Jump to content

uthayakumar

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    593
  • Joined

  • Last visited

Everything posted by uthayakumar

  1. ஆளுக்கு ஒரு முகமூடிகள் நாளுக்கு ஒரு நாடகங்கள்-பா.உதயன் வெள்ளாடை வேட்டி கட்டி வேதங்கள் பல சொல்லி எல்லோர்க்கும் உதவுவதாய் எல்லாமே தெரிந்தவராய் நல்லாக நடிப்பாரடா சிலர் நல்ல பெயர் வேண்ட அலைவாரடா இவர்கள் பொல்லாத மனிதரடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா நட்பு என்றும் உறவு என்றும் நல்ல பல கதைகள் பேசி கோவில் என்றும் பள்ளி என்றும் கொக்கரித்து திரிவாரடா பின்பு கட்டியதை உடைப்பாரட கண்டபடி கதைப்பாரடா கன வித்தைகளும் செய்வாரடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா ஒற்றுமையை தொலைத்து விட்டு ஆளுக்கு ஆள் கல் எறிந்து பகைப்பாரடா கள்ளம் பல செய்வாரடா கண்ணை மூடிப் பால் குடிக்கும் கள்ளப் பூனை போல் தானடா பின்பு வல்லவர் தான் என்பாரடா வெறும் வாய்ப் புளுகில் வல்லோரடா பேருக்கும் புகளுக்குமாய் பொய்யான கதை பேசி பெரும் தத்துவங்கள் சொல்வாரடா தம்மை தாமே புகழ்வாரடா தம் உயரம் தெரியாரடா தங்கள் பிழை அறியாரடா தாங்கள் மாற நினைக்காரடா மனிதா புரிஞ்சுக்கடா ஞானம் கொண்ட புத்தனைப்போல் தாமும் என்று நினைப்பாரடா தேடல் ஒன்றும் தெரியாரடா வெறும் வெற்றுப் பேச்சில் விண்ணரடா நல்ல மனம் இல்லாமல் நாளும் பொழுதும் தொழுதாலும் என்ன தான் கடவுள் செய்வார் கள்ள மனம் கொண்டோரை பொய்யான முகங்களுடன் மெய்யான மனிதர் போலே பேருக்கும் புகளுக்குமாய் அங்கீகாரம் தேடி அலைந்தே அதற்காய் தன்னைத் தானே விற்பாரடா அந்த கபடம் கொண்ட கள்ள நரி போல் தானடா பாசம் கொண்ட மனிதரைப் போல் பொய் வேஷம் கொண்டு பொய்க்கால் குதிரை கட்டி ஆளுக்கொரு கதை பேசும் நாளுக்கொரு முகமூடிகள் அவர்கள் நாளுக்கொரு நாடகங்கள் புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா. பா.உதயன்✍️
  2. நுணாவிலான் பெருமாள் உங்கள் கருத்துக்கு நண்றிகள் 🌺
  3. ஆட்டம் காண்கிறதா ஐக்கிய இராச்சியம்-பா.உதயன் அனைத்து உலகுக்கும் அரசியல் படிப்பித்தவையாம் அந்தப் பெரிய பிரித்தானியாவாம் அண்மைக் காலமாய் ஆடிப்போய் கிடக்கினமாம் அடிக்கடி தலைவர்கள் மாறியும் போகினம் சங்கீத கதிரை போல் எப்போதும் சுத்துகினம் பகிடி அரசியலோ என்று பார்க்கிறவ கேட்கினம் பவுண்டின் பெறுமதி குறைந்திப்போ போச்சுதாம் பணவீக்கம் எல்லாம் கூடிப் போச்சுதாம் கோணிப்பை நிறைய பணத்தை கொடுத்து பாலும் பாணும் வேண்டத்தான் காணுமாம் இனி வரும் காலம் பிரச்சனை தானம் எப்படி சனங்கள் சமாளிக்கப் போகினம் உலகம் எல்லாம் உன்னிப்பாய் பார்க்கினம் என்னப்பா இனி நடக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிந்தது கொஞ்சம் பிரச்சினை என்றும் கதைக்கினம் இப்போ என்னமோ ஏதோ இருந்து தான் பார்ப்போம் போரும் ஒரு பக்கம் பொல்லாத உலகமாய் போச்சுதிப்போவெல்லாம். பா.உதயன் ✍️
  4. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் 🌺
