Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்பலேறிய மானமும் மகிந்தருக்கு கிடைத்த செம்புத்தண்ணீரும் - சேரமான்

Featured Replies

தேடி வந்தவனை துடைப்பக் கட்டையால் அடித்துவிட்டு செம்புத்தண்ணீர் கொடுத்து உபசரித்த கதையாக’ மகிந்தரை இலண்டனுக்கு அழைத்து உரிய மரியாதைகளையும், கூடவே அவமரியாதைகளையும் செலுத்திவிட்டு பிரித்தானியா வழியனுப்பியுள்ளது. 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒக்ஸ்போர்ட்டில் உரையாற்ற வந்து வெறும் கையுடன் திரும்பிச் சென்ற பொழுது ஏற்பட்டதைவிட மிகப் பெரும் அவமானம் இம்முறை மகிந்தருக்கு ஏற்பட்டுள்ளது. விழிபிதுங்கிய நிலையில் கூனிக்குறுகி எலிசபெத் மகாராணியாரின் விருந்துபசாரத்தில் மகிந்தர் கலந்து கொண்டமை இதனைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றது.

இலண்டன் ஹித்ரோ விமான நிலையத்தில் மகிந்தருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் உட்பட சகல நிகழ்வுகளும் தமது காதுகளுக்கு எட்டியிருந்தாலும்கூட, அவற்றை சுயதணிக்கை செய்திருந்த கொழும்பு ஏரிக்கரை சிங்கள ஊடகங்கள், விம்மிவெடித்த தமது மனக்குமுறல்களை ஒருவாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளன. மகிந்தரின் கொடும்பாவி தூக்குக் கம்பத்தில் இடப்பட்டும், இலண்டன் வீதிகளூடாக இழுத்துச் செல்லப்பட்டும் எரியூட்டப்பட்டமை இதுவரை காலமும் யுத்த வெற்றிக் களிப்பில் திளைத்திருந்த சிங்கள ஊடகங்களை பதைபதைக்க வைத்துள்ளன.

இதுபற்றி ‘த சண்டே ரைம்ஸ்’ வார ஏடு வெளியிட்டுள்ள பத்தியில் பின்வருமாறு குறிப்

பிடப்பட்டுள்ளது: ‘அதிபர் ராஜபக்சவின் கொடும்பாவிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் காவிச்சென்றதோடு, சிலவற்றை வீதிகளில் எரியூட்டியுமிருந்தனர். வெவ்வேறான அரசியல் கருத்துக்களை கொண்டிருந்தாலும்கூட மானமுள்ள எந்தவொரு சிறீலங்காவின் குடிமகனும் சனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்ட தமது அதிபர் வெளிநாட்டு மண்ணில் இவ்வாறு அவமதிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ளமாட்டான்.’

இச்சம்பவம் பற்றி மனம்புழுங்கிப் பத்தியன்றை வெளியிட்டிருக்கும் பிறிதொரு சிங்கள இணைய ஊடகம், ‘பெருமையுடன் தத்தமது நாட்டின் தேசியக் கொடிகளைப் பறக்கவிட்டவாறு ஏனைய நாட்டுத் தலைவர்கள் இலண்டன் வீதிகளை வலம் வந்தபொழுது’ தங்களின் அதிபர் மட்டும் ‘தலைமறைவாக இலண்டனில் விருந்துண்ணச் சென்றமை’ நாட்டின் மானத்தைக் காற்றில் பறக்க விட்டிருப்பதாக ஒப்பாரி வைத்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் துடிக்கத் துடிக்க எமது உறவுகளை சிங்களம் நரபலி வேட்டையாடிய காட்சிகளையும், வீரப் போர்புரிந்து மாண்ட எமது புதல்வர்களினதும், புதல்விகளினதும் வித்துடல்களை நிர்வாணப்படுத்தி துட்டகாமினிகள் களியாட்டம் ஆடிய காணொளிகளையும் பதைக்கப் பதைக்கப் பார்த்துக் கொதித்த ஒவ்வொரு தமிழனையும், தமிழச்சியையும் சிறிதளவேனும் ஆசுவாசப்படுத்தும் நிகழ்வாக மகிந்தருக்கு இலண்டனில் ஏற்பட்ட அவமானம் அமைந்தது எனக்கூறுவதில் ஐயம் இருக்கமுடியாது.

