Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியாவின் மத்தியட்சத்தில் மின்டானோ பிரச்சினைக்குத் தீர்வு.!

Featured Replies

[size=4]

தெற்கு ஆசியாவில் தமிழிழம் என்ற புதிய நாடும் ஆசியத் தூரகிழக்கில் மின்டானோ (Mindanao)என்ற இன்னொரு புதிய நாடும் தோன்றலாம் என்று சிஐஏ உளவமைப்பு கால் நூற்றாண்டிற்கு முன்பு அறிக்கை இட்டது நினைவில் இருக்கலாம். மின்டானோ சுதந்திரப் போராட்டம் தமிழீழப் போராட்டம் போல் நெடிய வரலாற்றைக் கொண்டது.[/size][size=4]

மின்டானோ மதத்தை அடிப்படையாகக் கொண்டதொரு பிரச்சினை. தமிழீழம் மண்ணுக்கும் மொழிக்குமான சுதந்திரப் போராட்டம். மின்டானோ என்பது பிலிப்பீன்ஸ் (Phillipines) நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தீவின் பெயராகும். பிலிப்பின்ஸ் நாட்டின் மூன்று தீவுக் கூட்டங்களில் ஒன்றின் பெயராகவும் மின்டானோ இடம்பெறுகிறது.[/size][size=4]

கிறிஸ்தவ மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு ஆசிய நாடு பிலிப்பீன்ஸ் நாடாகும். பேர்டினண்ட் மகலன் (Ferdinand Magellan) என்ற கடலோடி பிலிப்பீன்ஸ் தீவுக் கூட்டங்களை 1521ம் ஆண்டு மார்ச்சு மாதம் 16ம் நாள் கண்ணுற்றார். அதன் பின் அவர் அங்கு தரை இறங்கினார். மகலன் ஸ்பேயின் நாட்டின் மாலுமி.[/size][size=4]

அதைத் தொடர்ந்து ஸ்பேயின் (Spain) நாட்டு ஆட்சியும் ஸ்பேயின் நாட்டவர் குடியேற்றமும் 1565ம் ஆண்டில் தொடங்கி மூன்று நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தது. கிட்டத்தட்ட 300 தீவுகளையும், பல ஆள்புலங்களையும், பல்லினங்களையும் கொண்ட பிலிப்பீன்சை அரசியல் ரீதியாக ஒன்றிணைத்த சிறப்பு ஸ்பேயின் நாட்டைச் சேரும.[/size][size=4]

ஸ்பேயின் மன்னர் இரண்டாம் பிலிப் (Phillip) என்பவர் பெயரில் அது பிலிப்பீன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் புகுத்தினார்கள். அதுவே தேசிய மதமாக இடம்பெறுகிறது. ஐரோப்பிய நீதிச் சட்டங்களையும், கல்விச் முறைகளையும் அவர்கள் அறிமுகஞ் செய்தார்கள். ஆசியாவில் முதன் முறையாகப் பொதுக் கல்வித் திட்டத்தைத் தேசிய மட்டத்தில் புகுத்தியவர்கள் அவர்களே.[/size][size=4]

நவீன நிர்வாகக் கட்டமைப்புக்களையும், அச்சுக் கூடங்களையும் ஸ்பேயின் ஆட்சியர் பிலிப்பீன்சில் நிறுவினார்கள். கிறிஸ்தவ மதப் பரப்பலுக்கு மின்டானோ தீவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் முட்டுக் கட்டையாக இருந்தார்கள். அரசு தனது முழுப் பலத்தைப் பிரயோகித்த போதும் மின்டானோ இஸ்லாமியர்கள் மதம் மாற மறுத்தார்கள். இந்த மக்களுக்கு ஸ்பேயின் கொடுத்த பெயர் மோறோ (Moro)என்பதாகும் மினடானோ மக்கள் தம்மை பங்சமோறோ (Bangsamoro) என்று அழைப்பார்கள்.[/size][size=4]

