-
Posts
929 -
Joined
-
Last visited
-
Days Won
14
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nilmini
-
ஓமோம். அப்போதே மாலைதீவு போய்விட்டேன். ஆனால் வருடத்துக்கு 3 தரம் வீட்டுக்கு வருவேன். அப்போது கடற்கரை பக்கம் வந்தால் பெடியள் விளையாடுவதை பார்த்தமாதிரிதான் இருக்கு.
-
மிகவும் நன்றி ஐயா . நாம் மட்டும் வாழாமல் மற்றவர்களுக்கும் எம்மால் இயன்றதை செய்ய வேணும் என்றுதான் முயற்சிக்கிறேன்
-
வணக்கம் ஏராளன், விரைவில் இதனைப்பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடுகிறேன்.
-
Sunscreen lotions SPF 15 93 வீதம் SPF 30 97 வீதம், SPF 50 98 வீதம் UVB கதிர்களை தோலை அடையாமல் தடுக்கும். இதனால் மிக குறைந்தளவு வைட்டமின் D தான் தயாரிக்க முடியும். எமது தோலுக்கு Sunscreen அவ்வளவு தேவைப்படாது. நான் sunscreen மிகவும் அரிதாகத்தான் பாவிக்கிறேன். ஆனால் வெயிலில் நிறைய நேரம் நிக்க பஞ்சி. இப்பிடி ஒரு தோட்டம் செய்து வெயிலில் இருந்துகொண்டு Zoom படிப்பிப்பு, மீட்டிங் எண்டு கொஞ்சம் வைட்டமின் தயாரிக்கிறேன்😬 எந்த வருடம் கிரிக்கெட் விளையாடினீர்களோ தெரியாது. எமது பசல்ஸ் ஒழுங்கை வீட்டில் இருந்து காலி வீதியை கடந்து ஹம்மர்ஸ் ஒழுங்கையால் ஒவ்வொரு நாளும் அப்பாவுடன் கடற்கரைக்கு போகும்போது பெடியள் விளையாடுவதில்லை.
-
நல்ல தகவல் உடையார்
-
நானும் சாடை மாடையா அப்படிதான் யோசிச்சன் சிறி 🤣
-
என்னத்த நினைத்து சிரிச்சனீங்கள் என்று தான் கேட்டேன் 😂அப்ப பேசாம கொழுப்பு கூடின மீன் வகைகளை எல்லாரும் சாப்பிட்டு வெள்ளயாகவே இருங்கோ
-
இந்த சிரிப்புக்கு அர்த்தம் என்ன ஈழப்பிரியன் அண்ணா? 😂🤔
-
எமது இனத்தவர் சிறிது வெள்ளையாக இருந்தாலும், தோல் வெள்ளைக்காரர்களை விட தடித்தது. என்றபடியால் அது (Type lV or type V) 4-5 ஆவது தோல் தன்மையில் அடங்கும். 6 வகை தோல்கள் உள்ளன. என்றபடியால் கிழமைக்கு 3-4 நாட்கள் 2 மணிநேரம் வெய்யிலில் நின்றால்தான் சராசரியாக ஒவ்வொரு நாளும் தேவைப்படும் 1,000 IU (25 mcg) வைட்டமின் தயாரிக்கலாம். சூரியன் உச்சத்தில் இருக்கும் போது நின்றால் 1 மணிதியாலபடி ஒரு கிழமையில் 4 நாள்கள் போதுமானது. அந்த நேரத்தில்தான் கதிரியக்கம் அதிகமாக இருந்து தோல் வைட்டமின் தயாரிப்பதை விரைவுபடுத்தும்.
-
வெள்ளைக்காரர்கள் 20 நிமிடம் வெய்யிலில் நின்றால் போதுமானது. எமது தோலுக்கு 2 மணிநேரம் தேவைப்படும்.
-
நான் இருக்கும் ஊர் முதலைகளின் ஊர் தானே. அதனால்தான் திரும்ப நியூசிலாந்து போகிறேன். கனடா, இங்கிலாந்து போன்று பல நாடுகளிலும் universal healthcare இருக்கு என்று தெரியும். இந்த விட்டமின் D ஆசிய இனத்தவர்களுக்கு ஸ்பெஷல் treatment என்பவைதான் விளங்கவில்லை. இதைப்பற்றி அறியத்தரவும்.
