Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”இந்தியாவை எதிர்த்து போராட நேரிடும்” -பிரபாகரனின் தீர்க்கமான பேச்சு!

Featured Replies

[size=4]ஜூலை 1983 சம்பவம் என்று இலங்கை அதைப் பதிவு செய்திருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு இது கறுப்பு யூலை (கருப்பு ஜீலை). திருநெல்வேலியில் எல்.டி.டி.ஈ. நிகழ்த்திய தாக்குதல் சம்பவத்துக்குப் பதிலடியாக நிகழ்த்திய வன்முறைச் செயல் என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. சிங்களர்களின் திட்டமிட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட மிருகத்தனம் என்று மட்டுமே அதை அழைக்க முடியும்.[/size] [size=1]

[size=4]அரசாங்கத்தின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்டு ஜீலை 24 அன்று ஆரம்பித்தார்கள். மொத்தம் ஏழு நாள்கள். தமிழன் என்று ஓர் இனமே இருக்கக் கூடாது என்னும் உக்கிரம் அவர்களிடம் தெரிந்தது. அந்த ஏழு நாள்களில் எத்தனை லிட்டர் பெட்ரோல் செலவானது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால், எத்தனை தமிழர்கள் இறந்துபோயிருப்பார்கள் என்பதையும் கண்டுபிடிக்க இயலும்.[/size][/size] [size=1]

[size=4]வீட்டை வெளியில் பூட்டிவிட்டு உள்ளே தீப்பந்தத்தைத் தூக்கிப் போட்டார்கள். தமிழர்களின் கடைகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள். தேவைப்படுவோர் சரக்குகளை எடுத்துக் கொள்ளலாம். ஒரு நிபந்தனை. எடுத்து முடித்தபின், எரித்துவிட வேண்டும். கடையை. கடைக்காரனை.[/size][/size] [size=1]

[size=4]பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வகுப்பெடுக்கச் செல்லும் ஆசிரியர்கள். வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினர்கள். வயதானவர்கள், அரசாங்கப் பணியாளர்கள். தந்தை செல்வாவின் அற வழியில் நடப்பவர்கள. அத்தனை பேரையும் கொன்று தீர்த்தார்கள். சைக்கிள் டயரை உடலில் சுற்றிம் பெட்ரோல் ஊற்றி எரித்தார்கள்.[/size][/size] [size=1]

[size=4]கொழும்பில் உள்ள வெலிக்கடை (Welikade) சிறைச்சாலையில்[/size][size=4]உள்ள5[/size][size=4]3தமிழ்க் கைதிகளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகள் ஒன்று திரண்டு வந்து அடித்தே கொன்றனர். கொல்லப்பட்டவர்களுள் பெரும்பாலானோர் அரசியல் கைதிகள், பயக்கரவாதத் தடுப்புச் சட்டத்தில், வெறுமனே சந்தேகத்தின் பேரில் அடைக்கப்பட்டவர்கள்.[/size][/size] [size=1]

[size=4]குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்ளிட்ட 35 பேர், குட்டி மணியை சிங்களர்களுக்கு நன்கு தெரியும், எல்லோரையும் போல் அவரையும் வெறுமன கொன்றுவிட விருப்பமில்லை அவர்களுக்கு. ஆகவே, முதலில் அவர் கண்களைத் தனியே தொண்டி எடுத்தனர். சிறையின் ஒரு மூலையில் பிரமை பிடித்தபடி ஒடுங்கியிருந்த பதினாறு வயது மயில்வாகணனை சிங்களர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். இதைக் கவனித்த ஜெயில் வார்டன் பாய்ந்து வந்து மயில்வாகணனைப் பிடித்து அடித்துக் கொன்றார்.[/size][/size] [size=1]

[size=4]சிறைச்சாலைக்குப் பின்னால் கெளதம புத்தரின் சிலை ஒன்று இருந்தது. முப்பத்தைந்து உடல்களையும் இழுத்துக்கொண்டு போய் அங்கே குவித்து வைத்தார்கள். ஜெயில் வார்டன் கத்தினார். டேய் ஒன்றிரண்டு பேர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் பார். அதோ அங்கே இரண்டு பேர் கையை உயர்த்துகிறார்கள் பார். போ.[/size][/size] [size=1]

