Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தை தொடர்ந்து ஏமாற்றினால் ரஷ்யா, சீனாவும் இலங்கையை கைவிடலாம்; தீர்மானத்தை மதித்துச் செயற்படக் கோருகிறது கூட்டமைப்பு

Featured Replies

சர்வதேசத்தை தொடர்ந்து ஏமாற்றினால் ரஷ்யா, சீனாவும் இலங்கையை கைவிடலாம்; தீர்மானத்தை மதித்துச் செயற்படக் கோருகிறது கூட்டமைப்பு

சீனாவும், ரஷ்யாவும் தமது பக்கம் உள்ளன என்ற மமதையில் இலங்கை அரசு தொடர்ந்தும் உலகை ஏமாற்றுமானால், ஒரு காலகட்டத்தில் அந்நாடுகளும் இலங்கை யைக் கைவிடலாம். எனவே, ஜெனிவாத் தீர்மானத்தை எதிர்த்து இலங்கை அரசு அடம்பிடிக்காமல் செயற்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசுடன் பேசுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். இருப்பினும், எமது நிலைப்பாட்டில் சிறிதளவேனும் மாற்றம் இல்லை என்றும் அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை ஏற்று உரிய நடவடிக்கைகளை கையாளமாட்டோம் நாம் தொடர்ந்து எமது பாதையிலேயே செல்வோம் என்றும், தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் இலங்கை அரசு நேற்று தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச் சந்திரனிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையில் ஒரு விடயம் மட்டும் குறிப்பிடப் படவில்லை. வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள மேலதிக இராணுவத்தை அகற்றவேண்டும் என்பது உட்பட பல விடயங்கள் அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளன.

இதனை அரசு செய்யவேண்டும். தீர்வு விடயமும் அதனுள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோரைக் கண்டுபிடிக்கும் வேலைத்திட்டத்தை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் ஆணைக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், அரசு இதுவரை ஒன்றையும் செய்யவில்லை.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தோர் தொடர்பான புள்ளிவிவரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை. தமது பிள்ளைகளை படையினரிடம் ஒப்படைத்த பெற்றோர் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதுகூட தெரியாமல் தவிக்கின்றனர்.

இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல் படுத்துமாறே ஜெனிவாத் தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது. எனவே, இந்தத் தீர்மானத்தை மதிக்காமல் அரசு அடம்பிடிக்கு மானால் மென்மேலும் சர்வதேச அழுத்தங்கள் குவியும். என்றார்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=73913931727290988

  • தொடங்கியவர்

வார்த்தைகளில் நிதானம் தேவை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தின் போது தமிழ் நாட்டிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகள் இலங்கைத் தமிழர்களுக்கு “ அளப்பரிய உதவியாக, இருந்த அதே வேளை உலகத்திற்கு தாங்கள் அனுப்புகின்ற செய்தி தொடர்பாக அரசியல் வாதிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்க் கூட்டமைப்பு எம். பி. எம். ஏ. சுமந்திரன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நோக்கங்கள் தொடர்பாக சொல் செயல் முதலியவற்றை இடம் காலம் தகுதி கருதாது பயன் படுத்துவது சர்வதேச சமூகத்தின் ஆதரவில் தீங்குதரத்தக்க விளைவுகளை கொண்டிருக்கும் என்றும் சுமத்திரன் கூறியுள்ளார்.

“ நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே இதனை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“ உங்கள் வார்த்தைகளில் நிதானம் தேவை” என்ற தலைப்பில் சுமத்திரனின் பேட்டி நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டிருந்தது.