  5. உலகம் ஏன் இவ்வளவு பிளவு பட்டிருக்கிறது-பா .உதயன் ஐ நாவும் அனைத்து சமாதான இயக்கமும் இரண்டாம் உலகப் போருக்கு பின் இனி வேண்டாம் யுத்தம் உலகில் என்று தானே ஆரம்பித்தார்கள். அதன் பின் எத்தனை யுத்தம் உலகில் நடந்தன, நடக்கின்றன, எத்தனை மனிதர் இது வரை இறந்தனர், எத்தனை குழந்தைகள் வாழ்வை இழந்தனர், எத்தனை தேசங்கள் அழிக்கப்பட்டன. எத்தனை ஆக்கிரமிப்பு யுத்தங்கழும் எல்லை தாண்டிய பயங்கரவாதங்களும் உலகில் நடந்தன. இன்று ருசியாவுக்கும் உக்கிரேனுக்கும் இடையிலான யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இராஜதந்திர ரீதியாக இதை தீர்க்க முடியாமல் அவர் அவர் பூகோள அரசியல் நலன் சார்ந்து பெரும் ஆயத மோதலாக வெடித்துள்ளது. இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு பின் ஐரோப்பாவுக்கு பெரும் சவால் மிக்கதாகவும் அவர்கள் பொருளாதாராத்தையே அசைக்க கூடியதோர் யுத்தமாக மாறி இருக்கிறது. ரோமானிய பேரரசின் தத்துஞானி சீசரோ(Cicero) கூறியதுபோல் யுத்த காலங்களில் சட்டமும் ஒழுங்கும் அமைதியாகவே இருந்து விடுகின்றன. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின் இன்று ஐரோப்பா பெரும் யுத்தம் ஒன்றை எதிர் நோக்கியுள்ளது. இன்று நாம் புதிய ஒரு பனிப் போரையும் அரசியல் பொருளாதார சித்தாந்த ரீதியாகவும் அத்தோடு ஏழை பணக்கார நாடுகளாகவும் முகாம்களாக பிரிக்கப்பட்ட உலகையும் இன்னும் ஒரு புதிய உலக ஒழுங்கை நோக்கி உலகம் பயணிப்பதையும் பார்க்கிறோம். Harvard University அரசியல் பேராசிரியர் Joseph nye என்ற சர்வதேச அரசியல் ஆய்வாளர் சொல்லுவது போல் உலகம் இன்று பல முகாம்களாக பிரிக்கப்பட்டு ஆயத அதிகார அரசியல் பொருளாதாரப் போட்டியாக மாறி இருக்கின்றது. இந்தப் போட்டி நிலைமையும் யுத்த நிலைமையையும் தணிக்க வேண்டுமானால் கடினமான ஒரு பாதையை (Hard power) தெரியாமல் ஒரு மென் வலு சக்தி (Soft power) ஊடக உலக மோதல்களை தணிக்க முடியும் என தான் எழுதிய (Soft power) என்னும் நூலில் விபரமாக முன் வைக்கிறார். ஏழை நாடுகளின் குழந்தைகள் இறந்தால் எவரும் கேட்பதற்கு இல்லை ஆனால் அதிகாரமும் பணமும் உள்ள நாடுகளின் குழந்தைகள் இறந்தால் அனைவரும் கேட்கிறார்கள். யுத்தற்திற்காகவும் ஆயுதம் செய்வதும் விற்பதுமாகவும் எத்தனை கோடி கோடியாக பணத்தை செலவு செய்கிறார்கள்.ஆனால் இன்று உலகில் எத்தனை வறிய நாடுகள் இருக்கின்றன. எத்தனை குழந்தைகள் இன்று உலகில் உணவு இல்லாமலும் ஒரு வேளை உணவு கிடைக்காமலும் இறந்து போகிறார்கள். எல்லோருக்கும் எல்லாமே சமத்துவமாய் கிடைப்பதில்லை இன்னும் ஆயுதம் செய்வதும் விற்பதுமாக அதிகார வர்க்கத்தின் நலனோடு உருளுதே உலகம். ஐ நா வாக இருந்தால் என்ன ஆயிரம் சமாதானம் பேசும் ஸ்தாபனங்களாக இருந்தால் என்ன எல்லாமே அதிகாரமுள்ள பணபலமும் ஆயுத பலமும் கொண்ட நாடுகளில் நிகழ்ச்சி நிரலிலேயே செயல்படுகின்றன. புவிசார் அரசியல் என்பது இன்று பெரும் போட்டி அரசியல் களமாக மாறியுள்ளது. உலகப் பொருளாதாரமும் கூட இன்று