Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகம் தான் அழியலையே அப்புறம் ஏன் உம்முன்னு திண்ணைய முறைச்சுப் பாக்குறீங்க கொஞ்சம் சிரிக்கிறது::::::--

Featured Replies

news_07-01-2013_43JO.png

 

 

மனைவி: என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...

கணவன்: உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...

 

மனைவி: கல்யாணம் ஆகி இந்த இருபது வருசத்தில நான் என்ன சுகத்தைக் கண்டேன்...?

கணவன்: மூணு மாசத்தைக் குறைத்து விட்டாயேடி...?
 
மனைவி: ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். அதை ஏன் சேர்க்கறீங்க...?
 
news_03-01-2013_27restaurant.jpg

 

நம்ம விடுதியில் வேலை செய்யற வரவேற்பாளரை வேலையை விட்டு நிறுத்திட்டீங்களாமே? 


ஏன்?

செந்தமிழ்ல பேசறேன்னு. விடுதிக்கு வர்ற விருத்தினரிடம் அறை வேணுமா?னு கேட்கறா! அவங்க கன்னத்தை பிடிச்ட்டே பயந்து ஓடிடறாங்க

 

நீதிபதி : வருஷா வருஷம் உன் காதலியை மாத்திட்டே இருக்கியே! ஏன்?

கைதி : நான் ஒரு மெக்கானிக்ங்க, புது வருஷ மாதிரிகள் வர்றப்ப பழசை கழட்டி விட்டுடுவேன்.

news_22-12-2012_62jo.jpg

ராமசாமி - வெற்றிகரமான திருமணம் என்பது கொடுக்கல் வாங்கலைப் பொறுத்தது.

 

குமாரசாமி - எப்படி சொல்றே... ராமசாமி - அதாவது, கணவன் பணம், பரிசு, டிரஸ் கொடுத்தால் அதை மனைவி தட்டாமல் வாங்கிக்கொள்கிறாள்... அதேபோல மனைவி அட்வைஸ், ஆலோசனை, டென்ஷனைக் கொடுக்கும்போது கணவனும் ,மனைவி கொடுத்தா வாங்கிக்க வேண்டியதுதானே...!

news_20-12-2012_69JO.jpg

 மனைவி - ஏங்க, இன்னிக்கு நம்ம கல்யாண நாள். என்ன பண்ணலாம்...?

கணவர் - வேணும்னா, 2 நிமிஷம் எந்திருச்சு நின்னு மெளனம் அனுஷ்டிச்சு இரங்கல் தெரிவிக்கலாமே...!

 

நான் ஒரு முட்டாள்!

 

கணவன் - சே, உன்னைப் போய் கட்டிக்கிட்டேன் பாரு, நான் ஒரு முட்டாள்.

மனைவி - அது எனக்கு ஏற்கனவே தெரியும் டியர். ஆனால் காதல்ல தீவிரமா இருந்தேனோ, அதைப் பத்தி கண்டுக்கலே...!

news_15-12-2012_96jo.jpg

கல்யாணமானவர்களுக்கு 2ஆலோசனைகள் . உங்களது மனைவி எதையாவது தேர்வு செய்தால் அதைப் பார்த்து ரசித்து சிரிக்காதீர்கள் - உங்களைக் கூட உங்களது மனைவிதான் தேர்வு செய்தார்.

அதேபோல உங்களது தேர்வுகளை நினைத்து ரொம்பவும் பெருமைப்பட்டுக் கொள்ளாதீர்கள் - உங்க மனைவியும் உங்களது தேர்வில் ஒன்றுதான்.

news_12-12-2012_33JO.gif

 கணவனும் மனைவியும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மனைவிக்கு நல்ல கனவு. திடீரென உரத்த குரலில், ஏய், சீக்கிரம் ஓடு என் புருஷன் வந்துட்டார் என்று கத்தினார் மனைவி.