[size=4]இலங்கை இனப் பிரச்னைக்கு ஆயுதப் போராட்டம் ஒன்றே வழி என்னும் நம்பிக்கையை மிக அழுத்தமாக ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் பதிய வைத்த சம்பவம் அது. சென்னையிலும் மதுரையிலும் மக்கள் வீதிக்குத் திரண்டு ஜெயவர்த்தனேவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார்கள். இதற்கு மேலும் இந்திரா காந்தி தலையிடாமல் இருப்பது சரியல்ல என்று கோஷம் எழுப்பினார்கள். தமிழ்நாட்டிலுள்ள 5 கோடி தமிழ் இதயங்களும் ரத்தக்கண்ணீர் விடுக்கின்றன என்றார் முதல்வர் எம்.ஜி.ஆர். இந்திரா காந்தி விரைந்து செயலாற்ற வேண்டும் என்றார் கருணாநிதி.[/size][/size] [size=1]

[size=4]அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பி.வி.நரசிம்மராவை இலங்கைக்கு அனுப்பி வைத்தார் இந்திரா காந்தி. இன்முகத்துடன் அவரை வரவேற்றார் ஜெயவர்த்தனே. இந்தியா இலங்கை விவகாரத்தில் தன் மூக்கை நீட்டுவது உசிதமாகத் தோன்றவில்லை என்று சொல்லி நரசிம்மராவை அனுப்பி வைத்தார்.[/size][/size] [size=1]

[size=4]ஜெயவர்த்தனே மக்கள் முன் தோன்றி உரையாடினார்.[/size][/size] [size=1]

[size=4]இத்தனைக்கும் காரணம் எல்.டி.டி.ஈ. தான் ராணுவத்தினரை அவர்கள் கொன்றதால் சிங்களர்கள் கொதிப்படைந்திருக்குறார்கள். இன்னொரு விஷயம். தனி தேசம் கேட்டு இனி யாரும் இங்கே போராட்டம் நடத்தக்கூடாது. அதற்கு ஏற்றாற் போல் அரசியலமைப்புச் சட்டத்தை நான் மாற்றியமைக்கப் போகிறேன். இலங்கையில் தனி நாடு அமையாது. அமையக் கூடாது.[/size][/size] [size=1]

[size=4]இலங்கை அரசின் அதிகாரபூர்வமான அறிக்கை வெளிவந்தது. இறந்து போனவர்கள மொத்தம் 350 பேர். தமிழர்களுக்குச் சொந்தமான 18,000 வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் சேதமடைந்துள்ளன. ஒரு லட்சம் தமிழர்கள் அகதிகளாக மாறியுள்ளனர்.[/size][/size] [size=1]

[size=4]உண்மையான எண்ணிக்கையை அடைய ஒவ்வொன்றையும் எத்தனை மடங்கு பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று தமிழர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்தியாவுக்கும் தெரிந்திருந்தது.[/size][/size] [size=1]

Indira_Gandhi.jpg[size=4]ஆகஸ்ட் 2-ம் தேதி இந்திரா காந்தி ஒரு முடிவுக்கு வந்திருந்தார். இலங்கைத் தமிழர்களுக்கு உதவவேண்டும். அகதிகளுக்கு ஏதாவது செய்யவேண்டும். மருந்து, மாத்திரைகள், உடைகள், உணவுப் பொருள்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. கொழும்பில் குவிந்திருக்கும் அகதிகளை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்வதற்குக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு அமிர்தலிங்கத்தை வரவேற்று உபசரித்தார் இந்திரா காந்தி, ஜெயவர்த்தனேவின் ரத்தம் கொதிக்கவேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்ட ஏற்பாடு இது. பிறகு, ஜெயவர்த்தனேவுடன் இரண்டு, மூன்று முறை உரையாடினார். இதற்கு மேல் எதுவும் முடியாது என்று ஒரு கட்டத்தில் இலங்கையுடன் மோதுவதை நிறுத்திக்கொண்டார் இந்திரா காந்தி.[/size][/size] [size=1]

