Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழரசு

  1. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  2. வீர வணக்கங்கள் செல்லக்கிளி அம்மான்.
  3. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  4. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  5. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  6. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  7. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  8. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  9. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  10. இவன் சிந்திய குருதியின் பெயர் சொல்லி… சாள்ஸ் அன்ரனி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவர். தலைசிறந்த கொரில்லா வீரன். திருமலையிற் பிறந்த இந்தத் தியாகச்செம்மல் சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் கொடுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் தன் சிறுவயதிலிருந்தே கண்டுகொண்டவன். அதற்கெதிராய்க் கிளர்ந்தான். சிங்களத்தின் திட்டமிட்ட குடியேற்றங்களாலும் கடற்படை, விமானப்படை, இராணுவம், பொலிஸ், காடையர்குழு எனப் பல்வேறு பெயர்களிற் சிங்களப் பேரினவாதிகளால் திருமலை மண் சூறையாடப்பட்டுக் கபளீகரம் செய்யப்பட்டதும் அல்லாமல் அங்கு வாழ்ந்த மக்கள் தமது பூர்வீக நிலங்களிலேயே அகதிகளாக்கப்பட்டதும் கொல்லப்பட்டதும் வணக்க ஸ்தலங்கள் தாக்கப்பட்டதும் சாள்ஸ் அன்ரனியின் மனத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தின. இந்த வடு அவனுக்குச் சிங்கள இனவெறிக்கு எதிராகப் போராடும் உந்துசத்தியைக் கொடுத்தது. தனது பள்ளி நாட்களிலேயே சிங்கள இனவெறிக்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பித்தான். எவருடைய உதவியுமின்றித் தனித்தே செயற்பட்டு வந்தான். 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டுவரப்பட்ட சிறீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பதவி ஏற்கும் விழாவைச் சிங்களம், தமிழீழம் எங்கும் அமர்க்களமாகக் கொண்டாட முடிவு செய்தது. அந்த வைபவத்தினையொட்டித் திருமலை இந்துக் கல்லூரியிற் சிறீலங்காவின் தேசியக் கொடியேற்றல் நிகழ்வும் வேறுசில நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வேளையில், தனக்கே உரிய திறமையைப் பயன்படுத்தி ‘பொஸ்பரஸ்’ என்னும் இரசாயனப் பொருளை அத்தேசியக் கொடியினுள் மறைத்து வைத்தான். தேசியக்கொடி ஏற்றப்படும்போது ‘பொஸ்பரசின்’ செயற்பாட்டால் கொடி எரிந்து சாம்பலாகியது. சாள்ஸ் அன்ரனி சந்தேகத்தின் பேரிற் சிங்களப் படையினராற் கைதுசெய்யப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டான். விடுதலையை உயிராக நேசிக்கும் எந்த வீரனுக்கும் சித்திரவதைகளும் சிறைக்கூடங்களும் என்னதான் செய்துவிட முடியும்? தனது கொள்கையிலேயே உறுதியாக இருந்தவன் சாள்ஸ் அன்ரனி. தனக்கு உதவிய எவரையும் அவன் காட்டிக்கொடுக்கவில்லை. தனது தனிமனித செயற்பாடானது சிங்கள அரச அடக்குமுறை இயந்திரத்தை எதிர்ப்பதற்குப் போதுமானதாக இல்லையென்பதை உணர்ந்த அவன் புரட்சிகர இயக்கத்தில் இணைந்து