Jump to content

nilmini

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    929
  • Joined

  • Last visited

  • Days Won

    14

Everything posted by nilmini

  1. பொதுவாக பீன்ஸ் வகைகள் குறிப்பாக பீஸ்(Peas) , பருப்பு வகைகள், ப்ரோக்கோலி , கோழிபிளவர் , Brussel sprouts, கோவா , Kale , Apple , பேரிச்சை. பசுப்பால், சீஸ் போன்ற பால் உற்பத்தி உணவுகள் உடலில் வாய்வு ஏற்படுத்துபவை. உப்பு கூடிய சிப்ஸ், டின் உணவுகளை குறைக்கவேணும்.எனக்கு பொதுவாக பயறு, கடலை பருப்பு ஒத்து வராது. அப்படி ஒவ்வொருவருக்கு மாறுபடும். இள வயதில் பிரச்னை இல்லை. 35 வயதுக்கு மேல் தான் இவை தொடங்கும். நிறைய சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். நடக்க வேணும். வாழைப்பழம், kiwi பழம் , Pistachio , Avocado போன்றவை உடலில் உள்ள தேவை இல்லாத நீரை அகற்ற உதவும். பாப்பாப்பழம் , அஸ்பாரகஸ், தயிர், பெருஞ்சீரகம், இஞ்சி இவைகள் நீரையும், வாய்வை அகற்றவும் உதவும் . இல்லாவிடில் வயிறு ஊதும். மிக அரிதான நிலையில் கான்செர், ஈரல் பிரச்சினை, குடல் அழற்சி, Gluten intolerance , சிறுநீரக குறைபாடு, இதய நோய் காரணமாக வயிறு இருக்கும் உடல் குழியில் நீர் தேங்கும் (ascites). மூசிறது பொதுவாக மூச்சுக்குழாயில் எதோ அடைப்பினால் வருவது. அல்ர்ஜி , அஸ்மா (இதுவும் இருவித அல்ர்ஜி தான்) இவையெல்லாம் wheezing . இன்னுமொரு விதமான மூசல் வருவது சுவாசப்பைக்கு தேவையான அளவு காற்று கிடைக்காவிட்டால் கனமான மூச்சு எடுத்து தான் சுவாசப்பையை நிரப்பலாம் (Heavy breath ). இதற்கெல்லாம் மருந்து உண்டு. ஆனால் நடை, சுவாச பயிற்சி, உடல் நிறை குறைத்தல் , முக்கியமாக யோகாசனம் செய்து மனதையும் அமைதியாக வைத்திருந்தால் மிகுந்த பலன் கிடைக்கும். மருந்து எடுக்கும் அளவை நல்லா குறைக்கலாம்.
  2. வணக்கம். நான் அலபாமாவில் வசிக்கிறேன். ஆமாம் அவரர்கள் நாடுகள் தமது மக்களை திருப்பி வரும்படி அழைத்துக்கொண்டார்கள். ஆய்வு online இல் செய்வது சாத்தியமில்லை. அநேகமாக உங்கள் சிநேகிதி திரும்ப வந்துதான் முடிக்க நேரிடும். போற போக்கை பார்த்தால் அமெரிக்கா இந்த நோய்க்கு தயார் இல்லை போல் தெரிகிறது. ஆனால் வயது போனவர்களுக்கும் , நுரையீரல் பிரச்சனை அல்லது மற்ற வருத்தங்கள் உள்ளவர்களை தான் மிகவும் பாதிக்கும் போல் தெரிகின்றது.