[size=4]இந்திராகாந்தி தெளிவாக இருந்தார். இந்தியாவின் நலன் பாதிக்கப்படாத வரை, இந்தியா எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடாது.[/size][/size] [size=1]

[size=4]அதாவது வெளிப்படையாக.[/size][/size] [size=1]

[size=4]செப்டம்பர் 1983-ல் சென்னை முழுக்க இலங்கைத் தமிழர்களால் நிரம்பியிருந்தது. அவர்களில் யார் அகதிகள். யார் பயிற்சிக்காக வந்திருப்பவர்கள் என்று பேருந்தைக் கொண்டுவந்தவர்களுக்குத் தெரிந்திருந்தது. இயக்கத்தினரை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து அழைத்துச் சென்றார்கள். மூன்று நாள் பயணம். தில்லையைச் சுற்றிக்காட்டிவிட்டு முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது டேராதூனில். வெவ்வேறு இயக்கத்தைச் சார்ந்த அனைவருக்கும் பயிற்ச்சிகள் அளிக்கப்பட்டன. எல்.டி.டி.ஈ.க்கு மட்டும் தனியாக. பிரபாகரனின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவர்களுக்கு பிரத்தியோக பயிற்ச்சிகள் அளிக்கப்பட்டன. அளித்தவர்கள் இந்திய உளவுத் துறையான ‘ரா’வைச் சேர்ந்தவர்கள். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள். சிறப்புப் பயிற்சியாளர்கள். ராணுவ ஆசிரியர்கள்.[/size][/size] [size=1]

[size=4]மிக விரிவான, கடினமான பயிற்சி திட்டம் அது. எட்டு மணிக்கு ஆரம்பித்துவிடுவார்கள். காலைப் போழுதுகளில் வகுப்புகள் எடுப்பார்கள். கெரில்லா தாக்குதல் முறை குறித்து. எப்படி மறைந்துகொள்வது? எதிரிகளை எப்படி அலைக்கழிப்பது? எப்போது தனியாகத் தாக்கவேண்டும்? எப்போது குழுவாக? தாக்கிக்கொண்டே விரைந்து ஓடுவது எப்படி? எப்படிப் பதுங்குவது? எப்படி சமயம் பார்த்துப் பாய்வது? பிறகு பிராக்டிகல், வகை வகையான ஆயுதங்கள அளிக்கப்படும். ஒவ்வொன்றின் பயன்பாடும் விரிவாக எடுத்துரைக்கப்படும்.[/size][/size] [size=1]

ltte-001b.jpg[size=4]ஒரு மணி முதல் இரண்டு மணி வரை மதிய உணவு நேரம். பிறகு, மைதானத்தில் திரண்டுவிட வேண்டும். துப்பாக்கிப் பயிற்சி, உலகில் உள்ள அத்தனை ரிவால்வர்களையும் அத்தனை ரைபிள்களையும், அத்தனை இயந்திரத் துப்பாக்கிகளையும் அவர்களுக்கு பழக்கிவிடுவார்கள். கூடுதலாக, ராக்கேட் லாஞ்சர்ஸ், பிறகு, சிறப்புப் பயிற்சி. வெடிமருந்துகள், குண்டுகள், அவர்களுக்கு பழக்கிவிடுவார்கள். கூடுதலாக, ராக்கெட் லாஞ்சர்ஸ். பிறகு சிறப்புப் பயிற்சி. வெடிமருந்துகள், குண்டுகள், வெடிகள் குறித்து. தகவல் தொடர்பு சாதனங்கள், உபயோகங்கள் குறித்து. ரேடியோ சிக்னல்களை எப்படிப் பெறுவது? வயர்லெஸ் சாதனங்களை எப்படிக் கையாள்வது?[/size][/size] [size=1]

[size=4]அவ்வப்போது தேர்வுகள் நடைபெறும். மதிப்பெண்கள் அளிக்கப்படும். ஒருவர் எத்தனை தூரம் வளர்ந்திருக்கிறார். எதில் குறிப்பாகப் பின்தங்கியிருக்கிறார் என்று குறித்துவைத்துக் கொள்வார்கள். மீண்டும் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும். எல்லாம் முடிந்ததும், பிரிவுபசார விழா போல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. எல்.டி.டி.ஈ. வீரர்களைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள். பயிற்ச்சியாளர்கள்.[/size][/size] [size=1]

