Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"காதல் கடிதம்"
"காதல் கடிதம்" காதலின் சின்னம் காதல் கடிதம் என்பார்கள். அங்கு தான் ஒருவர் மற்றவர் மேல் உள்ள மோகம் அல்லது அழகு வர்ணனையை தங்கு தடை இன்றி, வெட்கம் இன்றி, வெளிப்படையாக கூறமுடியும். யாருக்கு தெரியும் என் காதல் தவறான புரிதலுடனும், பிழையான இடத்தில் சேர்ந்த காதல் கடிதத்துடனும் மலர்ந்தது என்று! “என் அன்பிற்கினியவளே, அழகின் தேவதையே என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடுகிறேன். அதை நீ எப்ப அறிவையோ நான் அறியேன்? எனக்கு முன்னால் உன்னைப் பார்க்கிறேன், நான் தலை முதல் கால் வரை உன்னை அன்போடு மெல்ல வருடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டு உன்னை ரசிக்கிறேன், ‘அன்பே! உண்மையாக உன்னைக் காதலிக்கிறேன்! உன்னுடைய இனிமை நிறைந்த தனித்துவமான இதயத்தை என் இதயத்துடன் சேர்த்து அணைக்கிறேன். அந்த சுகத்தில் நான் மெளனமாக போய்விடுவேன், ஒரு வார்த்தை கூடப் வாயில் வராது. என் உதடுகளினால் உன்னை முத்தமிட முடியாதலால் என்னுடைய நாக்கினுல்தான் உன்னை முத்தமிடுகிறேன், உன்னை வார்த்தைகளால் அலங்கரிக்கிறேன். நான் கவிதை கூட இப்ப எழுதுகிறேன்! நான் என் பல்கலைக்கழக படிப்பை அடுத்த கிழமை பேராதனையில் ஆரம்பிக்கிறேன். இனி உன்னை, பாடசாலைக்கு போகும் பொழுது பார்க்கும் சந்தர்ப்பம் அற்றுப் போகப்போகிறது. அது என்னை வாட்டுகிறது. அது தான் என் உள்ளத்தின் கிளர்ச்சியை, இதுவரை சொல்லாத காதலை, ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு பார்வையிலும் என்னுடைய வாழ்க்கையின் மிகவும் சிறந்த, இனிமையான நினைவுகளைத் தூண்டிய அந்த முகத்திடம் எழுதுகிறேன்! பதிலை, என் பெயருடன், முதலாம் ஆண்டு, பொறியியல் பீடத்திற்கு அனுப்பலாம் பிரியமானவளே உனக்காக காத்திருப்பேன்!" அவள் என் பாடசாலையிலேயே, நாவலர் வீதியில் அமைந்த, முன்றலில் மாமரங்கள் செழித்து அழகு பொழிந்த, யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்திலேயே படித்தாள் அவள் உயர்தர வகுப்பு முதலாம் ஆண்டு மாணவி. இம்முறை நான் மட்டுமே பொறியியல் பீடத்துக்கு அங்கிருந்து தெரிவாகி உள்ளேன், மொத்தமாக பத்துக்கு அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி உள்ளோம். எம்மை கௌரவித்து பாடசாலையில் நடந்த நிகழ்வுக்கு சாதாரண மற்றும் உயர் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டார்கள். அவள் முன் வரிசையில் தன் தங்கையுடன் இருந்தாள். தங்கை சாதாரண வகுப்பு முதல் ஆண்டு மாணவி என்பதை பின்பு தான் அறிந்தேன். என் கண்கள் சந்தர்ப்பம் வரும்பொழுது எல்லாம் மேடையில் இருந்து அவளையே பார்த்தது, இனி எப்ப இவளை பார்ப்பேனென ஏங்கியது! “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத் திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப் படைத்தனன் நல்கமலத் தோனே! ” இங்கே எந்தக் குறையும் இல்லாத சிற்பம் போன்று என் முன் இருக்கும் உயிருள்ள இப்பெண்ணின் வடிவத்தைப் படைத்தவன் யார் என்று எனக்குத் தெரியாது ஆனால் கம்பனின் மகன் அம்பிகாபதியின் பாடல் கட்டாயம் இவளுக்கு பொருந்தும். இவளைப் படைத்தவன் பிரம்மனாய் ஒருவேளை இருந்தால், நிச்சயம் இவளை உருவாக்குவதற்கு முன் ஒரு மாதிரிக்காக திருமகளை உருவாக்கிய பின் தான் அவளிடம் இருக்கும் குறைகளைச் சரிசெய்து விட்டு இவளை உருவாக்கி இருப்பான் என்பது மட்டும் நிச்சியம்! உனக்கு மட்டும் ஏன் இத்தனை அழகு! என்று நான் ஆச்சரியமாக மீண்டும் மீண்டும் அவளை பார்க்கும் பொழுது தான் அவளின் தங்கையும் வந்து அவள் அருகில் இருந்தாள். நீ இருக்கும் இடமெல்லாம் உன் அழகை அள்ளித் தெளித்து விடுகிறாய் போலும், அதனால் தான் உன் தங்கையும் அழகாவே காட்சியளிக்கிறாளே, என்றாலும் அவளின் முகத்தில் இன்னும் சிறுபிள்ளைத்தனமும் அப்பாவித்தனமும் குடிகொண்டு அக்காவில் இருந்து வேறுபடுத்தி காட்டியது. சாதாரண வகுப்பு முதல் ஆண்டு மாணவ மாணவிகளின் சார்பாக அவளின் தங்கையே வாழ்த்துமடல் வாசிக்க வந்தார். அப்ப தான் அவளின் பெயரை இழையினி என்று அறிந்தேன். என்னவளின் பெயரோ பூங்குழலி. "பொன்காட்டும் நிறம்காட்டிப் பூக்காட்டும் விழிகாட்டிப் பண்காட்டும் மொழிகாட்டிப் பையவே நடைகாட்டி மின்காட்டும் இடைகாட்டி நன் பாட்டில் வாழ்த்து கூறினாள்!" உண்மையில் அந்த அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. அவள், மேடையில் இருந்த எங்களுக்கு கை கொடுத்து, தனிப்பட்ட வாழ்த்தும் கூறினாள். நான் பூங்குழலிக்கு எழுதிய கடிதம் இன்னும் என் கால்சட்டை பாக்கெட்டில் இருந்தது, மெல்ல அதை எடுத்து, அவள் எனக்கு கை கொடுக்கும் பொழுது, அதை அவள் கையில் திணித்து, அக்காவிடம் கொடு என்று மெல்லிய குரலில் கூறினேன். அவளுக்கு அது கேட்டு இருக்கும் என்றுதான் அந்தநேரம் நம்பினேன். அவள் மீண்டும் பூங்குழலியின் பக்கத்தில் போய் இருந்தாள். ஆனால் அந்த கடிதத்தை எனோ கொடுக்கவில்லை, அதை மெல்ல தனது பாடசாலை சீருடையின் பாக்கெட்டில் வைப்பதை மட்டும் கண்டேன். ஒருவேளை பின் தனிய பூங்குழலியுடன் வீடு திரும்பும் பொழுது கொடுக்கலாம் என்று நினைத்தேன். அதன் பின் நான் பூங்குழலியை காணவில்லை. நானும் பேராதனை புறப்பட்டு விட்டேன். நான் பேராதனை போய் ஒரு மாதம் ஆகிவிட்டது . இன்னும் ஒரு பதிலும் பூங்குழலியில் இருந்து வரவில்லை. என்றாலும் அவள் இன்னும் என் நெஞ்சில் இருந்து மறையவில்லை. பூங்குழலி என்ற பெயருக்கு ஏற்றவாறு அவள் கூந்தலில் ஒரு ரோசா பூ அன்று, நான் பார்த்த அந்த கடைசி நாளில் அழகு பெற்று இருந்தது. நீண்ட கரிய கூந்தல் சுருண்டு சுருண்டு விழுந்து அவளுடைய கடைந் தெடுத்த தோள்களை முத்தமிட்டு கொண்டு இருந்தது. அளவோடு பொன் நகைகள் அவள் அணிந்து கொண்டிருந்தாள். அவை அவளுடைய மேனியில் பட்டதனாலோ என்னவோ அவையும் அழகு பெற்றிருந்தன. அழகே ஒரு வடிவமாகி வந்தால், அதற்கு எந்த ஆபரணத்தைக் கொண்டு அழகு செய்ய முடியும்? அப்படித்தான் பூங்குழலி அன்று இருந்தாள். அது தான் அவளை இன்னும் மறக்க முடியாமல் தவிக்கிறேன். 'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன் நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?' எனக்கு அதன் தாக்கத்தை வர்ணிக்க முடியாது. ஆனால் அது அவளின் முடிவானால், நான் ஒன்றும் செய்யமுடியாது. நான் அடுத்தநாள், பெப்ரவரி 14 ஆம் திகதி, வகுப்புக்கு போகமுன்பு, ஒரு நற்பாசையில் அன்றும் தபால் ஏதாவது வந்திருக்கா என்று மீண்டும் பார்த்தேன். கொஞ்சம் கனமாக, ஆனால் அனுப்பியவர் விபரம் வெளியே குறிப்பிடாமல் எனக்கு வந்திருந்தது. நண்பர்கள் பலர் அங்கு நின்றதால், அதை உடன் திறந்து பார்க்கவில்லை. மனது எனோ மகிழ்வாக இருந்தது, 'ஹாப்பி வேலன்டைன் டே' என யாரோ யாருக்கோ சொல்லுவது காதில் கேட்டது. என்றாலும் மதிய உணவு இடைவெளியில் என் அறையில் போய் அவசரம் அவசரமாக திறந்தேன். அனுப்பியவர் பெயரை பார்த்தவுடன் எனக்கு ஆத்திரம் ஆத்திரமாகத் தான் வந்தது . அது உங்கள் செல்ல நண்பி இழையினி என்று இருந்தது. என்றாலும் அந்த மடலை வாசிக்க தொடங்கினேன் "அன்புள்ள அதிசயமே, என் அன்பே , அன்று நீங்கள் என் கையில் திணித்த அன்புக் கடிதம், அதில் உங்கள் உள்ளங்கை வேர்வையின் நறுமணம் என்னை என்னென்னவோ செய்துவிட்டது. நீங்கள் அப்பொழுது எதோ சொன்னது கூட காதில் விழவில்லை, மன்னிக்கவும்! வரிகள் தொடுத்தல்ல, என் சுவாசம் தொடுத்து, சுவாசம் சுமக்கும் நேசம் தொடுத்து, நேசம் நெய்த உன் பாசம் தொடுத்து, இதழ் வாசம் தேடும் என் காதல் தேசம் தொடுத்து, எத்தனையோ தடவை வாசித்துவிட்டேன்! அன்பு மணாளனே! என் பிரியமான தோழனே !!, உன் கவர்ச்சி இனிமையானது, தேன் போல் இனிமையானது. உன் வசீகரம் இனிமையானது, அமுதம் போல் இனிமையானது. நீ என்னை வயப்படுத்தி விட்டாய்,எனவே எனது சுய விருப்பத்தில் நீ கேட்ட பதிலைத் தருகிறேன். காத்து வைத்ததுக்கு மன்னிக்கவும் என் இதயத்திற்கினிய காதலனே. காதலர் தினத்தில் என் பதில் உன்னை அடைய வேண்டும் என்பதால் அன்பே சுணங்கிவிட்டது. நீ என்னை மயக்கி விட்டாய், எனவே எனது கட்டற்ற துணிவில் நான் உன்னிடம் வருவேன்! நீயே என் என் மதிப்புள்ள காதற் கண்மணி, அதில் இனி மாற்றம் இல்லை, - அன்புடன், உங்கள் இழை" நான் அழுவதா சிரிப்பதா எனக்குப் புரியவே இல்லை. அவள் இவ்வளத்துக்கு என்னை நம்பிவிட்டாள். இல்லை நான் தந்த கடிதம் பூங்குழலிக்கு கொடுக்கவே என்று சொன்னால், அவள் ஒரு மாதமாய் என்னென்னவோ கற்பனையில் மிதந்து காத்திருந்தவள், எப்படி அதை ஏற்பாளோ? எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை , நான் விரும்பியவளை விட, என்னை விரும்பியவள் எப்பவும் நல்லதே! இப்ப என் வாழ்க்கையில் குறுக்கிட்டவர்கள் இரண்டு பெண்களாக ஆகிற்று, ஒருத்தி, இழையினி என் தவறான கடிதத்தால், என்னை மிகவும் விரும்புகிறவள். மற்றொருத்தி, பூங்குழலி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள், அவளுக்கு இன்னும் என் காதல் தெரியாது. இருவருமே நல்ல அழகு, ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல, வித்தியாசம் வயது மட்டுமே. கையில் இருக்கும் பறவையை கண்கள் தேடும் பறவையை நம்பி கைவிடலாமா ? அது தான் இப்ப எனக்குத் தடுமாற்றம்? "உறங்கிக் கிடந்த மனது ஒன்று உறக்கம் இன்றி தவிப்பது ஏனோ? உறவு கேட்ட காதல் கடிதம் கை மாறிப் போனது ஏனோ?" "கண்கள் மூடி கனவு கண்டால் பூங்குழலி அருகில் வருவது ஏனோ? கருத்த கூந்தல் காற்றில் ஆட இழையினி மடல் வரைந்தது ஏனோ?" "காற்றில் இதயத்தில் குரல் கேட்க காத்திருந்து விழித்திருந்து ஏங்குவது எனோ? காதல் மொழியில் வாழ்த்து அனுப்பி காதலர்தினத்தில் தடுமாற்றம் தருவது ஏனோ?" "காந்தி மடியில் சரணம் அடைந்தேன் காரணம் கூறி விடை கேட்டேன்? காமம் துறந்த முனிவன் அவன் தேடி வந்தவளை தேற்று என்றான்!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]"
"தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" எப்படி முதலாவது சமயம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது. உலகில் எழுத்து உருவாகியபோது, பல சமயங்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. இயற்கை அனர்த்தங்களுக்கு எதிரான பயம் தான் சமயத்தை உருவாக்கியிருக்கும். மேலும் முதலாவது மதம் கருவுறுதல் அல்லது வளத்தை அடிப்படையாக அமைந்ததாக இருந்து இருக்கலாம். ஆகவே முதலாவது தெய்வம் அதிகமாக பெண் தெய்வமாகவே இருந்திருக்கும். சைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும். டாக்டர் போப்"சைவம் தென் இந்தியாவில், சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக, முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன் இருந்து, தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக காணப்பட்டது என்று கூறியுள்ளார். என்றாலும் சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உரு வானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப் படுகின்றது. நான் யார்? கடவுள் இருக்கிறாரா? கடவுள், உயிர், அண்டம், இவைகளின் இயல்பு என்ன? உலகத்துடனும், கடவுளுடனும் எனது தொடர்பு என்ன? ஒருவரால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சம்பவம், எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்ன? எந்த தத்துவ அமைப்பிலும் இப்படியான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. சைவ சித்தாந்தம் இவைகளுக்கு எளிதில் நம்பத்தக்க, வாத வகையில் நேர்மையாக விடையையும் காரணத்தையும் கொடுக்கிறது. மக்களின் சுதந்திரம், விடுதலை, உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும், இயற்க்கைக்கு எதிராக செயல்படுவதையும் இந்த தத்துவம் ஆலோசனை கூறவில்லை. மூட நம்பிக்கையிற்கும், கண்மூடித் தனமான விசுவாசத்திற்கும் இங்கு இடமில்லை. கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை. சைவ சமயத்தையும் தத்துவத்தையும் நிருவியவர்களும் அதை பிரச்சாரம் செய்பவர்களும் பரந்த நோக்குடைய வர்களாகவும் மேன்மை பொருந்திய இதயம் படைத்த வர்களாகவும் இருந்தார்கள். "அன்பே சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றே! இந்த முதுமொழி, தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது. அதாவது அன்பு தான் கடவுள் என்று இது போதிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என புறநானுறு கூறுகின்றது. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று எம்மை அது வழி காட்டுகின்றது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் என்று திரும்ப திரும்ப சைவ சமயம் எதிர் ஒலிக்கிறது. "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்கிறார் இக்காலப் பகுதியில் வாழ்ந்த திரு மூலர். இவரே சைவ சித்தாந்தத்தின் சாரம் என்று கருதப் படும் திருமந்திரம் என்னும் நூல் தந்தவர் ஆவார். இந்த நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் செய்யுள் வரி -1421 யில் காணப்படுகிறது. என்னினும் நாம் தமிழரின் வரலாற்றை, அவனின் தோற்றுவாயை சரியாக அறிவோமாயின் இந்த பெருமை பெற்ற தமிழரின் சமயத்தையும் அதனின் தோற்றுவாயையும் கூட நாம் அறியலாம். ஸ்பென்சர் வெல்ஸ் எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற நூலில் இருந்து "இந்தியன் மார்க்கர்" என அழைக்கப்படும் M 20 மக்கள், மத்திய கிழக்கு, தென் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் ஊடாக சிந்து சம வெளி வந்து, அங்கு இருந்து இறுதியாக தென் இந்தியா வந்ததாக அறியமுடிகிறது. மேலும் பல சான்றுகள் சுமேரியர், சிந்து வெளி மக்கள் திராவிடர்கள் என்றும் அவர்கள் பேசியது பழந் தமிழ் என்றும் சுடிக்காட்டுகிறது. "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" என்ற எனது மிக நீண்ட தொடர் கட்டுரையில் விபரமாக ஆராயப்பட்டுள்ளது. ஆகவே தமிழரின் சமயம், சுமேரியாவுடனும் சிந்து சம வெளியுடனும் அதிகமாக தொடர்பு கொண்டதாக இருக்கலாம்? உலகின் முதலாவது நாகரிகத்தை அமைத்த சுமேரியர்களுக்கு, பல மர்மமான இயற்கை நிகழ்வுகளிற்கு விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் அல்லது விளக்கம் கிடைக்கக் கூடிய வாய்ப்பு அன்று இருக்கவில்லை. ஆகவே அவர்கள் இயற்கை சக்திகளை உயிருள்ள ஒன்று என முடிவு எடுத்து, அந்த இயற்கை சக்திகளை கடவுளாக வழிபட தொடங்கினார்கள். இதனால், இயற்கை வழிபாடே அவர்களின் சமயத்தின் மூலமாக இருந்தது. இயற்கை சக்திகளை அப்படியே சக்திகளாகவே அவர்கள் முதலில் வழிபட்டார்கள். எப்படியாயினும், நாளடைவில் காலம் செல்லச் செல்ல மனித உருவம் இந்த சக்திகளுடன் இணைக்கப்பட்டன. இந்த மனித உருவ கடவுள், இயற்கை சக்திகளை கட்டுப்படுத்துவதாக அவர்கள் சிந்திக்க தொடங்கினார்கள். அவர்களின் உலகம் முழுவது ஆண் - பெண் கடவுள்கள் பல பல நிரம்பின. ஏண் உடு அன்னா [En-hedu-ana] எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய ஈனன்னை சீர்பியத்தில் [The Exalatations of In-Anna] முதல் பாடலின், "நின் மெய் சர்ர ஒள் தெள்ளயிய [nin-me-sar-ra u-dalla-e-a ]" என்ற முதல் வரியே இன்றளவு சைவத்தின் ஓர் கூறாக இருக்கும் மெய்ஞானத்தை விளம்புகின்றது என்கிறார் முனைவர் கி.