிறார்கள். ஆனால், தாம் கருணாவிடமிருந்து எப்படித் தப்பிவந்தார்கள் என்பதுபற்றி அவர்கள் பேசவில்லை. பி பி சி தமிழ்ச்சேவைக்குப் பேட்டியளித்த நிலவினி, "ஆரம்பத்தில் நாம் எல்லோரும் ராணுவத்தின் பாதுகாப்பில்தான் இருந்தோம். பின்னர், கருணா தனியாக இன்னொரு இடத்திற்கு போய்விட்டார். கருணாவின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்ற நாங்கள், எங்களை எமது பொற்றோருடன் இணைய அனுமதிக்குமாறு அவரைத் தொடர்ச்சியாகக் கேட்டு வந்தோம். அதற்கு அவர் எம்மை எமது பெற்றோருடன் சேர்க்கும் வேலைகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் இதுபற்றி எம்மிடம் கூறுவதாகவும் சொல்லிவந்தார். ஆனால், அவர் உடனடியாக பதில் ஏதும் தராததால், நாம் கொழும்பிலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பை வந்தடைந்து மீண்டும் புலிகளுடன் இணைந்துகொண்டோம்" என்று கூறினார். அரசாங்கம் தொடர்ச்சியாக கருணாவுக்கும் தமக்கு தொடர்பில்லை என்று கூறுவதுபற்றிக் கேட்டபோது, " அவர்களால் அதனை இனிமேல் மறுக்கமுடியாது, ஏனென்றால் எங்களை கொழும்பில் மறைவிடத்தில் வைத்திருந்தது இலங்கையின் ராணுவம்தான், இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.
-
புலிகளின் கிழக்குப் பிராந்திய தகவல்களின்படி கருணாவின் இரு தளபதிகளான ஜிம் கெலித் தாத்தா, ரொபேட் மற்றும் பேச்சாளர் வரதன், நிதிப்பொறுப்பாளர் குஹனேஸ், விசாலகன் அணிப்பொறுப்பாளர் ஜீவேந்திரன், மட்டக்களப்பு பெண்போராளிகளின் தளபதி நிலவினி, கிழக்கு மாகாண அரச சார்பற்ற நிறுவனங்களின் மேற்பார்வையாளர் துரை, டீடோர் பொறுப்பாளர் துரை, நெருங்கிய சகா இலங்கேஸ் மற்றும் ஐந்து மெய்ப்பாதுகாவலர்கள் ஆகியோரே தரவைப் பகுதியிலிருந்து ஞாயிறு இரவு தப்பியோடியுள்ளதாக கூறியிருக்கின்றனர்.
-
கருணாவும் கே டி ராஜசிங்கமும் : இரு பாம்புகளின் இணைவு கருணாவுக்கான "அன்டன் பாலசிங்கம்" ஆக கே டி ராஜசிங்கமே தன்னை முன்னிலைப்படுத்தியிருந்தார். ஆனால் இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணி சில வருடங்களிலேயெ கசத்துப்போனது. வடமாகாணத்தானை எதிர்த்து, கிழக்கு மாகாண மக்களுக்கான விடுதலையினைப் பெறப் போராடுவதாகக தன்னை வரிந்துகொண்டிருந்த கருணாவுக்கு வடக்கு மாகாணத்தான் ஒருவனே அரசியல் ஆலோசகராக செயற்படுவதென்பது நிச்சயமாக ஒரு தர்மசங்கடமான நிலையினை ஏற்படுத்தியிருக்கும் என்பது ரகசியமல்ல. ஆனால், அதுமட்டுமே காரணமாக இருந்திருக்காது. ஏசியன் ட்ரிபியூன் எனும் சஞ்சிகையில் 2007 கார்த்திகையில் எழுதிய வோல்ட்டர் ஜயவர்தன பின்வருமாறு கூறுகிறார், "கருணா ராஜசிங்கத்தைத் தொடர்ச்சியாக பயமுறுத்தி வந்திருந்தார். வடமாகாணத்திலிருந்து வந்த கே டி ராஜசிங்கம் தனது நண்பர் ஒருவரிடம் பேசும்போது, அடிக்கடி கருணாவின் உதவியாளர் ஒருவர் தன்னைத் தொடர்புகொண்டு மிரட்டி வருவதாகக் கூறியிருக்கிறார். கருணாவின் நெருங்கிய சகாவான ஒருவர் கே டி ராஜசிங்கத்திற்கு விடுத்த அச்சுருத்தலில், ராஜசிங்கத்தின் ஏசியன் ட்ரிபியூன் இதழில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் துணைராணுவக் குழுவுக்கெதிரான செய்திகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று எச்சரித்திருக்கிறார். அத்துடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவிற்குள் ஏற்பட்ட பிளவுகளைப் பற்றியோ, அல்லது இக்குழுக்களுக்கிடையிலான படுகொலைகள் பற்றியோ ராஜசிங்கம் எதுவும் எழுதக்கூடாதென்றும் அச்சுருத்தப்பட்டிருக்கிறார். இதே காலப்பகுதியில்த்தான் கருணா வெளிப்படையாகவே பிள்ளையான் குழு ஆயுததாரிகளையும், முக்கியஸ்த்தர்களையும் இலக்குவைத்துக் கொன்றுவந்தார் என்பது குறிப்பிடத் தக்கது". கே டி ராஜசிங்கம் என்பவர் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் என்பதுடன், தற்போது செயலற்றூப்போயிருக்கும் தெவச எனும் சுயாதீனப் பத்திரிக்கையாளர்கள் அமைப்பிலேயே தனது ஊடகவியலாளர் பணியை ஆரம்பித்திருந்தார். தற்போது ஐரோப்பாவில் வாழ்ந்துவரும் ராஜசிங்கத்துக்கு புலிகளாலும் அச்சுருத்தல் இருந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் மக்களின் இருப்பிற்கெதிராகவும், புலிகளின் தலைமைக்கெதிராகவும் அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடு இதற்குக் காரணமாக இருக்கலாம். இதேவேளை, ராஜசிங்கத்தை தொலைபேசியில் மிரட்டிய கருணா குழு முக்கியஸ்த்தர்," உன்னை ஐரோப்பாவில் வைத்துப் போடுவதற்கும் எம்மால் முடியும், அதனால் எம்மைப்பற்றி எழுதுவதை நிறுத்து" என்று கூறியதாகத் தெரிகிறது. ஆரம்பத்தில், கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று, ஜனநாயக நீரோட்டத்தில் கலக்கப் போவதாக கூறியிருந்தபோது, ராஜசிங்கம் அதனை வரவேற்றிருந்தார். ஆனால், பிற்காலத்தில் கருணா பற்றிப் பேசிய ராஜசிங்கம், "கருணாவும் புலிகள் போன்றே செயற்படுவதால், நான் அவரில் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருக்கிறேன்" என்று கூறியிருந்தார். 2007 கார்த்திகையில் சண்டே லீடர் பத்திரிக்கையில் சொனாலி சமரசிங்க எனும் ஊடகவியலாளர் எழுதிய கட்டுரையொன்றில், கருணாவை ஓரங்கட்ட அல்லது கொன்றுவிடுவதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகள் ஐ நா மன்ற இலங்கை ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ அறையிலேயே நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. மகிந்தவின் உத்தியோக பூர்வ அறையான 1727 இலக்க இன்டர் கொன்டினென்ட்டல் உல்லாச விடுதியில் அவரை 15 ஆம் திகதி, ஜூன் 2007 சந்தித்த கே டி ராஜசிங்கம் கருணாவுக்கான சரியான பாடம் புகட்டப்படவேண்டும் என்றும், பிள்ளையான் முன்னிலைப்படுத்தப்படவேண்டும் என்றும் ஆலோசனை கூறியதாகக் கூறப்படுகிறது. மகிந்த அப்போது ஐ நா வில் சர்வதேச தொழில் அமைப்பின் கலந்துரையாடல்களில் பங்குபற்ற வந்திருந்தார். 2007, கார்த்திகை 2 ஆம் திகதி கருணா லண்டனில் கடவுச் சீட்டு மோசடிக்காகக் கைதுசெய்யப்பட்டபோது முன்னர் அவரை வானளவப் புகழ்ந்து கிலாகித்து எழுதிய பி பி ஸி இப்படிக் கூறியது, " அவர் கிழக்கு மாகாணத்திற்கான புலிகளின் பெருந்தளபதியாக இருந்தவேளையில் அவர் பல்லாயிரக்கணக்கான போராளிகளின் தளபதியாக வலம் வந்தார், ஆனால் இன்றோ அவரின் கீழ் வெகு சிலரே இன்னமும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது" என்கிற கொசுறுச் செய்தியுடன் அவரது கைதுபற்றி செய்தி வெளியிட்டிருந்தது. லண்டனில் பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து கருணா மீண்டும் நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டிருந்தார். வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது இச்சைகளுக்காக துரோகமிழைத்து, அதனை மறைக்க அரசியல் வேடம் பூண்டு, கிழக்கு மாகாண மக்களுக்கான விடிவெள்ளியென்று தன்னை முன்னிலைப்படுத்தி, தனது அவலட்சணங்களை மறைக்க அவர் ஆரம்பித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அவரிடமிருந்து முற்றாகக் கைமாற்றப்பட்டிருந்ததுடன், அவருடைய முன்னாள் அடியாளும், இந்நாள் விரோதியுமான பிள்ளையானின் கைக்குள் சென்றிருந்தது. மகிந்த ராஜபக்ஷ எனும் தந்திரச் சிங்கள ஜனாதிபதி, தனது நெடுங்கால நண்பனான கே டி ராஜசிங்கத்தின் வேண்டுதல்களைப் புறக்கணித்திருப்பது தெரிகிறது. ராஜசிங்கமும், மகிந்த ராஜபக்ஷவும் 1970 களிலிருந்து மிக நெருங்கிய சிநேகிதர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட செய்தி. ராஜசிங்கம் வடமாகாணத்தின் சுதந்திரக் கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்த காலத்தில் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மகிந்த ராஜபக்ஷவை தனது ஊரான பருத்தித்துறைக்கு அழைத்து விருந்துபசாரம் நிகழ்த்தியது நடந்திருக்கிறது. இக்காலர்த்தில் கருணா கட்டைக் காற்சட்டை போட்டுக்கொண்டு விரல் சூப்பும் பாலகனாக இருந்திருக்கலாம். ஆனால், 2009 இல் மகிந்தவைப் பொறுத்தவரையில் கருணா எனும் பெயர் தனது அரசியல் ஆதாயத்திற்கு உதவுவதுபோல, தனது பால்ய நண்பனான ராஜசிங்கத்தின் ஆலோசனைகள் உதவாது என்பதை நன்கே புரிந்துவைத்திருந்தார். அதனாலேயே, ஐரோப்பாவின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு தன் இனத்திற்கெதிராகத் தொடர்ந்து வக்கிரம் கக்கும் பந்திகளை அவர் சிங்கள இனவாதிகளை மகிழ்விக்க எழுதிவந்தபோதும்கூட, அவரைப் புறந்தள்ளி கருணாவை தனது கோமாளிகள் அமைச்சரவையில் ஒரு பிரதியமைச்சராக மகிந்த அமர்த்திக்கொண்டார். ஆங்கிலமூலம் : சச்சி சிறிகாந்தா தமிழில் : ரஞ்சித்
-
கருணாவின் அரசியல் : புரூட்டஸிலிருந்து லெப்பிடஸ் வரை ஆக்கம் : சச்சி சிறிகாந்தா, பங்குனி 20, 2009 தளம் : இலங்கை தமிழ் சங்கம் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் பலவீனங்களுக்கும், அவரது திருகுதாலங்களுக்கும் பணமே முக்கியமான காரணமாக அறியப்பட்டாலும் கூட, அதுபற்றி ஆழமாக சிந்திப்பது அவசியமாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலமைக்கும் கருணாவுக்குமிடையிலான பிணக்கின் அடிப்படைக் காரணமே தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் நிதி மீதான தனக்கிருக்கும் தங்குதடையின்றிய அதிகாரம் தொடர்பானது என்று கூறப்படுகிறது. ஆனால், தனது நிதிக் கையாடல்களை மறைப்பதற்கும், அந்த நிதிமீதான தனது பிடியினைத் தொடர்ந்து பேணுவதற்கும் அவர் பாவித்த காரணமே பிரதேசவாதம் என்றால் அது மிகையில்லை. அப்படியானால், தான் உருவாக்கிய கட்சியிலிருந்து, தனது அடியாளினால் கருணா தூக்கியெறியப்பட்டு, கிழக்கிலிருந்து துரத்தப்படுவதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்? அதுகூடப் பணம் தான் ! 