Everything posted by தமிழன்பன்
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
இருக்கின்ற எல்லாமே உதவாது , அதில் சிறிதரனால் தமிழருக்கு ஆபத்து குறைவு. அறிவாளிகளான நீலன் வழியில் சுமந்திரன் வந்தால் . ரணிலுக்கு வேலை சுகமாகிவிடும் அவ்வளவுதான் . தேசியம் இல்லாது போய்விடும் மற்றும் , புலி எதிர்ப்பு பலமாகிவிடும்.
-
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடக்கின்றனர் –கருணா அம்மான்
முதலில் ஒற்றுமையை இந்தாள் கதைக்கிறரர் , 150000 மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்த கொலையாளி . இவரை அம்மான் என்று தயவு செய்து எழுத வேண்டாம் . அந்த தகுதியை இழந்து ரொம்ப நாளாகிவிட்டது .
-
கணினியை அதிக நேரம் பயன்படுத்துபவர் நீங்கள் என்றால் இது உங்களுக்கானது!
தொலைபேசி மற்றும் கணினியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரித்துச் செல்கிறது. தற்காலத்தில் கணினியை பயன்படுத்துவது முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், அதே நேரத்தில் கணினியில் இருந்து வெளிப்படும் கதிர்களிடமிருந்து கண்களைப் பாதுகாத்துக் கொள்வதும் மிக அவசியமே. தொடர்ச்சியாக கணினியை பயன்படுத்துவோர் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அதில் முக்கியமாக பார்வைக் கோளாறுகள், தலைவலி, ஒளியை காணும்போது கண் கூசுதல், மந்தமான பார்வை,கண்வலி, கழுத்து மற்றும் பின் முதுகுவலி, நிறங்கள் மங்கலாக தெரிதல், கண் உலர்ந்து காணப்படுதல், மற்றும் கண் எரிச்சல் போன்றவை, கண்களுக்குரித்தான பிரச்சினைகள். மேற் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு, ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ என்று பெயர். கணினியைப் பயன்படுத்தும், 80 சதவீத பேருக்கு இந்த, ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ வர வாய்ப்பு உள்ளது. சிறு வயதிலேயே கணினியை உபயோகிக்கும் குழந்தைகளுக்கு, கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுகிறது. கணினியை, கண் பார்வையில் இருந்து, 20 முதல் 26 இன்சுகள் தள்ளியிருக்கும்படி, அமைத்துக்கொள்ள வேண்டும். கணினி இருக்கும் அறையில், வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்வதுடன், ‘பளீர்’ என்ற வெளிச்சமோ, மங்கலான வெளிச்சமோ இல்லாமல், மிதமான வெளிச்சமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக கணினியை பயன்படுத்தி, கண் சிமிட்டல் குறைந்து போனவர்கள், அடிக்கடி சிமிட்டலை தொடர வேண்டும். அதுமட்டுமின்றி கண்களை மூடி, வட்டச் சுழற்சி முறையில், ஒரு முறை சுழற்றி, மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, பின்னர் கண்களை திறந்து, மூச்சை மெதுவாக விட வேண்டும். * இவ்வாறு செய்து வருவதால், நாளடைவில் கணினி பயன்பாட்டாளர்கள் அனைவரும் கண் பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (ஐ) https://newuthayan.com/article/கணினியை_அதிக_நேரம்_பயன்படுத்துபவர்_நீங்கள்_என்றால்_இது_உங்களுக்கானது!
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
கோவைக்காய் ஆதிகாலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கோவைக்காய் தீவிரமில்லாத சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தி நல்ல பலனை தரக்கூடியது. இந்த கோவைக்காயை நாம் அன்றாட உணவுகளில் அதிகளவு சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு தேவையான அளவுக்கு ஆரோக்கியத்தை பெற முடிவதோடு, பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 30 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும். அதுமட்டுமின்றி பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம்.கோவைக்காய் பித்தம், இரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். (ஐ) https://newuthayan.com/article/சர்க்கரைநோயின்_எதிரியாகும்_ கோவைக்காய்!
-
பனஞ்சீனியின் மருத்துவ பலன்கள்.
சீனியை விட பனஞ்சீனியும், தேனும் ஒருவகை இனிப்பு மருந்தாகும். வெள்ளை சீனியியை வெள்ளை நிறத்திற்கு கொண்டு வர பல கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றன. பனஞ்சீனி என்பது கரும்புச்சாறில் இருந்து வெல்லப்பாகை எடுத்து தயாரிக்கப்படும் சீனி ஆகும். பனஞ்சீனி இயற்கை நிறம் மற்றும் மணத்துடன் கிடைப்பதால் அதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கின்றன. அன்றாட வாழ்வில், பனஞ்சீனியை பயன்படுத்துவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகளை பற்றி விரிவாக பார்க்கலாம். * பனஞ்சீனியில் விற்றமின்-பி6, நியாசின் மற்றும் பாந்தோதெனிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சரும செல்களுக்கு புத்துணர்ச்சியூட்டவும், இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்கும். * பனஞ்சீனியால் சருமத்தை ஸ்க்ரப் செய்வதன்மூலம், இறந்த செல்கள் சரும துளைகளில் படிந்திருக்கும் அவற்றை நீக்கும். மேலும் அழுக்கு மற்றும் தூசுக்களை அகற்றி, பளபளப்பான சருமத்தைப் பெற உதவும். * பனஞ்சீனியில் குறைந்தளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க மற்றும் பராமரிக்க இது பெரிதளவில் உதவுகிறது. மேலும், இதில் பசியைக் கட்டுப்படுத்தும் திறன் இருப்பதால், எடையை குறைக்க உதவுகிறது. * பனஞ்சீனியில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு மற்றும் வலிகளைப் போக்கவும், வயிற்றுப் பிடிப்புகளைப் போக்கவும், வலியைக் குறைக்கவும், பனஞ்சீனி பயன்படுகிறது. (ஐ) https://newuthayan.com/article/நாட்டுச்_சர்க்கரையின்_மருத்துவ_பலன்கள்.
