Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"சிந்து சம வெளியில் கோழிச்சண்டை" / "Fighting Cocks in Indus valley"
"சிந்து சம வெளியில் கோழிச்சண்டை" / "Fighting Cocks in Indus valley" மார்ஷல் முத்திரை [Marshall seal] 338 என அழைக்கப்படும் சிந்து வெளி முத்திரையில், இரு சேவல் கோழிகளும் ஒரு திமிழுடன் கூடிய எருதுவும் காணப்படுகிறது. இங்கு சேவல் கோழியின் கழுத்தின் வடிவமும் அதன் நேராக உள்ள வால் இறக்கைகளும், அவை நன்றாக வளர்க்கப்பட்ட அல்லது பேணப்பட்ட கோழிகள் என்பதை காட்டுகிறது. இந்தக் கோழியைக் கூர்ந்து பார்த்தீர்களேயானால் இதனுடைய கழுத்து உயர்ந்தும், வால் தூக்கலாக செங்குத்தாக இருக்கும். மேலும்.கால்கள் நிலை கொள்ளாமலும் நிலத்தில் இருந்து சற்று உயர்ந்தும் தரையில் படாமலும் இருப்பது தெரியும். அதுவும் இரண்டு கோழி. ஆகவே இவை இரண்டும் ஒரு மொஹெஞ்சதாரோ சண்டைக் கோழியாகத்தான் இருக்க வேண்டும். அதே போல காளையும் எருதுபிடி சண்டைக்குக் பயிற்றப்பட்டது போல் ஆக்ரோசமாக உள்ளது. சேவல் கோழி சோடியாகவும் காளை தனித்தும் இருக்கிறது. ஏனென்றால் இதன்னுடன் சண்டை போடுபவர் இன்னும் ஒரு காளை அல்ல, அது ஒரு மனிதன் என்பதால் அப்படி இருக்கலாம். ஆகவே இந்த முத்திரை பெரும்பாலும் கோழி சண்டையையும் காளை சண்டையையும் குறிப்பதாக இருக்கலாம். மேலும் இடையர், வேளாண்மை சமுதாயங்களில் கோழிச் சண்டை பரவலாக, அவர்களின் கேளிக்கைப் பொழுது போக்கு விளையாட்டாக இருந்து உள்ளது. அது மட்டும் அல்ல, இதை ஆழமாக பார்க்கும் போது அங்கு சேவல் கோழிகள் இரண்டு அருகருகே ஒரு குறியுடன் இணைந்து இருப்பதை காணலாம். இதை ஐராவதம் மகாதேவன் "கோழி நகர்" என்று சொல்கிறார். கோழி வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு பறவை. எல்லா கிராமங்களிலேயும் இருக்கிறது. எல்லா ஊர்களிலேயும் இருக்கிறது. அப்படி இருக்கும் போது, இந்த சிந்து வெளி நகரம் மட்டும் கோழியினுடைய பெயரை ஊர்ப் பெயராக வைக்க வேண்டும் என்று சொன்னால், இந்தக் கோழிக்கு ஏதாவது ஒரு சிறப்பு இருக்க வேண்டும். இதற்கு ஒரு இணையாக, ஒப்புமையாக நாம் முற்காலச் சோழர்களின் தலை நகரமான கோழியூர் என்ற உறையூரை எடுத்துக் கொள்ளலாம். பாரம்பரிய தகவலின் படி, ஒரு காலத்தில் சோழமன்னனின் யானை உறையூரை அடைந்தபோது, அதனை ஒரு கோழி தாக்கி வென்றது. அதனால் சோழன் தன் தலைநகரை அங்கு அமைத்துக் கொண்டு, அதற்கு கோழியூர் எனவும் பெயரிட்டான் என அந்த செய்தி கூறு கிறது. இதனை இளங்கோ அடிகள், "காவுந்திஐயையும் தேவியும் கணவனும் முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய புறம் சிறை வாரணம் புக்கனன் புரிந்து என்" என சிலப்பதிகாரத்திலும் (புகார்க் காண்டம், நாடு காண் காதை) கூறுகிறார். அதாவது கோவலனும் கண்ணகியும் கவுந்தி அடிகளும் உறையூருக்கு செல்லும்போது, உறையூரை கோழிச் சேவல் யானையை வீழ்த்திய இடம் என்று குறிப்பிட்டு பாடுகிறார். சேவல் கோழியை அப்படியான ஒரு சண்டைக்கு கவனம் செலுத்தி பழக்கி வளர்க்கிறார்கள். அதனால் அது பொதுவாக மூர்க்கமான அச்சந்தருகிறதாக தோற்றம் உள்ளதாக இருக்கிறது. ஆகவே யானையை துரத்திய சேவல் கட்டாயம் ஒரு சேவல் கோழியாகத்தான் இருக்கவேண்டும். ஆகவே அது ஆவேசமாக [ஆக்ரோஷமாக] கோபத்துடன் சிறகடித்து தலையை உயர்த்தி பறந்து பாய, யானை வெருண்டு துதிக்கை தூக்கி பிளிறியபடி அங்கு இருந்து விலகி ஓடியிருக்கலாம். இதனால் அந்த சம்பவம் மக்களிடையே செல்வாக்கு பெற்று அப்படி பெயர் பெற காரணமாக இருந்து இருக்கலாம். பெரும்பாலும் இந்த உறையூர் அந்த பண்டைய காலத்தில் சேவல் சண்டைக்கு பிரபலமானதாக இருந்து இருக்க வேண்டும். ஆகவே இந்த சிந்து வெளி நகரத்திலும் இதை ஒத்த ஏதாவது ஒரு செய்தி இருக்க வேண்டும் என நாம் இலகுவாக நம்பலாம். மேலும் கி.மு. முதலாம் நூற்றாண்டு. சோழர் நாணயம் யானையோடு ஒரு கோழி சண்டை போடுகிற காட்சியை கொண்டுள்ளது. இப்படியான ஒழுங்கு படுத்தப்பட்ட கோழிச் சண்டையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பண்டைய சங்க இலக்கியத்தில், உதாரணமாக, குறுந்தொகை 305:5-6, அகநானூறு 277:13-16 காணலாம். இதே போன்று செஞ்சி விழுப்புரம் சாலையில் அரசலாபுரம் என்ற ஊரில் கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கோழி உருவம் பொறித்த நடுகல் உள்ளது. இந்நடுகல்லில் ’மேற்சேரிடுயாடி கருகிய கோழி’ என்று கல்வெட்டு தொன்மைத் தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. பண்டைய தமிழர்கள் கோழிகளைப் பழக்கி சாவக்கட்டு அல்லது சேவல் சண்டைகளை பொழுது போக்காக நடத்துவர். அதில் வீரமாக மற்றொரு கோழியுடன் கோழிச்சண்டை நடத்தி இறக்கின்ற கோழிக்கு நடுகல் எடுத்து தமிழர் வழிபடுவர். அதற்காக எடுக்கப்பட்ட நடுகல்லே இதுவாகும். இந்தியத் துணைக் கண்டத்திலேயே இறந்து போன சேவலுக்காகப் பெயர் வைத்து ஒரு நடுகல் எழுப்பிய ஒரே பண்பாடு தமிழ்ப் பண்பாடு மட்டும்தான். ஆக இந்தப் பண்பாட்டினுடைய தொடர்ச்சியை மொகஞ்ச தாரோவில் இருந்து, இன்றைக்கு இருக்கக்கூடிய, சேவல் சண்டையினை கதைக்கருவாக உள்ள ஆடுகளம் திரைப்படம் (2011) வரை, இது ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி என்று நாம் கருதலாம். கோழ் என்ற சொல்லில் இருந்து தான் கோழி என்ற பெயர் அனேகமாக வந்து இருக்கலாம். கோழ் என்பதன் கருத்து வழ வழப்பான, செழிப்பான , கொழுப்பான என்பது ஆகும். பெரும்பாலான விவசாய சமுதாயங்களில் பண்டைய காலத்தில் கோழிச் சண்டை ஒரு பொழுது போக்கு ஆகும். பிற்கால சோழன் ஆண்ட தஞ்சாவூர், தமிழகத்தில் இதற்கு பெயர்போன ஒரு இடம் ஆகும், முக்கியமாக, அறுவடை காலத்தில், அதாவது பொங்கல் தினத்தில் ஆகும். மற்றது கேரளம் ஆகும். இந்தியா துணைக் கண்டத்தில், குறிப்பாக பாகிஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் போன்றவை கோழிச் சண்டைக்கு பிரபலமான இடங்களாகும். மேலும் பல அறிஞர்கள் உலகம் முழுவதும் கோழி பரவ சிந்து வெளி நாகரிகமே முதன்மையானதாக இருந்தது என்கின்றனர். அது மட்டும் அல்ல சிந்து வெளியில் உணவு தேவைக்கு அன்றி, சேவல் கோழி பெரும் பாலும் சண்டைக்கே பாவிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அத்துடன் கி மு 1000 ஆண்டு அளவில் சேவல் கோழி மத முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக குறுந்தொகை கடவுள் வாழ்த்தில், "சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே" என்ற வரி வருகிறது. இதன் பொருள்: சேவற்கொடியைக் கொண்டவனுமகிய முருகன் காப்பதால் உலகம் பாதுகாப்பான நிலையில் உள்ளது என்பதாகும். என் எலும்பை உருக்கும் இந்த காம நோய் பார்த்த என் கண்ணால் வந்தது. நானே சென்று அவரைத் தழுவலாம் என்றால் அவரைக் காணமுடிய வில்லை. அவராகவும் வரவில்லை. கோழியைச் சண்டைக்கு விட்டால் விட்டவர் அதனை பிரித்து, சண்டையை நீக்கி விடுவார்கள். ஆனால் குப்பையிலே தாமே சண்டை போட்டுக் கொள்ளும் கோழிகளை யார் பிரித்துவிடுவார்கள். களைத்துப் போய்த் தாமே விலகிக்கொண்டால்தான் உண்டு. அதுபோல என் காமமும் தானே தணிந்தால்தான் உண்டு என்கிறது குறுந்தொகை 305. இப்பாடலில் தலைவியின் மனநிலையைக் குப்பைக் கோழியின் போருடன் ஒப்பிட்டு கோழி சண்டையை சிறப்பித்துப் பாடியமையால் இப்புலவர் குப்பைக் கோழியார் எனப் பெயர்பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. "கண் தர வந்த காம ஒள் எரி என்பு உற நலியினும், அவரொடு பேணிச் சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே; உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் குப்பைக் கோழித் தனிப் போர் போல, விளிவாங்கு விளியின் அல்லது, களைவோர் இலை யான் உற்ற நோயே." -குறுந்தொகை 305. மேலும் போர்புரியும் கோழியின் கழுத்தில் உள்ள மயிர்கள் செறிந்து தீப்பிழம்புப் போல் காணப்படுவது போல் இங்குச் செம்முருக்கின் பூக்கொத்துகள் காணப்படுகின்றன என அகநானூறு 277:15-18 கூறுகிறது. "வாரா அளவை ஆய் இழை கூர் வாய் அழல் அகைந் தன்ன காமர் துதை மயிர் மனை உறை கோழி மறனுடைச் சேவல் போர் எரி எருத்தம் போலக் கஞலிய பொங்கு அழல் முருக்கின் எண் குரல் மாந்தி சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில் வந்தன்று அம்ம தானே வாரார் தோழி நம் காதலோரே". [அகநானூறு 277:13-20] கூரிய அலகினையும் தீகொழுந்து விட்டெரிந்தாற் போன்ற அழகிய செறிந்த சிறகினையுடைய, வீட்டில் வாழும் கோழியின் வீரமான தோழனான சேவல் சண்டையிடும் போது, கிளர்ந்தெழும் அதன் கழுத்தில் உள்ள மயிர்கள் செறிந்து தீப்பிழம்புப் போல் காணப்படுவது போன்ற செம்முருக்கினது ஒள்ளிய பூக்கொத்துகளை வண்டுகள் மொய்த்து அதில் உள்ள தேன் சிதறுவதற்கு உகுந்த இளவேனிற்காலம் இப்ப வந்துவிட்டது. ஆனால் நம் காதலர் இன்னும் எம்மிடம் வரவில்லை, நாம் என் செய்வாம் தோழி என தலைமகன் பிரிவின்கண் தலை மகள். சொல்லியது இதுவாகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "Fighting Cocks in Indus valley" In the Indus seal, Marshall seal No.338, the shape of the neck of the cocks and the straight shape of the wings of the tail show that they were well groomed cocks. A close scrutiny of the images reveals the tell-tale markers and the probable reason: the necks are raised; the tails are up and stiff; the legs are unsettled and slightly raised above the ground level. They are probably the gamecocks of Mohenjo-Daro in a fighting-mode. The bull also looks like a ferocious one, trained for bull fights. The cocks are seen as a pair where as the bull is single. This seal may perhaps be about the cock fight and bull fight. The bull is alone-may be because the fighter at the other end is not another bull but a man. Both cock fights and bull fights are popular with pastoral and agrarian societies. Cock-fight is also one of the 64 arts. Also in this seal, the images of two cocks are inscribed side by side, along with a sign that is generally interpreted as ‘city’. Iravatham Mahadevan reads the sign sequence on the seal as ‘cocks-city.’ For an important Indus city to be named after cocks there has to be a reason. A cock being a common domestic bird, normally found in every habitat, there has to be something special about the cocks at that specific place to justify such naming. An analogy to this is available in ‘kozhi’ (kozhi hen or rooster), the name of the capital town (Kozhiyur, also known as Urayur) of early Cholas of Tamilnadu. In this case as well, the traditional accounts recall the valor of a ‘cock’ that fought against an elephant at that place as the basis for this commemorative name. In celebration of this episode, the Cholas of the Sangam age even issued a coin with an image of a cock fighting an elephant. The cocks were groomed for such fights. Such cocks used to be ferocious. The instance of an elephant being threatened by a cock might well be about a fighter cock jumping in ferocity that made an elephant run away from that place. This seems to be a possible explanation for the cock versus elephant fight that led to the popularity of the cock and the place where it was seen. Perhaps Urayur in those days had people who groomed cocks for fighting. Hence, tracing the genesis of ‘cocks-city’ of the Indus Age to the ‘fighting quality’ of the cocks of the specific-region may not be without basis. Evidence to support this view, organized cock-fights, is available directly and indirectly in the ancient Tamil texts.(Kurunthogai: 305:5-6;Akananuru 277:13-16) and epigraphic records, at Arasalapuram in Tamilnadu, a hero-stone, dated 5th century AD installed in the memory of a fighting-cock. The name Kozhi also seems to be derived from the word, "kozh" (கோழ்) which means slippery, well-built, fatty etc. (வழ வழப்பான,செழிப்பான, கொழுப்பான). Cock fighting was a pastime in most agrarian societies. It was popular in Thanjavur, the Cholan capital in later years. It came at the time of Harvest festival (Pongal) in those days. Cock fights were popular in Kerala also. It is popular in most parts of Indian subcontinent including Pakistan. Punjab and Kashmir also are known for having this cock fight as a game. Chickens from the Harappan culture of the Indus Valley (2500–2100 BC) may have been the main source of diffusion throughout the world. Within the Indus Valley, indications are that chickens were used for sport and not for food and that by 1000 BC they had assumed "religious significance" also. For example, Ode to God in Kurunthogai, we find a line, which says,"சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே." this means, "His flag is cock.-God Murugan saves the world peace" In Kurunthogai:305, it is said that the thalaivi (heroine) suffered from the pangs of pain of separation from her lover. The pain was not caused by others and can not be cured by others. It was like the fight between the 'Kuppai kozhikal" [குப்பைக் கோழிகள்] – the fight between the cocks that were searching food from the wastes. There was none to prompt them to fight and none to separate them in time. Similarly the heroine was suffering from a pain which was not induced by others nor solved by others. Author of the poem is KUPPAI KOZIYAR .This name is coined from a phrase he used in this poem. "The bright flame of passion that my eyes gave to me, torments me to my very bone. It is not possible to see him and embrace him. He is not capable of coming and removing my distress. My love affliction is like two chickens fighting alone on a rubbish pile with no one to separate them. Unless it ceases by itself, no one will free me of my suffering!"- [Kurunthogai:305] The heroine lets her friend know about her love affliction. Here the poet makes a hidden note of sandaik kozhi (cocks in fight). When the cock fights are organized ones, there are people who make the cocks enter a fight and also separate them whenever they wish to stop it. The fight between the cocks on the mounds of wastes is not similar to that fight. From this it is known that cock fights had been popular in olden Tamil lands. In Akananuru 277,narrates that as the neck of the domestic fighting cock with the sharp beak and flaming red feathers bristles when it fights as below: "Early summer season is here, bees swarm and spill honey from clusters of murukkam flowers, like rising flame, that look like the swaying-flame-like feathers of pretty, fighting roosters with sharp beaks, mates of house-residing fowl My lover has not come back, my friend!"-. [Akananuru 277:13-20] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