2002 இலிருந்து 2003 வரையான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் சமாதானத் தூதுக்குழுவின் ஒரு உறுப்பினராக கருணா செயற்ப்ட்டுவந்தபோது, சில முக்கிய நாடுகளின் புலநாய்வுத்துறையினரால் விரிக்கப்பட்ட பணத்தின் அடிப்படையிலான தந்திர வலையில் பணத்தாசை பிடித்த கருணா வீழ்ந்தார் என்பது விளங்கிக் கொள்ளக்கூடியதுதான். தனது இனத்திற்குத் துரோகம் இழைத்த கருணாவின் அரசியல் வரலாறு கடந்த 5 வருட காலத்தில் எவ்வாறு மாற்றமடைந்திருக்கிறது? கருணா எனப்படும் முரளீதரன் நான்கு குறிப்பிடத்தக்க பெறுபேறுகளைப் பெற்றிருக்கிறார். அவற்றில் முதலாவது, புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சிக்கு தானே தலைமை தாங்குவதெனும் மாயையினைத் தோற்றுவித்திருப்பது. இதில் ஈழத்தமிழருக்கான புதிய தலைவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டதும் அடங்கும். இரண்டாவது, தானே உருவாக்கிய கட்சியிலிருந்து தனது அடியாளினால் மிகவும் கேவலமான முறையில் வெளியேற்றப்பட்டது. மூன்றாவது, போலியான கடவுச் சீட்டினைப் பாவித்து இங்கிலாந்திற்குச் சென்று அங்கே குடிவரவுத்துறையினரால் கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது. நான்காவது, இனக்கொலையாளி மகிந்த ராகபக்ஷவைத் தொடர்ச்சியாகத் துதிபாடிவருவதால் மகிந்தவின் பெருத்துவரும் கோமாளிகளின் அமைச்சரவையில் அவர் அடைந்த பிரதியமைச்சர் எனும் பதவி. ஐந்து வருடங்களுக்கு முன்னர் கருணா பற்றி நான் எழுதியதை ஒருமுறை நினைவுபடுத்த விரும்புகிறேன், "தென்னாசியாவின் அரசியலில், அரசியல் சுயநலம் கொண்டவர்கள் தமது சுயநலத்தினை மறைக்கும் ஒரு கோவணமாக புது அரசியல் கட்சிகளைத் தொடங்குவார்கள். தமிழர்களில் புதிதாக கட்சி தொடங்கி, தமிழரின் நம்பிக்கையினைப் பெற்றுக்கொண்டவர் தந்தை செல்வ்நாயகத்திற்குப் பின்னர் எவருமில்லை. ஆனால், செல்வாகூட 1949 இலிருந்து 1956 வரையான காலப்பகுதியில் தனது நம்பகத்தன்மையினை நிலைநாட்ட கடிணமாகப் போராடவேண்டியிருந்தது. ஆனால், மக்கள் நலன் மீது அவருக்கிருந்த அசைக்கமுடியாத அக்கறையும், அதனைப் பெற்றுக்கொடுக்க அவர் பூண்டிருந்த உறுதிப்பாடும் அவருக்கு உதவின. ஆனால், அவருக்குப் பின்னால் வந்த அனைவருமே செல்வாவின் அரசியலைப் போன்று செய்யப் புறப்பட்டு படுதோல்வியையே அடைந்தார்கள் என்பது வரலாறு". அதன்படி, கருணாவின் வீரப்பிரதாபங்களை புளகாங்கிதப்பட்டு பறைசாட்டுவர்களின் கருத்தைப் பார்க்கலாம், 2004 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் கருணா புலிகளின் புதிய தலைமை இனிமேல் தானே என்று உரிமை கோரியிருந்தார். கருணாவின் பேச்சாளரின் வாயிலிருந்து வந்து விழுந்த வார்த்தைகளை முழுவதுமாக விழுங்கிக்கொண்ட கொழும்பையும், சென்னையையும் தளமாகக் கொண்டு இயங்கும் கருணா ஆதரவுப் பத்திரிக்கை ஜாம்பவான்கள் புலிகளை இரு பிரிவுகளாக உடைத்து "வன்னிப் புலிகள்" என்றும் மட்டு புலிகள்" என்றும் அழைத்து சுய இனபம் அடைந்துகொண்டார்கள். பாங்கொக்கை தளமாகக் கொண்டியங்கும் ஏசியன் ட்ரிபியூன் பத்திரிக்கையின் கே டி ராஜசிங்கம், கருணாவின் ஊதுகுழல் வரதன் ஆகியோர் கருணாவின் தலமையிலான "மட்டு புலிகள்" பிரபாகரன் தலைமையிலான "வன்னிப் புலிகள்" ஐக் காட்டிலும் பலமானவர்கள் என்று பிரச்சாரங்களை ஏவிக்கொண்டிருந்தார்கள். கருணாவின் பேச்சாளரான வரதன் என்பவர் கருணாவுடன் குறைந்தது 6,000 போராளிகள் இருப்பதாக சத்தியம் செய்துவந்தார். அவ்வருடத்தின் ஐப்பசி மாதத்தில் கருணா தான் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கப்போவதாகவும், அதன் பெயர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்றும் அறிவித்தார். கருணாவின் கட்சியின் பெயரில் இருக்கும் சொற்கள் மிகக் கவனமாக தெரிவுசெய்யப்பட்டிருப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். கருணாவை அன்று வழிநடத்தி வந்தவர்கள் இப்பெயரின் மூலம், புலிகளுக்கான புதிய தலைவராக கருணாவைப் பிரகடனப்படுத்தியதுடன், தமிழரின் இலட்சியமான ஈழம் எனும் சொல்லையும் கருணா நிராகரித்துவிட்டார் எனும் கருத்துருவாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால், இவை எதுவுமே தமிழ் வாக்காளர்களைக் கவரவில்லை என்பது வேறுவிடயம். இலங்கையில் தனது ஆதரவாளர்களுக்கு ஒரு முகத்தினையும், எதிராளிகளுக்கு இன்னொரு முகத்தினையும் காட்டி பத்தி எழுதும், அரசியல் வியாபாரியான தயான் ஜயதிலக்க தான் கருணா பற்றி பெருமையாக எழுதிய பந்தியொன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார், "கருணா நான்குவகையான வெற்றிகளைப் பெற்றிருக்கிறார். முதலாவது இன்றுவரை உயிருடன் இருப்பது. இரண்டாவது சித்திரை மாதத்தில் கொழும்பிற்குப் பின்வாங்கிச் சென்றது, கொட்டாவைப் பகுதியில் தனது சகாக்காளில் எண்மரைப் பலிகொடுத்தது, தனது சகோதரர் ரெஜியை இழந்தது ஆகிய பின்னடைவுகளுக்குப் பின்னரும் கூட தொடர்ந்தும் இயங்கிவருவது. மூன்றாவது சர்வதேசத்தில் பிரபலமானவராக, பலராலும் பேசப்படுபவராக மாறியது. நான்காவது தனது ராணுவ வல்லமையினையும், சாதுரியத்தையும், அரசியல் வெற்றிக்காகப் பயன்படுத்துவது". ஆனால், 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அன்று கருணா ஆரம்பித்த அவரது அரசியல் கட்சி இன்று அவரிடம் இல்லை. அவரது அடியாளான பிள்ளையான் அக்கட்சியைக் கையகப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் கருணாவின் ராணுவ வல்லமையும், சாதுரியமும் போலியானவை என்று அவரது அடியாளினூடாகவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கருணாவைப் பற்றிச் சர்வதேசத்தில் பேசப்படும் ஒரே விடயம் போலியான கடவுச் சீட்டினைப் பாவித்து இங்கிலாந்திற்குத் தப்பியோடி, அங்கே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது மட்டும் தான். ஆனால், தயான் ஜயதிலக்க கூறுவதில் ஒரு உண்மையிருக்கிறது, அதாவது கருணா இன்றுவரை உயிருடன் இருப்பது. ஆனால் உயிருடன் இருப்பதற்காக அவர் கொடுத்த விலை அவரது சுய கெளரவம், தன்மானம், தமிழர் எனும் அடையாளம் என்று இப்படிப் பல. இன்று அவர் உயிருடன் இருந்தாலும் அவரது கழுத்தைச் சுற்றியும், விதைப்பைகளை இறுக்கியும் சுற்றியிருக்கும் சுருக்குக் கயிறுகளை அவர் அறியாமல் இருக்கமாட்டார் என்று நம்புகிறேன்.
-
2004 இற்கு முன்னரான கேர்ணல் கருணாவே, இப்போது நீ எங்கே இருக்கிறாய்? தமிழ் சங்கம் இணையத்தளத்தில் சச்சி சிறிகாந்தா சித்திரை 2019 இல் எழுதிய கட்டுரை. 2004 இற்கு முன்னர் அனைவராலும் மரியாதையாக அழைக்கப்பட்ட கேர்ணல் கருணாவும், இன்று வெற்று விநாயகமூர்த்தி முரளீதரனுமாக மாறியிருக்கும் உனக்கு நான் எழுதிக்கொள்வது. இன்றைய உனது நிலை என்ன? பங்குனி 2004 இல் எமது இனம் அறிந்திராத துரோகத்தைச் செய்துவிட்டு இறுமாப்புடன் நீ இருந்தபோது உனது புகழைக் காவிவந்த 800 சொற்கள் அடங்கிய பி பி ஸியின் பசப்புகளையும், அது உனக்கு உலகளவில் புகழ்தேடித் தந்ததாக நீ எண்ணியிருந்ததையும் மறந்திருக்க மாட்டாய். உனது துரோகம் நிகழ்ந்து 15 வருடங்கள் உருண்டோடிவிட்ட நிலையில் நீ இன்று செய்துவரும் செயல்கள் குறித்து என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. முடிந்தால் பதில் அளி. 2004 இற்குப் பிறகு நீ செய்துவருவதாகக் கூறும் உனது வீரப் பிரதாபங்கள், நீ யாருக்குத் துரோகமிழைத்து வெளியேறி எதிரியுடன் சேர்ந்தாயோ, அந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் ராணுவ ஆற்றலுக்கு நிகராக இருக்கும் என்று உண்மையாகவே நம்புகிறாயா? இன்றைய உனது நிலை என்ன கருணா? இன்றும் ஈழத்தமிழர்களுக்கான தலைவனாக உன்னைக் கருதுகிறாயா? 2004 இற்குப் பின்னர் நீ செய்துவரும் எந்தத் திருகுகுதாலமும் உன்மீது படிந்திருக்கும் நிரந்தரக் கறையான "இனத்துரோகி " எனும் அவப்பெயரைக் கரைத்துவிட முடியும் என்று நீ நம்புகிறாயா? அண்மைக்காலமாக அரசியலில் இருப்பதாகக் கூறுகிறாயே, அதில் எத்தனை வெற்றிகளை நீ பெற்றிருக்கிறாய்? தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும், பின்னர் அங்கிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தாவிக்கொண்டிருக்கிறாய். 2019 இல் நீ இன்னும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்தவுக்குப் பணிவிடை செய்கிறாயா அல்லது அவனையும் விட்டு விலகி மைத்திரியிக்குப் பணிவிடைகள் செய்துவருகிறாயா? உனது வீரப் பிரதாபங்களைக் காவிவந்த பி பி ஸி யின் செவ்வியில் உனது மொழிபொஎயர்ப்பாளராக நின்றிருந்த வரதனுக்கு என்னவாயிற்று? அவன் இப்போது உன்னுடன் இருக்கிறானா, அல்லது அவனைக் கொன்றுவிட்டாயா? இதுபற்றியும் எங்களுக்கு நீ கூறமுடியுமா கருணா ? 2004 இல் நீ அரியணை மீது வீற்றிருந்து பி பி ஸி இற்கு வழங்கிய செவ்வியில், "என்னுடன் 2000 பெண்போராளிகள் உட்பட, 5000 போராளிகள் பக்கபலமாக இருக்கிறார்கள்" என்று இறுமாப்புடன் கூறியிருந்தாய். இந்தப் பசப்புகளை விரும்பியே காவித்திருந்த இந்திய செய்திச் சேவைகளுக்கு நீ ஒரு பெருந்தளபதியாகவும், ஆயிரக்கணக்கான படைவீரர்கள் சூழ்ந்த மாபெரும் சேனையாகவும் தெரிந்ததில் எனக்கு வியப்பில்லை. சரி, அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், நீ அன்று கூறிய 5000 "பெரும்படையில்" இன்று உன்னுடன் கூட இருப்பவர்கள் எத்தனை பேர் கருணா? உனது இனத்துரோகத்திற்காக புலிகள் உன்னைத் தூக்கி எறிந்தபொழுது. பல புலியெதிர்ப்பு கருத்தாளர்களான கே டி ராஜசிங்கம், டி பி எஸ் ஜெயராஜ், தயான் ஜயதிலக்க மற்றும் தமிழ்நாட்டின் இந்து கற்பனைவாதிகள் உன்னை வராது வந்த மாமணியாகப் பார்த்து ஆரத்தழுவி ஆதரித்து எழுதியதை நான் பார்த்தேன். ஈழத்தமிழனின் புதிய துருவ நட்சத்திரமாக அவர்கள் உன்னைப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்ததையும் நான் பார்த்தேன். ஆனால், அவர்களின் பேனாக்களில் இருந்து நீ இன்று முற்றாக மறைந்துவிட்டாயே, அது ஏன் கருணா? 2004 இற்குப் பின்னரான உனது வீழ்ச்சியென்பது எத்தனை கீழ்த்தரமானது , கேவலமானது என்பதை நீ உணர்கிறாயா? 1996 இல் தாரகி சிவராம் எழுதிய கட்டுரை ஒன்றை அண்மையில் படித்தேன். அதி அவர் இப்படி எழுதுகிறார். "விடுதலைப் புலிகள் அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை ஒரே ராணுவ நிர்வாகப் பிரதேசமாகவே கையாள்கிறார்கள். இப்பிரதேசத்திற்கான ஒட்டுமொத்தத் தளபதியாக கருணாவே திகழ்கிறார். ஒரு சில உயர் தளபதிகளைத் தவிர, கிழக்கின் அனைத்துப் புலிப் போராளிகளும் அவரை கெளரவத்துடன் அம்மான் என்றே அழைக்கின்றனர்". உன்னை ஒரு ஒப்பற்ற தளபதியாக எண்ணி, 2005 இல் அமெரிக்கச் சஞ்சிகையொன்றில் குடிபோதையில் உளறிய ஒருவர், "கருணா கிழக்கு மாகாண மக்களுக்கான ஆட்சியதிகாரத்தை அரசாங்கத்திற்கு எதிராகவும், புலிகளுக்கு எதிராகவும் போராடி நிலைநாட்டப் பார்க்கிறார். ஆனால், பிரபாகரனின் ராணுவப் பலத்தின் முன்னால் கருணாவால் ஈடுகொடுக்க முடியாதிருக்கும், ஆகவே அவர் வெளிநாடொன்றிற்குத் தப்பிச் சென்றாவது தனது மக்களின் விடுதலைக்காகப் போராடுவார். கிழக்கில் புலிகள் இழந்த நிலங்களை மீண்டும் அவர்கள் மீட்டெடுப்பது சாத்தியமில்லை" பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வெறும் 30 வெள்ளிகளுக்காக நீ ஈழத்தமிழரிடம் சிறுகச் சிறுகச் சேர்த்துவைத்த அபிமானத்தையும், கெளரவத்தையும் 2004 துரோகத்துடன் ஒரே இரவில் இழந்தாய். விடுதலைப் புலிகளால் உனக்கு வழங்கப்பட்ட கெளரவமான "கருணா" எனும் பெயர் கூட 2009 உடன் உன்னை விட்டு ஓடிவிட்டது. அதற்குப் பின்னர் வந்த 10 வருடங்களில் உன்னை ஆட்டுவிக்கும் சிங்கள, இந்திய புலநாய்வுப்பிரிவுகளும் இன்னும் இன்னோரென்ன சக்திகளும், உனது இனத்துரோகத்திற்கான பரிசாக உன்னை உயிருடன் புதைத்துக்கொண்டிருக்கின்றன. உனது கதைதான் எவ்வளவு கேவலமானது? 1957 இல் மறைந்த மக்கள் திலகம் எம் ஜி ஆர் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய வரிகள் உனக்கும் எவ்வாறு பொருந்திச் செல்கிறதென்பதைப் பார். "உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது? நிலை கெட்டுப் போன நய வஞ்சகரின் நாக்குத்தான் அது!".