ஆகஸ்து 1896ல் பிலிப்பீன்ஸ் காலனி தாய் நாடு ஸ்பேயினுக்கு எதிராகத் தன்னாட்சிப் போர் தொடுத்தது. அந்தக் காலகட்டத்தில் ஸ்பேயின் நாட்டுடன் முரண்பட்ட அமெரிக்கா இந்தப் போருக்கு உதவியது. இரு ஆண்டுகளுக்குப் பிறகு பிலிப்பீன்ஸ் சுதந்திரப் பிரகடனம் செய்தது.[/size][size=4]

ஆனால் இந்தச் சுதந்திரம் நீடிக்கவில்லை. ஸ்பேயின் நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவந்த பாரிஸ் உடன்படிக்கை (Treaty of Paris) பிலிப்பீன்ஸ் தீவுகளை அமெரிக்காவுக்குக் கையளித்தது. அதற்குப் பிறகு பிலிப்பீன்ஸ் அமெரிக்கக் கொலனியாக மாறியது.[/size][size=4]

அமெரிக்காவுக்கு எதிரான போரைப் பிலிப்பீன்ஸ் அரசு யூன் 1899ம் ஆண்டு பிரகடனம் செய்தது. பிலிப்பீன்ஸ் அமெரிக்கன் போர் 1902ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அமெரிக்கர்களாலும் மின்டானோ இஸ்லாமியர்களை மதமாற்றம் செய்ய முடியவில்லை. 1899ல் மின்டானோ முஸ்லிம்களுக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையிலான போர் வெடித்தது.[/size][size=4]

அமெரிக்க ஆட்சி பிலிப்பீன்சில் ஏறத்தாழ அரை நூற்றாண்டு வரை நீடித்தது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜப்பான் படைகள் பிலிப்பீன்சைக் கைப்பற்றி அமெரிக்கர்களை வெளியேற்றின. போர் முடிவில் அமெரிக்கர்கள் பிலிப்பீன்சை மீண்டும் கைப்பற்றினார்கள். அதைத் தொடர்ந்து பிலிப்பீன்சுக்கு முழு அளவு சுதந்திரம் வழங்கப்பட்டது.[/size][size=4]

மின்டானோ தொடர்ந்து பிரச்சினைக்குரிய பிரதேசமாக இடம்பெற்றது. படை நடவடிக்கை தொடக்கம் பிற தீவுகளின் கிறிஸ்தவர்களை மின்டானோவில் திட்டமிட்டுக் குடியேற்றுதல் போன்றவற்றை அரசு முன்னெடுத்தது. தீவின் தென்பகுதியில் பெரும்பான்மையாக வாழ்ந்த இஸ்லாமியர்கள் முழு மின்டானோத் தீவில் சிறுபான்மை ஆக்கப்பட்டனர்.[/size][size=4]

மின்டானோ இஸ்லாமியர்கள் பிரச்சினை 1960களில் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெடித்தது. தமது தாயகப் பூமியைக் காப்பதற்காக மோறோக்கள் ஆயுதப் போராட்டத்தை அரசுக்கு எதிராக ஆரம்பித்தனர். அறுபது இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதைக் கண்டிக்கும் முகமாக பிலிப்பீன்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் நூர் மிசுவாரி (Nur Misuari) மோறோ தேசிய விடுதலை முன்னணி (Moro National liberation Front) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.[/size][size=4]

malesiya%20tk%2001.jpg[/size][size=4]

இதிலிருந்து பிரிந்த மேறோ இஸ்லாமிய விடுதலை முன்னணி (Moro Islamic liberation Front) அல்லது எம்ஐஎல்எப் (MIlf) என்ற பிரிவு பிலிப்பீன்சில் ஒரு இஸ்லாமிய நாட்டை உருவாக்கும் தீவிர ஆயுதப் போராட்ட வேலைத் திட்டத்தைக் கொண்டது.[/size][size=4]

