Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

saravanar

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by saravanar

  1. May 2024: பெரிய நகைசுவை. உங்கடை சிவில் சேவையில் 25% முழுக்க ஊழல் அல்லது செயல் திறன் அற்றது. அடுத்த 50% செயல் திறன் இல்லாதது என்று ரிசேவ் வங்கி தலைவர் சொல்லியிருக்கிறார். அவர் மேலும் சொல்கிறார் .... சுதந்திரத்திற்குப் பிறகு, ... 1950 முதல் 70 களில், ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் திறமை, நேர்மை மற்றும் அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டனர். ஆக பிரிட்டிஷ் ஆட்சியில் பயிறுவிக்கப்பட்டு அதன் வழிவந்தவர்கள் நேர்மையாக இயக்கியிருந்தார்கள். அவர்களை கலைத்துவிட்டு இந்திய வழி என்று மார்தட்டி போட்டு நீங்கள் அதே பிரிட்டனுக்கு விசா எடுக்க வரிசையில் நிண்டது தான் மிச்சம். அதுக்குள்ள எங்களுக்கு வகுப்பு எடுக்கிறீர்களா? சுத்த கோமாளிகள். உங்களுக்கு கூசா தூக்குபவர்களை வளர்த்தெடுப்பது தான் உங்கள் இலக்கு! உலகில் வெளிப்படைத்தன்மையில் (Transparency International - Corruption Index) 93வது இடத்தில் உள்ள இந்தியா 5வது இடத்தில உள்ள சிங்கப்பூரை அடைய பல யுகம் வேண்டும். உந்த கோமாளிகளை விட்டுவிட்டு சிங்கப்பூர் சிவில் சேவையில் இருந்து பயிட்ச்சிகளை பெறுமாறு பல தடவை மாகாணசபையை அன்று வலியுறுத்திவந்தேன். அன்று சிங்கப்பூரில் இருந்து விஜயம் செய்த இரண்டு அமைச்சர்களும் அதட்கு வழிசெய்வதாக சொன்னார்கள். ஆனால் நாங்கள் கதிரை பிடிப்பதில் முழுநேரத்தையும் செலவழித்தால் இன்று அர்ஜுனாவும் அதிகாரிகளும் கடிப்பிடப்படுவதை பந்தி பந்தியாக எழுதுவது, ஆராய்வது (நிலாந்தன்!) என்று நேரம் போகிறது After independence, the IAS succeeded the ICS as a homegrown response to support universal franchise democracy in a low-awareness society. In the 1950s to 70s, IAS officers were known for their competence, integrity, and commitment. However, this reputation has declined due to ineptitude, inefficiency, and corruption.Currently, about 25% of IAS officers are either corrupt, incompetent, or inefficient. The middle 50% started well but have become complacent, while only the top 25% are truly delivering. Ideally, we need 75% to be effective, says former IAS officer and RBI governor D. Subbarao . https://www.fortuneindia.com/enterprise/25-ias-officers-corrupt-incompetent-or-inefficient-middle-50-complacent-d-subbarao/116843
  2. அய்யருக்கு நீங்கள் சொன்னது அருமையான பதில் அண்ணர். இந்த சம்பிரதாயங்களை மாற்றுவதில் உங்களை போன்று பல ஆயிரம் பேர் பங்குபெறவேண்டும். ஆனால் இதட்கு எதிர்மறையாக இந்தியாவில் இருந்து சில முறைமைகள் புகுத்தப்படுகின்றமையை நான் காண்கிறேன், அடிமைத்ததனத்தை உறுதிசெய்கின்ற வகையில்!
  3. ஏன் தமிழ்நாடு. எங்கடை மாவை இப்ப கொஞ்சநாளைக்கு முதல் அதை தான் செய்தார். அதுக்கு பிறகு தனுக்கு தான் தேசிய பட்டியல் இடம் வேணும் எண்டு நடு கதிரையில் போய் இருந்தவர். அதுக்கு முதல் எங்கள் பெரும் தலைவர் சமப்ந்தனும் அதையே செய்தார்.
