Everything posted by ராசவன்னியன்
-
சென்னை மெட்ரோ ரயில்...
கோயம்பேடு மத்திய காய்கறி சந்தை வழியாகத்தான் இந்த சென்னை மெட்ரோ ரயில் செல்கிறது.. வியாபாரிகளே எலுமிச்சை பழத்தை வைத்துக்கொடுத்துதான் இந்த ரயிலை வரவேற்றிருப்பார்கள்.. ஆனால் ஒவ்வொரு சில்லுக்கும் தேசிக்காய் வைத்தால், மெட்ரோ ரயில் வழுக்கி விழுந்துவிடாதா நந்தன் சார்?
-
சென்னை மெட்ரோ ரயில்...
- சென்னை மெட்ரோ ரயில்...
- சென்னை மெட்ரோ ரயில்...
- சென்னை மெட்ரோ ரயில்...
ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம்- சென்னை மெட்ரோ ரயில்...
ரயில் நிலையம் வடிவமைப்பைத் தவிர ( முக்கியமாக நிலைய மேற்கூரையின் வடிவமைப்பு அதரப்பழசு! a typical Indian goods shed style !!) சென்னை மெட்ரோ ரயில் நன்றாக இருக்கிறது..! மென்மேலும் வளரட்டும், வாழ்த்துக்கள்..! கூடிய விரைவில் இதில் முதல் பயணம் செய்ய எனக்கும் வாய்ப்பிருக்கிறது..- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கடந்த சில நாட்களாக களத்தின் உள்நுழையும் பொறிமுறை அமைப்பு மிக விநோதமாக சிலசமயம் வேலை செய்கிறது..! ஒருமுறை யாழ்களத்தில் பாவனை பெயரை தட்டச்சு செய்து உள்ளே நுழைந்தவுடன், களத்தின் முகப்பின் மேலேயிருக்கும் மெனுவில் "Forum" என்ற இடத்தில் கிளிக் செய்தால், களம் நம்மை "போய்யா வெண்ணை.. இங்கே திண்ணையே இல்லை, நீங்கள் வேறையா..?" என களத்தைவிட்டு 'லாக் அவுட்' செய்துவிடுகிறது.. என்ன மந்திரமோ..? இதென்ன கொடுமை சரவணா?- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சமீபத்தில் களத்தின் மாற்றத்திற்கேற்ப திருத்தியமைக்கப்பட்ட யூடுயூப் காணொளிகளைக் காணோம், சரிதான் மறுபடியும் திருத்தி இணைக்கலாமென்றால், எடிட்(Edit) பொத்தானை எந்த பழைய பதிவிலும் எங்கேயும் காணோம்.. காக்கா தூக்கிக்கொண்டு போட்டுதோ..? என்ன நடக்குது என்றே தெரியவில்லை!- சென்னை மெட்ரோ ரயில்...
கருத்திற்கு நன்றி ஈழநேசன். பெரும்பாலும் மெட்ரோ ரயில்களின் அடிப்படை தொழிற்நுட்ப கட்டமைப்பிற்கான வடிவமைப்பு அம்சங்கள் (Design Specifications) உலகளவில் பொதுவானவைதான்.. அப்படியிருந்தால்தான் இதற்கான உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் தொழிற்நுட்ப பொருட்களை ஒரே வடிவமைப்புக் கோட்டில் (Common Specification standard) தயாரிக்கவும், பின்னாளில் அவற்றை ஆராய்ச்சி மூலம் மேம்படுத்தவும் இயலும். துபை அரசாங்கத்திடம் பணம் அதிகம் கைவசம் உள்ளதால் அதன் மெட்ரோ ரயில்களின் வசதிகள் இன்னும் அதிக கவர்ச்சியானவை.. துபை மெட்ரோவில் ஓட்டுநர்கள் கிடையாது. மத்திய கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனைத்து ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையமும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஏழைக்கேற்ற எள்ளுருண்டை இந்த சென்னை மெட்ரோ ரயில்! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் தானே!! ஆகையால், சென்னை மெட்ரோவை பாராட்டி, வளர வாழ்த்துவோம். சரக்குகள் வைத்துக்கொள்ள வாசலின் அருகே இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.. ஆனால் இந்த மெட்ரோ ரயில்கள் கோயம்பேடு மத்திய மார்கட்டில் நின்று செல்வதால் அனைத்து வகை காய்கறி, பழ துர்நாற்றத்தை கூடிய விரைவில் சென்னைவாசிகள் இந்த மெட்ரோ ரயிலிலும் ஏற்றிவிடுவார்களென்பது திண்ணம். கருத்திற்கு நன்றி சுவி..! (சென்னை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பித்தால், ஜோடியாக அதில் பயணம் செய்யப்போவதாக சொன்ன ஞாபகம், நீங்கள் தயார்தானே? )- சென்னை மெட்ரோ ரயில்...
சென்னை மெட்ரோ இரயில் சேவை துவக்கவிழா அழைப்பிதழ்.. Source: Chennai Metro Rail FB- சென்னை மெட்ரோ ரயில்...