  3. உங்கள் ஊக்கத்துக்கு நன்றி. நான் MD இல்லை PhD . நான் மருத்துவ கல்லூரியில் படிப்பித்துக்கொண்டு research உம் செய்கிறேன். Anatomy படிப்பிப்பதால் உடல்களை dissect பண்ண வேண்டும். அத்துடன் மற்ற மருத்துவர்களுடன் பலதும் விவாதிப்பதால் நிறைய விடயங்களை அறிகிறேன். அவற்றைத்தான் பதிவிடுகிறேன். நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் பரவாயில்லை. பதில் தெரிந்தால் பதிவிடுவேன்
  4. தேங்காய் எண்ணெய் 76 degrees F (24 C) பாகை வெப்பத்துக்கு கீழ் கட்டியாகி விடும். அதற்கு மேல் என்றால்தான் உருகும். நல்லெண்ணெய் - 5 பாகைக்கு கீழ் தான் கட்டியாகும். அதற்கு மேல் என்றால் உருகி விடும். இதற்கு காரணம் அந்தந்த எண்ணையில் உள்ள பலவகை கொழுப்புகள் . இந்த இரண்டு எண்ணையும் உடலுக்கு மிகவும் நல்லது. இப்பதான் மேலை நாடுகள் தேங்காய் எண்ணெயின் நல்ல பயன்களை ஆய்வு மூலம் அறிகிறார்கள். சீனர்கள் கருக்கிய எள்ளு எண்ணெய் ( sesame oil ) பாவிப்பதால் அதனை பற்றியும் இப்போது ஆய்வு அறிக்கைகள் உள்ளது. எமது நல்லெண்ணெய் பற்றி அவ்வளவாக ஒருவருக்கும் தெரியாது. தேங்காய் என்னை பாவிப்பதினால் உள்ள நன்மைகள்: HDL கொலஸ்டரோலை கூட்டும் , குருதியில் உள்ள சீனி அளவை கட்டுப்படுத்த உதவும், ஈரலை பாதுகாக்கும். தோலுக்கு முடிக்கு பூசினால் antibacterial, antifungal ஆக செயற்படும்.நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். முடி வளர்ச்சி , ஆரோக்கியத்தை கூடும். பற்களுக்கும் எலும்புகளுக்கும் நல்லம், மூட்டு வலிகளுக்கு உதவும், பசியை குறைக்கும், காயங்கள் ஆற உதவும். இன்னும் பல நன்மையைகளே அன்றி தீங்கு இல்லை.
  5. நான் முன்பு போட்ட பதிவின்படி ஆட்டிறைச்சி தான் இருக்கும் இறைச்சிகளிலே சிறந்தது என்று பல ஆய்வுகள், survey கல் மூலம் நிரூபித்து இருக்கிறார்கள். உலகில் 70% வீதமான Red-meat Goat meat என கூறப்படும் ஆட்டிறைச்சியில் இருந்துதான் பெறப்படுகிறது. ஏன் Greasy ஆக இருக்கென்று தெரியவில்லை. குளிர் பிரதேசத்தில் இருக்கும் மிருகங்களுத்தான் கொழுப்பு அதிகமாக இருக்கும். Lamb எனப்படும் செம்மறி ஆடு கூடாது. அதில் நிறைய கூடாத கொழுப்பு LDL , Saturated fat எல்லாமே இருக்கு
  6. எல்லா செயற்கை மருந்துகளுக்கும் பக்க விளைவுகள் இருக்கு. மருந்துக்கு மருந்து அதன் விளைவுகள் மாறுபடும் . மற்றும் எடுக்கும் dose ஐ பொறுத்ததும் தான். Rosuvastatin பக்க விளைவுகள் அவ்வளவு இல்லை. மூட்டு, தசை நோக்கள் தான் பொதுவானது. இந்த மருந்து ஈரலில் கொலெஸ்ட்ரோல் உருவாக்க தேவையான ஒரு நொதியத்தை தடுத்து கொலெஸ்ட்ரோல் கூடாமல் செயற்படுவதால் ஈரலை கொஞ்சம் பாதிக்கும். அனால் ஈரல் எமது உடற் பாகங்களுக்குள் மிகவும் வலிமையானது. பாதித்த பகுதிகள் தம்மை திருத்தி விடும். ஆனால் அதையும் மீறி நாம் ஈரலை பாவித்தால் ஈரல் பழுதாகி விடும். முக்கியமாக கவனிக்க வேண்டியவை என்னவென்றால் இந்த மருந்து மற்ற மருந்துகளுடன் சேர்த்து எடுக்கலாமா என்று டொக்டரிடம் கேக்கவேணும். Alcohol , Nicotin பொதுவாக எல்லா மருந்துகளோடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ( சிலர் Alcohol உடன் மருந்தை எடுப்பார்கள். இது மிக ஆபத்தானது. ஈரலை பாதிக்கும் ) ஒவ்வொரு நாளும் prescrption இந்த படி மருந்தை எடுக்கவேண்டும் ( அளவு, சாப்பாட்டுக்கு முந்தியா பிந்தியா , capsule மருந்தை முழுதாக விழுங்க வேணும். ஒரு நாளைக்கு எடுக்க மறந்தால் அடுத்த நாளைக்கு double டோஸ் எடுக்க கூடாது. சில மருந்துகள் Fridge இல் வைக்க வேணும். சிலதுகள் இருட்டான இடத்தில நிறைய வெப்பம் இல்லாமல் இருக்கும் இடத்தில வைக்கவேணும். இவை எல்லாம் பார்ப்பதுக்கு சின்ன விடயங்களாக இருந்தாலும் மிகவும் முக்கியமான விடயங்கள். குறிப்பு: 16 மணி நேரம் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் ஒரு கிழமைக்கு இரு நாட்கள் செய்தால் ஈரலுக்கு நல்லது, எல்லா berry வகை பழங்களை smothie அடித்து குடித்தல் , உணவில் organic மஞ்சள் சேர்த்தல் , Apple , Broccoli , இஞ்சி , கொத்தமல்லி இலை , புதினா (mint ) இலை எல்லாம் ஈரலை மற்றும் உடல் பாகங்கள் அனைத்தைம் detox பண்ணும். எனது அவதானிப்புப்படி மருந்துக்களை நான் மேலே சொன்னமாதிரி எடுத்துக்கொண்டு எமது உணவுப் பழக்கங்கள், சிறிது உடற் பயிற்சி, யோகாசனம், தியானம் செய்தால் முக்கால்வாசி நோய்களும் குறையும். கேரளாவில் உள்ள ஆயுர்வேத வைத்திய சாலைகளும் நல்லது ( நிறைய fake ones இருக்கு, தெரிந்தவர்கள் மூலமாக தான் போக வேணும்). யோகாசனம், தியானம் நிச்சயம் பலனளிக்கும் . விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து உள்ளார்கள்.