  4. உண்மையில் அரசியல் சாசன மாற்ற விவகாரங்களில் (Constitutional Reform Matters) கட்சிக்கு கேந்திர (Strategic) மற்றும் நுட்ப (Technical) வழிமுறைகல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஒரு நிபுணர் குழுமம் தேவை (Commitee of Constitutional Experts). இந்த குழுமத்தில் சுமந்த்ரனுடன் அரசியல் சாசன விவகாரங்களில் தற்கால நடைமுறைகளை (Contemporary thinking and approaches) சட்டரீதியாகவும் ஆராய்ச்சிரீதியாகவும் அணுகும் நிபுணர்கள் பங்குபெறவேண்டும். எங்களுது பல்கலைக்கழகத்தில் இருந்து இந்திய மற்றும் சிங்கப்பூர், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர் மற்றும் தமிழர் அல்லாதோர் (External Advisors) இதில் பங்குபெறலாம். வழமையாக இது தான் நடைமுறையில் சர்வேதேச ரீதியாக பின்பற்றப்படுகின்றன வளமை. ஏனென்றால் அரசிய சாசனம் திருத்தப்படுத்தல் அல்லது மீள்வரைத்தல் என்பது உள்ளக சட்டம் மட்டும் சம்பந்தமானது அல்ல.அது பரந்து பட்ட விவகாரங்களை உள்வாங்கி பின்னர் சட்ட ரீதியாக பரணமிக்கின்ற ஒன்று. இவாறான பரந்துபட்ட அறிவு, அணுகுமுறைகள் பற்றிய தெளிவு தனி ஒருவரிடம் இருக்கும் என்று தமிழர் எதிர்பார்ப்பது சரியல்ல. துர்பார்க்கியமாக தமிழர் தனி ஒருவரை நம்பி (One man show) அல்லது தனி ஒரு தூதர் (One man saviour syndrome) தங்களை மீட்பார் என்று பண்பியல் ரீதியாக தங்களை வளர்த்து வைத்திருக்கிறார்கள். பலருடன் கலந்து ஆலோசித்து, கருத்துக்களை உள்வாங்கி தங்கள் கர்வம் (ego) சுயநலத்தை (self interest) பின்தள்ளி ஒரு குழுவாக வெற்றிகளை (collective success) அடையும் மனப்பான்மை இன்னும் வேண்டிய அளவு வரவில்லை. இந்த காரணத்தால் தகுதி உள்ளவர்கள், நிபுணத்துவம் உள்ளவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் தள்ளி நிக்கின்ற நிலைமை. எவ்வளவு புலம் பெயர்த்து மற்றைய சமூகளின் மத்தியில் வாழ்ந்தாலும் அவர்கள் இந்த விவகாரங்களை நல்ல படியாக கையாளும் போது நாங்கள் அந்த படிப்பினைகளை உள்வாங்குவதில்லை. மாறாக எங்களுடைய வரலாற்றில் மூழ்கி கிடப்பதை தவிர. ஆனால் காலம் கடந்துவிடவில்லை. மாறாக ஒரு அறிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பியிருக்கிறார்கள். இதனை செவிமடுகின்ற ஒரு அரசியல் கட்சியாக தமிழர் தரப்பு தாங்களாகவே முன்வந்து ஒரு நிபுணர் குழுமத்தை உருவாக்க அழைப்பு விடுக்கலாம். அதில் சுமந்திரனை அவரின் சட்ட திறமைகளை உள்வாங்க இணைக்கலாம். எவ்வாறு முன்னாள் பிரித்தானிய தொழிற்கட்சி தன்னை புதிய தொழில்கட்சியாக (New Labor) மாற்றியமைத்து ஆட்சியை கைப்பற்றியதோ அதுபோல மக்களின் தீர்ப்பை உள்வாங்கி தங்களை மாற்றும் பண்பு தேவை. தலைமுறைகள் மாறும்போது (Generational change) அவர்களது அபிலாசைகள் மாறுகின்றபோது (aspirational changes) அவற்றை உள்வாங்கி புதிய பாதையை வகுப்பது தான் சாமர்த்தியமான அணுகுமுறை. அதை விட்டுவிட்டு தீர்ப்பளித்த மக்கள் மோடர்கள் என்று அடம்பிடித்தால் பின்னடைவுகள் நிரந்தரமாக்குவதுடன் வரலாறு மீண்டும் எங்களை சிக்கலுக்கு உள்ளாக்கும் இதை நான் பார்வையாளனாக இருந்து எழுதவில்லை. மாறாக தமிழ் அரசியல், தேச கட்டுமானம், மாகாணசபை மற்றும் புனர்வாழ்வு பணிகளில் பலவருடங்கள் ஈடுபட்டு அதில் இருந்து ஒதுக்கியவன் என்ற வகையில் எழுதுகிற கருத்து.