-
"ஒப்பனையியல் / அழகுக் கலை" / "cosmetology"
"ஒப்பனையியல் / அழகுக் கலை" / "cosmetology" ஒப்பனையியல் பற்றிய பண்டைய அறிவியல் எகிப்திலும் இந்தியாவிலும் ஆரம்பமாகியதாக பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்டாலும், ஒப்பனை பொருட்கள், அதன் பாவனைகள் பற்றிய முன்னைய குறிப்புகளை காண நாம் கி மு 2500-15000 ஆண்டு இந்தியா உபகண்டத்தின் சிந்து சம வெளி நாகரிகத்திற்கு போக வேண்டியுள்ளது. அங்கே, சிந்து சம வெளி பெண்கள் உதட்டுச் சாயம் (Lipstick) பூசினார்கள் என தெரிய வந்துள்ளது. உலகிலேயே முதன் முதலில் உதட்டுச் சாயம் தயாரித்து பயன்படுத்தியவர்கள் இவர்களே என்பதை இது உறுதிப்படுத்துகிறது. ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த இந்த மக்கள் திருமண வைபவங்களின் போது மணப் பெண்களை அலங்கரிக்கச் சில ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றுள் ஒன்று தான் இந்த உதட்டுச் சாயமாகும். இவர்கள் தேன்மெழுகு [beeswax], தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட நிறமிகள் [pigments] என்பனவற்றைக் கலந்து திரவ வடிவில் கிடைத்த கூழ் மத்தைத் (Colloid) தங்களது உதடுகளில் பூசிக் கொண்டனர். இதுவே இன்றைய நவீன உதட்டுச் சாயங்களின் முன்னோடியாகும் என்பது குறிப்பிடத் தக்கது. இதே போல பண்டைய தமிழகத்திலும் ஆணும் பெண்ணும் தம்மை பலதரப்பட்ட ஒப்பனைகளில் ஈடுபடுத்தியதுடன் அதைப்பற்றிய மிகவும் ஆழமான எண்ணங்களை கொண்டிருந்தார்கள் என்பதற்கான சான்றுகள் அங்கு காணக்கிடைக்கிறது. ஒப்பனை பொருட்களின் பாவனை இன்றைய காலத்தை போல இல்லாமல், அவை குறிப்பாக அக தோற்ற அழகுடன் மட்டும் நில்லாமல், நீடித்து வாழ்வதற்கும் நல்ல உடல்நலம் பேணுதற்கும் உகந்தவையாக தேர்ந்து எடுக்கப்பட்டன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால ஆண்களும் பெண்களும் எண்ணெய் பாவிப்பதிலும், நறுமண முள்ள இயற்கை வாசனை திரவியம் மற்றும் பல வண்ண இயற்கை பொடிகள், பூச்சுக்கள் பாவிப்பதிலும் கவனம் செலுத்தினார்கள். இதனை குறிஞ்சிப்பாட்டு 107-108 மிக அழகாக "எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ்த் தண் நறும் தகரம் கமழ மண்ணி" என தலைவனின் எழிலை வர்ணிக்கிறது. அதாவது எண்ணெய் தடவிய சுருண்ட தலை முடியில் மணம் வீசும் அகில், சந்தனம் போன்ற வற்றையும் மணம் தரும் குளிர்ச்சியான மயிர்ச் சாந்தினையும் மணக்கப் பூசியிருந்தான் என்கிறது. மேலும் பொதுவாக சந்தனம் பெரிதும் மார்பில் பூசப்பட்டது. பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியின் பெருமையையும் அவன் வலிமையையும் சிறப்பித்துக் கூறும் புறநானூறு 3, அவனை, கால்களில் பொன்னாலான கழல்களும், உலர்ந்த சந்தனம் பூசிய பரந்து அகன்ற மார்பும் உடையவனே! -"பொலங் கழல் கால் புலர் சாந்தின் விலங்கு அகன்ற வியன் மார்ப"- என்று கூறுகிறது. சந்தனம் பொதுவாக சிறந்த கிருமிநாசினி யாகவும் அதே நேரம் உடம்பை குளிரவும் செய்கிறது. பண்டைய தமிழ் பெண்கள் மேல் சட்டை அணிவ தில்லை. ஆனால், அவர்கள் தமது மார்புகளில் சந்தனச் சாந்தைக் குழைத்து அல்லது வாசனைப் பொருள்களால் கோலம் எழுதி தமது மார்புகளை மறைக்கிறார்கள். இதை தொய்யில் என்பார்கள். தொய்யில் என்பது தோய்த்தல் என்று பொருள்படும். இது மார்பகங்கள் தவிர, நெற்றியிலும், தோளிலும், கூட வரைகிறார்கள். மேலும் இத்தகைய ஒப்பனைக் கலையை மேற் கொள்வோர் தொய்யில் மகளிர் என்ற பெயரால் அழைக்கப் பட்டனர். இவளது வண்ண முலைகள் பார்ப்பவர் கண்ணை உருத்தும்படி எழுகின்றன. அதில் தொய்யில் எழுதி மேலும் உருத்தச் செய்துள்ளாள். பார்ப்பவர் என்ன ஆவர் என்பது எழுதியவளுக்குத் தெரியவில்லையே -"உருத்தெழு வன முலை ஒளி பெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்"- என கேள்வி கேட்கிறது, குறுந்தொகை 276. சங்க கால மகளீர் வேறு பல வழிகளிலும் தம்மை அழகூட்டினர். அவர்கள் கண்மை போட்டு தம்மை ஒப்பனை செய்தார்கள் என்பதை அவ்வை யார். மணிகள் கோத்த அணிகள் விளங்கும் இடையும், மை தீட்டிய கண்களும் ஓளிபொருந்திய நெற்றியும் கொண்ட நாட்டியம் ஆடும் வெகுளிப் பெண்ணே! -"இழை யணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல் மடவரல் உண்கண் வாள்நுதல் விறலி!"- என புறநானூறு 89 அடிகளால் சான்று பகிர்கிறார். மேலும் அவர்களுக் கிடையில் எந்த விழா நடந்தாலும் அது மகிழ்ச்சிகரமாக அல்லது துக்ககரமாக இருந்தாலும் அங்கு மலர் அலங்காரம் முதல் இடத்தை பெறுகின்றன. மற்ற முக்கிய ஒப்பனை நெற்றியில் ‘பொட்டு இடுதல்’ ஆகும். சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் "திலகம் தைஇய தேம்கமழ் திரு நுதல்" என்ற அடி 24, திலகமிட்ட நறுமணம் பொருந்திய அழகிய நெற்றி என்கிறது. சங்க காலத்து மக்கள் தங்களை அழகுபடுத்த இப்படி சில ஒப்பனை முறைகளைக் கையாண்டுள்ளதுடன் ஒப்பனை செய்வதற் கென்று தனியறைகளும் [மல்லல் வினையிடம்], பணியாட்களும் [வண்ணமகளிர்] இருந்துள்ள தன்மையையும் சங்க இலக்கியங்கள் எடுத்தியம்பியுள்ளன. ஒப்பனை என்ற சொல்லிற்கு அழகுபடுத்தல் என்று பொருள். இத்தகைய ஒப்பனைக் கலை தமிழிலக் கியங்களில் பழங்காலந் தொட்டு இடம் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் மேற் கூறிய ஒப்பனைகள் மலிந்துள்ளன. புறநானூற்றில் கூந்தல் ஒப்பனையை வருணிக்கும் பொழுது, "...........................................வந்ததைக் கார் வான் இன் உறை தமியள் கேளா நெருநல் ஒரு சிறைப் புலம்பு கொண்டு உறையும் அரி மதர் மழைக் கண் அம் மா அரிவை நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல் மண்ணூறு மணியின் மாசு அற மண்ணிப் புது மலர் கஞல இன்று பெயரின் அது மன் எம் பரிசில் ஆவியர் கோவே". [புறநானூறு 147] என்று சங்ககாலப் புலவர் குறித்துள்ளார். நேற்று உன் இல்லம் சென்றபோது உன் மனைவி மழைக்கால மேகம் இடி முழக்கத்தைக் கேட்டுக் கொண்டு தனியே இருந்தாள். கண்ணீரை அடக்கிக் கொண்டு இருந்தாள். கூந்தலில் எண்ணெய் வைக்காமல் இருந்தாள். அவள் தலையில் எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டுப் புதுமலர் சூடிக் கொள்ளும்படி நீ அவளிடம் செல். ஆவியர் குடி மக்களின் அரசனே! நீ எனக்குப் பரிசில் தர விரும்பினால் அது நீ உன் மனைவியிடம் செல்வதுதான். என்கிறார் புலவர். மேலும், குறுந்தொகை 5, இல் தலைவி தோழியிடம் குருகுகள் [ஒரு வித பறவை] உறங்குவதற்கு இடமாகிய இனிய நிழலையுடைய புன்னை மரங்களை கொண்டவனும், கரையை அலைகள் மோதும் போது உடைகின்ற நீரால் வீசப்படும் துளியால் அரும்புகின்ற கண்ணுக்கு இனிதாகிய நீர்ப் பரப்பையுடைய மெல்லிய கடற் கரையையுமுடைய எம் தலைவன் எம்மை விட்டுப் பிரிந்ததால் பல இதழ்களையுடைய தாமரை மலரைப் போன்ற கண் மை இட்ட எம் கண்கள் காம நோயால் தூங்க முடியாதவை ஆக வாடுகின்றன. இது தான் காதல் நோயின் தன்மையோ?என வினாவுகிறார்,. "அது கொல் தோழி காம நோயே வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை உடை திரைத் திவலை அரும்பும் தீ நீர் மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் பல் இதழ் உண் கண் பாடு ஒல்லாவே" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "cosmetology" The ancient science of cosmetology is believed to have originated in Egypt and India, but the earliest records of cosmetic substances and their application dates back to about 2500 and 1550 B.C, to the Indus valley civilization. where We came to know that Woman applied lipstick by 2000 BC. There is evidence of highly advanced ideas of self beautification and a large array of various cosmetic usages both by men and women, in ancient Tamilakam too. Significantly, the use of cosmetics was directed not only towards developing an outwardly pleasant and attractive personality, but towards achieving merit, Longevity with good health. For example, the men and women of Sangam age were fond of using oil, aromatic scents, coloured powders and paints, while the sandal paste was heavily applied on their chests. Kurunjippaaddu clearly said in line 107-108 that "The hero was handsome with oiled, curly hair, on which fragrant pastes and perfumes had been rubbed." sandal paste is believed to cool the body’s temperature. Purananuru 3 confirmed the use of sandal paste as cosmetic substance -"Your broad chest is smeared across with sandal paste and your feet are adorned with golden anklets". Tamil women of the early centuries were not wearing blouses and they covered their breasts only with the ornamental paste of sandalwood and even some time, according to sangam literature, women had pictures drawn on their bodies in coloured patterns. This is called toyyil. Kurunthogai 276 question - "Somebody painted bright thoyyil designs on her beautiful, budding breasts. without knowing it will sweep others eye. What happen to her if I appeal in the court of the king?" The Tamil women have also other ways of adding to their beauty. From the very early days the habit of putting Collyrium to the eye is very familiar (Kanmai). Purananuru 89 confirm this beautification -"O Virali[female musician] with a bright forehead, kohl[an ancient eye cosmetic] decorated eyes, delicate nature and lifted loins wearing splendid jewels!". There is no Tamil function without flowers whether it is a happy or sad. Pattinapalai (10:110), refers to the gender-wise differences even in the making of garlands for adornment. Another important custom is to have Kumkum pottu /Bindi on the fore head. We can find this in early period as well, In Purananuru 147,the poet advising the hero [King] while he is living other lady than his wife that If you want to award me please join with your wife. Yesterday, I met her. She is suffering loneliness without your company. Your presence will make her to dress her hair oiling, bathing and flower decoration. "King of Aviyars! Grant me the gift of you going to your wife today, the beautiful dark woman, who, yesterday, stood alone in despair listening to the sweet sounds of rain drops, tears dripping from her pretty, streaked, moist eyes, her hair without oil, so that her hair can be adorned with flowers, after being washed perfectly, to shine like sapphire gems". [Purananuru 147] In Kurunthokai 5, the heroine asked her friend "Is this how love sickness is, my friend? My kohl-lined eyes refuse to sleep" "Is this how love sickness is, my friend? The lord of the delicate shores, ……….where residing herons sleep in the ……….sweet shade of punnai trees, ……….which bloom when the breaking ……….waves spray their sweet mist, has left me. My kohl-lined eyes that resemble flowers with many petals refuse to sleep." [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
-
இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" [ஒரு புது முயற்சி]
இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:05 [ஒரு புது முயற்சி] "நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே; இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி, அமைதற்கு அமைந்த நம் காதலர் அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே." நோகும் என் நெஞ்சே,நோகும் என் நெஞ்சே, இமைகளைத் தீயச் செய்யும் என் கண்ணீரைத் துடைத்து எனக்கு பொருத்தமாக இருந்த என் காதலர் இப்பொழுது பொருந்தாதவராக ஆகி விட்டார், நோகும் என் நெஞ்சே. என தன்னை தானே தேற்றிக் கொண்டு ,தலையை நிமிர்ந்து மீண்டும் ஒரு முறை ஏனோ அங்கு பார்த்தாள். அவள் கண்களுக்கு வெட்கமே இல்லை? அந்த மேனகா "குட்டி மாமா.. குட்டி மாமா" என்று அவனை கூப்பிட்ட வாறு எதோ கொஞ்சி குழவிக் கொண்டிருந்தாள். அவள் அப்படியே பிரமித்து விட்டாள். அவனின் மூத்த அக்கா, அவன் சின்னவனாக இருக்கும் போதே கல்யாணம் செய்து வெளி நாடு போனது இப்ப அவளுக்கு நினைவுக்கு வந்தது. என்றாலும் எதிர் பக்கம் பார்த்த படி குளிர் பாணத்தை குடிக்கத் தொடங்கினாள். அது அவளது ஊடலோ ? "இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்ல(து) அவர்அளிக்கு மாறு." அவனிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவனோடு ஊடுதல், அவன் தன்மேல் மிகுதியாக அன்பு செலுத்த செய்ய வல்லது என்றோ ? "போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி ஆக்கமளி ஊடல் அணிமருதம் -" தலைவன், தலைவி பிரிதல் போக்கு - பாலையோ, அவர்கள் புணர்தல் - இனிமை தரும் குறிஞ்சியோ, அவர்களின் இன்பத்துக்கு ஆக்கம் தரும் ஊடல் - அருமையான மருதமோ -- இப்படி எத்தனையோ நினைவுகள் கண் முன் அவளுக்கு தோன்றி தோன்றி மறைந்தன. அவன் ஏன் இன்னும் தன்னிடம் வரவில்லை என்ற கோபமும் அதிகரித்தது. அவள் இனி எப்போதும் திரும்பி பார்ப்பதே இல்லை என்ற இறுதி முடிவோடு விரைவாக அங்கிருந்து வெளியேற தொடங்கினாள். இது அவளின் ஒரு வெகுளி கோபம், ஆசைப்பட்டது கிடைக்காத போது உண்டாவது தான் இந்த கோபம் . யாரோ தட தட என்று பின்னால் ஓடி வருவது போல அவள் உணர்ந்தாள். யாரோ நேரம் போகிறது என ஓடுகிறார்கள் என நினைத்தவாறு இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கினாள். "குவளை நாறும் குவை இருங் கூந்தல், ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய், குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன நுண் பல் தித்தி, மாஅயோயே! நீயே, அஞ்சல்'' என்ற என் சொல் அஞ்சலையே; யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும் கடல் சூழ் மண்டிலம் பெறினும், விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே." குவளையின் மணம் வீசுகின்ற வளமான, கருத்த கூந்தல், ஆம்பலின் மணமும் தேனின் சுவையும் பொதிந்து சிவந்த வாய், ஆழமான நீரில் மலர்ந்த தாமரைப் பூவின் மகரந்தத்தைப் போல் சிறிய பல தேமல் புள்ளிகளுடன் கூடிய மாமை நிறம் கொண்டவளே, நான் உன்னைப் பிரிவேனோ என்று நினைத்து நீ அஞ்சவேண்டியதில்லை. குறுகலான கால்களை உடைய அன்னப் பறவைகள் நிறைந்த மணலைக் கொண்டிருக்கும் கடல் சூழ்ந்த இந்த நில மண்டிலம் மொத்தமும் எனக்குக் கிடைத்தால் கூட, நான் உன்னைப் பிரியமாட்டேன். கவலைப்படாதே! என்பது போல "என்னடி தாகமாக இருக்குது அந்த மிச்சத்தை தா " என்று கூறியவாறு, பதிலுக்கு காததிராமல், மிச்சத்தை பறிப்பது போல் அவள் கையை பிடித்தே விட்டான். அதே குரல். தன்னுடன் தினம் தினம் தொலை பேசியில் கதைக்கும் அதே குரல். சட்டென திரும்பி , சற்றும் எதிர் பாராத விதமாக "அம்மா" என அலறி விட்டாள். அவன் தாய் பதறி ஓடி வந்து "என்ன? என்ன?" என கேட்டாள். மற்றவர்களும் பின் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தனர், அவள் ஒருவாறு தன்னை சமாளித்தவாறு உங்கள் மகன் விக்குகிறார் என்றாள். அதற்கு ஏன் இந்த சத்தம் ? ஏன் இந்த ஆர்ப்பாட்டம் ? பின் மகனை நோக்கி "எப்படித்தான் நீ இவளை கட்டி குடும்பம் நடத்தப் போகிறியோ என செல்லமாக கேட்டாள். அவள் சொர்க்கத்திற்கே போய் விட்டாள். தாயோ மகன் உண்மையிலேயே விக்கல் ஆட்கொண்டது என அவன் நெஞ்சை தடவினாள். அவனோ தாயின் கழுத்தில் சாய்ந்தபடி பின்புறமாக அவளை பார்த்த பார்வை -அதை அவள் என்ன என்று சொல்வாள்? "அன்னாய்! இவனொருவன் செய்தது காண்’ என்றேனா, அன்னை அலறிப் படர்தர, தன்னை யான், உண்ணு நீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும் தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம் செய்தான், அக் கள்வன் மகன்" அதிர்ச்சியடைந்த நான் ‘அம்மா! இவன் என்ன செய்கிறான் பாரேன்’ என்று அலறினேன். அம்மாவும் பதறிப் போய் ஓடி வந்தாள். ஆனால் இவன்? எதுவும் தெரியாத அப்பாவி போல் விழிக்கிறான். நல்ல வேளை, நான் அவனைக் காட்டிக் கொடுக்கவில்லை. அவன் செய்த குறும்பை மறைத்து ‘தண்ணீர் குடிக்கும் போது இவனுக்கு விக்கல் எடுத்தது’ என்று பொய் சொன்னேன். நான் சொன்னதை அம்மா நம்பிவிட்டாள். ஆதரவாக அவனுடைய முதுகைத் தட்டிக் கொடுத்தாள். அப்போது அந்தத் திருட்டுப் பயல் கடைக் கண்ணால் என்னைக் கொல்வது போல் பார்த்துப் புன்னகை செய்தான்! இப்படித்தான் சொல்வாளோ ? அவள் கண் மூடி சந்தோஷ கடலில் மிதந்து கொண்டு இருந்த இந்த வேளையில் "குட்டி மாமி.. குட்டி மாமி.." என்ற கொஞ்சும் குரல் கேட்டு கண் திறக்கும் முன் அவள் கன்னத்தில் மாறி மாறி முத்த மழை பொழிந்தது. முத்தம் கொடுத்தது அந்த மேனகா. இப்ப இது எந்த எரிச்சலையும் கொடுக்கவில்லை. மாறாக பெருமையையும் மகிழ்ச்சியையும் அவளுக்கு கொடுத்தது. "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." நானும் நீயும் எப்படி பழக ஆரம்பித்தோம் எப்படி ஒருவருக் கொருவர் அறிந்து கொண்டோம்? ஆனாலும்... எப்படி செம் மண்ணில் நீர் விழுந்த பின் அந்த செம்மண்ணும் நீரும் கலந்த கலவை போல் நம் நெஞ்சங்கள் பிரிக்க முடியா வண்ணம் கலந்து விட்டன. இப்படி அவனும் அவளும் கலந்து விட்டனர். இனி எமக்கு அங்கு என்ன வேலை?. நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
-
இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" [ஒரு புது முயற்சி]
இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:04 [ஒரு புது முயற்சி] "அண்ணா வாரார்", "அங்கே தம்பி வருகுது" அவளை அறியாமலே ,அவள் கால்கள் மெல்ல அடி எடுத்து வைத்தது. "இடிக்கும் கேளிர்! நும் குறை ஆகம் நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல! ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில், கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல பரந்தன்று இந் நோய் நோன்று கொளற்கு அரிதே" பகல் பொழுதில் ஒரு பாறையின் மீது வெண்ணெய்யை வைத்து விட்டு, பேசவும் முடியாத கைகளும் இல்லாத ஒரு மனிதனை, வெண்ணெய்க்கு காவல் வைத்தால் எப்படி தவிப்பனோ அப்படி நான் உருகுகிறேன்,,, காலம் கழிய அந்த வெண்ணெய் வெயிலால் உருகும். அதை பார்த்துக் கொண்டிருக்கும் அந்த மனிதனால் என்ன செய்ய முடியும்? உரக்க கூவி மற்றோரை அழைக்கவும் முடியாது .. ஏனெனில் அவன் ஊமை .. அதே நேரத்தில் தன் கரங்களால் அதை எடுத்து வேறு பாதுகாப்பான இடத்தில் மாற்றி வைக்கவும் முடியாது ... ஏனெனில் அவனுக்கு கரங்களும் இல்லை .... அவனால் என்ன செய்ய முடியும் .... இயலாமையால் பரிதவிப்பான் ... அதைப் போலவே என் அவன் மிக அருகில் இருந்தும் நான் அவனை காண முடியவில்லை ... இயலாமையில் தவிக்கிறேன் .... என புலம்பினாள். அவனை ஒரு கூட்டமே மொய்த்து விட்டது. அந்த ஆடம்பர குடும்பத்துடன் வந்த அந்த பெண் அவனை கட்டிப்பிடித்து ஒரு முத்தமே கொடுத்து விட்டாள். "இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக் கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு என, யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து, தான் செய் குறி நிலை இனிய கூறி, ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு, உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் கொடிச்சி செல்புறம் நோக்கி, விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?" சீக்கிரம் சொல். உன்னுடைய இனிய சொல்லுக்காக என் நெஞ்சு காத்திருக்கிறது. சந்தோஷமான ஒரு பதிலைச் சொன்னால், உன்னுடைய பற்களில் இதழோடு இதழ் சேர்த்து, என் இதழை ஒற்றி முத்தமிடுவேன்!’ இப்படி நான் அவளிடம் சொன்னேன். அவளும் என்னிடம் ஆசையாகப் பேசினாள் ..... அந்தக் கொடிச்சி, அந்தக் காட்டுப் பெண் என்னை விட்டுச் செல்லும்போது, அவளுடைய முதுகைப் பார்த்துக் கலங்கிய என் நெஞ்சு - அவளை விட்டுவிடாதே!என்றது - இப்படி நடக்க வேண்டும் என் கனவு கண்டு ஏங்கியவளுக்கு இடியாக அந்த முத்தம் இருந்தது. எனினும் "காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா." பகல் நேரத்தில் காக்கை தான் பலம் வாய்ந்தது. அப்போது ஆந்தையால் காக்கையை வெல்ல முடியாது. ஆனால் இரவு நேரத்தில் ஆந்தையின் பலம் அதிகரித்து விடும். அப்போது காக்கையால் ஆந்தையை வெல்ல முடியாது. ஆக, நேரம் பார்த்து எதிரியுடன் மோதுவது முக்கியம். ஓர் அரசனின் கடமை, உலகத்தை (தன்னுடைய மக்களைக்) காப்பாற்றுவது தான். ஆனால் அதற்காக அவன் அவசரப் படக்கூடாது. மீன் வரும் வரை ஆற்றங்கரையில் காத்திருக்கும் கொக்கைப் போலப் பொறுமையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பகைவர்களை ஜெயிப்பது சிரமம். இப்படி நினைத்தவளாய் அந்த பெண்ணை தன் ஒரக் கண்ணால் பார்த்தாள். இவள் திலோத்துமை என்றால் அவளும் ஒரு மேனகா தான். மேனகா என்பது மேனி என்ற அழகு உடலைக் குறிக்கும். "அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு" அவள் தேவதையோ? மோகினியோ? அழகிய தோகை மயிலோ? இல்லை கனமான அழகிய குழையை காதில் அணிந்திருக்கும் மானிடப் பெண் தானோ ? அவளின் அழகைக் கண்டு என் மனமே மயங்குகிறதே. என் அவன், என் காதலன் என்ன செய்வான்? "சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை கான யானை அணங்கியா அங்கு- இளையள், முளை வாள் எயிற்றள், வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே." சிறிய வெண்மையான அழகிய கோடுகளை உடைய பாம்பின் குட்டியானது, காட்டு யானையை வருத்தியது போல இளமையுடையவளும், அழகிய தோற்றம் உடையவளும் மூங்கில் முளை போன்ற ஒளியுடைய பற்களைக் கொண்டவளும், வளையைக் கையில் அணிந்த ஒருத்தி என்னை வருந்தச் செய்தாள் என தடுமாறக் கூடாது. இந்த புதியவளின் காதல் - ஈர்ப்பினால் என் அவன் தன் வாழ்வியல் நெறிகளில் இருந்து பிறழ்ந்து விடக்கூடாது என்று பல தடவை வேண்டிக் கொண்டாள். சீறும் பாம்பை நம்பு. சிரிக்கும் பெண்ணை நம்பாதே என அறிவுறுத்தலாமோ என்று சற்று யோசித்தாள். அவளுக்கு அங்கு இருக்கவே பிடிக்க வில்லை. மெல்ல மெல்ல நகர தொடங்கினாள். என்றாலும் அவளுக்கு ஒரு அவா. அங்கு என்னதான் நடக்குது பார்ப்போம் என்று. தன் இதயத்தை கல்லாக்கி கொண்டு மீண்டும் அந்த கடை அருகில் நின்று குடிக்கத் தொடங்கினாள். அவள் கண்கள் குளம் ஆகி விட்டன. காதில் - சிரிப்பது , பகிடி விடுவது, ஊர் கதைகள் இப்படி அவர்களின் ஆரவாரம் விழுந்து கொண்டு இருந்தன. "கருங்கால் வெண்குருகு மேயும் பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே" அவளது கண்ணீர் நிறைந்து அவளது முலைகளின் இடைப்பகுதி நாரைகள் மேய்கின்ற குளம் போல் ஆகிவிட்டது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 5 தொடரும்.
-
இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" [ஒரு புது முயற்சி]
இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:03 [ஒரு புது முயற்சி] "முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல ... காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடகாளின்" காட்டில் உறையும் தாய் தெய்வமான காடுகாளின் மகன் முருகு (முருகன்), மற்றொரு தாய்த் தெய்வமான வள்ளியை மனைவியாக்கினான். இப்படி பெண்ணுக்கு முன்னுருமை கொடுத்த தமிழ் இனம் எப்படி மாறியதோ ? இதற்கு யார் காரணமோ ? அவள் தூக்கத்தில் புலம்பினாள். பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுகின்றான். "மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய யே பிஸ்யூ பாபயோயை ஸ்தரீயோ வைஸ்யஸ்ததாஸீத்ர ஸ்தேபி யாந்தி பராம்கதி"[133] "பார்த்தா! பெண்களோ வைசியர்களோ சூத்திரர்களோ நீச குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப் பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்" என்று பெண்களை தாழ்ந்த சாதிக்கு, தாழ்த்தப்பட்டு பகவத் கீதையில் இழிவு படுத்துவதை காணலாம். இப்படித் தான் மெல்ல மெல்ல மாற்றப்பட்டதோ? பரிசம் சீதனமாக மாறியது. அதன் விளைவு? அவள் நெஞ்சம் பட படத்தது. தன் அக்காவின் கதை நிழலாக அவள் கண் முன் ஓடியது. அவள் தன்னை அறியாமலே கண்ணீரில் நனைந்தாள். வால்மிகியின் ராமாயண சீதை அவள் முன் தோன்றி ஆறுதல் கொடுத்தாள். காட்டுக்குச் சென்ற இராமன் சீதையின் மடியில் தலை வைத்து படுத்து இருக்கும் போது, கடவுளாக போற்றப்படும் இந்திரனுடைய மகன் சயந்தன் காகம் வேடம் போட்டு வந்து, தனது பாலியல் வக்கிரத்தை சீதையின் முலைக் காம்பை கொத்தி தீர்த்த போது, அது குற்றமாக ராமனுக்கு படவில்லை. இராவணனை வென்ற இராமன், சீதையை பார்க்க மறுத்த நிலையில், "இராவணனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை" என்றான். மேலும் அவன் "உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிசலூட்டுகிறது. சகிக்கவில்லை. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம் ... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா." என்று கேட்கின்ற போதே, சீதையை கொன்றுவிட்டான் ? கடைசியாக இராமன் மகனைக் கண்டதுடன், சீதை மீதான சந்தேகத்தை மீளவும் சுட்டிக்காட்டினான். அதை நிவர்த்திக்க விரும்பினால் சீதை பெரும் மக்கள் கூட்டம் முன்பு, மீண்டும் தனது கற்பை நிருபிக்க வேண்டும் என்றான். சீதை அழைத்து வரப்படுகின்றாள். அங்கு இராமனின் அவமானகரமான அவதூறுகளை கேட்டு தன்னைத்தான் தற்கொலைக்கு இட்டுச் செல்லுகின்றாள் சீதை. அவள் தனக்கு நடந்ததை கூறி " பூப்போல் உண்கண் மரீஇய நோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே." பூப்போன்ற மை இட்ட கண்களில் தோன்றிய பசலை நோயைத் தீர்க்கும் மருந்து நெய்தல் நிலத்துத் தலைவன் வரும் தேர். அது போல உன் அவன் வரும் விமானம் உன் கண்களில் தோன்றிய நோயைத் தீர்க்கும் என் கூறி அவள் கண்ணீரை துடைத்தாள். கண் விழித்த அவள் ஒரு வாறு தன்னை சரிபடுத்திக் கொண்டு, எல்லாம் நல்ல படியாக நடக்கும் என தன்னை தானே தேற்றிக் கொண்டாள். அவனின் பெற்றோர் உடன் பிறப்புகள் என ஒரு பெரும் கூட்டமே அங்கு வந்து கொண்டு இருந்தது. அவர்களுடன் அவளுக்கு தெரியாத ஒரு ஆடம்பர குடும்பம் வருவதை இட்டு அவள் திடுக்கிட்டாள். ஒரு சில நேரம் தடு மாறியே விட்டாள். அவளுக்கு இனி அவர்களை பார்ப்பது வெறுப்பாக இருந்தது. அவளுக்கு அங்கு இனி காத்திருப்பதும் பிடிக்கவில்லை. மேலும் தான் அங்கு வந்திருப்பதை காட்டி கொள்ள விரும்பாதவளாய், மெல்ல எழுந்து பக்கத்தில் இருந்த ஒரு கடையில் குளிர் பாணம் வாங்கி குடிக்கத் தொடங்கினாள். ஆனால் கண் அவளுக்கு, அவள் எண்ணங்களுக்கு படியவில்லை. அது இன்னும் பயணிகள் வருகையின் வாசல்லையே பார்த்துக் கொண்ட்டிருந்தது. அவள் என்ன செய்வாள்? "நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர் யான் மற்ற துஞ்சாதேனே” உலகமே தூங்குகின்றதே என்னைத்தவிர! என அவள் வாய் தன்னையறியாமல் முணு முணுத்தது. "முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்? ஓரேன்! யானும் ஓர் பெற்றி மேலிட்டு ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல், அலமரல் அசை வளி அலைப்ப, என் உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே?" சுழலை உடைய அசையும் காற்று என்னை வருத்த, என்னுனடைய துன்ப நோயை அறியாமல் தூங்கும் இந்த ஊரில் உள்ளாரை முட்டுவேனா? தாக்குவேனா? ‘ஆ’ , ‘ஒல்’ என கத்துவேனா, ஒரு காரணத்தால்? என்ன செய்வது என்று எனக்கு புரியவில்ல. இப்படி அவள் மன நிலை இருந்தது. "நோய் தந்தனனே தோழி பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே” அவன் தனக்கு தந்த காதல் நோயால் கறுப்பான தன் கண்கள் இப்போ பச்சையாக போய்விட்டது என நொந்தாள். மக்களும் உலகமுமா சொன்னார்கள் இவளை காதல் செய்யச் சொல்லி? இல்லையே? இப்ப வருந்தி என்ன பயன்? மஞ்சளாய்ப் போயிருந்தாலாவது மஞ்சள் காமலை என்று மருந்தெடுத்திருக்கலாம். பசுமைக்கு ஏங்கியதாலோ என்னவோ இவளது கண்கள் பச்சையாகி விட்டனவோ? யாருக்கு தெரியும்? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 4 தொடரும்.