ஓர் சவால் மிகுந்ததாகவே காணப்படுகிறது. பெரும் தனி நலன் சார்ந்து அரசியல் பொருளாதர ரீதியாக உலகம் பல முகாம்களாக பிரிக்கப் பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி எண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்டிருக்கிறார்கள். யுத்தற்திற்காக பெரும் கோடி பணத்தை செலவு செய்கிறார்கள் இதனால் பொருளாதார ரீதியாக பணவீக்கம் கூடி உலக மக்கள் பெரும் பொருளாதார சுமையை சுமக்கிறார்கள். ஏழை நாடுகள் மேலும் வறுமைக்கோட்டுக்குள் கீழ் தள்ளப்பட்டுள்ளன. பல கோடி ஏழை மக்கள் இன்று ஒரு வேளை உணவுக்கே திண்றாடும் நிலை தோன்றியுள்ளது. கொரோனா வருகைக்கு பின் ஏற்பட்ட உலகப் பொருளாதார சரிவின் பின் இன்றும் நிலைமை மேலும் சிக்கல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிகார நலனும் அரசியல் பொருளாதார சுயநலனும் ஆயுத விற்பனையும் தொடரும் வரையில் உலக அமைதி என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகிவிட்டது. ஐ நா கூட அவர்களின் கைப் பொம்மை ஆகிவிட்டது. எல்லாமே சும்மா பேச்சுக்கு தான் மனித உரிமையும் ஜனநாயகமும் என்றாகிப் போய் விட்டது. எங்குதான் இருக்கிறது அறமும் தர்மமும். சரித்திரங்களில் இருந்து மனிதர் பாடத்தை கற்க வேண்டும் இரண்டாம் உலகப் போரில் இருந்து பாடத்தை அனுபவத்தை உலகம் இன்னும் படிக்கவில்லையானால் இன்னும் இருண்ட யுகமாகவே உலகம் இருக்கும். உலக சமாதானம் என்பது வெறும் பேச்சாகத் தான் இருக்க முடியுமே தவிர இது சாத்தியமா என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. யுத்தத்தை ஆரம்பிப்பதும் கடினம் இதை முடிவுக்கு கொண்டு வருவதும் கடினம். In times of war, the law falls silent” -Cicero பா .உதயன் ✍️
  6. ஐ நா மனித உரிமை சபையும் ஈழத் தமிழர்களும்-பா.உதயன் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் அலுவலக அறிக்கையை சமர்ப்பித்த மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இலங்கையின் நிலைமை பலவீனமாக இருப்பதாகவும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கூறினார். அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் அரச அடக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டு வரும் அதே வேளை தமிழர் பிரதேசங்களில் இராணுவமயமாக்கல் அதே போல் காணாமல் ஆக்கபட்டோருக்கான எந்த நீதியையும் வழங்கவில்லை என தொடர்ந்தும் பயங்கரவாத சட்டத்தின் மூலம் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் இம் முறை அரசியல் குற்றச்சாட்டு மட்டும் இன்றி இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கான காரணத்தையும் சுட்டிக் காட்டியது. இன்னும் பல குற்றச்சாடுக்களை மனித உரிமை சபையால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. சட்டத்தின் ஆட்சி, பாகுபாடு காட்டாமை மற்றும் மனித உரிமைக்கான மரியாதை (rule of law, non-discrimination and respect for human rights) என்னும் முக்கியமான