Everything posted by ராசவன்னியன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய தமிழரசு மற்றும் நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
சென்னை மெட்ரோ ரயில்...
Update: விமான நிலையம் - எழும்பூர் இடையே அடுத்த ஆண்டு 2015 டிசம்பரில் மெட்ரோ ரயில் ஓடும்..! சென்னை விமான நிலையம் - எழும்பூர் இடையே அடுத்தாண்டு டிசம்பர் மாதத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் ராமநாதன் கூறினார். சென்னையில் ஷெனாய் நகர் - திருமங்கலம் இடையிலான சுரங்கப் பாதை பணி சனிக்கிழமை முடிவடைந்தது. இதனையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியது: ஷெனாய் நகர் - திருமங்கலம் இடையே 5 கிலோ மீட்டர் தூரத்துக்கான சுரங்கப் பாதை தோண்டும் பணி முடிவடைந்துள்ளது. இதனையடுத்து திருமங்கலத்தில் இருந்து கோயம்பேடு உயர்நிலைப் பாலத்துக்கு தண்டவாளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். ஷெனாய் நகரில் இருந்து 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுரங்கப் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் ஷெனாய் நகரில் இருந்து அண்ணா நகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், திருமங்கலம் இடையே முடிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 18 மீட்டர் தூரம் வரை டனல் போரிங் இயந்திரம் மூலம் சுரங்கம் தோண்டப்பட்டது. சுரங்கம் தோண்டுவதில் இருந்து வெளி வரும் மண் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சேகரிக்கப்பட்டு. திருநீர்மலை அருகே உள்ளே ஓர் இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது. சுரங்கப் பணிகள் முழுவதும் முடிந்த இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 60 சதவீதம் ரயில் நிலையப் பணிகள் சுரங்கத்தில் முடிவடைந்துள்ளன. 2007 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் தொடங்கப்படும்போது திட்ட மதிப்பீடு ரூ.14,600 கோடியாக இருந்தது. இப்போது இதன் திட்ட மதிப்பீடு ரூ.20 ஆயிரம் கோடியாகும். சென்னையில் சுரங்கப் பாதை பணியை மேற்கொள்வது சவாலான விஷயம். இங்கு மண், பாறை என வெவ்வேறு இடங்களில் நிலங்களின் தன்மை மாறுபடும். இதன் காரணமாக சுரங்கம் தோண்டும் டனல் போரிங் இயந்திரத்தின் பிளேடுகள் அதிகமாக சேதமடையும். ஜூன் மாதம் சோதனை ஓட்டம்: கோயம்பேடு - எழும்பூர் இடையிலான வழித்தடத்தில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்தாண்டு ஜூன் மாதம் தொடங்கப்படும். மேலும் விமான நிலையம் - எழும்பூர் இடையிலான 9 கிலோ மீட்டர் தூரத்திலான உயர் நிலை மற்றும் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயிலின் முழுமையான போக்குவரத்து அடுத்தாண்டு டிசம்பரில் தொடங்கப்படும். மெட்ரோ ரயில் பணிகள் திட்டமிட்டப்படி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவை 75 நகரங்களில் தேவைப்படுகிறது. அங்கெல்லாம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கலாம் என்றார் ராமநாதன். புதிய மெட்ரோ ரயில் திட்டங்கள்: 1. மாதவரம் - வேளச்சேரி 2. மாதவரம் - கிழக்கு கடற்கரை சாலை 3. கோயம்பேடு - மயிலாப்பூர் லஸ் இந்த மூன்று புதிய மெட்ரோ ரயில் திட்டங்களும் ஆய்வில் உள்ளன. தினமணி
-
கருத்து படங்கள்
- சென்னை மெட்ரோ ரயில்...
Update: Chennai Metro Rail Phase-I Extension Approved. சென்னை வண்ணாரப்பேட்டை (Washermenpet) வரை உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை திருவொற்றியூர் (விம்கோ நகர்) வரை நீட்டிப்பதற்கான அனுமதி கடந்த புதன்கிழமை (நவம்பர், 12) வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எம். வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். மேலும் சென்னை மெட்ரோ இரயில் சேவை வரும் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் எனவும் அறிவித்தார். இந்து ஆங்கில நாளிதழ்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசு கேட்டால் என்ன பதில் சொல்லவேண்டுமென நான் நினைத்தேனோ அதை அச்சாக அப்படியே சொல்லியுள்ளீர்கள்.. ! எப்படி சிறி இதெல்லாம்...?- சென்னை மெட்ரோ ரயில்...
