-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
அதுவும் கொழும்பிலை...ஏம ...சாமத்திலை ...என்ன துணிவடா சாமி ....கடைசிப் பயணக்கதை வரக்கூடாது ..எழுதுங்கோ...வாசிக்க ஆவல்
-
அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
கிரிக்கட்டு மூளையுக்குள்ளை...இப்படியும் கவிதை வருமா...அது பாட்டாகவும் ..காணொளியாகவும் வருமா...மிகவும் அருமை ..தொடருங்கள்
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
விகடன் மணியன் போல...அருமை அப்பப்பா...எவ்வளவு வேகமான எழுத்துநடை...தொடருங்கள்
-
செய்தியாய் சொல்லுங்கடா…
உண்மை பொய் தேவையில்லை உன் செய்தியில்… உண்மையை உரக்கச் சொல்ல தேவையில்லை பொய் செய்திதானென்று பயம் தேவையில்லை கண்ணசைவும் கையசைவும் இருந்திட்டால் உலகம்பூராவும் உன்காலடியில் எடுத்த விடையம் என்னவானாலும்…. எதுகை மோனை உனக்குத் தேவையுமில்லை.. உண்மையோ எள்ளளவும் வேண்டாம் எடுத்தை தூக்கிப் போட்டாலே காணும் கைப்பேசி உன்னை படமெடுக்கும் கண்டதை கதைத்தாலும் கண்டிக்காது சொன்னதை அப்படியே சொல்லும் சொரணை கெட்டசனம் சொக்கிப்போய் திரும்ப திரும்ப பார்க்கும் பார்வைக்கு ஒரு விருப்பும் ஒரு ஏற்பும் இருந்தாலே நீ ஒரு செய்தியாளன் சொந்தமாக சொத்து சேர்த்து விட்டால் மகா செய்தியாளன் செய்திக்கு .ஒரு தாற்பரியம் இருக்கு ஒரு தார்மீகமும் இருக்கு சொல்வதில் ஒரு செம்மையும் இருக்கு சொல்வடிவமும் இருக்கு… இவை இல்லையெனின்… அது செய்தியல்லடா… செய்தியை…சொல்லுங்கடா..உண்மை செய்தியாய் சொல்லுங்கடா…
-
அப்பிள்போன் வேணும் தம்பி….
போன தடவை கேட்க மறந்திட்டன்… இப்ப இது அவசியமாய் இருக்கு.. இது இல்லாமல் இங்கு வாழுறதே கஸ்டம் இல்லையென்று சொல்லிவிடாதே.. மாடு .வளர்த்து ..பால் வித்த காலம் போயிட்டுது பாலுக்கு இப்ப சனம் பூட் சிற்றிக்கு போகுது பகுதிநேர உழைப்பொன்று தேடப் போறன் பார்த்து நல்ல போனா அனுப்பிவிடு… ஆடு வளர்த்து கிடாய் வித்த காலம் போயிட்டுது ஆரிப்ப ஆடடித்து பங்கு போடுகினம் ஆட்களெல்லாம் இப்ப மட்டன் திருவிழாவுக்கு போகினம் ஆரெட்டையென்றாலும் ஒரு போன் கொடுத்துவிடு.. தோட்டத்திலை கத்தரி வெண்டி போட்டாலும் போயிலையை நட்டாலும் விலை போகாதாம் கஞ்சாவும் ..குடுவும் அடிக்கிற வாய்க்கு இவை ஏன் அப்பிள் நல்லதாம் அதைத்தான் அனுப்பிவிடு மானாண்டிச் சந்தையில்..மாலை நேரத்தில் பாய் பெட்டி இழைத்து வித்த காலமும் போச்சு பாயையும் பெட்டியையும் இப்ப ஆர் தேடிகினம் பார்சலில் என்றாலும் போனை அனுப்பிவிடு அவசரம் ஆச்சிக்கு ஏன் இப்ப அப்பிள் போனென்று கேட்கிறாய் ஆச்சி டிக் –ரொக் போடப்போறன் ஆரெட்டை பழகப் போறன் என்று நினைப்பாய் அயலட்டையெல்லாம் உதுதான் தொழில் ஆயிரக்கணக்கில் காசுவருதாம்.. ஆச்சியின் அறிவுக்கும் ..இந்த குரலுக்கும் ஆயிரம் வியூஸ் வரும் … வயதுதான் போட்டுது அதுக்கும் வழியிருக்கு…மேக்கப் படிப்பது.. அப்பன் உன்னை நம்பி அயலட்டையெல்லாம் சொல்லிப்போட்டன் அவையும் ஆச்சியின் ரிக்-ரொக் பார்க்க ரெடி அப்பிள் போன்தான்..வேணும்தம்பி அதை மறக்காமல் அனுப்பிவிடு…
-
டியாகோ கார்சியா அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
என்ன நீங்க அப்படிச் சொல்லுறியள் இலங்கையில் இருந்து..அல்லாகு அக்பர் கோசமல்லவா ஒலிக்குது ..இது உண்மையா
-
"அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி மறுத்தோம்" - இலங்கை அதிபரின் கருத்தால் எழும் விவாதம் என்ன?
டம்பர் இன்னும் செய்தியை பார்க்கவில்லைப் போல.
-
ஒன்பது மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கிளைக் காரியாலயங்கள்!
இதற்கும் என்.பி.பி அடியாட்களை நியமித்துவிட்டால் ...வியாபாரம் களைகட்டும்
-
இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
பூக்குழியில் இறங்குதல் =தீமிதிப்பு கொசுறுச் செய்தியும் ஒன்றிருக்கு....என்னுடைய கடந்தகால வாழ்க்கையில் ...எமது ஆலயத்தில் மூன்று வருடம் தொடர்ச்சியாக இந்த தீ மிதிப்பை செய்திருக்கின்றேன்....இப்போது நினைத்தாலும் பெரும் அதிசயமாகவே தெரியும் இந்த பூக்குழி இறக்கம்... புகழ் பெற்றது ...உடப்பும் ...பாண்டிருப்பு திரொபதை அம்மன் கோவிலும் ... ஆர்வ பக்தி...மிகுதியிலும் ...இந்த இரண்டு கோவில் தரிசனமும் செய்திருக்கின்றேன்....
-
கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் பிரதீபராஜா தெரிவு!
வாழ்த்துக்கள்
-
இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
அதைக் காக்கத்தான் ..இந்த அய்யா போயிருக்கிறார் ...
-
மகாவலி தமிழர்களின் காணியை தனியாருக்கு வழங்கியமையால் வன்னியில் அமைதியின்மை!
இதுக்கெல்லாம் ..ரோட்டுப் போடமுன்னம் ப்லகை நாட்டுற அடியார் கூட்டம் என்ன சொல்லப் போகினம் ...அம்மாச்சி ..திறக்கிறதோடை ..அபிவிருத்தி முடிஞ்சுவிடும்
-
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
எனக்கும் கிளீநொச்சிவரை போய்வந்த அனுபவம் இருக்கு.....சந்தோசமான கஸ்ட காலம்..நினைவில்
-
ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு; பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - இந்தியா டுடே மாநாட்டில் நாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை!
- இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை வலுப்படுத்தும் நோக்கில் 108 ‘Phra Phuttha Metta’ புத்தர் சிலைகள் அன்பளிப்பு!
ஒரு 50 - 75 வடக்கு கிழக்குக்கு போகுமோ.... - இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை வலுப்படுத்தும் நோக்கில் 108 ‘Phra Phuttha Metta’ புத்தர் சிலைகள் அன்பளிப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.