விடியங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஆனால் தமிழ் மக்களின் இனப் படுகொலை சார்பாக எந்தக் கருத்தும் இந்த அறிக்கையில் சொல்லப்படவில்லை. எது எப்படி இருப்பினும் எல்லா நாடுகளுமே தம் சுய நலன்( Self-interest ) சார்ந்தே காய்களை நகர்த்துவார்கள். தொடர்ந்தும் ஐ நா அறிக்கை விடுவதும் தீர்மானக்களை வருடா வருடம் நிறைவேற்றியதாகவே இருக்கின்றது. எந்த வித பயனும் எட்டியதாக தெரியாவில்லை. இந்த தீர்மானங்களை நிறைவேற்றிய நாடுகளே மீண்டும் இலங்கையுடன் சில ஒப்பந்தங்களுக்கு போகின்றன இது இவர்களது இரட்டை நிலைப்பாடை( double standard morality) பிரதிபலிக்கின்றன. பல ஐரோப்பியா நாடுகள் இலங்கையின் மனித உரிமை மீறலை கண்டித்ததோடு மற்றும் நல்லிணக்கம் (Promoting Reconciliation and Accountability ) பொறுப்பு கூறல் நடை முறை படுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தின. மனித உரிமை ஜனநாயகம் மதிப்பளிக்கப் பட்டு இலங்கையில் ஒரு மாற்றம் வேண்டி மனித உரிமை அமைப்பு வேண்டி நின்றது. இந்தியா வழமை போலவே 13 க்கு தூசு தட்டி மீண்டும் கொண்டு வந்து அதை முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டியது. அருகில் இலங்கை பிரதிநிதிகள் இருந்து மெல்லமாக தமக்குள் பேசிக்கொண்டன அது இந்தியாவின் வழமையான ஒரு பாடல் என்று. என்னவாக இருந்தாலும் இந்தியாவின் சில அழுத்தங்கள் தமிழ் மக்களின் இன்றைய நிலையில் முக்கியமானதென கருத இடமுண்டு. எது எப்படியோ இம் முறை மனித உரிமைப் பேரவை சற்று இறுக்கமான அறிக்கையை சமர்ப்பித்தது. இது எவ்வளவு தூரம் எதிர் காலத்தில் நன்மை அளிக்கும் அல்லது நடைமுறைப் படுத்தப்படும் என்பது கேள்விக் குறியே. கடந்த பல ஆண்டுகளாக ஐ நா மனித உரிமைப் பேரவையால் கொண்டு வரப்பட்ட தீர்மானக்கள் யாவும் இலங்கை அரசால் கிடப்பில் போடப் பட்டு எந்த வித காத்திரமான நடைமுறைப்படுதலோ அன்றி எந்த நீதியும் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை. இது இவ்வாறு இருக்க இலங்கையின் சார்பில் பேசிய இலங்கை வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கையின் இறைமையை (Sovereignty ) மனித உரிமை அமைப்பு மீறுவதாக கூறி இலங்கை இதை நிராகரிப்பதாக கூறினார். எந்த முஸ்லீம் மக்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்படுகிறார்களோ அந்த இனத்தில் இருந்து வந்த முஸ்லீம் சமூகத்தை சேர்த்த இலங்கை வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி அவர்கள் தம் இனத்துக்கு ஏற்படும் துன்பத்தை இல்லை என்று மறைப்பதும் பொய் கூறுவதும் இலங்கையில் வாழும் சிறு பான்மை சமூகத்து செய்யும் பெரும் மன்னிக்க முடியாத துரோகமாகும். காலம் காலமாக இலங்கை அரசு மிகவும் தந்திரமாக காய்களை நகர்த்தி சிறு பான்மை தேசிய இனங்களுக்கிடையே சிலருக்கு மிக முக்கிய பதவிகளை வழங்கி அவர்களைக் கொண்டே பெரும் பொய்களைக் கூற வைத்து இந்த தேசிய இனங்களின் போராட்டத்தை அடக்கும் சதி அன்றும் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. பதவிக்காகாவும் பணத்துக்ககாக்கவும் தம் சொந்த