சென்னை மெட்ரோ இரயில் திட்ட வேலைகளினால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையப் பகுதியிலும், சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் கட்டிடப் பகுதியிலும் சடுதியில் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன. இப்பகுதியிலிருக்கும் புராதன சின்னங்களான பழைய கட்டிடங்களை மட்டும் விட்டுவிட்டு மற்ற அனைத்து கட்டிடங்களும் அரசால் கையகப்படுத்தப்பட்டு தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. இவ்விடத்தில் எதிர்காலத்தில் எப்படி நான்கு இரயில் முனையங்கள் இணைக்கப்படும் என்பதை கீழேயுள்ள படம் விளக்குகிறது. இணைக்கப்படபோகும் இரயில் முனையங்கள்: சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் பார்க் டவுன் புறநகர் இரயில் நிலையம்(Sub Urban) பார்க் டவுன் பறக்கும் இரயில் நிலையம் (MRTS) சென்னை மெட்ரோ இரயில் நிலையம். பட உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா. .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
64 வது வயதில், காலடி எடுத்து வைக்கும் தமிழரசுவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!- சென்னை மெட்ரோ ரயில்...
Update: சென்னையின் புதிய வசதியான மெட்ரோ தொடருந்து சேவையின் ஒரு பகுதி, இந்த வருட இறுதியில் கோயம்பேட்டிற்கும் ஆலந்தூருக்கும் இடையேயான சுமார் 10 கி.மீ வரை மேம்பால வழியில் இயக்கப்படலாமென செய்திகள் வந்தவண்ணமிருந்தன. ஆனால் தற்பொழுது கிடைக்கும் செய்திகளைப் பார்த்தால் சென்னை மெட்ரோ ரயில் சேவை தமிழர் திருநாளாம் பொங்கலுக்குக் கூட பொங்காது போல தெரிகிறது. இதற்கான காரணிகள் பல கட்ட வேலைகளில் இன்னமும் முழுமையடையாமல் இருப்பதாக தெரிகிறது. மிக முக்கியமாக கோயம்பேட்டிலிருந்து அனைத்து மெட்ரோ ரயிலின் இயக்கங்களை மத்திய இடத்திலிருந்து கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அறையில்(Master Control Room) மென்பொருட்களின் சோதனையும், அதன் மேற்பதிப்புகளும் இன்னமும் முழுமையாக நிறுவப்படாமை. மெட்ரோ ரயில்களின் கட்டுப்பாடு மற்றும் இயக்கங்கள் அனைத்தும் ஜெர்மனி நிறுவனமான ஸீமன்ஸின் (Siemens) மென்பொருட்களாகும். ஸ்கேடா (SCADA) என்ற தானியங்கி தொழிற்நுட்ப முறையில் இயக்கப்படும் இந்த பொறிமுறையின் சோதனைகளையும், மென்பொருளின் மேற்பதிப்புகளின் மூலம் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு சோதனைகளை இன்னமும் இந்த நிறுவனம் முடித்தபாடில்லை. மேற்கூறிய நிறுவனத்தின் அனைத்து சோதனைகளும் முடிந்த பின்னர், பெங்களூரிலிருந்து இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு பொறிமுறை துறையினர் அனைத்து பொறிமுறைகளையும் முழுமையாக இயக்கிப் பார்த்து தடையில்லா சான்றிதழ் வழங்கிய பின், தில்லியுலுள்ள மத்திய ரயில்வே அமைச்சு இயக்கத்திற்கான இறுதி அங்கீகாரம் வழங்க வேண்டும்! ஆக, கூட்டிக் கழித்துப்ப பார்த்தால், அடுத்த ஆண்டு (2015) ஜூன் மாதம் " ஜிக்கு புக்கு.. ஜிக்கு புக்கு.. மெட்ரோ ரயிலே... மேம்பாலத்தில் கலக்குது பார் குயிலே...! " என சென்னைவாசிகள் பாடலாம், ஆடலாம்! செய்தி மூலம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், பெருமாள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- சென்னை மெட்ரோ ரயில்...
சென்னை ஆலந்தூர் - கிண்டி மெட்ரோ வழித்தடத்தில் சில நாட்களுக்குமுன் பாதியில் தொங்கியிருந்த இரும்புப் பாலம் அமைக்கும் பணி, மேலும் முன்னேற்றம் அடைந்து இறுதி நிலையை எட்டியுள்ளது.. சென்னை Larsen & Toubro கட்டுமான நிறுவனம், இப்பணியை மேற்கொள்கிறது. யாழ்ப்பாணம் அருகேயுள்ள நாவற்குழி ரயில் பாலமும் தற்பொழுது முடிந்திருக்கணுமே!- சென்னை மெட்ரோ ரயில்...
மதுரை சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்து விவரணை கீழே...- சென்னை மெட்ரோ ரயில்...