  5. நிச்சயமாக இவனை உள்ளே தள்ளவேண்டும். முதலில் இவன் ப்ரேமியின் (Premini) உடலை எங்கே வெட்டி போட்டான் என்பதை சொல்லவேண்டும். அவளை கூட்டாக கற்பளித்துவிட்டு இன்றும் சுதந்திரமாக உலாவும் கேவலமாணவர்களின் பெயர்களை தரவேண்டும். அனுரா கட்சிக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுங்கள். நான் என்னாலான எல்லா முயறசிகளும் எடுப்பேன். Tragic Fate of Seven TRO Employees at the Hands of the TMVP Seven Years Ago https://dbsjeyaraj.com/dbsj/?p=15596
  6. நான் உங்களுக்கு கொளுத்தி தந்திருப்பன். இந்த பிள்ளையான் சிறையில இருக்கவேண்டிய மகாபாதகன்.
  7. மைத்திரிக்கும் போரை முன்னின்று நடத்தி இந்த நாடு பவுத்தர்களுக்கு மட்டும் சொந்தமானது என்றவருக்கும் அதீத கற்பனையில் மிதந்து தான் தமிழ் இளைஞர்கள், யுவதிகள், மக்களும் வோட்டு போட்டவை. இப்படிக்கு உங்கடை ஆட்சி காலத்தில தமிழர் தேசிய இராணுவத்துக்கு (TNA - Tamil National Army) எண்டு எங்களை தேடி கொண்டு வர காட்டுக்குள்ளால தப்பி கொழும்பு வந்து தப்பிய சிறுவன். (ஆம் அதுவும் பிரேமதாச - ஜேவிபி யுத்த காலத்தில்!! ) https://sangam.org/sri-lanka-the-untold-story-chapter-38/
  8. அப்பாடா என்ன ஒரு சத்தத்தையும் காணோமே என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது இன்னுமொரு பெரிய திட்டத்தோடு வந்துவிட்டீர்கள். தமிழ்த் தேசியப் பேரியக்கம் தொடங்க முதல் உங்கடை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்னத்தை இதுவரை சாதித்துள்ளது என சொல்லமுடியுமா? நீங்களும் நாடு கடந்து என்னும் மிஞ்சி இருக்கிறவரையும் நாடு கடத்தி போட்டு உங்கடை பேரியக்கத்தை தொடங்கிற யோசனையா இது.
  9. பாவம் அந்த ஆளு. எவ்வளுவு நாடகம், கதைவசனம் எழுதினாலும் அவற்றின் அதீத முயற்சியை பாராட்டுவார் இல்லை.