-
'மீன் எண்ணெய் மற்றும் அதன் நன்மைகள்..''
மீன் எண்ணெய் என்பது சால்மன், டுனா, கானாங்கெளுத்தி அல்லது ஹெர்ரிங் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களின் திசுக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு துணைப் பொருளாகும். மீன் எண்ணெயில் இரண்டு குறிப்பிடத்தக்க ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த மீன் எண்ணெயின் பயன்கள் என்னவென்று தற்போது பார்க்கலாம். * கொழுப்பு மீன்களில் ஒமேகா-3 உடலிலுள்ள வீக்கத்தின் பல கூறுகளை ஓரளவு தடுக்கும். * மூளை மற்ற அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. * மீன் எண்ணெய் கூடுதல் மனச்சோர்வுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். * ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் பயன்பாடு அபாயகரமான மாரடைப்பு அபாயத்தை 9% குறைக்க உதவும். * எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது. * அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. * தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. * கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. (ஐ) https://newuthayan.com/article/'மீன்_எண்ணெய்_மற்றும்_அதன்_நன்மைகள்..''
-
குற்றங்களுக்கான வக்காலத்து! ஆதவன்.
'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்று கனவுகண்ட பாரதி, இன்று யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தால் 'நல்ல காணி உறுதியுடன் காணிநிலம் வேண்டும்' என்றுதான் பாடியிருப்பார். அந்தளவுக்கு உறுதியில் கூட மோசடி செய்து காணிகள் பரவலாக விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒருவரின் பெயரில் உள்ள காணிகளை இன்னொருவரின் பெயருக்கு மோசடியான முறையில் மாற்றி பின்னர் அதனை அப்பாவிகளின் தலையில்கட்டிவிட்டு தலைமறைவாதல், வெளிநாடுகளில் உள்ளோரின் காணிகளுக்கு கள்ள உறுதி செய்து விற்பனை செய்தல், அரச காணிகளை தனியார் காணிகள்போல காட்டி அதற்கும் உறுதி தயாரித்து விற்றல், வெள்ளம் கடல்போல தேங்கக்கூடிய பகுதிகளையெல்லாம் ஒப்பனை செய்து நல்லகாணி என ஏமாற்றுதல் என்றெல்லாம் காணி மோசடிகளின் வகைகள் நீண்டு கொண்டே செல்கின்றன. இந்த மோசடிகளில் சிக்கி, கோடிக்கணக்கில் பலர் தங்கள் பணத்தைத் தொலைத்திருக்கிறார்கள். காணி மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்கென விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்படுமளவுக்கு, நாளொரு காணியும் பொழுதொரு மோசடியுமாக இந்த நிலைமை தொடர்கின்றது. இவ்வாறான காணிமோசடிகளில் தனிநபரோ அல்லது நிறுவனமோ மாத்திரம் சம்பந்தப்படுவதில்லை. இந்த மோசடிக் குழு மிகப் பரவலான, நுண்ணிய கண்ணிகளால் பின்னப்பட்ட வலைப்பின்னலைக் கொண்டது. குறிப்பாக கள்ள உறுதி தயாரித்தல், வெற்றுக் காணிகளை இனங்காணல், கையழுத்தைப் போலியாகப் போடுதல், தனியாரின் காணிகளோடு அருகில் இருக்கும் அரசகாணியையும் சேர்த்து உறுதிக்குள் உள்ளடக்குதல் என்று மிகமுக்கியமான பங்களிப்பை இந்த மோசடியில் செய்வது நொத்தாரிஸுகள்தான். அதுவும் நொத்தாரிஸுப் பணியைச் செய்யும் சில குறிப்பிட்ட சட்டத்தரணிகளே இந்தக் காணிமோசடிகளின் மூளைகளாகவும் தொழிற்படுகின்றனர். சட்டத்தின் ஓட்டைகள் எவையெனக் கண்டறிந்து, அதற்கேற்ற வகையில் இலகுவில் எவராலும் இனங்காணவோ, வழக்குத்தொடுக்கவோ முடியாத ஏற்பாடுகளை உறுதியில் உள்ளடக்குவதில் இந்தச் சட்டத்தரணிகள் கில்லாடிகள். பல வழக்குகளில் சட்டத்தரணிகள் மீதுதான் முதன்மையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில சட்டத்தரணிகள் காணிமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலரோ தாம் கைதாவதில் இருந்து தப்பிக்க முன்பிணையெடுத்து தப்பிக்க முயல்கின்றனர் இத்தகையதொரு சூழமைவில்தான், யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், சட்டத்தரணிகள் எதிர்நோக்கும் சில விடயங்களை முறையிட்டிருக்கிறது சட்டத்தரணிகள் குழுவொன்று. அவ்வாறு முறையிடப்பட்ட