லோகநாதன், இதன் கருத்து,சர்வ மெய்களின் அன்னை, தெள்ளிய ஒளி வடிவினள் [Lady of all the me's[divine powers], resplendent light] ஆகும். மேலும் சங்க கால தமிழர்கள் கூட முதலில் இயற்கையையே வழி பட்டார்கள். கன்னி மகளிர் தொழும்படி செவ்வானத்தில் திடீரென்று தோன்றிய பிறைச் சந்திரன் என்று குறுந்தொகை - 307 விளக்குகிறது. மேலும் சுமேரியர்கள், தாம் பூமியில் பிறந்தது, கடவுளுக்கு பணி புரியவும் கடவுளை நன்றாக பார்த்துக் கொள்ளவும் என கருதினர். கி.பி ஏழாம் நூற்றாண்டு, திருநாவுக்கரசு நாயனாரும் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று கூறுகிறார். நாம் ஒவ்வொரு முறையும் வானை நோக்கும் போது, நமது பிரபஞ்சம் எப்படி தோன்றியது போன்ற பல கேள்விகளுடனும் வியப்புடனும் நோக்குகிறோம். இக்கேள்விகளுக்கு தமது பதிலாக உலகின் முதலாவது படைத்தல் கதைகளை சுமேரியன் எமக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பு தந்துள்ளார்கள். மனிதன் உட்பட எல்லாமும் தெய்வீக சக்திகளால் படைக்கப் பட்டவையே என்பது சுமேரியர்களின் நம்பிக்கை. இதற்கு மாறாக, மூத்த சங்க இலக்கியமான தொல்காப்பியத்தில், உயிர்கள் கடவுளால் படைக்கப் பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக "நிலமும், நீரும், தீயும், காற்றும், விண்ணும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. இவையாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று" எனத் தொல்காப்பியர் இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பை போல ஒன்றை இற்றைக்கு இரண்டாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கூறுயிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது (தொல். மரபியல் 1589). சுமேரிய கடவுள் வெறுமனே மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார். அத்துடன் அவரின் கருணையை உறுதி செய்ய, தமது கூடிய நேரங்களை வழிபாட்டிற்கும், பிரார்த்தணைக்கும், தெய்வங்களுக்கு உயிர் பலி கொடுத்தலுக்கும் ஒதிக்கினார்கள். சுமேரியர்களின் ஆலயம் சிகுரத் [ziggurat] என அழைக்கப்பட்டது. இது குன்று மாதிரி உயரமாக எழுப்பப்பட்டன. சுமேரியாவில் மலைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம், தமிழரின் செல்வாக்கு நிறைந்த புகழ் பெற்ற தெய்வம், முருகன் கூட மலையில் வாழ்வதாகவும்,மக்கள் தமது நோயை, குறைகளை போக்க அவருக்கு காணிக்கை, படையல் செய்வதாக, ஐங்குறுநூறு 243, அகநானூறு 22, போன்ற பாடல்கள் கூறுகிறது. ஆரம்பத்தில் முருகன் உருவமில்லாத மலை கடவுளாக இருந்ததுடன் அவரை ஆவியாகவே / சத்தியாகவே வழி பட்டார்கள். உதாரணமாக குலக் குழுக்களின் பூசாரியாகவும் மந்திரவாதியாகவும் கடமையாற்றும் வேலன் என்ற ஒருவன், பேயோ அணங்கோ தெய்வமோ ஒருவரில் ஆவேசிக்கும் போது, அங்கு வந்து வேலேந்தி வெறியாட்டு ஆடி அதை ஓட்டுகிறான். அவன் உடலில் முருகு என்னும் தெய்வம் ஆவியாக சன்னதமாகி குலங்களுக்கு நற்செய்தி சொல்கிறது என சங்கப்பாடல் வர்ணிக்கிறது. பின் மரத்திலும் கல்லிலும், இறுதியாக மனித வடிவத்திலும் வழிபட்டார்கள். சிந்துவெளி நாகரிகத்தில், குறிப்பாக ஹரப்பா, மொகெஞ்சதாரோ நகரங்களில் இவர் 5000 வருடங்களுக்கு முன்பே "ஆமுவான்" என்ற மரக் கடவுளாக வழிபடப்பட்டுள்ளார். இயற்கை வழிபாட்டின் படி, சேயோன் → முருகன் → குறிஞ்சிக் கடவுள் அல்லது குறிஞ்சி நிலத் தலைவன் ஆனான்! எனினும் பிற்காலச் சைவத்தின் பரம்பொருளாகிய சிவனைப் பற்றிய குறிப்புகளை தொல் காப்பியத்தில் காணமுடியவில்லை. எனினும் சிவனைப் பற்றிய குறிப்புகளை தொல்காப்பியத்துக்குப் பிந்திய கடைச்சங்க இலக்கிக்கியங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. என்றாலும் இன்றைய சைவ சமயத்திலே காணப்படும் இலிங்க வழிபாடு. சக்தி வழிபாடு, சிவ (பசுபதி) வழிபாடு முதலியன 4500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து வெளி நாகரிகத்தின் முக்கியமான சமயப் பண்புகளாக விளங்கின என்பது பல அறிஞரின் துணி வாகும். சிந்து வெளி மக்கள் வழிபட்ட தெய்வங்களை முக்கியத்துவத்தின் படி முறைப்படுத்திய மார்ஷல், முதலில் அன்னைத் தெய்வத்தையும், அதற்கடுத்த படியாக மும்முகமுடைய கடவுளையும், மூன்றாவதாக இலிங்கம் அல்லது ஆண் குறியையும் எடுத்துக் கூறியுள்ளார். பெண் தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம் அது தோன்றிய சமுதாயத்திலே தாய்வழி முறை நிலவியதே என்பது ஆராய்ச்சியாளர் காட்டும் உண்மையாகும். அங்கு அன்னைத் தெய்வமே முழுமுதற்றெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம் .பண்டைய சிந்து சமவெளி நாகரிக மக்கள் பொதுவாக தந்திர முறை பண்பாட்டையே கொண்டிருந்தார்கள். இது ஆரியர்களின் வேத வழக்கத்தில் இருந்து வேறு பட்டது. இது ஒருவர் தனது எண்ணங்களையும் உணர்வு களையும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த வைக்கும் முறையாகும். அதாவது மனதும் உடலும் ஒன்று பட்டு இயங்குவதே தந்திர முறையின் முக்கிய கூறு. உடலையும் மனதையும் தனித்தனியே பிரிக்க முற்படுவதுதான் மற்ற வழிபாட்டு முறை ஆகும். ஆரியர் வந்த காலத்தில் வடஇந்தியாவிற் குடியிருந்தவர் பெரும் பாலும் திரவிடரே. ஆரியர் வடநாட்டுப் பழங்குடி மக்களொடு போரிட்டு நாடு கைப்பற்றியதாக வேதத்திற் கூறப்பட்டிருக்கிறது. காலப்போக்கில், ஆரியக் கலப்புக்குப் பின்னர், முருகன்→ ஸ்கந்தன் / சுப்பிரமணியன் ஆனான்! திருமால்→ விஷ்ணு ஆனான்! சிவன்→ ருத்திரன் ஆனான்! கொற்றவை→ பார்வதி / துர்க்கை ஆனாள்!உதாரணமாக சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன்... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள். அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்றவர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். கி. பி. நாலாவது,அல்லது ஐந்தாவது நூற்றாண்டுக்குப் பின்னர், தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன. தமிழர் அமைத்த கோயில்களில் பிராமணர் பூசகராயும் சமற்கிருதம் பூசனை மொழியாகவும் ஆனது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அரசர்களே இதற் கெல்லாம் வழி கொடுத்து வணங்கி நின்றனர். பழந் தமிழரின் கொற்றவை சைவசித்தாந்தத்திலும், சக்தியாக, சிவனுடைய சக்தியாக உருமாறியது. பல தமிழ் இலக்கியங்கள் முருகனை தாய்வழி உரிமை பெறும் திராவிடத் தெய்வமாகக் காட்டு கின்றன. "வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ" என்றும் "மலைமகள் மகனே" என்றும் "இழையணி சிறப்பிற் பழையோள் குழவி" என்றும் பாடுகின்றது. சிவனுடைய மகன் என்று சொல்லாமல் கொற்றவை சிறுவன் என்று முருகன் குறிப்பிடப் படும்பொழுது அங்கு தாய்வழி உரிமைச் சமுதாய உறவுமுறை நிலவியது என்று நாம் திடமாக நம்பலாம். சங்க கால தமிழர்கள் ஆன்மீக சார்ந்த, தத்துவ ஞானம் சார்ந்த குறிப்பிட்ட உண்மைகளை அறிந்தது இருந்தார்கள். உதாரணமாக உயிர், உடம்பு பற்றிய கோட்பாடுகள், ஊழ் - விதியின் வலிமை, ஒரு புனிதமான நோக்கத்திற்காக மரணிப்பது போன்றவைகளாகும். பல வகைப்பாடான கடவுள் தன்மையை [இறைமையை] புராண இலக்கியங்களில் ஒருவர் எதிர்கொள்ள நேர்ந்தாலும், தேவாரங்களை மிக நுணுக்கமாக படிக்கும் போது, அவை அதற்கு எதிர் மாறானதே உண்மை என சுட்டிக் காட்டும். எல்லா நாயன்மார்களும் ஒப்புயர்வற்ற கடவுளின் தனித்தன்மை [ஒருமை] ஒன்றையே உறுதியாக்கு கிறார்கள். மாணிக்கவாசகர் தமது திருத்தெள்ளேணத்தில் "ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!" என்கிறார். அதாவது ஒரு பெயரும், ஒரு வடிவமும், ஒரு தொழிலும் இல்லாத இறைவனுக்கு, ஆயிரம் திருப் பெயர்களைக் கூறி நாம் ஏன் துதிக்கிறோம்?. என கேள்வி கேட்கிறார். சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று. `குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக் கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க இன வெறிக் கொள்கை போல பிராமணர்களால் சாதிக்கொள்கையும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’என்று வினவுகிறார். பொதுவாக தனி மனிதனைக் கடந்து அண்டத்தை உணர்த்தி நிற்கும் அல்லது ஒன்றை (கடவுள், இறைவன்) உணரும் வழிமுறையின் கட்டமைப்பே “சமயம்“ என்பர். எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு. இன்று இந்து மதத்தின் உட்பிரிவாக ஆரிய மயப்பட்ட சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது. இதனால், பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று காணப்படவில்லை. இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது. சைவ சிந்தாந்தம் தந்த திருமூலர் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் சமஸ்கிரதம் செய்யுமாறே" என்று இன்று கூறுவரோ?!யாம் அறியோம் பரா பரமே!! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகள்"
"கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகள்" நாம் கிறிஸ்மஸ் பற்றி சிந்திக்கும் பொழுது எம் மனதில் எழும் முதல் கேள்வி, நாம் எங்கிருந்து கிறிஸ்மஸ் விழாவை பெற்றோம் ... பைபிளில் [Bible] இருந்தா? அல்லது தொன்ம ஐரோப்பிய நம்பிக்கையில் [பாகால் வழிபாடு / paganism] இருந்தா ? என்பதே ஆகும். குழந்தை இயேசு .. மூன்று ஞானிகள் .. நட்சத்திரத்தை பின்தொடரல் .. கிறிஸ்மஸ்ஸின் உண்மை கருத்தா அல்லது ஒருவேளை அது பண்டிகை ஜம்பர்கள் [festive jumpers], உற்சாகத்தால் உந்தப்பட்ட செலவினங்கள், அதிகமாக குடிப்பது போன்றவையா? அல்லது கிறிஸ்மஸ் இவைக்கு அப்பாற்பட்டதா ? ஏனென்றால், அதன் வேர்கள், உண்மையில் கிருஸ்துக்கு [இயேசுக்கு] முந்தைய பண்டைய கால வரலாற்றில், தொலைவில் உள்ளது. கிருஸ்து [இயேசு] இறந்து 340 ஆண்டுகளுக்கு பின்புதான், போப் ஜூலியஸ் I [Pope Julius I] டிசம்பர் 25 ஆம் திகதியை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கான திகதியாக அறிவித்தார். எனினும் இதற்கு முன்பு, இது மூன்று வெவ்வேறு திகதிகளில் குறிக்கப் பட்டுள்ளது. உதாரணமாக, 29 மார்ச், 6 ஜனவரி, மற்றது ஜூன் மாதத்தில், திகதி சரியாக தெரியவில்லை. என்றாலும் கிறிஸ்மஸ் விழாவை டிசம்பர் 25 இல் தீர்மானித்தது, கிறிஸ்த்தவ சமயம் அன்றி, வேறு சமயத்தைச் சார்ந்த ஐரோப்பியர்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றுவது [converting the heathen to Christianity] இலகுவாக இருந்தது. ஏன் என்றால், அவர்கள் ஏற்கனவே, மாரிகாலத்தின் நடுவில் சில விழாக்களை கொண்டாடிக் கொண்டு இருந்ததால், அதனுடன் கிறிஸ்மஸ் விழாவை ஒன்றிணைக்கும் பொழுது பெரும் பிரச்சனைகள் எழவில்லை. மேலும் கிறிஸ்மஸ் மரத்தின் [Christmas tree] தோற்றம் பற்றி அல்லது கிருஸ்மஸ் தாத்தா [Santa Claus] பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? நீங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது, கிறிஸ்மஸ்துக்கு முதல் நாள் [on Christmas eve] உங்கள் காலுறைகளைத் [stockings] தொங்க விடுங்கள் என உங்க பெற்றோர்கள் உங்களிடம் கூறி இருக்கலாம்? அடுத்த நாள் நீங்க எழும்பொழுது, சிறிய பொம்மைகள் மற்றும் சாக்லேட் மற்றும் கொட்டைகள் கொண்ட சிறிய பெட்டிகளால் [small toys and sacks or little boxes of candy and nuts] அவைகள் நிரப்பப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அது மட்டும் அல்ல நீங்கள் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தையும் பார்த்திருப்பீர்கள். அதன் கீழ் மேலும் பல வர்ண உறையால் சுற்றப்பட்ட பெரிய பரிசு பொருட்களை கண்டு இருப்பீர்கள். உங்களுக்கு உங்கள் பெற்றோர்கள் கிருஸ்மஸ் தாத்தா இரவில் புகைபோக்கி [chimney] வழியே கீழே வந்து பரிசு தந்தார் என கூறி இருப்பார்கள். நீங்கள் என்றாவது இதைப்பற்றி சிந்தித்து கேள்வி கேட்டீர்களா? நாங்கள் பொதுவாக பழக்கவழக்கங்கள் நிறைந்த உலகில் தான் பிறந்தோம், வாழ்கிறோம். நாங்கள் அவைகளை பொதுவாக சிறுவயதில் கேள்வி இல்லாமல் ஏற்றுக்கொண்டோம். ஆனால் நாம் வளர்ந்த பின்பும், உதாரணமாக மிகச் சிலரே, ஏன், எதற்காக பரம்பரையாக வந்த பழக்கவழக்கங்களை, நாம் பின்பற்றுகிறோம் என்பதை அல்லது ஏன் நம்புகிறோம் என்பதை அறிவுபூர்வமாக உண்மையில் அலசுகிறார்கள் அல்லது அறிய முற்படுகிறார்கள். இது எமது சமுதாயத்தின் குறைபாடு என்று தான் சொல்லவேண்டும். உதாரணமாக நான் பாடசாலையில் பயிலும் பொழுது, எமக்கு சூரிய கிரகணம் சந்திர கிரகணம் பற்றி விளங்கப்படுத்திய ஆசிரியை, அதே கிரகணத்துக்கு விரதம் இருப்பதை கண்டுள்ளேன்? ஏனென்றால், இயல்பாக, அது சரி அல்லது தவறாக இருந்தாலும், நாம், நாம் சேர்ந்த கூட்டத்தை, எந்த கேள்வியும் கேட்காமல் பின்பற்ற முனைகிறோம். இது தான் எம் முக்கிய குறைபாடு? ஆடுகள் எந்த மறுப்பும் இன்றி, தம் படுகொலைக்கு தாமே, மற்ற ஆடுகளை பின்தொடர்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாம் அப்படி செய்ய முடியாது. மனிதர்கள் எங்கு செல்கிறார்கள் என்று கட்டாயம் அறிவுபூர்வமாக சோதிக்க வேண்டும் என்று நம்புகிறேன் உண்மையில் கிறிஸ்மஸ் இயேசுவின் பிறந்த நாளை கொண்டாடுகிறதா ? அவர் டிசம்பர் 25 இல் பிறந்தாரா?, நாம் கட்டாயம் சிந்திக்க வேண்டிய கேள்வி இது. பைபிளின் வேதவசனங்கள் இயேசு பிறந்தார் என்ற உண்மையையும் மற்றும் அவருடைய பிறப்பு தீர்க்கதரிசனத்தையும் எவ்வாறு நிறைவேற்றியது என்பதையும் எடுத்து கூறுகிறது. ஆனால் அவர் பிறந்த நிகழ்வு எப்போது நடந்தது என்பது பற்றி ஒன்றுமே கூறவில்லை. அங்கு அது அமைதியாக உள்ளது. ரோமப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் சத்துர்னாலியா [சடுர்நலியா / சதுர்னாலியா] எனும் பண்டிகை இத்தாலி முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு குளிர்கால கொண்டாட்டமாகும். இந்த பண்டிகையை [Bacchanalia or Saturnalia] ரோமனியர்கள், கிருஸ்துக்கு [இயேசுக்கு] முன் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே டிசம்பர் 17-25 க்கு இடையில் கொண்டாடினார்கள் என்பது வரலாறு. இந்த காலகட்டத்தில், ரோமானிய நீதிமன்றங்கள் மூடப்பட்டன, வார இறுதி கொண்டாட்டத்தின் போது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக அல்லது மக்களை காயப்படுத்தியதற்காக யாரும் தண்டிக்கப் படக்கூடாது என்று ரோமானிய சட்டம் கட்டளையிட்டது. அப்பொழுது களியாட்டங்களும் கேளிக்கை நிகழ்வுகளும் காணப்பட்டன. அப்போது பரிசுப் பரிமாற்றங்களும் முக்கிய இடம் வகித்தன. பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும் சிறுவர்களுக்கு பொம்மைகளும் வழங்குவது வழக்கமாகக் காணப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது வர்த்தக நடவடிக்கைகள் பின்தள்ளப் பட்டதோடு அடிமைகளுக்கும் கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என அனுமதியளிக்கப் பட்டிருந்தது. மது அருந்துதல், பொது இடங்களில் உடையின்றி இருத்தல் போன்றவையும் அப்போது கொண்டாட்டத்தின் பகுதிகளாகக் காணப்பட்டன. 4 ஆம் நூற்றாண்டில், இந்த சதுர்னாலியா என்ற திருவிழாவை அங்கீகரித்து, சதுர்னாலியா பண்டிகையின் இறுதி நாளான டிசம்பர் 25ம் தேதியை இயேசுவின் பிறந்த நாள் என்று அறிவித்து, அதன் மூலம் மற்றவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் வெற்றிபெற்றனர் என வரலாறு சான்றுபகிர்கிறது இன்னும் ஒரு குளிர்காலக் கொண்டாட்டமான யூல் பண்டிகையை [Yule Feast] ஸ்கென்டினேவியாவைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் டிசம்பர் இறுதி முதல் ஜனவரி தொடக்கம் வரையான பகுதியில் கொண்டாடினார்கள். இதனால் இங்கும் மற்றவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் இலகுவாக இருந்தது. என்றாலும் வடக்கு ஐரோப்பா கடைசியாகத் தான் கிறிஸ்தவத்துக்கு மாறியது. ஸ்கென்டினேவிய மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை இன்றும் யூல் என்றே அழைக்கின்றனர். யூல் என்ற சொல் கி.