மகிந்தரின் நரபலித் தாண்டவத்தைக் கண்டு விம்மிவெடித்த தமிழினத்தின் குமுறுலாகவே அவரின் கொடும்பாவி தூக்குக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டு இலண்டன் வீதிகள் ஊடாக இழுத்துச் செல்லப்பட்டது. ஊழித்தீயாக ஒவ்வொரு தமிழர்களின் இதயங்களிலும் கொழுந்துவிட்டெரியும் நெருப்பின் ஒரு பொறியிலேயே மகிந்தரின் கொடும்பாவியும், வாளேந்திய சிங்கக் கொடியும் பொசுங்கிப் போயின. இது சிங்களத்திற்கு ஏற்பட்ட படுதோல்வி.

சிங்களத்தின் மானத்தைக் கப்பலேற்றிய மிகப்பெரும் அவமானம். எத்தனை துட்டகாமினிகள் மறுபிறவி எடுத்து வந்தாலும் துடைக்க முடியாத மிகப்பெரும் களங்கம். தமிழனின் குருதியைக் குடிக்கத் துடித்த விகாரமாதேவி மீண்டெழுந்து வந்தாலும்கூட மகிந்தருக்கும், சிங்களத்திற்கும் ஏற்பட்ட அபகீர்த்தியை நீக்க முடியாது. ஆனால் மகிந்தருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி, சிங்களத்தின் மானத்தைக் கப்பலேற்றிய ஆசுவாசம் மட்டுமே தமிழர்களுக்குச் சொந்தமானது. இது சிங்களத்திற்கு ஏற்பட்ட படுதோல்வியாக அமைந்தாலும்கூட தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றியல்ல.

இலண்டன் வீதிகளில் பட்டொளி வீசிப் பறந்த பாயும் புலிக்கொடி மீண்டும் தமிழீழ மண்ணில் மார்தட்டியெழும் காலம் வரும் வரை நாம் வெற்றிக்களியாட்டத்தில் ஈடுபட முடியாது. அந்த நாள் வரும் வரை எமது பயணம் முடிவுக்கு வந்து விடாது. அன்றுதான் எமது வெற்றிநாள். ஒரு விதத்தில் மகிந்தருக்கும், சிங்களத்திற்கு ஏற்பட்ட இந்தப் படுதோல்வியின் கதாநாயகர்கள் நாங்கள் அல்ல: மகிந்தரை அவமானப்படுத்தியதில் எங்களுக்கு எவ்வளவு பங்கு இருந்ததோ அதேயளவு பங்கு மகிந்தருக்கு படுதோல்வியை ஏற்படுத்தியதில் பிரித்தானிய அரச இயந்திரத்திற்கும் இருந்தது: மேற்குலகின் அச்சாணியாக விளங்கும் அமெரிக்காவிற்கும் இருந்தது. உண்மையில் இது மகிந்தருக்கு பாடம் கற்பிப்பதற்கு திட்டமிட்டு மேற்குலம் அரங்கேற்றிய நாடகம்.

2010ஆம் ஆண்டில் ஒக்ஸ்போர்ட்டில் உரையாற்ற வந்து படுதோல்வியைத் தழுவித் திரும்பிச் சென்ற பொழுது ‘வணங்கா மன்னனாகவே’ கட்டுநாயக்காவில் மகிந்தர் காலடி பதித்தார். ஆனால் இப்பொழுது அப்படியல்ல. கூனிக்குறுகி எலிசபெத் மகாராணிக்குக் கைலாகு கொடுத்து ‘முதுகொடிந்த மன்னனாகவே’ இப்பொழுது மகிந்தர் கொழும்பு திரும்பியுள்ளார். 2010ஆம் ஆண்டு பெரும் ஆரவாரத்துடன் அவரை வரவேற்கச் சென்றவர்கள் இம்முறை ஓடியளிந்து விட்டார்கள்.

ஒன்றரை ஆண்டுகால ஓட்டத்திற்குள் ஏதேதோ எல்லாம் நிகழ்ந்தேறிவிட்டது. இரண்டு ஏழல்களுக்கு முந்திய இப்பத்தியில் குறிப்பிட்டமை போன்று மேற்குலகின் திசையிலேயே மகிந்தரின் தொழுகை அண்மைக் காலமாக நடைபெறுகின்றது. பன்னாட்டு நாணய நிதியத்திடம் மண்டியிட்டது தொடக்கம், பொன்சேகாவை விடுதலை செய்தது வரை எல்லா வழிகளிலும் மேற்குலகைத் திருப்திப்படுத்து வதிலேயே இப்பொழுது மகிந்தர் மும்முரமாக உள்ளார்.

இதைவிட அவருக்கு வேறு வழியுமில்லை. இதன் ஓர் அங்கமாகவே மகிந்தரின் இலண்டன் பயணமும் அமைந்திருந்தது. எலிசபெத் மகாராணியின் விருந்துபசாரத்திற்கு பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட பொழுதும்கூட, மகிந்தரையும், நமீபியாவின் அதிபர் கிவிக்குபுண்யே பொகம்பாவையும் தவிர வேறு எந்த அரசுத் தலைவர்களும் விருந்தில் கலந்து கொள்ளவில்லை.