மின்டானோ வாழ் மோறோக்களின் விடுதலைப் போரில் ஈடுபடும் முன்னணி அமைப்பு என்ற சிறப்பு எம்ஐஎல்எப் இயக்கத்திற்கு இன்று வரை உண்டு. மின்டானோ மோறோக்களின் விடுதலைப் போரில் அண்மைக் கணக்கெடுப்புப்படி 120,000 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர், இரு மில்லியனுக்கும் கூடுதலானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.[/size][size=4]

1970கள் தொடக்கம் பிலிப்பீன்ஸ் ஜனாதிபதியாகப் பதவியேற்ற அனைவரும் மின்டானோ பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி மார்கொஸ் (Marcos) தனது மனைவி இமெல்டாவை லிபியத் தலைவர் கடாபியிடம் அனுப்பி அவர் மூலம் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர எத்தனித்தார்.[/size][size=4]

1992 -1998 காலப்பகுதியில் பிடெல் றாமொஸ் ஜனாதிபதியாகப் பதவி வகித்த போது மோறோ தேசிய விடுதலை முன்னணியுடன் (Moro National liberation Front) 1996ல் ஒரு உடன்படிக்கை எட்டப்பட்டது. ஆனால் மோறோ இஸ்லாமிய விடுதலை முன்னணியின் (Moro Islamic Liberation front) போராட்டம் தொடர்ந்தது.[/size][size=4]

அடுத்த ஜனாதிபதி திரைப்பட நடிகர் ஜோசப் எஸ்திராடா (Joseph Estrada)எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பாரிய இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தார். பிலிப்பீன்ஸ் படைகளுக்கு உதவுவதற்கு அமெரிக்கா 500 பேர் கொண்ட படையணியை மின்டானோவுக்கு அனுப்பியது.[/size][size=4]

பின்டானோ பிரச்சினைக்கு முடிவுகட்ட முடியவில்லை. பெண் ஜனாதிபதி கொறாசொன் அக்குனோ (Corazon Aquino) 1986 -1992. அமைதிப் பேச்சுகளை ஆரம்பித்தும் பேச்சு வார்த்தைகளுக்குரிய பொது நிலைப்பாட்டை உருவாக்க முடியவில்லை.[/size][size=4]

தெருவோரக் குண்டு வெடிப்புக்கள், துவக்குச் சண்டைகள், ஆட்கடத்தல்கள் கப்பம் அறவிடுவதற்காக வெளிநாட்டவர்களையும் உள்நாட்டவர்களையும் மறைத்து வைத்தல்கள் என்று மின்டானோவும் பிற தீவுகளும் சீரழிந்தன பிலிப்பீன்சுக்குச் செல்லவேண்டாம் என்று அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா உட்பட்ட நாடுகள் தமது பிரசைகளை அறிவுறுத்தின.[/size][size=4]

அது மாத்திரமல்ல பிராந்திய அமைதியும் பாதிக்கப்பட்டது. ஆசியன் அமைப்பு இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தது. மின்டானோவுக்கு அருகாமையில் இருக்கும் மலேசியக் கூட்டரசின் அங்கமான சாபா (Sabah) மாநிலம் பெரும் பாதிப்படைந்தது. ஆசியன் (Asean)கூட்டமைப்பில் பிலிப்பீன்சும் மலேசியாவும் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன. இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணும் பொது நோக்கம் இரு நாடுகளுக்கும் இருந்தது.[/size][size=4]

தமிழீழப் பிரச்சினையில் நோர்வேயின் தலையீடு உள்நோக்கம் கொண்டதாக இருந்தது. அமெரிக்கா, இந்தியா ஆகியவற்றின் கருவியாகச் செயற்பட்ட நோர்வே விடுதலைப் புலிகளைச் சமாதானப் பொறிக்குள் வீழ்த்தி, தமிழீழ மக்களின் போர்க் குணத்தை மழுங்கடித்து, ஒரு இன அழிப்பை எற்படுத்தும் நோக்கைக் கொண்டது.[/size][size=4]

