Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாவ். என்ன ஒரு பிடி. திரிப்பாதி.... நீ ஒரு விண்ணன்தான். மேலே எழுந்த பந்தை சரியாகக் கணித்து, மிகவேகமாக ஓடிக்கொண்டே பிடித்தார். வாவ். முதலாவது விக்கட் விழுந்தது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
CSK துரத்துவதற்கு முடிவு செய்திருக்கினம். அணியில் இரு மாற்றங்கள். அஸ்வினையும் டெவோன் கான்வேயையும் தூக்கியாச்சு. ஷேக் ரசிட் ஆரம்பத் துடுப்பராகவும் ஒவோட்டனும் அணியில் இணைந்திருக்கினம். ஷேக், 19 வயதுக்குட்பட்ட அணியில் சிறப்பாக விளையாடினவர். இப்போது 20 வயதாகுது. மூன்று வருடமாக அணியில் இருக்கிறார். முதன் முதலாக விளையாடப் போகிறார். இஞ்ச, முட்டைக் கறி வேண்டாம். வேற ஏதாவது, நல்ல உறைப்பா, ஒண்ட வையுங்க. 🤣 இன்று வென்றால்தான், மேலே வரமுடியும். வெல்லுவினமா. பூரான் என்ன கட்டங்கட்டி வாறாரோ தெரியா. எதுக்கும் பூரானுக்கு ஒரு பூசையைப் போடவேண்டியதுதான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
CSKன் மீள் எழுச்சி இன்று ஆரம்பமாகிறது என்ற எதிர்பார்ப்பு எகிர்கிறது. CSKன் எழுச்சி யாழ் களத்தையும் புரட்டிப் போடும்.
-
கோல்ப் 2025 Masters ஒரு வீரனின் நீண்ட போராட்டம்
ஆமாம். சில நாட்களின் முன், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். இவர் 2000 ஆம் ஆண்டு மாஸ்டர்ஸ் வெற்றியாளர். சாகித் தீகலா, Sahith Theegala, என்னும் இந்திய வம்சாவளி வீரர் விளையாடியிருந்தார். இவர் இந்தியப் பெற்றோருக்கு கலிபோரினியாவில் பிறந்தவர். இப்போட்டியில் 29வது இடத்தைப் பிடித்தார். இவர் மிகத் திறமையானவர். இவ்வாறான major போட்டியொன்றை வெல்லக்கூடிய வீரர் என்று வகைப்படுத்தப் பட்டவர். நான்கு நாட்கள் எப்படி விளையாடுவினம் என்பதுதான் இங்கே கணக்கே. டெஸ்ட் போட்டிகள் மாதிரித்தான். பல தடைகளைக் கடந்து வரவேணும். முக்கியமாக மனத்தடையும் அழுத்தமும். கோல்பில் நீயே ராஜா, நீயே வில்லன். மற்றவர்கள் ஒரு காரணியே இல்லை. இன்னொருவர், அக்ஸய் பாத்தியா, Aksay Bhatia. இவரும் கலிபோர்னியாவில் பிறந்தவர். நான்கு நாட்களும் விளையாடி, 42வது இடத்தைப் பிடித்தார்.
-
கோல்ப் 2025 Masters ஒரு வீரனின் நீண்ட போராட்டம்
Green Jacketஉடன்
-
கோல்ப் 2025 Masters ஒரு வீரனின் நீண்ட போராட்டம்
2025 Masters வெற்றியாளர் ரோரி மெக்கல்ரோய் Rory McIlroy இந்த வருட மாஸ்டேர்ஸ் சற்றுமுன் நடந்து முடிந்தது. இப்போட்டியில் ரோரி மெக்கல்ரொய் வெற்றியீட்டி பச்சை மேல்சட்டையைத், Green Jacket, தனதாக்கிக் கொண்டார். 35 வயதான ரோரி இதற்காக 14 வருடங்களாகப் போராடிக் கொண்டிருந்தார். 2011 ஆம் வருடப் போட்டி அவரின் வாழ்க்கையில் ஏறபடுத்திய வலியிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. நான்கு புள்ளிகள் முன்னணியில் இருந்து. கடைசி நாளில் காலடி எடுத்து வைத்தவர், கடைசியில் மிக மோசமாகத் தோற்றார். Meltdown என்று சொல்வார்கள். அவனால் ஒரு பந்தையும் fairwayல் அடிக்கவே முடியவில்லை. திரும்பத் திரும்ப மரங்களுக்கும், வெளியாலும் அடித்து, 8 புள்ளிகளால் பின்தங்கினார். மூன்றாம் நாள் முடிவில் முதலாவதாக இருந்தவர் கடைசி நாளில 15வது ஆளாக வந்தார். அன்றிலிருந்து, ஒவ்வொரு வருடமும் அவரின் முயற்சிகள் கைகூடவேயில்லை. கோல்பில் நான்கு முக்கிய போட்டிகள் உள்ளன. எல்லாவற்றையும் வென்றவர்கள் வெகு சிலரே. கடைசியாக வென்றவர் டைகர் வூட்ஸ், Tiger Woods. ரோரி 2014ஆம் ஆண்டு மூன்றாவது போட்டியை வென்றார். மாஸ்டர் போட்டியை வென்றால் நான்கு பெரும் போட்டிகளையும் வென்றவர் என்று போற்றப்படுவார், Grandslam Champion. அந்த 2011 meltdown லிருந்து அவரால் வெளிவரவே முடியவில்லை. ஒவ்வொரு வருடப் போட்டிகளிலும் அவரின் மேலான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே இருந்தது. இறுதியில் 2025 அவரின் ஆண்டாக அமைந்தது. அவர் இப்போ Grandslam Champion. நான்கு முக்கிய போட்டி வெற்றியாளர். அவரின் மேல் இருந்த அழுத்தம், மனச் சோர்வு, படபடப்பு எல்லாம் பறந்தன. ஒரு வீரனால் எவ்வளவுதான் தாங்க முடியும். எல்லாவற்றையும் தாங்கினார். இவ்வருடமும் அவ்வளவு இலகுவான வெற்றியாக அமையவில்லை. இன்றும் நான்கு புள்ளிகள் முன்னிலையில், போட்டியை ஆரம்பித்தவர், எல்லா விதமான தவறுகளையும் செய்தார். 