இவர்களுக்கு அடுத்தபடியாக மகாராணியுடனான விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட உயர்மட்டத் தலைவர்களாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்களும், நியூசீலண்ட் பிரதமர் ஜோன் கீ அவர்களுமே உள்ளடக்கம்.

தேடி வந்தவனை துடைப்பக் கட்டையால் அடித்துவிட்டு செம்புத்தண்ணீர் கொடுத்து உபசரித்த கதையாக’ மகிந்தரை இலண்டனுக்கு அழைத்து உரிய மரியாதைகளையும், கூடவே அவமரியாதைகளையும் செலுத்திவிட்டு பிரித்தானியா வழியனுப்பியுள்ளது. 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒக்ஸ்போர்ட்டில் உரையாற்ற வந்து வெறும் கையுடன் திரும்பிச் சென்ற பொழுது ஏற்பட்டதைவிட மிகப் பெரும் அவமானம் இம்முறை மகிந்தருக்கு ஏற்பட்டுள்ளது. விழிபிதுங்கிய நிலையில் கூனிக்குறுகி எலிசபெத் மகாராணியாரின் விருந்துபசாரத்தில் மகிந்தர் கலந்து கொண்டமை இதனைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றது.

இலண்டன் ஹித்ரோ விமான நிலையத்தில் மகிந்தருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் உட்பட சகல நிகழ்வுகளும் தமது காதுகளுக்கு எட்டியிருந்தாலும்கூட, அவற்றை சுயதணிக்கை செய்திருந்த கொழும்பு ஏரிக்கரை சிங்கள ஊடகங்கள், விம்மிவெடித்த தமது மனக்குமுறல்களை ஒருவாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளன. மகிந்தரின் கொடும்பாவி தூக்குக் கம்பத்தில் இடப்பட்டும், இலண்டன் வீதிகளூடாக இழுத்துச் செல்லப்பட்டும் எரியூட்டப்பட்டமை இதுவரை காலமும் யுத்த வெற்றிக் களிப்பில் திளைத்திருந்த சிங்கள ஊடகங்களை பதைபதைக்க வைத்துள்ளன. இதுபற்றி ‘த சண்டே ரைம்ஸ்’ வார ஏடு வெளியிட்டுள்ள பத்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

‘அதிபர் ராஜபக்சவின் கொடும்பாவிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் காவிச் சென்றதோடு, சிலவற்றை வீதிகளில் எரியூட்டியுமிருந்தனர். வெவ்வேறான அரசியல் கருத்துக்களை கொண்டிருந்தாலும்கூட மானமுள்ள எந்தவொரு சிறீலங்காவின் குடிமகனும் சனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்ட தமது அதிபர் வெளிநாட்டு மண்ணில் இவ்வாறு அவமதிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ளமாட்டான்.’ இச்சம்பவம் பற்றி மனம்புழுங்கிப் பத்தியன்றை வெளியிட்டிருக்கும் பிறிதொரு சிங்கள இணைய ஊடகம், ‘பெருமையுடன் தத்தமது நாட்டின் தேசியக் கொடிகளைப் பறக்கவிட்டவாறு ஏனைய நாட்டுத் தலைவர்கள் இலண்டன் வீதிகளை வலம் வந்தபொழுது’ தங்களின் அதிபர் மட்டும் ‘தலைமறைவாக இலண்டனில் விருந்துண்ணச் சென்றமை’ நாட்டின் மானத்தைக் காற்றில் பறக்க விட்டிருப்பதாக ஒப்பாரி வைத்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் துடிக்கத் துடிக்க எமது உறவுகளை சிங்களம் நரபலி வேட்டையாடிய காட்சிகளையும், வீரப் போர்புரிந்து மாண்ட எமது புதல்வர்களினதும், புதல்விகளினதும் வித்துடல்களை நிர்வாணப்படுத்தி துட்டகாமினிகள் களியாட்டம் ஆடிய காணொளிகளையும் பதைக்கப் பதைக்கப் பார்த்துக் கொதித்த ஒவ்வொரு தமிழனையும், தமிழச்சியையும் சிறிதளவேனும் ஆசுவாசப்படுத்தும் நிகழ்வாக மகிந்தருக்கு இலண்டனில் ஏற்பட்ட அவமானம் அமைந்தது எனக்கூறுவதில் ஐயம் இருக்கமுடியாது.

