Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளஸ்ரர் ரக குண்டுகளது எச்சங்கள் தொடர்ந்தும் மீட்பு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Featured Replies

கிளஸ்ரர் ரக குண்டுகளது எச்சங்கள் தொடர்ந்தும் மீட்பு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

28 மார்ச் 2012

அடையாளம் தெரியாத வகையிலான வெடி பொருட்களென அறிவிக்குமாறு பாதுகாப்பு தரப்பு அறிவுறுத்தல்:-

GTN.special_CI.jpg

வன்னியின் மேலும் சில பகுதிகளினில் கொத்து குண்டு எனப்படும் கிளஸ்ரர் ரக குண்டுகளது எச்சங்கள் தொடர்ந்தும் மீட்கப்பட்டு வருவதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிக்கிறார். அவற்றினை அடையாளம் தெரியாத வகையிலான வெடி பொருட்களென அறிவிக்குமாறு பாதுகாப்பு தரப்பு மனித நேயக்கண்ணி வெடியகற்றல் அமைப்புக்களை நிர்ப்பந்தித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அண்மையில் கிளிநொச்சி நகரிலுள்ள மனித நேய கண்ணிவெடியகற்றல் அமைப்பொன்றின் அலுவலகத்தில் கொத்து குண்டு மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களை குளோபல் தமிழ்ச் செய்திகள் அம்பலமாகியிருந்தது.

இதனிடையே நாகர் கோவில் பகுதியில் அனைத்து திசைகளிலும் தாறுமாறுமாக இருதரப்புகளும் வெடிபொருட்களை புதைத்துள்ளன. இதனை விரைவில் அகற்றுவதற்கு யாழ்ப்பாணத்தில் போதியளவு தொழில்நுட்ப வசதிகள் இன்மையால் ஜந்து தொடக்கம் ஆறு வருடங்கள்; வரையில் கால அவகாசம் தேவைப்படுவதாக யாழ்.செயலகத்தில் இயங்கி வரும் மாவட்ட கண்ணிவெடியகற்றல் அமைப்பு ஓருங்கிணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.

யாழ்.மாவட்டத்தில் மட்டும் இன்னமும் ஐந்து சதுர கிலோமீற்றர் பரப்பளவு நிலப்பரப்பிலேயே கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் அகற்றபட வேண்டியுள்ளதாகவும் அத்தரப்புகள் மேலும் தெரிவித்தன.; 1998ம் அண்டில் யாழிலில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியிருந்தது.

இதில் தற்போது ஒரு சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் மிதிவெடி அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 2002ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் 89.91 வீதமான பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அத்தரப்பகள் மேலும் தெரிவித்தன.

ஹலோ ட்றஸ்ற், டி.டி.ஜி நிறுவனத்துடன் இராணுவப் பொறியில் பிரிவினரும் இணைந்து இந்த மிதி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுவருதாக கூறிய மிதிவெடி செயற்பாட்டு அலுவலகம் இராணுவப் பொறியியல் பிரிவினரால் கிலாலிப் பகுதியில் மிதிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன. தற்போது முகாமாலை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையில் வீதி அகலிப்பு பணிகளுக்காக ஏ-9 வீதியின் இரு மருங்கு மற்றும் புகையிரதப் பாதைகளில் மிதிவெடி அகற்றும் பணிகள் மிக துரிதகதியில் மேற்கொள்ளப்படுகின்றது எனவும தெரிவித்தது.

அத்துடன் முன்னர் உயர்பாதுகாப்பு வலயமாகக் காணப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சலைப் பகுதி, நாகர்கோவில் பகுதி, கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேசம் ஆகியவற்றில் மிதிவெடி மற்றும் வெடிக்காத வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஹலோ ட்றஸ்ற் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

டி.டி.ஜி நிறுவனமானது தெல்லிப்பளை மற்றும் பூநகரிப் பிரதேசங்களில் கண்ணிவெடிகளை அகற்றி வருவதாகவும் இலங்கையின் மதிவெடி அகற்றும் ஒரே ஒரு நிறுவனமான டாஸ் நிறுவனம் கிளிநொச்சி மற்றும் கண்டாவளைப் பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தது.

இந்தவகை நாசகாரக் குண்டுகளை, மற்றும் நச்சுக் குண்டுகளை சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு வழங்கியவர்கள் ரஷ்யா, ஈரான், இந்தியா ஆகிய காட்டுமிராண்டி நாடுகளே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.