Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம் - ஈரான் - அமெரிக்கா - ஜெயதேவன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழம் - ஈரான் - அமெரிக்கா - ஜெயதேவன் (பாகம் 1)

தலைப்பை பார்த்தால் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது மாதிரி தெரியும். ஆனால் உண்மையில் சில முடிச்சுக்கள் இருக்கத்தான் செய்கின்றன.

விடயம் வெகு சுலபம். ஈழத்தில் அமெரிக்கா இராணுவரீதியாக தலையிடுமா? அதை ஈரான் விவாகாரம் தடுத்து நிறுத்துமா? அமெரிக்கா தலையிட்டால் ஈழத்தில் உள்ள தமிழ் மாநிலத்திற்கு ஜெயதேவன் இடைக்கால முதலமைச்சராக வருவாரா? கேள்விகள் இவ்வளவுதான். இனி பதில்களைப் பார்ப்போம்

விடுதலைப்புலிகள் போரை ஆரம்பித்தால், அமெரிக்கா உடனடியாக தன்னுடைய படைகளை அனுப்பி விடுதலைப்புலிகளை அடக்கும் என்று பல சிங்களவர்களும் சில தமிழர்களும் நம்புகின்றார்கள். ஆனால் அமெரிக்காவிற்கு இலங்கைத்தீவில் தலையிடுவதற்கு அவசியமான காரணங்கள் இருக்கின்றதா என்று இவர்களிடம் கேட்டால், சொல்லுகின்ற பதில்கள் திருப்தியாக இல்லை.

அமெரிக்காவும் பல வருடங்களாகவே ஈழப்பிரச்சனையில் தலையிட்டபடி இருக்கின்றது. ஆரம்பத்தில் சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஆயுத உதவிகளும் பயிற்சிகளும் வழங்கி யுத்தத்தில் மறைமுகமாக பங்கெடுத்த அமெரிக்கா, பின்பு பேச்சுவார்த்தையில் தன்னுடைய மிக நெருங்கிய நட்பு நாடான ஜப்பான் மூலமும், இணைத் தலைமை நாடுகளில் ஒன்று என்னும் பெயரில் நேரடியாகவும் பங்கெடுத்து வருகின்றது. ஆனால் இலங்கையில் அமெரிக்காவிற்கு தேவையானது அப்படி என்னதான் இருக்கின்றது? சிலர் பொருளாதாரக் காரணங்கள் இருக்கின்றது என்று சிறுபிள்ளைத்தனமாக கூறுவார்கள். ஆனால் இலங்கையில் அமெரிக்கா சுரண்டுவதற்கு பாரிய வளங்கள் எதுவும் இல்லை. பாரிய முதலீடுகள் செய்வதற்கு மனித வளமும் இல்லை. ஆயினும் அமெரிக்கா மூக்கை நுளைத்தபடிதான் இருக்கின்றது. இதற்கு காரணம் எதுவென்று எப்படித்தான் தலையை பிய்த்துக்கொண்டு சிந்தித்தாலும், புவியியல்ரீதியான காரணங்களை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.

"உலக அரசியலை அறிவதற்கு உலக வரைபடத்தை பார்" என்று யாரோ ஒரு அறிஞன் சொன்னதாக ஞாபகம். உலக வரைபடத்தை பார்ப்பதற்கு முன்பு இன்று அமெரிக்காவிற்கு உள்ள சவால்கள் எதுவென்று பார்ப்போம். பனிப் போர் முடிவுற்ற பிறகு அமெரிக்காவின் எதிரிகள் மாறிவிட்டார்கள். தற்பொழுது அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தலாக கருதுவது இரண்டு விடயங்களை. ஒன்று, அமெரிக்க எதிர்ப்பின் அடிப்படையில் உலகில் பரவி வரும் இஸ்லாமிய தீவிரவாதம். மற்றுது பொருளாதார வல்லரசுகளாக உருவெடுத்து வருகின்ற சீன, இந்திய நாடுகள்.

இதில் அமெரிக்கா இஸ்லாமிய தீவிரவாதத்தை தன்னுடைய படைபலம் கொண்டு நசுக்க முற்படுகிறது. எங்கெல்லாம் இஸ்லாமிய அடிப்படைவாதம் உள்ளதோ, அங்கெல்லாம் தன்னுடைய இராணுவத்தை அனுப்பி ஆக்கிரமித்து வருகின்றது. முதலில் ஆப்கானிஸ்தான், பின்பு ஈராக் என்று வந்து தற்பொழுது ஈரானுக்கு குறி வைத்துள்ளது. அமெரிக்கா தற்பொழுது இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கும் சாட்டில் காலனித்துத்தின் புதிய வடிவம் ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இனி வரைபடத்தை பார்ப்போம்.