-
1948 இல் இருந்து தமிழரின் தாயகம் சூறையாடப்பட்டுக்கொண்டுதான் வருகிறது. தமிழர் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து துரத்தப்பட்டுக்கொண்டுதான் வருகிறார்கள். 1955 இலிருந்து தமிழர்கள் கொல்லப்பட்டுக்கொண்டு வருகிறார்கள். அதே போல 2009 இற்குப்பிறகு வடக்கிலும் கிழக்கிலும் தமிழரின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றது. இக்காலங்களில் ராணுவமும் கொல்லப்படவில்லை, கொப்பேக்கடுவவும் ஓடித்திரியவில்லை, நவீன ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை. ஆனால், தமிழர்கள் துரத்தப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். நியாயத்தைப் புடுங்குபவர்கள் இதுபற்றி என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்று அறிய ஆசை.
-
இக்கடத்தல்கள் பற்றி மேலும் தெரியவருவதாவது, கிழக்கில் செயற்பட்டு வரும் இரு துணை ராணுவக் குழுக்களான கருணா குழு மற்றும் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் குழு ஆகிய இரண்டும் ஒன்றையொன்று இப்படுகொலை தொடர்பாக குற்றஞ்சாட்டி வருகின்றன. கொல்லப்பட்ட வர்ஷாவின் பாடசாலைப் புத்தகப்பை மற்றும் அவளது இன்னும் சில உபகரணங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரின் அலுவலகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதையடுத்து, பிள்ளையான் குழுவினரே இக்கடத்தல் மற்றும் படுகொலையின் பின்னாலிருப்பதாக பெரும்பாலும் நம்பப்படுகிறது. அதேவேளை சுமார் 2000 ஆயுததாரிகளோடு அரசாங்கத்தின் சுதந்திரக் கட்சியில் இணைந்த கருணா தனது அலுவலகங்களைச் சூறையாடிச் சென்றிருப்பதாகக் குற்றஞ்சாட்டும் பிள்ளையான் தன்மீதான கடத்தல் மற்றும் கொலைப்பழியினை திசைதிருப்ப முயற்சிப்பது தெளிவாகிறது. கிழக்கு மாகாண மக்களின் உண்மையான கவலை இந்த இரு துணை ராணுவக் குழுக்களில் எது வர்ஷாவைக் கடத்திச் சென்று கொன்றிருக்கிறது என்பதல்ல, மாறாக இந்தக் கொலைகாரர்களையே தமது இரட்சகர்களாக, பாதுகாவலர்களாக உலகின் பார்வைக்கு அரசாங்கம் முன்வைத்து வருகிறது என்பதுதான். திருகோணமலை நகரில் இதே பாணியிலான கடத்தல்கள் கடந்த சில வாரங்களில் நடந்திருக்கிறது. ஒரு வர்த்தகர், சினிமாக் கொட்டகை முகாமையாளர், பஸ் நடத்துனர் ஆகியோர் உட்பட பலர் கப்பப் பணத்திற்காக இக்குழுக்களில் ஒன்றினால் அரச ஆசீர்வாதத்துடன் கடத்தப்பட்டிருக்கிறார்கள். இன்றைய வன்முறைக் கலாசாரம் பற்றிக் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயங்கள். 1. கடத்தல்கள் என்பது நாளாந்த வாழ்க்கையின் தவிர்க்கப்பட முடியாத ஒரு நிகழ்வாக இப்பகுதியில் மாறியிருப்பது, சட்டமும் நீதித்துறையும் இப்பிரதேசத்தில் முற்றாகச் செயலிழந்துவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இப்பகுதியில், போரின் பின்னர் அரசு செய்திருக்கவேண்டிய மிக முக்கியமான கடமை சட்டம் ஒழுங்கினை இப்பகுதியில் அமுல்ப்படுத்துவதுதான். ஆனால் இதுதொடர்பாக எதுவித நடவடிக்கையினையும் அரசு எடுக்க முன்வரவில்லையென்பதே உண்மை. இதற்கான காரணமாக முன்வைக்கப்படுவது, யுத்தம் இடம்பெறாத நாட்டின் தென்பகுதியில் கூட அரசு சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டத் தவறியிருக்கிறது அல்லது அதனால் முடியாமல் இருக்கிறது என்பதைத்தான். சாதாரண நிலைமை இருக்கும் தெற்கின் பல மாவட்டங்களிலேயே சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டத் தவறும் ஒரு அரசு போரிற்குள் இருந்து வெளியே வந்திருக்கும் நாட்டின் கிழக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதுபற்றி அக்கறை கொண்டிருக்கும் என்பதை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமானது. 2. சட்டத்திற்கு உட்படாத, சட்டத்திற்குப் புறம்பான குழுக்களிடம் கிழக்கு மாகாணத்தைக் கையளிப்பது. நாட்டின் தென்பகுதியிலேயே சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டத் தவறியிருக்கும் இந்த அரசாங்கம், கிழக்கு மாகாணத்தில் தனக்கு ஆதரவான ஆயுதக் குழுக்களுக்கு இம்மாகாணத்தின் அதிகாரத்தினை ஒப்படைத்திருப்பதென்பது விளங்கிக்கொள்ளக் கடிணமானது அல்ல. அரசாங்கத்தைப் பொறுத்தவரை கிழக்கு மக்கள் மீதான தனது அதிகாரத்தினை நிலைநாட்ட கொலைகாரர்களை, கடத்தல்க்காரர்களை துணைராணுவக் குழுக்களைப் பாவிக்க விரும்புகிறது. 3. கடத்தல்க்காரர்கள் சட்டத்திற்குப் புறம்பான முறையில் பொலீஸாரினால் படுகொலைசெய்வதைக் காணும்போது சாதாரண பொதுமக்கள் அடையும் சந்தோஷம் அல்லது திருப்தி. பொலீஸாரைப் பொறுத்தவரை வர்ஷாவின் கொலைகாரர்களைச் சுட்டுக் கொன்றதில் திருப்த்திப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஏனென்றால், கடத்தலில் சம்பந்தப்பட்ட அனைவருமே கொல்லப்பட்டுள்ளதையடுத்து இக்கடத்தல் தொடர்பாக மேலும் விசாரிக்க வேண்டிய தேவை அவர்களுக்கில்லை. அத்துடன் இக்கடத்தல்காரர்களின் படுகொலைகள் பொதுமக்களிடமிருந்து வரவேற்பினைப் பெற்றிருப்பது அவர்களின் வேலையினை இலகுவாக்கியிருக்கிறது. பொதுமக்களின் இவ்வாறான மனநிலை, ஒரு தோல்வியடைந்த, நீதியற்ற சமூகத்தில், அநாதரவாக அவர்கள் விடப்பட்டுள்ளார்கள் என்பதையே காட்டுகிறது. இப்படியான சமூகத்தில் கொலைகாரர்களை பொதுமக்கள் அடித்தே கொல்கிறார்கள் அல்லது காவல்த்துறை கொல்லும்போது அகமகிழ்கிறார்கள். இவ்வாறான நிகழ்வுகளை நாம் இந்தியாவின் பீகாரிலும் நாள்தோறும் காண்கிறோம். பல சமயங்களில் பீகாரில் குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் பலர் குழுக்களாக பொலீஸாரினால் என்கவுண்ட்டர் பாணியில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். சில இடங்களில் சந்தேக நபர்களை போலீஸார் தமது வாகனங்களில் கட்டி தெருக்களில் மக்கள் பார்த்திருக்க இழுத்துச் சென்று கொன்றதும் நடந்திருக்கிறது. மனித நேயமும், நீதியும் செத்துவிட்ட தேசத்தில் குற்றவாளிகளை கொடூரமான முறையில் பொலீஸாரோ அல்லது வேறு எவரோ கொல்லும்போது பொதுமக்கள் மகிழ்வதும், தமது பழியினைத் தீர்த்துக்கொள்வதும் நடக்கிறது. குற்றங்களுக்கான சரியான தண்டனை விசாரணைகள் ஊடாக, சட்டத்தினால் சரியான முறையில் வழங்கப்படவேண்டும் என்பது மக்களின் மனதிலிருந்து முற்றாகவே காணாமல்ப் போயிருக்கிறது. 4. வர்ஷாவின் கொலைகாரர்கள் இறந்ததாகக் கூறப்படும் பொலீஸாரின் நாடகபாணிக் கதையினை எதுவித கேள்விகளுமின்றி இச்சமூகம் ஏற்றுக்கொள்ள விரும்புவதோடு, இக்கடத்தல் குறித்தோ, இதன்பின்னால் உண்மையிலேயே இருக்கும் அரசுக்கு ஆதரவான கிரிமினல் குறித்தோ மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை அது கேட்க மறுக்கிறது. பொலீஸாரின் பாதுகாப்பில் இருக்கும்போது மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கும் கொலைகாரர்களின் மரணம் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. பெரும்பாலானவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனாலும்கூட, அரசாங்கமோ அல்லது ஏதும் ஒரு அமைப்போ இதுபற்றிய மேலதிக விசாரணைகளைச் செய்வதை மறுத்தே வருகின்றன. தொடர்ச்சியான விசாரணைகள் மூலம் வெளிக்கொணரப்படக்கூடிய உண்மைகள் அரசாங்கத்தையும், அரசுக்கு ஆதரவான சிலரையும், கூடவே மக்களையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் என்று அவை கருதுகின்றன. அரசாங்கத்தினது இந்த பாராமுகமும், உண்மையினைக் கண்டறிவதில் அதற்கு இருக்கும் உண்மையான தயக்கமும் வர்ஷாவின் கொலையின் பின்னால் இருக்கும் அரசுக்கு ஆதரவான சக்திகள் இம்மாதிரியான பாதகச் செயல்களைத் தொடர்ந்தும் செய்ய ஊக்கிவித்துக்கொண்டிருக்கின்றன. ஆக, பீகாரில் இருக்கும் மிகச் சிக்கலான சட்டம் ஒழுங்கு பிரச்சினையினை மத்திய அரசே கைவிட்டுள்ள நிலையில், அம்மாநிலம் இந்தியாவின் வன்முறைகள் மிகுந்த மாநிலமாக மாறியிருப்பதுபோன்று, இலங்கையின் கிழக்கு மாகாணமும் அரசுக்கு ஆதரவான ஆயுததாரிகளால் மாற்றப்பட்டிருக்கிறது. அதிர்ச்சியிலும், வெட்கத்திலும் அமிழ்ந்திருக்கும் ஒரு சமூகம் இலங்கை இன்று அதிர்ச்சியிலும் வெட்கத்திலும் உறைந்திருக்கும் நீதியற்ற சமூகமாக மாறியிருக்கிறது. 6 வயதுப் பாலகியின் கடத்தல் மற்றும் மரணம் தொடர்பாக சட்டத்திற்கு உட்பட்ட வகையில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தக் கூட தகமையற்ற நாடாக அது மாறியிருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை வர்ஷாவின் படுகொலையானது இன்னொரு நிகழ்வு, இன்னொரு மரணம், அவ்வளவுதான். அம்மக்களைப் பொறுத்தவரை இந்தப் படுகொலையினையும் முடிந்தவரை வெகு சீக்கிரமாகவே மறந்துவிடவேண்டும். பாலகியின் கடத்தலையும், படுகொலையினையும் கொல்லப்பட்ட நான்கு கடத்தல்க்காரர்களின் தலையிலும் போட்டுவிட்டு, அவர்கள் தற்போது உயிருடன் இல்லையெனும் மனத் திருப்தியுடன் கடந்து சென்றால்ப் போதுமானது. மனித உயிரின் மீதான மதிப்பினை இழந்த இச்சமூகத்தின் இன்றைய மனநிலை, இம்மக்களை ஆளும் அரசாங்கத்திற்கு இனிமேல் ஒருபோதுமே நீதியால் வழிநடத்தப்படும் சமூகம் ஒன்றினை உருவாக்க வேண்டிய தேவையினை இல்லாமலாக்கி விட்டிருக்கிறது. மனித நேயத்தினை அழித்து, படுகொலைகளை அன்றாட வாழ்வின் சாதாரண நிகழ்வாக்கியிருக்கும் இலங்கையின் இன்றைய அரசாங்கம் இப்போது செய்வது தான் உருவாக்கிய வன்முறைகளுக்குப் பலியாகும் பாலகி வர்ஷா உட்பட அப்பாவிகளின் உயிர்களுக்காக முதலைக் கண்ணீர் சிந்துவதுதான். நீதியினை விட்டு நீண்டதூரம் சென்றிருக்கும் அரசு ஒன்றினால் ஆளப்படும் மக்களே தமது சமூகத்தை மீளவும் நீதியின்பாற்பட்ட , சட்டத்திற்கு உட்பட்ட, மனித உயிர்களை போஷிக்கிற சமூகமாக மாற்றத் தலைப்பட வேண்டும். அவர்களால் ஏற்படுத்தப்படும் மாற்றமே வன்முறையற்ற , நீதியான சமூகம் ஒன்றினை உருவாக்க உதவும். ஆசிய மனிதவுரிமை கமிஷன் இவ்வமைப்பு 1984 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் ஆசிய நாடுகளின் மனிதவுரிமை மீறல்கள் பற்றி கண்காணிக்கவும், அவற்றுக்கு எதிராக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஏற்படுத்தப்பட்டது. ஆங்கில மூலம் : ஆசிய மனிதவுரிமைக் கமிஷன் https://www.scoop.co.nz/stories/WO0903/S00468/sri-lanka-east-has-become-bihar-like.htm
-
இலங்கையின் கிழக்கு மாகாணம் ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகளில் இந்தியாவின் பீகாரை மிஞ்சுகிறது. கிழக்கில் கருணா மற்றும் பிள்ளையான் கொலைக்குழுக்களினால் நடத்தப்பட்டு வரும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள் தொடர்பில் ஆசிய மனிதவுரிமைக் கமிஷன் வெளியிட்ட அறிக்கை திகதி :24, பங்குனி 2009 சிறுமி வர்ஷாவின் கடத்தலும், கடத்தல்காரர்களை சட்டத்திற்குப் புறம்பான முறையில் படுகொலை செய்தலும். கடந்தவாரம் திருகோணமலை நகரில் கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலைசெய்யப்பட்ட 6 வயது வர்ஷா ஜூட் ரெஜி என்றழைக்கப்பட்ட சிறுமியின் உடலை தமது தொலைக் காட்சிப் பெட்டிகளிலும், செய்தித் தாள்களிலும் கண்ட இலங்கையர்கள் அனைவரும் அதிர்ச்சியும் வெட்கமும் அடைந்தார்கள் என்று கூறினால் அது மிகையில்லை. இக்கடத்தல்பற்றியும், படுகொலைபற்றியும் பலராலும் எழுதப்பட்டு விவாதிக்கப்பட்டாலும் கூட, இந்த அக்கிரமம் நடத்தப்பட ஏதுவாக இச்சமூகம் உருவாக்கப்பட்டிருக்கிறதெனும் செய்தியை நாம் இலகுவாகக் கடந்து செல்ல முடியாது. வர்ஷாவின் கடத்தலும், படுகொலையும் நடத்தப்பட்டிருக்கும் பிரதேசம் அண்மைக்காலமாக பல்வேறு கடத்தல்கள், கப்பம் கோரல்கள் ஆகியவற்றினைச் சந்தித்த பிரதேசம் என்பது குறிப்பிடத் தக்கது. நீதியின் நிழல் கூட மிதிக்காத இப்பிரதேசத்தில் உயிர்வாழ்தலுக்கான உத்தரவாதத்தினை இழந்து நடைபிணங்களாக உலாவரும் இந்த மக்கள் கூட்டம், அப்பாவிகளைக் கடத்திச் சென்று கொல்லும் அக்கிரமக்காரர்கள் இன்னொரு பகுதியினரால் படுகொலை செய்யப்படும்போது அகமகிழ்வது நடக்கிறது. நீதியற்ற சமூகத்தில் இவ்வாறான மலினமான சந்தோசங்கள் இடம்பெறுவது ஒன்றும் வியப்பில்லை. இதே வகையான கடத்தல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் இடம்பெறும் இடமாக இந்தியாவின் பீகார் மாநிலம் திகழ்கிறது. இந்தியாவில் பல மாநிலத்தவர்களால் பொதுவாகக் கூறப்படும் "நீ பீகாரைச் சேர்ந்தவன் என்று எவரிடமும் கூறாதே" எனும் வாக்கியம் தற்போது இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு பொருந்திப் போகிறது, "நீ கிழக்கைச் சேர்ந்தவன் என்று எவரிடமும் சொல்லாதே". 