Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேஸ்புக், ட்விட்டர்களால் ஆபத்து : கவனமாக இருக்கவும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பேஸ்புக், ட்விட்டர்களால் ஆபத்து : கவனமாக இருக்கவும்
எழுதியது இக்பால் செல்வன் *** Tuesday, November 06, 2012
 
social+media+1.png
 
நாம் நம்மிடம் சேரும் குப்பைகளை அகற்றிக் கொண்டே இருக்க வேண்டும், இல்லை என்றால் அது மேன்மேலும் சேர்ந்துவிடும். சேரும் குப்பைகளால் இடப் பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமில்லாமல் ஒருவித மன அழுத்தமும், பாரமும் கூட ஏற்படும். புறக் குப்பைகளான காகிதங்கள், புத்தகங்கள், உடைகள், மின் பொருட்கள், நெகிழிகள் ( Plastic ), அன்றாட உணவு மீதங்கள் எனப் பற்பல குப்பைகளைத் தினந்தோறும் அகற்றிக் கொண்டே இருக்கின்றோம் அல்லவா. அத்தோடு மட்டும் நின்றுவிட்டால் போதாது, நமது மனதில் ஏற்படும் குப்பைகளைக் கூட அகற்ற வேண்டும். பலரோ தெய்வ வழிப்பாட்டில், விரதங்கள் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். சிலரோ தியானம், யோகம், விளையாட்டு, கலந்தாய்வுகள், உரையாடல்கள், எழுத்து எனப் பற்பல வடிவங்களில் உள்ளத்தில் இருக்கும் அழுக்குக்களை நீக்கிவிடுவார்கள். 
 
ஆனால் இணையவெளியில் நாம் சேர்க்கும் குப்பைகளைப் பற்றி என்றாவது சிந்தித்தது உண்டா ? இணையத்தில் நாம் எழுதும், பகிரும் ஒவ்வொரு விடயங்களும் காலம் காலத்துக்கு இணையம் இருக்கும் வரை இருக்கப் போகின்றது. பலரும் சற்றும் சிந்திக்காமல் பல்வேறு வடிவங்களில் எதாவது ஒரு தடத்தை இட்டுச் செல்வார்கள். ஆனால் பல விடயங்கள் பயனற்றவையே ஆகும். இருந்த போதும் அவற்றைப் பற்றி நாம் நினைத்துக் கூடப் பார்ப்பது இல்லை. சில விடயங்கள் நமது அடையாளத்தைத் தவறாகக் கூடக் காட்டிவிடும். ஆகையால் இன்று நான் இணையத்தில் நீங்கள் சேர்க்கும் குப்பைகளை எப்படி அகற்றுவது என்பது பற்றிக் கூறப் போகின்றேன். 
 
ட்விட்டர் : 
 
சமூகத் தளங்களில் நாம் அதிகளவு குப்பைகளைச் சேர்ப்பது ட்விட்டரில் தான் என்பேன். பல உரையாடல்கள், பகிர்வுகளை மேற்கொள்வோம். ஆனால் அவை சில காலத்துக்குப் பின் தேவையற்றதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆகையால் நமது தூய்மைப் படுத்தலை ட்விட்டரில் இருந்து தொடங்கலாமே. முதலில் ட்விட்டரில் இடப்பட்ட ட்விட்களை மொத்தமாகவோ ( TweetDelete ) அல்லது தேவையற்றவைகளையோ ( TweetEraser ) நம்மால் நீக்க முடியும். 
 