இனத்துக்கு தொடர்ந்து செய்யும் துரோகிகள் தமிழ் பேசும் சமுதாயத்தில் பலர் இருப்பது பெரும் அவலம். சொந்த இனத்தை விற்கும் ஓர் பாதகச் செயல். தம் அடிப்படை உரிமையையும் விடுதலையையும் வேண்டி நிற்கும் மக்கள் அனைவரும் இதை வன்மையாக கண்டிக்க வேண்டும். ”பாதகம் செய்வோரை கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா- மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!” பா-உதயன் ✍️
  7. நல்ல கருதிட்ட அனைவருக்கும் நன்றிகள்!🌺
  8. மனம் ஒரு குரங்கு-பா.உதயன் அன்பும் அழுக்கும் ஆசையும் பாசமும் கோபமும் கொண்ட என் மனக்குரங்கு ஏன் தான் எதுகும் புரியவில்லை எப்பவும் பாய மறுப்பதில்லை மனதுக்குள் கிடக்கும் பாம்பைக் கூட குரங்குக்கு கொல்லத் தெரியவில்லை எத்தனை அழுக்குகள் மனசுக்குள் கிடக்குது குரங்குக்கு இது ஒன்றும் புரியவில்லை சும்மாய் இரு என்று குரங்கை சொன்னால் சும்மாய் இருக்கவும் முடியவில்லை எப்பவும் கத்துது எதிலும் பாயுது அமைதியாய் இருக்க அதுக்கு ஏது பழக்கம் தன்ன அறியாமல் எல்லாம் அறிந்தவன் தான் என்றே துள்ளுது குரங்கு தனக்கே எல்லாம் தெரிந்தது போல் தாவுது குரங்கு எப்பவுமே இன்னும் ஓர் குரங்கு போல் தன்னை நினைக்குது இருப்பதைக் கொண்டு வாழவும் தெரியாமல் அந்தக் குரங்கைப்போல் வாழவும் பார்க்குது ஆடம்பரமாக சீவிக்க எண்ணுது பித்தனைப் போல் சில காலம் பிடிவாதமாய் சில காலம் பாசமாய் பல காலம் கோபமாய் சில காலம் எத்தனை மாயம் எத்தனை வேடங்கள் குரங்கின் நாடகம் எவ்வளவு உயரம் தான் என்று எப்பவும் குரங்குக்கு தெரிவதில்லை இருப்பது எல்லாம் நிரந்தரம் இல்லை இன்னும் குரங்குக்கு விளங்கவில்லை எத்தனை குரங்குகள் எத்தனை அழுக்கு எதுகும் குரங்குக்கு புரிவதில்லை ஆறடி மண்ணே இறுதியில் தஞ்சம் அதைப் பற்றிக் குரங்குக்கு தெளிவு இல்லை . பா.உதயன் ✍️
  9. விரைவில் நலம் பெறுங்கள் அக்கா எல்லாமே கடந்து போகும் 🙏
  10. புலம்பெயர் தமிழர்களும் இலங்கை அரசின் தந்திரம்-பா .உதயன் பல ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை முதலில் விடாமல் தொலைந்து போன தமிழ் மக்களுக்காய் இன்று வரை ஒரு நீதியை வழங்காமல் வட கிழக்கில் ஆக்கிரமித்து இருக்கும் இராணுவ முகாம்களை அகற்றாமல் தமிழர் அரசியல் தீர்வுக்கான எந்த வித கரிசனையும் இல்லாமல் புலம் பெயர் சில அமைப்புகளையும் சில தனி நபர்களையும் பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறதாம் இலங்கை அரசு. தடையை நீக்குவதும் பின் தடையை போடுவதுமாக தங்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்துவதுமாக ஓர் இனவாத போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. இந்த இனவாத சிந்தனைப் போக்கினால் தான் இலங்கை இன்று இவ்வளவு ஓர் அவல நிலைக்கு தள்ளப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. இனி எப்போ தடையைப் போடும் இருந்து பார்போம். பேசுவதும் எழுதுவதும் பின் கிழித்து எறிந்து ஏமாற்றுவதுமாக