  10. இருக்க கூடும். நீராடியாக போய் செய்யாவிட்டாலும் உள்ளக புலனாய்வு தகவல்கள் கொடுத்தவர்களாக இருப்பார்கள். இப்பவும் தமிழர் வீடுகளை இனம் காட்டி அவர்கள் வீடுகளில் நகை களவெடுப்பதட்கு உடந்தையாக மற்ற இனத்தவர்களுடன் சேர்ந்து செயல்படுவது நம்மவர் தான். அந்த நாட்டின் சுதந்திரங்களையும் வளங்களையும் பாவித்து உருப்பட சந்தர்ப்பம் இருந்தாலும் செய்ய மாட்டாங்கள் இந்த பாவிகள். 😒
  11. சரியாக சொன்னீர்கள். இன்னும் தங்களை சுயபரிசோதனை செய்ய தயாரில்லை. இவர்கள் வாழாவிருந்துவிட்டு இப்ப மற்றவர்கள் தான் பிளை என்று புது வியாக்கியானம் பண்ணுகிறார்கள்
  12. "இனிமேல் இதுபோன்ற மோசமான உள்ளடக்கத்துடன் திரும்பி வரவேண்டாம். பகிர்ந்து கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன. ஆனால், வைரஸ் வீடியோக்கள் நீண்ட காலத்திற்கு அதிக லைக்குகளைப் பெற முடியாது. தயவுசெய்து கவனிக்கவும்" இது தான் இந்த வீடியோயோவிற்கு கீழுள்ள கருத்துக்களில் ஒன்று. அதாவது எங்களது சமூக குறைபாடுகள் பற்றி விமர்சம் செய்யவேண்டாம் . ஆனால் அமெரிக்க அழியவேண்டும், கனடா துலையவேண்டும். நாங்கள் தான் எல்லாவற்றையும் விஞ்சிய இனம் என்று ஒரு வீடியோ போட்டால் அதிக லைக் பண்ணுவம். இது தான் இவர்கள் மேல வர தடையாக உள்ள ஒரு காரணம், ஆனால் இதை சுட்டி காட்டினால் நீ என்ன வெளளையானா என்று கோபம். ஆனால் அதே வெள்ளையனுக்கு சார் சார் சார் என்று பட்டம் போடுகிறார்கள். வந்தே மாதரம் தெருவில மூத்திரம் என்று தான் வாழுவோம் என்று அடம் பிடித்தால் மற்றவர்கள் எங்களை வெறுப்பதை நாங்கள் நிறுத்தமுடியாது. தீவிர வலுதுசாரி (far-right) சக்திகள் புலம்பெயர்த்தோரை வேண்டாம் என கிளம்பி ஆட்சி பீடங்களையும் கைப்பற்றுகிற இந்த நேரத்தில் நாங்கள் அவர்களின் கருத்துக்களையும் செயல்களையும் நியாயப்படுத்துகின்ற வகையில் நடத்துகிறோம். இவர்களை அரவணைத்து அவர்களின் நிகழ்வுகளில் ஒன்றாக நடனமும் ஆடிய அந்த பிரதமருக்கு இவர்களாகவே ஆப்பு வைத்திருக்கின்றார்கள் என்றால் எதிர் காலத்தில் இப்படி இன்னொரு தலைவர் செய்ய முன் கனக்க யோசிப்பார்.
  13. உண்மையை அவரது வயதில் உள்ள ஒரு பிள்ளை விளங்க கூடியவாறு நீங்கள் சொல்லவேண்டும். இரண்டாவது நீங்கள் ஒரு அப்பியாசகொப்பியில் உங்கள் வாழ்க்கை வரலாறை எழுதி பத்திரமாக வைத்துவிடுங்கள். நான் எனது தந்தை, தாயிடம் கேட்டு அதை செய்து வைத்துளேன். எனது பிள்ளைக்கும் அது தெரியும். நானும் நான் கடந்து வந்த பாதையை எழுதி வைக்கிறேன். ஒரு நிரந்தர இடம் இல்லாத சமூகம் தனது பூர்வீகம் தொடர்பான அறிவு, பெற்ற பாடங்கள் என்பவற்றை வாய் மொழி மட்டுமல்ல எழுத்திலும் எழுதி வைத்துவிட்டு போகவேண்டும். எப்படி அன்று யூதர்கள் மற்றும் பூர்வீக குடிமக்கள் செய்தார்களோ அதுபோல் வரலாற்றை அடுத்ததைமுறைக்கு சொல்லுவது மிகவும் அவசியம். அது உங்கள் பணி, கடமை (moral obligation). நடந்த விடயங்கள் பற்றிய நியாங்கள், உண்மை, சரி/பிழையை அந்த வரும் கால சமூகம் தங்கள் வாழ்கிற கால நீரோட்டத்துக்கு ஏட்ப தீர்மானிக்கட்டும். நீங்கள் அது பற்றி அதிகம் யோசிக்கவேண்டியதில்லை.