மலேசியா மின்டானோ பிரச்சினையில் ஒரு மிதவாத முஸ்லிம் நாடாகத் தலையிட்டது. அதற்குப் பரஸ்பர நலன் தவிர வேறு நோக்கம் இருக்கவில்லை. மின்டானோவில் அமைதியை ஏற்படுத்துவதற்கு மலேசியப் பிரதமர் தெரிவு செய்த இராசதந்திரி டாத்துக் தெங்கு அப் கபார் தெங்கு முகமது (Datuk Tengku ab Ghafar Tengku Mohamed) பிலிப்பீன்சுக்கான் மலேசியாவின் தூதராக 1986 -1992 காலத்தில் பணியாற்றியவர்.[/size][size=4]

நோர்வேயின் எறிக் சொல்கைமுடன் ஒப்பிடுகையில் இவர் முற்றிலும் வித்தியாசமானவர். எறிக் சொல்கைம் சமாதானத் தூதராக மின்டானோப் பிரச்சினையிலும் தலையிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரால் பெரிதாக ஒன்றையும் நிகழ்த்த முடியவில்லை. சமாதனத் தூதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மலேசியப் பிரதமர் டத்துக் சேரி நாஜிப் றசாக் (Datuk Seri Najib Razak) அவர்கள் தெரிவு செய்தவர் சிறந்த உதாரணமாக அமைகிறார்.[/size][size=4]

அவர் மலேசியாவின் தூதராக பாக்கிஸ்தான், இந்தியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பணியாற்றியவர். மலேசியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இயக்குநர் நாயகமாக (Director – general, National Security Council) டிசம்பர் 2004 வரை செயற்பட்டு இளைப்பாறியவர்.[/size][size=4]

ஏப்பிறில் 2011ம் மாதம் மலேசியாவின் டாத்துக் தெங்கு அப் கபார் தெங்கு முகமது சமாதனத்திற்கான பேச்சுவார்த்தை ஒருங்கிணைப்பாளராகச் செயற்படத் தொடங்கினார். பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி பெனிங்னோ அக்குயினோவும் மோறோ இஸ்லாமிய விடுதலை முன்னணித் தலைவர் அல் ஹாஜ் முராட் இப்பிரஹிம் அவர்களும் (Al Haj Murad Ibrahim) அவர்களுடைய குழுவினரும் 32 சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.[/size][size=4]

இந்தப் பிரச்சினையில் தனது ஈடுபாட்டை சமாதானத் தூதர் டாத்துக் தெங்கு அப் கபார் தெங்கு முகம்மது பின்வருமாறு விளக்கிக் கூறுகிறார்., “நான் 2000ம் ஆண்டு தொட்டு 2003 வரை பேச்சு வார்த்தைகளைத் தொடக்கினேன். நான் 2004 வரை தேசிய பாதுகாப்பு கவுன்சில் பணியில் இருந்த பிறகு இளைப்பாறினேன். 2011 ஏப்பிரல் தொடக்கம் நான் மீண்டும் இந்தப் பிரச்சினைத் தீர்வில் கவனம் எடுத்தேன். முடிவுக்கு வரும் வரை அமைதிப் பணியில் தொடர்பு பட்டேன்.”[/size][size=4]

இரு பகுதிக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கையை (Mutual confidence)ஏற்படுத்துவது தான் எனது அடிப்டை நோக்கமாக இருந்தது என்கிறார் இந்தப் பழுத்த இராசதந்திரி. இறுதியில் மோறோ இஸ்லாமிய விடுதலை முன்னணிக்கும் பிலிப்பீன்ஸ் அரசுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் பிலிப்பீன்ஸ் அரசமாளிகை மலாக்கானாங் அரண்மனையில் (Malacanang Palace) ஒக்ரோபர் 15,2012ம் நாள் கைச்சாத்திடப்பட்டது.[/size][size=4]

