Jump to content

nilmini

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    929
  • Joined

  • Last visited

  • Days Won

    14

Everything posted by nilmini

  1. வணக்கம். இது Circadian rhythm சம்பந்தப்பட்டது. இதைப்பற்றி விரைவில் விரிவாக விளக்கம் தருகிறேன். குறிப்பு: நான் MD இல்லை. PhD .மருத்துவ கல்லூரியில் படிப்பிப்பதனாலும், research செய்வதனாலும் எனக்கு தெரிந்த சில விடயங்களை பதிவிடுகிறேன்.
  2. ஈழப்பிரியன், குமாரசுவாமி இரண்டு அண்ணாக்களுக்கும் விரைவில் பதில் அளிக்கிறேன்
  3. இப்ப வேலையும் குறையத்தானே. அத்துடன் எனக்கு இந்த பதிவுகள் இடுவது மகிழ்ச்சியே. வலி என்று ஒரு உணர்வு இருப்பதே எமது உடலை நாமே காயப்படுத்தாமல் இருப்பதுக்குத்தான் (இப்ப மேலை நாடுகளிலும் எமது உயர்மட்ட மக்களினதும் Cosmetic surgery விசரால் காது மூக்கு எல்லாம் வெட்டி சரி செய்வதுபோல கை காலையும் வெட்டி சரி பார்க்க நிற்பார்கள்) நடைப்பயிற்சி போன்ற அன்றாட வேலைகளினால் பெரிய பாதிப்பொன்றும் வராது. ஒன்று ரெண்டு நாளைக்கு மருந்தை எடுக்காமல் விட்டு முந்தின வலியிலும் பார்க்க மிகவும் அதிகமான வலி இருக்கா என்று பார்க்கலாம். அத்துடன் இரண்டு மூண்டு வருடங்களில் டோசை கூட்டுவார்கள். ஏனெனில் உடல் இந்த டோசுக்கு பழகிப்போய் மருந்து எடுத்தாலும் வலிக்கும்.
  4. நல்லெண்ணெய் பச்சை எள்ளு. Sesame எண்ணெய் கருக வறுத்த எள்ளு. Sesame எண்ணெய் பொரிக்க உதவாது. புகை வரும். சமயல் செய்யும் போது நடுவில் அல்லது இறுதியில் சேர்ப்பது பதில் பதிவிட நேரமாகி விட்டது. வல்லாரையில் உள்ள ஏதோ ஒரு இரசாயனப் பொருள் Collagen எனப்படும் நார் பொருள் உற்பத்தியை பெருகும். இந்த கொலாஜென் இல்லாத இடமே நம் உடலில் இல்லை. உடல் உறுப்புக்களை சுற்றி பார்சல் மாதிரி சுற்றி பாதுகாக்கும். குருதிக்குழாய்கள் மற்றும் நரம்புகளை சுற்றி இருந்து அவை திறம்பட செயல்பட உதவும். எமது தோலுக்கும் மிகவும் அவசியம். சிகரெட் குடிப்பதால் கொலாஜென் நார்கள் வெடித்து விரைவில் தோல் சுருங்கும். 60 வயதுக்கு மேல் எல்லோருக்கும் கொலாஜென் அளவு குறையும். எமது வன் , மென் எலும்புகளில் நிறய கொலாஜென் உண்டு. அவை இல்லாமல் எமது எலும்புகள் தூள் போல உதிர்ந்து விடும். அத்துடன் எலும்பு மூட்டுகளுக்கு நடுவில் இருக்கும் மென் எலும்பு (cartilage) மிகவும் முக்கியமானது ஒன்று. ஆர்த்ரிடிஸ் அல்லது வேறு காரணங்களால் கார்டிலேஜ் பாதிக்கப்பட்டால் மாறுவது கடினம். ஏனென்றால் அவைக்கு தனிப்பட்ட குருதி குழாய்கள் கிடையாது. சுற்றிவர உள்ள குருதிக்குழாய்கள் மூலம் தான் கார்டிலேஜ் வளர உதவும் உணவுப்பொருட்கள், திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் எல்லாம் கிடைக்கப்பெறும். அதை பாவித்து ஏற்கனவே இருக்கும் கார்டிலேஜ் இல் உள்ள கார்டிலேஜ் முன்னோடிகளில் இருந்து புதிய கார்டிலேஜ் வளரும். அதற்கு வல்லாரை போன்ற உணவுகள் மிகவும் உதவுகின்றன