இதுவரை காலமும் செய்யும் அரசியல் தீர்வு போலவே இலங்கையின் அரசியல் எப்பொழுதுமே கோமாளித்தனமானதும் சந்தர்ப்பத்தனமாதும் மட்டும் அல்ல அது ஒரு ஏமாற்றுத்தனமானதும் கூட எம்மில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில். தமிழர்களுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை இலங்கை அரசு முன் வைக்காமல் புலம் பெயர் சமூகத்தை அணுகுவதென்னபது நடைமுறை சாத்தியமற்றது என்பதை இரு பகுதியினரும் உணர வேண்டும். ஆகவே சரியான நீதியான நிரந்தரமான தமிழர்கள் கௌரமமாக வாழக்கூடிய ஒரு அரசியல் தீர்வை முதலில் வழங்கும்படி புலம் பெயர் தமிழர் அமைப்புகள் மற்றும் ஈழத் தமிழர்களை பிரதிநிதித்துவம் படுத்தும் அரசியல் கட்சிகள் அரசை வற்புறுத்த வேண்டும். இதன் பின் இலங்கையில் முதலீடு செய்ய நாம் தயார் என்று முன் வைக்க வெண்டும். இலங்கையை ஆளும் தலைவர்களின் சதி வலையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். (Don’t fall in the trap. Just Promises and false agreements are not solutions. Reconciliation and Implementations are the needed). நல்லிணக்கமும் அதை நடைமுறைப்படுத்துதலும் முதலில் முக்கிய தேவை. அவசரகால சட்டம் பயங்கர வாத சட்டம் இவற்றை நீக்கி மக்களின் பேச்சு எழுத்துச் சுதந்திரதுக்கு வழி சமைத்து சட்டத்தையும் ஒழுங்கையும் இலங்கை நிலை நிறுத்தாத வரை புலம் பெயர் தமிழர் மட்டும் இன்றி எவராலும் இலங்கையை ஓர் அமைதியும் சுவீட்சமும் கொண்ட தேசமாக்க முடியாது. இலங்கை ஒரு போலித்தனமான அரசியல் மேடை இங்கு நடிப்பவர்களுக்கு எல்லாம் நீதி நேர்மை அர்ப்பணிப்பு கிடையாது. வெறும் தந்திரமும் சூழ்ச்சியும் பொய்மையும் கொண்டவர்கள். புத்த பகவானின் எந்த வித தத்துவத்தையும் பின் பற்றாதவர்கள். அவசரகாலச் சட்டம் இது தமிழனுக்காய் கொண்டு வந்த அரச பயங்கவாத சட்டம் ஆயிரம் ஆயிரம் அப்பாவி தமிழ் இளையர் இந்த அடக்கு முறையால் பலியாகிப் போனார் அடிப்படை உரிமைக்காய் அடக்கு முறைக்கு எதிராய் போராடிய மக்களை பயங்கர வாதம் என்று சொல்லி முப்பது ஆண்டுகளுக்கு மோல் இரும்புக் கரம் கொண்டு அடக்கப் பட்ட வரலாறு தொடர்ந்து இன்று அதே பயங்கர வாதம் அதன் சொந்த மக்கள் மேல் பாய்ந்துள்ளது. எந்த நச்சு விதையை விதைத்தீர்களோ அந்த நச்சு விதையை இன்று சிங்கள மக்கள் அனுபவித்தக் கொண்டிருக்கின்றார்கள். மாற்றம் வேண்டி போராடிய மக்கள் மேல் பயங்கர வாத சட்டம் பாய்ந்த போது தான் இன்று சிங்கள மக்கள் ஓரளவுக்கு என்றேனும் தமிழர்களின் வலியை உணர்ந்து இருப்பது போல் தெரிகிறது. இனவாதம் கடந்து அடிப்படையில் மாற்றமும் தொலை நோக்கு பார்வையும் உண்மையும் நேர்மையும் அறமும் இல்லாமல் எந்த மாற்றமும் இலங்கையில் சாத்தியம் இல்லை. இன ரீதியான ஐக்கியமும் ஏற்பட வழியும் இல்லை. இதை புரியக்கூடிய அரசியல் தலைவர்களும் இலங்கையில் சுதந்திரத்துக்கு பின் எவரும் இல்லை. இளைய சமுதாயம் மாற்றத்தின் வழிகளோடு புதிய பாதை நோக்கி பயணிக்குமா சிந்திப்பார்களா எதிர் காலம் பற்றி. பா .உதயன் ✍️ 