விடயங்களுள், காணிமோசடி தொடர்பில் உறுதிகள் தொடர்பான போதிய அறிவின்மை காரணமாகப் பொலிஸார் தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். சட்டத்தரணிகளைக் கண்ணியமற்ற, அவகாசம் எதுவுமற்ற வகையிலே பொலிஸார் கைது செய்கின்றனர்' என்பதுவும்முக்கியமானது. எத்தனையோ பிரச்சினைகள் நாட்டில் இருக்க, இந்தச் சட்டத்தரணிகள் குழு, ஒரு மோசடிக்கும்பலுக்கு வக்காலத்து வாங்கும் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைப்ப தென்பது எவ்வளவு அபத்தமானது. காணிமோசடி என்பது இயல்பாக நடக்கும் விடயமல்ல. இதுவொரு திட்டமிட்ட குற்றச்செயல். அந்தக் குற்றங்களில் ஈடுபடாமல் தங்கள் கைகளை சட்டத்தரணிகள் சுத்தமாக வைத்திருந்தால், ஏன் பொலிஸார் அவகாசம் இல்லாமல் கைதுசெய்யப் போகின்றனர்? ஏன் கண்ணியமில்லாமல் நடக்கப் போகின்றனர்? அவகாசம் கொடுத்தால், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி மோசடிகளை அவர்கள் திசைதிருப்பவும் கூடும் என்பதாலேயே பொலிஸார், மின்னாமல் முழங்காமல் திடீரென இத்தகைய மோசடிச் சட்டத்தரணிகளைக் கைதுசெய்கின்றனர். சட்டத்தரணிகள் தவறு, மோசடிகளைச் செய்யாமல் கண்காணித்தாலேயே, அவர்களின் கண்ணியமும், மேன்மையும் குன்றாமல் இருக்கும். அதைவிடுத்து, மோசடிக்காரர்களுக்காக ஜனாதிபதியிடம் சென்று முறையிடுவதெல்லாம் நீதியான காரியமல்ல. மோசடியில் ஈடுபடுவது மாத்திரம் குற்றமல்ல, அதற்குத் துணையாக, அரணாக நிற்பதும் குற்றமே. (ச) https://newuthayan.com/article/குற்றங்களுக்கான_வக்காலத்து!
-
கொழும்பை நோக்கி நான்கு விரல்கள்...
காஸாப் பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்று பத்துக்கும் மேற்பட்ட மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து வலியுறுத்தியிருக்கின்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. ஒருநாட்டை நிறுவி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணமுடியாது என்றும், இரண்டு நாடுகள் நிறுவப்பட்டு அந்த இரண்டு நாடுகளும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்படுவதன் ஊடாகவே இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மனோநிலையால், காஸா முனையில் ஏற்பட்டுள்ள போர்நிலை தொடர்பிலும் அங்கு தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பிலும் தற்காலத்தில் உலகெங்கும் விவாதங்கள் தீவிரம்பெற ஆரம்பித்திருக்கின்றன. இது எப்போதோ ஆரம்பித்த காரியம்தான் என்றபோதிலும், உலகநாடுகள் - குறிப்பாக மேற்கத் தேய தேசங்கள் - தங்களின் ‘இராஜதந்திரக்' கொள்கைகளில் தளர்வுகளை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த விவகாரம் தற்போது பற்றியெரியத் தொடங்கியிருக்கின்றது. "இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மனோநிலை தவறு. கிழக்கு ஜெருசலேமை மையமாகக்கொண்ட பலஸ்தீனத்தை இஸ்ரேல் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளவேண்டும். 'இரு நாடுகள்' என்ற கொள்கைதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு" என்பதை உலக நாடுகளின் தலைவர்கள் தற்காலத்தில் எந்தச் சமரசமும் இன்றி ஏற்றுக்கொண்டு வரும் பின்னணியில், அதே கருத்தை மேற்கத்தேயநாடுகளின் சிந்தனையின் பாற்பட்டு - தனது பங்குக்கு பிரதி யெடுத்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பானது பின்புலமின்றிய விடயமல்ல. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் நேட்டோ கூட்டணியிலுள்ள இராணுவ வல்லா திக்கத்தைக் கொண்ட நாடுகளின் அனுசரணையில்தான் இஸ்ரேல் இந்தத் தீவிரமானதும் - கொடூரமானதும் மிருகத்தனமானதுமான ஆக்கிரமிப்பை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில், பலஸ்தீனத்தின் பக்கமுள்ள நியாயப்பாட்டை ‘நாணயங்களால் நெய்யப்பட்ட வர்த்தகச் சுழற்சிக்கு அப்பாற் பட்டு தெரிவித்தமைக்காக ரணிலை ஒருமுறை பாராட்டலாம். ஆனால், பலஸ்தீனத்துக்காக உருகும் ரணில், இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்ன நடவடிக்கையை