அல் கைதா செயற்படும் நாடுகள்

மற்றைய இஸ்லாமிய தீவிரவாதிகள் செயற்படும் நாடுகள்

தற்பொழுது ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்கும் நடுவில் அணுவல்லரசாகும் முனைப்புக் கொண்ட நாடாகிய ஈரான் அமைந்துள்ளது. ஈரானுடைய அமைவிடமும் சரி, அது அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தில் இருப்பதாக வரும் செய்திகளும் சரி, அமெரிக்காவை பொறுத்தவரை மிகப் பெரிய அச்சுறுத்தலே. ஈரான் இராணுவரீதியாக வளர்ச்சி பெறும் பட்சத்தில், அது ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நிலை கொண்டுள்ள அமெரிக்கப் படையினருக்கும், அமெரிக்காவின் செல்லப்பிராணியாகிய இஸ்ரேலுக்கும் மிகப் பெரும் ஆபத்தாக முடியும். அந்த வகையில் அமெரிக்கா ஈரான் மீது வெகுவிரைவில் போர் தொடுக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஈரானை அமெரிக்கா ஆக்கிரமிக்கும் பட்சத்தில் தரைவழியாக இணைந்திருக்கும் தொடர் நாடுகளாகிய ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

இவ்வாறு இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா பலமாக காலூன்றினால், அது உண்மையில் சீனாவினதும் இந்தியவினதும்; எல்லையில் அல்லது மிக அண்மையில் அமெரிக்கா தன்னுடைய படைகளுடன் நிலைகொண்டிருப்பதாக பொருள்படும். அத்துடன் பாகிஸ்தானுக்குள்ளும்; அமெரிக்கா நுளைகின்ற சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை. ஒஸாமா பின்லேடனும் மற்றைய தீவிரவாத தலைவர்களும் பாகிஸ்தானுக்குள் மறைந்திருப்பதாக அமெரிக்கா அடிக்கடி கூறுவதையும் நினைவில் கொள்க.

தற்பொழுது இராணுவ வல்லரசுக்களின் காலம் மாறி பொருளாதார வல்லரசுகளின் ஆதிக்கத்திற்குள் உலகம் சென்று கொண்டு இருக்கின்றது. இராணுவ வலமையோடு பொருளாதாரத்திலும் சீனா நாலு கால் பாய்ச்சலில் முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. தற்பொழுது பொருளாதாரத்தில் ஆறாம் இடத்தில் இருக்கும் சீனா வெகு விரைவில் நான்காம் இடத்திற்கு வந்து விடும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். இப்படியே போனால் சீனா உலகின் முதன்மை நாடாகி விடும். இதை தடுப்பது அமெரிக்காவின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. ஏற்கனவே சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பசுபிக் சமுத்திரம் அமெரிக்க கடற்டையின் ஆளுகையில் உள்ளது. தற்பொழுது சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள நாடுகளையும் ஆக்கிரமித்து வருகின்றது. அந்த வகையில் அமெரிக்காவிற்கு நீண்டகால நோக்கில் சீனாவை கண்காணிப்பதோடு சீனாவிற்குள் பல குழப்பங்களை ஏற்படுத்துவதும் இலகுவாக இருக்கும்.

இதே போன்று இந்தியாவின் வட பகுதியில் நெருக்கமாக காலூன்றும் அமெரிக்கா, தெற்கில் இலங்கையில் தன்னுடைய தளத்தை அமைத்துக் கொள்ள முயற்சிக்கும். ஆனால் இலங்கையில் அமெரிக்கா தன்னுடைய தளங்களை அமைக்க விரும்புவதற்கு இன்னும் ஒரு முக்கிய காரணம் உண்டு.