என்று ஆய்வு மூலம் கண்டு பிடித்துள்ளார்கள். எனவே ஒவ்வொரு நாளும் சில வல்லாரை இலைகளை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைப்பது உறுதி. அத்துடன் நெருப்பால் ஏற்பட்ட அல்லது மிகவும் நாள் எடுத்த மாறக்கூடிய புண்கள் இருக்குபோது வல்லாரை சாப்பிட்டால் விரைவில் புண் ஆற உதவும். நாள் எடுத்து மாறும் காயங்கள் ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்தும். ஏனென்றால் குருதியில் இருக்கும் திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் காயத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர நேரம் எடுப்பதால் எமது உடல் வடுக்களை ஏற்படுத்தி மாற்றப்பாக்கும் . வல்லாரை போன்ற உணவுகள் இரத்தத்தில் இருந்து இந்த மூலப்பொருட்கள் விரைவில் காயத்தை வந்தடைந்து வடு இல்லாமல் மாற்ற உதவும். Chemotherapy செய்பவர்களுக்கு கொஞ்சம் மூளை செயல்பாடுகள் குறைந்து வரும். அதனை ஓரளவேனும் நிவர்த்தி செய்ய வல்லாரை உதவும். பண்டைய காலத்தில் வல்லாரைக்கு யோசனை வல்லி என்று பெயர் (ஞாபக சக்தியை கூட்டுவதால்). Alzheimer's நோயை கொஞ்சமாவது குறைக்கவும் உதவும். நரம்பு சம்பந்தமான எந்த நோயுமே காலம் போக அதிகரித்துக்கொண்டே போகும். மனஉளைச்சலை போக்கவும் , நித்திரையின்மையை போக்கவும் உதவும். பக்டீரியா , வைரஸ், மற்றும் ஒட்டுண்ணிகள் (urinary tract infection(UTI), shingles, leprosy, cholera, dysentery, syphilis, the common cold போன்ற நோய்களுக்கு பண்டைய காலந்தொட்டு வல்லாரை மருந்தாக பயன் படுகிறது
  5. Opium drug, poppy செடிகளின் காய்களில் இருந்து தான் எடுத்து போதை பொருளாக பாவிப்பார்கள். உண்மையில் இது அளவாக பாவித்தால் நன்மையே ஒழிய தீமை இல்லை. ஆனால் போதைக்கு அடிமையாகிறவர்களே அதிகம். இந்த drug வலியை வாங்கி மூளைக்கு அனுப்பும் செய்முறையை தடுப்பதோடு மட்டும் அல்லாது, Dopamine எனப்படும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு இரசாயனத்தையும் மூளையில் இருந்து சுரக்கத்தூண்டும் ( இப்ப விளங்கும் ஏன் 20 வயது பொடியன் மாதிரி உற்சாகம் வருகுது என்று)🕺 எனவே இயற்கையான ஓபியம், Tilidin மாதிரியான செயற்கை ஓபியம் மருந்து வகைகள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது . அமெரிக்கா போன்ற நாடுகள் ஓபியம் போதை கூடியது என்று Heroin என்ற drug ஐ கண்டு பிடித்தார்கள். ஆனால் Heroin ஒப்பியத்தை விட மிக அதிகமான போதையை கொடுப்பதுடன், மிக அதிகமான dopamine ஐ சுரக்கத்தூண்டி மகிழ்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு போகும். அதனால் அதை எடுப்பவர்களுக்கு நமக்கு ஏற்படும் சிறிய மகிழ்ச்சிகள் எல்லாம் அவர்களால் உணரமுடியாது. Heroin ஐ எடுத்து அதிகமான dopamine சுரந்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். கடைசியில் உண்மையில் heroin மருந்து தேவைப்படுபவர்களை விட போதைக்கு அடிமையானவர்கள் தான் அதிகமாக எடுக்கிறார்கள்.