  7. முயற்சித்து பாருங்கள். பழகிவிடும். நிறையசாப்பிடும்போது இரப்பை எல்லாவற்றையும் சேகரிப்பதற்காக இலாஸ்டிக் மாதிரி இழுபட்டு பெரிதாகி விடும். அதனால் ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் இரப்பை நிறையும் வரை சாப்பிடலாம் போல இருக்கும். அதுவே கஸ்ரப்பட்டு சாப்பாட்டை அரைவாசியாக குறைத்தால் திரும்ப இரைப்பை சிறுத்து பழைய அளவுக்கு வந்து விடும். அதுக்கு பிறகு கணக்க சாப்பிட முடியாது. Obese ஆணவர்களுக்கு சில சமயம் இரைப்பையின் அளவை குறைப்பதற்கு ஒரு பகுதியை இறுக்கி கட்டி விடுவார்கள் . நான் வெட்டிய உடல்கள் சிலவற்றில் பார்த்திருக்கிறேன்
  8. நாம் உண்ணும் உணவினால் மட்டுமே உடல் பருக்கும். ஏனெனில் உடல் உணவினால் தான் ஆனது. மரபு வழியினாலும் வேறு குறைபாடுகளினால் மட்டுமே சாப்பிடாமல் அசாதாரணமாக உடல் எடை கூடும். ஆனால் விரைவில் அது ஒரு நோயாக வடிவெடுக்கும். மற்றது வயது போக உடல் என்னும் இந்த இயந்திரம் நல்லா வேலை செய்யாமல் சாப்பிட்ட சாப்பாட்டை எல்லாம் சேகரிக்க தொடங்கி விடும். 50 வயதுக்கு பின் ( குறிப்பாக பெண்களுக்கு) ஹோர்மோன் குறைபாடால் நல்லாவே கொழுப்பு சேரும். எனவே 30 வயதில் சாப்பிட்ட உணவில் இருந்து 50% தான் சாப்பிட வேண்டும். மற்றது ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்யவே வேண்டும். எமது மரபு அணுக்களும் கொஞ்சம் விளையாடும். சில பேருக்கு கொஞ்சம் கவனித்தால் போதும் மற்றவருக்கு நிறைய கவனம் தேவை. குறிப்பு: பாண் நல்லம் என்று சொல்லவில்லை. சொல்லப்போனால் பாணில சீனி உப்பு, எண்ணெய் , ஈஸ்ட், என்று எல்லாமே இருக்குது. சோறென்றால் தனிய சோறுதான். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை சோறு சாப்பிடா விட்டால் நிறை குறையும்.
  9. இரண்டு விதமான டயபடீஸ் ( Type 1 and 2) சிறுநீர் அதிகமாக உற்பத்தி ஆகும். குருதியில் சீனி அதிகமாக இருப்பதால் பற்கள் சொத்தையாகும். டயபடீஸ் (Type 2)அ து ஒரு இன்சுலின் குறைபாடு. அதனை வைத்தியர்கள் சொன்னபடி ஒழுங்காக கடைபிடித்தால் சாதாரண வாழ்க்கை வாழலாம்.