தற்பொழுது மீண்டும் வரைபடத்தை பாருங்கள். அமெரிக்கா இன்று நிலைகொண்டுள்ள நாடுகளைச் சுற்றி இஸ்லாமிய நாடுகளே உள்ளன. உண்மையில் அமெரிக்கா வெடிகுண்டுகளின் மத்தியிலேயே குந்தியிருக்கின்றது. முகமதுநபிகள் பற்றிய கேலிச்சித்திரத்திற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் கிளர்ச்சி நடைபெற்றுது போன்று, அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ள இஸ்லாமிய நாடுகளிலும் ஒரு வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் அனைத்து மக்களும் அமெரிக்கப் படைகளிற்கு எதிராக கிளர்ந்தௌ மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஆகவே எவ்வாறான நிலைகளயும் சமாளிக்கும் வண்ணம் அமெரிக்காவிற்கு ஒரு பின்தளம் தேவை. அதுவும் இஸ்லாமிய மக்கள் இல்லாது அல்லது மிகக் குறைவாக வாழுகின்ற ஒரு நாட்டிலே அந்த தளம் அமைய வேண்டும் என்பதே அமெரிக்காவின் எண்ணம். அதுவே பாதுகாப்பானதும் கூட. தற்பொழுது இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவிற்கு டியோ கர்சியா தீவில் ஒரு தளம் உண்டு. ஆனால் அது ஈராக், ஈரான் போன்ற நாடுகளிற்கு மிகத் தொலைவில் அமைந்துள்ளது. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் இலங்கைத்தீவு அமெரிக்காவிற்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கின்றது.

ஆகவே ஈழத்திலும் அமெரிக்கா காலூன்றுமா? இதை வைத்து ஜெயதேவன் போன்றவர்கள் காணும் கனவு என்ன?

பாகம் 2இல் தொடரும்

-வி.சபேசன் (01.03.06)

சுட்டது: http://www.webeelam.com/EealmIranUsaJeya.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழம் - ஈரான் - அமெரிக்கா - ஜெயதேவன் (பாகம் 2)

பாகம் 1 இல் அமெரிக்கா ஈழத்தில் தலையிடுவதற்கு இருக்கின்ற காரணங்கள் குறித்து என்னுடைய கணிப்பை எழுதியிருந்தேன். ஒன்றை குறிப்பிட வேண்டும். அமெரிக்க என்று குறிப்பிடுவது அமெரிக்காவையும் அது சார்ந்த மேற்குலக நாடுகளையும் ஆகும். தனியே அமெரிக்காவை மட்டும் அன்று.

அமெரிக்காவிற்கும் மற்றைய மேற்குலக நாடுகளுக்கும் தற்போதைய அச்சுறத்தல்கள் ஆக விளங்கும் சீனஇ இந்திய நாடுகளின் வளர்ச்சிஇ இஸ்லாமிய தீவிரவாத்தின் வளர்ச்சி போன்றவற்றை கட்டுப்படுத்தவதற்கும் கண்காணிப்பதற்கும் ஏற்ற ஒரு அலுவலகமாகஇ தளமாக இலங்கைத்தீவை இந்த நாடுகள் கருதுகின்றன. பூகோளரீதியாக அதற்கு ஏற்ற இடத்தில் இலங்கை அமைந்திருக்கின்றது. ஆகவே எவ்வகையிலாவது ஈழத்திற்குள் நுளைவதே அமெரிக்காவின் நோக்கம். ஆனால் இந்த நோக்கத்திற்கு தடையாக விடுதலைப்புலிகளும் அவர்களுது தனியரசுக்கான போராட்டமும் இருப்பதாக அமெரிக்கா நினைக்கின்றது. அமெரிக்காவின் எண்ணம் நிறைவேற வேண்டும் என்றால் விடுதலைப்புலிகள் பலவீனப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு இலங்கையின் ஐக்கியம் உறுதியாக பேணப்பட வேண்டும். இதை நோக்கியே அமெரிக்கா காய்களை நகர்த்தி வருகின்றது. நீடித்த பேச்சுவார்த்தைகள் மூலம் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்த முடியும் என்று அமெரிக்கா நம்புகின்றது. இந்த வழி அமெரிக்காவிற்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காது போனால் அமெரிக்கா இராணுவரீதியில் ஈழத்தில் தலையிடும். இலங்கை இராணுவத்திற்கு முற்று முழுதான உதவிகள் வழங்குவதன் மூலமோ அல்லது நேரடியாக அமெரிக்க இராணுவத்தினரை அனுப்புவதன் மூலமோ அமெரிக்கா தலையிடும். ஆகவே ஈழப் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடும் என்று வாதிடுவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.