-
இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" [ஒரு புது முயற்சி]
இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:02 [ஒரு புது முயற்சி] "சிறு கண் யானை உறு பகை நினையாது, யாக்குவந் தனையோ பூந்தார் மார்ப, அருள் புரி நெஞ்சம் உய்த்தர இருள் பொர நின்ற இரவினானே." சிறு கண்களை உடைய மதம் கொண்ட யானை பற்றி பொருட் படுத்தாது, பூ மாலை அணிந்த அன்பு உள்ளம் உடையவனே, எப்படி நீ என்னை காண இந்த கரும் இருட்டில் வந்தாய்? இப்படி சங்க கால "தெரியிழை அரிவை" யாக அவள் தோன்றினாள். அவள் பயந்தவளாக திடுக்கிட்டு கண்ணை அகல திறந்து பார்த்தாள். இன்னும் அவன் வர நேரம் இருக்கிறது. என்றாலும் அவள் மனதில் திடீர் என ஒரு கவலை எங்கு இருந்தோ வந்து ஆடத் தொடங்கியது. எப்படி சங்க கால காதலன் இரவுக்குறியில் சந்திப்பதற்கு வரும் வழியில் உள்ள இடையூறுகளை எண்ணித் காதலி வருந்தினாலோ, அப்படி அவளும் வருந்த தொடங்கி விட்டாள். மேல் நாடு சென்று மேல் படிப்பு முடித்து வரும் அவனை, தன் காதலனை "பரிசம்" கொடுத்து யாரவது கொத்தி விடுவார்களோ என அவள் உள்ளம் ஒரு ஊஞ்சல் ஆட தொடங்கி விட்டது. எங்கே நல்ல உத்தியோக, நல்ல படிப்பு மாப்பிள்ளை கிடைக்காதா தமது மகளுக்கு என பண முடிப்புடன் காத்திருக்கும் சிலரை எண்ணி கலங்கினாள். "உண்பது நாழி; உடுப்பவை இரண்டே; பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பம் எனினே, தப்பு ந பலவே." பசியைப் போக்க ஒரு நாழித் தானியம் மற்றும் உடுக்க வேண்டியது மேலாடையும் இடுப்புத் துணியும் ஆகிய இரண்டே; பிற எல்லாமும் எல்லார்க்கும் சமமே; சேர்க்கும் செல்வத்தை சமூக வளர்ச்சிக்குப் பயன் படுத்தாமல் மெத்தைக்குள் தைத்து வைத்துக் கொண்டு தானே அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலை பல இன்னல்களைத் தரும் என்றாலும் அது பாதாளம் வரை செல்லக்கூடியது. அவர்கள் எவரையும் மாற்றக் கூடியவர்கள்.பணம், செல்வாக்கு எல்லாத்தையும் வாங்கிவிடும். "பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை" என்ற பழைய வெள்ளித்திரை பாடல் வரிகள் நெஞ்சில் வந்து மோதி, ஒரு நடுக்கம் அவளை ஆட்ட, அவள் மீண்டும் அயர்ந்து விடடாள். "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’யாமே," தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே,ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். இப்படித்தான் பெண்பிள்ளைகளை சரி சமனாக பார்த்தார்கள் அதை ஒரு பாரமாக அவர்கள் கருதியது இல்லை அது மட்டும் அல்ல பெண் எடுப்பதற்கு ஆண் வீட்டார் தான் பரிசம் கொடுத்தார்கள். "உறுமென கொள்ளுநர் அல்லர் நறுநுதல் அரிவை பாசிலை விலையே" பெண்ணுக்கு ஒரு விலை தந்து, பொல் பிடிக்கும் நரைத்த தலையும் உடைய பெரியோர்களைக் கொண்டு பெண் வீட்டுக்கு வந்து, மணம் பேசி முடிக்கும் வழக்கம், "பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ தண்டு உடைக் கையர் வெண்டலைச் சிதவலர் நன்று நன்று என்னும் மாக்களோ இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே.", அதாவது பெண்ணைத் தேடி வரும் வழக்கம் அன்று இருந்தது. "..மூவேறு தாரமும் ஒருங்குடன்கொண்டு சாந்தம் பொறைமர மாக நறைநார்.. இன்தீம்பலவின் ஏர்கெழு செல்வத்து எந்தையும் எதிர்ந்தனன் .. யாமும் நாள் வல்லே வருக என இல்லுறை கடவுட்குப் பலி ஓக்குதும்." வெவ்வேறாகிய அம்மூன்று பண்டங்களையும் சந்தன மரம் காவு மரமாக அவற்றை ஒரு சேரக் காவிக்கொண்டு, நறைக் கொடியாய நாரினால் ........... ............ மிக்க இனிமையுடைய பலாமரங்களையுடைய அழகு மிக்க செல்வத்தையுடைய நம் தந்தையும் நின்னைக் கொடுத்தலை ஏற்றுக் கொண்டான் ........... .............. நாமும் நம் மணத்திற்கு வரைந்த நாள் விரைந்து வருவதாக என்று நல்ல இறையினையுடைய மெல்லிய விரல்களைக் குவித்து மனையுறை தெய்வத்திற்கு பலி செலுத்து வோமாக - இப்படி இருந்த நாம், எப்படி இப்படி மாறினோம் ?அவளுக்குள் ஒரு குமறல். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 3 தொடரும்.
-
இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" [ஒரு புது முயற்சி]
இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:01 [ஒரு புது முயற்சி] “கன்றும் உண்ணாது கலத்தினுள் படாது நல் ஆன் தீம் பால் நிலத்தில் உக்கா அங்கு எனக்கு அகாது என்னைக்கும் உதவாது பசலை உணீஇயர் வேண்டும் திதலை அல்குல் என் மாமைக் கவினே." கன்றும் குடிக்காமல், பாத்திரத்திலும் கறக்காமல், நிலத்தில் வீணே வழிந்து போகும் பசுவின் பாலைப் போல, எனக்கும் உதவாமல், என் தலைவனுக்கும் இல்லாமல் என் அழகும் என் மாந்தளிர் மேனியும் விணாகிக் கொண்டிருக்கின்றதே -- இப்படி ஏங்கி தவித்து இருந்தவளுக்கு இன்று ஒரு பௌர்ணமி. ".... திங்கள் நாள் நிறை மதியத்து அனையை; இருள் யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே?" நீ [தலைவன்] முழுமதி போன்றவன். உன் [தலைவன்] நிழலில் வாழ்பவர்களுக்குத் துன்பம் எங்கே உள்ளது? என்று நினைத்தாலோ ?அவளது முகமும் முழுமதியாக ஒளிர்ந்தது. பிரமன் அளந்து தான் செதுக்கியிருக்க வேண்டும் அப்படி ஒரு அழகு. ''நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், மயில் ஓரன்ன சாயல், செந் தார்க் கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், பாவை அன்ன வனப்பினள் இவள்'' என, காமர் நெஞ்சமொடு பல பாராட்டி, யாய் மறப்பு அறியா மடந்தை- தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே." நீண்ட மலையிலே தழைந்த பெரிய தண்டினையுடைய குறிஞ்சியின் விடியலிலே விரிந்த மலர் போன்ற மேனியையும்; பெரிய சுனையிலுள்ள குவளைமலர் எதிர் எதிர் வைத்துப் பிணைத்தாற் போன்ற இமையையுடைய கரிய குளிர்ச்சி பொருந்திய கண்ணையும்; மயிலின் ஒரு தன்மை யொத்த சாயலையும்; கழுத்திலிட்ட சிவந்த வரையுடைய கிளியின் ஒரு தன்மை யொத்த சொல்லையும்; பருத்த தோளையும்; கொல்லிப் பாவை போன்ற அழகையுமுடைய ... அகிலின் நெய் பூசி நீங்ககில்லாத மணம் வீசுகின்ற கூந்தலையுடைய தலைமகள், இப்படி அவள் அழகு தேவதையாக இருந்தாள். அவள் யாருக்காக இவ்வளவு காலமும் காத்திருந்தாளோ அந்த கள்ளன் வருகிறான். "உள்ளின் உள்ளம் வேமே; உள்ளாது இருப்பின் எம் அளவைத்து அன்று ; வருத்தி வான் தோய்வு அற்றே காமம்; சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே" மாறனோ அம்புமேல் அம்பு பொழிகிறான். காமமோ வானளாவப் பெருகிவிட்டது. அவனை நினையாதிருக்கவும் அவளால் முடியவில்லை. அப்படி நினைத்தாலும் அவள் மனம் வேதனை அடைகிறது, அதை தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை என்று இது வரை காலமும் இருந்தவளுக்கு இப்ப அவன் இன்னும் சிறிது நேரத்தில் வருகிறான் என்றால் எப்படி இருக்கும்?. அந்த பூரிப்பில் அவள் அழகு மேலும் மேலும் மெருகேறியது. ரம்பை, ஊர்வசியை விட மிக சிறந்த மற்றொரு அழகியை பிரம்மா படைத்தார். அது தான் திலோத்துமை. அப்படித்தான் இவளும் இருந்தாள். பெயரில் மட்டும் அல்ல, அழகிலும் அப்படித்தான். ஆனால் அவளுக்கு என்னவோ அந்த பெயர் எள்ளளவும் பிடிக்காது. ஈடிணையற்ற அழகியைப் பார்த்ததும் படைத்தவனுக்கே அவள் மீது ஆசை வந்து விட்டது. பெற்ற மகளுக்கு சமமான திலோத்துமை மீது மையல் கொண்டான் பிரம்மா. ஆசையோடு காமத்தோடு அணைத்தான். அவள் பெண் மானாக மாறி தப்பி ஓடினாள். பிரமன் விட்டானா? ஆண்மானாக மாறி அவளை விரட்டிப் பிடித்து தன் பசிக்கு இரை யாக்கினான். இதனால் தான் போலும் அந்த பெயர் அவளுக்கு அறவே பிடிக்கவில்லை. தன் பெயரை "திலோ" என்று மட்டுமே கூறி வந்தாள் மிக மிக அமைதியுடன் அவள் பயணிகள் வருகையை நோக்கி வந்தாள். "ஒரு பெண் நீராட வரும்போது அவளது நடையை பார்த்து பழகுவதற்காக ஒரு அன்னப்பறவை வயலில் காத்து நிற்குமாம்" - இப்படி கூறினான் கம்பன். அதே மாதிரி தான் அவளும் அன்ன நடை பயன்று வந்தாள் அங்கு ஆர்ப்பரித்தெழுந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் அப்படியே ஒருக்கா நின்றுவிட்டது. அவள் அதை சற்றும் பொருட் படுத்தாதவளாய் அங்கே ஒரு மூலையில் அவனுக்காக காத்திருந்த்தாள். "உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து , இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர் புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்," புது நிலவு நிகழும் பெரு நாட் பொழுதிலே; கதிரவனும் அந் நிலவும் ஒன்றை ஒன்று எதிர்கொண்டு; அவற்றுள் ஒன்று துயர் தரும் மாலைப் பொழுதில் மலைக்கப்பால் சென்று மறைந்தது போல; நானும் அவரும் ஒருவரை ஒருவர் காணும் போது நடக்கக் கூடாது . "புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள்ஒளி அம்கண் இருவிசும்பு விளங்கத், திங்கட் சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்," விடிகாலையில் பறவைகளின் ஒலி; வானிலே தெளிந்த ஒளி.. நிலவு- உரோகிணி என்னும் மீனுடன் கூடிய ஓரை (Constellation) நல்ல நாள் - அந்த நாளில் மணவீட்டினை அலங்கரித்து நடை பெற்ற திருமணம் போல் இருவரும் கூடும் இந்த நாள், நல்ல நாள் ஆகட்டும் என்று நினைத்தவாறு இன்னும் நேரம் இருப்பதால் தன்னை அறியாமலே பாவம் கொஞ்சம் "சேமம் புகினும் யாமத்து உறங்கு" போல் அவள் தூங்கி விடடாள். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 2 தொடரும்.
-
"மனு தர்மம் / வினைப் பயன்கள்"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கும் அதனால் எனக்குத் தரும் ஊக்கத்துக்கும் நான் ஓய்வின் பின் ஒரு பொழுதுபோக்காக என் மனதில் படுபவையை கட்டுரையாக எழுதத் தொடங்கினேன் பின் ஒரு காலம் கவிதைக்குள் அடிவைத்தேன் இப்ப இரண்டு ஆண்டுகளாக சிறுகதை யிலும் ஒரு முயற்சி உங்கள் ஆதரவுக்கு மீண்டும் நன்றி
-
"பலன் தரும் பழக்கங்கள்"
உங்கள் எல்லா கருத்துக்களுக்கும் நன்றிகள் !!
-
"தத்துப் பிள்ளை"
"தத்துப் பிள்ளை" இலங்கையின் கிழக்கே; வடதிசையில் வெருகலையும், கிழக்கே வங்காள விரிகுடாவையும், தெற்கே அம்பாறை மாவட்டத்தினையும் மற்றும் மேற்கே பொலன்னறுவை மாவட்டத்தினையும் எல்லைகளாகக் கொண்டமைந்த, இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று பூர்வீகம் கொண்ட, கிழக்கிலங்கையின் நடு நாயகமாகத் திகழ்கின்ற மீன்பாடும் தேனாடு என வர்ணிககப்படும் மாவட்டம் தான் மட்டக்களப்பாகும். "பால் பெருகும் தேன் பெருகும்; பண்புடைய மன்னவர் செங் கோல் பெருகும் படிய பைங் கூழ் பெருகும் புனல் பரந்து கால் பெருகும் கல்லார்கும் சொல்லாட்சி மிகப் பெருகும் நூல் பெருகும் கிடையார்கு நுவலறங்கள் பெருகுமால்" என அனைத்தும் பெருக்கெடுக்கும் மீன்பாடும் தேனாடு பற்றி, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை பெருமையுடன் பாடிய, அமைதியான கடற்கரை நகரமான மட்டக்களப்பில், பனை, தென்னை மரங்களின் மெல்லிய சலசலப்புக்கும், கடல் அலைகளின் அமைதியான அமைதிக்கும் மத்தியில், ராஜன் மற்றும் கலா என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு நிஷா, பிரியா, ராணி ஆகிய மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். இலங்கையின் பாரம்பரிய அலங்காரத்தின் துடிப்பான வண்ணங்கள் மற்றும் காலாவின் காரமான கறிகளின் நறுமணத்துடன் அவர்களது வீடு காட்சி அளித்தது. ராஜனும் கலாவும் எப்போதும் தங்கள் குடும்பப் பாரம்பரியத்தைத் தொடர ஒரு மகன் வேண்டும் என்று என்றும் விரும்பினர். ஒரு நாள் மாலை, வேலையால் வீடு திரும்பிய ராஜன், தனது கை.கால்களை அலம்பிவிட்டு வந்து ஹாலில் சோபாவில் அமர, கலா அடுக்களையில் இருந்து காபி டம்ளருடன் வந்து கணவனுக்கு காப்பியை கொடுத்து விட்டுத் தானும் ஒரு காபி டம்ளரை எடுத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தாள். இருவரும் காபி குடித்தனர். “கலா அடுக்களையில் போய் கொஞ்சம் சீனி எடுத்துட்டு வாயேன்". என்ற ராஜன், மறுகணமே "வேணாம் வேணாம் என்னோட ஆவணப் பையை [briefcase] எடுத்துக் கொண்டு வா" என்றான். கலா எழுந்து சென்று அலுவலக பையை கொண்டு வந்து ராஜனிடம் கொடுக்க, ராஜன் அதை திறந்து அதில் இருந்த பால் ரொபியையும் கேசரியையும் மற்றும் சிவத்த ரோசாப் பூவையும் வெளியே எடுத்து ரோசாப் பூவை கலாவின் முடியில் சூடிவிட்டு, கேசரியை தன் கையால் எடுத்து கலாவின் வாயில் கொஞ்சம் ஊட்டினான். கலா, “ம்.. ம்…ம்..” என்று சொல்லிவிட்டு அவளும் ஒரு துண்டு கேசரியை தன் கையால் கணவரின் வாயில் கொஞ்சம் ஊட்டினாள். ராஜன் “போதும் போதும்” என்றான். இருவரும் சந்தோஷத்தில் மிதந்தனர்.