  6. விரல் நுனி நரம்புகள் அல்லது குருதிக் குழாய்கள் பாதிப்படைந்தால் இப்படியான விறைப்பு வரும். சிலருக்கு இது அப்பப்ப வந்து போகும். ஆனால் தொடர்ந்து இருந்து வழமையான வாழ்க்கை முறையை பாதித்தால் இதற்கு பல வகையான காரணங்கள் இருக்கலாம். டயபெடீஸ் உள்ளவர்களுக்கு விரல் நுனி நரம்புகள் பாதிக்கப்பட்டு விறைப்பு ஏற்படும் (“peripheral neuropathy”) நரம்புகள் தாக்கப்பட்டால் திரும்பி உயிர்பெறும். ஆனால் முற்றாக பாதிக்கப்பட்டால் திரும்ப வரவே வராது. அதனால் தான் நரம்பு சம்பந்தமான எந்த நோயையும் மாற்றமுடியாது. antidepressants, anticonvulsants, skin creams போன்ற மருந்துகள் விறைப்பை உணராமல் இருக்க உதவும். Carpal Tunnel Syndrome: மணிக்கட்டில் ஒரு சிறு இடைவெளி மூலம்தான் கை விரல்களுக்கு செல்லும் நரம்புகளும் , குருதிக்குழாய்களும் செல்லும். இதனால் மணிக்கட்டுக்கு அழுத்தம் தரக்கூடிய வேலைகளை தொடர்ந்து நீண்ட நேரம் செய்வதால் வருவது (computer keyboard , packing , cutting ) இவை தவிர தசைகள் இழுபடுவதாலும் , குருதிக்குழாய்கள் இழுபடுவதாலும் மிகச்சிறிய கட்டிகள் உருவாவதாலும் விறைப்பு ஏற்படலாம். இதற்கு சத்திரசிகிச்சை முறைகள் இருக்கு. Alcoholic polyneuropathy: மதுபானம் அதிகமாக குடிப்பவர்களுக்கு வரும் விறைப்பு Fibromyalgia: விரல் நுனி விறைப்போடு மட்டுமல்ல தசைகளை பாதித்து உடல் முழுதும் நோ எடுக்கும். விட்டமின் B 12 அதிகமாக இருக்கும், கோழி, ஈரல், salmon , tuna மீன் , நண்டு, கணவாய், oyster , clams பால், சீஸ். தயிர் , முட்டை போன்றவை பொதுவாக விறல் நுனி விறைப்பை குறைக்க உதவும்.
  7. மிகவும் நன்றி உடையார். எமக்காக மட்டும் வாழாமல் மற்றவர்கள் தேவைகளையும் கொஞ்சமாவது உணர்ந்து செய்வது மிகுந்த மன நிறைவை தருகிறது. அண்ணை நல்ல பகிடிக்காரன் என்று தெரியும். என்றாலும் தப்பித்தவறி பாம்பை சாப்பிட்டாலும் என்றுதான் ........