6 வயதுச் சிறுமியான வர்ஷா கடந்த பங்குனி மாதம் 11 ஆம் திகதி பாடசாலைக்குச் சென்றிருந்தாள். அன்று பின்னேரம் அவளது குடும்பத்திற்குப் பழக்கமான, வர்ஷாவுக்கும் அவளது சகோதரனுக்கும் கணினிப்பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒருவனால் கடத்தப்பட்டாள். அவனை வர்ஷாவும் அவளது சகோதரனும் "கம்பியூட்டர் மாமா" என்றே செல்லமாக அழைத்து வந்திருக்கிறார்கள். கடத்தியவர்கள் வர்ஷாவின் குடும்பத்துடன் கப்பப் பணத்திற்கான பேரம்பேசலை ஆரம்பித்திருக்கிறார்கள். "உங்களுக்கான மாதாந்த கொடுப்பனவை இனிமேல் அரசு வழங்காது, ஆகவே தமிழர்களைக் கடத்திச் சென்று உங்களுக்குத் தேவையான பணத்தினை அறவிட்டுக் கொள்ளுங்கள்" என்று கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் கோத்தபாயவினால் வழங்கப்பட்ட ஆசீர்வாதத்தினைப் பாவித்து, கடத்திச் சென்றவர்கள் தமது பேரத்தில் கடுமையாக இருந்திருக்கிறார்கள். வர்ஷாவின் தந்தையானவர் மத்திய கிழக்கில் வேலை பார்த்துவருவதை நன்கு அறிந்து வைத்திருந்த கடத்தல்காரர்கள் 300 லட்சம் ரூபாய்களை தந்தால் ஒழிய வர்ஷாவை உயிருடன் பார்க்கமுடியாதென்று கூறிவிட, தம்மால் இப்போதைக்கு 10 லட்சம் ரூபாய்களை மாத்திரமே தரமுடியும் என்று அவளின் குடும்பம் கடத்தல்காரர்களிடம் வேண்டியிருக்கிறது. கடத்தல்காரர்கள் கேட்ட 300 லட்சம் ரூபாய்களை வழங்கமுடியாமல் அக்குடும்பம் தவித்துக்கொண்டிருக்க படுகொலைசெய்யப்பட்ட வர்ஷாவின் உடல் உரம் இறக்குமதி செய்யப்படும் வெள்ளைநிறப் பைய்யொன்றில் இருந்து 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. திருகோணமலை நகரின் இதயப்பகுதியில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், மோர் வீதியில் , கழிவு நீர் ஓடும் வாய்க்கலுக்கு அருகில் அவளது உடல் கடத்தல்க்காரர்களால் வீசப்பட்டிருந்தது. இக்கடத்தல் நாடகம் வர்ஷாவின் படுகொலையுடன் நின்றுவிடவில்லை. மாறாக இன்னும் நான்கு உயிர்களைப் பலியெடுத்த பின்னரே மூடிமறைக்கப்பட்டு அவசர அவசரமாக முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. இக்கடத்தல் மற்றும் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒஸ்வின் மேர்வின் ரினவுஷன் மற்றும் வர்தராஜன் ஜனார்த்தன் ஆகிய இருவருமே மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பொலீஸாரின் கூற்றுப்படி கைதுசெய்யப்பட்டு அடைக்கப்பட்ட ரினவுஷனை தாம் வெளியே அழைத்துவரும்போது அவர் தம்மைத் தாக்கியதாகவும், தமது பதில்த் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல ஜனார்த்தனின் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்ட பொலீஸார், கைவிலங்கிடப்பட்ட நிலையில் அழைத்துச் செல்லப்பட்ட ஜனார்த்தன் எப்படியோ அருகில் இருந்த சயனைட் வில்லையினைக் கண்டெடுத்து உட்கொண்டு மரணமனாதாகக் கூறியிருக்கிறது. இக்கடத்தலில் இன்னும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று பொலீஸார் சந்தேகிக்கும் நிலையில், அவர்கள் கைதுசெய்யப்படுமிடத்து அவர்களுக்கும் இவ்வாறான மர்ம மரணங்கள் பொலீஸாரினால் அரங்கேற்றப்படும் என்பது உறுதி.
-
திருமலை சிறுமி வர்ஷாவின் கொலையைச் செய்தது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் துணைராணுவக் குழுவே சிறிலங்கா டயஸ்போரா இணையத்தள செய்திச் சேவையில் வெளிவந்த கட்டுரை கார்த்திகை 2, 2009 ****************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************** **** **** **************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************** தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனப்படும் பிள்ளையான் தலைமையிலான துணைராணுவக் குழுவினரால் 30 லட்சம் ரூபாய்கள் கப்பப் பணத்திற்காககக் கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலையைச் சேர்ந்த வர்ஷா எனும் 6 வயதுச் சிறுமியின் கொலைபற்றி அறிந்திருப்பீர்கள். இக்கடத்தல் மற்றும் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகத்தின்பேரில் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்ட இரு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் துணைராணுவக் குழு உறுப்பினர்கள் அடைத்துவைகப்பட்டிருந்த நிலையில் மர்மமான முறையில் இறந்தது நினைவிலிருக்கலாம். தற்போது வந்துள்ள தகவல்களின்படி இவ்விரு உறுப்பினர்களும் இப்படுகொலையுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் சம்பந்தப்பட்டிருப்பதை மறைப்பதற்காகவே கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது. இந்த சம்பவங்களுக்கு வலுச் சேர்க்கும் முகமாக, இக்கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் இருவர் இருநாட்களுக்கு முன்னர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், இப்படுகொலை மற்றும் இதன் பின்னாலிருந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக சில உறுப்பினர்களைக் கொலை செய்திருக்கும் பொலீஸார், இந்த இரு உறுப்பினர்களின் மரணங்களை புலிகள் மேல் போட்டுவிட்டு தப்பிக்க முயல்கிறது. திருகோணமலை பொலீஸ் அத்தியர்ட்சகர் வாஸ் குணவர்த்தண இதுபற்றிக் கூறிகையில், கைதுசெய்யப்பட்டிருந்த இருவரையும் அழைத்துக்கொண்டு தற்கொலை அங்கிகள் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் இடம் ஒன்றினைப் பார்வையிடச் சென்ற வேளையில் அங்கிருந்த புலிகள் தம்மீது தாக்குதல் நடத்தியவேளை அவர்கள் இருவரும் கொல்லப்பட்டதாகவும், சில பொலீஸாரும் இச்சம்பவத்தில் காயமடைந்ததாகவும் கூறுகிறார். இத்தளத்தில் முன்னர் வெளிவந்த செய்திகளின்படி, சிறுமி வர்ஷாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று கைதுசெய்யப்பட்டிருந்தவர்களை அகற்றும் முயற்சிகள் ஆளும்தரப்பிற்கு விசுவாசமான நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறியிருந்தோம். வர்ஷாவின் கடத்தல் மற்றும் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட மிக முக்கிய குற்றவாளியான ஒஷ்வின் மேர்வின் ரினவுஷன் எனப்படும் ஆயுததாரி பொலீஸ் வாகனத்தில் திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பொலீஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அவ்வாறே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் உப்புவெளி அலுவலகத்தின் பொறுப்பாளர் மரியராஜன் ஜனார்த்தன் சயனைட் வில்லையினை உட்கொண்டு மரணமடைந்ததாக உப்புவெளி பொலீஸார் கூறியிருந்தனர். இக்கொலை பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலீஸ் அதிகாரியை காரணங்கள் ஏதுமின்றி இடமாற்றம் செய்திருந்தது, அரசின் அதிகார மட்டங்கள் இக்கொலையின் பின்னாலிருந்தவர்களை காப்பாற்றுவதற்காகவே என்பது தெளிவாகிறது. பாராளுமன்றத்தில் இவ்விடயம் குறித்துப் பேசிய தினேஸ் குணவர்த்தன இக்கொலையின் பின்னாலிருந்தவர்களை மறைக்கும் கைங்கரியத்தில் வெளிப்படையாகவே பேசியது நினைவிலிருக்கலாம். அடுத்ததாக , இக்கொலையின் இரண்டாவது குற்றவாளியான ஜனார்த்தனின் முகம் முற்றாக எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டிருந்ததைப் பார்க்கும்போது, அவர் சயனைட் உட்கொண்டுதான் இறந்தாரா இல்லையா என்பதை பிரேதப் பரிசோதனைமூலம் கண்டறிவதை இதன் பின்னால் இருந்து செயற்பட்டவர்கள் விரும்பியிருக்கவில்லை என்பதும் தெளிவாகிறது. இப்படுகொலையினைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பல விடயங்கள் இதன் பின்னால் அரசுக்கு ஆதரவான குழுவொன்று இருந்திருக்கிறதென்பத்கை கோடிட்டுக் காட்டுகின்றது. அண்மையில் அரசின் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளீதரன், பிள்ளையான் குழுவினர் தாம் வாக்குறுதியளித்தபடி தமது ஆயுதங்களை அரசிடம் இன்னும் முற்றாகக் கையளிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார். கண்துடைப்பிற்காக ஒரு சில ஆயுதங்களை மட்டுமே கையளித்த பிள்ளையான் குழுவினர், கொள்ளைகள், கடத்தல்கள், கப்பம் கோரல்கள், படுகொலைகள் உட்பட பல்வேறான குற்றச் செயல்களுக்காக இன்னும் பெருமளவு ஆயுதங்களை தம் வசம் வைத்திருப்பதாக கருணா மேலும் தெரிவித்திருந்தார். அண்மையில் தினமின எனும் நாளிதழுக்கு செவ்வியளித்த அரச பேச்சாளர் கெகெலிய ரம்புக்வெல்ல, "பிள்ளையான் ஆயுதங்களை ஒப்படைத்திருந்தார் என்பது உண்மையானாலும் கூட, அவர் கையளித்த ஆயுதங்களின் அளவைப் பார்க்கும்பொழுது இதனைக் காட்டிலும் அதிகமாக அவரிடம் இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதினோம்" என்று கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில், "அவர்களிடம் இன்னமும் ஆயுதங்கள் இருக்கின்றனவா இல்லையா என்பது எமக்கு ஒரு பிரச்சினையல்ல, அவர்கள் ஆயுதங்களைக் கையளிக்க ஒத்துக்கொண்டதே நல்ல முயற்சிதான், அவர்களிடம் மேலும் ஆயுதங்கள் இருப்பின் அவற்றினை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடுகளை எம்மால் செய்யமுடியும்" என்றும் கூறியிருந்தார். ஆகவே, பிள்ளையான் தனது குழுவினரிடம் இருந்த ஆயுதங்கள் அனைத்தையுமே கைய்யளிக்கவில்லையென்பதும், அரசாங்கம் இதுபற்றி அதிகம் அக்கறை காட்டவில்லையென்பதும் புலனாகிறது. வர்ஷாவின் கொலையில் பிள்ளையான் சம்பந்தப்பட்டிருப்பதை மறைக்க பொலீஸார் எடுத்த முயற்சியின் ஒரு அங்கம்தான் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு பிள்ளையான் குழு உறுப்பினர்கள் சாட்சியமளிக்கும் முன்னரே பொலீஸாரால் நாடகபாணியில் சுட்டுக் கொல்லப்பட்டது. அதே போல, ஏனைய இரு உறுப்பினர்களின் கொலைகளும் பொலீஸாரினால் மிகவும் திட்டமிட்ட முறையில் அரங்கேற்றப்பட்டு பிள்ளையானின் கொடிய கரம் சிறுமி வர்ஷாவின் படுகொலையின் பின்னால் இருந்ததை மறைத்திருக்கிறார்கள். கடத்தலுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட பிள்ளையான் குழு உறுப்பினர்கள் நால்வரும் கொல்லப்பட்டு, சாட்சியங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டிருப்பதானது பிள்ளையானைக் காப்பாற்ற அரசு எவ்வளவு தூரம் முயன்று வருகின்றது என்பதையே காட்டுகிறது. பிள்ளையான் ஆயுததாரிகளால், கடத்தப்பட்டு, வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, படுகொலைசெய்யப்பட்ட 6 வயதுச் சிறுமியான வர்ஷாவின் பின்னால் பிள்ளையான் இருந்ததும், அரசு அவரைப் பாதுகாக்க இறுதிவரை துணைநின்றதும் இச்சம்பவங்கள் மூலம் நிரூபணாமாகிறது. ஆங்கிலத்தில் சுகத் குமார அழகக்கோன்
-