2011 மீண்டுமா என்று படபடப்புடன் உலமே பார்த்துக் கொண்டிருந்தது. கடைசியில் இருவர் ஒரே புள்ளிகளைப் பெற, போட்டி playoff நோக்கிச் சென்றது. அவர் யோசித்திருப்பார், என்னடா நடக்குது. ஏன் இந்தப் போட்டி மட்டும் எனக்கு இந்த ஆட்டம் காட்டுது என்று. அப்படியான நாள் இன்று. இறுதியில், playoffல் ஒரு புள்ளியைப் பெற்று, போட்டியைத் தனதாக்கிக் கொண்டார். இப்படம் எல்லாக் கதையையும் சொல்லும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சொல்லமாட்டாங்க. சொல்லவே மாட்டாங்க. நாமதான் அடிச்சுப் பிடிக்க வேணும். அங்கால CSK யும் ஏதாவது மாஜாயாலம் நடக்குமா என்று முயற்ஙி செய்யினம். அவையின் பயிற்றுவிப்பாளர் ஸ்டீபன், தோனியிடம் மந்திரக்கோல் இல்லை என்று வேற சொல்லியிருக்கிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆட்டத்தின் பின், அவர் இதை கால்சட்டைப் பையில இருந்து எடுத்துக் காட்டினார். இது orange ஆமிக்காக என்று ஒற்றையில எழுதி எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார். அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த நால்வரும், சுவியின் தலைமையில், போராடித்தான் ஆகவேணும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மைதான். அந்தப் பந்து சட்டென்று வெளியில போட்டுது. கருண் இருந்த formக்கு அதைக் கணித்திருப்பார் என்று நினைத்தேன். அதுவும், முதல் பந்துக்கு நாலு அடிச்சிருப்பார். அப்போ பந்து இப்பிடி வரும் என்று எதிர் பார்க்க வேணாமோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போட்டி நல்ல சுவாரஸ்யமா இருந்துச்சு. கருண் நாயரின் அருமையான ஆட்டம். அந்தாள் இருக்கிற formக்கு எல்லாப் பந்தும் உதைபந்து மாதிரித் தெரியும். புமாரவுக்கு அடிச்சாரே அடி. செம. சின்ன கவலையீனமான பந்துத் தடுப்பில் விக்கட்டை இழந்தார். சாட்னர் போட்ட பந்து மட்டையின் அருகால் சென்று விக்கட்டைத் தகர்த்தது. எப்பிடி அந்தப் பந்தை தவற விட்டார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறன். ஒரு சிறு கவனச்சிதறல்தான். அது எவ்வளவு பெரிய திருப்பமாக அமைந்தது. டெல்லி வெல்லவேண்டிய போட்டி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓடி ஓடியே முடிச்சு விட்டாங்கள். நமக்கு முட்டை தாறதுக்காக இப்பிடியாடா ஓடுறது. டெல்லி பசங்களா. என்ன பண்ணி வைச்சிருக்கிறீங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று இரண்டாவது முட்டையும் அவியத் தொடங்கிவிட்டுது போல. கான் சர்மாவின் சுழலில் சிக்கித் தவிக்கும் டெல்லி. கருண் நாயர் நிற்கும் வரையும் நன்றாகப் போய்க்கொண்டிருந்த துடுப்பாட்டம், இப்போ மிகவும் இக்கட்டான நிலையில். சுவியை இனிப் பிடிக்க முடியாது. எல்லாரும் அவரிடம் மண்டியிட வேண்டியதுதான். 😄
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பயணம் இனிதாக அமையட்டும் வீரப்பையன். சில பல போட்டிகளை மைதானத்தில் பாக்கிற யோசினை இருக்கோ. 🏏 கொஞ்ச நாளா முட்டையாக் கிடக்கு. அதிக முட்டை உடம்புக்கு ஆகாதே. இன்று ஒரு முட்டை காணும் என்டு கருண் நாயரோட கதைச்சிருக்கு. பார்ப்போம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஹா ஹா.... "அதுக்கு நிறைய நேரம் இருக்கு" பிடிச்சுது.