“ தனியான ஈழமே தனது இறுதிக்கனவு” என்று அண்மையில் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி விடுத்திருந்த அறிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளித்திருக்கும் சுமந்திரன், “ எமது நோக்கங்கள் காரணமற்ற விதத்தில் முழுநிறைவான தன்மையைக் கொண்டிராது விடின் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் ஆதரவை இழந்து விடக் கூடும். யதார்த்தத்துடன் நல் நோக்கங்களைக் கொண்ட மனநிலையை அரசியல் வாதிகள் கொண்டிருப்பது அவசியம் என்று எச்சரித்துள்ளார். அதே சமயம், ஐ. நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானமானது ஆக்கபூர்வமான முறையில் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

ஒத்துழைக்காமல் தொடர்ந்தும் அடம் பிடித்தால் சர்வதேச சமூகத்திடமிருந்து மேலதிக நடவடிக்கைகள் வருவது தவிர்க்க முடியாததாகி விடும் என்று சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவானது போதியளவிலான அதிகாரங்களைக் கொண்டிருக்க வில்லை என சிவில் உரிமை அமைப்புகளிடமிருந்து வெளிப்படுத்தப்படும் குற்றச் சாட்டுகள் தொடர்பாக பதிலளித்திருக்கும் சுமந்திரன், “ பதிலளிக்கும் கடப்பாட்டு விவகாரத்தில் இது தோல்வி கண்டுள்ளது. ஆனால் இதர பல விடயங்களில் மிகவும் ஆக்க பூர்வமான பரிந்துரைகளைக் கொண்டிருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு தவறியுள்ள விடயத்தை தீர்மானம் வேறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதே சமயம் தீர்மானத்தில் இந்தியாவால் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் சுமந்திரன், “ தொழில்நுட்ப உதவியை எந்த வழியிலாவது நாடு ஏற்றுக்கொள்வதற்குத் தேவைப்பட்ட விதிகளுக்கு மேலாகவும் மேல் மிச்சமாகவும் சமமாகவும் அவை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

முதல் தடவை

யிலேயே இலங்கையானது தீர்மானத்தை ஒத்துக் கொண்டிருந்தால் இது வேறு பட்ட விவகாரமாக இருந்திருக்கும். அவர்கள் அதனை ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் திருத்தங்கள் சிறியளவிலான வித்தியாசத்தையே உருவாக்கியிருக்கிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அதே வேளை இந்தத் திருத்தங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பியிருந்த கடிதம் பற்றிக் குறிப்பிட்ட சுமந்திரன் தனது அயல் நாட்டுடன் நல்லுறவுகளைப் பேணுவது தொடர்பான இந்தியாவின் கவலைகளை தமிழ்க் கூட்டமைப்பு புரிந்து கொண்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

எவ்வாறாயினும் இப்போது மிகப் பாரதூரமான விவகாரமாக இருப்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயமாக்கலே என்று கூறியிருக்கும் சுமந்திரன் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கவலைக்குரியதாக இருப்பதாகவும் காணி அபகரிப்பு தொடர்பாக பரந்தளவிலான சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் கூறியுள்ளார்.

படையினரின் பாதுகாப்புடன் தமிழ் மாகாணங்களில் நாட்டில் ஏனைய பகுதிகளிலிருந்து மக்கள் குடியேறுவதற்கு இராணுவ மயமாக்கல் உதவியுள்ளது. தமிழ்ப் பகுதிகளில் நிர்வாகத்தை இராணுவம் இப்போது கவனிப்பதால் சிவில் நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. சகல வற்றிலும் இராணுவ மயமாக்கல் ஊடுருவி இருப்பதால் மக்கள் வாழ்வை இது சீர் குலைத்து வருகிறது. இதற்கு உபரியாக வெள்ளை வான் கடத்தல்களும் இடம் பெற்றுள்ளன. வருடத்தில் சில மாதங்களில் 32 கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 10 உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இந்தப்போக்கு ஆரோக்கிய மற்றதாகும். ஒரு சம்பவத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் தமது இராணுவ அடையாள அட்டைகளை காட்டியதுடன் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்த பொலிஸ் அதிகாரி உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளார் என்று சுமந்திரன் கூறியுள்ளார்.

ராஜபக்ஷ அரசாங்கத்தின் மிரட்டலினாலா ஜெனீவாவில் தமிழ்க் கூட்டமைப்பு பிரசன்னமாகியிருக்கவில்லை என்று கேட்கப்பட்ட போது, இந்த மாதிரியான செய்திகள் ஆதாரமற்றவை எனவும் தீர்மானத்தை முன்னகர்த்தும் நாடுகளுக்கு இக்கட்டான நிலைமை ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

http://www.thinakkural.com/news/all-news/local/11732-2012-03-26-15-37-41.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.