பகுதி 2 கேள்வி : அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சில ஆயுதங்களைக் கையளித்தது. எதிர்காலத்தில் உங்கள் கட்சி ஆயுதங்களைத் தூக்காது என்பதற்கு என்ன உத்தரவாதத்தினை வழங்குவீர்கள்? பிள்ளையான் : உங்களுக்கு எமது சரித்திரம் நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறேன். புலிப் பயங்கரவாதத்தினால் எமது மாகாணம் ஆயுத மயப்படுத்தப்பட்டுவிட்டது. பல இளைஞர்கள் தமது படிப்பறிவைக் கைவிட்டு விட்டார்கள். தமிழர்கள் ஆயுதக் கலாசாரத்தை வெறுக்கிறார்கள். கடந்த இரு தசாப்த்தங்களாக எமது மக்கள் கடுமையான இழப்புகளைச் சந்தித்து விட்டார்கள். முன்னர் முழுக் கிழக்கு மாகாணமுமே ஆயுதக் கலாசாரத்தில் மிதந்தது. ஆனால், இன்று அப்படியில்லை, மக்கள் ஆயுதக் கலாசாரத்தை வெறுத்துவிட்டார்கள். அதனால், எவருமே தற்போது இங்கே ஆயுதங்களைக் கொண்டுசெல்வதில்லை, ஆகவேதான் நாமும் ஆயுதங்களை ஒப்படைத்துவருகிறோம். எமது கட்சி தற்போது ஆயுதங்களை முற்றாகக் கைவிட்டு விட்டது. கேள்வி : நீங்களும் உங்கள் கட்சியும் ஆயுதங்களைக் கைவிட்டு விட்டதாகக் கூறினாலும், உங்கள் கட்சியைச் சேர்ந்த ஆயுததாரிகள் திருகோணமலையில் 6 வயதுச் சிறுமியொருவரைக் கப்பப் பணத்திற்காக கடத்திச் சென்று படுகொலை செய்திருக்கிறீர்களே? அதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்? பிள்ளையான் : நான் கடுமையாக இந்தக் குற்றச்சாட்டினை மறுக்கிறேன். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் இந்தப் படுகொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று நான் உறுதியாகக் கூறுகிறேன். படுகொலையில் ஈடுபட்டவர் எனது கட்சியைச் சேர்ந்தவர் அல்ல, தேர்தல் காலத்தில் மட்டும் எம்முடன் சேர்ந்து செயற்படுவார். நான் பொலீஸாரிடமும், பொதுமக்களிடமும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் என்று சொல்லிக்கொண்டு வருவோர் குறித்து அவதானமாக இருக்கும்படி கேட்டிருக்கிறேன். எமது கட்சியின் நற்பெயரைக் களங்கப்படுத்த சில சதி வேலைகளில் ஈடுபட்டுவருவது குறித்து நாம் அறிந்தே வைத்திருக்கிறோம். நாம் இந்த படுகொலையினை கண்டிக்கிறோம். இது ஒரு துரதிஷ்ட்டமான சம்பவம். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மக்களிடையே பிரபலமாகி வருவதால் எமது பெயரைக் களங்கப்படுத்தவே இவ்வாறான படுகொலைகளுடன் எம்மைத் தொடர்புபடுத்தி பேசுவதற்கான காரணம். நாம் மக்களை அறிவுமயப்படுத்திவருகிறோம். எமது உறுப்பினர்களுக்கான விசேட அடையாள அட்டைகளை விநிதியோகித்து வருகிறோம். கேள்வி : புலிகளிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஆயுதங்களை வைத்திருப்பதாக முன்னர் கூறீர்கள். புலிகளின் உறங்குநிலைப் போராளிகளின் பிரசன்னம் இருப்பதாகப் பேசப்பட்டு வரும் வேளையில், உங்கள் பாதுகாப்புக் குறித்து எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறீர்கள்? பிள்ளையான் : புலிப் பயங்கரவாதிகளின் உறங்குநிலை உறுப்பினர்களோ அல்லது அவர்கள் மூலமான பாதுகாப்புப் பிரச்சினையோ எமக்கு இருப்பதாக நான் நம்பவில்லை. அவர்களின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதால், தலைமைத்துவமும், கட்டளையும் இன்றி அவர்களால் தாக்குதல்களை முன்னெடுக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. அவர்கள் வெற்றிகரமாகச் செயற்படுவதென்றால் அவர்களுக்கென்று சரியான தலைமை வேண்டும், ஆனால் அது தற்போது இல்லை. புலிப் பயங்கரவாதிகளின் தலைமையினை எமது ராணுவம் முற்றாக அழித்ததன் பின்னர், உறங்குநிலைப் போராளிகளின் செயற்பாடும் அழிந்துவிடும். கேள்வி : இறுதியாக, தமது இறுதிநாட்களை எதிர்நோக்கியிருக்கும் பிரபாகரனுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? பிள்ளையான் : மிக விரைவில் எமது ராணுவ வீரர்கள் அவரை கைதுசெய்வார்கள் அல்லது அவர் தானாகவே தற்கொலை செய்துகொள்வார். புலிப்பயங்கரவாதிகளில் 20,000 போராளிகள் எமது வீரர்களால் கொல்லப்பட்டு விட்டனர். ஆயிரக்கணக்கான தமிழர்களும் பிரபாகரனின் மடமையினால் கொல்லப்பட்டு விட்டார்கள், அது அவருக்கும் நன்கு தெரியும். தமிழ் இனத்திற்குச் செய்த மிகப்பெரிய அழிவிற்காக அவர் கொல்லப்படவே வேண்டும். பிரபாகரனின் மரணம் இந்த நாட்டுத் தமிழர்களுக்குக் கிடைக்கக் கூடிய மிகப்பெரிய ஆறுதலாக, நிம்மதியாக இருக்கும். மாற்றுக் கருத்தில்லை, அவர் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்பட வேண்டும் !!! முற்றும்
-
"தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எப்போதும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே வேலை செய்யும் - பிரபாகரன் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்பட வேண்டும்" : பிள்ளையான் சர்வதேச புலம்பெயர்ந்த இலங்கையர்கள் எனும் இணையத்தள செய்திச் சேவைக்கு பிள்ளையான் வழங்கிய செவ்வி நாள் : 29 ஆம் நாள், பங்குனி 2009 பகுதி 1 "கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்துவருவதனாலும், புலிகள் இயக்கத்தை நாட்டிலிருந்தே முற்றாகத் துடைத்தழிக்க நடவடிக்கை எடுத்துவருவதனாலும் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு முற்றான ஆதரவினை வழங்கி அவரின் கரங்களை வலுப்படுத்துவதற்கு தனது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்ச்சியாக வேலை செய்யும்" என்று அக்கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்திருக்கிறார். "புலிகள்" எனப்படும் சொல்லை தனது கட்சியின் பெயரிலிருந்தே நீக்கப்போவதாக தெரிவித்திருக்கும் பிள்ளையான், தான் அரசுக்கெதிராகச் செயற்படுவதாகப் பரவிவரும் வதந்திகளை முற்றாக மறுத்தார். சிறுவனாக புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்ட பிள்ளையான் தற்போது 33 வயதை அடைந்திருப்பதுடன், தனது அரசியல் அதிகாரத்தை ஸ்த்திரப்படுத்தும்வரை திருமணம் செய்யப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார். தனது கட்சி அனைத்து விமர்சனங்களுக்கும் சனநாயக ரீதியில் பதிலளிக்கக் காத்திருப்பதாகவும், தமிழ் மக்களுக்கு ஆயுதக் கலாசாரம் தேவையற்றது என்பதனால், தாம் கிழக்கு மாகாணத்தை ஆயுதச் சூனியப் பிரதேசமாக மாற்ற நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்திருக்கிறார். அவரது செவ்வியின் முழு வடிவமும் கீழே ! கேள்வி : உங்களது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து பெருமளவு உறுப்பினர்கள் கருணாவுடன் சேர்ந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்த பின்னரும் நீங்கள் தொடர்ச்சியாக தாக்குப் பிடிப்பது எப்படி ? பிள்ளையான் : கிழக்கு மாகாண மக்கள் தமக்கென்று தனியான அரசியல் பிரதிநிதித்துவம் ஒன்று அமைவைதையே விரும்புகிறார்கள். இதுவரை பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் ஆளும் அரசுகளுக்கு எதிராகவே செயற்பட்டு வந்தனர். ஆனால், நாங்களோ இந்த அரசின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாகவே இருக்கிறோம். கிழக்கு மாகாணத் தமிழர்களின் பிரச்சினைகள் தனித்துவமானவை, அப்பிரச்சினைகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியே தீர்த்துவைக்கவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனாலேயே கடந்த தேர்தல்களில் எமக்கான மக்கள் ஆணையினை அவர்கள் வழங்கினார்கள். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையே தமக்கான அரசியல் பிரதிநிதிகளாக அவர்கள் தேர்வுசெய்திருக்கிறார்கள். கருணா அம்மான் சுதந்திரக் கட்சியில் இணைந்திருக்கின்றபோதும் கூட, நாம் புதிதாக இணையத் தேவையில்லை. ஏனென்றால், நான் தற்போதும் சுதந்திரக் கட்சி அரசில் ஒரு முக்கிய அங்கமாகவே இருக்கிறோம். தெற்கு மக்களுக்கு நான் கூற விரும்புவது ஒன்றைத்தான். அதாவது, நாம் எப்போதும் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான இந்த அரசுக்கு ஆதரவாக தொடர்ந்தும் இருப்போம். அரசுக்கெதிராக செயற்படுவதாக வரும் வதந்திகள் வேண்டுமென்றே எமக்கெதிராக செய்யப்படும் விஷமத்தனமான பொய்களேயன்றி வேறில்லை. கேள்வி : அனால், கருணாவுடன் சேர்ந்து உங்கள் கட்சியைச் சேர்ந்த குறைந்தது 2000 உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைந்திருக்கிறார்களே? பதில் : (சிரித்துக்கொண்டே) நான் இதுபற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை. கேள்வி : உங்களது கட்சி எதிர்காலத்தில் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியும் என்று எந்தளவு தூரத்திற்கு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் ? பிள்ளையான் : எமது கட்சியின் அரசியல் எதிர்காலம் 100 வீதம் உறுதியானது. எங்களால் எந்தவொரு தேர்தலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் பலம் இருக்கிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியில் தலைவர் என்கிற ரீதியில் எனது அரசியல் இலட்சியத்தினை காலத்திற்குக் காலம் நான் மாற்றிக்கொள்ளவில்லை. எங்களிடம் மிக உறுதியான கொள்கைகள் இருக்கின்றன. நான் எல்லா அரசியல் கட்சிகளுடனும் சமரசத்தில் ஈடுபடுவோம். கிழக்கு மாகாண மக்கள் நெடுங்காலமாக அரசியல் அநாதைகளாகவே இருந்து வந்துள்ளனர். ஆனால், அந்த குறையினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நிவர்த்தி செய்திருக்கிறது. தமது வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்காக எமது கட்சி செயற்பட்டுவருவதால், எமக்கான ஆதரவினை அவர்கள் தந்திருக்கிறார்கள். கேள்வி : உங்களுக்கும் பிரதியமைச்சர் கருணாவுக்கும் இடையே ஏதாவது பிரச்சினை இருக்கின்றதா? பிள்ளையான் : நான் ஒரு நேர்மையான அரசியல்வாதி. நாம் 2004 இல் கொழும்பிற்கு வந்தபோது, தான் கொண்டுவந்த கைத்துப்பாக்கியைத் தூர எறிந்த கருணா, "நாம் ஆயுதங்களைக் களைந்துவிட்டு ஜனநாயக அரசியலில் ஈடுபட வேண்டும்" என்று கூறினார். நான் உட்பட பல உறுப்பினர்கள் கருணாவின் உயிருக்கான பாதுகாப்பை வழங்கிக்கொண்டிருக்க, பல போராளிகள் புலிகளுடனேயே இருந்துவிட்டார்கள். கருணா நாட்டைவிட்டு வெளியேறியபின்னர், நான் அரசுடன் சேர்ந்து உழைத்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் கட்சியை ஆரம்பித்தேன். நானே கருணாவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் அறிமுகப்படுத்தினேன். அவர் நாட்டில் இல்லாத காலத்தில் நான் அரசுடன் நெருங்கிச் செயற்பட்டு வந்தேன். அவருடன் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால், சரியோ தவறோ தலைமைப்பதவியைக் கைப்பற்றவும், எல்லாவற்றையும் தனது கட்டுப்பாடின் கீழ் கொண்டுவரும் ஆதிக்க மனோநிலையும் அவருக்கு இருக்கிறது. அவர் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணத்தின் தளபதியாக இருந்தபோது, அவர் சொல்வதைக் கேட்டு நாம் அடிபணிந்து செயற்பட்டோம். அவரின் செயல்கள் சரியோ, தவறோ நாம் கேள்விகேட்காமல் செய்துவந்தோம். ஆனால், நான் இன்று இருப்பதோ ஜனநாயக வெளி. இக்களத்தில் எவரும், எவரையும் விமர்சிக்கும் உரிமை இருக்கிறது. அதனால், நாம் அவரது நடவடிக்கைகள் பற்றி விமர்சிக்கும்போது, எம்மை தனது எதிரிகளாக அவர் பார்க்கிறார். எது எப்படியிருந்தாலும், நாம் இன்றிருப்பது ஒரு ஜனநாயக களம், எம்மை எவரும் அதிகாரத்தைப் பாவித்து கட்டுப்படுத்த முடியாது. கேள்வி : கிழக்கில் நடந்துவருவதாகக் கூறப்படும் அபிவிருத்தி மற்றும் மீள் கட்டுமாணம் குறித்து நீங்கள் திருப்தியடைந்திருக்கிறீர்களா? பிள்ளையான் : கடந்த இரு தசாப்த்தங்களாக கிழக்கில் அபிவிருத்தியே நடைபெறவில்லை. அதே போல எமது மக்களுக்கான அரசியல் தலைமைகளும் இருக்கவில்லை. ஆனால், இப்போது கிழக்கில் அபிவிருத்தி முழு வீச்சில் நடந்துவருகிறது. கல்வி, சுகாதாரம் என்று அனைத்துமே அபிவிருத்தி செய்யப்படுகின்றன. எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிழக்கின் அபிவிருத்தி தொடர்பாக விசேட கரிசனை கொண்டிருப்பதால், அவரின் கிழக்கு மாகாண அபிவிருத்தியின் ஜனாதிபதிக்கான ஒருங்கிணைப்பாளராக இருப்பது குறித்து பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றேன். ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷவும் கூட கிழக்கு மாகாண மக்களின் அபிவிருத்திக்கும் தன்னாலான உதவிகளைச் செய்துவருகிறார். நாம் அனைவரும் சேர்ந்து கிழ்க்கு மாகாண அபிவிருத்திக்கான பல திட்டங்களைத் தீட்டி வைத்திருக்கிறோம். கேள்வி : ஆனால் உங்களின் மாகாண சபை ஆட்சியில் பல ஊழல்களும், முறைகேடுகளும் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறதே ? பிள்ளையான் : நான் இக்குற்றச்சட்டுக்களை முற்றாகவே மறுக்கிறேன். மக்களுக்குத் தெரியும் நாம் செய்துவரும் சேவைகள். அப்படி முறைகேடுகள் இடம்பெறுவதாக அவர்கள் கருதினால், அவர்கள் ஏன் இதுவரை எமது மாகாணசபை அரசுக்கெதிராக முறையிடவில்லை. கேள்வி : கிழக்கு மாகாண அபிவிருத்தியெனும்போது, எந்த துறைகளில் அபிவிருத்தி செய்யப்படுதல் அவசியம் என்று நினைக்கிறீர்கள்? பிள்ளையான் : முழுக் கிழக்கு மாகாணமுமே அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். புலிப் பயங்கரவாதத்தினால் எமது மாகாணம் முற்றாக அழிக்கப்பட்டு, அபிவிருத்தியில் பின்தங்கிவிட்டது. கிராமப்புறப் பகுதிகளிலேயே அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று நினைக்கிறேன்.
