சுய விபரக்கோவையிலும், கருத்துக்களிற்கு அருகில் காண்பிக்கப்படும் தகவற்கோவையிலும் ஒருவரின் பால் Gender காண்பிக்கப்படுவது தேவையில்லாத விடயம் என நான் கருதுகின்றேன். முன்பு கருத்துக்களத்தில் இணைந்த திகதி காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறிது காலத்திற்கு முன் அது அகற்றப்பட்டது. இவ்வாறே பால் Gender ஐயும் சுயவிபரக்கோவை, மற்றும் தகவற்கோவையிலிருந்து அகற்றுவது பல அனுகூலங்களை கருத்துக்களத்திற்கு ஏற்படுத்தும் என்று நினைக்கின்றேன்.
பால் Gender இனம்காட்டப்படுவதாலும், தவறாக பயன்படுத்தப்படுவதாலும் ஏற்படும் பிரச்சனைகளை இதன் மூலம் தவிர்க்கக்கூடியதாக அமையும். கருத்துக்களத்தில் தனது கருத்துக்களை கூறுவதற்கு தனது பாலை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் கருத்தாளரிற்கு உள்ளதாக நான் நினைக்கவில்லை.
பால் Gender ஐ சுயவிபரக்கோவை, மற்றும் தகவற்கோவையிலிருந்து அகற்றுவதை பரிசீலியுங்கள்.
நன்றி!