  8. இதென்ன சீனாக்காரன் மாதிரி நிற்பன, பறப்பன , மிதப்பன எண்டு எல்லாத்தையும் சாப்பிட்டு கோரோனோ மாதிரி வைரஸ் தான் கிடைக்கும். அது எல்லாம் உண்மை இல்லை. தசைக்கு தேவை நல்ல ஒட்சிசன் (அதுதான் சுவாசப் பயிற்சி என்று சொன்னேன்)புரதம், கொழுப்பு, விட்டமின் , மினெரல்ஸ், detoxifying food மற்றும் படுப்பதுக்கு நல்ல firm ஆன மெத்தை போன்றவை. தசைக்கு ஒட்சிசன் பத்தாட்டி நோ அதிகமாகும்
  9. இரண்டு மருந்துகளுமே குறைந்த டோஸ் தான் எடுக்கிறீர்கள். MetoHEXAL® Succ வந்து Beta Blocker. heart ஐ வேகமாக அடிக்கவிடாமால் தடுக்கும். படிகள் ஏறும்போது அல்லது வேகமாக நடக்கும்போது களைப்பு இருக்கும். ஒரு நாளைக்கு 15 + 15 நிமிடம் நடந்தால் நல்லது. MetoHexal எடுப்பதால் மிக மிக சில பேருக்கே தசை வலி இருக்கும். என்றபடியால் இந்த மருந்தால் தான் நோகுது என்று சொல்ல முடியாது. காலை சாப்பாட்டுடன் 1/2 கிளாஸ் தண்ணி உடன் குடிக்கவேண்டும்.அத்துடன் வலிக்கு தந்துள்ள மருந்து மோசமானதல்ல. ஓபியம் போன்ற drug வகைகளை ஆய்வு கூடத்தில் தயாரித்து விற்பது. இந்த மருந்து எடுத்து 15 - 20 நிமிடங்களில் தான் வேலை செய்யத்தொடங்கும். எனவே வலி இருந்தாலே ஒழிய ஒவ்வொரு நாளும் எடுக்க தேவை இல்லை. உண்மையில் உங்களுக்கு வலி இருக்கு ஆனால் Tilidin அதை மறைப்பதால் மூளைக்கு வலி இருப்பது தெரியாது. என்றபடியால் இந்த சுலபமான மூச்சு பயிற்சியை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது செய்யவும். https://www.youtube.com/watch?v=kdLTOurs2lA
  10. வணக்கம் ஈழப்பிரியன் அண்ணை சாதாரணமாக Leflunomide 20mg ஒவ்வொரு நாளும் தான் எடுப்பார்கள். 10mg தான் குறைந்த டோஸ். நீங்கள் Prednisone 2.5 mg ஒன்றுவிட்ட ஒருநாள் எடுப்பது நல்ல அறிகுறி . ஏனென்றால் இந்த மருந்து 2 mg இலிருந்து 15 mg வரை டோஸ் குடுப்பார்கள் . அதுவும் ஒவ்வொரு நாளும். அத்துடன் Prednisone மருந்து ஒருநாளைக்கு இரண்டு பங்காக பிரித்து எடுக்க சொல்வார்கள். ஏனென்றால் இதன் வீரியம் இரத்தத்தில் கன நேரம் இருக்காது. இவற்றை வைத்து பார்க்கும்போது உங்களுக்கு தகுந்த நேரத்தில் diagnose பண்ணி இருப்பார்கள் போல இருக்கு. இரண்டு மருந்துமே வெள்ளை கலங்களை கட்டுப்படுத்தவே உதவுகின்றன. அதனால் உடல் எதிர்ப்பு சக்தியை கூட்டக்கூடிய, ஈரல், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க கூடிய உணவு வகைகளை நிறைய உண்ணவேண்டும். இவற்றை பற்றி இன்னொரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன் நல்ல தகவல் உடையார்.வல்லாரையை பற்றி நிறைய ஆய்வு நடக்கிறது. உங்கள் பதிவை பார்த்தபின் சில ஆய்வு கட்டுரைகளை படித்தேன். எழுதி முடித்துவிட்டு பதிவிடுகிறேன்.