முன்னெடுத்தார் என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாததாகின்றது. இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமானது என்ற சித்தாந்தமே 30 ஆண்டுகளாக இந்தத் தீவு குருதிச் சகதிக்குள் குளித்தெழும்பக் காரணமானது. இதிலிருந்து எந்தப் பாடத்தையும் இலங்கை இன்னமும் கற்றாக வில்லை. தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுதல், சிங்களப் பேரினவாதத் திணிப்பு, தமிழர்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்க மேற்கொள்ளப்படும் முனைப்பு, மேய்ச்சல் தரவைகள் பறிக்கப்படுதல், தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்படுதல் என இஸ்ரேலிய மனோநிலைக்கு இம்மியும் குறைவில்லாத விடயங்களே தமிழர் தாயகத்தில் இன்று இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கைக்குள் இன்னமும் தீர்க்கப்படாத - தீர்க்கப் படவிரும்பாத பிரச்சினைகள் எத்தனையோ இருக்கும் போது, இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு இடையிலான மத்தியஸ்தம் என்பது தேவையற்றதொன்று. இஸ்ரேலை அல்லது ஹமாஸை நோக்கி ரணில் ஒரு விரல் நீட்டும் போது இதர நான்கு விரல்களும் கொழும்பை நோக்கியவாறே இருக்கின்றன. இந்தப் புரிதலை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொள்ளட்டும். தான் மேற்கத்தேய செல்லப்பிள்ளை என்பதற்காக, இலங்கையும் மேற்கத்தேய நாடுகளின் தகுதியுடன் - திராணியுடன் இருக்கின்றது என்று ஜனாதிபதி எண்ணிவிட்டார்போலும். (ச) https://newuthayan.com/article/கொழும்பை_நோக்கி_நான்கு_விரல்கள்...
-
நாட்டின் வங்குரோத்திற்கு காரணமானவர்களென பெயரிட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 2மாதங்கள் கடந்தும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை - சஜித்
அடுத்த தேர்தலில் வென்று அவர்கள் எல்லாருக்கும் தண்டனை கொடுங்கள் பார்ப்பம் சஜித்
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
சிறிதரனை காட்டிலும் சுமந்திரன் வருவது நல்லம். இருவரும் கிட்டத்தட்ட ஒரே மட்டைகள்
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இவரின் வாக்கு வங்கி இந்தமுறை சொல்ல வேண்டியதில்லை , அடுத்த காமெடியன்
-
மிரண்டு காட்டிய சாதுகள்!
ஒரு நாட்டுக்கு - சமூகத்துக்கு அபிவிருத்தி என்பது தவிர்க்கப்பட முடியாததுதான் ஆனால், அந்த அபிவிருத்தியின் அடிப்படை சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்று ஜனாதிபதி ரணிலிடம் ஆணித்தரமாகத் தெரிவித்திருக்கின்றனர் சர்வ மதத் தலைவர்கள். வடமாகாணத்துக்கு நான்கு நாள்கள் பயணமாக கடந்த நான்காம் திகதி வந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றார். இந்தத் தொடர் சந்திப்புகளின் துணை நிகழ்வாக மதத்தலைவர்களையும் அவர் நேற்றுமுன்தினம் சந்தித்தார். இதன்போதே, உண்மையான அபிவிருத்தி என்றால் என்ன? அபிவிருத்தி எப்போது அதன் இலக்கை அடைந்து கொள்ளும்? இனங்களுக்கும் மதங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் இல்லாமல் மேற்கொள்ளப்படும். அபிவிருத்திகள் உண்மையில் அபிவிருத்தி தானா? என்ற புரிதலை ஜனாதிபதியிடம் நேர்படச் சொல்லியிருக்கின்றார்கள் சர்வ மதத் தலைவர்கள். எல்லாவற்றுக்கும் மேல், ஜனாதிபதி வரும்போது எழுந்துநின்று, கும்பிடுபோட்டு வரவேற்கும் மரபை அவர்கள் கைவிட்டிருக்கின்றனர். இருந்த இருக்கையிலிருந்து இம்மியும் நகராமல், 'பௌத்த மேலாதிக்கம்' எவ்வாறு ஜனாதிபதியை அணுகுமோ அதே சிந்தனையின் பாற்பட்டுத்தான் 'எங்கள்' சர்வமதத் தலைவர்களின் உடல் மொழியும் அமைந்திருந்தது. எழும்பவுமில்லை குனியவுமில்லை வளையவுமில்லை வரவேற்கவுமில்லை. 