-
இப்படியெல்லாம் அரசாங்கம் உங்களை கவனிக்கிறதா? அமெரிக்காவில் இப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவரவர் தமது நலனை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். குடல் வருத்தம் ஏதும் இருந்தாலேயன்றி பொதுவாக வைட்டமின் D குடலில் நன்றாக உறிஞ்சப்படும். வயதான பெண்களுக்குத்தான் அதிகப்படியான விட்டமின் D, மக்னிசியும் தேவைப்படும். கொழுப்புள்ள மீன்கள், காளான், மஞ்சள் கரு போன்றவை நல்லது. சிலர் Fortified உணவுகள் supplements போன்றவற்றை எடுக்கிறார்கள். UV லாம்ப் உம் நல்லம் என்று அறிந்தேன்.
-
கோரோனோ மூக்கு, வாய் வழியாக உள்ளே நுழைய முற்படும்போது எமது உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் வாயுடேனேயே, தொண்டையுடேனேயே நின்றுவிடும். மிக அதிகளவு கிருமிகள் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் வந்தாலோ (அதிக கூட்டம் உள்ள இடங்களில் இது சாத்தியம்) அல்லது எதிர்ப்பு சக்தி அவ்வளவு போதாமல் இருந்தாலோ நுரையீரலுக்குள் போய்விடும். அங்குள்ள கலங்களில் தாம் இனம் பெருகி நுரையீரலை அழிக்கும்போது மிகக்கூடிய எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. இவ்வளவு செயல்களுக்கும் மருந்து ஒன்றுமே இல்லை. எமது உடல் மட்டுமே வெண்கலங்களை கொண்டு சண்டை போடமுடியும். அதற்கு விட்டமின் மட்டும் எடுத்தால் போதாது. பலவருடங்களாக நாம் வாழ்ந்த வாழ்க்கை முறையின், உணவு முறை, அறுவை சிகிச்சைகள், வயது, மது, சிகரெட், மரபணு கோளாறுகள், மன நிலைமை (அதிகம் கவலைப்பட்டு Stress ஆகியவர்களுக்கு தாக்கம் அதிகமாக இருக்கும்). நான் இந்த கோரோனோ பிரச்சனை துடங்கின காலம் முதல் நிறய ஓர்கானிக் மஞ்சள், மிளகு, கீரை வகைகள், எல்லா பெரிகளும் சேர்ந்த தேன் சேர்த்த ஸ்மூதி , மீன் இவைகளை அதிகம் உணவில் சேர்க்கிறேன். இப்பதான் Ashwagandha என்று ஒரு பவுடர் வாங்கினேன். மற்றும்படி கண்டபாட்டுக்கு வைட்டமின் வகைகளை எடுப்பது தேவையற்றது சிலசமயம் ஆபத்தானது. evening primrose oil , Centrum போன்றவை நல்லம் என்று நினைக்கிறன். இப்படி தாக்கப்பட்ட உடலில் ஆபத்தான பக்டீரியாக்கள் புகுந்து தமது வேலையை துடங்கும். இவற்றுக்குத்தான் மருத்துவ சிகிச்சை இருக்கிறது. எமது பாடகர் இறந்தது போனதுக்கு அதிகப்படியான காரணம் இந்த பக்க விளைவுகளால் தான். அவரது உடல் நிலை , வயது இந்த பக்க விளைவுகளின் தாக்கத்தையும் அதற்கு கொடுத்த மருத்துவ சிகிச்சைகளையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கவில்லை .
-
சூரிய கதிர்களில் இருக்கும் Ultraviolet B (UVB) rays எமது தோலில் இருக்கும் 7-DHC என்ற ஒருவகை நல்ல கொலெஸ்டெரோலுடன் தாக்கமடைந்து விட்டமின் D இன் முன்னோடி ஒன்றை தயாரிக்கும். இது ஈரல், சிறுநீரகம் போன்ற இடங்களில் முதிர்ச்சி அடைந்து விட்டமின் D ஆக மாறி உடலுக்கு உதவும். மிகக்குறைந்த உணவு வகைகளே விட்டமின் நிறைந்ததாக இருப்பதால் எமது தோல் நிறம் கொண்டவர்கள் காலை 10 மணியில் இருந்து 2 மணி வரையான வெயிலில் 2 மணிநேரம் வரை நின்றால் மிகவும் பயனடையலாம். இது கொஞ்சம் கஸ்டமான விசயம் தான். வெள்ளை தோலுக்கு 30 நிமிடம் போதுமானது. வெயிலில் இருந்து தயாரிக்கப்படும் விட்டமின் D மிகவும் வலிமை வாய்ந்தது என்பது உண்மை. மற்றது கொழுப்பை சாப்பிட்டில் இருந்து அறவே நிப்பாட்ட வேண்டாம்.