பி. 900 முதல் ஆங்கிலத்தில் கிறிஸ்மஸ் என்ற பொருள் உள்ள சொல்லாகவே பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கிறிஸ்மஸ் என்பது கிறிஸ்துவின் திருப்பலி (வழிபாடு) [Christ's mass] என்பதன் சுருக்கம் ஆகும். கிறிஸ்மஸ் கொண்டாட்டம் , கிறிஸ்துவர்களுக்கு உரியது என்றால், ஏன், மற்ற மதத்தவர்களும் அதை கொண்டாடுகிறார்கள்? உங்களுக்கு அதற்கு விடை தெரியுமா ? ஏன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் பொழுது, பரிசு பொருட்களை தமது குடும்பத்துடன், உறவினருடன் மற்றும் நண்பர்களுடன் பரிமாற்றுகிறார்கள் ? மூன்று ஞானிகளும் [wise men] குழந்தை இயேசுக்கு பரிசுகளை வழங்கினார்கள் என்பதாலா ? நாம் இவைகளைப்பற்றி கட்டாயம் சிந்திக்க வேண்டும். கிறிஸ்து [இயேசு], மாரி காலத்தில் கட்டாயம் பிறக்கவில்லை என்பதை மிக இலகுவாக நாம் பரிசுத்த வேதாகமம் லூக்கா அதிகாரம் 2 மூலம் அறிந்து கொள்ளலாம். [Luke 2 / The Birth of Jesus]. உதாரணமாக, அந்நாட்களில் குடிமதிப்பு [A Census] எழுதப்பட வேண்டு மென்று அகுஸ்துராயனால் [Caesar Augustus] கட்டளை பிறந்தது. அதன் படி குடிமதிப்பு எழுத எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். எனவே, அப்பொழுது யோசேப்பும் [Joseph], தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்த படியினாலே [As Belonged To The House And Line Of David], தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே [Mary] குடிமதிப்பு எழுத ஊருக்குப் போனான். அப்படி போகையில், அவ்விடத்திலே, அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் [Shepherds] வயல் வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள் என்று கூறுகிறது. பொதுவாக குளிர்காலத்தில் மந்தைகளை வயல்வெளியில் மேயவிட்டு, இரவில் அவைக்கு காவலாக கடும் குளிரில் கட்டாயம் இருக்க மாட்டார்கள். அதிகமாக, மேய்ப்பர்கள், மந்தைகளை அக்டோபர் 15 க்கு முன்பு கொண்டு வந்து கட்டிப் போடுவார்கள், ஏனென்றால் அவ்வற்றை குளிர், மழையில் இருந்து பாதுகாப்பதற்காக என்று, வரலாற்று மூலமும், அங்கு நிலவிய காலநிலை மூலமும் இலகுவாக நாம் அறியலாம். மேலும் பைபிளும் தன் சாலமன் பாடல் 2:11 [இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது] மூலமும் மற்றும் எஸ்ரா 10:9, 13, [9: அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியில் அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். 13: ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியில் நிற்க எங்களாலே முடியவில்லை] மூலமும் இதை உறுதிப் படுத்துகிறது. [Bible itself proves, in Song of Solomon 2:11 and Ezra 10:9, 13, that winter was a rainy season not permitting shepherds to abide in open fields at night.] ஆகவே, இவ்வற்றில் இருந்து நாம் அறிவது, இயேசு பிறக்கும் பொழுது, மேய்ப்பர்கள் இன்னும் தங்கள் மந்தைகளை வீட்டிற்கு கொண்டு வரவில்லை, எனவே, நாம் அக்டோபர் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று இலகுவாக ஊகிக்கலாம். எனவே கட்டாயம் இயேசு டிசம்பர் 25 பிறக்கவில்லை. உங்களுக்கு இந்த உண்மை ஒருவேளை மனவருத்தத்தை தரலாம், என்றாலும் நாம் இதை ஏற்கத்தான் வேண்டும். ஆனால் டிசம்பர் 25 என்று தீர்மானித்தது ஐரோப்பாவில் இலகுவாக பரப்பவும், மற்றும் உலகரீதியாக எல்லோரும் கொண்டாடவும், ஏனென்றால், ஆண்டு முடிவிற்கு ஒரு கிழமைக்கு முன்னால் வருவதால், புது வருட கொண்டாட்டத்துடன் இது கலந்து விடுவதால், மத பேதம் இன்றி கொண்டாடும் ஒரு வாய்ப்பை தானாகவே அது ஏற்படுத்திக்கொண்டது எனலாம். கிறிஸ்மஸ் பண்டிகையின் முக்கிய அம்சமான 'கிறிஸ்மஸ் மரம்' [Christmas tree] ஒரு பிற்சேர்க்கையே. கிறிஸ்து [இயேசு] பிறப்பதற்கு பல நுறு ஆண்டுகளுக்கு முன்பே, பண்டிகை காலத்தில், இன்று பைன் [தேவதாருமரம்], தளிர் [ பார்வைக்கு நேர்த்தியாய் உள்ள, ஊசி இலை மர வகைகள்] மற்றும் ஃபிர் [கனங்குறைந்த உயர்தரக் கட்டைதரும் குளிர் மண்டல ஊசியிலை மரவகை] மரங்களால் [pine, spruce, and fir trees] அலங்கரிப்பது போல, அன்று பண்டைய கால மக்கள் பசுமையான மர கொப்புகளை [evergreen boughs] தமது கதவு மற்றும் ஜன்னல்களில் சூனியக்காரிகள், பேய்கள், தீய சக்திகள் மற்றும் நோய்களை விரட்ட [keep away witches, ghosts, evil spirits, and illness], குளிர் காலத்தில் தொங்கவிட்டார்கள். அவையின் தொடர்ச்சியாகவே பிற்காலத்தில் கிறிஸ்மஸ் மரம் ஆரம்பித்து இருக்கலாம் என நம்பப் படுகிறது. ஏசுநாதரின் உயிர்ப்பின் அடையாளமாக பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரத்தை பார்க்கப் பட்டதாகவும், பின் கிறிஸ்மஸ் மரத்தை 1500 ஆண்டு மார்ட்டின் லூத்தர் கிங் மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதைக் கிறிஸ்து [இயேசு] பிறப்பு விழாவில் பயன்படுத்தினார் என்றும் அறிகிறோம். அன்றிலிருந்து கிறிஸ்மஸ் விழாக்களில கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றது என்றும் சொல்கிறார்கள். கிறிஸ்மஸ் பண்டிகையின் மற்ற ஒரு முக்கிய அம்சம் சாண்டா கிளாஸ் என்ற கிருஸ்மஸ் தாத்தா ஆகும். இது ஒரு முழுக்க முழுக்க கற்பனை கதாப்பாத்திரமே. நம்ம ஊர் அம்புலி மாமா கதை போன்றது இதுவாகும். துருக்கியின் மீரா நகரில் பிறந்த நிக்கோலஸ் [Saint Nicholas of Myra] என்ற பாதிரியார் வாரி வழங்கும் குணம் படைத்தவர். ஏழைகளுக்கு உதவுவார். குழந்தைகளுக்கு ரகசியமாக பரிசு தருவார். பிற்காலத்தில், நிக்கோலஸ் என்பவரே சாண்டாகிளாஸ் [Santa Claus] என மாற்றப்பட்டார் என வரலாறு கூறுகிறது. கிறிஸ்மஸை கடைபிடியுங்கள் என்றோ அல்லது அப்படியான ஒன்றை ஏசுநாதரின் சீடர்கள் [apostles] கடைப்பிடித்தார்கள் என்றோ பைபிள் சொல்லாமல் அமைதியாக இருந்தாலும், கிறிஸ்மஸ் மரம் போன்ற ஒன்றைப்பற்றி சொல்லி இருப்பது உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. உதாரணமாக எரேமியா 10:2-6 [Jeremiah 10:2-6,] இல், புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் என்று தொடங்கி .. காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; கைவினைஞர் அதை தனது உளி கொண்டு வடிவமைக்கிறார். பின் வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். ... அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது என்று கூறி .. அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமை செய்யாது, அதேநேரத்தில், , நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று முடிக்கிறது. ஆனால் சிலர் இதை பிழையாக வாசித்து, கிறிஸ்மஸ் மரம் அலங்காரமாக வைப்பதால் ஒரு தீங்கும் இல்லை என்று முடிவு எடுக்கிறார்கள், ஆனால் அப்படி இங்கு உண்மையில் சொல்லப்படவில்லை? இங்கு சொல்லப்பட்டது , முன்னைய பழக்க வழக்கமான மரத்தை அலங்கரித்து வீட்டில் வைப்பதால் ஒரு பயனும் இல்லை என்றே ஆகும் . இந்த வசனத்திற்கு அடுத்ததாக, அது " கர்த்தாவே, உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது" என்று முடிக்கிறது இதுவே, நான் அறிந்த அளவில், கிறிஸ்மஸ் பற்றிய ஒரு உண்மை வரலாறு! எல்லோருக்கும் நேரத்துடன் கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள் !! "முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் பல்மீன் நடுவண் திங்கள் போலவும் இனிது விளங்கி பொய்யா நல் இசை நிறுத்த இலங்கு இழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே" ["பத்துப்பாட்டு – மதுரைக்காஞ்சி"] நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 2]
"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்] "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!" "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?" "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?" "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?" "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!" "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?" "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?" "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?" "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!" "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?" "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?" "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து]
-
"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1]
"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / First poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது] "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!" "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!" "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?" "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?" "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?" "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?" "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?" "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?" "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?" "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!" "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?" "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்
-
"உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?"
"உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?" நாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி, அதற்கான விடையை ஓரளவு சமூக, அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன், உறவு, அன்பு என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒருவருக்கொருவர் இடையில் உள்ள தொடர்பு உறவு என்று அழைக்கப் படுகிறது. இது அதிகமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே அமையும் குழாம், இணைப்பு, தொடர்பு மற்றும் பிணைப்பை [association, connection, interaction and bond] குறிக்கிறது எனலாம். பலவிதமான உறவுகளை நாம் நாளாந்த வாழ்வில் காண்கிறோம். எனவே நம் உறவு வட்டம் மிக மிகப் பெரியது எனலாம். உதாரணமாக, பெற்றோர் ,சகோதரங்கள், துணைவர் [கணவன் அல்லது மனைவி], குழந்தைகள், சொந்தக்காரர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், பயண சிநேகிதர்கள், விளையாட்டு குழு, .... என உறவு தொடர்கிறது. இவர்கள் ஒவ்வொருவருடனும் நாம் ஒவ்வொரு விதமாகப் பழகுகிறோம். சுருக்கமாக 'சொந்தங்கள் அல்லது குடும்ப உறவுகள்', 'நண்பர்கள்', 'பழக்கமானவர்கள்' [Family Relationships, friends, Acquaintances] என்று உறவுகளை மூன்று வகையாக பிரிக்கலாம். பொதுவாக மனித வாழ்க்கை என்பது உறவுகளின் ஓர் வலைப் பின்னலே என்று கூறலாம். தன்னோடு உறவு, அயலாரோடு உறவு, உலகத்தோடு உறவு, ஏன் தன்னை படைத்தவர் கடவுள் என நம்பி, அந்த ஆண்டவனோடும் உறவு, மற்றும் தன்னை சுற்றி அமைந்து இருக்கும் இயற்கையோடும் உறவு - என்று உறவுகளின் தொகுப்பே இங்கு வாழ்க்கையாக விரிகிறது. அது மட்டும் அல்ல, “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என எல்லா உலக மக்களையும் தன் உறவினராக பேணியதை இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க இலக்கியத்திலும் காண்கிறோம். ஆணானாலும், பெண்ணானாலும் அவர்களுக்கு குடும்பம், உறவு, நட்பு என்பவை முக்கியமான அவசியமான ஒன்று. பொதுவாக எந்த ஒரு மனிதனும் தனித்து வாழ்ந்து விட முடியாது. மனித வரலாறு அதைத்தான் எமக்கு காட்டுகிறது. திருவிளையாடல் படத்தில் கேபி சுந்தராம்பாள் பாடிய 'பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா' என்ற பாடலில் உறவை பற்றி மிக அழகாக கவிஞர் கண்ணதாசன் ஒரே ஒரு வரியில் 'ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு' என விபரிக்கிறார். அதாவது, ஊருண்டு – ஊரில் இருக்கும் பொதுச்சனம் உண்டு, பேருண்டு – சாதிக்காரங்க உண்டு. அதாவது குறிப்பிட்ட பெயர்களை கொண்ட கூட்டம் உண்டு, உறவுண்டு – தேர்வினால் வந்த சொந்தங்களும் நண்பர்களும் உண்டு [Relatives by choice], சுகமுண்டு – சுகம் தரும் மனைவி, குழந்தைகள் என்ற தன் குடும்பம் உண்டு, உற்றார் – பிறப்பினால் வந்த சொந்தம் உண்டு [Relatives by birth], பெற்றார் – தன்னை பெற்ற அம்மா அப்பா உண்டு என்கிறார். அன்பு என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது என்றோ அல்லது ஒரு உள்ளுணர்வு என்றோ கூறலாம். இது வெவ்வேறு