உலக ஒழுங்கு மாறுகிறது, ரஷ்யா + இந்தியா + சீனா +இரான் + வட கொரியா + இஸ்லாமிய நாடுகள் ஒருபக்கம் கூடுகின்றன, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் உள்ள பிரச்னை ஓரளவுக்கு சமரசத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
ஆனாலும் இப்பொழுதும் அமெரிக்கா தலைமையில் ஆங்கிலோ அமெரிக்க வல்லரசு தான் மேலோங்கி உள்ளது, ஆயினும் அவர்களின் பலம் கொஞ்சம் குறைக்கப் பட்டுள்ளது.
ஆகவே இந்த ukraine vs Russia சண்டையில் Ukraine ஓரளவுக்கு விட்டுக்கொடுத்தாக வேண்டும்.
இப்போது உள்ள நிலையில் சப்ராரோஸியா + luhansk + donestsk + கிரீமியா + kerson ஆகிய பிராந்தியங்கள் ரஷ்யா கைக்குள் முழுவதும் போவதை தடுக்க முடியாது.
அதற்கு பதிலீடாக Ukraine க்கு மீண்டும் nuclear state அந்தஸ்தை கொடுக்க அமெரிக்கா ஆராய்வதாக தகவல்.அத்துடன் poland, ருமேனியா, பிரான்ஸ், uk, ஜெர்மனி ஆகிய நாடுகள் ukrainin ஏனைய பிறதேசங்களின் பாதுகாப்பு பொறுப்பை பிரித்து எடுப்பதாகவும் ஒரு தகவல்.
ரஷ்யா கிட்டத்தட்ட 5 லட்ஷம் வீரர்களை இழந்து இருக்கிறது, ukraine க்கும் அதே நிலை தான். இந்தப் போரை ரஷ்யா இன்னும் கொஞ்சக் காலம் நீடிக்க முடியும். Ukraine ஆல் அது இனிமேல் முடியாது. இந்த அளவில் அவர்கள் ரஷ்யாவுக்கு இழப்பை ஏற்படுத்தியதே பெரும் வெற்றி தான்.
செக்கோஸ்லாவிக்கியாவை கொடுங்கள் இதோடு விட்டு விடுகிறேன் என்று சொன்ன ஹிட்லர் போல் தான் புட்டினும். ரஷ்யா ஒரு பேரரசு, அவர்கள் மொல்டோவா, ஜோர்ஜியா, போன்ற நாடுகளை தம்மோடு இணைக்கும் வரைக்கும் ஓய மாட்டார்கள். இந்த யுத்தம் முடிந்து ஒரு 15 ஆண்டுகளில் மீண்டும் ஒரு போரை ஆரம்பிப்பார்கள். அது தான் அமெரிக்காவின் பயம். (அதனால்த் தான் இப்போது ரஷ்யாவின் கூட்டணி நாடான இந்தியாவுக்கு எதிரான நகர்வுகள் இங்கே நடக்கிறது, அதானி மீதான குற்றச்சாட்டு, கனடா இந்திய பிரச்னை. )