மதுரைக்கு போகலையா? சென்ற வ்ருடம் மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்த்து கிடைத்தது பற்றி யாழில் ஏற்கனவே திரி பதிந்த ஞாபகம் உள்ளது. நான் சொல்ல வந்த விடயம், இன்றும் அந்த தடங்கல்கள் தொடர்கிறது என்பதையே..! போதிய பயணிகள் போக்குவரத்து இல்லையென காண்பித்து கிடைத்த அங்கீகரத்தை ரத்து செய்யவே நீங்கள் மேற்கூறிய தடைகள், வசதி குறைவுகள் இன்ன பிற. சுங்கத்துறை மத்திய அரசின் வேலையே ஆகும். அவர்கள்தான் போதிய இயந்திரங்களையும், மனித வளத்தையும் மதுரை விமான நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.- சென்னை மெட்ரோ ரயில்...
அது ஒரு ஃப்ளோ வில் சொல்லிவிட்டேன் தமிழ்சிறி, அது ஒர்க்கவுட் ஆயிட்டது.- சென்னை மெட்ரோ ரயில்...
பெருமாளுக்கு பல உள்ளூர் விடயங்கள் தெரிந்திருக்கே! மதுரைக்கு சர்வதேச விமான அந்தஸ்த்து கிடைத்துவிட்டால் அருகேயுள்ள திருவனந்தபுரத்திற்கு தென் தமிழ்நாட்டு பயணிகள் வருகையும், வருமானமும் குறையும் அதனால் திருவனந்தபுர விமான நிலையம் முக்கியத்துவத்தை இழக்கும் என்ற அச்சமே திரைமறைவு அரசியலுக்கு காரணம். தற்பொழுது திருவனந்தபுர கோட்டத்தோடு இருக்கும் கன்னியாகுமரி முதல் திருநெல்வேலிவரையுள்ள ரயில்வே கோட்டத்தை, மதுரையுடன் சேர்க்க பல வருடமாக போராடுகிறார்கள், அதற்கு இந்த மல்லுகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள், அவர்களுக்கு அனைத்தும் திருவனந்தபுரத்திலேயே இருக்க வேண்டும், ஆனால் தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கு எந்த முன்னேற்ற வசதியும் செய்வதில்லை. தைப் பொங்கலுக்கு, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தென்னக ரயில்வே எந்த சிறப்பு ரயில்களும் இயக்குவதில்லை, ஆனால் வீணாய்போன ஓணான் பண்டிகைக்கு சென்னையிலிருந்து பல பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் செல்லும். தென்னக ரயில்வேயில் புற்றீசல் பீடித்திருக்கும் மல்லுகளின் வீச்சு அப்படி!- சென்னை மெட்ரோ ரயில்...
நீங்கள் சொல்வது உண்மைதான். சென்னை விமான நிலையத்தில் சில சுங்க அதிகாரிகள் முறைகேடாக நடக்கிறார்கள், கையூட்டு வாங்குவதும் உண்மைதான். ஆனால் அவர்கள் ஆட்களுக்கேற்றார் போல் இப்படி நடந்துகொள்கிறார்களென நினைக்கிறேன். சில வருடங்களுக்கு முன், நான் செல்கையில் பையில் நகைகள் வைத்திருந்தேன். 'ஸ்கேன்' செய்யும்பொழுது அதிகாரி என்னிடம் கேட்டார். நான் நேரே சுங்க அதிகாரியிடம் சென்று, இவ்வளவு நகைகள் நான் ஒன்றறை வருடங்கள் கழித்து திருமண நிகழ்வுக்காக கொண்டுவந்துள்ளேன் எனக் கூறி அழைப்பிதழையும் காண்பித்தேன். 'வெளிநாடு செல்வது சம்பாதிக்கத்தானே, முக்கிய நிகழ்விற்கு கூட சில நகைகள் கொண்டுவர இவ்வளவு கட்டுப்பாடுகளென்றால் எப்படி சார்?' எனக் கேட்டவுடன், 'சரி வேறெதுவும் தீர்வை கட்டவேண்டிய பொருட்கள் உள்ளனவா?' எனக் கேட்டு சோதித்துப் பார்த்துவிட்டு இல்லையென்றவுடன் 'சரி செல்லுங்கள்' என அனுப்பிவிட்டார். ஆனால் எலெcட்ரானிக்ஸ் பொருட்கள், அளவிற்கு மீறி தங்க நகைகள் வைத்திருப்போரை ஒதுக்கி வைத்து 'கவனித்த'வுடனோ, இல்லை தீர்வை கட்டியவுடனோ அனுப்பிவிடுகிறார்கள். அதிகாரிகளின் மனநிலையையும், பயணிகளின் உண்மையான நோக்கத்தையும், நடந்துகொள்ளும் விதத்தையும் பொறுத்தும், அன்றைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்தும் மாறுபடுகிறது. கட்டுப்பாடுகள், தீர்வைகள் ஒரே சீராக இருப்பதில்லை. முந்தைய பதிவில் நான் கூறியது, பெருமாளின் மேற்கண்ட விடயத்துக்காக. நன்றி பெருமாள், அர்ஜூன், நாந்தான் மற்றும் தமிழச்சி.- சென்னை மெட்ரோ ரயில்...