நல்ல தூக்கத்தில் இருந்த கணவரோ பதறியடித்துப் போய் ஜன்னல் வழியாக கீழே குதித்தார். பலத்த அடிப்பட்ட நிலையில் தூக்கம் கலைந்த அவர்.. அடச்சே, நாமதான் புருஷனாச்சே.. நாம எதுக்கு ஓடணும். என்று தலையில் அடித்தபடி மேலே வந்து படுத்து மறுபடியும் தூங்கினார்

 

news_10-12-2012_10JO.jpg

அந்த விமான நிறுவனம் ஒரு புதிய சலுகை அறிவித்தது. அதாவது பிசினஸில் ஈடுபட்டிருப்போர் தங்களது மனைவியுடன் விமான பயணம் மேற்கொண்டால் மனைவிக்கான பயணசீட்டு முற்றிலும் இலவசம் என்பதே அந்த சலுகை

 

சலுகை வெளியான உடனேயே அத்தனை பயணசீட்டு பதிவாகி விமானம் நிரம்பி வழிந்தது. இதனால் குஷியான விமான நிறுவனம், அந்தப் பயணத்திற்குப் பின்னர் அனைத்து மனைவிமார்க்கும் ஒரு கடிதம் அனுப்பி உங்களது பயணம் எப்படி இருந்தது என்று கேட்டது.அதற்கு ஒட்டுமொத்த மனைவிமார்களும் அனுப்பிய ஒரே பதில்... எந்தப் பயணம்..?


news_06-12-2012_33CA.png

ருத்திரன் - நேத்து எனக்கு ஒரு பொண்ணு போன் செஞ்சா

 
உத்திரன் - அப்புறம்?
 
ருத்திரன்- வீட்ல யாரும் இல்லை, வர்றீங்களா என்று கேட்டாள். நானும் சரின்னேன். அட்ரஸ் கொடுத்தா.
 
உத்திரம் - ஆஹாக்கா, அப்புறம் ...??
 
ருத்திரன் - வீட்டுக்குப் போய்ப் பார்த்தா...நெஜமாவே யாருமே வீட்ல இல்லப்பா...!
news_29-11-2012_6jo.jpg

 அந்த விவசாயிக்கு வயதாகி விட்டது. மரணப் படுக்கையில் கிடந்தார். அவரது மனைவி உள்ளிட்டோர் சுற்றி நின்றிருந்தனர். அப்போது தனது மனைவியை அழைத்த விவசாயி, ஜூன், நான் இறந்ததற்குப் பிறகு, நீ அந்த ஜானை கல்யாணம் பண்ணிக்கனும் என்றார்.

 

அதைக் கேட்ட மனைவி, இல்லை, நீங்கள் மறைந்த பிறகு நான் யாரையும் கட்டிக்க மாட்டேன் என்றார்.
 
ஆனாலும் விடாத விவசாயி, நீ நிச்சயம் ஜானை கல்யாணம் செய்தே ஆக வேண்டும் என்றார்.
 
அதைக் கேட்ட மனைவி, ஏன் இந்தப் பிடிவாதம் என்று கேட்டார்.
 
அதற்கு விவசாயி சொன்னார்..ஒருமுறை குதிரை வாங்கும்போது என்னை அவன் ஏமாற்றி விட்டான். அதற்கு நான் பழிவாங்க வேண்டாமா.. அதனால்தான் உன்னை கல்யாணம் செய்து கொள்ள வலியுறுத்துகிறேன்...

 

news_10-10-2012_60JO.png

மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?

அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன்: உன்னோட இந்த காமெடி தான் "
 
என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர்,
குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?
 
அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.
 
 
கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
 
மனைவி: கட்டிக்க போறது நான்தானே
 
கணவன்: துவைக்கிறவனுக்கு தானே கஷ்டம் தெரியும்
 
 
மனைவி: என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?"
 
கணவன்: "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."
 
 
கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?
 
மனைவி: நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.
 
ramu-somu.jpg


ராமு : எல்லாப் பொண்ணுங்களையும் கூடப் பொறந்த சகோதரியா பாக்குறேன்டா
சோமு : உன் பார்வையப் பார்த்தால் அப்படித் தெரியலியே.....
ராமு : உன் கூடப் பிறந்த சகோதரியா நினச்சுப் பாக்குறேன்டா - மச்சி.