ராஜன் கலா இருவருக்கும் திருமணமாகி பன்னிரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் ஒரு ஆண் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. எதையும் வெளியே காட்டி கொள்ளாமல் காப்பியை குடித்து விட்டு கலாவின் கையை பிடித்து இழுத்து தன் அருகே உட்கார வைத்தான். “சரி உன் மனசு வருத்தப்படுவது எனக்கு தெரியுது. இதுல நம்ம கையில என்ன இருக்கு. எதையும் நினைத்து மனசு வருத்தப்படாத." "நமக்கும் ஒரு ஆண் குழந்தை கண்டிப்பாக பிறக்கும். நம்பிக்கை வை." என்று சொல்லி விட்டு, எனினும் "எமக்கும் வயது ஏறிக் கொண்டு போகிறது, காலம் கடத்தாமல், ஒரு தத்துப் பிள்ளை எடுத்தால் என்ன?" என்று கேட்டான். அவளும் சம்மதிக்க, அர்ஜுன் என்ற சிறுவனை தத்தெடுக்க முடிவு செய்தனர். அர்ஜுன் அவர்கள் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த தருணத்திலிருந்து, அவனை இரு கரங்களுடன் மகிழ்வாக வரவேற்றனர். அவனது சிரிப்பு, மூத்த மூன்று சகோதரிகளின் மகிழ்ச்சியான உரையாடலுடன் தடையின்றி கலந்தது. "என இவர் தமக்கு மைந்தற் பேறு இன்றி இரங்கும் நாளில் தனபதி மருமகன் தன்னைத் தகவுசால் மகவாக்கொண்டு மன மகிழ் சிறப்பால் நல்க மனைவியும் தொழுது வாங்கிப் புனைவன புனைந்து போற்றிப் பொலிவு உற வளர்த்துக் கொண்டாள்" மனைவியுனதும், மூன்று மகள்மாரின் மகிழ்வையும் புன்னகையையும் பார்க்கும் பொழுது ராஜனுக்கு திருவிளையாடற் புராணம் / மாமனாக வந்து வழக்கு உரைத்த படலத்தின் இந்த பாட்டுத் தான் ஞாபகம் வந்தது. ஏன், இயேசு, தச்சனாகிய யோசேப்புக்கு பிறந்த மகனல்ல, என்றாலும் அவரை தனது சொந்த மகனாக யோசேப்பு ஏற்றுக்கொண்டான். (மத்தேயு 1:24, 25). அதே போலத்தான் ராஜனும் கலாவும் ஏற்றுக்கொண்டு வாழ்வை இன்பமாக நகர்த்தினார்கள். எனினும் , ராஜன் மற்றும் கலாவுக்கும் இன்னும் உயிரியல் மகன் ஆசை இருந்து கொண்டு தான் இருந்தது. இறுதியாக, கலாவுக்கு சஞ்சய் என்ற ஆண் குழந்தை பிறந்ததும் அவர்களின் பிரார்த்தனைகள் பலித்தன. மகிழ்ச்சியில் மூழ்கிய அவர்கள், சஞ்சய் மீது பாசத்தையும் கவனத்தையும் அதிகளவு பொழிந்தனர், அதனால் அர்ஜுனை மெல்ல மெல்ல தெரிந்தும் தெரியாமலும் தற்செயலாக ஓரங்கட்டினார்கள். ஒரு நாள் மாலை, சாப்பாட்டு மேசையைச் சுற்றி குடும்பத்துடன் கூடியிருந்தபோது, அர்ஜுன் தயங்கித் தயங்கிப் பேசினான், "அம்மா, அப்பா, நீங்கள் என்னைப் பார்க்க மாட்டீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. சஞ்சய்யுடன் ஒப்பிடும் போது நான் கண்ணுக்கு தெரியாதவன் போல் இருக்கிறது." என்று தன் ஆதங்கத்தை வெளிப்படையாகவே கூறினான். ராஜனும் கலாவும் தங்கள் செயல்களில் தற்செயலாகப் புறக்கணிக்கப்பட்டதை உணர்ந்து கவலைப் பார்வையை பரிமாறிக் கொண்டாலும், அவர்களின் மனதில் தங்கள் உயிரியல் மகன் மேல் இருக்கும் கூடுதலான பாசத்தையோ, அக்கறையையோ மறைக்க முடியவில்லை. கண்ணீருடன் கலா அர்ஜுனை இறுகத் தழுவிக் கொண்டாலும், அது ஒரு சம்பிரதாயம் என்பதை இலகுவாக யாரும் கண்டு பிடிக்கலாம். "ஓ, மை டியர் அர்ஜுன், நாங்கள் உன்னை அப்படி உணரவைத்திருந்தால் நான் மிகவும் வருந்துகிறேன். சஞ்சய்யைப் போலவே நீயும் எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கவன்." என்ற அவளின் வார்த்தையின் உண்மைத்தன்மை கேள்விக் குறியாகவே இருந்தது. பரிகாரம் செய்வதில் உறுதியாக இருந்த ராஜனும் கலாவும் அர்ஜுனை குடும்பச் செயல்பாடுகளிலும் கொண்டாட்டங்களிலும் சேர்த்துக் கொள்ள முற்பட்டாலும், அங்கு வேற்றுமைகள் இல்லாமல் இருக்கவில்லை. இதனால், அர்ஜுனின் இதயம் அவர்களின் இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுவதில் கனமாகவே இருந்தது. எனவே, அர்ஜுன் வீட்டை விட்டு வெளியேறும் கடினமான முடிவை எடுத்தான். அவன் தனது வளர்ப்பு பெற்றோரிடமும் மூத்த சகோதரிகளிடமும் கண்ணீருடன் விடைபெறும் போது, அவன் தனக்குள் கிசுகிசுத்தான், "நான் உங்களை ஒரு நாள் பெருமைப்படுத்துவேன், நான் சத்தியம் செய்கிறேன்." தன் இதயத்தில் உறுதியுடன், அர்ஜுன் தன்னை, தன் படிப்பை தொடருவதற்காக அங்கும் இங்கும் கிடைக்கும் வேலைகளை எடுத்துக்கொண்டு, பல இடர்களுக்கூடாக தனிமையில் வேறு ஒரு தொலை தூர நகரத்தில் வாழ்வைத் தொடர்ந்தான். எதிர்கொண்ட கஷ்டங்கள் எதுவாகினும் எல்லாவற்றையும் சமாளித்து, கல்வி மற்றும் சிறந்து விளங்குவதில் அவன் உறுதியாக இருந்தான். பல வருடங்களின் பின்னர், அர்ஜுன் ஒரு புகழ்பெற்ற சத்திரசிகிச்சை நிபுணராக முன்னேறினான். அவனுடைய பெயர் இலங்கை முழுவதும், குறிப்பாக வடக்கு, கிழக்கில் போற்றப்பட்டது. அவனது பயணம் சவால்கள் இல்லாமல் இல்லை, ஆனால் ஒவ்வொரு வெற்றியிலும், அவன் தனது தாழ்மையான தொடக்கத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை அவனுக்குள் சுமந்து சென்றான்!, அதை என்றும் அவன் மறக்கவில்லை. இதற்கிடையில், ராஜனும் கலாவும் எதிர்பாராத சோதனைகளை எதிர்கொண்டனர். சஞ்சய், ஒரு ஊதாரி மகனாக, பெற்றோர், சகோதரிகளை கவனிக்காதது மட்டும் இன்றி, அவர்களுக்கு தொல்லையும் கொடுத்தான். அவனுக்கு கடன்கள் கொடுத்தவர்கள் இப்ப ராஜன் கலாவிற்கும் பல பிரச்சனை கொடுக்க தொடங்கினார்கள். ஆனால், சஞ்சய் எந்த கவலையும் இன்றி, வேலைக்கும் ஒழுங்காக போகாமல் இருந்தான். "ஒரு தந்தை ஒரு தாய் இரு மகன் ஒன்று தத்து மகன் மற்றது உயிரியல் மகன் தத்துப் பிள்ளை அவர்களிலே மணியான முத்து உயிரியல் பையன் ஊதாரி தேறாத நெத்து" மேலும் காலம் செல்ல செல்ல, சஞ்சய் தந்தை சொல்லைக் கேட்காமல் ஊதாரித்தனமாக தான் நினைத்த இடங்கள் எல்லாம் சுற்றித் திரிந்தான். தன் பிள்ளையின் போக்கைக் கண்டு மனம் வருந்தினார். இருப்பினும் தன் பிள்ளை நன்றாக வாழ்வான் என்று நம்பினார். ஆனால் அவனோ வெளி மாகாணம் சென்று மது, மாது என தன் மனம் போன போக்கில் வாழ்ந்தான். ஒரு நாள், ராஜனும் கலாவும் தங்கள் வீட்டில் அமைதியான தனிமையில் கவலையுடன் அமர்ந்திருந்த போது, கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அவர்களுக்கு ஆச்சரியமாக, அர்ஜுன் அவர்கள் முன் நின்று கொண்டிருந்தான், அவனுடைய கண்கள் இரக்கத்தாலும் மன்னிப்பாலும் நிறைந்திருந்தது. "அம்மா, அப்பா, நான் உங்களை மிஸ் பண்ணிட்டேன்" என்று அர்ஜுன் மெதுவாக கூற, அவன் குரல் உணர்ச்சியில் நடுங்கியது. ராஜன் மற்றும் கலா அர்ஜுனை ஒரு அன்பான அரவணைப்பில் சூழ்ந்தனர், மகிழ்ச்சியின் கண்ணீர் அவர்களின் கன்னங்களில் வழிந்தோடியது. “உன்னையும் மிஸ் பண்ணிட்டோம் கண்ணு, இப்ப அதை நாம் உண்மையில் உணர்கிறோம்” என்று ராஜன் குரலில் உணர்ச்சிகள் ஸ்தம்பித்தன. "எங்களை நீ தான் மன்னிக்க வேண்டும். உயிரியல் மகன், உயரிய மகன் என்று நாம் அவனுக்கு கூட செல்லம் அன்பு கொடுத்து கெடுத்துவிட்டோம். அவனின் மேல் ஏற்பட்ட அதீத பாசத்தால், உன்னைக் கூட கொஞ்சம் புறக்கணித்துவிட்டோம்" என்கிறார். அர்ஜுன் தனது தன்னலமற்ற கருணை மற்றும் தாராள மனப்பான்மையின் மூலம் அவர்களின் குடும்பத்தைப் பிரிந்த இடைவெளியைக் இயன்றவரை விரைவாக குறைத்தான். கடந்த காலத்தின் காயம் இருந்த போதிலும், அவன் சஞ்சய்க்கு அன்பையும் ஆதரவையும், புத்திமதியையும், அதே நேரம் தன் மருத்துவ நிலையத்தில் ஒரு வேலையையும் வழங்கினான். அத்துடன் அவனின் எல்லா கடன்களையும் தானே பொறுப்பேற்று அதைத் தீர்த்து வைத்தான். மெதுவாக ஆனால் நிச்சயமாக, சஞ்சயின் இதயம் மென்மையாக்கப் பட்டது, மேலும் அவன் தனது குடும்பத்தின் அன்பான அரவணைப்பிற்கு திரும்பினான். மீண்டும் ஒருமுறை ஐக்கியப்பட்டு, ராஜன் மற்றும் கலா குடும்பத்தின் உண்மையான மதிப்பை உணர்ந்தனர், ஒவ்வொரு தருணத்தையும் நன்றியுடனும் அன்புடனும் ஒன்றாகப் போற்றினர். அவர்களது வீட்டில் நிறைந்திருந்த சிரிப்பு மற்றும் கண்ணீருக்கு மத்தியில், அவர்களை ஒன்றாக இணைத்த பிரிக்க முடியாத பிணைப்புகளில் அவர்கள் ஆறுதல் கண்டனர். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"மனு தர்மம் / வினைப் பயன்கள்"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்நன்றி அன்புடன் வரவேற்கிறேன்
-
"அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு" - ஒரு விளக்கம்
"அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு" - ஒரு விளக்கம் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்றும், நம் முன்னோர்கள் சொன்னார்கள் என குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதப் பட்டுள்ளதை கவனித்தேன். அது தொடர்பாக நான் ஆராய்ந்த போது எனக்கு மேலும் கிடைத்த தகவலை / விளக்கத்தை கிழே தருகிறேன். போர்ச் சூழல் நிரம்பிய பழைய காலச் சங்க சமூகத்தில், தொல்காப்பியர், களவியலில், அதாவது திருமணத்துக்கு முன்னுள்ள காதல் கட்டத்தில், 96) "அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய என்ப." என்கிறார். இது களவியலுக்கு மட்டும் தான்! ஒரு காதல் சுவைக்கு என்றும் சொல்லலாம். அச்சம் என்றால் பயம். மடம் என்றால் முட்டால், நாணம் என்றால் வெட்கம், பயிர்ப்பு என்றால் அசுத்தம் - அருவருப்பு, அல்லது கூச்சம். இப்ப ஒரு "காதல் களவியலில்" காட்சி ஒன்றை பார்ப்போம். தலைவன் தலைவி [அல்லது கணவன், மனைவி] இரண்டு பேர் தனிமையில் இருக்கிறார்கள் என வைப்போம். "ஐயோ, இப்பவா! யாராயினும் வருங்கள் ... வேண்டாம்". அச்சம். இது ஒரு பொய் அச்சம். இது ஒரு வகை. அடுத்தது சமையலறையில் கரப்பான் பூச்சியைப் பார்த்தால் விளக்குமாறால் ஒரு போடு போடும் அதே தலைவி, இப்ப காதல் களவியலில் அதே கரப்பான் பூச்சியைப் பார்த்ததும் "ஐயோ! கரப்பான்".. என அலறுவது -- பயப்படுவது -- ஒரு மழலை மாதிரி பிதற்றி கண்ணைப் பொத்திக் கொள்வது மற்றொரு வகை. இப்படி ஒரு காதல் களவியல் சம்பவத்தில்: "சரி போதும் -- அலட்ட வேண்டாம் -- இனி காணும் -- எனக்கும் எல்லாம் தெரியும்" என்று கூற மாட்டார்கள். தெரிந்திருந்தாலும் தெரியாதது போல பண்ணும் பாவனை. அது தான் இந்த பொய் மடம். இன்னும் கொஞ்சம் போக, "சீ போங்கோ .. கொஞ்சமாவது வெட்கம் இருக்கா பாரு ..". இது பொய் நாணம். "எனக்கு இது பிடித்துத் தான் இருக்கிறது" என்று சொல்லும் ஒரு நாணம். இந்த மூன்றும் பொதுவாக காதலுக்கு சுவை சேர்க்கின்றன. தன் தலைவன் அல்லாத வேறு ஒரு ஆடவன் / அந்நியன் கெட்ட எண்ணத்துடன் தொடும் போது உண்டாகும் இயல்பான அருவருப் புணர்ச்சி பயிர்ப்பு ஆகும். இந்த உணர்ச்சி பொதுவானது. அதாவது ஆணுக்கும் உண்டு என கொள்ளலாம். அதாவது இவையை கலவியல் கவர்ச்சி என்று கூட சொல்லலாம். அவ்வளவுதான்! இது தான் தொல்காப்பியம் களவியலில் சொல்வது! இது பொதுவாக சொல்லப் படவில்லை என்பதையும் காண்க. தமிழ் சொல்வது இதைத்தான் ! இந்த நாலு குணமும் பெண்ணுக்கு வேண்டும் என்றால் எப்போது வேண்டும்? இதை சரியாக புரிய வேண்டாமோ? இது சொல்லப் பட்ட "இடம் பொருள் காலம்" அறிய வேண்டும். அதை விட்டு பொருளைச் சிதைத்து, மாற்றி என்னென்னவோ பொருளெல்லாம் சொல்லி வைத்தனர். 'மண்ணுக் குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்' என்று ஏன் பாரதி கூறினான்? பண்டைக் காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக் கூறுகின்ற நூல் கார் நாற்பது. அதில் ஒரு பாடல் இப்படி சொல்கிறது. "கடல் நீர் முகந்த கமம் சூல் எழிலி குட மலை ஆகத்துக் கொள் அப்பு இறைக்கும் இடம் என ஆங்கே குறி செய்தேம் பேதை மடமொழி எவ்வம் கெட" [நூல்: கார் நாற்பது (#33) / பாடியவர்: மதுரைக் கண்ணங்கூத்தனார்] பல நாள்களுக்கு முன்னால் நான் ஊரில் இருந்து கிளம்பிய நேரம், மடப்பத்தை உடைய வார்த்தைகளைப் பேசுகிற என் காதலி என்னைப் பிரிவதை எண்ணி மிகவும் வருந்தினாள். அவளுடைய வருத்தத்தைப் போக்குவதற்காக, ‘மேற்கு மலை மீது மழை பெய்யும் போது நான் திரும்பி விடுவேன்’ என்று வாக்குறுதி சொல்லி வந்தேன். இப்போது, அந்த நேரம் வந்து விட்டது. நாம் சீக்கிரமாக ஊர் திரும்ப வேண்டும். தேரை வேகமாக ஓட்டு! என்கிறான். அது என்ன "மடமொழி"? காதலியை ‘மடத்தனமாகப் பேசுகிறவள்’ என்கிறானா இந்தக் காதலன்? பெண்களுக்கான குணங்கள் "அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு" என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். அந்த ‘மடம்' தான் இங்கேயும் வருகிறது. பொதுவாக ‘மடம்’ என்றால் பேதைமை, அழகு, மென்மை என பொருள் படும். அவற்றுள் இங்கே எந்தப் பொருள் பொருந்தும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்! இதே மாதிரி அந்த சங்க காலத்தில் குறுந்தொகை 135: "வினையே ஆடவர்க் குயிரே" என்று கூறுகிறது. அதாவது ஆண் மக்களுக்குத் தொழில் தான் உயிர் என்பது இதன் பொருள். அதாவது "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு" என்பது காதலின் போது மட்டுமே! வாழ்க்கை முழுக்க இல்லை என்பதை புரிய வேண்டும். இதே சங்க காலத்தில் காதல் களவியல் அற்ற சில சம்பவத்தை பார்ப்போம். ஒரு நாள், காவற் பெண்டு என்பவரின் இல்லத்திற்கு வந்த ஒருவர், அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டார். அதற்கு, காவற் பெண்டு "இதோ என் வயிற்றைப் பார், என தன் வயிற்றைக் காட்டி, அவனைப் பெற்ற வயிறு இது. புலி இருந்து சென்ற குகை இது". அவள் அச்சம் கொள்ளவில்லை? முட்டாளாக பேசவில்லை? நாணம் கூட பட வில்லை? வீரமாக முழங்கினாள்! இன்னும் ஒருத்தி போர்ப் பறை கேட்டுத் தன் மகனை - ஒரே மகனை இளம் பிள்ளையை அழைத்துக் கையில் வேலைக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பினாள் என அவளின் மாண்பினைப் படம் பிடித்துக் காட்டுகிறது. “புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்” எனச் சூளுரைத்தாள் மற்றும் ஒருத்தி. இங்கு ஒரு வீரத் தாயை காண்கிறோம். ஆகவே எங்கு சொல்லப்பட்டது, எந்த சூழலில் சொல்லப் பட்டது, ஏன் சொல்லப் பட்டது என்பதை அறிந்து பொருள் கொள்வது மிகவும் சிறந்தது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தாந்திரிகம் / தாந்திர வழிபாடு" / "Tantra"
"தாந்திரிகம் / தாந்திர வழிபாடு" / "Tantra" ஆரியர் அல்லாதவர்களின் [ஆஸ்ட்ராலாய்ட், மங்கோலியன், திராவிடர் / Austrics, Mongolians, and Dravidians] ஆன்மீக அணுகு முறை பொதுவாக தாந்திர முறையாகும். இது ஆரியர்களின் வேத வழக்கத்தில் இருந்து வேறுபட்டது. இது ஒருவர் தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த வைக்கும் முறை ஆகும். ஆகவே ஆரியர்களின் அகநிலை உணர்வுக்குப் புறம்பான, வெளிப்புற சடங்கில் இருந்து மாறு பட்டது. தாந்திர வழிபாட்டு முறையின் வேர்களை அறிய வேண்டு மெனில் நாம் சிந்து சமவெளியில் இருந்து தொடங்க வேண்டும். சிந்து சமவெளியில் கண்டெடுக்கப் பட்ட சிலைகளில் இரண்டு முக்கியமானவை. ஒன்று சிவன் தன் ஆண் குறி தெரியுமாறு அமர்ந்து இருக்க, அவரை சுற்றி மிருகங்கள் நிற்பது போல் வரையப் பட்டிருக்கும் சிற்பம். சிந்து வெளி மக்கள் யோகாவை அறிந்து இருந்தார்கள் என்பதற்கும் தாந்திரீக வழிபாட்டு முறைகளை பின்பற்றினார்கள் என்பதற்கும் இந்த முத்திரையை ஒரு சான்றாக எடுத்து காட்டுகிறார்கள். இரண்டாவது யோனி தெரியுமாறு அமர்ந்திருக்கும் ஒரு பெண் சிற்பம். மேலும் இந்த சிற்பம்,காணிக்கை, படையல் மூலம் புகை படிந்து இருப்பதும் குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் யோனி வழிபாடும், லிங்க வழிபாடும் இருந்தது என வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. முன்னோர்களின் நினைவாக நடுகல் தமிழகத்தின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. சைவ மதத்தின் கொள்கைப்படி இறந்தவர்களின் நினைவாக நடுகல் [memorial stone / Hero Stones] வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும், யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள். லிங்கம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லாகும். லிங்க வடிவம், ஆண் குறியைக் குறிப்பதாகவும்,வளம் என்பதற்கான குறியீடாக இது கொள்ளப்பட்டுப் பழங் காலத்தில் வழிபடப்பட்டு வந்ததாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது. தாந்திரீகம், காமத்தின் வழியாக கடவுளை அடைய முன்னவர்கள் பின் பற்றிய வழிமுறை எனவும் கூறலாம். தாந்திர முறை , தியானம் யோகா இவைகளின் ஒன்று சேர்த்தலை விட மேல் அதிகமானது. யோகா உடலையும் மனதையும் தனித்தனியே பிரிக்க முற் படுவது. தாந்திர முறையின் படி, போட்டி, போராட்டம் வாழ்வின் சாரம்.