அத்தோடு ட்விட்டரில் இருப்பவர்கள் தாம் மிகவும் பிரபலமாக வேண்டும் என்றோ, அல்லது தமது தளங்களுக்கு அதிக வாசகர்களோ, தமது விற்பனைப் பொருட்களுக்கு அதிக நுகர்வோர்களோ வேண்டும் என்ற எண்ணத்தில் பலரையும் பின் தொடர்வார்கள் / தொடர்ச் செய்வார்கள். ஆனால் உண்மையில் அது பயன் தரும் ஒன்றே இல்லை. நம்மை / நாம் பின்தொடர்பவர்களோ பலரும் நமது ட்விட்களையோ, லிங்குகளையோ வாசிப்பதே இல்லை, பலர் ட்விட்டர் பக்கம் வருவது கூட இல்லை. ஆகையால் தரமான, பயன்மிக்கவர்களை மட்டும் பின் தொடர்வதும் / தொடரச் செய்வதுமே நமது உண்மையான உற்பத்தி திறனை அளவிட உதவும். ஆகையால் JustUnfollow அல்லது FreindorFollow கருவிகள் மூலமாகத் தேவையற்றோரை நீங்கி/நீக்கிக் கொள்ள முடியும். 
 
பேஸ்புக் : 
 
பேஸ்புக் என்பது இன்று உலகில் உள்ள பலராலும் பயன்படுத்த பட்டு வருகின்றது. அதாவது சுமார் பத்தில் ஒரு நபர் உலகில் பேஸ்புக் பயன்பாட்டாளராய் இருக்கின்றனர். ஆனால் பேஸ்புக்கில் பகிரும் ஒழுக்கம் பலருக்கும் இருப்பதில்லை. தேவையற்றவைகளைப் பகிர்வதன் மூலம் ஒரு நபரின் அடையாளத்துக்குக் கெட்டப் பெயரையும், கௌரவ இழப்புக்களுக்கும் உள்ளாகுகின்றனர். அந்தரங்கப் படங்கள், ஒழுங்கற்ற படங்கள், பகிர்வுகள் மூலமாகப் பலர் பணியிழப்பு, குடும்ப உறவு விரிசல்கள் போன்றவற்றைச் சந்திக்கின்றனர். பேஸ்புக்கில் மொத்தமாக இடப்பட்ட தரவுகளை அழிப்பதற்குப் பிறிதொரு கருவி ஏதும் இல்லை என்பதால் நாம் தான் அவற்றை ஒன்றின் ஒன்றாக அழிக்க வேண்டி வரும். 
 
பேஸ்புக்கில் குடும்பம், நட்பு வட்டங்களுக்காக ஒரு தனிக் கணக்கை வைத்துக் கொள்ளுங்கள். தொழில் ரீதியான, பிறர்த்தியாருடன் பழகும் வண்ணம் மற்றொரு கணக்கை வைத்துக் கொள்ளுங்கள். 
 
அத்தோடு கூடத் தேவையற்ற, பயனற்ற, அறிமுகமில்லாத நபர்களை நண்பர்களாக இணைத்துக் கொள்ள வேண்டாம் என்பேன். போலி பெயர்களில் இருப்போரை அடையாளங் கண்டு நீக்கிக் கொள்ளுங்கள். பல நண்பர்கள் இணைக்கப்பட்டு இருந்தால் கிறீஸ்மங்கி என்னும் ஆட்-ஆன் மூலமாக அவர்களை நீக்கிக் கொள்ளலாம். 
 
பேஸ்புக்கில் நீங்கள் நீக்கவேண்டியவை : 
 
அந்தரங்கமாக, மது விருந்தில், இன்ன பிற கூடாத செயல்களைக் காட்டக் கூடிய புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிடுங்கள். 
 
கேலி செய்யக் கூடிய, வம்புத் தங்களான, கெட்ட செய்கைகள் உள்ள புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிடுங்கள். 
 
பக்கச்சார்பான, முறையற்ற, ஆபாசமான, அவதூறு பரப்பும் குழுக்கள், தீவிரவாத, மதவாத, சாதியவாத, இனவெறிப் பரப்பும் பக்கங்களில் இருந்து விலகிக் கொள்ளுங்கள். 
 
தேவையற்ற சுய விவரங்களை நீக்கிவிடுங்கள் ( தொலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, வீட்டு விலாசம் போன்றவற்றை ) 
 
பேஸ்புக்கில் நீங்கள் செய்யக் கூடியவை : 
 
மிக அழகான, நேர்த்தியான முகவப் பக்கங்களை வைத்திருங்கள். 
 
