மனதை வாட்டும் வலிகள்….!
மனதை வாட்டும் வலிகள்
மௌனிக்க வைகிறது
சில நொடிகள்…………!!!!
மனதில் எழும் உணர்வு வரிகள் வார்த்தைகள் தராமல் தவிக்கிறது
சில நொடிகள்………!!!!
விழிகளை நனைக்கும் நீர்கூட
தீயாய்ச் சுடுகிறது
சில நொடிகள்………!!!!
வீர மொழி பேசும் என் பேனா
எழுத மறுக்கிறது
சில நொடிகள்………!!!!
எனினும் உறுதி கொள்கிறேன்
வலிகள் நிரந்தரமல்ல ……!!!!
என் உணர்வு வரிகள்
எம் இனத்தின் உறுதி மொழிகள்…!!
ஈழ நினைவுகளை மனதில்
சுமந்தால்………!!!!
உறைந்த குருதியும்
தணலாய்க் கொதிக்கும்…!!!
விழி நீர் கூட பகையை எரிக்கும்…!!
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!!
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.