எல்லா விதமான தடைகளுக்கும் எதிராக போராடி குறை பாடான, நிறைவுறாததில் இருந்து பூரணமாக்க, முழு நிறைவாக்க முயலும் முயற்சி, பிரயத்தனமே தாந்திர முறையின் உண்மையான மெய்பொருள் ஆகும். ஏறத்தாழ 4,500-5,000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக கருதப்படும் சிந்து சமவெளி மக்கள் நாகரிகத்தின் உச்சியில் இருந்தார்கள். அவர்கள் தாந்திர முறையை மனதையும் உடலையும் ஒருங்கிணைப் பதற்கு அப்போதே பாவித்தார்கள். தாந்திர முறையில் உடம்பு, மனது, உணர்வு மூன்றையும் கட்டுப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் சக்தியை ஆன்மீக பரவச நிலையை அடைய பயன்படுத்துவதாகும். காணாத கடவுளை நினைத்து தவமிருப்பதற்கு [penance] பதிலாக நம் கண் முன்னே இருக்கும் பிடித்தமான உறுப்புகளை பார்க்கும் பொழுது நமது கவனச்சிதறல் குறைக்கப் படுகிறது. அந்தக் கணங்களில் நம் உள்ளுணர்வு விழிப் பாகவும், கவனம் ஒரு புள்ளியில் குவிக்கப் படுகிறது. இதுதான் தாந்திர முறையின் தொடக்கம்.அதாவது மனதும் உடலும் ஒன்று பட்டு இயங்குவதே தாந்திர முறையின் முக்கிய கூறு. உடலையும் மனதையும் தனித் தனியே பிரிக்க முற்படுவது தான் மற்ற வழி பாட்டு முறைகள் ஆகும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சம வெளியில் பிறந்த தாந்திரா முறை பற்றி அல்லது தாந்திரீகம் பற்றி இன்று பலர் தவறான கருத்து கொண்டு உள்ளார்கள். அவர்கள் அது எல்லாம் பாலியல் [sex] பற்றியது என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் தாய் வழிபாடு சமூக மரபிலிருந்து தொடங்கிய இந்த தாந்திரீகம் மற்றைய சமய வழிகள் போலல்லாது மனித வாழ்க்கையில் உள்ள அனைத்தையும் இயல்பாக ஏற்றுக் கொண்டு விழிப்புணர்வு அடையும் நிலையினை போதிப்பது. ஆகவே தாந்திரீகத்தில் காமமும் ஒரு பகுதி ஆனால் காமம் தான் தாந்திரீகம் இல்லை. நடை முறையில் சாதாரண பாலுறவைத் தாண்டி அதைவிட கூடுதலாக உள்ளது. நீங்கள் இதை காம சூத்திரத்துடன் குழப்ப வேண்டாம். அது [காமசூத்ரா / Kama Sutra] பாலியல் உறவு நிலைகள் பற்றிய ஒரு வழிகாட்டி மாத்திரமே. தாந்திரா உண்மையில் அதில் ஈடுபடும் மக்களுக்கு எது நல்லதோ அதை செய்கிறது. அதாவது தாந்திரீகத்தின் நோக்கம் [குறிக்கோள்] ஆத்மீக விழிப்புணர்வு நிலையினை [spiritual awakening] அல்லது சுய விடுதலையை அடைவதாகும். தாந்திரா மனித உடலில் ஏற்படக்கூடிய அடிப்படை உந்தலை, பாலியல் ஆற்றலை [sexual energy] பாவித்து ஆன்மீக விழிப்புணர்வு நிலையை மேம் படுத்துதல் ஆகும். தாந்திரா ஒரு மதம் அல்ல. ஆனால் பண்டைய ஆன்மீக நம்பிக்கைகளின் தொகுப்பு ஆகும். ஏனென்றால், தாந்திரா, அதன் இயற்கை தன்மையால், மதங்களை மாதிரி, கொள்கைகளை நம்பிக் கொண்டு நம்பிக்கை அடிப்படையில் கற்பனை செய்யும் ஒன்று அல்ல. மதங்கள் மாதிரி எந்த ஆண்டவன் கட்டளையையும் அல்லது கடுமையான விதி முறைகள் ஒன்றையும் [commandments or strict rules] தாந்திர பின்பற்ற வில்லை. மேலும் நீங்கள் இங்கு கடினமான வழிபாடு அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏதாவது ஒரு பணிகளில் ஈடுபடத்தேவை இல்லை. தாந்திராவில் ஒவ்வொருவரும் தனக்கு சரியென படும் ஒரு பாதையை தெரிந்து எடுக்கலாம். தாந்திரா குருவிடம் இருந்து மாணவனுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குருவும் தனக்கெனெ ஒரு தனித்தன்மை வாய்ந்த அணுகு முறையை [unique approach] வைத்திருக் கிறார்கள். மேலும் மதங்களுடன் ஒப்பிடும் போது இதில் முக்கிய வேறுபாடு பாலியலில் ஆகும். மத போதகர்களின் அறிவுறுத்தலின் படி பாலியல் ஒரு புனிதம் அற்ற ஒன்று ஆகும். ஆனால், தாந்திரா, இதற்கு மாறாக இதை புனிதமானது [sacred] என நம்புகிறது. அந்த அடிப்படையில் மனித உடலின் ஒரு அத்தியாவசிய தேவையான உடலுறவு மூலமும் இறைவனை அடையும் வழியினையும் காட்டுகிறது. தாந்திரீகத்தின் படி ஆணும் பெண்ணும் ஒரே வெளிப்பாட்டின் விம்பங்கள் போன்றவர்கள், பிரபஞ்ச ஆற்றலில் ஆண் தன்மையினை சிவம் என்றும் பெண்தன்மையினை சக்தி என்றும் அழைப்பர். இது ஒழுங்கமைக்கப் பட்ட மதங்கள் மாதிரி ஒரு ஒப்புயர்வற்ற ஒன்றை [supreme beings] அல்லது முழுமுதல் கடவுள் ஒருவரை வழிபடுவது அல்ல. மாறாக எம்முள் இருக்கும் இயற்கையான அடிப்படை உந்தலை மதிப்பளித்து, உயர்ந்த நோக்கத்தினை அடைவதற்கு அதை சாதகமாக பயன்படுத்திக்கொள்வது ஆகும். அதனுடன் சண்டை பிடிக்காமல் ஒத்துப்போய் அதனை வைத்தே அதை வெல்லும் சூட்சுமத்தினை சொல்லிக்கொடுக்கிறது. அதாவது, எமது தெய்வீக இயல்பை [divine qualities] எம்மில் வளர்ப்பதற்கு நாம் சிவ, சத்தியை வசதியான சின்னங்களாக இங்கு பாவித்து கொள்கிறோம். பக்குவமற்றவர்களுக்கு [To the crude] இது ஒரு ஆபாசம் [பாலின்பம்/pornographic], ஒருதலைச் சார்பு உடையவர்களுக்கு [to the bias] இது ஒரு கொச்சையான [அநாகரீக மான] முற்காலத்திய மக்களின் பழக்கவழக்கம் [vulgar habits] ஆகும். இந்து [சைவ,சாக்த] ஆலயங்களில் வெறுக்கத்தக்க, அருவருப்பான சிற்பங்களை [objectionable sculptures] கோபுரத்திலும் சுவரிலும் கண்டு நாம் அடிக்கடி இது ஏன் என அதிசயப்படுகிறோம். இது இந்த தாந்திரீக மரபினால் ஏற்பட்டவையாக இருக்கலாம்? மனிதனின் இயற்கையான ஆற்றலான காமத்தை அறிவதும் அறிவதன் மூலம் கடந்து செல்வதுமே மானுட உண்மையின் உச்சநிலையை அறிய உதவும் வழி என அவை நினைத்தன. ஆகவே அவை காமத்தை அறிவின் வழியாகக் கண்டன. அதன் பிரதிபலிப்பே இந்த கலவி [Mithuna / Maithuna / ‘(male/female) couple’] சிலைகள் போலும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "Tantra" The spiritual approach of the non-Aryans [the indigenous peoples - the Austrics, Mongolians, and Dravidians] was Tantra and it differed from the Vedic practices of the Aryans because it was fundamentally an introversive or introvertive process rather than an external ritual. In order to find the roots of the Tantra, we have to start from the Indus Valley. The two main statues found in the Indus Valley are prototype of Shiva seated on a throne in a version of the cross-legged lotus posture of Yoga with Yogi's penis is prominently visible. This seal is often cited as evidence that people of the Indus Valley culture knew Yoga and practiced Tantra. The second sculpture of a girl squats in birthing position lifting her dress to reveal her vagina, stained from offerings. The yoni is the creative power of nature and represents the goddess Shakti. The linga stone represents Shiva and hence it shows that vagina & lingam worshipping cults were existed there as per the opinion of historians. It also may be possible that the tradition of Nadu Kal [memorial stone / Hero Stones] by the ancient Tamils / Dravidians for men who died in battle may gave rise to the linga worship later. Tantra is more than just a collection of meditation or yoga techniques. There is a particular world-view associated with it. According to Tantra, struggle is the essence of life. The effort to struggle against all obstacles and move from the imperfect to the perfect is the true spirit of Tantra. Tantra is the original spiritual science found in Indus valley civilization more than 4,500 - 5,000 years ago. Tantra is the practice which elevates human beings in a process in which their minds are expanded. There is no meaning to undergo penance remembering a god which you have never seen, Instead if you see the body parts which you like very much, your focus will not be disturbed and mind & body will work together. This is the starting point of tantra. it is a fantastic tool for those on a primarily spiritual path. It adds the power of aliveness to the qualities of spirit and helps ground your spirituality into everyday life. In today world people may misconcept that Tantra which is Born in Indus valley civilization over 5,000 years ago, is all about sex ,but the practice of Tantra has to do with much more than sex. It should not be confused with Kama Sutra, a literal guide to sexual positions. Tantra, instead, is the practice of what feels good to the people involved. The purpose of Tantra (in its overtly sexual and non-sexual forms) is for spiritual awakening, enlightenment or freedom. Tantra uses sexual energy - the primal force of our very existence (after all, without sex and fertility, none of us would be here!) - to develop a spiritual consciousness. Tantra is not a religion at all, but an ancient set of spiritual beliefs. Tantra has never become an actual religion, and it was never intended to be one — partly because by its very nature it is not conducive to the set of structured guidelines and formats associated with most religions. With Tantra, there are no commandments or strict rules to follow. You are not required to maintain a rigid prayer schedule or attend services at designated times. Each Tantric practitioner dictates his or her own path based on what's right for that individual. Tantra was originally passed from guru to student, and each guru had his own unique approach to the Tantra beliefs. The most obvious way that Tantra differs from most religions involves sex. Most modern religions view sex as something to be shared between husband and wife, and even then usually for the purpose of procreation. In fact, many people get the impression from religious advisors that sex is something bad or dirty. By contrast, Tantrics believe sex is a sacred gift. Today Tantric revere Shiva as the pure embodiment of the masculine force culminating in cosmic consciousness, and Shakti as the feminine principle embodying pure creative energy. This isn't worship of supreme beings as in most organized religions. Rather, it is Tantra's way of honouring the forces of nature that exist within each of us. We simply use Shiva and Shakti as convenient symbols to focus the growth of our own divine qualities. To the crude they are pornographic. And to the bias they are the vulgar habits of a primitive peoples. Yet they are in fact, opaque symbolic portrayals of the state of 'union' with God. We often wonder why do Hindu Temples have objectionable sculptures on walls. From Tantric perspectives, such sexual images serve as a stimulant messenger to convey the idea of creation, transformation, unity and harmony to the viewers. Within the vast confines of Hinduism one encounters many approaches to demonstrating spiritual ideas. Mithuna ['the state of being a couple'] carvings are just one!. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
-
"மனு தர்மம் / வினைப் பயன்கள்"
"மனு தர்மம் / வினைப் பயன்கள்" மனு தர்ம சாத்திரம் அல்லது மனுஸ்மிருதி என்பது இந்தியாவின் பண்டைய ஆரிய சமூக அமைப்பில் எழுதப்பட்ட அரசியல் சட்டம். ஆனால் அது ஸ்மிருதிதான். அது ஸ்ருதி அல்ல. ஸ்ருதி என்பது இயற்றப்படாதது, தொன்று தொட்டுப் பரம்பரை பரம்பரையாக காதால் கேட்டு மனதில் இருத்தி வைத்து பிறர்க்கு கூறப்பட்டது அல்லது எல்லாக் காலத்துக்கும் பொருந்துவது. ஸ்மிருதி என்பது ஒரு காலத்துக்காக மனிதரால் எழுதப்பட்டது. மனு வாழ்ந்த காலம் கி.மு 1500 என நம்பப்படுகிறது. அந்த காலத்தின் தேவையை பொறுத்து, அவர்களின் அறிவு, நம்பிக்கையைப் பொறுத்து எழுதப்பட்டது. அவ்வளவுதான். அத்துடன் பார்ப்பனர் வேதக் கருத்துகளை பாமர மக்களின் வாழ்க்கையில் புகுத்துவதற்காகவும் வந்தது தான் இந்த ‘மனு தர்மம்’என்ற சூழ்ச்சி. அது மட்டும் அல்ல சிந்து வெளி பழங்குடிகள் எதோ பல காரணங்களால் வீழ்ச்சி அடைந்து தெற்கு நோக்கி போனபின்பும், சிலர் அங்கேயே தங்கி ஆரியருடன் இணைந்த பின்பும் எழுதப்பட்டது. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு ‘மனு தர்மம்’ கூறும் தத்துவம் இப்படி இருக்கலாம் என்று எண்ணுகிறேன் ? இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் அந்த தத்துவம். "தவறு விடும் பலர், சமுதாயத்தின் மத்தியில் வளர்ந்து கொண்டே செல்கின்றதை நாம் அவதானித்துள்ளோம். ஆனால் ஆன்மீக வாதிகள் கூறுவது போன்று அவர்களுக்கு அடுத்த பிறவியில் தண்டனை கிடைக்கும் என்று கூறுவது தான் நம்பத்தகுந்ததாக தெரியவில்லை" ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது. அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா? ஆகவே இதில் ஒரு சூழ்ச்சி உண்டு. மனுஸ்மிருதி அல்லது மனு தர்மம் என்ற பெயரில்? நான் என்ன நினைக்கிறேன் என்றால் .... துன்பப்படுபவர்களைப் பார்த்து, இவர்கள் தம் ஊழ்வினையால் இன்று துன்பம் அடைகிறார்கள், ஆகவே அவர்களே தேடிக்கொண்ட இந்த துன்பத்திற்கு நாமேன் உதவவேண்டும் என்று நினைப்பவர் எவரும், தம்மை அந்த துன்பப்படும் மனிதரின் இடத்தில் வைத்து பார்த்து ஒருவேளை அடுத்த பிறவியில் [ஒரு கதைக்காக] நான் இப்படி இருந்தால் எனக்கும் ஒருவரும் உதவ முன் வரமாட்டார்கள் என்று நினைத்தால், கட்டாயம் அவர்கள் எவருடைய துன்பத்தையும் முன்வினைப் பயன் என்று ஒதுக்காமல் அவர்கள் உதவுவார்கள் என்பதுதான். இப்பிறவியில் நான் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு வந்து விட்டால் மறுபிறவியைப் பற்றி கவலை தேவையே இல்லை. இப்படித்தான் நான் நம்புகிறேன். நீங்கள் எப்படியோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"வாழும் வரைப் போராடு"