நாளை(29-06-2015) சென்னை மெட்ரோ இரயில் சேவை துவக்க விழா.. அது பற்றிய செய்தி முன்னோட்டம் தமிழ் இந்து தினசரியில் வெளிவந்த காணொளி..! சிங்காரச் சென்னைக்கு மற்றொரு மகுடம்..- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பதிவுகளை பல்வேறு எழுத்துருவில் சிறியதாக்கவும் பெரிதாக்கவும் இது வரை இருந்த பொத்தான்(Font Size) மாற்றப்பட்டு, ஆங்கில எழுத்துருவின் பெயர்கள் கொண்ட பொத்தான் உள்ளது..இதனால் என்ன பயன் ? இதனை மறுபடியும் பழைய நிலைக்கு(Font size) மாற்றினால் நன்று. ப்ரிவியூ(Preview) பொத்தானையும் மீளமைத்தால் நல்லது.- சென்னை மெட்ரோ ரயில்...
Update: சென்னையில் 29–ந்தேதி மெட்ரோ ரெயிலை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார் சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடங்களில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல்கட்டமாக, சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரைக்கான மெட்ரோ ரெயில் பாதை போட்டு முடிக்கப்பட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில் 7 ரெயில் நிலையங்கள் உள்ளன. உயர் அதிகாரிகள் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்து போக்குவரத்து தொடங்கலாம் என்று சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்து மெட்ரோ ரெயில்கள் அந்த பாதையில் இயக்கப்பட்டு ஒத்திகை பார்த்து முடிக்கப்பட்டுள்ளது. "கோயம்பேடு – ஆலந்தூர்" இடையிலான மெட்ரோ ரெயில் போக்குவரத்து வருகிற 29–ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடு மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். மாலை மலர்- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இந்த அங்கலாய்ப்பு ஏனம்மா..? நமக்கு விரும்பியவற்றை மட்டும் பார்க்கத்தானே இந்த மென்பொருள் வசதிகள்?- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஐயோ, மறுபடியும் அதே பூதம் வந்திட்டது... What a fantastic community software they developed..! We must appreciate that software development team and its QC ! ஏஞ்சாமி, இந்த இன்விஷன் பவர் சர்விஸஸ், ஐபிஎஸ் ( may be IPS ver 4.0 ?) புதிய பதிப்பை நிறுவியபின் எழும் பல்வேறு பிரச்சனைகளால், மென்பொருள் பிழைகளை(bugs) அந்நிறுவனம் களையும் வரை மறுபடியும் பழைய பதிப்பிற்கு திரும்பிச் செல்ல (Rollback) இயலாதா? .- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யப்பாடி, தகுந்த நடவடிக்கைக்கு மிக்க நன்றி!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Sorry, there is a problem Please wait 12 seconds before attempting another search Error code: 1C205/3 ஸ்..ஸப்பா...! இந்த புதுப்பூச்சாண்டியை புடிச்சு கட்டுங்கப்பா.. பிராணன் போகுது..!! Disgusting..!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கீழேயுள்ள இணையத்திலும் தமிழில் தட்டச்சு செய்து யாழில் ஒட்டலாம்! கட்டிப்பிடி.. ச்சீ... கண்டுபிடி!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒரு வழியாக தேடித்துழாவி, களத்தின் திரிகளை வடிகட்டி பார்க்கும் முறையை (Content Filters) கண்டுபிடித்து, விருப்பமான செட்டிங்கை தெரிவுசெய்து சேமித்தும் வைத்துவிட்டேன்.. நன்றி!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Sorry, there is a problem Please wait 11 seconds before attempting another search Error code: 1C205/3 ஒரு திரியை படித்துவிட்டு அடுத்த திரியை தேடினால் இப்படி செய்தி வருகிறது..