  11. இந்தியாவையும் சீனாவையும் இழுத்து வந்து போட்டீர்-பா .உதயன் இந்து சமுத்திரத்தில் வந்ததொரு சீனக் கப்பல் இலங்கைக்கு வந்திருக்காம் சிக்கல் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இதனால விக்கல் அண்ணன் அமெரிக்காவும் அதனால முறுகல் பூகோள அரசியலில் இங்கே புதிதாய் கயிறிளுத்தல் போட்டி இனி என்ன நடக்கும் இந்து சமுத்திரத்தில் இந்த சிறிய தீவில் புகுந்து இருந்ததெல்லாம் அறுத்துக் கொட்டிப் போட்டு எல்லாப் பெருச்சாளிகளும் இப்போ இந்து சமுத்திரத்தில் கண்ணாம் தங்கள் பாதுகாப்பு என்று சொந்த நலன் போட்டி பட்டுப் பாதை திட்டம் என்று பாதி உலகை சுறுட்டிய சீனா இலங்கைக்கும் வந்து இருந்ததையும் சுருட்டிப் போட்டான் இது சீனாவின் இன்னும் ஓர் ஆசியக் கனவு கடன் கடனாக கொடுத்து வட்டிக்கு மேல வட்டியை போட்டு ஏழை நாடாக்கிப் போட்டாங்கள் எல்லோரும் சேர்ந்து இலங்கையை பங்கு போட்டு வித்த இனவாதிகளால இப்போ இலங்கை கிடக்கும் பாடு எல்லோருக்கும் தெரியும் ஆப்பிழுத்த குரங்காய் மாட்டிப்போட்டு இருக்கு வித்துப் போட்டான்கள் இலங்கையை விண்ணமார் எல்லாம் விலை பேசி என்ன இராஜதந்திரமாம் இவர்களுக்கு எல்லாம் சொல்லும் கண்டபடி எல்லாம் கனகத் தான் புளுகிறியள் இலங்கையை ஆண்ட தலைவர்களிடம் இருந்திருந்தால் இராஜதந்திரம் சிங்கப்பூர் மாதிரி எல்லா சிறி லங்கா இருந்திருக்கும் இருந்ததெல்லாம் நரி தந்திர நாடகங்கள் இலங்கையின் சுதந்திரதிற்கு பின் இத்தனை ஆண்டுகள் போயும் இலங்கையில் என்ன மாற்றத்தைக் கண்டீர் இந்தியாவை பகைத்து இனி என்ன செய்யப் போறீர் தந்த கடனையும் கேட்டா இனி தலை மன்னாரையா கொடுப்பீர் சீனாவையும் பகைத்தால் அவன் வட்டியோட சேர்த்தே இனி எங்கள் வட கிழக்கை கேட்பானே சொந்தக் காலில் நிற்கத் தெரியாமல் இனி என்ன செய்யப் போறீர் இந்தியாவையும் சீனாவையும் இழுத்து வந்து போட்டீர் இடியப்ப சிக்கல் போல இந்து சமுத்திரம் கண்டீர் இனி என்ன செய்யப் போகினம் இலங்கை இனவாத கிழடுகள் இளையதலை முறைக்கு இனி வழி விட்டுப் போவாரா. பா .உதயன் ✍️
  12. நுணாவிலான்,தமிழ் சிறி உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் !
  13. அழகான அதிபர் உரை-பா .உதயன் அழகான அதிபர் உரை என்றாராம் அனைவரும் வாழ்த்து சொன்னாராம் நேற்று வரை தூற்றி நின்றவரும் அழகப்பெருமாளை ஆள வைக்க நினைத்தவரும் இன்று அவர் காலடியில் விழுந்தாராம் இதுவெல்லோ நாட்டுக்கு தேவையென்றாராம் சும்மாவா ரணில் என்றால் நரி என்றும் சிலர் சொன்னாராம் அனைவருமே இன் நாட்டு மக்கள் என்றாராம் இருள் கடந்து வெளிச்சம் வரும் என்றாராம் அது தனக்கு தெரிகிறது என்றாராம் அனைவருக்கும் வெளிச்சம் வர செய்வாராம் முன்பு ஆறு தடவை பிரதமராய் இருந்தாராம் அப்பவெல்லாம் ஏன் இவற்றை செய்ய மறந்தாராம் ஆட்டத்திலே இழந்தாலும் அசையாராம் எந்தப் பதவியையும் எப்போதும் விட்டு இவர் விலகாராம் அந்த நரி போல தந்திரங்கள் செய்வாராம் தேர்தல் ஒன்றும் வைக்காமல் தெரிவானாராம் தனியத் தான் வந்தாராம் இப்போ பதவிக்காக பலரும் இப்போ இவர் பின்னாலாம் இன்னும் இரண்டு வருடம் இலங்கையை இவர் ஆளப்போறாராம் இருந்து பார்ப்போம் என்ன செய்யப்போறாராம் எல்லோருக்கும் வெளிச்சம் தெரிய வைப்பாரா இல்லை இவரும் வீட்ட போவாரா. பா .உதயன் ✍️