கொண்டான். அவன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணையும் போது, வளமான வாழ்க்கையோ வருமானமோ எதுவுமற்ற அவனின் குடும்பத்தின் எதிர்பார்ப்புக்களைத் தூக்கிப்போட்டுவிட்டே இணைந்தான். தலைவர் மீது அசையாத நம்பிக்கையும் பற்றும் கொண்டிருந்தவன், தலைவரின் வழிநடத்தலில் தமிழீழ விடுதலை வெற்றிகொள்ளப்படும் என்பதை உணர்ந்து அன்றைய நாட்களில் தலைவருடன் சேர்ந்து நடைபோட்டான். சாள்ஸ் அன்ரனி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணையும் போது சில உறுப்பினர்களையே இயக்கம் கொண்டிருந்தது. தலைவர் அவர்களிடம் நேரடியாக ஆயுதப் பயிற்சியைப் பெற்ற சாள்ஸ் அன்ரனி, அன்றிலிருந்து தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மிகவும் நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் திகழ்ந்தான். ஒரு கொரில்லா வீரனுக்குரிய ஒழுக்கம்இ கட்டுப்பாடு, சுயநம்பிக்கை, இலட்சியப்பற்று என்பவற்றைப் பேணுவதில் அவன் காட்டிய ஆர்வம் அசாத்தியமானது. அந்த வகையில், தலைவர் அவர்களுக்கும் பெரும் நம்பிக்கைக்குரியவனாக விளங்கினான். சாள்ஸ் அன்ரனியின் போர் நுணுக்கம், ஆற்றல் என்பன ஒரு சிறந்த கொரில்லாத் தலைவனாக அவனை மாற்றியது. குறுகியகாலப் போர் வாழ்வில் அவன் சாதித்தவை ஏராளம். 1981ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் புலிகளை இல்லாமற் செய்வதற்குமாகச் சிறீலங்கா அரசு பிரிகேடியர் வீரதுங்கவை நியமித்து, பதவியுயர்வு வழங்கி யாழ்நகர் அனுப்பி வைத்தது. பிரிகேடியர் வீரதுங்கா யாழ்ப்பாணம் வந்து தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முன்பே தளபதி சாள்ஸ் அன்ரனி தலைமையிற் புலிகள் களத்திற் குதித்தனர். அக்டோபர் 15ஆம் நாள் யாழ். கஸ்தூரியார் வீதியில் வைத்து இரண்டு சிறீலங்கா இராணுவத்தினரைப் புலிகள் சுட்டுக் கொன்றதுடன், அவர்களின் போர்க்கருவிகளையும் கைப்பற்றினர். சிறீலங்கா இராணுவத்திற்கு எதிரான புலிகளின் முதலாவது தாக்குதல் என்ற வரலாறு அதைக் குறிப்பெடுத்துக்கொண்டது. அதைத் தலைமையேற்று நடாத்தியவன் என்ற வரலாற்றுப் புகழை எங்கள் முன்னோடி சாள்ஸ் அன்ரனி பெற்றுக்கொண்டான். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவு 1982 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது அதன் தளபதியாக சாள்ஸ் அன்ரனி தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டான். 1982இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலிற் போட்டியிடுவதற்குத் தேர்தற் பிரச்சாரத்திற்காக யாழ் வந்திருந்த வேளை, புலிகள் ஓர் எதிர்ப்பைக் கொடுக்க எண்ணினர். காரைநகர்க் கடற்படைத் தளத்திலிருந்து ரோந்து சென்ற கடற்படை வாகனத் தொடர்மீது பொன்னாலைப் பாலத்தில் வைத்துப் புலிகள் தாக்குதல் நடத்தினர். துரதிஸ்டவசமாக அந்தத் தாக்குதலிலிருந்து கடற்படையினர் உயிர் தப்பிக்கொண்டபோதும், அன்றைய அரசியல் இராணுவச் சூழ்நிலையில் இத்தாக்குதலானது பாரிய தாக்கத்தை உண்டுபண்ணியமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அக்டோபர் 27ஆம் திகதி, தளபதி சாள்ஸ் அன்ரனி தலைமையிற் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தினுள் உட்புகுந்த அணியினர் நடத்திய அதிரடித் தாக்குதலிற் பொலிஸார் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமுமடைந்தனர். 