மகிந்தரின் நரபலித் தாண்டவத்தைக் கண்டு விம்மிவெடித்த தமிழினத்தின் குமுறுலாகவே அவரின் கொடும்பாவி தூக்குக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டு இலண்டன் வீதிகள் ஊடாக இழுத்துச் செல்லப்பட்டது. ஊழித்தீயாக ஒவ்வொரு தமிழர்களின் இதயங்களிலும் கொழுந்துவிட்டெரியும் நெருப்பின் ஒரு பொறியிலேயே மகிந்தரின் கொடும்பாவியும், வாளேந்திய சிங்கக் கொடியும் பொசுங்கிப் போயின. இது சிங்களத்திற்கு ஏற்பட்ட படுதோல்வி. சிங்களத்தின் மானத்தைக் கப்பலேற்றிய மிகப்பெரும் அவமானம். எத்தனை துட்டகாமினிகள் மறுபிறவி எடுத்து வந்தாலும் துடைக்க முடியாத மிகப்பெரும் களங்கம். தமிழனின் குருதியைக் குடிக்கத் துடித்த விகாரமாதேவி மீண்டெழுந்து வந்தாலும்கூட மகிந்தருக்கும், சிங்களத்திற்கும் ஏற்பட்ட அபகீர்த்தியை நீக்க முடியாது.

ஆனால் மகிந்தருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி, சிங்களத்தின் மானத்தைக் கப்பலேற்றிய ஆசுவாசம் மட்டுமே தமிழர்களுக்குச் சொந்தமானது. இது சிங்களத்திற்கு ஏற்பட்ட படுதோல்வியாக அமைந்தாலும்கூட தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றியல்ல. இலண்டன் வீதிகளில் பட்டொளி வீசிப் பறந்த பாயும் புலிக்கொடி மீண்டும் தமிழீழ மண்ணில் மார்தட்டியெழும் காலம் வரும் வரை நாம் வெற்றிக்களியாட்டத்தில் ஈடுபட முடியாது. அந்த நாள் வரும் வரை எமது பயணம் முடிவுக்கு வந்து விடாது. அன்றுதான் எமது வெற்றிநாள்.

ஒரு விதத்தில் மகிந்தருக்கும், சிங்களத்திற்கு ஏற்பட்ட இந்தப் படுதோல்வியின் கதாநாயகர்கள் நாங்கள் அல்ல: மகிந்தரை அவமானப்படுத்தியதில் எங்களுக்கு எவ்வளவு பங்கு இருந்ததோ அதேயளவு பங்கு மகிந்தருக்கு படுதோல்வியை ஏற்படுத்தியதில் பிரித்தானிய அரச இயந்திரத்திற்கும் இருந்தது: மேற்குலகின் அச்சாணியாக விளங்கும் அமெரிக்காவிற்கும் இருந்தது. உண்மையில் இது மகிந்தருக்கு பாடம் கற்பிப்பதற்கு திட்டமிட்டு மேற்குலம் அரங்கேற்றிய நாடகம்.

2010ஆம் ஆண்டில் ஒக்ஸ்போர்ட்டில் உரையாற்ற வந்து படுதோல்வியைத் தழுவித் திரும்பிச் சென்ற பொழுது ‘வணங்கா மன்னனாகவே’ கட்டுநாயக்காவில் மகிந்தர் காலடி பதித்தார். ஆனால் இப்பொழுது அப்படியல்ல. கூனிக்குறுகி எலிசபெத் மகாராணிக்குக் கைலாகு கொடுத்து ‘முதுகொடிந்த மன்னனாகவே’ இப்பொழுது மகிந்தர் கொழும்பு திரும்பியுள்ளார். 2010ஆம் ஆண்டு பெரும் ஆரவாரத்துடன் அவரை வரவேற்கச் சென்றவர்கள் இம்முறை ஓடியளிந்து விட்டார்கள்.

ஒன்றரை ஆண்டுகால ஓட்டத்திற்குள் ஏதேதோ எல்லாம் நிகழ்ந்தேறிவிட்டது. இரண்டு ஏழல்களுக்கு முந்திய இப்பத்தியில் குறிப்பிட்டமை போன்று மேற்குலகின் திசையிலேயே மகிந்தரின் தொழுகை அண்மைக் காலமாக நடைபெறுகின்றது. பன்னாட்டு நாணய நிதியத்திடம் மண்டியிட்டது தொடக்கம், பொன்சேகாவை விடுதலை செய்தது வரை எல்லா வழிகளிலும் மேற்குலகைத் திருப்திப்படுத்து வதிலேயே இப்பொழுது மகிந்தர் மும்முரமாக உள்ளார்.