  10. ஆரம்பத்தில் இன்சுலின் ஊசி எடுக்கும்போது உடல் கலங்கள் நிறைய குளுக்கோஸை உறிஞ்சி எடை அதிகரிக்கும். பிறகு ஒழுங்காக மருந்து எடுக்காட்டி நிச்சயம் மெலிவர். மாச்சத்துக்களை அதிகம் சாப்பிட வேண்டாம். வேளைக்கு சாப்பிடவும். விரதம் அல்லது நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து சாப்பிட்டால் டயபடீஸ் க்கு கூடாது
  11. கோரோனோ சாறி எங்க விக்குது சிறி? நானும் ஒன்று வேண்ட வேணும்
  12. உடல் பருமன் கூடியவருக்கும் குறைந்தவர்க்கும் Omantum அளவு மாறுபடும். எஞ்சிய கொழுப்பு எல்லாம் இதில் தான் அதிகமாக சேமிக்கப்படும்
  13. 4. சுகர் இருக்கும் ஒருவருக்கு எடை குறையுமா? நான் இன்னும்pre-diabetic நிலையிலேயே உள்ளேன் மருந்து/மாத்திரை எடுப்பதில்லை. இந்த நிலயில் உடல் மெலிவு என்ப‌டுமா. 5.stress காரணமாக உடல் மெலியுமா? இதை எப்படி மேற்கொள்வது?6.ஒருவரது metabolism தில் ஏற்படும் மாற்றம் உடலை மெலிய வைக்குமா? கட்டுப்படுத்தாத டயபெடீஸ் இருந்தால் தசைகளில் உள்ள புரதம் உடைந்து உடல் மெலியும். டயபெடீஸ் உள்ளவர்கள் உடற்பயிட்சி இல்லாமல் மெலிந்தால் அவர்களின் தசை புரதம் உடைந்து உடலுக்கு சக்தி கிடைக்கிறது என்று அர்த்தம். இதனால் பக்க விளைவுகள் அதிகம். Prediabetic என்றாலும் ரத்தத்தில் சீனி சாதாரண அளவிலும் பார்க்க அதிகமாக உள்ளதென்று தான் அர்த்தம். ஆனால் தசை புரதம் பாவிக்கப்பட மாட்டாது. எனவே உங்கள் மெலிவுக்கு வேறு காரணம் ஏதும் இருக்கலாம். நல்ல protein, fat நிறைந்த உணவுகளை காய் கறி , பழங்கள் சேர்த்து சாப்பிடவும்.பசுப்பாலை தவிர்க்கவும். ஒரே மாதிரி உணவுகளை சாப்பிடாமல் பல்வகையான உணவுகளை சாப்பிடவும். அதையும் மீறி மெலிந்தால் ஏதாவது வைரஸ் , parasite infection இருக்கா என்று பார்க்கவேண்டும். அதிகம் கவலை பட்டாலும் உடல் மெலியும். Hyper Thyrodism , உணவுக்குழாய் அழற்சி போன்றவையம் காரணமாக இருக்கலாம். Hyper Thyrodism போன்ற காரணங்களால் metabolism அதிகரித்து உடல் மெலியும்
  14. 3. பொதுவான உடல் மெலிவுக்கும்? உடலில் கொழுப்புக்கள் உள்ள பகுதிகள் குறைந்து போவதற்கும் வித்தியாசம் உள்ளதா? உ+ம் கன்னங்கள் ஒட்டிப்போதல்/கைககளில்/பின் பகுதியில் சிறுத்துப்போதல். கன்னங்களில் சின்ன சின்ன தசைகள் அவற்றின் வேலையை செய்வதுக்கு இருக்கிறது ( முக பாவனை, உணவு உண்ணல் , சிரிப்பு, கோபம், அதிருப்தி போன்றவை) கன்னங்கள் உப்பி உள்ளவர்களுக்கு கொழுப்பு சேகரிப்பு அதிகம். முழங்கை பின்னால் கொழுப்பு சேர்வது குறைவு (மிகபருமனான ஆட்களுக்கு இருக்கும்). மெலிவது என்றால் இந்த சேகரித்த கொழுப்புகளை அகற்றுவது தான். கொழுப்பு தசைகளையும், உடல் உறுப்புகளையும் முக்கியமாக வயிற்று பகுதிகளில் நிறைய சேரும். வயிறு வைப்பதற்கு காரணம் Omantum எனப்படும் ஒரு தலையணை போன்ற ஒரு கவசம். அதை குறைப்பதற்கு வயிற்று தசைகளை வேலை செய்ய வேண்டும் (நடை பயிற்சி, push-ups போன்றவை). மற்றப்படி