ராமு : நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை? 
சோமு : ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க

ராமு : கல்யாணமான புதுத் தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க?
சோமு : புருசன் சமயல் பண்ண கத்துக்கிறான்.
ராமு : பொண்டாட்டி சண்டை போடக் கத்துக்கிறா.

ராமு : நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்... 
சோமு : வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.

ராமு : "அந்த டாக்டர், அஞ்சல் வழியில் சட்டம் படிக்கிறார்"
சோமு : "எதுக்கு?"
ராமு : "ஆபரேசன் பண்ண வர்றவங்களுக்கு அவரே உயில் எழுதப் போறாராம்".

ராமு : நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தது. வீடு கட்டற செலவு பெண்டாட்டி ஆபீஸில் லோன் போட்டு வாங்கியது. வீட்டுல இருக்கிற பொருள் எல்லாம் மச்சான் பாரீன்ல இருந்து அனுப்பி வைச்சது .. .. எப்படி இருக்கு என் வீடு ? 
சோமு : ம் .. .. .. உங்க வீடா ?

சோமு : நான் தினமும் ரத்தம் குடுக்கிறேன்.
ராமு : அப்படியா ! எங்க வேலை பாக்குறீங்க?
சோமு : "கசாப்புக் கடையில!!"

ராமு : தீபாவாளி முடிஞ்சு ஒரு மாசமாச்சு. இப்ப உங்க வீட்டுக் கொல்லையில் வெடிச்சத்தம் கேக்குதே?
சோமு : தீபாவாளிக்கு பத்த வச்சதுதான். இப்பதான் திரிபுடிச்சு வெடிக்குது.
ramu-somu.jpg


ராமு : டெய்லர்களுக்கு பிடிச்ச மாசம் எது ? 
சோமு : தை.

ராமு : பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... 
சோமு : என்னாச்சு? 
ராமு : பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே

ராமு : சுருட்டு கம்பெனி கேஷியர் சுகுமாரன் எங்கே ? 
சோமு : அவர், பணத்தை சுருட்டிட்டு ஒடிட்டார்

ராமு : அவரு வியாபாரத்துல படிப்படியா உயர்ந்தவர்
சோமு : எப்படி?
ராமு : முதல்ல செருப்பு வியாபாரம் பண்ணி, அப்புறம் பெல்ட் வியாபாரம் செஞ்சாரு. இப்ப தொப்பி வியாபாரம் பண்றாரு.

ராமு : குடி குடியை கெடுக்கும்ங்றது சரியா போச்சு 
சோமு : எப்படி? 
ராமு : எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா..

ராமு : பேங்க் மேனேஜர் பின்னால ஒருத்தர் அலைஞ்சா எப்படி அலைவாரு? 
சோமு : லோன் லோன்-னுதான்

சோமு : அந்த பட்டாசுக்கடைக்காரர் இதற்கு முன்னால் பூக்கடை வைத்திருந்தார் போல் தெரிகிறது ,,,,,, 
ராமு : எப்படி சொல்றே ,,,,, ? 
சோமு : சரவெடி கொடுங்கன்னா ,,, எத்தனை முழம்னு கேட்கிறாரே

ராமு : என்ன இது .. .. ஷூட்டிங் பார்க்க இவ்வளவு வி.ஐ.பி-க்களா .. .. ? 
சோமு : அவங்கள்லாம் சென்ஸார் போர்டு மெம்பருங்க .. ..ஒவ்வொரு ஸீன் எடுக்கறதக்கு முன்னாடி அவங்க அபிப்பிராயத்தைக் கேட்டுக்கிட்டு எடுக்கறாங்க ..

ramu-somu.jpg


சோமு : அந்தப் புதுப்படம் ஆறு மணி நேரம் ஒடுதா .. .. ஏன் ? 
ராமு : அதுவா .. .. டைரக்டர் ஒவ்வொரு நடிகரா போய் கதை சொன்னது, தயாரிப்பாளரைப் பிடிச்சது, அப்புறம் ஸ்டோரி டிஸ்கஷன் எல்லாத்தையும் காட்டறாங்களாம் .. ..