இம்மாதிரி ஒவ்வொரு தேடலுக்கும் 13 sec, 9 sec, 1 sec என்ற பிழை செய்தி அடிக்கடி வருகிறது. இதனால் களத்தில் மேற்கொண்டு படிக்கும் உற்சாகம் குறைகிறது! முன்னிருந்த களத்தில் ஒவ்வொரு பகுதியையும் நமக்கு விரும்பியவாறு பார்வையிட, வடிகட்டும் முறை (Content Filters) இருந்தது. உதாரணமாக, நான் களத்தில் பார்வையிட வரும்பொழுது விளையாட்டு செய்திகள், சமையல் குறிப்புகள், கவிதைகள் இன்னும் சில விருப்பமற்ற பகுதிகளை பார்வையிலிருந்து தவிர்க்க, விரும்பியவற்றை தெரிவு செய்து வடிகட்டியை(Filters) நிரந்தரமாக வைத்திருந்தேன்.. தற்பொழுது அதே வசதியை எப்படி இப்புதிய மாற்றத்திற்கு பின் மீளமைப்பது என்று விளக்கினால் நன்று ! களத்தின் தலைப்புகளை முழுவதும் நீட்ட,குறைக்க + sign (தற்பொழுது வலதுபுறம் தெரியும் Topics Column பகுதியை முற்றாக நீக்க) வசதியிருந்தது.. அவற்றையும் மீளமைத்தால் நன்று. (அவ்வாறு வசதி ஏற்படுத்துவதன் மூலம் களத்தின் மொத்த பக்கத்தின் உயரம்(Forum page height) வெகுவாக குறைவதால் மிக விரைவாக சுட்டி மூலம் மேலும் கீழும் ஓட்டி பார்க்க இயலும்.) பல பக்கங்கள் கொண்ட திரியை திறக்கவிழைகையில், கடைசிப் பக்கத்திற்கு பதிலாக, அத்திரியின் முதல் பக்கத்திற்கே எம்மை கொண்டுசெல்கிறது.. மறைந்திருந்து பார்க்கும்(Anonymous log-in) உறுப்பினர்களின் பெயரை சிவப்பு கலரில் காண்பித்தால் நன்றாக இருக்குமே!முந்தைய களத்தில் அப்பெயருக்கு முன் ஒரு நட்சத்திரம்(*) இருக்கும். (தற்பொழுது மட்டுறுத்தினர்களின் பெயர் 'நீல வண்ணத்தில்' தெரிவது போல்) களத்தின் நண்பகள் வட்டம் (Friends List) என்ற வசதியைக் காணவில்லை. (குறிப்பிட்ட நண்பருக்கு தனிமடல் அனுப்ப அந்த லிஸ்டில் சுட்டி மூலம் தெரிவுசெய்து செய்தி அனுப்ப முந்தைய களத்தில் வசதியாக இருந்தது.) மொத்தத்தில் யாழ் வாசகர்களாகிய எங்களுக்கு, பழைய களத்தின் வசதிகள் அப்படியே இருக்கவேண்டும், அவற்றில் எதையும் இழக்காமல், இந்த மாற்றத்தால் மேலும் புதிய வசதிகள் இருந்தால் அனைவரும் மனமுவந்து வரவேற்போமென்பது திண்ணம்..! அதுவரை நிச்சயம் பொறுமையாக காத்திருக்கிறோம் ஐயா. தற்பொழுது பழைய அட்டவணை முறையில்(List View) யாழை மீண்டும் மாற்றியமைக்கு மிக்க நன்றி. களத்தை புதிய சவாலுக்கிடையே பொறுமை காத்து, திறம்பட நடத்துவது பெரிய விடயம்.. யாழும், அதன் நிர்வாகமும் இவ்விடயத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.. பொறுமையாக எங்கள் ஆதங்கத்தை கேட்டதற்கு மிக்க நன்றி!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
புதிய மாற்றத்தில் களத்தின் பல்வேறு பிரிவுகளை பெட்டி பெட்டியாக(Box view) காண்பிப்பதால் திரிகளை மேலோட்டமாக பார்க்க அதிக சிரமம் உள்ளது.. பழைய களத்தில் இருந்தமாதிரி அட்டவணை முறையில்(Tabular view) தெரியுமாறு மாற்றி அமைத்தால் சிறப்பாக இருக்குமே! கண்ணிற்கு தேடும் நோவும் குறையும்.. திண்ணையில் பழைய உரையாடல்களை பார்க்கும் ஆர்கைவ்(Archive) முறையையும் மீளமைத்தால் நன்று.. களத்திலும், திண்ணையிலும் பிரைவசி முறை (Anonymous log-in) இருக்கிறதா என்பதையும் அறியத் தந்தால் நன்று. முந்தைய பதிவுகளின் யுடுயூப் மற்றும் சவுண்ட் கிளவுட்கோப்புகளின் இணைப்பை மறுசீர்மைப்பு செய்தால்தான் புதிய களத்தில் தெரிகிறது.. இதன் மூலம் முந்தைய அனைத்து யுடுயூப் பதிவுகளையும் சீரமைக்க இயலாதல்லவா? நன்றி!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எங்கே, எதை, எப்படி பார்ப்பது என்று ஒரே குழப்பமாக உள்ளது..! விண்டோஸ் எக்ஸ்பி-யிலிருந்து அறியாத விண்டோஸ் 8.1 ற்குள் நுழைந்தது போன்றதொரு உணர்வு.. எதுவும் பிடிபடவில்லை.. மாற்றம் நல்லபடியாக முடியும்வரை காத்திருப்போம்..- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
புது தோற்றம் நன்றாக உள்ளது.. இவற்றில் நம் விருப்பத்திற்கேற்ப தீம்(Theme) மாற்றும் வசதி உண்டா? நீல வண்ணம் எப்பொழுதும் நம் கண்களுக்கு குளிர்சியானது.. எங்களுக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருந்த 'BBC' கோட் பொத்தானைக் காண்வில்லை.. மற்றும் முன்பு இணைத்த யுடுயூப் காணொளிகளும் மற்றும் படங்களும் இப்பொழுது வேலை செய்யவில்லை! கவனத்தில் கொள்ளப்படுமா?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சூரியனுக்கும், சாந்தி அவர்களுக்கும் இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. சுவி. - சென்னை மெட்ரோ ரயில்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.