'உங்கள் மீது நாங்கள் உச்சக்கட்ட அதிருப்தியில் இருக்கின்றோம்' என்று தங்களின் சொல்லாலும் செயலாலும் ஜனாதிபதியிடம் தெட்டத்தெளிவாக வெளிப்படுத்திய 'கெத்துக்காக" சர்வமதத் தலைவர்களை எத்தனை பாராட்டினாலும் அது தகும். ஜனாதிபதி ரணிலின் வடக்குக்கான பயணம், தேர்தலுக்கான நாடிப்பிடிப்பாகத்தான் உள்ளது. அது பட்டவர்த்தனமானது. ஆதலால், மதத்தலைவர்கள் கொண்டிருக்கும் அதிருப்தியைத்தான் மக்களின் நிலைப்பாடாக அவர் கொள்ள வேண்டும். இங்கு ஏராளம் அரசியல் கட்சிகள் இருக்கலாம். அவற்றுக்கு இடையிலான கொள்கைகள் வேறுபடலாம், யாப்புகள் வெவ்வேறாக வரையறுக்கப் பட்டிருக்கலாம். கட்சிகளின் வர்ணக்கொடிகளின் கீழ் வடக்கின் சிறுபான்மை மக்கள் பிரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், மதத்தலைவர்கள் அவ்வாறான பிரிவினைக்கு உட்பட்டவர்கள் அல்லர். சிங்களப் பேரினவாதம் கொத்துக் குண்டுகளைப்போட்டு பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தபோது தமிழர்களுக்கு அரணாக எத்தனையோ அருட்தந்தையர்கள் நின்றிருக்கின்றார்கள், மடிந்திருக்கின்றார்கள். அவர்களின் சாவு தனியே கத்தோலிக்கர்களுக்கானதாகவோ இந்துக்களுக்காகவோ இருக்கவில்லை. மாறாக 'அனைத்து' மக்களுக்குமானதாகவே இருந்தது. இன்று இந்து மதத் தலைவர்களும் தமிழ்த் தேசியப்பரப்பில் முழுவீச்சுடன் இயங்குவதைக் காண்கின்றோம். அவர்களின் இயங்குநிலை இந்துக்களை மையப்படுத்தியதாக இல்லை. மாறாக அனைவருக்குமானதாகவே இருக்கின்றது. ஆதலால், 'அனைவருக்குமானவர்கள்' வெளிப்படுத்திய இந்த நிலைப்பாடுதான் மக்களின் நிலைப்பாடு அதில் மாற்றுச் சிந்தனையொன்றை கிஞ்சித்தேனும் ரணில் ஏற்படுத்துவாரெனில், அது தேர்தலில் தனக்குத்தானே வெட்டிக்கொள்ளும் குழிபோன்றதே. பௌத்த பேரினவாதத்தின் கோரப்பற்கள் இக்காலத்தில் அனுதினம் தமிழர் தாயகத்தையும் தமிழ்த் தேசியத்தையும் இரையாக்கிக் கொண்டிருக்கின்றது. மக்கள் வாழ்வதற்கு அச்சப்படுகின்றனர். இந்தச்சூழமைவில் வடக்கு மாகாணத்திலிருந்து இந்தியாவுக்கு மின்சாரம் விற்கப்படுவதை தமிழர்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக, சிறுபான்மை இனங்களை உச்சபட்ச சகிப்புத்தன்மையுடன் அணுகக்கூடிய, ஒருதாய் மக்களாக இலங்கையர்கள் வாழக்கூடிய ஏதுநிலைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழர்களின் முதல்கட்ட வேணவாவாக இருக்கின்றது. எம் 'மெய்க்காப்பாளர்களான மதத்தலைவர்கள் வெளிப்படுத்திய கருத்தும் அதுவே.(ஐ) https://newuthayan.com/article/மிரண்டு_காட்டிய_சாதுகள்!
-
பருத்தித்துறை பொலிஸாரால் ஒரு தொகுதி கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பொலிசாரால் ஒரு தொகுதி கஞ்சா இன்று(08) திங்கள்கிழமை அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்கவிற்க்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம் இடம் பெறும் கடற்கரையில் நீருக்கு அடியில் பதுக்கிவைத்திருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா மீட்டெடுக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/பருத்தித்துறை_பொலிஸாரால்_ஒரு_தொகுதி_கஞ்சா_மீட்பு!
-
காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!
வவுனியாவில் அரச தலைவர் வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றாவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை வருகை தந்த அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். அரச தலைவரின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றா மற்றும் போராட்டத்தினை காணொளி எடுத்த மீரா ஜாஸ்மின் ஆகிய இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றாவுக்கு போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற கட்டளையினை அவமதித்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வவுனியா பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றாவை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் போராட்டத்தினை காணொளி எடுத்த பெண்ணிற்கு பிணை வழங்கியும் வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இன்று (08) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி சி. ஜெனிற்றாவுக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://newuthayan.com/article/காணாமல்_ஆக்கப்பட்ட_சங்கத்_தலைவிக்கு_விளக்கமறியல்_நீடிப்பு!