ராமு : நீ சினிமா டைரக்டராவதற்கு முன்னே, ஊர்லே ரைஸ் மில் வெச்சு இருந்தது பத்திரிகைக்காரங்களுக்குத் தெரிஞ்சிடுச்சு போலிருக்கு 
சோமு : இப்ப என்ன ஆச்சு .. .. ? 
ராமு : எப்பவுமே அரைச்சமாவையே அரைச்சுண்டு இருக்கார்னு விமர்சனம் எழுதறhங்களே

ராமு : என்னங்க .. .. உங்க படத்துல ஸீனுக்கு ஸீன் அடிதடியா இருக்கே ? 
சோமு : பின்னே என்னங்க .. .. பத்தாயிரம் அடில எடுத்த படம்னு நாங்கதான் தெளிவா சொல்லிட்டோமே

ராமு : யோசனையே இல்லாம மெகா சீரியல் மாதிரி படம் எடுத்துட்டோம் 
சோமு : அப்புறம்.. என்ன பண்ணுனீங்க..? 
ராமு : பேசாம, நாலு இண்டர்வெல் விடறதா முடிவு பண்ணிட்டோம்..

சோமு : அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன் 
ராமு : எப்படிச் சொல்றே? 
சோமு : நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு

ராமு : என்ன இது .. .. கதாநாயகி, நடிகையைப் போய், எக்ஸ்ட்ரானு சொல்றே ? 
சோமு : ஊஹும் .. .. ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் வெச்சுதானே மேக்கப் போட்டுக்கறா .. .. ?

ராமு : பல மொழிகள்ல இருந்து குரூப் டான்ஸர்களை வரவழைச்சு இருக்கீங்களே .. .. நடனத்துக்கு நடனம் வித்தியாசம் காட்டவா ? 
சோமு : ஊஹும் .. .. தொப்புளுக்குத் தொப்புள் வித்தியாசம் காட்டத்தான்

ராமு : எதுக்கு நீங்க சாப்பாட்டுல கோந்தைக் கலந்துக்கறீங்க .. .. ? 
சோமு : அப்பதான் சார், சாப்பாடு உடம்புல ஒட்டுது
ramu-somu.jpg


ராமு : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்கிறது சரியாப் போச்சா... எப்படி ? 
சோமு : காலையில் மனைவியைத் திட்டினேன், சாயங்காலம் பின்னிட்டா

ராமு : வளவளன்னு பேசாம, சுருக்கமா ஒரே வார்த்தையிலே புரியும்படி சொல்லு. 
சோமு : செலவுக்கு 1000 ரூபாய் கடன் வேணும்

ராமு : என்னது... திருவோடு ஃபிலிம்ஸா ? 
சோமு : ஆமாம், நாலைஞ்சு பிச்சைக்காரங்க ஒண்ணா சேர்ந்து மெகா பட்ஜெட்ல படம் எடுக்கிறாங்க

சோமு : எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .? 
ராமு : பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறான்னு மத்தவங்க கேலி பண்ணக் கூடாதுல்லே..

ராமு : அவர் பல் டாக்டரா ? 
சோமு : எப்படித் தெரிஞ்சது ? 
ராமு : பல்லாண்டு வாழ்க-னு வாழ்த்தறதுக்குப் பதிலா , பல் ஆடி - வாழ்கனு சொல்றாரே

ராமு : அவன் சோழர் பரம்பரை, துணிக்கடை வெச்சிருக்கானா... அவன் பெயர் ? 
சோமு : குளோத் (ஊடடிவா) துங்க சோழன்

ராமு : கொடுத்த கடன் என்னாச்சு ? எனக்கு வர வர ஞாபக மறதி ஜாஸ்தியாயிட்டே வருது,,,,,, 
சோமு : அப்ப இன்னும் கொஞ்ச நாள் பொறுங்களேன் ,,,, 
ராமு : எவ்வளவு நாள் ,,,,? 
சோமு : உங்களுக்கு முழுசா மறதி ஏற்படற வரைக்கும்.

