Jump to content

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  6923
 • Joined

 • Days Won

  45

Everything posted by ராசவன்னியன்

 1. விமானம் பழைய ATR வகையை சேர்ந்ததாக இருக்கும். உயரத்தில் காற்றழுத்த வேறுபாடு இருந்தால் குலுங்கி வயிற்றை கலக்கிவிடும். சமீபத்தில் அவரசர வேலையாக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு இவ்வகை விமானத்தில் சென்றபோது சில நேரம் குலுக்கல் இருந்தது, பத்திரமாக இறங்க வேண்டிக்கொண்டேன். ஆனால் யாழ்ப்பாணத்திற்கு பயணிகள் போக்குவரத்து அதிகம் இருந்தால்தானே எதிர்காலத்தில் விமான நிலையம் விரிவடையும்? அதுதான் சாக்கென அரசு வேண்டுமென்றே கொழும்பிற்கு வரும் வருமானத்தை ஏன் வடக்கிற்கு கொடுக்கவேண்டுமென முட்டுக்கட்டை போட்டால் மூடிவிடவேண்டிவரும்.
 2. இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்.. இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விமான நிலையத்தின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிமர் செய்தி
 3. தானமாக கொடுத்ததின் விளைவு தன்னையே குத்துமென்றல், திரும்ப எடுத்துக்கொள்வதில் என்ன தவறு? சிரித்துக்கொள்வதை தவிர வேறொன்றும் எழுத தோன்றவில்லை ஐயா.
 4. ஹிஹி..நானும் மதுரைவாசிதான். அப்படியே பொடிநடையா சங்குப்பிட்டி, பூநகரி, வெள்ளாங்குளம், மன்னார் வழியா மதுரை வந்தால், மீனாட்சி தரிசனத்துடன் கோனார் கறிக்கடையில் உண்டு, ஜிகிர்தண்டா அருந்தி, தூங்கா நகரத்தை பார்க்கலாம்.
 5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,சுவி.
 6. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.. வாழிய பல்லாண்டு..!
 7. ஆழ்ந்த இரங்கல்கள்.. சிறிது காலம் நம்மோடு களத்தில் உறவாடியவர்.
 8. மகிழ்ச்சி..! அடுத்த மாதம் அங்கே செல்லலாமென உள்ளேன். கொரானாவிற்கு பிறகு சிங்கப்பூரில் நல்ல முன்னேற்றம் இருக்குமென எண்ணுகிறேன். குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசாங்கத்தின் மூலம் பல சலுகைகள், போனஸ் முதலியன சிறப்பு.
 9. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலாமதி அக்கா(?) அவர்களுக்கும், ஏற்கனவே பிறந்தநாள் கொண்டாடிய பாஞ் அவர்களுக்கும்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
 10. நாம் பிறந்து விளையாடிய சொந்த கிராமத்திற்கு சென்றால், பால்ய வயது தோழர்கள், பெரியவர்கள், குழப்படி செய்து உருண்டோடிய இடங்கள், அடி வாங்கிய தருணங்கள் என அனைத்தும் நம் நினைவை தாக்கும்.. ஆனால் இன்னமும் பதட்டதுடன், மரியாதையுடன் நோக்கும் இடங்கள், நாம் பயின்ற ஆரம்ப பள்ளிகள் தான்..! அந்த பால்ய நாட்களை நினைவுகூரும் போது இன்றும் கண்களில் நீர் கோர்க்கும்.. ஏறக்குறைய 63 வருடங்களுக்கு முன் என் சிறிய கிராமத்து பள்ளியையும், அதனருகில் வசித்த வகுப்பாசிரியரையும் இன்று(17-04-2022) நினைக்க வைத்த அருமையான பாடல் இது..! இப்பாடலை, இப்பொழுதுள்ள மேடை பாடகர்களின் அதே குரல் வளத்தில், பிசிறாமல் கேட்பதும் சிறப்புதான்..! அசல்: நகல்:
 11. அது ஒன்னுமில்லீங்க..! "கோத்த கோத்தா..(Gotta)" ன்னு "வீட்டுக்கு போக" (Go home) சொல்லி தெற்கே (SriLanka) கேட்குதே, மேற்கு என்ன சொல்லுதுன்னு 'உங்கள் குழாயில்' (You Tube) தேடுனேனுங்க.. உடனே இந்த சிட்சுவேசன் சாங் (Situation Song) மாட்டுப்பட்டு போச்சுதுங்க.. நீங்களும் ஒருக்கா கேளுங்க..பொருந்தி வருதா..? ஒரு சின்ன குறிப்புங்க.. இந்த 'சாங்' நான் கல்லூரியில் படிக்கும்போது, விடுதியில் மிகப் பிரபலமா இருந்துச்சிங்க..!
 12. வாதவூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 13. தகவல் தொழிற்நுட்பம் அதிவேகத்தில் முன்னேறியவுடன் பல விடயங்களை உடனுக்குடன் நேரலையாக கையடக்க கருவிகளில் பார்த்து அறியக்கூடியதாக உள்ளது. முன்பெல்லாம் எமக்கு ஈழத்து கலைஞர்கள் யாரென்றே தெரியாது. இலங்கை வானொலியில், அல்லது தமிழ் நாட்டில் வரும் ஊடக துணுக்குகளில் மட்டுமே அறியக்கூடியதாக இருந்த ஈழத்து கலைஞர்களின் முகம், தற்பொழுது பலரும் பார்த்து அறியக்கூடியதாக உள்ளது. அவ்வகையில் முன்பு காட்பெர்டில்(Hot Bird) வந்துகொண்டிருந்த "படலைக்கு படலை" காணொளியை சில வருடங்களுக்கு முன் பார்த்து வந்தேன். அத்தொடரில் கவர்ந்த கலைஞர்களான 'சிறீதரன் மாணிக்கம்' மற்றும் 'பாஸ்கி' ஆகியோரின் இயல்பான ஈழத்து தமிழில் நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். அந்த கலைஞரின் நேர்முக பேட்டியை இன்று ரசித்து பார்த்தேன். ஒவ்வொரு கலைஞரின் பின்புலத்திலும் சோகம் உண்டு போலும்..! வளர்க வளமுடன்..
 14. இந்த திரையை பார்த்தால், கே.பி.சுந்தராம்பாள் ஞாபகம்தான் வருகிறது.
 15. சதுர் முகம்.. இதுவரை ஒன்றிரண்டு மல்லு படங்கள் மட்டும் பார்த்துள்ளேன். இன்று தற்செயலாக 'யுடுயூபில்' ஆங்கில படத்தை தேடப் போய், இந்த விஞ்ஞான திகில் படம் மாட்டுப்பட்டது. சதுர் முகம் - இது மல்லு படத்தின் தமிழ் வடிவம். யாவரும் நலம், யு டர்ன் போன்ற தமிழ் திகில் படம் மாதிரியிருக்கும் இதையும் ஒருமுறை பார்க்கலாம். நடித்துள்ள நடிகர், நடிகைகளை பற்றி எனக்கு தெரியாது..!
 16. கணவன்-மனைவி இணக்கமாகி போனாலும், அண்டிவாழும் கிழடுகளே பெரும்பாலும் இம்மாதிரியான பிணக்குகள், விவாகரத்துகளுக்கு தூபம் போடுகின்றனர்.
 17. அருமையான திருவிழா முடிவுற்றது..! நாளை அதிகாலை 3 மணி வரை கொண்டாட்டம், வாண வேடிக்கைகள் உள்ளன. Now Recorded version is available in the same link below.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.