Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குதறக் காத்திருக்கும் குற்றவியல் கோவைகள்

Featured Replies

[size=4]மக்களோ, ஊடகங்களோ, அரசியல் வாதிகளோ இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாகப் பெரிதாக அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை.[/size]

[size=2]

[size=4]அரசு சில குற்றவியல் கோவைகளைத் தூசி தட்டி மேசையில் போட அனைவரும் அவை பற்றிய வாதப் பிரதிவாதங்களில் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். ஒரு நாட்டின் வரவு செலவுத் திட்டமென்பது அந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜை மீதும் ஏதோ ஒரு விதமான தாக்கத்தைச் செலுத்தும் என்பதை நாமறிவோம்.[/size][/size]

[size=2]

[size=4]இப்படியான திட்டங்கள் தயாரிக்கப்படும்போது பெரும்பாலான நாடுகள் வரவையும் செலவையும் சமன் செய்ய முடியாமல் திண்டாடுவதும் அவற்றைச் சரி செய்ய உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களை நாடுவதும் அவற்றின் நிபந்தனைகளுக்கு அமைவாகத் திட்டங்களை முன் வைப்பதும் வழமையாகும். பொதுவாக இப்படியான நிபந்தனைகள் சாதாரண பொதுமக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலேயே அமைவதுண்டு.[/size][/size]

[size=2]

[size=4]தற்சமயம் இலங்கையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சபையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. எதிர்கால அபிவிருத்தி என்ற பேரில் மக்களின் நாளாந்த வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் அலங்காரமான வார்த்தைகள் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]எந்தவொரு நாட்டிலும் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்போது எதிர்த்தும் ஆதரித்தும் விமர்சனங்கள் எழும். ஊடகங்களில் சூடு பறக்கும் விவாதங்கள் எழுந்து ஒன்றுடன் ஒன்று மோதும். சில சமயங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் மூலம் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பர்.[/size][/size]

[size=2]

[size=4]இலங்கையில் விலைவாசிகள், மறைமுக நேரடி வரிகள் அதிகரிக்கப்பட்ட நிலையிலும் கல்வி, சுகாதாரம் போன்றவைக்கான நிதி ஒதுக்கீடுகள் போதிய அளவில் இல்லாத நிலையிலும் பல்வேறு துறைகளிலும் சம்பள உயர்வுக் கோரிக்கைகள் முனைப்படைந்த நிலையிலும் இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. [/size][/size]

[size=2]

[size=4]இதில் மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்வைக் கட்டுப்படுத்தவோ நிவாரணங்கள் வழங்கவோ எவ்வித ஆலோசனைகளும் முன்வைக்கப்படவில்லை. அது மட்டுமன்றி வெகுவிரைவில் எரிபொருள்களின் விலை உயர்த்தப்பட்டு மக்கள் தலையில் மேலும் சுமைகள் ஏற்றப்படும் என்று தெரிய வந்துள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]ஆனால் மக்களோ, ஊடகங்களோ, அரசியல் வாதிகளோ இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாகப் பெரிதாக அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. அரசு சில குற்றவியல் கோவைகளைத் தூசி தட்டி மேசையில் போட அனைவரும் அவை பற்றிய வாதப் பிரதிவாதங்களில் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர்.[/size][/size]

[size=2]

[size=4]இப்படியாக அரசு சிக்கல்களுக்கும் நெருக்கடிக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை எழும்போது இப்படியான கோவை களை முன்தள்ளியோ புலிப்பூச்சாண்டி காட்டியோ, இனவெறிக் கூச்சல் போட்டோ மக்களின் கவனத்தைத் திசை திருப்பி விட்டு மக்கள் தலையில் மிளகாய் அரைப்பது அப்படி ஒன்றும் புதிய விடயமல்ல.[/size][/size]

[size=2]

[size=4]ஒருபுறம் மக்களின் கடைசி அரிசியையும் பறிக்கும் வரவு செலவுத் திட்டம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்க மறுபுறம் நிறைவேற்று அதிகாரத்துக்கும் நீதித்துறைக்குமிடையான போராட்டம் பூதாகரமாக்கப்பட்டு அரங்குக்கு விடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலிருந்து ஊடகங்கள், அரசியல்வாதிகள் எனச் சகல மட்டங்களிலும் இதுவே இன்று பிரதான பிரச்சினையாகப் பேசப்படுகிறது.[/size][/size]