-
பாகம் - 02 கேள்வி : இனி புலிகளின் எதிர்காலம் என்ன? கருணா : புலிகள் இனிமே மீள எழ முடியாது. காடுகளில் மறைந்திருக்கும் சிறு கெரில்லாக் குழுக்கள் சில சிறிய தாக்குதல்களை நடத்த முயலலாம். ஆனால், ஒரு அமைப்பாக மீண்டும் அவர்களால் ஒன்றிணைய முடியாது. மக்கள் அவர்களைப் புறக்கணித்து புறந்தள்ளி விட்டார்கள். கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணத்திலும் நடந்தது இதுதான். யாழ்ப்பாண மக்களே புலிகளை முதலில் நிராகரித்தவர்கள். அவர்கள் இனிமேல் ஒருபோது புலிகளுடன் இணையப்போவதில்லை. புலிகளிடம் ஆட்கள் இல்லை. புலிகளுக்கான ஆட்பலம் கிழக்கிலிருந்து இதுவரை கிடைத்துவந்தது. 8500 கிழக்கு மாகாணப் போராளிகள் வன்னிக் களமுனைகளில் பலியாகியுள்ளனர். புலிகளின் பொருளாதார மையம் யாழ்ப்பாணத்திலேயே இருக்கிறது. ஆனால், தற்போது ஆட்பலத்தையும், பொருளாதாரப் பலத்தையும் புலிகள் ஒருங்கே இழந்திருக்கின்றனர். வன்னி மக்களும் புலிகள் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். எதிர்காலத்தில் வன்னி மக்கள் நிச்சயம் புலிகளை எதிர்ப்பார்கள் என்பது திண்ணம். புலிகளை முடிக்க ராணுவத்திற்கு சிறிது காலமே போதுமானது. கிழக்கு மாகாணத்தைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவித்து வெறும் ஒன்றரை ஆண்டுகளே ஆகின்றன. சில சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்றாலும் அமைதி நிலவுகிறது. காலம் எல்லாவற்றையும் மாற்றும். கேள்வி : புலம்பெயர் தமிழர் தொடர்பான உங்களின் கருத்தென்ன ? கருணா : இங்கிருக்கும் உண்மையான நிலவரம் தொடர்பாக அவர்களுக்கு எதுவுமே தெரியாது. புலிகளின் பொய்யான பிரச்சாரத்தினால் அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு வருகிறார்கள். ஆனால், தெற்கில் உள்ள தமிழர்கள் புலம்பெயர் தமிழர் போன்று தவறாக வழிநடத்தப்படவில்லை. புலம்பெயர் தமிழரைப் பொறுத்தவரை பிரபாகரனைக் காப்பற்றினாலே போதுமானது, தமிழர்கள் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால், தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைக்கும் பிரபாகரனே காரணம். அவர் ஒரு தலைவர் கிடையாது. ஒரு சரியான தலைவர் தனது மக்களை ஒருபோதும் பகடைக்காய்களாகப் பாவிக்கப்போவதில்லை. போர் தொடங்குமுன்னமே பொதுமக்களை அவர் வன்னியிலிருந்து வெளியேறிச் செல்ல அனுமதித்திருக்க வேண்டும். மக்களை விடுவிப்பதை விடுத்து, மக்களின் பின்னால் தன்னை பிரபாகரன் ஒளித்துக்கொண்டார். தங்களைத் தப்பிச் செல்லவிட்டிருந்தால் தமிழர்கள் அவருக்கு நன்றியாக இருந்திருப்பார்கள். புலம்பெயர் தமிழர் ஒருபோதுமே இலங்கைக்கு மீண்டும் வரப்போவதில்லை. இலங்கையில் யுத்தமும், அழிவும் இடம்பெற்றால் மட்டுமே அவர்கள் தொடர்ந்தும் அந்நாடுகளில் வாழமுடியும். அதற்காக வன்னி மக்கள் பாரிய விலையினைக் கொடுக்கவேண்டியிருக்கிறது. லண்டனில் ஒருலட்சம் மக்கள் திரண்டதாகக் கூறுவது முழுப்பொய்யாகும், எனக்குத் தெரிந்ததன்படி 20,000 இற்கும் குறைவானவர்களே அங்கே கூடியிருந்தார்கள். கேள்வி : புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அகப்பட்டிருக்கும் பொதுமக்கள் எண்ணிக்கை தொடர்பாக பல்வேறான ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றனவே, இதுபற்றிய உங்கள் கணிப்பென்ன? கருணா : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்படும் மூன்று லட்சம் பொதுமக்கள் அகப்பட்டிருக்கிறார்கள் என்பது முழுப் பொய்யாகும். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் வெறும் 180,000 மக்களே முன்னர் இருந்தனர். போர் தொடங்கும்போது குறைந்தது 90,000 பொதுமக்கள் போர்க்களத்தை விட்டு தப்பி வந்துவிட்டனர். மீதியாயிருந்த 90,000 பொதுமக்களில் 65,000 பேர் புலிகளின் கட்டுப்பாட்டினை மீறி அரச பக்கம் வந்துவிட்டனர். எனது கணிப்பின்படி 30,000 இற்கும் குறைவான மக்களே யுத்த சூனியப் பிரதேசத்தில் அகப்பட்டிருக்கிறார்கள். கேள்வி : தற்போது ஒரு யுத்த நிறுத்தம் அவசியமானது என்று நினைக்கிறீர்களா? கருணா : தற்போது நிச்சயமாகத் தேவையில்லை. பிரபாகரன் ஒருபோதுமே இதயசுத்தியுடன் யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு வரப்போவதில்லை. கேள்வி : பிரபாகரன் தற்போது எங்கே இருக்கலாம் என்று யூகிக்கிறீர்கள்? கருணா : அவர் யுத்த சூனியப் பிரதேசத்தில் இல்லையென்று நினைக்கிறேன். சிலவேளை அவர் காட்டிற்குள் தப்பி ஓடியிருக்கலாம். அவர் இன்னொரு வெளிநாட்டிற்கு இதுவரையில் தப்பியோடவில்லை. அவரால் ஒருபோதுமே இந்தியாவுக்குள் நுழைய முடியாது. வேண்டுமானால் இந்தோனேசியா போன்ற ஒரு நாட்டிற்குத் தப்பிப் போகலாம், ஆனால் நெடுநாள் அங்கும் ஒளிந்திருக்க முடியாது. சிலவேளை நோர்வேயில் அடைக்கலம் தேடலாம். ஆனால், அவர் கட்டாயம் இறந்தேயாக வேண்டும். அவரது இரண்டாம் நிலைத் தளபதிகள் பலர் இறந்துவிட்டனர். பாணு, சொர்ணம் போன்றவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர். பாணுவும் பொட்டு அம்மானுமே முஸ்லீம்களை யாழில் இருந்து 24 மணித்தியாலத்தில் வெளியேற்றியவர்கள். நான் எவ்வளவோ மறுத்தும், அவர்கள் அதைக் கேட்கவில்லை. கேள்வி : குறைந்தது உங்கள் குழுவினரால் 400 தமிழ் இளைஞர்கள் தெற்கில் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன, இதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்? கருணா : இவ்வாறான எண்ணிக்கைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலும், மணோ கணேசனாலுமே முன்வைக்கப்படும் முழுப் பொய்கள் ஆகும். இவற்றுள் பெரும்பாலனவை பொய்யான தகவல்களாகும். நான் இதுபற்றி பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேசி தெளிவுபடுத்தியிருக்கிறேன். கேள்வி : உங்கள் அமைப்பிற்கும் இக்கடத்தல்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவது பற்றி ? கருணா : இது மிகவும் தவறான செய்தி. பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினரே கப்பம் கோரித் தமிழ் இளைஞர்களைக் கடத்துகிறார்கள். அவர்கள் மிகவும் கொடுமையானவர்கள். திருகோணமலையில் 6 வயதுச் சிறுமியை அவர்கள் எப்படிக் கொன்றார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பிள்ளையான் குழுவின் அநீதிச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த எமது ஜனாதிபதி பொலீஸாருக்கு சகல அதிகாரங்களையும் வழங்கியிருக்கிறார். கேள்வி : தனிச் சிங்களச் சட்டத்தினைக் கொண்டுவந்ததன் மூலம் இனப்பிரச்சினையினை ஆரம்பித்துவைத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் நீங்கள் தற்போது இணைந்திருக்கிறீர்கள். தற்போது அதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கருணா : பல அரசியல்வாதிகள் கடந்தகாலங்களில் பல தவறுகளைச் செய்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் இனவாதத்தினைப் பரப்பியிருக்கிறார்கள். ஆனால், இன்றோ மக்கள் அவ்வாறில்லை. அவர்களுக்கு இப்பிரச்சினை தொடர்பான சிறந்த தெளிவு இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது தெற்கில் வன்முறைகள் பரவின. ஆனால், இன்று புலிகளால் தெற்கில் எத்தனை தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றாலும்கூட சிங்கள மக்கள் தமிழர்கள் மேல் கைவைப்பதில்லை. புலிகள் கிழக்கு மாகாணப் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர் ஒருவரைக் கொன்றபோதும், ஒரு தமிழ் மாணவனாவது தெற்கில் துன்புறுத்தப்படவில்லை. கிழக்கு மாகாணத்தின் மிகச் சிறந்த சிங்கள வைத்தியர் ஒருவரைப் புலிகள் கொன்றனர். ஆனால், ஒரு தமிழ் வைத்தியரும் சிங்களவரால் துன்புறுத்தப்படவில்லை. மக்கள் இப்போது தெளிவாக இருக்கின்றனர். அவர்கள் இனவாதிகள் அல்ல. சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு இனவாதக் கட்சியல்ல. கடந்த காலங்களில் வடக்கில் எத்தனை வாக்குகளை எமது கட்சி பெற்றுக்கொண்டது? போரின் நடுவிலும் கூட, சந்திரிக்காவுக்கு அமோக ஆதரவினை கிழக்கு மாகாண மக்கள் வழங்கியிருந்தனர். கேள்வி : இந்தியாவுடனான உங்களின் உறவு எப்படியானது? கருணா : மிக நன்றாக உள்ளது. நான் அண்மையில்க் கூட இந்திய உயர்ஸ்த்தானிகரைச் சந்தித்தேன். கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தினை அபிவிருத்தி செய்ய அவர் விருப்பம் தெரிவித்தார். கேள்வி : தமிழ்நாட்டுடனான உங்களின் உறவு எப்படியிருக்கிறது ? கருணா : பெரிதாக இல்லை. ஆனால், அங்கிருக்கும் பல ஊடகவியலாளர்களோடு தொடர்பில் இருக்கிறேன். கேள்வி : இந்தியாவில் ஆயுதப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்டீர்களா? கருணா : ஆம், இந்திய ராணுவம் எங்களுக்குப் பயிற்சியளித்தது. கேள்வி : இறுதியாக தனிப்பட்ட கேள்வியொன்று, உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? கருணா : ஆம், மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். எனது மனைவி எனது வேலைகளில் தலையிடுவதில்லை. நான் புலிகளுடன் இருந்தபோதும் சரி, விலகிய பின்னரும் சரி அவர் எனது நடவடிக்கைகளில் பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருகிறார். நான் தற்போது மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்கிறேன். முற்றும்
-
லங்கா இ நியூஸ் எனும் இணையவழி ஆங்கில ஊடகத்திற்கு கருணா 2009, சித்திரை 18 இல் வழங்கிய செவ்வி பாகம் - 01 கேள்வி : ஒருமுறை நீங்கள் ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறினீர்கள், இப்போது இல்லையென்கிறீர்கள், நாம் எதனை நம்புவது? கருணா : இது தவறான செய்தியாகும். நாம் புலிகளிடமிருந்து பிரிந்துசென்றபோது எமது பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருந்தோம். ஆனால், நான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றபின்னர் எனது தோழர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டார்கள். இன்று ஆயுதங்களைக் கொண்டிருப்பது பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புத்தான். கேள்வி : எதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தீர்கள்? கருணா: அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் புலிகளுக்கு எதிரானவர்களே. ஆனால் என்ன செய்யவேண்டும் என்பதுபற்றி அவர்களுக்கு தெளிவான நோக்கம் கிடையாது. தமிழ்க் கட்சிகள் எல்லாம் சிறு சிறு கழகங்கள் போல செயற்படுகிறார்கள். ஆகவே தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பெரிய கட்சியான சுதந்திரக் கட்சியில் இணைந்தேன். நான் சுதந்திரக் கட்சியில் இணைந்தபின்னர் எனது அமைப்பிலிருந்த 1000 உறுப்பினர்களை இலங்கை ராணுவத்தில் சேர்த்துவிட்டேன். அவர்களில் 300 பேர்வரையில் தற்போது தொப்பிகல காட்டுப்பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 1500 பேர் ராணுவத்துடன் இணைவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இவர்களுள் 1200 பேரை சேர்க்கும் முயற்சிகள் பூர்த்தியடைந்துவிட்டன. இதேபோல இன்னொரு பிரிவினர் இலங்கைப் பொலீஸ் சேவையில் இணைய ஆயத்தமாகி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த எனது அலுவலகங்கள் அனைத்துமே அப்பகுதிகளுக்கான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அவ்வாறான 80 அலுவலகங்கள் உள்ளன, இவற்றுக்கான