  14. ஆண்டவன் எந்த மதம்-பா.உதயன் ஆண்டவன் எந்த மதம் அறிந்தவர் சொல்லுங்கள் ஆளுக்கு ஒரு மதமாய் ஆண்டவன் படைத்தானா ஆளுக்கு ஒரு சாதி அந்த ஆண்டவன் படைத்தானா அவன் பெரிது இவன் சிறிது அட ஆண்டவன் சொன்னானா உன் மதமா என் மதமா பெரியதடா உலகில் மனிதன் சண்டையடா அட மனிதனின் மனங்கள் மாறல்லையே மனிதம் இங்கு வாழல்லையே நிறங்களில் பெயரில் நிறவாதம் இனங்களின் பெயரில் இனவாதம் மனிதனை மனிதன் கொலை நாளும் அட ஆண்டவன் எந்த நிறம் அறிந்தவர் கண்டவர் சொல்லுங்கள் வெய்யிலும் மழையும் இங்கே வேற்றுமை பார்ப்பதில்லை பெய்யெனப் பெய்யும் மழை நல்லார் உலகிருந்தால் எத்தனை மதங்கள் இருந்தாலும் அவை எழுதிய தத்துவம் ஒன்றெல்லோ எத்தனை கடவுள்கள் இருந்தாலும் இது சொல்லும் மொழி அன்பென்லோ இறுதியில் மனிதன் சேருமிடம் இங்கே மதங்களும் மனிதரும் ஒன்றெல்லோ இதுவே நிரந்தரம் என்று இங்கு நீயும் நானும் சமம் அங்கே. பா.உதயன் ✍️
  15. அதிகாரத் திமிர் ஒன்று அடங்கிப்போனதின்று-பா.உதயன் அதிகாரத் திமிர் ஒன்று இடிந்து விழுந்தது இலங்கைத் தீவில் இன்று இனவாதத்தின் இன்னும் ஒரு முகம் எரிந்து வீழ்ந்தது வீரம் பேசிய கோத்தா வீட்டுக்கு போய் விட்டார் தோல்வியை சுமந்தபடி பேரினவாதத்தின் போர் முகம் ஒன்று போன இடம் தெரியவில்லை சர்வாதிகார ஆட்சி ஒன்று சரிந்து விழுந்திருக்கிறது பசியோடு கிடந்தவனுக்கும் உரிமைக்காய் போராடியவனுக்கும் தொலைந்து போன மக்களுக்கும் நீதி கிடைத்தது போல் இருந்தது இன்றைய நாள் கூட நின்றவனுக்கும் கூடிக் குடிச்சவனுக்கும் முண்டு கொடுத்தவனுக்கும் போலிச் சோஷலிசக்காரனுக்கும் அபிவிருத்தி என்று அந்த மக்களை ஏமாத்தியவனுக்கும் திருடர்களுக்கு துரோகிகளுக்கு ராஜபக்சே இராச்சியத்தை இனி அசைக்க முடியாதென்றவனுக்கும் அடி விழுந்திருக்கிறது அத்தனை பேர் தலையிலும் இன்று மாற்றம் ஒன்றே மாறாததென்பதை இன்று நிரூபித்திருக்கிறார்கள் இலங்கை மக்கள் இனி எல்லோரும் மாற வேண்டும் இருண்ட யுகம் கடந்து போகவேண்டும் இன மதம் கடந்து எல்லோருக்கும் நீதி வேண்டும் இருந்து பார்ப்போம் இது மாறுமா இல்லை இது தொடருமா இனியும் இந்த மக்கள் சிந்திப்பார்களா. பா.உதயன் ✍️
  16. உறவுகள் அனைவரினதும் கருத்துக்கு நன்றிகள் 🌺 உறவுகள் அனைவரினதும் கருத்துக்கு நன்றிகள் 🌺
  17. போகிறார் பொறிஸ் ஜோன்சன் 🇬🇧 பிழை செய்த பொறிசார் கதிரையை விட்டு போகிறார் ஏதோ சில ஜனநாயகம் இங்க இருக்கு ஆனால் இலங்கையில் அத்தனை சனமும் கத்தியும் என்ன கோத்தா கோ கோம் என்று சொல்லியும் என்ன இயமன் தான் வந்தாலும் இவர் போகாராம் இன்னும் இருக்கிறார் கோத்தா இலங்கையை தின்ற படி இறுக்கிக் கதிரையை பிடித்தபடி அங்க ஏது ஜனநாயகம். பா.உதயன் ✍️
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.