  14. "வருகின்ற சில இந்திய மாணவர்களும் தம்மை ஏற்கனவே இருக்கின்ற சமூகத்தோடு கட்டமைக்காமல் 'இந்தியப் பெருமை'களில் சிக்கிச் சீரழிந்து 'நுணலும் கெடும் தன் வாயால்' என்கின்றமாதிரி இங்கே ஆகிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் ஒரளவு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். " ஏன் முழுமையாக ஒப்புக்கொண்டால் இனத்துவேசம் என்ற வலையை பாவித்து வேலைத்தளங்களில் இருந்து பொது இடங்களில் வரை இவர்களின் நடத்தைக்கு உங்களால் காரணம் கட்பிக்க முடியாது என்பதாலா? அல்லது சக இந்தியர்களே இவர்களை வெறுக்கிறார்கள் என்ற உண்மையை முழுக்க புதைக்க இந்த கதையா? இவர்கள் வெள்ளையர்கள் பெருமான்மையான நாடுகளில் மாத்திரமா இப்படி செய்கிறார்கள்? சிங்கப்பூரில் இந்திய உல்லாசப்பயணிகளின் நடத்தை எவ்வாறுள்ளது? பாலி (Bali), இந்தோனேசியாவில் என்ன செய்தார்கள்? அந்த நாட்டு மக்களோடு கதையுங்கள். அவர்கள் இந்தியர்கள் தங்கள் ஹோட்டல்களில் வந்து தங்குவதை வெறுக்கிறார்கள். வெறுப்பவர்கள் மேலை நாட்டவர்கள் அல்லர். நான் இலங்கையர் என்று அறிந்ததும் உற்ற நண்பன் போல பழகுவார்கள். அவர்கள் இஸ்லாமிய சகோதரர்களாகள், நான் இந்து என்பதட்காக என்னை வேறுபடத்தவில்லை. மாறாக தங்களது வாகனத்தில் ஏத்தி பல இடங்களுக்கும் கொண்டு போவார்கள். வாகனத்துக்கு பணமும் வேண்டமாட்டார்கள். நாங்கள் உணவு, பொருட்கள் என்று அவர்களுக்கு வேண்டி உபசரிப்போம். அவர்களிடம் இருந்து பலவற்றை அறிந்துளோம். வெட்கப்படுகிறோம் (personally embarrased). "இப்போது நாமிருக்கும் மாகாணத்தில் இந்தியர்கள் செறிவாக வாழும் சில நகரங்களில் இந்தியர்கள் செய்யும் 'அழிச்சாட்டியங்களை' படம்பிடித்து பொதுவெளியில் பலர் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். உண்மையில் இவை எல்லாச் சமூகங்களும் கனடிய நீரோட்டத்தில் கலக்க முன்னர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு போகும்போது செல்கின்ற பாதைதான். " தவறு. முதலில் உலகில் ஓரி பில்லியனுக்கு மேல் சனத்தொகை உள்ள நாடுகள் 2. இந்த நாடுகளில் இருந்து வந்து குவிப்பவர்களின் எண்ணிக்கையும் அதனால் அதிகம். அதேசமயம் அதிக எண்ணிக்கை என்பதனால் அவர்கள் தங்கள் புலம்பெயர் நாடுகளில் மிக கூடுதலான அளவு காலத்தை அந்த சமூக பின்னலுக்குள் தான் செலவழிக்கிறார்கள். அந்த வலையை விட்டு பெரும்பான்மை சமூகத்துடன் அவர்கள் தொடபு கொள்வது கூடுதலாக தொழில் மற்றும் பல்கலைக்கழகம் என்று அமைகிறது. பாடசாலைகள் கூட இவர்கள் நிறைந்து வாழும் பகுதி என்றால் அந்த கலாச்சார மாணவர்களையே கூடுதலாக கொண்டுள்ளது அவர்களது சமூக கலாச்சார இணைப்புகளும் அப்படியே. தொழில் இடங்களிலும் அவர்கள் தங்கள் சமூகத்தில் இருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இதைவிட தொடர் புலம்பெயர்தல் (chain migration) இந்த சமூகங்களில் எண்ணிக்கை அடிப்படியில் மிக அதிகம். இதன் விளைவு தாய்நாடு கலாச்சாரம், பண்புகள், நடத்தைகள் மேலும் மேலும் வேரூன்றுகின்ற நிலைமை. எனவே இவர்கள் புலம்பெயர் நாட்டின் நீரோட்டத்தில் கலக்க முன்னர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு போகும் பாதை மிக