[size=2]

[size=4]இந்தப் பிரச்சினைக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க இரு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று வரவு செலவுத் திட்டத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவது. மற்றது இன்றைய அரசின் தனிமனித சர்வாதிகாரப் போக்குக்கு இடையூறாக இருக்கும் நீதித்துறையைத் தட்டியடக்கி தனது கட்டுக்குள் கொண்டு வருவது.[/size][/size]

[size=2]

[size=4]திவிநெகும சட்ட மூலம் விவசாயம், நீர் முகாமைத்துவம், சமூக சேவை போன்ற மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் உள்ள அதிகாரங்களை மத்திய அரசின் கீழ் ஒரு திணைக்களமாக்கி மையப்படுத்தும் ஒரு திட்டமாகும். இவை மாகாண சபைகளுடன் சம்பந்தப்பட்டபடியால் அவற்றின் அனுமதியின்றி சட்டமாக்க முடியாது என உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.[/size][/size]

[size=2]

[size=4]நிறைவேற்று அதிகாரத்தின் கையில் மாகாண சபையின் அதிகாரங்கள் சிலவற்றைப் பறித்துக் குவிக்கும் நோக்கத்தை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்த காரணத்தால் நிறைவேற்று அதிகாரத்துக்கும் நீதிச் சேவைக்குமிடையே ஒரு பனிப்போர் மூண்டது. பின்பு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண நடுவீதியில் வைத்து இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டார். [/size][/size]

[size=2]

[size=4]இன்று வரை எவரும் இது தொடர்பாகக் கைது செய்யப்படவில்லை. அடுத்து பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கா மீது நாடாளுமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் என்பன தொடர்பான 14 குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.[/size][/size]

[size=2]

[size=4]இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவையா அல்லது பழிவாங்கும் முறையில் சோடிக்கப்பட்டவையா என்ற சந்தேகம் பலரின் மத்தியிலும் எழுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஒரு முறுகல் நிலையின்போது முன் எப்போதுமே அறிந்திராத குற்றங்கள் முன்வைக்கப்படுமானால் சந்தேகம் எழுவது இயற்கையே.[/size][/size]

[size=2]

[size=4]ஆனால் இப்போது இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுவது தெடர்பாக இன்னொரு முனையில் கேள்வி எழவும் இடமுண்டு. பிரதம நீதியரசர் மேல் சுமத்தப்பட்ட குற்றங்கள் நேற்றோ அல்லது நேற்று முன்தினமோ இடம்பெற்றவையல்ல. [/size][/size]

[size=2]

[size=4]இவை சில மாதங்களுக்கு முன்பும் சில வருடங்களுக்கு முன்பும் இடம்பெற்றவை எனக் கூறப்படுகின்றன. அப்படியானால் இந்தக் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது நடவடிக்கை எடுக்கப்படாமல் இப்போது மட்டும் 14 குற்றங்களும் ஒரே நேரத்தில் வெளிவந்து பேயாட்டம் போடுவது ஏன்?[/size][/size]

[size=2]

[size=4]அதாவது ஒருவர் நிறைவேற்று அதிகாரத்தை எதிர்க்காத வரை அவருக்கு குற்றங்கள் புரிய அங்கீகாரம் உண்டு என்பதும் எதிர்க்க ஆரம்பித்தால் மட்டுமே அவை தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அர்த்தமாகுமா? இப்படியான குற்றங்கள் புரிந்ததாகக் கருதப்படும் ஒருவர் நீதிச் சேவையின் அதி உயர்பீடத்திலிருந்து நீதி வழங்குவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? எப்படி இதை அரசு அனுமதித்தது. அவரால் உண்மையான நீதியை வழங்கியிருக்க முடியுமா? [/size][/size]

[size=2]

[size=4]அவர் குற்றமிழைத்ததாகக் கருதப்பட்ட காலத்தின் பின் அவர் பதவி வகித்த காலத்துக்கும் காரணங்களுக்கும் தார்மிக அடிப்படையில் அரசு பொறுப்பேற்க வேண்டும். ஓர் அரச பணியாளர் குற்றம் செய்ததாகக் கருதப்படும் போது அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுப் பின் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியா இல்லையா எனத் தீர்மானிக்கப்படுகிறது. [/size][/size]