ஆனால்இ எப்படி அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டிற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றதோஇ அதே போன்று தலையிடாமல் இருப்பதற்கும் வலுவான காரணங்கள் உண்டு. அமெரிக்காவால் ஒரு அந்நிய நாட்டிற்குள் இலகுவாக தன்னுடைய படைகளை அனுப்ப முடியாது. அவ்வாறு செய்வதாயின் தன்னுடைய மக்களை அதற்கு தயாராக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு நாட்டுக்குள் தங்களின் இராணுவத்தை அனுப்பி பலி கொடுப்பதை அமெரிக்க மக்கள் ஏற்றுக் கொள்ளும்படியான காரணங்கள் முன்வைக்கப்பட வேண்டும். அந்த நாட்டைப் பற்றியும்இ அந்த நாடு அமெரிக்காவிற்கு எந்த வகையில் அச்சுறுத்தலானது என்பது பற்றியும் மீண்டும் மீண்டும் பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். இவைகளை விட அமெரிக்காவின் செனட் சபையின் அங்கீகாரமும் தேவைப்படும். ஆப்கானிஸ்தானின் தலிபான்களை அழிக்கின்ற திட்டம் அமெரிக்காவிற்கு ஏற்கனவே இருந்த பொழுதும் செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பிறகே அது சாத்தியமானது. ஈராக் மீதான படையெடுப்பும் நீண்ட கால பரப்புரைகள் மூலம் அமெரிக்க மக்களை ஏற்றுக் கொள்ள செய்த பின்பே நடைபெற்றது. தற்பொழுது ஈரானின் முறை. ஈரான் மீதான படையெடுப்பிற்கு ஆதரவான மனநிலை அமெரிக்க மக்களிடம் தோன்றி விட்டதாக நம்பப்படும் பொழுது அது நடைபெற்றே தீரும்.

ஆனால் தமிழீழத்தில் அமெரிக்கா தலையிடுவதை அமெரிக்க மக்கள் அனுமதிக்கப் போவதில்லை. விடுதலைப்புலிகள் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் ஆனாவர்கள் என்று அமெரிக்க மக்களிடம் காட்டுவதற்கு எந்தவிதமான காரணங்களும் இல்லை. ஆயினும் தற்போது உள்ள நிலையில் இன்னும் ஒன்றையும் கவனத்தில் எடுக்க வேண்டும். விடுதலைப்புலிகளை விட பலமானவர்கள் என்று கருதப்பட்ட தலிபான்களை அமெரிக்கா வெற்றி கண்டது. ஹிட்லருக்கு தண்ணி காட்டிய சேர்பியாவை பணிய வைத்தது. சதாம்ஹ{சேனின் படைகளை தோற்கடித்தது. அமெரிக்க மக்களை பொறுத்தவரை விடுதலைப்புலிகள் காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் ஒரு சிறிய கெரில்லா இயக்கம். ஆகவே ஈழத்தில் அமெரிக்கா தலையிடுமானால்இ விடுதலைப்புலிகளை அமெரிக்கா இராணுவம் இலகுவில் அடக்கி விடும் என்ற நம்பிக்கையில் அமெரிக்க மக்கள் ஆரம்பத்தில் அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் விடுதலைப்புலிகளைப் பற்றி தெருவில் நிற்கும் அமெரிக்கனுக்கு தெரியாது விட்டாலும்இ அமெரிக்காவின் வெளிநாட்டுஇ இராணுவ விவகாரங்களை கவனிக்கும் துறையினருக்கு தமிழீழத்தில் தலையிட்டால் என்ன நடக்கும் என்று நன்றாகவே தெரியும்.

