Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதிப்புக்கும்மரியைதைக்கும் உரிய சம்மந்தன் அய்யாவுக்கு ஆதி எழுதிய மடல்!

Featured Replies

மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அய்யா! கவனத்திற்கு நடந்து முடிந்த தொழிலாளர்தின பேரணியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுர்ச்சிமிகு கூட்டத்தில் ஐகியதேசியக் கட்சி,தமிழத் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன ஒன்றுபட்டு ஒரே மேடையில் தோன்றியமையானது காலத்தின் கட்டாயத்தில் நடைபெற்ற ஒரு நிகள்வாக கருதலாம் இந்த பேரணியில் தமிழ்த்தேசியக்ககூட்டமைப்பும் இணைந்துகொண்டு உழைக்கும் தொழிளாலர்களுக்காய் குரல்கொடுத்தமையானது வரவேற்க்கத்தக்க விடயம் ஆனால் அதில் நீங்கள் உரையாற்றும்போது குறிப்பிடப்பட்ட ஒருசில விடயங்கள் நீங்கள் வெளியிட்டகருத்துக்கள் சுதந்திர ஈழம் மலரும் என்ற கனவுகளுடன் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் என்னையும் என்போன்ற எழுர்ச்சி மிக்க இளையவர்களையும் வேதனைகொள்ள வைக்கின்றது உங்கள் கருத்தை எதிர்த்து யாராவது கண்டனமோ அல்லது அதற்கான விளக்கத்தையோ தருவதற்கு முன்வராத காரணத்தினால் நேரடியாகவே உங்களிடமே கேட்கின்றேன்.

( இந்த நாட்டில் சகல இனங்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ முடியும் என்பதனை இன்று நடக்கும் மே நாள் காட்டியிருக்கின்றது. ஆனால் இதனை குழப்ப சிலர் முயற்சிக்கின்றனர். அதனை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது ) அய்யா! இதுதான் நீங்கள் விடுத்த மேதின அறைகூவல் உங்களிடம் இருந்து இப்படி ஒரு கருத்தை நாங்கள் எதிர்பாக்கவில்லை ஊடகங்களில் வெளியாகிய இந்த செய்தியினை பாத்தவுடன் மிக்க கவலையடைந்தேன் காரணம் ஒரு புரட்சிப்போராளியின் துப்பாக்கியில் இருந்து பாயும் தோட்டாக்கள் ஒவ்வென்றும் மிகமிக முக்கியமானது அதேபோல ஒரு அரசியல்ரீதியான போராட்டத்தை செய்யும் போராளியின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் ஒவ்வென்றும் மதிப்பிடமுடியாத மாற்றத்தை கொண்டுவரும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் இந்த நாட்டில் சகல இனங்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ முடியும் என்பதனை இன்று நடக்கும் மே நாள்காட்டியிருப்பதாக நீங்கள் கூறியிருந்தீர்கள் .

அய்யா!! இது எந்தவிதத்திலும் சாத்தியமாகாது என்பது உங்களுக்கு நன்று தெரிந்திருக்கும் இலங்கைத்தீவிலே தமிழனும் சிங்களவனும் ஒன்றாக வாழமுடியாது என்பதை வரலாறு எத்தனையோ சம்பவங்கள் மூலம் சுட்டிக்காட்டிருக்கின்றது அதை உங்களுக்கு ஞாபகப்படுத்த பல வருடங்கள் பின்னோக்கி செல்லவேண்டிய அவசியம் இல்லை நேற்று முந்தநாள் நடந்த சம்பவங்களே போதும்.

கோரமான யுத்தம் முடிவுற்று மூன்று ஆண்டுகள் கடக்கின்றன இன்னமும் ஆட்கடத்தல்கள் கைதுகள் தடுப்புக்காவல் நில ஆக்கிரமிப்பு என சிங்கள பேரினவாத பூதம் போடும் தாண்டவம் குறையவில்லை, ஒன்றுபட்ட இலங்கைக்குள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்கின்றோம் என்று நீங்கள் கூறியது எந்த விதத்தில்நியாயமாகும்??