  11. மிகவும் நன்றி. இது நான் மிகவும் விரும்பி செய்யும் பங்களிப்பு. உண்மைதான் . ஆங்கிலம் பேசாத நாடுகளில் வாழும் எமது மக்களுக்கு இது மிகவும் உதவும். அத்துடன் எங்கும் இதே நிலை தான். சிலவேளை ஒரு சிறிய பிரச்சனைக்கு டொக்டரிடம் appointment வைத்து மணிக்கணக்காக காத்திருக்க வேண்டும். polyps எனப்படும் முளைகள் உணவுக்குழாயின் முடிவுப்பகுதியில் இருந்தால் Colonoscopy மூலம் கண்டுபிடிப்பார்கள் . அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவார்கள் (சிலவேளை கான்செர் ஆகிவிடுமோ என்று ) மற்றபடி மூல கான்சராக வர 0.1% யிலும் குறைந்த சந்தர்ப்பமே இருக்கு. சில hemorrhoids தானே போய்விடும். ஆனால் இரத்த நாளங்கள் அதற்குள் இருந்து உறைந்துபோய்விட்டால் தானே போகாது. அப்போதுதான் நான் குறிப்பிட்ட 3 வகை விதங்களை செய்யலாமா என்று பார்ப்பார்கள். அதுவும் முடியாவிட்டால் தான் அறுவை சிகிச்சை. Sitz bath உடன் Epsom உப்பு வெது வெதுப்பான நீரில் கலந்து பாவிக்கலாம் நன்றி சுவி
  12. அறுவை சிகிச்சை செய்யாமல் 3 விதமான முறைகள் உண்டு. Rubber band ligation, Sclerotherapy, Coagulation போன்ற சுலபமான வழிகள் . இவை ஒன்றும் வேலை செய்யாவிட்டால் அறுவை சிகிச்சை தான் செய்யவேணும். உங்களுக்கு இருக்கக்கூடிய External hemorrhoids, internal hemorrhoids, Prolapsed hemorrhoids இவை எதுவுமே கான்சராக வருவது மிகவும் அரிதே. Polyps இருக்கா என்று Colonoscopy செய்து பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நார்ச்சத்து கூடிய உணவு வகைகள். தண்ணீர், நடை பயிற்சி, மற்றும் உடற்பயிற்சிகள் முக்கியம். sitz baths எடுப்பதும் நல்லது
  13. Leflunomide DNA எமது உடல் கலங்கள் இரட்டிப்பாகி பழைய கலங்கள் இறக்க புது கலங்களை உருவாக்கி உடலை தொடர்ந்து சீராக்கி கொண்டு இருக்க உதவும். இந்த DNA இரட்டிப்பாவதை மிகவும் குறைக்கும். அந்தவகையில் Leflunomide குருதியின் நோய் எதிர்க்கும் வெண்கலங்கள் பெருகாமல் குறைக்கும். ஏனென்றால் Autoimmune disease ஆனா Rheumatic ஆர்திரிடிஸ் இருப்பவர்களுக்கு இந்த வெண்கலங்கள் எலும்பு மூட்டுகளுக்குள் இருக்கும் cartilage ஐ தாக்கி அழிக்கும் . ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த வெண்கலங்கள் எமது நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் அவசியம். இந்த மருந்தை தந்து இருப்பதால் உங்களுக்கு இருப்பது Rheumatic ஆர்திரிடிஸ் ஆக இருக்கலாமோ என்று யோசிக்கிறேன். இல்லாவிட்டால் இதை எடுப்பது அனாவசியமானது 30 நிமிட நடை பயிற்சி பொதுவான உடல் நலத்துக்கு உதவும். நுரையீரலுக்கும் நல்லது .64 வயது என்பது ஒரு வயதே இல்லை. 85 வயது வரும்வரை முதுமை இல்லை. "மகள் காலம் முழுக்க கை கால் குறண்டி கொஞ்ச நாளில் சோறும் அள்ளித் தின்னேலாது என்று கூட வயது வாழவேணுமா? அல்லது குறைய வயது வாழ்ந்தாலும் நோவில்லாமல் ஒழுங்காக இருக்கும்வரை இருக்கப் போறீங்களா? " மகள் சொல்வது சரி. எனக்கு வந்தால் நான் மருந்தை எடுத்து இருக்கும் மட்டும் நல்லா வாழ்ந்திட்டு போகலாம் என்று தான் நினைப்பேன். இப்போதைக்கு தைரொய்ட் பிரச்னை ஒன்றுதான். மருந்தையும் ஒழுங்காக அதிகாலையில் எடுத்து அன்னாசி smoothie யும் குடிக்க நல்ல முன்னேற்றம் தெரியுது.