33இற்கு மேற்பட்ட போர்க்கருவிகளுடன், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. அன்றைய காலகட்டத்தில் அந்த ஆயுதங்கள் தமிழரின் விடுதலைப் போரை அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்வதைத் தீர்மானிக்கும் பெறுமானம் உள்ளவையாக இருந்தன. இத்தாக்குதலின் போது தளபதி சாள்ஸ் அன்ரனி காலிற் காயமடைய நேர்ந்தது. சாவகச்சேரிப் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலானது அதுவரை காலமும் உளவுத்துறை (CID) அழிப்பு, ரோந்துப்படை அழிப்பு என இருந்த கரந்தடி இயக்கத்தினது இராணுவ வளர்ச்சிப் போக்கின் அடுத்த கட்டத்தைப் பறைசாற்றுவதாக அமைந்தது. இத்தாக்குதல்களாற் போராட்டத்தின் ஆரம்ப நாட்களிற் பெறப்பட்ட இவ்வாயுத பலமானது, அன்றைய நாட்களில் விலை மதிப்பற்றதாகவும் போராட்ட வளர்ச்சிக்கு உயிரூட்டுவதாகவும் இருந்தது. பின்னர், கந்தர் மடத்தில் இராணுவத்தினர் மீதான தாக்குதல், தேசத்துரோகிகள் அழிப்பு, காங்கேசன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலையில் வெடிபொருட்கள் மீட்புத் தாக்குதல் என்று அவனது நடவடிக்கைகள் தொடர்ந்தன. தளபதி சாள்ஸ் அன்ரனி தனது போராட்ட வாழ்வில் மூன்று தடவைகள் விழுப்புண் அடைந்து உயிராபத்தினை எதிர்நோக்கினான். 1982ஆம் ஆண்டு மறைவிடம் ஒன்றில் பயிற்சியின் போது தவறுதலாகத் துப்பாக்கி வெடித்ததில் நெஞ்சில் ஏற்பட்ட காயம் அவனுக்குப் பெரும் பாதிப்பையேற்படுத்தியது. பேச முடியாமல் அவனது மூச்சுத் திணறியது. பேசுவதற்கு அவனது உடல்நிலை இடங்கொடுத்த போதெல்லாம் விக்கித்து விக்கித்து அவன் உச்சரித்த வார்த்தைகள் “ஆயுதத்தை இடம் மாற்றுங்கோ” “இயக்கத்தைக் காட்டிக்கொடுத்திடாதையுங்கோ” மரண அவஸ்தை நேரத்திலும் இயக்கம் குறித்து மட்டுமே உதிர்ந்த வார்த்தைகள் எமது இனத்தின் விடுதலையில் அவன் கொண்டிருந்த பற்றுறுதியை வெளிப்படுத்தின. அது எமது இனத்தின் வீரமரபிற்குத் தலைவர் இட்ட அத்திவாரத்தை வலுப்படுத்தி மக்களுக்கும் போராளிகளுக்கும் முன்மாதிரிகளாயின. சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுச் சென்ற போது காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல், எதிரியிடமிருந்து கைப்பற்றிய ஆயுதத்தை வாகனத்தில் ஏற்றிவிட்டு அவ்விடத்திலேயே மயங்கி விட்டார். சற்றுநேரம் கழித்து அரைமயக்க நிலையிலும், “ஆயுதம் எதையும் விடாமல் ஏற்றுங்கள்” இதனையே அவர் வாய் உச்சரித்ததைக் கூடச்சென்ற தோழர்கள் நினைவு கூறுகின்றனர். மூன்றாவதாக அவர் சந்தித்த உயிராபத்து, அவரின் போராட்ட வாழ்வின் இறுதி அத்தியாயம் ஆகியது. 15.07.1983 அன்று அவர்கள் இருந்த மறைவிடம் துரோகி ஒருவனாற் காட்டிக்கொடுக்கப்பட்டது. அவ்விடம் நோக்கி முன்னேறிய சிங்களப்படைகளுக்கும் முகாமிலிருந்து வெளியேறிய போராளிகளுக்குமிடையே ஏற்பட்ட நேரடிச் சண்டையின் போது தளபதி சாள்ஸ் அன்ரனி காலிற் காயமடைய நேரிடுகின்றது. கூடநின்ற தோழர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி எடுத்த போதும் அங்கிருந்த சூழ்நிலை சாத்தியப்படாததால் எதிரிப்படைகள் மிகவும் நெருங்கிக் கொண்டிருந்தன. ஆபத்தான