முன்னைய அனுபவமும், தற்போதைய தமிழரின் கையறு நிலையுமே அதற்கு காரணம். உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்..! உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால், நிழலும் கூட மிதிக்கும்..!!- சென்னை மெட்ரோ ரயில்...
விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில், அண்ணா சாலை வழியாக சுரங்க வழியில் புகுமுன்பாக கிண்டி மின்சார ரயில் நிலையம் மேலே, குறுக்கு வாட்டாக மெட்ரொ ரயில் வழித்தடம் அமைவதால், இரும்புத் தகடுகளால் பொருத்தப்படும் மேல் பாலம், கீழே ஓடும் மின்சார ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏதுமில்லாமல் மெல்ல மெல்ல உருவெடுத்து, தூண்களின் மேலே ஊர்ந்து பொருந்துவதை படத்தில் காணலாம்.. - Engineers make the world.. .- சென்னை மெட்ரோ ரயில்...
Update: The first Chennai Metro Rail service from Koyambedu to Alandur will be open to the public only by December, said M. Venkaiah Naidu, Union minister for urban development, on Friday. "கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம்" முதல் உயர்த்தப்பட்ட ரெயில் நிலையமாக மக்கள் பாவனைக்கு தயாராகி வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்திலுள்ள ரெயில் நிறுத்த கட்டிடங்களின் அனைத்து உள்ளக பணிகளையும், ரெயில் இயக்கதிற்கு தேவையான முக்கிய தொலைத்தொடர்பு உபகரணங்களையும் நிறுவத் தொடங்கியுள்ளது. ரெயில்களின் தானியங்கி செயல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை ஒருங்கிணைத்து இயக்க கோயம்பேடு கட்டுப்பாட்டு மையத்தில், தேவையான உபகரணங்களும் நிறுவப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனன். கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ஏழு ரெயில் நிலையங்கள் இருக்கின்றன. சில ரெயில் நிலையங்களில் கட்டிட வேலை முடிந்தவுடனேயே உபகரணங்கள் நிறுவல் வேலைகள் தொடங்கியுள்ளது.ரெயில் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் ஒரு சில பயணிகள் வசதிகள் நிறுவ வேண்டியுள்ளது. அரும்பாக்கம், அசோக் நகர், கோயம்பேடு நிலையங்களின் அனைத்து வேலைகளும் முடிந்து விரைவில் தயாராக உள்ளது. கட்டுமான பணி நிறைவடைந்து நிலைய உள்ளக வேலைகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. சுரங்க வழியில், ஷெனாய் நகர் முதல் கோயம்பேடு வரையேயான வழித்தடத்தில் பாதைகள் அமைக்கும் பணியில் வேகமாக முன்னேற்றம் கணப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் அடுத்த ஆண்டு ரெயில்களை இயக்க வாய்ப்பு உள்ளது என மெட்ரோ ரெயில் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். Source - Times Of India.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஓ.. அப்படியா...? பாராட்டுக்கள். ஆனால் தங்களுக்கு முன்பே யாரோ சிலவற்றை கண்டுபிடித்து, யாழ் களத்தில் இந்த 'HTML tag' விடயங்களை இங்கே கொட்டியிருக்கிறார்களே, தாங்கள் கவனிக்கவில்லையா..? BB Code- வீரமங்கை செங்கொடியின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று
காலச் சக்கரத்தால் மெதுவாக மறந்து வருகிறோம். ஆழ்ந்த அஞ்சலிகள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
???? வது பிறந்த நாள் காணும் நந்தனுக்கும், தமிழ்த்தங்கைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமிக்கும், புத்தனுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வெற்றிலை தாம்பூலத்திற்கு நன்றி.. அதை சாப்பிட்டவுடன் வந்த பாடல் இதோ...! http://youtu.be/kk4oBJcAfEs- கருத்து படங்கள்
இதிலிருந்து தாங்கள் சொல்ல வரும் கருத்து...???? ஒருவேளை மத நல்லிணக்கமோ? முக்கிய பிரமுகர்களா?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிருபனுக்கும், யாழ் நிலவனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். - சென்னை மெட்ரோ ரயில்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.