யாழ் கருத்துக்களம் மாதிரி செய்கிறதில எனக்கு ஆர்வம் இல்லை, நேரமும் இல்லை. நான் யாழில எழுதிய பயனுள்ள பதிவுகளை நகல் எடுத்து வைக்கிறதுக்கு மட்டும்தான் கரும்பில கருத்துக்களம் ஒன்று ஆரம்பிச்சு உள்ளன். யாழ் இருக்கும் வரைக்கும் மற்றவர்களும் எழுதக்கூடியவாறாக கருத்துக்களம் ஒன்றை நான் செய்யப்போவது இல்லை குமாரசாமி அண்ணை.
நான் கரும்பு வலைத்தளம் என்று ஒன்று வச்சு இருக்கிறன். அது ஆகக்குறைஞ்சது 2019ம் ஆண்டுவரைக்கும் உயிரோட இருக்கும். யாழில தடங்கல் ஏதும் ஏற்பட்டால் எனது கருத்துக்களை பார்வையிட விரும்புகிறவர்கள், தொடர்பை பேண விரும்புகிறவர்கள் தொடர்ந்து எனது கருத்துக்களை கரும்பு தளத்தில பார்வையிடுகிறதுக்கு வசதியாக கரும்பு தளத்தை நினைவுபடுத்தக்கூடிய நோக்கில இந்த பெயர் மாற்றத்தை செய்ய விரும்புகிறன். நன்றி.