எமது தசைகளில் இருக்கும் புரதம் உடல் பயிற்சியால் அல்லது கடும் gym பயிற்சியால் கூடுமே தவிர குறையாது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது கொஞ்சம் கரையும். அது நல்லதல்ல. இன்சுலினை உழுங்காக எடுத்து மாச்சத்து /சீனி சத்தை பாவிக்கவேணுமே அன்றி தசைகளில் உள்ள புரதத்தை உடைக்கக்கூடாது. நிறைய பக்க விளைவுகள் ஏற்படும். உடல் பருமன் கூடிய குறைந்த Omantum ( சிறு பெருங்குடலை போர்த்தி இருக்கும் )
  15. 1.diuretics (water pills) என்னவென்றால் உட‌லைமெலிய வைக்குமா? 2. உடல் மெலிய விரும்புவர்கள் diuretics (water pills) எடுக்கலாமா? அமெரிக்கவில் இவை பரிந்துரை செய்யப்படுகின்றதே? Water pills உடலில் அநாவசியமாக தேங்கி நிற்கும் நீரை அகற்றி உயர் குருதி அழுத்தத்தை குறைக்கும்.எமக்கு ஏதாவது குறைபாடு இருந்தால் அல்லது மிகவும் உப்பு கூட பாவித்தால் அநாவசிய நீர் தேங்கும். அல்லது அது சிறுநீர், வியர்வை , சுவாசம் மற்றும் தோலினூடாக வெளியேறி விடும். அதனால் மருத்துவர் சொன்னாலே ஒழிய நாங்களாக water pills எடுக்க கூடாது. நீர் உடலை விட்டு நீக்கப்படும் போது பல எலெக்ட்ரோலைட் கள் (முக்கியமாக நரம்புக்கும் தசைக்கும் இயக்கத்துக்கு தேவையான சோடியம் மற்றும் பொட்டாசியம், கல்சியம்) என்பனவும் அகற்றப்படுவதால் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும். எமது உடல் 60% நீரால் ஆனது. அந்த நீர் எமது கலங்களுக்குள் , குருதியில் மற்றும் கலங்களுக்கு இடையில் ஒரு விகித அடிப்படியில் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அந்த விகித அளவு மாறினால் நோய் ஏற்படும். அதனால் water tablets மருந்தாக மட்டுமே பாவிக்க வேண்டும். அதனால் ஏற்படும் நிறை குறைவு தற்காலிகமானது . அத்துடன் ஆபத்தானது . மெலிவதற்கு இந்த மருந்தை பரிந்துரைக்கும் வைத்தியர்களை என்ன சொல்வது? உங்கள் கேள்விகளுக்கு ஒன்றொன்றாக பதில் எழுதுகிறேன்
  16. நான் ஜிம் பக்கமே போறதில்லை ரதி. சகோதரங்கள் வீட்டுக்கு போனால் அவர்களது Treadmill இல் ஒரு நாளைக்கு 30 நிமிடம் அல்லது 1 மணித்தியாலம் வேலை செய்வேன். இன்றைக்குத்தான் ஒரு Treadmill நான் வாங்கியுள்ளேன் (மகனுக்கு) நானும் ஒரு 30 நிமிடமாவது செய்வது என்று இருக்கிறேன். ஆனால் ஒரு கிழமையில் 4 நாளைக்காவது நடப்பேன் ( ஒரு நாளைக்கு 2 மைல் /3.2 கிலோ மீட்டர் ) இது செய்யாமல் மெலிவது கடினம். கடைசி ஒரு கிழமையில் 3 நாளைக்கு 1 மைல்/1.6 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். நடை பயிற்சிதான் இருப்பதிலேயே மிகவும் நல்லது. எமது சுவாசப்பை நல்ல வேலை செய்யும், மூளைக்கு நல்ல இரதம் போகும், தசைகள் எலும்புகள் வலுப்பெறும், மனம் நல்ல ஆரோக்கியம் அடையும் ( இரசாயன உற்பத்தி). சோறை முடிந்தளவுக்கு குறைக்க வேண்டும். Steel cut Oats இல் நல்ல ருசியான புட்டு செய்யலாம். அத்துடன் விருப்பமான இறைச்சி, மீன், முட்டை, மற்ற கடலுணவுகள் வைத்தோ பொரித்தோ சாப்பிடலாம். மாச்சத்து தான் எமது எதிரி ( அரிசி, மாவில் தயாரித்த எல்லா உணவுகள், உருளை கிழங்கு ( பொரித்து அறவே கூடாது), வெள்ளை சீனி ( Agave nectar , coconut sugar , cane sugar கொஞ்சம் நல்லது), carrot , வாழைக்காய், வாழைப்பழம் போன்றவயும் மாச்சத்து கூடியவையே ) கடயில் வாங்கும் பசுப்பால் கூடாது ( ஹோர்மோன் நிறைந்தது) கூடியவரையில் தேங்காய் பாலை பாவிக்கவும். கீரை வகைகள், salad நிறைய சாப்பிடவும். எம்மில் பலர் எமது சாப்பாட்டு பழக்கவழக்கங்களை மாற்ற விரும்ப மாட்டார்கள். ஒரு கொஞ்ச மாற்றத்தினை கொண்டுவந்தால் மிகவும் பலனடையலாம் . உங்களுக்கு 4 மாதத்தில் 14 இறாத்தல் (6.3 கிலோ) குறைய வேண்டுமானால் இதை கடைபிடிக்கவும்: சோறு ஒரு கிழமைக்கு ஒரு நாள். மற்றப்படி ஒரு நாளைக்கு 3 துண்டு பேக்கரி பாண், பட்டர், முட்டை, மீன் பொரியல்/கறி ( அல்லது இறைச்சி கறி /பொரியல் ), நிறைய கீரை, salad , nuts , இளம் சூட்டு தண்ணீர்,பழங்கள், ஒரு கப் தேநீர் அல்லது கோப்பி . ஒவ்வரு நாளும் 45 மணி நேரம் விரைவு நடை. இத செய்தால் காணும். நான் செய்தேன். அதன் பிறகு திரும்ப நிறை அதிகரிக்கவே இல்லை. நிறைய கவலை பட்டு யோசிக்க வேண்டாம். அதனால் பலன் இல்லை. Stress hormones கூடி உடல் பருத்து, டயாபடீஸ் குணம் வந்து, பிரெஷர் கூடி, கொலெஸ்ட்ரோல் கூடி உடலை வருத்துவதுதான் மிச்சம். கொஞ்சம் யோகாசனம் , தியானம் செய்து பார்க்கலாம் ( கடினம் தான்). என்ன ரெடியா ரதி? சமருக்கு 14 pounds குறைந்து நல்ல உற்சாகமாக இருக்கலாம்
  17. Agave nectar இல் fructose sugar உள்ளதால் குடித்தபின் உடனேயே blood sugar கிரென்று ஏறாது. வெள்ளை சீனியில் குளுக்கோஸ் உள்ளதால் திடீரென குருதியில் உள்ள சீனி அளவை கூட்டிவிடும் . இது உடல் பாகங்களுக்கு நல்லதல்ல. டயபெடீஸ் உள்ளவர்களுக்கு இது இன்னும் நல்லது. ஆய்வுகளின் படி Agave nectar குடித்தவர்களுக்கு இன்சுலின் அளவு குருதியில் குறைந்து காணப்படும் கொஞ்சம் நிறை குறைந்தும் இருந்தனர் (வெள்ளை சீனியுடன் ஒப்பிடும்போது)
  18. unsaturated fat இருக்கும் உணவு வகைகள்: அவகாடோ , ஒலிவ் எண்ணெய் , ஓலிவ்ஸ் , peanut பட்டர் , கடலை எண்ணெய் , sunflower , corn , canola எண்ணெய் , salmon மீன் , mackerel மீன், அல்மோன்ட், கச்சான், எள்ளு . இவற்றை சாப்பிட்டில் சேர்த்தால் LDL ( நல்ல கொலெஸ்ட்ரோல்) உடலில் அதிகமாகும்.
  19. Agave sweetener சீனி மாதிரி தான். ஆனால் 5 கிளாஸ் smoothie க்கு 2 தேக்கரண்டி போதும். அதானல் சீனியை விட நல்லது. கொஞ்சமாவது இனிப்பு இல்லாவிட்டால் smoothie குடிப்பது கடினம். யாழ் உறவுகளின் ஊக்கத்துக்கு நன்றி
  20. 😄 உண்மையில் ஆட்டுக்கறி மற்ற இறைச்சியில் பார்க்க நல்லது. ஆனால் பிரச்னை என்னவென்றால் கறி நல்ல இருக்கெண்டு நிறய சோறும் சேர்த்து சாப்பிடுவது, அடிக்கடி சாப்பிடுவது . மரக்கறி சாப்பிடும் மீனும் என்றால் கனக்க சோறு சாப்பிட முடியாது.