-
திருத்தம் : கொழுப்பில் மட்டும் கரையக்கூடிய விட்டமின்களான A, D, E, K எமது ஈரலில், கொழுப்பு கலங்களில் செயலற்ற நிலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் (சிலநாட்களில் இருந்து சில மாதங்கள் வரை). தேவையான நேரங்களில் ஈரல், சிறுநீரகங்களில் செயல்பாடு அடையும். B complex, C போன்ற நீரில் கரையும் விட்டமின்கள் சேமிக்கப்படமாட்டுது .
-
பலநாட்கள் கழித்து பதில் போட்டதும் இல்லாமல் பிந்தியத்துக்கு மன்னிப்பும் கேட்கவில்லையே என்று ஈழப்பிரியன் அண்ணா கோவித்துக்கொண்டாரோ தெரியவில்லையே? எதற்கும் முதலில் மன்னிப்பு கேட்டுவிடுகிறேன் அண்ணா.
-
விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது இயக்கங்களை எப்படியோ செய்து முடித்துவிடும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அது பாதகமான விளைவுகளாகவும் முடியும். உதாரணத்துக்கு நாங்கள் காலையில் எழுந்தவுடன், இன்று இன்று இவ்வளவு புரதம், கொழுப்பு, மாச்சத்து, விட்டமின் , மினெரல்ஸ் எனது உடலுக்கு தேவை என்று கணக்கு பார்த்து எடுப்பதில்லை. ஆனால் புரதம், வைட்டமின் போன்றவை உடலால் தயாரிக்கவும் முடியாது, சேகரித்து வைக்கவும் முடியாது. இவை ஒவ்வொரு நாளும் தேவையான அளவு எடுக்க வேண்டும். மற்றும் கல்சியம் போன்ற மினெரல் வகைகள் நாம் தேவையான அளவு உணவுடன் எடுக்காவிட்டால், உடல் எமது எலும்புகள், பற்கள் லில் இருந்து கல்சியத்தை சுரண்டி எடுத்துவிடும். இத்தானில் எலும்புகள் தேய்ந்து போகும். அத்துடன் வயதானர்வகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு 45 வயதுக்கு பிறகு உணவுகுழாய்களில் இருந்து கல்சியம் உறிஞ்சப்படுவதுக்கு விட்டமின் D நிறைய தேவை. அதனால்தான் கல்சியம் tablet உடன் calcitriol (D3) சேர்த்து விற்கிறார்கள். ஆனால் எமது உடலுக்கு மிகவும் பொருத்தமானது உணவுடன் சேர்ந்து இருக்கும் விட்டமின் மினரல்கள் தான். மருந்தாக எடுப்பவை அவ்வளவு உகந்தது அல்ல. வேறு வழி இல்லாவிடில் எடுத்துத்தான் ஆகவேணும் . நீரும் அப்படிதான். மரக்கறி, பழங்களில் இருக்கும் நீர்தான் உடலுக்கு மிகவும் உகந்த தண்ணி. அதைவிட்டு அடிக்கடி அளவுக்கு அதிகமாக தண்ணி குடிப்பது நல்ல பலன்களை தராது. இதனால் நாம் அறிவது என்னவென்றால், எமது உணவுப்பழக்கங்கள் மிகவும் முக்கியமானது. எமது உடல் உணவினாலும் , நீரினாலும் மட்டுமே ஆனது. உயிரை பற்றி அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். என்றபடியால் ஒவ்வொரு நாளும் நிறைய மரக்கறி, பழங்கள் மட்டும் எல்லா nutrients உம் சேர்ந்த வீட்டில் தயாரித்த உணவை உண்பதே எமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இறைச்சி வகைகள் எமது மிக நீண்ட வளைந்த குடல்களால் சென்று முடிய 3 நாட்கள் வரை எடுக்கும். அதற்குள் அவை நச்சுத்தன்மை அடைந்து பல தீய விளைவுகளை ஏற்படுத்தும். என்றபடியால் மீன், முட்டை மற்றும் மரக்கறி பழங்களே சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது . அமெரிக்கா போன்ற நாடுகளில் விக்கும் பாலும் கூடாது. ஹோர்மோன்கள் நிறைந்தவை. உலகெங்கும் விக்கும் இறைச்சி