நீண்டது. இந்தியர்கள் தங்கள் நாட்டை ஒரு வல்லரசு என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு ஏன் இடம்பெயருகிறார்கள்? ஒரு வல்லரசு என்று சொல்லிக்கொண்டு எதட்காக பிரஜாவுரிமைக்க 10-20 வருடம் வரிசையில் நிக்கிறார்கள்? எல்லாவற்றிக்கும் காலனித்துவ ஆடசியா காரணம்? காலனித்துவ ஆட்சியில் இருந்து இரண்டாம் உலகமாகயுத்தையும் கண்ட சிங்கப்பூர் எப்படி உயர்ந்தது? அதே ஆட்சியில் இருந்து விடுபட்ட ஸ்ரீலங்கா எப்படி சின்னாபின்னமானது? நாங்கள் எப்பவும் எங்களை பாதிக்கட்டவர்கள் என்ற மனநிலையில் (victim mentality) வைத்துக்கொண்டு எங்களை பின்னோக்கி கொண்டு செல்கிற பழக்க வழக்கங்களையும், அரசியல் சமூக கலாச்சார வழிமுறைகளையும் விடமாட்டோம் என்றால் எங்கள் எதிர்காலம் எப்படி மாறும்? நாங்கள் விட்டு வந்த நாடுகள் எப்படி மாறும்? நாங்கள் வந்து குடியிருக்கிற நாடுகள் எப்படி பயனடையும்? நாங்கள் புலம்பெயர்ந்த நாடும் நாங்கள் விட்டு வந்த நாடுகள் போலாகிவிடுமல்லவா ? அதனால் எங்களது அடுத்த தலைமுறைக்கு நாங்கள் என்ன செய்துவிட்டு போகிறோம்
  15. நன்றி வசீ ஏக காலத்தில் இந்திய மற்றும் இலங்கை ஆங்கில ஊடகங்ளில் இது பற்றி வந்த செய்திகள். ஆய்வு கட்டுரைகள் த்விர்க்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்களின் கருத்துக்கள் இந்த செய்திகளில் உள்வாங்கப்படுள்ளது 1) Feb 20, 2014 - Sri Lanka dumps North's air links proposal with India - https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/sri-lanka-dumps-norths-air-links-proposal-with-india/articleshow/30741820.cms 2). Sept 20, 2018 - Lanka snubs India, says ‘no’ to handing over of Palali Airport - https://www.onlanka.com/news/lanka-snubs-india-says-no-to-handing-over-of-palali-airport.html காணி விவகாரங்களில் தமிழ் ஊடங்கள் தான் செய்திகளை வெளிக்கொணர்வது வழக்கம். ஆனால் சில ஆங்கில ஊடகங்கள் அவ்வப்போது இந்த செய்திகளை வெளியிடுகிறார்கள். இதோ The Leader: 3) Attempt to acquire private land for Palali Airport https://lankaleader.lk/news/7557-attempt-to-acquire-private-land-for-palali-airport
  16. பாவம் கட்டுரையாளர். எப்படியாவது சிறு சிறு கதைகளை எடுத்து முடிச்சு போட்டு எழுதி இவை தான் உறுதியான தகவல்கள் என்று என்ண வைத்துவிட்டார். வடக்குக்கும் இந்தியாவுக்கும் இடையில் விமான இணைப்பு தேவை என்று முதல் பிரேரணை Feb-2014 மாகாண சபை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது (NPC resolution demands transport links between North-East and India - https://www.tamilguardian.com/content/npc-resolution-demands-transport-links-between-north-east-and-india, - . ஆனால் அன்றைய மத்திய அமைச்சர் "இது ஒரு பகிடி" என கூறி பரிகாசம் செய்தார். பின்னர் மீண்டும் May-2017 ல் மாகாண சபை பிரேரணை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது (NPC calls for development of Palaly and KKS with India involvement - https://www.tamilguardian.com/content/npc-calls-development-palaly-and-kks-india-involvement) . இந்த