அமெரிக்கா தமிழீழத்தில் தலையிட்டால் என்ன நடக்கும்? பலர் நினைப்பது போன்று அமெரிக்க இராணுவம் ஒன்றும் வெல்லப்பட முடியாத இராணுவம் அல்ல. 2003 இல் நடந்த ஈராக் யுத்தத்தையே எடுத்துக் கொள்வோம். சில வாரங்களில் முடிந்துவிடும் என்று நம்பப்பட்ட ஈராக் மீதான படையெடுப்பு சில மாதங்களாக நீண்டது. முக்கியமாக அமெரிக்க இராணுவத்தின் முதலாவது இலக்காக இருந்த பஸ்ரா நகரம் மாதக் கணக்கில் அமெரிக்க படையினரை தாக்குப் பிடித்தது. நஸாரியா நகர் அமெரிக்க படைகளை திணறடித்தது. ஈராக் சில இராணுவரீதியான தவறுகளை விடாது இருந்திருந்தால் பக்தாத் இலகுவில் வீழ்ச்சி அடைந்திருக்காது. ஆனால் சதாம் ஒரு முக்கியமான தவறை செய்தார். வெற்றிகரமான தற்காப்பு யுத்தம் தந்த நம்பிக்கையில் ஒரு வலிந்த தாக்குதலை நடத்த முனைந்தார். மார்ச் மாதத்தின் கடைசி நாட்களில்இ வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்திருக்கஇ தன்னுடைய ஆயிரக்கணக்கான டாங்கிகளையும்இ சிறப்புப் பயிற்சி பெற்ற படையினரையும் அமெரிக்க படையினருக்கு எதிராக ஏவினார். கரு மேகங்கள் இருந்த போதிலும் அமெரிக்காவின் தொழில் நுட்பம் ஈராக்கிய படையினரை காட்டிக் கொடுத்தது. விளைவுஇ அந்த பலம் பொருந்திய படையணி முற்றாக அழிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலை செய்யாது தன்னுடைய படைகளை சதாம் காத்து வைத்திருந்தால்இ பக்தாத் நகர் அமெரிக்காவிற்கு நல்லதொடு பாடத்தை புகட்டியிருக்கும்.

ஆயினும் தற்பொழுது ஈராக்கிய மக்கள் அமெரிக்காவிற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாடம் புகட்டியபடியே உள்ளார்கள். அங்கே தினமும் அமெரிக்க படையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பல ஈராக்கிய மக்கள் தற்கொலைப்படைகளாக மாறி அமெரிக்க படையினரை சிதறடித்து வருகிறார்கள். அமெரிக்கப் படையினரால் இந்த தற்கொலைத் தாக்குதல்களை சமாளிக்க முடியாது விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

இப்பொழுது ஈழத்திற்கு வருவோம். தமிழீழத்திற்குள் அமெரிக்கப் படைகள் நுளைந்தால் பல பஸ்ரா நகரங்களை சந்திக்க வேண்டி வரும் என்று அமெரிக்க இராணுவ வல்லுனர்களுக்கு தெரியும் அதுவும் ஒரு தரைச் சண்டையில் எதிரிக்கு எவ்விதமான இழப்பை விடுதலைப்புலிகள் ஏற்படுத்துவார்கள் என்பது அந்த வல்லுனர்களுக்கு நன்றாகவே தெரியும். அத்துடன் மிக முக்கியமானது விடுதலைப்புலிகளின் கரும்புலி அணிகள். ஈராக்கில் நடக்கின்ற தற்கொலைத் தாக்குதல்கள் நெறிப்படுத்தப்பட்டவை அல்ல. தாக்குதலில் ஈடுபடுபவர்களும் அதற்கென நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களும் அல்ல. இவர்களையே அமெரிக்காவால் சமாளிக்க முடியவில்லை. ஆனால் தமிழீழத்தில் தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடக் கூடியதும்இ நன்கு போரிடக் கூடியதுமான கரும்புலிகள் அணியை அமெரிக்கப் படையினரால் எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? கட்டுநாயக்கா விமானத் தளத்தில் நான்காயிரம் படையினரோடு ஒரு சில கரும்புலிகள் மோதி விமானங்களை சிதறடித்த நிகழ்வை அமெரிக்கா அறிந்திருக்காமல் இருக்காது.

அகவே அமெரிக்கா ஈழத்தில் தலையிடுமானால்இ இது போன்ற இழப்புக்கள் ஏற்படும் பொழுதுஇ அது வரை அமைதியாக இருந்த அமெரிக்கன் வீதியில் இறங்குவான். ஈராக்கில் அமெரிக்கா இராணுவம் பலியாவதை இஸ்லாமிய தீவிரவாதம் பற்றிய அச்சம் காரணமாக அமெரிக்கர்கள் சகித்துக் கொள்கிறார்கள். ஆனால் அமெரிக்க பாதுகாப்போடு சம்பந்தப்படாத ஈழத்தில் எந்த ஒரு அமெரிக்க படையினனும் பலியாவதை அமெரிக்க மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகவே அமெரிக்கா ஈழத்தில் தலையிட்டாலும்இ பின்பு அவமானத்தோடு வெளியேற வேண்டி வரும்.