நல்ல விடயங்களைக் காட்டக் கூடிய புகைப்படங்களை இணைத்துக் கொள்ளுங்கள், கூடுமானவரை அப்புகைப்படங்களை நண்பர்கள் மட்டும் பார்வையிடக் கூடியதாக வைத்திருங்கள். 
 
சுற்றுலா, குடும்ப நிகழ்வுகள், பணியிடப் புகைப்படங்களைப் பகிரும் போது நல்ல விதமானவைகளை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். 
 
தகவல்களைப் பகிரும் போதும் நல்ல விதமான, நேர்மையான, ஒழுக்கமிக்கவற்றையே பகிர்ந்து கொள்ளுங்கள். 
 
நல்ல விதமான, உங்கள் இரசனையை எடுத்துக் காட்டக்கூடிய குழுக்கள், பக்கங்களில் இணைந்து கொள்ளுங்கள் ( உதா. பொதுசேவை, இசை, சினிமா, விழிப்புணர்வுகள் ) 
 
பிற சமூகத் தளங்கள் : 
 
கூகிள் ப்ளஸ் : இப்போது பலரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால் கூகிள் ப்ளஸில் கூடப் பக்குவமானவற்றைப் பகிருங்கள், தேவையற்ற பக்கங்கள், கூடாத மற்றும் அறிமுகமில்லாத நபர்களை நீக்கிக் கொள்ளுங்கள். அத்தோடு கூகிள் ப்ளஸில் பகிரும் புகைப்படங்கள் பிக்காசா ஆல்பங்களில் ஊடாகப் பகிரப்படுவதால், அவற்றில் சென்று உங்கள் புகைப்பட ஆல்பங்களை நண்பர் மட்டும் / நீங்கள் மட்டும் காணும்படி மாற்றிக் கொள்ளுங்கள். பேஸ்புக்கில் சொல்லப்பட்டவைகளையே இதில் கூடப் பின்பற்றுங்கள். 
 
கூகிள் ப்ளஸில் தேவையற்ற நண்பர்களைக் கொத்தாக நீக்கிக் கொள்ளப் புற செயலிகள் சில உள்ளன, அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 
 
லிங்கிடின் : தொழில்சார் சமூகத் தளமான லிங்கிடுனை பக்குவமாகக் கையாளக் கற்றுக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் உங்களது தொழில்சார் அடையாளத்தை நிறுவிக் கொள்ளலாம். ஆகையால் தேவை இல்லாத பட்சத்தில் லிங்கிடுன் கணக்கை வைத்துக் கொள்ள வேண்டாம். இதில் நல்ல முறையான ஒரு புகைப்படத்தை மட்டும் இணைத்துக் கொள்ளுங்கள். அத்தோடு உங்கள் கல்வி, வேலை சார்ந்த தகவல்களைப் பகிரும் போது உண்மையானவற்றை மட்டும் போடவும். உங்கள் லிங்கிடுன் நண்பர்களைத் தேர்வு செய்யும் போது ஒத்த தொழில் சார் நண்பர்களை மட்டும் இணைத்துக் கொண்டால் போதுமானது. உங்கள் தகவல்களை நண்பர்கள் மட்டும் பார்வையிடக் கூடியதாக வைத்துக் கொள்ளவும். 
 
பிலிக்கர்/இன்ஸ்டாகிராம் : போன்ற புகைப்படங்கள் மட்டும் பகிரும் தளங்களில் உங்களுக்குச் சொந்தமான புகைப்படங்களை மட்டும் பகிருங்கள். காப்புரிமை உடைய புகைப்படங்களைப் பகிர்வதால் அது உங்கள் மீது திருட்டுப் பட்டம் கட்டிவிடக் கூடும், அதனால் உங்கள் மீது அவப்பெயர், பணியிழப்பு போன்றவற்றைச் சுமத்திவிடும். அத்தோடு உங்கள் புகைப்படங்களின் உரிமையை நீங்கள் மட்டும் வைத்திருக்க விரும்பினால் காப்புரிமை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது பொதுப் பயன்பாட்டுத் தானப்படுத்த விரும்பினால் பொதுப்பயன்பாட்டுக்கு எனச் சொல்லிவிடுங்கள். குடும்பப் புகைப்படங்கள், அந்தரங்க புகைப்படங்கள், ஒழுக்கமற்ற புகைப்படங்கள், ஆபாச புகைப்படங்கள் போன்றவற்றைத் தயவு செய்து பகிர வேண்டாமே. 
 