  14. வணக்கம் குமாரசாமி அண்ணை உங்களுக்கு எல்லாத்தசைகளிலும் நோ இருக்குதா அல்லது சில பாகங்களில் மாத்திரமா? எதாவது ஒரு குறித்த மருந்து எடுக்க துடங்கிய பின் ஏற்பட்ட நோவா? எவ்வளவு காலம் நோவுக்கு மருந்து எடுக்க வேணும் என்று சொன்னார்கள்? மருந்து எடுக்காவிட்டால் தாங்க முடியாத நோவா? தசை நோக்களுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. வேறு மருந்துகளால் வந்த நோ என்றால் என்ன மருந்து என்று அறியத்தரவும். அல்லது என்னத்துக்காக தசைகள் நோகுது என்று சொல்லியிருப்பினம். அந்த பேரை அறியத்தரவும். அதை வைத்துக்கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் எண்டு பாப்பம். பொதுவாக நாம் எடுக்கும் எல்லா மருந்துகளுமே அதன் வேலை முடிந்ததும் ஈரலுக்கு சென்று செயல் இழந்து பின்பு சிறுநீரகத்துக்கு சென்று அங்கிருந்து சிறுநீர் மூலம் வெளியேறும். ஆனால் சில மருந்துகள் அதிக விளைவை ஏற்படுத்தலாம். விபரம் அறியத்தரவும்
  15. Cortisone ஒரு steroid மருந்து.இது உடலில் மற்ற ஒரு இயற்கையான செய்முறைகளை நிப்பாட்டி செயற்கை முறையில் inflammation ஐயும் நோவையும் குறைக்கும். இதனால் இயற்கையான நோய் எதிர்க்கும் தன்மை குறையும். ஆனால் வேறு வழி இல்லாவிட்டால் எடுத்ததுதான் ஆக வேணும். Cartilage இரு எலும்புகளுக்கு நடுவில் உடல் முழுவதும் இருப்பதால் Cartilage replacement ஆர்தரைட்டிஸ் உள்ளவர்களுக்கு செய்ய முடியாது. Sports Injury இல் சிறு துண்டு கார்டிலேஜ் உடைந்து போனால் replace பண்ணலாம். Cartilage க்கு எலும்பு மாதிரி சொந்த ரத்த குழாய்கள் இல்லை . அதனால் தான் sports injury, Juvenile arthritis, Osteoarthritis இன் போது காயப்பட்ட Cartilage கள் ஆற முடியாமல் இறந்து போய் விடுகின்றன . Muscle /தசைகள் எலும்புடன் ஒட்டி இருப்பதால் அவற்றை massage செய்து Hot /Cold pads வைத்தால் நோ கொஞ்சம் குறைந்த மாதிரி இருக்கும்.