இவை எல்லாவற்றையும் கணிக்கும் அமெரிக்கா ஒரு போதும் இராணுவரீதியாக தமிழீழத்தில் தலையிடாது. தேவைப்பட்டால் இலங்கை இராணுவத்திற்கு ஆயுதஇ தொழில்நுட்ப உதவிளை வழங்குமே தவிரஇ தன்னுடைய படைகளை அனுப்பாது. இதை இன்னொரு விதமாக நோக்குவதாயின் விடுதலைப்புலிகள் தமிழீழத்தை மட்டும் அல்லஇ அந்த பிராந்தியத்தையே அமெரிக்காவிடம் இருந்து காத்து வருகிறார்கள் என்றும் கொள்ளலாம்

ஆனால் அமெரிக்கா தமிழீழத்தில் கால் பதிக்க வேண்டும் என்று ஜெயதேவன் போன்றோர் வலியுறுத்தி வருகிறார்கள். அதற்காக சில வேலைத் திட்டங்களை செயற்படுத்தி வருகின்றார்கள். இவர்களின் உண்மையான நோக்கம் என்ன? பதவி ஆசையில் தமிழீழத்தை காட்டிக் கொடுக்கத் துணிந்து நிற்கும் இந்தக் கும்பல்களின் எண்ணம் நிறைவேறுமா?

(பாகம் 3 இல் நிறைவு பெறும்)

-வி.சபேசன் (06.03.06)

சுட்டது:http://www.webeelam.com/EealmIranUsaJeya%202.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழம் - ஈரான் - அமெரிக்கா - ஜெயதேவன் (பாகம் 3)

அமெரிக்காவும் மேற்குலகமும் விடுதலைப்புலிகளின் பலத்தினாலேயே ஈழத்துக்குள் இராணுவரீதியாக தலையிட தயங்குகின்றன. ஆனால் மேற்குல நாடுகளை எப்படியாவது தலையிட வைக்க வேண்டும் என்று பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஜெயதேவனும்இ அவரை சார்ந்தவர்களும் விரும்புகின்றனர். இதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்தும் விட்டனர்.

ஜெயதேவன் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் மட்டும் அல்ல. அவர் பிரித்தானியாவின் ஆளுங் கட்சியான தொழிற் கட்சியில் அங்கம் வகிப்பிவர். பல பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ராஜதந்திரிகளுடனும் தொடர்பை வைத்திருப்பவர். ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றிருக்கும் இவருக்கு வரக்கூடாத ஆசை ஒன்று வந்திருக்கின்றது. அதுதான் தமிழர் தாயகத்தின் முதலமைச்சர் ஆவது. அவருக்கு இவ்வாறான ஒரு ஆசை இருப்பது அவரை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு விளங்கும்.

இதை விளங்கப்படுத்தும் முன்பு இன்னொரு செய்தியையும் பார்க்க வேண்டும். ஈராக்கில் சதாமின் ஆட்சி வீழ்ச்சியுற்ற பின்னர் அமெரிக்காவின் கைப் பொம்மையாக இருந்து ஆட்சி நடத்திய இயாட் அலாவி என்பவர் நீண்ட காலமாக லண்டனில் வாழ்ந்தவர். இப்ராகிம் அல் ஜவாரி என்கின்ற இன்றைய ஈராக்கிய பிரதமரும் முன்பு லண்டனில் வாழ்ந்தவரே. இவர்கள் லண்டனில் வாழ்ந்த பொழுது அங்கே கட்சிகளை நடத்திக் கொண்டு சதாமிற்கு எதிராக ஊர்வலங்களை நடத்திக் கொண்டு பொழுதை கழித்துக் கொண்டிருந்தவர்கள். அமெரிக்க பிரித்தானிய ராஜதந்திர வட்டாரங்களுடன் நெருங்கிய உறவை பேணி வந்தவர்கள். இன்று அமெரிக்கஇ பிரித்தானியா நாடுகளின் துணையோடு அதிகாரத்தை சுவைத்தபடி இருக்கின்றனர்