"வாழும் வரைப் போராடு" நான் அன்று சாதாரண வகுப்பு ஏழை மாணவி. என் அப்பா அம்மா கூலி வேலை செய்கிறவர்கள். அவர்களின் உழைப்பில் நானும் தம்பியும் எதோ சமாளித்து இரண்டு மைல் தூரத்தில் இருந்த ஒரு கிராம பாடசாலையில் கல்வி கற்றோம். நடந்து தான் பாடசாலை போவது. பாடசாலை நேரத்தின் பின் தனியார் கல்வி, விளையாட்டு அப்படி இப்படி என்றும் ஒன்றும் எமக்கு இல்லை. என் வகுப்பு வாத்தியார் மிக அன்பாக என்னுடன் பழகுவார், நானும் ஒருவேளை என் நிலைமையை பார்த்து இரக்கப்பட்டு அப்படி பழகுகிறார் என்று அந்த அறியாத பருவத்தில் எடுத்துக்கொண்டேன். அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. அவர் இளம் கல்யாணம் ஆகாத ஆசிரியர். இது அவரின் முதல் நியமனம். அவர் பாடசாலைக்கு அருகில் வாடகை வீடு ஒன்றில் சக ஆசிரியர்களுடன் தற்காலிகமாக இருந்தார். சாதாரண வகுப்பு பரீடசை நெருங்கிவரும் நேரம் அது. நான் அவரிடம் சில விளங்காத பாடங்களை கேட்க தொடங்கினேன். அவரும் அதற்கு இணங்கினாலும் பாடசாலை நேரம் கஷடம் என்றும் பாடசாலையின் பின் வீட்டில் வந்து படிப்பிப்பதாக கூறினார். என் பெற்றோரும் சம்மதிக்க அவரும் வரத் தொடங்கினார். பெற்றோர்கள் இருவரும் கூலி வேலைக்கு போவதால், அதிகமாக நானும் தம்பியும் மட்டுமே அவ்வேளை வீட்டில் இருப்போம். வீடு ஒரு குடிசை என்பதால், பாடம் படிப்பிக்கும் பொழுது தம்பியும் வெளியே விளையாட போய்விடுவார், எம் குடிசையில் வசதி குறைவு என்பதால், மிக அருகில் தான் படிப்பிக்கும் பொழுது இருப்போம். கை கால்கள் மெல்ல தொட தொடங்கி, அது வயது வித்தியாசமும் பார்க்காமல், அவரின் உறுதியையும் நம்பி, அவரின் விருப்பத்துக்கு இணங்கி மிக நெருக்கமாக நானும் பழகினேன். இருசொல் இணைதல் புணர்ச்சி என்று இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி, இதுவரை நான் படிக்காத பாடம் எல்லாம் படிப்பித்தார். "இலக்கியம் சொல்லா ஆண்மை அழகில் இதயம் பறிகொடுத்து உறுதி வாங்கி இளமையும் வனப்பும் பொங்கும் உடலை இரண்டு கையாளும் தானம் செய்தேன்!" "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி இங்கிதமாய் படிப்பித்து அருகில் வந்து இதலை வருடி இடையை பற்றினான்!" "இமைகள் மூடி இலக்கிய நாயகியாக இசைந்து அவனுக்கு தலை ஆட்ட இன்று படிப்பித்தது காணும் என்று இதமாக கூறி என்னை இழுத்தான்!" "இச்சை எம்மை மயக்கி வாட்ட இறுக்கி தழுவி கட்டி அணைத்து இதழ்கள் பதித்து எதோ உளறி இரண்டு ஒன்றாய் இன்பம் சுவைத்தது!" அவரும் மாற்றம் பெற்று எனக்கு உறுதி வழங்கி போக, என் வயிறும் ஊத தொடங்கியது. அன்று இருந்த போர் சூழலில் அவரின் தொடர்பும் அற்று போக, நானும் ஒரு மகனுக்கு தாயானேன். அவரை விசாரிக்க சென்ற தந்தை திரும்பி வரவே இல்லை, என்ன நடந்தது என்று இது வரை தெரியாது? தம்பியும் குண்டு பட்டு இறந்து விட்டார். தனிமை வரத்தான் எனக்கும் துணிவு வந்தது. எப்படியும் அவரை கண்டு பிடிக்கவேண்டும். ஊரறிய இவள் என் மனைவி, இவன் என் மகன் என கூற வைக்கவேண்டும். அது தான் என் நோக்கம், அதற்கு என்ன விலையும் கொடுக்க நான் தயாரானேன். என் அழகும் அதற்கு உதவியது. அவர் திருமணம் செய்து வெளிநாடு போய்விட்டதாக அறிந்து நானும் தரகர் மூலம் மகனுடன் வெளிநாடு போனேன். துரதிர்ஷ்டவசமாக அவர் வாழும் நாட்டிற்கு பக்கத்து நாட்டிலேயே அடைக்கலம் கிடைத்தது. அவர் வாழும் நாட்டில் சில நண்பர்களை பெற்று, அவரின் விபரம் அறிந்தேன். எப்படி என்று கேட்க வேண்டாம். ஆனால், C N அண்ணாதுரை ஒரு முறை "நான் முற்றும் துறந்த முனிவரும் இல்லை, அவள் கற்பில் சிறந்த கண்ணகியும் இல்லை" என்று சொன்ன வாக்கியத்தை நினைவூட்டுகிறேன்! அவருடன் இன்று. கதைத்தேன். தான் யுத்த சூழ்நிலையால், சந்திக்க முடியாமல் போனதாகவும், பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் செய்து வெளிநாடு வந்ததாகவும் கூறியதுடன், தான் என்னையும் மகனையும் ஏற்பதாக உறுதி கூறினார். தன் பிழைக்கு மன்னிப்பும் கேட்டார். ஆனால் இது இன்னும் ஒரு நாடகமா எனக்கு தெரியாது. ஆனால் கட்டாயம் நான் இனி ஏமாற மாட்டேன். என் போராட்டம் தொடரும் ! 'ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை' என்று யாரோ சொன்னது என் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது !! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பாட்டி சொல்லைத் தட்டாதே"
"பாட்டி சொல்லைத் தட்டாதே" நான் இப்ப வளர்ந்துவிட்டேன். பொறியியலாளராக வேலை செய்கிறேன். ஊர் உலகம் எல்லாம் சுற்றி திரிகிறேன். எத்தனையோ விதம் விதமான மனிதர்களையும் பண்பாடுகளையும் சந்திக்கிறேன். என்றாலும் நான் கண்ட, அனுபவித்த பாட்டி - பேரன் தொடர்பை எனோ எங்கும் முழுமையாக காணவில்லை? நான் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறக்கும் பொழுது என் அம்மம்மாவோ அல்லது அப்பம்மாவோ இல்லை. என்றாலும் எங்கள் உறவினரான ஒரு பாட்டி, தன் மகன் மருமகளுடன் எம் அருகில் வாழ்ந்து வந்தார். அவருக்கு பேரனோ பேத்தியோ இல்லை, ஆகவே நாம் எல்லோரும் அவருக்கு பேரன் பேத்தியே!. நாம் அவரை அப்பாச்சி என்றே அன்பாக கூப்பிடுவோம். நான் சின்னவனாக இருக்கும் பொழுது, பெரிய குழப்படி இல்லை என்றாலும் கொஞ்சம் முரடு, கொஞ்சம் என் வழி. எனக்கு சரியாக படுவதை நான் மற்றவர்களின் புத்தியை அலட்சியம் செய்து என் வழியில் செல்வேன். "குழந்தை பருவம் சுமாராய் போச்சு வாலிப பருவம் முரடாய் போச்சு படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு பழக்க வழக்கம் கரடாய் போச்சு" மாரி காலம் வந்தாலே, எமக்கு ஒரே கொண்டாட்டம். அப்பொழுது எம் வீட்டுக்கும் அப்பாச்சி வீட்டுக்கும் இடையில் ஒரு வெறும் காணி மட்டுமே. நாம் எமது வேலியில் ஒரு பொட்டு வைத்து, அதன் வழியாகப் புகுந்து அப்பாச்சியிடம் போவோம். அப்ப அந்த வெற்றுக் காணியில் நாம் மழையில் நனைந்து துள்ளி குதிப்போம். அம்மா எம்மிடம் மழையில் விளையாடாதே, காச்சல் தடிமல் வரும், காரிருளில் பாம்பு பூச்சிகள் வாரதும் தெரியாது என்று அச்சுறுத்தல் பாணியில் சொல்லுவார். எனோ அப்படியான பாணியை நான் மதிப்பதில்லை, இவன் சொல்வழி கேளான் என எனக்கு ஒரே திட்டு தான்! ஒரு நாள் அம்மாவின் திட்டலை கேட்ட அப்பாச்சி, என்னோடு விடு நான் அவனை சரிபடுத்துகிறேன் என்று சொல்லி, அவர் தன் வீட்டு திண்ணைக்கு என்னை அழைத்து போனார். முதலில் நீ இதை சாப்பிடு என ஒரு கறுத்தக் கொழும்பு மாம்பழம் வெட்டி தந்துவிட்டு, திண்ணையில் சாய்ந்தபடி கதைக்க தொடங்கினார். 'கடவுள் எங்கே இருக்கிறார் ?' என்று என்னை பார்த்து கேட்டார். இப்ப கேட்டால், பதில் வேறு விதமாக இருந்து இருக்கும், அந்த சின்ன வயதில், அவர் ஆகாயத்தில் இருக்கிறார் என மேலே காட்டி ஒரு துள்ளு துள்ளினேன். 'சிறுநீர் கழிக்க போவதென்றால் என்ன செய்வாய்?' என தனது இரண்டாவது கேள்வியை கேட்டார். நான் அயோ, இதுவுமா பாட்டிக்கு தெரியாதென துள்ளி சிரித்தபடி, அதற்கு பதில் கூறினேன். அவர் விட்டபாடில்லை. 'கடவுள் சிறுநீர் கழிப்பது என்றால் என்ன செய்வார்?' என மீண்டும் கேள்வி கேட்டார். நானும் கோபமாக, எரிச்சலாக, ஆகாயத்தில் தான் கழிக்க வேண்டும் என்றேன். அவர் தனக்குள் சிரித்தபடி, வெற்றிலை சீவலை வாயிலிட்டு மென்று கொண்டு, என்னை கட்டி பிடித்துக் கொண்டு, அது தான் ஆகாயத்தில் இருந்து கீழே மழையாக பொழிகிறது என்றார். நான் திடுக்கிட்டு போனேன். அந்த சிறுநீரிலேயா நான் விளையாடினேன் . எனக்கு ஒரே அருவருப்பு! 'பாட்டி சொல்லைத் தட்டாதே' என சொல்வதை பலமுறை கேட்டிருந்தாலும், அதை பலமுறை பொருட்படுத்தாமல் இருந்து இருந்தாலும், இந்த அசுத்தம், அழுக்கு, அருவருப்பு போன்ற எண்ணங்கள் வர, நான் அப்படியே அப்பாச்சி சொல்லை கேட்டு, அன்றில் இருந்து மழையில் நனைந்து விளையாடுவதை நிறுத்திவிட்டேன். ஆமாம் பாட்டி எப்பவும் பேரன் பேத்தியின் நலத்திலேயே கூடுதலான அக்கறை உள்ளவர்கள். அவர்கள் பல நேரம் பொய் சொன்னாலும், அந்த பொய்கள் கட்டாயம் ஒரு நோக்கத்திற்காகவும் , பேரன் பேத்தியின் நன்மைக்காகவும் என்பதே உண்மை! "பாவம் பாட்டி தள்ளாடும் வயதிலும் பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார் பாதாளம் சொர்க்கம் புலுடா விடுவார் பாவம் புண்ணியம் புராணம் வாசிப்பார்!" "பாடி ஆடி விளையாட்டு காட்டுவார் பால் கொடுத்து கதை சொல்லுவார் பழக்க வழக்கங்களை திருத்தி எடுப்பார் பக்குவமாகப் பேசி நம்ப வைப்பார்!" "பாரிலே உன்னை பெருமை படுத்த பாதி பொய்யும் கலந்து கூறுவார் பாட்டி வாரார் பாட்டி வாரார் பாட்டி சொல்லை இனி தட்டாதே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"நினைவில் நின்றவள்"
"நினைவில் நின்றவள்" நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பரீடசை எழுதிவிட்டு, மறுமொழிக்காக காத்திருந்த காலம் அது. மறுமொழிக்கு பின்புதான் முறையாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.என்றாலும் அந்த இடைவெளி காலத்தை வீணாக்க விரும்பவில்லை. எனவே உயர் வகுப்பு கணித பயிற்சி வகுப்புக்கள் நடத்த தீர்மானித்தேன். அப்படி சேர்ந்தவர்களில் அவளும் ஒருவள். அவள் கொஞ்சம் நவீனமாக, அந்த கால பாணிக்கு ஏற்றவாறு, தன்னை அலங்கரித்தும் அதற்கு பொருத்தமான ஆடையும் அணிந்து வருவாள். கொஞ்சம் பணக்கார குடும்பமும் கூட. நாள் செல்ல செல்ல அவள், கொஞ்சம் கொஞ்சமாக தனிப்பட்ட முறையிலும் என்னுடன் பழக தொடங்கினாள். அந்த நட்பு ஒரு எல்லைக்குள் இருந்தாலும், அதில் ஒரு பிடிப்பு எம்மை அறியாமலே வளரத் தொடங்கியது. "ஒட்டி உடையில் பெண்மை காட்டி எட்டி நடையில் வேகம் காட்டி சுட்டி விடையில் புத்தி காட்டி வெட்டி பேச்சில் வெகுளி காட்டி தட்டி கழித்து நாணம் காட்டி முட்டி முட்டாமல் விலகி நிற்பவளே! " இப்படித்தான் நான் அவளை வர்ணிக்க கூடியதாக இருந்தது எனலாம். காலம் போக, அது ஆசிரியன் - மாணவி என்ற நிலை மாறி, நண்பன - நண்பி என்ற நிலையாக வலுவடைய தொடங்கியது. அதற்குள் எனக்கு பரீடசை மறுமொழிவரவும், அதை தொடர்ந்து நிரந்தர உத்தியோகம் கிடைக்கவும், நான் தனியார் கல்வி போதிப்பதை நிறுத்தி, நான் படிப்பித்த மாணவர்களிடம், அவளையும் சேர்த்து பொதுப்படையாக மட்டும் சொல்லி விட்டு, என் முதல் உத்தியோகத்தை பொறுப் பேற்க வேறு ஒரு நகரத்திற்கு சென்று விட்டேன். அவளின் நட்பை ஒரு சாதாரண ஒன்றாகவே அன்று கருதியதால், அதை நான் பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஒரு மாதத்திற்கு பின்பு எனக்கு ஒரு கடிதம், நான் வேலை செய்யும் அலுவலகத்திற்கு அவளின் பெயருடன் வந்தது. நான் அதில் என்ன எழுதி இருக்கு என்று அறிய ஆவலுடன் உடைத்து பார்த்தேன். திகைத்தே விட்டேன். அந்த முதல் வரியிலேயே! ஆமாம் அந்த முதல் வரி, 'அத்தான்' என்று தொடங்கியது. ஒரு நவீன நாகரிக பெண்ணாக சிரித்து குலுங்கி பகிடிவிட்டு கதைத்தவள், இப்படி எழுதுகிறாள் என்று , ஒரே ஆச்சரியமாக இருந்தது, அது மட்டும் அல்ல, என் அண்ணனிடம், தான் என் பெண் நண்பி என்று தொலைபேசியில் கூறி, விலாசம் பெற்றதாக வேறு கூறி இருந்தாள். அது மட்டும் அல்ல, அவள் என்னை காதலிக்கிறாள் என்று கூட எனக்கு தெரியாது. அப்படியான எண்ணம் என்னிடம் ஏற்படவும் இல்லை. உண்மையில் அவரின் நட்பை சாதாரணமாகவே நான் இதுவரை கருதி இருந்தேன். அதை என்றும் பெரிது படுத்தவில்லை. மற்றது என் தந்தை சாதாரணமான சுருட்டு தொழிலாளி, ஆனால் நாம் எல்லோரும் நன்றாக படித்து, நல்ல உத்தியோகம் பெற்றோம். அவள் அதற்கு எதிர்மாறு ! 'இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க புன்னகை சிந்தி சடையது அலைபாய கலந்து பழகுபவளே !" இப்படி ஒரு பருவ மங்கையாக எல்லோரிடமும் மகிழ்வாக கலந்து பழகுவாள் என்பது மட்டும் தெரியும். அப்படியே என்னுடனும் நட்பாக இருந்தாள் என்று தான் நான் கருதினேன். எது எப்படியாகினும், என்னை விரும்பி ஒருவர் கை நீட்டி இருப்பதால், அதை மதித்து, அடுத்தமுறை விடுதலையில் திரும்பும் பொழுது அவரை சந்தித்தேன். இருவரும் அமைதியான கடற்கரையில், குளிர் பணம் அருந்திக்கொண்டு கதைக்க தொடங்கினோம். அவளின் கதையில், எண்ணத்தில் தமிழர் பண்பாடு முழுமையாக வெளிப்படுவதை நன்றாக உணரக் கூடியதாக இருந்தது. அது மட்டும் அல்ல இன்றைய அரசியல் பிரச்சனைகளைப் பற்றியும் பேசினாள். அதில் தமிழர்கள் சிக்கி தவிப்பதை மிக மிக கருணையாக எடுத்துக் கூறினாள். அது அவளின் உடை மற்றும் தலை முடி அலங்காரத்தை மட்டும் பார்ப்பவர்களுக்கு புரியாத ஒன்று!!. என்றாலும் என் பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கு அது ஒத்துவராது என்பது தெரியும். ஆகவே அதில் இனிமேல் மாற்றம் செய்தால், நான் பெற்றோரிடம் அனுமதி பெறுவது இலகு என்று விளங்கப் படுத்தினேன். அது மட்டும் அல்ல, கல்யாணத்தின் பின், நீ மெல்ல மெல்ல முன்போல் உடை மற்றும் முடி அலங்காரத்தில் மாறலாம் என்றும் கூறினேன். அவள் என்னை தன் பெற்றோரிடம் முதலில் கதைக்க கூறினார். ஒரு ஞாயிற்று கிழமை நானும் அங்கு சென்றேன் . தாயும் தந்தையும் என்னை வரவேற்றனர். மகள் ஏற்கனவே எல்லாம் சொல்லி விட்டதாகவும், மகள் என்னை கல்யாணம் செய்வதில் எந்த தடையும் இல்லை என்றும், ஆனால் அவரின் கோலம், பாணி அப்படியே தான் இருக்கும் என்று ஆணித்தரமாக கூறினார். நானும் அவர் கேட்டதற்கு மற்றும் அவரின் கடிதத்துக்கு மதிப்பு கொடுத்தே சந்திக்க வந்ததாகவும், என் பெற்றோர் விரும்பும் ஒருவரையே என்னால் திருமணம் செய்யலாம் என்றும் அவர்களிடம் கூறிவிட்டு திரும்பினேன். அவள் எழுந்து கதவு வரை வந்து, நடந்த சம்பவங்களை மன்னித்து மறக்கும் படியும், பெற்றோரை மீறி தானும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், என்றாலும் தன் அன்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கொஞ்சம் கண்ணீருடன் விடை தந்தார். "கார் கூந்தல் சரிந்து விழுந்து காற்றோடு அது அலை பாய காதணி குலுங்கி இசை அமைத்து கார்த்திகை அதற்கு ஒளி வழங்க காசனம் செய்யும் விழிகள் திறந்து காதோரம் மெதுவாய் செய்தி கூறி காதல் ஆசையை இறுக்கி பூட்டி கால்கள் தள்ளாட விலகி போனாள்!" [காசனம் - Killing,slaying; கொலை] இப்படித்தான் அவளை கடைசியாக பார்த்த அந்த காட்சி என் மனதில் இன்றும் நிற்கிறது. அவளின் நடத்தையும் மற்றும் உள்தோற்றமும் எவ்வளவு அழகாகவும் பண்பாடாகவும் இருப்பதை கண்டு ஆச்சரியமும் மதிப்பும் தானாக என்னில் தோன்றி, என்றுமே நெஞ்சை விட்டு அகலாத, 'நினைவில் நின்றவள்' ஆக இன்னும் என்னுடன் வாழ்கிறாள் அவள்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"இது இனப் படுகொலை ..... !!!"