அழுத்தம் இலங்கை Civil Aviation Authority of Sri Lanka அறிக்கையும் இந்தியா அமைச்சர் ஜெய் சங்கர் மைத்திரியுடன் 2016ல் கதைத்த பின்னரும் ஒன்றும் நடக்காமையினால் பின்னர் வந்த ரணிலுக்கு அழுத்தகம் கொடுக்க ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முதலாவது பிரச்னை இராணுவ பாவனைக்கு தமிழர்களிடம் இருந்து கபளீகரம் செய்யப்பட்ட காணிகளை அபிவிருத்தி என்ற பெயரில் விழுங்குவதை தமிழாரால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை (2013-2018) எதிர்த்தது. இந்த காணிகள் இன்றும் தமிழ் கார்டியன் (Tamil Guardian) 25-March-2024ல் (https://www.tamilguardian.com/content/palaly-residents-demand-return-their-occupied-lands) எழுதியபடி விடுவிக்கப்படவும் இல்லை, நஷ்ட ஈடு வழக்கப்படவும் இல்லை. இந்த காணிகள் அன்றைய பந்தோபஸ்து அமைச்சராக (Minister for National Security) வந்த லலித் அத்துலத் முதலி காலத்தில் இருந்து படிப்படியாக மக்களிடம் இருந்து கபளீகரம் செய்யப்பட்டவை. இன்றும் காணி விடயம் தீர்க்கப்படாமல்இருப்பது மட்டுமல்ல விடுவிக்கப்பட்ட இடங்களில் இருந்து மேலும் 500 acres பிடிக்க இலங்கை விமான அமைச்சு (Ministry of Aviation) தொடர்ந்து முயறசிக்கிறது. (From Tamil Guardian: According to some residents, out of 6000 acres, they had been given 3000 acres based on the assurance of Wickremesinghe. However, out of this 3,000 the government, particularly the Ministry of Aviation, has been trying to grab hold of 500 acres. ). அதேசமயம் அன்று ராஜபக்ஷ அரசு அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் காணிகளை கபளீகரம் செய்து தனது இராணுவத்தை பயன்படுத்தி கட்டிட நிர்மாணம் மற்றும் மக்களின் சிவில் நிர்வாகத்தில் இராணுவ கவனர் இருந்து அரச சேவை மற்றும் வைத்திருத்த காலம் (Militarised Civil Service, Militarsied commercial/Industrial actvities) . இவற்றை எல்லாம் புறம் தள்ளி கட்டுரையாளர் ஏதோ மாவையும் சுமந்திரனும் கூரை ஏறி வைகுண்டம் போன கதை எழுதுகிறார் 2019ல்.!! இரண்டாவது நான் சிலவருடங்களுக்கு முன் எழுதியது Air Lanka வுடன் மாகாணசபை பேர்ச்சுவார்தை நடத்தி Long Haul/Wide Body விமானகள் சேவை செய்ய தேவையான விடையங்கள் (sample list in English atached) பற்றி ஆராயப்பட்டு அவை இனம் காணப்பட்டன. குறிப்பாக எரிபொருளை கொழும்பில் இருந்து கொண்டுவருதல், எரிபொருளை சேமித்து வைத்தல், எரிபொருள் நிரப்புதல், விசேட தீயணைப்பு வாகனகள்/ உபகாரணகள் மற்றும் அவசர தேர்வைகளுக்கான விமான திருத்துதல் போன்ற விடயங்கள் கண்டறியப்பட்டன. இந்த விடயங்கள் ஒரு விமானநிலையம் குறிப்பிட்ட தர விமானங்கள் பாதுகாப்பாக இயங்க உரிய தகுதிகளை கொண்டது என பதிவு செய்ய மிகவும் தேவையானது (IATA Airport Certification and Infrastructure Standards) . இந்த விடயங்களை கையாள்வது மத்திய அரசின் பொருப்பு. ஆனால் நடக்கவில்லை. இது தவிர வேறு விடையங்கள், விமானம் பறக்கும் பாதை (Flight path/Fuel Dumping) , மக்கள் குடியிருப்புகளுக்கு இரைச்சலால் (Aircraft Noise) பாதிப்புக்கள் போன்ற பல விடயங்களும் ஆய்வில் இருந்தன. இது ஒரு நீண்டகால திட்டம் எனவே எதிர்கால விடயங்கள் பற்றியும் சிந்திக்க வேண்டி இருந்ததது மூன்றாவது இந்திய அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari), இலங்கைக்கு கடலுக்கடியிலான சுரங்கம் அமைத்து சார்க் நாடுகளை (SAARC) இணைப்பதில் ஆற்வம் காட்டினார். இதில் இரண்டு பிரச்சனைகள். 