இதைவிட அவருக்கு வேறு வழியுமில்லை. இதன் ஓர் அங்கமாகவே மகிந்தரின் இலண்டன் பயணமும் அமைந்திருந்தது. எலிசபெத் மகாராணியின் விருந்துபசாரத்திற்கு பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட பொழுதும்கூட, மகிந்தரையும், நமீபியாவின் அதிபர் கிவிக்குபுண்யே பொகம்பாவையும் தவிர வேறு எந்த அரசுத் தலைவர்களும் விருந்தில் கலந்து கொள்ளவில்லை.

இவர்களுக்கு அடுத்தபடியாக மகாராணியுடனான விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட உயர்மட்டத் தலைவர்

களாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்களும், நியூசீலண்ட் பிரதமர் ஜோன் கீ அவர்களுமே உள்ளடக்கம்.

இதையிட்டு தான் அலட்டிக் கொண்டதாக மகிந்தர் காண்பித்துக் கொள்ளவில்லை. எல்லாவெல்ல மேதானந்த தேரரையும், விமல் வீரவன்சவையும் சமாதானப்படுத்திய மகிந்தர், இலண்டன் புறப்படும் நாளன்று திம்பிரிகசியாய விளையாட்டுத் திடலில் நடைபெற்ற ரக்பி போட்டியை பிரித்தானிய தூதுவருக்கு அருகில் இருந்து கண்டு களித்தார். பிரித்தானியாவையோ அன்றி மேற்குலகையோ தான் பகைத்துக் கொள்வதால் எதனையும் சாதிக்க முடியாது என்பது மகிந்தருக்கு நன்கு தெரியும். மேதானந்த தேரரையும், வீரவன்சவையும் சமாதானப்படுத்துவதற்காக ரன்கின் அவர்களை நாடுகடத்தினால் 2013ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடு கேள்விக்குறியாகிவிடும் என்பதை மகிந்தர் புரிந்து கொண்டிருந்தார்.

போதாக்குறைக்கு பன்னாட்டு நிதியத்திடம் மீண்டுமொரு கடனுதவியைப் பெறுவதற்காக ‘திருவோடு’ ஏந்திப் பிச்சையெடுக்க வேண்டிய நிலையில் பிரித்தானியாவுடன் மோதுவது தனக்கே வினையாகிவிடும் என்பது மகிந்தருக்கு நன்கு தெரியும். இவ்வாறான பின்புலத்திலேயே பிரித்தானியாவிடம் செருப்படி வாங்கிய பின்னரும் அமைதியாக மகிந்தர் கொழும்பு திரும்பியுள்ளார். மேற்குலகிடம் கூனிக்குறுகி வளைந்து நிற்பதைத் தவிர மகிந்தருக்கு வேறு வழியில்லை.

ஆனால் மேற்குலகைப் பொறுத்தவரை இது திருப்தி தருவதாயில்லை. போர்க்குற்றம், மனித உரிமை, படைவிலக்கல், அதிகாரப் பகிர்வு என்றெல்லாம் மேற்குலகம் கூறினாலும்கூட உண்மையில் ஈழத்தீவில் தமது முதலாளித்துவ நலன்களையும், அதனைச்சார்ந்துள்ள கேந்திர நலன்களையும் உறுதிசெய்வதே மேற்குலகின் நோக்கமாக உள்ளது. இதில் பகடைக்காய்களாகவே ஈழத்தமிழினம் பயன்படுத்தப்படுகின்றது.

எப்பொழுது முழுமையாக மேற்குலகிடம் மகிந்தர் மண்டியிடுகின்றாரோ அக்கணமே ஈழத்தமிழர்களை மேற்குலகம் கைவிட்டு விடும். இவ்வாறானதொரு பரிதாபகரமான நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு ஈழத்தமிழர்களுக்கு ஒரேயரு வழிதான் உள்ளது. தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து சொந்தக்காலில் நின்று நாம் எமது விடுதலையை வென்றெடுக்க உழைப்பதே இந்த வழி. ஆர்ப்பாட்டங்கள் மூலம் மகிந்தருக்கு நாம் அவமானத்தைக் கொண்டு வரலாம். ஆனால் ஆர்ப்பாட்டமே எமது போராட்ட வடிவமாக அமைந்தால் திபெத்தியர்களுக்கு ஏற்பட்ட கதியே எமக்கும் ஏற்படும். அணையாத நெருப்பாக எமது நெருப்பில் கனன்று கொண்டிருக்கும் விடுதலை தீ வெறும் தீச்சுவாலையல்ல: அது தமிழினத்தின் ஊழித்தீ.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.