[size=2]

[size=4]ஆனால் பிரதம நீதியரசர் மீது குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுமில்லை. பணி இடைநீக்கம் செய்யப்படவுமில்லை. மாறாக அவரே நீதி வழங்கியுள்ளார். அவரது குற்றவியல் கோவை அவர் நிறைவேற்று அதிகாரத்தை எதிர்க்கும் நாள் வரை காத்துக் கிடக்கிறது.[/size][/size]

[size=2]

[size=4]இலங்கைத் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் பணிப்பாளரும் பிரதம நீதியரசரின் கணவருமான பிரதீப் காமினி கரியவாசம் தாம் பதவி வகித்த காலத்தில் அரசுக்கு 391 மில்லியன் நட்டம் ஏற்படும் வகையில் நிறுவனங்களின் பங்குகளைக் கொள்முதல் செய்துள்ளார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. [/size][/size]

[size=2]

[size=4]இவர் தனது பதவியை விட்டு விலகிப் பல மாதங்கள் கழிந்த பின்பும் உறங்கிக் கொண்டிருந்த இவர் தொடர்பான குற்றவியல் கோவை இப்போது வலுத்துக் கொண்டுவிட்டது. இந்தக் கோவை இவ்வளவு காலமாகக் காத்துக் கிடந்தமைக்குப் பொறுப்பானவர்கள் கூடமோசமான குற்றவாளிகள்தான்.[/size][/size]

[size=2]

[size=4]அதேவேளையில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலர் மஞ்சுள திலகரட்ண தொடர்பாக சுமதிபால என்பவர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் நீதிபதியான தன் மகளை செயலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றார் எனவும் மகள் மறுத்த போது அவரை இடமாற்றம் செய்தார் எனவும் புகார் கூறப்பட்டது. [/size][/size]

[size=2]

[size=4]சுமதிபாலவும் நீண்டகாலம் காத்திருந்து தற்சமயம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இப்படி நிறைவேற்று அதிகாரத்தின் இஷ்டத்துக்கு ஆட மறுத்த சந்தர்ப்பத்தில் சாட்டப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை, பொய் பற்றி எம்மால் எதுவும் முடிவு செய்ய முடியாது.[/size][/size]

[size=2]

[size=4]ஆனால் இப்படிப் பாரதூரமான தவறுகளை அவர்கள் இழைத்திருந்தால் ஏன் அவர்கள் தொடர்ந்தும் அந்தப் பதவிகளில் வைக்கப்பட்டிருந்தார்கள். ஏன் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதாவது ஒருவர் என்ன குற்றம் செய்தாலும் அரசின் துதிபாடியாக இருக்கும் வரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்பதும் அவர்கள் எதிர்க்கப் புறப்பட்டால் குற்றவியல் கோவை விழித்துக் கொண்டு செயற்படும் என்பது தான் இங்கு வெளிப்படும் உண்மை.[/size][/size]

[size=2]

[size=4]தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் விநியோகிக்கப்பட்டது. மின்சார சபையின் ஊழல்கள் பற்றி பெரும் சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. உலகில் பாவனையிலிருந்து விலக்கப்பட்ட உயர் குருதி அமுக்க மருந்துகள் இங்கு நோயாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டன. இவை தொடர்பான கோவைகள் இப்போது உறங்கிக் கிடக்கின்றன. [/size][/size]

[size=2]

[size=4]சம்பந்தப்பட்ட யாராவது அரசை எதிர்த்தால் அவை விழிப்படைந்து விடும். அதே நேரத்தில் தேடப்படும் குற்றவாளிகள் அமைச்சர்களாகவும், பிரதியமைச்சர்களாகவும் வீற்றிருப்பதையும் நாம் மறந்து விட முடியாது. எப்படியிருந்த போதிலும் நிறைவேற்று அதிகாரம் சில அடிமைகளை தமக்குக் கீழ் வைத்திருந்து தமது சர்வாதிகார ஆட்சியை நியாயப்படுத்தவும் வலுப்படுத்தவும் குதறக் காத்திருக்கும் இந்தக் குற்றவியல் கோவைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது நிதர்சனம்.[/size][/size]

[size=2]- [/size]சந்திரசேகரஆஷாத்

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=4663941112653565

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.