சூழல்களில் தொடர்புடைய ஆனால் வேறுபட்ட பல அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. எனவே, பல மொழிகளில் சூழலுக்கு தகுந்தாற் போல வெவ்வேறு சொற்கள், உதாரணமாக, நேசம், பாசம், நட்பு, காதல், விருப்பம் .... பயன்படுத்தப்படுகின்றன. சுருக்கமாக, அன்பு என்பது பொதுவாக ஒரு நபர் மற்றொரு நபரைப் பற்றி நினைக்கும் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறது என்றோ அல்லது இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம் என்பதால், அந்த புரிதல் தான் அன்பு என்றோ கூறலாம் என்றும் கருதுகிறேன். இனிப்பு இனிக்கும் என்கிறோம். ஆனால், இனிப்பு என்றால் என்ன? என்று யாராவது கேட்டால், விளக்குவது சிரமமாகிறது. அப்படியே அன்பும் ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு அதற்கு எதிரான ஒன்றை சொல்லுவது வழக்கம். அந்த ரீதியில் நாம் பார்க்கும் பொழுது வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என்பன அன்பின் எதிரான பதம் ஆகும். என்றாலும் அன்பிற்கு நாம் நாளாந்த வாழ்வில் கொடுக்கும் விளக்கம், அதை ஒரு அளவிடக் கூடிய பொருளாக சிந்திக்க ஊக்குவிக்கிறது. இதனால் தான் நாம் "அன்பை உருவாக்குங்கள்", "காதலில் விழுந்தார்", "நிறைய அன்பு" (“make love“, “fallen in love“, “lots of love“) போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். பண்டைய கிரேக்க தத்துவவாதிகளும் அன்பை நான்கு வகையாக பிரிக்கின்றனர். அவை, குடும்ப உறவு (கிரேக்கத்தில் – storge), நட்பு (கிரேக்கத்தில் – philia), காதல் (கிரேக்கத்தில் – eros) மற்றும் தெய்வீக அன்பு (கிரேக்கத்தில் – agape) ஆகும். அதன் நீட்சியாக மேலும் இன்று இனக்கவர்ச்சி, தற்காதல், விசுவாசம் போன்றவை அன்பின் வகைகளாக கருதப் படுகிறது. சுருக்கமாக அன்பின் அனுபவத்தை 1] இரு நபர்களுக்கிடையில் ஏற்படும் கவர்ச்சி அல்லது ஈர்ப்பு என்றும், 2] ஒரு வீட்டின் மீது கொண்டுள்ள அன்பு, பெற்றோரின் கடமை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும் அனுபவம் அல்லது இணைப்பு என்றும், 3] பாலியலின் ஆரம்ப உணர்ச்சியினால் ஏற்படும் ஆசை அனுபவம் அல்லது காமம் என்றும் வல்லுநர்கள் பிரிக்கின்றனர். பொதுவாக ஒருவர் உயிர்வாழ அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தன்னலம் [சுயநலம்] அவசியமாகிறது. அது மாட்டு அல்ல, சுயநலமாய் இருப்பதை எவரும் தவிர்க்கவும் முடியாது. ஏன் என்றால், சுயநலமாய் இருக்கக் கூடாது என்று இருப்பதுவே ஒரு சுயநலம் தான். ஒருவர், சில செயல்களை செய்யும் பொழுது, சுயநலம் இல்லாமல் தாம் செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்தச் செயல் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை தருவதால் தான் அப்படிச் செய்கிறார்கள். இதை எவரும் மறுக்க முடியாது. பெரியாரிடம் ஒரு முறை ஒருவர், பொது நலம் என்றால் என்ன என்று கேட்டார், அதற்கு பெரியார், இதோ மழை பெய்கிறதே, இது தான் பொது நலம் என்றார். அடுத்து அவர் சுயநலம் என்றால் என்ன என்று பெரியாரிடம் கேட்டார். அதற்க்கு அவர், இதோ எல்லோரும் குடையை பிடித்துக் கொண்டு நடக்கிறோமே, அது தான் சுயநலம் என்றார். அதாவது ஒருவர் தனது நலத்தைப் பற்றி மட்டும் சிந்திப்பதை சுயநலம் எனலாம். நம்மை உயிரோடு வைத்திருப்பதற்காக நாம் மூச்சு விடுவது கூட உண்மையில் ஒரு சுயநலம் தான். அப்படியே நாம் சிலவேளை முரண்பட்டு நிற்பதும் சுயநலம் தான். எனவே, சுயநலமில்லாமல் எதுவுமே இல்லை எனும் போது, உறவுகளைப் பற்றிய சந்தேகங்களை ஆய முற்பட்டால், அன்புக்காக, ஆசைக்காக என்று உறவுகள் அமைவதும், உறவுகளை நாம் அமைத்துக் கொள்வதும் கட்டாயம் நம் அவசியத்திற்காக அல்லது எம் முக்கியத்திற்காக என தெரியவரும். உதாரணமாக காதலும் அப்படித்தான். அவளது அல்லது அவனது நலனுக்காக நான் காதலிக்கிறேன் என்று எவரும் சொல்ல முடியாது, எனக்கு முக்கியம் என்பதற்காகவே அவள் அல்லது அவன் பின் அலைகிறேன் என்பதே அவரவர் சொல்லக்கூடிய உண்மை நிலையாகும். தமிழ் மூதாட்டி ஔவையார், தனது ஒரு பாடலில், "அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழி தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு" என்கிறார். அதாவது, குளத்தில் நீர் நிறைந் திருக்கையில் அதில் தங்கி மீன்களை உண்டு வாழ்ந்த நீர்வாழ் பறவைகள் எல்லாம், அக்குளத்தில் நீர் வற்றுமானால் அங்கிருந்து அகன்று சென்று விடும். அதைப்போல, நாம் செழிப்பாக இருந்த காலத்தில் எல்லாம் நம்முடன் ஒட்டி உறவாடிப் பயன் அடைந்த நம் உறவினர்கள், நமக்கு வறுமை வருகையில் அல்லது நமக்கு ஒரு துன்பம் வருகையில், அவர்களால் இயன்ற உதவிகளை செய்ய மன மில்லாமல், நம்மை விட்டு அகன்று விடுவார்களே யானால், அவர்கள் எல்லாம் நமக்கு உறவினர்களே அல்ல. கொட்டியும், அல்லியும், நெய்தலும் போல ;நம்மை விட்டு நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே ; உண்மையில் உறவினராவார் என்கிறார். இதை மெய்ப்பித்தல் போல, ஒரு பண்டைக் கிரேக்க துன்பியல் நாடகாசிரியர் சாஃபக்கிளீசு (Sophocles - கிமு 496 - கிமு 406), தனது ஆண்டிகான் [Antigone - 441 BC] நாடகத்தில், தன் சகோதரன் பொலினிக்ஸ் [Polynices] இற்க்காக அல்லது குடும்ப உறவுக்காக, சகோதரி ஆண்டிகான் அரசனையே எதிர்ப்பதை காண்கிறோம். தனது சகோதரனுக்கு, தனது குடும்ப உறவுக்கு, ஒரு மரியாதையான நல்லடக்கம் செய்ய தன்னையே தியாகம் செய்ய துணிகிறாள். "அவனை நானே அடக்கம் செய்வேன் அந்த செயலில் நான் இறந்தாலும், அந்த இறப்பு ஒரு மகிமையாக இருக்கும் அவனால் நேசித்த நான், நான் நேசித்த அவனுடன் [மரண படுக்கையில்] ஒன்றாக படுப்பேன்" (ஆண்டிகான் 85- 87) "I will bury him myself. And even if I die in the act, that death will be a glory. I will lie with the one I love and loved by him" (Antigone 85- 87). உறவுகள் மீதான ஒருவரது பாசம், ஈடுபாடு உண்மையில் அன்பல்ல. குறிப்பாக, ஒருவர் தனது குழந்தைகளின் மீது கொள்ளும் பாசம் அன்பல்ல. ஏனெனில் ஒருவரது குழந்தைகள் என்பவை உண்மையிலேயே ஒருவருடையவையே. அதாவது ஒருவரது பகுதியே அல்லது நீட்சியே. குட்டி என்பது தாயின் நீட்சியே. ஆகவே இவ் விடத்தில் தோன்றுவது உடமை பூர்வமான பாசம் தானே தவிர அன்பல்ல என்று எண்ணுகிறேன். ஏனென்றால், தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அந்த ஒருவரது உணர்வு தான் தனது அங்கம் அல்லது நீட்சி போன்ற குழந்தை குறித்தும் ஏற்படுகிறது எனலாம். இதே சுய-அன்பானது, தனது குழந்தை கட்கும், பிற நெருங்கிய குடும்ப உறவு கட்கும், சற்று தொலைவான குடும்ப உறவு கட்கும் நீட்டிக்கப் படுகிறது. இதைத் தான் நாம் பண்டைக் கிரேக்க ஆண்டிகான் நாடகத்திலும் பார்த்தோம். இறுதியாக இன்னும் ஒரு பண்டைய இதிகாசமான இராமாயணத்தை பார்ப்போம். இங்கு, கைகேயி பரதன் 14 வருடம் நாடாள வேண்டும் எனவும், அப்பொழுது ராமன் 14 வருடம் காட்டுக்கு போக வேண்டும் எனவும் வரம் கேட்க, தசரதனும் அவ்வாறே வரம் கொடுக்க, தந்தை சொல் மீறாத ராமன் காட்டுக்கு செல்ல, அவனோடு செல்வதே பதிவிரதைக்கான நியதி என்று சீதாதேவி கிளம்ப, அண்ணன் இல்லாத இடத்தில் இருக்க மாட்டேனென லட்சுமணனும் கைகேயிடம் சூளுரைத்து காட்டுக்கு கிளம்புகிறான் என கதை தொடர்கிறது. ஆனால் லட்சுமணின் மனைவி ஊர்மிளாவை அவர்கள் கூட்டிப் போகவில்லை. ஊர்மிளா பதிவிரதை இல்லையா ?, ஏன் ராமன் ஊர்மிளாவையும் கூடிக் கொண்டு வா என்று லட்சுமணை கேட்கவில்லை, எங்கே போயிற்று நியாயம், எங்கே போயிற்று தம்பி என்ற உறவில் அன்பு ? ஊர்மிளா வந்தால், இலட்சுமணன் அவன் கடமையை, அதாவது ராம-சீதாவை சரிவர கவனிக்கும் கடமையை அல்லது தேவையை முழுமையாக செய்ய முடியாது என நம்பியதாலோ ? உண்மையான அன்பு உறவு இருந்தால், தம்பியை தடுத்து இருப்பான், அல்லது தம்பியுடன், சீதை போல் ஊர்மிளாவையும் கூட்டிப் போய் இருக்கவேண்டும், ஆனால் அங்கு ஒரு தேவை தான் முக்கியமாக இருந்து இருக்கிறது, என்றாலும் அதை மறைக்க பல பல காரணங்கள் அங்கு பின்னிப் பிணையப் படுகிறது. நியாயம் எல்லோருக்கும் பொதுவாகவே இருக்க வேண்டும். மற்றது நேர்மையாக சிந்தித்தால், 'உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா' என்பதற்கு உண்மையான நேரான பதிலை இங்கு நீங்கள் காணலாம் ? ஒரு கட்டத்தில், சீதை அக்னி பிரவேசம் செய்ய நேர்ந்ததை தெரிஞ்சு, ஊர்மிளா கொந்தளித்தாள். காட்டில் இத்தனை ஆபத்துகள் இருக்குமென எடுத்துச் சொல்லி ராமன் நீ வரக்கூடாது என சீதைக்கு உத்தரவு போட்டிருந்தால், பதிவிரதையான சீதையால் அதை மீற முடியுமா? பாதுகாப்பிற்கு லட்சுமணன், வேலைகளுக்குச் சீதை எனத் தேவைப் பட்டதால் தானே ராமன் பேசாமல் இருந்து விட்டான். அதனால் தானே சீதைக்கு வனத்தில் இத்தனை ஆபத்துகள் வந்ததென - சீதைக்கு தாயாய் இருந்து குமுறுகிறாள். இது உறவின் உண்மை நிலையை எடுத்து காட்டவில்லையா ? இன்னும் ஒரு கட்டத்தில், மாறுவேடம் கொண்டு நகர்வலம் வரும்போது துணி வெளுப்பவனின் பேச்சை கேட்டு, சீதையின்பால் சந்தேகம் கொண்டு அவளை தீக் குளிக்க சொன்னதை கேட்டு ஊர்மிளா வெகுண் டெழுகிறாள். சீதையின் கற்பு பற்றி ராமனுக்கு ஐயமில்லை. ஆனா, ஊரார் எதுவும் அவளை தவறாய் பேசி விடக் கூடாது என்று தான் அக்கினிப்பிரவேசம் செய்யச் சொன்னான் என்று அவளை சமாதானப் படுத்த பலர் முயற்சிக்கையில், ஊர்மிளா ராமனிடம், இன்று ஊரார் பேச்சுக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்று சொல்கிறீர்களே! அன்று அயோத்தி மக்கள் எல்லோரும் நீ வனவாசம் போகக் கூடாது என கெஞ்சினார்களே! அப்போது மக்கள் கருத்துக்கு நீ ஏன் செவி மடுக்க வில்லை? அன்று தந்தைக்குக் கொடுத்த வாக்கு தான் முக்கியமென நினைத்த உனக்கு உன் குடும்பம் தானே முன்னுக்கு நின்றது? இப்போது மட்டும் என்ன மக்கள் பற்றிய கவலை? என கேட்கிறாள். பெண்களின் பல கேள்விகளுக்கு ஆண்களிடம் பதில் இல்லாதது போலவே இதற்கும் பதிலில்லை. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"அன்பின் வெகுமதி"
"அன்பின் வெகுமதி" இலங்கை திருகோணமலை மூன்று மலைகள் சூழ்ந்த வளம் மிக்க திரிகோணம் எனப் பெயர் பெற்ற இயற்கையான துறைமுகம் கொண்ட, பண்டைய நூல்கள் சிலவற்றில் 'கோகண்ண' எனவும் [தீபவம்சம், மகாவம்சம்], திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் சில தேவாரப் பாடல்களில் 'கோணமாமலை' ["குரைகட லோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே"] எனவும் அழைக்கப்பட்ட இடம் ஆகும். இந்த அழகிய கடற்கரை நகரத்தில், அடர்ந்த நீல நிறமுடைய அலைகள் தங்கக் கடற் கரை மேல் நடனமாடியபோது, அதன் ஆழத்தைத் தழுவத் துணிந்தவன் போல், ஆனால் பணிவான மீனவனாக ரவி, தன் சிறிய படகில் இருந்தபடி கடல் அன்னையைத் இரசித்துக்கொண்டு, புத்தி கூர்மையும் உடல் வலிமையும் ஒருங்கே பெற்ற, சூரியன் தினம் முத்தமிட்ட முறுக்கேறிய தோல் மற்றும் நீலக்கல் வானத்தை பிரதிபலிக்கும் கண்களுடன், அவன் அசைக்க முடியாத ஆர்வத்துடன் தனது அன்றைய மீன் பிடிப் பயணத்தை தொடங்கினான். அவன் எண்ணம் எல்லாம் இன்று, வழமைக்கு மாறாக, தான் பிடிக்கப் போகும் மீன்களைப் பற்றி இல்லாமல், அவன் கடந்து வந்த அந்த சந்தையின் ஒரு மூலையில் இருந்த உள்ளூர் கைவினைஞர் ஒருவளின் மட்பாண்ட கடைப் பக்கமே இருந்தது. பட்டை தீட்டப்பட்ட புருவம், கூரிய கண்கள், ஆண்மைக்கே உரிய மீசை, முரட்டுத்தனமான அவனுடைய அதரம், அவனைப்போல அடங்காத அவன் சிகை, அவன் முகத்தில் எப்போதும் ஒரு திமிர் இருக்கும். ஆனால் இன்று அந்த திமிரைக் காணவில்லை. அமரா, கண்ணை உறுத்தாத அழகு, மாநிறதேகம், வில் போன்ற புருவம், மிரட்சியான கண்கள், மொத்தத்தில் அவள் ஒரு அமைதி பூங்கா என்றாலும் தன் கண்ணுக்குள் கடல் ஆழத்தின் மர்மங்கள் போல, என்னென்னவோ எல்லாம் வைத்திருந்தாள். அவள் களிமண்ணை நுட்பமான தலைசிறந்த படைப்புகளாக வடிவமைத்ததால், ஒவ்வொன்றும் அதன் கதையைச் சொல்லாமல் சொல்கிறது. சந்தையின் சலசலப்புக்கு நடுவே, கரைக்கு எதிரான அலைகளின் தாள முழக்கத்தில் அவள் சிலவேளை கவிதைகளும் எழுதி, அதையும் சிறு புத்தகமாக பார்வைக்கு வைத்திருந்தாள். அதில் ஒரு கவிதையும், நிர்வாணமான சிந்துவெளி நடன மாதுவை ஒத்த நுட்பமான வேலைப்பாடு கொண்ட அந்த களிமண் உருவமும் தான் அவனின் இன்றைய மாற்றத்துக்கு காரணமாக இருந்தது. இந்த ஒய்யார களிமண் வார்ப்பு ஒரு கருத்த பழங்குடி பெண் ஒன்றை சித்தரிக்கிறது என்றாலும் அது அவனுக்கு அமராவின் பிரதி போலவே தென்பட்டது. அவள் உடையில்லாது தனது நீண்ட தலை முடியை கொண்டை போட்டு உள்ளாள். இடது கையை வளையல்கள் முற்றாக அலங்கரிக்க, வலது கையின் மேற் பகுதியை ஒரு காப்பும் ஒரு தாயத்தும் அலங்கரிக்கிறது. அவளது கழுத்தை சுற்றி ஒரு வகை சிப்பி அட்டிகை இருக்கிறது. வலது கையை இடுப்பிலும் இடது கையை இறுக்கமாக பிடித்திருப்பதும், அவளின் இடுப்பு கவர்ச்சி யூட்டக் கூடியதாக முன்தள்ளி [முன்பிதுங்கி] இருப்பதும், அவனுக்கு பல எண்ணங்களைப் ஏற்படுத்தியது போலும்! அடுத்தநாள், எதிர்பாராத கனமழை திடீரென காற்றுடன் கொட்டியது. எனவே ரவி அமராவின் களிமண் பாத்திரக் கடையில் ஒதுங்கி, அந்த சிலையை கையில் எடுத்து இரசித்துக்கொண்டு இருந்தான். அமரா அவனையே உற்றுப்பார்த்தபடி, அவன் அருகில் வந்து, அந்த சிலையின் கதையைக் கூறி, அதன் விலையையும் கூறினாள். ஆனால் அவர்களின் கண்கள் சந்தித்தபோது, பிரபஞ்சம் இடைநிறுத்தப்பட்டு, அவர்களின் ஆத்மாக்களுக்கு இடையே கண்ணுக்குத் தெரியாத, இனி நடக்கப்போகும் அவர்களின் விதியின் இழைகளை ஒன்றாக நெய்தது போல் இருந்தது. "எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி. கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட. அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்!" ரவியினது பார்வை அமரா மேல் செல்ல. அவள் கண் ரவி மேல் பாய், இருவரது மனவுணர்ச்சியும் ஒன்றுபட்டு ஒரு தனித்துவமான காதலைக் இருவரும் அவர்களுக்கு தெரியாமலே, விதியின் சதியால் பகிர்ந்தனர் அன்று முதல், நாளுக்கு நாள், அவர்களின் சந்திப்புகள் மெல்ல மெல்ல அதிகரித்து அடிக்கடி நிகழ்ந்தன,. மாறுபட்ட சமுதாயத்தில் இருவரும் பிறந்து வாழ்ந்து வந்தாலும், அவர்களது காதலுக்கு எல்லையே இல்லை. அவர்கள் ஒருவருக் கொருவர் மற்றவரில் ஆறுதல் கண்டனர், வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வு மற்றும் கட்டுப்பாடுகள் மத்தியில் தங்களுக்கு கிடைத்த தருணங்களில் அன்பின் வலிமையைப் ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டனர். அவர்களின் காதல், இருவருக்கும் இடையில் வருங்கால நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறியது, அவர்களின் இதயத்தின் இருண்ட