பாதுகாப்பினை பொலீஸார் வழங்கிவருகின்றனர். சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தினை மட்டக்களப்பு நகரில் திறந்துவைத்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சில போராளிகளை மட்டுமே இன்று கொண்டிருக்கிறது. கேள்வி : உங்களின் அமைச்சரவை அந்தஸ்த்தினைக் கொண்டு மக்களுக்கு எவ்வகையான சேவைகளை வழங்கியுள்ளீர்கள்? கருணா : எனக்கு வழங்கப்பட்டிருக்கும் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மீள் கட்டுமான அமைச்சினை நான் பெரிதும் மதிக்கிறேன். கடந்த 25 ஆண்டுகளாக பிளவுபட்டிருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லீம் சமூகங்களை இணைக்க இந்த அமைச்சினைப் பாவிப்பேன். தேசிய ஒருமைப்பாட்டிற்கான முக்கிய தடைக்கல் மொழியாகும். தமிழர்கள் சிங்கள மொழியையும், சிங்களவர்கள் தமிழ் மொழியையும் கற்பது அவசியம். வெளிநாட்டு உதவிகள் மூலம் எனது அமைச்சு இதுதொடர்பான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஜனாதிபதிக்கு இதுதொடர்பாக நான் தெரிவித்திருப்பதோடு, அமைச்சரவை அங்கீகாரத்துடன் கல்வியமைச்சிற்கு எனது ஆலோசனைகளை வழங்கவிருக்கிறேன். ராணுவத்தினரை தமிழ் மக்கள் நேசிக்கிறார்கள். ஆனால் மொழிப்பிரச்சினையால் அவர்களுக்கிடையேயான உறவு தடைப்படுகிறது. ஆகவே ராணுவ வீரர்களுக்குத் தமிழ் மொழியினைக் கற்பிப்பதை நான் வழிமொழிகிறேன். புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய முன்னாள் போராளிகளுக்கான புணர்வாழ்வினை எனது அமைச்சினூடாக நான் செய்யவிருக்கிறேன். இவ்வாறான 6000 முன்னாள்ப் போராளிகள் கிழக்கு மாகாணத்தில் இருக்கிறார்கள். இதேபோல பலர் வடமாகாணத்திலும் இருக்கிறார்கள், அவர்களின் விபரங்களையும் சேகரித்து வருகிறோம். கேள்வி : நான்காவது ஈழப்போரில் புலிகளின் திருப்புமுனையான தோல்வியென்று எதனைக் கருதுகிறீர்கள்? கருணா : முதலாவது திருப்புமுனையான தோல்வி நான் புலிகளிடமிருந்து பிரிந்துசென்றபோது ஏற்பட்டது. பிரபாகரனுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பாக இதனை நான் கருதுகிறேன். இரண்டாவது திருப்புமுனை, சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வினை பிரபாகரன் ஏற்க மறுத்தது. ஒஸ்லோவில் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றிற்கு சம்மதிப்பதுபற்றி பாலசிங்கம் தயங்கியபோது, நான் அவரை தைரியப்படுத்தி அதனைச் சம்மதிக்க வைத்தேன். முதலில் கையெழுத்து இடுங்கள், பின்னர் பிரபாகரனுக்குத் தெரிவிக்கலாம் என்று நான் அவரிடம் கூறினேன். இதுபற்றிக் கேள்விப்பட்ட பிரபாகரன் அந்த ஒப்பந்தத்தினைக் கசக்கி எறிந்ததுடன், எங்களையும் துரோகிகள் என்று கடிந்துகொண்டார். மக்கள் போரற்ற சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றினையே விரும்பினார்கள். நான்காம் ஈழப்போரின் ஆரம்பித்திலேயே போரிடும் விருப்பினை புலிகள் இழந்துவிட்டிருந்தார்கள். அது ஒரு தேவையற்ற போராக அவர்கள் கருதினார்கள். மூன்றாவது முக்கிய திருப்புமுனை ராணுவம் கைக்கொண்ட புதிய போர் உத்திகளால் ஏற்பட்டது. அவர்கள் தமது ராணுவ நடவடிக்கைக்கு "ஜயசிக்குரு" என்று பெயர்கள் இட்டு அழைக்கவில்லை. சிறிது சிறிதாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டு முன்னேறிச் சென்றார்கள். கேள்வி : தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் அவர்களின் போராட்டம் எவ்வகையான வடிவத்தினை எதிர்காலத்தில் எடுக்கும் என்று நினைக்கிறீர்கள்? கருணா : போருக்குப் பின்னரான காலத்தில், மாகாணசபை அடிப்படையிலான தீர்வே சாத்தியமானது. ஆனால், பொலீஸ் அதிகாரம் போன்ற தேவையற்ற கோரிக்கைகளை முன்வைப்பதை தமிழர்கள் மறந்துவிடவேண்டும். அப்படி தமிழர்கள் கோருமிடத்து இரு சமூகங்களுக்கிடையே மீண்டும் சந்தேகங்களும், சிக்கல்களும் உருவாகும். இப்போது தமிழர்களுக்குத் தேவையானது சுதந்திரமான நடமாட்டமும், அபிவிருத்தியும் மட்டும் தான். அபிவிருத்தியை நாம் ஆரம்பித்துவிட்டோம். பிணக்குகளையும், சிக்கல்களையும் தீர்க்க காலம் எடுக்கும். உதாரணத்திற்கு, புலிகள் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பகாலங்களில் காலூன்றியபோது தமிழர்களுக்கு அங்கு ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக ஒரு தமிழரும் துன்புறுத்தப்படவில்லை. 1983 ஆம் ஆண்டு ராணுவம் மீதான தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளையடுத்தே கொழும்பிலிருந்து தமிழர்கள் மட்டக்களப்பிற்கு வந்திறங்கினார்கள். இவ்வாறு வந்திறங்கிய தமிழர்களைப் பாவித்து புலிகள் இனவாதத்தினைப் பரப்பினார்கள். அதன் பின்னர் நான் உட்பட 15 பேர் புலிகளுடன் இணைந்தோம். இவ்வாறே யாழ்ப்பாணத்திலும் சிங்களவகர்ளுக்கெதிரான இனவாதத்தினை புலிகள் பரப்பினார்கள். இதனாலேயே இரு சமூகங்களுக்கிடையிலான விரிசல் ஏற்பட்டது. ஆனால், இதனைச் சரிசெய்யும் முயற்சியில் நாம் இறங்கியிருக்கிறோம்.
-
நான் சிறுவர்களைக் கடத்துவதாகக் கூறுவது புலிகளாலும், புலம்பெயர் தமிழராலும் செய்யப்படும் விஷமப் பிரச்சாரம் : கருணா கருணாவின் கூற்றுப்படி அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழு இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் 16 அலுவலகங்களை நடத்தி வருகிறது. உங்களின் அரசியல் அலுவலகங்களில் கடத்தப்பட்ட சிறுவர்களை அவர்களின் பெற்றோர்கள் கண்டிருக்கிறார்களே என்று கேட்டதற்கு, "எமது அரசியல் அலுவலகங்களுக்குள் எவரும் வரலாம், நாம் எதனையும் மறைக்கவில்லை, ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு நிகரான வெளிப்படைத் தன்மையினை நாம் எமது அரசியல் அலுவலகங்களில் பேணிவருகிறோம். எனது அலுவலகங்களில் 20 வயதிற்குக் குறைந்த எவரையும் நாம் கொண்டிருக்கவில்லையென்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும். எவரும் எமது அலுவலகத்தினை வந்து பார்வையிட முடியும்" என்று அவர் பதிலளித்தார். ஆனால், உங்களின் அமைப்பு பலநூற்றுக்கணக்கான சிறுவர்களைக் கடத்திச்சென்று கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்திவருவதாக கூறப்படுகிறதே என்று கேட்டபோது, "இது புலிகளாலும், அவர்களுக்குச் சார்பான புலம்பெயர் தமிழர்களாலும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் விஷமப் பிரச்சாரமாகும், இதில் உண்மையெதுவுமில்லை" என்று அவர் சிரித்துக்கொண்டே கூறினார். ஐ நா வின் சிறுவர் நலன்களுக்கான விசேட தூதர் அலன் ரொக் கருணா குழுமீது முன்வைத்திருக்கும் ஆணித்தரமான குற்றச்சாட்டுக்கள் பற்றிக் கேட்டபோது கோபமடைந்த கருணா, "நிச்சயமாக அலன் ரொக் புலிகளின் பின்புலத்துடன் தான் அரசுக்கும் தனக்கும் களங்கத்தினை ஏற்படுத்துகிறார்" என்று கூறினார். "புலிகள் போலியான குடும்பங்களைத் தயார் செய்து அலன் ரொக்கின் முன்னால் கடத்தப்பட்ட சிறுவர்களின் தாய்மார்கள் என்று நாடகமாட வைத்திருக்கின்றனர். அலன் ரொக் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் எவையுமே அவரிடம் இல்லை. அவர் எமது அலுவலகத்திற்கு வருகை தந்தபோது இதுபற்றி தெளிவாக அவருக்கு விளக்கியிருக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார். மனிதவுரிமைக் கண்காணிப்பகத்துடனான தனது உரையாடல் நடைபெற்று 5 நாட்களின் பின்னர் யுத்தங்களில் இன்னல்களை அனுபவிக்கும் சிறுவர்கள் நலன் தொடர்பான ஐ நா வின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமியுடன் கருணா பேசியிருந்தார். இந்த பிரதிநிதியால் ஐ நா வின் பாதுகாப்புக் கவுன்சிலில் முன்வைக்கப்பட்ட உள்நாட்டு யுத்தங்களில் சிறுவர்களைப் பாவிக்கும் அமைப்புக்களின் பட்டியலில் கருணாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டதுபற்றிப் பேசவே கருணா ராதிகாவுடன் தொடர்புகொண்டிருந்தார். ஐ நா வின் அறிக்கைப்படி கருணா தான் சிறுவர்களை இணைப்பதைக் கைவிடுவதாகவும், யுனிசெப் அமைப்பின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சிறுவர் நலன் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஒத்துக்கொண்டிருந்தார். சிறுவர் நலன் பேணுதல் தொடர்பாக யுனிசெப் அமைப்பிற்கும் தனது குழுவிற்கும் இடையிலான இணக்கப்பாட்டின்படி பின்வரும் விடயங்களைத் தான் செய்யவிருப்பதாக கருணா ஒத்துக்கொண்டிருந்தார். 1. கருணா குழுவின் அனைத்துத் தளபதிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும் சிறுவர்களை இணைப்பதோ, யுத்தத்தில் ஈடுபடுத்துவதோ அனுமதிக்கப்பட முடியாது என்று புதிய கட்டுப்பாடுகளை அறிவிப்பது. 2. சிறுவர் நலன் தொடர்பான பயிற்சிகளை சர்வதேச அமைப்புக்களின் உதவியோடு கருணா குழுவின் பொறுப்பாளர்களுக்கு அளிப்பது. 3. யுனிசெப் மற்றும் ஏனைய மனிதவுரிமை அமைப்புக்களின் உதவியோடு கருணா குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் சிறுவர்களை மீண்டும் அவர்களது குடும்பங்களிடமே கையளிப்பது. 4. தனது முகாம்களை பார்வையிடுவதற்கான அனுமதியினை யுனிசெப் அமைப்பிற்கு வழங்கி எத்தருணத்திலும் தனது அமைப்பில் சிறுவர்கள் அமர்த்தப்படவில்லையென்பதனை உறுதிசெய்தல். கருணாவின் இந்த அறிக்கையினை வரவேற்ற ராதிகா குமாரசாமி, சிறுவர்கள் இலங்கையில் ஆயுதக் குழுக்களால் போரில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக இது காணப்படுவதாகக் கூறியிருந்தார். "களத்தில் இந்த முயற்சிகள் நண்மைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்" என்று அவர் மேலும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ராதிகா, புலிகளிடமிருந்து இம்மாதிரியான ஒத்துழைப்பினை தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார். 2007 ஆம் ஆண்டு தை மாதம் 2 ஆம் திகதி தனது ராணுவ அமைப்பிற்கான கட்டுப்பாடுகளை கருணா யுனிசெப் அமைப்பிடம் கையளித்தார். அந்த ஆவணத்தின்படி 18 வயதிற்குக் குறைந்தவர்கள் தனது அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும், இணையவரும் ஒவ்வொருவரிடமிருந்தும் பிறப்பு அத்தாட்சிச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்பட்டு, சுய விருப்பத்துடனேயே இணைகிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்ட பின்னரே இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. இந்தச் சட்டங்களை மீறும் தளபதிகளுக்கு முகாமில் சமையலில் ஈடுபடுதல், தோட்ட வேலைகளில் ஈடுபடுதல் ஆகிய தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதே ஆவணத்தில் படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், கொள்ளைகள் ஆகியவற்றில் ஈடுபடும் அமைப்பின் உறுப்பினர்களை பொலீஸாரிடம் ஒப்படைத்துவிடுவதாகக் கூறப்பட்டிருந்தது. அத்துடன் புகை பிடித்தல், மது அருந்துதல், பெண்களை இழிவுபடுத்தல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடும் உறுப்பினர்கள் அமைப்பிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், யுனிசெப் அமைப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் காலத்திலேயே கருணா குழு புதிதாக குறைந்தது 21 சிறுவர்களைக் கடத்திச்சென்று கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தியிருப்பது எம்மால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று மனிதவுரிமைக் கண்காணிப்பகம் கூறுகிறது.