"இது இனப் படுகொலை ..... !!!" "மனதில் உறுதி கொண்ட மக்களை சினந்து குருதி கொள்ள நினைப்பதும் ஈனமாய் எள்ளி நகை ஆடுவதும் மானமாய் வாழ விடாது தடுப்பதும் தானமாய் பிச்சை போட்டு அடைப்பதும் வனமாய் பசும் நிலத்தை மாற்றுவதும் ஊனமாய் அவனை அடித்து முறிப்பதும் இனப் படுகொலை! இனப் படுகொலை!" "விடுதலை வேண்டி வீறுகொண்ட இனத்தை படுகொலை செய்து குழியில் புதைப்பதும் நடுநிலை அற்று அடிமை ஆக்குவதும் ஏடுகளை எரித்து சரித்திரத்தை சிதைப்பதும் வீடுகளை இடித்து அகதி ஆக்குவதும் மேடுகளை போட்டு தடுத்து வைப்பதும் கூடுகளை உடைத்து குஞ்சுகளை பறிப்பதும் படுகொலை!அது இனப் படுகொலை!!" "கலை வளர்க்க தடை போட்டு அலை அலையாய் ஆமி போட்டு விலை பேசி சிலரை வாங்கி உலை வைக்கும் மந்தரை கெடுத்து சிலை சிலையாய் மக்களை மாற்றி இலை துளிராது வேரையே வெட்டி தலை நிமிரா நெருக்களை கொடுத்து கொலை செய்வது இனப் படுகொலை!!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்"
"நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்" "நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள் தஞ்சம் கொடுத்தேன் ஆறுதல் அளித்தேன் வஞ்சனை இல்லாமல் அன்பை கொட்டினாள் கொஞ்சம் மயங்கி சந்தோசம் கண்டேன்!" "மஞ்சள் நிலாவில் குளிர் காய்ந்தோம் மஞ்சத்தில் நெருங்கி அருகில் இருந்தோம் அஞ்சா நெஞ்சத்தாள் எதோ உளறினாள் நஞ்சு கலந்து காதல் வீசினாள்!" "கொஞ்சி வஞ்சி இன்பத்தில் பூத்தாள் வஞ்சனை இதழால் முத்தங்கள் தந்தாள் நெஞ்சத்தை விஞ்சும் கதைகள் சொன்னாள் வஞ்சிவீரி மஞ்ஞை வீராப்பு பேசினாள்!" "நஞ்சு தந்த போதை மயக்கத்திலும் காஞ்சி வீரனாய் அவளை தடுத்தேன் செஞ்ச தெல்லாம் செய்தது போதும் கொஞ்சம் தனியாய் விடு என்றேன்!" "துஞ்சிய கண்கள் அகல விரிந்தன பஞ்சாய் மிதந்து மறைந்து விடடாள் வஞ்சியென நஞ்சமென வந்த கள்ளியை எஞ்சிய நேரத்தில் கனவில் கூடுகிறேன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே" / "In my heart"
"என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே" / "In my heart" [என் அம்மாவிற்கு / For my mother [05/10/1917-14/08/2009]] "என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே .... நான் வணங்கும் தெய்வமும் தாயம்மா - என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா" "என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா .... நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உனதம்மா - என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடி நீயம்மா" "என் உழைப்பும் உயர்வும் உன் கனவேயம்மா ... உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பேயம்மா .... நான் மீண்டும் வேண்டுவது உன் கருவறையம்மா" "வேரோடி முளைத்தலும் விளாத்தி விளாத்தியினமே பாரோடி பறந்தாலும் நான் உன் சிறகே அம்மா - என் வாழ்விற்கு ஓளி விளக்கும் நீயம்மா" "தாயின் காலடியும் ஒரு ஆலயமே .... அன்பு சந்நிதியாய் அது எனக்கு நிம்மதியே - நான் கண்ட முதல் வைத்தியரும் நீயம்மா" "மண்ணும் பெண்ணும் என் சுவாசமே அம்மா .... தாய்மை பண்பினை போற்றிடும் கற்புடைமை அம்மா - என் அழுகையில் பதறி, சிரிக்கையில் மகிழ்ந்தவளே" "நான் அம்மா என்று அழைப்பதும் .... உன் வரமே என்றும் நான் உன் மழலை அம்மா ....தெய்வம் உனக்கு தந்த குழந்தை அம்மா" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "In my heart, The god I pray is you Mother is only my prime god" "My Sincerity & honesty- is you The life, I am living- is yours You become flowered creeper with my pregnant" "Again I need one more time- your womb My work & advancement - is your dream your smelling flower- is my life" "Even shoot from roots- wood apple is wood apple Even child fly anywhere- it is your feather My light house for my life- is you " "Even scent from your foot step- is a temple which is a peace of mind for me You are my first doctor " "Earth & woman are breath for life Chastity is a cultured behaviour of you You felt fear on my cry & felt happy on my laugh" "I call you as "Amma" - is your blessing I am Always your - hailing toddler Your god gifted child - is me " [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
-
"பலன் தரும் பழக்கங்கள்"
ஈழ தமிழர் அவலங்கள் என்ற வகையிலே கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகின்ற அரசியல் நெருக்கடிகளே முக்கிய காரணங்கள் எனலாம். ஈழத்திலிருந்து கடந்த 35 ஆண்டுகளாக தமிழர் வெளியேற்றங்கள், இனக்கலவரங்கள், இராணுவ நெருக்கடிகள், கல்வித்தரப்படுத்தல்கள், போன்றன முக்கிய வரலாற்று அம்சமாக தமிழர் அவலங்களில் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றன. அதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை இந்த அவலங்களுக்கு விதைத்த விதை சரியில்லையா? கட்டாயம் . பொன்னப்பாலம் ராமநாதன் காலத்தில், பிரித்தானியருக்கு கீழே இருந்த நேரம், முகம்மது அலி ஜின்னா மாதிரி ஒரு நல்ல வாய்ப்பு, தமிழ் தலைவர்கள் அதை உணரவில்லை. அவர்கள் விதைத்த விதை பிற்காலத்தில் சரியில்லாமல் போய்விட்டது. ஆமாம் சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றது கணாக்காலமாக பிற்காலத்தில் போய்விட்டது. நியூட்டனின் விதி கிட்டும் வரை காத்திருக்க வேண்டுமா? ஒருமுறை வந்து, இருந்ததும் மறைந்து / தொலைந்து விட்டது இனி வருமா வராதா நான் அறியேன் பராபரமே!!
-
"கண்ணீரில் நனையும் பூக்கள்"
"கண்ணீரில் நனையும் பூக்கள்" "கண்ணீரில் நனையும் பூக்கள் இவளோ ஊண் உறக்கம் மறந்த மங்கைதானோ அண்டத்தில் அழகாய் பிறந்த விதியோ கண்ட ஆண்களையும் நம்பிய கதியோ கொண்ட கோலம் உண்மையை மறைத்ததோ?" "உள்ளங்கள் இரண்டும் உண்மையில் இணைந்தால் உயிர்கள் கலந்து காதல் மலர்ந்தால் உலகம் என்றும் இன்பச் சோலையே! உணர்ச்சியை மட்டும் கொண்ட நட்பு உனக்கு ஈவது விழிநீர் மட்டுமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பேசுவதற்கு முன்பே யோசிப்போம் . யோசித்தப்பின் பேசுவோம்."
"பேசுவதற்கு முன்பே யோசிப்போம் . யோசித்தப்பின் பேசுவோம்." வார்த்தைகளை சிந்துவது சுலபம். ஆனால்அவற்றினை திருப்பிப் பொறுக்கி எடுத்துவிட முடியாது. ஆகவே வார்த்தைகளை வெளிப்படுத்துவதற்கு முன்பு அது மற்றவரை எப்படி காயப்படுத்தும் என்று நன்றாக யோசித்த பின்பு தான் நாம் பேச வேண்டும். நாம் கோபத்தில், எரிச்சலில், அவசரத்தில் அள்ளிக் கொட்டிய வார்த்தைகளை திரும்ப பெற முடியுமா? முடியாதில்லையா ? அப்படியென்றால் நாம் வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கு எப்படி ஒரு சக்தி இருக்க வேண்டும் ? இதை நாம் உணர வேண்டும். தவறை உணர்ந்து நாம் கேட்கும் மன்னிப்பும் அதற்கு நாம் கூறும் காரணங்களும் ஏற்றுக் கொள்ளப்படுமே தவிர மறக்கப்பட மாட்டாது. அது மனதின் ஒரு மூலையில் ஒதுங்கி இருக்கும். ஒரு சந்தர்ப்பத்தில் அது மீண்டும் வெளி வரலாம் ? ஆகவே அது ஒரு முடிவு அல்ல. இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது மட்டும் அல்ல, மன்னிப்பதும் கூட மன்னிப்பவர்களின் பெருந்தன்மைதானே யொழிய உண்மையாக காயத்தின் வலி குறைந்தமையால் அல்ல. காயத்தின் வலி தற்காலிகமாக மறைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை . ஆகையால்.... பேசுவதற்கு முன்பே யோசிப்போம் . யோசித்தப்பின் பேசுவோம். அத்துடன் வள்ளுவர் கூறுவது போல் "இடம் பொருள் ஏவல்" அறிந்து பேசுவோம். "சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்."-குறள் எண்: 98 அதாவது, சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக் கூடியதாகும். ஆகவே இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? "இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது."-குறள் எண்: 99 [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பலன் தரும் பழக்கங்கள்"
"பலன் தரும் பழக்கங்கள்" "நீ எதை விதைக்கிராயோ அதையே அறுவடை செய்வாய்" "வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் " ஆகவே மற்றவர்களை மரியாதையாக நடத்தினால் நியுட்டன் விதி சொல்வது போல- "எந்த ஒரு தாக்குதலுக்கும் ஒரு எதிர் தாக்குதல் உண்டு" -நீ அதையே பெருவாய். "நம் செயல்களுக்கு நாமே காரணம்!" "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" -ஔவையார். "ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்" என்கிறது யஜுர் வேதம். "எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை வீயாது, பின் சென்று, அடும்."- திருக்குறள் [ஒருவர் செய்த தீ வினைப் பகைமைப் பலனிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. அது அழியாது நின்று அவரைப் பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும்.] இந்தப் பிறப்பில் நல்லது செய்தால், அதை யாரோ ஒருவர் வரவு செலவுக் கணக்கு வைத்துக் கூட்டிக் கழித்து, நிகர வருமானத்தைத் தேர்ந்து உங்களோடு அடுத்த பிறவிக்கு "இருப்பு இவ்வளவு" என்று அனுப்பி விடுவதாகப் புரிந்து கொள்ளுவது ஊழ்வினை. முற்பிறப்பில் செய்த வினைகள் இந்தப் பிறப்பில் ஊழ்த்து வந்து நல்லது கெட்டது செய்யும் என்ற கருத்தெல்லாம் வள்ளுவரில் கிடையாது. அது அவரை இந்த பிறப்பிலேயே பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும் என்பதே அவர் கருத்து. அது மட்டும் அல்ல ஔவையார் கருதும் அதுவே. ஆகவே மற்றவர்களை மரியாதையாக நடத்துவதுடன் இப்ப பலன் தரும் இவைகளையும் செயுங்கள். -உனது வாக்கை காப்பாற்று -எல்லோருக்கும் மதிப்பு கொடு -நல்ல நண்பனாக இரு -ஒருவரிடம் இருக்கும் நல்லதை எதிர் பார் -மன்னிப்பை காட்டு -அன்பாய் இரு -நீ தவறு இழைக்கும் போது, மன்னிப்பு கேள் -அன்பு வேண்டியவர்களுக்கு அன்பு செலுத்து -பிள்ளைகளின் தேவையை முதல் செய் -உன்னுடன் ஒருவர் கதைக்கும் போது கவனம் செலுத்து -உன்னை தினம் காதலி -உணர்வை காட்டு -கொடும் சொல் பாவிக்காதே -உனது அறிவை மற்றவர்களுடன் பகிர் -உனக்கு தேவையற்றதை தானம் கொடு -சிரிப்பை கூட்டு முகச்சுளிப்பை குறை -நல்ல வழ்வை எதிர் பார் -எப்பவும் நல்லதையே செய் -உன் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர் -உனது பிழைகளில் இருந்து பாடம் படி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"ஆன்மீகம்"
"ஆன்மீகம்" நான் யார்? எங்கு இருந்து வந்தேன்? ஏன் வந்தேன்? எங்கே செல்வேன்? என்னை நகர்த்துவது எது? எனக்குள் உயிராய் இயங்கும் சக்தி எதனால் உருவானது? அது ஏன் உருவானது? எல்லோருக்குள்ளும் இப்படித்தான் இருக்குமா? என்னை அடித்தால் அழுகிறேன், வலிக்கிறது. நான் அடித்தால் இன்னொருவனுக்கும் வலிக்கும் தானே? அப்படி இருக்கையில் நான் அவனை அடிக்கலாமா? தேவையின் அடிப்படையில் இயங்கு என்கிறார்களே...? தேவை என்றால் என்ன? எனது தேவையா? அல்லது சுமூக வாழ்க்கை முறைக்கான ஒட்டு மொத்த மனிதர்களின் தேவையா? எனது தேவையை ஒட்டு மொத்த மானுட சுமூக இயங்கு நிலைக்கு ஏற்ற தேவையாய் மாற்றிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்...? என்றெல்லாம் தன்னுள் தானே கேட்டுக் கொள்ளும் உத்தம செயலுக்குப் பெயர்தான் ஆன்மீகம். இப்படியான தொடர்ச்சியான கேள்விகளின் விளைவால் ஏற்படும் மிகப்பெரிய புரிதலே ஆன்ம விழிப்பு. விவேகானந்தர் என்ன கூறினார் தெரியுமா ? "உங்கள் சாத்திரங்களைக் கங்கையில் எறிந்துவிட்டு பாமர ஏழை மக்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். அவர்களுடைய உலக வாழ்க்கைத் தேவைகள் தீர்க்கப் பட்டாலொழிய நீங்கள் கூறும் ஆன்மீகக் கருத்துக்களை அவர்கள் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்." [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]