-
நானும் ஊர்க் காணியும்
இப்போதைக்கு அப்பிடி காணி கீணி வாங்கிறமாதிரி யோசினை இல்லை. காலம் மாறலாம். பார்ப்போம். இயந்திரங்களை வாங்க முடியுமாயின் வாங்கி உபயோகிப்பது நல்லது. நீங்கள் சொன்னமாதிரி, அங்கே இருந்து செய்வதுதான் நல்லது. சந்தர்ப்பம் கிடைத்தால் நாங்களும் உங்களிடம் வருகைதரலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மைதான். அவர் தனது இணையரையும் விட்டு, ஒரு மாரக்கமாத்தான் போய்க்கொண்டிருக்கிறார். வாழ்த்துகள் சுவி. நல்ல வேளை, காவிய நம்பி கவுளேல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்களுக்கு அடிக்க வேணும் என்டு அடிச்ச மாதிரிக் கிடக்கு. SRH இப்பிடிப் போட்டு வெளுத்துவிட்டாங்களே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பெருசா செய்யிறம் நாளை. மாற்றம் ஒன்றே மாறாதது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜயகோ. என்ன நடந்தது. யார் செய்த வேலை இது. சுவி நந்தன் இணைப்பாட்டம் தகர்க்கப்பட்டது. எங்கள் பழைய மேற்கிந்தியத் தீவுகளுக்கு இப்பிடி ஒரு நிலைமையா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எப்படி நம்ம உறுதி. சென்னை அடிச்சது ஒரே ஒரு ஆறு. KKR அடிச்சது பத்து. எல்லாரும் ஆளுக்கொன்று என்றாலும் அடிச்சினம். இது என்ன மாதிரியான போட்டி என்று ஆராயவே முடியாது. எவ்வளவத்தான் சொல்ல முடியும். என்ன சொன்னாலும் அணியைக் கலைச்சுப்போட்டு புது அணி வேண்டும் என்றுதான் வந்து முடியும். அதுதான். அதுவும் சுனிலு சும்மா நின்டபடி அடிக்கிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குறைந்த ஓட்டங்கள் எடுத்து எனக்கு வரவேண்டிய அந்த புள்ளிகளுக்கும் ஆப்பு வைத்து விட்டார்களே. நம்ம அதிர்ஷ்டம் இப்பொழுது அதள பாதாளத்தில் போய்க் கொண்டிருக்கின்றது. 😅
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுழல் பந்துக்கு அடிக்கும் தூபே என்ன செய்தார். முதலாவது பந்திலே ஒரு ஓட்டத்தை எடுத்து, மற்றப் பக்கம் போய் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றார். 16வது பரிமாற்றத்திலும் 17வது பரிமாற்றத்திலும் அதையே செய்தார். உண்மையிலேயே எனக்கு புரியவே இல்லை. தூபே செய்வது மிக மிக மட்டமான ஆட்டம். இப்போ 9வது விக்கட்டும் போட்டுது. 17.1 தூபே ஒரு ஓட்டம் 17.2 விக்கட் 17.3 கடைசி பையன் ஒரு ஓட்டம் 17.4 தூபே ஒரு ஓட்டம் - டேய் உண்மையாவாடா...... எப்பிடிடா முடியுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பசங்களா, அந்த 116அ அடிச்சு, குறைந்த ஓட்டம் என்டத தாண்டுங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தல வந்திட்டார். ஏன் கவலை. அவர் கெத்து மாதிரி, முதல் பந்து, சாமிக்கு விட்டு, தனது ஆட்டத்தைத் தொடங்கி விட்டிருக்கிறார்.