-
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மூலம் தமிழர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும்- அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்
பொது வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதன் மூலம் தமிழர்கள் உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தமது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும் என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் புதிய ஆண்டில் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. இதில் தமிழர் தரப்பு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பற்றிப்பேசி அதில் இணக்கம் காண்பவரை ஆதரிப்பது, தமிழ்த் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது, தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஸ்கரிப்பது என்று மூன்று விதமான அபிப்பிராயங்கள் உள்ளன. இதில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதன் மூலம் தமிழர்கள் உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தமது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும் என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு அதன் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (31.12.2023) கோண்டாவிலில் நடைபெற்றது. இவ்வுரையரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நிலாந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ்த் தரப்பு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுடன் பேசினாலும் எவரும் வெளிப்படையாகத் தமது வாக்குறுதிகளைத் தரப்போவதில்லை. தமிழர் தரப்புக்கு ஆதரவாகக் காட்டிச் சிங்கள மக்களின் வாக்குகளை இழப்பதற்கு அவர்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள். வெளிப்படையாகத் தராத எந்தவொரு உத்தரவாதமும் தேர்தலின் பின்னர் கண்டுகொள்ளப்படாது என்பதே கடந்த கால வரலாறு. சரத் பொன்சேகாவைத் தமிழர்கள் ஆதரித்ததன் மூலம் மஹிந்த ராஜபக்சவையே இறுதியில் வெல்ல வைக்க முடிந்தது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். ஒப்பீட்டளவில் தமிழ்த் தரப்பின் முன்னால் உள்ள தெரிவு பொது வேட்பாளர்தான். இதில் ஒருபோதும் தமிழ் வேட்பாளர் வெற்றிபெறப் போவதில்லை. ஆனால், தாம் விரும்பம் அரசியல் தீர்வை வெளிப்படையாக முன்வைத்துத் திரளான தமிழ் வாக்குகளைப் பெறுவதன் மூலம் தமது அபிலாசையை வெளிப்படுத்த முடியும். இது சமஸ்டியாகவும் இருக்கலாம் தனி நாடாகவும் இருக்கலாம். ஒருவகையில் இதனைத் தமிழ் மக்களிடையே நடாத்தப்படும் பொது வாக்கெடுப்பாகக்கூடக் கருதலாம். ஆனால், இதன் வெற்றி என்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் வாக்குகளைக் திரட்டக்கூடிய ஒரு பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதிலேயே தங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/172895
-
2023 ஆம் ஆண்டு 14,66,556 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை (இராஜதுரை ஹஷான்)
2023 ஆம் ஆண்டு 14,66,556 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். இந்த ஆண்டு சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த வேளை நாட்டுக்கு சுமார் 719,978 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகை தந்திருந்தனர். எரிபொருள் தட்டுப்பாடு, மின்சார விநியோகம் துண்டிப்பு மற்றும் சமூக கட்டமைப்பின் அமைதியின்மை ஆகிய காரணிகளால் சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்ததாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிடுகிறது. 2023 ஆம் ஆண்டு பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை ஒவ்வொரு மாதமும் உயர்வடைந்துள்ளன. கடந்த ஆண்டு மாத்திரம் 14 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள். சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கு சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு பல விசேட செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தியது. பல நாடுகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டன. இதற்கமைய இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை எதிர்பார்த்துள்ளது. https://www.virakesari.lk/article/172872
-
பெறுமதிசேர் வரி அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறைவடையும் - அரசாங்கம் (எம்.மனோசித்ரா)
பெறுமதிசேர் வரி அதிகரிப்பால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டின் பின்னர் படிப்படியாக குறைவடையும். எனவே கடந்த ஆண்டைப் போன்று இவ்வாண்டும் மக்கள் அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கேட்டுக் கொண்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த கோரிக்கையை முன்வைத்த அவர், மேலும் குறிப்பிடுகையில், 2023 மூன்றாம் காலாண்டிலிருந்து பொருளாதார வளர்ச்சி வேகமானது நேர்மறையாகியுள்ளது. அதற்கமைய 2022இல் மறை பெறுமானத்துக்கு வீழ்ச்சியடைந்த பொருளாதார வளர்ச்சி வேகம் 2023இல் சராசரியாக 3 வீதத்தால் அதிகரித்துள்ளது. அத்தோடு சர்வதேச நாணய நிதியத்தினால் இரண்டாம் கட்ட கடன் தொகை அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற 337 மில்லியன் டொலர், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கிடைக்கப் பெற்ற 220 மில்லியன் டொலர் மற்றும் உலக வங்கியிடமிருந்து கிடைக்கப் பெற்ற 250 மில்லியன் டொலர் என்பவற்றுடன் தற்போது 4 பில்லியன் டொலருக்கும் அதிக அந்நிய செலாவணி இருப்பைப் பேண முடியும் என்ற இலக்கை அண்மித்துள்ளோம். கடந்த ஆண்டு 70 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் தற்போது 5 வீதத்தை விடவும் குறைவடைந்துள்ளது. புதிய வரி திருத்தத்துக்கமைய பணவீக்கத்தை 5 சதவீதமாகப் பேணுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். கடந்த ஆண்டு 2857 பில்லியன் ரூபா வருமானம் எமது இலக்காகக் காணப்பட்ட போதிலும், 3110 பில்லியன் ரூபா வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. அந்த வகையில் இவ்வருடம் தேசிய உற்பத்தி வருமானம் 11.2 சதவீதமாக அதிகரிக்கும் அதே வேளை, 2026இல் தேசிய வருமானம் 15 