காமவெறியர்கள் மத்தியிலே எனது அக்கா தங்கையர் சுதந்திரமாக வாழ்வது சாத்தியமா? இன்றும் காவலுக்கு நிற்கும் சிங்கள நாய்கள் அன்றாடம் 12.13 வயதுமிக்க சின்னஞ்சிறு பிள்ளைகளைக்கூட கற்பழித்து படுகொலை செய்வதை பத்திரிகைகள் மூலம் நீங்கள் அறிவதில்லையா?? அனாதைப்பிணங்கள் வீதியோரம் கிடப்பதும் பொதுமக்கள் சொத்துக்கள் சூறையாடப்படுவதும் ஒன்றுபட்ட இலங்கைக்குள்த்தானே!!இந்த இழிநிலை நீளவேண்டுமா??

தமிழன் இறைச்சி கிடைக்கும் என்ற அந்த நாட்களை மறந்தீர்களா?? நீங்கள் ஒரு வரலாற்றுத்தவறை செய்துவிட்டதாகவே நான் எண்ணிக்கொள்கின்றேன் காரணம். இலங்கைத்தீவுக்குள் ஒன்றுபட்டு வாழமுடியாது என்பதை உறுதிசெய்த பின்பே 1976 மே16 நாள்தந்தை சொல்வா தலமையிலே அனைத்து கட்சிகளும் இணைந்து வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டது - இன்று நீங்கள் சொல்லும் இந்த கருத்துக்கள் தந்தை செல்வாவையும் அவரது தீர்மானத்தையும் கலங்கம் செய்கின்றது,இது மிகவும் வேதனையான விடயம் இதை விட 50ஆயிரத்துக்கும் மேலான மாவிரர்களின் கனவு இவர்களின் தியாகமும் போராட்டமும் தவறு என்று சொல்வதற்கு எத்தணிக்கின்றீர்களோ என்ற சந்தேகமும் எனக்கு இப்போது எழுந்துள்ளது இவாறான கருத்துக்களை நீங்கள் வெளியிடும்போது உங்கள் முன்னால்

sampanthan-and-ranil-with-srilanka-flag.jpg

வைக்கப்பட்டிருப்பது வெறும் ஒலிவாங்கிகள் அல்ல. அந்த ஒலிவாங்கிகள் ஒவ்வெரு வார்த்தைக்கும் ஒவ்வெரு அர்த்தங்களை உருவாக்கி வரலாற்றையே மாற்றிவிடும் சக்திகொண்ட ஊடகங்கள் என்பதை மறந்துவிடவேண்டாம் ஒவ்வொரு ஒலிவாங்கிகளும் பல லட்சம் மக்களின் காதுகள் என்பதை நினைவில் கொண்டு உரையாற்றவேண்டும்.

தயவுசெய்து ஒவ்வெரு இளைஞனுக்கும் உள்ளே எரிந்துகொண்டிருக்கும் விடுதலை நெருப்பினை இவாறானஅறிக்கைகள் மூலம் அணைத்துவிடவேண்டாம். சூழ்ச்சிகள் நிறைந்த இந்த காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எங்களை கரைசேர்க்கும் ஒரு துடுப்பே தவிர அதில் ஏறி பயணம் செய்வது சாத்தியம் இல்லை காரணம் வரலாற்றில் நாங்கள் சந்தித்த சந்திப்புக்கள் அமர்ந்த மேசைகள் - ஒப்பமிட்ட ஒப்பந்தங்கள் கணக்கிட முடியாதவை 2008 ஆம் ஆண்டு மாவீர் நாள் உரையின்போது தேசியத்தலைவரினால் புலம்பெயர் தமிழர்களிடம் குறிப்பாக இளையசமூகத்திடம் எமது போராட்டத்தை முன்னெடுத்துச்செல்லுமாறு கட்டளை இடப்பட்டது தேசியத்தலைவரின் கட்டளையினை ஒவ்வெரு இளைஞனும் ஆயுதம் இன்றி ரத்தமின்றி அசரியல் ரீதியாக முன்னெடுத்துச்செல்கிகொன்றோம் ஈழதேசம் மலரும் என்ற நம்பிக்கையுண்டன் , ( இணைந்த இலங்கைக்குள் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அதற்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் ஆனால் இதனை குழப்ப சிலர் முயற்சிக்கின்றனர்.