மூலைகளை எல்லாம் பிரகாசமான நாளைய உறுதிமொழியுடன் ஒளிரச் செய்தது. ஆயினும் கூட, அவர்களின் காதல் மலர்ந்தபோது, அவர்களைக் பிரிக்க அச்சுறுத்தும் கொந்தளிப்பான அலைகளைப் போல சவால்கள் வெளிப்பட்டன. சமூக விதிமுறைகள் மற்றும் குடும்ப எதிர்பார்ப்புகளின் கிசுகிசுக்கள் அவர்களின் உறவின் மீது சந்தேகத்தின் நிழல்களை ஏற்படுத்தின. பாரம்பரியத்தில் வேரூன்றிய அமராவின் குடும்பம், ஒரு மீனவருடன் அவளின் உறவின் சாத்தியக் கூறுகளை கேள்விக் குள்ளாக்கியது, அதே நேரத்தில் ரவியின் குடும்பத்தனரும் வேறு சமூக அடுக்குகளை நேசிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்தனர். ஆனால் காதல், கடல் போல இடைவிடாது, சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஆளாக மறுத்தது. அமரா மற்றும் ரவி உறுதியுடன் இருந்தனர், அவர்களின் இதயங்கள் அமராவின் மட்பாண்டங்களை அலங்கரிக்கும் சிக்கலான வடிவங்களைப் போல பின்னிப்பிணைந்தன. தளராத உறுதியுடன், புயலில் நங்கூரமாக மாறிய காதலை கைவிட மறுத்து அலையை எதிர்த்து நின்றார்கள். இதமான காற்று, மிதமான போதை அவர்களுக்கு துணைபோக, மொழியில், வார்த்தைகள் தீராதது போல, அவர்களது கொஞ்சல் பேச்சும் நீண்டு, எல்லா சவால்களையும் மீறி தொடர்ந்தது. அவர்கள் எப்போது இரவில் உறங்கினார்கள் என்பது அந்த இரவுக்கு மட்டுமே தெரியும். கற்பனை அவர்களிடம் உறக்கத்தில் தங்கு தடையின்றி சிறகடித்து பறந்தது. இதுதான் இந்த காதல் பயணத்தின் இனிமையான நேரம் என்பதை அப்போதே அவர்கள் உணர தொடங்கினார்கள். இதுவே இளமை வாழ்வின் மறக்கமுடியாத தருணம் என்பதையும் உணர்ந்தார்கள். அமராவுக்கு சில கவிதைகள் தோன்றின. அந்த பாறையை தொட்டுக் கொண்டு இருந்த தண்ணிரிலேயே எழுதினாள். ஆனால் அலைகள் அவைகளை அபகரித்து சென்று விட்டது. கடல் எப்போதாவது, அதை பிரசுரிக்கும். எங்களைப் போல வருபவர்கள் வாசிக்கட்டும் என்றாள். கவிதை எழுத, தெரிந்து எடுத்த இனிய காதல் வார்த்தைகள் மட்டும் மனதில் நின்று கண்களை வம்புக்கிழுத்தன. அவள் நீரில் மிதந்தாள், நிலத்தில் மிதந்தாள், காற்றில் மிதந்தாள், எதை அடைந்தாள், எதை இழந்தாள், அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை? ஏன் அவன்கூட எதோ கற்பனையில், பாறையில் இன்னும் ஒரு உடைந்த சிறு சுண்ணாம்பு கல்லால் ஒரு கவிதை வரைந்து கொண்டு இருந்தான், அது அழியவில்லை, திருப்ப திருப்ப அதை வாசித்து மகிழ்ந்து கொண்டு இருந்தான். "உப்பு சாப்பிட்ட மென் காற்று உதடுகளை முத்தமிட்டு செல்கிறது! உள்ளம் வருத்தும் காந்த விழிகளில் உயிரைப் பறிகொடுத்துச் சாகிறேன்!" "பஞ்சுப் பாதங்களை நனைக்க மனமின்றி பருத்த அலையும் கடலுக்கு திரும்புது! பள்ளம் மேடு தோண்டும் நண்டுகளும் பதுமை இவளென விழியுர்த்தி பார்க்கின்றன!" "அமராவின் எழிலில் கோபம் கொண்டு அழகிய நிலாவும் முகிலில் மறையுது! அடர்ந்த கூந்தலின் வாசனை முகர்ந்து அடைக்கலம் தேடினேன் அவளின் மடியில்!" எதிர்ப்புகளை எதிர்கொண்டாலும், இருண்ட இரவுகளில் அவர்களை வழிநடத்தும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கைப் போல, அவர்களின் காதல் வழி அமைத்து வலுவடைந்தது. கடுமையான புயல்களை தாங்கள் எதிர்கொண்டு விட்டதாக அவர்கள் நினைத்த போது, அவர்களின் அன்பின் இறுதி சோதனையை விதி அவர்களுக்கு வழங்கியது. நாளை பெப்ரவரி 14 , மீண்டும் சந்திப்போம் என்று பிரிய மனமின்றி அவள் விடைபெற்றுச் சென்றாள். ஆனால் அவனுக்கு பெப்ரவரி 14 ஒன்றும் பெரிதாக்கத் தெரியவில்லை, என்றாலும் 'கட்டாயம்' என்று கூறி அவனும் தன் வீடு நோக்கி புறப்பட்டான். அமரா அவன் திருப்ப திருப்ப இரசிக்கும் அந்த நடன மாது சிலையையும் அத்துடன் சிவப்பு ரோஜாக்களின் ஒரு மலர்க் கொத்தையும் எடுத்துக் கொண்டு நேற்று இருவரும் அமர்ந்து இருந்த அந்த பாறைக்கு தேவதை போல், தெரிந்து எடுத்த அழகான உடையில் வந்தாள். அவன் ஏற்கனவே காடுகளிலும் மற்றும் பாதைகளிலும் காணப்படும் ஒரு வெள்ளை நிற காட்டு ரோஜாவுடன் மட்டும், சாதாரண, ஆனால் சீரான உடையில் அமர்ந்து இருந்தான். அவனைப் பொறுத்தவரை, அன்பிற்கு வெகுமதி இல்லை. அன்பு அன்பிற்காகவே செய்யப்படுகிறது! "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' நேசிப்பது கொடுக்கல் வாங்கல் அல்ல, அதனால் தான் அவன் வெறும் காட்டு ரோஜாவுடன், ஆனால் வெள்ளை மனத்துடன் அங்கு காத்திருந்தான். காதல் வாழ்க்கை - அன்பின் பெரிய வெகுமதிகள்! பலர் தவறாகப் புரிந்து கொள்வது போல் காதல் அது உணர்வு அல்ல. அன்பு ஒரு கட்டளை. அன்பின் மிகவும் விரும்பப்படும் பரிசு வைரங்கள் அல்லது ரோஜாக்கள் அல்லது சாக்லேட் அல்ல. இது ஒருவர் மேல் தனிக் கவனம் செலுத்துதல் ஆகும். இதுவே அவனின் தத்துவம்! ஆனால், அமரா அன்பை, காதலை அவனை மாதிரி நினைக்கவில்லை. அன்பை, பரந்து விரிந்து பெருங்கடலுடனும், கோபத்தை ஊதும் போது பெரிதாகி பட்டென்று வெடித்து விடும் பலூனுடனும் பலர் ஒப்பிடுவார்கள். அப்படித்தான் அவள் இருந்தாள். அவன் உண்மையான பாசத்துடன் கொடுத்த அந்த வெள்ளை ரோசாவின் ஐந்து இதழ்களையும் பிடிங்கி எடுத்து கசக்கி கடலின் அலைக்குள் தூக்கி வீசினாள். அவன் அப்படியே மலைத்துப்போய் மௌனமாக அவளைப் பார்த்த படியே இருந்தான். அவள் அக்கம் பக்கம் எங்கும் பார்த்தாள். தான் கொண்டு வந்த காதலர் தின பரிசை இன்னும் அவளே வைத்துக்கொண்டு இருந்தாள். ஒரு பேரழிவுகரமான சுனாமி போல அந்த கடலோர நகரத்தின் கடற்கரையை தன் கண்ணால் வலம் வந்தாள். அங்கே கொஞ்சம் தள்ளி, அவளின் சொந்த மச்சானும் பிரசித்திபெற்ற கணித ஆசிரியருமான 'கவி' கடல் அலையை இரசித்த வண்ணம் இருப்பதைக் கண்டாள். கோபத்தின் திடீர் எழுச்சியில், அவள் தன்னை மறந்தாள். அழிவைத் தரும் குழப்பம் மற்றும் விரக்தியின் மத்தியில், தான் என்ன செய்கிறேன் என்பதை மறந்தாள். ரவியை உடனடியாக விட்டு விலகி கவி நோக்கி அந்த காதல் பரிசுடன் புறப்பட்டாள். ரவி ஒன்றும் சொல்லவில்லை. நடப்பது நடக்கட்டும், கிடைப்பது கிடைக்கட்டும் என்று அப்படியே இருந்துவிட்டான்! 'அன்பு' என்பது வேறு; 'அன்பு காட்டுவது' என்பது முற்றிலும் வேறு என்பதை முற்றாக புரிந்தவன் அவன்! நிபந்தனையின்றி அன்பைக் கொடுக்கும் போது, நாம் ஏற்கனவே வெற்றி பெறுகிறோம். அதாவது, அன்பின் உணர்வு, அதை வேறொருவருக்குக் கொடுக்கத் தேர்ந்தெடுக்கும் போது நமக்கு ஏற்படுகிறது. அன்பின் அனுபவம் அதைக் கொடுக்கும் போது ஏற்படுகிறது. வேறொருவர் நம்மைப் உண்மையில் புரிந்து பிடிக்கும் வரை அல்லது உண்மையில் நேசிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. நம் அன்பைக் கொடுப்பதற்காக அது நடக்கும் வரை நாம் காத்திருந்தால், நாம் நிபந்தனையுடன் நேசிக்கிறோம். இப்படித்தான் அவன் மனம் அவனுக்குள் வாதாடிக் கொண்டு இருந்தது. அவன் உண்மையில் பாசத்துடன் அமராவை புரிந்து காதலிக்கிறான். அதனால்த் தான் அவளின் செய்கையை அவன் பொருட்படுத்தவில்லை. "அன்பின் வெகுமதி, பெருமதி எல்லாம் புன்னகையுடன் சேர்ந்த அன்பின் கருணையே!" ஆனால் அந்த கோபம் என்ற பலூன் மதியை அடையும் முன் வெடித்து சிதறிவிட்டது. அவள் அங்கிருந்து திரும்பி ரவியை பார்த்தாள், அவன் இன்னும் அவள் கசக்கி எறிந்த காட்டு ரோஜாவின் இதழ்களை ஒன்று ஒன்றாக அலைகளில் இருந்து பொறுக்கி எடுத்து ஒன்றாக சேர்த்து பார்த்துக் கொண்டு இருந்தான். அவளிடம் இப்ப அவனின் காதலில் முழு உறுதி மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டது , அவள் மீண்டும் ரவியுடன் இணைவதற்கான பயணத்தைத் திரும்பித் தொடங்கினாள், அவளின் ஒவ்வொரு அடியும் உண்மையான அன்பின் வெகுமதியை நினைவூட்டியது. அதே பாறையின் மேல் கைகோர்த்து, அவர்கள் ஒரு புதிய விடியலினை நோக்கி நின்றார்கள், இது உண்மையில் அவர்களின் காதல் பக்தியின் நீடித்த சக்திக்கு ஒரு சான்றாகும். ஏனென்றால், திருகோணமலையின் இதயத்தில், அலைகள் காதலின் வெற்றியின் கதைகளை கிசுகிசுத்தன, அமராவும் ரவியும் அவர்களின் மிகப் பெரிய வெகுமதியைக் கண்டனர் - இது நேரம், இடம் மற்றும் கடலின் ஆழங்களைக் கடந்த காதல்! அந்த பெரும் மகிழ்வில், ரவி, அவனுக்கு பிடித்த அவளின் கவிதையை கடல் அலைகளின் மற்றும் மீன்களை பிடிக்க வட்டமிடும் நாரை, கொக்கு போன்ற புள்ளினங்களின் ஓசையுடனும் சேர்ந்து அவளுக்கு கேட்கக் கூடியதாக முணுமுணுத்தான். அவளும் அவனுடன் சேர்ந்த தன்னுடைய கவிதையை ராகத்துடன் பாடினாள். "ஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே!" "அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறது, அங்கே நிம்மதி கிடைக்கிறது, இங்கே வேதனை வலிக்கிறது, அன்பே!" "யார் யாரோ, ஒவ் ஒருவருக்கும், ஒரு கதை சில வலியை கூறும், சில சிறப்பை கூறும், அன்பே!" "எவரடி பூமியில் இன்று, பயம் கொள்ளா மனிதன்? சிலர் அழுவார், சிலர் அழுதுகொண்டே சிரிப்பார் அன்பே!" "வெவ் வேறு கட்டத்தில், எம்மை திட்டி சாணமும் பூசுவார்கள். வெவ்வேறு கட்டத்தில், போற்றி பதக்கமும் தருவார்கள், அன்பே!" "எங்களுக்கும் ஒரு காலம் வரும், ஒரு வாழ்வு வரும், மேலே உயர்ந்து நாம் வானத்தையும் தொடுவோம், அன்பே!" "காலம் கைவிட்டால், தொட்டது எல்லாம் வசை பாடும், தோல்வியின் கால் அடியில் குப்பற விழுவோம், அன்பே!" "ஒவ் வொருவர் வாழ்விலும் இன்பமும் துன்பமும், அது ஒரு கனப் பொழுது, எம்மை ஆட்டிப் படைக்கும் அன்பே!" "ஒவ் வொரு கதைக்கும், தொடக்கமும் முடிவும் உண்டு, அது நேராக அல்லது வளைந்து செல்லும், அன்பே!" "உனது கதை எந்த வழி, நீ அறிவாய் புளிப்பும் இனிப்பும் கலந்த கலவையடி அன்பே!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" / "The corpses that fighting against 'Genocide' are asking"
"படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" "வாருங்கள், வந்து கை கொடுங்கள்- இமைகள் மூடி பல நாளாச்சு மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்- வரிசையாய் வருங்கள் பல சடலங்கள் தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்- கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன" "நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்- நங்கை இவள் உண்மை உரைத்ததால் முலையை சீவினான் கொடூர படையோன்- வஞ்சி இவள் காமம் சுரக்காததால் கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்- அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க" வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்- இடையில் சின்னஞ் சிறுசு சில ஆயிரம் முழங்கினர், கதறி கண் முன் வந்தனர்- விசாரணை எடு- உண்மையை நிறுத்து கூடுங்கள், ஒன்றாய் உண்மையை உரையுங்கள்- படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] "I am not able to sleep Somebody Please help me When I close my eyes Only many corpses come And unable to answer the questions arise by the corpses that come I am not able to sleep" "Those who have the answers Please help To bury the innocent corpses within my eyes Is an impossible task for me. I leave this to you, itself. One by one all the Corpses…" "Look closely the tongue of one has been sliced away For having told the truth For another the breast has been sliced off For refused to make love with notorious groups The corpses that come Every one of them Scream with questions In the line of these corpses , I found many kids " "The voices of those Who became corpses by fighting against 'Genocide' Are destroying My sleep ‘Bring the truth. expose the truth. Take action ... Now… Now…’ From now I cannot sleep Those with answers Come and Help me " [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
-
"யாரோ? நான் யாரோ ?"
"யாரோ? நான் யாரோ ?" "தெருவோர மதகில் இருந்து ஒருவெட்டி வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும் செய்யா கருங்காலி தறுதலை நான்" "கருமம் புடிச்ச பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும் குனிந்து விலக எருமை மாடு நான்" "வருடம் உருண்டு போக வருமாணம் உயர்ந்து ஓங்க கருணை கடலில் மூழ்க மிருக-மனித அவதாரம் நான்" "தருணம் சரியாய் வர இருவர் இரண்டாயிரம் ஆக ஒருவர் முன் மொழிய தரும-தெய்வ அவதாரம் நான்" "ஊருக்கு கடவுள் நான் பாருக்கு வழிகாட்டி நான் பேருக்கு புகழ் நான் பெருமதிப்பு கொலையாளி நான்" "குருவிற்கு குரு நான் குருடருக்கு கண் நான் திருடருக்கு பங்காளி நான் கருவிழியார் மன்மதன் நான்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
கடவுள் இருக்கிறாரா.............?
'குமாரசாமி' க்கான பதில் தொடர்கிறது" ஒன்று மட்டும் உண்மை அந்த சத்திக்கு ஒரு விளிம்பு இல்லை. இயற்பியல் எல்லை இல்லை - சுவர் இல்லை, எல்லை இல்லை, விளிம்புகளைச் சுற்றி வேலி இல்லை. ஆனால் அதை கடவுளாக்கி, உருவம் கொடுத்து , சமயம் என்ற வேலி போட்டு, ஒவ்வொருவரும் தங்கள் எல்லையை பெரிதாக்க, எத்தனையோ தந்திரங்கள், ஏமாற்றுக்கள், பயமுறுத்தல், பரிசளிப்புக்கள் , உதவிகள் என வேஷம் போட்டு , தங்கள் எல்லைக்குள் இழுப்பதை இன்று காண்கிறோம். உதவிக்கரங்கள் ரத்தம் படிந்தவை யாகின்றன . கொல்லுவது மட்டும் ரத்தம் படிவதில்லை, அவனின் , மொழி, பண்பாட்டை மறக்கச் செய்வதும் அப்படியே. நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக்கொண்டால், சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்ட தமிழ் பரவர் அல்லது பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் 20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும். எனவே தமிழர்கள் நாளடைவில் ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். அதாவது தமிழர் என்ற ஒரு இனமே அங்கு சாக்கடிக்கப் பட்டது. இந்த இனப்படுகொலைக்கு காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்! பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!! அவர் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கற்கை மொழியாக இருந்த தமிழ் மொழியை அகற்றி விட்டு சிங்களத்தை புகுத்தினார். இதன் விளைவாக தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களக் கத்தோலிக்கர்களாக மாற்றம் அடைந்தனர். [This historic process was embraced by the educational policies of a local Bishop Edmund Peiris who was instrumental in changing the medium of education from Tamil to Sinhalese] எல்லாம் இந்த கடவுளின் செயலோ??
-
கடவுள் இருக்கிறாரா.............?