1. இலங்கை பேரினவாதிகள் வடக்கு முழுமையாக இந்தியாவின் கையில் சென்றுவிடும் என்று எதிர்த்தார்கள். 2. இந்திய இப்படியான ஒருதிடத்தை தொடங்கினாள் அது விமான சேவைக்கான வருமானத்தை குறைக்கும் என்றும் ஒருபகுதி குறைபட்டு கொண்டார்கள் (increased invesment uncertinity). நான்காவது பயணிகள் நேரடியாக பலாலியில் இறங்கினால் உள்ளக விமான சேவை நிறுவனர், மற்றும் ரயில, பஸ் வருமானம் குறையும் என்று இனொரு தரப்பு எதிவாதம் புரிந்தது. இந்த விடயம் பற்றி நிறைய எழுதலாம். ஆனால் இது தான் சுருக்கமாக நடந்த விடயங்கள். Sample List of Issues: 1. Strengthen and refurbish the remaining portion of the runway for its full length 2. Establish a Runway Strip and Runway End Safety Area (RESA)clear of obstacles as per ICAO requirements 3. Construct a Parallel Taxiway and interspaced intersections to the runway in the North Western part of the Runway 4. Construct an Aircraft Parking Apron in the West of the Runway 5. Resurface the present taxiway system and parking stands to enhance parking space. 6. Construct a Control Tower with Suitable height 7. Construct a Terminal Building and provide related facilities 8. Construct a new fire station 9. Construct a Power Station with all necessary electrical installations 10. Install Runway/Taxiway Lighting System and Approach Lighting System 11. Construct a Cargo Building 12. Install a VOR and DME as homing device for aircraft 13. Provide PBN procedures charts for arrivals and departures 14. Install a Precision Approach Landing System (ILS) 15. Construct a Hanger with Aircraft Maintenance Facilities 16. Identify and develop suitable access Roads to airport 17. Develop an area for Pubic parking facilities 18. Provide Water and electricity supply to the airport 19. Provide Railway connection to airport – Jaffna KKS line extension 20. Provide facilities for Aviation Fuel supply 21. Provide Sufficient accommodation facilities for staff
  17. இதோ பாருங்கள் இந்திய தரத்துக்கு தரமுயர்த்தப்ட்ட பலாலி சர்வதேச விமான நிலையத்தை. நிமிடம் 25:45 இல் இருந்து பாருங்கள் https://www.youtube.com/watch?v=2qX7NHUj2Zg
  18. அட பாவி. அவ இங்க களத்துக்கு வரட்டுக்கும். இருக்கிது சாத்து 😋
  19. எங்களுக்கும் இதே கனவு. வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. எழுதுங்கள் சுமே. உங்கள் நண்பி இந்த யாழ் பக்கம் வந்தால் என்ன நடக்குமோ என்று ஒரு ஆதங்கம் 😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.