[size=4]kittu_ltte-990.jpgகிட்டு, பொன்னம்மான் போன்றவர்கள பயிற்சி முடிந்தபின் பிரபாகரனைச் சந்தித்தனர். இந்தியா அளித்த பயிற்சியைப் பற்றி ஆஹா ஓஹா என்று வாய் நிறைய புகழ்ந்தனர். எல்லாவற்றையும் கேட்டுகொண்ட பிறகு, பிரபாகரன் சொன்னார்.[/size][/size] [size=1]

[size=4]அவர்கள் நமக்குப் பயிற்சியளித்தது வேறு ஒரு காரணத்துக்காக. நாம் பயிற்சி எடுத்துக்கொண்டது மற்றொரு காரணத்துக்காக. நமக்கு எதிராக இந்தியா தனது படைகளைத் திருப்பும் காலம் வரலாம். அது போன்ற சந்தர்பத்தில், நாம் இந்தியாவை எதிர்த்துப் போரிட நேரிடும். ஆகவே, அதிகம் உணர்ச்சிவசப் படவேண்டாம். என்ன கிட்டு, நான் சொல்வது புரிகிறதா?’[/size][/size] [size=1]

[size=4]கிட்டு தலையசைத்தார்.[/size][/size] [size=1]

[size=4]ஒரு புலி கம்பீரமாக நடந்துவருவதைப் போல் பிருமாண்டமான கர்ஜனையுடன் அவர் நடந்து வந்தார். தீர்க்கமான கண்கள். அவர் பேசினாரா அல்லதி உறுமினாரா என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு வார்த்தையிலும் அனல் கொப்பளித்தது. இப்படியொரு முன்னுரையுடன் தன் கட்டுரையை ஆரம்பிக்க நினைத்திருந்த அனிதா பிரதாப்புக்கு ஆச்சரியமும் ஏமாற்றமும் மட்டுமே காத்திருந்தன. இவரா? இளங்கறுப்புப் பேண்ட், நீல சட்டை, குள்ளம். மிக மிக மென்மையான குரல். இவரா புலிக்கூட்டத்தின் தலைவர்.[/size][/size] [size=1]

[size=4]சென்னை பெசன்ட் நகரில் பிரபாகரனைச் சந்தித்தார் அனிதா பிரதாப். சண்டே செய்தி பத்திரிக்கையின் நிருபர். பொதுவாக பிரபாகரன் யாருக்கும் பேட்டிகள் கொடுப்பதில்லை. ஆனால், 1983 கலவரத்தைச் சரியான முறையில் உலகுக்குக் கொண்டு சென்றவர் அனிதா பிரதாப், அதனால் அனிதா பிரதாப்பிடம் பிரபாகரனுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது.[/size][/size] [size=1]

[size=4]’இந்தியாவுடன் நாங்கள் போரிட வேண்டியிருக்கும்’ என்றார் பிரபாகரன்.[/size][/size] [size=1]

[size=4]அனிதா பிரதாப்புக்கு அதிர்ச்சி.[/size][/size] [size=1]

[size=4]’என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? சமீபத்தில்கூட, உங்கள் இயக்கத்துக்கு மிகச் சிறப்பான ஆயுதப் பயிற்சிகள் கொடுத்திருக்கிறார்கள்.[/size][/size] [size=1]

[size=4]’தனி ஈழம் அமைவதை இந்தியா விரும்பாது, இலங்கையைவிட இந்தியா இதில் தீவிரமாக இருக்கும்.[/size][/size] [size=1]

[size=4]‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’[/size][/size] [size=1]

[size=4]’ஏனெனில் தமிழ் நாட்டில் மொத்தம் ஜந்தரை கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். எங்கள் கோரிக்கை அங்கேயும் எழுந்தால்?’[/size][/size] [size=1]

[size=4]நன்றி: மருதன்[/size][/size] [size=1]

[size=4]தமிழ்லீடர்[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.