வகைகள், farm இல் வளர்க்கும் மீன் வகையிலும் உதவாது. மற்றது கடைகளில் விக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ( பிஸ்கட் , பாண், மாமிசம் என்று நீண்ட நாட்கள் குளிரூட்டி இல்லாமல் இருக்கக்கூடிய உணவில் எல்லாம் transfat எனப்படும் கொழுப்பு உள்ளது. அவை உடலுக்கு கேடு விளைவிப்பவை (குருதிக்குழாய்கள், இருதய நோய்கள்). ஏனென்றால் அவை செயற்கையாக கட்டியாக்கப்பட்ட கொழுப்பை கொண்டவை. அத்துடன் நிறய சீனி, உப்பு சேர்க்கப்பட்டவை. பேக்கரியில் விக்கும் பாண் ஓரளவுக்கு நல்லம். எனவே உணவே உடல், உணவே மருந்து என்று கவனமாக சாப்பிட்டு வந்தாலே முக்காவாசி வருத்தமும் இல்லாமல் போய்விடும். அல்லது வருத்தம் வராது. கடைசியாக சொல்ல விரும்புவது, ரெண்டு சாப்பாட்டுக்கு நடுவில் உணவுகுழாய்களுக்கு கொஞ்சம் ஒய்வு குடுக்கவேணும். எந்த நேரமும் வேலை செய்தால் அவை களைத்து பிழையாக வேலை செய்யத்தொடங்கி விடும். நடுவில் தண்ணி மட்டும் குடிக்கவேணும்.
-
உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி உடையார். எனது அப்பா போல நல்ல ஒரு ஆசிரியராக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆமாம் பின்னால் இருப்பது பாடி தான். கண்கள் அகல தெரியவில்லை என்று சிறிக்கு கவலையாக இருக்கப்போகுது. விரைவில் கண்கள் காட்டப்படும் ( முக்கியமாக உங்களை கலாயக்கத்தான்)😂
-
வணக்கம் ஈழப்பிரியன் அண்ணா. அக்கறையாக விசாரித்ததுக்கு நன்றி . ஹரிகேன் சலியால் (Hurricane sally) நல்ல மழையும் , காத்தும் வெள்ளமும் ஒரு பக்கத்தால. அடாது மழை பெய்தாலும் விடாது படிக்கும் எனது மருத்துவ மாணவ மணிகளின் அன்பு வேண்டுகோள்களுக்கு ஓம் என்று சொல்லி இரவு பகலாக வேலை. வெள்ளிக்கிழமை இறுதி தேர்வு.
-
வார முடிவில் பதிவிடுகிறேன் அண்ணா
-
வணக்கம் கறுப்பி, யாழ் களத்தில் உங்களை சந்தித்தை இட்டு மகிழ்ச்சி. எனக்கும் இதே பிரச்சனை தான் 6 மாதத்துக்கு ஒருக்கா தைரொக்சின் அளவு பாக்க ரத்தம் எடுப்பார்கள். ஒரு சில அனுபவம் வாய்ந்தவர்கள் பட்டென்று எடுத்து விடுவார்கள். ஆனால் மற்றவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நிறையநேரம் சென்றுதான் தோலுக்கு அடியில் ஆழமாக இல்லாத ரத்த நாளங்களை கண்டு பிடிப்பார்கள். இப்படி நாளங்களை கண்டுபிடிக்க கஸ்டமாக இருப்பதற்கு சில காரணங்கள் இருக்கு. 1. சிலரின் நாளங்கள் வழமயான பாதையில் இல்லாமல் கொஞ்சம் விலகி இருக்கும் 2. சிலருக்கு ஊசியேற்றியபின் நாளம் பிரண்டு போய் விடும் ( அனுபவம் உள்ளவர்கள் அதை சுகமாக கையாண்டு விடுவார்கள்) ( இந்த ரெண்டும் காரணமாக இருக்கலாம்) 3. மிகச்சிலபேருக்கு தாழ் குருதி அழுத்தம் காரணம் 4. நாளக்குருதி ஓட்டம் குறைவு 5. உடல் பருமன் அதிகரித்தாலும் கஸ்டம் முதல் இரண்டு பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் நல்ல சுடுதண்ணி நிறைய குடித்து, கையை முடிந்தளவுக்கு வெண்ணீரில் முக்கிவைத்துவிட்டு எடுத்தால் சுகமாக எடுக்கலாம். மணிக்கட்டை பலதடவை சுழட்டி விட்டு எடுத்தாலும் சுகமாக நாளத்தை கண்டு பிடிக்கலாம் .