இடையூறு ஒன்றும் இல்லை பிரபஞ்சத்துக்கு இன்றைய எம் நிலையில் [முப்பரிமாண உலகம்], அறிவில், எல்லை இது தான் என வரையறுக்கமுடியாது. பிரபஞ்சம் 45 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் செல்கிறது. என்றாலும் இன்னும் அது வரையறுக்கப்பட்டதா அல்லது எல்லையற்றதா என்பதை அது எமக்கு இன்னும் சொல்லவில்லை. அதற்கு அப்பால் என்ன என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது? ஒன்று நிச்சயம்: பிரபஞ்சத்திற்கு ஒரு விளிம்பு இல்லை. இயற்பியல் எல்லை இல்லை - சுவர் இல்லை, எல்லை இல்லை, பிரபஞ்சத்தின் விளிம்புகளைச் சுற்றி வேலி இல்லை. அப்படித்தான் மனிதனை மீறிய சக்தி ஒன்று இருக்க இல்லையா என்ற கேள்வியும் விடை இல்லாமல் தொடர்கிறது. ஆனால் அதற்காக, அதற்கு ஒரு உயிர் கொடுத்து, உருவம் கொடுத்து, பெயர் கொடுத்து, கொள்கை கொடுத்து சமயங்கள் உண்டாக்குவதால், பிரச்சனை வளருமே ஒழிய தீராது. "அன்றும் திரு உருவம் காணாதே ஆட்பட்டேன் இன்றும் திரு உருவம் காண்கிலேன் - என்றும் தான் எவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட்கு என் உரைக்கேன் எவ்வுருவோ நின் உருவம் ஏது." மிகவும் எளிய பாடல் இது. அன்று உன் திரு உருவம் காணாமலே உன் மேல் காதல் கொண்டேன். இன்றும் உன் திரு உருவம் காண்வில்லை என்னிடம், "உன்னுடைய தலைவனின், இறைவனின் உருவம் என்ன " என்று கேட்பவர்களுக்கு நான் என்ன சொல்லுவேன் என்கிறது இந்த பாடல் அதாவது மனிதனை மீறிய சக்தியை, சத்தியாகவே நிறுத்திவிட்டார். அதைத்தான் என்னால் இன்று கூற முடியும். அதை கடவுளாக்கி , உருவம் கொடுத்து, பிரச்சனைகளை, அடிபிடிகளை வளர்ப்பதால் உண்மையான மனிதனுக்கு பிரயோசனம் இல்லை உதாரணமாக, யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி, பின் கிறிஸ்தவ மதப் போதகர், உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல, இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை.- பைபிளுடன் தொடங்கு, அது வெற்றி தரவில்லை என்றால், வாளை பாவி என்பதாகும் - அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராம வாசிகளை, ஞாயிற்றுக் கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போகவைத்தது. இது ஒரு சிறு உதாரணமே. ஆகவே தான் சத்தியை, அதை முழுதாக அறியும் மட்டும் அதை 'மனிதனை மீறிய சக்தி'யை விட்டுவிடுவோம் நன்றி
-
"ஈரம் தேடும் வேர்கள்"
இணைப்பதில் பிரச்சனை இல்லை ஆனால் எந்த தலையங்கத்தில், எந்த வடிவில் ['கவிதை, கதை, கட்டுரை] விரும்புகிறீர்கள் / விரும்புவார்கள் என்று கூறினால், எனக்கு இலகுவாக இருக்கும் . நான் சில தலையங்கம் கீழே தருகிறேன் நான் எழுதி பதிவிட்ட சில குறுகிய கட்டுரைகள் / Short articles .......................................................................................................... தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது? "இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு" "Churning the Milky Ocean" "பால் கடல் கடைதல்" "தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" / சைவநீதி / பொங்கல் விழா மலர்-2016,கனடா இந்து மாமன்றம் "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு" - ஒரு விளக்கம் ஆட்டக்கலை / பரத நாட்டியம் classical dance / 'Bharatnatyam' ஒப்பனையியல் / அழகுக் கலை cosmetology முதலாவது எழுதப்பட்ட சட்டம் First Written Laws மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை Beer & Women -From Sumeria To Sangam Tamil Land "அருவமான,பெயரற்ற ஒன்றே கடவுள்" "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?" சூரனை சங்காரம் செய்தவன் முருகனா ....? பூக்களின் அழகை வண்டுகளே அறியும் Love story of Sangam lovers: Athimanthi - Attanathi "சங்க கால இ லக்கிய காதல ர் கள்: ஆதிமந்தி - ஆட்டனத் தி" எந்த ஊர் போனாலும் … நம்ம ஊர் போலாகுமா? [அத்தியடி, யாழ்ப்பாணம், இலங்கை] அனுராத புரத்தில் தமிழர் "GENOCIDE" இனப்படு கொலை "One man's terrorist is another man's freedom fighter." உலகின் முதலாவது பதியப்பட்ட நீதிமன்ற பதிவு World first court records "May Day" / "International Workers' Day" "மே தினம் / தொழிலாளர் தினம்" "உயிரே போனாலும் பெண்களை விடமாட்டோம் என்னும் சபரிமலை பக்தர்களுக்கு... " "Different type of "Water reservoirs" "பல வகை நீர் நிலைகள்" எனது பார்வையில் சிவன் உறையும் கைலாய மலை எனது பார்வையில் 'ஓம்' [ௐ] கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகள் 'ஆண்டாள் மாலை' உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா? பூச்சிய உடல் அளவு பண்பாடு [Size zero culture] ✓ முதியோருடன் ஒரு அலசல்: "காதும் கேட்டாலும்" "முதியோர்களின் வாழ்வின் சில நிகழ்வுகள்" / உராய்வு "மன்னிப்பு" வாழ்வைப் பற்றிய சைவ நோக்கம் நான் எழுதி பதிவிட்ட சில மிக மிக நீண்ட தொடர் கட்டுரைகள் / Long Articles [அதிகமானவை 20 - 30 பகுதிககள்] ....................................................................................................... தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] Origins of Tamils? [Where are Tamil people from?] தமிழரின் உணவு பழக்கங்கள் FOOD HABITS OF TAMILS 'Story or History of writing' 'எழுத்தின் கதை அல்லது வரலாறு' An analysis of history of Tamil religion "தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் சமுதாயம்] 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும் "The truth & false in Mahavamsa and the historical & scientific evidences" "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" மொழியின் தோற்றம்: மொழி எப்போது தொடங்கியது? எவ்வாறு உருவானது? நான் எழுதி பதிவிட்ட சில நீண்ட தொடர் கட்டுரைகள் / Long Articles [அதிகமானவை 2 - 4 பகுதிககள்] ............................................................................................. தை மாதம்{mid of January} ஒரு சிறப்பான மாதம்! Thai[mid of January] is a special month for Tamils! Jallikattu-An ancient Tamils bull taming sport ஜல்லிக்கட்டு-ஒரு வீரமிக்க பண்டைய தமிழர் விளையாட்டு "ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை" Irrigation of Ancient Tamils,Mesopotamia to South India "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?" Do we need to celebrate Deepavali and Deify Rama as God? FORGET GOD[RELIGION] FOR THE TIME BEING;AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!” ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! Is Saivism the same as Hinduism[vaidika-dharma ] or is it a different one? சைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா?அல்லது வேறா? "மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் "Crimes against humanity "முதுமையில் தனிமை" விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்? கொரோனா வைரஸ் / வரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா ? வரலாறு கற்பித்த பாடங்களை பின்பற்றுகிறோமா ? கடன் [கி மு 3000 ஆண்டில் இருந்து] "ஒருபால் திருமணம்" "same-sex marriages" "பிள்ளைகளின் வளர்ப்பு முறையில் ஆண்பிள்ளைகளுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் காட்டும் வேறுபாடுகள்" "தோஷமும் விரதமும்" முதியோருடன் ஒரு அலசல்: மனித பார்வை "மிருகங்களில் இருந்து மனிதர்கள் கற்கவேண்டியவை" 'குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' "தமிழர்களின் பண்டைய நான்கு கல்கள்" முதியோருடன் ஒரு அலசல்: நினைவாற்றல் இழப்பு "உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல்" "அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" கவிதைகள் & கதைகள் பலவிதமாக உள்ளது நன்றி
-
"சொர்க்கம் போக ஆசை பட்டேன்!"
"சொர்க்கம் போக ஆசை பட்டேன்!" "சொர்க்கம் போக ஆசைப் பட்டேன் சொர்ண சுந்தரியை சற்று மறந்தேன் பார்ப்பனன் இடம் மண்டி இட்டேன் வேர்த்து ஒழுக பிரதட்டை செய்தேன் !" "ஊர் பெரியாரைக் கும்பிட்டு கேட்டேன் தர்மமும் தானமும் செய் என்றான் ஏர் பிடித்தவனைக் கேலியாய்க் கேட்டேன் தர்மமும் தானமும் மிஞ்சியது என்றான் !" "தூர்ந்த கேணியை திருத்திக் கட்டினேன் தேர்த் திருப்பணிக்கு அள்ளிக் கொடுத்தேன் தர்ம சாலை கட்டித் திறந்தேன் ஊர்ப் பலகையில் பெயரும் போட்டேன் !" "மார் தட்டி சத்தம் போட்டேன் கார் அனுப்பி கூட்டம் சேர்த்தேன் மோர் ஊற்றி விழா நடத்தினேன் சீர் திருத்த அறிக்கை விட்டேன் !" "கார் காலம் கோடை ஆக தேர்தல் ஒன்று நாட்டை சூழ சேர்த்த காசு விளம்பரமாய் மாற ஊர்த் தலைவன் பதவி எனக்கு !" "வர்ணம் பல நாட்டில் மாற கர்ணம் அடித்து கட்சி தாவி தர்ம கட்டளைக்கு மந்திரி ஆகி வேர்வை சிந்தா பணக்காரன் இப்ப !" "ஆர்த்தி எடுத்து எனக்கு வரவேற்பு மூர்த்தி வழிபாட்டில் எனக்கு தனியிடம் ஊர்த்தி பவனியில் எனக்கு முதலிடம் கீர்த்தி பெருமை எனக்கு தண்ணீர் !" "சொர்க்கம் போக இப்பவும் ஆசை தூர்ந்த கனவை தூசு தட்டுகிறேன் பார்த்து ரசித்து புராணம் படிக்கிறேன் நேர்த்திக் கடனாய் காவடி ஆடுகிறேன் !" "மர்ம சாமியார்கள் புடை சூழ ஊர் வலம் சென்று ஆசீர்வதித்து நேர்மை பற்றி பிரசங்கம் செய்து சர்ச்சை இல்லாமல் களவு செய்கிறேன் !" "ஊர்வசி திலோத்தமை ஆட்டம் காண பார்வதி துணைவனுடன் சொந்தம் கொள்ள சொர்க்க லோகத்திற்கு தலைவன் ஆக அர்த்த ராத்திரியிலும் பஜனை செய்கிறேன் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"ஈரம் தேடும் வேர்கள்"
"ஈரம் தேடும் வேர்கள்" "கடலின் அலைவந்து கரையில் விளையாடும். கரிய முகில் வந்து மலையில் சதிராடும். கடலின் இளங்காற்று எமது தலைசீவும். தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும் கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக் கோண மலையெங்கள் வீடு." என மார்புதட்டி பெருமையாக வாழ்ந்தவர் தான், முன்னைய கணித ஆசிரியை கண்மணி என்ற மூதாட்டி ஆகும். இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான திருகோணமலையில், உயர்ந்து நிற்கும் சிவனின் சிலையை முன்னுக்கு கொண்டிருக்கும் திருக்கோணேஸ்வரத்திற்கு அண்மையில் இவரின் வீடு இருந்தது. கண்மணி தனது அறிவு மற்றும் சிரமங்களைத் தாங்கும் அல்லது விரைவாக அதில் இருந்து மீளும் விரிவாற்றலுக்கும் அறியப்பட்டார், வாழ்க்கையின் பல பருவங்களை அல்லது கட்டங்களை எதிர்கொண்டவர் . அவளது சுருக்கம் விழுந்த முகமும் வெள்ளை முடியும் எண்ணற்ற அனுபவங்களையும் கதைகளையும் அவள் இதயத்திற்குள் சுமந்து கொண்டு இருக்கின்றன. கண்மணிக்கு இன்று நேற்று இல்லை, பல ஆண்டுகளாக இயற்கையோடு ஒரு தனிப் பிணைப்பு என்றும் இருந்தது. அவள் தன் ஓய்வு நாட்களை தோட்டத்தைப் பராமரிப்பதிலும், செடிகளையும் பூக்களையும் கனிவான கவனத்துடன் வளர்ப்பதிலும் ஆர்வமாக இருந்தாள். அவளுக்குப் பிடித்த தாவரங்கள் ஆழமான வேர்களைக் கொண்டவை, அவை செழிக்கத் தேவையான ஈரப்பதத்தைக் கண்டறிய மண்ணுக்கு அடியில் நீண்டிருந்தன, ஈரம் தேடும் வேர்களாக. இலங்கையில், வடக்கு கிழக்கில் அன்று நிலவிய ஒரு போர் சூழ்நிலை மற்றும் அடக்குமுறைகளில் கண்மணி தன் கணவரை இழந்தார். அதனால் மிகவும் பயந்துபோன கண்மணி, தன் மூன்று இளம் பிள்ளைகளையும் வெளிநாட்டுக்கு படிப்பிற்காகவும் மற்றும் பாதுகாப்புக்காகவும் அனுப்பிவிட்டார். தான் தனித்துப்போவேன் என்று அவள் சிந்திக்கும் நிலையில் அப்ப கண்மணி இருக்கவில்லை. அவள் எண்ணம் செயல் இரண்டும் பிள்ளைகள், பிள்ளைகள், பிள்ளைகள், அது மட்டுமே! வருடங்கள் செல்ல செல்ல, கண்மணி தன் சொந்த வாழ்க்கைக்கும் தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும் ஒரு தொடர்பு இருப்பதைக் கண்டார். ஈரத்தைத் தேடும் வேர்களைப் போலவே அவளும் வாழ்வு மலர.. வாசணை துளிர.. வேதனை மறைய..சந்தோஷங்கள் நிறைந்த நேரத்தை தேடும் ஏக்கம் இருப்பதை அவள் உணர்ந்தாள். பிள்ளைகள் அருகில் இல்லாதது இப்ப பெரும் குறையாகவே அவள் உணர்ந்தாள். பிள்ளைகள் எத்தனைப் பணம் அனுப்பினாலும், வசதிகளை அமைத்து கொடுத்தாலும், அவள் எதையோ இழந்து தவிப்பது தெரிந்தது. ஈரத்தைத் தேடும் வேர்களைப் போல, நேரடியான பாசம், அன்பு ... என்ற ஈரங்களை தேடி மனம் அலைந்து கொண்டே இருந்ததை அவள் உணர்ந்தாள். ஒரு கோடை நாளில், கண்மணி தனது தோட்டத்தில் அமர்ந்திருந்த போது, ஒரு இளம் மரக்கன்று வறண்ட மண்ணின் மத்தியில் வளர போராடுவதைக் கண்டாள். அது பலவீனமாகவும் வாடிப்போகக் கூடியதாகவும் தோன்றியது, அதனால் உயிர்வாழத் தேவையான ஈரப்பதத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும் அந்த மரக்கன்று பிடிவாதமாக அதன் வேர்களை தரையில் ஆழமாக நீட்டிக்கொண்டு இருப்பதைக் கண்டாள். அந்த மரக்கன்றின் உறுதி கண்மணிக்கு ஒரு தெம்பை கொடுத்தது. கடினமான அல்லது சவாலான வாழ்க்கை அனுபவங்களை வெற்றிகரமாக மாற்றியமைக்கும் மரக்கன்றுகளின் செயல்முறையால் [மீள்தன்மையால்] ஈர்க்கப்பட்ட கண்மணி, தானும் அப்படியான ஒரு கண்டுபிடிப்புக்கான பயணத்தைத் தொடங்க முடிவு செய்தார். வேர்கள் தண்ணீரைத் தேடுவதைப் போல, அவளும் தனக்கான நேரடி ஆதாரங்களைக் கண்டு பிடிக்க ஏங்கினாள். கையில் ஒரு கைத்தடியை [வாக்கிங் ஸ்டிக்கை] எடுத்துக் கொண்டு கொண்டு, தன் ஆர்வத்தாலும், அசையாத உள்ளத்தாலும் வழிநடத்தப்பட்ட அவள், போரினால் கடுமையாக பாதிக்கப்படட, திருகோணமலையின் ஒரு எல்லைக்கிராமமான முல்லைத்தீவு சென்றாள். அவள் கிராமத்தின் பழக்கமான எல்லைகளைத் தாண்டிச் சென்றபோது, கண்மணி பல்வேறு சவால்களையும் தடைகளையும் பாதுகாப்பு படையிடம் மற்றும் புலனாய்வு அலுவலர்களிடம் எதிர்கொண்டார். வாழ்க்கை அடிக்கடி அளிக்கும் கஷ்டங்களையும் சோதனைகளையும் அவள் அறிவாள். எனவே தன் ஒவ்வொரு அடியிலும், கண்மணி உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் வலுவாக தன்னை திடப்படுத்திக் கொண்டார். தனது பயணத்தில், கண்மணி, பெற்றோர் இல்லாத பிள்ளைகளையும், கணவன் இல்லாத ஒற்றைத் தாய்களையும், கை அல்லது கால் இழந்த ஆண்களையும் கண்டார். என்றாலும் அந்த வேதனையிலும், இழப்பிலும் கஷ்டத்திலும் கூட அவர்களின் அன்பை, ஆதரவான பேச்சை பார்த்து , கேட்டு அதிசயப் பட்டாள். அங்கு ஈரத்தை கண்டாள்! அது அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்ததுடன், தன் தேடல் வெற்றி அடைந்ததை உணர்ந்தாள். எதை தேடினாலோ அது அங்கு கிடைத்தது. அவள் இதயம் அந்த ஈரத்தில் நனைத்தது! தன்னிடம் உள்ள பணம், வசதிகளை முதலீடாக அமைத்து, கண்மணி அங்கே ஒரு அநாதை இல்லம் அமைத்து, அவர்களுக்கு சேவை செய்ய முடிவு எடுத்தாள். அவளை சுற்றி குழந்தைகள் முதல் வயதானவர்கள் இருந்தனர். அவள் தேடிய நேரடிப் பாசம், அன்பு, துணை என்ற ஈரங்கள் அவளை நனைத்து மகிழ்வைக் கொட்டிக்கொண்டே இருந்தன! ஈரப்பதத்தைத் தேடும் வேர்கள் தங்கள் சுற்றுப்புறங்களுக்குத் தகவமைத்துக் கொள்வது போல, அதாவது, புற மாற்றங்களுக்கேற்ப ஒர் உயிரி தன்னை மாற்றியமைத்துக்கொள்ளல் போல, ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் அனுபவங்களை மாற்றியமைத்து கற்றுக் கொள்ளவதுடன், ஏற்படும் சவால்களைத் எதிர்த்து, வாழ்வு மலர தேவையான ஆதாரங்களைக் தேடிக் கண்டறியவேண்டும் என்ற தன் அனுபவத்தை மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக கண்மணி பாட்டி தனது எண்பதாவது அகவையிலும் வாழ்ந்துகொண்டு இருக்கிறாள். ஈரம் தேடும் வேர்களைப் போலவே, அவள் தன் சொந்த ஆவியையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் தொடர்ந்து வளர்த்து, வாழ்க்கைத் தோட்டத்தில் அழகாக மலர்ந்துகொண்டு இருக்கிறாள்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"சூரனை சங்காரம் செய்தவன் முருகனா ?"