  16. அல்லது பார்த்துவிட்டு இங்க வேலையில யாராவது மண்டையை குழப்பி மறந்து விட்டேனோ தெரியவில்லை
  17. மிகவும் நன்றி. இன்னும் நிறைய மருத்துவ ஆலோசனைகளை பகிரலாம் என்று இருக்கிறேன் வணக்கம் உடையார். மிக்க நன்றி. இன்றுதான் உங்கள் கேள்வியை பார்த்தேன். யாரவது கேள்வி போட்டால் அல்லது பதில் அளித்தால் noticing இல் தெரியும் என்று நினைத்தேன். இதற்கு பதில் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன். முடிந்ததும் பதிவிடுகிறேன் . இன்றுதான் இந்த கேள்வியை பார்த்தேன். நிச்சயம் இரண்டு நாற்களுக்குள் பதில் பதிவிடுகிறேன்
  18. மேலை நாட்டவர்களும் இப்போது எமது உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அரிசி வகைகள், அரிசிமா, தேங்காய் எண்ணெய் , எமது வாசனை திரவியங்கள் , மளிகை வகைகள் எல்லாமே நல்லது என்று சாப்பிடுகிறார்கள். பிரச்சனை என்னவென்றால் இப்போது உடற்பயிற்சி குறைந்து விட்டது, சாப்பாடுகளும் முந்தி மாதிரி இல்லாமல் Genetic engineering ஆல் மாத்தின உணவுகளாக இருக்கு. முன்னோர் அரிசி வகை மற்றுமின்றி நிறைய தானியங்கள், மூலிகைகைகள் என்று சாப்பிட்டார்கள். நாங்கள் அப்படி இல்லை. அதனால் தான் உடலுக்கு உடனே சீனியை குடுக்கவல்ல அரிசியை விட்டு புரதம், கொழுப்பை சாப்பிட்டால் அதில் இருந்து சக்தியை எடுக்க நேரமாகும் , சேமிக்கப்படவும் மாட்டுது (புரதம்)
  19. விரல் மூட்டுகள், முழங்கால் மூட்டுக்கிடையே இருக்கும் Carilage என்பதும் மெல்லிய எலும்பு வகை தேய்வதாலேயே ஆத்ரிட்டிஸ் வருகிறது. இந்த கார்டிலேஜ் இருப்பதனால் முக்கியமாக இரண்டு நன்மைகள். ஒன்று எலும்பும் எலும்பும் தேய்ந்து நோவில்லாமல் இருக்கும், மற்றது வளரும் பிள்ளைகளின் எலும்புகள் ஒரு பக்கமாக மட்டும் வளரும் மற்றப்பக்கம் இந்த கார்டிலேஜ் தொப்பி போல இருந்து மாற்றப்பக்கமும் எலும்பு வளராமல் தடுக்கும். ஆர்திரிடிஸ் இல் மூன்று வகை உண்டு.சிறுவர்களுக்கு வரும் Juvenile ஆர்த்ரிடிஸ் . இது Autoimmune இனால் வருவது. Juvenile ஆர்திரிடிஸ் உள்ள பிள்ளைகளுக்கு அதுதான் எலும்புகள் வெளியில் தள்ளப்பாக்கும் . எமது ரத்தத்தில் உள்ள வெள்ளை கலங்கள் இந்த cartilage ஐ தாக்கி அழித்து விடும். இதனால் கை, கால் விரல்கள், முழங்கால், முழங்கை, தோள்மூட்டு போன்ற இடங்களில் இரு எலும்புகளுக்கு நடுவே இருக்கும் கார்டிலேஜ் தேஞ்சு புண்ணாகி நோ எடுப்பதோடு இல்லாமல் நடக்க, கை தூக்கி வேலை செய்யும்போது தேய்மானம் கூடி மிகவும் வலி எடுக்கும். இந்த juvenil ஆர்திரிட்டிசுக்கு சில வலி மிகுந்த சிகிச்சைகள் உண்டு. ரெண்டாவது வகை Gouty ஆர்திரிடிஸ் அல்லது Gout என்று பெயர். இது மதுபானம், முக்கியயமாக wine , Redmeat எனப்டும் சிவப்பு நிறமுடைய இறைச்சி வகைகள் நிறைய எடுப்பதால் வருவது. இவற்றில் Uric acid கூட. இந்த அமிலம் முட்டுக்கு நடுவில் படிந்து வீங்கி நோகும் . ஒழுங்கான சாப்பாட்டு முறையால் இந்த மூட்டுவலி மாறிவிடும். மூண்டாவது இது பொதுவாக எல்லோருக்கும் 90 வயதுக்கு மேல் கட்டாயம் வரும் Osteoarthuritis .