ராமு : நான் மேலே படிக்கப் போறேன் 
சோமு : May-லேதான் விடுமுறை ஆச்சே
ramu-somu.jpg


ராமு : உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே.. உங்களுக்கு தெரியுமா..?
சோமு : எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க...

ராமு : இந்த ஆள் காலடிபடாத இடமே இல்லை இந்தியாவுல...
சோமு : அப்படியா..?
ராமு : ஆமாம்,.. கீழகிடந்த இந்தியா மேப்பை முழுசா மிதிச்சிட்டாரு...

ராமு : இருமல் தாத்தாவை வச்சுப் படம் பண்றீங்களா .. .. ?படம் பேரு என்ன ? 
சோமு : "குட் லொக்" .. ..

ராமு : 20 வருஷம் முன்னாடி நீங்க எழுதின கதைகளை இப்பப் படிச்சாலும் நீங்களா இப்படி எழுதினீங்கன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு. 
சோமு : உங்களுக்கு ஆச்சரியம் ,,,,, எனக்கு சந்தேகம்.

ராமு : சிகை அலங்காரம் செய்ய வந்த பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே... என்னாச்சு ? 
சோமு : பின்னி எடுத்துட்டா

சோமு : என் மனைவி என் மேலே கோபம்னா சமைக்கமாட்டா 
ராமு : என் மனைவி என் மேலே கோபம்னா சமைப்பா

ராமு : ஆபீஸில் உன் மேலே குற்றச்சாட்டு எழுந்துள்ளதா ? என்ன ? 
சோமு : நான் எழுந்திருக்கிறதே இல்லைன்னு

ராமு : வரதட்சணை வாங்குவது தப்புன்னு முன்னாடி சொன்னீங்க. இப்ப சரின்னு சொல்றீங்களே, ஏன்?
சோமு : அப்ப என் பொண்ணுக்குக் கல்யாணம். இப்ப என் பையனுக்குக் கல்யாணம்.


தோழர்கள்  எல்லாம் சேர்ந்து நடத்திய பொது குழு கூட்டம் ஒன்றில், பெருகி வரும் தோழர்களை முட்டாள்கள் என்று சித்தரிக்கும் போக்கை, கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பெரிய அரங்கு ஒன்றில் தோழர்களின் (கணித) அறிவு திறமையை நிருபிக்கும் போட்டி நடத்தப்பட்டது. 

நிறைய தோழர்கள் பார்வையாளர்களாக அரங்கிற்க்கு வந்திருந்தனர். தோழர் அல்லாத நடுவர்கள் (ஒன்னாங்கிலாஸ் கணக்கு வாத்தியார்கள்,தோழரின் கணித அறிவை சோதிக்க இவர்கள் போதும் என்று நினைத்தார்கள் போலும்) பங்கேற்றனர். முதலில் அங்கு வந்திருந்ததிலேயே கொஞ்சம் புத்திசாலியான தோழர் ஒருவர் மேடைக்கு வந்து சோதனைக்கு தயார் ஆனார்.தோழரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன..

நடுவர்: முதல் கேள்வி,சட்டவிரோத மணல் அகழ்வினால் சூழல் மாசுபடுமா?

 

தோழர்:அதெப்படி நாங்கள் தினமும் அதை செய்கிறோம் சூழல் மாசுபடவில்லை ஆனால் எங்கள் கைகள் தான மாசு படுகின்றன அதற்கும் தோழர் லைபோய் பிறியா தாரார் 

 

நடுவர்:நல்ல சிந்தனை. ஹம் அடுத்த கேள்வி   5 +5 எவ்வளவு?

தோழர் : (நிறைய யோசித்துவிட்டு) 20

பார்வையாளர்கள்(தோழர்கள் ): பரவாயில்லை இன்னொரு சான்ஸ் கொடுங்க..(கூட்டமாக கத்தினர்)
 

நடுவர்: ஓ.கே, 7+3 எவ்வளவு?

தோழர்: 8

பார்வையாளர்கள்():தோழர்கள்  இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க..

நடுவர்: கடைசி சான்ஸ், 2+2 எவ்வளவு?

தோழர்: 4

 
பார்வையாளர்கள்(தோழர்): இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க.. :lol: 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.