சூழ்நிலையை உணர்ந்துகொண்ட சாள்ஸ் அன்ரனி விரைந்து முடிவெடுக்கிறான். தன்னைச் சுட்டுவிட்டுத் தனது ஆயுதத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்லுமாறு கட்டளை இடுகிறான். தோழர்கள் தடுமாறுகின்றனர், தயங்குகின்றனர். மீண்டும் கண்டிப்பான குரலில் கட்டளை பிறந்தது. தோழனின் கையில் இருந்த துப்பாக்கி எங்கள் உயரிய தளபதியின் நெற்றியில் ஒரு ரவையை உமிழ்ந்து ஓய்கின்றது. தமிழீழ மண்ணின் விடுதலைக்கு வித்தாகிய பெருமையுடன் வீரத்தளபதியின் உடல் மண்ணை முத்தமிடுகின்றது. அன்று எங்கள் முதல் தளபதியின் நெற்றியிலிருந்து வடிந்த குருதி பெரும் வீரப்பிரவாகத்தின் ஊற்றாய் மீசாலை மண்ணை நனைக்கின்றது. தோழர்கள் விரைவாகப் பின்வாங்குகின்றனர். சற்றுநேரத்தில் ஆனந்தனும் சூடுபட தன்தளபதியின் முடிவினையே தானும் வரித்துக்கொண்டான். எஞ்சிய மற்றத் தோழர்கள் துப்பாக்கிகளுடனும் காயங்களுடனும் தளம் திரும்பினர். தளபதி சாள்ஸ் அன்ரனியின் உடலைக் கைப்பற்றிய சிங்களப் படைக்கு அவரது உயிரற்ற உடல்கூட அச்சுறுத்தலாக அமைந்தது. அவரது தாயார் பல தடவை கேட்டும் உடல் ஒப்படைக்கப்படவில்லை. உடல் வைக்கப்பட்டிருந்த யாழ் மருத்துவமனை பெருந்தொகை இராணுவத்தினராற் காவலிடப்பட்டிருந்தது. இறுதியில் ஊர்காவற்றுறைக்குச் செல்லும் பிரதான வீதியில் அல்லைப்பிட்டியை அண்டிய கடற்கரை ஓரத்திற் சிங்களப் ‘பேய்கள்’ சுற்றி நிற்க எங்கள் தளபதியின் உடல் தீயிற் சங்கமமாகித் தமிழீழ மண்ணுடன் கலந்தது. “விடுதலைப்புலிகளின் தாக்குதல் தளபதியை அழித்துவிட்டோம்” எனத் திமிருடன் நிமிர்ந்த சிங்களப் படைக்கு, தளபதியை தன் தோழனை இழந்த எங்கள் தலைவர் சாள்ஸ் அன்ரனியின் உடையணிந்தே பதிலடி கொடுக்கப் புறப்பட்டார். ஒருவார இடைவெளியில் திருநெல்வேலியிற் புயல் வீசியது. போராட்ட வரலாற்றில் அது ஒரு பெரும் புயல்தான். தன் தளபதியைப் பறித்த எதிரிக்குத் தலைவர் கொடுத்த பதில் அது. அதுவே வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்த 23.07.1983ஆம் நாள் நடந்த திருநெல்வேலித் தாக்குதல். தளபதி சாள்ஸ் அன்ரனி உன்னதமான போராளியாவார். எமது இனத்தின் விடுதலைக்காக, இயக்கத்தையும் ஆயுதத்தையும் உயிரிலும் மேலாக நேசித்தான். இரகசியத்தைக் காக்கவும்இ போராட்டத்தின் ஆயுதத்தைக் காக்கவும், தமிழனின் கௌரவத்தைக் காக்கவும் உயிரைவிட்டான். இந்த உன்னத வீரனின் தியாகமும் அர்பணிப்பும் விடுதலைப் போராட்டத்திற் புலிவீரர் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டி நிற்கின்றன. அவன் கொண்ட இலட்சிய உறுதியின் சாட்சியாய், அவனது தோழனின் துப்பாக்கி ரவையிலிருந்து சாவை அணைத்துக்கொண்ட அந்த நொடிப்பொழுதில் அவனின் நெற்றியிலிருந்து பெருகிய குருதியின் வீரப்பிரவாகமாய் அவன் பெயர் சொல்லித் தமிழனின் விடுதலையை வென்றெடுக்க, வீரத்தலைவன் வழியில் எம்படையணி நகர்கிறது. நினைவுப்பகிர்வு: அருணா. நன்றி: நெருப்பாற்று நீச்சலின் பத்தாண்டுகள் நூல். வீர வணக்கம்.
  11. 37ஆம் ஆண்டு நினைவு நாள்.!!! “வீரவணக்கம்” தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  12. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.