"சூரனை சங்காரம் செய்தவன் முருகனா ?" [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப் பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்ய வில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை விமர்சியுங்கள்!] இந்திய உப கண்டத்தை ஆண்ட ஆரியர்கள், இந்தியாவில் ஒரு பகுதியை ஆண்ட சூரன் என்ற அரசனை அழித்த கதையை "சூர சம்ஹாரம்" என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். அவ்வாறு சூரனை அழித்த ஆரியக் கடவுளான சுப்பிரமனியனும், முருகனும் ஒருவரா? இதற்கு மறுமொழி தரும் முன் ,"சூரன்", "அசுரர்", "சுப்ரமணியன்". "ஸ்கந்தன்", "முருகன்" என்றால் என்ன என பார்ப்போம். சுரன் – வீரமிக்கப் போர் வீரன், அறிஞன் "அசுர" என்றால் "வலிய" அல்லது "அதிகாரமுடைய" என்று பொருள் "அசுரர்" என்றால் "தலைவர்"“மூர்க்கத்தனமான காட்டுமிராண்டி மக்களான ஆரியர்கள் இந்தியாவில் படை யெடுத்த போது பதிலுக்கு அவர்களைத் தாக்கியவர்களை [அரசனை] அசுரர்கள் என்று அழைத்தனர். புராணக் குறிப்புகளில் இவர்களை ஆரம்பத்தில் மனிதர்களாக குறிப்பிட்டனர். பின்னர் எதிரிகள் என்றனர். பின்னர் பூதாகரமான உருவங்களோடும் பூதங்களோடும் இணைக்கப் பட்டனர். மேலும் வரலாற்று ஆசிரியர்கள் பி.டி.சீனிவாச அய்யங்காரிலிருந்து பண்டித ஜவகர்லால் நேரு, விவேகானந்தர் உள்பட கூறியிருப்பது எல்லாம் - இந்த அரக்கர்கள், அசுரர்கள் என்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் தான். முருகன் என்றால் அழகன். முருகு -- அழகு, இளமை [முருகு விம்மிய மொய் குழலேழை (சீவ.)]. அக் கால தமிழர்கள் போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய, “இளமை’ கடவுளை வணங்கினர். அக்கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள் பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட [தமிழ்] பெயர்கள் வழங்கப்பட்டன. அக்கடவுள், வட இந்தியர்கள் வணங்கிய போர் கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது. தொன்மையான பழந்தமிழ் சங்க இலக்கியத்தில் பரிபாடல் நூலில் முருகன் என்ற தமிழ்க் கடவுள் பெயர்தான் வழங்கப்பட்டிருக்கிறது. அழகானவன் என்ற அர்த்தத்தில் அவனை ஒரு மலைக்கடவுளாக வணங்குகிறது தமிழ்க்குடி. சுப்ரமணியன், கந்தன் ... இவையெல்லாம் ...? வடமொழிக் கதைகளில் / புராணங்களில் தான் முதலில் காண்கிறோம். உதாரணமாக, வால்மீகி இராமாயணத்தில் "சிவன் பார்வதியை புணர்ந்தது" என்று தலைப்பெயர் கொண்ட 36ஆம் சருக்கத்திலும், "குமாரசாமி உற்பத்தி" என்கின்ற 37ஆம் சருக்கத்திலும் காணப்படுகின்றது. அப்படியே சுப்ரமணியரும். ஆரம்பக் காலங்களில் இந்தியாவில் வடக்கு தெற்கு என்ற பாகுபாடுகள் இருந்தது கிடையாது. இந்தியா முழுமையுமே தமிழ் பேசும் மக்களே [திராவிட மக்களே] நிறைந்து இருந்தனர். இதற்கு இந்து சம வெளி நாகரிகம் ஒரு எடுத்துக்காட்டு. அவர்கள் லிங்கமும் யோனியும் போன்ற உருவ அமைப்பை வணங்கியதிற்க்கான ஆதாரங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. மனித வாழ்வில் பாலியலும் ஒரு பகுதியாக இருப்பதால் இனப் பெருக்கத்தின் அவசியம் காரணமாக அப்படி அமைக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் சிவன் அல்லது பசுபதி , "ஆமுவான் / Ahmuvan" போன்ற கடவுளரும் இருந்துள்ளனர். சிவா என்பது ஒரு திராவிட சொல். அது சிவந்த அல்லது கோபத்தை குறிக்கும். "ஆமுவான் / Ahmuvan " முருகனை ஒத்த வடிவத்தை கொண்டுள்ளார். அனால் அங்கு கோவில் இருந்தத்திற்கான ஒரு அடையாளம் ஒன்றும் இல்லை. ஆனால் காலங்கள் நகர நகர இந்தியா பல அரசியல் மற்றும் இடப்பெயர்வுகள் போன்ற மாற்றங்களுக்கு உட்பட்டு, வட பகுதி முழுமையாக ஆரியர் வசம் சென்று விட்டது. தொல்காப்பியர் நிலத்தைப் பற்றிக் கூறும்போது நிலத்தோடு தொடர்புடைய தெய்வங்களையும் இணைத்துக் கூறுகின்றார். "மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே" (அகத்.5) ஆகவே பழந்தமிழ் மக்கள் வணங்கியது இயற்கையை! இன்று தமிழில் கிடைக்கக் கூடிய மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். அது மிகப் பழமையான தமிழ்ச் சமுதாயத்தை படம் பிடித்துக் காட்டுகிறது. மாயோன், சேயோன் என்பவர்கள் அந்தந்த நிலத்தின் வீரர்களாகக் கூட இருந்திருக்கலாம்! நடுகல் வணக்கமே நாளடைவில் சிறு தெய்வ / பெருந் தெய்வ வணக்கமாக வளர்ச்சி பெற்று இருக்கிறது. முதலில் இயற்கை என்பது நடுகல்லானது! பின்னர் நடுகல் என்பது தெய்வம் ஆனது! இயற்கை வழிபாட்டின் படி, சேயோன் = முருகன் = குறிஞ்சிக் கடவுள் ஆனான்! திருமால் / முருகன் = விஷ்ணு / ஸ்கந்தன் அல்லர் இவர்கள் நிலத்தின் தலைமக்கள் இவர்கள் பூர்வகுடி - இயற்கை வடிவினர்; பலமுகம்-மாயாஜால வடிவினர் அல்லர் ஆரியக் கலப்புக்குப் பின்னரோ...... * முருகன்- ஸ்கந்தன் ஆனான்! * திருமால்- விஷ்ணு ஆனான்! * சிவன்- ருத்திரன் ஆனான்! * கொற்றவை- துர்க்கை ஆனாள்! உதாரணமாக சுத்த தமிழ்க் கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன்... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள் சமஸ்கிருதக்காரர்கள். அப்படியென்றால் முருகன் பரமசிவனின் மகன் இல்லையா? இல்லை என்பது தமிழ் பதில். ஆமாம் என்பது சமஸ்கிருத பதில். அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்றவர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். தென்னிந்தியர்களின் நாட்டார் தெய்வங்களை எல்லாம், இந்து மதத்திற்குள் உள்வாங்கினார்கள். அவற்றிற்கு, சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப் பட்டன. உலக வரலாறு நெடுகிலும், ஆக்கிரமிப்பாளர்கள் கடைப்பிடிக்கும் தந்திரம் அது. தமிழரின் நாட்டார் தெய்வமான முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றி இந்து மதக் கடவுளர்களில் ஒருவரானார். அதனால் தான், தமிழரை விட அதிகமாக ஆரிய மயப் பட்ட, மலையாளிகளும், கன்னடர்களும், "சுப்பிரமணியக் கடவுள்" என்றே அழைக்கின்றனர். முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் சைவர்களும் உணர்வதில்லை. ஏன் சைவ சமயமும் பிராமண இந்து [வேத] மதமும் ஒன்றல்ல என்பது கூட பலருக்கு புரிவதில்லை. சைவ சமயம் இந்து சமயத்துக்குள் உள்வாங்கப் பட்டு தன் தனித்துவத்தை இன்று தொலைத்துவிட்டது! தமிழில் ஆண்டவனை வணங்கியவர்கள் இரு சமஸ்கிருதத்தில் வணங்குகிறார்கள்!! தமிழில் உள்ள, முருகன், வள்ளிக் கதையானது, குறவர்கள் போன்ற பழங்குடி இனத்தவருக்கு உரியதாகத் தெரிகின்றது. இன்றைக்கும், பிராமணர்களின் வர்ண சாஸ்திரத்தால் தாழ்த்தப்பட்ட சாதியினர் அல்லது கிராமபுற மக்கள் மத்தியில் "முருகன்", "வள்ளி" போன்ற பெயர்கள் பிரபலமாக உள்ளன. உயர் சாதியினர் அல்லது சம்ஸ்கிருத மோகம் கொண்ட மக்கள் மத்தியில், அதற்கு மாறாக, "ஸ்கந்தன்", "சுப்பிரமணியன்" என்று சமஸ்கிருதப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர். நமது காலத்தில் உள்ள ஆங்கில மோகம் போன்று, பல நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள், சம்ஸ்கிருத மோகம் கொண்டிருந்ததையும் மறுப்பதற்கில்லை. சைவ சித்தாந்த மதத்தை வளர்த்த நாயன்மார்களும், சமஸ்கிருதமயப் பட்டிருந்ததை காணக் கூடியதாக உள்ளது. முருகக் கடவுளுக்காக இயற்றப் பட்ட பக்திப் பாடல்கள் எல்லாம், "கந்தர் அலங்காரம், கந்த சஷ்டிக் கவசம்" போன்ற பெயர்களில் உள்ளன. முருகனுக்கு தமிழில் வள்ளி என்ற மனைவி இருந்தார். ஆரியத்தோடு சேர்ந்து ஸ்கந்தன் இந்திரனின் மகளான தெய்வானையும் மனைவியாகச் சேர்ந்து கொண்டார். இதன் மூலமே, தேவேந்திரனுடன் சொந்தமாகின்றார்! இதன் பின்னராக சாதாரண மக்களுக்குப் புரியும்படியாக அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, மச்சினன் என தெய்வங்களுக்கிடையே உறவு முறை உருவாக்கப்பட்டன. முருகனும், பிள்யைாரும் சிவனுக்குக் குழந்தைகள். திருமால் மைத்துனர் ....... சிவனது மூலம், சிந்து வெளி, மொகாஞ்சிதாரோ, ஹரப்பா நாகரீகங்களுடன், தொடர்பு பட்டது! வேதங்களில் 'உருத்திரன்; என்று ஒருவரைப் பற்றிப் பேசப் படுகின்றது! இவரைச் சிவனுடன் சேர்த்து விட்டார்கள். வடநாட்டில் முன்னர் இருந்த ['உருத்திரன்'] சிவனுக்கு தென்நாட்டு முருகனை பிள்ளையாக்கி, முன்னர் குஜராத்திலிருந்த கிருஸ்ணனை மச்சானும் ஆக்கி விட்டனர். மன்னர்களின் ஆட்சிக்காலங்களில், மன்னரால் கொண்டாடப்படும் விழாக்களை, மக்கள் கொண்டாடுவதும் வழக்கம்! அவ்வாறே நாங்களும், சூரன்போர் கொண்டாடுகின்றோம்! ஆனால், பத்மாசுரன், ஒரு திராவிடன் என்பதை, நீங்கள் நிச்சயமாக மறுக்கமாட்டீர்கள். அவன் உங்கள் உறவினர். அழகுக் கோலத்தில் இருந்த பெண்மணி மீது ஒருசமயம் ஆசை கொண்டார் காசியப முனிவர். அதன் விளைவாக, அவர் பத்மாசுரன், சிங்கமுகன் என்ற மகன்களையும், அஜமுகி என்ற மகளையும் பெற்றார். அதன்பின் தன் தவறை உணர்ந்து மீண்டும் தவம் செய்யப் போய்விட்டார். இந்தப் பத்மாசுரனே உலகை அடக்கி ஆண்டான். அவனை சுப்பிரமணியன் என்ற உயர் பிராமணன் அல்லது ஸ்கந்தன் என்ற சிவனின் உயிர்த்துளிகளில் உண்டாகியவன் வதம் செய்தான். சூரனின் ஒரு பகுதி உடலை சுப்பிரமணியன் மயிலாக மாற்றி அதன் முதுகில் அமர்ந்தார். ஒரு பகுதியை சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தி, தன் கைப்பிடியில் வைத்துக்கொண்டார். ஆரியக் கலப்புக்குப் பின்னரே முருகன்- ஸ்கந்தன் ஆனாதால், இந்த தடு மற்றம். தமிழ் கடவுள் முருகன் இங்கு சமஸ்கிரத கடவுளாக மாற்றப்பட்டுவிட்டர். அந்த மாற்றத்தின் பின்பே ஸ்கந்தன் இந்த திராவிடனான சூரனை கொன்ற புராண வரலாறும் இந்திரன் தன் மகள் ஸ்கந்தனுக்கு தெய்வானையை கொடுத்ததும் முருகனுடன் இணைக்கப்படுகிறது. “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி“ என்ற மேற்கோளை வைத்து அணுவை அப்போதே துளைத்தாகி விட்டது என்று கருதமுடியாது. அப்பொழுது அணு என்ற சொல்லின் கருத்து வேறு. இப்பொழுது வேறு. முருகன் என்ற சொல்லின் பொருள் அக்காலத்தில் வேறு. சமஸ்கிரத சுப்ரமணியத்துடன் சேர்ந்த பிறகு இக்காலத்தில் வேறு. அதனாலேயே இந்த தடு மற்றம். சொற்கள் காலத்தால் திரிபுபடுவது, பொருள் மாறுபடுவது உண்டு! நாற்றம் என்பது நறு நாற்றத்தை, நறு மணத்தைக் குறிக்கிற சொல்லாக இருந்து; பிறகு முடை நாற்றத்தைக் குறிக்கிற சொல்லாக மாறிப் போனது. காலமாற்றத்தால் அப்படிப் பொருள் திரிந்து போதல் இயல்பானதே. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"அறம் பேசுமா?"
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி! எதோ என் மனதில் தோன்றுவதை சரியோ, பிழையோ அதை நேரம் கிடைக்கும் பொழுது எதோ ஒரு வடிவில் எழுதுவேன்! ஆனால் மற்றவர்களின் கதைகள் வாசிப்பது மிக மிக குறைவு. கட்டாயம் வாசிப்பது நல்லது அதற்கு எனக்கு பொறுமை குறைவு. அது தான் காரணம் என்றாலும் ஜெயமோகனின் கட்டுரைகள் / கருத்துக்கள் பார்த்துள்ளேன் நன்றி
-
"உயர்ந்த மனிதர்கள்" [உண்மைக்கதை]
1988 / 1989 இல் எமது புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் குறைந்தது 22 உத்தியோகத்தர்கள் [இரண்டு பக்கமும் / அரசு அல்லது இயக்கம் சார்பான] சுட்டு கொல்லப்பட்டனர். புத்தளம் பாலாவி சந்தியில், ஒரு சூட்டுடன், நிலை குலைந்து விழுந்ததும், tyre / உருளிப்பட்டை அவரில் போட்டு எரித்தது கண்ணால் பார்த்துள்ளேன்
-
"என் இறுதி சடங்கில்"
[1] அறம் பாடுதல் என்பது தமிழ் இலக்கியத்தில் ஒரு கவிஞன் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணரும்போது அநீதி இழைத்தவர் அழியவேண்டும் என்று சாபமிட்டு பாடல் எழுதும் செயலாகும். ஆனால் இங்கு அப்படி இல்லை. ஒரு சவம், தனது இறுதி சடங்கில் காணும் அனுபவமே தொகுக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் இறுதி வேண்டுகோளுடன் [2] அதற்கு முன் இறுகிப் போயிருந்த மோதிரத்தைக் கழற்ற முடியாமல் விரலை வெட்டி எடுத்ததைக் காணேலையோ? கட்டாயம் என் அனுபவத்தில், நான் கண்டதில், அப்படியான தரம் குறைவான நிகழ்வு ஒன்றும் இல்லை. நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
-
கடவுள் இருக்கிறாரா.............?
எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது. உலகில் எழுத்து உருவாகிய போது, பல சமயங்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. என்றாலும், அவை எப்படி உருவாகியது என்பதை அவர்கள் மறந்தே விட்டார்கள். ஆகவே ஒரு ஊகத்தின் அடிப்படையில் தான் இதற்கு விடை தேட வேண்டியுள்ளது. கற்கால மனிதன் எவனுக்கும் மதம் என்ற ஒன்று இருக்கவில்லை. அந்த ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள். அன்றைய காலத்தில் உலகம் மிகவும் பயம் நிறைந்ததாக இருந்திருக்கும். காடுகள், கொடிய மிருகங்கள், இடி, மின்னல், மழை, வெள்ளம், புயல் மற்றும் பூமி அதிர்ச்சி போன்ற ஆபத்து நிறைந்த இயற்கை அனர்த்தங்கள், சூழ ஆதி கால மனிதர்கள் வாழ்ந்தார்கள். பகலெல்லாம் சூரியனின் வெளிச்சம், இரவெல்லாம் பயமுறுத்தும் இருட்டு. அந்த கும்மிருட்டில் கொடிய மிருகங்கள் மூலம் ஆபத்து, இந்த பயத்தினால் இரவானால் குகைகளினுள் குடியிருப்பு. பகல் வந்த பின்பு தான் அவர்களுக்கு உலகமே மீண்டும் தெரியும். அப்பொழுது தான், அவன் வெவ்வேறு இடங்களுக்கு சென்று, குழுவாக வேட்டையாடி, கிடைப்பதை ஒன்றாக பகிர்ந்து உண்டான். அவன் பயந்தது பெரும்பாலும் இயற்கைக்கு மட்டுமே. இந்த பயம் தான் முதலாவது சமயத்தை. கடவுளை உருவாக்கி இருக்கும் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். இப்படியான பாதுகாப்பற்ற உலகில், மக்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வு ஒன்றை ஏற்படுத்தும் முகமாகவும் தமது கட்டுப்பாட்டில் அடங்காத சுற்றுப்புற சூழலையும் தம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற ஒரு உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும், அந்த மனித இனக்குழுவில் ஒருவரோ அல்லது ஒரு சிலரோ - இவைகளை பார்த்து பார்த்து அவர்களின் இந்த பய உணர்வை போக்கி ஒரு ஆறுதல் அளிக்க, அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார்கள். அந்த விளக்கமே கடவுளை, மதத்தை உண்டாக்கியது எனலாம். அந்த ஆதி மனிதனிடம் தன்னைப் பற்றியும் தான் வாழும் சூழ்நிலை பற்றியும் பல பல கேள்விகள் கட்டாயம் மனதில் எழுந்திருக்கும். எது இயற்கையின் பருவ கால சுழற்சியை கட்டுப்படுத்துகிறது? - கதிரவனின் நாளாந்த அசைவா?, விண்மீன்களின் அசைவா?, கடந்து செல்லும் கால நிலைகளா? .... எது தமது சுற்றுப்புற சூழலை கட்டுப்படுத்துகிறது? - எது அல்லது யார் வெள்ளத்தை, மழையை, புயலை, வறட்சியை ஏற்படுத்துகிறது? / ஏற்படுத்துகிறார்கள்? ... எது கருவுறுதலை கட்டுப்படுத்துகிறது? - தமது இனத்தின்?, தமது வளர்ப்பு பிராணியின்?, தமது வளர்ப்பு பயிரின் செழிப்பை? ... தமது இனக் குழுவின் நிரந்தரத்தை அல்லது இருப்பை நிலைநாட்ட எப்படியான அறநெறி அல்லது ஒழுக்க நெறி தேவை? ... எல்லாத்திற்கும் மேலாக, முக்கியமான கேள்வி, ஒரு மனிதன் இறந்ததும் அவனுக்கு என்ன நடக்கிறது? .. . விஞ்ஞான காலத்திற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த இவர்களால் இவைகளுக்கு ஒரு விடை அல்லது தீர்வு காணமுடியாது. ஏன்? இன்றும் கூட, கடைசிக்கு முதல் கேள்விக்கு - அறநெறி அல்லது ஒழுக்க நெறிக்கு - இன்னும் விவாதித்துக்கு கொண்டு இருக்கிறோம், கடைசி கேள்விக்கு - மறுமைக்கு - இன்னும் ஒரு ஒருமித்த தீர்மானத்திற்கு வரமுடியாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறோம். இந்த இரு கேள்விக்கும் [கட்டாயம் இறுதி கேள்வியான மறுமைக்கு] ஒரு ஊகத்தின் அடிப்படையிலாவது ஒரு முன் எச்சரிக்கையாக ஒரு பதில் வேண்டும். ஆதி மனித இனக் குழுவில் ஒரு சிலர் தமது தனிப்பட்ட அனுமானத்தின் அடிப்படையில் விடை கண்டார்கள். அதுவே, முதலாவது கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கை அமைப்பு முறை [சமயம்] தோன்றவும், முதலாவது சமய குருமார் அமைப்பு தோன்றவும், கடவுளை சாந்தப்படுத்த முதலாவது வழிபாட்டு சடங்குகள் தோன்றவும், கருவுறுதல் மற்றும் சுற்றுப்புற சூழல் அம்சங்களை கட்டுப்படுத்தும் முதலாவது சடங்குகள் தோன்றவும், இனக்குழு உறுப்பினர்களின் நடத்தை எதிர்பார்ப்புகளை விளக்கும் முதலாவது அறிவுறுத்தலும் அதற்கான ஒழுக்கநெறி தோன்றவும் வழிசமை த்தது. ஆகவே சுருக்கமாக கடவுளை மனிதன் தான் உண்டாக்கினான். அன்றைய சூழலில், ஒரு கட்டுப்பாட்டை, ஆறுதலை, நம்பிக்கையை ஏற்படுத்த ஒரு சிலர் செய்த சூழ்ச்சி என்று கூட சொல்லலாம். அதனால் அந்த ஒரு சிலர் சாதாரண மனிதர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் ஒரு தூதுவராக , குருவாக தன்னை திடப்படுத்திக் கொண்டான். அவனுக்கு கடவுள் என்று ஒன்று இல்லை என்று நன்றாகத் தெரியும், ஆனால் இருக்கு என்றால்த் தான் அவனின் இருப்பும் இருக்கும். அது தான் உண்மை! உலகின் முதல் நாகரிகம் கண்ட சுமேரியரின் இலக்கியத்தில் இருந்து இலகுவாக இதற்கு உதாரணம் கொடுக்கலாம். நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
-
"என்னைப் பற்றி மனதில் பட்டவை"
கேள்வி: உங்கட வலைப்பூவை கொஞ்சம் சொல்லுங்கோவன். பதில்: [1] முகநூல் : Kandiah Thillaivinayagalingam [2] https://www.facebook.com/groups/978753388866632/?ref=group_header கேள்வி: கூடவே கம்யூனிசமும் வந்திருக்குமே? பதில்: இல்லை, ஆனால் சாதி, சமயம், மூட நம்பிக்கைகள் தவிர்த்த எளிய வாழ்வும், தமிழ் மற்றும் தமிழ் பண்பாட்டில் ஒரு நாட்டமும், அதே நேரம் மாற்றான் வீட்டு மல்லிகையும் மணக்கும் என்பதிலும் நம்பிக்கை வந்தது. நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
-
"உயர்ந்த மனிதர்கள்" [உண்மைக்கதை]
உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 1,200, ஆனால் அதிகாரப்பூர்வமற்ற நம்பிக்கையான எண்ணிக்கை 4,000-5,000
-
எனது அறிமுகம்
"என்னை நினைத்தேன் சிரிப்பு வருகுது அவளை நினைத்தேன் அழுகை வருகுது வாழ்வை நினைத்தேன் ஆத்திரம் வருகுது மரணத்தை நினைத்தேன் மகிழ்ச்சி வருகுது!" "குழந்தை பருவம் சுமாராய் போச்சு வாலிப பருவம் முரடாய் போச்சு படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு பழக்க வழக்கம் கரடாய் போச்சு!" இது என்னைப் பற்றி நான் ஒரு முறை எழுதியதின் சில வரிகள் ஆமா உங்க கருத்து "பதவி வரும்போது .... " நல்ல எடுத்துக்காட்டு! வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் கருத்து வழங்கிய அல்லது பார்வையிட்ட எல்லோருக்கும்!! கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
-
"உயர்ந்த மனிதர்கள்" [உண்மைக்கதை]
முதலாவது மக்கள் விடுதலை முன்னணி போராட்டட்டின் போது நான் இரண்டாம் ஆண்டு, ரஜவத்தையில் இருந்தேன், அப்பொழுதும் கண்ணீர் தந்த சம்பவம் நடந்தது. அதை விட , பல்கலைக்கழ வளாகம் மூடியதால், யாழ்ப்பாணம் திரும்பும் பொழுது, இரவு ஆறு மணியுடன் போட்ட ஊரடங்கில் , கிளிநொச்சியில் அகப்பட்டு சில இன்னல்களும் அனுபவித்தேன். அப்பொழுது நான் மீசை தாடியுடன் இருந்ததும் அதற்கு ஒரு காரணம். என்றாலும் சிங்களம் தெரியாதது, என்னை தமிழன் என்று காட்டியதால், ஒரு பெரும் பிரச்சனை வரவில்லை. என்னுடன் பல்கலைக்கழக நூலகத்தின் உதவி நூலகர், ஆறுமுகம், மிகவும் நண்பராக இருந்தார். அவர் மலை நாட்டில் பிறந்து வளர்ந்ததால், சிங்களம் தாராளமாக தெரியும். நான் யாழ்ப்பாணம் என்பதால் சிங்களம் அறவே தெரியாது. அவர் ஓய்வு நேரத்தில், எங்களுடன் வந்து கேரம் பலகை அல்லது சீட்டு விளையாடுவார். ஜே.வி.பி அரசுக்கு எதிராக ஆயுத புரட்சி செய்து கொண்டு இருந்த ஒரு கட்டத்தில், ஒரு நாள், அவர் எம்முடன் வந்து ஓய்வை பொழுதுபோக்காக கழித்துவிட்டு, இருள தொடங்க தன் விடுதிக்கு சென்றார். நாம் இருட்டுக்குள் போகவேண்டாம். இது பல்கலைக்கழக வளாகம் என்பதால், ஜே.வி.பி க்கு கூடுதலான ஆதரவு இங்கு இருப்பதால், ஒரு வேளை ராணுவம் பதுங்கி இருக்கலாம், விடிய போவது நல்லது என்று கூறினேன். ஆனால் அவர் இது சிங்களவரும் சிங்களவரும் அடிபடும் போராட்டம், ஆகவே பயம் இல்லை என்று கூறிவிட்டு போனார். நான் அப்பொழுது ரஜாவத்த என்ற வளாகத்துடன் அண்டிய பகுதியில், பல்கலைக்கழக ஊழியர் ஒருவரின் விடுதியின் மேல் வீட்டில் வாடகைக்கு இருந்தேன். என்னுடன் அங்கு சக பொறியியல் பீட மாணவன் விக்னேஸ்வரன் & ஜெயசீலனும் மற்றும் மருத்துவ பீட நான்காம் ஆண்டு மாணவன் குழந்தைவேல் இருந்தனர். குழந்தைவேல் என்னை மிஸ்டர் நோ [Mr No] என்று பகிடியாக கூப்பிடுவது வழமை. [தில்லை - இல்லை]. ஆறுமுகமும் என்னை அப்படியே கூப்பிடுவார். அவர் ஒரு படி மேலே போய் தில்லை - தொல்லை என்றும் பகிடியாக கூப்பிடுவார். 'தில்லை - தொல்லை' இன்றுவரை நிலைத்து நிற்கிறது. குறிப்பாக எமது சக மாணவன் தணிகாசலத்தை குறிப்பிடலாம். ஆனால் அடுத்த நாள் என் நண்பர் ஆறுமுகத்தின் உடல், மகாவலி ஆற்றங் கரையில் துப்பாக்கி சூடுகளுடன் கண்டு எடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ந்தே போய்விட்டேன். அவர் தமிழர். ராணுவத்தாலும் ஜே.வி.பி யாலும் சந்தேகப்பட கூடியவர் அல்ல. அப்படி என்றால் உண்மையில் என்ன நடந்தது. அதன் மர்மம் என்ன ?. என்னையும் என் நண்பர்களையும் வாட்டியது. ஆகவே மதியப்பொழுது, அவர் உடல் இருந்த மகாவலி ஆற்றங்கரைக்கு போய், அங்கு அருகாமையில் குடி இருக்கும் கிராமத்தவர்களிடம், சிங்கள நண்பர்களின் உதவியுடன் விசாரித்தோம். அப்பொழுது அங்கு வாழும் ஒரு குடும்பம், துப்பாக்கி காயங்களுடன், தங்கள் வீட்டை வந்து தட்டி, தன்னை ராணுவம் சுட்டு, மகாவலியில் எறிந்து விட்டு போனதாகவும், ஆம்புலன்ஸ்க்கு அறிவிக்கும் படி, நல்ல சிங்களத்தில் கூறியதால், தாம் இவர் புரட்சி செய்யும் இளைஞர் கூட்டம் என நினைத்து, ஆம்புலன்ஷை கூப்பிடாமல், ராணுவத்துக்கு செய்தி அனுப்பினார்கள் என்று கூறினர். நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம் [1969 batch ]
-
எனது அறிமுகம்
உங்கள் அனைவரின் வாழ்த்துக்கும் நன்றிகள் பல. நான் ஓய்வின் பின், பேரப்பிள்ளைகளுடன் விளையாடுவதில் பொழுது போகிறது. மாறி மாறி ஒவ்வொரு பிள்ளைகளுடனும் இருக்கிறேன் என்னை நண்பர்கள் சுருக்கமாக 'தில்லை' என்றே கூப்பிடுவார்கள். ஆகவே உங்கள் முடிவு சரியே! சிலவேளை 'தில்லை ஒரு தொல்லை' என்று பகிடியாக சொல்வதும் உண்டு! நான் எழுதத் தொடங்கி பத்து ஆண்டு அளவில் இருக்கும், தொடக்கத்தில் எழுதி பழகியதில் சில ஆண்டுகள் மெதுவாகச் சென்றது. இன்னும் பெரிய ஓட்டம் இல்லை, ஆனால் தங்கு தடை குறைவு. மீண்டும் உங்களுக்கு எனது அன்பு வணக்கங்கள்!
-
"அப்பாவின் பேனா..!"
"அப்பாவின் பேனா..!" அப்பாவின் படம் சுவரில் அழகாக தொங்குகிறது. அதில் அவரின் சட்டை பையில், அந்த பேனா எட்டி பார்த்துக்கொண்டு இருக்கிறது. இன்று அவரின் நினைவு தினம். நான் அவரின் அந்த படத்துக்கு மலர் மாலை அணிவித்துவிட்டு, அவரின், அவர் என்றும் தன்னுடன் எடுத்து செல்லும் அந்த பேனாவை, அவரின் படத்துக்கு அருகில் கொழுந்துவிட்டு எரியும் தீபத்தின் ஒளி அதிலும் படக்கூடியதாக வைத்தேன். அப்படி என்ன இந்த பேனாவில் உள்ளது? இந்த பேனாவின் வலிமை உண்மையில் என் அப்பாவின் எண்ணத்தின் வலிமை, அவரின் சொல்லின் வலிமை! ஆமாம். என் அப்பாவின் பேனா நீதி பேசும் , கதை சொல்லும், கவிதை பாடும், ஏன் புரட்சி கூட செய்யும்!! அது தான் அதன் பெருமை!! பேனா என் அப்பாவின் வாழ்வில் இரண்டறக் கலந்த்துடன் அவரை யார் என்று உலகத்துக்கு காட்டியதும் அதுவே! கத்தி முனையை விட பேனா முனை வலிமையானது!! என் அப்பா கட்டை என்றாலும், கம்பீரமான தோற்றம் உள்ளவர். அவரை 'க க' அல்லது 'கட்டை கந்தையா' என்றே பொதுவாக எல்லோரும் அழைப்பார்கள். அவர் பெரிதாக படிக்கவில்லை, ஆனால் வாசிப்பதில் குறிப்பாக ஊர் புதினம், அரசியல் நிலைப்பரம் மற்றும் சாதாரண மக்களின் அல்லது தொழிலாளர்களின் பிரச்சனைகள் அறிவதில் ஆர்வம் உடையவர். ஆரம்பத்தில் ஒரு சுருட்டு தொழிலாளியாக நல்லூர் வடக்கு வீதியில் உள்ள அன்னலிங்கம் சுருட்டு கம்பெனியில் வேலைக்கு அமர்ந்தார். அத்தியடியில் உள்ள எமது வீட்டில் இருந்து, அவரின் வேலை நிலையம் ஒரு மைல் தூரத்துக்குள் தான் இருக்கும். அவர் நடந்தே போவார். அவர் கணக்கில் புலி என்பதால், அங்கு வேலை செய்யும் மற்றவர்களுக்கான கூலியையும், மற்றும் தனதையும் சேர்த்து, கணக்கிட்டு கொடுப்பார். நாளடைவில் அவர் கணக்குப் பிள்ளையாகவும் தொழிற்படத் தொடங்கினார். அப்பொழுது தான் அவருக்கு பேனாவில் ஒரு ஆர்வம் ஏற்பட்டது. சுருட்டு கம்பெனியின் முதலாளி ஒரு 'மை பேனா' அவருக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அன்றில் இருந்து பேனாவை தனது சட்டை பையில் வைக்கும் பழக்கமும் ஆரம்பித்தது எனலாம். சக தொழிலாளர்களுடன் இதனால் நெருக்கமாக பழகும் சூழ்நிலையும் ஏற்பட்டது. அவர்களின் பிரச்சனைகளை அப்பாவிடம் ஆலோசிக்க தொடங்க, அவர் ஒரு தொழிலாளர் ஆலோசகராக, ஏன் தலைவனாக கூட பரிணமிக்க தொடங்கினார். இது தான் அவரை மாற்றிய பெரும் நிகழ்வு எனலாம் தான் கேள்விப்பட்ட நிகழ்வுகளை, பிரச்சனைகளை இப்ப சிறு சிறு கவியாக கதையாக எழுத தொடங்க, அவை நல்லூர், அன்னலிங்கம் சுருட்டு கம்பனிக்கு வெளியேயும் பரவத் தொடங்கி, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளிலும் வரத் தொடங்கி, பெரும் மாற்றத்தையே ஏற்படுத்தியது. அப்பாவை, யாழ்ப்பாணத்தை மையமாக கொண்ட, ஒன்றிணைந்த தொழிலாளர் சங்கம், தமது செயலாளராக நியமித்ததுடன், அன்றைய ஆண்டு, யாழ் பத்திரிகைகள் நடத்திய கதை கவிதை போட்டியிலும் தங்கப் பதக்கம் பெற்றார். அந்த நிகழ்வில் தான் அப்பாவுக்கு இந்த தங்க பேணா, யாழ்ப்பாண முதல்வரால் பரிசாக அளிக்கப் பட்டது. அன்றில் இருந்து அவர், சமூக விரோதிகளால் சுட்டுக் கொல்லும் மட்டும், இந்த பெருமைக்குரிய பேனா, அவருடனே என்றும் பயணம் செய்தது. "ஆறாம் விரலாய் பேனா கேட்டேன் ஆள வந்தவனின் ஊழல் சொல்ல ஆகாயம் தொடும் வன் செயலை ஆபத்து வரும்முன் தடுத்து நிறுத்த!" இது தான் என் அப்பாவின் பேனா, யார் எவர் என்று பாகுபாடு காட்டாமல் பேசியது. அவர் பேணா எடுத்தல் தீப்பொறி பறக்கும். ஒவ்வொரு வசனமும் சிந்திக்க வைக்கும்! ஆமாம் , கடலில் ஏற்படும் சுனாமிகளை விட, அப்பாவின் பேனாவின் எழுத்துக்கள் மிக வலிமை வாய்ந்தவை. அது கரையிலும் கூட சூராவளி காற்றை உண்டாக்கியது. கள்ளர்கள் , ஊழல் அரசியல்வாதிகள், சமூக விரோதிகள் கரைகளிலும் ஒதுங்க முடியாத நிலை ஏற்படுத்தியது இந்த தங்க பேனாதான்! அதுதான் அப்பாவின் பேனா ! நான் அப்ப பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருக்கிறேன். ஒரே ஒரு முறை தான், அப்பா அதே பேனாவால், என் அம்மாவின் பிறந்த நாளுக்கு, ஒரு காதல் பாட்டு எழுதியதை பார்த்தேன். நானே அசைந்துவிடேன். அத்தனை இனிமை. ஆனால் எம் முன்னால் இருக்கும் பிரச்சனையே பேனாவில் பொறியாக பறக்கவேண்டும் என்று நம்புபவர் என் அப்பா. "உச்சங் கொண்டையும் கரும் விழிகளும் உகவைதரும் உன் உடல் வனப்பும் உள்ளம் கவரும் உன் புன்னகையும் உரிமை கொண்டு என்னை அழைக்கிறது" "ஓவியமாக வந்தாய் கவிதை தந்தாய் ஓசை இன்றி என்னில் கலந்தாய் ஓரமாய் இழுத்து முத்தம் தந்தாய் ஓங்கார நாதமாய் நெஞ்சை நிறைத்தாய்" 'பேனாவின் வலிமை கத்திக்கு இல்லை' இப்படித்தான் அப்பா அடிக்கடி சொல்லுவார். ஆனால் அன்று நால்வர், அப்பா வேலை முடிந்து, வீடு திரும்புகையில், வைமன் வீதி, அரசடி வீதி சந்திக்கும் பருத்தித்துறை வீதியில், மாறி மாறி கத்தியால் குத்தி கொலைசெய்தனர். இத்தனைக்கும் அரச ராணுவத்தின் வீதித்தடையும் காவலும் கூப்பிடு தூரத்திலேயே! அப்பாவின் பேனா ஓய்ந்துவிட்டதாக, அந்த நால்வரையும் ஏவிய அரசியல்வாதி இன்றும் நம்பிக்கொண்டு இருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. பாவம் காசுக்கு மார்தட்டும் இந்த நாலு கொலையாளிகளும்! "வாருங்கள், வந்து கை கொடுங்கள் இமைகள் மூடி பல நாளாச்சு ... தாருங்கள், தீர்வை தந்து கவலைதீருங்கள் கேள்விகள் கேட்குது அப்பாவின் பேனா ..." "எழுதுங்கள் உரக்க எங்கும் ஒலிக்கட்டும் உண்மைகள் வாழ வழி தேடுங்கள் ... கூடுங்கள் ஒன்றாய் அநியாயத்துக்கு எதிராக அப்பாவின் பேனா என்னிடம் மாறுது .." நான் அந்த தங்க பேனாவை, அப்பாவை வணங்கிய பின் என் சட்டை பையில் வைத்தேன், கண்ணாடியில் என்னை ஒருமுறை பார்த்தேன். அப்பாவின் மிடுக்கு என்னில் தெரிந்தது. நான் இதுவரை கீறிய வரைபடங்கள், செய்த கணக்குகள், போட்ட பொறியியல் திட்டங்கள் , இனி எனக்கு தேவை இல்லை. என் அப்பாவின் பேனா, நீதி கேட்கும். உரிமை கேட்கும். தட்டிக்கழித்தால் வழக்கு உரைக்கும். அது அப்பாவின் ஆன்மா. உலக சாதாரண மக்களின் குரல். கொலையால், மிரட்டலால் அது ஓயாது! அது தான் அப்பாவின் பேனா!! "அப்பாவின் பேணா என் பையில் அத்து மீறியவர்களை பிடுங்கி எறியும் அடித்து துரத்த கூட்டம் சேர்க்கும் அயர்ந்து தூங்க உனக்கு முடியாது!" "அழகான பெண்ணை அளவோடு பாடும் அகிலம் எங்கும் உண்மை உரைக்கும் அறிவு வளர்த்து மனிதம் பேணும் அன்பு விதைத்து நீதி கேட்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]