ஆனால் ஆனால் மரபு வழியால் இரு பாலாருக்கும் 50 வயதுக்கு மேலே வரலாம். இதை Wear and Tare ஆர்திரிடிஸ் என்பார்கள். இதற்கு ஒரு வைத்தியமும் இல்லை. தேய்வதால் ஏற்படும் வீக்கம் , நோ சுகப்பட மருந்து எடுக்கலாம். உங்களுக்கு உள்ளது osteoarthritis என்றே நினைக்கிறன் . அதற்கு ஏன் steroid உள்ள மருந்தை தந்தார்களோ தெரியவில்லை. Nonsteroidal anti-inflammatory drugஎனப்படும் steroid இல்லாத inflammation ஐ மாற்றக்கூடிய மருந்துகள் உண்டு. இந்த மருந்து autoimmune ஆல் வரும் ஆர்திரிடிஸ்குத்தான் நல்லமென்று நினைக்கிறேன். ஏன் வீணா ஈரலையும் கெடுப்பான்? இந்த மருந்து ஈரலில் தான் activate ஆகும் . அதனால் ஈரலுக்கு வேலை கூட. கொலெஸ்டெரோல் இருந்தால் osteoarthritis மாற கஸ்டம். ஆனால் எப்படிப்பட்ட கொலெஸ்ட்ரோலையும் உணவால் மாற்றலாம் (மரபு வழி வந்ததை விட). இந்தவகையான osteoarthritis க்கு Nonsteroidal anti-inflammatory drugs: Aspirin, celecoxib (Celebrex), diclofenac (Cambia, Cataflam, Voltaren-XR, Zipsor, Zorvolex), diflunisal (Dolobid - discontinued brand), etodolac (Lodine - discontinued brand) ibuprofen (Motrin, Advil), indomethacin (Indocin) இருக்கு. Sardines, mackerel, salmon, tuna, Codliver oil, தயிர், நெய், பொட்டுக்கடலை, இலை வகைகள், ப்ரோக்கோலி , Green tea , உள்ளி, விட்டமின் A (தயிர், ஈரல், முட்டை) விட்டமின் C ( பழங்கள், குறிப்பாக Berries , kuda மிளகாய், lemon , தேசிக்காய், தோடை ) , Nuts , Seeds , தேங்காய் எண்ணெய் , கரட் , கீரை, மாம்பழம், தக்காளி, watermelon , பப்பாளி , கத்தரி , மாதுளை போன்றவற்றில் நிறைய Antioxidant இருப்பதனால் inflammation ஐ குறைக்க உதவும். எனது சொந்த அறிவுரை என்னவென்றால், மருந்து ஒன்றை Nonsteroidal anti-inflammatory drugs prescribe பண்ண கேட்டு பாருங்கள். அல்லது over the counter Advil, Asprin, mortin மாதிரி குளுசைகளை நோ வரும்போது எடுத்துப்பாருங்கள் . மேலுள்ள உணவுகளை எமது சாதாரண உணவுடன் சேர்த்து சாப்பிடுங்கள். நீங்கள் குறிப்பிட்டமாதிரி Steroid மருந்துகள் நெடுக எடுப்பது கூடாது தானே
  20. புட்டும் கடலை கறியும் விளாசுது . அண்ணி நல்லா சமைப்பா போல தெரியுது.
  21. கிட்டத்தட்ட இப்படி ஒரு காட்சியை மின்னேரிய சரணாலயத்தில் பார்த்து வீடியோவும் பிடித்து வைத்திருக்கிறேன்.
  22. கேல் , ஆப்பிள் உடம்புக்கு நல்லம். சிலபேருக்கு வாய்வு. வாய்வு கூட உள்ள நாட்களில் என்ன சாப்பிட்டோம் என்று குறிப்பெழுதி வைத்து எந்தெந்தெ சாப்பாடுகள் எமக்கு ஒத்து வராது என்று கண்டு பிடிக்கலாம் . நிச்சயம் திரிபலா (Triphala once a week ), நன்னாரி பவுடர், மற்றும் மூலிகை கோப்பி ( மல்லி, சீரகம், மிளகு, சுக்கு, ஓமம் , கருஞ்சீரகம் ) குடிக்கவும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.