இவர்களைப் போன்று லண்டனில் வாழும் ஜெயதேவனும் தமிழ் ஜனநாயக காங்கிரஸ் என்னும் ஒரு கட்சியை உருவாக்கியுள்ளார். (அந்தக் கட்சியின் முக்கிய தளபதி இப்பொழுது உள்ளே இருப்பது வேறு விடயம்) இந்தக் கட்சியின் மூலம் விடுதலைப்புலிகளை ஐரோப்பிவில் விமர்சிப்பவகளுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்பதற்கு முனைகின்றார். இவர் கட்சியை ஆரம்பித்ததும் பல இடங்களில் கைக்கூலிகளின் துணையுடன் விடுதலைப்போராட்டத்திற்கு எதிரான ஊர்வலங்களை நடத்துகின்றார். என்றும் இல்லாதவாறு விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்து செல்வதற்கு ஓடியாடி வேலை செய்கின்றார். அதன் மூலம் மேற்குலகை ஈழத்தில் "மேலதிக" பங்கினை வழங்கும்படி வலியுறுத்துகின்றார். தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தமிழ் மக்களை துன்புறுத்துவதாக பொய்யான பிரச்சாரம் செய்துஇ மேற்குலகை ஈழத்தில் தலையிடுவதற்கு அழுத்தம் கொடுக்கின்றார்.

விடுதலைப்புலிகளை விமர்சிப்பதை தொழிலாக கொண்டிருக்கும் ரிபிசி வானொலியில் ஜெயதேவன் முற்று முழுதான செல்வாக்கை செலுத்துகின்றார். இந்த வானொலி மூலம் தன்னுடைய ஈழத்தின் முதலமைச்சர் ஆவதற்கான பிரச்சாரத்தை செய்து வருகின்றார். அவர் அந்த வானொலியில் அடிக்கடி சொல்வதை கவனியுங்கள்

கண்காணிப்புக் குழுவுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் - மேற்குலக நாடுகள் அதிக அக்கறை காட்ட வேண்டும் - விடுதலைப்புலிகள் பலமிழந்து போய் விட்டார்கள் - விடுதலைப்புலிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை - தமிழீழத்தில் இருப்பவர்கள் படிப்பறிவு அற்றவர்கள் - தமிழ் புத்திஜீவிகள் வெளிநாட்டிலேயே வாழ்கிறார்கள்

இந்த பிரச்சாரத்தை அவர் மேற்குலக ராஜதந்திரிகள் மத்தியிலும் மேற்கொண்டு வருகின்றார். மேற்குலக நாடுகளை குறிப்பாக அமெரிக்காவை முழுமையாக ஈழத்தில் தலையிடுமாறு வலியுறுத்தும் ஜெயதேவன்இ விடுதலைப்புலிகள் மக்கள் ஆதவரவு அற்று பலமிழந்து போய்விட்டார்கள் என்கின்ற பிரச்சாரத்தின் மூலம்இ விடுதலைப்புலிகளின் பலம் பற்றி அமெரிக்கா கொண்டிருக்கும் அச்சத்தை போக்க முனைகின்றார். அவ்வாறு அமெரிக்கா தலையிட்டு விடுதலைப்புலிகளை விரட்டியடித்து விட்டுஇ ஈழத்தில் உள்ளவர்கள் படிப்பறிவு அற்றவர்கள் என்பதால் புத்திஜீவியான தன்னிடம் தமிழ்மாநிலத்தின் அதிகாரத்தை தரவேண்டும் என்று மறைமுகமாக அமெரிக்காவை கெஞ்சுகின்றார். ஈராக்கில் செய்ததை ஈழத்தில் செய்யும்படி கேட்கின்றார்.

ஜெயதேவனிடம் அதிகார ஆசை இல்லையெனில்இ அவர் "காங்கிரஸ்" என்னும் பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்திருக்க மாட்டார். வெறுமனே ஒரு அமைப்பை தொடங்கியிருக்கலாம். ஆனால் ஜெயதேவன் அமெரிக்காவின் துணையுடன் ஈழத்துக்குள் ஜனநாயகத்தின் பெயரில் நுளையும் திட்டத்தில் இருக்கின்றார். அதனாலேயே தான் மீண்டும் வன்னிக்கு போவேன் என்று கொக்கரிக்கின்றார். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய ஜெயதேவன் விடுதலைப்புலிளையும் அவர்களின் பின்னால் அணி திரண்டு நிற்கும் மக்களையும் பழி வாங்கத் துடிக்கின்றார். ஈழத்திலும் ஈராக் போன்று அபுகாறிப் சித்திரவதை முகாம்களை உருவாக்க கங்கணம் கட்டி நிற்கின்றார்.