சதவீதம் வரை உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019இல் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 1.7 மில்லியன் ஆகும். ஆனால் இவ் எண்ணிக்கை 2021இல் 5 இலட்சத்து 7000ஆகவும், 2022இல் 4 இலட்சத்து 37500ஆகவும் வீழ்ச்சியடைந்தது. அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்புக்களின் அடிப்படையில் சுமார் ஒரு மில்லியனால் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முடிந்தது. அந்த வகையில் இவ்வாண்டு பொருளாதார வளர்ச்சி வேகத்தை 1.8 - 2 வீதம் வரை அதிகரிக்க முடியும் என்று நம்புகின்றோம். இந்த இலக்கை அடைவதற்காக பெறுமதிசேர் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்பை குறைப்பதற்காக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளும் பயனாளர்களின் எண்ணிக்கையை அதகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 14 இலட்சத்து 10 000 பேருக்கு அஸ்வெசும வழங்கப்படுகிறது. இதனை செலுத்துவதில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு, இம்மாத இறுதியில் அல்லது பெப்ரவரியில் இவ்வாண்டுக்கான விண்ணப்பம் கோரப்படவுள்ளது. சரியான நிதி முகாமைத்துவத்தைப் பேணி இலக்கை வெற்றி கொள்ளாமல், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எந்தவொரு வேலைத்திட்டங்களையும் மீளப்பெறவோ மாற்றவோ முடியாது. எவ்வாறிருப்பினும் தற்போதுள்ள இந்த பொருளாதார நெருக்கடிகள் அனைத்தும் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டின் பின்னர் படிப்படியாகக் குறைவடையும். எனவே இது தொடர்பில் விமர்சிப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது. கடந்த ஆண்டைப் போன்று இவ்வாண்டும் மக்கள் முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்கினால் எம்மால் விரைவில் இந்த சுமைகளிலிருந்து மீள முடியும் என்றார். https://www.virakesari.lk/article/172897
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
நல்ல உள்ளம் படைத்த உண்மையான மனிதர் , ஆத்மா சாந்தியடையட்டும்
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜயகாந்த் இன்று வியாழக்கிழமை (28) காலை காலமாகியுள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளதாக வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான விஜயகாந்த் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டின் முன்பு தொண்டர்கள் குவித்து வரும் நிலையில், அப்பகுதியில் பொலிஸ் பாதிகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/172594
-
மலையக மக்களைக் கௌரவித்து இந்தியா வெளியிடும் முதல் முத்திரை : செந்தில் தொண்டமானிடம் கையளிக்க ஏற்பாடு
இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமது உரிமைகளை வென்றெடுக்கவும் கௌரவமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கும், பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில், எமது மலையக மக்களுக்கான அங்கீகாரம் என்பது, இன்றைய சூழ்நிலையில் மாபெரும் தேவையாகவே காணப்படுகின்றது. இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆலோசனையின் பேரிலும் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை அவர்களின் ஏற்பாட்டிலும், நம் மலையக மக்களைக் கௌரவிக்கும் வகையில், இந்திய தபால்துறை அமைச்சினூடாக முத்திரையொன்று வெளியிடப்பட்டு, இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். புதுடில்லியில், இம்மாதம் 30ஆம் திகதியன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வின்போது, பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நடாவினால், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானிடம் முதல் முத்திரை கையளிக்கப்படவுள்ளது. இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தமை தொடர்பான நூற்றுக்கணக்கான ஆவணங்கள், கோப்புகள் பரிசீலக்கப்பட்டு, உரிய வரலாற்றுச் சுவடுகளோடு இந்த முத்திரையை வெளியிடுவதற்கு, இந்தியத் தபால்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதன்மூலம், இலங்கைக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பிலான வரலாறு, இந்தியர்களுக்கு எளிதில் எடுத்துரைக்கப்படுகிறது. இவ்வாறு வெளியிடப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்திரையை, உலகின் மிகப்பெரிய அஞ்சல் வலையமைப்பைப் கொண்டுள்ள இந்தியாவின் 155,015க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களிலிருந்து, எதிர்வரும் 30ஆம் திகதிக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள முடியும். இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், சீனா, ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பூட்டான் உள்ளிட்ட 210க்கும் மேற்பட்ட நாடுகளில் 32,285,425க்கும் அதிகமான இந்திய வம்சாவளி மக்கள் வசித்து வருகின்றனர். இவ்வாறிருக்கையில், அந்த நாடுகளிலிருக்கும் மக்களுக்கு கிடைக்காத அங்கீகாரமொன்று, இலங்கையில் 200 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு கிடைத்திருப்பது, நம் மக்களுக்கு அளிக்கப்படும் மரியாதையாகவே பார்க்கப்படுகிறது. உதவி, கடமை, பொறுப்புணர்வு என்ற எண்ணப்பாடுகளுக்கு அப்பால், நம் மக்களை நாம் தான் கௌரவிக்க வேண்டும், அவர்களுக்கு நாம் தான் அங்கீகாரமளிக்க வேண்டுமென்ற தொனியில், இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காக முத்திரையொன்று வெளியிடப்படுவது, இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் நட்புறவைப் பறைசாற்றி நிற்பதோடு, மலையக மக்களால் இலங்கைக்கும் கௌரவம் கிடைத்திருக்கிறது. இவ்வாறானதொரு கௌரவிப்பு நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களிடம் முதல் முத்திரையைக் கையளிக்க நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/172595
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
ஆமாம் உங்கள் கருத்தினை ஆமோதிக்கிறேன் , முதலில் இவர் யாழ் சென்று பல்கலைக்கழகம் மற்றும் சமூக அமைப்புகள் , தமிழ் அரசியல்வாதிகள் என எல்லாரையும் இணைத்து என்ன விடயங்களை நாம் வைக்க வேண்டும் எதனை மறுக்க வேண்டும் என ஒரு குழு முயற்ச்சியாக இதனை செய்திருக்க வேண்டும் .
