Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகமெங்கும் படையெடுக்கும் புத்தபகவான் யாழ்ப்பாணம் குருநகரையும் சென்றடைந்தார்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

budda_CI.jpg

தமிழர் தாயகமெங்கும் புத்த பகவான் மீண்டும் படையெடுத்து வருகின்ற நிலையில் நேற்றிரவு யாழ்ப்பாணம் குருநகருக்கும் அவர் வந்து சேர்ந்துள்ளார். குருநகர் கடற்கரை வீதியிலுள்ள அம்மன் ஆலயமொன்றிற்கு முன்னதாக அவரை நேற்றிரவு படையினர் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.

எனினும் அவரது பயணம் தொடர்பான செய்திகள் ஊடகங்களினில் வெளி வரக்கூடாதென்பதில் கூடிய அக்கறை காட்டும் படைத்தரப்பு வெளியார் எவரையும் அப்பக்கமாக எட்டிப்பார்க்க கூட இதுவரை அனுமதித்திருக்கவில்லை என அயல் குடியிருப்பாளர்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தனர்.

குருநகர் கடற்கரை வீதியை உள்ளடக்கி இறங்கு துறைக்கும் யாழ்ப்பாணம் கோட்டைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தினில் கடற்கரையோரமாக இவ்விகாரை அமைக்கப்பட்டுவருகின்றது. ஏற்கனவே நீண்ட காலமாக அப்பகுதியில் அம்மன் ஆலயமொன்று இருந்தே வருகின்றது. அவ்வாலய சூழலிலுள்ள அரச மரத்தை கைப்பற்றியிருக்கும் புத்த பகவான் அங்கு முகாமிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் கடற்கரைப்பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாக்கியிருந்த படைத்தரப்பு இங்கிருந்த மக்களையும் விரட்டியே விட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் இதுவரை மீளக்குடியமராதுள்ளதை பயன்படுத்தி இவ்விகாரை அமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஏற்கவே வன்னியிலும் யாழப்பாணத்திலும் படையினரது பிரசன்னமுள்ள பகுதிகளெங்கும் இவ்வாறான விகாரைகள் அமைககப்பட்டு வருகின்றது தெரிந்ததே. இந்நிலையினில் ஏற்கனவே ஆரிய குளத்தில் நாகவிகாரை அமைக்கப்பட்டுள்ளதுடன் புகையிரத நிலைய வீதியிலும் மற்றொரு விகாரை தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே திருவடிநிலை நயினாதீவு உள்ளி;ட்ட பல பகுதிகள் புத்த பகவானின் புனித பூமிகளாகிவிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.