Bangsamoro Peace Accord என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம் மின்டானோத் தீவின் தெற்கில் பங்கசமோறோ தன்னாட்சி ஆள்புலத்தை உருவாக்குகிறது. இதற்கு மாற்றீடாக மோறோ இஸ்லாமிய விடுதலை முன்னணி தனது நெடுங்காலத் தனி நாட்டுக் கோரிக்கையைக் கைவிட ஒத்துக் கொண்டது.[/size][size=4]

இந்த ஒப்பந்தம் ஒரு அமைதிக்கான அடிச்சட்டம் (Framework) மாத்திரமே. இன்னும் அதிகாரப் பங்கீடு, நிதிப் பங்கிடு, ஆட்சி அதிகாரங்கள், இயல்பு நிலைக்குத் திரும்புதல் தொடர்பான பேச்சுக்கள் நடத்தப்பட்டு துணை ஒப்பந்தங்கள் (Annexures) கைச்சாத்திடப் படவிருக்கின்றன.[/size][size=4]

அவை தான் கடுமையான பகுதி என்று சொல்லப்பட்டாலும் போர் நிறுத்தத்தை ஏற்படுத்திய ஒக்ரோபர் 15ம் நாள் (2012) ஒப்பந்தத்தைப் பாராட்ட வேண்டும்.[/size][size=4]

இந்த ஒப்பந்தத்தின் கீழ் 2016ம் ஆண்டு வரை எம்ஐஎல்எப் முன்னணி தனது ஆயுத தளபாடங்களை வைத்திருப்பதற்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. நிலமை திருப்திகரமாக அமையும் போது அவர்கள் 2016ல் ஆயுதங்களைக் கைவிட ஒத்துக் கொண்டுள்ளனர்.[/size][size=4]

பிலிப்பீன்ஸ் அரசு பாதுகாப்பு, தற்காப்பு, வெளிவிவகாரம், நிதிக் கொள்கை, குடியுரிமை விவகாரம, (Security, defence, Foreign Policy, Monetary Policy, Citizenship) ஆகியவற்றைத் தனது பொறுப்பில் வைத்திருக்கும்.[/size][size=4]

வரி வசூலிக்கும் உரிமை, தேசிய வளத்தில் தனக்குரிய பங்கு, சட்டம் ஒழுங்கு பேணும் பொலிஸ் கடமை பங்சமோறோ தன்னாட்சிப் பிராந்தியத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்குகிறது. மோறோ இஸ்லாமிய விடுதலை முன்னணியில் 11.000போராளிகள் இருக்கிறார்கள். இவர்களிடமிருந்து ஆயுதங்களை 2016ல் களைய முன்னணி ஒத்துக் கொண்டுள்ளது. பொலிஸ் கடமைகளை பங்சமோறோ தன்னாட்சிப் பிராந்தியத்திற்கு வழங்க பிலிப்பீன்ஸ் அரசும் அதன் இராணுவமும் ஒத்துக் கொண்டுள்ளன.[/size][size=4]

இந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தாத சிறிய போராளிக் குழுக்களும் இனக் குழுக்களும் இருக்கின்றன. அவற்றில் சில போரைத் தொடரப் போவதாகச் சூளுரைத்துள்ளன. அவற்றால் பெரிதாகச் சாதிக்க முடியுமா என்பது கேள்விக்குறி. அமைதிப் பேச்சுக்களுக்கு உதவிய மலேசியாவின் பிரதமர் “இந்த ஒப்பந்தம் பங்சமோறோ மக்களுக்கு அமைதியையும், சுபீட்சத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தும்” என்றார்.[/size]

நன்றி

தமிழ்க் கதிர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.