அதனை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது) நீங்கள் கூறிய இந்த கருத்தை நானும் எனது சமூகமும் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேம் இதற்கான விளக்கத்தையும் உங்களிடம் கோரி நிங்கின்றது இன்றைய இளைய சமூகம். அதாவது. இணைந்த இலங்கைக்குள் ஒன்றுபட்டு வாழ்வதை சிலர் குழப்புவதாக நீங்கள் சுட்டிக்காட்டியிருப்பது யாரை???

நிச்சயமாக சிங்கள அரசையோ அல்லது அதன் அடிவருடிகளையோ நீங்கள் குறிப்பிடவில்லை என்பது உன்மை அப்படியாயின் நீங்கள் குளப்பவாதிகள் என்று சுட்டிக்காட்டப்பட்டவர்கள் ஒன்றுபட்டு வாழ மறுத்து தனிநாடு கேட்பவர்களாகத்தான் இருக்கவேண்டும் அப்படியாயின் நீங்கள் குற்றம் சுமத்துவது யார் மீது??

அன்றுமுதல் இன்றுவரை தமிழகத்தில் தமிழீழம் தமிழீழம் என்று எங்கள் பிரச்சனைகளை தங்கள் தலைகளில் போட்டு மத்திய சிறைக்கும் புலோல் சிறைக்கும் மாறி மாறி தடுத்துவைக்கப்பட்ட எங்கள் இதயத்தின் துடிப்பான அண்ணன் வைக்கோ அன்பு அய்யா பழநெடுமாறன் போன்ற தமிழக தலைவர்களையா?அல்லது கொட்டும் பனிகளில் நனைந்து புலிக்கொடியை தூக்கியபடி விடுதலை விடுதலை என்று வீதி வீதியாக அலையும் புலம்பெயர்ந்த தமிழர்களையா என்பதை என்னால் ஊகித்துக்கொள்ள முடியவில்லை தயவு செய்து இதை விளக்கப்படுத்த வேண்டும் என்பதை தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன் காரணம் இன்று எங்கள் மத்தியில் துரோகி என்ற பெயர் மலிவாகிப்போய் கிடக்கின்றது உங்களுக்கும் துரோகி பட்டம் சூட்டப்படுமா??

அல்லது நீங்களே சூடிக்கொள்வீர்களா என்ற ஆதங்கத்தில் தான் உங்கள் கருத்தை கண்டிப்பதோடு அதற்காண விளக்கத்தையும் கோரி நிற்கின்றேன் இதை உங்கள் மீது உள்ள தனிப்பட்ட விரோதமோ அல்லது ஒரு விமர்சனமாகவோ கருதவேண்டாம் வரலாற்றில் நாங்கள் விழித்துக்கொள்ளும்போது இருள் எங்களை சூழ்ந்துகொள்வதுவே வளக்கமாக இருக்கின்ற காரனத்தினால் உங்களை வெளிச்சமிடும்படி கேட்டுக்கொள்கின்றேன் தமிழீழம் மலர்வதற்கும் தனிநாடு கிடைப்பதற்கும் கடைசித்தமிழனின் துண்டிக்கப்பட்ட கைகளும் வாளேந்தும் என்பதை மறந்துவிட வேண்டாம் அதை விடுத்து நீங்களாக ஒரு பாதையில் தமிழர்களை அழைத்துச்செல்லவேண்டாம் ஏற்கனவே நடந்துவந்த பாதையிலே பயனிப்போம் தூரம் அதிகமாக இருந்தாலும் இலக்கை அடைவது உறுதியே!!!

நன்றி அய்யா

-ஆதி-

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.