-
இது என்ன அண்ணமாரால் எனக்கு ஒரே confusion ஆக கிடக்கு
-
பப்பாசிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி கொஞ்சம் தேயிலையையும் போட்டு கொதிக்கவைத்து குடித்துக்கொண்டு வர யூரிக் அசிட்/Gout அகன்றுவிடும் எண்டு ஆதாரத்துடன் படித்தேன். முயற்சி செய்து பாருங்களேன்
-
எண்ட வெட்டு கொத்துகளை வாசித்து பயந்துபோய் தனக்கு மருத்துவ அறிவுரையும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம். என்னை போய் அலுவலுகளை பார்க்கச்சொல்லி குமாரசாமி அண்ணை சொல்கிறார் போல கிடக்கு🤔 உடலில் யூரிக் அமிலம் கூடுவதை hyperuricemia என்று சொல்வார்கள். இது மூட்டுகளுக்குள் சேர்ந்து ஆர்தரைடிஸ் மாதிரி வீங்கி நோகும் (Gout arthritis) அத்துடன் ரத்தம், சிறுநீரிலும் அமிலத்தன்மை கூடும். அது உடம்புக்கு தீமை விளைவிக்கும். யூரிக் அமிலம் உடலில் தேங்குவற்கு சில காரணங்கள் இருக்கு. சுயமாக கண்டுபிடிக்க ஒரே வழி மூட்டு உளைவுதான் . சிவப்பாக வந்து வீங்கும், நோகும் . கீரை வகைகள் ஓட்ஸ் மாதிரி நார் சத்து கூடிய உணவுகளை சாப்பிடுங்கள். அவை யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவும். Apple Cider Vinegar உம் மிகவும் நல்லது. Organic extra virgin ஒலிவ் எண்ணெய் போட்டு salad செய்து வினிகரையும் சேர்த்து சாப்பிடுங்கள். Cherry பழம் மற்றும் விட்டமின் சி நிறைந்த உணவுகள் . ஒரு நாளைக்கு 40 Cherry பழங்களை கொஞ்ச நேரம் விட்டு விட்டு நாள் முழுதும் சாப்பிட்டால் யூரிக் அமிலத்தின் அளவு கணிசமாக குறையும். sardine , tuna , நண்டு, நெத்தலி , கொழுப்புள்ள இறைச்சி வகைகள் அமிலத்தை கூட்டும் . அடுத்த ஒரு மாசத்துக்கு : தினமும் 40 செர்ரி பழம் , ஓட்ஸை வறுத்து பொடியாக்கி புட்டு, ஓர்கானிக் அப்பிள் சிடர் வினிகர் , கீரை வகை இலைகள், ஓர்கானிக் ஒலிவ் எண்ணெய் போட்டு சலட் , நிறைய இளஞ்சூட்டு தண்ணி, இவைகளை சாப்பிட்டுவிட்டு யூரிக் அமிலத்தின் அளவை டெஸ்ட் பண்ணி பாருங்கள். நிச்சயம் குறைந்து இருக்கும்.
-
சிவ கிருபையை முன்னிற்று வாழும், இன்று பிறந்தநாளை மிக விமரிசையாக கொண்டாடும் குமாரசாமி அண்ணா, புத்தன் இருவருக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள். என்றும் இளமையுடன் சந்தோசமாக ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவாராக. அன்புடன் நில்மினி