-
சிறுவர் கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கான கருணாவின் பதில் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கை வெளிவந்த மறுநாள் விநாயகமூர்த்தி முரளீதரன் அந்த அமைப்பினைத் தொடர்புகொண்டு தன்மீதான குற்றச்சட்டுக்கள் குறித்துப் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அடையாளம் காணப்படாத இடமொன்றிலிருந்து தொலைபேசியூடாகப் பேசிய கருணா அம்மான், தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்ததோடு சிறுவர் கடத்தல்களிலோ அல்லது கட்டாய ராணுவப் பயிற்சியில் சிறுவர்களை ஈடுபடுத்துவதிலோ தனது குழு ஈடுபடவில்லை என்று கூறினார். "இவ்வாறான விடயங்களை நான் வெறுக்கிறேன். சிறுவர்களைக் கடத்துவதோ அல்லது கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்துவதோ நான் விரும்பும் செயல்கள் அல்ல" என்று அவர் கூறினார். தனது குழுவில் இணைவதற்கான மிகக் குறைந்த வயது 20 என்று கூறிய கருணா அம்மான், இதற்குக் குறைந்த வயதுடைய இளைஞர்களை குழுவில் சேர்க்கும் பொறுப்பாளர்களுக்கெதிராக தான் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், அவ்வாறனவர்களை தான் வீட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார். மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் கருணாவின் அலுவலகத்தின் முன்னால் கட்டப்பட்டிருக்கும் பெயர்ப்பலகை. இதே அலுவலகத்தில்த்தான் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளை கருணா குழுவினர் அடைத்துவைத்திருப்பதைப் பெற்றோரும், மனித்கவுரிமை ஆர்வலர்களும் கண்ணுற்றிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், கருணாவின் இந்த கூற்று, அவரது அமைப்பின் பேச்சாளர் இலங்கை அரச பத்திரிக்கைச் செவ்வியில் பகிரங்கமாக "சிறுவர்கள் எமது அமைப்பில் இருக்கிறார்கள்" என்ற கூற்றிற்கு முற்றிலும் முரணாக இருப்பது குறிப்பிடத் தக்கது. "நாம் சிறுவர்களைக் கடத்தி வரவில்லை, அவர்கள் தாமாகவே எம்முடன் இணைகிறார்கள்" என்று செங்கலடி அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்திருந்தார். கருணா தொடர்ந்தும் மனிதவுரிமைக் கண்காணிப்பக அதிகாரிகளுடன் பேசுகையில், "எமது அமைப்பிற்கென்று கட்டுக்கோப்பான வரையறைகளை வைத்திருக்கிறோம், அதனடிப்படையிலேயே எமது செயற்பாடுகள் அமைகின்றன, உங்களுக்கும் வெகு விரவில் இக்கட்டுப்பாட்டு வரையறைகள் அடங்கிய ஆவணத்தை அனுப்பிவைப்போம்" என்று கூறியிருந்தார். ஆனால் இவ்வறிக்கை வெளிவரும்வரை அவ்வாறானதொரு ஆவணத்தினை கருணா எம்மிடம் அனுப்பிவைக்கவில்லையென்பது குறிப்பிடத் தக்கது. இலங்கை ராணுவத்துடனான கருணா குழுவின் தொடர்பு பற்றிக் கேட்டபோது, "அது அரசியல் ரீதியான தொடர்பு மட்டுமே" என்று அவர் கூறினார். "இலங்கை ராணுவத்திற்கும் எமக்கும் இடையே ராணுவ ரீதியிலான தொடர்புகள் ஏதும் இல்லை. ஆனால் அரசியல் ரீதியாக நான் சில தொடர்புகளை ராணுவத்தினருடன் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூறினார். உங்களது ஆயுதம் தரித்த குழுவினர் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுதந்திரமாக உலாவருவது எப்படி என்று கேட்டபோது, "எமது அரசியல்ப் பிரிவினர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொலீஸாரின் உதவியுடன் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகிறார்கள். ஆனால், எமது ராணுவப் பிரிவினர் கருணாவின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மட்டுமே ஆயுதங்களுடன் உலவுகிறார்கள். இப்பிரதேசங்களை நாம் புலிகளிடமிருந்து போராடி மீட்டெடுத்திருக்கிறோம்" என்றும் அவர் கூறினார்.
-
இலங்கையில் சிறுவர்கள் கடத்தப்பட்டுவருவது தொடர்பான ஐ நா வின் கண்டனம் சிறுவர் கடத்தல்கள் தொடர்பான அலன் ரொக்கின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்ஷ, அவைபற்றி விசாரிக்கப்போவதாக உறுதியளித்திருந்தபோதும், அரசின் ஏனைய தலைவர்களும் பெளத்த குருமார் மற்றும் சாதாரண சிங்களவர்கள் அலன் ரொக்கின் விமர்சனம் குறித்த கடுமையான கண்டனங்களை முன்வைத்திருந்தனர். அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கூறும்பொழுது அலன் ரொக் ராஜதந்திரியொருவரின் எல்லைகளை மீறிச் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். "சர்வதேச சமூகத்தின் மதிப்பிற்குரிய அதிகாரியொருவர் ஒரு அரசாங்கத்தின்மீது இவ்வாறான கடுமையான கண்டனங்களை வெளிப்படையாக முன்வைப்பது நாகரீகமற்றது" என்று அவர் கூறினார். "அவர் சொல்வது உண்மையாக இருந்தாலும், அதனை அரசாங்கத்திடம் நாசுக்காகக் கூறியிருக்கவேண்டும், இப்படிப் பகிரங்கமாக அரசை விமர்சிப்பது தவறு" என்றும் அவர் கூறினார். அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரதான பத்திரிக்கையான் டெயிலி நியூஸ் தனது ஆசிரியர் தலையங்கத்தில், " ஒரு இறைமை நாட்டின்மீது அலன் ரொக் போன்றவர்கள் முன்வைக்கும் விமர்சனம் அந்நாட்டின் தேசிய நலன்களுக்கு பாரதூரமான பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்துவைத்திருப்பது நல்லது" என்று தொனிப்பட எழுதியிருந்தது. கருணா குழுவினருடன் தமக்கு எதுவிதமான தொடர்புகளும் இருக்கவில்லையென்று மறுதலித்த இலங்கை ராணுவம் அலன் ரொக்கின் விமர்சனம் மக்களையும், சர்வதேசத்தையும் தவறாக வழிநடத்துவதாகவும், இலங்கையின் தேசியப் பாதுகாப்பு மீது பாரதூரமான பாதிப்பினை ஏற்படுத்த வல்லன என்றும் சாடியிருந்தது. http://www.lankaweb.com/news/items/wp-content/uploads/2013/06/Articlepdf3.jpg அலன் ரொக்கின் மீதான கடுமையான விமர்சனங்களை பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்படும் "தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையம்" எனும் அமைப்பு வெளியிட்டிருந்தது. தனது இணையவழி விமர்சனத்தில் "யார் இந்த அலன் ரொக்?" என்று தலைப்பிட்ட கண்டனத்தை முன்வைத்த இலங்கை ராணுவம் கனடாவின் முன்னாள் அமைச்சரான இவர் புலம்பெயர் தமிழரின் பணத்திற்கு வேலை செய்வதாகவும், கனடாவில் புலிகள் தடைசெய்யப்படுவதை இவர் தடுத்துவருவதாகவும் கடுமையாகச் சாடியிருந்தது. மேலும் கனடாவில் வாழும் தமிழர்களின் உதவியுடனும், பணபலத்துடனும் புலிகளின் அனுதாபிகளின் உதவியினூடாகவும் அலன் ரொக் ஐ நா வில் ஒரு பதவியைப் பெற்றுக்கொண்டார் என்றும் அது மேலும் விமர்சித்திருந்தது. http://www.dailynews.lk/sites/default/files/styles/node-detail/public/news/2017/02/12/Screen%20Shot%202017-02-12%20at%2011.26.10%20AM.png?itok=CQUs48T1 ஆரம்பத்தில் யுனிசெப் அமைப்புடன் இணைந்து செயற்படுவதாக உறுதியளித்த கருணா, பின்னர் அலன் ரொக்கின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அலன் ரொக்கும் ஐ நா வும் உண்மைக்குப் புறம்பான, மிகவும் தவறான, கற்பனைத்தனமான குற்றச்சாட்டுக்களை தேச விரோதிகளின் தூண்டுதலை அடிப்படையாகக் கொண்டு முன்வைத்திருப்பதாகக் அவர் கூறினார். அரசாங்கத்தின் இடர் நிவாரண மற்றும் மனிதவுரிமையமைச்சர் மகிந்த சமரசிங்ஹெ கூறுகையில், அலன் ரொக்கின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை, ஆதாரமற்றவை, தனது குற்றச்சாட்டுக்களுக்கான சாட்சியங்கள் எதனையும் முன்வைக்காது அலன் ரொக் பேசுவது நகைப்பிற்குரியது என்று அவர் கூறினார். 2006, கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி அலன் ரொக் இலங்கை ஜனாதிபதி மகிந்தவுக்கு அனுப்பிய கடிதத்தில் தன்னால் விசாரித்துக் கண்டறியப்பட்ட ஆதாரங்களோடு ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்ததுடன், கருணா குழுவினருக்கும் ராணுவத்திற்கும் இடையிலான தொடர்பு தொடர்பாக உடனடியாக பக்கச் சார்பற்ற உண்மையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கோரியிருந்தார். அலன் ரொக்கின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அரசின் வெளிப்படையான எதிர்வினையென்பது நகைப்பிற்குரியது. ஏனென்றால், 2006 இன் ஆரம்பத்திலிருந்தே மட்டக்களப்பு மாவட்டத்தில்க் கருணா குழுவினராலும், அரச ராணுவத்தாலும் கடத்தப்பட்டுவரும் சிறுவர்கள் தொடர்பாக பொலீஸாரிடமும், ராணுவத்திடமும் பலநூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டே வந்திருக்கின்றன. இக்கடத்தல்கள்பற்றி அரசு நன்கு தெரிந்து வைத்திருந்தபோதும்கூட, அச்சிறுவர்களை விடுவிக்க எதுவிதமான முயற்சிகளையும் அது எடுத்திருக்கவில்லை. 2006 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 28 ஆம் நாள் மனிதவுரிமைக் கண்காணிப்பகம் கருணா குழுவினரின் சிறுவர்கள் கடத்தல்கள் தொடர்பான தனது விரிவான அறிக்கையினை வெளியிட்டிருந்தது. அதன்படி, "எமது சாட்சியங்களின் ஊடாக கருணா குழுவின் கடத்தல்களில் இலங்கை ராணுவமும் ஈடுபட்டுவருகிறதென்பதை நாம் முழுமையாக நம்புகிறோம்" என்று சாரப்பட கூறியிருந்தது. இதற்குப் பதிலளித்த அரச பேச்சாளர் கெகெலிய ரம்புக்வெல்ல, "இதனை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. கருணா குழுவுக்கும் எமக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி தொடர்பேதும் இருப்பதாக மனிதவுரிமைக் கண்காணிப்பகம் கூறினால், அதற்கான சாட்சியங்களை எம்மிடம் தரவேண்டும், பின்னர் அதுபற்றி நாம் பரிசீலிக்கலாம்" என்று விசமத்தனமாக கூறியிருந்தார்.
-
இலங்கையில் சிறுவர்கள் கடத்தப்பட்டுவருவது தொடர்பான ஐ நா வின் கண்டனம் 2006 கார்த்திகை மாதத்தில் யுத்தத்தால் பாதிக்கப்படும் சிறுவர்களின் நலன்களுக்கான ஐ நா வின் விசேட பிரதிநிதி அலன் ரொக் இக்கடத்தல்கள்பற்றி விசாரணைகளை மேற்கொள்ள இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். 2003 ஆம் ஆண்டு ஐ நா வுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையே செய்துகொள்ளப்பட்ட சிறுவர் நலன் தொடர்பான இணக்கப்பாடு குறித்து மீள் உறுதிப்படுத்துவதே அவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. யுனிசெப் அமைப்புடன் ஒத்துழைத்து வேலை செய்வதாக அரசும், புலிகளும் இணங்கியிருந்ததுடன் தமது படைகளில் இருக்கும் சிறுவர்களை நீக்கிவிடுவதாகவும் ஒத்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. தனது 10 நாள் விஜயத்தின் இறுதியில் நாட்டின் ஜனாதிபதி மகிந்தவைச் சந்தித்த அலன், ஒரு பத்திரிக்கையாளர் மாநாட்டில் தனது விசாரணைகள்பற்றித் தெரியப்படுத்துவதாகவும் கூறியிருந்தார். இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின்படி தமது படைகளிலிருந்து சிறுவர்களை நீக்குவதை புலிகள் முற்றாகக்ச் செய்யவில்லையென்று கடிந்துகொண்ட அலன், கருணா குழு தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்களைக் கடத்திச் செல்வதாகக் கடுமையாகச் சாடினார். தொடர்ந்துபேசிய அவர் 2006 இன் இறுதி 6 மாதங்களில் மட்டும் கருணா 135 சிறுவர்களைக் கடத்திச் சென்றிருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும், கடத்தல்கள் அதிகரித்துச் செல்வதாகவும் குற்றஞ்சாட்டினார். கருணாவின் சிறுவர் கடத்தல்களுக்குத் துணைபோவதாக அரச ராணுவத்தைச் சாடிய அலன் ரொக், கருணாவுக்கான பாதுகாப்பினையும், அவ்வப்போது கருணாவின் கடத்தல்களில் பங்களிப்பினையும் அரச ராணுவம் செய்துவருவதாக மேலும் கூறினார். அலன் ரொக் தலைமையிலான குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்திச் செல்லப்பட்ட பல சிறுவர்களின் பெற்றோருடன் உரையாடியிருந்தது. இக்கலந்துரையாடல்களிலிருந்து கருணா குழுவின் கடத்தல்களில் அரச ராணுவம் பெருமளவு பங்களிப்பினை வழங்கியிருந்ததாக அலன் ரொக் கூறுகிறார். அரச ராணுவத்தின் படைப்பிரிவுகள் கருணா குழுவினருடன் கடத்தல்களில் நேரடியாகவே பங்குகொண்டிருந்ததை சாட்சிகள் வாயிலாக இக்குழு அறிந்துகொண்டது. பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அலன் ரொக், அரசும் கருணா குழுவும் யுனிசெப் அமைப்பின் ஆலோசனைப்படி சிறுவர்களை தமது படைகளிலிருந்து விடுவிப்பதை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறினார். அத்துடன் அரச ராணுவத்தினர் கருணா குழுவுக்காக சிறுவர்களைக் கடத்துவது தொடர்பான விசாரணைகளை உடனடியாகவே ஆரம்பிக்கப்போவதாக மகிந்த ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாக அலன் ரொக் கூறினார். அரச ராணுவத்தினர் கடத்தல்களில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்பட்டால் தாம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மகிந்த தன்னிடம் கூறினார் என்று அவர் மேலும் கூறினார்.