  21. கொலெஸ்ட்ரோலும் ஆட்டிறைச்சியும் மற்ற இறைச்சிகளிலும் பார்க்க ஆட்டிறைச்சி இல் கொலெஸ்ட்ரோல் மற்றும் saturated fats குறைந்தே காணப்படுறது. 85 கிராம் மட்டன் இல் 2.6 கிராம் கொழுப்பு தான் இருக்கிறது.மாடு 7.9, செம்மறி ஆடு(லாம்ப்) 8.1, பண்டி 8.2, கோழி 6.3 . கலோரி முறைப்படி பார்த்தாலும் ஆடு 122, மாடு 179, செம்மறி ஆடு(லாம்ப்) 175, பண்டி 174 கோழி 162 காலோரிகள். it has all the amino acids needed by the body along with a high level of iron that can be helpful to anemic persons. இது எனது பல்கலைக்கழக கழக கண்டுபிடிப்பு. ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி ஒன்றின் படி: saturated fat இனால் இதய நோய்கள் அதிகரிக்கும். ஆனால் unsaturated fat இனால் நல்ல கொலஸ்டரோல் அதிகரிக்கும்.இதனால் இதய நோய்களை குறைக்கலாம் என்று கண்டு பிடித்துள்ளது (இது Ampani காண குறிப்பு) ஆனால் எனது சொந்த அனுபவத்தில் எதையும் அளவாக உண்பது தான் நல்ல ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும் . மாடு சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்( இது எனது வேண்டுகோள்). நான் ஆடு , பண்டி இறைச்சிகள் சாப்பிட்டேன். ஆனால் 5 வருடங்களாக இறைச்சி எதுவுமே சாப்பிடுவதில்லை. மீன் வகைகள் தான். பாலும் தயிர் செய்வதுக்கு மட்டுமே வாங்குவேன் (கடை தயிரில் அல்புமின் தான் அதிகம்) Greek yogurt நல்லது என்று நினைக்கிறன் . பிரெஷ், frozen மரக்கறிகள் வாங்கி இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை சமைப்பேன். கருவாடு, நெத்தலி கொஞ்சமாக வெங்காயம் சேர்த்து தேங்காய் எண்ணெயில் பொரித்தால் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். வீட்டில் சமைத்து சாப்பிடுவது ஒரு உற்சாகமும் நல்ல பொழுது போக்கும் ஆகும். smoothie maker இல் frozen பழவகைகள் ( என்ன பழம் மிஞ்சுதோ அவற்றையும் freeze பண்ணி தேவையான நேரத்தில் எடுத்து smoothie செய்யலாம். நான் frozen berries , fresh அன்னாசிப்பழம் , நெல்லிக்காய் தூள், Agave sweetener போட்டு smoothie அடித்து பிரிட்ஜில் வைத்து குடிப்பேன். தேத்தண்ணி, கோப்பி எல்லாம் குறைத்து மூலிகை கோப்பி செய்து coconut sugar அல்லது cane சுகர் போட்டு குடிப்பேன் ( மல்லி, சீரகம், மிளகு, சுக்கு, கறுசீரகம், ஓமம் கொஞ்சம் கோப்பி நல்ல வறுத்து அரைத்து எடுக்க வேண்டும்). கிழமைக்கு ஒருநாள் Tripala என்னும் இந்திய மூலிகை பவுடர் சுடு தண்ணியில் கரைத்து குடிப்பேன். ப்ரிட்ஜில் ஒரு pitcher இல் வாடி கட்டிய தண்ணீர், Lemon துண்டுகள், இஞ்சி, புதினா (mint ) இல்லை ஊறவைத்து வெயில் காலத்தில் குடிப்பேன். நன்னாரி பவுடர் அம்மா உணவகத்தில் இருந்து வேண்டி வந்து அதையும் இடைக்கிடை குடிப்பேன். 50 வயதுக்கு பிறகு இறைச்சி வகைகளை தவிர்த்து, கடல் உணவு, மரக்கறி, தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் தேங்காய் பால் சேர்த்து வீட்டில் சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. வாரத்தில் 3 நாள் வது இரண்டு சாப்பாட்டுக்கு நடுவில் 16 மணித்தியாலம் விட்டு தண்ணீர் மட்டும் குடித்தால் எமது ஈரல் எல்லா கழிவுகளையும் அகற்றி நிறைய நோயில் இருந்து காப்பாற்றும். Organic மஞ்சள் வாங்கி நிறைய சேர்க்கவும். Olive oil இல் பொரிக்க கூடாது. அதை வேறு விதமாக தான் சாப்பிட்டில் சேர்க்கவேண்டும். இங்கு கொலஸ்டரோலை பற்றி பொதுவான கருத்துக்களையும் உண்மை எதுவென்பதயும் பதிவிட்டுளேன் பொதுவான கருத்து : நடுத்தர வயதில் இருந்துதான் கொலஸ்டரோல் பிரச்னை வரும். உண்மை: 9 - 11 வயதளவில் ஒருமுறை 17- 21 வயதளவில் ஒரு முறை . 