மின்னஞ்சல் : 
 
மின்னஞ்சல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகவே தற்சமயம் உள்ளது. தேவையற்ற மின்னஞ்சல்களைச் சேர விட வேண்டாம். முக்கியமில்லாத மின்னஞ்சல்களை அழித்துவிடவும். பயனில்லாத செய்திதளங்கள், விளம்பரங்களை மின்சந்தாப் பெற வேண்டாம், அப்படிப் பெற்றிருந்தால் அவற்றில் இருந்து நீக்கிக் கொள்ளுக்கங்கள். முக்கியமாகக் கருதும் மின்னஞ்சல்களைத் தனித்தனிப் பெட்டிகளை உருவாக்கி அவற்றில் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் ( உதா. குடும்பம், பணி, இரசனை ). ட்ராப்ட்களில் இருப்பவற்றை, குப்பைகளில் ( Trash ) இருப்பவற்றை, முகப்பில் இருக்கும் தேவையற்றவகளை அழித்துவிடவும். கூடுமான வரை வெண்மையான பின் திரையை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஒன்று, இரண்டு முறை மின்னஞ்சலை நோக்கினால் போதுமானது என்பேன். மின்னஞ்சல் ஊடாகப் புற செயலிகளுக்கு அனுமதி நல்கி இருந்தால் அவற்றைக் கண்டு கொண்டு தேவையற்ற அனுமதிகளை நீக்கிவிடவும், அதனால் உங்கள் கணக்குப் பாதுக்காக்கப்படும். 
 
கூடுதல் தகவல்கள் : 
 
தேவையற்ற கணக்குக்களை முடக்கி விடவும், ஒன்றுக்கு மேற்பட்ட பேஸ்புக், ட்விட்டர், மின்னஞ்சல் கணக்குகள் இருந்தால் அவை பயன்படாத பட்சத்தில் அழித்துவிடவும். 
 
clean+up+social+media.png
 
உங்கள் தனிப்பட்ட கணக்குக்களை நீங்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒருவித அவசியமும் இல்லை ( குடும்ப உறுப்பினர்கள் விதிவிலக்காக ). முக்கியமாகக் கனடாவை பொருத்தவரை உங்கள் பாஸ்வேர்ட், சமூகத் தளங்கள் குறித்து வேலை இடத்தில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வற்புறுத்திக் கேட்கவும் அவர்களுக்கு உரிமை இல்லை. கனடா மனித உரிமை மற்றும் அந்தரங்க உரிமைச் சட்டம் நமக்குப் பாதுக்காப்பு அளிக்கின்றது என டொரோண்டோவைச் சார்ந்த வழக்குரைஞர் செரில் ஸ்மோல்கின் கூறுகின்றார். 
 
சமூகத் தளங்களில் உங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் மிகவும் கவனமாக இருங்கள். முக்கியமாகக் கூகிளில் உங்களின் பெயரைப் போட்டுத் தேடினாலே உங்களின் அனைத்துச் சமூகத் தளச் செயற்பாடுகளும் வந்துவிடும். அது மட்டுமின்றி நீங்கள் சார்ந்த சட்டத் திட்டங்கள் உங்களைப் பாதிக்காத வகையில் உங்களை அடையாளப்படுத்துவது, கருத்துக்களைச் சொல்வது போன்ற விடயங்களில் மிகவும் அவதானமாக இருந்து கொள்ளுங்கள். 
 
 

http://www.kodangi.com/2012/11/clear-out-your-social-media-junk-internet1.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.