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
பெரிதாக ஒன்றையும் தரமாட்டார்கள் தான், ஆனால் தமிழர் விடயத்தில் பிக்குகள் இப்பவுமே மிதவாத போக்கில் இருக்கின்றார்கள் என்பதை வெளிக்காட்டி , அரசாங்கத்தை நெருக்கவேண்டும் அதாவது தமிழர் உரிமைக்கும் சிங்கள இனவாதத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை உலகிற்கு வெளிக்கொணரலாம் . உண்மையை சொல்லப்போனால் சரியான ராஜதந்திரம் என்பது எம்மிடம் இல்லை. இந்தியா கொண்டு வந்த 13 இணை கூட சிங்களம் மறுக்கின்றது. நாமும் இன்னொரு வழியில் இந்தியாவை இதுக்குள் கொண்டு வரவேண்டும் . சுரேனுக்கு அந்த திறமை இருக்குமா தெரியவில்லை . முயலலாமே
-
கொவிட் உப வகை வைரஸிவிருந்து பாதுகாப்பு பெறவேண்டிய வழிகாட்டல்களை விரைவில் மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
கொவிட் 19 வைரஸின் ஜே.என் 1 உப வகை தொடர்பில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை விரைவாக பொது மக்களுக்கு விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்தார். நாட்டுக்குள் நுழைந்திருப்பதாக தெரிவிக்கப்படும் கொவிட் வைரஸின் புதிய வகை தொடர்பாக சுகாதார துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் வைரஸ் தொற்றின் புதிய வகை தொற்றான ஜே.என் 1நாட்டுக்குள் நுழைந்திருப்பதாக நம்புகிறோம். அதனால் விமான நிலையத்தில் இது தொடர்பாக அறிவுறுத்தும் நடவடிக்கை மற்றும் பரிசோதனை நடவடிக்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் இந்த வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை விரைவாக பொது மக்களுக்கு விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்ட எச்சரிக்கைக்குரிய குழுவினர் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் இதற்கு முன்னர் செயற்படுத்திய கொவிட் சுகாதார வழிகாட்டல்களை மீண்டும் செயல்வலுப்படுத்துவதற்காக விரைவாக செயற்படுத்துவது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும். அத்துடன் இந்த புதிய கொவிட் பிறழ்வு உப வகை தொடர்பாக அவதானமாக செயற்பட வேண்டிய ஒன்று என உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்திருக்கிறது. கொவிட் உலக தொற்று நிலைமையில் இருந்து மீண்டாலும் இவ்வாறான அலகு வகைகள் எந்த சந்தர்ப்பத்திலும் வெளிப்படக்கூடும். அதனால் இது தொடர்பாக விசேட கவனம் செலுத்தி. இது தொடர்பாக இருந்துவரும் எச்சரிக்கை தொடர்பாக அறிவிப்பு செய்வது முக்கியமாகும். குறிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய குழுவினருக்காவது முகக்வசம் அணிவது, கைகளை கழுவுவது போன்ற சுகாதார செயற்படுகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு விரைவாக அறிவுறுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/172584
-
”அழைப்பு விடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்”- சீ.வீ. விக்னேஸ்வரன்
ஐயா "போதும் உங்கள் யாளமே" செய்தது போதும்
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
சுரேன் சுரேந்திரனுக்காக வக்காலத்து வாங்கவில்லை , அவரின் ஆதரவரலாறும் இல்லை. ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் . இந்தியாவோ அமெரிக்காவோ ஏன் யாராலும் இலங்கையில் பிக்குகளின் சிங்களவாதத்தை நிறுத்த முடியவில்லை ஏனில் சீனா என்ற பெரிய புத்த நாடு இருப்பதால். இதனை தெளிவாக விளங்கவேண்டும் . தலைவரின் கொள்கை தான் எமக்கான சரியான தீர்வு , சமஷடி யும் அல்ல . இப்ப இதனை யாரால் பெற்று தர முடியும் அல்லது சாத்தியமா . சும்மா தேசியம் கதைத்து எங்களின் கோமணமும் புடுங்கிற நிலையில் இருக்கிறோம் . எவராவது முதலில் இறங்கி உண்மையான சிங்கள பேரினவாதிகளான பிக்குகளை ஒரு பாதைக்கு கொண்டு வரவேண்டும் . அந்த முயற்சியில் இறங்குவதில் என்ன தப்பை காண்கிறீர்கள் . இதை தான் சொல்வது தானும் படாது தள்ளியும் படாது என்று. இப்ப உள்ள எல்லா அரசியல் மற்றும் அமைப்புக்கள் எல்லாமே சும்மா கதைக்க மட்டும் உள்ளார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அரித்து படி படியாக தான் எங்களது குறைந்த பட்சம் சம்ஷடி இணை அடைய முடியும். சும்மா வாய்ச்சொல்லில் வீரர்களடி என்ற விதத்தில் இங்கே பதிவினை இடவேண்டாம் . எல்லா யதார்த்தமும் தலைவர் போனவுடன் முடிந்து விட்டது .