அமெரிக்கஇ பிரித்தானிய நாடுகளும் எதற்கும் இருக்கட்டும் என்று ஜெயதேவனுடன் உறவுகளை பேணி வருகின்றனர். என்றாவது ஒரு நாள் ஈழத்தில் தலையிடும் பொழுது ஜெயதேவன் பயன்படுவார் என்பது இந்த நாடுகளுக்கு தெரியும். தற்பொழுது ஈழத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான மற்றைய குழுக்களும்இ அதன் தலைவர்களும் தமிழ் மக்களின் முற்று முழுதான வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கிறகள். ஆகவே இந்தக் குழுக்களை மாற்றுத் தலைமையாக தமிழர்களிடம் திணிப்பது கடினமாக இருக்கும். அது மட்டுமன்றி ஆயுதக் குழுக்களாக மட்டுமே செயற்படத் தெரிந்த இந்தக் குழுக்களை வைத்துக் கொண்டு அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் ஜனநாயக நாடகத்தை அரங்கேற்ற முடியாது. ரத்தக் கறை படியாத புதுமுகமான ஜெயதேவனுக்கு "வெளிநாட்டில் படித்த ஒரு நல்ல ஜனநாயகவாதி" என்னும் வேடத்தை கொடுத்து ஈழத்தில் வாழும் தமிழர்களினதும் மற்றைய நாடுகளினதும் கண்களையும் கட்ட முடியும் என்று மேற்குலகம் கருதுகின்றது.

ஆகவே ஜேயதேவனுக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடைப்பதையிட்டும்இ எரிக்சொல்ஹைம் போன்றவர்கள் ஜெயதேவனுக்கு பதில் போடுவதையிட்டும் யாரும் ஆச்சரியம் கொள்ளத் தேவையில்லை. ஜெயதேவன் கட்சி ஆரம்பித்ததன் பின்னணியிலும்இ தற்பொழுது அடிக்கடி நடக்கும் விடுதலைக்கு எதிரான ஊர்வலங்களின் பின்னணியிலும் மேற்குலக சக்திகள் இருப்பது உண்மை. விடுதலைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம் அதற்கு சாட்சி.

ஈழத்தை தளமாக உபயோகிக்கும் அமெரிக்காவின் ஆசைக்கும்இ ஈழத்தின் முதலமைச்சராக ஆகும் ஜெயதேவனின் ஆசைக்கும் தற்பொழுது ஈரான் விவகாரமும் விடுதலைப்புலிகளின் பலமும் ஒரு இடைஞ்சலாக இருக்கின்றன. ஈரான் பிரச்சனையே அமெரிக்காவிற்கு இப்பொழுது முக்கிய தலைவலி. அதை தீர்க்காமல் அமெரிக்கா வேறு தலைவலிகளை வரவழைத்துக் கொள்ளாது. ஆகவே தற்போதைக்கு என்ன நடந்தாலும் அமெரிக்கா ஈழத்தில் தலையிடப் போவதில்லை. ஜெயதேவனின் ஆசை நிறைவேறப் போவதும் இல்லை. மீறி அமெரிக்கா தலையிட்டாலும் கவலைப்படத் தேவயில்லை. எங்களின் விடுதலைப்புலிகள் தமிழீழத்தை பாதுகாப்பார்கள்.

ஆயினும் புலம்பெயர் வாழ் மக்கள் தமிழினத்திற்கு எதிரான மேற்குலகின் சதிவலையில் ஜெயதேவனும் ஒரு அங்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஜெயதேவனை சில சக்திகள் பயன்படுத்துகின்றன. தன்னுடைய ஆசைக்கு இந்த சக்திகளை ஜெயதேவனும் பயன்படுத்துகின்றார். இந்தக் கூட்டணி விடுதலைப்புலிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல. இவர்கள் தமிழ் இனத்தின் பொது எதிரிகள். விடுதலைப்புலிகள் பற்றி மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கும் இடதுசாரிகள் தொடக்கம் ஈழத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பை விரும்பாத அனைவரும் இந்தக் கூட்டணியின் சதித் திட்டத்தை முறியடிக்கும் வேலையில் இறங்க வேண்டும். ஈராக்கிய இளைஞர்களினதும் பெண்களினதும் நிலை தமிழ் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வர வேண்டாம். எங்கள் தமிழீழம் அமெரிக்க சப்பாத்துக்களால் நசிபட வேண்டாம். ஆகவே கருத்து வேற்றுமைகளை மறந்து அனைத்து தமிழரும் ஒன்றிணைவோம்.

-வி.சபேசன் (10.03.06)

சுட்டது:http://www.webeelam.com/EealmIranUsaJeya%203.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.