20 வயதின் பின் 5 வருடத்துக்கு ஒருமுறையாவது ரத்த பரிசோதனை செய்தல் நலம். நீங்கள் கேட்டாலே இன்றி பொதுவாக வைத்தியர்கள் கொலெஸ்ட்ரோல் அளவை செக் பண்ண மாட்டார்கள். ஆதலால் நீங்கள் தான் கேட்டு பரிசோதனை செய்ய வேண்டும் பொதுவான கருத்து :உடல் பருத்தவர்களுக்கு மட்டும்தான் கொலஸ்டரோல் பிரச்னை வரும். உண்மை: உடல் பருத்தவர்களுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கூட. ஆனால் மெல்லிய தேகம் உடையவர்களுக்கும் வரும். பொதுவான கருத்து: ஆண்களுக்குத்தான் கொலஸ்டரோல் பிரச்னை வரும். உண்மை; Atherosclerosis - ரத்த குழாயை அடைக்கும் கொலஸ்டரோல் படிவுகள் பெண்களில் பார்க்கவும் ஆண்களுக்கு நடுத்தர வயதிலேயே வருவது அதிகம். CVD எனப்படும் இதய சம்பந்தமான நோயாலேயே அதிகமான பெண்கள் இறக்க நேரிடுகிறது .50 வயதின் முன்பு ஈஸ்ட்ரோஜென் ஹோர்மோன் பெண்களுக்கு அதிகமாக இருப்பதால் நல்ல கொலஸ்டரோல் (HDL) அதிகரிக்கும். அனால் 50 வயதுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜென் ஹோர்மோன் குறைவதால் கெட்ட கொலஸ்டரோல் (LDL ) அதிகரிக்கும். பொதுவான கருத்து: எமது சாப்பாட்டு முறையும், உடற்பயிற்சியும் மட்டும் தான் கொலெஸ்டெரோல் அளவை தீர்மானிக்கும் உண்மை: இது ஓரளவுக்கு உண்மை என்றாலும், மரபு வழியில் சில பேருக்கு இயற்கையிலேயே கொலெஸ்ட்ரோல் அதிகமாக இருக்கும். அதனால் ஓரளவு உடற்பயிற்சியும் இதயத்துக்கும் ரத்த குழாய்களுக்கு நன்மை தரக்கூடிய உணவுகளை உண்டு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்கலாம் பொதுவான கருத்து: சில உணவுவகை லேபிள் இல் No Cholesterol, Heart healthy என்று போட்டிருந்தால் பயப்படாமல் சாப்பிடலாம் உண்மை: Low fat என்று போட்டிருந்தாலும் மிகும் ஆபத்தான saturated fat, trans fats மற்றும் total கலோரி அளவுகள் கூட இருக்கும் .வியாபார தந்திரத்துக்காக முழு பக்கெட்டில் உள்ள அளவுகளை போடாமல், per serving என்று போட்டிருப்பார்கள் . பொதுவான கருத்து: பட்டரிலும் பார்க்க மாஜரின் இல் குறைந்த கொலெஸ்ட்ரோல் உண்டு உண்மை: இரண்டிலயும் கூடாத கொழுப்பு உண்டு, soft மாஜரின் கொஞ்சம் நல்லது. எதுவாகினும் 0 ZERO trans-fat உள்ள உணவை வேண்டவும். அதிகநாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க நிறைய transfat , சீனி, உப்பு, preservative எல்லாமே போடுவார்கள். நான் பொதுவாக எதையும் சூப்பர்மார்கெட் shelf இல் இருந்து வேண்டுவதில்லை ( மா, சீனி, pasta , அரிசி இது போன்ற உணவுகளை தவிர்த்து) . பாணும் பேக்கரி இல் செய்ததுதான் வேண்டுவது. டின் உணவுகள் அடிக்கடி வேண்ட கூடாது. Frozen vegetables, fruits நல்லது.
  22. தமிழ் சிறி, , கிருபன், புரட்சிகர தமிழ்தேசியன், ஜெகதா துரை, ampanai, suvy, goshan_che, ஈழப்பிரியன், ரதி, நுணாவிலான், அபராஜிதன், நிழலி, Maruthankerni, உங்கள் ஊக்கத்துக்கு நன்றி. இப்ப கொலஸ்டரோலை பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறேன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.