நான் காலம்பற நித்திரயால எழும்பி பிறகு யாழுக்கு வந்து எழுதப்பட்ட கருத்துக்களை வாசிச்சன். கிருபன் மேல எழுதி இருக்கிறதை பார்த்து சரியாய் சிரிக்கக்கூடியதாய் இருந்திச்சிது. குகதாசன் அண்ணைக்கு சிலது பகிடிகள் விடுறது பிடிக்காது எண்டு நினைச்சுப்போட்டு இதில ஒண்டும் எழுதவில்லை.
கிருபனிண்ட சிந்திக்கும் திறனை பாராட்டவேணும். என்னைமாதிரி நீங்களும் வீட்டில சிரசாசனம் செய்யுறனீங்களோ?
அது என்ன பின்னால ஒரு 26? வீட்டில இருவத்தாறு பேர் இருக்கிறீங்களோ? இல்லாட்டிக்கு அது உங்கட கைதி எண்ணோ? பிறந்ததிகதியோ? வயசோ? 707 மாதிரி இல்லாட்டிக்கு இரகசிய காவல்துறையோ?
கந்தப்பு என்ன கிண்டல் செய்யுறீங்களோ. எனக்கு கணக்கு பார்க்க தெரியாது எண்டுறமாதிரி இல்லோ இருக்கிது உங்கட பதில்.
சரி அப்பிடி எண்டால் இதுக்கும் பதில சொல்லுங்கோ..
1990ம் ஆண்டில் பிறந்தால் எத்தின வயசு?
1980ம் ஆண்டில் பிறந்தால் எத்தின வயசு?
1970ம் ஆண்டில் பிறந்தால் எத்தின வயசு?
1960ம் ஆண்டில் பிறந்தால் எத்தின வயசு?
சினேகிதி சித்திக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சகல சித்திகளும் பெற்று சினேகிதி சித்தி பல்லாண்டு காலம் வாழ எனது வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கின்றேன்.
கீழுள்ள வீணையை மீட்பவர்போல் சினேகிதி சித்தி தொடர்ந்து தமிழில் தத்தக்க பித்தக்க என யாழை மீட்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
யாழ் சமஸ்தானக் கவிஞர் பரணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
பிரசண்ணாவிற்கு (எலிபண்ட் பவ்) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
மே மாதத்தில நிறையப் பேருக்கு பிறந்தநாள் போல இருக்கிது. மேயில பிறந்த ஆட்கள்தான் யாழில கூட இருக்கிறீனமோ?